MIRUTHNAIN KAVITHAI IVAL 51.4

cover pic-ccabb7da

மிருதனின் கவிதை இவள் 51.4

“அக்னி தேவ்” கருவுற்ற முதலே ஆண் குழந்தை என்றால் “அக்னி தேவ்” பெண் குழந்தை என்றால் “அக்னி நக்ஷத்ரா”என முடிவு செய்த்திருந்தவள். மகிழ்ச்சியுடன் தன் குழந்தைக்கு மிகவும் எளிமையான முறையில் வீட்டிலே சொந்தபந்தங்களுடன் பெயர் சூட்டி மகிழ்ந்தாள்.

சில மாதங்கள் கழித்து பிறந்திருந்த தாரிக்காவின் மகனுக்கும் அன்றே பெயர் சூட்டும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தால் மூத்தவன், “அக்னி தேவ்”க்கு முடிந்ததும் தாரிக்காவின் குழந்தையை  தீரன் அஷோக் இருவரும் கையில் ஏந்தியிருக்க, ஒருவரின் முகத்தை ஒருவர் பார்த்த மாமன்மார்கள் இருவரும் ஒருசேர அவனுக்கு,

“அபய விஜயன்”என்று எதற்கும் அஞ்சாது அனைத்திலும் வெற்றி காண்பான் என்னும் அர்த்தத்துடன் பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.

அஷோக் இஷிதாவின் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது போலவே மிகவும் கோலாகலமாக நடை பெற்றது. தங்கையின் திருமணத்தை ஒரு குறையும் இல்லாது பார்த்து பார்த்து ஒவ்வொன்றையும் ஆசையுடன் செய்தான் ரிதுராஜ்.

ரோஜா மாலை போட்டு,  அஷோக் மறுக்க கழுத்துக்கு  தங்க சங்கிலி கைக்கு  ப்ரேஸ்லெட் அணிவித்து ரிதுராஜ் குடைபிடிக்க மாப்பிளை அழைப்பு ஜம்மென்று நடந்தது.

ஐயர் மந்திரம் உச்சரிக்க  பூணுல் அணிந்து விநாயகருக்கு பூஜை முடித்த அஷோக் மித்ரனுக்கு கமண்டல நீர் கொண்டு தன் மகளை தந்தை ஸ்தானத்தில் இருந்து தாரை வார்த்து கொடுத்தார் கனகராஜ். யாரும் பார்க்காது ஒருகணம் தன் தந்தையை நிமிர்ந்து பார்த்தவள் உடனே குனிந்துகொள்ள கனகராஜும் ஒரு நொடி மகளை பார்த்துவிட்டு நாற்காலியில் சென்று அமர்ந்துகொண்டார்.

பிங்க் நிற பட்டுப்புடவைக்கு  அதுக்கேற்ற நகையில் எளிமையான ஒப்பனையுடன் காதலனை மணக்கப்போகும் ஆவலுடன் புன்னகை உதட்டில் தளும்ப மணவறைக்கு அழைத்து வரப்பட்டாள் இஷிதா.

பார்க்க பார்க்க காதலும், ஆவலும், இவள் என்னவள் என்னும் கர்வமும், ஒன்றாக வந்து சங்கமித்த தருணம் அது, இமைமூடாமல் தன்னவளின் அழகை பார்த்து ரசித்த அஷோக்கின் தோளை தட்டிய  தீரன்,”பார்த்தது போதும் மந்திரத்தை ஒழுங்கா சொல்லு” நண்பனை சீண்டி கேலி செய்தான்.

“டேய்”என வெட்கப்பட்டவன் இஷிதாவை தன் விழிகளில் காதல் வழிய பார்த்துவிட்டு மந்திரத்தை உச்சரிக்க, தங்க தாலி கோர்க்கப்பட்ட மஞ்சள் கயிற்றை மூன்றாம் முடிச்சு தாரிக்கா போட தனது காதலியின் கழுத்தில்  முடித்தான் அஷோக் மித்ரன்.

மனதில் தன் தாயை நினைத்துக்கொண்டு கண்கள் கலங்க அஷோக்கை பார்த்தாள், அவளது கண்ணீரை துடைத்தவன் மேடையில் வைத்தே அவள் நெற்றியில் முத்தம் பதித்து ‘என்றும் உனக்காக நான் இருக்கிறேன்’ என செயலில் காட்டினான். அவர்களின் காதலை மனநிறைவுடன் பார்த்த மேகா பூரிப்புடன் தன் கணவனின் கரத்தை பிடித்துக்கொள்ள, “உனக்கும் வேணுமா”என்று கேட்டு அவளை வெட்கப்பட வைத்தவன் தனிமையில் தான் சொன்னதை செய்து அவளது வதனத்தை இன்னும் சிவக்க வைத்தான்.

மணமக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க கனகராஜ் மட்டும் யாருடனும் ஒன்றாமல் நிற்கவும் அவர் அருகில் சென்ற தீரன் அவரை தனியாக பேச வேண்டும் என அழைக்க, பழைய நியாபங்கள் மனதில் தோன்ற மனிதர் சற்று ஆடித்தான் போனார்.

‘நான் எதுவுமே செய்யலையே’ என்று எண்ணியவர் ஒருவித தயக்கத்துடன் அவன் பின்னால் சென்றார். அவர் முகத்தில் இருந்த கலவரத்தை படித்தவன்.

“கல்யாணத்துல உங்களுக்கு எல்லாமே திருப்தி தானே மாமா” என ‘மாமாவை’ அழுத்தி உச்சரிக்க அவருக்கு நெஞ்சு வலியே வருவது போல் தான் இருந்தது.

“என்ன சார்”கண்கள் விரிய தடுமாற்றத்துடன் அழைத்தவரை பார்த்து,

“இனிமே நாம ரிலேஷன்ஸ் ஆகிட்டோம் என்னை அக்னி தீரன்னே கூப்பிடுங்க”என்றான் மிக இயல்பாக அவருக்கு தான் ஒருமாதிரியாக  இருந்தது. சில நிமிடம் பொதுவாக பேசியவன் ரிஷியை அழைத்து ஏதோ பேசிவிட்டு அவரிடம் சில நிமிடங்கள் காத்திருக்க கூறி ரிஷி வந்து கொடுத்த கோப்பை வாங்கி அவரிடம் கொடுத்து, திறந்து பார்க்குமாறு கூறினான்.

தயக்கத்துடன் வாங்கியவர் படித்து பார்த்து அதிர்ச்சியுடன்”இதெல்லாம் வேண்டாம்” என்று உடனே மறுக்க,

“இட்ஸ் ஓகே இது உங்களுக்கு தான் உங்க பொண்ணை கேட்டதும் என் தம்பிக்கு மறுப்பு சொல்லாம கொடுத்தீங்க அதுக்கு நாங்க ஏதாவது செய்ய வேண்டாமா” என்றவன்,

“மருத்துவம் ரொம்ப புனிதமான ஒன்னு  சோ மக்களுக்கு எப்போகுதும் நியாயமா இருங்க”என்று கூறி ,

“கன்கிராடுலேஷன்ஸ் மறுபடியும் ஒரு புது ஹாஸ்ப்பிட்டலுக்கு உங்களை சேர்மென்னா பார்க்குறதுல எனக்கு மகிழ்ச்சி” என்றவன் அங்கிருந்து சென்றுவிட கனகராஜ் தான் இவனது அவதாரம் கண்டு இவன் அக்னி தீரன் தானா என மிகவும் குழம்பிவிட்டார்.

கனகராஜிடம் பேசிவிட்டு வெளியே வரும் பொழுதே அங்கும் இங்கும் ஓடி கொண்டிருந்த ரிதுராஜை பார்த்து நீண்ட பெருமூச்சை விட்டவன் ஒரு நொடி சிந்தனைக்கு பிறகு அவன் அருகில் வந்து,

“கல்யாணம் ஏற்பாடு தூள் கிளப்பிடீங்க  சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது”  அகங்காரம், கோபம், கடந்தகாலம் என அனைத்தையும் விடுத்து மனதார பாராட்டினான். ரிதுராஜ்க்கே ஆச்சரியம் தான் மகிழ்ச்சியுடன் ரிதுராஜும் நன்றி தெரிவித்தான். இருவரும் சாயங்காலம் நடக்கும் ரிசெப்ஷன் பற்றி பேசினார்.

“அப்புறம் அடுத்து என்ன பண்ணலாம்ன்னு இருக்கீங்க” என்ற தீரனிடம்,

“இஷு கல்யாணம் முடிஞ்சிருச்சு நெஸ்ட் வீக் கனடா போகணும் அங்க ஒரு வருஷம் ஒரு ஹோட்டல்ல வொர்க் பண்ணிட்டு கொஞ்சம் வேலை கத்துக்கிட்டு இங்க வந்து ஹோட்டல் பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணலாம்ன்னு இருக்கேன்” என்றான் அவன் தெளிவு தீரனை ஈர்த்தது, தீரனும் தனக்கு தெரிந்த ஆலோசனைகளை வழங்கியவன்,

“பிஸ்னஸ்க்கு எவ்வளவு வேணும்ன்னு சொல்லுங்க நான் ஃபண்ட் பண்றேன்”என்றான்.

ரிதுராஜும்,

“கண்டிப்பா” என்று சொல்ல, ரிதுராஜின் எதிர்காலத்துக்கு தீரன் வாழ்த்துக்கள் கூறினான். ரஞ்சித்தின் சம்பவத்திற்கு பிறகு தீரனின் மனநிலை வெகுவாக மாறியிருந்தது நாம் ஆத்திரத்தில் செய்யும் ஒவ்வொரு காரியமும் பின்னாளில் எவ்வளவு பெரிய சிக்கல்களையெல்லாம் உருவாக்குகின்றது என்பதை உணர்ந்த தீரன் முடிந்தளவு அனைவரிடமும் சுமுகமாக போக வேண்டும் என முடிவு செய்து தன் சுய விருப்பு வெறுப்பை விடுத்து பழைய பிரச்சனைகளை எல்லாம் சரி செய்ய தன்னால் முடிந்தவற்றை  செய்தான்.

சொல்லப்போனால் தன் நிலையில் இருந்து இறங்கி வந்தான். அதற்காக முற்றிலும் மாறிவிட்டானா என்று கேட்டால் சத்தியமாக கிடையாது இப்பொழுதும் தன்  குடும்பம் மனைவி மகன் என்று வந்துவிட்டால் அக்னி தீரன் தகிக்கும் நெருப்பு தான்!

“இதை எடுத்து வர இவ்வளவு நேரமா?இங்க என்ன பண்றீங்க அங்க பந்தியை பாருங்க, வாங்க வாங்க ஏன் எவ்வளவு லேட்? சீக்கிரமா வந்திருக்கலாமே”அதிகாரம் தூள் பார்க்க திருமண மண்டபத்தை ஒரு மகாராணியின் தோரணையில் வலம் வந்த மனைவியை ஆசை பொங்க தன் கண்களில் நிரப்பிக்கொண்டு தனியாக அழைத்து பின்னால் இருந்து அணைத்து கொள்ள, உடனே விலகியவள்,

“நோ தீரன் பயங்கரமா வியர்வையா இருக்கு நிறைய வேலையும் இருக்கு” என்று ஓட பார்த்தவளை தடுத்து இருக்கையில் அமரச்செய்து அவள் கையில் பழசாறு அடங்கிய கோப்பையை கொடுத்து,குடிக்க சொல்லி பின்னால் நின்று கொண்டு அவளது தலையை பிடித்துவிட்ட கணவன் மீது மேகாவுக்கு இன்னும் காதல் பெருக புன்னகையுடன் தன்னவனை பார்த்தவள்,”அச்சோ ஊர்ல இருந்து வந்தவங்க எல்லாரும் சாப்பிட்டாங்களான்னு தெரியல” என்று வேகமாக ஓடியவள் பின் திரும்பி வந்து  = அவன் கன்னத்தில் அவசர முத்தம் ஒன்றை பதித்து கண்சிமிட்டி விட்டு மீண்டும் ஓட,” ஏய் பார்த்து டி” என்றவனுக்கு மனதில் எல்லையில்லா மகிழ்ச்சி.

தன் தங்கைகள் தன் மகன் செய்யும் சேட்டையை ரசித்தபடி அவனுக்கு உணவளித்து கொண்டிருந்த காட்சி தீரனின் மனதை நிறைத்தது.

தாரிக்காவின் குழந்தையை தூக்கியபடி வளம் வந்த மயூரி விக்ரமிடம்,”டேய் தம்பியை எக்குத்தப்பா தூக்காத மேல் வலிக்கும், அங்க இங்கன்னு கொண்டு வராத திஷ்டி பட்டுடும் என்கிட்ட கொடு”என வாங்கி தன் மார்போடு அணைத்துக்கொண்டு உறவாடிய ராதிகாவிடம்,”என்கிட்ட கொடு நீயே தூக்கிட்டு இருந்தா எப்படி” என தான் வாங்கி கொஞ்சிய கோபால கிருஷ்ணன்.

“எல்லா வேலையும் பக்கவா முடிஞ்சிது பாஸ்” ஏதோ தன் குடும்பம் போல வேலையை இழுத்து போட்டுகொண்டு செய்த ரிஷி, பணிமாற்றம் கிடைத்தாலும் வேலைப்பளுவுக்கு இடையே விடுமுறை எடுத்துக்கொண்டு தன் ஐந்து வயது மகளுடன் வந்த ஆர்யன் என தீரனை சுற்றி எங்கும் சொந்தம், சிரிப்பு சத்தம், மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மட்டுமே. இதை அனைத்தும் தனக்கு கிடைக்க காரணமாக இருந்த ராத்தூர் மீனம்மாள் தம்பதியர் இன்றும் அவன் மனதில்  கடவுளாக குடியிருக்கிறார்கள்.

ஆட்டம் பாட்டம் விருந்து என அனைத்து கொண்டாட்டமும் முடிந்த பிறகு குடும்பமாக புகைப்படங்கள் பல எடுத்து கொண்டார்கள்.

“அண்ணா ஒரு பேமிலி பிக்” என்று நேத்ரா சொல்லவும், “ஆமா ப்ரோ எல்லாரையும் கூட்டிட்டு வரேன்”என விக்ரம் மயூரி நேத்ரா மூவரும் அனைவரையும் அழைத்து வர சென்றனர்.

“ரெடியா சார்” என்று கிட்டத்தட்ட பத்துநிமிடங்களாக காத்திருந்த கேமரா மென் சோர்வாக கேட்கவும்,

“வெயிட் வெயிட்” என்ற தீரன் மேடையை விட்டு இறங்கி ரிஷியையும் ஆரியனையும் அழைக்க,

“உங்க பேமிலி பிக்ல நாங்க எதுக்கு?”என ஒதுங்கியவர்களிடம்,

“என்  பேமிலி  பிக்ல யாரு இருக்கனும்ன்னு நான் தான் முடிவு செய்வேன் வாங்க” என தீரன் அன்பு கட்டளையிட்டு கொண்டிருக்கும் பொழுதே அங்கே வந்த அஷோக் “வாங்க” என இருவரையும் அழைத்து கொண்டு மேடைக்கு ஏற,

பெரியவர்கள் நாற்காலியில் அமர்ந்திருக்க அவர்கள் மடியில் அக்னி தேவ்வும், அபய விஜயனும் தங்களின் கை கால்களை அசைத்தபடி சிரித்துக்கொண்டிருக்க  , பெண்கள் அனைவரும் அவர்களுக்கு பின்னால் நிற்க, ஆண்கள் அனைவரும் ஒருவருக்கொரு கேலி செய்தபடி அவர்களுக்கு பின்னால் நின்றிருந்தனர்.

“இப்போ எடுக்கலாமா”என்று கேமராமேனிடம் ,”ஒரு நிமிஷம் ” என்ற விக்ரம் தன் கண்களில் கூலிங் கிளாஸை அணிந்துவிட்டு “ஆள் செட் இப்போ எடுங்க” என  உற்ச்சாகமாக குரல் கொடுக்க, அந்நேரம் திரும்பி தீரனை மேகா காதலோடு பார்க்க சொல்லி வைத்தது போல அவளை பார்த்தவன் குறும்பாக கண்சிமிட்ட, மொத்த குடும்பமும்  இவர்களை பார்த்து சிரிக்க அனைவரின் அழகான சிரிப்பும் அற்புதமாக கேமராவில் பதிவு செய்யப்பட்டது.

சுபம் !!!