மிருதனின் கவிதை இவள் 17
இருள் சூழ்ந்த வானத்தில் ஆங்காங்கே மிளிரும் நட்சத்திரங்களை வெறித்தபடி நின்றிருந்த கோபால கிருஷ்ணனிடம் ,
” அந்த வேலன் பேசினத்தையே நினைச்சிட்டு இருக்காத கோபி, அவன் பேசியதை மறந்திரு டா “என்று அவருக்கு ஆறுதல் அளித்தார் அவரது நண்பன் நிலவன் .
” கடன் குடுத்திருந்தா என்ன வேணும்னாலும் பேசுவானா ? நான் என்ன தூக்கிட்டா ஓட போறேன் , அசிங்கமா பேசுறான் , எவன் பண்ணின தப்புக்கோ நான் அனுபவிச்சிட்டு இருக்கேன் “பணத்தை இழந்த பரிதவிப்பு மற்றும் அவமானத்தின் வலியால் ஆவேசத்தில் பற்களை கடித்த கோபால கிருஷ்ணனுக்கு அவ்வளவு கோபம் வந்தது .
” கொஞ்சம் பொறுமையா இரு கோபி “
” எப்படி நிலவா ? பொண்ணுக்கு கல்யாணம் வச்சிருக்கேன் நெஸ்ட் மந் செட்டில் பன்றேன்னு ,சொல்றேன்ல அதுக்குள்ள அசிங்கமா பேசுறான். செய்யாத தப்புக்கு எவ்வளவு பெரிய தண்டனை அனுபவிக்கிறேன் , ஒரு பேங்க்ல மேனேஜரா இருந்துட்டு எவ்வளவு பெரிய முட்டாளா இருந்திருக்கேன், சம்பாதிக்கணும் என்கிற வெறில இப்படி நஷ்டப்பட்டு நிக்கிறேனே .என் பணத்தையும் இழந்து , அந்த சிவகுமார் பண்ணின தப்புக்கு கண்டவன்கிட்ட கையையும் நீட்டிட்டு ,இப்போ அந்த வேலன் கிட்ட பேச்சும் கேட்டுட்டு இருக்கேன் ” ஆதங்கத்தில் அவர் முகம் கன்றி சிவந்தது .
” ஸ்நேகிதன்னு நினைச்சேன் இப்படி ஒரு துரோகத்தை செய்வான்னு நான் நினைக்கவே இல்லை கோபி . என்னால தான் உன் பணமெல்லாம் போய் நீயும் இக்கட்டான சூழ்நிலையில மாட்டிக்கிட்ட , என்னை மன்னிச்சிரு டா ” என நிலவன் கை கூப்பி கெஞ்ச , அவரது கரத்தை பிடித்து கீழே இறக்கிய கோபால கிருஷ்ணன் ,
” என்னடா நீ , அவன் ஏமாத்தினத்துக்கு, நீ என்னடா செய்வ, அவன் உன்னையும் தான ஏமாத்திருக்கான். நான் பணத்தை இழந்தேன், நீ உன் உழைப்பை இழந்த ” என்றார் விரக்தியாக .
“திடீர்ன்னு மேகாக்கு கல்யாண ஏற்பாடு பண்ணிருக்க , மாப்பிள்ளை வீட்டு காரங்களும் ரொம்ப பெரிய இடமா தெரியுதே , டிமென்ட் ஏதும் பண்ணினாங்களா ? பணத்துக்கு என்ன டா பண்ற ?” என வினவிய நிலவனின்,குரலில் இருந்த அக்கறையை உள்வாங்கிக்கொண்ட கோபாலகிருஷ்ணன் ,
“பெரிய இடம் தான் , டிமென்ட் எதுவும் அவங்க சைட் பண்ணல , அதுக்காக நாமளும் அப்படியே விட முடியாதுல , நகை ,சீரு, சாப்பாடு, மண்டபம்ன்னு எல்லாம் சேர்த்து ஒரு எஸ்டிமேஷன் போட்டேன் ஒரு அமவுண்ட் வந்திருச்சு.
மேகாக்குன்னு முன்னாடியே ஒரு ல்ஐசி போட்ருக்கேன்னு உன்கிட்ட சொல்லிருந்தேன்ல அது போன மாசம் தான் முடிஞ்சி பணம் கைக்கு வந்துச்சு .
அந்த பணத்தையும் சேர்த்து , பேங்க்ளையும் லோன் அப்பளை பண்ணி , அந்த வேலன்க்கு மொத்த பணத்தையும் இந்த மாசம் செட்டில் பண்ணி, அவனை ஓச்சு விடணும்னு நினைச்சிருந்தேன் .
அதுக்குள்ள நான் எதிர்பாராத விதமா மேகா கல்யாணம் கூடிருச்சு . தெரிஞ்ச குடும்பம் தான். நாங்க டெல்லில இருக்கும் பொழுது அவங்களை தெரியும் . ராதிகாவுக்கு ரொம்ப புடிச்சிருக்கு , மேகாவும் சந்தோஷமா இருக்கா , அதான் எப்படியாவது மேகா கல்யாணத்தை எந்த தடையும் இல்லாம முடிச்சிட்டு , வேலன் கிட்ட டைம் கேட்க்கலாம்ன்னு இருந்தேன், இப்போ இந்த வேலன் இப்படி பன்றான் . ” என்றார் கோபால கிருஷ்ணன் .
” சரி வேலன் கிட்ட ,மறுபடியும் பேசி பார்ப்போம் , நீ டென்ஷன் ஆகி உன் பீபிய ஏத்திக்காத “
” ஒரு வாரம் தான் டா , மேகா கல்யாணம் நல்ல படியா முடிஞ்சிருச்சின்னா , அதுவே எனக்கு ஒரு பெரிய நிம்மதி , பேங்க் லோன் போட்டோ இல்லை வீட்டை அடமானம் வச்சோ , எப்படியோ அடுத்த மாசத்துக்குள்ள அந்த ஆள் குடுத்த கடனை குடுத்திருவேன் .மேகா கல்யாணம் வரைக்கும் அந்த ஆள் அமைதியா இருக்கனும்.
ராதிகாவுக்கு வேற இது எதுவுமே தெரியாது , மேகா கல்யாணம் முடிஞ்சதும் , எல்லாத்தையும் சொல்லணும் ,அவ எப்படி எடுத்துக்குவான்னு தெரியல. கல்யாணம் ஆகி இதுவரை எதையுமே மறைச்சது இல்லை ரொம்ப உறுத்தலா இருக்கு . இது எல்லாவற்றிற்கும் மேல அந்த சிவகுமாரை எப்படியாவது கண்டு புடிக்கணும் டா , அத்தனையும் நானும் என் மனைவியும் உழைச்சு சம்பாதிச்சது “ஓங்கி இறங்கிய கோபாலகிருஷ்ணனின் குரல் தழுதழுத்தது .
” எல்லா இடமும் கேட்டு பார்த்துட்டேன் கோபி, அவன் எந்த நாட்டுல இருக்கான்னே தெரியல ” என்றார் நிலவன் .
” போலீசும் எந்த ஆக்ஷனும் எடுக்க மாட்டிக்கிறாங்க , நாளைக்கு ஸ்டேஷன் போய் அந்த இன்ஸ்பெக்டரை பார்த்து கைல ஏதாவது குடுக்கணும், அவங்களுக்கு போடுறதை போட்டா தான் வேலை பாக்குறானுங்க , அந்த இன்ஸ்பெக்டருக்கு மட்டும் கணக்கில்லாம கொடுத்திருக்கேன் டா ” என்றவர் தோள் மீது கை வைத்த நிலவன் ,
“சரி கவலைப்படாத எல்லாத்தையுமே சரி பண்ணிரலாம் , டைம் ஆச்சு நான் கிளம்புறேன் , நீ நாளைக்கு ஸ்டேஷன் போகும் பொழுது எனக்கும் ஒரு வார்த்தை சொல்லு நான் நேரா ஸ்டேஷன் வந்திர்றேன் , நீ தனியா போகாத ” என்றார் நிலவன் .
நிலவன் கூறியதற்கு சரி என்பதாய் தலையசைத்த கோபால கிருஷ்ணன் ,அவரை வழியனுப்ப மாடியில் இருந்து கீழே இறங்கி வந்தார் .
~~~~~~~~~~~~~
ரிசார்ட்டில் தனது அறையில் உள்ள ரெஸ்ட் ரூமில் இருந்து பூத்துவாலையால் தன் முகத்தை துடைத்தபடி வெளியே வந்த ரிதுராஜ், கதவு தட்டும் சத்தம் கேட்டு மணியை பார்த்தவன் ‘இந்த நேரத்துல யாரா இருக்கும்? ‘ என்கின்ற சிந்தனையுடன் கதவை திறக்க , வாசலில் ஒரு பக்க கன்னம் வீங்கிய நிலையில் நின்ற தந்தையை கண்டு ,அதிர்ந்த ரிதுராஜ்,
” என்னாச்சு பா ” என பதற்றத்துடன் கேட்டான் .
ரிதுராஜை மேலும் கீழும் பார்த்து பயங்கரமாய் முறைத்த கனகராஜ்,
” ஹாங்… கீழே விழுந்துட்டேன் ” என்றபடி அறைக்குள் நுழைந்தவர் ,தன்னை கேள்வியோடு பார்த்துகொண்டியுர்ந்த தன் மகனிடம் ,
” ஏர்லி மார்னிங் ஐஞ்சு மணிக்கு டெல்லி பிளைட், ரிசார்ட் கார் நாலு மணிக்கெல்லாம் உன்னை பிக் அப் பண்ணிக்கும், ஹாஸ்ப்பிட்டல் அக்கவுண்ட்ஸ்ல கொஞ்சம் ப்ராப்லம் , நீ அங்க இருக்கனும்,உன் திங்ஸ் எல்லாத்தையும் பேக் பண்ணிரு ” என ஒரு தகவலாக கூறியவர் , அவன் பதிலை எதிர்பாராது விறு விறுவென வாசலை நோக்கி நடக்க ,
” வாட் நாளைக்கு டெல்லி போகணுமா ?” அதிர்ச்சியுடன் கேட்டான் .
” உன் காதுல சரியா தான் விழுந்திருக்கு ” என்றவர் வேகமாக அறையில் இருந்து வெளியேற ஆயத்தமாகவும் ,
” ஆனா அப்பா இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் இருக்கு ” என ரிதுராஜ் தயக்கத்துடன் கூறவும் , நின்று கண்களை மூடி திறந்தவர் ,அவனது முகத்தில் இருந்த அதிருப்தியை உள்வாங்கிக்கொண்டு ,
” நாளைக்கா கல்யாணம் ம்ம்? அதான் கல்யாணத்துக்கு இன்னும் ஏழு நாள் இருக்கே அப்புறம் என்ன ?அது வரைக்கும் இங்கையே வெட்டியா இருந்து டைம் வேஸ்ட் பண்ணுவியா ம் ? ஹாஸ்ப்பிட்டல் அக்கவுண்ட்ஸ்ல பிரச்சனை இருக்குன்னு சொல்றேன் அதை பத்தி கேட்காம , கல்யாணமாம் கல்யாணம் . பொறுமையா இருந்து சால்வ் பண்ணிட்டு வந்தா போதும் ” என் முடிவாய் கூறியவர் ரிதுராஜை ஒரு பார்வை பார்த்துவிட்டு வெளியேறினார் .
ரிதுராஜிற்கோ தந்தை கூறியதை கேட்டு கவலை இருந்தாலும் , அதற்கு மேல் அவனால் அவரை எதிர்த்து ஒருவார்த்தை பேச முடியாமல் போக ,மறுநாள் நாள் டெல்லி செல்ல ஆயத்தமானான் .
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
“அப்பா அப்பா “டைனிங் டேபிளில் கண்களை மூடி அமர்ந்திருந்த கோபாலகிருஷ்ணனின் சிந்தனையை கலைத்தது மகன் விக்ரமின் குரல்.
“கிருஷ்ணா இன்னும் பீபி டேபிளைட்டை போடாம இருக்கீங்க, இந்தாங்க ” என்றபடி மாத்திரையை கணவனின் கையில் கொடுத்தபடி வந்தார் ராதிகா .
“சொல்லு விக்ரம் ” மாத்திரையை விழுங்கிக்கொண்டே மகனிடம் வினவினார் .
“அப்பா நீங்க சொன்னது போல மாடில உள்ள ரெண்டு ரூமையும் ரெடி பண்ணி ,அவங்களை ஸ்டே பண்னண வச்சிட்டேன் ” குதூகலமாக கூறிய மகனிடம் ,
” என்னாச்சு என் பையன் இன்னைக்கு ரொம்ப ஹப்பியா இருக்கான்”
” அவங்க ரெண்டு பேரும் செம டைப் , அதுல அக்னி ப்ரோ சான்ஸே இல்லை செம பா . அவருக்கு எய்ட் பேக்ஸ் பா, என்ன ஆர்ம்ஸ்ன்னு தெரியுமா ? எனக்கு கூட எக்சர்சைஸ் கத்து தரேன்னு சொல்லிருக்காரு . பாக்சிங்கும் சொல்லி தரேன்னு சொன்னாரு . அவரோட மொபைல் லேட்டஸ்ட் ஆப்பிள் மாடல் பா , அழகா இருக்குன்னு சொன்னேன் , உடனே பாருன்னு கைல குடுத்துட்டாரு “ஆர்வத்தில் கண்கள் மின்னல் கூறினான் விக்ரம் .
” நீ வாங்கினியா என்ன?” கோபால கிருஷ்ணனின் குரல் இறுகியது .
“நோ பா , வேண்டாம்ன்னு சொல்லிட்டேன் “தாயை பாவம் போல பார்த்த விக்ரமின் குரல் நலிந்து உள்ளே செல்ல , அதற்கு மேல் அவன் ஒரு வார்த்தை பேச வில்லை .
” சம்பந்திக்கு ரொம்ப முக்கியமானவங்க, நீ தான் அவங்க கூட இருந்து அவங்களை நல்ல படியா கவனிச்சிக்கணும்,தேவை இல்லாம தொல்லை பண்ண கூடாது சரியா “
“சரி பா , டைம் ஆச்சு நான் தூங்க போறேன் , குட் நைட் மா , குட் நைட் பா “என்ற விக்ரம் தன் தந்தையிடமும் தாயிடமும் விடைபெற்றுக்கொண்டு விட்டால் போதுமென்று தன் அறைக்கு ஓடினான்.
~~~~~~~~~~~~~~`
” சின்ன பையன் பா ஏன் இவ்வளவு முறைக்கிறீங்க பயந்துட்டான் “என்ற மனைவியிடம் ,
” அடுத்த வருஷம் கையில டிகிரி வந்திரும் ,அவன் சின்ன பையனா ?உனக்கு உன் பையன்னா போதுமே ” என்றவரை செல்லமாக முதுகில் அடித்த ராதிகா,
“ஏங்க ஒன்னு கேட்கணும்ன்னு நினைச்சேன் , அவங்க ரெண்டு பேரும் யாரு ?ரொம்ப வசதியானவங்களா தெரியுது , சம்பந்திக்கு என்ன வேணுமாம்? ” கணவனின் அருகே அமர்ந்தபடி தன் விசாரணையை ஆரம்பித்தார் ராதிகா .
” சம்பந்திக்கு ரொம்ப வேண்ட பட்டவங்களாம் , அவங்க வருவாங்கன்னு எதிர் பார்க்கலையாம் , திடீர்ன்னு தான் ஃபிளைட் கிடைச்சு வந்திருக்காங்க . கல்யாணம் வர இங்க தான் இருப்பாங்க “
” ஓ … ஏன் அந்த ரெசார்ட்ல ஒரு ரூம் கூடவா இல்லை ” என்ற மனைவியை ஒருகணம் அழுத்தமாய் பார்த்த கோபால கிருஷ்ணன் , அவரது பேச்சில் உள்ள அர்த்தத்தை உணர்ந்துகொண்டு ,
” சம்பந்தி கேட்டு பார்த்தாராம் , முகூர்த்த நேரம் ரூம் எதுவும் வேகண்ட்டா இல்லையாம் . ரொம்ப முக்கியமானவங்க நல்லா கவனிச்சிக்கணும் , உங்க வீட்ல தங்க வச்சிக்க முடியுமான்னு கேட்டாரு , சரின்னு சொல்லிட்டேன் .”
” ஓ ” என ராதிகா இழுக்கும் பொழுது ,”ஷ் ஷ் ” சமையல் அறைக்குள் இருந்து சத்தம் கேட்க தலை திருப்பி பார்த்தவர் ” என்ன?” என்றார் கண்களாலே, ” சொல்லு மா ” என மேகாவும் இஷிதாவும் செய்கை செய்ய , சரி என்பதாய் தலையசைத்த ராதிகா கணவரிடம் ,
” இல்லை ரொம்ப பெரிய இடமா தெரியிறாங்களே , நம்ம வீடெல்லாம் அவங்களுக்கு வசதி படுமா , வேற ஹோட்டல் எதாவது பாக்குறது ” என்றார் இழுவையாக .
” நானா கூப்பிட்டேன் , சம்பந்தி வந்து வீட்ல தங்க வைங்கன்னு சொல்லும் பொழுது , மாட்டேன்னா சொல்ல முடியும் . அவங்க கிட்ட பேசினேன் நல்லா மரியாதையாதான் என்கிட்ட நடந்துக்கிட்டாங்க “என்று அவர் சொல்லி கொண்டிருக்கும் பொழுதே மாடியில் இருந்து அக்னியும் , அஷோக்கும் இறங்கி வர ,அவர்கள் வருவதை கண்டதும் பேச்சை நிப்பாட்டிய ராதிகா தன் கணவரிடம் கண்ணை காட்ட , தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட கோபாலகிருஷ்ணன் ,
” நீங்க இங்க …. ஏதாவது வேணுமா சார் ?” தன் கவனிப்பில் எதுவும் குறை வந்துவிட்டதோ என்று எண்ணியவர் சிறு பதற்றத்துடன் வினவினார் .
” கோபால கிருஷ்ணன் சார் ரிலாக்ஸ் எதுவும் வேண்டாம் , எல்லாமே இருக்கு , ரொம்ப நல்லாவே இருக்கு , எந்த குறையும் இல்லை .” என்று மென்னகையுடன் கூறிய அக்னி ,
” சார் என்ன இருந்தாலும் நாங்க மூணாவது மனுஷங்க , உங்க ப்ரைவசிய டிஸ்டர்ப் பண்ற மாதிரி உங்க வீட்ல வந்து தங்கி, உங்களுக்கு கஷ்டம் கொடுக்குறோம் .அது எங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ,அதான் நாங்க வெளியில வேற ஹோட்டல்ஸ் ஏதாவது இருக்கான்னு ” அக்னி சொல்லி முடிக்கும் முதலே ,
” அச்சோ என்ன சார் ? ஏன் இப்படி சொல்றீங்க ? எங்க சம்பந்திக்கு வேண்டப்பட்டவங்கன்னா எங்களுக்கும் வேண்டப்பட்டவங்க தான் . நீங்க எங்க வீட்டுக்கு வந்த கெஸ்ட், மூணாவது மனுஷங்க இல்லை . ஸோ நீங்க இங்க இருக்கிறதுல எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை . இது உங்க வீடு மாதிரி . எவ்வளவு நாள் வேணும்னாலும் தங்கிக்கலாம் . உங்களுக்கு இங்க வசதி பத்துமான்னு தான் நாங்க பேசிட்டு இருந்தோம் ” என்ற கோபால கிருஷ்ணனிடம் ,
” உங்க வீட்டுக்கு வசதிக்கு என்ன குறை , சொர்க்கம் மாதிரி இருக்கு ” என்று அக்னி முகமலர்ச்சியுடன் கூற , அஷோக்கோ புன்னகை முகம் மாறாமல் நின்றிருந்தான் .
” சம்பந்தி உங்கள பத்தி நிறைய சொன்னாங்க , அவ்வளவு பெரிய பிஸ்னஸ்மேன் நீங்க , எந்த தலைக்கனமும் இல்லாம ரொம்ப எளிமையா பழகுறீங்க , அதை பார்க்கும் பொழுது ரொம்ப சந்தோஷமா இருக்கு சார் ” அக்னி சத்தமில்லாமல் தலையில் இறக்கிய ஐஸ்கட்டியில் கோபால கிருஷ்ணன் உள்ளம் குளிர்ந்து போக ,
சமையல் அறைக்குள் இருந்த இஷிதாவோ,
” ம்ஹுக்கும் அவன் ஹிஸ்ட்ரி தெரியாம அங்கிள் வேற ” என சலித்து கொண்டாள்.
” என்ன பெரிய பிஸ்னஸ்மேன் சார் , பணம் எல்லாம் இன்னைக்கு வரும் நாளைக்கு போகும் , நீங்க கூட தான் பேங்க் மேனேஜரா இருக்கீங்க ,மேடம் சொந்தமா மியூசிக் ஸ்கூல் நடத்திட்டு வராங்க , மூத்த பொண்ணு டாக்டர் , பையன் இன்ஜினீயர் , இன்னொரு பொண்ணு விஸ்காம் படிக்கிறாங்க என் பார்வையில ஒரு பொறுப்புள்ள அப்பா அம்மாவா நீங்க ரெண்டு பேரும் ரொம்ப உயர்ந்த இடத்துல இருக்கீங்க .
உங்க பையன் கிட்ட என் மொபைல் கொடுத்தேன் ,அவன் உடனே அப்பாக்கு புடிக்காது வேண்டாம்ன்னு சொல்லிட்டான் ,அவன் கண்ணுல அவ்வளவு ஆசை இருந்துச்சு அதே மாதிரி உங்க மேல மரியாதையும் இருந்துச்சு பசங்கள ரொம்ப நல்லா வளர்த்திருக்கீங்க . இன்னைக்கு இந்த நொடி உங்க குடும்பத்துல நாங்களும் ஒரு ஆளா இருக்கிறோம்ன்னு நினைக்கும் பொழுதே ரொம்ப பெருமையா இருக்கு அங்கிள் ” என்றவன் ஏதோ தவறாய் கூறியது போல நாக்கை கடித்து ,”ஸ்ஸ் , சாரி சார் ” சாருக்கு கொஞ்சம் அழுத்தம் கொடுத்து உச்சரிக்க , ஏற்கனவே அவன் பொழிந்த ஐஸ் மழையில் நனைந்திருந்த கோபால கிருஷ்ணன் ,
” சாரி எதுக்கு அக்னி சார் நீங்க என்னை அங்கிள்ன்னே கூப்டலாம்” என்றார் புன்னகையுடன் .
” ஷப்பா நீங்க என்ன சொல்லுவீங்களோன்னு பயந்துட்டேன் “, ‘ யாரு நீ பயந்துட்ட” என்று சொல்லாமல் சொல்லிய அஷோக்கின் பார்வையை புறந்தள்ளியவன்,” எனக்கும் சார்ன்னு கூப்பிடுறது ரொம்பவே ஃபார்மலா இருந்துச்சு , இப்போ தான் ரிலாக்ஸ்சா இருக்கு, அப்போ நீங்களும் இனிமே எங்களை அக்னி , அஷோக்ன்னு பேர் சொல்லி தான் கூப்பிடனும் ” என்று அவன் கூறவும் ,
” சரி பா ” சாவி கொடுத்த பொம்மை போல அக்னி சொன்னதும் தலையசைத்தார் கோபால கிருஷ்ணன் . ஆட்டுவிப்பவன் வந்தாயிற்று இனி அவர் என்ன ? அவர் குடும்பமே ஆடி தானே ஆக வேண்டும்.
” ஓகே அங்கிள் , தென் நாங்க கிளம்புறோம் குட் நைட் அங்கிள் , குட் ஆன்டி ” என்றவன் இருவரிடமும் விடைபெற்றுக்கொண்டு அஷோக்குடன் தங்களின் அறைக்கு செல்ல ,
” ரொம்ப நல்லவங்களா தெரியிறாங்கள்ல ” என்ற கணவனிடம் ,
” ஆமா நான் கூட என்னமோன்னு நினைச்சேன் , நல்லவங்க தான் பா . ஒரு குறையும் தெரியாத மாதிரி நல்லா பார்த்துக்கணும் ” என்றார் ராதிகா .
“சரி டி நேரம் ஆகிடுச்சு நாளைக்கு மார்னிங் நிறைய வேலை இருக்கு தூங்கலாம் “
” நீங்க போங்க நான் இதோ வரேன் ” என்றவர் சமயலறைக்குள் நுழைந்தார் .
!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
” இதெல்லாம் தேவையா டா ? இப்போ எதுக்கு நாம இங்க தங்கியிருக்கோம் அக்னி ?” பால்கனியில் கைகளை குறுக்கே கட்டியபடி நின்றிருந்த தீரனிடம் வினவினான் அஷோக் .
“மேகா கல்யாணத்தை அட்டென்ட் பண்றதுக்காக ” முகம் கொள்ளா புன்னகையுடன் கூறினான் தீரன் . ஆனா அவன் சிரிப்போ வில்லனின் சிரிப்பு போல வில்லங்கமாக இருக்க ,
” தீரா உன்னை புரிஞ்சிக்கவே முடியல டா , ஆனா பெரிய சம்பவம் ஒன்னு நடக்க போகுதுன்னு மட்டும் புரியுது ” என்ற அஷோக்கின் பார்வை அக்னியின் முகத்தை ஆராய ,
” ஆஹாங் ” என்றவன் இப்பொழுதும் அதே போல் சிரிக்க ,
” தேவை இல்லாம லேட் பண்ணிட்டு இருக்கோம் தீரா , இது பிஸ்னஸ் இல்லை , ஒன்னு போனா இன்னொன்னு போறதுக்கு . இது வாழ்க்கை , கொஞ்சம் தப்பா போனாலும் மேகாவை நீ இழந்திருவ ” நண்பனின் பயத்தையும் ,அவன் தன் மேல் கொண்டுள்ள அக்கறையையும் உள்வாங்கிக்கொண்ட அக்னி ,
” இது நான் ரிதுராஜ்க்கு வச்சிருக்க டெஸ்ட் அஷோக் பார்க்கலாம் ” என்றவன், ” அதுவரை இந்த கேமை நல்லா என்ஜாய் பண்ணு ” விஷம புன்னகையுடன் கூறினான் .கொஞ்சம் கூட அலட்டிகொள்ளாத தீரனை அஷோக்கே ஆச்சரியமாக பார்த்தான் .
~~~~~~~~~~~~~~~~~
சமையல் அறையில் ,” வெளி தோற்றம் வச்சு ஒருத்தங்களை நாம இடை போட கூடாது, பாருங்க எவ்வளவு மரியாதையா பேசுறாங்க , நானும் உங்க பேச்சை கேட்டு தப்பா நினைச்சிட்டேன் , பார்க்க தான் தாடியும் மீசையுமா பெரிய உருவமா இருக்காங்க , பேசினா தான் தெரியுது அவங்க மனசு போல அவங்களும் தங்கமானவங்கன்னு , அதுல அந்த அஷோக் தம்பி பேசவே மாட்டார் போல, ரொம்ப அமைதி , அந்த அக்னி தம்பி தான் ஏதோ பேசிச்சு . எவ்வளவு தன்மையாவும் பொறுமையாவும் பேசுறாங்க . ரொம்ப சாஃப்ட் போல . நீங்க பயப்பட தேவையே இல்லை நல்லவங்க தான் . உன் அப்பாக்கும் எனக்கும் அவங்கள ரொம்ப புடிச்சிருக்கு ” ராதிகா தன் பங்கிற்கு பாராட்டு கடிதம் வாசிக்க , மேகாவின் முகம் சுருங்கி போக ,
இஷிதாவோ , “ஆமா ஆமா ரொம்ப சாஃப்ட் , ஒருநாள் அவனுங்க கூட தங்கி பாருங்க, நெஞ்சு வலியே வந்திரும் உங்களுக்கு “என மனதிற்குள் புலம்பியவள் ,
ராதிகாவிடம் ,
” ஆனா ஆன்டி வயசு பொண்ணுங்க , மூணு பேர் இருக்கும் பொழுது ,பேச்சிலர் ஆம்பளைங்க தங்குறது சரி இல்லை தானே ” என்று கூறவும்,
” ஏய் அந்த மாதிரி தப்பான ஆளா இருந்தா , உன் அப்பா தங்க வைக்க சொல்லிருப்பாங்களா ? அந்த பசங்கள பார்த்தா அப்படித்தெரியால, நீங்க தேவை இல்லாம கற்பனை பண்ணாம சீக்கிரம் போய் தூங்குங்க , நாளைக்கு நகை கடைக்கு போகணும் காலையிலே ரெடி ஆகுங்க , அப்படியே புடவை கடைக்கும் போகணும் ” என்றவர் அவர்களது பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தபடி அங்கிருந்து சென்றுவிட , இருவரும் சோர்வான முகத்துடன் தங்களின் அறைக்குள் வந்து அடைந்து கொண்டனர் .
~~~~~~~~~~~~
“உன் அப்பாவும் , அக்னியும் இவ்வளவு க்ளோசா டி ! இப்போ எனக்கு ரொம்ப பயமா இருக்கு இஷு ” மெத்தையில் படுத்திருந்த மேகாவுக்கு உறக்கம் மட்டும் எங்கோ சென்றிருக்க அவன் என்ன செய்வானோ என்கிற பீதியிலே வினவினாள் .
” அக்னி , கனகராஜுக்கு பைனான்ஸ் பண்ணிருக்கான்னு தெரியும் . ஆனா அந்த ஆளும் அக்னியும் இவ்வளவு க்ளோஸ்ன்னு சத்தியமா தெரியாது டி . அம்மா இறந்ததுக்கு அப்புறம் அவரை விட்டு வந்துட்டேன்னா , அதான் அவரை பத்தி எனக்கு எதுவும் தெரியல . ஆனா பயப்படாத அவன் ஏதாவது செய்யணும்ன்னா உன்னை பார்த்த அந்த நிமிஷமே உன்னை கூட்டிட்டு போயிருக்க முடியும் . அவன் எதுக்கும் அசராத ஆளு தான் . ஆனா , அவன் அப்படி எதுவும் செய்யலையே . ஸோ பயப்படாம தூங்கு பார்த்துக்கலாம் ” என்று இஷிதா , என்ன தான் தன் தோழிக்கு தைரியம் கொடுத்தாலும் , அக்னி மற்றும் அஷோக்கின் எண்ணவோட்டம் என்னவாக இருக்கும் ? ஏன் அவன் பொறுமையாக இருக்கிறான் ? அவன் திட்டம் என்ன ? என்னும் பயமும் குழப்பமும் அவளை படுத்தி எடுத்தது .மேகவோ தீரனின் மிரட்டலை எண்ணியபடியே கண்மூடி கிடந்தாள் .
~~~~~~~~~~~~~~~`
வெகு நேரமாக கண்களை மூடியபடி படுத்திருந்த இஷிதா , மேகா தூங்கியதும் மெல்ல எழுந்தவள், நேரே சென்றது என்னவோ அஷோக்கின் அறைக்கு தான் , கோபத்தில் வேகமாக கதவை தட்ட போனவள் ,
” ஏய் மெண்டல் கதவு திறந்து தான் இருக்கு வா” என்னும் அஷோக்கின் குரல் கேட்டு மேலும் எரிச்சல் அடைந்து புயல் வேகத்தில் நுழைய ,
அவனோ விருந்துக்கு வந்த புது மாப்பிள்ளை தோரணையில் , மெத்தையில் அமர்ந்திருந்து கால்களை நன்றாக நீட்டி கையில் உள்ள திராட்சை பழங்களை ஒவ்வொன்றாய் சாப்பிட்டு கொண்டிருந்தவன் ,
” வருவன்னு தெரியும் , ஆனா இவ்வளவு லேட் ஆகும்ன்னு நினைக்கல ” என்றவன் கடுங்கோபத்தில் நின்றிருந்தவளை பார்த்து,
” என்னடி அதுக்குள்ள ட்ரெஸ் மாத்திட்டியா, ம்ம் லெஹெங்கால செமையா இருந்த , உன்கூட ஒரு செல்பி எடுக்கலாம்ன்னு நினைத்திருந்தேன் சரி , என்ன வெறும் கையா வந்திருக்க கைல பல் சொம்பெல்லாம் எதுவும் கொண்டு வரலையா ?” என தன் கால்களை ஆட்டிக்கொண்டே கேட்க ,பொங்கி எழுந்தவள் ,
” சொம்பா இதோ தரேன் ” என அருகில் இருந்து தண்ணீர் பாட்டிலை அவன் மீது எறிய, அதை லாவகமாக பிடித்தவன் , பாய்ந்து அவள் அருகே வந்து ,
” என்ன மேடோம், உங்க வயலண்ட்டான ஆக்ஷ்ன்ஸ் பார்த்தா , இன்னைக்கு செம ஸீன் இருக்கும் போலையே ” என கண்களை சிமிட்டி கூற,
அவளோ ,” அஷோக் நான் முக்கியமான விஷயம் பேச வந்திருக்கேன் ” என்றாள்.
” முக்கியமான விஷயம் அப்படினா , இம்பார்ட்டண்ட் மேட்டர் தானே ” சுண்டு விரலால் காதை குடைந்தபடி கேட்டவன், மீண்டும் மெத்தை மீது அமர்ந்துகொள்ள ,இவளுக்கு தான் பொறுமை எங்கோ பறந்து சென்றிருந்தது .
” ஆமா ” பற்களை கடித்தபடி கூறினாள்.
” சரி கதவை பூட்டிட்டு வா , வசதியா மெத்தை தானே போட்டு வச்சிருக்காங்க சாவகாசமா படுத்துட்டே பேசலாம் , ஒரே டயர்டா இருக்கு ” என கண்களை சிமிட்டியவன் அவளது கரம் பிடித்து இழுக்க , அவனை அனல் தெரிக்க பார்த்தவள் ,
” நான் அவ்வளவு சொல்லியும் , உன் ஃப்ரண்ட கூட்டிட்டு ஏண்டா இங்க வந்த ?” உயர்ந்த குரலில் ,அதீத கோபத்தில் சீறினாள் .
” நான் அவ்வளவு சொல்லியும் உன் அண்ணன் , கூட மேகாக்கு ஏன் டி கல்யாணம் ஏற்பாடு செஞ்ச ” அவளுக்கு மிஞ்சிய கோபத்தில் , உச்சகட்ட ஆத்தீரத்தில் உறுமினான் .
” ஐயோ எத்தனை தடவை சொல்றது , மேகாக்கு இதுல கொஞ்சமும் விருப்பம் இல்லைன்னு ” மூச்சு வாங்க கத்தியவளின் கரம் பிடித்து கட்டிலில் அமர வைத்தவன் , குடிக்க தண்ணீர் கொடுத்து , அவள் ஆசுவாசம் அடைந்த பிறகு ,
” இப்போ ஸ்டார்ட் பண்ணு ” என்றவன் கரங்களை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு நிற்க , அவன் நின்ற தோரணையில் அவனிடம் போராடும் உத்வேகத்தை இழந்தவள் ,
இவனிடம் கோபம் கொண்டால் வேலைக்காது என்பதை உணர்ந்து, அவன் கரம் பிடித்து தன் அருகே அமர்த்தியவள்,
” இங்க பாரு அஷோக் ” பொறுமையாக தன் உரையாடலை துவங்கினாள்.
“ம்ம் பார்த்துட்டு தான் இருக்கேன் ” என அடக்கப்பட்ட சிரிப்புடன் கூறியவனின் பார்வை போகும் திசையை கண்டவள் ,
” என் முகத்தை பாரு அஷோக் “சட்டென்று எழுச்சியுற்ற ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு கூறினாள் .
” ம்ம் பார்க்கிறேன் ” என்றவன் அவளது முகத்தையே பார்க்க ,
” மேகா பாவம் பா , லவ் இல்லாம ரெண்டு பேரையும் சேர்த்து வச்சா லைஃப் நல்லா இருக்காது ”
” ம்ம் “
” மேகாக்கு அக்னி மேல லவ் இல்லை “
” ஓ ” என்றவனின் பார்வை அவளது செவ்விதழை நோக்கி தன் பயணத்தை மேற் கொள்ள , கண்களை மூடி ஆழமான மூச்சை வெளியிட்டவள் ,
அவனது முகத்தை தன் கைகளில் ஏந்தி , தனது விழிகளை அவனது விழிகளுடன் கலக்க விட்டபடி ,
” ப்ளீஸ் அக்னியை கூட்டிட்டு இங்க இருந்து கிளம்பிரு , நாம மறுபடியும் சேரலாம் , எல்லாத்தையும் மறந்துட்டு உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன் “
” பிஸ்னஸ் பேசுறீங்களா ரிப்போர்ட்டர் மேடோம் ” அவனது குரலில் ஏகத்துக்கும் நக்கல் விரவியிருக்க ,
” இல்லை உண்மைய சொல்றேன் , உனக்கு நம்ம காதல் வேணும்ன்னா ஒழுங்கா அக்னியை கூட்டிட்டு கிளம்பு ” என தீர்க்கமாக கூறியவள் தன் முகத்தை திருப்பிக்கொண்டு அங்கிருந்து எழுந்து கொள்ள , அவளது கரம் பிடித்து அமரவைத்தவன் , அவளது தாடையை இறுக்கமாக பிடித்து ,
” மேகா , அக்னி முதல் முதல்ல நேசிச்ச பொண்ணு , ஸோ மேகா அக்னிக்கு தான் . யார் தடுத்தாலும் அவங்க கல்யாணத்தை நான் நடத்தி வைப்பேன் . ” என்றவன் அவளது இதழில் அழுத்தமான முத்தம் பதித்து ,
” நீ எனக்கு தான் , எவ்வளவு விலகினாலும் , நான் விட மாட்டேன் ” என்று கூறி அவளை பிடித்த தள்ளியவன் ,
” இனிமே நம்ம காதலை வச்சு பேரம் பேச என்கிட்ட வராத , உயிரே போனாலும் என் அக்னிக்கு நான் துரோகம் பண்ண மாட்டேன் , எனக்கு நேத்ராவும் நீயும் எப்படியோ அப்படி தான் அக்னியும் ” என்றான் உறுதியாக .
” ரிதுராஜ்க்கும் மேகாவுக்கும் என்கேஜ்மென்ட் ஆகிடுச்சு , இன்னும் ஒன் வீக்ல கல்யாணம் ஏன் புரிஞ்சிக்க மாட்டிக்கிற? “
” நீ ஏன் இப்போ இவ்வளவு டென்ஷன் ஆகுற ? கல்யாணத்துக்கு இன்னும் ஏழு நாள் இருக்கு , என் நண்பனுக்காக நான் முயற்சி பண்றேன் , உன் அண்ணனுக்காக நீ முயற்ச்சி பண்ணு . மேகா ரிதுராஜ்க்கு தான்னு கடவுளே முடிவு பண்ணிருந்தா , நான் என்ன , அக்னியே தடுத்தாலும் யாராலும் அதை மாத்த முடியாது . உன் அண்ணன் உண்மையாவே மேகாவை நேசிச்சா என்ன நடந்தாலும் அவன் பின்வாங்காம மேகாவை கல்யாணம் செய்வான் . அவன் கல்யாணம் நடக்கும் . ஸோ ரிலாக்ஸ்சா நடக்குறதை வேடிக்கை பாரு . இதுல யார் காதல் ஜெய்க்குதுன்னு பார்ப்போம் ” என்ற அஷோக் ,
” போறதுக்கு முன்னாடி லைட்டை ஆஃப் பண்ணிரு டி ” என்றவன் குப்புற படுத்து உறங்க , கோபத்தில் இஷிதா தலையணையை தூக்கி எறிய,
” தேங்க்ஸ் டி ” என்றபடி அதை எடுத்து தலைக்குள் வைத்துக்கொண்டு அவன் உறங்க , கோபத்தில் கால்களை ஓங்கி மிதித்தவள் , கதவை அடித்து சாற்றிவிட்டு செல்ல , கண் விழித்து மெத்தையில் அமர்ந்திருந்த மித்ரனுக்கு இஷிதா தங்களின் காதலை வைத்து பேரம் பேசியது மனதிற்குள் வலியை ஏற்படுத்த ,
” எத்தனை தடவை தான் என் காதலை உதாசீனப்படுத்துவடி ” என்றவன் உறக்கம் தொலைந்து போக பால்கனி சுவற்றில் சாய்ந்து நின்றான் .
தொடரும்
நாளை
சென்று விட்டான் அவன் இங்கில்லை !
மனம் பலமுறை சொல்லியது ஆனாலும் அசையாமல் அதே இடத்தில் நின்றாள் . அவனது வாசம் அவளுடைய சவாசத்திற்குள் கலந்து அவளது நெஞ்சம் எங்கும் பரவிருப்பது போல உணர்ந்தாள் .
ஏதோ அவனே தன் மீது படர்ந்திருப்பது போல !! எண்ணும் பொழுதே உடல் அதிர்ந்தது .
” ச்ச மேகா ஏன் இப்படி யோசிக்கிற ” திசையின்றி ஓடிய மனசை கடிந்துகொண்டாள் .
ஏதேதோ எண்ணங்கள் உள்ளுக்குள் ஓடியது . தன்னிலை மறந்து இருந்த மேகாவை. தங்கை மற்றும் தமையனின் குரல் சுயநினைவுக்கு கொண்டு வர . அவர்கள் முன்பு இயல்பாய் இருப்பது போல காட்டிக்கொண்டாலும் .மேகாவின் எண்ணம் முழுவதையும் தீரன் அவளது அனுமதி இன்றி அவள் அறியாமலே ஆக்கிரமிக்க துவங்கினான் .