மிருதனின் கவிதை இவள் 28
“நோ இது உன் கையில இருக்க கூடாது , நோ நோ விடமாட்டேன் , அழிக்கிறேன் எல்லாத்தையுமே அழிக்கிறேன் ! முதல்ல அவன் பெயரை அப்புறம் அவனை ” என்றவன் எதையோ சிந்தித்தபடி அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தான் .
அலைபேசியை எடுத்தான் , யாருக்கோ அழைப்பு விடுத்தான் .ஏதேதோ பேசினான் .இவனது நடவடிக்கைகளை பார்த்த மேகாவுக்கு உதறியது .’ ஏதோ செய்ய போகிறான் ‘ உள்ளுணர்வு எச்சரிக்கை விடுக்க பீதியுடன் நின்றிருந்தாள் .
சில நிமிடங்கள் கழிந்திருக்க ,
” அவன் லோக்கேஷனை ட்ராக் பண்ணியாச்சா ரிஷி ” சிணுங்கிய அலைபேசியை எடுத்தவன் , நேரடியாக இதை தான் கேட்டான் .
” சார் அவரோட லோகேஷன் பிக்ஸ் பண்ணியாச்சு , லோகி ரோட் பக்கம் காட்டுது பட் மூவிங்ல இருக்காரு , லோகேஷணனை நம்ம ஆளுங்களுக்கு அனுப்பவா ” வழக்கமாக பணம் தராமல் ஊரைவிட்டு ஓட பார்க்கும் நபர்களை இப்படி தான் அவர்கள் இருக்கும் இடத்தை ஜிபியஸ் மூலமாக ட்ராக் செய்து ரிஷியின் கண்காணிப்பில் பிடித்து வருவார்கள் ,அதை போல தான் இது என்று எண்ணி ரிஷி கேட்க ,தீரனோ,
” நோ ” உடனே மறுத்தவன் ,” லோகேஷனை எனக்கு மட்டும் அனுப்பு , நான் அங்க வரேன் . நீ பாலோவ் பண்ணிக்கோ , இந்த நியூஸ் உன்னையும் என்னையும் தவிர வெளிய லீக் ஆக கூடாது. ஈவன் அஷோக் ” அழுத்தம் திருத்தமாக கூறியவனின் வார்த்தையில் அவ்வளவு தீவிரம் இருந்தது . ரிஷியே தீரனின் குரலில் இருந்த சீற்றத்தையும் தீவிரத்தையும் கண்டு அதிர்ந்துவிட்டான் .
” பாஸ் நானே பிரச்சனைய ஹாண்டில் பண்றேன் என்ன செய்யணும்னு மட்டும் சொல்லுங்க ” என்றான் முதலாளி மீதுள்ள அக்கறையில்.
” நோ நானே வரேன் . இது நான் தீர்க்க வேண்டிய கணக்கு ” மனைவியின் முகமாற்றத்தை உள்வாங்கியபடி கூறினான் தீரன் .
இப்பொழுது மேகாவுக்கு அனைத்தும் புரிந்து விட்டது, தீரன் யாரை தேடி போக போகிறான் என்று . ‘அழிக்கிறேன் எல்லாத்தையுமே அழிக்கிறேன் ! முதல்ல அவன் பெயரை அப்புறம் அவனை’ அவன் சொன்னது வெறும் வார்த்தை என்று தான் நினைத்திருந்தாள் . ஆனால் இவ்வளவு தூரம் இறங்கி செயல்படுவான் என அவள் கனவிலும் நினைக்க வில்லை .
” இப்படி பண்ணாதீங்க தீரன் ” ஆற்றாமையுடன் கூறினாள் .
” வாவ் ” தன் கரங்களை வேகமாக தட்டியவன் ,” மற்ற நேரம் என்கிட்ட பேசணும்ன்னா அவ்வளவு யோசிப்ப , உன் ரித்து டார்லிங்க்கு ஒன்று என்றதும் குரல்ல சூடு பறக்குதே, அடி தூள் ” என்றவனது நக்கல் பேச்சிலும் , அனல் தெறிக்க பார்த்த பார்வையிலும் அவள் தேகம் கொதித்தது . என்ன பார்வை இது ? சாகும் வரை மறக்க முடியாது. உடல் தானாக வெடவெடத்தது . மதுபானத்தை எடுத்தவன் அப்படியே அவள் பார்க்க தொண்டையில் சரித்தான் , தொண்டை எரிந்தது போல முகத்தை சுளித்தான் .கண்கள் இப்பொழுது லேசாக மிதக்க துவங்கியது , போதை விஷம் போல அவனுக்குள் ஏற தொடங்க . இவள் நடுங்க தொடங்கினாள் .
” இப்பொழுதும் அவனுக்கு ஏதாவது ஆகிரும்ன்னு பயப்படுறல ! அப்படி என்னடி அவன் மேல உனக்கு காதல் , உங்களுக்குள்ள அப்படி என்ன தான் இருக்கு? சொல்லு டி” நச்சு குழலை பற்றவைத்தபடி கேட்டான் . அவனது வார்த்தைகளில் இருந்த குரூரம் அவளை உலுக்கியது . திரும்ப திரும்ப ஏன் என் குணத்தை இழிவுபடுத்துவது போலவே பேசுகிறான் ? மேகவால் அவனது இதுபோன்ற பேச்சுகளை மட்டும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை .
” தீரன் ப்ளீஸ் போதும் இப்படியெல்லாம் பேசாதீங்க ” கோபத்துடன் அழுத்தமாக கூறினாள் .
“உண்மை சுட தான் செய்யும் ” இகழ்ச்சியுடன் கூறினான் . கண்ணீர் ஒருபக்கம் வர ,முகத்தை திருப்பி கொண்டாள்.
” பேசிட்டு இருக்கும் பொழுதே முகத்தை திருப்புற , எப்பவும் இதை போல பேசிட்டு இருக்க மாட்டேன் ” முகத்தை தன் விரலால் அழுத்தமாக பிடித்து தன் பக்கமாக திருப்பி மிரட்டினான் .
” யு ஆர் சோ ப்ருட்டல் ” வலி பொறுக்காது சொல்லிவிட்டாள் .சொன்னது போலவே மிருகமானான் .
” நான் கொடுமைக்காரனா ?நான் மிருகத்தனமானவனா ?” கண்கள் பளபளக்க கத்தினான் . இப்பொழுது தவறான நேரத்தில் , தான் விட்ட வார்த்தைகளில் இருந்த வீரியத்தை உணர்ந்தவளுக்கு, சிவப்பேறி இருந்த அவன் கண்களை பார்க்கவே ஐயமாக இருந்தது . எதுவும் பேசாமல் தலை கவிழ்ந்தாள் ,
” சொல்லு டி , நான் உன்னை கொடுமை படுத்துறேன்னா ? அப்போ அவன் உன்னை ரொம்ப கொஞ்சுவானோ ?” மீண்டும் வதனத்தை பிடித்து அழுத்தி கேட்டான் ஆனால் இதை விட அவனது வார்த்தைகள் வலித்தது , அழுதாள் .
” பதில் சொல்லு ” அதட்டினான் . இதுக்கு என்ன பதில் சொல்வது ? எதுவும் பேசாமல் உதட்டை கடித்துக்கொண்டு அமைதியாக நின்றாள் .
” மேகா பதில் சொல்லு ” வார்த்தைகளை கடித்து துப்பினான் . இவள் உள்ளம் கொதித்தது
” இப்போ ஆமான்னு சொன்னா என்ன பண்ணுவீங்க? ” என அவள் சொல்லிமுடிக்கவில்லை ,” சொல்லிதான் பாரேன் “என்றவனது ஐவிரல்கள் அவளது கன்னத்தில் அழுத்தமாக பதிந்திருக்க , மறுகணமே கன்னம் திகுதிகுவென எரிய தரையில் கிடந்தாள் மேகா .
“நீ பேசலடி அவன் பேச வைக்கிறான், அவனை செஞ்சா எல்லாம் சரியா போகும் “
” தீரன் உங்க ஆத்திரத்தையும் , கோபத்தையும் என்கிட்ட காட்டுங்க ஆனா இப்படி மத்தவங்க உயிரோட விளையாடாதீங்க. டோன்ட் டூ திஸ் . ” ஏதாவது செய்துவிடுவானோ என்கிற பயத்தில் கண்ணீருடன் கெஞ்சினாள் .
கெஞ்சுகிறாள் ! கண்ணீர் வடிக்கிறாள்! அதுவும் அந்த ரிதுராஜிற்காக தீரனுக்கு பத்திக்கொண்டு வந்தது .
” ஷாட் அப் ” பார்வையாலே எச்சரித்தான் .இவனது விழிகள் அவளது விழிகளில் நிலைத்திருந்தது .
” சொன்னா கேளுங்க , இதெல்லாம் தப்பு ” பித்துபிடித்தவள் போல மனதில் உள்ளதை கொட்டிக்கொண்டிருந்தாள்.
” மேகா என்னை மிருகமாக்காத வாய மூடு “
” அப்படியென்ன உங்களுக்கு கொலைவெறி “
” ஷாட் அப் “
” பாவம் பண்ணாதீங்க “
” குரலை உயர்த்தி பேசாத ” கை முஷ்டி இறுகியது ,
” நல்லா யோசிச்சு பாருங்க . உங்களுக்கே தப்பு யார் மேலன்னு புரியும் .செஞ்சது எல்லாம் நீங்க. இப்படியெல்லாம் பண்றதுக்கு எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க?”
” வாய மூடு, ஜஸ்ட் ஷட் அப். ஷாட் அப் ” ஆக்ரோஷத்தில் கட்டிலை எட்டி உதைத்தான் , ” ஆஆ ” கத்தியபடி காதை கரம்கொண்டு மூடியவள் சுவற்றுடன் ஒட்டிக்கொண்டாள் .
” அப்படி தான் டி இருக்கும் , அவன் இருக்குற வரைக்கும் நான் என்ன செஞ்சாலும் உனக்கு தப்பு செய்யிற மாதிரி தான் இருக்கும் , நீ இப்படியெல்லாம் அவனுக்காக அழும் பொழுது அவனை அப்படியே என் கையாலையே துடிக்க துடிக்க கொலை செய்யணும் போல இருக்கு “மேலும் கீழும் பயங்கரமாக மூச்சுவாங்க கத்தியவனின் பார்வை அவளது வலது கர மணிக்கட்டில் விழுந்தது . அவனை மிருகமாக்க அது போதுமே ,
” முதல்ல இதுக்கு ,அப்புறம் அவனுக்கு , முடிவு கெட்டுறேன் ” என்றவனின் பார்வை செல்லும் திசையை கண்டவள் சுதாரிப்பதற்குள் தன் கரத்தை பிடித்தபடி அலறி துடித்தாள் .
அப்பொழுது அவளது வதனத்தை அழுத்தி பிடித்தவன் ,” வலிக்கட்டும் பெயின் இஸ் குட் வலிய தாங்கிக்கோ மேகா ” என்றவன் , ” இந்த காதல் இப்படி தான் இருக்கும் , நீ என்னை காதலிச்சு தான் ஆகணும் மேகா , யு ஷுட் லவ் மீ , நீ என்னை லவ் பண்ணுவ , லவ் பண்ண வைப்பேன், அந்த ரிதுராஜை அழைச்சிட்டு உன் மனசுல என்னை திணிப்பேன் . தீரன் தீரன்னு உன்னை சொல்ல வைப்பேன் ” என போதையில் விழிகள் மிதக்க கூறியவன் , ரிஷிக்கு தொடர்பு கொண்டு ,
” அவன் எங்க இருக்கான் ?கரெக்ட் லோகேஷன் வேணும் ” என கேட்டான் .
“ராயல் கசல் பப் சார் ” என்றான் ரிஷி .
” ஓ பப்ல இருக்கானா வரேன் ” அழைப்பை துண்டித்தவன் , கார் சாவியை எடுக்க , மேகா மிகவும் பதறினாள் . தீரன் இப்பொழுது கொடுத்த வலியை விட , அவன் செய்ய போகும் காரியம் அவளை மிகவும் பாதித்தது . போதாக்குறைக்கு போதையில் வேறு இருக்கிறான். நல்ல நாளிலே நிதானம் கிடையாது , இந்த நிலையில் இவன் அங்கு சென்றால் ‘ கடவுளே ‘ எண்ணும் பொழுதே பயத்தில் வியர்வை வழிந்தது .
” தீரன் நோ ப்ளீஸ் மறுபடியும் சொல்றேன், இப்படி மட்டும் பண்ணாதீங்க” என்றவள் ஆதங்கத்தில் ,” தீரன் உங்களுக்கு சந்தேகம் என் மேல இல்லை, உங்க மேல தான் . நீங்க இப்படி பண்றது என்னை இல்லை நம்ம உறவை அவமானப்படுத்துற மாதிரி. அது புரியலையா ” தடுத்தாள் , ஒரு பார்வை தான் பார்த்தான் எட்டி நில் என்றது , கார் சாவியுடன் வெளியேறினான் .
” தீரன் ப்ளீஸ் ” கத்த கூட தெம்பில்லாமல் கெஞ்சினாள் . அது அவன் காதில் வந்து சேர்வதற்குள் அவன் வேட்டையாட போகும் வெறியுடன் அறையில் இருந்து வெளியேறியிருந்தான் . வலியில் உடல் வலுவற்று போக அழுது கரைந்த நிலையில் அப்படியே தரையில் சரிந்தாள் மேகா .
திட்டமிட்டுதிருமணம் செய்விட்டு அனைத்திற்கும் இவளையே குற்றவாளி போல சித்தரிக்கும் தீரனை பார்க்கும் பொழுது கோபமும் வேதனையும் மேகாவுக்கு போட்டி போட்டு கொண்டு வந்தது .
அன்று அவள் லட்சியத்திற்கும் , விருப்பத்திற்கும் அவன் கொடுத்த மரியாதையும் காட்டிய அன்பும் இன்று அர்த்த மற்ற ஒன்றாய் தெரிந்தது . வாழ்க்கை இப்படியே கடந்துவிடுமோ? என்ற அச்சம் அவள் மனதை காரிருள் போல சூழ்ந்துகொள்ள, துக்கம் வந்து நெஞ்சை அடைத்துக் கொண்டது .அவளது மனம் வேதனையில் புழுங்க, கண்ணீரை கூட துடைக்காமல் அப்படியே அமர்ந்திருந்தாள் .
யாரை தொடர்பு கொண்டு எப்படி தீரனை தடுப்பது என மேகாவுக்கு ஒன்றும் விளங்கவில்லை , அலைபேசியையும் உடைத்துவிட்டானே , என்ன செய்வது ? என்று யோசித்தவளுக்கு அஷோக்கை தவிர வேறு யாராலும் தீரனை தடுக்க முடியாது என தோன்ற ,இன்டெர்காம் மூலமாக அஷோக்கை குறித்து விசாரிக்க , பணிப்பெண் அவன் இன்னும் வரவில்லை எண்ணும் தகவலை மட்டும் தான் தெரிவித்தாள் . அவர் வந்ததும் சொல்லுங்க என்ற மேகாவுக்கு இன்னும் பதற்றம் தான் அதிகரித்தது . முழங்காலில் முகம் புதைத்தபடி அமர்ந்திருந்தாள் .
!!!!!!!!!!!!!!!
தீரன் தன் அறையை விட்டு வெளியேறிய பொழுது , ‘தீரன் உங்களுக்கு சந்தேகம் என் மேல இல்லை உங்க மேல தான் . நீங்க இப்படி பண்றது என்னை இல்லை நம்ம உறவை அவமானப்படுத்துற மாதிரி ‘என மேகா விட்ட வார்த்தைகளில் இருந்த ஏதோ ஒன்று அவனை கொன்றது . அவசரத்தில் வெளியேறியவனுக்கு அந்த வார்த்தைகளில் இருந்த அர்த்தம் என்னவென்று இப்பொழுதும் புரியவில்லை .
அவள் அலறி துடித்தகணம் இவனுக்கு உயிரே போனது போல தான் வலித்தது , நாம் நடந்துகொள்வது அதிகபட்சமோ என தோன்றினாலும் ,
‘யு ஆர் சோ ப்ருட்டல், இப்போ ஆமான்னு சொன்னா என்ன பண்ணுவீங்க ?நல்லா யோசிச்சு பாருங்க உங்களுக்கே தப்பு யார் மேலன்னு புரியும், செஞ்சது எல்லாம் நீங்க ,இப்படியெல்லாம் பண்றதுக்கு எதுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க ‘மேகா பேசியது எல்லாம் கர்ணகடூரமாக அவன் நினைவில் தோன்றி இம்சித்தது .
ரிதுராஜுடனான நிச்சயதார்த்தம் அவன் கண்கொண்டு பார்த்தது தான் . ஒன்றாக நின்று இருவரும் புகைப்படம் எடுத்து கொண்டார்கள் எல்லாம் அவனுக்கு தெரிந்த ஒன்று தான் . ஆனால் அவன் அதை பற்றி பேசவில்லையே . திருமணம் முடிந்த பின்பு ரிதுராஜின் நம்பரை ஏன் இன்னும் வைத்திருக்க வேண்டும் .அவனது புகைப்படத்தை ஏன் அலைபேசியில் இருந்து நீக்கவில்லை . அது தானே அவனது வாதம் . இது அனைத்திற்கும் மேலாக தீரனை மிகவும் பாதித்தது அலைபேசியில் தனது பெயரை கூட அவள் பதியவில்லை ? என்பது தான் .
கோபம் வந்துவிட்டது காட்டுமிராண்டி போல நடந்து கொண்டான் , சரி அதற்காக ஏன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க என்று எப்படி அவள் கேட்கலாம் என்று எண்ணியவனின் மனதின் கொதிப்பு மற்றும் அடங்கவே இல்லை .
” அப்படி என்னடி அவன் மேல உனக்கு காதல் ?உங்களுக்குள்ள அப்படி என்ன தான் இருக்கு என்று கேட்டுவிட்டேன் ” தவறு தான் அதற்கு அவள் என்ன சொல்லிருக்க வேண்டும் ,’ அவனுக்கும் எனக்கும் என்ன இருக்கிறது ,நான் உங்களை தான் காதலிக்கிறேன் எனக்கு நீங்க தான் எல்லாமே ‘ என்றல்லவா சொல்லிருக்க வேண்டும் ,அதை விட்டுவிட்டு வார்த்தைக்கு வார்த்தை பேசி என்னை மிருகமாக்கி விட்டாளே.
வேகமாக நச்சுக்குழலை துளாவினான். ஆத்திரம் மண்டையை பிளந்துகொண்டிருந்தது . ரிதுராஜை விட்டால் இன்னும் பிரச்சனை தான். அதான் வேண்டாம் என்று விட்டு சென்றுவிட்டானே, பின்பு ஏன் அழைத்தான்? அவனுக்கு மேகாவிடம் என்ன பேச வேண்டும்? என்ற கோபம் , அவனுக்காக தன்னிடம் கெஞ்சி அழும் மனைவி மீது கோபம் .
காரில் ஒவ்வொரு இடமாக தேடினான் . டேஷ் போர்டில் ஒன்றே ஒன்று கிடந்தது எடுத்து பற்றவைத்த மறுகணம் மனைவியின் அலறல் ஒலி . அவனது செவிப்பறையை கிழித்தது .
சிகெரட் மீது ஆத்திரம் வந்தது. ஏன் தன் மீதே வெறுப்பு வந்தது . இப்பொழுது மனம் மனைவியின் நிலை எண்ணி துடித்தது . நச்சுக்குழலை தன் உள்ளங்கைக்குள் வைத்து கசக்கி எறிந்தான் . ‘ எப்படி தாங்கினாள் ?ச்ச் ‘ எரிச்சலில் ஸ்டியரிங்கை வேகமாக குத்தினான் .
மொத்த ஆத்திரமும் இப்பொழுது ரிதுராஜ் பக்கம் திரும்பியது ,
“ரிதுராஜ் இதெல்லாத்துக்கும் நீதான் டா காரணம், என் வைஃப்க்கா கால் பண்ற ,இனிமே மேகாவோட பெயரை கூட நீ நினைச்சு பார்க்க கூடாது வரேன்டா ” பல்லைக்கடித்தவன் சாலையில் தன் காரை பறக்க விட்டான் .
!!!!!!!!!!!!!
மங்கிய வெளிச்சத்திற்கு நடுவே , ஒரு பெண் ஆங்கில பாடல் ஒன்றை ரசனையுடன் உருக்கமாக பாடிக்கொண்டிருக்க , அது எதையும் ரசிக்காமல் மனமுழுவதும் மேகாவுக்கு தான் செய்த அநீதியை எண்ணி பார்த்தபடி தனியாக அமர்ந்து குடித்துக்கொண்டிருந்தான் ரிதுராஜ் .
தந்தைக்காக தான் அவளை நிராகரித்தான் ! ஆனாலும் காதலிக்கிறேன் என்று சொல்லி மணமேடை வரை கொண்டுவந்து விட்டுவிட்டு ,கடைசி நிமிடத்தில் அவளை வேண்டாம் என்று சொன்னதை எண்ணி மிகவும் வருந்தியவனுக்கு அதற்கெல்லாம் காரணம் தீரன் தான் என்று தெரிந்ததும் இன்னும் ஆதங்கப்பட்டான் .
ஒருவன் தன் காதலுக்காக அவ்வளவு தூரம் இறங்கி செயல்பட்டிருக்கிறான் , ஆனால் நான் தந்தை இரெண்டு நிமிடம் பேசிய வார்த்தைக்காக தன் காதலையே விட்டு கொடுத்து விட்டேனே என மிகவும் வேதனை அடைந்தவன் . தன் மீதே மிகவும் வெறுப்பு கொண்டான் . ஒருவித குற்ற உணர்ச்சியில் மனம் அவனை தின்று கொண்டிருக்க ,ஒரு முறையாவது மேகாவை சந்தித்து இரெண்டு வார்த்தையாவது அவளிடம் பேச வேண்டும் என மிகவும் ஏங்கினான் .
தனிமை தேடி இங்கே வந்தவனுக்கு ,ஒருகட்டத்திற்கு மேல இந்த தனிமையும் நிம்மதி தர மறுக்க , போதை அளவுக்கு மீறி ஏறுவதை உணர்ந்த ரிதுராஜ் , எழுந்து கொண்டு , நிற்க முடியாமல் தள்ளாட , ஓடி வந்த பவுன்சரில் ஒருவன் அவனுக்கு உதவி செய்ய ,
” தேங்க் யு , ஐ வில் டேக் கேர் ” என்றவன் தன் காரை நோக்கி சென்றான் .
!!!!!!!!!!
” சார் சில்வர் இனோவா ” ரிஷி பிளூடூத் வழியாக தீரனுக்கு தகவல் கொடுக்க , காரின் ஸ்டீயரிங்கை இறுக்கமாக பிடித்துக்கொண்ட தீரனுக்குள் இருந்த மிருதன் கர்ஜிக்க , சிறு தள்ளாட்டத்துடன் நடந்து வரும் ரிதுராஜை கொலைவெறியுடன் பார்த்து கொண்டிருந்த தீரன் , மொத்த கோபத்தையும் ஆக்சிலேட்டரில் காட்டியவன் , அசுர வேகத்தில் வண்டியை ஓட்டினான் .
!!!!!!!!!!!
” என்னாச்சு மேகா ? உன்னை அடிச்சானா ” மேகாவின் கன்னத்தை பார்த்த ,அஷோக் கோபத்துடன் மேகாவிடம் வினவினான் .
” ரெண்டு பேருக்கும் ரொம்ப சண்டை , அண்ணன் கத்திகிட்டே இருந்தான் . நான் அந்த வழியா போனேன் அப்போ என் காதுல கேட்டுச்சு ” என்ற நேத்ராவுக்கு மேகாவை பார்க்க பாவமாக இருந்தாலும் , அவர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சனை நிம்மதியை கொடுத்தது . தீரனின் மண வாழ்வு ஆட்டம் காண வேண்டும் . தன்னையும்
தன் காதலனையும் பிரித்தவன் , தன் காதலியை பிரிந்து கஷ்டப்பட வேண்டும் என்று காத்திருந்தவளுக்கு இந்த செய்தி மகிழ்ச்சியை தர, ஆனாலும் எதையும் வெளிகாட்டிக்கொள்ளாமல் சோகமாக நிற்பது போல நடித்துக்கொண்டிருந்தாள்.
மேகா எதுவுமே பேச வில்லை ,
” நீ சொன்னா தானே தெரியும் மேகா , உன்னை எப்படி அவன் அடிக்கலாம் ? என்ன ஆச்சுமா ?உன் அண்ணனா கேட்குறேன் சொல்லு “அஷோக்கிற்கு நண்பன் மீது ஆத்திரமாக வந்தது.
” எதுவா இருந்தாலும் சொல்லுங்க அண்ணி , உங்க அம்மா அப்பா எல்லாரும் எங்களை நம்பி தானே உங்களை விட்ருக்காங்க , இப்போ சொல்ல போறீங்களா , இல்லை நான் உங்க அம்மாக்கு போன் பண்ணவா ” அக்னிக்கு எதிராக ஏதாவது ஒரு விஷயம் சிக்காதா , அவன் அனைவரும் முன்பு அவமானப்படமாட்டானா , என காத்திருக்கும் நேத்ரா இதை வைத்தே அவர்களின் விரிசலை பெரிதாக நினைத்து , மேகாவிடம் காரணத்தை அறிந்துகொள்ள அக்கறை இருப்பது போல நடித்துக்கொண்டிருந்தாள் .
“நேத்ரா இது எனக்கும் அவருக்கும் உள்ள பெர்சனல் ,இதுல என் அப்பா அம்மா எங்க இருந்து வந்தாங்க , எங்களுக்குள்ள எந்த பிரச்சனையும் இல்லை. நீ சின்ன பொண்ணு உனக்கு அதெல்லாம் புரியாது ” என கொஞ்சமும் யோசிக்காமல் பட்டென்று கூறிய மேகா ,அஷோக்கிடம், “ப்ளீஸ் அண்ணா இதெல்லாம் ஒன்னுமே இல்லை ,அவர் எங்க இருக்காருன்னு கேட்டு அவரை எப்படியாவது வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க, மனசுக்கு ஒரு மாதிரியா இருக்கு அண்ணா , அவரு நல்லா ட்ரின்க் பண்ணிருந்தாரு ” நடந்த எதையும் கூற விரும்பாமல் இப்படி கேட்டாள்.
அஷோக்கும் அதற்கு மேல் மேகாவை வற்புறுத்தவில்லை . கணவன் மனைவி இடையே போவதில் அவனும் விரும்பவில்லை. ஆனால் ,
‘ பார்க்க தான் அப்பாவி , பேச்செல்லாம் பயங்கரமா இருக்கு அழுத்தகாரி , அவன் அந்த கத்து கத்திட்டு போறான் இவ எதுவுமே நடக்காத மாதிரி வாய மூடிட்டு இருக்கா ‘ என மனதிற்குள் எண்ணிய நேத்ராவுக்கு மேகா மீது ஆத்திரம் தான் வந்தது .
” ரிஷி என்னாச்சு டா ” மேகா சொன்னதும் அஷோக் ரிஷிக்கு அழைத்திருந்தான் . தீரன் அலைபேசியை எடுக்காததால் ,ரிஷிக்கு அவன் எங்கு இருக்கிறான் என்பது தெரிய வாய்ப்புள்ளது என்பதால் அவனுக்கு அழைத்தான்.
” சார் அது பாஸ் சொல்ல கூடாதுனு சொல்லிருக்காரு ” ரிஷி தயங்கினான் .
” சொல்லுடா “
” பாஸ் ” என அவன் இழுக்க ,
” நான் வந்தேன்னு வை ” என அஷோக் சீற , அவன் அனைத்தையும் கூறி முடித்திருந்தான். ரிஷி சொன்னதை கேட்ட அஷோக்கின் இதயம் ஒரு நொடி நின்று துடித்தது .
தொடரும்