MIRUTHNAIN KAVITHAI IVAL 49.1

cover page-7374da3b

MIRUTHNAIN KAVITHAI IVAL 49.1

மிருதனின் கவிதை இவள் 49.1

கிரண் பாஸ்கரின் ஃபார்மசீட்டிகல்ஸ் (மருந்து) தயாரிக்கும் தொழிற்சாலை, பைனான்ஸ் கம்பெனி மற்றும் ப்ரோடீன் பவ்டர் தயாரிக்கும் நிறுவனமான ஸ்போர்ட்ஸ் சபிலீமென்ட் அண்ட் நியூட்ரிஷன் ஃபார்ம் என அவனது அணைத்து நிறுவனங்களையும் நாற்கட்டிக்ஸ் துறையினர் புரட்டிபோட்டுக்கொண்டிருக்க நடக்கும் அத்தனையையும் மிக அமைதியாக பார்வையிட்டு கொண்டிருந்தான் கிரண் பாஸ்கர்.

அதே நேரம் நாசியை தீண்டும் நறுமணத்திலும், மிளிரும் வண்ண விளக்குகளாலும் ரம்மியமாக காட்சியளித்த ரூஃப் டாப் ரசார்ட்டில்,

“எதுக்கு வர சொன்ன?” முகத்தில் கோபம் ஜெனிக்க தன் முன்னே கால் மேல் கால் போட்டபடி அமர்ந்திருந்த தீரனை பார்த்து வினவினாள் தாரிக்கா.

“பேசணும் தாரிக்கா ப்ளீஸ் ஒரு பத்து நிமிஷம் நான் சொல்ல வர்றதை பொறுமையா கேளு” தன் நிலையில் இருந்து இறங்கி வந்து பேசியவனிடம் மறுத்து பேச முடியாமல் அவன் முன்னே வந்து அமர்ந்தாள் தாரிக்கா.

“என்ன சாப்பிடுற” என்ற தீரனை பார்த்து இறுக்கமாக முறைத்தவள்,

“என் ஹஸ்பண்ட்ட பார்த்து ரெண்டு நாள் ஆகுது, விசாரணைன்னு கூட்டிட்டு போய் இப்போ வர அவரை என்னால பார்க்க முடியல அவருக்கு என்ன ஆச்சோன்னு நான் தவிச்சு போய் இருக்கேன், நீ என்னன்னா என்ன சாப்பிடுறன்னு சாதாரணமா கேட்குற, பேச ஏதாவது இருந்தா சொல்லு இல்லைன்னா கிளம்பி போயிட்டே இருக்கேன்” என்று எழும்ப போனவளை,

“ஓகே ரிலாக்ஸ் உக்காரு” என்று செல்ல விடமால் தடுத்தவன் அவளிடம் சில தாள்கள் அடங்கிய கோப்பை காட்டி பார்க்குமாறு கூறினான்.

தீரனின் முகத்தை ஒருகணம் பார்த்துவிட்டு கோப்பை வாங்கியவள் சில நிமிடங்கள் கழித்து அதை அவனிடமே திரும்ப கொடுத்துவிட்டு என்ன என்பது போல தீரனை பார்க்கவும் தீரன்,

“இதை பார்த்ததுக்கு அப்புறமும் நீ கிரணை நம்புறியா” என்று கேட்டு விட தாரிக்கவோ,

“நீ திட்டம் போட்டு என் ஹஸ்பண்டை இதுல மாட்டி விட்டிருக்க இப்போ என்னை நம்பை வைக்கிறதுக்காக நாலு பேப்பரையும் போடோஸையும் கொண்டு வந்தா நான் உன்னை நம்பியிருவேனா என்ன, நீ என்ன சொன்னாலும் சரி என் கிரண் என்னைக்குமே இப்படி ஒரு தப்பை பண்ணவே மாட்டாரு, நீ என்ன பிளான் பண்ணினாலும் என்னையும் அவரையும் பிரிக்க முடியாது. நான் அவரை விட்டு வர மாட்டேன்” என ஆக்ரோஷமாக சீரியவள் சில நொடிகளில் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு,

“நாங்க அப்படி என்னை துரோகம் தான் உனக்கு செஞ்சோம் தீரன் ஏன் இப்படி கஷ்டப்படுத்துற அவரு பாவம் உன்னால இப்போ அவருக்கு எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா” என கண்ணீருடன் கெஞ்சவும் ,தன் பக்கம் இருந்த தண்ணீர் குவளையை அவள் அருகே தள்ளிவிட்டு அவளை பருகுமாறு கூறியவன்,

“நான் உன் புருஷனுக்கு என்ன துரோகம் பண்ணினேன் தாரிக்கா இல்லை, என் மேகா தான் உன் புருஷனுக்கு என்ன துரோகம் செஞ்சா” என மிக நிதானமாக வினவிய தீரன், அவள் முகத்தை பார்த்தபடி,

“எங்க கம்பெனி டேட்டாவை திருடினது உன் புருஷன். அன்னைக்கு எங்க மேல ஷூட்வுட் நடத்தியது உன் புருஷன், அந்த ஷூடவுட்ல அஷோக்குக்கு ஏதாவது ஆகிருந்தா உன்னால தாங்கிக்க முடியுமா, மேகா என்ன தப்பு செஞ்சா நேத்ராவை யூஸ் பண்ணி மேகாக்கு எதிரா ச்ச எல்லா தப்பும் செய்யிறது உன் புருஷன் மட்டும் தான் தாரிக்கா, நிதானமா யோசி உனக்கே புரியும். இதனால் வரை நான் பொறுமையா இருந்தேன் இனிமே இருக்க மாட்டேன். சீக்கிரமா அவன் உண்மையான சுயரூபம் வெளிய வரும் நீ புரிஞ்சிக்கிற நாளும் வரும் நான் சொல்றது ஒரே ஒரு விஷயம் தான், எப்பவும் என் வீட்டு வாசல் உங்களுக்காக திறந்து தான் இருக்கும் உனக்கும் நேத்ராக்கும் இப்பவும் இரெண்டு அண்ணனுங்க இருக்காங்க, அதை மட்டும் எப்பவும் மறந்திராத” என்றவன் அந்த கோப்பை அவளிடமே விட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட, தீரன் பேசிய ஒவ்வொரு வார்த்தைகளையும் திரும்ப திரும்ப எண்ணி பார்த்தவள் மனம் தடுமாற துவங்கியது.

நாற்காட்டிக்ஸ் துறையின் ரெய்டு முடிந்து முழுதாக ஒரு மணிநேரம் கூட கடந்திடாத நிலையில் சகல மரியாதையுடன் கிரண் தன் வீட்டிற்கு அனுப்பப்பட்டான்.மூன்று நாட்களாக தொடர்ந்து நடந்த சோதனையில் கிரணுக்கு எதிராக எதுவுமே சிக்கவில்லை என்றதும் இது கிரண் பாஸ்கரின் பெயரை கெடுப்பதற்காக யாரோ செய்த திட்டமிட்ட சதி என்று தொலைக்காட்சி ஊடகங்கள் பேசி தீர்க்க.

கிரண் நிச்சயம் சிக்குவான் அவனை மொத்தமாக எழ விடாமல் செய்துவிடலாம் என்று இருந்த தீரனுக்கு தான் இந்த செய்தி பேர் அதிர்ச்சியாக வந்து சேர்ந்தது. அடுத்து என்ன செய்யலாம் என்ற யோசனையில் இறங்கிய தீரன் அடுத்து அழைத்தது என்னவனோ அவன் நியமித்த உளவாளி ஆதிலுக்கு தான்.

“டாக்யூமென்ட்ஸ்ல இருந்து எதுவுமே கிடைக்கல சார்”

“எப்படி ஆதில் இது சாத்தியம், டாக்யூமென்ட்ஸ் கிடைக்காட்டாலும் ப்ராடக்ட்ஸை டெஸ்ட் பண்ணும் பொழுது தெரிஞ்சிருக்குமே” தீரனின் குரல் ஏமாற்றத்தை பிரதிபலித்தது.

“அதான் சார் எனக்கும் புரியல இப்போதைக்கு நமக்கு யூஸ் ஆகுற மாதிரி எதுவும் கிடைக்கல கிடைச்சதோட போட்டோசை நான் உங்களுக்கு மெயில் பண்ணிருக்கேன் அது அவரு படிச்ச கான்வென்ட் நினைக்கிறேன் லாக்கர்ல அதான் இருந்தது. அப்புறம் கொஞ்ச பழைய போட்டோஸ் கிடைச்சிருக்கு சார்”

“அதை வச்சு என்ன பண்றது ஆதில் வீ டோன்ட் ஹவ் டைம்”

“புரியுது சார் ஆனா இப்போதைக்கு நமக்கு டாக்யூமென்ட்ஸ் தான் சாலிட் எவிடென்ஸ் ஆனா அதை தான் எங்க அப்படி பத்திரப்படுத்தி வச்சிருக்காருன்னு தெரியல அப்புறம்  எனக்கு ஒரு சந்தேகம் சார், அவரோட இல்லீகல் வொர்க்காக ஏன் அவரு தனியா ஒரு மேன்யுபாக்சரிங் யூனிட் வச்சிருக்க கூடாது, நான் பார்த்தது கூட அங்க இருந்து வந்த ட்ரக்கா இருக்கலாமே”

“நானும் யோசிச்சேன் ஆனா அதெல்லாம் சீக்கிரமா கண்டுபுடிக்கணும். வெறும் யூகத்தை மட்டும் வச்சு ஒன்னும் பண்ண முடியாது வீ நீட் எவிடென்ஸ் “

“எப்படியாவது எவிடென்ஸ் கலெக்ட் பண்ண ட்ரை பண்றேன், சீக்கிரம் ப்ராடக்ட்ஸ் சாம்பிள் கலெக்ட் பண்றேன் அதை நீங்க இன்னொரு முறை உங்க இன்ஃபுளூயன்ஸ் மூலமா லேப் டெஸ்ட்க்கு அனுப்புங்க அதுல மட்டும் ப்ரூவ் ஆகிட்டா நமக்கு ஸ்ட்ராங் எவிடென்ஸ் கிடைச்சிரும்”

“இந்நேரத்துக்கு அவன் அலர்ட் ஆகிருப்பான் ஆதில் இனிமே ஒவ்வொரு அடியும் நிதானமா எடுத்து வைக்கணும் அவன்கிட்ட சிக்கிக்காத ரொம்ப கவனமா இரு ஹீ இஸ் ரியலி டேஞ்சரஸ்”

“நான் பார்த்துகிறேன் சார்” என்று தீரனுக்கு உறுதியளித்துவிட்டு அவன் தன் அழைப்பை துண்டிக்க, உள்ளே அத்தனை காவல் இருக்கும் பொழுதே நாற்கட்டிக்ஸ் கண்ணில் மண்ணை தூவி ரெய்டில் சிக்காமல் தப்பித்திருக்கும் கிரணை ஆரம்பித்திலே கிள்ளி வீசிருக்க வேண்டும் அவனை சாதாரணமாக எண்ணி வளரவிட்டது பெரும் தவறு என்று தீரன் காலம் கடந்து சிந்தித்தான்.

அதே நேரம் வானம் இருண்டு கிடக்க ஊருக்கு ஒதுக்கு புறமான அந்த பறந்து விரிந்த கொடவுனில், இரவு வேளையின் நிசப்தத்தை கிழித்தபடி மெஷின்கள் ஒன்றுக்கொன்று உராயும் சத்தத்திற்கு நடுவே தன் கையில் ஸ்காட்சுடன் அலைபேசியில் யாரிடமோ சிரித்து பேசி கொண்டிருந்த கிரணோ,

“நான் தான் சொன்னேன்ல நாம அவ்வளவு சீக்கிரம் எல்லாம் மாட்ட மாட்டோம் தைரியமா இருங்கன்னு நீங்க தான் ஜி ரொம்பவே பயந்துடீங்க” என்று சொல்ல,

“எப்படி? டெஸ்ட்ல கூட வெளியவே தெரியல” என ஆச்சரியமாக வினவியவரை பார்த்து ஆர்ப்பாட்டம் இல்லாது சிரித்தவன்,

“ஒரு சில ரகசியங்கள் ரகசியமா இருக்கிற தான் நல்லது ஜி, எது எப்படி இருந்தா என்ன உங்க ஷேர் உங்களுக்கு வரும் கவலைய விடுங்க” என்று கூறவும் அவர்,

“கவனம் கிரண் மறுபடியும் இப்படி ஒரு சிக்கல் வராம பார்த்துக்கோ”என்று சொல்ல,

“நான் பார்த்துகிறேன் எனக்கும் அவனுக்கும் தீர்க்க வேண்டிய பழைய கணக்கு ஒன்னு இருக்கு கொஞ்சம் விளையாடிட்டு வேட்டையாடலாம்ன்னு நினைச்சேன் ஆனா வேட்டையாடுற நேரம் வந்திருச்சு போல அவன் விளையாட்டை நான் முடிச்சு வைக்கிறேன்” என்றவன் மனுபாக்ச்சரிங் அறைக்குள் நுழைந்து சீல் செய்யப்பட்ட ஒரு சிறிய பிளாஸ்டிக் பொட்டலத்தை பிரித்து அதில் மாத்திரை வடிவத்தில் இருந்த போதை மருந்தை தன் கரங்களில் வைத்து நசுங்கி தன் மூக்கால் நுகர்ந்து நன்கு உள்ளிழுத்து தன் நெஞ்சு குழிக்குள் அதை நிரப்பிக்கொண்டவன், தன் கண்கள் சொருக கொஞ்சம் குறுகலாக இருக்கும் அண்டர் கிரவுண்ட்க்கு செல்லும் படிக்கட்டில் இறங்கி தன் அலுவலக அறைக்குள் நுழைந்து தன் கண்களை மூடினான்.

கிரணை பற்றிய சிந்தையிலே உழன்ற தீரன் நேரம் கடந்து வந்த பொழுது மனைவியின் பாராமுகம் அவனை இன்னும் வருத்தியது.

ஒரு நாள் போனால் தானாக சரியாகிவிடுவாள் என இவன் எண்ணியிருக்க அவளிடம் தீரனுடன் இயல்பாக பேசுவதற்கான அறிகுறியே தென்படவில்லை.

வழக்கமாக தீரன் வரும் வரை காத்திருப்பவள் இப்பொழுதெல்லாம் அவன் வருவதற்குள் உறங்கிவிட இவனுக்கு தான் கஷ்டமாக இருந்தது. தான் அருகில் சென்றாலே கண்ணீர் வடிப்பவளிடம் என்ன பேசி சரி செய்வது என்று அவனுக்கே புரியவில்லை. ஆனால் நித்தமும் தான் அன்று அவ்வாறு பேசியதற்காக மிகவும் வருந்தினான்.

ஒருகட்டத்தில் தன் கர்வத்தை விடுத்தது மன்னிப்பு கேட்டு பேசு டி என்று கெஞ்சி கூட பார்த்துவிட்டான் தன்னவள் மீது தான் எத்தனை காதல் கொண்டுள்ளோம் என அவனுக்கு அப்பொழுது புரிந்தது. அவள் பழையபடி பேசினால் போதும் என்று அவன் இருக்க ஆனால் மேகாவோ மாட்டேன் என தன் நிலையில் உறுதியாக இருக்க இவன் தான் அவளது விலகளில் தவித்து போனான்.

இன்று கூட தன் முகத்தை பார்க்க கூடாது என்பதற்காகவே நேரமே உணவை முடித்து விட்டு உறங்கும் மனைவியை ஏக்கமாக பார்த்தவன் குளித்து உடை மாற்றிவிட்டு அவள் அருகே வர அவளது கன்னத்தில் மெல்லிய காய்ந்த நீர் கோடுகள் அவள் அழுததிற்கு சாட்சியாக தெரிய,

“ஏண்டி இப்படி அழுது உன்னை நீயே கஷ்டப்படுத்திக்கிற” என உறங்கும் அவள் முகத்தை பார்த்து ஏக்கமாக கேட்டுவிட்டு அவள் நெற்றியில் முத்தம் பதித்து அவள் அருகில் வந்து வழமை போல தடுப்பாக இருந்த தலையணையை தூக்கி ஓரம் வீசியவன் அவளை இழுத்து அணைத்தபடி உறங்கி விட, அவளும் ஆழ்ந்த நித்திரையில் அவன் அணைப்புக்குள் அடங்கி தான் போனாள்.

மறுநாள் என்றைக்கும் விட நேரமே விழித்து கொண்ட மேகாவின் கண்ணில் அவளை அணைத்தபடி உறங்கி கொண்டிருந்த தீரன் தான் தெரிந்தான்.

சட்டென்று அவன் கரத்தை தன் மீது இருந்து விலகி கொண்டவள் அவனை அனல் தெறிக்க பார்க்க உறக்கத்தின் பிடியில் இருந்து விழித்தெழுந்தவன் அவளை கேள்வியாக பார்க்க அவளோ,

“நான் என்ன சொன்னேன் நீங்க என்ன பண்ணிருக்கீங்க தீரன்” என்றாள் சத்தமாக, அவனோ என்ன என்று சலிப்புடன் கேட்க,

“நடிக்காதீங்க தீரன் இனிமே உங்க கை மேல பட்டுச்சு” என எச்சரிக்கை விடுக்கவும் புரிந்து கொண்டவன்,

“பட்டுச்சுன்னா” என கேட்க,

அவனை திரும்பி பார்த்து முறைத்தவள்,”பட கூடாது அவ்வளவு தான்” என்றாள் காட்டமாக , அவளை மேல் இருந்து கீழ் வரை ஆராய்ச்சியாக பார்த்த தீரன்,

“அப்படியெல்லாம் நீ சொல்ற மாதிரி இருக்க முடியாது” என அவளது ஆக்ரோஷ விழிகளுடன் தன் விழிகளை கலக்கவிட்டபடி கூற,

“இந்த பேச்செல்லாம் என்கிட்ட வேண்டாம் இனிமே உங்களுக்கும் எனக்கும் ஒன்னும் இல்லை கைய மேல போடுறது கட்டிபுடிக்கிறது இதெல்லாம் வேண்டாம்”என்று உறுதியாக சொல்ல, தன் நாடியை நீவியபடி அவள் முகத்தை ஒரு கணம் பார்த்தவன்,

“ஃபைன் கை மேல படாது” என்று சொல்ல,

“நல்லது அப்படியே இருங்க” என அவள் சொல்லி முடிக்கவில்லை அவளை நோக்கி ஒவ்வொரு அடியாக அவன் எடுத்து வைக்கவும்,

“தீரன் டச் பண்ண மாட்டேன்னு சொல்லிருக்கீங்க” என்று மேகா கண்டிக்கும் குரலில் சொல்லவும் மெல்ல சிரித்தவன் தன் கரங்களை உயர்த்தி,”நான் டச் பண்ணலையே” என்றபடி நடந்து வர, “தீரன்” என்றபடி பின்னோக்கி சென்றவள் சுவற்றில் மோதி நிற்கவும் காற்றுகூட நுழைய முடியாதளவு நெருக்கத்தில் அவள் அருகில் வந்து நின்றவன் அவள் சுதாரிப்பதற்குள் அவளது வறண்ட இதழை கணப்பொழுதில் அணைத்து விடுவிக்கவும்ம் தன் இதழை தன் உள்ளங்கையால் துடைத்தவள்,” தீரன் நான் என்ன சொல்லிட்டு இருக்கேன் நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க” என கத்த,

“நீ கை தான் பட கூடாது சொன்ன லிப்ஸ்ன்னு சொல்லவே இல்லையே ரூல்ஸை ஒழுங்கா போடாதது உன் தப்பு” என்று இவன் பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு அவளை பார்க்கவும்,

“இப்படியெல்லாம் பண்ணி என்னை சமாதானம் படுத்தெல்லாம்ன்னு மட்டும் நினைக்காதீங்க தீரன்”என்று இன்னும் பலவாறு திட்டியவள் இன்னும் நின்றால் ஏதும் வம்பு செய்வான் என எண்ணி விஷமமாய் சிரிக்கும் கணவனை பார்த்து முறைத்துவிட்டு கீழே சென்று விட ,

“கத்திரிக்காய்க்கு கைகால் முளைச்சது போல இருந்துட்டு என்ன பாடு படுத்துறா” என முணுமுணுத்தவன் தன்னை பார்த்து முறைத்தபடி செல்லும் மனைவியை பார்த்து பெருமூச்சு விட்டபடி சோஃபாவில் வந்து அமர்ந்தான்.

இத்தனை நாளாக அவளை எப்படி தன்னுடன் மீண்டும் இணக்கமாக வைத்து கொள்வது என்று புரியாமல் திண்டாடியவனுக்கு அவளை இவ்வாறு சீண்டியவது பழைய நிலைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என தோன்ற தன்னவளை அவன் சீண்ட ஆரம்பித்து விட்டான்.

தீரன் தன் அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்த பொழுது குளியலறையில் இருந்து வெளி வந்தாள் மேகா.

இன்று தூவிய சாரல் மழையில் மலர்ந்த மலர் போல எளிமையான பருத்தி புடவையில் பொலிவுடன் இருந்தாள். தலைக்கு குளித்திருப்பாள் போல கேசத்தில் இருந்து சொட்டிய நீர் அவளது வஸ்திரத்தை கொஞ்சம் நனைத்திருக்க கழுத்து பகுதியிலும் வதனத்திலும் ஆங்காங்கே இருந்த நீர் திவலைகளை டவலால் ஒற்றியபடி கண்ணாடியின் முன் வந்து நின்றவளை தீரனின் பார்வை துளைத்தது.

மனதிற்குள் சந்தேகம் தோன்றவும் நிமிர்ந்து கண்ணாடியை பார்த்தாள்! அவளவன் தான் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான். அவனுடைய பார்வையும் அதில் தெரிந்த மயக்கத்தையும் கண்டுகொண்ட மேகாவின் வதனம் சட்டென்று சிவந்துவிட அதை அவனிடம் இருந்து மறைக்கும் பொருட்டு தலை தாழ்த்திக்கொண்டவள் ஓரக்கண்ணால் அவனை ஒருகணம் பார்த்துவிட்டு தன் வேலையில் கவனமாய் இருக்க.

தீரனின் மனமோ,”சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டுன்னு சும்மாவா பாடிருக்காங்க ம்ம் புடவை ஒரு தனி அழகு தான். அழகா இருக்கா ஆனா ரொம்ப படுத்துறா” என்று முணுமுணுத்தவனின் பார்வையும் வார்த்தைகளும் ரசனையோடு தன்னவளை தழுவி செல்ல அவன் ரசிப்பது தெரிந்தும் மேகா கண்டுகொள்ளாமல் புடவையின் ஃபிலீட்ஸை சரி செய்து கொண்டிருக்க,

தன் சட்டை கையை முழங்கை வரை மடித்துவிட்டபடி அவள் முன்பு கொஞ்சம் நெருக்கமாக வந்து நின்றவன் சட்டென்று தன் ஒற்றை காலை மட்டும் தரையில் ஊன்றி முழங்காலிட்டு ஃபிலீட்ஸில் இருந்த அவளது கரத்தை எடுத்து விட்டு தானே அவளுக்கு ஒவ்வொரு ஃபிலீட்சாக சரி செய்ய,

“தீரன் நான் பார்த்துகிறேன் ” என்று மேகா தடுக்கவும் அவளை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்துவிட்டு தன் பணியை செய்ய,

“எல்லாம் பேசிட்டு இப்படியெல்லாம் செஞ்சா நான் பல்லக்காட்டணுமா இந்த முறை முடியாது” என தன் மனதிற்குள் கூறிக்கொண்டவள் அவன் எழுந்து நின்று அவளை பார்க்கவும் தன் பார்வையை திருப்பி கொண்டு மீண்டும் கண்ணாடியின் முன்பு சென்று நிற்க, அவள் சொல்லாமலே அவளது மனதை படித்த தீரன் தன் பின்னங்கழுத்தை வருடியபடி அவள் பின்னால் வந்து நின்று மெதுவாக தன் நாடியை அவளது கழுத்து வளைவில் வைத்து, தன் உதிரத்தை சுமக்கும் தன் உயிரானவளின் வயிற்றை நிதானமாக வருடியபடி,

“நார்மலா வீட்ல இருக்கும் பொழுது நைட்டியிலே சுத்தி வருவ இன்னைக்கு என்ன புடவையிலே கலக்குறீங்க மேடம். ஆனா வீட்ல புடவை அனீஸியா இருக்குமே டா. வசதியான ட்ரெஸ் ஏதாவது போட்டுக்கலாமே, புடவை கட்டிருக்க ஸ்டெப்ஸ் இறங்கும் பொழுது கவனம்” என்றவன் அவளிடம் பதில் இல்லாமல் போகவும் “இன்னைக்கு வாமிட்டிங் எப்படி இருக்கு, குட்டி ரொம்ப கஷ்ட படுத்துறாளா” என்று கேட்க அதற்கும் மேகா எந்த எதிர்வினையும் ஆற்றாமல் அமைதியாக இருக்கவும் அவன்,

“பேசவே மாட்டியாடி. ரொம்ப மிஸ் பண்றேன் டி உன்னை. இந்த தீரன் வேண்டாமா உனக்கு ” என்று குரலில் ஏக்கத்தை தேக்கியபடி கேட்கவும் தன் உதட்டை கடித்து தன் கேவளை கட்டுப்படுத்தியவள் அவனிடம் இருந்து விலகியபடி தன் டாக்டர் கோட்டை எடுக்கவும் தீரன் அவளது ஒவ்வொரு செய்கையையும் புருவம் சுருக்கி பார்க்க அவளோ,

“நான் இன்னையில இருந்து ஹாஸ்ப்பிட்டல் போறேன்” என ஒரு செய்தியாக கூறிவிட்டு அவன் பதிலை எதிர்பாராமல் வெளியேற பார்க்க, மேகாவின் கரத்தை இறுக்கமாக பிடித்து அவளை செல்ல விடாமல் தடுத்திருந்தான் தீரன் .

“கையை விடுங்க தீரன்” அவனை முறைத்தபடி அவன் பிடியில் இருந்து தன் கரத்தை விடுவிக்க முயற்சித்தாள்.

அவனோ அவளது கரத்தை விடவும் இல்லை ஒருவார்த்தை பேசவும் இல்லை ஆனால் கோபம் ! அவனது விடைத்து சிவந்திருந்த நாசியும் இடுங்கியிருந்த புருவங்களும் அதை நன்றாகவே வெளிப்படுத்தியது.

“தீரன் வலிக்குது” வலியுடன் அவள் சொல்லவும் தன் பிடியின் இறுக்கத்தை தளர்த்தியவன்,

” எனக்கும் பொறுமை ஒரு எல்லை வரை தான் இருக்கும் என்னை கோபப்படுத்தி பார்க்காத” என அடக்கப்பட்ட கோபத்துடன் கூறினான்.

” நீங்க என்ன சொன்னாலும் நான் ஹாஸ்ப்பிட்டல் போவேன்” என மேகா மிகவும் உறுதியாக தன் பிடியில் நிற்க தீரனோ தன்னவளின் பிடிவாதம் கண்டு பல்லை கடித்தவன் தன் முகத்தை அழுத்தமாக தேய்த்து கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்து,

“இந்த நேரத்துல அங்க எதுக்கு டி? வீட்ல இருந்து ரெஸ்ட் எடு , பாபா பிறந்ததுக்கு அப்புறம் போ டி” என்றான் நிதானமாக.

“ஏன் ப்ரெக்னென்ட்டா இருக்கிறவங்க யாரும் வேலைக்கு போறதில்லையா தீரன், நான் போகணும் அவ்வளவு தான்” கரங்களை குறுக்கே கட்டிக்கொண்டு படபடவென பேசி அவனது நிதானத்தை தன்னால் முடிந்த வரை சோதனை செய்தாள் தீரனின் செல்ல மனைவி.

“உனக்கு ரெஸ்ட் தேவைன்னு டாக்டர் சொன்னதை மறந்துட்டியா டி” எரிச்சலுடன் கேட்டான்.

“எதையும் மறக்கல டேப்லெட்ஸ் நேத்தோட முடிஞ்சிது இப்போ நான் நல்லா இருக்கேன். முன்னாடி போல மயக்கம் எல்லாம் வர்றது இல்லை. ஸோ ஹாஸ்ப்பிட்டல் போறேன்” என விடாப்பிடியாக நின்று வார்த்தைக்கு வார்த்தை தர்க்கம் செய்த மனைவியை ஒன்றும் செய்ய முடியாமல் போன தீரனுக்கு ரெத்த அழுத்தம் ஏறியது தான் மிச்சம்.

“அப்போ கேட்க மாட்ட”

“ம்ஹும்”

“கண்டிப்பா போவ”

“ஆமா”

“ம்ம் நீ அப்பாவி நான் டெரர், டே ஒன், நீயும் நானும் சந்திச்ச முதல் நாள்ல இருந்து இந்த செகண்ட் வரை இந்த முட்ட கண்ணை உருட்டி உருட்டி நீ நினைக்கிறதை மட்டும் தான் டி செஞ்சிட்டு இருக்க” மூச்சிரைக்க விழிகள் சிவக்க சிடுசிடுக்க, மேகா அப்பொழுதும் அவனை பார்த்து முறைக்கவும்,

” அதான் சரி சொல்லிட்டேனே அப்பறோம் என்ன?” அவனவளிடம் பதில் இல்லை, இவன் தான் பேசியே சோர்ந்து போனான்.

“சரி போ பட் நான் தான் உன்னை கூட்டிட்டு போவேன் கூட்டிட்டு வருவேன்”

“அதெல்லாம் வேண்டாம் நானே போய்க்குவேன்” அவள் சொல்லி முடிக்கவில்லை,

“அறைஞ்சேன்னா வா டி”என்று ரௌத்திரமாக சொல்ல அவளோ,” முடியாது” என்று வீம்பாக சொல்ல உக்கிரமாக முறைத்தவன்,” ஒன்னும் என் கூடவா இல்லை வீட்ல இரு முடிவு உன்னுடையது என்னை மீறி தனியா ஹாஸ்ப்பிட்டல் போன நேரா அங்க வந்து எல்லார் முன்னாடியும் உன்னை தூக்கிட்டு போவேன். கண்டிப்பா செய்வேன் ” என தீரன் தீர்க்கமாக சொல்லவும், அவன் சொன்னது போல செய்ய கூடியவன் என்பது புரிந்து போக,

“நம்ம விருப்பத்துக்கு ஒரு முடிவு எடுக்க முடியல” புலம்பிக்கொண்டே அவனுடனே காரில் ஏறினாள். உணர்வுகள் அடிபட்டிருப்பதால் வார்த்தைகள் ஊமையானது போல செல்லும் தூரம் முழுவதும் அவர்கள் இருவருக்கும் இடையே மௌனமே நிலவியது.

சொன்னது போலவே சாயங்காலம் தீரனே நேரில் வந்து மேகாவை மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து செல்ல. உடல் அசதியால் அவள் சீக்கிரமே உறங்கி போக நாம் பேச பேச அவளுக்கு மனதளவில் இன்னும் அழுத்தம் ஏற்பட்டுவிடுமோ என்று எண்ணியவன் மேகாவுக்கு அவகாசம் கொடுக்க முடிவெடுத்து  அவளை தொந்தரவு செய்யாமல் விட்டுவிட்டான்.

அவளுக்கும் இன்று தீரன் காலையில் ‘இந்த தீரன் உனக்கு வேண்டாமா டி’ என கேட்ட தருணமே கோபமெல்லாம் வந்த தடம் தெரியாமல் சென்று விட்டாலும் அவன் இன்னும் பழைய விடயங்களை மறக்காமல் பிரச்சனைகள் வரும்பொழுது காயப்படுத்துவது போல பேசுவதை ஏனோ ஏற்று கொள்ளவே முடியவில்லை.

இதற்கு முன்பு சரி, ஆனால் குழந்தை, தாய்மை, தந்தை என முக்கிய பொறுப்புக்குள் நுழைந்த பின்பு தீரனின் கட்டுப்பாடற்ற கோபமும் அது போன்ற நேரங்களில் அவன் உதிர்க்கும் வார்த்தைகளும் குழந்தைகளை பாதிப்படைய செய்து விட கூடாது என்று எண்ணியவள் தீரனுக்கு அவன் தவறை உணர்த்தி இனி பழைய பேச்சுக்கள் அவர்களுக்கு இடையே என்றுமே வர கூடாது என்று உறுதி எடுத்திருக்க, அதனாலே அவனிடம் அவள் கோபமாக இருப்பது போலவே நடந்து கொள்ள, அவர்கள் இருவரின் வாழ்க்கையும் சிரிப்பு சந்தோசம் என எந்த உணர்வும் இன்றி இயந்திர தன்மையுடன் ஓடியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!