MIRUTHNAIN KAVITHAI IVAL 36

cover page-743ce016

மிருதனின் கவிதை இவள் 36

மனைவியுடன் முதன் முதலாக ஜோடியாக கலந்துக் கொள்ளும் முதல் விருந்தினர் கூட்டம் என்பதால் மகிழ்ச்சியுடன் மனைவியின் கரம் கோர்த்தபடி உள்ளே நுழைந்த தீரனையும் மேகாவையும் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் சுற்றி சுற்றி புகைப்படம் எடுக்க ஆரம்பித்து இருந்தார்கள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத மேகாவின் கரங்கள் பதற்றத்தில் நடுங்க, தன்னவளை ஒருகணம் நிமிர்ந்து பார்த்தவன் அவளது தோள் மீது கரம் போட்டு தன்னோடு பாதுகாப்பாக அணைத்து கொண்டான்.

நிருபர்களின் ஒருசில கேள்விகளுக்கு பொறுமையாக பதில் கூறியவன் தனிப்பட்ட கேள்விகளை வழக்கம் போல, “நோ மோர் குவஷ்ட்டின்ஸ்” என்றபடி கடந்தவன் மேகாவுடன் உள்ளே வர, இப்பொழுது பத்திரிகையாளர்கள் அவர்களுக்கு பின்னால் வந்த அஷோக்கையும் நேத்ராவையும் பிடித்து கொண்டனர்.

வாசலில் பார்ட்டியின் ஒருங்கிணைப்பாளர் அவசரமாக தீரன் மற்றும் மேகாவின் அருகில் வந்து அவர்களை உள்ளே அழைத்து செல்ல, மனைவியை அணைத்தபடி உள்ளே சென்றான்.

தீரனுக்கு தெரிந்த தொழில் சார்ந்த நண்பர்கள் தொடங்கி அனைவரும் அவனிடம் வந்து கரம் குலுக்கி வாழ்த்துக்கள் கூறி, மேகாவை பார்த்து புன்னகையுடன் அவளை மிக மரியாதையுடன் வரவேற்க, அனைவரையும் புன்னகையுடன் எதிர்கொண்ட மேகா தீரனுக்கு கிடைக்கும் மரியாதையை ஆச்சரியத்துடன் பார்த்து கொண்டிருந்தாலும் ஒருவித பதற்றத்திலேயே இருக்க, அதை உணர்ந்த தீரனோ மேகாவை தனியே அழைத்து,

” என்னாச்சு பா? ஒரு மாதிரியாவே இருக்க.”அக்கறையுடன் வினவினான் .

“ஒன்னும் இல்லை இந்த மாதிரி பார்ட்டியெல்லாம் இதுக்கு முன்னாடி அட்டென்ட் பண்ணினது இல்லை, அதான் வித்யாசமா இருக்கு.”

“இது பக்கா பிஸ்னஸ் பார்ட்டி வரு, பெரிய பெரிய ஆளுங்க எல்லாரும் வருவாங்க சோ சேனலுக்கு எதாவது நியூஸ் கிடைக்குமான்னு பிரெஸ் சுத்தி சுத்தி வருவாங்க. உன் ஃப்ரண்ட்ஸ் கூட போற மாதிரியெல்லாம் இது இருக்காது சோ கொஞ்சம் போர் அடிச்சாலும் கண்ணை காட்டு போய்டலாம் சரியா.” என்றான்.

“நீங்க இருக்கும் பொழுது எனக்கு ஏன் போர் அடிக்கும். ஐயம் ஓகே பா.” என்றவளை மனநிறைவுடன் பார்த்த தீரன், அஷோக் மற்றும் நேத்ராவுடன் இணைந்து கொண்டு மகிழ்ச்சியுடன் பேசி கதைத்தபடி வாசலை பார்க்க,

அங்கே வெள்ளை கோட் சூட்டில் மிடுக்காக கிரண் பாஸ்கர் மிடுக்காக நடந்து வந்தான் .அவனை கண்டதும் தீரனின் தாடை இறுக, இப்பொழுது அவனது பார்வை ரிஷியை வெறித்தது.

தான் செய்த ஏற்பாட்டையும் மீறி வந்திருந்த கிரணை கண்ட ரிஷிக்கு தான் ஒன்றுமே ஓடவில்லை, கைகளை பிசைந்தபடி தீரனிடம் வந்த ரிஷி,

“எல்லாமே பக்கவா பண்ணிருந்தோம் சார் ஆனா எப்படி வந்தாருனே தெரியல.” என அவனது காதில் மெல்ல முணுமுணுக்க,

“கெட் லாஸ்ட்.” என புன்னகைத்தபடியே பல்லை கடித்த தீரன் பார்த்த அனல் பார்வையில் ரிஷி தள்ளி சென்று நின்று கொள்ள, கோபத்தை அடக்க தீரன் தான் பெரும்பாடு பட்டுப்போனான்.

!!!!!!!!!!!

தாரிக்காவின் விரலுடன் தன் விரலை பிணைத்தபடி அக்னியை நோக்கி நடந்து வந்த கிரண் நேராக தீரனிடம் வந்து,

“கங்கிராட்ஸ் தீரன்” என தன் இடக்கரத்தை தனது பேண்டின் பாக்கெட்டிற்குள் நுழைத்து, தன் வலது கையை அவனை நோக்கி நீட்டினான்.

அப்பொழுது கிரண், தாரிக்கா இருவரையும் ஒரு கணம் ஒரே ஒரு கணம் வெறித்து பார்த்த தீரன், சம்பிரதாயத்திற்கு கூட தன் கரத்தை நீட்டாமல், அலைபேசியை எடுத்து ஆராய ஆரம்பிக்க, மேகா தான் அக்னியின் திடீர் மாற்றத்தால் குழம்பி போனாள்.

கிரணோ அவமானத்தில் தன் முகம் கருக, அடிவாங்கிய உணர்வை தன் நெஞ்சில் விஷம் போல தேக்கி வைத்தவன், கோபத்தில் ஏதோ பேச வந்த தன் மனைவியை பார்வையாலே அடக்கி, விஷம புன்னகையுடன் மேகா மற்றும் அக்னியின் பிணைத்திருந்த கரங்களை ஒரு பார்வை பார்த்து விட்டு மேகாவிடம்,

“அக்னி எப்பவுமே இப்படி தான்.” என்றவன், “பை தீ வே ஐயம் கிரண் பாஸ்கர்.” என புன்னகை முகம் மாறாமல் தன் கரத்தை அவளை நோக்கி நீட்டினான்.

அப்பொழுது, என்ன காரணமோ தீரனுக்கு கிரணை பிடிக்கவில்லை என்று மட்டும் புரிந்து கொண்ட மேகாவோ சங்கடமான புன்னகையுடன் கிரணை எதிர்கொண்டவள் வேறு எதுவும் பேசாமல் அக்னியுடன் இன்னும் ஒன்றி நின்றுகொள்ள, ஒரு கணம் மேகாவை தன் விழிகள் இடுங்க பார்த்த கிரண் சட்டென்று தன் முகத்தை மாற்றி கொண்டு அவளிடம் ஏதோ பேச வரவும் வேகமாக மேகாவுக்கு முன்னால் வந்த அஷோக் கிரணை பார்த்து,

“எங்க வீட்டு பொண்ணுகிட்ட நீ பேசணும்ன்னு அவசியம் இல்லை கிரண் கிளம்பு, இங்க நின்னு இன்னும் அவமானப்படாத.” என ஏளன புன்னகையுடன் அவனை தன் விரல் நீட்டி தன் பங்கிற்கு அவமானப்படுத்தினான்.

அப்பொழுது கணவன் படும் அவமானத்தை பொறுத்துக்கொள்ள முடியாத தாரிக்கவோ தீரனையும் மேகாவையும் ஆக்ரோஷமாக பார்த்தபடி அஷோக்கிடம்,

“போதும் இதுக்கு மேல எதுவும் பேச வேண்டாம்.” என்றவள் சபை நாகரிகம் கருதி கிரணின் கரம் பிடித்து,

“இவனுக்கு நீங்க எவ்வளவு நல்லது செஞ்சாலும் அக்னி மட்டும் தான் கண்ணுக்கு தெரிவான் வாங்க” என்று அழைக்க, ஆனால் அது எதையுமே தன் காதில் வாங்காத கிரணின் கழுகு பார்வையோ நடப்பதை எதையுமே கண்டு கொள்ளாமல் தன் மனைவி மேகாவையே கண்களில் காதல் வழிய பார்த்து கொண்டிருந்த தீரன் மீதே பதிந்திருந்தது.

பழிவெறி மட்டுமே அடங்கியிருந்த அந்த பார்வையில் இருந்த நெருப்பு தீரனை வேள்வியில் தள்ளி சாம்பலாக்க காத்திருக்க,

ஆனால் அது எதையுமே கண்டுகொள்ளாத தீரனோ தன்னுடன் ஒன்றி நின்ற மனைவியை, இன்னும் தன்னுடன் நெருக்கமாக அணைத்தபடி அவள் காதில் ஏதோ பேசி கிசுகிசுக்க பதிலுக்கு மேகா ஏதோ சொல்லி புன்னகைக்க என தன்னவளுடன் அவன் தனி உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்க, இந்த காட்சியை கண்ட கிரண், தீரனை தன் சிவந்த விழிகள் இடுங்க பார்த்து, ‘சிரிச்சிக்கோ தீரன் இன்னையோட உன் மொத்த சந்தோஷத்தையும் நான் அழிக்கிறேன்.’ என மனதிற்குள் சூளுரைத்தபடி வேகமாக அங்கிருந்து சென்றான்.

“அவன் விஷ் பண்ணினத்துக்கு நீ ஏன் ரெஸ்பான்ஸ் பண்ணல?” நாடியில் கைகுற்றி மேகாவின் விழிகளை உற்று பார்த்தபடி கேட்டான்  தீரன்.

“உங்களுக்கு அவரை புடிக்கலை அதான்.” என்ற மனைவியின் கரங்களை பற்றி கொண்டவன்,

“உன்னை ரொம்ப கண்ட்ரோல் பண்றேனோ?” மனைவியின் விழியுடன் தன் விழியை கலக்க விட்டபடி கேட்டான் .

“இல்லை அதை நான் அக்கறையா தான் பார்க்குறேன்.” என்று மேகா அவனது விழிகளை நோக்கி சொல்ல. அதை கேட்டதும்  உள்ளம் மகிழ்ந்த தீரனுக்கு எதையோ சாதித்த உணர்வு மேலிட ! பெருமிதத்துடன்  மனைவியின் கரத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டான்.

நேரம் கடக்க கடக்க ஆண்களும் சில பெண்களும் மதுபானத்தை அருந்திவிட்டு ஜோடி ஜோடியாக இசைக்கேற்ப நடனம் ஆட துவங்க , தீரனோ

கரங்களில் ட்ரேயுடன் அங்கும் இங்கும் சுற்றி சுற்றி வந்து உபசரித்த சீருடை அணிந்த சிப்பந்தியிடம் மேகாவுடன் தனக்கும் சேர்த்து ஜூஸ் க்ளாஸையே தேர்ந்தெடுத்தான். அதை ஆச்சரியமாக பார்த்த மேகாவுக்கு அக்னியின் மாற்றம் ஒருபக்கம் மகிழ்ச்சியை தந்தாலும் அவனிடம்,

“உங்களுக்கு என்ன புடிக்குமோ அதே சாப்பிடுங்க.” என்றாள்.

ஏனோ தனக்காக தான் தீரன் தன் விருப்பத்தை மாற்றிக்கொள்கிறானோ என்று நெருடலாய் இருக்கவும் மேகா இவ்வாறு சொல்லி விட, அவனோ மென்புன்னகையுடன் மனைவியை பார்த்தவன்,

“அப்படிங்கிற அப்போ எனக்கு புடிச்சத சாப்பிடலாமா?” என ராகம் போட்டபடி கண்சிமிட்டவும் அவன் சொன்னதன் பொருள் உணர்ந்தவள், முயன்று வெட்கத்தை மறைத்து தன்னை இயல்பாக காட்டிக்கொண்டு, “இது ஒன்னும் உங்க கார் இல்லை” என்றாள் பொய்யான கோபத்துடன்.

தன்னவளின் முக சிவப்பை வியப்புடன் ரசித்தவன் அவளை தன் விழிகளினாலே விழுங்கியபடி,

“அதனால் என்ன? எனக்கு பிரச்சனை இல்லை.” என்றான் மிக இயல்பாக.

“கடவுளே!” மேகாவால் ஒருவார்த்தை பேச முடியவில்லை. இதயம் வேறு தடதடக்க

முதலில் அதிர்ச்சியில் கண்களை விரித்தவள் பின்பு வெட்கத்தில் தன் இதழை கடித்தபடி லைட்டிங் எல்லாம் நல்லா இருக்குல்ல முடிந்தளவு தீரனின் பார்வையை தவிர்த்தபடி ஏதேதோ உளறினாள் . கண்கள் படபடப்பில் நிற்காமல் சுழன்றது.

மனைவியின் பரிதவிப்பை கண்குளிர ரசித்தவன்,

 “என்ன ஆச்சு?” மெல்ல காதோரம் கேட்டான்.

“ஹாங் நத்திங்.”

“நத்திங்… அப்போ உனக்கு ஓகேவா” கண்களில் குறும்புடன் கேட்டான்.

“அச்சோ தீரன் நோ…”

 “யஸ்” என்று அவளை அவன் நெருங்கவும் அதிர்ந்தே விட்டாள். அவனோ புன்னகையுடன் மனைவியின் கையில் இருந்த கிளாஸை வாங்கி டேபிளில் வைத்தவன் , தங்களை மகிழ்ச்சியுடன் பார்த்து கொண்டிருந்த அஷோக்கை ஒருகணம் பார்த்து கண்ணசைத்துவிட்டு மேகாவின் பதற்றத்தை ரசித்தப்படி மேகாவை மேடைக்கு அருகே அழைத்து சென்றவன் ,காதில் குலைந்த மெல்லிசையை உள்வாங்கியபடி மனைவியுடன் நடனம் ஆடினான். இதை அக்னியிடம் இருந்து கொஞ்சமும் எதிர்பார்க்காத மேகா அதிர்ச்சியோடு அவனை பார்க்க,

அவனோ ‘என்ன’ என தன் புருவம் உயர்த்தினான்.

“டான்ஸ் எல்லாம் ஆடுறீங்க அப்போ நீங்க டான்ஸ் பத்தி தான் பேசுனீங்களா?”விழிகளை அகல விரித்து கேட்டாள் .

“இந்த ம்யுசிக்கு என் மனைவிகூட டான்ஸ் ஆடணும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை” என்றவன் கண்கள் மகிழ்ச்சியில் கூத்தாடியது .

“ஓ ஆனா எனக்கு ஆட தெரியாது” ரகசியமாக மூக்கை சுருக்கி களுக்கென்று சிரித்தாள்.

” எனக்கும் தான்” அதே ரகசிய குரலில் அவளது நெற்றி முட்டி தன் பற்கள் தெரிய சிரித்தான்.

“எல்லாரும் சிரிக்க போறாங்க”என்ற மனைவியை கண்களால் பருகியபடி உடலை மெலிதாய் அசைக்க ,அவளும் அவனுடன் இணைந்து கொண்டாள்.

“ஆமா நீ என்ன நினைசீங்க?” என்றவன் எதை கேட்கிறான் என்பதை புரிந்து கொண்டவளின் முகம் சட்டென்று சிவந்துவிட ,

” ஒண்ணும் இல்லையே” என சமாளித்த மனைவியின் காதில் ஏதோ சொல்லி “கள்ளி” என தீரன் கண்ணடிக்கவும் அவன் கேலியை உணர்ந்தவள் , அவனை முறைக்க முயன்று தோற்று போய் அவன் கண்களை காண முடியாமல் முகத்தை தாழ்த்தி கொண்டாள்.

இதை அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த நேத்ராவோ எரிச்சலை அடக்கிக்கொண்டு ஒட்டவைத்த போலி புன்னகையுடன் நின்றிருக்க, அலைபேசியில் இஷிதாவிடம் இருந்து இதய வடிவு கொண்ட செய்தி வர, நேத்ராவிடம் இதோ வந்துவிடுவதாக சொல்லிவிட்டு சென்ற அஷோக்,

“என்ன ஃபோட்டோ பார்த்தியா இப்போவாது உன் ஃப்ரண்ட் ஹாப்பியா இருக்கான்னு நம்புறியா.” என்றான் அஷோக் இஷிதாவிடம் .

“ம்ம் ரெண்டு பேரும் அவ்வளவு அழகா இருக்காங்க, ரொம்ப சந்தோஷமா இருக்கு.” உண்மையான மகிழ்ச்சியுடன் கூறினாள் இஷிதா.

“சரி எப்போ ஊருக்கு வர?”

“வேலை முடிஞ்சா ஒன் வீக் முன்னாடியே வந்துருவேன்.”

“ம்ம் சரி பார்த்து பத்திரமா வா எதுவா இருந்தாலும் கால் பண்ணுடி.”

“ம்ம்”

“அஷோக்”

“சொல்லுடி”

“தேங்க் யு டா மேகா வாழ்க்கை எப்படி இருக்குமோன்னு கவலையா இருந்தேன் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.” உணர்வு பொங்க கூறினாள்.

“ம்ம் வெறும் தேங்க்ஸ் மட்டும் தானா…” என அஷோக் கூறும் முன்பே அவனது அலைபேசி அவனவள் கொடுத்த முத்தத்தை திருடி கொண்டு வெறும் சத்தத்தை மட்டும் கொடுக்க அதை கண்களை மூடி ரசித்தான்.

மெளனமாக இசைக்கேற்ப நடனமாடி கொண்டிருந்தாள் மேகா. அருகில் அவளது இடையை வளைத்து பிடித்தபடி தீரன்.

மங்கலான வெளிச்சத்தில் மிளிரும் விளக்குகள்! மனதை திருடும் மெல்லிசை! அருகில் அவளவன்! என்ன ஒரு ஏகாந்த தருணம் ஆனால் மேகாவின் இதயத்திற்குள் ஏதோ ஒரு சொல்ல முடியாத அச்சம்! இது தான் அது என்று உடைத்து மேகாவுக்கு சொல்ல தெரியவில்லை. ஆனால் அது கிரணை கண்டத்தில் இருந்து அவளது மனதை போட்டு அழுத்தி கொண்டிருக்கிறது . கண்கள் ஆங்காங்கே அச்சத்தில் அலைபாய, அவளது ஐந்து விரல்களுடன் தனது விரல்களை ஆழ கோர்த்து கொண்ட தீரன் மறுகரத்தால் தன்னவளின் இடையை தன்னை நோக்கி நெருக்கி கொள்ள, கணவனின் அதிரடியில் அதிர்ந்து அவனது விழிகளை பார்த்தவள் பார்த்து கொண்ட இருக்க, மெல்ல மெல்ல இடைவெளி இல்லாமல் தன்னவளை இன்னும் நெருங்க அவன் அணைக்கவும் அவளது கரங்கள் தன்னிச்சையாக மேலெழுந்து அவன் தோளை பற்றி கொள்ள.

தன்னவளின் விழியை பார்த்தபடியே நடனமாடியவன் மேகாவின் பார்வை மாற்றத்தையும் பதற்றத்தையும் உள்வாங்கி கொண்டு,

“என்னாச்சு?” என கேட்க. மேகாவுக்கு பதற்றம் தான் வந்தது. கிரண் பாஸ்கரின் பார்வையை தீரன் வேண்டுமானால் கண்டுகொள்ளாமல் ஒதுக்கியிருக்கலாம் ஆனால் அவனது பார்வையை கண்டது முதல் மேகாவின் இதயத்திற்குள் பயம் காரிருள் போல சூழ்ந்துகொண்டது.

‘ஏன் அந்த பார்வை? அது என்ன வகையான பார்வை?’ என்று மேகவால் அதை வகைப்படுத்த முடியவில்லை, என்றாலும் அதில் இருந்த ஏதோ ஒன்று அவள் மனதை நெருடியது.

இவனிடம் கேட்போமா வேண்டாமா என மிகவும் குழம்பினாள். விடாமல் புன்னகைக்கிறான் பிடித்த வரிகள் வரும்பொழுது பாடல் வரிகளை முணுமுணுக்கிறான் தன்னுடன் மகிழ்ச்சியுடன் நடனம் ஆடுகிறான். ஆக தீரன் இத்தனை மகிழ்ச்சியாக இருந்து இன்று தான் பார்க்கிறாள். இந்த நேரத்தில் கிரனை பற்றி கேட்க வேண்டுமா என்று இவள் எண்ணினாலும் அவனது பார்வையை மேகாவால் எளிதாக ஒதுக்க முடியாமல் இருக்க,

“ஒன்னு கேட்கட்டா?” கணவனின் விழி பார்த்து தயங்கியபடி கேட்டாள்.

“ஒன்னு என்ன நூறுக்கு மேல கேளு பேபி” என்றவன்.

“கன்னத்துலையா…? உதட்லையா…?” என கேட்டு கண்ணடிக்க.

“நான் எதுவுமே கேட்கல.” என சிணுங்கியவளை பார்த்து அட்டகாசமாக சிரித்தவன்,

“கேளு பேபி, என்னாச்சு?” என்றான் உற்சாகமாக,

“அது தீரன் அவர் வந்ததும் உங்க முகமே மாறிடுச்சு அப்படி என்ன அவர் மேல உங்களுக்கு கோபம்?” சிறு தயக்கத்துடன் வினவியவள் தங்களை விடாமல் துரத்தும் கிரணின் பார்வையை பற்றி மட்டும் மறைத்துவிட்டாள். இந்த கேள்வியை எதிர்பார்த்திருந்த தீரனோ ஆழ்ந்த மூச்செடுத்து,

“தெரியல வரு முதல்ல இருந்தே ஒத்து போகல. அவன் பேச்சு இப்போ வேண்டாம் தேவை இல்லாம டென்ஷன் தான் வரும். நீ கவலை படுற அளவுக்கு அவன் வொர்த் இல்லை. வெத்துவேட்டு. உன்கிட்ட இனிமே பேச மாட்டான், இன்கேஸ் பேச ட்ரை பண்ணினா இன்னைக்கு மாதிரியே அவாய்ட் பண்ணிரு உடனே என்கிட்ட மறைக்காம சொல்லிரு.” என்றான் தீர்க்கமாக.

“கண்டிப்பா நீங்க கவலை படாதீங்க நான் கவனமா இருக்கேன்.” என்ற மேகாவுக்கு இதோ இப்பொழுது கூட இமை தட்டாமல் தங்களையே பார்த்து கொண்டிருக்கும் அவனது பார்வையை ஏனோ சட்டென்று கடந்து விட முடியவில்லை. இருந்தும் தன்னவனுடனான இந்த மகிழ்ச்சியான தருணத்தை இழக்க விரும்பாத மேகா மகிழ்ச்சியுடன் தன்னவனுடன் இழைந்துகொள்ள, சில நொடிகள் நீடித்த அவர்களின் நடனம் இசை முடியவும் அனைவரின் கைத்தட்டலில் தடைபட மெல்லிய புன்னகையுடன் மனைவியின் கரம் கோர்த்தபடி அஷோக்கின் கேலி பார்வையை பார்த்தபடி தங்களின் டேபிளுக்கு வந்தவனது,

சந்தோஷ புன்னகை எல்லாம் நக்கல் சிரிப்புடன் தங்களை நோக்கி வந்த கிரண் பாஸ்கரையும், அவனுடன் வந்த ரிதுராஜை கண்டதும் காணாமல் போக, மேகாவுக்கோ ரிதுராஜை பார்த்ததும் சர்வமும் ஒடுங்கிவிட்டது. அவள் விழிகள் தன்னை அணைத்தபடி நின்றிருந்த தன் கணவனை ஏறிட்டு பார்க்கவே அஞ்சியது.

மேகாவை பொறுத்தவரை ரிதுராஜின் வருகையெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது ஆனால் தீரன், அவன் என்ன நினைக்கிறான் என்பது தான் அவளுக்கு மிகவும் முக்கியம். என்ன தான் தீரன் அவளை தீவிரமாக காதலித்தாலும் அவளுக்காக அனைத்தையும் செய்தாலும் ரிதுராஜ் என்று வரும்பொழுது அவனது அவதாரம் எப்படி இருக்கும் என்று அறிந்திருந்த மேகாவால் பயப்படாமல் இருக்க முடியவில்லை.

ஒருவித பதற்றத்துடன் நிமிர்ந்து தீரனின் முகத்தை பார்த்தாள். இயல்பாக கையில் இருந்த கூல்ட்ரின்க்சை பருகி கொண்டிருந்தான். தீரனை நன்கு புரிந்து வைத்திருந்த மேகாவுக்கு தீரனின் இந்த அமைதி கலக்கத்தை கொடுக்க. மீண்டும் தன் கணவனை பார்த்தாள், உதட்டில் ஒட்டவைத்த புன்னகையுடன் இயல்பாக தான் இருந்தான். ஆனால், அவனது அந்த விழிகள் காட்டிக்கொடுத்துவிட்டதே! நிலைகுத்தியிருந்த அந்த கருத்த விழிகளும் அவை சிந்திய உயிரோட்டம் இல்லா பார்வையையும் கூர்மையாக அவதானித்தவள், தன்னவனின் கோபத்தின் அளவை அவனது உடல் மொழியிலே கணித்துவிட அவளது கரங்கள் தானாக நடுங்க, இதயம் தொண்டையில் வந்து துடித்தது போல தொண்டைக்குள் ஏதோ ஒன்று பயங்கரமாக அழுத்தியது.

ரிதுராஜ் வருவது தெரிந்து தான் நான் அடம் பிடித்து வந்திருக்கிறேன் என அவர் எண்ணிக்கொண்டால்? அச்சோ என்ன செய்வது? என்று எண்ணும் பொழுதே பெண்ணவள் துடித்து போனாள்.

அவ்வாறு ஏதும் இல்லை என்று அவனிடம் சொல்ல வேண்டும் என அவள் இதயம் தாறுமாறாய் அடித்து கொள்ள. தீரன் வேண்டாம் என்று தடுத்தும் தான் அடம்பிடித்து வந்ததை எண்ணி தன்னை தானே நொந்து கொண்டாள் மேகா.

அஷோக்கிற்கு கூட ரிதுராஜை அங்கே அதுவும் கிரணுடன் பார்த்ததில் அதிர்ச்சி தான் அவனது பார்வையும் தீரன் மீது தான் படிந்திருந்தது. ஆனால், அவன் முகபாவத்தை வைத்து அஷோகால் எதுவுமே கணிக்க முடியவில்லை, என்பதால் எதுவாக இருந்தாலும் வீட்டில் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று அமைதியாக நின்றிருந்தான்.

தொடரும்

இனி
கார் பார்க்கிங்கை நோக்கி வேகமாக நடக்கும் தீரனின் பின்னாலே சென்ற கிரண் அவன் முன்னால் வந்து வழிமறித்து நின்று ,

” பார்ட்டி இன்னும் முடியல தீரன் அதுக்குள்ள கிளம்பினா எப்படி ? ” என நக்கலாக கேட்டு சிரிக்க ,அவனை எரித்துவிடுவது போல பார்த்த தீரன் மேகாவை காரில் ஏறுமாறு கூறியவன் ,கிரணிடம் திரும்பி ,

“என்னடா பைத்தியமா நீ ? பின்னாடியே வர ” என தன் நாடியை தேய்த்தபடி புருவம் உயர்த்தி கேட்க , தீரனை வஞ்சனையோடு பார்த்த கிரண் அவன் காதில் ஏதோ கூற ,

அடுத்தக்கனமே தீரனின் முகம் அதிர்ச்சியில் கருத்துவிட, அவன் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பிக்க ,கிரணை தன் விழிகள் வெளியே தெரித்துவிடும் அளவுக்கு பார்த்தவன் உடல் வியர்வையில் குளித்துவிட தீரனின் தடுமாற்றத்தை திருப்தியாக பார்த்த கிரண் தீரனிடம் ,

” பார்த்து தீரன் வரலாறு மறுபடியும் நடந்திற போது , கொஞ்சம் கவனமா இரு ” என்றவன்,

” சும்மா சொல்ல கூடாது உன் பொண்டாட்டி அழகா தான் இருக்கா , அஷோக் வேற உன்னை விட இளமையா ஹண்ட்சம்மா இருக்கான் ” என்று சொல்லி முடிக்கவில்லை ,

” ஷட் அப் ” என வான்பிளாக கத்திய தீரன் கிரணின் தடையை அடித்து நொறுக்கியிருந்தான் . நொடி பொழுதில் நடந்தேறிய இந்த தள்ளுமுள்ளில் அதிர்ச்சியில் மேகா கத்த , அதற்குள் ஒரு கூட்டமே அங்கே கூடிவிட்டது .