MIRUTHNAIN KAVITHAI IVAL 49.3

cover page-dabed0e7

மிருதனின் கவிதை இவள் 49.3

டெல்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை முடித்து விட்டு தீரன் தன் பிளைட்டிற்காக காத்திருந்த பொழுது அவனது மனம் முழுவதையும் மனைவியின் நினைவுகளே ஆக்கிரமித்திருக்க தன் கரங்களை குறுக்கே கட்டியபடி பயணிகள் அமரும் நாற்காலியில் அமர்ந்திருக்க, யாரோ தன்னை அழைப்பது போல தோன்றவும் நிமிர்ந்து பார்த்தவன், தன் கைகளை உயர்த்தி காட்டியபடி அஷோக்குடன் தன்னை நோக்கி வேகமாக நடந்து வரும் மனைவியை பார்த்து புன்னகையுடன் எழுந்து வேகமாக அவளை நோக்கி செல்ல, அப்பொழுது மேகாவை தடுத்த செக்யூரிட்டி பணியாளர் பாதுகாப்பு சோதனை முடிக்குமாறு வலியுறுத்த, மேகா ஒருவித தவிப்புடன் தீரனை பார்க்கவும் அவன் தன் கண்களாலே சமிக்கை செய்ய, ஆமோதிப்பதாக தலையசைத்தவள் பாதுகாப்பு சோதனையை முடிக்கவும் தீரன் மேகாவை நெருங்கியிருக்க மேகா காற்றுக்கூட இடம் கொடுக்காது அணைத்திருந்தாள்!

நெருக்கமாக!

மிகவும் உறுதியாக!

தன் நெஞ்சில் முகம் புதைத்து விசும்பும் மனைவியின் முதுகை தடவி விட,

அதை பார்த்து “புதுசா கல்யாணம் ஆனவங்க கூட இவ்வளவு ஃபீல் பண்ண மாட்டாங்க டா” என்று அஷோக் கேலி செய்ய, அவனை இறுக்கமாக தீரன் முறைக்கவும்,

” சரி டா உங்க ரொமான்ஸை முடிச்சிட்டு கூப்பிடுங்க அது வரைக்கும் ஒரு ஓரமா போய் என் ஆள் கூட போன்ல லவ் பண்றேன் வேலை வேலைன்னு அவகிட்ட பேசி நாளாச்சு” என்று அஷோக் கேலி சிரிப்புடன் நகரவும், சுற்றி இருந்தவர்களின் பார்வையை கருத்தில் கொண்டு மேகாவை தன்னிடம் இருந்து பிரித்து அழைத்து வந்து இருக்கையில் அமர வைத்தவன் தானும் அவள் அருகில் வந்து அமர்ந்து தன் கைக்குட்டையால் அவளது முகத்தில் அரும்பியிருந்த வியர்வை துளிகளை துடைத்து அவள் அருந்த தண்ணீர் போத்தலை கொடுக்க மறுக்காமல் வாங்கி பருகியவள்,அவனை பார்த்து முறைக்க அவனோ ,

“ஏன் டி மறுபடியும் சண்டை போட போறியா” என்று கேட்க,

“ஏன் அப்படி சொன்னீங்க” மூக்கை இழுத்தபடி வினவினாள்.

“என்ன சொன்னேன்” என்று கேட்டவனின் கையில் ஒரு அடிபோட்டவள் அவன் சொன்னதை சொல்ல அவனோ,

“அதான் நான் சரி இல்லையே ரொம்ப மோசமானவன் கோபக்காரன் வரைலைன்னா நல்லது தானே” என்று சொல்லவும் அவனை அடிப்பது போல அவள் தன் கரத்தை உயர்த்தியவள்,

“இனிமே இப்படி பேசுனீங்க கண்டிப்பா அடிப்பேன் ” என்று சொல்ல,

“கிஸ் தானே எனக்கு ஓகே தான், வீட்ல கொடுத்தியே லிப்ஸ்ல ரத்தமே வந்திருச்சு” என்று கூறவும், முகம் சிவக்க அவன் கரத்தில் ஒரு அடி போட்டவள் , ” தீரன்” என்று முறைக்கவும்,

“சரி சரி மூஞ்சை தூக்காத இனிமே அப்படி பேசல ” என்றவன்,

” எதுவா இருந்தாலும் ஃபோன்ல பேச வேண்டியது தானே இப்படி மூச்சிரைக் வரணுமா என்ன? பாரு அழுது வடிஞ்சு, ஏன் டி?” என்று சிறு கோபத்துடன் கேட்க,

“மனசுக்கு ஒருமாதிரி இருந்தது அதான் வந்துட்டேன் பா” என்ற மனைவியை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்து கொண்டவன்,

” எதுவும் யோசிக்காத சரியா கோபத்துல பேசிட்டேன் இனிமே இப்படி பேசல” என்று சொல்ல அவன் நெஞ்சில் தன் நாடி குற்றி நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள்,”ம்ம் ” என்று தலையசைக்க, குனிந்து அவளது நெற்றி முட்டியவன்,

“நான் வர்ற வரைக்கும் ஹாஸ்ப்பிட்டல் போகாத மேகா வீட்லையே ரெஸ்ட் எடு” என்று சொல்ல , நேற்று போல தர்க்கம் செய்யாதவள் உடனே “ம்ம்” சொல்லி தன் தலையை ஆட்டவும் அவளது கன்னம் கிள்ளி சிரிக்க, நிமிர்ந்து அமர்ந்து அவனது முகத்தை பார்த்த மேகா,

“புதன் கிழமை முதல் ஸ்கேன் பா” என்று சொல்லி முடிக்கும் முதல்,

“செவ்வாய் கிழமை நைட் உன் புருஷன் உன் முன்னாடி நிற்பான்” என்று சொல்லி அவளது நெற்றியில் இதழ் பதித்தவன் பயணிகளுக்கான அறிக்கை கேட்கவும் தன்னவளின் ஆலிலை வயிற்றில் தன் கரம் வைத்து,

“அம்மாவை பத்திரமா பார்த்துக்கோ குட்டி” என்று தன் குழந்தையிடம் பேசிவிட்டு அஷோக்கை அணைத்து கொண்டவன்,

” செக்யூரிட்டி இல்லாம வெளிய போகாத குப்தா கம்பெனி மீட்டிங் மட்டும் அட்டென்ட் பண்ணு மற்றது நான் வந்ததும் பார்த்துக்கலாம்” என்றவன், இருவரையும் கவனமாக இருக்கும் படி சொல்லிவிட்டு மேகாவை பார்த்து கொள்ளுமாறு கூற அவளும் சரியென்பதாய் தலையசைத்தவள் சிறு நிம்மதியோட அஷோக்குடன் வீட்டிற்குள் செல்ல, அவர்களுக்கு முன்பே அங்கு வந்திருந்த இஷிதா மேகாவை கண்டதும் மகிழ்ச்சியுடன் அணைத்து கொள்ள, அஷோக்கின் பார்வை இஷிதாவை எரிக்க அவனை கண்டுகொள்ளாமல் மேகாவுடன் கதைத்தபடி அவள் உள்ளே வந்தாள்.

“என்ன திடீர்ன்னு விசிட் அடிச்சிருக்க என்ன விஷயம் வொர்க் எல்லாம் எப்படி போகுது இஷு”

“அதெல்லாம் நல்ல போகுது, உன் புருஷன் மதியம் கால் பண்ணிருந்தாரு முக்கியமான வேலை விஷயமா வெளியூர் போறேன் மேகா தனியா இருப்பா கூட இருக்க முடியுமான்னு கேட்டாரு நான் டபிள் ஓகே சொல்லி வந்திட்டேன்” என்று இஷிதா கூறவும் விழிகள் ஆச்சரியமாக விரிய,”தீரனா” என மேகா கேட்க,

“ஆமா ஆமா மனுஷனுக்கு உன் மேல ஒரே லவ் போல” என கேலி செய்த தோழியை பார்த்து சிரித்தவள்,

“சரி நான் உனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்” என்று எழுந்து கொள்ள அவளது கரம் பிடித்து தடுத்த இஷிதா” வேண்டாம் டி எனக்கு இப்போ பசிக்கல” என்றவள்,உனக்கு பசிக்குதா என்ன சாப்பிடுற என்று கேட்க,

“ஒரு க்ளாஸ் பால் போதும் டி நானே எடுத்துகிறேன்” என்ற மேகாவிடம் ,” கிச்சன் எங்க?” என்று கேட்டு தெரிந்து கொண்டவள் மேகாவை மாடி சென்று ஓய்வெடுக்க கூறிவிட்டு கிச்சனுக்கு சென்று பணியாட்களிடம் கேட்டு பாலை காய்ச்சியவள் ஒரு குவளையில் எடுத்து கொண்டு செல்லும் பொழுது அவளது கரம் பிடித்து தடுத்த அஷோக் அவள் முறைத்து பார்க்க தன் அறைக்கு அழைத்து சென்று கதவுக்கு தாளிட்டவன்,

“இப்போ எதுக்குடி என் நம்பரை பிளாக் பண்ணி வச்சிருக்க ” கண்களில் கோபம் தெறிக்க வினவினான்.

“முதல்ல கைய விடு அஷோக்” அதே கோபத்துடன் அவள் சொல்லவும் ஒருகணம் அவளது முகத்தை பார்த்து விட்டு தன் கரத்தை விலகிக்கொண்டவன் இஷிதாவை விட்டு கொஞ்ச தூரம் தள்ளி நின்று அவளை அழுத்தமாக பார்க்க அவனது பார்வையை எதிர்நோக்கியபடி அவன் முகத்தை பார்த்தவள்,

“மேகா ரிதுராஜ் போட்டோ ப்ரெஸ்க்கு லீக் பண்ணினது யார் அஷோக்”

“நேத்ரா” என தன் பார்வையை எங்கேயோ பதித்தபடி அவன் சொல்லவும்,

” உன் தங்கச்சி நேத்ரா”என்று திருத்தியவள் அவன் முறைக்கவும்,

“சோ தப்பு செஞ்சது உன் தங்கச்சி ஆனா நீ அன்னைக்கு என் அண்ணன் மேல பழி போட்டு என்னெவெல்லாம் பேசின உன்னால என் அண்ணன்கிட்ட நான் சண்டை போட்டேன் தெரியுமா.”

“அன்னைக்கு சிட்டுவேஷன் அந்த மாதிரி சோ அப்படி பேசிட்டேன். இப்போ என்ன உன் அண்ணன் தானே போய் ஒரு சாரி சொல்லு சரியாகிடுவான்” என்று சொல்லவும் அவனை அனல் தெறிக்க பார்த்தவள்,

“அன்னைக்கு அவ்வளவு பேசிட்டு இப்போ ஈஸியா சாரி சொல்ல சொல்ற . தப்பு பண்ணினது நீ அஷோக், நீ முதல்ல என்கிட்ட மன்னிப்பு கேளு”

“ஏன் மேடம் தப்பே செஞ்சது இல்லையோ, செஞ்ச தப்புக்கெல்லாம் ரொம்ப மன்னிப்பு கேட்டுடீங்களோ, நீ என் தப்ப சொல்லிட்டு இருக்க ” என அஷோக் வழக்கம் போல பழைய பல்லவியை பாட கண்கள் கலங்க அவனை பார்த்தவளோ வேகமாக அவனை நெருங்கி ஆவேசமாக அவனது சட்டையை பிடித்தவள்,

“ஆமா டா நான் தப்பு பண்ணிருக்கேன் தான் நான் உனக்கு வேண்டாம்போதுமா ” என்று உரக்க கத்தியவள் அறையை விட்டு வெளியேற பார்க்க அதற்குள் அவளை இறுக்கமாக அணைத்திருந்தவன்,

“அப்படியெல்லாம் போக முடியாது” என்று சொல்ல அவனிடம் இருந்து திமிறியவள்,”விடு அஷோக் இனி உனக்கும் எனக்கும் ஒன்னும் இல்லை” என கத்தவும் அவளை தான் பார்க்க திருப்பியவன் அப்படியே சுவற்றில் சாய்த்து,

“அது என்னடி என்ன பிரச்சனை வந்தாலும் என்னை வேண்டாம் வேண்டாம்ன்னு சொல்லிட்டு போற, ப்ரேக் அப் உனக்கு அவ்வளவு ஈஸியா போச்சா?

நீயா என் பின்னாடியே வருவ நட்பா பழகுவ, ஒருகட்டத்துல உன்னை புடிச்சிருக்குன்னு நான் சொல்லுவேன் நீ யோசிச்சு சொல்றேன்னு ஸீன் போட்டுட்டு ரெண்டு நாள் என்னை காக்க வச்சிட்டு வந்து லவ் யு ன்னு கை புடிப்ப, நீ தான் எல்லாம் சொல்லுவ, நானும் அதை நம்பி உன் பின்னாடியே சுத்துவேன்.

அப்புறம் ஒருநாள் எனக்கு தெரியாம என் கம்பெனி டேட்டாவை எடுத்து நாங்க பைனான்ஸ் என்கிற பேருல அது பண்றோம் இது பண்றோம்ன்னு பத்திரைகையில நியூஸ் போடுவ எல்லாம் தெரிஞ்சி கேட்டா லவ் பண்ற மாதிரி நடிச்சி டேட்டா எடுக்க தான் வந்தேன், ஆனா என்னால உன்னை லவ் பண்ற மாதிரி மட்டும் நடிக்க முடியல ஐ ரியலி லவ் யூன்னு நடிச்சு நாடகம் போடுவ, நாங்க எதுவுமே பேசாம சரின்னு தலையாட்டுன்னா நான் நல்லவன் , கோபத்துல ஏதாவது பேசிட்டா நான் கெட்டவன் உடனே என்னை வேண்டாம்ன்னு சொல்லுவ.

காதல், வாழ்க்கைன்னா அவ்வளவு ஈஸியா போச்சா முப்பத்தியொரு நாள் காதலர்களா வாழ்ந்திருக்கோம் இதோ இங்க” என தன் இதழை காட்டியவன்,

“ஒரு நூறு கொடுத்திருப்பியா ” என்றவன் அவளது கழுத்தடியை காட்டி “ஆயிரம் ம்ஹும் கணக்கில்லாம கொடுத்திருக்கேன், ஒவ்வொரு முத்தமும் இப்போ நினைச்சாலும் உடம்பெல்லாம் சிலிர்க்கும், ஒவ்வொரு நொடியும் உன்னை மனைவியா நினைச்சு தான் வாழ்ந்தேன் ஸோ புடிச்சாலும் புடிக்கட்டலும் நீ தான் என் மனைவி.

எனக்கு தெரியும்,உன் காதல்ல பொய் இருந்தது கிடையாது ஸோ உன் காதல் மேல எனக்கு சந்தேகம் கிடையாது ஆனா பொய் சொன்ன பார்த்தியா அதான் டி வலிக்குது அதை விட எப்போ எந்த பிரச்சனை வந்தாலும் பிரிஞ்சிடலாம் பிரிஞ்சிடலாம்ன்னு சொல்லிட்டு போற பார்த்தியா அது இன்னும் வலிக்குது.

இப்போ சொல்றேன் டி தப்பு தான் என்ன இருந்தாலும் உன்னை தப்பான பொண்ணுன்னு அன்னைக்கு சொல்லிருக்க கூடாது, சொல்லிட்டேன் இப்போ என்னடி சாரி கேட்கணுமா. ஓகே சாரி போதுமா, என் மேல கோபம்ன்னா, நான் பேசுறது புடிக்கலைன்னா, நாலு என்ன எட்டு அடி கூட அடி ஏண்டா அப்படி பேசுறேன்னு சட்டையை புடிச்சு கேளு ,ஆனா நீ எனக்கு வேண்டாம் நாம பிரிஞ்சிடலாம், செட் ஆகாதுன்னு ஸீன் போட்ட என்ன செய்வேன்னு சொல்ல மாட்டேன் செய்வேன்” என்றவன் விழிகளை விரித்து தன்னையே வெறித்து கொண்டிருந்தவளின் மென் இதழை நோக்கி குனிந்தவன் பின்பு என்ன நினைத்தானோ நிமிர்ந்து நெற்றியில் இதழ் பதிக்க கண்களை மூடி அவனது இதழின் ஸ்பரிசத்தை உணர்ந்தவள் எதுவும் பேசாமல் அப்படியே நிற்கவும்,

“போ என் தங்கச்சி வெயிட் பண்ணிட்டு இருப்பா” என்று சொல்லி அனுப்பி விட இஷிதாவும் எதுவும் பேசாமல் வெளியேறினாள்.

கிரண் காலை கண்விழித்த பொழுது அவன் எதிரே கையில்  அவன் எப்பொழுதும் சுவைக்கும் டி கப்புடன் இதழில் புன்னகையுடன் எதிர் கொண்ட தாரிக்காவை ஒருகணம் பார்த்தவன் டீயை வாங்கி பருகிவிட்டு எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொள்ள, அவன் உள்ளே செல்லும் வரை காத்திருந்தவள் அவன் கதவை சாற்றும் சத்தம் கேட்டதும் அவனது அலைபேசியை கையில் எடுத்து ஆராய துவங்க, அது கிரணின் முக அடையாளத்தை காட்டுமாறு கேட்கவும் எரிச்சல் அடைந்தவள் அலைபேசியை மீண்டும் எடுத்த இடத்தில் வைக்க போகும் பொழுது அலைபேசி சிணுங்கவும் திரையில், பெர்சனல் அசிஸ்டன்ட் என்னும் பெயர் மிளிர்ந்ததை புருவம் சுருக்கி பார்த்தவள் அதை அட்டென்ட் செய்ய எதிர் தரப்பில்,

“பாஸ் யாருன்னு கண்டுபுச்சு அடைச்சு வச்சிருக்கோம் ஒரு வார்த்தை சொல்லுங்க அவனை அழிச்சிடலாம்”என அழைப்பை எடுத்த மறுநொடி இவ்வாறு ஒருவன் முரட்டு குரலில் பேசவும் திகில் அடைந்தவளுக்கு உடல் வியர்வையில் குளித்துவிட, அப்படியே நின்றவள் குளியலறை கதவு திறக்கும் சத்தத்தில் சுயம் பெற்று  தன் முகத்தை துப்பட்டாவால் துடைத்து கொண்டு வலுக்கட்டாயமாக சிரித்தபடி கிரணை நெருங்கி அவனது அலைபேசியை அவனிடம் நீட்டியவள்,

“உங்க ஃபோன் ரிங் ஆச்சு அதான் அட்டென்ட் பண்ணினேன் யாருன்னு தெரியல”  என்றவள் மிக இயல்பாக நடந்து கொள்ள, அவனும் சிறு தலையசைப்புடன்  வாங்கியவன் தள்ளி சென்று பேசிவிட்டு அவள் அருகில் வர, அவளுது உடலில் மெல்லிய நடுக்கம் நொடிப்பொழுதில் தோன்றி மறைவதை பார்த்தவன்,

“என்னாச்சு ஏன் ஒரு மாதிரி இருக்க” எத்தனை அக்கறையான வார்த்தைகள் இதுக்காகவே அவனையே அவ்வளவு காதலித்தாளே ஆனால்  ஏனோ இன்று அதெல்லாம் பொய்யாக தோன்றியது, முகத்தை முடிந்தமட்டும் இயல்பாக வைத்து கொண்டவள்,

“ஒன்னும் இல்லை இவ்வளவு நாள் உங்க டென்ஷன்ல சரியா சாப்பிடல அதான் லேசா தலை தலைவலிக்குது   கொஞ்சம் டிப்ரெஷன் அவ்வளவு தான், அதான் நீங்க நல்லபடியா வந்துடீங்களே இனி எல்லாம் சரியாகிடும்” என்று அழகாக தன் தலை சாய்த்து சிரித்தபடி கூறினாள். மனதிற்குள் வலி இருந்தாலும் வெளியே காட்டிக்கொள்ளாது சமாளித்தாள்.

“டிப்ரெஷன் டேப்லட் போடுறியா இல்லையா”

“இல்லை அப்புறமா போடுறேன்” என்று எழுந்து கொள்ள போனவளை கரம் பிடித்து அமரவைத்தவன் மாத்திரையை எடுத்து வந்து வழமை போல் அவளிடம் கொடுக்க மறுக்காமல் வாங்கிகொண்டவள் மாத்திரையை முழுங்காமல் அடிநாக்கில் பதுக்கிக்கொண்டு அவன் முன்பு முழுங்குவதை போல நடித்து விட, அவளது கரம் பிடித்து அவள் அருகில் அமர்ந்தவன்,

“போலீஸ் கேஸ் பத்தி நீ எதுவுமே கேட்கல” என்று கேட்க , அவன் முகத்தை தன் கரத்தில் ஏந்தியவள்,”உங்களை சந்தேகப்பட்டா நான் என்னையே சந்தேகப்படுவது போல இருக்காதா, எல்லாம் அக்னியோட வேலையா தான் இருக்கும்  ” என்று கூறவும் அவளை தன்னுடன் இறுக்கமாக அணைத்துக்கொண்டவன் ,

“சாரி அன்னைக்கு உன்கிட்ட ரொம்ப ஹார்ஷா நடந்துக்கிட்டேன் நீ அப்படி பேசியதும் என்னால கண்ட்ரோல் பண்ண முடியாம கோபம் வந்துடுச்சு” என்றவன் ,

“இப்போ ஒரு முக்கியமான வேலையா போறேன் ஈவினிங் ரெடியா இரு டின்னருக்கு வெளிய போகலாம் நேத்ராவையும் வர சொல்லு அவளும் வீட்டுக்குள்ளையே தானே அடைஞ்சி கிடக்குறா” என்று கூற ஆமோதிப்பதாக தலையசைத்தவள். அவன் உடை மாற்ற சென்றதும் ரெஸ்ட் ரூமிற்குள் நுழைந்து மாத்திரையை ஃப்ளஷ் செய்தவள் உடனே வாயை ஒன்றுக்கு இரெண்டு முறை கொப்பளித்துவிட்டு,  சோர்வாக இருப்பது போல அவன் பார்க்க கட்டிலில் படுத்து கொள்ள அவளது தலையை தடவி நெற்றியில் இதழ் பதித்தவன் வேகமாக வெளியேற அவன் கார் வாசலை தாண்டியதும்  வீட்டின் கதவை மற்றும் சாத்தியவள் தன் காரை எடுத்து கொண்டு அவனது காரை  சரியான இடைவெளி விட்டு பின் தொடர்ந்தாள்.