MIRUTHNAIN KAVITHAI IVAL 47

cover page-d348d8bc

மிருதனின் கவிதை இவள் 47

காரை அசுர வேகத்தில் கிளப்பிய தீரன் முப்பது நிமிட பயண முடிவில்  தன் அலுவலகத்திற்குள் வந்தவன், நேராக அலுவலகத்தில் தனக்கென்று இருக்கும் பிரத்யேக அறைக்குள் நுழைந்தான்.

ஆத்திரம் கொஞ்சமும் அடங்க வில்லை!

“எவ்வளவு தைரியம் மீண்டும் மீண்டும் மேகாவை ச்ச, தாரிக்கா மட்டும் வரலைன்னா இந்நேரம் செத்திருப்பான் ராஸ்கல்” என்று தன் பற்களை கடித்தவன் தன் மேல் கோட் பாக்கெட்டை துழாவி அதில் இருந்த அந்த காகிதத்தை பிரித்து பார்த்தான். அதில் ஒன்றில் இருந்து இரெண்டு சென்டிமீட்டர் அளவிலான சிறிய பென்ட்ரைவ் இருக்க அதை தன் கரத்தில் எடுத்து கொண்டவன் கடற்கரையில் அந்த ஆடவன் பேசியதை எண்ணி பார்த்தான்.

“ரொம்ப நேரம் என்னால பேச முடியாது சார் . இதுல டீட்டையில்ஸ் இருக்கு” என்றவன் நொடிப்பொழுதில் காகித்தை கசக்கி கீழே போட்டுவிட்டு நிமிடத்தில் அங்கிருந்து சென்ற நிகழ்வு தீரனின் கண் முன் வந்து போக, நேரம் கடத்தாமல் வேகமாக மடிக்கணினியை உயிர்பித்தபடி  தன் மேல் கோட்டை கழட்டி அருகில் வைத்து விட்டு தன் சட்டையின் கையை முழங்கை வரை மடித்து விட்டவன், பென்ட்ரைவை கணினியில் பொருத்தினான்.

நான்கைந்து புகைப்படங்களும் அதை பற்றிய ஆங்கில விளக்கமும் கூடவே சிறிய குறிப்பும் இருந்தது.

புகைப்படங்களை பார்த்ததுமே ஓரளவு கணித்துவிட்ட தீரனின் கணிப்பை அதில் எழுதியிருந்த குறிப்பும் சரி தான் என ஆமோதிக்க தீரனின் கண்கள் அதிர்ச்சி ஆக்ரோஷம் என இருவேறு உணர்வுகளை வெளிப்படுத்தியது.

உடனே அந்த ஆடவனுக்கு தன் அலைபேசியில் இருந்து மெசேஜை தட்டிவிட்டவன்  அவனது பதிலுக்காக தன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி காத்திருந்தான்.

!!!!!!!!!!!

“அது என்ன வார்த்தை கிரண்? எப்படி நீங்க அப்படி சொல்லலாம்? மேகாவை அனுப்பிவைன்னா  என்ன அர்த்தம்?” என தாரிக்கா இறுகிய குரலில் கேட்டாள்.
அவளால் கணவனின் வாயில் இருந்து வந்த இந்த வார்த்தைகளை நம்பவே முடியவில்லை, என்ன பேச்சு இதெல்லாம்? கேட்ட நொடியே அவளது உடல் கூசிவிட்டது ஆனாலும் கிரண்  உயிருக்கு போராடும் பொழுது அவளால் பார்த்துவிட்டு இருக்க முடியவில்லை. தீரனிடம் கெஞ்சி அவனை தப்புவித்துவிட்டாள், இருந்தும் அவன் பேசியதை  அவளால்  எளிதாக கடக்க முடியவில்லை.

கிரண் அவ்வாறு பேசியதால்  தாரிகாவுக்கு   தீரனை திட்ட கூட முடியவில்லை. இதே மற்ற நாளாக இருந்திருந்தால் தன் வீட்டிற்கு வந்து தீரன் தன் கணவனை தாக்கியதற்கு  நான்கு வார்தைகளாவது நறுகென்று கேட்டிருப்பாள். ஆனால் இப்பொழுது முடியாதே, தவறு தன்னவனிடம் அல்லவா இருக்கிறது, மனைவியை இழிவாக பேசினால் எந்த ஆடவன் தான் பொறுமையாக இருப்பான், அதனாலே தீரன் முன்பு அமைதியாக இருந்த தாரிக்கா, தனிமையில் கிரணை ஒருவழி பண்ணிவிட்டாள்.

திருமணம் முடிந்து இருவருக்கும் இடையே வரும் முதல் சண்டை!

தாரிக்காவுக்கு கணவன் மேல் வந்த இரெண்டாவது அதிருப்தி! மேகாவின் புகைப்பட வெளியீட்டு விடயத்தில் அதிருப்தி இருந்தாலும் பொறுமையாக இருந்துவிட்டவளால், கணவன் பேசிய தகாத வார்த்தைகளை காதால் கேட்ட பிறகு பொறுமை காக்க முடியவில்லை.

“அது சும்மா செல்லம் விளையாட்டுக்கு, அவனை வெறுப்பேத்த அப்படி சொன்னேன் ” தன் இதழை வளைத்து புன்னகைத்தபடி அவள் இதழை நெருங்கினான். இவள் விலகினாள் முதன் முதலாக விலகி செல்கிறாள், இவனுக்கு முகத்தில் அடித்தார் போல ஆகிவிட்டது. முகம் கருக்க அமர்ந்திருந்தான் கிரண்.

“உறவு முறைன்னு பார்த்தா கூட அவ உங்களுக்கு தங்கச்சி மாதிரி கிரண். இது விளையாட்டுக்கு பேசுற பேச்சா? அப்படி விளையாட்டாவே இருந்தாலும் ஒரு வரைமுறை வேண்டாமா? எப்படி அப்படி பேசுவீங்க?” தாரிக்காவின் மனம் ஆறவே இல்லை, தன் தந்தையை  எண்ணி பார்த்தாள்.

அதிகம் படிக்காதவர் தான் உடைத்து சொல்ல வேண்டுமானால் வட்டி வியாபாரம் தான் செய்து வந்தார். பலதரப்பட்ட மனிதர்களுடன் தொடர்பு உண்டு, தாதாக்கள் ரௌடிகள் என அனைவருடனும் சவகாசம் உண்டு, ஆனால் ஒரு நாள் கூட இது போன்ற தரக்குறைவான வார்த்தைகளை பேசியதே கிடையாதே, தாயிடம் கூட சத்தமாக பேச மாட்டாரே. வீட்டில் வேலை பார்க்கும் பெண்களை கூட மரியாதையாக தானே நடத்துவார். ஆனால் கிரண் எவ்வளவு படித்திருக்கிறான் இருந்தும் சரளமாக கெட்டவார்த்தைகள் பேசுகிறான், போதாக்குறைக்கு தங்கை ஸ்தானத்தில் இருப்பவளை பார்த்து  ச்ச இது என்ன பண்பில்லாமல்? ஆற்றாமையில் உதட்டை கடித்தபடி அமர்ந்திருந்தவளால் கணவனின் செயலை சகிக்க முடியவில்லை.

“ஏய் அதான் சொல்றேன்ல அவனை பார்த்ததும் கோபம் வந்திருச்சு மா அதான் கண்ட்ரோல் இல்லாம அப்படி பேசிட்டேன் நிஜமா என் மனசில எந்த தப்பான எண்ணமும் இல்லை. அவனை சீண்டி பார்க்க தான் அப்படி விளையாட்டா சொன்னேன் ட்ரஸ்ட் மீ ” குரல் பணிந்திருந்தது.

நிமிர்ந்து கணவனின் முகத்தை ஆராய்ச்சியாக  பார்த்தாள். இது தான் இவன் இயல்பா, இல்லை நிஜமாகவே தெரியாமல் தான் வார்த்தையை விட்டுவிட்டானா என ஒருகணம் அவள் மனம் சிந்தித்தாலும் , அதெப்படி திருமணமான ஒரு ஆணால் மாற்றான் மனைவியை பார்த்து இப்படி பட்ட வார்த்தைகளை பேச முடியும் என்று அவளது மனம் இவ்வாறு யோசித்த மறுகணமே, சற்றும் தயங்காத தாரிக்கா,

“அப்போ அதே விளையாட்டுக்கு  மேகா கிட்ட உன் புருஷனை அனுப்பி வை சமாளிச்சிக்கிறேன்னு நான் மாறி சொல்லவா” என்று சூடான வார்த்தைகளை விட்டுவிட, விளைவு  தாரிக்காவின் வதனம் கிரணின் வலிய கரங்களுக்குள் சிக்கி சிவந்தது.

“ஹவ் டெர் யு? வார்த்தை எல்லையை தாண்டிச்சு கொன்னுருவேன்” ஒரே அடியில் சுருண்டு கட்டிலில் தலை மோத கீழே விழுந்து கிடந்தவள் வதனத்தை தன் விரல்களால் நசுக்கியபடி எச்சரித்தான். இவளுக்கு வலி உயிர் போனது . கணவனின் முதல் அசுர அவதாரம்  இவளுக்கு அடிவயிற்றில் புளியை கரைக்க  இது தன் கணவன் தானா என பெண்ணவலால் எண்ணாமல் இருக்க முடியவில்லை.

” உனக்கு..” என தன் பூட்ஸ் காலை அவளை நோக்கி ஓங்கியபடி அடுத்து ஏதோ பேசவந்தவன் அலைபேசி சிணுங்கவும், ஓங்கிய காலை தரையில் உதைத்துவிட்டு அலைபேசியை எடுத்து கொண்டு தனியே சென்றுவிட அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத தாரிக்கவோ தன் சிவந்த கன்னத்தை பொத்தியபடி தடுமாற்றத்துடன் எழுந்து நிற்க,  சில மணித்துளிகளில் புயலென உள்ளே வந்த கிரண் தன்னையே வெறித்து பார்க்கும் மனைவியின் முகத்தை கூட பார்க்காது உடைமாற்றி கொண்டு வெளியே செல்ல ஆயத்தமாக,

” இந்த நேரத்துல எங்க கிளம்புறீங்க?” இவ்வளவு நடந்திருக்கிறது எதுவுமே நடக்காதது போல உடையை மாற்றிக்கொண்டு வெளியே செல்ல ஆயத்தமாகும் கணவன் மீது கோபம் கொண்டவள் ஆற்றாமையுடன் கேட்க, அவளை ஒரு கணம் பார்த்தவன்,

” மீட்டிங்” என ஒற்றை வரியில் எரிச்சலாக பதிலளித்தான்.

” நைட்லயா” இதுவரை இது போல பல நாட்கள் சென்றிருக்கிறான் ஒருநாளும் கேள்வி கேட்டதில்லை கணவன் மீது அத்தனை நம்பிக்கை ஆனால் இன்று  ஏதோ தவறாக படவும் கேள்வி கேட்டுவிட்டு  கண்களில் நீர் வழிய அவனை பார்த்தாள்.

“ஃபாரீன் கிளையண்ட்” அவள் முகத்தை கூட பார்க்காது பதில் கூறிவிட்டு கிளம்பிவிட்டான்.

அலைபேசியுடன் சென்றவன் மனம் மாறி தன் கன்னம் தாங்கி  மன்னிப்பு வேண்டி தன்னிடம் வருவான் என இவள் எதிர்பார்ப்புடன் காத்திருக்க அவனோ எதுவுமே நடக்காதது போல சென்று விட மனதால் காயப்பட்டாள்.

அவனுடன் பழகிய இத்தனை ஆண்டுகளில் முதல் முறை கை நீட்டியது மட்டுமல்லாது உதாசீனமும் படுத்தினான். நடந்து கொண்டதுக்கு சிறு மன்னிப்பு கூட கேட்கவில்லை.

இன்று தன் கணவனிடம் தெரிந்த பல ‘முதன் முறை’  தாரிக்காவை மிகவும் கலங்கடித்தது.ஆனால் அமைதியாக அமர்ந்திருந்தாள். அவளுக்கே அவனது அவதாரத்தை உள்வாங்க நேரம் எடுக்க கண்களை மூடி அமர்ந்திருந்தவளுக்கு  தாடை பயங்கரமாக வலித்தது.

!!!!!!!!!!!!!

“சரியான தகவல் தானா?” தீரனாலே நம்ப முடியவில்லை. எதிர்முனையில் அழைப்பு ஏற்கப்பட்டதும் இதை தான் கேட்டான்.

“என் கணிப்பு படி தகவல் சரி தான் சார். ஆனா இப்போதைக்கு சாலிட் எவிடென்ஸ் என்கிட்ட இல்லை. ஆனா நான் சொன்னதா இருக்கிறதுக்கான வாய்ப்பு அதிகம் சார்” கழிவறை டேப்பில் இருந்து தண்ணீர் சொட்ட. தண்ணீர் சத்தத்திற்கு இடையே அவனது குரல் மெதுவாக ஒலித்தது.

“ஸ்ட்ராங் எவிடென்ஸ் இல்லாம எப்படி?” தீரன் எரிச்சலுடன் வினவினான், ஆயிரம் இருந்தாலும் தங்கையின் கணவனாயிற்றே வெறும் யூகத்தை மட்டும் வைத்து கொண்டு கிரணுக்கு எதிராக வியூகம் அமைக்க அக்னி தயங்கினான்.

“சார் இப்போதைக்கு சாலிட் எவிடென்ஸ் கலெக்ட் பண்றது கஷ்டம். இங்க ப்ரோடெக்ஷ்ன் ஜாஸ்தியா இருக்கு, கிரணை மீறி எதுவும் பண்ண முடியல, எல்லாரையும் டைவர்ட் பண்ணினா தான் முடியும். எவிடென்ஸ் கலெக்ட் பண்ணத்தான் இந்த பிளான். ரிஸ்க் எடுத்தா தான் அடுத்தகட்டம் என்னால எதுவும் பண்ண முடியும். நீங்க எக்சிக்யூட் பண்ணுங்க பிளான் சக்ஸஸ் ஆச்சுன்னா கிரணை பத்தின எல்லா டீடைல்ஸும் நான் கலெக்ட் பண்ணிடுவேன்”என்று இவன் செல்லும் பொழுதே, வெளியே இருந்து “ஆதில் பாய் பாஸ் வர சொன்னாரு சீக்கிரம்” என்ற முரட்டு குரல் கேட்க,

“இதோ வரேன்” என்றவன்,” ஐ ஹவ் டூ கோ சார்” என்று தீரனிடம் சொல்லி அலைபேசியை அணைத்து விட்டு , அந்த பட்டன் செல்லில் இருந்த சிம்மை உடைத்து தண்ணீரில் போட்டு ஃப்ளஷ்  செய்தவன். மீசையை திருக்கி விட்டபடி இயல்பாக வெளியே வந்தான்.

!!!!!!!!!

கிரணின் ஏளன சிரிப்பும் இழிவான வார்த்தைகளும்  ஒருபக்கம் தீரனை வெறியனாக்க, தாரிக்காவின் கண்ணீர் அவனை மிக மோசமாக பலவீனப்படுத்தியது.

முடிவெடுக்க வேண்டிய தருணமிது ஆனால் தீரன் தடுமாறினான். எல்லாம் தாரிக்காவை எண்ணி தான், ஆனால் என்ன செய்ய? தாரிக்காவுக்காக கிரணை விட்டுவிட்டால்! மேகாவின் நிலை? அவளுக்கு இழைக்கப்பட்ட அநீதி? அதுக்கு என்ன பதில்? இன்று விட்டால் இனி என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஆகிவிடாதா? இது போன்று பல கோணங்களில் அனைவரின் தரப்பிலும் இருந்து சிந்தித்தவன் ஒருகணம் கண்களை மூடி திறந்து நீண்ட பெருமூச்சை வெளியிட்டு ஒருகணவனாக தன் கடமையை செய்ய முடிவெடுத்து , அலைபேசியில் யாரிடமோ தொடர்பு கொண்டு பேசினான்.

தீரன் பேசி முடித்து நாற்காலியில் ஆயாசமாக அமர்ந்த பொழுது மணி பத்தை தாண்டியிருக்க,தன் கரங்களை கழுத்திற்கு கொடுத்து நெட்டி  முறித்தவன்,  வீட்டிற்கு கிளம்ப கார் சாவியை எடுத்து விட்டு லிப்டை நோக்கி நடக்கும் பொழுது தான் அஷோக்கின் அறையில் இருந்து வெளிச்சம் வருவதை கண்டு தன் பெருவிரலால் நெற்றியை தடவியவன், சிறு தயக்கத்துடன் அஷோக்கின் அறை கதவை திறந்தான்.

சுழல் நாற்காலியில் தலை சாய்த்து கண்ணாடி மேசையில் கால்கள் இரண்டையும் தூக்கி நீட்டிய நிலையில் வைத்தபடி அமர்ந்திருந்த அசோக் மித்ரனின்  கண்கள் மூடியிருந்தது. டேபிளில் உணவு பொட்டலம் பிரிக்கப்பட்டு ஸ்பரிசிக்காமல்  இருக்க, அருகே சிறு வாளியில் ஐஸ் கட்டிகளுக்கு நடுவே டக்கீலா வீற்றிருக்க, அவனது வலது  கரத்தில் மதுபானம் நிரம்பிய மதுக்கோப்பை இருந்தது.
சோகமே உருவாக அமர்ந்திருக்கும் அவனை பார்க்க பார்க்க தீரனின் மனதில் கனம் கூடியது.

!!!!!!!!!!

நேரம் கடந்து கிரண் வீடு திரும்பியிருக்க, அவன் வருகைக்காக விழித்தே கிடந்த தாரிக்கா  அவன் தன்னிடம் இப்பொழுதாவது ஏதும் பேசுவான் நடந்து கொண்டதுக்கு மன்னிப்பு கேட்பான் என சிறு எதிர்பார்ப்புடன் காத்திருக்க, அவனோ இலகுவான ஆடைக்கு மாறிவிட்டு அப்படியே வந்து கட்டிலில் படுக்கவும் மிகவும் வருந்தியவள் அவனது முகத்தை பார்த்து,

” ஏன் இவ்வளவு லேட்?” என கேட்க,

“வேலை இருந்துச்சு” என்று பட்டென்று கூறியவன், தான் நடந்து கொண்டதுக்கு சிறு வருத்தம் கூட தெரிவிக்காமல் எதுவுமே நடக்காதது போல தன் மீது குற்றமே இல்லாதது போல் தன் கரங்களை அவள் மீது போட்டு அவளை தன்னோடு அணைத்தவன், தன் தேடலை துவங்க  முதன் முதலில் அவனது தொடுகையிலும் அவனது செயல்பாட்டிலும் ஒருவகையான  மாற்றம் தெரிய வலியில் முகம் சுளித்தவள், அவனை தன்னிடம் இருந்து விலக்கி பார்க்க  அவனது பிடியின் அழுத்தம் கூடியதே தவிர அவன் கொஞ்சமும் அவளை விட்டு விலக வில்லை.

ஒருகட்டத்துக்கு மேல் தாங்க முடியாது அவனது முகத்தை பார்த்தாள், ஏதோ போதையின் பிடியில் இருப்பவன் போல அவனது சிவந்த கண்களில் தெரிந்த வெறி பிடித்த ஓநாயின் சாயல் பெண்ணவளுக்கு பயத்தை கொடுக்க அவனிடம் இருந்து  தீவிரமாக விடுபட முனைத்தவளின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய, மிருகத்தின் வேட்டையின் முடிவில் மனதளவில் மறித்து போன பெண்ணவளோ பிடுங்கி வீசப்பட்ட காய்ந்த கொடி போல கட்டிலின் ஓரம் துவண்டு கிடக்க, இது எதையும் உணராத கிரணோ ஆழ்ந்த நித்திரையில் இருந்தான்.

!!!!!!!!!!!!!!!!

ஒருமணிநேரம்  தீரனும் அஷோக்கும் தனிமையில் வாடை காற்று முகத்தில் பட காரில்  சிட்டியை சுற்றி வந்தனர் . தீரனும் எதுவும் பேசவில்லை  அஷோக்கும்  எதுவும் பேசவில்லை இருவரின் பயணமும்  மெளனமாக கடந்தது. நிமிடங்கள்  கடந்திருக்க, அவர்கள் எப்பொழுதும் செல்லும்  மலை குன்றிருக்கு கீழே கார் நிற்க இவர்கள் மலை  குன்று  ஒன்றின் மேல் ஏறி அமர்ந்து  சிட்டியை வெறித்து பார்த்தபடி அமர்ந்திருந்தனர் .

அந்த நேரத்திலும் வெளிச்ச புள்ளிகளாய் வாகனங்கள் அங்கும் இங்கும்  அலைமோதிக்கொண்டிருந்தது. அவர்கள் பாதுகாப்பிற்கு  இரெண்டு செக்யூரிட்டிகள்  மட்டும் சற்று தள்ளி நின்று கொண்டனர் .

மனதில் முன்பு இருந்த இறுக்கம் இப்பொழுது இல்லை, 

‘போன்னு சொன்னா போய்டுவியா டா’ தன் மனதில் தோன்றியதை கேட்க தீரன் வாயெடுப்பதற்குள்,

“அவ என்ன சொன்னா?” என கேட்டிருந்தான் அஷோக்.

நிமிட மௌனத்திற்கு பின் ,” வரமாட்டேன்னு சொல்லிட்டா” என்ற  அக்னியின் குரலில் சொல்லில் அடங்காத வலி தெரிந்தது .

“ஓ” என உணர்ச்சிகள் துடைக்க பட்ட குரலில் கூறிய அஷோக்,

“அவளுக்கு கொடுக்க  வேண்டியதை கொடுத்து அவ கணக்கை முடிச்சு விட்று அக்னி” என்று சொல்ல , அக்னிக்கு அஷோக்கை என்ன செய்வதென்றே புரியவில்லை,

“நம்ம வீட்டுக்கு பொண்ணுடா, நம்மளை விட்டெல்லாம் இருந்துக்க மாட்டா வந்திருவா” என்ற அக்னியை பார்த்து வெறுமையாக புன்னகைத்த அஷோக்,
” நம்பிகிட்டே இரு” என்றான் விரக்தியாக, அந்த குரலில் அவ்வளவு வலியும் ஏமாற்றமும் இருந்தது.

“ஏன் டா அவ இப்படி செஞ்சா? அதுவும் கிரண் கூட கூட்டு சேர்ந்துட்டு, நீயும் மேகாவும் எப்படியோ, என்னால அவ்வளவு சீக்கிரம் நேத்ரா பண்ணினதை மன்னிக்க முடியாது. நம்பிக்கை துரோகத்தை மட்டும் என்னால தாங்கிக்கவே முடியாது தீரன்” என்ற அஷோக்கின் கண்கள் சட்டென்று கலங்கியது.

“நேத்ராக்கு என்னடா தெரியும் சின்ன பொண்ணு டா, கிரண் தான் அவ மனசை கலைச்சிருப்பான், என்னை பழிவாங்குறதா  நினைச்சுகிட்டு இப்படி பண்ணிட்டா, என்னை என்னவும் பண்ணிருக்கலாம் மேகாவை இதுல இழுத்திருக்க வேண்டாம் ” எவ்வளவு மறைத்தும் நேத்ரா மீது அக்னி கொண்ட ஆதங்கம் வெளியே வந்தது.

“சாரி தீரன் வேற என்ன சொல்றதுன்னு தெரியல” என்ற அஷோக்கின் தோளை ஆதரவாக அக்னி தட்டினான்.

“அப்போ நம்மளை மன்னிச்ச மாதிரி டிராமா பண்ணிருக்கா” என்ற அஷோக்,

” சின்ன பொண்ணுன்னு நினைச்சேன் டா ஆனா அவளுக்குள்ள இவ்வளவு வன்மமா? ஓ மை காட்” கண்களை மூடி பெருமூச்சை இழுத்துவிட்டவனுக்கு தன் தங்கை மீது அத்தனை ஆத்திரம் வந்தது.

“வன்மமெல்லாம் இருக்காது ஏதோ ஒரு கோபம் நம்மளை  புரிஞ்சிக்காம பண்ணிட்டா, நம்மளை  புரியும் பொழுது நம்ம கிட்ட வந்திருவா”

“வந்தாலும் நான் மன்னிக்க மாட்டேன், அவளை மன்னிச்சா என் இன்னொரு தங்கச்சிக்கு நான் செய்யிற துரோகமாகிடும், மேகாக்கு துரோகம் பண்ண எப்படி டா மனசு வந்துச்சு” என்ன முயன்றும் அசோக்கிற்கு நேத்ரா மீது கொண்ட ஆத்திரம் மட்டும் அடங்கவே இல்லை.

“அவ மேல வெறுப்பை வளர்த்துக்காத டா” என்ற அக்னியை அழுத்தமாக பார்த்த அஷோக்  பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, அவனது மனநிலையை உணர்ந்த அக்னி,

“சரி நீ அதுல இருந்து வெளிய வா சீக்கிரம் நேத்ராவை கூட்டிட்டு வந்திடலாம்” என்றான்.

“அந்த கிரண், அவனை விடவே கூடாது அக்னி அவனை ஏதாவது பண்ணனும்” என்று தன் கைமுஷ்டி இறுக அஷோக் கூற,

“அந்த கவலை உனக்கு வேண்டாம், அது என்னுடைய வேலை நான் பார்த்துகிறேன். அவனை யாரும் விட போறதில்லை” என்று தன் கண்கள் சிவக்க கூறிய தீரன்,

“சரி வா வீட்டுக்கு போகலாம், மேகா தனியா இருப்பா” என்று அழைக்க,

“நீ தான் என்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டியே” என்ற அஷோக்கை இறுக்கமாக முறைத்த அக்னி,

“டேய்  அடிவாங்க போற, அதுக்கு தான் ஆபிஸ்லையே மன்னிப்பு கேட்டுட்டேனே, மரியாதையா வா, உங்க எல்லாரையும் கூட வச்சிருக்கிறது பச்சை புள்ளைங்களை வளர்கிறது போல இருக்கு டா” என தீரன் அலுப்புடன் சொல்ல, அவனது சலிப்பான முக பாவனை கண்டு அஷோக் லேசாக புன்னகைக்க,

“அங்க வந்து சிரி, மணி இப்போவே பன்னிரண்டு, அங்க உன் தங்கச்சி நமக்காக டைனிங் டேபிள்ளையே தூங்காம காத்துகிட்டு இருப்பா, இன்னும் சாப்பிட்டிருக்க கூட  மாட்டா மாத்திரை போட அந்த அலப்பறை பண்ணுவா, வர வர பேபி டே கேர் நடத்துற பீல் தான் வருது” என எழுந்து நின்றபடி சொல்லியவன் அஷோக்கையும் எழுப்பி விட அவனோ,

“பிரக்னன்ட்டா  இருக்காள்ல அதான் அப்படி இருக்கா” என்று மேகாவுக்காக பரிந்து பேச, காரின் கதவை திறந்தபடி உள்ளே ஏறின தீரனோ,

“இல்லைன்னா மட்டும், எங்களுக்கு பத்து குழந்தைங்க பிறந்தாலும் இந்த குழந்தை மட்டும் வளரவே வளராது சரியான அடம்” என தீரன் கேலியாக கூறினாலும் அவன் மனதிற்குள் மனைவியை எண்ணி ஒருவித இனிமையான உணர்வு பரவ தான் செய்தது.

!!!!!!!!1

தீரன் அஷோக் இருவரும் வீடு திரும்பிய பொழுது  தீரன்சொன்னது போல மேகா டைனிங் டேபிளில் தலைவைத்தபடி படுத்திருக்க,

“பாரு சொன்னேன்ல” என்று அஷோக்கை பார்த்தபடி கூறிய தீரன் , மெதுவாக மேகாவின் தலையை வருடவும்  சட்டென்று அவள் ஒருவித பதற்றத்துடன் விழிக்க,

“பேபி ரிலாக்ஸ்” என்றவன் மீண்டும் அவளது சிகையை  வருடுவதற்காக தன் கரங்களை உயர்தவும் லேசாக விலகியவள் தீரனின் முகத்தை கூட பார்க்காது அஷோக்கை மட்டும் கட்டாய புன்னகையுடன் எதிர்கொண்டவள்,

“உட்காருங்க அண்ணா சாப்பாடு  எடுத்து வைக்கிறேன்” என்று இவள் நகரவும் அவளை தடுத்த தீரன்,

“என்னாச்சு பேபி? உன் முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு?, நீ உட்காரு நான் எடுத்துட்டு வரேன்” என்று சொல்ல,

“நோ ஐயம் ஓகே” என்றவள் சமயலறைக்குள் நுழைந்து கொள்ள, யோசனையுடன் தன் நாடியை நீவிய தீரனுக்கு மனைவியின் திடீர் விலகல் நெருடலை கொடுத்தது.

அதன் பின்பு சாப்பிட்டு முடித்துவிட்டு தன் அறைக்குள் வந்த தீரன் கண்ணில் பட்டது என்னவோ சுவற்றில் சாய்ந்து நின்று தன்னை வெறிக்க பார்த்து கொண்டிருந்த மேகா தான்.

தன்னவளின் முக மாற்றத்தை உள்வாங்கியபடி அவள் அருகில் இருவரின் மூச்சு காற்றும் மோதிக்கொள்ளும் நெருக்கத்தில் அவளுக்கு மிக நெருக்கமாக வந்து நின்றவன், அவளது நெற்றியில் சரிந்து விழுந்திருந்த கேசத்தை காதோரம் சொருகி அவளது மென் கன்னத்துடன் தன் தாடி அடர்ந்த கன்னம் கொண்டு வருடியபடி,

“என்னாச்சு? என் பேபி முகம் ஏன் டல்லடிகுது” என்று கேட்க, அவளிடம் இருந்து எந்த பதிலும் இல்லாமல் போகவும் நிமிர்ந்து தன் கரங்களில் அவளது முகத்தை ஏந்தியவன்,

“ஏண்டி உடம்புக்கு ஏதும் பண்ணுதா”என மீண்டும் கேட்க,

அவன் விழிகளை நேருக்கு நேராக சந்தித்தவள்,

“எப்படி உங்களுக்கு என்கிட்ட இருந்து மறைக்க  மனசு வந்துச்சு தீரன்” என்று கேட்டவும்,அவளது விழிகளை ஆழ்ந்து பார்த்தவன்,

“புரியல என்ன மறைச்சேன்?” என்று கேட்க ,

“தப்பு செஞ்சது உங்க தங்கச்சின்னு தெரிஞ்சும் ஏன் என்கிட்ட இருந்து மறைச்சிங்க?” நிறைந்த கண்களுடன் கேட்டாள்.

“இப்போ அந்த பேச்சு எதுக்கு டி?” சிறு கோபத்துடன் வினவினான்.

“எதுக்கா பாதிக்க பட்டது நான், பதில் சொல்லுங்க” அவளும் அதே கோபத்துடன் கேட்டாள். அவனுக்கு எரிச்சலாக வந்தது ஆனாலும் அவள் நிலைமையை உணர்ந்தவன் தன் கோபத்தை கட்டுப்படுத்தி கொண்டு,

“அஷோக்கு தெரிஞ்சா பிரச்சனையாகும்ன்னு  தான் சொல்லல மேகா”

“நான் அஷோக் அண்ணா கிட்ட ஏன் சொல்லலைன்னு கேட்கல என்கிட்ட ஏன் சொல்லலைன்னு கேட்குறேன்”

“உன்கிட்ட சொல்ற அளவுக்கு எனக்கு முக்கியமா படல ” என்றவன் ‘அதை விட சொல்லி உன்னை காயப்படுத்த நான் விரும்பல நானே அதை ஹண்டில் பண்ணலாம்ன்னு நினைச்சேன்’ என்று இந்த  வரிகளை தொடர்வதற்குள், அவன் முக்கியமாக படவில்லை என்றும் சொல்லும் பொழுதே அவன் பேச்சிற்கு தன் கரம் உயர்த்தி இடைவெட்டியவள்,

“வாட் முக்கியமா படலையா! தெரிஞ்சுதான் பேசுறீங்களா தீரன், உங்க தங்கச்சி செஞ்சது எவ்வளவு பெரிய துரோகம் தெரியுமா, இதனால நீங்க என்னை விட்டு  நிரந்திரமா பிரிஞ்சிருக்க கூட வாய்ப்பு இருக்கு” ஆவேசத்துடன் கூறினாள்.

“வாட் பிரிஞ்சிருப்பேனா!  இதுக்காகவா!, யாரோ ஒருத்தங்க உன்னை பத்தி  தப்பா எழுதினா நான் அதை நம்பி உன்னை பிரிஞ்சிருப்பேன்னு உனக்கு தோணுதா?”

“ஆமா இல்லையா பின்ன” என்று இவள் சொல்லவும் மனதளவில் காயப்பட்டவன்,

“புரிஞ்சிக்காம பேசாத மேகா” என்று தழுதழுத்த குரலில் சொல்ல,அவளோ

“நல்லா புரிஞ்சி தான் சொல்றேன்  எனக்கு இப்போ இன்னொரு விஷயமும் புரிஞ்சிருச்சு  இதை செஞ்சது நேத்ரான்னு தெரிஞ்சதுனால தான் என்னை நம்புறது போல பேட்டி கொடுத்திருக்கீங்க  இல்லைன்னா என்னை நம்பியிருக்க கூட மாடீங்க” என்று சொல்லவும் மொத்தமாக மனதளவில் வீழ்ந்தவன்,

“அப்படின்னா என்னை நீ புரிஞ்சிக்கிட்டது அவ்வளவு தானா?” என்று விரக்தியான குரலில் கேட்க அவளோ,

“உங்கள பத்தி நல்லா புரிஞ்சதுனால தான் சொல்றேன்” என்று சொல்லவும் தன் பொறுமையை இழந்தவன்,

“அதான் நல்லா தெரியுதே நீ என்ன அழகா என்னை புரிஞ்சி வச்சிருக்கன்னு, உண்மை என்னன்னு தெரியாம நீயா கற்பனை பண்ணி பேசிட்டு இருக்க” என்று தன் குரலை உயர்த்தவும்,

“உண்மை” என விரக்தியாக சிரித்தவள்,

“நீங்க மறைக்க நினைச்ச உண்மை இப்போ எனக்கு தெரிஞ்சதும் உங்களுக்கு கோபம் வருதா” என  அவன் என்ன அர்த்தத்தில் பேசுகிறான் என்பதை புரிந்துகொள்ளாமல் இவள் பதிலுக்கு பதில் பேசவும்  தன் பொறுமையை மொத்தமாக இழந்தவன்,

“ஆமா டி உண்மை தான் தெரிஞ்சிருச்சுல இது தான் நான், வந்துட்டா ஏதோ இவ ரொம்ப என்கிட்ட உண்மையா இருக்கிறது போல, என்னை லவ் பன்றேன்னு சொல்லிட்டு அவன் கைய புடிச்சிட்டு மணமேடை வர போனவ தான நீ, இப்போ நீ உண்மையை பத்தி என்கிட்ட கேள்வி கேட்டுட்டு இருக்க” என்று உணர்வின் பிடியில் இருந்ததால் நிதானம் இழந்து வார்த்தைகளை விட்டுவிட்டான்.

வாழ்க்கையில் உறவுகள் வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒருசில கடந்த கால கசப்பான நிகழ்வுகளின் நினைவுகளை  மொத்தமாக உரு தெரியாமல் அழித்துவிட வேண்டும். மனதிற்குள்ளே அதை குப்பை போல சேமித்து வைத்தால் என்றாவது ஒருநாள் அது தீராத மனவலியை தான் கொடுக்கும்.

“தீரன்” தன் கண்கள் கலங்க அவனை அழைத்தவள்,

“அப்போ இவ்வளவு நாளும் இது எல்லாத்தையும் மனசில வச்சிட்டு  தான் என் கூட இருந்தீங்களா?” என்று கேட்டாள். அவள் குரல் கமறியது, அவளால் பேச முடியவில்லை வார்த்தைகள் வெளி வர மறுக்க திணறினாள்.

அவள் திணறவும் அவள் முகம் பார்த்தவனுக்கு அப்பொழுது தான் அவன் விட்ட சொற்களின் வீரியம் புரிய,

“ஷிட்” என சொல்லியபடி  தன் கரத்தை டேபிளில் குத்தியவன், மூச்சியை வெளியிட்டு நெற்றியை நீவியபடி மேகாவை நெருங்கி,

“நான் சொல்ல வர்றதை புரிஞ்சிக்காம நீ பேசினதும் கோபத்துல பேசிட்டேன் மேகா” என்றதும் அவன் விழி பார்த்தவள்,

“அதெப்படி மனசில இல்லாம வார்த்தை வரும் ” என்று அழுது கொண்டே  கேட்கவும், அவள் கண்ணீரை கண்டு தன் கோபத்தை விழுங்கி கொண்டான் தீரன்.

அவனுக்கும் தான் பேசியதை எண்ணி வருத்தமாக தான் இருந்தது. பழைய குப்பையை கிளற அவனும் விரும்ப வில்லை தான். ஆனால் மேகா தன்னை புரிந்துகொள்ளாமல் பேசவும் தன் நிதானத்தை இழந்தவன்  வார்த்தையை விட்டுவிட்டு இப்பொழுது உண்மையாகவே வருந்தினான். காதல் கொண்ட மனதால் தன்னவளின் கண்ணீரை வெகு நேரம் பார்க்க முடியவில்லை. உண்மையாக நேசிக்கிறான் அல்லவா?

“ஓகே ஓகே இந்த ஆர்க்யுமெண்ட்டை இதோட முடிச்சிக்கலாம் மேகா, இப்போதைக்கு புரிஞ்சிக்கிற பொறுமை உனக்கும் இல்லை புரியவைக்கிற நிலைமையில நானும் இல்லை” என்றவன் தன் கண்களை மூடி திறந்து,

” ஐயம் சாரி மேகா எது எப்படியோ நான் அப்படி பேசியிருக்க கூடாது” முதன் முறையாக தன் கர்வத்தை விடுத்து தான் பேசியத்திற்காக மன்னிப்பு கேட்கிறான். நல்ல மாற்றம் தான் ஆனால் இந்த மாற்றம் மேகாவின் மனதை மாற்றுமா?

அவளிடம் எந்த பதிலும் இல்லை சிலையென நின்றிருந்தாள், கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் அவள் இப்படி அழுது கொண்டு இருப்பது அவனுக்கு கஷ்டமாக இருக்க க்ளாசில் தண்ணீரை நிரப்பியவன் அவளை நெருங்கி நீரை கொடுத்து அருந்த சொல்ல, அவனை இறுக்கமாக முறைத்தவள் அவனை தாண்டி சென்று கட்டிலில் அமர, அவள் அருகில் வந்த தீரன் அவளை அணைத்துக்கொள்ள போகவும் விலகி கொண்டவள்,

“டோன்ட் டச் மீ, இனிமே உங்க கை விரல் கூட என் மேல பட கூடாது ” என கோபமாக சீறினாள்.

மேகவால் அவன் பேசியதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. முன்பும் பேசியிருக்கிறான் அப்பொழுதும் வலிக்கும் தான். ஆனால் இது தான் அவன் என அதை கடந்துவிடுவாள், அப்பொழுதெல்லாம் மனதளவில் அவனுடன் ஒன்றாததால் அவன் உதிர்க்கும் சொற்கள் அவள் மனதை பெரிதாக தாக்கியது கிடையாது.

ஆனால் இப்பொழுது அவன் மீது தீராத காதல் கொண்ட அவளுக்கு  அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளும் அவளது இதயத்தை வாள் கொண்டு வெட்டியது போல வலித்தது.

“மேகா நீயும் பேசின நானும் பேசினேன் பிரச்சனை முடிஞ்சிது” என்று சொல்ல அவளோ,

“நீங்க பேசினதும் நான் பேசினதும் ஒண்ணா” என்று ஆற்றாமையுடன் கேட்க,

“சாரி மேகா மனசில வச்சிட்டெல்லாம் எதுவும் பேசல ” மனம் வருந்தி மன்னிப்பு கேட்டான்.

மூச்சை  இழுத்துவிட்டபடி அவனை பார்த்து ‘எதுவும் பேச வேண்டாம்’ என்பதை போல தன் கரத்தை உயர்த்தியவள்,

“இனி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. என்னை நம்பாம, கஷ்டப்பட்டு ஒன்னும் என் கூட நீங்க வாழ வேண்டாம் நாம” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை ஆக்ரோஷமாக அவளை நெருங்கியவன்,

” பேசாத உனக்கு என்னை பத்தி நல்லாவே தெரியும், ஒருநேரம் போல ஒருநேரம் இருக்க மாட்டேன். ஏதாவது பேசி எனக்கு வெறி ஏத்தாம போய் படு டி” என்றவனோ அவளை பார்த்து கொண்டே,

“நம்பிக்கை இல்லாம உன்னை ஏன் நான் கல்யாணம் பண்ணிக்கணும், மேகா கொஞ்சம் யோசிச்சு பாரு, ஒத்துக்குறேன் உன்னை கஷ்டப்படுத்திருக்கேன் தான் ஆனா அதெல்லாமே கோபத்துல நடந்தது. அதுக்கு ஏதாவது ஒருவகையில நீயும் காரணமா இருந்திருக்க, நம்பிக்கை இல்லாம எல்லாம் உன் கூட வாழல டி” என்று சொல்ல, அவளோ அவன் முகத்தை கூட பார்க்காது கட்டிலில் வந்து படுத்துக்கொள்ள ஆழ்ந்த மூச்செடுத்து அவள் அருகில் வந்தவன்,

” புரிஞ்சிக்கோ மேகா” என்றபடி அவளை பின்னால் இருந்து அணைக்க போகவும் தலையணையை தூக்கி இருவருக்கும் நடுவில் வேகமாக வைத்தவள்,

“உங்க விரல் கூட என் மேல பட கூடாது” என்று சொல்லிவிட்டு அவனுக்கு முதுக்காட்டி படுக்க, தீரனோ மனம் தொய்வுற அவளை என்ன செய்வதென்று புரியாமல்  தன் தலையை இருக்கரங்களால் தாங்கி பிடித்தபடி அமர்ந்திருந்தான்.

தொடரும்