MIRUTHNAIN KAVITHAI IVAL 21

cover page-203bf1b6

மிருதனின் கவிதை இவள் 21

ரன் பைனான்ஸ் பிரைவேட் லிமிடட்டின்   அலுவலக அறையில்  சிலை  போல உணர்வுகளற்ற  முகத்துடன்   அஷோக் மித்ரன் அமர்ந்திருக்க . ஜன்னல் வழியாக வெளியே செல்லும் வாகனத்தை வெறித்தபடி  இறுக்கமான முகத்துடன்   நின்றிருந்தான் அக்னி தீரன் .

இருவரது  மனதிலும்  அமைதி  இல்லாமல் இருக்க , அவர்களது  உள்ளத்திற்குள்  வெவ்வேறு  விதமான உணர்ச்சி குவியல்கள் .

“அஷோக் ” தீரனின் அடி குரல்  நிலவிய  கனத்த  அமைதியை உடைத்தெறிந்தது .  ஆனால் அஷோக் அமைதியாகவே இருந்தான் .

‘ உதாசீனம் ‘ தீரனுக்கு ஜென்ம எதிரி !அவன்  வெறுக்கும் குணங்களில் ஒன்று . அதுவும் அவன் கோபத்தில் இருக்கும் பொழுது அவனை இது போல் உதாசீனப்படுத்தினால் ,  அவனை மிருகமாய் மாற்ற அது ஒன்றே போதும் . அது நன்றாக தெரிந்தும் அஷோக்  எதுவும் பேசாமல் மெளனமாக அந்த அறையில் இருந்து செல்ல ,

” பேசிட்டு இருக்கும் பொழுது எழுந்து போற,  நில்லு டா ” தீரனின் சீற்றத்தில் அஷோக்கின் நடை தடைபட்டது .

” என்னடா உன் பிரச்சனை ? வாய திறந்தா தானே எனக்கு தெரியும் ” தீரனின் குரலில் கிஞ்சித்தும் பொறுமை இல்லை .

சோர்ந்து போயிருந்த தன் முகத்தை கரங்களால் துடைத்த அஷோக் ,

” மேகாவை மணமேடை வர கொண்டு வந்து , அவமானப்படுத்தி ,அழ வச்சு தான் , அவளை கல்யாணம் பண்ணிக்கணுமா ? தாலி கட்டுற நேரம் வேண்டாம் சொன்னவனை முன் தினம் நாள் நைட் வேண்டாம்ன்னு சொல்ல வச்சிருக்கலாமே ” கரங்களை குறுக்கே கட்டிக்கொண்டு தீரனை பார்த்தான் , அவனது பார்வை தீரனை குற்றம் சுமத்தியது .

நியாமான கேள்வி தான் ! மேகாவின் கண்ணீர் நிறைந்த முகம் கண்முன் வந்து சென்றது !

‘நான் பார்க்க என் மனம் வலிக்க எத்தனை முறை அவன் முன்பு கை கோர்த்து நின்றாள் . அதுவும் அன்று இரவு அவனுடன் அந்த பார்ட்டியில் அவன் கை பிடிக்கிறான் இவள் அனுமதிக்கிறாள் . போலீஸ் வரவில்லை என்றால் நடந்திருப்பதை வேறு ! தப்பித்துவிட்டான் . ‘- அதான் உன்னவளை தொட்ட அவன் கரத்திற்கு கொடுக்க வேண்டியதை வட்டியுடன் கொடுத்துவிட்டாயே ? மனசாட்சி இடைபுகுந்தது .

‘அவனுக்கு கொடுத்துவிட்டேன் , அவளுக்கு ? அவளை பார்க்கும் பொழுதெல்லாம் அவனுடன் அவள் இணைந்திருந்த தருணங்களே நினைவிற்கு வருகிறதே என்ன செய்ய ? ‘
அதையெல்லாம் மறந்துவிடு – மனசாட்சி .

‘முடியவில்லையே ! கடைசி வரை அவள் என்னை ஏற்க வில்லையே! ,ஒரே ஒரு கணம் நீ மட்டும் போதும் தீரா என அவள் ஒரு வார்த்தை சொல்லிருந்தால் அவள் நினைத்து பார்க்க முடியாத வாழ்க்கையை நான் கொடுத்திருப்பேன் . ‘ உன்னை ஏற்பதும் ஏற்காததும் அவள் விருப்பம் என்றது மனசாட்சி .

‘அப்பொழுது ஏன் என்னை காதலிப்பதாக பொய் உரைக்க வேண்டும் ?’- நீ ஏன் மிரட்டினாய் குறுக்கு விசாரணை நடத்தியது மனசாட்சி .

நியாயமே இல்லாத அவனது நியாயங்களை அவனது மனசாட்சியே தூசு தட்டுவது தட்டிவிட ,

” இப்போ எதுக்கு இந்த பேச்சு?” உரையாடலுக்கு முற்று புள்ளி வைக்க பார்த்த  தீரன் ஜன்னல் பக்கம் திரும்பி கொண்டான் , நண்பனை பார்க்க முடியவில்லை .

“பயமா இருக்கு தீரன் , உன்னோட இந்த கோபம்,  உன் வாழ்க்கையை அழிச்சிருமோன்னு ரொம்பவே பயமா இருக்கு “என்றான் உண்மையான வருத்தத்துடன் .

” ரொம்ப யோசிக்கிற அஷோக் ” 

” நானா? ” என்ற அஷோக் ,  தீரனின் முகத்தை பார்த்தபடி தன் பாக்கெட்டில் இருந்த டப்பாவை திறந்து  காட்டி ,

” மேகா கழுத்துல வேணும்ன்னே தானே நீ இதை போடல ” என்றான் .

” அதெல்லாம் இல்லை ” தீரனுக்கு துக்கம் தொண்டையை அடைத்து கொள்ள ,பழைய நினைவுகள் அவன் மனதை ஆக்கிரமிக்க,  வலியில் நெஞ்சம் கனத்தது .

“மேகாவை யார் கூடையும் கம்பேர் பண்ணாத தீரா , உன் கோபம் குழப்பம் எல்லாத்தையும் தூக்கி போடு , மேகா மேல காதல் வந்துச்சே அதே பார்வையோடு அவளை இப்பவும் பாரு ,  பழசெல்லாம் மறந்து போயிரும் டா . “

” மேகாவை நினைச்சு ரொம்ப பீல் பண்ற போல ” தீரனின் குரலில் கோபம் துளிர்த்தது .

” நோ உன்னை நினைச்சு பீல் பண்றேன் . ஏன்னா மேகாவை கஷ்டப்படுத்திட்டு,  நீ சந்தோஷமா இருக்க மாட்ட , உனக்கு  ஏதாவதுன்னா  என்னால தாங்கிக்க முடியாது . ” என்ற நண்பனை வாஞ்சையுடன் பார்த்த தீரனால்,  ஏனோ எதுவுமே பேச  முடியவில்லை .

” ப்ளீஸ் டா , சந்தோஷமா வாழலாம். கடந்த  காலத்தை தூக்கி போடு , நீ ,நான் , நேத்ரான்னு ஆனாதைங்க மாதிரி இருந்தோம் , ஏதோ அப்போ அப்போ  சிரிச்சோம்  . எப்போ நேத்ரா நம்மளை வெறுக்க ஆரம்பிச்சாளோ அந்த சிரிப்பும் தொலைஞ்சி  , நம்ம வட்டம் ரெண்டா சுருங்கிருச்சு .

இப்போ தான் நீ ஆசைப்பட்ட மாதிரி உனக்கு ஒரு குடும்ப வாழ்க்கை அமைந்திருக்கு,  அதை கெடுத்துக்காத டா .  உன் கோபம் புரியுது, மேகாவும் பாவம் தான் . கொஞ்சம் பொறுமையா இரு , மேகா உன் வைஃப் டா,  உன்னை லவ் பண்ணாம எங்க போயிற போறா ? மேகா மேல உள்ள எல்லா கோபத்தையும் தூக்கி போடு வாழ்க்கைய புதுசா பாரு ” அஷோக் பேசும் ஒவ்வொரு வார்த்தைகளையும் பொறுமையாக உள்வாங்கிக்கொண்டு தீரன் அமைதியாக நிற்க ,

”  மேகாவை கஷ்டப்படுத்திராத டா “பதிலை எதிர் பார்த்து தீரனின் முகத்தை பார்த்தான் .

” பயப்படாத உன் தங்கைச்சிய ஒன்னும் கடிச்சி சாப்பிட மாட்டேன் ” மென்னகையுடன் கூறி  அந்த பேச்சுக்கு மடை போட , பதிலுக்கு அஷோக்கும் இறுக்கம் தளர்ந்து சிரிக்க , அவர்களின் உரையாடல் தலைப்பு மாறி வேறு திசையில் பயணித்தது .

~~~~~~~~~~~

தீரன் சென்ற பிறகு அவன் பேசிய வார்த்தைகளை நினைத்து நீர் வற்றும் வரை அழுது தீர்த்து , அறைக்குள்ளே அடைந்து கிடந்தவள்  , அறையின் வாயிலில் ட்ரேயுடன் தனது அனுமதி வேண்டி நின்றிருந்த  பணிபெண்ணை  யோசனையுடன்  பார்த்த மேகா,   எழுந்து அமர்ந்து தன் சிகை சரி செய்தபடி,  ” வாங்க அக்கா ” என உள்ளே அழைத்தாள்.

” மேம் ப்ரேக் ஃபாஸ்ட் ” – மேகவிடம் தட்டை நீட்டினார் . ‘இருக்கும் நிலையில் சாப்பிடு ஒன்று தான் குறை ‘ பசிதான் ஆனால் மனம் அவன் பேசிய வார்த்தைகளிலேயே உழன்று கொண்டிருக்க ,

” பசிக்கல அக்கா ” மறுத்தாள்.

” ஆனா மேம் நீங்க இப்போ சாப்பிடணும் ” அவர் சொன்ன விதத்திலே  புரிந்துவிட்டது அவன் தான் ! அவனை தவிர  வேறு யாரு ?

” அக்கா ப்ளீஸ் எடுத்துட்டு போயிருங்க ” என்றாள் சோர்வாக .

” ஓகே மேம் ”  என்றவர் உடனே ட்ரேவுடன் அங்கிருந்து கிளம்பிவிட ,எங்கோ இருந்து கொண்டு  தன்னை ஆட்டுவிக்கும் தீரனை எண்ணி  மேகாவுக்கு மூச்சு முட்டிக்கொண்டு வர, நேராக  தோட்டத்திற்கு சென்று அமர்ந்து கொண்டாள் .

~~~~~~~~~~~~

அலுவலக அறையில் ,” ப்ரேக் பாஸ்ட்  சாப்பிடலைன்னு சொல்லிட்டு, சாப்பிடாம   உக்கார்ந்திருக்க சாப்பிடு டா ” சப்பாத்தியை உண்டபடி வினவிய அஷோக்கின்  இதழில் கேலி புன்னகை தவழ்ந்தது  .

அஷோக்கை ஒரு பார்வை பார்த்த தீரன், அலைபேசியை வெறித்தபடி அமர்ந்திருக்க ,  அலைபேசி சிணுங்கவும் அழைப்பை ஏற்றவன் எதிர்புறத்தில்  இருந்து என்ன செய்தி வந்ததோ  அவன்  முகம் இறுகி ,  அலைபேசி தொப்பென்று  டேபிளில் வந்து விழ ,  வாய்விட்டு சிரித்த அஷோக் ,

” மீட்டிங் ஹாலுக்கு போறேன் டா , சார் எப்படி ?” என தன் மேல் கோட்டை அணிந்தபடி வினவ , தீரன் பார்த்த தீ பார்வையில் இன்னும் சிரித்த அஷோக் ,”கல்யாணம் அவ்வளவு ஈஸி இல்லை டா, என்ஜாய் மேன்” என்று சொல்லி வெளியேற ,அவன் சென்றதும்  அலைபேசியை யோசனையுடன்  கையில் எடுத்தான் தீரன் .

மேகாவின் அறையில் இருந்து வெளியேறியிருந்த  பணிப்பெண் மீண்டும் , அவள் இருக்கும் இடம் அறிந்து தோட்டத்திற்கு ட்ரேவுடன் வந்தவள்  மேகவிடம் கார்ட்லெஸ் போனை நீட்டினாள் . மேகா யோசனையுடன் அவளை ஏறிட ,

” உங்களுக்கு தான் மேம் போன் ” என்றாள் .

” எனக்கா , யாரா இருக்கும் ?” என்றபடி அலைபேசியை வாங்க , பணிப்பெண் ஓரமாக சென்று நின்று கொண்டாள்.

” ஹலோ யாரு ?” என்ற மேகா  பதிலுக்காக காத்திருக்க ,

” நான் தான் ” என்ற தீரனின்  கனத்த குரலில் மின்சாரம் பாய்ந்தது போல அதிர்ந்தவள் , அனிச்சையாக தான் உக்கார்ந்திருந்த இடத்தில் இருந்து  எழுந்து நின்றாள் .  திடீர் அதிர்ச்சியில் பேச மறந்தவள்  அப்படியே நிற்க , அவளிடம் இருந்து பதில் வராததும் ,”ஹலோ  ” என்றான் .

“ஹாங் ஹலோ நீங்களா ”  அவ்வளவு  தான் எதிர்முனையில் தீரனின் முகம் விகாரமாய் மாறியது ,

” ஏன் வேற யாரையும் எதிர்பார்த்து இருந்தீங்களோ ?” விஷம் தடவிய வார்த்தைகள் மீண்டும் அவள் மனதை காயப்படுத்தியது .

” அப்படியெல்லாம் இல்லை ” உதட்டை கடித்துக்கொண்டாள் , அழுகிறாள்! பார்க்காமலே அவன் கண்டுகொண்டான் . என்ன பயன் ? இதோ அழவைத்துவிட்டானே . அவனுக்கு சங்கடமாக இருந்திருக்கும் போல ,

” சாப்பிடமாட்டேன்னு  சொன்னியாமே ” உடனே பேச்சை மாற்றினான் .

” பசிக்கல ” மெல்லிய விசும்பலுடன்  கூறினாள்.

“கண்ணை துடை ” அலைபேசியில் உத்தரவு போட்டான் ,  அரண்டு போனவள் சுற்றும் முற்றும் பார்த்தாள் இங்கே இல்லையே , பின் எப்படி நான் அழுவது அவனுக்கு தெரிந்தது ?

” துடைச்சிட்டியா ?”அவனது கணீர்  குரலால் குழப்பத்தில் இருந்து மீண்டவள் ,” ஹான் ” உடனே கண்ணீரை துடைத்தாள் .

” ம்ம்ம் , ஒழுங்கா எல்லாத்தையும் நான் வர்றதுக்குள்ள  சாப்பிட்டு முடிச்சிருக்கணும்  “

” நீங்க  வர போறீங்களா ?” யாரிடம் என்ன கேள்வி கேட்க வேண்டும் என்னும் விவஸ்தை இல்லாமல் அவள் கேட்டுவிட, இவன் தாடை இறுகியது .

” ஏன் வேற யா….” ஆரம்பித்துவிட்டான் , ஆனால் அவள் நல்ல நேரம் என்ன நினைத்தானோ பல்லை கடித்துக்கொண்டவன்  கொட்டவிருந்த விஷத்தை தனக்குள்ளே முழுங்கிக்கொண்டு ,” தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்காமல் , சொன்னதை செய், பத்து நிமிஷத்துல  வீட்ல இருப்பேன் ” அலைபேசியை வைத்துவிட்டான் .

அலைபேசியை வைத்து கொண்டு கண்களை இறுக்கமாக மூடி கொண்ட மேகா ஒரு பெருமூச்சை  வெளியிட்டு , தன் அறைக்கு விரைந்தவள் ,வேகமாக  பணிப்பெண் கொடுத்த உணவை  உண்ண துவங்கினாள்.

காலி தட்டை வாங்கிக்கொண்டு பணிப்பெண் அறையில் இருந்து வெளியேறிய போது , சொல்லி வைத்தது போல அவனும்  உள்ளே நுழைந்தான் .

அவனை பார்த்ததும் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தவள் விறைத்து நின்றாள் . மனைவியை கண்டதும் தீரனிடம் மிச்சம் இருந்த கோபமும் நான் போய் வருகிறேன் என சென்றுவிட , கண்களை உருட்டிக்கொண்டு இருக்கும் தன்னவளை சுவாரஸ்யத்துடன் ஏறிட்டவன்,

” சாப்பிட்டாச்சா ?”மிரட்டல் குரலில் வினவினான் .

” ம்ம் “

” நல்லா சாப்டருப்பியே ? “

” ம்ம் “

” நீ சாப்ட்டியே , புருஷன் சாப்பிட்டானான்னு ஒரு வார்த்தை கேட்டியா ? ” பொய்யான கோபத்துடன்  வம்பிழுத்தான் .

” சாரி  சாப்டீங்களா “

” பச்சை தண்ணி கூட குடிக்கலை ”   வரும் பொழுது இரெண்டு  சப்பாத்தியை  வேகமாக முழுங்கிவிட்டு தான் கிளம்பினான் . அவளை பீதியிலே வைத்திருப்பதில் அவனுக்கு கொள்ளை ஆனந்தம் .

” ஓ ” என்றவள் அவன் பார்த்த பார்வையில் ,” இதோ எடுத்துட்டு வரேன் ” என வேகமாக  அறையில் இருந்து வெளியேறினாள் .அவனது இதழ்கள் வெகு நாட்களுக்கு பிறகு ரசனையான புன்னகையில்   லேசாக வளைந்தது.

மேகா அந்த நீண்ட சமையல் அறைக்குள் நுழைந்ததும்  ,வெவ்வேறு பணியில் இருந்த வேலையாட்கள் அனைவரும்  ,அவள் முன்பு வந்து நிற்க ,முதலில் திகைத்தவள். பின்பு அவர்களிடம் கேட்டு ,உணவு தட்டை எடுத்து கொண்டு அறைக்குள் சென்றாள்.

தீரேனோ அலைபேசியில் யாரிடமோ  தீவிர உரையாடலில் இருக்க , இப்பொழுது அழைத்தால் கோபத்தில் கண்டபடி திட்டிவிடுவானோ என்று பயந்து  அவனை அழைக்காமல் அப்படியே நின்றாள் .

ஆனால் தீரேனோ மேகாவின் வரவை அவள் வாசலுக்கு வரும்பொழுதே கண்டறிந்தவன் , அவளை பார்த்து ‘ வா ‘ என விழிகளினாலே கூறினான் .

அவளோ படபடப்புடன்  அவன் அருகில் சென்று நின்று, அவனையும் உணவையும் மாறி மாறி பார்த்து கொண்டிருந்தாள் .

மேகாவை சில நொடிகள் கவனித்தவன்,  அவளை தன் முகம் இறுக பார்க்க , தீரன் பார்த்த பார்வையில் கரங்கள் தானாக நாட்டியம் ஆட , பீங்கான் தட்டு லேசாக ஆட துவங்கவும்  தட்டை இறுக்கமாக பிடித்து கொண்டவள் , அவனையே புரியாமல் பார்த்தாள் .

அக்னியோ அலைபேசியில் ,” இப்போதைக்கு ஆமான்னு மட்டும் சொல்லு , என்ன பண்ணனும்ன்னு நான் சொல்றேன் ” என பேசியபடியே மேகாவை நெருங்கியவன் , அவள் முன்பு  ஊட்டிவிடு என்பது போல  தன்  வாயை திறக்க , இதை எதிர்பாராதவள் தயத்துடன் அவனை பார்க்க ,அவன் பார்த்த தீ பார்வையில் அரண்டு போனவள், உடனே உணவை பிய்த்து அவன் இதழ் அருகே கொண்டு செல்ல , அவள் விரல் தீண்டிய அவன் இதழ்களோ உணவை வாங்கி கொண்டன .

அலைபேசியில் பேசினாலும் அவன் பார்வை மொத்தமும் அவள் மீதே இருக்க , ‘ஏன் இப்படி பார்க்குறான் ‘ படபடப்புடன் தலை குனிந்தவள்,  மறந்தும் அவன் முகம் பார்க்காது ஊட்டுவதிலே கவனமாய் இருக்க , தீரனுக்கு தன்னவள் ஊட்டிய ஒவ்வொரு கவளமும் இனித்தது போல , அலைபேசியை வைத்துவிட்டு ,பார்வையில் சுவாரசியம் குடியேற   மேகாவை பார்த்து கொண்டிருந்தவன் , ‘ மிளகா ‘ அவள் சொல்லவும்  அதை கவனிக்காமல் ,  தன்னை மறந்து மிளகாவை கடித்துவிட,

” ஸ் ஆஆ ” என காரம் தாங்காமல்  அவன் கத்தியேவிட்டான்.

” அச்சோ  ” என்ன செய்ய போகிறானோ என்னும் பதற்றத்தில் இவள் பார்க்க ,

” என்னடி மிளகாவை தந்து பழிவாங்குறியா ” முகம் சிவக்க கேட்டான் .

” இல்லை அது நான்  சொன்னேன் ” அவன் பார்த்த பார்வையில் திணறினாள் .

” தள்ளு ” தண்ணீரை எடுத்து வேகமாக பருகினான் . 

” இப்பவும் காரமா இருக்கா ?” தள்ளி நின்றுகொண்டு மெல்ல கேட்டாள்  . “ம்ம் ” கொட்டியவன் வேறு   எதுவும் பேசாமல் அவளையே பார்த்தான் . அவன் பார்வை வேறு கதை பேசியது . ‘ போச்சு பத்து மிளகா கொடுத்து கடிக்க சொல்ல போறான் ‘ பயத்தில் இவள் கரங்கள் நடுங்கியது .

” ஸ்வீட் ஏதாவது வேணுமா ?” தண்டனைக்கு பயந்து சரணடைந்தாள் . அவன்  விழிகளில் ரசனை கூடியது .

” ஸ்வீட்   வேணும் தா…ன்  ” என அவனது விஷமமான குரல்  இழுத்து ராகம் போடவும்   , எடுத்துவர அங்கிருந்து வேகமாக கிளம்பியவளின் இடையை தன் கரங்களால் சுற்றி வளைத்து தன்னோடு  இறுக்கமாக அணைத்து  கொண்டவன் ,

“எங்க போற? ” என கேட்டான், அவன் விழிகளில் தெரிந்த மாற்றம் இவளுக்கு கிலியை உண்டாக்கியது .

” ஸ்வீட் எடுக்க போ..” மீதம் இருந்த அவளது வார்த்தைகள் அவனது இதழுக்குள் தஞ்சம் அடைய , அங்கே   மூச்சுகள் மோதிக்கொண்டன .

மென்மையான முத்தம் , வன்மையாக  நீடித்தது . இதழ் முத்தத்திற்கு   மற்றும் முடிவென்பதே  இல்லை போல முத்தம் தொடர்ந்து கொண்டிருக்க ,  யாருக்காவது  மூச்சு முட்டினால்  தான் முத்த போர்  முடிவுக்கு வரும் . மேகாவுக்கு  மூச்சு முட்ட  , முத்த போர்  முடிவுக்கு வர ,  தன்னவளின் முகம் பற்றி நெற்றியுடன்  தன் நெற்றி ஒட்டியபடி மூச்சு வாங்க நின்றிருந்த தீரனின் முகத்தில் கண்டறியமுடியா புன்னகை  மீசை நுனிக்குள் இருந்து எட்டி பார்த்தது .

~~~~~~~~~~~~

” ப்ராசஸ் எல்லாம் எப்படி போய்ட்டு இருக்கு ?” வீட்டில் இருக்கும் ஆபிஸ் அறையில் அமர்ந்திருந்த அஷோக்கிடம் வினவினான் தீரன் .

” ம்ம் ரிஜிஸ்ட்ரேஷன்ல ப்ராப்லம் வராது,  ஆனா கனகராஜ் கொஞ்சம் பிரச்சனை பண்ணுவாருன்னு தான் தோணுது “என்றான் அஷோக் .

” பார்த்துக்கலாம் ” என்ற தீரன் ,

” இதுல உனக்கு ஏதாவது வருத்தமா ?”

” என் மாமனார் உன் பொறுப்பு , உயிரை மட்டும் விட்டு வச்சிரு , மத்தபடி உன் இஷ்டம் வச்சு செய், அவருக்கு தேவை தான் ” சிறு புன்னகையுடன் கூறிய அஷோக் ,

” ரிசெப்ஷன்ல எல்லார் முன்னாடியும் இதை மேகா கழுத்துல போட்டுவிட்டுடு ” என தாலி அடங்கிய டப்பாவை தீரனிடம் நீட்டினான் . யோசனையுடன் அதை வாங்கி கொண்டான் தீரன் .

” ரிசெப்ஷன் எப்போ பிளான் பண்ணலாம் ? எல்லாருக்கும் உன் கல்யாண நியூஸ் தான் ஹாட் டாபிக் “

” மேகா அப்பா இருக்கிற கண்டிஷனுக்கு ட்ராவல் எல்லாம் ரிஸ்க் , டூ மந்த்ஸ் போகட்டும் ” என்ற தீரன் ,

” க்ராண்டா வேண்டாம் சிம்பிளா பண்ணிரலாம் , நேத்ராக்கு க்ராண்டா பண்ணிக்கலாம் ” கண்ணாடி ஜன்னல் வழியே அண்ணார்ந்து இன்னும் லைட் எரியும் நேத்ராவின் அறையை தீரன் வெறித்து பார்த்தான் .

” அது அவ கல்யாணம் பண்ணும் பொழுது பார்க்கலாம் , இப்போதைக்கு உன் ரிசெப்ஷன் செமையா நடக்கணும் , நீ டேட் மட்டும் பிக்ஸ் பண்ணு , மத்த விஷயங்களை நான் பார்த்துகிறேன் ” என்ற அஷோக்கின் குரலில் சந்தோஷம் ததும்பியது .

நண்பனிடம் உரையாடிவிட்டு ,  தன் அறைக்குள் தீரன் நுழையும் பொழுது மேகா கட்டிலில் ஒரு ஓரமாக படுத்து உறங்கி கொண்டிருந்தாள் . ஏதோ பாதுகாப்பு இல்லாத குழந்தை போல உடலை குறுக்கிக்கொண்டு அவள் கிடப்பதை பார்த்தவனுக்கு உள்ளே வலித்தது .

‘ கால்கள் வலிக்க போகிறது ‘ மேகாவை எண்ணி வருத்தமாக இருந்தது .’ காலை நீட்டி ஒழுங்காக படு ‘ என அவன் தான் சொல்ல வேண்டும் , ஆனால் அவன் உள்ளுக்குள் சுமந்து கொண்டிருக்கும் கோபம் , கர்வம் , அகங்காரம் எல்லாம் குறையாமல் எப்படி ? செண்டுமல்லி யின் வாசனை போல மனம் முழுவதும் காதல் நிறைந்து இருந்தும் , அதிகாரம் செய்தே பழகியவனுக்கு , அனைத்தையும் நொடியில் விடுத்து, இறங்கி வந்து காதல் பழகுவது அவ்வளவு எளிதல்லவே .

நீண்ட பெருமூச்சுடன் மனைவியை பார்த்தவன் , உடையை மாற்றி விட்டு ட்ரெஸிற்கு சென்று வாடை காற்றை தன் முகத்தில் வாங்கிக்கொண்டு இருளை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் .

காதில் தந்தையின் குரலும் , நிழலாடும் கடந்த காலம் ஒருபுறம் !

கண்முன் மேகாவின் கண்ணீர் நிறைந்த முகம் மறுபுறம் !

கையில் தாலியும் , நண்பனின் வார்த்தைகளும் ! தீரனின் மன குழப்பத்தை காதல் வெல்லுமா ?

– தொடரும்