மிருதனின் கவிதை இவள் 23
ஈரத்தலையை உலர்த்தியபடி அறையின் பால்கனியில் நின்றிருந்த மேகாவை இன்டெர்க்காமின் சிணுங்கல் அழைத்தது. அழைப்பை ஏற்றாள் , வீட்டின் மேற்பார்வையாளர் திலக் தான் அழைத்திருந்தார் .
” மேம் “
” சொல்லுங்க “
” ப்ரேக் ஃபாஸ்ட் ரெடி மேம்,நீங்க கீழ வர எவ்வளவு நேரம் ஆகும் ? ” பணிவுடன் கேட்டான் .
” சாரி எனக்கு பசிக்கலை ,நான் அப்புறம் சாப்பிட்டுக்கிறேன் “
” சரி பேபி நான் வெய்ட் பண்றேன் ” அலைபேசி கை மாறியிருக்க , தீரனின் குரல் கேட்டு திடுக்கிட்டாள் .
“அது நீங்க ” உளறிக்கொட்டினாள் .
என்னது பேபியா ? எனக்காக காத்திருக்க போகிறானா ?இது எதுவும் கனவில்லை நிஜம் என்பதை உணரவே அவளுக்கு நேரம் தேவைப்பட்டது .
வேகமாக மூச்சுவிடும் சத்தத்தின் எதிரொலியை கேட்டவன் ,” பேபி ஆர் யு தேர் ” தீரனின் கணீர் குரலில் சுயம் பெற்றவள் ,
” ஹான் , நான் இப்போவே வரேன் “
” வெய்டிங் பேபி ” அவன் வைத்துவிட்டான் .
ஆனால் ரிசீவரை சில நொடிகள் வெறித்து பார்த்து கொண்டிருந்த மேகாவுக்கு அவனது கணீர் குரலில் இருந்த மென்மை உள்ளூர பாய்ந்து அவளுக்குள் ஏதோ செய்தது .
ஒருவித புரியாத உணர்வில் சிக்கியவள் சற்று தடுமாறி போக , திடுக்கிட்ட மேகா , தீரனின் செயல்களை எண்ணி பார்க்க துக்கம் மீண்டும் தொண்டையை அடைக்க , இது போன்ற உணர்வுகளும் எண்ணங்களும் சரியல்ல என்பதை தன் மனதில் பதிந்துகொண்டவள் , கண்மூடி மூச்சை வெளியிட்டு ‘ சீக்கிரம் போ மேகா இல்லைன்னா திட்டிருவாரு , ‘ என தனக்குள்ளே சொல்லி கொண்டு , யோசனையை துறந்து ,நொடிகள் கடப்பதை கண்டு வேகமாக தயாரானாள் .
‘ வெயிட் பன்றேன்னு சொல்றாரு , ஏதாவது தப்பு செஞ்சிருப்போமோ ? எல்லார் முன்னாடியும் ஏதாவது திட்டுவாரா ? ‘ என புலம்பியபடி தலையை வேகமாக வாரிய மேகா , குங்கும சிமிழை கை எடுத்தபடி நிமிர்ந்ததும், பின்னால் தெரிந்த உருவம் கண்டு சட்டென்று பதறியவள்,” தீரன் ” என்றபடி அச்சத்தில் அப்படியே நின்றாள் .
“குட் மார்னிங் பேபி ” மென்னைகையுடன் இன்னும் தன்னவளின் பின்னால் நெருக்கமாக வந்து நின்றான் அவளவன்.
” குட் மார்னிங் ” நா வழமை போல குழறியது . கண்ணாடியில் தெரிந்த தன்னவளின் பிம்பத்தை பார்த்த தீரன் , அவளது கரத்தில் இருந்த சிமிழை வாங்கி , குங்குமத்தை எடுத்து அவளின் நெற்றியில் வகிட்டில் வைத்தவன் , அவளது இரு தோள்களையும் பிடித்து தன் நாடியை மேகாவின் கழுத்து வளைவில் வைத்து ” பெர்பெக்ட் ” என்று கூறினான் . ஆனால் அவன் கைவளைவில் இருந்த மேகவோ சங்கடத்தில் நெளிய ,உடனே தன்னவளின் தோள் பற்றி தன் பக்கம் திருப்பியவன்
” என்னாச்சு ? என்ன யோசனை ? ” குனிந்திருந்தவளின் நாடி பிடித்து நிமிர்த்தி கேட்டான் . குரல் முரடாய் இருந்தாலும் வார்த்தையில் இருந்த நேசம் அவளுடன் நெருக்கமாக உறவாடி மனதை வருடியது . ஏனோ அவன் மீது அந்த நொடி மேகாவுக்கு முன்பு இருந்த பயம் இல்லை , பதற்றம் நன்றாக குறைந்திருந்தது . ஒருவித ஆசுவாசமாக உணர்வு . நிம்மதியாக மூச்சுவிட்டவள் ,
“——————” பதில் சொல்லாமல் உதட்டுக்கு வலிக்காத மென்னகையுடன் தலையை மட்டும் ‘ ஒன்றும் இல்லை ‘ என்னும் அர்த்தத்தில் குறுக்காக அசைத்தாள் .
” போரடிக்குதா பேபி ” இப்பொழுது இவனது பார்வை ரசனையாக அவள் மீது படிய , அவளோ , ‘ இல்லைன்னு சொன்னா நடிக்கிறியா என ஊசியால் குத்துவான் , ஆமா சொன்னா என் கூட இருக்கிறது போரிங்கா தான் இருக்கும் என குதர்க்கம் பேசி கத்தியால் குத்துவான் ‘ ஆக எப்பொழுது திட்டுவான் என்பதை போல பீதி அடைந்தவள் , மறுப்பாக தலையசைத்தாள்.
ஆனால் அவள் முகத்தில் அவன் என்ன கண்டானோ ,” இன்னைக்கு உனக்கு சர்ப்ரைஸ் இருக்கு, அப்புறம் நீ எப்பவும் போல உன் ஹாஸ்ப்பிட்டல் போகலாம் ” என்றான் தன்னவளை அவளுக்கு பிடித்தமான விடயம் மூலமாக மகிழ்விக்க முயற்சித்தான்.
இதை கேட்ட மேகாவோ அனைத்தையும் மறந்து மகிழ்ச்சியில் பூத்த சிறு புன்னகையுடன் நிஜமாகவா என்பதை போல நிமிர்ந்து அவன் முகம் பார்க்க , இங்கே வந்த பிறகு மனைவியின் முகத்தில் தோன்றிய முதல் புன்னகை ! மொட்டு மலர்ந்த மலர் போல அவளது மலர்ந்திருந்த முகம் பார்க்கவே அழகாக இருக்க , அதை ரசித்த தீரன் ,
அவளது வலது கரம் பிடித்து ” வா ” என்று கீழே அழைத்து சென்றான் .
~~~~~~~~~~“
படியில் இறங்கி வரும் பொழுது கூட மனைவியின் கரத்தை பிடித்தபடி நடந்து வந்தவனை டைனிங் டேபிளின் இருக்கையில் அமர்ந்திருந்தபடி அகம் மகிழ பார்த்து கொண்டிருந்த அஷோக் அவர்கள் அருகில் வந்ததும் ,
” ஷைனிங் மேன் ” தீரனின் பிரகாசமான முகம் பார்த்து கண்ணை சிமிட்டியவன் , மேகாவிடம் ,
” வெல்கம் டூ அவர் பேமிலி மேகா , சாரி மா நேற்று உன்னை வந்து பார்க்கலை ” என்றவனின் முகம் வருத்தத்தை தாங்கி இருக்க ,
” இட்ஸ் ஓகே ” சிறு புன்னகையுடன் கூறியவளிடம் , வண்ண காகிதம் சுற்றப்பட்ட பரிசு பெட்டியை நீட்டியவன் ,
” இது உங்க கல்யாணத்துக்கு உன் அண்ணனோட சின்ன கிப்ட் ” என்றவன் தீரனை பார்த்து ,
” சாரி மச்சான் உனக்கு நானே பெரிய கிப்ட் அதான் எதுவும் வாங்கல” என சிரித்தபடி நண்பனை அணைத்துவிட்டு தன் இடத்தில் வந்து அமர்ந்து கொள்ள ,
மேகா அமர்வதற்கு வசதியாக இருக்கையை இழுத்து அவள் வசதியாக , எந்த இடையூறும் இன்றி அமர்ந்த பிறகே தீரன் தன் இருக்கையில் வந்து அமர , மேகாவோ அவனது புதிய பரிமாணம் கண்டு தலை குனிந்தபடி அப்படியே அமர்ந்துவிட்டாள்.
அப்பொழுது சிறு புன்னகையுடன் அதை கவனித்த அஷோக் , இளம் ஜோடிகளை ஜாடையாக பேசி சிரித்தபடி உணவை பரிமாற ஆரம்பிக்க , அஷோக்கின் சிரிப்பொலி , பல நாட்கள் கழித்து மாடி அறையின் கதவை திறந்து கொண்டு நடந்து வந்த நேத்ராவை பார்த்த திகைப்பில் தடைபட்டது . பணியாட்கள் அனைவரும் விழிகளில் ஆச்சரியத்தை தேக்கி கொண்டு நிற்க ,
நலிந்த உடல் , விழியை சுற்றி கருவளையம் , வெளிறிய முகம் என கலையிழந்து நடந்து வரும் நேத்ராவை பார்த்த அஷோக்கின் விழிகள் கலங்கி நிற்க ,அவர்கள் இருவரையும் நெஞ்சில் வலியுடன் பார்த்து கொண்டிருந்தான் தீரன் .
இதே வீட்டில் எவ்வளவு மகிழ்ச்சியாக சுற்றி வந்த பெண் , இப்படி அறைக்குள்ளே தன்னை முடக்கிக்கொண்டு சிரிப்பை இழந்து ,இப்பொழுது இருக்கும் நிலை கண்டு மிகவும் தீரன் வேதனை பட்டான் .
மேகாவோ எதுவும் புரியாமல் நின்றிருக்க , யாரையும் பார்க்காமல் நேரடியாக மேகாவின் அருகில் வந்த நேத்ரா ,
சில நொடிகள் மேகாவையே வெறித்து பார்த்தவள் , யாரும் யோசிப்பதற்குள் மேகாவை இறுக்கமாக அணைத்துக்கொள்ள , திடீர் அணைப்பில் முதலில் அதிர்ந்த மேகா ,பின் சுதாரித்து கொண்டவள் தானும் நேத்ராவை அணைத்து கொண்டாள் .
சில நிமிடங்கள் நீடித்த அணைப்பில் இருந்து, முதலில் விலகிய நேத்ரா ,மேகாவின் கரங்களை பிடித்து கொண்டவள் ,
” அண்ணி “கண்ணீர் வடிய உணர்ச்சி தளும்ப கூறியதில் , மேகவே கலங்கி போனாள் .
” உங்கள பார்த்ததுல ரொம்ப சந்தோஷம் , மனசுக்கு அவ்வளவு நல்லா இருக்கு . நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ” என வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டவள் ,
” என்கிட்ட இப்போ உங்களுக்கு குடுக்க எந்த கிப்ட்டும் இல்லை, சீக்கிரமே உங்களுக்கு கொடுக்குறேன் ” என்றவள் , அவர்கள் இருவரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் அங்கிருந்து நடக்க ,
” நேத்ரா ” என்ற தீரனின் குரலில் அப்படியே நின்றுவிட்டாள் அவள் .
” உன்கிட்ட பேச எனக்கு விருப்பம் இல்லை ” என்ற நேத்ரா வேகமாக அங்கிருந்து செல்ல ,இந்த முறை அவளது கரம் பிடித்து தடுத்த அஷோக் ,” நில்லு டி அவன்கிட்ட ஒழுங்கா பேசிட்டு போ ” சிறு கோபத்துடன் கூறினான் .
” ஏன் பேசணும் ? நீங்க ரெண்டு பேரும் என்னை ஒழுங்காவா ட்ரீட் பண்றீங்க ” என்றவள் ” அப்புறம் அக்னி ஆயிரம் இருந்தாலும் நான் உன் கூட பிறந்த தங்கச்சி இல்லையே அதான் மறைச்சிட்ட ” என்றாள் குற்றம் சுமத்தும் குரலில் ,
” நான் என்னைக்கும் உன்னை வேறையா பார்த்ததில்லை ” என்றான் தீரன் வேதனையுடன் .
” கல்யாணம் பண்ணிருக்க ,ஒரு வார்த்தை எனக்கிட்ட சொன்னியா ?வேலைகாரங்க சொல்லி எனக்கு தெரியுது , நீ என்னை உன் தங்கச்சியா நினைச்சிருந்தா , இதை மறைச்சிருப்பியா அக்னி, அஷோக் கூட சொல்லல , உங்களுக்கு தான் நான் வேண்டாதவளா ஆகிட்டேனே ” என ஏங்கி ஏங்கி அழ , அஷோக் வந்து தங்கையை அணைத்து பிடித்து கொண்டான் .
” அப்படி இல்லை டி , உனக்கு தான் எங்களை பார்த்தா புடிக்காதே “
” ஆமா புடிக்காது தான் ” என்றவள் தீரனின் சட்டையை பிடித்து ,”நான் தான் சின்ன பொண்ணு , விவரம் இல்லை . நீங்க எடுத்து சொல்லிருக்கலாமே அண்ணா, நான் கேட்கலைன்னா நாலு அடி போட்ருக்கலாமே , எப்படியும் போகட்டும்ன்னு அப்படியே விட்டுடீங்களே. ஏன் அண்ணா? ” என உலுக்கியவள் ,”உனக்கு ஒரு நல்லது நடந்திருக்கு
அதை கூட சொல்லல , உனக்கு நல்லது நடந்தா நான் சந்தோஷ பட மாட்டேனா என்ன ?மொத்தமா வேண்டாம்ன்னு ஒதுக்கிட்டியே அண்ணா , இந்த தங்கச்சி உனக்கு வேண்டாமா? ” என நேத்ரா தீரனின் மார்பில் சாய்ந்து அழுது கரைய ,
” அது எப்படி மா நீ எங்களுக்கு வேண்டாதவளா போவ ” என்று கண் கலங்கிய தீரன் நேத்ராவை தன் கரத்தால் அணைத்து கொள்ள ,” சாரி அண்ணா உன்னையும் அண்ணாவையும் ரொம்பவே கஷ்டப்படுத்திட்டேன் ” என்றவள் அஷோக்கையும் பார்க்க , உணர்ச்சி பொங்க அஷோக்கும் அவர்களது அணைப்பில் இணைத்து கொள்ள , இதுவரை தங்கையை நினைத்து மிகவும் கவலையில் இருந்த இருவரும், தங்கையின் மனமாற்றம் கண்டு மிகுந்த அனந்த களிப்பில் இருக்க ,
இவர்கள் மூவருக்குள்ளும் என்ன பிரச்சனை ? ஏன் இத்தனை நாட்கள் நேத்ரா இவர்களிடம் பேசாமல் அறைக்குள்ளே அடைந்து கிடந்தாள் என எதுவுமே தெரியா விட்டாலும் , அந்த நொடி இந்த உணர்வு பூர்வமான காட்சியை கண்டு மேகாவின் உள்ளம் நெகிழ்ந்தது !
அழுகிறான் ! தீரன் அழுகிறான் ! இத்தனை நாட்கள் பார்த்தே தன்னை அழவைக்கும் தீரனின் கண்களில் கண்ணீரை கண்டவள் வியப்புடன் அவனை பார்த்தாள் .
அந்த கணம் தன் மனதில் தீரனின் மீது இருந்த கோபத்தையும் வருத்தத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு ,” இவர்கள் மூவரும் என்றுமே இப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் ” என மனதார இறைவனை வேண்டிக்கொண்டவள் , அவர்களுக்கு தனிமை கொடுப்பதற்காக அங்கிருந்து செல்ல முனைந்த நேரம் சட்டென்று நின்றவள் , திரும்பி தன் கரத்தை பார்த்துவிட்டு , தன் சிரத்தை நிமிர்த்த , அவளது கரத்தை இறுக்கமாக தன் கரத்திற்குள் பிணைத்து வைத்திருந்த தீரன் ,’ போகாதே ‘ என்பதை போல தன் தலையை இடவலமாக அசைக்க , இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்ட நொடி , நேத்ராவின் பார்வை பிணைந்திருந்த அவர்களது கரம் மீது வன்மமாய் படிந்தது .
வழக்கமான தங்க கரையிடப்பட்ட கண்ணாடி உணவு மேஜை தான் , இன்று மிகவும் அழகாக தெரிந்தது .அஷோக் ஏதோ சொல்ல நேத்ரா தமையனை வம்பிழுக்க , அக்னி அவர்களின் சண்டையை தீர்க்க என வழக்கமாக மெளனமாக கழியும் இந்த தருணத்தை இன்று அவர்களின் சந்தோஷ சிரிப்பொலி நிறைத்திருந்தது .
மேகாவின் இருப்பு அவர்களின் கருத்தில் இல்லாது போல மூவரும் தனி உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருந்தனர் . அவர்களது மகிழ்ச்சியில் பங்கெடுக்கவும் முடியாமல் ,அங்கிருந்து விலகி செல்லவும் முடியாமல் மிகவும் தத்தளித்த மேகாவுக்கு அவளது குடும்பத்தின் நினைவு வர ,முகத்தில் குடிகொண்ட சோகத்துடன் பேருக்கு உணவு உண்டவள் , சிறு புன்னகையுடன் அவர்களிடம் இருந்து விடை பெற்றுக்கொள்ள , முகம் வாட எழுந்து செல்லும் மனைவியை ஒரு நொடி பார்த்தவன் , கையில் டேபுடன் உள்ளே காலை வணக்கத்துடன் உள்ளே வந்த ரிஷியிடம் பேசினான் .
” குட் மார்னிங் ரிஷி , வா எங்க கூட ப்ரேக்பாஸ்ட் ஜாயின் பண்ணிக்கோ ” என்ற தீரனிடம் ரிஷி ஏற்கனவே உணவு முடித்துவிட்டே வந்ததாக மறுக்க, தீரன் அவனிடம் ,
” ப்ரெஸ் மீட்டிங் அண்ட் கம்பெனி டைரெக்டர்ஸ் மீட்டிங் ரெண்டுக்கும் ஏற்பாடு பண்ணியாச்சுல “குத்துக்கரண்டியால் உணவை உட்கொண்டபடி வினவினான் .
” சார் எல்லாமே ஏற்பாடு பண்ணியாச்சு மத்த டைரெக்டர்ஸ் எல்லாருமே சைன் பண்ணிட்டாங்க , அவங்களால எந்த ப்ராப்லமும் இல்லை . ஆனா கனகராஜ் சைன் பண்ண மாட்டிக்கிறாரு, மீட்டிங்ல பிரச்சனை பண்ணுவாருன்னு தோணுது . ப்ரெஸ் மீட் வேணும்ன்னா தள்ளி போடுவோமா ?” என ரிஷி சொல்லும் பொழுதே கோபம் கொண்ட தீரன் ,
” நோ நோ நான் சொன்ன ஏற்பாடுகள் எல்லாம் பண்ணுங்க, கனகராஜ் விஷயத்தை நான் பார்த்துகிறேன் “என்றான் அழுத்தமாக .ரிஷியும் தலையசைத்துவிட்டு அங்கிருந்து செல்ல ,
” ப்ரெஸ் மீட் எதுக்காக ” நேத்ராவின் பார்வை இப்பொழுது தீரனின் முகத்தை ஆராய்ந்தது .
அப்பொழுது தீரன் சொல்வதற்காக வாயெடுக்கவும் ,” அதெல்லாம் இன்னைக்கு ஈவீனிங் நீயே வந்து பார்த்து தெரிஞ்சிக்கோ ” என்ற அஷோக் தீரனுடன் வெளியேறினான் . நேத்ரா யோசனையாக அமர்ந்திருந்தாள் .
பகலில் வெகு நேரம் தன் வாழ்க்கையை பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் மேகா சிந்தித்துக்கொண்டிருந்த பொழுது தீரன் அழைத்தான் . அவனது அழைப்பை பார்த்ததும் கண்கள் நிறைந்தது , கண்களை துடைத்து கொண்டு கைபேசியை ஆன் செய்தாள்,
” என்ன பண்ணிட்டு இருக்க ?”என்று கேட்டான் .
” சும்மா கார்டென்ல இருக்கேன் ” என்றாள் குரலில் உயிர்ப்பு இல்லை .
“ம்ம்”
சில நொடிகள் அமைதிக்கு பிறகு , ” நம்ம ரூம்ல ஒரு பார்செல் இருக்கும் , அதுல ஒரு ட்ரெஸ் இருக்கும் போட்டுக்கிட்டு ரெடியா இரு நான் வந்து உன்னை பிக் அப் பண்ணிக்கிறேன் ” என்றான் .
“ம்ம் ” ஏன் ?எங்கே ?என்று எந்த கேள்வியும் இல்லாமல் ம்ம் கொட்டி தன் பக்க உரையாடலுக்கு முற்று புள்ளி வைத்தாள்.
” ம்ம்ம் ” வைக்க மனமில்லாமல் ம்ம்ம் க்கு ராகம் போட்டான் .
” ம்ம் ” பேச முடியாமல் மீண்டும் அவள் ம்ம் கொட்ட ,லேசாக சிரித்தவன் ” சரி நீ போய் ரெடி ஆகு ” என்று கூறி மொபைலை அணைத்து வைத்தான் தீரன் .
நீண்ட பிரம்மாண்டமான அந்த மீட்டிங் ஹாலுக்கு அழகான பிங்க் நிற புடவை அணிந்து மிதமான ஒப்பனையில் தீரன் கரம்பிடித்து மேடைக்கு நடந்து வந்தாள் மேகா .
அவர்களுக்கு பின்னால் அஷோக்கும் , நேத்ராவும் பாதுகாவலர்கள் சூழ நடந்துவர,ஏற்பாடு செய்தபடி மேடையில் மருத்துவமனையின் முன்னால் நிர்வாக இயக்குனர்களான கனகராஜ் மற்றும் ஒரு சில நபர்கள் முன்பே அமர்ந்திருக்க , மேடையை சுற்றி யாரும் நெருங்கி விட முடியாதபடி ஏராளமான பவுன்சர்கள் நின்றிருந்தனர் .
மேடைக்கு முன்பு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி அன்பர்களும் தனி தனியாக அமர வைக்கப்பட்டிருக்க .
மேடைக்கு அருகே மேகாவின் தாய், தங்கை மற்றும் தமையன் என கோபாலகிருஷ்ணனை தவிர மூவரும் அமர்ந்திருக்க அதுவரை பயங்கர பதற்றத்தில் இருந்த மேகா தன் குடும்பத்தினரை கண்டதும் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் அவர்களை நெருங்க போக ,
” பேபி ரிலாக்ஸ் மீட்டிங் முடியட்டும் ” என மெல்ல மேகாவின் காதில் கிசுகிசுத்தவன் , அவர்களை பார்த்து புன்னகைத்துவிட்டு தன்னவளை மேடைக்கு அழைத்து சென்றான் .
காலையில் உணவு மேசையில் வைத்தே மனைவியின் முகவாட்டத்திற்கான காரணத்தை புரிந்து கொண்டவன் , கோபாலகிருஷ்ணனின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை தவிர மற்ற அனைவரையும் மனைவிக்காக வர வைத்திருந்தான் .
கூட்டத்தின் பரபரப்பு மட்டுப்பட்டதும் தீரனின் கண்ணசைவிற்கு இணங்கி கனகராஜ் முதலில் எழுந்து அனைவருக்கும் வணக்கம் என்று ஆரம்பித்தவர் ,
“என்னுடைய இந்த முடிவு யாருடைய வற்புறுத்தலும் இன்றி நீண்ட யோசனைக்கு பிறகு தன்னிச்சையாக எடுக்க பட்டது ” என்று உறுதியாக கூறியவர், அருகில் இருந்த மினி தண்ணீர் பாட்டிலை திறந்து தன் வறண்ட தொண்டையை நனைத்தவர் ,
” சமீப காலமாக உடல் நல பிரச்சனையினால் நான் மிகவும் துன்பப்படுகிறேன். இதனால் மருத்துவப்பணி மற்றும் மருத்துவமனை நிர்வாகம் இரண்டையும் ஒன்றாக பார்த்து கொள்ள முடியாததால் , மருத்துவ நிர்வாகத்தில் என் பெயரில் இருக்கும் மொத்த பங்கீட்டையும் ரன் பிரைவேட் லிமிடெட் கீழ் இயங்கும் மேகவர்ஷினி மருத்துவமனை மற்றும் கேன்சர் ரிசர்ச் ட்ரஸ்டிடம் என் முழுமனதுடன் விற்கிறேன் . ” என அவர் உரையாடிக்கொண்டிருக்க , பதற்றத்தில் நடுங்கி கொண்டிருந்த மேகாவின் கரத்தை தீரன் இறுக்கமாக பிடித்து கொள்ள மேகா நடுக்கத்துடன் அவனை ஏறிட்டாள், அவனோ ,
அஷோக்கிடம் சொல்லிவிட்டு மனைவியை அழைத்து கொண்டு ஓய்வு அறைக்குள் சென்றவன் ,
” ஏன் இவ்வளவு பயம் பேபி ?” பயத்தில் குளிர்ந்திருந்த அவளது மேன் கரத்தை நன்கு சூடு பறக்க அழுத்தமாக தேய்த்து கொண்டே வினவினான் .
” இதெல்லாம் எனக்கு வேண்டாம் ” மெல்லிய குரலில் மீண்டும் கூறினாள் .
” ஏன் ?”
” இதெல்லாத்துக்கும் நான் என்னைக்குமே ஆசைப்பட்டதில்லை “
” ஐ நோவ் ‘எனக்கு தெரியும் ‘” என்ற தீரன் ,” ஆனா சர்வீஸ் உன்னுடைய கனவு “
” அதை இப்படியே பண்ணலாமே , இதெல்லாம் வேண்டாம் ” ஏனோ மேகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை .
” இப்படியும் பண்ணலாம் , ஆனா ஒரு தலைமை பொறுப்புல இருந்து நீ பண்ற சேவை மாதிரி வராது மேகா , நம்பு உன்னால முடியும் ” என்றவன் அவள் கையில் இருந்த துண்டு சீட்டை பறிக்க, அவள் அவனை கேள்வியாக பார்க்கவும் ,” உன் மனசுக்கு என்ன தோணுதோ அதை மட்டும் பேசு மேகா , உன் கனவை சொல்லு , இது உன்னுடைய நாள் உன் மனசு சொல்றதை பேசு ” என்றவன் மீண்டும் வந்து மனைவியுடன் அமரும் பொழுது கனகராஜ் ,
“இனி மருத்துவராக என் சேவை மேகவர்ஷினி மருத்துவமனை மற்றும் கேன்சர் ரிசர்ச் ட்ரஸ்ட்டில் தொடரும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன், மருத்துமனையின் புது திட்டங்கள் மற்றும் கொள்கைகளை புது சேர்மென் திருமதி மேகவர்ஷினி தீரன் அவர்கள் தங்களிடம் உரையாடுவார் ” என்று கூறி அமர்ந்து விட்டார் .
மேகா மைக்கின் முன் வந்தாள் , ஒட்டு மொத்த கூட்டத்தினரின் பார்வையும் மேகாவின் புறமாக திரும்ப , கேமிராவின் வெளிச்சம் மேகாவின் முகத்தில் பட்டு பளிச்சிட்டது . இதற்கெல்லாம் இதுவரை பழகியிருக்காத மேகா ,முகத்தில் சிறு பதற்றத்துடன் கூட்டத்தினர் அனைவரையும் ஒரு முறை பார்த்தவள் , பின்பு தைரியத்தை வரவழைத்து கொண்டு பேச ஆரம்பித்தாள் ,
” நான் சிறுவயதாக இருக்கும் பொழுது ஒரு நாளிதழில் இப்பொழுதெல்லாம் மருத்துவத் தொழிலில் சேவை மனப்பான்மை போய் விட்டது. அது இப்பொழுது பணம் பார்க்கும் தொழிலாக மாறி விட்டது. என்னும் பகிர்வை படித்தேன் அப்பொழுது முடிவு செய்தேன் பிற்காலத்தில் மருத்துவமனை நிறுவி சேவை மனப்பான்மையுடன் வறியோருக்கு நியாமான முறையில் தரமான மருத்துவ சேவை செய்ய வேண்டும் என்று . ஆனால் அந்த ஆசை இவ்வளவு விரைவில் நிறைவேறும் என்று நான் சிறிதும் எதிர்பார்க்கவில்லை , இன்று என் கனவு நிஜமாக போவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் ” என்றாள் தெளிவாக .
சிறு சிறு சலசலப்பிற்குப் பிறகு மீடியாவின் பக்கம் இருந்து ஒவ்வொருவரகா தங்களின் கேள்விகளை எழுப்ப பதில் சொல்வதற்குள் மேகா தான் திணறி போனாள் .
அப்பொழுது ஒருவன் கனகராஜிடம் ,” உங்களுடைய மகன் இருக்கும் பொழுது அவசர அவசரமாக தங்கள் பங்கை விற்க காரணம் என்ன ? ” என்று கேட்க ,
” பங்கு விற்பது எனது சுய விருப்பம், அதற்கான தேவையான விளக்கத்தை நான் ஏற்கனவே கொடுத்துள்ளேன் .என் மகனுக்கு வெளிநாட்டில் ஏற்கனவே வணிகம் இருப்பதால் தற்சமயம் மருத்துமனையை அவனால் நிர்வகிக்க முடியவில்லை ” என்ற கனகராஜ் பற்களை கடித்தபடி தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொள்ள ,
அடுத்ததாக ஒரு நபர் கை உயர்த்தி ,” பிஸ்னஸ் டைக்கூன் மிஸ்டர் அக்னிதீரன் கூட இந்த திடீர் திருமணத்திற்கு என்ன காரணம் ? இது காதல் திருமணமா ?” என்று கேட்க, மேகா விக்கித்து நின்றாள் .
-தொடரும்