MIRUTHNAIN KAVITHAI IVAL 49.2

cover page-a29040b3

மிருதனின் கவிதை இவள் 49.2

சமையலுக்குப் பயன்படுத்தும் கசகசாவில் தொடங்கி, குழந்தைகள் கொடுக்கும் பால் பவுடர் , விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சியில் ஈடுபடும் இளைஞர்கள் குடிக்கும் ப்ரோடீன் ஷேக், மரணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் வலியில் துடிக்கும் HIV மற்றும் புற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு வழங்கப்படுகிற வலிநிவாரணி வரை பலதும் போதைப் பொருள்களாகப் நம்மால் உபயோகப்படுத்தப்படுகிறது.

போதை மருந்துகள் பல வகை. சில மருந்துகள், நிஜத்தில் சாத்தியமாகாத கற்பனை உலகில் சஞ்சரிக்கச் செய்பவை. இன்னும் சில உங்களை `அவுட் ஆஃப் தி பாக்ஸ்’ சிந்திக்க வைப்பவை. முக்காலங்களையும் மறந்து ஒருவித பரவச நிலையில் திளைக்கச் செய்பவை வேறு சில. இப்படி ஒருவரின் தேவைக்கேற்ப அவர் பயன்படுத்தும் போதை வஸ்துவின் தன்மையும் மாறுகிறது.

ஓபியம் பாப்பி என்ற தாவரத்திலிருந்து பெறப்படும் இயற்கையான பொருள் மார்பின் (Morphine). இதன் விதைகள்தான் சமையலுக்குப் பயன்படுத்தப்படும் கசகசா. வட இந்தியாவில் இனிப்புகளுக்கும் தென்னிந்தியாவில் அசைவ சமையலிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.முற்றிய நிலையிலுள்ள புற்றுநோயாளிகளுக்கு அவர்கள் வாழும்வரை வலியில்லாமல் இருப்பதற்காக வலி நிவாரணியாகக் கொடுக்க இதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மார்பின்தான் போதைக்கு அதிகம் பயன்படுத்தப்படும் மருந்து.ஓபியம் வட இந்தியாவில் மட்டும் வளரும்.

சிந்தெட்டிக் ஒபியாட்ஸ் நாற்கட்டிக்ஸ் ட்ரக்ஸ் வகையைச் சார்ந்தது. தாவரங்களிலிருந்து கிடைக்கும் போதைப்பொருளைப் போன்ற விளைவைக் கொடுக்கும் வகையில் ரசாயனங்களைக் கொண்டு ஆய்வகங்களில் உருவாக்கப்படுபவைதான் சிந்தெட்டிக் ஒபியாட்ஸ். இவை தற்போது அதிக அளவில் புழக்கத்துக்கு வரத்தொடங்கியுள்ளன.

நாற்கட்டிக்ஸ் மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுக்கும்போது அவை உயிரையே குடித்துவிடும்.

இதே வகையில் வருபவைதான் ஸ்டிமுலன்ட்ஸ் இதை எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால் ஊக்க மருந்துகள். சாதாரணமாக 10 அடி நடந்தால் அந்த மாத்திரையைச் சாப்பிட்டால் 20 அடி எடுத்து வைப்பார்கள். விளையாட்டு வீரர்கள் எடுக்கும் ஊக்க மருந்துகள் இந்தப் பட்டியிலில் வரும். ஸ்டிமுலன்ட்ஸ் ஸ்டெராய்ட்ஸ் போன்ற ஊக்க மருந்துகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் உடலில் புற்று நோய் வரும் அபாயமும் உள்ளது (சோர்ஸ் – கூகிள், விகடன்)

“மைக்கேல் ஜாக்சன் தொடங்கி பல பிரபலங்களின் இறப்பின் மர்மப் பின்னணியில் போதைப்பொருள்தான் உள்ளது.”

                      – போதைப்பொருள் ஒழிப்புக்கான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டுவரும் IRS அதிகாரி வெங்கடேஷ் பாபு.

“உக்காருங்க மிஸ்டர் அக்னி என்ன சாப்பிடுறீங்க” என்று கேட்ட நாற்கட்டிக்ஸ் இன்ஸ்பெக்டர் ஆரியனிடம்,

“ஒன் ப்ளாக் காஃபி” என்றான் தீரன்.

“சொல்லுங்க சார் என்னை பார்க்கிறதுக்கு நீங்களே நேர்ல வந்திருக்கீங்க”

“மிஸ்டர் ஆர்யன் நான் ஏன் வந்திருக்கேன்னு உங்களுக்கே தெரியும்”

“ஐ னோவ் தீரன் ஆனா என்னால என்ன பண்ண முடியும்? முடிஞ்சளவு எல்லா முயற்சியும் செஞ்சோம் பட் டெஸ்ட் ரெசல்ட்ஸ் நெகட்டிவா இருக்கே. ஸ்க்ரீனிங் டெஸ்டிங் ரிசல்ட்டே (இனிஷியல் டெஸ்ட்) நமக்கு சாதகமா இல்லாதப்போ என்ன பண்றது தீரன்?”

“அப்போ அட்வான்ஸ்ட் லெவல் டெஸ்டிங் பண்ணலாமே”

“பண்ணலாம் தீரன் அதெல்லாம் ரொம்ப காஸ்ட்லீ ப்ராப்பர் பெர்மிஷன் வேணும் நிறைய லீகல் பார்மாலிட்டீஸ் இருக்கு . பெர்மிஷன் வேணுன்னா வீட் நீட் எவிடென்ஸ் தீரன். சும்மா சும்மா ரைட் பண்ண முடியாது கிரண் சமுதாயத்துல நல்ல லெவெள்ள இருக்கிறாரு, அவருக்கும் பொலிட்டிகள் சப்போர்ட் இருக்கு”

“அப்போ தெரிஞ்சே விட போறீங்களா ஆரியன்”

“அப்படி இல்லை அக்னி சார் பட்” என்று அவர் தயங்கவும்,

“எவிடென்ஸ் அதானே” என்று ஆரியனை முந்தி கொண்டு சொன்ன தீரன் தான் கொண்டு வந்த சிறிய ப்ரீஃப் கேஸை திறந்து,” இது கிரணோட இண்டஸ்ட்ரில இருந்து பேக்கிங்க்கு முன்னாடி ஸ்டேஜ்ல எடுத்து வந்த சாம்பிள் இது இங்க மார்க்கெட்ல விற்பனைக்காக வைக்க பட்ட டேப்ளெட்ஸ் அப்புறம் ப்ரோடீன் பவ்டர். லேப்ல நீங்களே டெஸ்டிங் பண்ணுங்க என்ன ரிசல்ட் வந்தாலும் சரி நெகட்டிவ் வந்தா இனி இதை பத்தி நான் பேசலை”

“தீரன் இப்போ நீங்க பண்ணிருக்கிறது இல்லீகல், என்னை நீங்க பண்ண சொல்றதும் பக்கா இல்லீகல் கிரண் பாஸ்கர் நினைச்சா உங்க மேல் கேஸ் போடலாம்”

“போடட்டும் ஐ டோன்ட் கேர் ஆனா அவன் பண்றது ரொம்பவே இழிவான செயல் அதுக்கு அவனுக்கு தண்டனை கிடைச்சே ஆகணும்”

“தீரன் சார் ஆனா இது ரொம்ப ரிஸ்க்”

“ஆர்யன் எத்தனையோ அண்டர்கவர் ஆப்பரேஷன் நீங்க பண்ணிருக்கீங்க பல நேரம் லீகல் சில நேரம் இல்லீகல். இதையும் அது போல நினைச்சு பண்ணுங்க. உயிர் காக்குற மருந்து என்கிற போர்வையில போதை மருந்தை தயாரிச்சிட்டு இருக்கான் ஆர்யன். மனசு வைங்க நான் என்னால முடிஞ்ச ஹெல்ப் பண்றேன். ஒரு நல்லது நடக்கணும்ன்னா ரிஸ்க் எடுக்கலாமே” என்று தீரன் ஆர்யனின் குழப்பங்கள் சூழ்ந்த முகத்தை ஒரு கணம் பார்த்து,

“ஓகே ஆர்யன் உங்களை போர்ஸ் பண்ண நான் விரும்பல இதுக்கு மேல உங்க இஷ்டம்” என்று தீரன் தன் இருக்கையில் இருந்து எழுந்து கொள்ளவும் சட்டென்று தன் இருக்கையில் இருந்து எழுந்து கொண்ட ஆர்யன் ” சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்றவன்,

“நீங்களே இந்த விஷயத்துல இவ்வளவு ரிஸ்க் எடுக்கும் பொழுது நான் எடுக்கலைன்னா நான் இந்த பொஷிஷன்ல இருக்கிறதே கேவலம், என் ஃப்ரண்ட் ஒருத்தன் ஃபாரென்சிக் லாபரேட்டரில அசிஸ்டன்ட் சைன்டிஸ்ட்டா இருக்கான் அவன் மூலமா மூவ் பண்ணலாம் அதான் நமக்கு சேஃப் மேட்டர் வெளிய லீக் ஆகாது இனிமே நாம அடிக்கடி மீட் பண்ணிக்க வேண்டாம் மிஸ்டர் அக்னி. ரீசல்ட்க்கு  அப்புறம் என்ன பண்ணலாம்ன்னு பேசலாம்” என்ற ஆரியனிடம் கைகுலுக்கி விடை பெற்று விட்டு தீரன் வெளியேறினான்.

!!!!!!!!!!!!!11

ஆரியனை சந்தித்துவிட்டு தன் அலுவலகம் வந்த தீரன் ஆதிலிடம் இருந்து ஏதாவது தகவல் வந்திருக்குமா என்பதற்காக தன் கணினியை உயிர்பித்தவன் புதிய தகவல் ஏதும் அவனிடம் இருந்து வரவில்லை என்றதும் கணினியை வெறித்தபடி அமர்ந்திருந்த தீரனின் கரங்கள் தானாக ஆதிலிடம் இருந்து இறுதியாக வந்த மெசேஜை ஓபன் செய்ய, ஒரு சிறுவனின் புகைப்படம் தான் அவன் மவுஸை கிளிக் செய்யவும் ஸ்க்ரீனில் விரிந்தது.

அந்த சிறுவனின் விழியில் வெறியா கோபமா இல்லையா அவன் பார்வையே அப்படி தான என தீரன் வெகுவாய் சிந்தித்தான் அவனால் அவன் விழிகள் காட்டிய உணர்ச்சிகளை படிக்க முடியவில்லை. ஆனால் அந்த சிறுவனை பார்க்க பார்க்க மனதிற்குள் ஏதோ ஒன்று அழுத்தியது அந்த பார்வை எதையோ நியாபக படுத்தியது.

“ஏன் பார்வையில சிறுவர்களுக்கு உரிய கனிவு இல்லை” என்று வாய்விட்டே சொன்ன தீரனின் கண்களுக்கு அந்த புகை படத்தில் கிரண் பாஸ்கருக்கு பின்னால் இருந்த பள்ளியின் பெயர் பலகை தெரிய, பள்ளியின் பெயரை மனதிற்குள் குறித்து கொண்டவன். சில நொடிகள் அந்த புகைப்படத்தை வெறித்து பார்த்துவிட்டு, தன் அலைபேசியை கையில் எடுத்து,

“ரிஷி உடனே தரம்ஷாலாவுக்கு  இன்னைக்கே ஒரு டிக்கெட் புக் பண்ணு அப்படியே தரம்ஷாலால  நான் தங்குறதுக்கும் ஏற்பாடு பண்ணிடு ” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவன் தன் நாற்காலியில் தலையை பின்னோக்கி சாய்த்து கண்களை மூடினான். கனம் கூடியிருந்த மனம் முழுவம் பல்வேறு சிந்தனைகள் ஓடி கொண்டிருக்க அலைபேசி அவன் சிந்தனையை கலைத்தது எடுத்து பார்த்தான் ரிஷி தான் அழைத்திருந்தான்,

“டிக்கெட் புக் பண்ணியாச்சா ” அழைப்பை ஏற்றதும் இதை தான் வினவினான்.

“ஆமா சார் ஈவினிங் சிக்ஸோ க்ளாக் ஃபிளைட் நான் ஹோட்டல் அப்புறம் டிக்கெட் டீட்டையில் மெயில் பண்ணிடுறேன் ரிட்டர்ன் டிக்கெட் எப்போ போடணும் சார்”

“வேலை எப்போ முடியும்ன்னு தெரியல ரிஷி நாளைக்கு மார்னிங் சொல்றேன் அப்போ புக் பண்ணு”

“ஓகே சார் ஆனா நீங்க தனியா போறீங்க கார்ட்ஸ் யாரும் வரலையா அட்லீஸ்ட் நானாவது கூட வரேனே” ரிஷியின் விசுவாசம் பேசியது. ரிஷியின் கூற்றில் மெலிதாய் புன்னகைத்த தீரன்,

“இல்லை ரிஷி வேண்டாம் நான் பார்த்துகிறேன் நான் வர்ற வரைக்கும் நீ எல்லாரையும் பார்த்துக்கோ” என்று சொல்ல , தீரனின் பேச்சை மீற முடியாது சரி என்றான்.

மேகாவை அழைத்து கொண்டு வீட்டிற்கு வந்த தீரன், தான் இன்று தரம்ஷாலாவுக்கு வேலை விடயமாக செல்ல போவதாக கூற, அவளோ “ம்” என்று மட்டும் சொன்னவள் தீரன் கிளம்புவதற்காக அவனுக்கு வேண்டியதை நிதானமாக பேக் செய்ய இவன் தான் கடுப்பாகிவிட்டான். இதே பழைய நாளாக இருந்திருந்தால் தன்னை தனியாக விட்டுவிட்டு செல்ல போவதாக கூறிய மறுகணம் அழுதே தீரனை என்ன பாடு படுத்திருப்பாள் ஆனால் இன்று கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் அவள் காரியத்தில் கண்ணாக இருக்கவும் மிகவும் எரிச்சல் அடைந்தவன். ஒரு முடிவுடன் அவளை நெருங்கி,

“இப்போ கூட பேச மாட்டியா டி” கோபமாக வினவினான்.

“….” பதில் சொன்னாள்! “மாட்டேன்” என்பதை மெளனமாக சொன்னாள்! அவ்வளவு ஆத்திரம் வந்தது தீரனுக்கு,

“நீ ரொம்ப மோசம் டி” குரலை உயர்த்தினான், அவன் வழக்காமாக பயன்படுத்தும் படி ஸ்பிரேவை தனியாக ட்ராலியில் வைத்தாள்.அதை அவனுக்கு அப்படியே தூக்கி எறிந்தால் என்ன? என்று எண்ணும் அளவுக்கு ஆத்திரம் வந்தது , ஆனாலும் அடக்கிக்கொண்டான்.

“என்னை விட நீ தான் டி மோசம் இரக்கமே இல்லாதவ” கத்தினான், அவன் எப்பொழுதும் அணியும் கருப்பு நிற ஷர்ட் நான்கு அழகாக ட்ராலியில் அடுக்க பட்டது.

“இப்படியே எப்பொழுதும் இருக்க போறியா” பேஸ்டையும் ப்ரஷையும் தனியாக சிறு பவுச்சினுள் அடக்கினாள்.

“ஓகே அப்படியே இரு, ஆனா சொல்றேன் மேகா நான் பேசினது தப்பு தான் உன்ன நிறைய காயப்படுத்திருக்கேன், ஆனா அடுத்த நிமிஷமே மன்னிப்பு கேட்டு உன் முன்னாடி நிற்பேன். ஒருநாள் கூட உன்னை அவாய்ட் பண்ணினது இல்லை. ஆனா நீ இருக்க பாரு ஒரு வார்த்தை கூட பேச மாட்ட ஆனா வார கணக்குல மாசக்கணக்குல என்னை வைச்சு செய்வ, நீ தான் டி மோசம்” புலம்பி தள்ளினான். கருப்பு நிற ஜீன்ஸை நான்காக மடித்து உள்ளே அடுக்கினாள்.

“பேசாத டி பேசவே பேசாத” என இன்னும் ஏதோ படபடவென பொறிந்து விட்டு கட்டிலில் தொப்பென்று அமர்ந்து கண்களை மூடினான். மேகாவின் கண்களில் ஓரம் கண்ணீர் கசிந்தது.

மெதுவாக திரும்பி அவன் முகம் பார்த்தாள். அடம் பிடிக்கும் குழந்தை போல நெற்றி சுருங்க விழிகளை மூடியிருந்தான்.

மெதுவாக குனிந்த அவனது முகத்தை கையில் ஏந்தியவள் அவனது இதழை நெருங்கிய தருணம் மறுப்பாக தன் தலையை அசைத்தவன்,

“எனக்கு இதெல்லாம் வேண்டாம்” என்று எழுந்து நின்றவன் அவளது கரங்களை பிடித்து கொண்டு,

” நீ வேணும் டி, சந்தோஷமா பழைய மாதிரி என்கிட்ட பேசு. தீரன் சொல்லு. தீரன் காஃபி வேணுமான்னு கேளு. என் நெஞ்சில வந்து சாஞ்சிக்கோ. என்னை பார்த்து சிரி. உரிமையா என் தலை முடிய கலைச்சிவிடு. லேப்டாப்பை மூட போறீங்களா இல்லை நான் அதை உடைக்கவான்னு இடுப்புல கை வச்சிட்டு கோபமா முறைச்சு பாரு. சாப்டியாடான்னு கேளு. உன்னை தேடுது டி, சாரி தப்பு தான் பேசியிருக்க கூடாது. ஆனா ஒரு வார்த்தைக்கு இவ்வளவு பெரிய தண்டனை கஷ்டமா இருக்கு டி” என்று அவன் சொல்ல அவளோ அவன் கரத்தில் இருந்து தன் கரத்தை விடுவித்து விட்டு மீண்டும் வேலையில் கவனமாக,

“இவ்வளவு பேசிட்டு இருக்கேன் உன் மனசு என்ன கல்லாடி பாரு எனக்கு ஏதாவது ஆகி நான் திரும்பி வரமாட்டேன். நான் இல்லாம போனா தான் என் அருமை உனக்கு புரியும்” என்றான் ஆவேசமாக. அவனது வார்த்தைகள் அவளது விழிகளை நிறைத்தது. இப்படியெல்லாம் கெஞ்சுபவன் அல்ல அவன் ,முன்பு எப்படி இருந்தவன் இன்று இவள் பேச மாட்டாளா என ஏங்கும் சிறு பிள்ளை போல தவிப்பதை பார்க்க வேதனையாக இருந்தது. ஆனாலும் தவறை அவன் மீது வைத்து கொண்டு இவன் உருகி வழிவது இவளுக்கே தான் ஒரு கொடுமைக்காரி என்னும் உணர்வை ஏற்படுத்த, அதே நேரம் இப்பொழுது அவன் ஆவேசத்தில் உதிர்த்த வார்த்தைகள் அவளது கோபத்தை கிளப்ப, ஆவேசமாக அவனை நெருங்கி அவனது இதழை முற்றுகையிட்டாள்.

அவளது இதழ் தொடுத்த போரில் அவளது பற்கள் நடத்திய தாக்குதலில் அவனது உதடு தோள் லேசாக கிழிந்து ரத்தம் துளிர்த்தது. அவன் அவளை தடுக்கவும் இல்லை அணைக்கவும் இல்லை.பதிலுக்கு முத்தமிடவும் இல்லை. அவள் கொடுத்ததை வாங்கி கொண்டு அப்படியே நின்றிருந்தான்.

அவளாக சோர்ந்து அவனது சட்டையை பற்றுக்கோளாக பற்றியபடி அவன் மீதே சரிந்தாள். தன் மார்பில் விழுந்தவளை அணைத்து,

“மன்னிச்சுடு அம்மு” மனம் உருகி கேட்டான். அழுகை வெடிக்க அவன் நெஞ்சில் முட்டி மோதி அழுதவள்,

“எத்தனை முறை” என்று கேட்டாள்.

நெஞ்சுக்குள் புதைந்திருந்த அவளது முகத்தை நிமிர்த்தி விழிநீரை துடைத்து,

“இனிமே இப்படி நடக்காது பேபி” உறுதியளித்தான். அவனது குரலில் தெரிந்த மாற்றம் அவளது விழிநீரை அதிகப்படுத்த நிறைந்த விழிகளுடன் அவனை பார்த்து மறுப்பாக தலையசைத்தாள்.

“பேசிடு மேகா” என்று கெஞ்சலாக கூறியவன்,”வலிக்குதுடி”என்றான் தன் இடது மார்பை நீவியபடி.

அவனை விட்டு விலகி நின்றவளுக்கு மனம் வெகுவாக கனத்தது,

“நான் தான் இனி இப்படி பேச மாட்டேன்னு சொல்றேன் தானே”

“நீங்க சொல்றீங்க சரி ஆனா உங்க மனசு அது என்னை நம்புதா தீரன்”

“நம்புதானா என்ன அர்த்தம், உன்னை நான் சந்தேக படுறேன்னு சொல்றியா, சந்தேகம் இருந்தா நான் ஏண்டி உன்கிட்ட கெஞ்சிட்டு இருக்க போறேன்” என கோபத்துடன் அவன் கேட்கவும் நிதானமாக அவனை ஏறிட்டவள்.

“ஏன் தீரன் கோபப்படுறீங்க”

“புரிஞ்சிக்காம பேசும் பொழுது கோபம் வராம எப்படி”

” புரிஞ்சிக்காம பேசுறேன் சரி நீங்க முதல்ல என்னை புரிஞ்சி வச்சிருக்கீங்களா?”

“அடிபட்டு கிடந்த உங்களுக்கு ட்ரீட்மென்ட் பார்த்தது என் தப்பா, என் அப்பா விருப்பம் தான்னு சொல்லியும் நீ என்னை லவ் பண்ணி தான் ஆகணும் இல்லைன்னா எல்லாரையும் கொலை பண்ணிருவேன்னு சொன்னீங்க உங்க மிரட்டலுக்கு பயந்து தான் பொய் சொன்னேன். தப்பு தான் ஆனா அதுக்கு காரணம் நீங்க . ரிதுராஜ் எனக்கு பார்த்த பையன் அப்பா சொன்னாரு நான் ஓகே சொன்னேன் அது என் தப்பா. என் கல்யாணத்தை நிப்பாட்டுனீங்க அது என் தப்பா. என் அப்பா உங்களை கல்யாணம் பண்ணிக்க சொன்னாங்க விருப்பம் இல்லாம தான் உங்களை பண்ணிக்கிட்டேன் ஆனா மணமேடையில உங்க பக்கத்துல எப்போ வந்து உக்கார்ந்தேனோ அந்த நொடியே என் வாழ்க்கை உங்க கூடதான்னு முடிவு பண்ணிட்டேன்.

உங்க கூட மனசை விட்டு பேச நினைச்சேன். எந்த நிலைமையில உங்ககிட்ட பொய் சொன்னேன்னு சொல்ல நினைச்சேன். என் தரப்பை உங்களுக்கு புரிய வைக்க நினைச்சேன் . நம்ம ரெண்டு பேருக்கும் இடையில இருக்கிற மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கை க்ளியர் பண்ண நினைச்சேன்.முக்கியமா பிரச்சனைகளை தீர்த்துட்டு உங்க கூட முழு மனசோட சந்தோஷமா லைஃப்பை ஸ்டார்ட் பண்ண நினைச்சேன்.

ஆனா நீங்க என்கிட்ட எந்த விளக்கமும் கேட்காம வார்தையாலையே என்னை பலமுறை குத்தி காட்டி கஷ்டப்படுத்துனீங்க. நம்ம வாழ்க்கை அதன் போக்கிலே போச்சு நானும் ஒருக்கட்டத்துல உங்களை காதலிக்க ஆரம்பிச்சேன் மனசார உங்களை நேசிச்சேன். அக்னி தீரன் உங்க பேரு, பைனான்ஸ் பண்றீங்க.அதை தாண்டி எதுவுமே உங்களை பத்தி எனக்கு தெரியாது உங்களுக்கு எத்தனை கம்பெனி இருக்கு, உங்க பேங்க் பாலன்ஸ் என்ன? உங்க கடந்த காலம் என்ன? இப்படி எதுவுமே தெரியாது தெரிஞ்சிக்கவும் விரும்பல, உங்களை உங்களுக்காகவே காதலிச்சேன். சந்தோஷமா ஒவ்வொரு செகண்டையும் உங்ககூட அனுபவிச்சி வாழ்ந்தேன் இப்பவும் வாழறேன் இன்னும் வாழ்வேன்.

அப்புறம் ஒருநாள் நீங்களா உங்க கடந்தகாலம் பத்தி சொன்னீங்க உங்க வலியையும் வேதனையையும் நான் அனுபவிச்சேன் தீரன் அவ்வளவு அழுதேன் உங்க கஷ்டத்தை எப்படி போக்குறதுன்னு நித்தமும் உங்களை மட்டுமே நினைச்சு வாழ்ந்தேன்.

ஆனா நீங்க என்ன செஞ்சீங்க தீரன். ஒரு செகண்ட் கூட என் இடத்துல இருந்து என் மனசை நீங்க புரிஞ்சிக்க முயற்சி செஞ்சதே கிடையாது. நீங்க சந்தோஷமா இருக்கும் பொழுது ஓகே, ஆனா கோபம் படும் பொழுதெல்லாம் என்ன சொல்லி காயப்படுத்துவீங்களோன்னு பயமா இருக்கு. வலிக்குது பா, சரி சொல்லிட்டு போட்டும் வார்த்தை தானேன்னு விட முடியல. உங்களை கண்மூடித்தனமான லவ் பண்றேன் தீரன், நீங்க அழுதா எனக்கு கஷ்டமா இருக்கும், உங்களுடைய ஒவ்வொரு வார்த்தையும் என்ன ரொம்பவே பாதிக்கும். இன்னொரு விஷயம் சொல்லவா உங்களை நேசிக்கிற அளவுக்கு என் அப்பாவை கூட நேசிக்கிறேனான்னு தெரியல .ஆனா நீங்க? நீங்களும் என்னை நேசிக்கிறீங்களா தீரன்? என்னை எனக்காகவே.” என்றவள் ஒருகனம் அவன் விழிகளை பார்த்து விட்டு, தன் கண்களை மூடி திறந்து,

“உங்களுக்கு என்னை ரொம்ப புடிக்கும்ன்னு எனக்கு தெரியும். ஆனா என்னை முழுசா நம்பி பழைய சம்பவங்களை ஒரு செகண்ட் கூட நினைக்காம என் கூட வாழ முடியுமா தீரன்” என்றவள் பதிலை எதிர்ப்பார்த்து அவனது முகத்தையே பார்க்க, வேகமாக தன் அலமாரியை திறந்து அதில் இருந்த சிறு மரப்பெட்டியை எடுத்து வந்து அவள் முன்னால் நின்றவன், அந்த மரப்பெட்டியை திறந்து அதில் இருந்த தங்க தாலியை தன் கையில் எடுத்து ஒருகணம் வருடி அவள் கேள்வியாக பார்த்து கொண்டிருக்கும் பொழுதே தன் கலங்கிய கண்களை தன்னவளின் கண்ணீர் நிறைந்த கண்களுடன் கலக்கவிட்டவன் அவளது ஒவ்வொரு உணர்வுகளையும் உள்வாங்கிக்கொண்டே தாலியை தன்னவளின் கழுத்தில், உள்ளத்தில் நிரம்பி வழியும் காதலுடன் அணிவித்தவன், கரகரக்கும் தன் குரலை செறுமியபடி,

“இப்போ உன் கலுத்துல நான் போட்டுவிட்டது பார்க்கிறவங்களுக்கும் உனக்கு ஒரு தாலி அவ்வளவு தான். ஆனா எனக்கு இது அதுக்கும் மேல, என் அப்பா சாகும் பொழுது இதை கையில கொடுத்து எந்த பொண்ணை பார்க்கும் பொழுது உன் மனசுக்கு அவ தான் எல்லாம்ன்னு தோணுதோ எந்த பொண்ணு உன்னை உனக்காகவே விரும்புறாளோ அவகிட்ட கொடுன்னு கொடுத்தாரு .” என்றவன், நீண்ட பெருமூச்சை வெளியிட்டு,

“நிறைய பேசின மேகா, சரியா பேசின. கடைசியா ஒன்னு கேட்ட . அதுக்கு என்ன சொல்றதுன்னு எனக்கு தெரியல உன்னை மாதிரி எனக்கு பேச வராது. ஆனா பேசியே ஆகணும். என்னை முழுசா நம்பி பழைய சம்பவங்களை ஒரு செகண்ட் கூட நினைக்காம என் கூட வாழ முடியுமான்னு கேட்ட, தெரியல மேகா சத்தியமா எனக்கு தெரியல ஆனா நீ இல்லாம என்னால வாழ முடியாது மேகா, அது மட்டும் எனக்கு தெரியும் . உன்னை கடைசி வர காயப்படுத்தாம இருக்க முடியுமா?” என்று தன் தலையை இல்லை என்பதாய் தலையசைத்தவன் தன் மூச்சை இழுத்து வெளியிட்டு,

” ஆனா உன்னை காயப்படுத்திட்டு என்னால நிம்மதியா ஒரு செகண்ட் கூட இருக்க முடியாது, மேகா நான் இப்படித்தான் என்னால மாற முயற்சி தான் பண்ண முடியும் முழுசா மாற முடியும்ன்னு சொல்ல முடியாது.

அதுக்காக உன்னை புடிக்காமலோ உன்ன நம்பாமலோ உன் கூட நான் இல்லை . உன்னை என் உயிரை விட அதிகமா நேசிக்கிறேன், என்னை விட அதிகமா நம்புறேன். உன் புனிதத்தன்மை மேலையோ, உன் மனசு முழுக்க நீ என் மேல வச்சிருக்க தூய காதல் மேலையோ, எப்பொழுதுமே எனக்கு சந்தேகம் கிடையாது. உன்னுடைய காதல் எவ்வளவு உண்மையானதோ என்னுடைய காதலும் உண்மையானது. இந்த தீரன் உடம்புல ஓடுற ஒவ்வொரு துளி ரத்தமும் உன் பெயரை மட்டும் தான் சொல்லும் .

அப்பவும் சரி எப்பவும் சரி இந்த தீரன் இந்த மேகாக்கு தான் இந்த மேகா இந்த தீரனுக்கு தான் இதுல மாற்று கருத்தே கிடையாது, என் காதல் இதான் இப்படி தான் எனக்கு காதலை காட்ட தெரியும்.” என்றவன் நொடி பொழுது தாமதிக்காது தன்னை ஒருவித கலக்கத்துடன் பார்த்து கொண்டிருந்த மனைவியின் இதழில் மென் முத்தம் ஒன்றை பதித்துவிட்டு ட்ராலியுடன் கிளம்பிவிட ,

மேகாவின் கரங்கள் சற்று நேரத்திற்கு முன்பு அவன் அணிவித்த திருமாங்கல்யத்தை வருட, அவன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் அசைபோட்டு கொண்டே வந்த அவளது மனம் ‘எனக்கு ஏதாவது ஆகி நான் திரும்பி வரமாட்டேன். நான் இல்லாம போன தான் என் அருமை உனக்கு புரியும்’ என்று அவன் சொன்னதில் வந்து நிற்கவும் மிகவும் கலங்கி போனவள் நெற்றியில் வியர்வை துளி அரும்ப தன் அறையை விட்டு வெளியே வந்தாள்.