மிருதனின் கவிதை இவள் 15
மேகா, ரிதுராஜ் அணுவித்த மோதிரத்தை சிறு புன்னகையுடன் பார்த்து ரசிக்க மொத்தமாக மறித்து போனவனுக்குள் இருந்த மிருகம் விழித்து கொள்ள, கண்கள் பளபளக்க ,வெறி பிடித்த மிருகம் போல பார்வையாலே மேகாவை திணறடித்து கொண்டிருந்தான் அக்னி தீரன் .
அவனுக்குள் ஏதோ ஒன்று உடைந்து நொறுங்கியது போல வலிக்க அவர்கள் இருவரின் நெருக்கத்தையும் காண பிடிக்காது கண்களை மூடிக்கொண்டான் .
” எல்லாம் ஓகே தானே ?வேற எதுவும் இல்லையே ?ஏன் ஒரு மாதிரியா இருக்க ?எதுவா இருந்தாலும் சொல்லு ” என்றான் ரிதுராஜ் பதற்றத்தில் இருந்த மேகாவின் கரங்களை பிடித்தபடி.
அதுவரை கண்மூடி இருந்துவிட்டு , அப்பொழுது பார்த்து விழி திறந்த தீரனின் கண்களில் இந்த காட்சி பட்டுவிட , ” —– ” எதையோ சொல்லி பற்களை நறநறத்த தீரனின் , உள்ளங்கை அவனது விரல் நகங்கள் அழுத்தியதில் ரத்தம் கசிய ஆரம்பிக்க , இருந்தும் தன் கைவிரல்களை இன்னும் அழுத்தமாக மடக்கியவன் வலிக்க வலிக்க இறுக்கமாக இறுக்கி பிடித்தபடி நின்றிருந்தான் .
” எல்லாம் ஓகே தான், நான் நல்லா இருக்கேன் ” என்ற மேகாவின் பார்வை மீண்டும் தீரனின் விழிகளிடம் சரணடைந்தது . மன்னிக்க வேண்டி யாசித்தது. தன்னை விட்டுவிடும் படி கெஞ்சியது.
தீ தெறிக்கும் கண்கள் , கனலை கக்கும் விழிகள் , உக்கிர பார்வை , எரிக்கும் கண்கள் என இப்படி ஏகப்பட்ட வரிகளை கதை புத்தகங்ளில் படித்து சிலிர்த்திருந்த மேகா , இன்று தான் அதை நேரில் கண்டாள் . பலமுறை தீரனின் தகிக்கும் விழிகளை கண்ட மேகாவுக்கு இன்று அவன் பார்வையில் தெரிந்த உக்கிரம் மிகவும் புதிது .
அவனையே தான் பார்த்துக்கொண்டிருந்தாள் மேகா ! நொடிகள் நகர நகர தீரனின் பார்வையின் வீரியம் அதிகமாக , வெகு நேரமாக அவன் பார்வை நிலைகுற்றியது போல ஒரே இடத்தில் பதிந்திருப்பதை கண்டவள் ,அவனது பார்வை இருக்கும் திசையை கவனித்தாள் .
ரிதுராஜின் கரங்களுடன் அவளது கரம் பிணைக்க பட்டிருந்தது . சட்டென்று உடலில் மின்சாரம் தாக்கியது போல ஒரு உணர்வு , உடனே தன் கரத்தை ரிதுராஜிடம் இருந்து உருவி கொண்டவள் ,அவனிடம் இருந்து சிறு இடைவெளி விட்டு நின்றாள் .
‘கோபம் குறைந்து விட்டதா ? ‘மெல்ல தீரனை பார்த்தாள் . அதே பொல்லாத பார்வை பார்த்தபடி நின்றிருந்தான் . அவனது பார்வையின் உக்கிரம் இப்பொழுதும் தன்னை சுடுவது போல உணர்ந்தாள் .
“கைய புடிச்சதுக்கே இவ்வளவு நடுங்குற , இன்னும் எவ்வளோ இருக்கே ” நேரம் காலம் புரியாமல் மேகாவின் காதில் சரசம் பேசினான் ரிதுராஜ் . ஏனோ மேகாவால் அவனது பேச்சை ரசிக்க முடியவில்லை . மீண்டும் அக்னியை பார்த்தாள் , பார்வையாலே ரிதுராஜை கூறுபோட்டு கொண்டிருந்தான் அந்த கடோற்கஜன் . மேகாவிற்கு தூக்கி வாரி போட்டது .
“என்ன பராக்கு பார்த்துட்டு இருக்க , மோதிரத்தை மாப்பிள்ளைக்கு போடு டி ” அதட்டினார் ராதிகா ,
” ஹான் ” என்றபடி மோதிரத்தை வாங்கியவளின் பார்வை அனிச்சையாக தீரன் பக்கம் திரும்பியது , பார்வையாலே மறுத்தான் . இயலாமையுடன் அவனை பார்த்தவள் , தாய் மற்றும் இஷிதா வற்புறுத்த பட்டும் படாமல் மோதிரத்தை ரிதுராஜுக்கு அணுவிக்க , தீரனின் கண்கள் தானாக மூடி கொள்ள அவன் கை முஷ்டிகள் இறுகி நரம்புகள் புடைத்தெழுந்தது .
பல வருடத்திற்கு முன்பு கிடைத்த அதே ஏமாற்றமும் துரோகமும் மீண்டும் அவன் வாழ்க்கையில் எட்டிப்பார்த்து .தீரனை நகைத்தது .
‘தீரா நீ ஏமாந்துவிட்டாய் !’ உலகமே இவனை நடுவில் நிறுத்தி சுற்றி நின்று கொண்டு கேலி செய்வது போலவும் ,இவன் கத்துவது போலவும் ஒருவித பிரம்மை . உடல் பாறை போல இறுக்கி விறைக்க , மூடிய விழிகளை திறந்தவன் தன் பின்னங்கழுத்தை தேய்த்தபடி நின்றிருந்தான் .
மேகா ரித்துராஜிற்கு மோதிரத்தை அணிவித்த தருணம் தொடங்கி , இருவரும் கையேடு கை கோர்த்தபடி, கண்ணோடு கண் பார்த்தபடி என ஒவ்வொரு நிகழ்வையும் புகைப்படக்காரர் தன் கமெராவில் பதித்து கொண்டார் . தீரனோ அந்த காட்சிகளை தன் தணல் விழியால் படம் எடுத்து, தன் நெஞ்சுக்குள் ஆழமாய் பதியவைத்தான் .
” மேடம் சார்ரோட தோள் மேல சாஞ்சி ஒரு போஸ் குடுங்க ” என புகைப்படக்காரர் சொல்லும் பொழுதே அக்னியின் கழுத்து நரம்பு புடைத்து கொண்டு கிளம்ப , மேகாவுக்கு மூச்சு முட்டி கொண்டு வந்தது .
அவள் தயங்கியபடி நிற்பதை பார்த்து ரிதுராஜ் தான் ,
” பாஸ் அதெல்லாம் பிரைவேட் வெடிங் ஷூட்ல பார்த்துக்கலாம் , மேடம் ரொம்ப வெட்க படுறாங்க ” என்று மேகாவை பார்த்து கண்ணடித்து கிண்டலாக கூற , மேகாவோ கலவரம் சூழ்ந்த முகத்துடன் , வலுக்கட்டாயமாக சிரித்து வைத்தாள் .
அவள் சிரிக்கிறாள் ! கன்னம் இரண்டிலும் குழி விழுந்தது ! ஓ வருவுக்கு கன்னத்தில் குழி விழுமா ! ஆச்சரிமாய் பார்த்தான் ! அவன் பார்க்க தன்னவளின் முதல் புன்னகை குழந்தையின் சிரிப்பை போல அவ்வளவு அழகாய் இருந்தது ! ஆனால் அது உனக்காக சிந்திய சிரிப்பல்ல என்று அவனது மனம் அவனை கேலி செய்யும் பொழுது தீரனின் இதயம் பாறையாய் இறுகியது !
அக்னியால் தான் காணும் எதையுமே நம்ப முடியவில்லை ! அவனை பொறுத்த வரை மேகா உலகம் அறியாத அப்பாவி பெண் , பயந்த சுபாவம் , மென்மையானவள் , கள்ளமற்றவள் இன்னும் பல ! ஆனால் அவளை குறித்து தன் மனதில் இருந்த பிம்பத்தை ஒரே வெட்க புன்னகையில் பொய்யாக்கி விட்டாளே! எவனோ ஒருவன் , அருகில் நிற்கிறாள் ! அவன் கண்ணோடு கண் பார்க்கிறாள் ! அவன் அவளது கரம் பிடிக்கிறான் !இவள் அசைவின்றி நிற்கிறாள் . அவன் ஏதோ சொல்லி கண்ணடித்து சிரிக்கிறான் இவளும் இவனுடன் இழைந்து சிரிக்கிறாள் ! முகத்தை சுளித்தான் ! இன்னும் என்னவெல்லாம் நான் பார்க்க வேண்டும் ?அவன் தாடை இறுகியது !
உச்சக்கட்ட கோபத்தில் நின்ற தீரன் நச்சுக்குழலை ஊதிக்கொண்டே உணர்ச்சி துடைத்த முகத்துடன் மேடையை வெறித்து கொண்டிருந்தான். உறவினர்கள் நண்பர்கள் என ஒவ்வொருவராக மேடை ஏறிவந்து ரிதுராஜையும் மேகாவையும் வாழ்த்தி சேர்ந்து புகைப்படம் எடுக்க , புகை ஊதியபடி தன்னையே வெறித்து கொண்டிருந்தவனை கண்ட மேகாவுக்கு ஒருவித திடுக்கிடல் ! அவன் புகை பிடிக்கும் தோரணையே அவளுக்குள் கிலியை உண்டாக்க மேகாவால் அந்த தருணத்தை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க முடியவில்லை.
அவன் கையில் இருந்த நச்சுக்குழல் காலியாகிவிட்டது .அதை கீழே போட்டு தன் பூட்ஸ் காலால் நசுக்கியவன் , அவள் பார்க்க மற்றொன்றை எடுத்து பற்றவைத்தான் .
‘ இன்னொன்றா !’ தீரன் புகையை இழுத்து வெளியிட வெளியிட மேகா கதிகலங்கினாள் .
தீரனை அங்கு சற்றும் எதிர்பார்த்திராத இஷிதாவும் , எந்த வித பிரச்சனையும் இன்றி எப்படி ரித்து ,மேகாவின் திருமணத்தை நடத்துவது என குழம்பி தவித்து கொண்டிருக்க .இதில் மித்ரன் வேறு அவளை கொலைவெறியோடு பார்க்க, உள்ளுக்குள் உதறினாலும் அதை மறைத்து அவனை பதிலுக்கு முறைத்தபடி நின்றிருந்தாள் .
” தீரன் சார் , அஷோக் ஜி நீங்க வந்ததுல அவ்வளவு சந்தோஷம் . ஜஸ்ட் ஃபோன்ல சொல்லி நீங்க வருவீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை ” என்ற கனகராஜ் குழைந்து நெளிந்து தீரனின் காலில் விழாத குறையாக அவர்களை பார்த்து பார்த்து கவனித்தார் . கனகராஜுக்கு தீரனின் வருகை ஒருவித இன்ப அதிர்ச்சி தான் , கனகராஜ் ஒரு தகவலாக தான் ரிதுராஜின் திருமண விடயத்தை பகிர்ந்தார் .அவர்கள் வருவார்கள் என அவர் கனவிலும் நினைக்க வில்லை . தன் மீது அவர்களுக்கு அவ்வளவு மதிப்பா ! என எண்ணி மகிழ்ந்த கனகராஜ் அவர்கள் வந்த காரணம் அறியாமல் சிவப்பு கம்பளம் விரித்து அவர்களை வரவேற்றார் .
” — ” மித்ரன் மெலிதாய் புன்னகைக்க ,தீரன் எதுவும் பேச வில்லை .
” உங்களுக்கு எல்லாம் வசதியா இருக்கா ?”வந்தத்தில் இருந்து ஒரு பத்து தடவையாவது கேட்டிருப்பார் .
” எல்லாம் ஓகே மிஸ்டர் கனகராஜ் ” தீரன் சார்பாக அஷோக் பதில் கூறினான் .
” பிரைட் அண்ட் க்ரூம் கூட சாப்பிட போற மாதிரி தான் இருக்கு, வாங்க சார் நாமளும் சாப்பிடலாம் , சாப்பிட்டு முடிச்சுட்டு நான் என் பையனுக்கு உங்களை அறிமுகப்படுத்துறேன் ” என்றவர் அவர்களை டைனிங் அறைக்கு அழைத்து செல்ல , அங்கே பஃபே முறைப்படி அனைவருக்கும் உணவுகள் வழங்கப்பட , சிலர் நின்று கொண்டும் , சிலர் நாற்காலியில் அமர்ந்து மற்றவருடன் பேசிக்கொண்டும் , உணவை சாப்பிட்டு கொண்டிருக்க , அக்னியின் கவனத்தை ஈர்த்தது என்னவோ ரிதுராஜின் சிரிப்பொலி தான்.
ரிதுராஜின் நண்பர்கள் அவனையும் மேகாவையும் கைகாட்டி ஏதோ சொல்லி சிரிக்க, இவன் மேகாவின் காதில் ஏதோ சொல்லிவிட்டு நண்பர்களை பார்த்து ஏதோ சொல்ல அந்த இடத்தை அவர்களது சிரிப்பொலி அமர்களப்படுத்தியது.
தீரனை எண்ணி கவலையில் இருந்தவளுக்கு அவர்களது கேலி பேச்சு ஒருவித இதமான உணர்வை கொடுக்க மெலிதாய் புன்னகைத்தவளுக்கு மீண்டும் எதோ ஒரு நெருடல் !மனம் அடித்து சொல்லியது ‘அவனே தான் !’ சுற்றுமுற்றும் தலை திருப்பி பார்த்தாள் .
‘இங்க தான் இருக்கான் ‘ மனம் அடித்துக்கொண்டது , உதட்டில் இருந்த மெல்லிய புன்னகையும் மறைந்து போக , அவன் என்ன செய்வானோ? என்கிற பயம் வந்து தொற்றி கொண்டது .
மீண்டும் அவனை தேடினாள் குத்துக்கரண்டியால் மாமிச துண்டை குத்திக்கொண்டிருந்தான் , விழிகள் ரிதுராஜை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தது .
அவன் ரிதுராஜை பார்த்த பார்வைக்கான அர்த்தம் உணர்ந்தவள் அதிர்ந்தே விட்டாள் .
தானாக ரிதுராஜிடம் இருந்து விலகி நின்றவளுக்கு , ஒரு பருக்கை சோறு கூட தொண்டைக்குழியில் இறங்க மறுத்தது . தலை சுற்றிக்கொண்டு வந்தது ,நா வறண்டு போக , தன் தோழியை தேடினாள் .
தன் தாயுடன் ஏதோ உரையாடிக்கொண்டிருந்தாள் . தங்கையை தேடினாள் அவளும் தோழியருடன் கதைத்து கொண்டிருந்தாள் .
இங்கிருந்து சென்றால் கொஞ்சம் நன்றாக இருக்கும் போல் தோன்ற ரிதுராஜிடம் கூறிவிட்டு அங்கிருந்து ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்தவளுக்கு அப்பொழுது தான் இயல்பாகவே சுவாசிக்க முடிந்தது .
சில நிமிடங்கள் கண்களை மூடிய நிலையிலே நின்றவளுக்கு , எப்படி அவனை எதிர்கொள்ள போகிறோம் ?என்கின்ற அச்சமே மனம் முழுவதும் பரவியிருக்க , முகத்தை தண்ணீரால் கழுவியவள் , சில மணி துளிகள் கழித்து வெளியே வந்தாள் . அப்பொழுது அக்னியை அங்கே காணவில்லை என்றதும் பதறியவள் , உடனே ரிதுராஜை தேடினாள் . நண்பர்களுடன் பேசி சிரித்துக்கொண்டிருந்தான் .
அப்பொழுது தான் அவளுக்கு நிம்மதியே வர, மேலும் கீழும் மூச்சு வாங்க தன் நெஞ்சில் கைவைத்தவளுக்கு ,
மறுபடியும் அதே உணர்வு , அவன் தான் ! தீரன் தனக்கு மிக அருகில் நிற்பது போல ஒருவித நெருடல் ! மெல்ல தன் தலையை அவள் திருப்பவும் ,
” தேடுறியா வரு ” தீரனின் சூடான மூச்சு காற்று அவளது செவிமடலை சுட்டது.
சுவாசம் தடை பட , பட்டென்று திரும்பியவள் , தனக்கு மிக அருகில் நின்றிருந்த தீரனை கண்டு அரண்டு போனவள்! அவனை விட்டு தள்ளி சென்று நிலைகொள்ள முடியாமல் சுவற்றை பிடித்து கொண்டாள்.
அவளை சில நொடிகள் வெறித்தவன் ,அவளது கரம் பிடித்து இழுத்து கீழே இருந்த ஒரு அறைக்குள் தள்ளி கதவை தாளிட்டான் .
” ஏன் வரு ?”அவன் பார்வை அவளை கேள்வி கேட்டது .
“ப்ளீஸ் தீரன் ” அவள் பார்வை இறைஞ்சியது .
” ப்ளீஸ் ” அவன் முன்பு கைகூப்பி வாய்விட்டே கெஞ்சினாள் .
“ஹவ் டெர் யு ப்ளடி ஹெல் ” அவளது தோள்கள் இரண்டையும் வன்மையாக பிடித்து பின்னால் தள்ளிவிட்டான் .
” ம்மா ” நொடிப்பொழுதில் தன்னிலை தடுமாறி சுவற்றில் முட்டி கீழே விழுந்தாள் மேகா .
“ஏன் ?” அவளது வதனத்தை பிடித்து காட்டு கத்து கத்தினான் . அடிபட்டதால் வலி உயிர் போனது . மெல்ல அவனை நிமிர்ந்து பார்த்தாள் .முகத்தில் கோபம் கொப்பளிக்க கோரப்பசியில் இருக்கும் சிங்கம் போன்று உக்கிரமாக முறைத்தான் தீரன்.
தன் உயரத்திற்கு நிமிர்ந்து ஆஜானுபாகுவாய் கைகள் இரண்டையும் மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு நிற்பவனை தலை உயர்த்தி பார்த்த மேகா அவன் தோற்றத்திற்கு முன்பு கீழே விழுந்து கிடக்கும் தன்னை சிறு துரும்பாக உணர்ந்தாள் .
‘ கடவுளே ‘ அடி வயிற்றில் இருந்து எழுந்து வந்த ஏதோ ஒன்று நெஞ்சுக்குள் சூழ் கொள்ள . வெளிறிய வதனத்துடன் மிரண்ட மான்குட்டி போல அவனை பார்த்தாள் , வழக்கம் போல உடல் வெடவெடத்தது .
” எந்திருச்சு நில்லு டி ” சொடக்கிட்டு கத்தினான் . வேகமாக எழுந்தாள் . வலுவிழந்த கால்கள் பின்னிக்கொள்ள சுவற்றில் சாய்ந்து நின்றாள் .
” என்ன சொல்ல போற ? ஏன் எனக்கு துரோகம் செஞ்ச ?நம்புனேன் டி உன்னை! சொல்லு ” வெறிபிடித்தவன் போல கத்தினான் .
” தப்பு தான் தீரன் “குரல் மெலிந்து ஒலித்தது .
” ஷாட் அப் என் பேரை சொல்லாத ” சுவற்றில் ஓங்கி குத்தினான் .
” ப்ளீஸ் பொறுமையா இருங்க … ஐ கேன் எஸ்பிளேன் “பதற்றத்தில் நா மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள வார்த்தைகள் முன்னுக்கும் பின்னுக்கும் ஊஞ்சல் ஆடியது .
” ஆஹாங் , பொறுமையா இருக்கணும் ” எள்ளலுடன் கூறியவன் , முகத்தை அழுத்தமாய் துடைத்து , தன் பின்னங்கழுத்தை தேய்த்து, நச்சுக்குழலை வாயில் வைத்தபடி ஊத்தி தள்ளிய தீரன் ,
” இந்த பொறுமை போதுமா ?” தன் முகத்தை அவளது முகத்துக்கு நேராக கொண்டு சென்று கேட்டு ,சில நொடிகள் கழித்து,
” எக்ஸ்பிளேயின் யு டாமிட் ” நச்சுக்குழலை காலில் போட்டு மிதித்தபடி உச்சத்தில் கத்தினான் .
“ம்மா ” அலறி மீண்டும் தரையில் விழுந்தாள் . கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது . அவள் அழுகிறாள் ! தாங்க முடியவில்லை ! அவன் கண்களும் கலங்கியது ! அவளது மிரண்ட முகம் அவனை வருத்தியது ! சட்டென்று முகத்தை திருப்பிக்கொண்டான் ! வழிந்த இரெண்டு சொட்டு கண்ணீரை அவள் அறியாமல் துடைத்து கொண்டான் ,பல வருடத்திற்கு முன்பு அழுதது , அதன் பிறகு இன்று தான் அழுகிறான்! அன்றும் வலித்தது ,இன்றும் வலிக்கிறது, அன்று ஒருவிதமான ஏமாற்றம், இன்று ஒருவிதமான ஏமாற்றம் ! இதயம் பயங்கரமாய் வலிக்க தன் கரங்களால் நெஞ்சு பகுதியை இறுக்கமாக பிடித்து கொண்டான் .
அறையில் கனத்த மௌனம் நிலவியது , ” ஏன் மேகா ?” அவனே மௌனத்தை உடைத்தெறிந்தான்.
“———–” அவளால் பதில் சொல்ல முடியவில்லை .
” அன்னைக்கு நைட் என்னை புடிக்கும் சொன்னியே, அது உண்மையா? பொய்யா ? ” அவள் விழிகளோடு தன் விழிகளை கலக்க விட்டு கொண்டே கேட்டான் .
” ……..”மௌனமாக தலை கவிழ்ந்தாள் .
” என்னை புடிக்காதுல “அவனது பார்வை அவளது உயிரை தொட்டது .
“உன்னால என்னை மறக்க முடியுமா?” ‘முடியாது’ என்று சொல்லிவிடமாட்டாளா !ஒருவித நப்பாசையில் கேட்டான் .
” நான் தான் உங்களை நினைக்கவே இல்லையே” இனியும் பொய் கூற விரும்பாது, நடப்பது நடக்கட்டும் என்று உண்மையை கூறிவிட்டாள்.அக்னியின் முகம் விகாரமாய் மாறியது . அவன் நெருங்கினான் ! இவள் விலகினாள் ! .
அவனது பார்வையில் ஒருவித மாற்றம் ! கண்டுகொண்டாள் !அவனது நெருக்கம் , அவள் மனதிற்குள் ஏதோ தப்பாக தோன்ற , வேகமாக கதவை திறக்க போனவளின் இடைபிடித்திழுத்து தடுத்தவன் , தன்னுடன் நெருக்கமாக அணைத்து கொண்டான் . அதிர்ச்சியில் அவனிடம் இருந்து விலகியவள், அவனை தள்ளி விட , தீரனின் உடல் இறுகியது .
இந்த முறை அவள் மேல் வலுக்கட்டாயமாக படர்ந்த தீரனோ மேகாவின் கரங்களை அழுத்தி பிடித்தவாறு கோபத்துடன் அவளது எலும்புகள் யாவும் நொறுங்கும் வண்ணம் அழுத்தி அணைத்தான் .
” ம்மா ஆ வலிக்குது விடுங்க ” என அவனை பிடித்து தள்ளினாள்.
அடுத்த நொடியே அவளை நெருங்கியவன் இன்னும் வன்மையாக அவளை பிடித்து அவள் இதழ்களை இழுத்து முரட்டுத்தனமாக முத்தமிட நெருங்கினான் .
” ப்ளீஸ் இப்படி பண்ணாதீங்க ” என்றவள் அவனது செயலை தாங்க முடியாது அவனை தள்ள முயல , அவளது கரங்களை வளைத்து பிடித்தவன் அவளது இதழ்களை நோக்கி நெருங்கினான் . முகத்தை திருப்பிக்கொண்டு அவனிடம் இருந்து விடுபட போராடினாள்.
அவள் உயிரையே தனக்குள் இழுப்பது போல அவளை முரட்டுத்தனமாக அணைத்திருந்தான் அக்னி தீரன் . வலியில் கண்ணீர் சிந்தியவள் அவனை தன் முழு பலம் கொண்டு தள்ளியபடி ” இப்படி பண்ணாதீங்க ” என கதறினாள் .
அவளை ஆவேசமாக பிடித்து கொண்டவன் ,” உன் வாழ்க்கையில என்னை நீ மறக்கவே கூடாது , யாரை பார்த்தாலும் உனக்கு என் முகம் மட்டும் தான் தெரியணும் ” என பற்களை கடித்தபடி கூறியவன் , அவளது இதழை நெருங்கிய தருணம் ,இருவருக்கும் இடையே நூலவு மட்டுமே இடைவெளி மிச்சம் இருக்க, கண்களை இறுக்கமாக மூடி திறந்தவள் ,
” இதுவரை நீங்க எப்படி வேணும்னாலும் இருந்திருக்கலாம் , கொலை பண்ணிருக்கலாம் , கொள்ளை அடிச்சிருக்கலாம் ஆனா இப்படி மிருகமா மட்டும் என்னைக்குமே இருக்காதீங்க தீரன் .உங்ககிட்ட இருந்து இதை நான் எதிர்பார்கலை “அவன் விழிகளை சந்தித்தபடி கூறினாள் .தீரனின் உடல் மொழியில் ஒருவித சிலிர்ப்பு . ஆனால் அது ஒரு நொடியே நீடித்தது , மீண்டும் ஆக்ரோஷமாக அவள் இதழை நெருங்கினான் ! இந்த முறை இடைவெளி இல்லை , கொஞ்சம் நெருங்கினாலும் உரசிவிடும் தூரத்தில் இருந்தது இருவரது இதழும் ,அவளது இதயம் முரசு கொட்டியது .
” உங்களுக்கு உரிமை இல்லாத பொண்ணை என்னைக்கும் தொடாதீங்க தீரன் . என் அப்பாக்கு அப்புறம் நான் நம்புன ஒரே ஆம்பளை நீங்க தான் தீரன், இப்படி மட்டும் பண்ணிராதீங்க.” அவன் கனல் விழிகளின் வெப்பத்தை உள்வாங்கிக்கொண்டு மேகா சொல்லிய மறுகணம் அவளை விட்டு தள்ளி நின்ற தீரனுக்கு அவளது வார்த்தைகள் அவனுள் ஆழமாய் தாக்க . கண்களை இறுக்கமாக மூடி மூச்சை வெளியிட்டவன் , சில நொடிகள் கழித்து , தன்னை நிலைப்படுத்திக்கொண்டு மேகவிடம்,
“எனக்கு உரிமை இல்லாத பொண்ணை தொடுற அளவுக்கு நான் ஒன்னும் கேவலமானவன் இல்லை மேகா ” என்ற தீரன் அவளது உச்சந்தலையில் இதழ் பதித்து ,
“அதே நேரம் எனக்கு உரிமையானவங்க மேல வேற ஒருத்தரோட நகம் படுறதை கூட என்னால தாங்கிக்க முடியாது. இனிமே அவன் விரல் நகம் உன் மேல பட்டா கூட அவன் விரல் அவனுக்கு இருக்காது, சீக்கிரமே உன் மேல எனக்கு இன்னும் என்னென்ன உரிமை இருக்குன்னு காட்றேன். ” என எச்சரித்த தீரன் பட்டென்று கதவை திறந்து அவள் முகம் பார்க்காமலே வெளியேறினான் .மேகா தரையில் மடிந்து கதறி அழுதாள்.
தொடரும்