MIRUTHNAIN KAVITHAI IVAL 51.2

cover pic-b80b7253

மிருதனின் கவிதை இவள் 51.2

முதல் ஸ்கேன் என்பதால் ஒருவித பரவசத்துடனே காணப்பட்ட தீரன் மேகாவை அப்பாயின்மென்ட் கொடுத்த நேரத்தை விட சீக்கிரமே அழைத்து வந்தான். காரில் இருந்து இறங்கும் பொழுது பிடித்த கரத்தை ஸ்கேன் அறையில் மேகாவை படுக்கவைத்து பரிசோதித்துக்கொண்டிருக்கும் பொழுதும் விட வில்லை. அவளது விரலோடு விரல் கோர்த்து அழுத்தமாக பிடித்திருந்தவன் ஸ்க்ரீனை தான் பார்த்து கொண்டிருந்தான்.

“அங்க பாருங்க அக்னி சார் அதான் பேபி” என திவ்யா புன்னகையுடன் சொல்ல தீரனும் ஸ்க்ரீனில் தெரிந்த தன் உதிரத்தின் பிம்பத்தை கண்ணீரும் புன்னகையும் கலந்த ஒருவித பரவசத்துடன் பார்த்து கொண்டிருந்தான். மேகாவோ தீரனை தான் பார்த்து கொண்டிருந்தாள், இந்த சந்தோஷத்தை தன்னவனின் முகத்தில் பார்க்க தானே கன்பர்மேஷன் ஸ்கேன் கூட செய்யாமல் காத்திருந்தாள்.

தீரனின் பார்வை ஸ்க்ரீனை விட்டு அகல வில்லை வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.

“பாருங்க, பேபி மூமென்ட் தெரியுது” என மருத்துவர் திவ்யா சொல்ல சொல்ல புன்னகையுடன் பார்த்து கொண்டிருந்தவன்,

“பேபி ஏன் இவ்வளவு குட்டியா இருக்கு”என சிறுபிள்ளையாக கேட்க, பெண்கள் இருவரும் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டவர்கள்,

“இந்த ஸ்டேஜ்ல இப்படி தான் சார் இருக்கும்” என்றனர்.

“அப்போ எப்போ பெருசா பெருசாவாங்க”என அவன் அடுத்த கேள்வியை கேட்க பாவமாக மேகாவை பார்த்த திவ்யா அவன் கேள்விக்கு விளக்கம் கொடுத்து முடிக்கவும், அடுத்தடுத்து கேள்விகளை கேட்டு கொண்டே இருந்தவன், மருத்துவரை ஒருவழி படுத்திவிட்டான். என்ன சாப்பிட வேண்டும், எப்படி பார்த்து கொள்ள வேண்டும், என கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக மேகா தான் தீரனை ஒருவழியாக சமாளித்து வெளியே அழைத்து கொண்டு வந்தாள்.

தீரன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தான் மேகாவின் கரத்தை இன்னும் நெருக்கமாக பற்றி தன் தோளோடு அணைத்து கொண்டவன் பெண்ணவளை அவ்வளவு தாங்கினான் .

காரின் கதவை திறந்து அவளை அமரவைத்துவிட்டு வேகமாக வந்து அவளது அருகில் அமர்ந்தவன் நொடி பொழுது தாமதிக்காமல் தன்னவளின் நெற்றி கண் என முகமெங்கும் முத்தமழையை பொழிந்து நொடி தாமதிக்காது அவளது இதழை வேகமாக ஆக்கிரமித்திருந்தான்.

முரட்டுத்தனமான முத்தத்தில் மூச்சு முட்டியது என்னவோ மேகாக்கு தான், ஆனாலும் அவனது மனநிலையை உணர்ந்திருந்தவள் அவனை தடுக்கவில்லை  , நீண்ட நெடிய முத்தத்தின் முடிவில்  மூச்சு காற்று மோதிக்கொள்ள அவளது முகத்தை பற்றியபடி அவளது நெற்றியுடன் நெற்றி முட்டியவன் ஆழ்ந்த மூச்சை வெளியிட, அவளோ “மூச்சு வாங்குது” என மென்மையாக புன்னகைக்க,

“சாரி டி எனக்கு உன்னை கிஸ் பண்ணிட்டே இருக்கணும் போல இருக்கு” என்று சொல்லவும் அவனை பார்த்து சிரித்தவள் தன் நெஞ்சில் கை வைத்து மூச்சை வெளியிட,  அவனோ சற்று எம்பி வேகமாக அவளது கன்னத்தில் இதழ் பதித்தவன் அவள் பார்க்க மறுகன்னத்திலும் இதழ் பதிக்கவும் வாய்விட்டு சிரித்தவள் இரெண்டு போதுமா என்று கேட்க அவனும் சிரித்தபடி,” இப்போ போதும் மிச்சத்தை வீட்ல வச்சு பார்த்துகிறேன்” என்று சொல்லவும், அவனது சட்டையை பிடித்து தன் பக்கம் இழுத்தவள்,

“இப்போ என் டர்ன்” என்று அவனது கன்னத்திலும் மாறி மாறி இதழ் பதித்து,”நானும் மிச்சத்தை வீட்ல கண்டின்யு பண்ணிக்கிறேன்” என்று சொல்லி சிரிக்கவும் , அவளது கரத்தை எடுத்து தன் நெஞ்சில் வைத்து அழுத்தியவன்,”தேங்கஸ் டி” என்று தன் கண்கள் கலங்க சொல்லவும் அதற்கு என்ன பதில் சொல்லவது என தெரியாது அவன் கண்களை பார்த்தவள் பின்பு அவனது ரோமங்கள் அடர்ந்த தாடையை  பற்றி அவன் நெற்றியில் இதழ் பதித்து அவன் தோள்வளைவில் சாய்ந்து கொள்ள கார் தீரனின் கரத்தில் கார் மிகவும் மிதமாக மெதுவாக சென்றது.

அப்பொழுது பார்த்து தீரனின் அலைபேசி அழைக்கவும் காரை ஓரமாக நிறுத்தியவன் அலைபேசியை எடுத்து ஸ்பீக்கரில் போட்டு,

“நேத்ரா சொல்லுடா” என்றான்,

“அண்ணா நீ சீக்கிரம் வா அண்ணா” என அவள்  பதற்றமாக பேசவும், அவன் என்னவென்று கேட்க,

“நீங்க கிளம்புன கொஞ்ச நேரத்துல அக்கா மயங்கி விழுந்துட்டா, அஷோக் அண்ணனும் நானும் ரொம்ப பயந்துட்டோம், அண்ணன் உடனே டாக்டருக்கு  கூப்பிட்டான் அவங்க வந்து செக்  பண்ணிட்டு அக்கா கன்ஸீவா இருக்கான்னு சொல்லிருக்காங்க, அதுல இருந்து அண்ணன் ரொம்ப சண்டை போடுறான் அக்கா அழுதுட்டே இருக்கா நீயும் அண்ணியும் கொஞ்சம் சீக்கிரம் வாங்க அண்ணா” என்று நேத்ரா கூறவும்,

“சரி நீ பார்த்துக்கோ நாங்க உடனே வரோம்” என்ற தீரனுக்கு மனதிற்குள் எப்படி பட்ட உணர்வென்று சொல்ல முடியவில்லை மேகாவும் அதே மனநிலையில் தான் இருந்தாள். தீரனும் மேகாவும் வீட்டிற்கு வந்த பொழுது தாரிக்கா நேத்ராவின் தோளில் சாய்ந்து அழுது கொண்டிருக்க அஷோக்கின் முகம் அவ்வளவு இறுக்கமாக காணப்பட்டது.

தீரன் மேகாவை பார்க்க கணவனின் கண்ணசைவில் அவன் எண்ணத்தை படித்தவள் தாரிக்காவை அழைத்து கொண்டு நேத்ராவுடன் தன் அறைக்கு செல்ல, அவர்கள் சென்றதும் அஷோக்கை நெருங்கிய தீரன் ஏதோ பேச வாயெடுக்கவும்,

“நோ எதுவும் பேசாத இந்த விஷயத்துல என் மனசை மாற்ற முயற்சி பண்ணாத, அந்த குழந்தை வேண்டாம் தீரன். அந்த ரஞ்சித் சம்பந்தப்பட்ட எதுவுமே வேண்டாம் அவன் அப்பன் உன் வாழ்க்கையை கெடுத்தான் அவன்  இவ வாழ்க்கையை கெடுத்தான். இனி இவன் புள்ளை வந்து என்ன பண்ண போறானோ வேண்டாம் தீரன், தாரிகாவுக்கு புரிய வை பிரச்சனைகளை பார்த்து பார்த்து தலை வெடிக்கிறது போல இருக்கு.

நாளைக்கே அவன் அப்பனை பத்தி கேட்டா என்னன்னு  சொல்லுவ சரி வராது டா” மனதில் உள்ளதையெல்லாம் கொட்டியவன் அப்படியே தன் தலையை இருக்கரங்களால் பிடித்தபடி சோஃபாவில் அமர்ந்துகொள்ள, தீரனுக்கே இந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை. குழந்தை விடயத்தில்  பொறுப்பெடுத்துக்கொள்வது பெரிய காரியம் அல்ல ஆனால் எடுத்து கொண்ட பொறுப்பில் இறுதி வரை உறுதியுடன் இருக்க வேண்டுமே, ஒரே ஒரு நொடி அந்த குழந்தையை ரஞ்சித்தின் மகனாகவோ இல்லை இந்தரின் மகனது வாரிசாகவோ பார்த்துவிட்டால் அங்கேயே எல்லாமே முடிந்துவிட்டதல்லவா, நடந்ததை மறந்து குழந்தையை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு ஆராதிக்க வேண்டும் முடியுமா? அந்த அளவுக்கு மனப்பக்குவம் இருக்கிறதா?  என்றால் அதற்கான பதில் தீரனிடம் தான் உள்ளது.

தீரனின் மனமும் இந்த கேள்வியில் தான் உழன்று கொண்டிருந்தது.நினைக்கும் பொழுதே மனம் தடுமாற  அஷோக்கின் அருகில் அமர்ந்த தீரன் நீண்ட நேர மௌனத்திற்கு பிறகு தன் உயரத்திற்கு எழுந்து நின்றவன்,

“இதுல முடிவெடுக்க வேண்டியது நாம இல்லை அஷோக், முடிவெடுக்க கூடிய எல்லா உரிமையும் தாரிக்காவுக்கு மட்டும் தான் இருக்கு தாரிக்காவுடைய முடிவு எதுவோ இருந்தாலும் நாம தான் சப்போர்ட் பண்ணனும்”

“தீரன் நோ”

“பண்ணி தான் ஆகணும் யார் மேலையோ உள்ள கோபத்தை இன்னும் இந்த உலகத்தையே பார்க்காத குழந்தை மேல வளர்த்துக்க வேண்டாம் அஷோக். நிதர்சனத்தை ஏற்றுக்க முயற்சி பண்ணு. மீனம்மா மட்டும் என்னை ஒரு கொலைகாரனா பார்த்திருந்தாங்கன்னா நான் இந்நேரம் ஒரு அநாதை அஷோக்,  அம்மாவும் அப்பாவும் மட்டும் என்னை ஆராதிக்கலைன்னா என் வாழ்க்கை எப்பவோ தடம் பிரண்டு போயிருக்கும். இப்போ நம்ம கூட மீனம்மா இருந்திருந்தா என்ன செஞ்சிருப்பாங்களோ அதை தான் நானும் செய்யிறேன்  கொஞ்சம் யோசி உனக்கே புரியும். ” என்றவன் அஷோக்கின் மறுப்பை காதுகொடுத்து கூட கேட்காது தன் அறைக்குள் சென்றுவிட, தீரன் இறுதியாக கூறிய வார்த்தைகளை எண்ணி பார்த்த அஷோகால் அதற்கு மேல் எதுவும் பேச முடியவில்லை உண்மை தான் இப்பொழுது மட்டும் அஷோக்கின் தாய் மீனம்மாள் இங்கே இருந்திருந்தால் நிச்சயம் ஒரு கருக்கலைப்புக்கு துணை போக மாட்டார், அன்பும்  பாசமும் இருந்தால்  எந்த ஒரு நபரையும்  மாற்ற முடியும் என்னும் கொள்கையை உடையவர் அவர். ஆனாலும் அஷோகால் முழுவதும் தீரனின் கூற்றை ஏற்று கொள்ள முடியவில்லை.  ரஞ்சித் கிரண் பாஸ்கர் என்னும் பெயரை கேட்டாலே மனம் முழுவதும் வெறுப்பு நஞ்சு போல படர்வதை உணர்ந்தவனுக்கு அவனது குழந்தையை முழு மனதுடன் ஆராதிப்பது என்பது  சாத்தியமாக தோன்றவில்லை.

அதே நேரம் அறைக்குள் தீரனை கண்டதும் எழுந்து நின்ற தாரிகாவோ அவனை கண்ணீருடன் பார்க்க அவள் அருகில் வந்து அவளது தலையை வருடியவன்,

“இப்போ எதுவும் யோசிக்காத பார்த்துக்கலாம் சரியா, நீ என்ன முடிவெடுத்தாலும் நாங்க எல்லாரும் உனக்கு சப்போர்ட் பண்ணுவோம் தைரியமா இரு” என்றான்.

வீட்டில் கண்ணாடி முன்பு நின்றிருந்த தாரிக்காவின் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வடிந்து கொண்டே இருக்க ஒரு கணம் தன் கண்களை மூடி திறந்தவள் தன் கண்ணீரை துடைத்துவிட்டு ஒரு கைப்பையை மட்டும் எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து, எதிரே வந்த ஆட்டோவை வழிமறித்து ஏறி போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகதிற்கு போக சொன்னாள். மனம் முழுவதும் அவ்வளவே பாரமாக இருந்தது. வழியெங்கும் கண்ணீரை துடைத்து கொண்டே வந்தவள் ஆட்டோவை காத்திருக்குமாறு கூறிவிட்டு அலுவலகத்திற்குள் நுழைந்தவள் அங்கே இருந்த அதிகாரியிடம் தான் கிரணை பார்க்க வந்திருப்பதாக சொல்ல, அவரோ இப்படியெல்லாம் திடிரென்று சந்திக்க முடியாது என்று சொல்லி அவளுடன் வாதிட, அந்நேரம் அங்கே வந்த ஆரியன் தாரிக்காவை கண்டு அவர்கள் அருகில் வந்து என்ன விடயம் என்று கேட்கவும் அந்த அதிகாரி விடயத்தை சொல்ல ஒருகணம் தாரிக்காவை பார்த்தவன் அவளது பரிதாபமான அழுத முகத்தை பார்த்துவிட்டு அந்த அதிகாரியிடம் கிரணை தாரிக்கா பார்க்க ஏற்பாடு செய்ய உத்தரவிட்டவன் அவளை அழைத்து செல்லுமாறு கூற , தாரிக்கா நன்றி உணர்வுடன் ஆர்யனை ஏறிட்டவள் அந்த அதிகாரியை பின்தொடர்ந்து கிரணை பார்க்க சென்றாள்.

ஒரு டேபிளின் ஒரு புறம் தாரிக்கா அமர்ந்திருக்க போலீசுடன் கையில் விலங்கோடு அவள் முன் வந்து அமர்ந்தான் கிரண்.

“என்ன விஷயம் எதுக்கு பார்க்க வந்த” கிரணின் அலட்சிய கேள்விகள் தாரிக்காவின் மனதை மிகவும் வருத்தியது.

“பேசணும்”

“ம்ம் சீக்கிரம்”

“இத்தனை வருஷத்துல என்னை ஒருதடவை கூட நீங்க காதலிக்கலையா” துக்கம்தொண்டையை அடைக்க கேட்டாள்.

வாய்விட்டே சத்தமாக சிரித்தவன்,”என் எதிரியோடு தங்கச்சி மேல எனக்கு எப்பவுமே காதல் வாராது” என்று சொல்லவும், கோபமுற்றவள்,” அப்போ யாரை கேட்டு என் கூட இருந்தீங்க லவ் இல்லாம எப்படி என் கூட உங்களால இருக்க முடிஞ்சிது ” என ஆக்ரோஷமாக நியாயம் கேட்டவளை பார்த்து இன்னும் சிரித்தவன்,

” ‘…………..’  கூடவும் தான் போறோம் அதுக்காக என்ன லவ்வா பண்றோம்  அது போல தான்” என சர்வ சாதாரணமாக நாக்கில் விஷத்தை தடவியது போல பயாரும் கேட்க கூடாத வார்த்தையை விட . மொத்தமாக மறித்து போனவளுக்கு அவனை பிடித்து கன்னம் கன்னமாக அறையும் வெறி வந்தது ஆனாலும் அடக்கிக்கொண்டவள் அவன் முன்பு அழ கூடாது என தன் கண்ணீரை வேகமாக துடைத்துவிட்டு, “அப்போ இதுக்கு என்ன பதில் சொல்ல போறீங்க” என தன் வயிற்றை காட்டி கேட்கவும்”

“அது உன் இஷ்டம் வேணும்ன்னா வச்சிக்கோ, இல்லைனா க்ளியர் பண்ணிடு” என அலட்சியமாக கூறியவன்  ,” தீரனை பழிவாங்க உன் மூலமா உன் வீட்டுக்கு வர நினைச்சேன் அதை தாண்டி வேற எந்த எண்ணமும் இல்லை, சோ உனக்கும் எனக்கும் எதுவும் இல்லை, ஒரு உண்மைய சொல்லட்டா உனக்கும் எனக்கும் நடந்தது கல்யாணமே கிடையாது நம்ம மேரேஜ் ரிஜிஸ்ட்ரேஷன் சர்டிபிகேட் கூட போலி தான். வேணும்ன்னா ரிஜிஸ்டர் ஆபிஸ்ல கொடுத்து செக் பண்ணி பாரு, தீரனை பழிவாங்குற மிஷன்ல உன்னை யூஸ் பண்ணிக்கிட்டேன், புரியுதா? உன்னை யூஸ் பண்ணிக்கிட்டேன். அவ்வளவு தான் சோ இனி என்னை பார்க்க வராதே, கெட் லாஸ்ட்”என்று அவள் முகத்துக்கு நேராக தன் முகத்தை கொண்டு வந்து காட்டு கத்து கத்த சத்தம் கேட்டு போலீஸ் அங்கே வரவும் தாரிக்காவை ஒரு ஏளன பார்வை பார்த்தபடி போலீசுடன் அந்த அறையில் இருந்து அவன் வெளியேறி நடக்கவும்  விடாமல் வழியும் தன் கண்ணீரை துடைத்தபடி ஆக்ரோஷமாக வந்தவள் தன் முன்னால் செல்பவனை சொடக்கிட்டு அழைக்கவும் சலிப்புடன் திரும்பியவனை  வெறுப்புடன் பார்த்தவள், தன் கழுத்தில் அவன்  கட்டிய கருப்பு மணியால் ஆன தாலியை சற்றும் தயங்காமல் அவனை பார்த்தபடியே வேகமாக இழுத்தவள் அதை அப்படியே அவன் முகத்தில் வீசி எரிந்து விட்டு அவன் முகத்தை திரும்பி பாராமல் நடந்திருந்தாள்.

அவன் முன்பு உணர்வை காட்டாது மறைத்தவளுக்கு அங்கிருந்து வெளியேறியதும் கண்ணீர் முட்டி கொண்டு வந்தது, ஏமாற்றம் அவமானம் துரோகம் என மூன்று விதமான உணர்ச்சி குவியலுக்குள் சிக்கி கொண்டவளுக்கு மனம் முழுவதும் வலி வலி வலி மட்டுமே நிறைந்திருக்க, உணர்வுகள் துடைத்த முகத்துடன் வந்தவள் தன் முன்பு கரங்களை குறுக்கே கட்டியபடி நின்றிருந்த தீரனை கண்டு ஒருகணம்  தன் கால்கள் தரையில் வேரூன்ற அப்படியே நின்று விட, தீரனோ எதுவுமே பேசாமல் அவளுக்காக காரின் கதவை திறந்தவன் அவள் வந்து ஏறி அமர்ந்ததும் காரை கிளப்பியிருந்தான்.

ஒரு சில நொடிகள் கடந்திருக்க ,”அழுகை வந்தா அழுதுடு தாரிக்கா” என்று தீரன் சொல்லி முடிக்கும் முதலே கண்ணீரில் கரைந்தவள் முகத்தை மூடி தேம்பி அழுதாள்.

“பெரிய முட்டாளா இருந்திருக்கேன் அண்ணா அவன் எங்க கல்யாணத்தை கூட ரெஜிஸ்டர் பண்ணல,கோபத்துல தாலியை கழற்றி அவன் மூஞ்சிலையே வீசிட்டேன் இனிமே அவன் சவகாசமே நமக்கு தேவை இல்லை. அஷோக் சரியா சொல்லிருக்கான் அந்த கிரண் ஒரு மிருகம், அவன் சார்ந்த எதுவுமே எனக்கு வேண்டாம் அழிச்சிடலாம் இப்போவே என்னை ஹாஸ்ப்பிட்டல் கூட்டிட்டு போ” என்ற தன் தங்கையை ஒருகணம் பார்த்தவன் அடுத்த நொடியே ,

“இது தான் உன் முடிவுன்னா அதுக்கு முன்னாடி என் கூட வேற ஒரு இடத்துக்கு வா” என்றவன், அவளை அழைத்து சென்றது என்னவோ சிட்டியிலே பிரபலமாக இயங்கி கொண்டிருக்கும் ஃபெர்டிலிட்டி சென்டருக்கு தான், தாரிக்கா அவனை குழப்பமாக பார்க்க அவனோ அங்கே  ட்ரீட்மெண்ட்டிற்காக வந்திருந்த பெண்களின் அருகே காலியான ஒரு இடத்தில் அவளை அமர செய்தவன் தான் இதோ வந்துவிடுவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட, சில நொடிகள் அமைதியாக தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவள் நேரம் போக போக நிமிர்ந்து ஒவ்வொருவராய்  பார்த்தாள்.

மகிழ்ச்சியாக சிலர் , கண்ணீரை துடைத்தபடி பலர் , எதிர்பார்ப்புடன் இன்னும் சில பெண்கள் காத்திருப்பு வரிசையில், என அங்கே வந்திருந்த அத்தனை பேரின் இழக்கும் ஒன்றே ஒன்று தான், குழந்தை !

இப்பொழுது அவளது கரம் அவளின் ஆலிலை வயிற்றை மெதுவாக வருடியது கண்கள் கலங்கியது, எத்தனை சுலபமாக வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டாய்? சிறு புள்ளி தானே என்று நினைத்து வேண்டாம் என்றாயோ?அட பேதை பெண்ணே இன்று நீ வேண்டாம் என்று நினைக்கும் ஒன்று, பலரும் கிடைக்குமா என ஏங்கும் அறிய வகை பொக்கிஷம், என மனசாட்சி உள்ளே இருந்து கேள்வி கேட்க, விருட்டென்று அங்கிருந்து எழுந்தவள் வெளியே வந்து தமையனை தேடினாள், அவள் முன்பு அதே தோரணையுடன் கைகளை குறுக்கே கட்டிக்கொண்டு நின்றான்.

ஒருகாலத்தில் வேண்டாதவனாக இருந்தவன் இன்று அவளுக்கு தெய்வமாக தெரிந்தான், சற்றும் சிந்திக்காமல் செய்ய இருந்த பாவத்தில் இருந்து அவளை  காப்பற்றி விட்டான் அல்லவா கண்களாலே நன்றி கூறினாள்! மெல்லிய புன்னகையுடன் அவளை பார்த்தான், அந்தநேரம் அவளை கடந்து சென்ற ஒரு பெண்ணின் கையில் இருந்த கைக்குழந்தை ஒன்று தாரிக்காவின் முடியை பிடித்து இழுத்து அவளை பார்த்து கிளுக்கி சிரித்தது, அட என்ன ஆச்சரியம்? இவ்வளவு நேரமாக நெஞ்சில் இருந்த பாரமெல்லாம் எங்கோ பறந்தது போல மனம் சட்டென்று லேசாகி விட்டதே! மெதுவாக அக்குழந்தையின் பிடியில் இருந்து தன் கேசத்தை விடுவித்தவள் அதன் கரங்களை மயிலிறகாக வருடினாள், அதுவும் அவளை பார்த்து சிரித்தபடி தன் தாயுடன் சென்றது.

“குழந்தை ஒரு வரம் தாரு, இல்லாதவர்களுக்கு தான் அதோட அருமை தெரியும்.நீ ஏன் அதை ரஞ்சித்தோட  குழந்தையா பார்க்கிற உன் குழந்தையா பாரு, உன் குழந்தை மேல எனக்கு இருக்கிற நம்பிக்கை, உனக்கில்லையா?” நிமிர்ந்து தமையனை பார்த்தவள் தன் கண்ணீரை துடைத்துவிட்டு,

“என குழந்தை மேல எனக்கு நிறைய நம்பிக்கை இருக்கு அண்ணா, என் கனவை பொய்யாக்க மாட்டான், அவனை நான் நல்ல வளர்ப்பேன், உலகமே பாராட்டுற மாதிரி நான் வளர்ப்பேன்” என தன் வயிற்றை  மெதுவாக தடவியபடி கர்வத்துடன் கூறினாள், ஒருவித மெச்சுதலுடன் தங்கையை பார்த்தான்.

!!!

வீட்டில் இருப்பது மூச்சடைப்பது போல இருக்க காரை  எடுத்து கொண்டு வெளியே வந்த அஷோக்கிற்கு எங்கே செல்வது என்று புரியவில்லை, மன நிம்மதி வேண்டி எங்கெங்கோ சென்றான்.

அவனால் முழுவதும் தீரனின் முடிவை ஏற்று கொள்ள முடியவில்லை, அதே நேரம் நிராகரிக்கவும் முடியவில்லை. மனதில் தெளிவில்லாமல் தத்தளித்தவனுக்கு கிரணின் நியாபகம் அடிக்கடி வந்து கோபத்தை தூண்டியது காரை கடற்கரையோரமாக பார்க் செய்தவன், அப்படியே கண்களை மூடி அமர்ந்துவிட்டான். சில மணி நேரம் கழித்து வீட்டிற்கு வந்தவன் யாரிடமும் பேச வில்லை நேராக சென்று தன் அறைக்குள் புகுந்துகொண்டான்.

மேகாவுக்கு அஷோக்கை பார்க்க கஷ்டமாக இருக்கவும் இஷிதாவுக்கு அழைத்து விடயத்தை கூறி வருத்தப்பட, மனம் கேளாமல் வீட்டிற்கு வந்த இஷிதவுக்கு அஷோக்கின் பேச்சு மிகவும் தவறாக பட்டது. இருந்தும் அவனது மனநிலையை புரிந்து கொண்டவள் மேகாவிடம் சொல்லிவிட்டு கையில் டி கப்புடன் அவன் அறையின் கதவை தட்டினாள்.

அவள் தட்டியதும் கதவு திறந்து கொள்ள,”கதவுக்கு தாள் போடலையா” என்றவள் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றாள், அறையில் அவன் இல்லாததும் பால்கனியின் திரைக்கு பின்னால் உருவம் தெரிய, அவன் அருகில் சென்று நின்ற இஷிதா திரும்பி அவனை பார்த்தாள் தொலைவில் தெரிந்த செவ்வானத்தை வெறித்தபடி நின்றிருந்தான்.

தான் கொண்டு வந்த டீ கப்பை அவனிடம் நீட்டினாள், “வேண்டாம்” என ஒற்றை சொல்லில் மறுத்துவிட,

அவனை மேலும் வற்புறுத்த விரும்பாதவள் டீ கப்பை ஓரமாக வைத்துவிட்டு, அவனது அருகே வந்து அவனது தோளில் தன் கரம் வைத்து.

“உன் பிரச்சனைய என்கிட்ட சொல்ல மாட்டியா,ஷேர் பண்ணினா உனக்கும் மனசு லேசாகுமே” என வருத்தத்துடன் கேட்க அவனோ,

“அதெல்லாம் ஒன்னும் இல்லை டி நீ உன் வீட்டுக்கு கிளம்பு” என்று சொல்ல,

“எனக்கு தெரியும் நீ நல்லா இல்லை அஷோக்” என்றவள்,” எதையும் ரொம்ப மனசுல போட்டு குழப்பிக்காத” என்று சொல்லி கொண்டிருக்கும்  பொழுதே அவளை இறுக்கமாக அணைத்திருந்தான். அந்த  இணக்கத்தில் அவன் தேடியது  காமத்தையும் காதலையும்  தாண்டி அவனது  தவிக்கும் மனதிற்கு ஒரு ஆறுதல் தான்.

அவனது முதுகுத்தண்டு லேசாக குழுங்கவும் அவளது ஒருகரம் அவனது முதுகை வருட அவளது மறுகரம் அவனது கேசத்தை கோதியது.அவனும் அவளை அணைத்தபடியே,

” ஏற்கனவே என் தங்கச்சி வாழ்க்கையை எப்படி சரி பண்ண போறேன்னு தவிப்பில இருந்தேன் டி இப்போ பார்த்து இது? என்னால ஏத்துக்க முடியல இஷு? நான் சொல்ல வர்றதை யாருமே புரிஞ்சிகிட்ட மாதிரி தெரியல டி”என்றவனின் கண்ணீர் அவளது முதுகை நினைக்கவும் பதறியவள் அஷோக்கை  தன்னிடம் இருந்து விலகி அவனது கன்னம் தாங்கி அவனின் நெற்றியில் இதழ் பதித்தவள் அவனை அழைத்து வந்து கட்டிலில் அமரவைத்து அவனது கரங்களை தன் கரங்களுக்குள் பொத்தி வைத்துக்கொண்டு ,

“நீ சொல்றது எல்லாருக்குமே புரியுது, ஆனா குழந்தை விஷயத்துல நீ பேசுறது நிஜமாவே ரொம்ப தப்பு டா, அதை விட ஒரு பெரிய பாவம் வேற எதுவும் கிடையாது, கொஞ்சம் தாரிக்காவுடைய மனநிலையையும் பாரு, முடிவெடுக்க வேண்டியது நீ இல்லை அவ,அவளுக்கு உங்களை விட்டா யாரு இருக்கா நீ தான் அவளுடைய எல்லா முடிவுலையும் கூடவே இருந்து அவளுக்கு ஆதரவா இருக்கணும்” என்ற இஷிதாவிடம் மறுப்பாக தலையசைத்தவன் அவள் கரத்தில் இருந்த தன் கரத்தை உருவி கொண்டு,

“இந்த விஷயத்துல என்னை கன்வின்ஸ் பண்ண முயற்சி பண்ணாத” என்றவன் மீண்டும் எழுந்து பால்கனி பக்கம் சென்று வானத்தையே வெறித்து பார்க்க,

சிறு கோபத்துடன் அவன் அருகே வந்தவள், “அந்த குழந்தையை நீ  அந்த ரஸ்களோட குழந்தையா  பார்க்குற அதனால தான் உனக்கு ஏத்துகிறதுக்கு கஷ்டமா இருக்கு, அதே நேரம் அந்த குழந்தைய உன் தங்கச்சியோட குழந்தையா பாரு  உன்னால வெறுக்க முடியாது, பொறுமையா யோசி உனக்கே புரியும்” என்ற இஷிதா டீ கப்பை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட போகும் தன்னவளின் முதுகையே வெறித்தவனின் மனம் மீண்டும் பாசத்துக்கும் வெறுப்புக்கும் மத்தியில் தள்ளாடியது.