MIRUTHNAIN KAVITHAI IVAL 43

cover page-24a695e2

மிருதனின் கவிதை இவள் 43

தீரனின் அலுவலகத்தில் உள்ள பிரத்யேக சவுண்ட் ப்ரூஃப் அறையில்,

“அந்த கிரண் ஆயிரம் சொல்லுவான் அதையெல்லாம் செய்வியாடா? ம்ம்ம் செய்வியா?” என ஆக்ரோஷமாக கேட்டுக்கொண்டே தீரன் சூரஜின் மார்பில் தன் பூட்ஸ் காலால் மாறி, மாறி மிதிக்க. சூரஜோ முதல் அடியிலேயே துவண்டு போனான்.

தீரனின் ஆக்ரோஷத்தை கண்ட சூரஜ் இனி எதுவும் செய்ய முடியாது என்கிற நிலையில் அனைத்தையும் கூற, வேகமாக நெருங்கி அவன் சட்டையை பிடித்த தீரன், அதன் பிறகு கொஞ்சமும் யோசிக்காமல் அந்த நியூஸை வெளியிட்ட ரிப்போர்ட்டர் மற்றும் இதற்கெல்லாம் காரணமான சேனலின் உரிமையாளர் சூரஜ் இருவரையும் தன் இடத்திற்கு அழைத்து வந்தவன், தனது ஆட்கள் இருந்தும் தானே சூரஜை வெளுத்து வாங்கினான்.

அதை பார்த்த ரிப்போர்ட்டர் வெற்றி, அடிவாங்கிய தன் கன்னத்தை அழுத்தமாக பற்றிக்கொண்டு உயிர் பிழைத்தால் சரி என்னும் நிலையில் நெஞ்சில் நீர் வற்றி போக ஒருவித நடுக்கத்துடன் அமைதியாக நிற்க,

அந்நேரம் பார்த்து அஷோக்கின் அலைபேசி சிணுங்கியதும் அட்டென்ட் செய்தவன் எதிர் தரப்பில் என்ன சொல்ல பட்டதோ தன் உடல் இறுக அழுத்தமான குரலில் திரும்ப அழைப்பதாக கூறியவன், தீரனின் காதில் ஏதோ கூற தீரனின் கோபம் இன்னும் அதிகமானது அதன் பிரதிபலிப்பு சூரஜின் உடலில் தெளிவாக தெரிய, சூரஜ் எழுந்து உட்காரவே நிச்சயம் ஒரு வாரம் ஆகும்.

இதுவரை தீரனை பற்றி எத்தனையோ கலப்படம் செய்ய பட்ட செய்திகள் வந்திருக்கின்றது. ஆனால், அதையெல்லாம் தூசு போல தட்டிவிட்டு செல்லும் தீரனால் மேகா விடயத்தில் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை. அவ்வளவு ஆத்திரம் வந்தது.

அதனாலே இரக்கமின்றி சூரஜை காயப்படுத்தியவன், ரிப்போர்ட்டர் புறம் திரும்பி அவனது வலது கரத்தை பிடித்து வலிக்க முறுக்கி,

“இனிமே இந்த கை கண்டதையும் எழுதிச்சு உயிர் இருக்கும் கை இருக்காது.” என எச்சரித்தவன் சூரஜை பார்த்து,

“சூரஜ் உன் உயிரை எடுக்க எனக்கு நேரம் ஆகாது, உன் குடும்பத்துக்காக உன் உயிரை பிச்சை போடுறேன் என் கண்ணுல இனிமே பட்டிராத.” என்றபடி அஷோக்குடன் வேகமாக வெளியேறியவன் ஒரு கணம் திரும்பி சூரஜை பார்த்து,

“இனிமே இந்த ஃபீல்டுல நீ இருக்க முடியாது, சீக்கிரமே அவுட் பண்ணி காட்டுறேன்.” என ஒற்றை விரலை நீட்டி அவனை பார்த்து சொல்லிவிட்டு அஷோக்குடன் தன் அறையை நோக்கி நடந்தான்.

தீரன் செய்ய கூடியவன் தான் என்பதை அறிந்த சூரஜ், கிரணின் பேச்சை நம்பி பணத்திற்காக தீரனை பகைத்த தன் குறை மூளையை நினைத்து தன்னை தானே கடிந்து கொண்டவன், தான் வேண்டாம் பிரச்சனை வரும் என்று சொல்லியும் தன்னை இதில் இழுத்துவிட்ட கிரணை நன்கு திட்டி தீர்த்துவிட்டான்.

அதே சமயம் தீரனின் அறையில்,

“கிரணை சும்மா விடகூடாது தீரா அவனை செய்யணும். அவன் இனிமே நம்ம பக்கம் வரவே யோசிக்கணும் அந்தளவுக்கு செய்யணும்.” என்ற அஷோக்கின் குரலில் இருந்த இறுக்கம் அவனது கோபத்தின் அளவை எடுத்துரைக்க,

“ம்ம்.” என்ற தீரன் அஷோக்கின் தோளை ஆதரவாக தட்ட அவனோ,

“இப்போ என்ன பண்றது? நாம அமைதியா இருந்தாலும் ப்ரெஸ் விட மாட்டாங்க, சீக்கிரம் மறுப்பு செய்தி போட சொல்லலாம்.” என்ற அஷோக்கிடம்,

“நோ…” என தீரன் திடமாக மறுக்க, முதலில் புரியாமல் அவனை பார்த்த அஷோக் பின்பு தீரனின் மனநிலையை உணர்ந்து அவனுக்கு யோசிக்க அவகாசம் தேவைப்படும் என எண்ணி,

“சரி பொறுமையா என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம். யு ஸ்டே ஹியர் நீ டென்ஷன் ஆகாத நான் ப்ரெஸை க்ளீயர் பண்றேன்.” என்றான்.

ஏன் என்றால் தீரன் இருக்கும் நிலையில் அவன் இப்பொழுது ப்ரெஸ் முன்னால் சென்றால் நிச்சயம் ஆத்திரத்தில் தீரன் ஏதாவது செய்ய கூடும் என்பதால் அஷோக் இவ்வாறு கூற, ஆனால் தன் இறுக்கமான முகத்தை அழுத்தமாக தேய்த்தபடி அஷோக்கை தன் கரம் உயர்த்தி எதுவும் செய்ய வேண்டாம் என்பது போல தடுத்த தீரன் தன் இருக்கையில் இருந்து எழுந்து நின்றான்.

!!!!!!!!!!

தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செய்தியை பார்த்து நேத்ராவின் கண்கள் அதிர்ச்சியில் விரிந்து கொள்ள, மேகாவுக்கு பேச்சே வரவில்லை.

அவளது ஐம்புலன்கள் மொத்தத்தையும் அவளவன் ஆக்கிரமித்திருக்க அவளது விழிகள் இரண்டும் தொலைக்காட்சியின் திரையில், ரன் ஃபைனான்ஸ் லிமிடெடின் பிரம்மாண்டமான வாசலில் பத்திரிகையாளர்கள் சூழ்ந்திருக்க அவர்களுக்கு நடுவே சற்றும் குறையாத கம்பீரமான தோற்றத்தில் நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையுடன் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து கொண்டிருந்த தன்னவன் மீதே நிலைகுத்தியிருந்தது.

“என் மனைவி யாரு என்னன்னு எனக்கு தெரியும். ஏதோ ஒரு வேலைவெட்டி இல்லாதவன் எதையோ கிறுக்கினத்துக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கும் இல்லை என் மனைவிக்கும் இல்லை.” என வார்த்தைக்கு வார்த்தை அழுத்தம் கொடுத்து ஒரு வித ஆக்ரோஷத்துடனே பேசிக்கொண்டிருந்தான்.

“ஆனா அது வெறும் செய்தி இல்லையே புகைப்பட ஆதாரத்துடன் வெளியிட்டு இருக்காங்களே. உங்க மனைவி மேகவர்ஷினிக்கும் அவங்க கூட ஒன்னா இருந்த அந்த நபருக்கும் நடுவுல…”அவ்வளது தான் அதற்கு மேல் அந்த பத்திரிக்கையாளரால் அடுத்த வார்த்தை பேச முடியவில்லை. அவரது நா மேல்‌ மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொண்டது போல தீரன் பார்த்த தீ பார்வையில் அப்படியே அமைதியாகி விட்டார்.

“ஹேய் மைண்ட் யுவர் வொர்ட்ஸ்! நெவெர் எவர் டேர் டூ டேக் மை வைஃப் நேம் காட் இட். நீ என் மனைவியை பத்தி பேசிட்டு இருக்க, மறந்திராத.” என சுட்டு விரல் நீட்டி எச்சரிக்கை விடுத்த தீரன்,

“என் மனைவியை பத்தி பேசுறதுக்கு இங்க இருக்கிற யாருக்கும் அதிகாரம் கிடையாது. இதை மாதிரி ஆயிரம் செய்தி வந்தாலும் ஐ டோன்ட் கேர். யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய எந்த தேவையும் எங்களுக்கு இல்லை.” என்று தீர்க்கமாக கூற ,அவனிடம் ஒரு பெண் நிருபர்,

“உங்க மனைவிக்கு ஏதாவது சொல்ல விரும்புறீங்களா?” என கேட்க, அவனோ சிறு தலையசைப்புடன் நீண்ட பெருமூச்சுவிட்டு ,

“பேபி நீ இதை பார்த்துட்டு இருக்கன்னு எனக்கு தெரியும். ஆயிரம் பேர் ஆயிரம் பேசுவாங்க அவங்களுக்காக நீ உன் கண்ணீரை வேஸ்ட் பண்ணாத.

உனக்கு உன் ஹஸ்பண்ட் இருக்கான். அவன் உனக்காகவே இருக்கான் .அவன் எதையும் சமாளிப்பான் சோ ஸ்டே ஸ்ட்ராங்.

சீப் பீப்பிள்ஸ் ட்ரிக் காண்ட் பிரேக் அவர் ரிலேஷன்ஷிப் மேகா. பிகாஸ் யுவர் ஹஸ்பண்ட் லவ்ஸ் யு மேகா.” என அக்னி தன் ஆழ்மனதில் இருந்து உணர்வு பொங்க கூற திரையில் தெரிந்த தன்னவனின் பிம்பத்தை வருடிய மேகாவின் விழியோரத்தில் நீர் படலங்கள்.

!!!!!!!!!!!!!!

“சார்… சார்…” என மைக்கை தூக்கி கொண்டு தன் பின்னால் வந்த பத்திரிகையாளர்களை தன் கரம் உயர்த்தி அவர்களின் கேள்விகளையும் அவர்களையும் புறக்கணித்துவிட்டு தன் மேல் கோட்டின் பொத்தானை மாட்டியபடி தீரன் வேக எட்டுகளுடன் அவர்களை கடந்து செல்ல, சுவற்றில் மாட்டியிருந்த நூற்றி நாற்பத்தியாறு இன்ச் ஸ்மார்ட் டீவியின் திரை கிரண் போட்ட திட்டத்தை போல சுக்களாக உடைந்து தரையில் சிதறி கிடக்க, இரையை தவறவிட்ட புலியை போல கிரணின் விழிகள் தரையில் கிடந்த அந்த சிதறல்களை வெறித்திருக்க, சத்தம் கேட்டு வந்த தாரிக்கா கணவனின் அவதாரம் கண்டு திகிலடைந்தவள் முதன் முதலாக அவனை நெருங்க அஞ்சினாள்.

அச்சம் என்பதை தாண்டி ஒருவித பிடித்தமின்மை. அக்னியை பிடிக்காது அதனால், மேகாவையும் அவளுக்கு பிடிக்காது.

அதில் மாற்று கருத்தே கிடையாது. ஆனால், ஒரு பெண்ணாக பொதுவெளியில் மேகாவின் குணத்தை கெடுப்பது போன்று வெளி வந்த செய்தி அவளுக்கு அவ்வளவு உவப்பாக இருக்க வில்லை. மேலும் அதுக்கு காரணமாக தன் கணவன் இருப்பதை அறிந்தவளுக்கு வருத்தமும் அக்னி ஏதும் செய்துவிடுவானோ என்கிற பயமும் தோன்ற கவலையுடன் தன் கணவனை நோக்கினாள்.

!!!!!!!!!!!!!!!!!

மேஜையில் இருக்கும் ஆவி பறக்கும் காஃபியை சுவைத்தபடி அமர்ந்திருந்த தீரனின் மனமோ ரணமாக வலிக்க மனதின் பாரம் அதிகமாக துவங்கியது.

பேசியவர்களின் வாயெல்லாம் அடைத்தாயிற்று காரணமான ஒருவரையும் விட போவதில்லை. அது வினை புரிந்தவர்களுக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால், அதையெல்லாம் தாண்டி இதில் மேகாவின் பிழை தான் என்ன?

ஏன் அவளுக்கு இத்தனை பெரிய தண்டனை? அவள் என் மனைவி என்பதற்காகவா இத்தனை துன்பங்கள்! அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

இது என்ன சாபம் பிடித்த வாழ்க்கை என்று எண்ணாமல் அவனால் இருக்க முடியவில்லை. இன்னும் எவ்வளவு துன்பங்களை நான் கடக்க வேண்டும்? என்னை கட்டியதற்காக என்னவளும் என்னை சார்ந்தவர்களும் இன்னும் எவ்வளவு துன்பங்களை ? தான் சகித்து கொள்ள வேண்டும் என்று சிந்தித்தித்தபடி அமர்த்திருந்தவனுக்கு கிரண் பெரிய சவாலாக இருந்தான்.

நினைத்தால் அவனை அழிக்க தீரனால் முடியும். தீரன் கண்ணசைத்தால் போதும் சத்தம் வராமல் செய்து முடிக்க ஆட்கள் இருக்கின்றனர். பணக்கார வர்க்கத்தில் இது பெரிய விடயம் ஒன்றும் இல்லையே. ஆனால், தாரிக்கா அவள் வாழ்க்கை கேள்வி குறியாகிவிட்டால் என்ன செய்வது? தனக்கென்று புது வாழ்க்கை கொடுத்து மகன் என்ற அந்தஸ்தை கொடுத்த குடும்பத்திற்கு தான் செய்யும் துரோகம் ஆகிவிடுமே என்று எண்ணியவனுக்கு கிரணை எப்படி கையாள்வது? அவனது நோக்கம் என்ன? தன் மீது ஏன் இத்தனை வெறி? என்று அவனை பற்றிய சிந்தனையே தீரனை கரையானை போல அரிக்க தொடங்க,

மேகாவின் முகத்தில் விழிக்க தயங்கியவன் அப்படியே தன் இருக்கரங்களையும் தன் பின்னங்கழுத்தில் கொடுத்தபடி கண்மூடி அமர்ந்திருந்தான்.

!!!!!!!!!!

‘யுவர் ஹஸ்பண்ட் லவ்ஸ் யு மேகா. உன் கணவன் உன்னை காதலிக்கிறான்.’ எவ்வளவு அழகனா வார்த்தைகள்! தீரனின் ஒவ்வொரு வார்த்தைகளும் மேகாவின் அடிபட்ட மனதை அத்தனை இதமாக வருடி கொடுத்தது. மேகாவின் உலகம் சிறியதாக சுருங்கி போக அதில் அவளும் அவளவன் மட்டுமே இருந்தனர்.

அவன் நேற்று வரை பேசிய வார்த்தைகளுக்கும் நடந்து கொண்ட விதத்திற்கும் இந்த செய்தியை கேட்டு நிச்சயம் தன்னை பயங்கரமாக காயப்படுத்துவான். தன்னை நம்ப மாட்டான் என்று எண்ணியிருந்தவளின் எண்ணங்களை எல்லாம் தவிடுபொடியாக்கிவிட்டான் அல்லவா! ‘உன் கணவன் உனக்காக நான் இருக்கிறேன்.’ இதை விட ஒரு பெண்ணிற்கு என்ன வேண்டும்.

கனலையும் ஆக்ரோஷத்தையும் மட்டுமே அதிகம் வெளிப்படுத்திய விழிகளில் கண்ட காதலில் சிலிர்த்து போன மேகாவின் இதயம் சுகமாக படபடத்தது. உடனே தன்னவனை பார்க்க வேண்டுமென பரபரத்த மனதை அடக்க வழி தெரியாது பெண்ணவள் தான் மிகவும் தவித்து போனாள்.

“திவ்யா அவரை பார்க்கணும்டி.” குரல் தழுதழுக்க வடியும் கண்ணீரை துடைத்தபடி மேகா தன் தோழியிடம் கூறினாள்.

ஆனால், திவ்யாவோ மேகாவை பொறுமையாக இருக்கும் படி சொன்னவள் இந்த நேரத்தில் அலைவது உசீதம் அல்ல என எடுத்து கூறி அவளை ஓய்வெடுக்க வலியுறுத்த மேகாவும் வேறுவழி இல்லாது தன்னவனின் வருகைக்காக காத்திருக்க, கொஞ்சம் நேரம் அவள் அருகில் இருந்த திவ்யா பிறகு தனக்கு நேரம் ஆகவும் அவளுக்கு சில அறிவுரைகளை கொடுத்துவிட்டு தன் இல்லத்திற்கு கிளம்பிவிட, மேகாவோ தன்னவனின் வருகைக்காக காத்திருந்தாள்.

தீரன் வழக்கமாக வரும் நேரமும் கடக்க, மேகாவின் மனதை வேதனை வாட்ட துவங்கியது. நேரம் ஆகியும் அவன் இன்னும் வீடு திரும்பாததை எண்ணி வருத்தம் கொண்ட மேகாவின் மனம் வெவ்வேறு சிந்தனைகைகளில் சுழல துவங்கியது.

‘நான் எவ்வளவு வேதனையில் இருப்பேன் என தெரிந்தும் என்னை ஏன் தவிர்க்கிறான்?’ என்று எண்ணியவளை அவன் இப்பொழுது எப்படி பட்ட மனநிலையில் இருப்பான் என்னும் சிந்தனையே சிதைக்க தொடங்க, பெண்ணவளோ பயந்து போனாள்.

‘அப்படியென்றால் அவன் என்னை நம்பவில்லையா? அவன் பேசியதெல்லாம் வெளிஉலகத்திற்காகதானா எனக்காக இல்லையா? கடவுளே இப்பொழுது அவனுக்கு தன்னை எப்படி புரிவைப்பது?’ என்னும் எண்ணமே அவளது வேதனையை அதிகரிக்க செய்ய, வேகமாக துடித்த இதயத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டவளுக்கு இதழ்கள் எல்லாம் வறண்டு போக இப்பொழுதே தன்னவனை பார்க்க வேண்டும் போல இருக்க உடனே அவனுக்கு தொடர்பு கொண்டாள்.

சுவிட்ச் ஆஃப் என்று வர உடனே அசோக்கிற்கு தொடர்பு கொள்ள அழைப்பை ஏற்றவன்,

“சொல்லுமா.” என்று சொல்ல,

அவளோ, “அண்ணா தீரன் இன்னும் வீட்டுக்கு வரல.” என்று சொல்லவும்,

“அவன் ஆபிஸ்ல தான்டா இருக்கான். வீட்டுக்கு வந்திருவான் மேகா நீ வொரி பண்ணிக்காத, நான் கொஞ்சம் வேலையா வெளிய வந்தேன் நீ சாப்பிட்டுட்டு தூங்குடா அவன் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனதும் வந்திருவான்.” என்று சொல்ல சரி என்று அழைப்பை வைத்தவளுக்கு காத்திருக்கும் பொறுமை கொஞ்சமும் இல்லை.

பிரச்சனை எதுவாக இருப்பினும் அவனிடம் பேசி சரி செய்துவிட வேண்டும் என உறுதிக்கொண்டவள் உடனே கார் சாவியை எடுத்தாள்.

பதினைந்து நிமிடத்தில் வரவேண்டிய இடத்திற்கு பத்து நிமிடத்தில் மேகா வந்த பொழுது அவளது உடல் வியர்வையில் குளித்திருக்க, மூச்சு விட கூட சிரமப்பட்டவள் வியர்வை வழிய கலவரப்பட்ட முகத்துடன் தன் கணவன் இருக்கும் அறையை திறந்தபடி அவன் முன்னே வந்து நின்றாள்.

கண்களை மூடியபடி அமர்ந்திருந்த தீரனோ கதுவு திறக்கும் சத்தத்தில் விழி மலர்ந்து பார்த்தவன் தன் எதிரே மூச்சு வாங்க வந்து நிற்கும் தன் மனைவியை பார்த்து,

 “மேகா நீ… என்னாச்சு?” என திகைப்புடன் வினவினான்.

ஆனால், அவளோ தன் நெஞ்சை பிடித்துக்கொண்டு, “தீ..ரன்.” என்றவள் தொப்பென்று தரையில் மடிந்தமர,

இன்னுமே பதறிபோனவன் வேகமாக அவள் அருகில் வந்து அவளை அணைத்து பிடித்துக்கொண்டு சிலைபோல அசையாமல் கண்கள் சொருக மூச்செடுக்க சிரமப்பட்டவாறு தன் கரங்களில் துடித்து கொண்டிருந்தவளை கண்டவனுக்கு ஒன்றுமே ஓடவில்லை.

“மேகா மா என்னை பாருடி ப்ளீஸ் மேகா…” என அவளது கன்னத்தில் மாறி மாறி தட்ட தீரனை கொஞ்சம் நேரம் தவிப்பில் ஆழ்த்திவிட்டு வேகமாக மூச்சை இழுத்து வெளியிட்டபடி தன் இதழ்கள் துடிக்க,

“தீரன்.” என உரத்த குரலில் பெருங்கேவலுடன் கத்திய மேகாவுக்கு அழுகை வெடித்தது.

அழுகையினூடே மூச்சை மேலும் கீழும் இழுத்து விட்டபடி அவனையே பார்த்திருந்த மனைவியின் முதுகை மெதுவாக தட்டிக்கொடுத்தவனின் உடல் தன்னவளின் நிலைகண்டு தானாக நடுங்கியது. உடனே அலைபேசியை எடுத்தவன் மருத்துவருக்கு அழைப்பு விடுக்கப்போக அவன் கரம்பிடித்து தடுத்தவள், ‘வேண்டாம்’ என மறுப்பாக தலையசைத்து,

“ஐயம் ஓகே நவ்” என விசும்பலுடன் கூறிய மேகாவை தன்னோடு இறுக்கமாக அணைத்துக்கொண்டான் அக்னி தீரன்.

மேகாவோ அவன் மார்பில் முகம் புதைத்தபடி கேவி கேவி அழ,

“ஹனி ப்ளீஸ் அழாத இட்ஸ் ஓகே டா மா” என மென்மையாக அவளது குலுங்கும் முதுகை வருடி கொடுத்தவனுக்கு அவளது தேகத்தின் நடுக்கம் அவள் பட்ட துயரத்தையும் அவளது மனப் போராட்டத்தையும் எடுத்து கூற இதற்கு காரணமான அனைவரையும் எண்ணி கோபம் கொண்ட தீரன், தன்னவளின் கண்ணீர் தன் இதயத்தை நனைக்கவும் தன் இறுக்கத்தை தளர்த்தியவன் மறுகணமே துடித்துடித்து அழுதவளை தன் கையில் ஏந்திக்கொண்டு தன் அறையில் இருக்கும் சோஃபாவில் அமரவைத்தவன், அவள் அருந்துவதற்காக தண்ணீர் கொண்டு வர போக,

அவனது கரம் பிடித்து தடுத்த மேகாவோ அவனை அருகே அமருமாறு கண்களால் கெஞ்ச, அவன் அமர்ந்த மறுகணம் அவன் மார்பில் முகம் புதைத்தவள் அப்படியே அவனது கைவளைவில் சுருண்டு கொள்ள. தீரனோ மேகாவின் இந்த நிலை கண்டு பயந்து போனான். இந்த விடயம் இந்தளவுக்கு தன்னவளை பாதிப்படைய செய்விட்டதே என்று எண்ணி வருந்தியவன்,

“மேகா மா.” என்று அழைத்தான்.

“…”

“மேகா ப்ளீஸ் லுக் அட் மீ என்னாச்சு மா?” என்றதும் அவன் மார்பில் நாடி குற்றி அவன் முகத்தை அவள் பார்க்க,

“என்னாச்சு பேபி? யாரும் ஏதும் சொன்னாங்களா?”

“ம்ஹூம்.” என அவள் மறுக்கவும்,

“அப்போ ஏன்டா இப்படி?” என்றவனிடம்,

“நீங்க ஏன் வீட்டுக்கு வரல?” எனக்கேட்க, அவளை ஆழ்ந்து பார்த்தவன் பதில் சொல்லாமல் அப்படியே இருக்க, ஒருவித பதற்றத்துடன் நிமிர்ந்து அமர்ந்து அவன் முகம் பார்த்தவள்,

“நான் அந்த மாதிரி பண்ணலப்பா…” என்று சிறு ஏக்கத்துடன் கண்ணீர் வடிய சொல்லவும் துடித்து போனான் தீரன்.

‘ஆக என்னை எண்ணி தான், நான் என்ன செய்வேன்? நான் நம்புவேனா இல்லையா என்னும் கவலை தான் என்னவளின் இந்த நிலைக்கு காரணமா?’ என்பதை உணர்ந்தவனுக்கு பேச்சே வரவில்லை.

தன்னை நம்பி வந்தவளை எப்படியெல்லாம் துன்பப்படுத்தியிருக்கிறோம் என்று எண்ணியவனுக்கு அந்த கணம் அவனுக்கு தன் மீதே வெறுப்பு வந்தது.

இதுவரை அவளுக்கு கொடுத்த காயத்தை எப்படி சரி செய்வதென்று தெரியாமல் தவித்தவனுக்கு கடந்தகாலத்தை மாற்றி அமைக்கும் சக்தி இல்லை அல்லவா? தன் கரத்தை பிடித்து கொண்டு கதறுபவளின் வலியையும் வேதனையையும் கண்டு வருந்தியவன், அவள் அருகே நெருங்கி அமர்ந்து தன்னவளை தன் மீது போட்டு கொண்டான்.

“மேகா சாரி நான் உன்னை நிறையவே காயப்படுத்தியிருக்கேன். ஐயம் ரியலி சாரி. இந்த கதையில மோசட் இன்னொசென்ட் சோல் நீ தான் மேகா. உனக்கு வலிய மட்டும் தான் கொடுத்திருக்கேன் மேகா. உன்னோட விருப்பம், உன் ஆசைகள், உன் மனசு இப்படி எதுக்குமே நான் முக்கியத்துவம் கொடுத்ததில்லை.” என்றவனுக்கு அடுத்த‌ வார்த்தை பேச முடியவில்லை அவ்வளவு தடுமாறினான். மேகவோ தீரனின் குரலில் இருக்கும் மாற்றத்தை உணர்ந்தவள் உடனே நிமிர்ந்து அவன் முகம் பார்த்து,

“இல்லை தீரன் நீங்களும் நானும் வேற இல்லை. யு ஆர் பார்ட் ஆஃப் மீ, உங்களோட விருப்பம் என்னோட விருப்பம்ன்னு தனியா எதுவும் இல்லை தீரன். நான் அப்படி தான் உங்களை பார்க்கிறேன். எல்லாம் சரியாகிடும் தீரன் எல்லாமே சரி பண்ணிடலாம் பா. நான் இருக்கேன் உங்களுக்கு. எனக்கு நீங்க போதும் தீரன். சீக்கிரமே நம்ம வாழ்க்கை மாறும்.” என்று அவள் சொல்லவும் புன்னகை மலர தன்னவளின் முகம் பார்த்தவன், அவளது நுதலில் இதழ் பதித்து இன்னும் இறுக்கமாக அணைத்து கொள்ள. இருவரும் ஒருவரின் இதயத்துடிப்பை ஒருவர் கேட்டபடி  வெகுநாட்கள் கழித்து நிம்மதியாக துயில் கொண்டனர்.

தொடரும்