மிருதனின் கவிதை இவள் 22
நண்பனிடம் உரையாடிவிட்டு , தன் அறைக்குள் தீரன் நுழையும் பொழுது மேகா கட்டிலில் ஒரு ஓரமாக படுத்து உறங்கி கொண்டிருந்தாள் . ஏதோ பாதுகாப்பு இல்லாத குழந்தை போல உடலை குறுக்கிக்கொண்டு அவள் கிடப்பதை பார்த்தவனுக்கு உள்ளே வலித்தது .
‘ கால்கள் வலிக்க போகிறது ‘ மேகாவை எண்ணி வருத்தமாக இருந்தது .’ காலை நீட்டி ஒழுங்காக படு ‘ என அவன் தான் சொல்ல வேண்டும் , ஆனால் அவன் உள்ளுக்குள் சுமந்து கொண்டிருக்கும் கோபம் , கர்வம் , அகங்காரம் எல்லாம் குறையாமல் இருக்க எப்படி ? செண்டுமல்லி யின் வாசனை போல மனம் முழுவதும் காதல் நிறைந்து இருந்தும் , அதிகாரம் செய்தே பழகியவனுக்கு , அனைத்தையும் நொடியில் விடுத்து, இறங்கி வந்து காதல் பழகுவது அவ்வளவு எளிதல்லவே .
நீண்ட பெருமூச்சுடன் மனைவியை பார்த்தவன் , உடையை மாற்றி விட்டு ட்ரெஸிற்கு சென்று, வாடை காற்றை தன் முகத்தில் வாங்கிக்கொண்டு இருளை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் . மனம் மருத்துமனையில் மேகா பேசியதை எண்ணி பார்த்தது ,
” இது காதல் இல்லை , காதல் இப்படி இருக்காது , நீங்க என்ன செஞ்சாலும் எனக்கு உங்க மேல காதல் வராது ” இந்த குரலை கேட்க வேண்டும் என்று எத்தனை நாட்கள் அவன் ஏங்கி தவித்திருப்பான் . பூவிலும் முள் உண்டு என்பதை உணர்த்திய குரல்! பல நாள் கனவில் பேசி அவன் தூக்கத்தை கெடுத்த இனிமையான குரல்! அன்று ஏனோ கசந்தது! அதில் இருந்த ஒவ்வொரு வார்த்தைகளும் தீரனை, அன்று போலவே இன்றும் வலிக்க வலிக்க அடித்தது . ‘அப்பா வா ஷிப்ட் பண்ண வேண்டும்’ என்று டாக்டரிடம் , நிமிர்வுடன் வந்து பேசியவள், ‘இப்போதைக்கு ரிஸ்க் வேண்டாம் ‘ என்று அவன்(ரிதுராஜ்) சொல்லவும் அமைதியாகே அமர்ந்துகொண்டாளே!
அவன் உரிமையுடன் அவள் அருகில் வந்து அமர்கிறான், இவள் அசையாமல் இருக்கிறாள் . ‘ மேகா ‘ என ஒரு வார்த்தை தான் கூறினான் , அவனிடம் உடைந்து அப்படி கதறுகிறாள் ! அவனும் இது தான் நேரம் என்று இன்னும் அவளுடன் நெருங்கி அமர்கிறான். இதில் அவளது கரத்தை வேறு பிடித்து கொண்டான் . சகிக்கவில்லை ! அவன் ஏதோ கூறுகிறான் , இவள் அழுதபடி ஏதோ கூறி ஓவென்று அழுகிறாள் .
உடனே இவன் ‘ நான் பார்த்துகிறேன் டா மா ‘ என்று வசனம் பேசுகிறான் , அது என்ன டா , மா ? யாரை யார் கொஞ்சுவது? அந்த இடத்திலே ஓங்கி ஒன்று விடலாம் போல ஆத்திரம் வந்தது. ஆனாலும் அவள் கண்ணீர் , ஆத்திரத்தை விட அவளது கண்ணீர் கொடுமையாக இருக்கிறதே ? இன்னும் ஒரு நிமிடம் இருந்தாலும் ரிதுராஜின் உயிர் விண்ணகம் செல்வது உறுதி , என்று மூளை துரிதப்படுத்திருக்கும் போல , நிற்க விரும்பாமல் கிளம்பிவிட்டான் .
எதுவும் வேண்டாம் டெல்லிக்கு சென்றுவிடலாம் , இவள் எல்லாம் என்னை என்ன செய்துவிட முடியும் ? ஆபிஸ்க்கு சென்றால் இவளை மறந்துவிடலாம், என்று எண்ணி தான் ஏர்போர்ட் வரை வந்தான் , ஏன் பிளைட்டில் கூட ஏறி விட்டான் . ஆனால் மழலையாய் ஆடம் பிடிக்கும் மனம் அவள் தான் வேண்டும் என்று வம்பு செய்ய , அடுத்த கணமே பிளைட்டில் இருந்து இறங்கியவன் . சென்னையிலே நண்பனுடன் ரூம் போட்டு தங்கி, மனதை ஆன்லைன் மூலமாக தன் வேலையில் திசை திருப்பினான் .
ஆயிரம் கோபம் இருந்தாலும் , ஆஸ்பத்திரியில் கோபால கிருஷ்ணனுக்கும் , மேகாவின் குடும்பத்தினருக்கும் சிறு இன்னல்கள் கூட வராது , தூரம் இருந்துகொண்டே பார்த்து பார்த்து செய்தான் . மறுநாள் காலை கோபால் கிருஷ்ணன் கண் விழித்துவிட்டார் என்னும் செய்தி அவனுக்கு சிறு ஆறுதலை கொடுத்தது .
சில மணிநேரத்தில் மேகாவிடம் இருந்து மாறி மாறி அழைப்பு வர , இவனுக்கு புரிந்து விட்டது ‘ ஓ மேடம்க்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது ‘ என்று ,
‘ தீரன் சார் இருக்காங்களா ? அவர் இப்போ எங்க ? அவர்கிட்ட பேசணும் ” எத்தனை தடவை தன் ஆபிஸிற்கும், அவனுக்கும் அழைத்திருப்பாள் , காதல் கொண்ட மனம் வற்புறுத்த குரலை மட்டும் காது குளிர கேட்டான் . ஆனால் தான் இருக்கும் இடத்தை சொல்ல கூடாது என்று தீர்க்கமாக மறுத்தவன் . அவளுடன் பேசவும் இல்லை .
அவளை மறக்க வேலையை இழுத்து போட்டுகொண்டு பார்த்தான் .சிறிய முயற்சி தான் , ஆனால் அதில் பெரிய வெற்றி கிடைக்க வில்லை . ஐந்து நிமிடம் வேலை பார்த்தால் அதில் சும்மார் முப்பது தடவையாவது பைலில் அவள் முகம் தெரியும் தலையை பிய்த்து கொள்ளலாம் போல் இருந்தது . அப்படி இருக்கும் சமயத்தில் அவனது உளவாளி மூலமாக அவனுக்கு கிடைத்த தகவல் அவனை வெறி கொள்ள செய்தது .
ஹோட்டல் நயகரா , இரவு வேளையில், அதுவும் அவனுடன் , ரொம்ப அவசியம் ! பல்லை கடித்தான் இருவரின் ஜோடி பார்த்து .
மேகாவின் முகத்தில் தெரிந்த தயக்கத்தையும் , பயத்தையும் கண்ட தீரன் ,” அவளுக்கு புடிக்கலை டா , முகத்தை பாரு , அவன் தான் கூட்டிட்டு வந்திருக்கான் அறிவு கெட்டவன் , ஃபாரீன்ல படிச்சா மூளையையும் வெளிநாட்டுக்காரன் கிட்டையே அடமானம் வச்சிட்டு வந்திருவானுங்களா என்ன ?” என இன்னும் சில பல வார்த்தைகளால் ரிதுராஜை அர்ச்சிக்க , என்ன நடக்குமோ என்கிற பீதியில் அஷோக் அமர்ந்திருந்தான் .
குனிந்து அவளது காதில் ஏதோ ஏதோ ரகசியம் பேசுசி அவன் சிரித்தான் . தீரனின் தாடை இறுகியது ,ஆனால் அவள் சிரிக்க வில்லை அதுவரை அஷோக்கிற்கு கொஞ்சம் நிம்மதி . ஏதோ பதற்றத்திலே சுற்றும் முற்றும் பார்து கொண்டு அமர்ந்திருநாள் .
‘ யாரை தேடுகிறாள் , என்னை தானா ? கண்டு கொண்டு விட்டாளா? ‘ அவள் கண்கள் தன் பக்கம் வரவும் முகத்தை திருப்பி கொண்டான் .’ என்னை எங்கே தேட போகிறாள் , தொலைந்தான் , என நிம்மதியாக இருப்பாள் ‘ ரிதுராஜை வெறித்தபடி அமர்ந்திருந்தான் தீரன் .
மீண்டும் ஏதோ கூறுகிறான் , அவள் அமைதியாக இருக்கிறாள் , உடனே கரத்தை பிடித்துவிட்டானே , தீரனின் விழிகள் தீவிரமாய் ரிதுராஜை எரித்தது .
மறுபடியும் காதில் ரகசியம் பேசுகிறான் , அதற்கு அவள் புன்னகையுடன் பதில் அளிக்கிறாள் .இப்பொழுது கண்களை பார்த்து ஏதோ சொல்கிறான் , அவளிடம் இருந்து மீண்டும் அதே புன்னகை , இவனுக்கு உள்ளே எரிந்தது .
இந்த முறை கூடுதலாக புன்னகையுடன் கண்களையும் சிமிட்டுகிறான் , தீரனின் கையில் இருந்து கண்ணாடி க்ளாஸ் நொறுங்கி சிதற காத்திருந்தது .
ஏதோ கேட்டு முகத்தை சுருக்கி கெஞ்சுகிறான் , இவள் தலை குனிந்து மறுக்கிறாள் . உடனே ஏதோ ஏதோ கூறி அவன் பல்லை காட்டுகிறான் இவளும் சிரிக்கிறாள் . இப்பொழுது இவளது இதழ்கள் கூடுதலாக வளைந்தது . மீண்டும் கையை பிடிக்கிறான் . ‘ அந்த கைய உடைச்சிட்டா என்ன ?’ பல்லை கடித்துக்கொண்டு தீரன் கூற , அஷோக் விக்கித்து பொய் அமர்ந்திருந்தான் .
இந்த முறை அவள் கண்ணை பார்க்கிறான் , ஏதோ உருக்கமாக பேசி குலைகிறான், முகபாவம் காட்டிக்கொடுத்தது , தீரனின் இதயம் வேகமாக துடித்தது . அவன் மேகாவை நெருங்க நெருங்க இவனது கண்கள் நெருப்பாய் கொதித்தது .இப்பொழுது ரிதுராஜின் பார்வை போன திசையை கண்ட தீரனின் கரங்களுக்குள் சிக்குண்ட க்ளாஸ் உடைந்து நொறுங்க “இதுக்கு மேல முடியாது “என தன் இருக்கையை பின்னால் தள்ளிவிட்டு , வலது கையில் அணிந்திருந்த சில்வர் காப்பை முழங்கை நோக்கி முறுக்கிவிட்ட தீரன் , ரிதுராஜை நோக்கி வேக எட்டுகள் எடுத்துவைக்கவும் ,
போலீஸ் படை அங்கே வர, தீரனை பின்னோக்கி இழுத்த அஷோக் . ‘ நீ அங்க போகாத ,தேவை இல்லாத நியூஸ் கிரியேட் ஆகும், லெட் மீ ஹாண்டில் இட் ‘ என்றான் . அதற்கு அழுத்தமான பார்வை ஒன்றை பார்த்த தீரனுக்கு, நெஞ்சுக்குள் கொதித்து கொதித்து கொதிப்பு மட்டும் அடங்க வில்லை .
ரிதுராஜிடம் ஏதோ சொல்கிறாள் , முகத்தில் பயம் அப்பட்டமாய் தெரிந்தது ,அதற்கு அவன் ஏதோ சொல்கிறான் . உடனே அவள் அதிகாரியிடம் ஏன் செல்கிறாள் ? அவரோ மேகாவின் கரத்தை பிடித்து ஏதோ சொல்ல ,இவள் மறுத்து அழ, தீரனுக்கு அந்த காட்சிகளை அதற்கு மேல் பார்க்க பொறுமை இல்லை .
” ப்ராப்லம் சார்ட் பண்ணியாச்சு தீரா ” அஷோக் சொல்லவும் , மேகா மிக பாதுகாப்பாக , அதே பெண் ஆபிஸரால் பின்கேட் வழியாக , அவள் வீட்டிற்கு மிக மரியாதையுடன் அழைத்து செல்ல பட்டாள்.
” டேய் உன் குடும்பத்து , ஆளுங்களால என் ப்ரெஷர் ஏறுதுடா ” தீரன் அஷோக்கிடம் காட்டு கத்து கத்தினான் . ஆனாலும் அவன் மனம் ஆற வில்லை ரிதுராஜை விசாரணை என்னும் பெயரில் சில மணி நேரம் , தன் செல்வாக்கு மூலமாக ஸ்டேஷனில் தூக்கி வைத்தவன் , முறையான கவனிப்பிற்கு பிறகே ,அதுவும் அஷோக்கிற்காக மட்டும் வெளியே விட்டான் .
அறைக்கு வந்து தாழிட்டுக்கொண்ட தீரனின் மனதில் , ரிதுராஜ் மேகாவின் கரத்தை பிடித்துக்கொண்டு , காதலோடு பார்த்ததும் , முத்தமிட நெருங்கியதும் ,மாறி மாறி தோன்ற , பைத்தியம் பிடிக்காத குறையாக பொருட்கள் அனைத்தையும் தூக்கி எறிந்தவன் . அதீத கோபத்தில் இருக்க . அவன் மனமோ ஒரு நொடி, வேண்டாம் அவளே !என்றும் மறு நொடியே வேண்டியவளே ! என்னும் நிலையில், சூழலில் அகப்பட்ட சிறு இரும்பாய் தத்தளித்தது .
இருட்டு அறை ! மெல்லிய கோடாய் ஜன்னலில் இருந்து, சிறு துவாரம் மூலமாக அறைக்குள் ஊடுருவும் சூரிய வெளிச்சம் ! வெள்ளை பியானோ ! ஆங்காங்கே துளிர்த்த ரத்த கரை ! கீழே ரத்த வெள்ளத்தில் மேகா ! கையில் கத்தியுடன் தீரன் ! .” மேகா ” அடித்து பிடித்துக்கொண்டு எழுந்து அமர்ந்த தீரனுக்கு படபடப்பு மட்டும் குறையவே இல்லை . இது கனவு தான் என்று பலமுறை சொல்லி கொண்டவனை , கடந்த கால நினைவுகளும் , அவன் கண்ட கனவும் மிகவும் அச்சுறுத்தியது . நெஞ்சுக்குழிக்குள்ஏதோ ஒன்று பயங்கரமாக அழுத்தியது .
மேகாவை வேண்டாம் என்று முழுவதுமாக வெறுத்தும் ஒதுக்க முடியவில்லை , அவளை வேண்டும் என்று முழுவதுமாய் ஏற்று கொள்ளவும் முடியவில்லை .இப்படியான குழப்பமான மனநிலையுடன் மண்டபம் வந்த தீரனின் ஆழ்மனத்திற்குள் கடைசி நொடியிலாவது , மேகா தன் காதலை உணர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட மாட்டாளா ?நெருஞ்சி முள்ளாய் தன் நெஞ்சை குத்திக்கொண்டிருக்கும் , குழப்பத்தை நீக்கி , அடிமனதின் காயத்திற்கு மறந்திட மாட்டாளா ? என எக்கச்சக்க ஏக்கத்தை தன் மனதிற்குள் தேக்கிவைத்து கொண்டு அவள் பார்க்கா நேரத்தில் எல்லாம் அவளையே தான் கவனித்தான் .
பார்த்தாள் ! ஆம் மேகா அக்னியை பார்த்தாள் ! அதை அவனும் கவனித்தான் ! பார்வையில் முதலில் அதிர்ச்சி ! பின் குற்ற உணர்வு ! ஆக மறந்தும் அதில் காதல் இல்லை ! மிகவும் காயப்பட்டு போனான் ! அவளை பார்ப்பதை தவிர்த்தான், ஆனால் அவளின் பார்வை அவனை பின்தொடர்வதை அவன் கவனிக்க தவற வில்லை !
கோபால கிருஷ்ணன் மற்றும் ராதிகாவின் உபச்சாரம் , ‘ ப்ரோ ‘ என சுற்றி வந்த விக்ரம் மற்றும் மயூரியின் பாசம் மனதிற்குள் இதம் அளித்தது .
நேரம் கடந்து கொண்டே இருந்தது ! மேகாவின் புன்னகை மாறா முகம் அவனுக்குள் இருந்த நம்பிக்கை கோட்டையை சரித்து விட , கனகராஜிடம் ஏற்கனவே தீரன் , தான் கண்ணசைக்கும் பொழுது நிறைவேற்றம் வேண்டும் என அவன் தனது பாணியில் வகுத்திருந்த இறுதி திட்டம் ,கனகராஜின் மூலமாக நிரைவேற்ற பட ஆயத்தமானது . அதன் படி உடை மாற்றும் பொழுது ரிதுராஜின் அறை கதவு வேகமாக தட்டப்பட்டது .
உள்ளே வந்தவர் ரிதுராஜிடம் தனியாக பேச வேண்டும் என்று கூற , அவனை தவிரஅங்கு இருந்த அவனது நண்பர்கள் அனைவரும் வெளியேறிவிட ,
என்னப்பா என்ன விஷயம் ? ஏன் ஒருமாதிரி இருக்கீங்க ?என ரிதுராஜ் தன் தந்தையிடம் வினவினான் .
அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்த கனகராஜ், மகனை தனக்கு எதிரே அமர சொன்னார் .
என்னப்பா ? என பேச வந்த மகனை கரம் உயர்த்தி தடுத்தவர் ,”இந்த கல்யாணத்தை நிப்பாட்டிருப்பா ,இந்த கல்யாணம் நமக்கு வேண்டாம் பா ” வேதனை குரலில் கூறினார், மகனை பார்க்க வேதனையாக தான் இருந்தது .ஆனால் அதை விட அவன் நிம்மதியும் , உயிரும் ஒரு தந்தையான அவருக்கு முக்கியமே . ரிதுராஜிக்கு ஒன்றுமே விளங்கவில்லை , தலை சுற்றாத குறையாக அமர்ந்திருந்தான்
“என்னை மன்னிச்சுரு ரித்து , இதுல உன் உயிர் மட்டும் இல்லை , நம்ம குடும்பத்தோட உயிரும் சம்பந்தம் பட்டிருக்கு , இந்த கல்யாணம் நடந்தா அப்பா உயிரோட இருக்க மாட்டேன் “
” ஆனா அப்பா ,” அவன் தொடர்வதற்குள் அவன் பேச்சுக்கு மடை போட்டவர்,
” ஏன்னு இப்போ கேட்காத , கண்டிப்பா சொல்றேன் , ஆனா இப்போ இல்லை , இந்த கல்யாணம் நடந்தா நீ நிம்மதியா இருக்க முடியாது டா . அப்பா உயிர் முக்கியம்ன்னா நீ இந்த கல்யாணம் பண்ணிக்காத , காரணம் கேட்காத “முற்றுப்புள்ளி வைத்து பேச்சை முடித்துக்கொண்டார் .
” மேகா பாவம் பா ” ரிதுராஜின் கண்கள் கலங்கியது . தந்தை ஒருபுறம் , காதலித்த பெண் மறுபுறம் ! முடிவெடுக்க முடியாமல் தவித்தான் .
” ப்ளீஸ் அப்பா ” தந்தையின் காலில் விழ போக, மகனின் கன்னத்தில் ஓங்கி அறைந்தவர், ” என் பையன் நீ எப்பவும், நிமிர்ந்து நிற்கணும் . இப்படி கால்ல விழ கூடாது , இதெல்லாம் வாழ்க்கையில ஒண்ணுமே . காதல் இன்னைக்கு ,வரும் நாளைக்கு போகும் இட்ஸ் ஜஸ்ட் அ பாசிங் க்ளவுட் “
” நோ பா , ஐ லவ் ஹெர் “
” அப்போ உன் அப்பாவை மறந்திரு ” என கனகராஜ் தீர்க்கமாக சொல்லிவிட , இருத்தலை கொல்லி எறும்பாய் தவித்தவன், தவறாய் ஒரு முடிவு எடுத்து அனைவரையும் தவிப்பில் ஆழ்த்த , எல்லாரும் ரிதுராஜை அதிர்ச்சியுடன் பார்த்திருந்த தருணம் , மேகாவின் பார்வை மட்டும் தீரனை தான் பார்த்தது ! அவனும் பார்த்தான் ! அவள் அழுதாள் ! அதுவும் அவனுக்காக , சிறு மிரட்டலுக்காக தன்னை நிர்கதியாக விட்டுவிட்டு புரமுதுகிட்டு ஓடிய அவனுக்காக அழுதாள் ! உண்மையாக அவன் காதலித்திருந்தால் எந்த பிரச்சனையிலும் அவன் விட்டு கொடுத்திருக்க கூடாதல்லவா ?அவன் தான் நீ வேண்டாம் என்று போய்விட்டானே இன்னும் அவனுக்காக ஏன் அழுகிறாய் ? இவனுக்கு சகிக்க வில்லை ! கோபம் வந்தது ! அந்த கோபம் , என்னை ஏமாற்றினாய் அல்லவே இதோ அன்று எனக்கும் அப்படிதான் வலித்தது என மேகாவின் நிலை கண்டு கர்வத்துடன் புன்னகைத்தது .
அனைத்தும் தீரனின் எண்ணப்படி சென்று கொண்டிருக்க , கோபால கிருஷ்ணன் தானே முன்வந்து மேகாவை திருமணம் செய்து கொள்ள கேட்பார் என்பதை மட்டும் தீரன் கணித்திருக்க வில்லை , தானே அவரிடம் பேசலாம் என்று தான் இருந்தான் . அக அந்த இடத்தில் தான் அக்னியின் திட்டம் மாறி போனது . அதில் ஒன்றும் பெரிய வித்யாசம் இல்லை தான் , ஆனால் கோபால கிருஷ்ணன் அவன் மீது கொண்ட நம்பிக்கை அவனை ஒருகணம் தடுமாற செய்தது .
முடிவு அவன் கையில் என்னும் நிலையில் நின்றவனுக்குள் அப்படி ஒரு தடுமாற்றம் , தந்தையின் அனுபவ வார்த்தைகள் , மேகாவின் வெறுப்பான வார்த்தைகள் , மேலும் கோபால கிருஷ்ணனின் நம்பிக்கை நிறைந்த வார்த்தைகள் என அனைத்தும் தீரனை வெகுவாக கலக்கமுற செய்ய , கண்மூடி நீண்ட யோசனையில் நின்ற தீரன்,
” தீரன் இதுக்கு பேர் காதல் இல்லை , காதல் இப்படி இருக்காது , நான் என்னைக்குமே உங்களை காதலிக்க மாட்டேன் ” என்னும் மேகாவின் வார்த்தைகளை எண்ணிப்பார்த்தபடி அவளது கழுத்தில் தாலி கட்டி, தன் வீட்டிற்கு அழைத்து வந்து , வித விதமான ஏற்பாடுகள் மூலமாக தன் கோட்டைக்குள் தன்னவளை வரவேற்று ‘ நீ எனக்கு தான் என்பதை இந்த தீரன் ஏற்கனவே குறித்துவிட்டேன் ‘ என்பதை சொல்லாமல் சொல்ல . ஏமாற்றத்தில் அவள் கண்கள் கசிந்தது .
அவளது வாடிய முகமும் , பதற்றத்தில் நடுங்கும் தேகமும் , கண்ணீர் வடிக்கும் விழிகளும் தீரனை மிகவும் கோபப்படுத்தியது .
அந்த கோபம் அப்படியே அவன் வார்த்தையில் பிரதிபலித்தது ,
என்னை பார்த்து பயம் என்றாள், உடனே அவன் மீது இஷ்டமா , இந்த நேரம் அவனை ரொம்ப மிஸ் பண்ணுவல, இப்போ கூட என் இடத்துல அவனை நினைச்சு பார்ப்பல என்று கேட்டான் . இல்லை உன் மீது தான் இஷ்டம், அவனை ஏன் நான் மிஸ் பண்ண வேண்டும் என்று கூறினால் வாயில் இருந்து முத்து விழுந்துவிடுமோ .
அதை விட்டுவிட்டு அழுகிறாள் , பின் ஹான் , ரித்துவாம் ரித்து ரொம்ப முக்கியம் . அவனுக்கு கோபம் வந்துவிட நாலு வார்த்தை பேசி விட்டான் .
சரி ” என்னை புடிக்குமா ?” என கேட்டான், ” ஆமா உன்னை தான் புடிக்கும் ” என சத்தமாக கூறினால் தான் என்ன ? அதை விட்டுவிட்டு தலையை மட்டும் அசைக்கிறாள் சோக கீதம் வாசித்தபடி . அவனுக்கு கோபம் வர ஒரு முத்தம் கொடு என்றான் .
கணவன் தானே , கொடுத்திருந்தால் அதோடு முடிந்திருக்கும் , அதை விட்டுவிட்டு, அவன் ஏதோ கேட்க கூடாததை கேட்டது போல அவள் அப்படி அழ , உள்ளே சென்ற போதை தன் வேலையை காட்ட ,அவன் தன் வேலையை காட்டிவிட்டான் .
அழுகிறாள் ! அவன் தான் காரணம் ! அழுவாள் என்று தெரிந்தே தான் அழவைதான் ! அதுவும் அவனுக்கு இம்சையாக தான் இருந்தது .
இவளை என்ன செய்வது? என்று கண்மூடி உறங்குவது போல படுத்திருந்தவனுக்கு சங்கடமாக இருந்தது . உறக்கம் எங்கோ சென்றிருக்க தன் கைவளைவுக்குள் தன்னவளை அணைத்து வைத்தபடி படுத்திருந்தான் .
அழுது அழுது ஒருவழியாக உறங்கிவிட்டாள் .என்பதை அவளது நாசியில் இருந்து வெளியேறிய சீரான மூச்சு காற்றில் தெரிந்து கொண்டவன் , கண் திறந்து தன் மார்பில் துயில் கொண்டிருக்கும் மனைவியின் முகம் பார்த்தான் . கோபம் எல்லாம் எங்கோ சென்றிருக்க , கழுத்தில் தன் உரிமையை எடுத்து கூறிய தாலியை எடுத்து முத்தமிட்டவன் , அப்படியே தன்னவளின் நெற்றியிலும் முத்தமிட்டான் . அசையாமல் உறங்கிக்கொண்டிருந்தாள்.
” வரு “வெகு நாட்களுக்கு பிறகு இப்படி அழைத்தான் , அவனது குரல் காதலில் குழைந்தது .
” ம்ம் ” மேகா லேசாக முனங்கியபடி தன் தூக்கத்தை தொடர்ந்தாள் . கண்களில் இருந்து கண்ணீர் வந்தது , இப்படி உறங்கும் பொழுதும் அழுகிறாளே ?அவனுக்கு சங்கடமாக இருந்தது ,“ப்ச் எதுக்கு டி அழுற ?” சிறு கோபத்துடன் வினவினான். மீண்டும் அவளிடம் இருந்து சிறு முனங்கல் . சிணுங்கியபடி தன் மார்பில் முட்டி மோதியபடி உறங்கினாள் . செல்லமாக நெற்றியில் முட்டியவன்,
” ஐ லவ் டி வரு பேபி “என காதலோடு கூறினான். அவ்வளவு தான் ஏதோ கேட்க கூடாததை கேட்டபடி , கத்தியேவிட்டாள். இவன் உடனே கண்களை மூடி தன் நடிப்பை தொடர ,
சுற்றும் முற்றும் பார்த்தவள், பூனை போல எழுந்துகொள்ள முயற்சிக்க , விட்டால் ஓடிவிடுவாள் என்று எண்ணியவன் உடனே மனையாளின் இடையை வளைத்து பிடித்து கொண்டு உறக்கத்தை தொடர , அவன் பிடியில் இருந்து விடுபட போராடினாள் ,விடுவானா அவன்? ” தூங்கு ” என அவள் கழுத்தில் முகம் புதைத்தவன் அவளை இன்னும் தன்னுடன் அணைத்து கொண்டான் .
அவன் உறங்குகிறானா ?என சோதனை செய்து விட்டு,உறக்கத்தில் தான் இன்னும் இருக்கிறான் என்பதை உறுத்தி செய்தவள் , ” குளிக்கணும் ” மெல்ல காற்று குரலில் கூறினாள் , மேலும் தன் முகத்தை அவளுக்குள் புதைத்தவன் ,” குளிக்கலாம் குளிக்கலாம் தூங்கு ” என்று இன்னும் அவளுடன் நெருங்கி கொள்ள , உடல் குலுங்கியது .
மீண்டும் அழுதாள் ! எரிச்சலாய் வர , அதே எரிச்சலுடன் ” ப்ச் அழாம தூங்கு ” என்றவன் தன்னவளை தன் மார்பில் போட்டு கொண்டான் . பின்பு காலையில் சட்டை பட்டனை போட சொன்னான் , கணவன் தானே உடனே போட்டால் என்ன வம்பு வர போகிறது ? அதை விடுத்து தயங்கவும் ,சட்டையை போட சொல்லிவிட்டான்.
ஒழுங்காக போட்டு தொலைய வேண்டியது தானே . விரல்கள் தான் பட்டால் தான் என்ன ? சரி ஏன் அழுது தொலைய வேண்டும் ! அவ்வளவு தான் மலையேறியவன் பயங்கரமாக அவளிடம் கத்திவிட்டு வெளியேறினான் . இவ்வாறு ஒவ்வொன்றையும் நினைத்து பார்த்த அக்னிக்கு , அஷோக் பேசியதும் நினைவிற்கு வர , அப்படியே சுவற்றில் சாய்ந்தபடி வெகு நேரம் நின்றிருந்தான் .
காதில் தந்தையின் குரலும் , நிழலாடும் கடந்த காலம் ஒருபுறம் !
கண்முன் மேகாவின் கண்ணீர் நிறைந்த முகம் மறுபுறம் !
கையில் தாலியும் , நண்பனின் வார்த்தைகளும் ! என திரும்ப திரும்ப அவன் மனதிற்குள் குழப்பமாகவே இருக்க , கண்களை மூடி திறந்தவன் , மனைவின் முகம் பார்த்தான்! அழகு ஓவியமாய் தன் மெத்தையில் படுத்திருந்தாள் . தீரனின் விழிகள் கரைகாணமுடியா காதலுடன் மனைவியை ரசித்தது .
நேற்று இரவு போலவே இன்றும் மனைவியின் காதில் காதல் பேசினான் .
” வரு பேபி என்கிட்ட ஏன் டி இவ்வளவு தயக்கம் ” மெல்ல கூந்தலை காதோரம் ஒதுக்கியவன் நுதலில் இதழ் பதித்து ,
அப்படியே கொஞ்சம் சரிந்து தன்னவளின் மேல் வீசிய அவளது வாசனையை நன்றாக மூச்சை இழுத்து தன் நாசியில் ஏற்றியவன் , தன் நெஞ்சுக்குள் பரப்பிக்கொண்டடு ,
” என்னை பார்த்து பயப்படாத டா ” என்றவன் ஆசையுடன் அவள் கன்னத்தில் முத்தமிட , இப்பொழுது லேசாக சிணுங்கியவள் மீண்டும் உறக்கத்தை தொடர,
” ஸ்லீப்பிங் பியூட்டி ” என செல்லமாக அவளது மூக்கை அசைத்தவன் ,” இந்த கண்ணுல இருந்து கண்ணீர் வரவே கூடாது பேபி , ஐ லவ் யு பேபி ” என்றவன் கண்களில் இதழ் பதித்து நிமிர்ந்த பொழுது, அன்று போலவே இன்றும் மேகா அரண்டு கண்விழிக்க , இவனோ ஏதும் அறியாதவன் போல ‘ என்ன ?’ என்று தன் புருவம் உயர்த்தி கேட்க , அவன் கேட்ட தோரணையில் சற்று பயந்தவள் ,’ இல்லை ‘ என கண்களை விரித்து வேகமாக தலையசைக்க , அவளது கொஞ்சும் பார்வையில் அனைத்தும் மறந்தவன் தன்னவளின் முகம் தாங்கி விழிகளுடன் விழிகள் கலக்கவிட்டவன் , ஒரு வெப்பமூச்சுடன் வழக்கம் போல தன்னவளின் இதழில் இருந்து முத்தத்தை களவாடி , முத்தமிட்டபடியே அறையில் இருந்த விளக்கை அணைத்தான் ! தன்னவளையும் தான் !
அவள் கொடுத்தாளோ இல்லையோ ,ஆனால் அவன் எடுத்து கொண்டான் , அவள் தயங்கி விலக நினைத்த பொழுதும் சரி ,அவள் கண்களின் ஓரம் நீர் துளிர்த்த பொழுதும் சரி பெண்ணவளை மென்மையாக கையாண்டவன் ,தனக்குள் பற்றியெரிந்த காதல் தீயுடன் தன்னவளை மொத்தமாக ஆட்கொண்டு பஸ்பமாக்கினான் .
கசப்பான கடந்த காலத்தாலும் , தீராத வலிகளாலும் தன் சுயத்தை தொலைத்து பாரம் ஏறி ,இறுக்கமாக இருந்த தீரனின் மனதை மேகாவின் அருகாமையும் , அவளது சபரிசமும் காற்றில் பறக்க செய்திருக்க , திசை தெரியாமல், காரிருளில் தொலைந்த எதையோ ,தேடி கொண்டிருந்தவனுக்கு ஒளி கொடுத்து வழிகாட்டியது அவளுடனான இந்த கணம் . அழகான கூடலில் தன்னவளை கலைத்து அவளுடன் ஒன்றாக கலந்தவன், உயிர் தீண்டி ஓய்ந்த பொழுது தன்னவளை மொத்தமாக அள்ளி தன் மார்பில் போட்டு கொண்டு நெற்றியில் இதழ் பதித்து இறுக்கமாக அணைத்துக்கொண்டான் . அவன் அணைப்பிலே அவளும் கண் அயர்ந்தாள் .
பெண்ணை விழுங்கிடும் நெருப்பாய் அவன் ! அவனை அணைக்கும் மழையாய் அவள் !
இவள் எதிர் ! அவன் புதிர் ! அவன் பிழை ! இவள் மழலை !
அவள் அறியா உண்மைகள் அவனிடம் பல ! அவன் அறியா வலிகள் அவளுள் சில ! அவள் அவனை காதிலிக்கிறாளா ?அது தெரியவில்லை! அவன் அவளை முழுவதும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறானா ?அவனுக்கே வெளிச்சம் !
மேகா மற்றும் தீரன் , இருவரையும் சுற்றி இருக்கும் பிரச்சனைகள் கொஞ்சம் தீவிரமானது . அவர்களுக்கு எதிராக வெட்டப்பட இருக்கும் புதைகுழி மிக ஆழமானது .
ஆனால் அவர்கள் இருவருக்குள் இருக்கும் இந்த பந்தம் காதலையும் தாண்டி புனிதமானது ! ஆழமானது ! தீவிரமானது ! உறுதியானது ! என்றும் அழியாதது !
தொடரும்