மிருதனின் கவிதை இவள் 31
அன்று ” வலிக்குது ” என அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு மேகா அங்கிருந்து கிளம்பிய பொழுது அவனை அவள் பார்த்த பார்வையில் இருந்த ஏதோ ஒன்று அவனை வதைத்தது . அது இன்று வரை தீரனை வதைத்து கொண்டிருக்கிறது . நெருங்கி நெருங்கி வரும் தன்னிடம் இருந்து ஓடி ஓடி மறையும் மனைவி மீது கோபம் தான் வந்தது .ஆனாலும் மேலும் பேசி அவளை காயப்படுத்த விரும்பாத தீரன் அவள் உடல் நிலை தேறி வரும் வரை பொறுமை காத்து அவளை தொந்தரவு செய்யமல் இருந்தான் .ஆனாலும் இரவு மனைவி தூங்கியதும் அவள் காதில் தன் மனதில் அவளுக்காகவே மலர்ந்து கிடக்கும் காதலை சொல்லி அவளது காயத்திற்கு மருந்திட தவறியதில்லை .
இதோ இதோ என நாட்களும் வேகமாக கடந்திருந்த நிலையில், காலையில் தனக்கு முன்பே குளித்து கிளம்பி ஹாஸ்ப்பிட்டல் போய்விடுவது . மாலையில் தன் கண்ணில் படாமல் சமையல் அறைக்குள் நுழைந்து கொள்வது என இன்னும் தன் கண்ணிலே படமால் தன்னை விட்டு விலகி ஓடும் மனைவியை பார்க்க பார்க்க ஆத்திரம் கொண்ட தீரன் .
நாம் செய்ததிற்கு தானே மனைவி நம்மிடம் இருந்து விலகி செல்கிறாள் என்பதை மட்டும் வகையாக மறந்து போனான் .
ஏற்கனவே ஒருபக்கம் தன்னவளின் மனதில் நான் இல்லை என்ற எண்ணம் தீரனின் ஆழ்மனதை கரையான் போல அரித்துக்கொண்டிருக்க ,மேகா தன்னை வெறுக்கிறாள்! தன்னுடன் இணைய மறுக்கிறாள் ! தன்னை விட்டு விலகியிருக்க நினைக்கிறாள் ! என இது போன்ற எண்ணங்களிலே உழன்றவனுக்கு மனைவியின் பாராமுகத்தையும் , விலகல்களையும் சகித்துக்கொள்ள முடியவில்லை .
என் மீது கோபம் என்றால் என்னை போலவே உரிமையுடன் என்னிடம் வெளிப்படுத்திவிட வேண்டியது தானே அதை விட்டுட்டு இது என்ன ஓடி ஓடி ஒளிந்து கொள்வது ? உள்ளுக்குள் புலம்பி தள்ளினான் .
தீரன் ஒன்றும் மனைவி என்பவள் தனக்கு கீழ் தான். தான் சொல்வதை கேட்டு தான் நடக்க வேண்டும் என்று சொல்லும் ஆணாதிக்கவாதி எல்லாம் கிடையாது .மேகா தன் விருப்பப்படி வாழ அவளுக்கு முழு சுகந்திரத்தையும் கொடுத்து , அவளை முன்னேற விட்டு பின்னால் அவளுக்கு அரணாக இருந்து அவளை பாதுகாத்து வழிநடத்துவது தான் அவன் .அதை தான் இந்த நொடி வரை செய்து வருகிறான் . ஆனால் ரிதுராஜ் என்று வந்தால் மட்டும் சர்வாதிகாரியாக மாறிவிடுகிறான் .
தீரனை பொறுத்தவரை அவன் மேகாவிடம் எதிர் பார்ப்பதெல்லாம் அவனிடம் அவள் நம்பிக்கை கொள்ள வேண்டும் , எதையும் மறைக்காமல் வெளிப்படையாக இருக்க வேண்டும் , முக்கியமாக கணவன் என்னும் உரிமையுடன் உறவாட வேண்டும் .கோபமோ மகிழ்ச்சியோ இப்படி எந்த உணர்வுகளானாலும் வெளிப்படையாக தன்னிடம் காட்ட வேண்டும் . அவ்வளவே , ஆனால் அவள் அப்படியெல்லாம் இல்லாமல் பயந்து ஒதுங்கி ஒரு வித அந்நியத்தன்மையுடன் நடந்து கொள்ளும் பொழுதெல்லாம் வருமே ஆத்திரம் ! அதை மட்டும் அவனால் கட்டுப்படுத்தவே முடிவதில்லை, ஆத்திரத்தில் ஒன்று வார்த்தைகளை விஷம் போல விட்டுவிடுகிறான் இல்லை என்றால் காயப்படுத்திவிடுகிறான் . பின்பு அவளை பார்க்கும் பொழுதெல்லாம் அவளை விட இவன் அதீத வலியில் துடிக்கிறான் .
ஏற்கனவே ஜான் ஏறினால் முலம் இறங்கும் இவர்களின் திருமண பந்தத்தில் இப்பொழுது மேகாவின் விலகல் இருவருக்கும் இடையே பெரிய விரிசலை ஏற்படுத்திவிடுமோ என மனதளவில் மிகவும் கலவரப்பட்டான் . ஏதோ அவளை இழந்துவிடுவோமோ என தேவையற்ற உணர்வுகள் வேறு அவன் கழுத்தை மலைப்பாம்பு போல நெருக்க , தனிமையை உணர்ந்தவன் ஏதோ பாதுகாப்பு இல்லாதது போல தவித்தான் . மனம் முழுவதும் மேகாவையே சுற்றி சுற்றி வர , அவன் உள்ளம் இப்பொழுதெல்லாம் மனைவியை மிகவும் தேடியது .
அதனால் ஆபிஸில் நிதானம் இல்லாமல் திரிந்தவனுக்கு ஒருவேலையும் ஓட வில்லை. எண்ணம் முழுவம் மேகா மீதே இருக்க, வழக்கத்தை விட இன்று நேரமே வீடு திரும்பினான் .
பாரத்சேவா அமைப்பில் உறுப்பினராக இருக்கும் மேகாவின் மருத்துமனை , அந்த அமைப்பின் கொள்கை படி , மாதம் ஒருமுறை கிராமபுறங்களில் இருக்கும் ஏதாவது காப்பகங்களுக்கு சென்று மருத்துவ முகாம் அமைத்து இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் .
அதனால் இந்த முறை பவனாவின் கொண்ட்லி என்னும் கிராமத்தில் இருக்கும் குழந்தைகள் , வயதானோனார்கள் , மாற்றுத்திறனாளிகள் மற்றும் மறுவாழ்க்கைக்காக போராடும் இளைஞர்கள் என இந்த உலகத்தால் புறக்கணிக்கப்பட்ட அனைவரையும் பாலர் வேற்றுமை இன்றி அரவணைத்து அவர்கள் விரும்பிய மறுவாழ்வை அவர்களுக்கு சரியான வழிகாட்டுதலுடன் அமைத்து கொடுத்து ,
பத்து வருடத்திற்கு மேல் ஒழுங்கமைக்கப்பட்ட நெறிமுறையான கொள்கையின் கீழ் சிறப்பாக செயல்பட்டுவரும் ஜின்தகி என்று அழைக்கப்படும் காப்பகத்துக்கு , இந்த வாரம் செல்ல வேண்டி இருப்பதால் யார் யார் அங்கு செல்ல வேண்டும் அதற்கு என்ன என்ன தேவை என அனைத்தையும் திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்து முடித்துவிட்டு , சோர்வுடன் கால தாமதமாக இல்லம் வந்த மேகா , என்றும் இல்லாமல் இன்று சீக்கிரமே வீட்டிற்கு வந்து கட்டிலில் கால்மேல் கால் போட்டு அமர்ந்திருக்கும் கணவனை கண்டு முதலில் அதிர்ந்தவள் , பின்பு அது எதையும் தன் முகத்தில் காட்டாது தலை குனிந்தபடியே வார்ட்ரோபில் தன் மாற்று உடையை தேடி கொண்டிருக்க ,
எப்பொழுதும் அவன் பணியைவிட்டு வருவதற்குள் வந்துவிடும் மனைவி, சீக்கிரமே குளித்துவிட்டு இவன் பார்வையில் படாமல் எங்காவது சென்று ஒளிந்து கொள்வாள் . இவனும் ‘ ஓடு ஓடு ஒருநாள் இருக்கு ‘ என்று ஏக்கத்துடன் கடந்துவிடுவான் . ஆனால் இன்று வெகு நாட்களுக்கு பிறகு மனைவியை நேருக்கு நேர் சந்தித்ததில் இன்ப அதிர்ச்சி அடைந்த தீரன் ,
‘ ஓடி ஒளியவா செஞ்ச இன்னைக்கு இருக்கு உனக்கு ‘ என்று மீசையின் இடுக்கில் சிக்கிக்கொண்ட புன்னகையுடன் , மனைவியை பார்த்த கணம் மனதில் ஆசை பொங்கி வழிய , இன்று எப்படி ஓடுவாய் என்று தன்னவளை நெருங்கியவன் , தன்னோடு பின்னால் இருந்து இறுக்கமாக அணைத்துக்கொண்டான் .
மேகா எதிர்க்கவும் இல்லை ,அவனுடன் இணையவும் இல்லை அப்படியே உணர்ச்சிகள் துடைக்கப்பட்ட முகத்துடன் அசையாமல் நின்றிருந்தாள் . பெண்ணவளின் உடலில் சிறு நடுக்கம் .
மேகாவின் சோர்வும் , அவள் கொண்டம் தயக்கமும் அவனுக்கு புரிந்து தான் இருந்தது . அவள் மனம் மாறமட்டும் கொஞ்சம் விட்டு பிடிக்கலாம் , என்று தான் அவனும் எண்ணியிருந்தான் .ஆனால் மேகாவின் ஒதுக்கமும் மௌனமும் தீரனை வெகுவாய் பாதிக்க ,ஏற்கனவே தாமிர இலையும் தண்ணீரையும் போல பட்டும்படாமல் இருக்கும் இவர்களின் திருமண பந்தம் , இந்த இடைவெளியினால் மேகாவை தன்னிடம் இருந்து பிரித்துவிடுமோ என்று அஞ்சியவன் ,
தன்னவளின் மன காயம் ஆறுவதற்காக அவன் கொடுத்த அவகாசம் அவளையே அவனிடம் இருந்து ஒரேடியாக பிரித்துவிடுமென்றால், தீரனால் எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்? வாழ்க்கையில் எவ்வளவோ இழப்புகளை சந்தித்தாயிற்று , மேகாவையும் இழக்க வேண்டும் என்றால் எப்படி ?அது என்றும் அவனால் முடியாதே .
அதுமட்டுமல்ல பல நாட்கள் கழித்து மனைவியுடனான இந்த நெருக்கம் அவனுக்குள் இருக்கும் காதலனை எழுப்பிவிட, அந்த உணர்வை கட்டுப்படுத்தமுடியாதவன் , மனைவியின் முகம் திருப்பி ஆவேசத்துடன் ஆசைதீர முத்தமிட்டான் .
ஆனால் மனைவியிடம் எந்த இணக்கமும் இல்லை என்பது தீரனை வருத்தமுற செய்தாலும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஒதுக்கி வைத்தவன், மேலும் முன்னேறினான் . அவனது கண்ணில் மின்னிக் கொண்டிருந்த மோகத்தை கண்டு அசையாது நின்ற பெண்ணவளின் மனதிற்குள் ஒருவித போராட்டமே அரங்கேறிக்கொண்டிருந்தது .
ஆனால் அவனை ஆட்கொண்ட காதல் போதை அவன் கண்ணை மறைக்க, தன்னவளை தன் கைகளில் ஏந்தியவன் , மஞ்சத்தில் கிடத்தி ,விளக்கை அணைத்தான் ,அவளையும் தான் .
முதலில் தன்னவள் பற்றவைத்து மோக நெருப்பில் வெந்துகொண்டிருந்த அக்னி இப்பொழுது மெல்ல மெல்ல அவளுக்குள் உருகிக்கொண்டிருக்க , திடிரென்று எதையோ உணர்ந்தவன் அணைத்திருந்த விளக்கை போட்டான் .அவள் இருந்த கோலம் கண்டு தீச்சுட்டாற்போல தன் தாப வலையை அறுத்துக் கொண்டு அவளிடமிருந்து விலகிய அக்னி ,
” ஏண்டி சொல்லல ????” ரௌத்தரமாகக் கேட்டான்.
” ஏன் ஒவ்வொரு தடவையும் என்னை கேட்டுட்டு தான் பண்றீங்களா ? ” பெண்ணவளின் குரல் உடைந்து தழுதழுத்தது . அவனுக்குள் வலித்தது .
” மேகா இதை கூட புரிஞ்சாகதவனா நான் . எழுந்து போ ” என்றான் அடக்கப்பட்ட கோபத்துடன்.
” இட்ஸ் ஓகே . எனக்காக உங்களை நீங்க கண்ட்ரோல் பண்ணிக்க வேண்டாம் . மத்ததோட சேர்த்து இதுக்கும் நான் பழகிக்கிறேன் இட்ஸ் ஓகே தீரன் “பெண்ணவளின் கண்களில் கண்ணீர் திரையிட்டது .
” மத்ததுன்னா !என்னது ? மனசுல எதையும் வச்சு பேச வேண்டாம் எல்லாத்தையும் சொல்லிரு” சீற்றத்துடன் கூறினான் , அவனை பொறுமையாக ஏறெடுத்து பார்த்தவள் ,
“கவலைப்படாதீங்க ரிதுராஜை மனசுல வச்சிட்டு ஒன்னும் நான் பேசல ” பழைய கோபத்தில் சம்பந்தம் இல்லாமல் மேகா ரிதுராஜின் பெயரை எடுக்க , எழுந்துகொள்ள விடாமல் திரும்ப திரும்ப அடித்தால் எப்படி இருக்கும்? தீரனுக்கு அப்படி தான் இருந்தது .
” ஷட் அப் நான் என்ன கேட்கிறேன், நீ என்ன பேசுற ” முகம் சிவக்க முறைத்த தீரனின் கரங்கள் மேகாவின் கன்னம் நோக்கி உயர்ந்த கணம் , என்ன நினைத்தானோ கரங்களை கீழே இறக்கியவன் , ‘அன்று நடந்த அதே தவறு, மீண்டும் நடந்துவிட கூடாது தீரன் கட்டுப்படுத்திக்கொள் ‘என தனக்கு தானே சொல்லி கொண்டவன் , தன் கோபத்தை கட்டுப்படுத்த கடும் பாடு பட்டுக்கொண்டிருக்க ,மேகவோ,
” ஏன் ஸ்டாப் பண்ணிடீங்க அடிங்க அடிங்க தீரன் ” என தீரனின் கரங்களை பிடித்துக்கொண்டு தன் கன்னத்தில் அடிப்பது போல வைக்க , அவளிடம் இருந்து வேகமாக தன் கரத்தை தீரன் உருவ முயன்ற நேரம் அவளது கரம் தவறுதலாய் மர டேபில் மீது மோதி வேகமாக அடிபட்டுவிட , உடனே பதறிய தீரன் அவளது கரத்தை ஆதரவாய் பிடித்துக்கொண்டு ,
” ரொம்ப வலிக்குதா ” என அடிபட்ட இடத்தில் தேய்க்க ,
” ஏன் தீரன்? ஏன் இதெல்லாம் பண்றீங்க? நியாயப்படி நீங்க என்னை கொலை பண்ணிருக்கணும். ஏன் இன்னும் என்னை உயிரோட வச்சிருக்கீங்க ? சொல்லுங்க . என் மேல கொஞ்சம் கூட அன்பு இல்லை அப்பறம் ஏன் தீரன் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்க ?இங்க பாருங்க என் முகத்தை பாருங்க ” என அவனது முகத்தை பிடித்து தன் பக்கம் திருப்பியவள் ,
” பாருங்க என்னை என்ன பண்ணி வச்சிருக்கீங்கன்னு , பாருங்க ” என மணிகட்டுப்பகுதியையும் , கன்னத்தையும் காட்டியவள் ,” காதல் பரிசுகள் ” என்றவள் ,
” இது கூட எனக்கு வலிக்கல ஆனா வார்த்தைக்கு வார்த்தை என் கரக்ட்டரை கேள்விக்குறியாக்குவீங்க பாருங்க அப்போ வலிக்கும் தீரன் . மோசமா வலிக்கும் .
இப்ப சொல்றேன் உங்களுக்கு என் மேல இருக்கிறதுக்கு பேர் லவ் இல்லை ,ஜஸ்ட் லஸ்ட் . இது லவ் இல்லை லவ் இப்படி இருக்காது.
வெறுப்போட , நம்பிக்கை இல்லாம, கஷ்டத்தோட, ஏன் தீரன் ? இதோ இப்போ கூட உங்களுக்கு என் மேல கோபம் வருது, காட்டிடுங்க தீரன் . உங்க பிஸ்டலை எடுத்து வேணும்ன்னா சுட்டு தள்ளிடுங்க . ஒன்னு என்னை கொலைபண்ணிடுங்க இல்லைன்னா எனக்கு விடுதலை கொடுங்க ,எனக்கு டைவர்ஸ் கொடுத்திடுங்க ” என மூச்சுவிடாமல் மனதை அழுத்தி கொண்டிருந்ததை ,ஆத்திரம் தாங்காமல் என்ன பேசுகிறோம் என்று கூட தெரியாமல் , அவனிடம் மனதில் உள்ள அனைத்தையும் கொட்டினாள்.அவன் ஒருவார்த்தை பேச வில்லை ,
ஆனால் மேகா பேசி முடித்துவிட்டு தீரனை நிமிர்ந்து பார்த்த பொழுது ,அவன் பார்வை மேகாவுக்குள் ஆழமாய் பாய்ந்து அவளது மனதை பிசைந்தது .
!!!!!!!!!!!!!!!
ஸ்டியரிங்கை பிடித்து வளைத்தவன் லோதி ரோட்டில் சிறுத்தையை போல சீறி பாய்ந்தான் மேகாவின் வார்த்தைகள் அவனை உருட்டி எடுத்தது .
‘ உங்களுக்கு என் மேல லவ் இல்லை ஜஸ்ட் லஸ்ட், எனக்கு விடுதலை கொடுங்க ,எனக்கு டைவர்ஸ் கொடுத்திடுங்க, ‘ என அவள் பேசியது மீண்டும் மீண்டும் அவனது செவிகளில் எதிரொலித்து ,அவனை நிலைகுலைய செய்தது .
இன்னும் ஒரு நொடி அவள் முன்பு ,அவன் இருந்திருந்தாலும் அதுவே அவர்களின் மணவாழ்க்கையின் இறுதிநாளாக கூட அமர்ந்திருக்கும் . தீரனுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது .கோபத்தில் அவளை காயப்படுத்திவிட கூடாது என்பதால் அப்படியே வெளியேறியவனால், ‘ டைவர்ஸ் , லஸ்ட் ‘ என்றதை மற்றும் ஏற்று கொள்ளவே முடியவில்லை .
இது போல தானே உன் வார்த்தைகள் அவளுக்கும் வலித்திருக்கும் என்பதை தீரன் உணர்ந்திருந்தால், இவ்வளவு கோபம் வந்திருக்காது ,மனைவின் மனமும் புரிந்திருக்கும்.
தீரன் மிகவும் உடைந்து போயிருந்தான் . இத்தனை வருட வாழ்க்கையில் எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்துவிட்டான் . ஆனால் அதற்கெல்லாம் அசையாமல் இறுக்கமாக இருந்தவன் மேகாவின் பார்வையிலும் அவள் விட்ட வார்த்தையிலும் மொத்தமாக நொறுங்கிவிட்டான் .
‘ லஸ்ட் , டிவோர்ஸ் ‘ இந்த இரெண்டு வார்த்தைகளும் அவனை மிகவும் காயப்படுத்தியது, எதோ தன்னையும் தன் காதலையும் அவமானப்படுத்தியதாக எண்ணி வருந்தினான் .மேகா தன்னிடம் இருந்து கணப்பொழுது விலகுவதையே தாங்கி கொள்ள முடியாத தீரனுக்கு , அவள் கேட்ட விவாகரத்து என்னும் வார்த்தை உயிரை பறித்தது போல வலித்தது .
‘அப்படியென்றால் அவள் வாழ்க்கையில் நான் அவ்வளவு தானா ? விவாகரத்து வேண்டுமென்றால் என்ன அர்த்தம் அப்பொழுது என்னை வேண்டாம் என்றே முடிவு செய்துவிட்டாளா ? எப்படி அவள் அப்படி கேட்கலாம் ? ‘ அவன் உடல் இறுகியது .
‘அப்படியென்றால் இவளும் என்னை விட்டு சென்றுவிடுவாளா என்ன ?’ கண்கள் இப்பொழுது கலங்கியது .
நிதானத்தை இழந்தபடி ஸ்டீயரிங்கை இறுக்க பிடித்தவன் கட்டுப்பாடு இழந்து எங்கோ இடிக்க போக பிறகு நூலிழையில் சடன் பிரேக் அடித்தபடி உயிர் தப்பினான் .மனம் ரணத்திற்கான மருந்தை தேடி அலைந்தது . கட்டுப்படுத்தி பார்த்தான் முடியவில்லை . காரை வேகமாக பறக்கவிட்டவன் , மதுபான விடுதி வந்து , வந்த வேகத்தில் உள்ளே நுழைந்து ஒரு ஓரமாய் கூட்டம் அதிகம் இல்லாத ஒரு டேபிளில் சென்று அமர்ந்தான் .
எதையோ மறக்க வந்தவன் எங்கையோ வந்து வீழ்ந்த கதையாக . இங்கே வந்து அமர்ந்தான் .
சோஷியல் ட்ரிங்கிங் என்றாலும் அது தவறு என ஒருகாலத்தில் தன் தந்தைக்கே அறிவுரை கூறியவன். காலப்போக்கில் சில சம்பவங்களால் மதுவை உட்கொள்ள தொடங்கி ,அதையே தன் காயத்தின் மருந்தாக மாற்றிக்கொண்டான் . முதுகில் குத்தும் சந்தர்ப்பவாத மனிதர்களை விட குடி எவ்வளவோ மேல் என்பது இவனது எண்ணம் .
சில நொடிகள் தலையை கவிழ்ந்தபடி ஆமர்ந்திருந்தவன், பிறகு தானே சென்று தனக்கு தேவையான மது பானத்தை ஆர்டர் செய்து , ஒரு நீண்ட பெருமூச்சை வெளியிட்டப்படி மட மடவென பருகினான் .
கரு விழிகள் தள்ளாட ,அரை குறை போதையோடு வெளியே வந்தவன் , மீண்டும் காரை ஓட்டினான் . இந்த முறை சீறி பாயவில்லை . போதையின் தாக்கம் !! மிதமாக ஓட்டினான் .
!!!!!!!!!!!
இரவு உணவுக்காக கீழே வந்தாள் ,கண்கள் தீரனை தான் தேடியது. வழக்கமாக அவன் இருக்கும் ஜிம் மற்றும் ஆபிஸ் அறையை நோட்டமிட்டாள் . ஆள் அரவம் இல்லை . பசிக்கவும் தான் கீழே வந்தவள், பிறகு எதுவும் உண்ணாமல் தன் அறையில் சென்று அடைந்துகொள்ள, மனதில் சொல்ல முடியாத ஒரு உணர்வு அவளை அழுத்தியது , நேரமும் கடந்து கொண்டே இருக்க , அதற்கு மேல் அவளால் அங்கு இருக்க முடியவில்லை. அஷோக்கிடம் கேட்கலாம் என்றால் அவனும் நேத்ராவும் வெளியூர் சென்றிருக்கும் இந்த நேரம் இதை கேட்டு அவர்களை சங்கடப்படுத்த மேகாவுக்கு விருப்பம் இல்லை .
ஆக சில நொடிகள் சிந்தனைக்கு பிறகு , வேகமாக கீழே வந்தவள் வீட்டின் மேற்பார்வையாளனை அழைத்து , தீரனின் டிரைவருக்கு அழைப்பு விடுக்கும் படி கூறினாள் . அவர் இங்கே தான் இருக்கிறார் என அவன் அவள் தலையில் குண்டை தூக்கி போட்டான் .
‘ ஆக தனியாக தான் சென்றிருக்கிறான் , நிச்சயம் குடிப்பான் ‘ என்று எண்ணியவளுக்குள் சிறு அச்சம் எழும் பொழுதே தீரனின் கார் வீட்டிற்குள் வருவதை ,கண்டவள் நிம்மதி பெருமூச்சுடன் மீண்டும் தன் அறைக்குள் சென்று மறைந்துகொண்டாள் .
‘ வந்துவிட்டான் அது போதும் ‘ என்று நிம்மதியடைந்த மேகாவுக்கு இப்பொழுது மெலிதாய் ஒரு உதறல்! இயல்பாக அவன் மீது இருக்கும் பயம் எட்டிப்பார்க்க , ‘ என்ன செய்வானோ? ‘ என்கின்ற பயத்தில் வந்து படுத்துகொண்டாள் . நேரம் தான் கடந்து கொண்டிருந்ததே தவிர அவன் வரவில்லை .
எழுந்து சென்று கீழே எட்டி பார்த்தாள், அலுவலக அறையில் வெளிச்சம் தெரிந்தது . என்ன செய்வானோ என பயத்தில் இருந்த மேகாவுக்கு அவன் அறைக்குள் வராமல் கீழே இருப்பது கொஞ்சம் நிம்மதியை கொடுக்க , உடல் சோர்வு தாக்கத்தில் அப்படியே உறங்கிருக்க ,
மறுநாள் எழும் பொழுது, தான் தீரன் தங்கள் அறைக்கு வரவேயில்லை என்று புரிந்தது ,மேகாவின் மனதிற்குள் ஒருமாதிரியாக இருந்தது .
நேற்று தானே அவன் வந்தால் என்ன செய்வானோ என்று பயந்தாய், இப்பொழுது அவனை காணவில்லை என்றதும் ஏன் தவிக்கிறாய் ?என்றது மனம் . தவிக்கிறேனா என்னா? இல்லையே , இது பயத்தின் வெளிப்பாடு என தனக்கு தானே சொல்லிக்கொண்ட மேகாவுக்கே அவளது மனநிலை புரியவில்லை , மிகவும் குழம்பியிருந்தாள் .
அப்பொழுது குளித்துமுடித்துவிட்டு கீழே வந்தவளை நேத்ராவும் அஷோக்கும் தான் வரவேற்றனர் .
” வாங்க அண்ணா , வா நேத்ரா எப்போ வந்தீங்க “
” இப்போ தான் மா “
” ஃபங்ஷன் எப்படி போச்சு அண்ணா? “
” நல்லா போச்சு மா நேத்ரா தான் டயர்ட் ஆகிட்டா ” மென்னகையுடன் அஷோக் கூறினான் .
” ஆமா அண்ணி கொஞ்சம் டயர்ட் ஆஹ் இருக்கு நான் அப்புறம் சாப்பிடுகிறேன்” என நேத்ரா தன் அறைக்கு கிளம்பிவிட ,
” தீரன் எங்க மா ?ஆளையே காணும் போன் பண்ணினேன் எடுக்கல ” என்று அஷோக் உணவை சாப்பிட்டுக்கொண்டே கேட்க , மேகாவுக்கு தான் மிகவும் சங்கடமாக இருந்தது . அவள் என்ன சொல்வதென்று புரியாமல் விழிக்க
“சார் மார்னிங்கே ஆபிஸ் கிளம்பிட்டாரு ” என்று உணவு பரிமாறுபவர் கூறவும் மணியை பார்த்த அஷோக்,
” இவ்வளவு சீக்கிரமாவா ” யோசனையுடன் நெற்றியை நீவியவன் .மேகாவின் முகமாற்றத்தை வைத்தே ஓரளவு கணித்துவிட,
” இன்னைக்கு கொஞ்சம் முக்கியமான மீட்டிங் மா அதான் ” என மேகாவை சமாளித்தவன் . அதற்கு மேல் தீரனை பற்றி ஒருவார்த்தை பேசவில்லை . மேகாவிடம் ஹாஸ்பிடல் நிர்வாகம் குறித்து கொஞ்ச நேரம் பேசியவன் உணவை முடித்துக்கொண்டு அங்கிருந்து எழுந்து கொண்டான் . இருவரும் தங்களின் பிரச்சனை பற்றி வாய் திறக்காமல் இருக்க, இவர்கள் பிரச்சனையை எப்படி தீர்ப்பது என புரியாமல் அஷோக் மிகவும் வருத்தப்பட்டான்.
-தொடரும்