MIRUTHNAIN KAVITHAI IVAL 50.2

cover page-955f87ad

HPLC= high-performance liquid chromatography; TLC= thin layer chromatography; UV= ultraviolet.இது போன்ற அதிநவீன வசதி கொண்ட சோதனை முறையால் தான் ஒருசில மருந்துகளில் இருக்கும் போலித்தன்மையை கண்டறிய முடியும் 
(source – National Academies of Sciences, Engineering, and Medicine)

மிருதனின் கவிதை இவள் 50.2

மனைவி தன் பேச்சை நிச்சயம் மீறமாட்டாள் தான் சொன்னது போல வீட்டில் தான் இருப்பாள் என்று உறுதியாக நம்பிய தீரன் முதலில் தங்கைகளை காப்பற்ற நினைத்து செயலாற்ற அங்கே தான் அவன் கணிப்பு சறுக்கியது.

“பெயின் வரும்பொழுது புஷ் பண்ணுங்க மாலினி” என்று தன் ஹாஸ்பிடலின் டெலிவரி அறையில் பிரசவ வலியால் துடித்து கொண்டிருக்கும் பெண்ணிடம் கூறிக்கொண்டிருந்தாள் மேகா.

அவளது தோழி திவ்யா பார்க்க வேண்டிய கேஸ் தான் மாலினி, ஆனால் பனி குடம் உடைந்ததால் இரெண்டு நாட்களுக்கு முன்பே வந்துவிட, திவ்யா வேறு வேலையில் சிக்கிக்கொண்டதால் அவள் மேகாவிடம் உதவி கேட்கவும், சற்றும் யோசிக்காமல் சரி என்றவள். அப்பொழுது தான் அலுவலகத்தில் இருந்து வந்த அஷோக்கிடம் விடயத்தை கூறவும் இரெண்டு உயிர் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் சரி என்றவன் மேகா இஷிதா இருவரையும் அழைத்து கொண்டு வந்தவன் மேகாவை ஹாஸ்ப்பிட்டலில் விட்டுவிட்டு,

“நாங்க பக்கத்துல இருக்கிற மால்ல ஷாப்பிங் பண்ணிட்டு இருக்கோம், நீ டுயூட்டி முடிச்சிட்டு சொல்லு வந்து கூட்டிட்டு போறோம் டா” என்று கூற,

“ம்ம் ல்வ்சா என்ஜாய் என்ஜாய்” என்று இருவரையும் பார்த்து சிரித்த மேகா இன்னும் கொஞ்ச நேரத்தில் நிகழ இருக்கும் விளைவு தெரியாமல், ஒரு புது உயிரை இந்த உலகத்துக்கு இன்னும் சற்று நேரத்தில் கொண்டு வர போவதை எண்ணி பரவசத்துடன் நேராக தன் அறைக்கு சென்று உடை மாற்றி விட்டு பிரசவ அறைக்குள் நுழைந்து தாய் சேய் இருவரையும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாள்.

இதை அறையாத தீரனோ மனைவி தன் சொல்படி வீட்டில் பத்திரமாகத்தான் இருக்கிறாள் தன் தங்கைகளுக்கு தான் எதுவும் நேர்ந்து விட கூடாது என்று ஒருவித பதற்றத்துடன் டெல்லி ஏர்போர்ட் வந்து இறங்கியவன் தனக்காக முன்பே காத்திருந்த ரிஷியை நோக்கி விரைந்து வந்து,

தாரிக்கா நேத்ராவை பற்றி விசாரித்தபடியே காரில் ஏறி அமர, அவனோ,

“அவங்க வீட்டுக்கு போனோம் சார் யாருமே இல்லை இரெண்டு பேரோட ஃபோனும் ஸ்விட்ச் ஆஃப்ல இருக்கு நம்ம பசங்களை அனுப்பிருக்கேன் சார் எப்படியும் கண்டு புடிச்சிருவாங்க” என்று சொல்ல, அவர்களை காணவில்லை என்ற செய்தியை கேட்டதும் அவனது உள்ளம் பதைபதைக்க துவங்க, உடனே அஷோக்கிடம் பேச அவன் நம்பரை அழுத்த போகவும் தாரிக்கவிடம் அழைப்பு வர உடனே எடுத்தவன்,

“தாரிக்கா எங்க இருக்க?” என்று பதற்றத்துடன் வினவியவன் எதிர் தரப்பில் என்ன கூறப்பட்டதோ உடனே ரிஷியை ஒரு மருத்துவமனையின் பெயரை கூறி விரைந்து போகும்படி பணித்தவன் மருத்துவமனை செல்லும் இடைவெளியிலே நாற்காட்டிக்ஸ் இன்ஸ்பெக்டர் ஆரியனுக்கும் அழைத்து விடயத்தை கூறி அங்கே வரும்படி சொல்லிருந்தான்.

மருத்துவமனையில் கார் நிற்பதற்குள் வேகமாக கதவை திறந்து கொண்டு இறங்கி இருந்த தீரன் ரிசெப்ஷனில் கேட்டுக்கொண்டிருக்கும் பொழுதே கலைந்த தலையும் குலைந்த கோலமுமாய் அவன் முன்னே ஆடையில் ரத்த கரையுடன் அழுது வீங்கிய கண்களுடன் நேத்ராவுடன் நின்றிருந்தாள் தாரிக்கா.

எப்படி வாழ்ந்த பெண் இன்று அவள் இருக்கும் கோலம் கண்டு மனதில் வேதனை அடைந்த தீரன்.

“என்ன கோலம் இது என்னாச்சு? அவன் உன்னை ஏதும்” என்று கேட்கும் பொழுதே இரு பெண்களும் அவனை இறுக்கமாக அணைத்திருக்க அவர்கள் இருவரையும் தன் இரு கரங்களுக்குள் பாதுகாப்பாக அரவணைத்து கொண்டவன், அவர்கள் விசும்பவும் இருவரின் கேசத்தையும் வாஞ்சையுடன் வருடி கொடுக்க சில நொடிகள் கழித்து அவனிடம் இருந்து முதலில் விலகிய தாரிக்க தான் அங்கே சென்றதை பற்றியும் ஆதிலை பற்றியும் கூறியவள் தன் குடும்பத்தை நம்பாமல் கிரணை நம்பியதற்காக கண்ணீர் வடிக்க அவளது கண்ணீரை துடைத்தவன்,

“ப்ச் அழ கூடாது அதான் நீங்க பத்திரமா வந்துடீங்கள்ல இனிமே அண்ணன் எல்லாத்தையும் பார்த்துகிறேன்” என்றவன் தலை கவிழ்ந்த நிலையில் குற்ற உணர்வில் கண்களில் நீர் வடிய நின்ற நேத்ராவை பார்த்து கரங்களை நீட்டியவன் தன் கண்களாலே வா என்று சொல்ல,”அண்ணா” என்று கேவலுடன் அவன் நெஞ்சில சாய்ந்து கொண்டவள்,”சாரி ரொம்பவே சாரி அண்ணா” என்று அழ, அவளது கேசத்தை வருடியவன்,” இட்ஸ் ஓகே டா மா பார்த்துக்கலாம்” என்று சொல்ல, இவ்வளவு செய்தும் அன்பாக பேசும் தீரனை கண்டு நேத்ராவுக்கு தான் குற்ற உணர்வாக இருந்தது.

அப்பொழுது பார்த்து தாரிக்காவின் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வரவும் அதை எடுத்து பார்த்தவள் திகில் நெஞ்சில் பரவ தீரனை பார்க்க, அலைபேசியின் திரையை பார்த்த தீரன் அலைபேசியை தாரிகாவிடம் இருந்து வாங்கி,

“இனி என் தங்கச்சி உன்கிட்ட பேசமாட்டா ரஞ்சித் ” எடுத்த எடுப்பில் தீரன் சீற,

“ஓ கண்டுபுடிச்சிட்டியா டா வாவ் நைஸ்.” போலியாக பாராட்டினான்.

“என்னடா உனக்கு வேணும்? என்கிட்ட பிரச்சனைன்னா என்கிட்ட மோது, அதை விட்டுட்டு என் தங்கச்சி வாழ்க்கையில விளையாடிருக்க உனக்கு இருக்குடா” என்று தீரன் பல்லை கடிக்க,

“எனக்கு இருக்கிறதெல்லாம் இருக்கட்டும் இப்போ உன் பொண்டாட்டி எங்க இருக்கான்னு தெரியுமா” என்று கேட்கவும்,

“அவளுக்கு என்னடா பத்திரமா இருக்கா,முதல்ல உன்னை காப்பாத்திக்கிற வழியை பாரு ரஞ்சித், இன்னையோட உன் ஆட்டம் முடிஞ்சிது”என்று எச்சரிக்கை விடுக்கவும் சத்தமாக சிரித்த ரஞ்சித்,

“என் ஆட்டம் முடியிறதெல்லாம் இருக்கட்டும் முதல்ல உன் பொண்டாட்டியை முடிஞ்சா காப்பாத்திக்க பாரு தீரன், ப்ரெக்னன்ட்டா வேற இருக்காளாமே” என்று சொல்லவும் தன் முகத்தில் இருள் பரவ, ரிஷியை அழைத்த தீரன், “மேகா எங்க இருக்கான்னு செக் பண்ணு” என கட்டளையிட, சில நொடிகளில் அவன் அருகில் வந்த ரிஷி,

“சார் மேடம் வீட்ல இல்லை” என்று சொல்லவும் சப்தநாடியும் அடங்கி போக,

“மேகாவை மட்டும் ஏதாவது செய்யணும்ன்னு நினைச்ச, ரஞ்சித் உன்னை சும்மா விட மாட்டேன் டா” என்று தீரன் ஆக்ரோஷமாக சீற, சத்தமாக சிரித்த கிரண்.

“ரிலாக்ஸ் தீரன் ரிலாக்ஸ் ஏன் டென்ஷன் ஆகுற ம்ம், சரி உன் பொண்டாட்டி எங்க இருக்கான்னு உனக்கு தெரியுமா? இப்போதைக்கு ஹாஸ்ப்பிட்டல்ல மாலினி என்கிற பொண்ணுக்கு தீவிரமா பிரசவம் பார்த்துட்டு இருக்கா, இன்னும் கொஞ்ச நேரத்துல என்கிட்ட இருப்பா, உன் கண்ணு முன்னாடி அவளை தூக்கி காட்டுறேன் முடிஞ்சா காப்பாத்திக்கோ டா ” என்றவன் ,”ரெடியா இரு தீரன் உனக்கான கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகிடுச்சு டிக் டாக் டிக் டாக்” என்று சொல்லி அலைபேசியை அணைத்துவிட, என்னாச்சு என்று அவனை சுற்றி ஒலித்த பலவிதமான எந்த குரலையும் தன் காதில் வாங்காது உடனே மேகாக்கு தான் அழைத்திருந்தான். மேகா அலைபேசியை எடுக்கவில்லை என்றதும் ரிஷியை அழைத்தவன்,

“நீ இங்கையே இரு ஆதில் ஹெல்த்தை வாட்ச் பண்ணிட்டே இரு, தாரிக்கா நேத்ரா உன் பொறுப்புடா பார்த்துக்கோ அஷோக் கிட்ட பேசி உன் கூட வச்சிக்கோ இன்ஸ்பெக்ட்டர் ஆரியன் வருவாரு” என்றவன், “பார்த்துக்கோ டா” என கூறி விறுவிறுவென நடந்தான். அவன் மனம் முழுவதும் மேகாவின் எண்ணமே ஓடி கொண்டிருக்க ,

டெலிவரி சுமுகமாக முடிந்த நிலையில் தாயையும் சேயையும் பத்திரமாக காப்பாற்றிய மகிழ்ச்சியில் தன் அறைக்கு வந்து கைகளை கழுவி கொண்டிருந்த மேகவோ தீரனிடம் இருந்து அழைப்பு வந்ததுமே புன்னகைத்தவள் அழைப்பை ஏற்க போவதற்குள் அது கட்டாகி விட,

“வீட்டுக்கு வந்திட்டார் போல அதான் நான் அங்க இல்லை என்றதும் இவ்வளவு கால் பண்ணிட்டு இருக்காரு” என்று எண்ணியவள் உடனே அவனிடம் இருந்து அடுத்த அழைப்பு வரவும் அழைப்பை எடுத்து காதில் வைக்க , தீரனோ,

” மேகா” என்று பரிதவிப்புடன் அழைக்க,

“சொல்லுங்க பா என்னாச்சு எல்லாம் ஓகே தானே” என்று பேசவும் தான் போன உயிர் வந்தது போல ஆழமான ,மூச்சை வெளியிட்டவன், ஆத்திர மிகுதியால்

“பைத்தியமா டி நீ நிலைமை புரியாம நான் என்ன சொன்னேன் நீ பண்ணிருக்க மேகா உன்னை யாரு வீட்டை விட்டு வெளியே வர சொன்னா” என்று காரை பறக்கவிட்டபடி சற்று காட்டமாகவே திட்டிவிட அவன் அவ்வாறு பேசியதும் கண்கள் கலங்கியவள்,

“என்ன ஏதுன்னு கேட்காம திட்டிட்டே இருக்கீங்க நீங்க திருந்தவே மாடீங்க என்கிட்ட பேசாதீங்க” என்று நிலைமை புரியாது அவனிடம் பேசியவள் மேலும் பேசினால் சண்டை தான் வரும் என்று முடிவெடுத்து அழைப்பை அணைத்து வைத்திருக்க,

அவன் மறுபடி மறுபடி அழைத்த பொழுதும் கோபத்தில் எடுக்காதவள், உடனே அஷோக்கிற்கு அழைப்பு விடுத்து,

“அண்ணா சீக்கிரமா வாங்க அவரு ஃபோன் போட்டு திட்டுறாரு நான் பார்க்கிங் பக்கத்துல வரேன் வந்துருங்க” என்றவள் தீரனை வாய்க்குள் திட்டியபடி தன் அறையை விட்டு வெளியே வந்தவள் வாசலை நோக்கி செல்ல,

இங்கே இவளுக்கு அடித்து அடித்து ஓய்ந்த தீரனோ” மேகா” என பல்லை கடித்தவன், வேகமாக ஹாஸ்பிட்டல் நோக்கி விரைந்தான்.

மேகாவோ தீரனை நன்கு திட்டியபடி வாசலுக்கு வந்தாள். அவள் வந்த பொழுது தொலைவில் இருந்தே கண்டுகொண்ட தீரன் காரை நிறுத்திவிட்டு வேகமாக அவளை நோக்கி வர,

“அதுக்குள்ள வந்துட்டாரா வரட்டும் பேச கூடாது” என்று அவனை முறைத்து பார்த்துக்கொண்டே நின்றிருக்க,  அதே நேரம் அஷோக் இஷிதா இருவரும் மேகாவை  பார்த்து கையசைத்தபடி காரில் இருந்து இறங்க போகவும்,

தீரனை தாண்டி வந்த கார் ஒன்று மேகாவின் முன்பு வந்து நின்றது. அந்த காரை பார்த்ததும் தீரன் அதிர்ச்சியுடன்  ஓடி வர, காரில் இருந்து வாட்டசாட்டமாக முக மூடி அணிந்திருந்த ஒருவனோ வேகமாக இறங்கி மேகாவின் நெற்றியில் துப்பாக்கி வைத்து அவளை காரில் வலுக்கட்டாயமாக தள்ள அச்சத்தின் உச்சத்தில்,”தீரன்” என்று கதறியவளோ பயத்துடன் தன்னவனை பார்க்க,அந்த முக மூடி  மனிதர்கள் தீரன் பார்க்க மேகாவை உள்ளே தள்ளி கதவு சாற்றினார்கள். நொடிப்பொழுதில் நடந்தேறிய இந்த சம்பவத்தால் உருக்குலைந்து போன தீரன் தன் கண்முன்னே கடத்தப்பட்ட மனைவியையும், இறுதியாக பயத்துடன் தன்னை பார்த்த அவளது விழிகளையும் கண்டவன் தன் உயிரே தன்னை விட்டு பிரிந்து செல்வது போல துடித்து போனான்.

“டேய் விடுங்க டா” என்று கர்ஜித்தவனோ வேகமாக செல்லும் காரின் பின்னால் முடிந்தமட்டும் ஓட இதை அனைத்தையும் அதிர்ச்சியுடன் கவனித்து கொண்டிருந்த  அஷோக்  வேகமாக தீரனிடம் வந்து அவனை வண்டியில் ஏற சொல்லி காரை பின்தொடர, அதற்குள் அந்த கார் சாலையில் சீறி பாய்ந்தது. தீரனால் அடுத்து என்ன செய்வதென்று கூட யோசிக்க முடியவில்லை. அவன் கரங்கள் கூட நடுங்கியது. தன்னவள் மேல் சின்ன கீறல் பட்டால்  கூட அவனால் தாங்கிக்க முடியாதல்லவா, ஆனால் இன்று தன் முன்னே தன்னவள் துப்பாக்கி முனையில் கடப்பட்டிருக்கிறாள் என்பதே அவனை நிலை தடுமாற செய்திருந்தது.

“சொன்னது போலவே மேகாவை அந்த கிரண்  என் கண்ணுமுன்னாடி கடத்திட்டான் அஷோக் . என்னால எதுவுமே செய்ய முடியல ” என்று நிதானம் இழந்து கத்த,

அவனோ ” தீரன் ப்ளீஸ் காம் டவுன் மேகாவை காப்பாத்திடலாம் டா “என்று சொல்ல ,

“எப்படி டா அவ கன்ஸீவா வேற இருக்கா டா ” என்றவன் “ஆ” என்று தலையை பிடித்து கொண்டு டேஷ்போர்டில் ஓங்கி குத்தியவனுக்கு மேகா கிரணிடம் அகப்பட்டு கொண்ட விடயம் பயத்தை கொடுத்தது.

“அந்த கிரண் சைக்கோ டா என் மேல உள்ள கோவத்துல மேகாவ ஏதாவது” அதற்கு மேல் சொல்ல முடியவில்லை.

இஷிதாவுக்கு ஒன்றுமே ஓட வில்லை தன் கண்முன் நடந்தேறிய  சம்பவத்தால் அதிர்ச்சியில் இருந்தவள்   பதற்றமாக,

“டைம் வேஸ்ட் பண்ணாம போலீஸ்கிட்ட போய்டலாம்” என சொல்லும்  பொழுதே தீரனுக்கு கிரணிடம் இருந்து அழைப்பு வர உடனே எடுத்தவன்,”கொன்னுருவேன் டா உன்னை” என்று ஆவேசமாக சீற,

“என்னை கொலை பண்றது இருக்கட்டும் இன்னைக்கு உன் பொண்டாட்டியும் புள்ளையும் சாக போறாங்க தீரன் அவங்க பிணத்தை இன்னும் கொஞ்ச நேரத்துல  தூக்கி போடுறேன் பொறுக்கிட்டு போ” என்று சொல்லி சிரிக்க அவன் சொன்ன வார்த்தையில் தீரனின் இதயம் நின்று துடித்தது.

“டேய் உனக்கு நான் தானே பிரச்சனை, வரேன்டா என்னை என்ன வேணும்னாலும்  பண்ணிக்கோ, மேகாவை ஒண்ணும் பண்ணிடாத” என்று சொல்ல அவனோ,

“நீ தான் என் டார்கெட் ஆனா நீ கெஞ்சும் பொழுது செம போதையாக இருக்கு தீரன். எனக்கு இது புடிச்சிருக்கு, உன்னை கொலை பண்ணினா நீ ஈஸியா போய் சேர்ந்திருவ ஆனா மேகாவை கொன்னா வாழ்க்கை முழுக்க நீ துடிப்பல்ல, நான் துடிக்கிற மாதிரி,   அதான் எனக்கு வேணும் தீரன்” என்றவன் தீரன் கத்த கத்த சத்தமாக சிரித்தபடி அலைபேசியை அணைத்திருந்தான்.

கடக்கும் ஒவ்வொரு மணி துளியும் மேகாவின் உயிருக்கு ஆபத்து என்று உணர்ந்த தீரன் ஒரு கணம் கண்களை மூடி நிதானமாக தன் முகத்தை அழுத்தமாக துடைத்து விட்டு விழி திறந்தவன்,  நேரம் கடத்த விரும்பாது  உடனே ஆரியனை தொடர்பு கொண்டு விடயத்தை கூறி, ரிஷியை அழைத்து மேகா அல்லது கிரணின் அலைபேசியை ட்ரக் செய்ய உத்தரவிட்டான்.

சில நிமிடங்களில் தீரனை தொடர்பு கொண்ட அவனது டெக்கனிகள் ஹெட் ,

“சார் கிரண் நம்பரை ட்ராக் பண்ண முடியல பட் மேம் நம்பர் அவுட்டர் ரிங் ரோட்டை தாண்டி ரகுபிர் நகர் ரோட் பக்கம் காட்டுது”

“சரி எனக்கு அப்டேட் பண்ணிகிட்டே இரு” என்றவன் தன் அலைபேசியை  பிளுடூத்தில் கனெக்ட் செய்து ரிசீவரை காதில் மாட்டிக்கொண்டே ,”நீ இஷிதாவை கூட்டிட்டு கிளம்பு அஷோக் இது என்னால ஆரம்பிச்ச பிரச்சனை நான் தான் சால்வ் பண்ணனும்  இதனால உங்க யாருக்கும் ஏதும்ன்னா தாங்கிக்க முடியாது” என்று சொல்ல ,

“முட்டாளாடா நீ உன் பிரச்சனை என் பிரச்சனைன்னு சொல்லிட்டு இருக்க, மேகாவை  காப்பாத்தணும் அதை மட்டும் பார்ப்போம், செத்தா சேர்ந்து சாவோம் வாழ்ந்தா ஒண்ணா வாழ்வோம்” என்று அஷோக் சொன்ன எதையுமே காதில் வாங்காத தீரன்,

“இல்லை நீ வாழனும் நேத்ரா தாரிக்காக்காக நீ வாழனும்,நான் மட்டும் போறேன் வந்தா மேகாவோட வருவேன் இல்லைன்னா வர மாட்டேன்” என்றவனின் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் அஷோக்கின் கரத்தில் பட்டு தெறிக்க அஷோக்கின் கண்களும் கலங்கியது.

“உன்னை தனியா விட முடியாது தீரன்” என்று பிடிவாதமாக  கூறிய அஷோக் தீரனின் காதில் இருந்த பிளுடூத்தை வாங்கி அணைத்துவிட்டு ஸ்பீக்கர் போட்டவன்,” சொல்லுங்க இப்போ சிக்னல் எங்க காட்டுது” என்று கேட்க,

“சார் அவுட்டர் ரிங் ரோட்ல தான் கண்டின்யு ஆகுது” என்று சொல்லவும்  இஷிதாவை பார்த்த அஷோக் அவளை  கீழே இறங்க சொல்ல அவள் கெஞ்சுதலாக மறுக்கவும் அதற்கு மேல் நேரம் கடத்தாது வண்டியை ஸ்டார்ட் செய்த அஷோக்கின் கரத்தில்  கார் சாலையில் அதீத வேகத்தில் சீறி பாய்ந்தது.

ஒரு அகன்ற தூணில் கைகளும் கால்களும் பிணைக்கப்பட்ட நிலையில்  கண்களில் நீர் வடிய தேகம் நடுங்க அமர்ந்திருந்தாள் மேகா.

‘எப்படி தப்பிப்பது யார் இவர்கள்’ என்று எதுவும் புரியவில்லை, அனால் கணவன் சொன்ன வார்த்தைகளுக்கான அர்த்தம்  மட்டும் இப்போது புரிந்தது, அவன் பேச்சை  கேட்காமல் விட்டத்திற்காக இப்பொழுது வருந்தினாள்.

மேகா இங்கே அழைத்து வரப்பட்டது தெரிந்ததும் அவள் இருக்கும் பகுதியை நோக்கி நடந்தான் .வழியில் நின்ற அவன் ஆட்கள் மரியாதையுடன் அவனை வணங்கி நின்றார்கள். அவன் எதையும் கண்டுகொள்ளவில்லை உடல் இறுக கதவை திறந்தான், அவனது அழுத்தமான காலடிகள் அங்க சூழ்ந்திருந்த நிசப்தத்தை கிழித்தெறிய கொலைவெறியுடன் உள்ளே நுழைந்தான் கிரண் பாஸ்கர் என்னும் ரஞ்சித்.

கண்கள் பளபளக்க தன் எதிரே வருபவனை பார்த்த பொழுதே மேகாவின் முதுகுதண்டு சில்லிட்டது. குனிந்த தன் வயிற்றை பார்த்தாள் குழந்தைக்கு ஏதும் ஆகிவிடுமோ என்று அவள்  இதயம் ஒரு தாயக தாறுமாறாக துடித்தது. அதுவும் அவன் நெருங்க நெருங்க பயத்தில் உடல் வியர்வையில் குளிக்க, “தீரன் சீக்கிரம் என்னை கூட்டிட்டு போய்டுங்க” வாய்விட்டு கத்தினாள்.

அவள் சொன்னதை கேட்டு வாய் விட்டு சிரித்தவன் தன் அடியாளை பார்த்தான்! தலைவனின் பார்வையை படித்தவன் உடனே ஒரு நாற்காலியையும் டேபிளை  அவன் முன்னே போட்டு சில போதை வஸ்துகளை வைத்துவிட்டு தள்ளி நின்றான்.

அதை பார்த்த மேகா அலறியே விட்டாள்.”ப்ளீஸ் விட்ருங்க கெஞ்சினாள்” தான் அமர்ந்திருந்த வாக்கிலே சற்று முன்னால் வந்து மேகாவின் முகத்துக்கு நேரே தன் காதை கொண்டு வந்தவன்,

” மேகா ப்ளீஸ் இன்னும் கொஞ்சம் சத்தமா அழ முடியுமா” என கேட்டு வாய்விட்டு சிரித்தான். அரக்கனின் அகோர சிரிப்பில் பெண்ணவள் அரண்டு போனாள். அவளது பயத்தை திருப்தியாக ரசித்தபடி அவள் பார்க்க போதை வஸ்துவை நுகர்ந்து கண்கள் சொருக அவளை பார்த்தான். முகத்தை திருப்பி கொண்டாள்.

“தீரன் வந்திருங்க” ஜெபம் போல முணுமுணுத்தவளுக்கு அவனின் பார்வை அருவருப்பை கொடுத்தது.

“லுக் அட் மீ மேகா” அவள் மீது தன் விழிகளை பதித்தபடி அழைத்தான். மேகா என்ற அழைப்பே எரிச்சலை தர , நிமிராமல் அமர்ந்திருந்தாள்.

“ஐ செட் லுக் அட் மீ” டேபிளை தட்டி அழைத்தான், அதிர்ந்தாள் ஆனால் நிமிரவில்லை, மாற்றானின் மனைவியை கடத்தி வந்து தகாத பார்வை பார்க்கும் இவனுக்கு அடிபணிவதா என்ற கோபமோ இல்லை என் கணவன் இருக்கிறான் என்ற கர்வமோ ஏதோ ஒன்று  ஆனால் நிமிராமல் அமர்ந்திருந்தாள். கண்கள் மட்டும் கண்ணீரை வடித்து கொண்டே இருந்தது.

“திமிர்” என்றவன் தன் அடியாளை பார்த்தான், அந்த நொடியே தலைவனின் கட்டளையை புரிந்து கொண்டு மேகாவின் உச்சி முடியை பிடித்து கடுமையாக இழுத்து கவிழ்ந்திருந்த அவள் தலையை நிமிர்ந்தினான், வழி தாங்காமல் அலறியேவிட்டாள்.

வாய்விட்டு எக்காளமாக சிரித்தவன்,”சொன்னதை செய்யலைன்னா தண்டை மூணு மடங்கா கிடைக்கும்”

“என்ன வேணும் உனக்கு, என்னை கடத்தி இப்படி கொடுமை படுத்தி உனக்கு என்ன கிடைக்க போகுது” முகம் சிவக்க கேட்டாள்.

“நிம்மதி சந்தோசம்” புன்னகையுடன் கூறினான்.

“ஐயம் ப்ரக்னென்ட் ப்ளீஸ் என்னை விடுங்க” கெஞ்சினாள். எதுவுமே பேசவில்லை அவளை பார்த்தபடியே. அவளது கட்டை அவிழ்த்து   விட சொன்னான். நிமிடத்தில் பிணைக்கப்பட்டிருந்த கரங்கள் விடுவிக்க பட, தடித்த கயிறுகளின் இறுக்கத்தால் மணிக்கட்டு பகுதியில் காயம் பட்டிருக்க வலியில் முகம் சுளிக்க அதை பார்த்தாள். அவன் கரங்கள் அவள் முன்னால் நீண்டு அதை வருட வரவும் தன் பார்வையாலே அவனை எரித்தபடி விலகி அமர்ந்தவள். அவனை தீயாய் முறைக்க,

“ஓ” என்று சிரித்தவன் முன்னால் அன்று கிரண் கரம் குலுக்க தன் கரம் நீட்டியது பொழுது அதை மேகா நிராகரித்தது நியாபகம் வர வன்மத்துடன் அவளை நெருங்கியவன் இப்பொழுது தன் கரத்தை நீட்டினான், இவள் முறைத்துவிட்டு தன் முகத்தை திருப்பி கொள்ள அவளது மணிக்கட்டு பகுதியை பிடித்து வலிக்க முறுக்கியவன்  அவள் அலற அலற,

“உனக்கு ரெண்டு சாய்ஸ் மேகா ஈஸி டெத் ஆர் வெறி வெறி வெறி பேயின் ஃபுள் டெத், சாய்ஸ் இஸ் யுவர்ஸ்” நிறுத்தி நிதானமாக கூறி மரண பீதியை அவளுக்குள் விதைத்தான்.

“ப்ளீஸ்” கண்ணீர் மல்க கெஞ்சினாள்.

“ஆஹா எவ்வளவு இனிமையா இருக்கு இன்னும் சத்தமா” பித்துபிடித்தவன் போல நடந்து கொண்டான். இவளுக்கு தான் அவனை பார்க்க பார்க்க பயம் அதிகரித்தது. ஒரு கையில் மாத்திரையையும் இன்னொரு கையில் சிவப்பு நிற மருந்து அடங்கியிருந்த சிறிஞ்சோடு வந்தவன்,

“இதுல எது மேகா உனக்கு வேணும்” என்று கேட்க,

“என்ன இது” பதற்றத்துடன் வினவினாள்.

“இது ட்ரமடால் என் கம்பெனி மணியுபெக்ச்சர் பண்ற பெயின் கில்லர். எப்பவுமே இதுல ஓபியம்(அபின்) தான் மிக்ஸ் பண்ணுவேன். ஆனா இந்த முறை புதுசா ட்ரை பண்ணலாம்ன்னு கொஞ்சம் ஓபியம், அப்புறம் மர்ஜூனால கொஞ்சம், ஹான் பென்ஸோல கொஞ்சம், கோகய்ன்ல கொஞ்சம்ன்னு மிக்ஸ் பண்ணி புத்தம் புதுசா நானே தயார் பண்ணிருக்கேன் உனக்காக மட்டும் ஸ்பெஷலா. முதல்ல சாப்பிட்டதும் கொஞ்சம் கொஞ்சமா கண்ணு சொருகும், உடம்பு அப்படியே பறக்கிறது போல இருக்கும் ஒரு அரைமணி நேரத்துல உனக்கு கொஞ்சம் வயிறு வலிக்கும் ,அப்புறம் உன் குழந்தை செத்துரும் அப்புறம் நீ கோமால போய் ஒரு மணிநேரத்துல செத்து போய்டுவ” என்று இரக்கமே இல்லாமல் அமைதியாக கூறியவனின் கண்களில் தெரிந்த அரக்கன் மேகாவை மிக பயங்கரமாக அச்சுறுத்தினான்.

“ப்ளீஸ் ப்ளீஸ்” கெஞ்சினாள்.

“அப்புறம் இது இன்ஜெக்ஷ்ன் போட்டா ஒரு பத்து நிமிஷத்துல செத்திருவ , மாத்திரை சாப்பிட்டா நிதானமா  கொஞ்சம் கொஞ்சமாக செத்து போவே சொல்லு சீக்கிரம் எப்படி செத்து போக போற” என கேட்டவனை பார்த்து அதிர்ந்தவள், தன்னை விட்டு விடும் படி கெஞ்சினாள்.

“பயப்படாத மேகா கூடவே துணைக்கு உன் புருஷனையும் அனுப்பி வைக்கிறேன் சரியா” என்று சிரித்தவனை  பார்த்த மேகாவுக்கு பயத்தில் மயக்கம் வருவது போல கண்கள் இருண்டு கொண்டு வந்தது.

அதே நேரம் அங்கே வந்து சேர்ந்த தீரன் காரில் இருந்து இறங்க போன அஷோக்கை தடுத்து,

“நீ வேண்டாம் அஷோக் சொன்னா கேளு உனக்கு நிறைய பொறுப்பு இருக்கு அந்த கிரண் ஒரு சைக்கோ என் மேல உள்ள கோபத்துல உன்னை ஏதாவது செஞ்சிருவான் இஷிதாவுக்கு துணையா இங்கையே இரு” என்றவன் காரின் டேஷ்போர்டில் இருந்த பிஸ்டலை எடுத்து கொண்டு வேகமாக உள்ளே நுழைய போக  பின் ஒருகணம் நின்று பிஸ்டலை தன் முதுகில் சொருகிவிட்டு சுற்றி தேடியவன் சுவற்றின் ஒரு  ஓரமாக கிடந்த துருப்பிடித்த ராடுகளில் ஒன்றை எடுத்து கொண்டு உள்ளே போக அப்பொழுது,

“ஏய் யாரு டா நீ” என்று தீரனை நோக்கி ஒருவன் வர அவனை நொடிப்பொழுதில் தன் கையில் இருந்த ராடால் தீரன் தாக்க அப்பொழுது ஒருவன் தீரனின் பின்னந்தலையில் துப்பாக்கியை வைத்து அழுத்த, தீரன் அவனை தாக்குவதற்குள் துப்பாக்கி  வைத்த நமபர் கீழே விழுந்திருந்தான். தீரன் திரும்பி பார்க்க அங்கே அஷோக் கீழே விழுந்து கிடந்தவனின் கரத்தில் இருந்த துப்பாக்கியை தன் கையில் எடுத்து கொண்டு, நீ சொன்னால் நான் கேட்டுவிடுவேனா என்கிற தோரணையில் அவனைபார்த்து , “ரெண்டு பில்டிங் இருக்கு நான் அங்கே போறேன், நீ இங்க போ” என்ற அஷோக்கை தடுத்த தீரன்,” தனியா போகாத அஷோக்” என்று சொல்ல,

“தீரா மேகாவை காப்பாத்தணும் அதுல மட்டும் போகஸ் பண்ணு எனக்கு எதுவும் ஆகாது சேர்ந்தே வீட்டுக்கு போகலாம்” என்றவன் தொழிற்சாலையை நோக்கி செல்ல தீரன் ஆதிலை அடைத்து வைத்திருந்த கட்டிடத்தை  நோக்கி சென்றான்.

அதே நேரம்  மேகாவை இருவர் பிடித்திருக்க கிரண் அவளது வாயை அழுத்தமாக பிடித்து திறந்து அவள் வாயில் வலுக்கட்டாயமாக மாத்திரையை போட முயற்சி செய்து கொண்டிருக்க, அவளோ விடாமுயற்சியாக  அவர்களிடம் இருந்து விடுபட போராடி கொண்டிருக்க, திடீர் என்று கேட்ட துப்பாக்கி சத்தத்தில் சத்தம் வந்த திசை நோக்கி பார்க்க மேகாவை பிடித்திருந்த கிரணின் கரங்களில் தனது துப்பாக்கியின் தொட்டவை இறக்கியிருந்த தீரனின் முகத்தில் அவ்வளவு ஆத்திரம்.

மிக வேகமாக மேகாவை பிடித்திருந்த இருவரையும் நோக்கி அவன் வர அவன் வந்த வேகத்தை பார்த்ததும் மேகாவின் கரங்களை அவர்கள் விட்டுவிட, விடுபட்டதும் தப்பித்தால் போதும் என தாயை தேடிவரும் பசுவை போல தன்னவனை நோக்கி ஓடி வந்தவள் அவன் நெஞ்சில் புதைந்து அழ ஒரு கையால் அவளை அணைத்து கொண்டவன், கிரணை அனல் தெறிக்க பார்த்தபடி  அவர்களுக்கு அருகே வந்தவன் மேகாவை பிடித்து வைத்திருந்த இருவரையும் கிரணை பார்த்தபடி சரமாரியாக தாக்கி, நொடி பொழுதில் கிரணின் நெஞ்சில் காலை வைத்து மிதித்து, பிஸ்டலை அவன் தலைக்கு குறிவைத்தவன் சுத்தி இருந்த அனைவரையும் ஆயுதம் துறந்துவிட்டு அங்கிருந்து செல்ல சொல்லி  கட்டளையிட, கிரண் கண்ணசைக்கவும் அனைவரும் தங்களின் ஆயுதத்தை  விட்டு விட்டு அங்கிருந்து சென்றுவிட,

“அவ்வளவு சொல்லியும் என் மனைவியை கஷ்டப்படுத்திருக்க உன்னை ” என்று சீறியவன் பிஸ்டலை கிரணின் நெத்திபொட்டில்  வைத்து அழுத்தி,

“இப்போ கூட நான் நினைச்சா உன்னை கொலை பண்ண முடியும் ஆனா நான் செய்ய மாட்டேன். இப்போ சொல்றேன் நல்லா கேட்டுக்கோ ரஞ்சித், உன் அப்பனை நான் கொலை பண்ணல என்னை பிடிச்சான்  நான் தள்ளினேன். ஆனா அதுக்கு நான் இப்போ வர வருத்தப்படலை பிகாஸ் அவன் சாக வேண்டியவன் தான்.

ஆனா நான் ஒரு விஷயத்துக்கு வருத்த படுறேன் என்னால உன் லைஃப் பாதிக்க பட்டிருக்கு, ஆனா பழசு எதையுமே மாற்ற முடியாது. உன்  லைஃப் பாதிக்கப்பட்டத்துக்கு நான் காரணமா இருந்தேன் என்கிற குற்ற உணர்வு எனக்குள்ள எப்பவுமே இருக்கும் அதுக்காக என் குடும்பத்தை கஷ்டப்படுத்த நினைச்ச இருபது வருஷத்துக்கு முன்னாடி எடுத்த கத்திய திரும்ப எடுக்க தயங்கவே மாட்டேன். நியாயப்படி நீ  என் தங்கச்சி வாழ்க்கையை கெடுத்ததுக்கும்  என் மனைவியை கஷ்டப்படுத்தினத்துக்கும்  உன்னை விட்டு வைக்கவே கூடாது ஆனா போன போகுதுன்னு உயிர் பிச்சை போடுறேன் பொழைச்சு போடா, முடிஞ்சா ஒழுக்கமா வாழ பாரு ” என்றவன் ரஞ்சித் மீதிருந்த துப்பாக்கியை அகற்றிவிட்டு மேகாவுடன் சென்ற மறுகணம்,” தீரன்” என்று அந்த கட்டிடமே அதிர்ந்துவிடுமோ என்று நினைக்கும் அளவு சத்தமாக அழைத்திருந்த கிரண் வெறி பிடித்த மிருகம் போல தன் அருகே இருந்த மர நாற்காலியை மேகாவை நோக்கி வீச சுதாரித்து கொண்ட தீரன் அவளது கரம் பிடித்து தன் பக்கம் இழுத்து தன் மார்புக்குள் வைத்து காத்துக்கொள்ள, நாற்காலி தீரனின் கரத்தை வேகமாக தாக்கிவிட்டு கீழே விழ, உயிர் போகும் வலியில் விழிகளை மூடி திறந்த தீரனை தள்ளிவிட்டு மேகாவின் கழுத்தை தன் முழங்கை வைத்து நெரித்த ரஞ்சித் , டேபிளில் இருந்த ஊசியை மேகாவின் கழுத்தில் குத்துவது போல வைத்திருக்க, வலியில் தன் கரத்தை பிடித்தபடி எழுந்து நின்ற தீரன்,

“கிரண் பிரச்சனை உனக்கும் எனக்கும் அவளை விடுடா” என்று சொல்ல,

“அங்கையே நில்லு தீரன் ஒரு அடி எடுத்து வச்சாலும் இந்த ஊசில இருக்கிற மொத்த மருந்தும் உன் பொண்டாட்டி உடம்புல இறங்கிடும்” என்றவன்,

“இத்தனை வருஷம் நான் அனுபவிச்ச வேதனை டா, அதை உனக்கு கொடுக்காம எப்படி? என் அப்பான்னா எனக்கு அவ்வளவு உயிர் தெரியுமா? விடமாட்டேன் தீரன்” என்றவன் மேகாவின் கழுத்தில் சிரிஞ்சை வைக்கவும் அந்நேரம் ஆர்யன் தலைமையில் உள்ளே நுழைந்த போதை தடுப்புப்படை சிறப்பு வீரர்கள் கிரணை சுற்றி வளைக்க, அவர்களை கண்டு கிரண் திகைப்புடன் விழித்த கணம் மேகாவை தன் பக்கம் பத்திரமாக கிரண் இழுத்திருக்க, தோற்று போன உணர்வுடன் அவர்களை பார்த்த கிரண் வெறி பிடித்தவன் போல கத்த, தீரனிடம் வந்த ஆர்யன்,

“உங்க வைஃப் ரொம்ப பயந்து போய் இருக்காங்க தீரன் நீங்க அவங்களை கூட்டிட்டு கிளம்புங்க நான் எல்லாத்தையும் பார்த்துகிறேன், உங்க பிரதர் அஷோக் வெளில இருக்காரு எங்க ஆளுங்க என்கொய்ரி பண்ணிட்டு இருக்காங்க நார்மல் ப்ரொஸிட்ஜர்ஸ் தான், உங்க சிஸ்டர் தாரிக்கா நேத்ரா வெளில தான் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க அவங்க தான் இந்த லொகேஷன்க்கு எங்களை கைட் பண்ணினாங்க” என்று சொல்ல மெலிதாக தலையசைத்த தீரனோ,

“ஆதில் எப்படி இருக்கான்” என்று கேட்க,

“அவுட் ஆஃப் டேஞ்சர் தீரன் அவன் கொடுத்த ஆதாரம் அப்புறம் தாரிக்கா கொடுத்த கம்ப்ளெயிண்ட் வச்சு தான் ஆக்ஷ்ன் எடுத்திருக்கோம் , சம்பிள்ஸ் ரிசல்ட்ஸ் கூட நமக்கு சாதகமா தான் வந்திருக்கு, பெயின் கில்லர் டேப்ளெட்ஸ் அப்புறம் ப்ரோடீன் பவுடர் எல்லாத்துலயும் மனசாட்சியே இல்லாம அளவுக்கு அதிகமா ஓபியம் கலந்திருக்கான் அது கூடவே ஸ்டிமுலேண்ட்ஸ்(ஊக்க மருந்து) கலந்திருக்கான் அதனால தான் பேசிக் டெஸ்டிங்கில தெரியல ஹை லெவல் டெக்னிக் இருந்தா தான் கண்டுபுடிக்க முடியும். கம்பெனி மொத்தத்தையும் எங்க ஆளுங்க கைப்பற்றிட்டாங்க, இதெல்லாம் நீங்க இல்லாம சாத்தியம் இல்லை தேங்க் யு தீரன்” என்று சொல்ல,

“நோ சார் நான் எதுவுமே செய்யல ஆதில் தான் தன் உயிரை பணயம் வச்சு இதை பண்ணிருக்கான் அவனுக்கு தான் தேங்க்ஸ் சொல்லணும்” என்றவன் ஆர்யனிடம் கைகுலுக்கி விட்டு மேகாவுடன் வெளியே வர அவர்களை நோக்கி ஓடி வந்த அஷோக் , இஷிதா, தாரிக்கா , நேத்ரா மூவரும் மேகாவிடம் நலம் விசாரிக்க,

“நான் நல்லா இருக்கேன் அவருக்கு தான் கையில அடிபட்டிருக்கு” என்று கலக்கத்துடன் சொல்ல, அனைவரும் பதறவும் ஒன்றும் இல்லை என்பது போல தலையசைத்தவன்,

“சின்ன அடி தான் ஹாஸ்ப்பிட்டல் போனா சரியாகிடும்” என்றவன், தாரிக்கவிடம் மேகாவை அழைத்து செல்லுமாறு கூறிவிட்டு அஷோக்குடன் மருத்துவமனைக்கு கிளம்ப அப்பொழுது ,

“நானும் வரேன்” என்று மேகா சொல்லவும் அவளை திரும்பி ஒரு பார்வை பார்த்த தீரன்,

“அதெல்லாம் வேண்டாம் வீட்ல போய் ரெஸ்ட் எடு” என்றவன். திரும்பி பாராமல் அடிபட்ட கரத்தை பிடித்துக்கொண்டே கொண்டே செல்ல ,

கணவனின் பாராமுகமும் குரலில் இருந்த இறுக்கமும் அவனது கோபத்தின் அளவை தெளிவாக சொல்ல மேகாக்கு தான் வருத்தமாக இருந்தது.