MIRUTHNAIN KAVITHAI IVAL 51.3

cover pic-de69826b

MIRUTHNAIN KAVITHAI IVAL 51.3

மிருதனின் கவிதை இவள் 51.3

அதேநேரம் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகதில் உள்ள சிறையில் தரையில் அமர்ந்த வாக்கில் சுவற்றில் சாய்ந்திருந்த ரஞ்சித்தின் கண்கள் சுவற்றை வெறித்திருக்க அவன் மனமுழுவதும் தீரனை எதுவும் செய்ய முடியவில்லையே என்னும் ஆத்திரம் தான் நிறைந்திருந்தது. அடைந்த தோல்வி அவனுக்குள் இருக்கும் பழியுணர்ச்சியை தூண்டி விட உடல் கொஞ்சம் கொஞ்சமாக போதையை நாட ஆரம்பிக்க, கண்கள்  சிவப்பேற தன் தலையை இருக்கரங்களால் தாங்கி பிடித்து கொண்டவனுக்கு நேரம் நேரம் கடக்க கடக்க தலையே வெடிப்பது போல, நரம்பெல்லாம் சுண்டி இழுப்பது போல வலிக்க, ஒரு கட்டத்திற்கு மேல் தன் சுயத்தை இழந்தவன் வெறி பிடித்தது போல கத்தி என்ன செய்கிறோம் என்பதை மறந்து சுவற்றில் தன் தலையை அடித்து தன்னை தானே காயப்படுத்தி கொள்ள, அவன் அறையில் இருந்து வந்த அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அதிகாரிகள் கதவு திறந்து உள்ள வந்த பொழுது தலையில் ரத்தம் வழிய ரஞ்சித் கீழே சரிந்தான்.

மறுநாள்காலையில் தாரிக்கா தன் அறையில் அமர்ந்தபடி தன் குடும்ப புகைப்படத்தை கையில் வைத்து   கண்கலங்க பார்த்து கொண்டிருக்க, அப்பொழுது திடிரென்று யாரோ கதவை தட்டவும் தன் கண்களை துடைத்து கொண்டு வந்து கதவை திறந்தவள் வாசலில் நின்ற பணியாளரிடம்,

“என்ன” என்று கேட்க,

“இதெல்லாத்தையும் உங்க ரூம்ல வைக்கணும் மேம்” என்றார்,

“என்ன அது நான் எதுவும் கேட்கலையே” என தாரிக்கா யோசிக்கும் பொழுதே அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே நுழைந்த அஷோக்,

“இங்க வாங்,க கவனம் இந்த ஃபோட்டோவை பெட்டுக்கு நேரா மாட்டுங்க” என்று சிரிக்கும் குழந்தைகள் இருக்கும் ஃப்ரேம்  செய்யப்பட்ட படத்தை மாட்டியதில் துவங்கி, மெத்தைக்கு விரிக்கும் மெத்தை விரிப்பு முதல் ஜன்னலுக்கு போடும் திரைச்சீலை என அனைத்தையும் மாற்றி அமைத்தவன் அறையில் புதிதாக சில அலங்கார பொருட்க்களையும்  அடுக்கினான். மேகா கர்ப்பமாக இருக்கிறாள் என்று தெரிந்ததும் என்னவெல்லாம் அவளுக்கு செய்தானோ  அதை அனைத்தையும் இப்பொழுது தாரிக்காவுக்கும் செய்தான்.  தாரிக்காவுக்கு பேச்சே வரவில்லை ஒருவிதமான மனநிலையில் அவன் செய்யும் அனைத்தையும் ஒருவித  தவிப்புடன் பார்த்து கொண்டிருந்தாள்.

வேலை முடிந்ததும் பணியாளர்கள் சென்றுவிட அறையில் தாரிக்கவும் அஷோக்கும் மட்டும் இருந்தார்கள், அங்கு அப்படியொரு அமைதி,

“ம்ஹும்” மௌனத்தை உடைத்து அஷோக் தான் முதலில் பேச துவங்கினான்,

“சின்ன வயசுல நீ நிறைய விஷயத்துக்கு பயப்படுவ, அப்படி பயப்படும் பொழுதெல்லாம் என் கையதான் இறுக்கமா புடிச்சிக்குவ” என்றவன் ஒரு ஆழ்ந்த மூச்சை வெளியிட்டு,

“அப்போ மட்டும் இல்லை இனி எப்பவுமே என் கைய நீ புடிச்சிக்கலாம்” என்று சொல்லவும் தாரிக்கா அஷோக்கை அணைத்திருக்க இருவரின் கண்களிலும் கண்ணீர் வழிந்தோடியது,

“எனக்கு என் குழந்தை வேணும் அண்ணா” என்ற தாரிக்காவின் கண்களை துடைத்தவன்,

“எனக்கும் தான்” என்று சொல்லி அவளது வயிற்றை பார்த்து,

“சீக்கிரம் வா டா மருமகனே, மாமா வெயிட்டிங்” என்று புன்னகைக்க, தாரிக்காவும் வெகு நாட்கள் கழித்து  மனம் விட்டு சிரித்தாள்.

!!!

“டாக்டர் என்ன சொல்ராங்க ஆர்யன்” கிரண்(ரஞ்சித் )மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும் ஆர்யன் தீரனுக்கு தகவல் அனுப்பியிருக்க அங்கே வந்த தீரன் பெட்டில் தலையில் கட்டுடன் படுத்திருந்த கிரணை பார்த்துவிட்டு வெளியே வந்து அரியனிடம்  அவனை பற்றி விசாரித்தான்.

“நிலைமை ரொம்ப  மோசம்,  அவன் ப்ளட் முழுக்க ட்ரக்ஸ்  தான் இருக்கு ஒருவித எக்ஸ்ட்ரீம் லெவல் ட்ரக் அடிக்ட் ஒண்ணுமே பண்ண முடியாது, ரீஹபிடேஷன்  சென்டர் அனுப்பினாலும் நோ யூஸ், ட்ரக்ஸ் கிடைக்கலைன்னா எல்லாரையும்  காயப்படுத்துவான் இல்லை தன்னை தானே இதே போல காயப்படுத்திக்குவான் சூசைட்க்கான சான்சஸ் நிறைய இருக்கு”

“தனக்கு யார் கூடலாம் தொடர்பு இருக்குன்னு ஏதாவது சொன்னானா” என்ற தீரனிடம்,

“வாய திறக்கவே மாட்டிக்கிறான். திமிரா இருக்கான் எவ்வளவு அடிச்சாலும் மரத்து போன மாதிரி இருக்கான். இன்னும் ரெண்டு நாள்ல கோர்ட்ல ஒப்படைக்கணும் , அதுக்குள்ள என்ன வேணும்னாலும் ஆகலாம். கிரண் பாஸ்கர் ஒரு சின்ன டாட் தான். இவனோட லிங்க் எல்லாமே பெரிய பெரிய அண்டர்வேர்ல்டு மாஃபியாவா தான் இருக்கும். அவங்க எல்லாம் பெரிய நெட்வொர்க்ஸ், செயின் மாதிரி போயிட்டே இருக்கும். அவங்க யாரும் இவனை இனி உயிரோட விட மாட்டாங்க”

“ம்ம் அவனோட வோர்க்கர்ஸ் அவங்க என்ன சொல்ராங்க”

“அவங்க வெறும் கிரணோட கை கூலி, படிப்பறிவே இல்லாதவங்க சுத்தி வர உள்ள கிராமத்துல  உள்ளவங்க தான் அங்க வேலை பார்க்குறாங்க அவன் பெர்ஸனல் அசிஸ்டன்ட் கிட்டையும் விசாரிச்சேன் எங்களுக்கு தேவையான நியூஸ் எதுவும் கிடைக்கல” என்று ஆரியன் சலிப்புடன் சொல்லி கொண்டிருக்கும் பொழுதே, கிரண் இருந்த அறைக்குள் யாரோ அலறும் சத்தம் கேட்டு இவர்கள் இருவரும் உள்ளே வர கிரண் தாதி ஒருவரை அருகில் இருந்த இரும்பு ஸ்டாண்டால் அடிக்க பாய்ந்து கொண்டிருந்தான்.

அதை கண்ட தீரன் ஓடி வந்து கிரணை தடுக்க முயற்சிக்க, அந்த இடத்தில் தீரனை கண்ட கிரணுக்கு இன்னும் ஆக்ரோஷம் ரெண்டு மடங்காக மாற, தாதியை விட்டுவிட்டு தீரனை இரும்பு ஸ்டாண்டால்  அடிக்க பாய்ந்தவனின் உடல் ஆரியனின் துப்பாக்கியில் இருந்து வந்த தொடர் தோட்டாவால் சிறு அதிர்வுடன் தரையில் வீழ்ந்தது.

தீரனை வெறித்து பார்த்திருந்த ரஞ்சித்தின் கண்கள் மெல்ல மெல்ல சொருக அவனது உயிர் கொஞ்சம் கொஞ்சமாக உடற்கூட்டில் இருந்து பிரிந்து கொண்டிருந்த நேரம் சிரமப்பட்டு கண்களை திறந்து உக்கிரமாக தீரனை பார்த்தபடியே உயிர் துறந்தான்.

தீரனை அழிக்க பழிவெறியுடன் இளமை துவங்கிய அவனது ஓட்டம் இன்று  நிறைவேறாத வெறியுடன் மாற்றான் கையால் தடைபட்டது.

தீரன், ரஞ்சித் இருவரின் வாழ்க்கையும் மூவரின் சுயநலத்தால் திசை மாறியது. என்ன இதில் தீரன் தனக்கு கிடைத்த வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றிக்கொண்டான். ஆனால் ரஞ்சித்  பழி வெறியால் தனக்கு கிடைத்த வாழ்க்கையை தானே பாழாக்கி விட , இன்று அவன் மூட்டிய தீயே அவனை விழுங்கிவிட்டது.

கிரணின் மரண செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியாக தான் இருந்தது. தாரிக்காவின் மனதை புரிந்து கொண்டு யாருமே அதை பற்றி பேச வில்லை, அனைவரிடமும் தன்னை இயல்பாக காட்டிக்கொண்டவள் தனிமையில் வேதனைப்பட்டாள். அவனுடன் கழித்த பல இன்பமான நாட்களின் நினைவு  அவனுக்காக  கண்ணீரை சுரக்க செய்தது. ரஞ்சித்தின் இறுதி சடங்கில் கூட தீரன் அழைத்தும் அஷோக் பங்கெடுக்க வில்லை, யாரும் இல்லாத அனாதை போல கிடந்தவனை பார்க்க மனம் கேளாமல் தீரன் தான் அவனுக்கான இறுதி சடங்கை செய்து வைத்தான்.

“நீ ஏன் ரஞ்சித் நல்லவனா இல்லை” இறுதியாக ரஞ்சித்தின் உடலுக்கு தீ மூட்டும் முன்பு அவன் முகத்தை பார்த்து தீரன் கூறிய பொழுது தீரனின் விழியோரம் வடிந்த கண்ணீர் ரஞ்சித்தின் சில்லிட்ட முகத்தில் பட்டு தெறித்தது.

ரஞ்சித்தின் சொத்து மொத்தமும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க பட, அவனது தொழிற்சாலைகள் மொத்தமும் சீல் வைக்க பட்டது. நாட்கள் வாரங்களாக வாரங்கள் மாதங்களாக கடந்திருக்க ரஞ்சித் என்பவனை மறந்து அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர்.

முதல் செக்கப்பிற்கு மட்டும் தான் மேகா தீரனுடன் சென்றாள். அதன் பிறகு வந்த அணைத்து செக்கப்பிற்கும் மேகா தாரிக்காவை தான் தன்னுடன் அழைத்து சென்றாள்.”நான் இருந்துகிறேன் அண்ணி எனக்கு அடுத்த வாரம் தானே நீங்க அண்ணாவை அழைச்சிட்டு போங்களேன்” என தாரிக்கா இருவருக்கும் தனிமை கொடுக்க வர மறுத்தால்,

“உன் அண்ணா கேள்வி கேட்டே எல்லாரையும் ஓட விடுறார், நீ வா அப்படியே ஷாப்பிங் போயிட்டு வரலாம்” என விடாப்பிடியாக அவளை அழைத்து செல்வாள். 

ஒரு நொடி கூட தாரிக்கா ரஞ்சித்தையோ தன் திருமண வாழ்க்கை குறித்தோ ஏங்கி விட கூடாது என்பதில் அனைவரையும் விட மிக கவனமாக இருந்த மேகா தீரனுடன் சேர்ந்து அமர்ந்து உணவருந்துவது, அவனுடன் கைகோர்த்து நடை பயில்வது என தனக்கு பிடித்த அனைத்தையும் தவிர்த்தவள், தாரிகாவுடனே அதிக நேரத்தை செலவிட்டாள். தீரனுடன் கொஞ்சுவது, சிரிப்பது, கதைப்பது அனைத்தும்  நான்கு சுவற்றிற்குள் தான், மனைவியின் பக்குவமான அணுகுமுறையும், சின்ன சின்ன தியாகமும்  தன் தங்கைகள் மேல் அவள் எடுத்துக்கொள்ளும்  அக்கறையையும்  பார்க்க பார்க்க அவனுக்கு அவனவள் மீது காதல் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே தான் போனது. வீட்டிற்குள்ளே அடைந்து கிடந்த தாரிக்காவை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே அழைத்து வந்தாள், அவளுடன் மனம்விட்டு நிறைய பேசினாள். இருவருக்கும் இடையே அண்ணி நாத்தனார் என்னும் உறவை தாண்டி ஒரு அழகான பந்தம் உருவானது.

நேத்ரா பாதியில் விட்டிருந்த டிகிரியை வேறு கல்லூரியில் தொடர சொல்லி அவளை ஊக்கப்படுத்தினாள். தாரிக்கா தனக்கு பிடித்த, தான் படித்ததிற்கு தொடர்பான பெண்களுக்காக ஆடை வடிவமைக்கும் தொழிலை சிறிய முறையில் மேகாவின் உந்துதலில் தன் சகோதரர்களின் உதவியுடன் திறம்பட நடத்திக்கொண்டிருந்தாள்.

மேகா தாரிக்கா இருவருக்கும் குழந்தைகள் பிறந்த பிறகு அஷோக் இஷிதாவின் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று கோபாலகிருஷ்ணன் ராதிகாவின் தலைமையில் இருவீட்டாரும் கலந்து பேசி அஷோக் இஷிதாவின் திருமண நாளை நிச்சயத்திருந்தனர்.

கனகராஜிடம் பேசுவதில் கோபாலகிருஷ்ணனுக்கு விருப்பம் இல்லை தான் ஆனால் தீரனுக்காக இறங்கி வந்தவர் முரண்டு பிடித்த கனகராஜிடம் தன் கோபத்தை விடுத்து முதலில் பேசினார்.

‘நான் வேண்டாம்ன்னு சொன்னா மட்டும் கேட்கவா போறா, இல்லை அந்த அக்னி தான் விட்ருவானா. என்னவோ நல்லா இருந்தா சரி’என்ற மனநிலையில் இருந்த கனகராஜ் முக்கியமாக தீரனுக்கு பயந்தே வாய் திறக்கவில்லை.

“அட நிச்சயதார்த்தமே இவ்வளவு பிரமாண்டமா இருக்கே  அப்போ கல்யாணம் இன்னும் களைகட்டும் போலவே” என வந்தவர்கள் அனைவரும் சொல்லி வியக்கும் அளவுக்கு  அஷோக் இஷிதாவின் நிச்சயதார்த்தத்தை ஊர் வியக்க நடத்தி அழகு பார்த்த தீரனுக்கும், மணமேடையில் இஷிதாவின் கரம் பிடித்தபடி நின்றிருந்த மித்ரனுக்கும் ஏழு மாத கருவோடு வாழ்க்கையை இழந்து நின்றிருந்த தங்கையை பார்க்கும் பொழுது கண்களின் ஓரம் நீர் சுரந்தது.

ஆனால் இத்தனை நாட்களில்  தாரிக்கா மிகவும் பக்குவப்பட்ட தைரியமான பெண்ணாக மாறியிருந்தாள். கண்கள் கலங்க நின்ற தமயன்களை அணைத்து  அவர்களுக்கு அவள் தைரியம் ஊட்டினாள்.

மேகா கனகராஜிடம் ஆசிர்வாதம் வாங்க சொல்லி எவ்வளவோ சொல்லியும்,

“எப்போ என் அம்மா உடம்பு முடியாம இருக்கும் போது இன்னொரு கல்யாணம் செஞ்சிகிட்டாரோ அப்போவே அவருக்கும் எனக்கும் ஒன்னும் இல்லை”என உறுதியாக கூறிய இஷிதா கனகராஜின் இரண்டாம் மனைவியிடம் கூட மரியாதை நிமித்தமாக ஆசிர்வாதம் வாங்கியவள்  தன்  தந்தையுடன் பேச கூட இல்லை, அவரும் வழமை போல கண்டுகொள்ளவில்லை. அவரவர் நியாயம் அவரவருக்கு , பிடிவாதமாக எந்த உறவையும் ஒட்டிவைக்க இயலாது, ஒருவேளை பிற்காலத்தில் கனகராஜ் தான் செய்த தவறை உணர்ந்து தன் பணத்தாசையை விடுத்து மகள் என்று அன்புடன் வந்தால் அவள் மனமும் மாறலாம். அதை காலம் தான் தீர்மானிக்கும்.

பிரச்சனைகள் அனைத்தும் முடிந்து அனைவரின் வாழ்க்கையும் தெளிந்த நீரோடை போல மிக மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்தது. மேகா அப்பொழுது நிறைமாத கர்ப்பிணி அன்று வீட்டில் தீரனும் மேகாவும் மட்டும் இருக்க, திடிரென்று உடம்பில் ஒருவித மாற்றத்தை உணர்ந்த மேகா குளியலறைக்கு சென்றுவிட்டு வந்தவள் ,

“தீரன் நான் இப்போ ஒன்னு சொல்லுவேன் நீங்க பதற்ற பட கூடாது  சரியா” என்று சொல்லும் பொழுதே லேப்டாப்பில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவன், ஒருவித கலவரத்துடன் அவளை பார்க்க, அவளோ ஏற்கனவே டெலிவெரிக்கென்று நேத்ரா தயார் செய்து கொடுத்திருந்த பையை எடுக்கவும் ,

“ஏய் அதை இதை தூக்காதன்னு எத்தனை முறை சொல்றது உனக்கு” என்று திட்டவும்  பல்லை கடித்தபடி முகம் சிவக்க அவனை பார்த்தவள்,” தீரன் எனக்கு பள்ளீடிங் ஆகிடுச்சு ஐ திங்க் ஒரு ஒருமணிநேரத்துல  டெலிவரி” என அவள் சொல்லி முடிக்கும் முன்பே  மடிக்கணினி கீழே விழுவது கூட தெரியாது எழுந்து அவள் அருகில் வந்தவன்,

“இன்னும் பத்து நாள் இருக்கு டி, பனிக்குடம் தான டி முதல்ல உடையும்ன்னு சொன்ன, இப்போ ப்ளீடிங் சொல்ற  உன் முகம் ஏன் ஒருமாதிரி இருக்கு மேகா” இரெண்டு நிமிடத்தில் இவனுக்கு வியர்த்து விட்டது.

“தீரன் எனக்கு பெயின் ஸ்டார்ட் ஆகிடுச்சு ம்மா” மீண்டும் பல்லை கடித்து கொண்டு அவள் வலியை தாங்கிக்கொள்ளவும் கலவரமானவன் அடுத்த நொடி தன்னவளை கையில் ஏந்தி கொண்டான்.    

மருத்துவனை வந்து சேர்வதற்குள் ட்ரைவரை ஒருவழி படுத்தி எடுத்தவன்,

“டாக்டர் எங்க? டாக்டர்” என்று வாசலிலே கத்தியபடி வர தீரனை கண்டதும் ஓடி வந்த செவிலிய பெண்ணிடம்,” எங்க டாக்டர்?” என கேட்டபடி மேகாவை தன் கரங்களில் ஏந்தி கொண்டு நடந்துவந்த தீரனின் முகத்தில் இருந்த பதற்றத்தை பார்த்த மேகா,

“தீரன் ப்ளீஸ் அமைதியா இருங்க ஐயம் ஓகே முதல்ல என்னை  கீழ இறக்கி விடுங்க” என்று அவன் கரத்தில் இருந்து இறங்க முயற்சித்தவளை , “நோ அமைதியா இரு டி இந்த நேரத்துல உன்னால எப்படி நடக்க முடியும்” என அவளை அடக்கிவிட்டு,”என்ன பார்த்துட்டு இருக்கீங்க டாக்டரை வர சொல்லுங்க” என நர்ஸை விரட்டியவன்,

மேகாவுக்காக முன்பே தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த பிரத்யோக வார்டுக்கு அழைத்து வந்து அவளை படுக்க வைக்கும் பொழுதே விடயம் கேள்வி பட்டு மருத்துவர் வந்துவிட,

“இவ்வளவு நேரம் எங்க போயிருந்தீங்க” என மருத்துவரிடம் சீறியவன், “அவளுக்கு ப்ளீடிங்க ஆகிடுச்சாம் ரொம்ப வலியில இருக்கா ஏதாவது பண்ணுங்க, மேகாக்கு வலிக்காம குழந்தைய எடுங்க” உடல் வியர்வையில் குளித்திருக்க, மனைவியின் கரத்தை விடாமல் பிடித்தபடி  பதற்றத்துடன் ஏதேதோ உளறி கொட்டினான்.

“இதோ பார்க்குறேன் சார்” என்றவர் மேகா கண்ணசைக்கவும்,”நீங்க அதுவரை வெளியில” என அவர் ஆரம்பிக்கவும்  மேகாவின் கரத்தை இன்னும் இறுக்கமாக புடித்துக்கொண்டவன்,”ஏன்? நான் இங்க தான் இருப்பேன் என் முன்னாடி செக் பண்ணுங்க” என்று சிறு குழந்தையாய் அடம் பிடித்தவனை சமாளிக்கும் வழி தெரியாது தவித்தவளுக்கு முதுகுத்தண்டுடன் சேர்த்து வலி எடுக்க, இதுக்கே இப்படி நிலையாக நிற்பவன் முன்பு, வலியில் அழுதால் இன்னும் பதறிவிடுவான் என்று எண்ணியவள் பல்லை கடித்துக்கொண்டு கிடந்தாள்.

“சார் மேம்க்கு இப்போ தான் ஸ்டார்ட் ஆகியிருக்கு இன்னும் டைம் இருக்கு இன்னும் லேபர் பெயின் வரணும்” என அவர் சொல்லி முடிக்கவில்லை அவரை பயங்கரமாக முறைத்த தீரன்,

“அவளை பாருங்க வலியில துடிச்சு போய் இருக்கா இது வலியே இல்லைன்னு இன்னும் வரும் சொல்றீங்க அதெல்லாம் வரவேண்டாம் ஒழுங்கா பாருங்க” காட்டு கத்து கத்தினான். மருத்துவர் மேகாவை  பாவமாக பார்க்கும் பொழுதே ஒருவிதமான வலி முதுகுத்தண்டுடன் சேர்த்து வயிற்றை இறுக்கி பிடிக்க பொறுக்க முடியாமல்,”தீரன்”என மேகா கத்திவிட, இவனுக்கு உயிர் கையில் இல்லை

“ஒன்னும் இல்லை பேபி ஈஸி சரி பண்ணிடலாம்” அவள் தலையை வருடியவன்,”ஏய் ஏதாவது பண்ணுங்க” அதட்டினான். அடுத்த அடுத்த வலி ஒவ்வொன்றும் சிறிய சிறிய இடைவெளி விட்டு வர தீரனின் கரங்களை  அழுத்தி பிடித்துக்கொண்டு கதறி துடித்துவிட, கலங்கி தவித்தான்.

வலிக்கும் என்று தெரியும், அவனை பற்றி தெரிந்ததால்  அவளும் முன்பே அவனிடம் அனைத்தையும்  கூறி அவனை தயார்படுத்தி தான் வைத்திருந்தாள், டெலிவரி நேரம் உள்ளே வர வேண்டாம் என்று கூட கேட்டுப்பார்த்தாள் அவன் தான் வந்தே தீருவேன் என்றான்.

ஆனால் இப்பொழுது அவனால் சுத்தமாக முடியவில்லை அவள் வலி , கண்ணீர் எதையுமே அவனால் பார்க்க முடியவில்லை ஒவ்வொரு முறையும் அவள் அலறி துடிக்கும் பொழுது அந்த சத்தம் அவனுக்கு பயத்தை கொடுத்தது அவள் வலியை அவன் உணர்ந்தான்.

“ப்ளீஸ் டாக்டர் ஏதாவது பண்ணுங்க என்னால முடியல” மூச்சு வாங்க நா வறண்டு போக கெஞ்சினான். இருண்ட முகமாய் வியர்வை வழிய,  தன்னவளின் வலியை  பார்க்க  முடியாது கண்களை வேறுபக்கம்  திருப்பி கொண்டு துடிக்கும் மார்பை அழுத்தி பிடித்தபடி தளர்வுடன் நின்றிருந்த கணவனின் சட்டையை பிடித்து வலியுடன் தன் பக்கம் இழுத்தவள் ,”வெளிய போங்க தீரன் எனக்கு ஒன்னும் இல்லை பயப்படாதீங்க” வலியில் அவள் பல்லை கடித்தபடி தன் முகம் இறுக கூற, அவள் முகத்தை பார்த்தான்! பொறுத்துக்கொள்கிறாள் எனக்காக அவள் வலியை பொறுத்துக்கொள்கிறாள் அவன் கண்கள் கலங்கி விட்டது, குனிந்து  தன்னவளின்  கண் பார்த்து அவளது நெற்றியுடன் தன் நெற்றியை அழுத்தி வைத்தவன்,”நோ மாட்டேன்” என மறுப்பாக தலையசைக்க, அவள் மீண்டும் அழுதாள்.

“இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்” பொதுவாக வலி பொறுக்க முடியாது பெண்கள் கேட்கும் கேள்வியை அவன் கேட்டான், பிரசவம் அவனுக்கா இல்லை அவன் மனைவிக்கா என்பது போல இருந்தது மருத்துவருக்கு. அவளை விட அவன் தான் மிகவும் துடித்தான். அடுத்த வலி வரும்பொழுது பனிக்குடம் உடைந்தது.

“மேம் புஷ்” மருத்துவர் மேகாவிடம் கூறினார்.

“உங்களுக்கெல்லாம் பைத்தியமா என்ன ? அவளை பாருங்க வலியில துடிச்சிட்டு இருக்கா புஷ் புஷ்ன்னா எப்படி பண்ணுவா”

“தீரன்” மேகா வலியில் அழைக்கவும் ,” சாரி டாக்டர் சாரி  டூ சம்திங் ப்ளீஸ்” முதலில் வெறியுடன் கத்தியவன் மேகாவின் ஒரே அழைப்பில் உடனே கெஞ்சினான். செவிலிய பெண் முதல் அனைவரும் அவனை ஆச்சரியமாக பார்த்தனர்.

“இன்னும் கொஞ்சம் தான் மேம் புஷ் பண்ணுங்க” என்று செவிலிய பெண் சொல்லும் பொழுதே இதுவரை இல்லாது பயங்கரமான வலி ஒன்று வர,”தீரன்…”என்ற மேகாவின் கதறல் சத்தம் அந்த அறையை நிறைக்க, தீரன் மேகாவின் உதிரம் இந்த புவியில் வந்து பிறந்தான் அவர்களது காதலின் ஆதாரமாய். குனிந்து மனைவியின் நெற்றியில் இதழ் பதித்தவன் அவளது சிகையை வருடியபடி,

“பொண்ணு இல்லை நீ ஆசை பட்டது போல பையன்” என புன்னகையுடன் மனைவியின் நெற்றியுடன் நெற்றி முட்டினான். தன் இதழ் பிரித்து சிரித்து கொண்டவள்,

“குழந்தைய க்ளீன் பண்ணாம இங்க கொண்டு வாங்க” என்று சொல்லி மெல்ல எழுந்து அமர முற்பட்டாள் , “ஏய் என்ன பண்ற படு” இவன் தான் பதறிவிட்டான் ,கொஞ்சம் நேரம் முன்பு அழுத அழுகை என்ன கதறல் என்ன? எழுந்து அமரபோனவளை  அதட்டி படுக்க வைத்தான்.

“குழந்தைய இவர் கிட்ட கொடுங்க” என்றாள்,

‘நானா’ என்பதை போல பார்த்தவன் வாங்க மறுத்தான்,”தீரன்” என அதட்டினாள்.

“வெளிய அத்தை மாமா அஷோக் எல்லாரும் வந்திருப்பாங்க, அவங்க முதல்ல வாங்கட்டும்” தயங்கினான்.

“கொடுங்க”என நர்ஸிடம் சொல்லவும் அவர் அவனிடம் நீட்ட மேகாவை கலக்கமாக பார்த்தவன் தன் கரங்கள் நடுங்க உதிரத்துடன் குழந்தையை ஏந்தி கொண்டான். பிஞ்சி உடல் தன் மேனியில் பட்டதும் ஏதோ சாப விமோச்சனம் அடைந்தது போல உணர்ந்தவனுக்கு கண்ணீர் வழிந்தோடியது. உலகத்தையே வென்ற உணர்வு பேச்சே வரவில்லை  அப்படியே தன் நெஞ்சோடு அணைத்து பிடித்து கொண்டு மனைவியை பார்த்தான் அவளும் அவனை தான் பார்த்தாள்.

“தேங்க யு” மனதார கூறினான்.

“ஐ லவ் யு” என்ற மேகாவின் கண்களில் மகிழ்ச்சியின் நீர்.

வேலை பார்க்கும் பெண் மூலமாக விடயம் தெரிவிக்க பட அனைவரும் வந்திருந்தனர். மேகாவின் வீட்டினருக்கு விடயம் தெரிவிக்க பட அவர்களும் வந்து சேர்ந்தனர்.

தங்களது குடும்பத்தின் புது வரவை முதல் வாரிசை அனைவரும் கொண்டாடி தீர்த்தனர். இருந்த கொஞ்ச மன வருத்தங்களை மறக்கடித்திருந்தது அந்த குட்டி கண்ணனின் வரவு. அனைவரும் சந்தோஷத்துடன் காணப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!