மிருதனின் கவிதை இவள் 32(a)
விஷால் இறந்து இன்றோடு ஒரு ஆண்டு முடிந்திருக்க , அவன் கல்லறையில் மலர்வளையம் வைக்க வந்த நேத்ராவின் கண்கள், அவன் இறந்த கணத்தில் இருந்து இன்று வரை உறக்கம் இன்றி தவியாக தவிக்கின்றது .
ஆரம்பத்தில் மாத்திரை உதவியுடன் உறங்கியவளுக்கு இப்பொழுது அதுவும் வேலைக்காகவில்லை . அழுது அழுது கண்ணீர் வற்றி போயிருக்க . காணும் இடமெல்லாம் அவனுடன் கழித்த பொழுதுகள் தான் அவளை துரத்துகின்றது .
ஒருவருடத்திற்கு முன்பு ,
அப்பொழுது நேத்ரா பெண்கள் கலை கல்லூரியில் இரண்டாம் வருடம் படித்து கொண்டிருந்தாள். விஷால் ஒரு பிரபல போட்டோ ஸ்டுடியோவில் உதவி போட்டோக்ராபராக வேலை பார்த்து கொண்டிருந்தான் . அன்று நேத்ரா படித்த கல்லூரியில் மூன்று நாட்கள் தொடர்ந்து கலை விழா கோலாகரமாக நடக்கவிருக்க , மொத்த விழாவின் விடீயோ மற்றும் போட்டோ கவேரஜும் விஷாலின் தலைமையின் கீழ் நிர்ணயிக்க பட்டிருந்தது .
அங்கே தான் இவர்கள் இருவரின் சந்திப்பும் நடந்தது . நேத்ராவுக்கு , வீட்டில் எப்பவும் இறுக்கமாகவும் கண்டிப்புடனும் இருக்கும் தமயன்களை பார்த்து பார்த்து , கலகலவென சிரித்த முகமாக வலம் வந்த விஷால் மீது ஒரு ஈர்ப்பு வர , முதலில் நட்பில் ஆரம்பித்த அவர்களின் உறவுக்கு , முதன் முதலில் காதல் என்னும் பதவி உயர்வை கொடுத்தது விஷால் தான் .ஆரம்பத்தில் தன் தமயன்களை எண்ணி கொஞ்சம் பயந்த நேத்ரா பின்பு அவளும் காதலில் விழுந்தாள்.
ஆனாலும் நேரில் சந்திக்க நேத்ரா மிகவும் தயங்கவும் , விஷாலின் வற்புறுத்துதலால் , எப்பொழுதாவது மால், சினிமா ,தியேட்டர் போன்ற கூட்டமான இடங்களில் மட்டும் சந்தித்துக்கொள்பவர்கள் . அதிகம் அலைபேசி மூலமாக தான் தங்களின் காதலை வளர்த்தார்கள் .
இரெண்டு மாதங்கள் நன்றாக கழிந்திருக்க , அன்று ஒருநாள் விஷாலை பார்த்து விட்டு சந்தோஷமாக வீட்டிற்கு வந்த நேத்ராவை , இது நாசூக்காக கையாளாப்பட வேண்டிய விடயம் அவசரப்பட வேண்டாம் என தீரன் எவ்வளவோ தடுத்தும் கேட்காத மித்ரன், திட்டி தீர்த்து விட்டான் .
ஒருகட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத நேத்ரா ,
” இஷிதா அண்ணிக்கு எல்லாம் தெரியும் , விஷால் அண்ணிக்கு தெரிஞ்சவங்க தான்.நீ மட்டும் இஷிதா அண்ணிய லவ் பண்ணுவ நான் பண்ண கூடாதா , ” என்று எடுத்தெறிந்து பேசிவிட , ஆத்திரம் கொண்ட மித்ரன் ,தீரன் சுதாரிப்பதற்குள் ஒரு அரை ஒரே ஒரு அரை விட்டான் , அதிலே நேத்ரா சுருண்டு விழுந்துவிட. மித்ரனை அதட்டி ,” தான் இந்த பிரச்சனையை பார்த்து கொள்வதாக ” கூறிய தீரன் .தனிமையில் அவளுடன் உரையாடினான் .
மித்ரனாவது எப்பொழுதாவது கொஞ்சம் சிரித்து பேசுவான் . ஆனால் தீரன் அப்படி இல்லையே . தீரன் என்றாலே நடுங்கும் நேத்ராவுக்கு தீரன் வந்து இயல்பாக பேசவும் முதலில் பயம் தான் வந்தது .பின்பு அவன் காட்டிய அன்பில் மனம் விட்டு பேசி அனைத்தையும் கூறினாள் .
விஷால் மற்றும் நேத்ராவின் உறவை முதலில் கண்டு பிடித்தது தீரன் தான் , ஆனால் இந்த பிரச்சனையை சுமுகமாக பேசி சரி பண்ண வேண்டும் என்று அவன் நினைத்திருக்க , ஏற்கனவே இஷிதா காதலிப்பதாக நடித்ததில் கோபத்தில் இருந்த மித்ரன், நேத்ரா விடயம் கேள்விப்பட்டதில் பொங்கி விட்டான் .
மேலும் இதை முளையிலே கிள்ளி எறிய வேண்டும், இல்லையென்றால் இதற்கு முன்பு சந்தித்தது தான் மீண்டும் நிகழும், போதும் போதும் இழந்த வரை , என்றவன் நேத்ராவிடம் கடுமையாக நடந்துகொள்ள . பிரச்சனை தான் பெரிதாகி கொண்டிருந்தது .
ஆனால் தீரன் மிகவும் பொறுமையாக கையாண்டான் . தீரன் காதலுக்கு எதிரியெல்லாம் கிடையாது . நல்ல பையன் என்றால் அஷோக்கிடம் பேசி நேத்ராவையும் விஷாலையும் சேர்த்து வைத்து விட வேண்டும் என்று முடிவெடுத்தவன் ,யாருக்கும் தெரியாமல் விஷாலின் பின்புலத்தை விசாரிக்க தொடங்கினான் .
அப்பொழுது அவனுக்கு கிடைத்த சில புகைப்படங்கள் அவனை அதிர்ச்சிக்குள்ளாக்கியது . விஷாலும் கிரண் பாஸ்கரும் ஒன்று இரெண்டு முறை சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் தீரனின் பிரைவேட் டிடெக்டிவ் மூலமாக கிடைக்க ,அதற்கு மேல் விஷால் நேத்ராவின் உறவை எடுத்து செல்ல தயங்கியவன் . இதை பற்றி நேத்ராவிடம் பொறுமையாக எடுத்து கூற , நேத்ரா அழுது தீர்த்துவிட்டாள்.
பின்பு விஷாலை நேரடியாக அழைத்த தீரன் கிரணுடனான இவனது உறவை பற்றி கேட்க , நொடி பொழுதில் விஷாலின் கண்களில் தோன்றிய பதற்றத்தை கண்டு கொண்ட தீரனுக்கு விஷால் மீது ஏதோ தவறு இருப்பதாக தெரிய , விஷாலோ உடனே தன்னை சுதாரித்து கொண்டு , கிரண் வீட்டில் நடந்த பிஸ்னஸ் பார்ட்டியில் தான் போட்டோகிராபராக இருந்ததாகவும் ,பணம் கொடுக்கல் வாங்கல் பற்றி தான் சந்தித்து பேசினோம் என்று சமாளிக்க , தீரனின் மனம் ஏனோ அதை ஏற்க மறுக்க , நேத்ராவின் விடயத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பாதவன் . நேத்ராவிடம் உறுதியாக விஷாலை மறக்கும் படி கூறிவிட ,
தீரன் சேர்த்து வைப்பான் என்று நம்பியிருந்த நேத்ரா அவன் மறுக்கவும் மிகவும் மனமுடைந்தவள் விஷாலுடன் ஊரைவிட்டு செல்ல திட்டமிட , அது தீரனின் கண்களில் இருந்து தப்புமா ? ஏர்போர்ட்டின் வாசலில் வைத்து இருவரையும் தீரன் மற்றும் மித்ரனின் செக்யூரிட்டிகள் வளைத்து பிடித்தனர் .
அந்த இடத்திலே விஷாலை அடித்து துவைத்த தீரன் , இனிமே என் தங்கை பின் வந்தால் உடம்பில் உயிர் இருக்காது என கோபத்தில் வார்த்தையை விட்டுவிட , அந்த நொடி துவங்கி நேத்ராவுக்கு வீட்டிலே சிறைவாசம் என்றால் .
மறுநாள் காலை இளம் போட்டோகிராபர் , சென்றுகொண்டிருந்த கார் திடிரென்று வெடித்து சிதறி வாலிபர் இறப்பு .என விஷாலின் புகைப்படம் போட்டு நாளிதழில் தலைப்பு செய்தியாக வர , தீரன் உட்பட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் . நேத்ரா நொறுங்கியே விட்டாள் .
என்னை காதலித்த பாவத்திற்காக இப்படி உயிரை விட்டுவிட்டாயே என துடித்து போனவள் . தீரன் தான் சொன்னதை போலவே செய்துவிட்டான் என தப்பாக நினைத்து , அவன் மீது ஆறாத சினம் கொண்டாள் .
இதை காரணமாக கொண்டு தன் தமயன்கள் இருவரையும் வெறுத்த நேத்ரா கிட்டத்தட்ட ஒரு ஆண்டாக அறைக்குள்ளே அடைந்து கிடக்க , தீரனின் திருமண விடயம் தெரிந்ததும் கொந்தளித்து விட்டாள் .
என் காதலை அழித்துவிட்டு அவன் மட்டும் சந்தோஷமாக இருப்பதா என வெறிபிடித்தது போல கத்தியவள் . ‘ என் காதலை அழித்தது போல உன் காதலையும் அழிப்பேன் ‘ என சூளுரைத்து , தீரனை பழிவாங்க அவர்களுடன் அன்பாக இருப்பது போல நடிக்கிறாள் .
” பழிவாங்குவேன் விஷால் ,நம்ம காதலுக்காக இதை நான் செய்வேன் ” என்றவள் உணர்ச்சியுடன் சொல்லிக்கொண்டிருக்க , அந்நேரம் மலர் செண்டை விஷாலின் கல்லறையில் வைத்தபடி நேத்ராவின் அருகில் வந்து நின்ற கிரண் பாஸ்கர் ,
” நல்ல பையன் , முன்னேறனும்ன்னு ரொம்ப ஆசைப்பட்டான் . நான் உதவி பண்றேன்னு சொல்லிருந்தேன் என்கிட்ட பேசினான் என்பதற்காக ,தீரன் இவ்வளவு மோசமா நடந்துக்குவான்னு நான் நினைக்கல .எனக்கு தெரிஞ்சிருந்தா நான் காப்பாத்திருப்பேன் . பாவம் வாழ வேண்டியவன் அநியாயமா செத்து போய்ட்டான் ” என்று வேதனை குரலில் கூற , அவனை திரும்பி நிமிர்ந்து பார்த்த நேத்ரா , எதுவும் பேசாமல் அங்கிருந்து செல்ல , தன் நாடியை நீவியபடி முன்னே செல்லும் நேத்ராவின் முதுகை வெறித்து பார்த்த கிரணின் இதழ்கள் விஷமமாய் சிரித்தது .
!!!!!!!!!!!!!!!!
ஏற்கனவே கனகராஜ் விட்ட வார்த்தைகளில் மனதளவில் வேதனைபட்டுக்கொண்டிருந்த மேகா ,தீரன் அன்று பேசியதிலும் நடந்து கொண்டதிலும் இன்னும் பாதிப்படைந்திருக்க , நடந்து கொண்டதுக்கு ஒரு மன்னிப்பு கூட கேட்காது எதுவுமே நடக்காதது போல தீரன் தன்னை நெருங்கவும் , மிகவும் ஆத்திரம் கொண்ட மேகாவுக்கு உடல் சோர்வுடன் சேர்த்து மன அழுத்தமும் இணைந்துகொள்ள, மனதை போட்டு அழுத்திய விஷயங்களை அவனிடம் கொட்டி தீர்த்துவிட்டு இப்பொழுது நிம்மதி இன்றி இருக்கிறாள் .
நேரம் கழித்து வீட்டிற்கு வருபவன் ஒரு கோப்புடன் வீட்டில் இருக்கும் அலுவலக அறையிலே அடைந்து கொள்வான் .உணவு கூடத்திலும் கூட இதே நிலை தான் .இவள் கிளம்பி வருவதற்குள் ஆபிஸ்க்கு கிளம்பிவிடுவான்.
முதல் நாள் ஒன்றும் தோணவில்லை உடல் சோர்வு காரணமாக உறங்கிவிட்டாள்.ஆனால் அதன் பின் வந்த நாட்களில் அவனை காணாது மேகா தான் மிகவும் தவித்து போனாள்.
இரண்டாம் நாள் அன்று மெளனமாக அவன் பார்த்த பார்வை திரும்ப திரும்ப அவள் நினைவில் வந்து , அவளை மிகவும் பரிதவிக்க வைக்க . மிக சிரமப்பட்டு அந்த நினைவுகளில் இருந்து மீண்டவளால் . மறுநாள் வேலையிலும் கூட முழுவதுமாக ஈடுபட முடியாமல் போக ,
‘என்ன மேகா நீ ?அவன் உன்னை அடித்தான் , வார்த்தையால் காயப்படுத்தினான். அதற்கான பதில் தான் நீ அன்று பேசியது . ஆக நீ இப்பொழுது வருத்தப்படும் அளவுக்கும் ஒன்றும் நடக்கவில்லை . உன்னை காயப்படுத்திவிட்டு அவன் என்னை உன்னை போல புலம்பிக்கொண்டா இருந்தான் ? எதுவுமே நடக்காதது போல அவன் அழையவில்லை? உனக்கு மட்டும் என்ன ? ‘ என்று தனக்கு தானே கூறியவள் , இனி அவனை பற்றி எண்ண கூடாது என்று தீவிரமாக முடிவெடுத்தவள் அப்படியே கண்மூடி அமர்ந்திருக்க ,
அவளது இன்டெர்க்காம் அடிக்கவும் எடுத்து பேசியவள் சிறு கோபத்துடன் அப்படியே ஏதோ ஒரு சிந்தனையில் இருக்க ,
” மேம் இப்போ என்ன சொல்றது ” என்று இன்டெர்காமில் கேட்ட ரிசெப்ஷனிஸ்ட்டின் குரலில் சுயம் பெற்ற மேகா ,
” தியேட்டர்ல இருக்கேன்னு சொல்லுங்க ” என்று உணர்ச்சிகள் துடைக்கபட்ட முகத்துடன் கூறிவிட்டு அலைபேசியை வைத்துவிட்டாலும், அவள் ஆழ்மனதின் கொந்தளிப்பு மட்டும் குறையவே இல்லை .
‘ இவருக்கு இப்போ என்ன வேணும் ?இருக்கிற பிரச்சனை பத்தாதா ?இன்னும் என்ன பிரச்சனை எல்லாம் இவரால வர போகுதோ ,இந்த போராட்டத்திற்கு எல்லாம் முடிவே வராதா ‘ என மிகவும் கலங்கிய மேகா கண்மூடிய நிலையில் சூழல் நாற்காலியில் சோர்ந்து போய் அமர்ந்திருக்க , அப்பொழுது வாஷ்ரூமில் இருந்து வெளி வந்த நேத்ரா ,
” கிளம்பலாமா அண்ணி ” என்று கேட்க ,
” இல்லை பா , எனக்கு கொஞ்சம் வொர்க் இருக்கு வர லேட் ஆகும் நீ வேணும்ன்னா கிளம்புடா ” என்றாள் சோர்வாக , எப்படியும் ரிதுராஜ் கீழே இருக்க கூடும் இப்பொழுது சென்றால் பார்க்க நேரிடும் என்பதால் இன்னும் கொஞ்ச நேரம் ஹாஸ்பிடலில் முடிக்க வேண்டிய பணியை பார்க்க முடிவு செய்தாள்.
” என்னாச்சு ரொம்ப டல் அடிக்கிறீங்க “
” ஒன்னும் இல்லை வேலை டென்ஷன் தான் மா , அவ்வளவு தான் ” என்று மேகா சமாளிக்க , தீரனால் தான் மேகா கவலையாக இருக்கிறாள் என்று எண்ணிய நேத்ரா , ‘ இப்படியே ரெண்டு பெரும் கடைசி வர சேரக்கூடாது ‘ என மனதிற்குள் கூறிவிட்டு ,
” சரி அப்போ நான் கிளம்புறேன் ” என்று வெளியில் புன்னகை முகம் மாறாமல் மேகாவிடம் விடைபெற்றுக்கொண்டு அங்கிருந்த கிளம்பினாள் .
கீழே ரிசெப்ஷனிஸ்ட்டிடம் மேகாவை பார்க்க அனுமதிக்குமாறு ரிதுராஜ் வாதாடி கொண்டிருக்க ,அந்நேரம் பார்த்து அங்கே வந்த நேத்ரா அவனை புருவம் சுருக்கி பார்த்தவள் ஒரு கணம் தயக்கத்திற்கு பிறகு அவர்களிடம் வந்து என்ன பிரச்சனை என கேட்டாள்,
” சார் மேமை பார்க்கணும்னு சொல்றாங்க “
” யார் இவரு “
” கனகராஜ் சாரோட பையன் ரிதுராஜ் “
” ரிதுராஜ் ” பெயரை கேட்டதுமே ‘ எக்ஸ் லவ்வரா , அதான் மேடம் சோகமா இருக்கீங்களா ? ‘ என எண்ணியபடி இகழ்ச்சியாக புன்னகைத்த நேத்ரா ,
” அனுப்ப வேண்டியது தானே ” என கேட்டாள்.
” மேம் வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்க ” என அந்த பெண் மெதுவாக நேத்ராவின் காதில் கூற ,’ புதுசு வந்ததும் பழசு கசந்திருச்சு போல ‘ என தனக்குள்ளே முணுமுணுத்துக்கொண்ட நேத்ராவுக்கு மேகாவை எண்ணி எரிச்சலாக இருந்தது .
” நீ உன் வேலைய பாரு நான் பேசிக்கிறேன் ” என்று கூறிவிட்டு ரிதுராஜை பார்த்தாள் .
இன் பண்ணாத கசங்கிய சட்டையும் , புதிதாய் முளைத்த தாடியுடன் துயரத்தின் உருவமாய் காட்சியளித்தான் .
” ஐயம் நேத்ரா , நீங்க உங்களை என ” யோசிப்பதுபோது போன்ற முக பாவனையுடன் வினவினாள் .
” ரிதுராஜ் ” உடனே கூறினான் .
” ஓ எக்ஸ்சா ” நக்கலை மறைத்தபடி எதார்த்தமாக கேட்பது போல கேட்க , ரிதுராஜ் தான் பேச முடியாமல் தடுமாறினான் .
” ஐ மீன் இந்த ஹாஸ்பிடலோட எக்ஸ் டிரக்டர் ” மென்னகையுடன் கூறினாள் . அவனுக்கு அப்பொழுது தான் நிம்மதியாக இருந்தது .
” ம்ம் ” வலுக்கட்டாயமாக புன்னகைத்தான் .
” என்ன விஷயம்? “
” மேகாவ பார்க்கணும் “
” அவங்க கொஞ்சம் பிசியா இருக்காங்க, நீங்க போன்க்கு ட்ரை பண்ணலாமே “
” பழைய நம்பர் வொர்க் ஆகல “
” ஓ சரி ஏதும் முக்கியமான விஷயம் சொல்லனுமா “
” இல்லை அவங்க கிட்ட தான்பேசணும் “
” சரி உங்க நம்பர் குடுங்க நான் அவங்க எப்போ ப்ரீயா இருக்காங்கன்னு பார்த்துட்டு உங்களுக்கு சொல்றேன் ” என்று சொல்ல நேத்ராவின் முகமூடி அணிந்திருந்த முகத்திற்குள் ஒளிந்திருக்கும் கபடத்தை காண மறந்த ரிதுராஜ் ,
” தேங்க்யூ சோ மச் .” என்றவன் புன்னகையுடன் பின்னால் நிகழ போகும் விபரீதம் அறியாமல் தன் அலைபேசி எண்ணை கொடுத்துவிட்டு .
” எப்படியாவது அவங்களை பார்க்கணும் “
” கண்டிப்பா சார் கொஞ்சம் பிசியா இருக்காங்க , நான் பேசி உங்களை மீட் பண்ண வைக்கிறேன் .நம்பிக்கையோட போங்க , இது வொர்க் டைம் பாருங்க, ப்ரீ டைம் பார்த்து பார்க்க ஏற்பாடு பண்றேன் ” என்று நேத்ரா நம்பிக்கையுடன் கூறவும் , ரிதுராஜ் அங்கிருந்து சென்று விட்டான் .
ஹாஸ்பிடல் மனேஜ்மென்டில் அஷோக்கை போல நேத்ராவும் ஒரு பார்ட்னர் என்பதால் அட்மினிஸ்ட்ரேஷனில் மேகாவுக்கு உதவி செய்கிறேன் என்ற பெயரில் அவள் என்ன செய்கிறாள் . என்பதை நோட்டமிடுவதற்காகவே அவ்வ்வபொழுது ஹாஸ்ப்பிட்டல் வரும் நேத்ரா ,அஷோக் மூலமாக அக்னி மற்றும் மேகாவின் திருமணம் பற்றி ஏற்கனவே அறிந்துவைத்திருந்தவள் , அன்று தீரன் மற்றும் மேகா இருவருக்கும் இடையே நடந்த சண்டை வைத்து தீரனின் மனநிலையையும் , அவர்கள் திருமண பந்தத்தில் இருக்கும் சிக்கல்களையும் கணித்துவிட்டாள் .
எப்படியும் தீரனை நேரடியாக பழிவாங்கவே முடியாது , போதாக்குறைக்கு அவன் எதற்கும் அசராதவன் என்பது அவளுக்கு நன்றாக தெரியும், ஆனால் அவனையே அசைத்து பார்க்கும் சக்தி மேகவிடமும் , அவள் மீது அவன் வைத்திருக்கும் கண்மூடித்தனமான காதலுக்கு மட்டும் தான் இருக்கிறது , என்பதை புரிந்து கொண்ட நேத்ரா ,
என் காதலை பிரித்து என்னை தனிமரம் ஆகினாய் அல்லவா உனக்கும் அதே வலியை தருகிறேன் என தான் விதைக்கும் வினையில் தானே சிக்கிக்கொள்ள போகும் நாள் வரப்போவதை அறியாமல் இப்படி முட்டாள்தனமாக சிந்தித்தவள் ,
மேகாவை வைத்தே தீரனின் மனதை உடைக்க எண்ணி சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க , கைநிறைய வரம் கிடைத்தது போல ரிதுராஜுடனான இந்த சந்திப்பு அவளுக்கு அமைந்துவிட, வஞ்சிக்க போகும் நாளை எண்ணி நேத்ராவின் இதழ்கள் வஞ்சனையோடு புன்னகைத்தது.
அளவற்ற நேசத்தால் நெய்யப்பட்ட நெஞ்சங்களை வஞ்சனையால் பிரிக்க முடியும் என்ன ? முடியும் என்கிறாள் இச்சிறுபெண் ! முடிந்தால் பார் என்கிறது காதல் ! காதல் வெல்லுமா ! வஞ்சனை வீழுமா ! என்பதை காலம் சொல்லும் .