MIRUTHNAIN KAVITHAI IVAL 48

cover page-75267ad1

மிருதனின் கவிதை இவள் 48

நேற்று,

“பீ ரெடி கிரண் இட்ஸ் டைம் டூ பே பேக்”கும்மிருட்டை கிழித்து கொண்டு பாயும் உழி ஒளி போல, தனக்கு மரண பயத்தை காட்டிவிட்டு அந்த நேரம் வியாபித்திருந்த அமைதியை கிழித்தெறிந்த தீரனின் குரலை கேட்கும் பொழுது கிரணுக்கு அவனையும் அறியாமல் அவனுள் சிறு நடுக்கம் பிறக்க தான் செய்தது, ஆனாலும் அதை வெளிகாட்டிக்கொள்ளாமல்,

‘காத்துகிட்டு இருக்கேன் உன்னால என்ன பண்ண முடியும்ன்னு தெரிஞ்சிக்க’ என்று தன் மனதிற்குள் எண்ணிக்கொண்ட கிரணின் இதழ்கள் இகழ்ச்சியாக விரிந்து கொள்ள, அவன் விழிகளில் வஞ்சனை வஞ்சகம் இல்லாமல் சிந்தியது.

எப்படியும் நடந்த சம்பவத்திற்கு பின்புலம் நான் தான் என்பதை தீரன் நிச்சயம் கண்டுகொள்வான், அது தெரிய வந்த மறுகணம் எதிர் வினை நிச்சயம் மோசமாக இருக்கும், அதுவும் அறிந்தது தான்.

தாரிகாவுக்காக கொலை செய்யும் அளவுக்கு போக மாட்டான் ஆனால் ஆட்களை வைத்து நிச்சயம் அதை விட கொடூரமாக தாக்குதல் நடத்துவான், நிதானம் அற்ற முரடனின் புத்தி இதை தவிர வேறு என்ன யோசித்துவிட போகிறது என்று இறுமாப்புடன் தன் காவலை மட்டும் பலப்படுத்திக்கொண்ட கிரண், தீரனை அடுத்து என்ன செய்யலாம்? அவன் எழுந்துகொள்ளவே முடியாத அளவுக்கு எப்படி அவனை தாக்கலாம் என்னும் யோசனையில் இறங்கிவிட்டான்.

தீரனும் விடவில்லை தாக்கினான் மிகவும் பயங்கரமாக தாக்கினான். ஆனால் சத்தமின்றி ரத்தமின்றி கிரண் எழவே முடியாதபடி அவன் எதிர்பார்த்ததை விட அதிகமான அடியை கொடுத்து அவனை நகர முடியாது தலையில் அடித்து ஒரு இடத்தில் முடக்கிவிட்டவனை எண்ணி எண்ணி கிரணின் மனதிற்குள் ஆத்திரம் கனன்று கொண்டு வந்தது.
தாரிக்காவிற்கு கூட தெரியாத விடயம் ஏன் தனக்கு நெருக்கமான விசுவாசிகள் மட்டுமே அறிந்த விடயம் தீரனுக்கு எப்படி? என்னும் கேள்வியே கிரணை குடைந்தெடுத்தது.

!!!!!!!!

விடியற்காலையில் தீரன் எழுந்ததே நாற்காட்டிக்ஸ் அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த ரகசிய தகவல் மூலமாக செக் போஸ்டில் நடத்திய திடீர் சோதனையில் தொழிலதிபர் கிரண் பாஸ்கரின் கம்பெனி ட்ரக்கில் இருந்து பல கோடி மதிப்புள்ள போதை பொருட்களை கண்டுபிடித்து, விசாரணைக்காக அவரை அதிகாரிகள் கஸ்டடி எடுத்துள்ளார்கள் என்ற செய்தியில் தான்.

ஆரம்ப முதலே தீரனுக்கு கிரணின் தொழில் விடயத்தில் சில சந்தேகங்கள் இருந்து தான் வந்தது இருந்தும் அதை பெரிதாக தீரன் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் எப்பொழுது கிரண் ஆள்வைத்து தன் கம்பெனி டேட்டாவை திருடி தனக்கு வர வேண்டிய கான்டராக்ட்டை தட்டிப்பறித்து தங்கள் மீது அன்று இரவு துப்பாக்கிச் சூடு நடத்தினானோ அன்றே கிரணுக்கு எதிராக களமிறங்கிய தீரன் கிரணுக்கே தெரியாமல் அவனுடனே இருந்து கண்காணிக்க இன்பார்மறை ஏற்பாடு செய்திருந்தான் இது அசோக் ரிஷி உட்பட யாருக்கும் தெரியாது.

கிட்டத்தட்ட மாத கணக்கில் கிரணுடன் நெருங்கி பழகி அவன் நம்பிக்கையை சம்பாதிப்பது என்பது சுலபம் அல்லவே, ஆரம்பத்தில் தீரன் எதிர்பார்த்தது போல கிரணுக்கு எதிராக எந்த செய்தியும் கிடைக்கவில்லை . அப்படியான நேரத்தில் தான் கிரண் அன்று பார்ட்டியில் மேகாவை தவறாக பேசி மேலும் நேத்ரா மூலமாக மேகாவை மீடியாவில் தவறாக விமர்சிக்க,  கிரண் மீது கடுங்கோபத்தில் இருந்த தீரனுக்கு நேற்று அவனது இன்பார்மரிடம் இருந்து கிரணின் போதை மருந்து கடத்தும் தொழில் பற்றிய செய்தி வந்தது.

தீரன் இதை கேட்டதும் சற்று அதிர்ந்தே விட்டான். இதை தீரன் கிரணிடம் இருந்து எதிரிபார்க்கவே இல்லை. ஏதோ தவறு இருக்கிறது என்பது தெரியும் ஆனால் போதை மருதெல்லாம் தீரன் கனவிலும் நினைக்கவில்லை.

இந்த ஒரு செய்தி போதும் கிரணுக்கு எதிராக செயல்பட ஆனாலும் தாரிக்காவை மட்டுமே கருத்தில் கொண்டு கிரணின் உள் நோக்கம் தெரியாமல் எதுவும் செய்ய வேண்டாம் என்கிற முடிவுடன் அமைதியாகி கிரணின் கடந்தகாலத்தை துப்பு துலக்குமாறு தன் இன்பார்மரிடம் கூறியவன் உடனே கிரணின் தொழில் பற்றி ஆதாரத்துடன் தாரிக்காவிடம் பேச வேண்டும் என்று மட்டும் எண்ணியிருந்தான்.

அந்நேரம் அசோக் நேத்ராவை வெளியே அனுப்பியதும் கோபம் கொண்டவன் அவளை அழைத்து வர அங்கு செல்ல, நேத்ரா வர மறுக்கவும் தீரன் மேலும் ஆத்திரம் அடைய அப்பொழுது பார்த்து கிரண் மீண்டும் தன்னவளை இழிவாக பேசவும், பொறுத்து கொள்ள முடியாத தீரன் அதன் பிறகு எதை பற்றியும் சிந்திக்க வில்லை நடப்பது நடக்கட்டும் என்று துணிந்தவன் தனது செல்வாக்கின் மூலமாக தனது தொழில் வட்டத்தில் இருக்கும் ஒரு சில அரசியல்வாதிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் மூலமாக செயலில் இறங்கிவிட்டான்.

!!!!!!!!!!!!!

நாற்காட்டிக்ஸ்(ட்ரக்ஸ்) கண்ட்ரோல் பியூரு, டெல்லி ஹெட்குவாட்டர்ஸ் விசாரணை அறைக்கு கிரண் பிரஸ் ரிப்போர்ட்டர்களின் கிளிக் கிளிக் சத்தத்திற்கு நடுவே போட்டிருந்த இரவு உடையுடன் அழைத்து வர பட்டு நான்கு மணி நேரம் ஆகின்றது.

இரெண்டு சீருடை அணிந்த அதிகாரிகள் காவலுக்கு இருக்க அழுத்தமான முகத்துடன் கிரண் பாஸ்கர் அமர்ந்திருக்க விசாரணை செய்ய இதுவரை ஒரு அதிகாரிகளும் வர வில்லை.

கிரணை அவனது வைக்கிலிடம் கூட அதிகாரிகள் பேச அனுமதிக்கவில்லை. கிட்டத்தட்ட கைதி போல அமர்ந்திருந்தான். தீரனிடம் இருந்து வந்த இந்த எதிர்பாராத தாக்குதலில் நிலைகுலைந்து பல்லை கடித்தபடி அமர்ந்திருந்த கிரணுக்கு, கனல் மீது அமர்ந்திருப்பது போல அவன் உடெல்லாம் தகித்தது. இன்னும் இரெண்டு மணிநேரம் கிரணை காக்க வைத்து விட்டு நிதானமாக வந்தார் அடர் நீல உடை அணிந்திருந்த ஒரு ஆபிசர்.

!!!!!!!!!!!

தீரனின் முகம் இறுகி போய் இருந்தது. கிரணின் இந்த நிலைமைக்கு காரணம் இவன் தான் ஆனால் அவனால் மகிழ முடியவில்லை. அதற்கு ஒரே காரணம் தாரிக்கா. ஆனால் அவனால் தான் என்ன செய்ய முடியும்? கட்டிய மனைவியை என்று வரும் பொழுது எந்த ஆண்மகன் தான் பொறுத்து போவான்? முடிந்தளவு நிதானமாக இருந்து பார்த்தான் முடியவில்லை தன்னால் என்ன முடியும் என்பதை காட்டிவிட்டான். ஆனாலும் தீரனுக்கு கிரணுக்கு எதிராக முழு ஆதாரம் இன்னும் கிடைக்க வில்லை, கிரண் தன்னை அடித்ததிற்கு பதிலடி மட்டும் தான் கொடுத்துள்ளான்.

தன்னிடம் இருக்கும் ஆதாரங்களை வைத்து தீரன் கொஞ்சம் முயற்சித்தால் கிரணை சாய்க்க முடியும், ஆனால் கிரண் யார்? அவனது வன்மத்துக்கான காரணம் என்ன? என்று முழுவதும் தெரியாமல் அவசரப்பட கூடாது என்று முடிவெடுத்த தீரனின் எண்ணம் முழுவதிலும் இப்பொழுது வியாபித்திருப்பது தனக்கு தெரியாமலே வேர்விட்டு தன் கழுத்தை நெறிக்க காத்திருக்கும் கிரணின் பிரச்சனையை ஒன்று சரி செய்ய வேண்டும் இல்லையென்றால் வேரறுக்க வேண்டும் என்பது தான். இனி ஒரு பிரச்சனை அவனால் வருவதற்குள் அனைத்தையும் சீராக்க வேண்டும், அதுவும் இப்பொழுது தந்தை என்னும் கூடுதல் பொறுப்பில் இருப்பவனுக்கு தன்னால் யாரும் காயப்பட்டுவிட கூடாது என்னும் பயம் அதிகமாகவே இருக்க அவனால் அதன் பின் உறங்க முடியவில்லை.

!!!!!!!!!!!

“DL 2C K8169 உங்க ட்ரக் தானே ” அதிகாரி ஒருவர் சூழல் நாற்காலியில் அமர்ந்தபடி கிரணிடம் கேள்வி கேட்க,

“என்ன கேட்கணுமோ என் லாயர் கிட்ட கேட்டுக்கோங்க என் லாயர் வராமல் நான் எதுவும் பேச மாட்டேன், என் பெயர் கெட்டு போகணும்ன்னு எனக்கு வேண்டாதவங்க எனக்கு எதிரா செஞ்ச சதி இது, அதை ஏன் புரிஞ்சிக்க  மாட்டிக்கிறீங்க, சமுதாயத்துல எனக்கு இருக்கிற அந்தஸ்து புரியாம என்னை இங்க உட்கார வச்சிருக்கீங்க “என்று கிரண் கிட்டத்தட்ட எகிறும் குரலில் தன் முகம் சிவக்க பேச,

அதிகாரியோ கிரணுக்கு செய்கை செய்து விட்டு அந்த அறையில் இருந்த காவலர்களை வெளியே அனுப்பி தன் மேஜையில் இருந்த ரெக்கார்டரை அணைத்து வைத்துவிட்டு,

“புரியுது சார் பட் விசாரணை முடிஞ்சு உங்க மேல கிளீயர் ரிப்போர்ட் வரமா என்னால எதுவுமே பண்ண முடியாது மேல் இடத்துல இருந்து பயங்கர ப்ரெஷர்” என்று சொல்ல , அவரை இறுக்கமாக முறைத்தவன் ,

“இதுக்கு தான் என்கிட்ட பெட்டி பெட்டியா வாங்கினியா” என இவன் எகிறவும் அதிகாரியோ,

“சார், வாங்குனதுக்கு மேல நிறையவே பண்ணிட்டேன். ட்ரக்(truck) மேல FIR பண்ணியாச்சு என்னால என்ன செய்ய முடியும்? எனக்கு தெரிஞ்சி இன்பார்மேஷன் உங்க பக்கம் இருந்து தான் வந்திருக்கணும்,  இதுக்கு ஒரேவழி உங்களுக்கு பதிலாக யாரவது அப்ரூவர் ஆகணும், சீக்கிரம் உங்க லாயர் கூட உங்கள மீட் பண்ண வைக்கிறேன் அப்புறம் உங்க போன் உங்களுக்கு கிடைக்கிற மாதிரி பண்றேன், இப்போதைக்கு என்னால இவ்வளவு தான் பண்ண முடியும் சார்” என்று விட்டு அங்கிருந்து சென்றார்.

!!!!!!!!!

தாரிக்கா கணவனின் நிலை கண்டு மிகவும் வருத்தப்பட்டாள். கிரணை அதிகாரிகள் அழைத்து சென்ற நிமிடத்தில் இருந்து இந்த நொடி வரை அவள் உணவோ தண்ணியோ அருந்தவில்லை. நேற்று துவங்கி இன்று வந்த செய்தி உட்பட தொடர் அதிர்ச்சியான சம்பவத்தில் நிலைகுலைந்தவள் பசியை மறந்து கணவனின் நினைவிலே சுற்றி வந்தாள். என்ன செய்வது யாரிடம் பேசுவது என்று அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

கணவன் என்றும் இத்தகைய இழிவான செயலை செய்திருக்க மாட்டான் என முழுவதும் நம்பியவள் இதற்கெல்லாம் காரணம் அக்னி என்று அவன் மீது இன்னும் கோபத்தை வளர்த்துக்கொண்டாள்.இரெண்டு மூன்று முறை கிரணை பார்க்க ஸ்டேஷன் சென்று வந்தாள். ஆனால் அவன் ஒருமுறை கூட அவளை பார்க்காமல் திருப்பி அனுப்பிவிட பெண்ணவளோ மிகவும் மனமுடைந்து போனாள்.

அஷோக் வந்து தன்னை பார்ப்பான் என தாரிக்கா மிகவும் ஏங்கினாள். தவறி கூட அவனிடம் இருந்து அழைப்பு வராததும் விரக்தியடைந்தவளை வலைத்தளங்களிலும் சேனல்களிலும் கிரணை பற்றி வந்த செய்திகளும் மீம்ஸும் மேலும் வருத்தத்தில் ஆழ்த்த, தன்னவனின் நிலையை குறித்த கவலையிலே வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தாள். கிரண் மீது வந்த செய்தி நேத்ராவை கலங்ககடிக்க அவளுக்கும் அடுத்து என்ன செய்வதென்று ஒன்றுமே விளங்கவில்லை. தன் அக்காவின் நிலையை நினைத்து வருந்திய நேத்ராவின் எண்ணம் முழுவதும் தாரிக்காவை சுற்றி தான் இருந்தது.

!!!!!!!!

அதே நேரம் அஷோக் எப்பொழுதும் விட மிகவும் மகிழ்ச்சியாக எதுவுமே நடக்காதது போல அலுவலகம் வீடு என சுற்றி திரிய. தீரனுக்கு தான் மனம் முழுவதும் சுமையாக இருந்தது. கிரணுக்கு எதிராக எடுத்த ஆயுதம் தாரிகாவுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடுமோ என மிகவும் பயந்தான்.

!!!!!!!!!

அந்த அறையில் வீசிய ஏசியின் குளுமை நிறைந்த காற்று கூட அவனுக்குள் இருக்கும் வெம்மையை தணிக்க முடியவில்லை அவனுள் அவ்வளவு அனல் வீசியது. கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களாக அவனுது உடம்பில் உள்ள ஒவ்வொரு அணுவிலும் ஓடிக்கொண்டிருக்கும் இந்த தீயை இந்த காற்றால் அணைத்து விட முடியுமா என்ன?

பிறந்ததில் இருந்து தாய் முகம் கண்டதில்லை தந்தையே உலகம் என்று வாழ்ந்து வந்தவனிடம் திடிரென்று அவரும் இல்லை இனி நீ அநாதை என்றால் எப்படியிருக்கும்? பிறப்பிலே ஒரு கண்ணை இழந்தவனிடம் கொஞ்ச காலங்கள் கழித்து மறுகண்ணையும் புடிங்கி விட்டு உலகத்தை ரசி என்றால் எவ்வளவு கொடுமையாக இருக்கும்? அதை அனுபவித்தவனுக்கே அதன் வலி புரியும்.

இத்தகைய பாதகத்தை தனக்கு செய்தவரை எப்படி மன்னிக்க இயலும், பார்க்கும் பொழுதெல்லாம் வலிக்கிறதே இதயம் துடிக்கிறதே என்ன செய்வது? அப்படியே எப்படி விட முடியும்? தவறு செய்தவன் வெளிச்சத்தில் உலா வர பாதிக்கப்பட்டவன் நான் மட்டும் இருளில் அடைந்து கிடப்பதா முடியாது கண்ணுக்கு கண் பல்லுக்கு பல் பட்டத்தை திரும்பி கொடுக்காமல் எப்படி?

எவ்வளவு கண்ணீர்? எவ்வளவு வேதனை? எத்தனை வருட பழியுணர்ச்சி? சற்றென்று தணிந்து விடுமா என்ன?என்ன நடந்தாலும் விட போவதில்லை அடிபட்ட புலியாக அவன் மனம் உறுமியது.

இத்தனை ஆண்டுகளாக அவன் மனதில் எறிந்த தீயில் எண்ணெய் ஊற்றியது போல இப்பொழுது தீரன் செய்திருக்கும் காரியம் அவனது பழியுணர்ச்சிக்கு தீனி போட்டிருக்க தனக்குள் எரியும் தீயில் தீரனை பஸ்மமாக்கும் வெறியில் அமர்ந்திருந்தான் கிரண்.

அந்த நேரம் பார்த்து அவனிடம் வந்த அவனுக்கு வேண்டப்பட்ட அதிகாரி,

“உங்க இண்டஸ்ட்ரி உங்க வீடு இப்படி நீங்க சம்பந்தப்பட்ட எல்லா இடத்திலும் ரெய்ட்(raid) நடக்க வாய்ப்பு இருக்கு , கவனம் சார் ரெகார்டஸ் அப்புறம் பொருள் ஏதும் மாட்டிக்க கூடாதுன்னு நினைக்கிறாங்க” என்று ‘நினைக்கிறாங்க’ என்னும் சொல்லுக்கு அழுத்தம் கொடுத்து ஒரு சில முக்கிய பிரமுகர்களின் பெயரை குறிப்பிட்டு கூறி கிரணை எச்சரிக்க, கிரணின் மனதிற்குள் சிறிய நடுக்கம்.

பின் நடுக்கம் வராமல் எப்படி? அவன் செய்யும் காரியம் அத்தகையதே போதை வஸ்துக்களை கடத்துவது என்பது லேசான காரியம் அல்லவே இன்னும் தெரியாமல் எத்தனை இழிவான செயலில் ஈடுபட்டிருக்கிறானோ, இதில் மறைமுகமாக எத்தனை பெரிய பெரிய அரசியல்வாதிகள் மற்றும் தாதாக்கள் ஈடுபட்டிருக்கிறார்களோ .

இப்போது பிடிபட்டதிற்கே இவன் தலை உருண்டு கொண்டிருக்கிறது இன்னும் சிக்கினால்? இவனையே இல்லாமல் செய்துவிடுவார்களே.
கிரண் மட்டும் இதில் மாட்டிக்கொண்டான் என்றால் சமுதாயத்தில் நல்ல நல்ல பதவியில் இவனுடன் தொடர்பில் இருக்கும் அனைத்து முன்னாள் மற்றும் இந்நாள்  அரசியல்வாதிகளும் சிக்குவார்கள். ஆக ரெய்டுக்குள் அனைத்தையும் சரி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தான்.

பொருட்களையும் சேதாரம் இல்லாமல் பத்திர படுத்த வேண்டும் அத்தனையும் கோடி மதிப்பை கொண்டது அதே நேரம் அவனும் அதிகாரிகளிடம் சிக்கி விட கூடாது இது எல்லாவற்றிற்கும் மேல் ரெகார்டஸ் . அது மட்டும் சிக்கிக்கொண்டால்? அவ்வளவு தான். ஆக நேரம் கடத்தாமல் துரிதமாக செயல்பட வேண்டும். ஆனால் உள்ளே இருந்து கொண்டு எப்படி? கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்திற்கு மேல் இவனை பிணைக்கைதி போல் அல்லவா வைத்திருக்கிறார்கள். இவனது செல்வாக்கு ஒன்றும் செல்லுபடியாகவில்லையே.
போதாக்குறைக்கு ‘தகவல் உங்கள் பக்கம் இருந்து தான் வெளி வந்திருக்க வேண்டும்’ என்று அந்த அதிகாரி சொன்ன செய்தி வேறு கிரணின் மூளைக்குள் உட்கார்ந்து கொண்டு அவனை வதைத்தது.

என் பக்கம் என்றால் என்னிடம் வேலை பார்த்துக்கொண்டே அந்த தீரனிடம் விசுவாசியாக இருந்திருக்கிறான்?
ஆக கூடவே இருந்து குழி வெட்டிருக்கிறான் யார் அது? யாராக இருந்தாலும் விடமாட்டேன் என்றவனின் மொத்த கோபமும் தீரன் மீது திரும்பியது.
தன் கைமுஷ்டி இறுக விருட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்தவன் தன் பற்கள் நறநறக்க,

“விட மாட்டேன் தீரன் கருவருப்பேன் !”என வேகமூச்சுகள் வெளியேற சிவந்த கண்கள் பளபளக்க கத்திய கிரணின் கண்களில் வெறிபிடித்த மிருகத்தின் சாயல்!

தொடரும்