MIRUTHNAIN KAVITHAI IVAL 50.1

cover page-8f32b5e5

MIRUTHNAIN KAVITHAI IVAL 50.1

மிருதனின் கவிதை இவள் 50.1

தான் வாடகைக்கு புக் செய்த டாக்சியில் இருந்து இறங்கி, சக்ரெட் ஹார்ட் ஹையர் செகண்டரி ஸ்கூல், தரம்ஷாலா (ஹிமாச்சலப் பிரதேசத்தின் இரண்டாம் தலைநகரம்) என்று ஆங்கிலத்தில் பெயர் பொறிக்கப்பட்ட பலகையை கரங்களை குறுக்கே கட்டியபடி நிமிர்ந்து பார்த்த தீரன் தன் முன்னே காக்கி உடையில் வந்த பியூனை அழைத்து விபரம் கேட்டவன், பின் சிலநொடிகளில் கதவில் பள்ளி முதல்வர் என்று ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டிருந்த அறையின் கதவை நாகரிகம் கருதி தட்டிவிட்டு உள்ளே நுழைத்தான்.

!!!!!!!!!!

கிரணின் கார் டெல்லியில் இருந்து மஹாத்மா காந்தி மார்க் ரிங் ரோட்டில் திஹார் கிராமத்தை நோக்கி சென்று கொண்டிருக்க தாரிக்கா கண்களில் வழியும் நீரை துடைத்தபடி பின் தொடர்ந்து கொண்டிருந்தாள். அப்பொழுது நேத்ராவிடம் இருந்து அழைப்பு வரவும் காதில் மாட்டியிருந்த ப்ளூடூத் மூலமாக அட்டென்ட் செய்தவள்,

“நேத்ரா நான் சொல்றதை கேளு உடனே கிளம்பி உன் ஃபரண்ட் ஆஷிகா ஃப்லட்க்கு போ, அப்புறம் உடனே உன் மொபைல்ல ஸ்விட்ச் ஆஃப் பண்ணு எது பேசணும்ன்னாலும் ஆஷிகா நம்பர்ல இருந்து பேசு. முக்கியமா கிரணை காண்டாக்ட் பண்ண ட்ரை பண்ணாத. இன்னைக்கு வர பாரு என்கிட்ட இருந்து கால் வரலைன்னா உடனே தீரன் அண்ணாகிட்ட போய்டு, இப்போ உடனே அந்த வீட்டை விட்டு வெளியே போ, நேத்ரா எதையும் உறுதியா சொல்ற நிலைமையில நான் இல்லை கேள்வி கேட்காத கிளம்பு குயிக்” என்று தங்கையை துரித படுத்திய தாரிக்கா அழைப்பை வைத்துவிட்டாள்.

இன்று கிரணுக்கு வந்த அழைப்பை அட்டென்ட் செய்து எதிர் தரப்பில் கூற பட்ட செய்தியை கேட்ட பிறகு, தாரிக்கா மிகவும் பயந்து போனாள். இருந்தும் கண்ணால் காணாமல் எந்த முடிவையும் எடுக்க கூடாது என்று முடிவெடுத்தவள் என்ன ஆனாலும் சரி உண்மையை கண்டறிவதற்காக தன் கணவனை பின்தொடர முடிவெடுத்து தைரியமாக களத்தில் இறங்கி விட்டாள்.

கணவன் மீது தவறில்லை என்றால் அவளுக்கும் மகிழ்ச்சி தான், ஒரு வேலை தீரன் சொல்வது போல அவன் தவறானவனாக இருந்தால் இனி அவனுடன் வாழ்வது மிகவும் ஆபத்து என்று முடிவெடுத்தவள், அவனால் தங்கைக்கு ஏதும் ஆபத்து வந்துவிட கூடாது என்பதற்காக அவளை பத்திரப்படுத்தினாள். தீரனிடம் ஒருவார்த்தை கூறினால் போதும் அவன் தன் உயிரை கொடுத்து தங்கைகளை காப்பாற்றுவான், அவளுக்கும் அது தெரியம் ஆனால் கணவன் மீது சுமத்தப்படும் பழி உண்மையா என்று அறியாமல் யாரிடமும் எதுவும் கூற கூடாது என்று முடிவெடுத்தவள் ஒருவித பயத்துடன் கிரணை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறாள்.

‘இன்னைக்கு வர பாரு என்கிட்ட இருந்து கால் வரலைன்னா உடனே தீரன் அண்ணாகிட்ட போய்டு’ தாரிக்கா கூறியதை எண்ணி பார்த்த நேத்ரா “தீரனை அண்ணான்னா சொன்னா”என்று ஆச்சரியமாக விழி விரித்தவள், பின் தன் தலையை உலுக்கிவிட்டு தாரிக்கா சொன்னதை செயல் படுத்தினாள்.

!!!!!!!!!!!!

“இந்த ஃபோட்டோ பார்க்கும் பொழுது இந்த ஸ்டுடென்ட் இங்க தான் படிச்சிருக்காரு. ஆனா எந்த பேச்ன்னு தெரியாம எப்படி சார் டீட்டையில்ஸ் கொடுக்கிறது. நான் இங்க ஜாயின் பண்ணி ஒன் மந் தான் ஆகுது பழைய பிரின்ஸிபிள் உடம்பு சரியில்லாதனால மெடிக்கல் லீவ்ல இருக்காரு. அவரு மட்டும் தான் ஓல்ட் ஸ்டாஃப் ரொம்ப வருஷமா இங்க வேலை பாக்குறாரு அவருக்கு வேணும்ன்னா தெரிஞ்சிருக்க வாய்ப்பு இருக்கு . மத்த ஸ்டாஃப்ஸ் எல்லாருமே கவர்மெண்ட் ஸ்கூல் போய்ட்டாங்க இப்போ இங்க இருக்கிறவங்க எல்லாருக்கும் மக்சிமம் டென் இயர்ஸ் எக்ஸ்பீரியன்ஸ் தான் இருக்கும். ஒரு க்ளாஸ்க்கு மட்டும் அப்பவே மினிமம் அஞ்சு செக்ஷ்ன்ஸ் உண்டுன்னு கேள்வி பட்டிருக்கேன் இருபது வருஷத்துக்கு முன்னாடி உள்ள ரெகார்டஸ் எல்லாமே ஃபைல் மெயின்டெனன்ஸ் தான். உங்க கிட்ட ப்ராப்பர் டீட்டெயில்ஸ் இல்லை அப்பறோம் எப்படி சார்” பள்ளி முதல்வர் இயலாமையுடன் தீரனை பார்க்க,

“மேம் எனக்கு புரியுது ஆனா ரொம்ப அர்ஜன்ட், அட்லீஸ்ட் அந்த பழைய ப்ரின்சிபிளோட டீட்டையில்சாவது கொடுங்களேன் அவர் எங்க இருக்காருன்னு சொல்லுங்க நான் போய் பார்த்துகிறேன்” என்று தீரன் கேட்கவும்,

“சரி சார் வெயிட் பண்ணுங்க சார் கிட்ட பேசிட்டு உங்களுக்கு கொடுக்குறேன்” என்றவர் சிறிது நேரம் கழித்து தீரனிடம் வந்து,

“அவர் வீட்ல தான் இருக்காரு, பேசிட்டேன் நீங்க போய் பாருங்க இது அவரோட அட்ரஸ்” என்று சிறிய பேப்பரில் அவரது விலாசத்தை எழுதி கொடுத்தவர்,

“வீடு பக்கத்துல தான் இருக்கு யார்கிட்ட கேட்டாலும் சொல்லுவாங்க” என்று அவர் சொல்லவும் அவருக்கு நன்றி தெரிவித்தவன் டாக்சியில் ஏறி தலைமை வாத்தியார் ஓம் பிரசாத் யாதவின் இல்லம் நோக்கி பயணித்தான்.

!!!!!!!!!!!

திஹார் கிராமத்திற்குள் நுழைந்த கிரண் பாஸ்கரின் கார் பல மேடு பள்ளங்களை தாண்டி ஆள்நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு வனப்பகுதியை நோக்கி சென்று ஒரு தொழிற்சாலை முன்பு நிற்கவும் சுதாரித்துக்கொண்டவள் தொலைவிலே தன் காரை மறைவாக நிப்பாட்டிவிட்டு சிறு தயக்கத்துடன் நடந்து முன்னேறி சென்றாள்.

நடக்கும் பொழுது அவதானமாக யாரவது தன்னை கண்காணிக்கிறார்களா என்று சுற்றி பார்த்தவள் இல்லை என்று உறுதியானதும் நடக்க துவங்கினாள்.

சுற்றியும் அடர்ந்த மரங்கள் இருந்ததால் மறைந்து மறைந்து முன்னேறி சென்றவளுக்கு பயம் தொண்டையை அடைக்க ஆனாலும் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் என்னும் உறுதியுடன் நடந்தவளுக்கு, தூரம் நடந்ததால் மூச்சு வேகமாக வாங்கியது. சிறிது நேரம் ஆசுவாசம் அடைந்து விட்டு நடந்து கிரணின் கார் அருகில் வந்தவள் மெதுவாக நடந்து தொழிற்சாலையின் பின்புறம் வந்து சேர்ந்து சுற்றும் முற்றும் பார்க்கும் பொழுது ஒரே ஒரு பழைய வீடு மட்டும் தனியாக இருப்பதை கண்டு யோசனையுடன் அதை பார்த்தவள் நெஞ்சில் தைரியத்தை வரவழைத்து கொண்டு யாரும் தன்னை பார்த்துவிட கூடாது என்கிற வேண்டுதலுடன் அந்த வீட்டை நோக்கி நடந்தாள்.

இவள் நெருங்க நெருங்க அந்த வீட்டில் இருந்து யாரோ முனங்கும் சத்தம் அவளது காதில் விழவும் வேகமாக வீட்டை நெருங்கி உள்ளே நடப்பவற்றை தெரிந்து கொள்ள முயன்றாள். உள்ளே ஆட்கள் நடமாடும் சத்தமும் முனங்கும் சத்தமும் கேட்க அவளால் உள்ளே நடப்பதை தான் பார்க்க முடியவில்லை.

சிறிது நொடியில் வித விதமான ஒலி கேட்டது உற்று கவனித்தாள் யாரோ யாரையோ பயங்கரமாக தாக்குகிறார்கள், சத்தமே சொன்னது. இவளுக்கு நெஞ்சில் நீர் வற்றி போனது போல இருக்க நெஞ்சில் கை வைத்து மூச்சு வாங்கியவள் உள்ளே என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள சுற்றும் முற்றும் பார்த்தாள். சற்று தள்ளி இரும்பு ஜன்னல் ஒன்று பாதி சாத்தப்பட்ட நிலைமையில் இருந்ததும் அங்கே சென்றவள் மெதுவாக சத்தம் வராமல் ஜன்னலை திருந்து பார்த்தாள்.

நாற்காலியில் கரங்கள் பின்னால் சேர்த்து இணைக்கப்பட்ட நிலையில் ஆடவன் ஒருவன் ரத்த வெள்ளத்தில் தலை கவிழ்ந்த நிலையில் கிடந்தான்.

அவனை அடையாளம் காண முடியாதளவுக்கு அவனது முகமும் உடலும் ரத்த வெள்ளத்தில் கிடக்க, அதை கண்டவளுக்கு மயக்கம் வருவது போல் தோன்றுவதும் சுவற்றில் சாய்ந்து நின்று தன்னை ஆசுவாசப்படுத்தியவளுக்கு கரங்கள் வேகமாக நடுங்கியது.

“என்கூட இருந்துட்டு என் உப்பை சாப்டுட்டு எனக்கே துரோகம் பண்றியா” கொஞ்சமும் இரக்கமில்லாது அவன் முகத்தில் நெடியவன் ஒருவன் ஓங்கி குத்த அவன் முகத்தில் இருந்து குருதி வழிய அப்படியே நாற்காலியில் சரிந்தான் . அதை பார்த்து கண்களை மூடி திறந்தவள் மீண்டும் எட்டி பார்க்க, கரங்களில் பட்ட உதிரத்தை துடைத்தபடி அந்த நெடிய ராச்சசன் திரும்பினான். அவனது முகத்தை பார்த்த தாரிகாவுக்கு மூச்சே நின்றது போலானது. அது தன் கணவன் கிரணாக இருக்கும் என்று அவள் நினைக்க வில்லை, அவனாக இருக்க கூடாது என்று எவ்வளவு வேண்டினாள்? ஆனால் அவள் தான் கண்ட காட்சியில் துடித்து போனவள், வெடிக்க இருக்கும் அழுகையை வாயை மூடி தடுத்தவளுக்கு இதயமே நின்று விடும் போல இருந்திருக்குமோ என்னவோ மார்பை ஒற்றை கையால் அழுத்தியவளுக்கு மயக்கம் வருவது போல இருந்தது.

“உயிர் இன்னும் இருக்கா” என்ற கிரணின் குரலில் மீண்டும் எட்டிப்பார்த்தாள், ஆஜானுபாகுவான தோற்றத்தில் ஒருவன் வந்து தலை கவிழ்ந்து கிடந்தவனின் கழுத்தில் இரு விரல்கள் வைத்து பரிசோதித்து பார்த்து “மயக்கமா தான் இருக்கான் பாஸ்” என்றான்.

“ம்ம் மயக்கம் தெளிய தெளிய அடிங்க, ஈஸியா சாக கூடாது கொஞ்சம் கொஞ்சமா சாகனும் இவன் சாவு அந்த தீரனுக்கு ஒரு பாடமா இருக்கணும் ஒருத்தனையும் விட மாட்டேன் ” என கர்ஜித்த கிரணின் ரத்த கரை படிந்த கரங்களும் சிவந்த கண்களும் பார்க்க அரக்கன் போல தோன்றியது தாரிக்காவுக்கு . போதாக்குறைக்கு அவன் தீரனின் பெயரை பற்றி சொன்னது வேறு பதற்றத்தை கொடுக்க, தீரன் அஷோக் தன் தந்தை என அனைவரும் கிரணை திருமணம் செய்ய வேண்டாம் என்று சொன்னது என்று பழைய சிந்தனைகள் அனைத்தும் அவளது நியாபக அடுக்கில் வந்து வந்து போக பெண்ணவள் மிகுந்த வேதனை அடைந்தாள்.

அதே நேரம் அரைவாசி திறந்திருந்த ஜன்னலுக்கு அருகே வந்து நின்ற கிரணின் மனதிற்குள் வெளியே ஏதோ அசைவு தெரிவது போல தோன்ற அவன் ஜன்னலை முழுவதாக திறந்து வெளியே எட்டி பார்க்க முனையவும், திகில் அடைத்த தாரிக்கா, மூச்சை இழுத்து பிடித்து கொண்டு சத்தம் வராமல் பின்னால் சென்று சருகுகளும் காய்ந்த இலைகள் அடர்ந்து பகுதியில் பதுங்கி கொள்ள.

“வெளிய யாரோ இருக்கிற மாதிரி இருக்கு போய் பாருங்க” என்று தன் அடியாட்களுக்கு பணித்த கிரண், ” ஜன்னலை ஒழுங்கா க்ளோஸ் பண்ணுங்கன்னு எத்தனை முறை சொல்றது” என்று தன் அருகே இருந்த அடியாட்களை திட்டியவன், வேகமாக வெளியே வர, அங்கே அவனது அடியாட்கள் சுத்தி வர ஆள் நடமாட்டம் ஏதும் இருக்கிறதா என்று பார்த்து விட்டு கிரணிடம் வந்து சந்தேகப்படும் படியாக யாரும் இல்லை என்று சொல்ல தன் விழிகளால் ஒருமுறை முழுவதும் சுற்றி பார்த்தவன் தன் அடியாட்களிடம்,

“ஏதாவது காட்டு விலங்கா இருக்கும் உள்ளே வாங்க” என்றவன்,

“இன்னைக்கு அனுப்ப வேண்டிய கன்சைன்மெண்ட்டை ரெடி பண்ணுங்க நேரத்துக்கு ஷிப் பண்ணனும்” என்று கூறிவிட்டு வேகமாக தொழிற்சாலை கட்டிடத்துக்குள் தன் சகாக்களுடன் நுழைய, அவர்கள் அனைவரும் சென்றுவிட்டனர் என்பதை அறிந்த பிறகு மெதுவாக தன் மேல் இருந்த சருகுகளை தட்டிவிட்டபடி புதருக்குள் இருந்து வெளியே வந்தவள் ஜன்னலை திறக்க முயற்சிக்க இந்த முறை அது உள்புறமாக பூட்டியிருக்கவும் தன் நெற்றியை தேய்த்தவளுக்கு உள்ளே ஒருவன் ரத்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தது நினைவுக்கு வர தைரியத்தை வரவழைத்து கொண்டு பின்பக்கமாக செல்ல உள்ளே வாசல் ஏதும் இருக்கிறதா என்று தேடினாள்.

!!!!!!!!!!!

தன் வீட்டின் வாசலில் நின்றிருந்த தீரனை எதிர்கொண்ட முக்காடு அணிந்திருந்த பெண்மணி அவன் யாரை பார்க்க வந்திருக்கிறான் என்பதை விசாரித்து தீரனை வீட்டின் முன்னால் இருந்த வரவேற்பரையில் அமர சொல்லிவிட்டு உள்ளே, செல்ல சிலநொடிகளில் ஒரு ஐம்பது வயதுக்கு மேல் மதிக்க தக்க ஒரு ஆண் முகத்தில் மூன்று நாட்கள் சவரன் செய்யாத நரைத்த தாடியுடன் தன் மேல் சட்டைக்கு பொத்தானை போட்டப்படி வெளியே வர, அவரை கண்டதும் மரியாதை நிமித்தமாக எழுந்து நின்ற தீரன் கை கூப்பி வணக்கம் தெரிவிக்கவும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தவர் அவனை அமருமாறு இருக்கையை காட்டிவிட்டு அவனுக்கு எதிரே வந்து அமர்ந்தவர்,” கருணா ரெண்டு டி” என்று மனைவியிடம் குரல் கொடுத்துவிட்டு தீரனிடம் திரும்பி,

” சொல்லுங்க யார் நீங்க” என்று வடமொழியில் கேட்கவும்,

“அக்னி தீரன்” என்று அவன் பதில் சொல்லவும் அந்நேரம் மூலிகை டி அடங்கிய கப்புகளை ட்ரேவில் அங்கே எடுத்து வந்த கருணா அவன் பெயரை கேட்டதும் அவனை ஒருகணம் கண்களில் நீர் திரள பார்த்தவர் கரங்கள் தடுமாற டிரேவை கீழே போட்டுவிட்டு பதறவும்,”என்ன கருணா இது? தப்பா எடுத்துக்காதீங்க தம்பி” என்ற ஓம் பிரசாத் யாதவ் மனைவிக்காக தான் மன்னிப்பு வேண்ட, உடனே மறுத்த தீரன்,

“பரவாயில்லை சார் மேடம் கொஞ்சம் டென்க்ஷனா இருக்காங்க” என்று கண்களில் நீர் வழிய நின்ற கருணாவை பார்த்து கூறவும் ஒரு நிமிடத்தில் வந்துவிடுவதாக கூறியவர் தன் மனைவியை அழைத்து கொண்டு உள்ளே சென்றார்.

அவர் சென்றதும் சிந்தனையுடன் கீழே சிதறி கிடந்த டி கோப்பையின் துண்டுகளை பார்த்தவன் அதை கவனமாக யார் காலிலும் குத்திவிடாதவாறு எடுத்து ட்ரேயில் வைத்து விட்டு நிமிர்ந்த பொழுது, ஓம் பிரசாத்தும் அங்கே வந்துவிட ட்ரேயில் இருந்த க்ளாஸின் துண்டுகளை பார்த்தவர்,

“நீனா ஏன் தம்பி இதெல்லாம் பண்ணிட்டு” என்று சங்கடமாக கேட்க, சினேகமாக புன்னகைத்தவன்,

“இட்ஸ் ஓகே சார் யார் கால்லையும் பட்டுட கூடாதுன்னு தான் நான் எடுத்தேன்” என்று விளக்கம் கொடுத்துவிட்டு,

“மேம்க்கு இப்போ எப்படி இருக்கு சார்?” என்று கேட்க,

“பரவாயில்லை படுத்திருக்கா உங்க பெயரை கேட்டதும் எமோஷன் ஆகிட்டா” என்றதும் புரியாமல் இவன் பார்க்க அவன் பார்வையை படித்தவர்,

“என் மகன் பேரும் தீரன் தான், தீரன் யாதவ் இரெண்டு வருஷத்துக்கு முன்னாடிதான் இறந்து போனான் ஒரே பையன் அவளுக்கு தீரன்னா உயிரு” என்றவரின் குரலில் தெரிந்த தடுமாற்றம் தீரனின் மனதை நெருட அவர் அருகே வந்து அமர்ந்து அவர் கரத்தை பிடித்து கொண்டவன்,

“ஐயம் சாரி எனக்கு” என்று வருத்தத்துடன் ஆரம்பிக்கவும்,

“பரவாயில்லை தம்பி என்னை விடுங்க, நீங்க சொல்லுங்க என்ன விஷயமா வந்திருக்கீங்க” என்று கேட்கவும் தான் இங்கே எதற்கு வந்திருக்கிறேன் என்று கூறியவன்,

“கிரண் பாஸ்கர், உங்க ஸ்கூல்ல நீங்க இருந்த ப்ரீயட்ல அப்போ படிச்ச ஓல்ட் ஸ்டுடென்ட்,அவனை பற்றி விசாரிக்க வந்திருக்கேன்” என்றவன் தன் அலைபேசியில் பதிவு செய்யப்பட்டிருந்த கிரணின் பழைய புகைப்படத்தை காட்ட, தன் கண்ணாடியை அணிந்தபடி தீரனின் கரங்களில் இருந்த அலைபேசியை வாங்கி பார்த்தவர் கண்களில் ஒருவித கோபம்,, வலி இயலாமை என்று வெவ்வேறு உணர்வுகள் வந்து போக,

“இவனை பத்தி என்கிட்ட ஏன் சார் கேட்குறீங்க? முதல்ல நீங்க அவனுக்கு என்ன வேணும்? சொல்லுங்க அவனுடைய உறவுக்காரன்னா தயவு செஞ்சி கிளம்பிடுங்க” என்று கோபத்துடன் கூறியவரின் கரத்தை பற்றி கொண்ட தீரன்,

“சார் ப்ளீஸ் ரிலாக்ஸ், நான் அவனுக்கு சொந்தம் எல்லாம் இல்லை. ரொம்ப முக்கியம் சார் அவனுடைய பாஸ்ட் பத்தி தெரிஞ்சாக வேண்டிய நிலையில இருக்கேன் ப்ளீஸ்” என்று இறைஞ்சவும்.கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தவர், தன் தொண்டையை செருமி கரகரத்த குரலில்,

“இவனால தான் எங்க பையன் அவனுடைய இறுதி நாட்கள் வரை அவ்வளவு கஷ்டப்பட்டான், ஓடி ஆட வேண்டிய வயசுல சுயநினைவை இழந்து இருபது வருஷம் படுத்த படுக்கையா கிடந்தான்” என்றவரின் குரல் ஒருகட்டத்தில் உடைந்துவிட வேதனையுடன் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார்.

தீரனுக்கு அவர் நிலைமையை பார்க்கும் பொழுது வேதனையாக இருக்க அதற்கு மேல் எப்படி கேட்ப்பது என்று தெரியாமல் அவர் பேச காத்திருக்க, சில நிமிடங்கள் மௌனத்திற்கு பிறகு,

” என் பையன் ரொம்ப சாது தம்பி, அதிர்ந்து கூட பேச மாட்டான் அவனை போய் அடிச்சே கொலை பண்ண பார்த்தான். நல்லவேளை நாங்க எல்லாரும் போய் தடுத்துட்டோம் இல்லைனா அந்த இடத்துலயே எங்க பையன் செத்திருப்பான். அவனும் நல்ல பையனா தான் இருந்தான் தம்பி அவங்க அப்பா இறந்துட்டதா சொல்லி அவனுடைய தாய் மாமா டெல்லிக்கு அழைச்சிட்டு போனாரு ஒரு பத்து நாள் கழிச்சு மறுபடியும் வந்தான் ரொம்ப அமைதியா இருந்தான். அந்த நேரம் நான் தான் அவனுக்கு க்ளாஸ் டீச்சர், என் பையன் வேற செக்ஷன். அவனை பார்க்கவே பரிதாபமா இருந்தான்.தான் நான் என் பையன் கிட்ட சொல்லி நேரம் கிடைக்கும் பொழுது அவன் கூட நட்பா பேசி ஆறுதலா இருக்க சொன்னேன் பாவி கொலைகாரன் கொன்னுட்டான்” என்றவரின் மனம் பறிகொடுத்த பிள்ளையை எண்ணி துடித்தது.

தீரனுக்குமே அவர் சொன்ன செய்தி அதிர்ச்சியாக தான் இருந்தது. ஒருநொடி தனது குழந்தை பருவத்தை எண்ணி பார்த்தவனுக்கு மனம் கனத்து போக

,”அந்த இன்சிடென்ட்க்கு அப்புறம்” என்று ஆரம்பித்தவரின் குரலில் சுயம் பெற்றவன் அவரை பார்க்க, சுவற்றை வெறித்தபடி அமர்ந்திருந்தவர்,

“போலீஸ்ல கம்ப்ளயிண்ட் கொடுத்தோம் அவர் தாய் மாமா ரொம்ப பணக்காரர் என்பதால அதை இதை பேசி எங்க வாயை அடைச்சிட்டாங்க. ஒரு ரெண்டு மாசத்துல வீடு சொத்தையெல்லாம் வித்துட்டு அவரோட தாய் மாமா அவனையும் கூட்டிட்டு தன் மனைவியோட வேற ஊர் போய்ட்டாங்கன்னு எல்லாரும் சொன்னாங்க. அதுக்கப்புறம் அவனை பத்தி நியூஸ் தெரியல”

“கிரணோட தாய்மாமாக்கு எத்தனை புள்ளைங்க” என தீரன் கேட்கவும் அவனை சிந்தனையுடன் பார்த்தவர்,

“கிரண் யாரு” என்று கேட் திகைப்புடன் அவரை பார்த்த தீரன்,”இவ்வளவு நேரம் பேசுனீங்களே அவன் தான், இந்த போட்டோல இருக்கிறவன் கிரண் பாஸ்கர்” என்று சொல்லவும்,

“கிரணா இவன் கிரண் இல்லை, இவன் பேரு ரஞ்சித் அப்புறம் இவன் தாய் மாமாக்கு குழந்தைங்க கிடையாது, இவன் அம்மா இவன் பிறந்தப்போவே இறந்ததுனால இவன் சின்ன வயசுல இருந்து இங்க தான் இருக்கான்.” என்று அவர் சொல்லிக்கொண்டே போக ‘ரஞ்சித்’ என்று அவர் சொல்லும் பொழுதே தீரனின் மனம் நிலை இல்லாமல் துடிக்க துவங்கியிருக்க, உணர்வுகள் துடைத்த முகத்துடன் அவரை ஏறிட்டவன்,

“அவர் அப்பா அவர் யாருன்னு தெரியுமா சார்” கேட்கும் பொழுதே அவன் தொண்டைக்குழியில் ஏதோ ஒன்று சிக்கிய உணர்வு,

“வருஷம் வருஷம் நடக்குற ஸ்போர்ட்ஸ் டேக்கு கண்டிப்பா வருவாரு, ரொம்ப பிரபலமானவரு பேரு ரகுவேந்தர், எல்லாரும் இந்தர்ன்னு கூப்பிடுவாங்க பெரிய ஆக்டர் யாரோ கொலை பண்ணிட்டாங்கன்னு சொன்னாங்க” அவ்வளவு தான்  தீரனுக்கு நெஞ்சில் நீர் வற்றிய உணர்வு அதன் பிறகு,

“இவ்வளவு தான் தம்பி அந்த பையனை பத்தி வேற எதுவும் தெரியாது ” என்று அவர் சொன்ன எதுவும் தீரனின் செவியில் விழவில்லை கண்களை அழுத்தமாக மூடி திறந்தவனுக்கு கிரண் தன் மீது கொண்ட வன்மத்திற்கான காரணம் தெளிவாய் தெரிய, தான் ஆற்றிய செயலுக்கான எதிர்வினை தான் இது என்றும் பொழுதே கண்களில் நீர் கோர்த்தது.

தன்னை பழிவாங்குவதாக எண்ணி தன்னை சார்ந்தவர்களை கிரண் காயப்படுத்துவதற்குள் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தவன் ஓம் ப்ரசாத்திடம் நன்றி கூறிவிட்டு வேகமாக அங்கிருந்த வெளியேறி உடனே அழைத்தது ரிஷிக்கு தான்,

“சொல்லுங்க பாஸ்” என்ற ரிஷியிடம்,

“ரிஷி சீக்கிரம் டெல்லிக்கு ரிட்டர்ன் டிக்கெட் புக் பண்ணு எந்த பிளைட் முத்தல்ல இருக்கோ அதுக்கே புக் பண்ணு, அப்புறம் இன்னும் பத்து நிமிஷத்துல நேத்ரா தாரிக்கா என் வீட்ல இருக்கனும் குயிக், எவ்வளவு பாடி கார்ட்ஸ் வேணும்னாலும் கூட்டிட்டு போ வேலை முடிஞ்சிருக்கணும் வீட்ல செக்யூரிட்டி டைட் பண்ணு யாரும் வெளிய போக கூடாது” என்று டிரைவரிடம் உடனே ஏர்போர்ட் போகும் படி உத்தரவிட்டவனுக்கு எண்ணம் முழுவதும் கிரண் பாஸ்கர் என்னும் பெயரில் இருக்கும் ரஞ்சித்திலே தான் நிலைத்திருந்தது.

!!!!!!!!!!!!

பேக்கிங் டிபார்ட்மென்ட்டில் தனி தனி பெட்டிகளில் குவிக்க பட்டிருந்த வெள்ளை நிற பவுடர் வடிவில் இருக்கும் போதை வஸ்துக்களை பணியாளர்கள் அனைவரும் சிறிய பிளாஸ்டிக் பைகளில் அடைத்து கொண்டிருக்க அவர்கள் ஒவ்வொருவரையும் பார்வையிட்டு கொண்டே வந்த கிரணிடம் ஓடி வந்த அவனது பெர்சனல் அசிஸ்டன்ட் அவன் காதில் பதற்றமாக ஏதோ ஒன்றை சொல்ல தன் விழிகள் இடுங்க அவனை பார்த்தவன், வேகமாக வெளியேறி தீரனின் உளவாளி ஆதில் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைய அங்கே அவனை கட்டப்பட்டிருந்த கயிறு மற்றும் கிடக்க ஆதில் தப்பித்திருந்தான்.

அடியாட்கள் அனைவரும் கிரணின் எதிர்வினை என்னவாக இருக்கும்  என்று பயத்துடன் நிற்க, அவர்களை பார்த்து வாயில் ஏதோ முணுமுணுத்துவிட்டு,

“அவன் ஓடி போற வரை என்ன *********”என்று அரங்கமே அதிரும் அளவிற்கு எரிச்சலுடன் கெட்ட வார்த்தைகளால் திட்டியவன், சீற்றத்துடன் வேகமாக பின் பக்கம் வாயிலுக்கு வந்து தன் பார்வையை ஓட்டியவனின் கண்களுக்கு மணலில் ஏதோ ஒன்று மின்ன குனிந்து அதை எடுத்து மணலை துடைத்துவிட்டு பார்த்தவனின் கண்கள் நெருப்பாய் கொதிக்க அலைபேசியை எடுத்து தன் வீட்டின் செக்யூரிட்டி கார்டுக்கு அழைப்பு விடுத்து,

“தாரிக்கா எங்க” என்று கேட்டான்.

“சார் மேம் நீங்க கிளம்பின கொஞ்ச நேரத்திலே கிளம்பி போய்ட்டாங்க” என்று சொல்லவும் தன் பல்லை கடித்தவன்,

“நேத்ரா” என்று கேட்கவும்,

“அவங்களும் மேம் கிளம்புன கொஞ்ச நேரத்துல வெளிய கிளம்பிட்டாங்க திரும்பி இன்னும் வரலை” அவன் சொல்லி முடிக்கும் முன்பே தன் அலைபேசியை சுவற்றில் எறிந்திருந்த கிரண்,

“ப்ளடி விமன்” என்று வெறி பிடித்த மிருகம் போல கத்தியவன் தான் இருந்த அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து தன் விசுவாசியை அழைத்து எதோ சொல்ல சில நொடியில் அவன் கண் முன் கொண்டு வரப்பட்ட போதை வஸ்துவை வேகமாக சிரிஞ்சில் ஏற்றியவன் தன் புஜத்தை கருப்பு நிற பெல்ட்டால் இறுக்கமாக கட்டி சிரிஞ்சில் இருந்த நஞ்சை தன் உடம்பில் ஏற்றி கொண்டு ஒரு பிளாஸ்டிக் கவரில் இருந்த போதை மருந்தை டேபிளில் தட்டி நாசியில் நுகர்ந்தவன் அப்படியே கண்மூடி கொஞ்சம் நேரம் கிடந்துவிட்டு வேகமாக விழி திருந்து பளபளக்கும் விழிகளுடன் அனைவரையும் உறுத்து விழித்து,

“வேட்டை ஆரம்பிச்சிடுச்சு தீரன் இன்னையோட உன் அத்தியாயத்தை முடிக்கிறேன்” என்று டேபிளை ஆக்ரோஷமாக தட்டி உரக்க கத்தியவன், தன் அடியாட்கள் அனைவரையும் பார்த்து,

“உங்க எல்லாருக்கும் ஒரு மணிநேரம் டைம் அதுக்குள்ள மேகா இங்க வரணும்” என்று கட்டளையிட, அவர்களோ அவன் கட்டளைக்கு காத்திருந்தவர்கள் போல வேகமாக அதை செயல்படுத்த விரைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!