MIRUTHNAIN KAVITHAI IVAL TEASER 2

love-relationship-ice-fire-9ecec4e9

மிருதனின் கவிதை இவள்

டீசர் 2

மிளிரும்  அலங்கார மின் விளக்குகள்   ! காதில் தேன் ஊறும் மெல்லிய இன்ஸ்ட்ருமென்ட்டல்  இசை! நாசியை சுகிக்கும்  நறுமணம் .

என பார்ப்போரின் பார்வையை வசீகரிக்கும் அழகுடன்  ரம்மியமாக காட்சியளித்த   ஓபராய் ஹோட்டலின்  பார்ட்டி  ஹாலுக்கு வந்திருந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கையில் மதுபானம்  நிறைந்த கோப்பையுடன்  வலம் வந்தனர் .

“ஹலோ  மிஸ்டர் அக்னி  ” – புன்னகையுடன் கை குலுக்கினார்  பேர்ட் சாங் நிறுவனத்தின் தலைமை அதிகாரி , விமலன் .

” ஹலோ மிஸ்டர் விமலன் … பை தீ வே பார்ட்டி ரொம்ப நல்லா அரேஞ் பண்ணிருக்கீங்க  ” தன் கையில் இருந்த தீர்த்தத்தை  மிடறு மிடறாய் பருகியபடி  வாழ்த்தினான் அக்னி  .

” தேங்க யு அக்னி …பட் உங்கள மாதிரியான ஸ்பான்சர்ஸ் இல்லைனா இதெல்லாம் சாத்தியம் இல்லை ” – என்றார் விமலன் . அதற்கு அலட்டிக்கொள்ளாமல் மெலிதாய் தலையசைத்தான் அக்னி  .

” ஓகே கேரி ஆன் அக்னி இப்போ வந்திர்றேன் ” என விமலன் விடைபெறவும் ,

” ஹலோ அக்னி என்னை தெரியுதா ?” என கேட்டபடி  கையில் மதுக்கோப்பையுடன் அக்னியின் அருகே  வந்தாள் ஒரு இளம் பெண் . சிக்கனமான  நவநாகரிக  ஆடையில் ஒளிந்துகொள்ள மறுத்த  தாராளமான  அழகுடன் காட்சியளித்த  அப்பெண்ணின்  விழிகள் அக்னியையே ரசித்துக்கொண்டிருக்க . அக்னியின்  விழிகளும் அவளது பார்வையை படிக்க தவறவில்லை .

” நீங்க  பாலிவுட்ல ஏதும் ட்ரை பண்றீங்களா ?” கேலிப்புன்னகையுடன் கேட்டான் .

” ஐயோ இல்லை அக்னி … நான் அவ்வளவு அழகா இருக்கேனா என்ன ?” அவனது நக்கல் புரியாமல் களுக்கென்று சிரித்தாள் பேதை பெண்.

” கண்டிப்பா ! இதுல என்ன டவுட் ?” என்றான் அக்னி .

” தேங்க யு  அக்னி …ஒன்னு சொல்லட்டா இந்த ப்ளாக் ப்ளேசர்ல  நீங்க செம ஹண்டியா இருக்கீங்க ” தன் நுனி காலால்  அவனது ஆறடி உயரத்திற்கு  எக்கி  அவனது காதில் கொஞ்சலாக கூறினாள்.

” ரியலி தேங்க யு … பை தி வே நீங்க யாருன்னு சொல்லவே இல்லையே ” மதுபானத்தை சுவைத்துக்கொண்டே கேட்டான் .

” நேத்து உங்களுக்கு ஒரு  போக்கே அனுப்பிருந்தேனே “

” ஆனா பேரு இல்லையே “

” நீங்க என்னை பார்த்திருக்கீங்க …  இதுக்கு முன்னாடியே நாம இன்றோடுயூஸ்  ஆகிருக்கோம் ..என்னை தெரியலையா? “

” சாரி ” தன் உதட்டை பிதுக்கினான் .

” சரி நேத்து நான் அனுப்பின போக்கேல தான் என் பேர் இருக்கு கெஸ் பண்ணுங்க பார்ப்போம் ….சரியா சொன்னா ஐ ஹவ் அ சர்ப்ரைஸ்  ஃபார் யு ” குலைந்தபடி கூறினாள் .

“ம்ம்ம்ம் … ஜாஸ்மின்  ” சில நொடிகள் சிந்திப்பது போல் நடித்தவன் பெயரை  கூறினான் .

” ரைட் !வெறி ஸ்மார்ட் !”

” எட்வர்ட் ! என் கம்பெனியோட ஆடிட்டர் …   நீங்க அவரோட வைஃப்,  ரைட் !”  அவன் கண்களில் தெரிந்த விஷமம்  அவள் கருத்தில் பதியவில்லை  .

” ம்ம்ம் ” அவளது குரலில்  இதுவரை இருந்த குதூகலம்  இப்பொழுது மறைந்திருந்தது .

“எட்வார்ட் வரலை ?”அவனது அக்னி விழிகள் ஜாஸ்மினின் விழிகளை கூர்மையாக கவனித்தது.

” அவர் வரலை …இந்நேரம் உங்க ஆபிஸ்ல ரொம்ப பிசியா இருப்பாரு ” என்றவள் ,  தன் கையில் இருந்த பாஸை காட்டி,

” ஸ்பெஷல் பாஸ்(PASS)  என்  தோழி மூலமா கஷ்டப்பட்டு  அரேஞ் பண்ணி உங்களை பார்க்கிறதுக்காகவே  வந்திருக்கேன் ” என்றாள் உற்சாகமாக ,  அவனது வில்லத்தனம் புரியாமல் .

“ஓ தட் வாஸ் சோ சுவீட் “

” நீங்க தான் வெரி சுவீட் … நான் கேள்வி பட்ட மாதிரி நீங்க ரூட் இல்லை … ரொம்ப ஜென்டில்மேன்னா இருக்கீங்க …முதல் தடவை உங்களை பார்க்கும் பொழுதே என் மனசு என்கிட்ட இல்லை அக்னி ” அவனது கரங்களை பிடித்தபடி கூறினாள் .

” ம்ம்ம் ஜென்டில்மேன் தான் ” இழுத்து ராகம் போட்டான் .

“நான் உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் வச்சிருக்கேன்னு  சொன்னேன்… நீங்க அதை பத்தி கேட்கவே இல்லை ” கண்களை சுருக்கி கொஞ்சல் குரலில் கேட்டாள் .

” ஓ சாரி டியர் ” -டியர் சாதாரணமாக யார் கூறினாலும் அதில் அன்போ , காதலோ நிறைந்திருக்கும் ஆனால் இவன் கூறினால் ..அதில் வில்லங்கம் மட்டுமே இருக்கும் என்பதை இவள் உணர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் .

“இட்ஸ் ஓகே ” தன் பல் வரிசைகள் பளிச்சிட சிரித்தவள் ,” அதை இங்க எல்லாம் காட்ட முடியாது “கையில் இருந்த மதுபானத்தை சுவைத்தபடி  ரகசியமாக கிசுகிசுத்தாள் .

ஓபராய் ஹோட்டலின் நீண்ட பிரம்மண்டமான   பிரைவேட்  கெஸ்ட் ரூம்  அவர்கள் இருவரையும் வரவேற்க .. அறைக்குள் நுழைந்த அக்னி கதவிற்கு தாளிட்ட மறுநொடி  அவனை பின்னால் இருந்து அணைத்திருந்தாள் எட்வர்டின் மனைவி ஜாஸ்மின்  . அப்பொழுது அந்த நொடி அவன் விழிகள்  வீசிய அனல் யாரையும்  பஸ்மாமாக்கும்  அளவு உக்கிரத்தில்  தகித்தது .

அதற்கு பிறகு நடந்த எதையும்  அவன் தடுக்க வில்லை ….  அவளது கரங்கள்  அவனது ஆடையை தளர்த்திய தருணத்திலும் சரி , அவளது விரல்கள் அவனது முகத்தை வருடிய பொழுதும் சரி இறுகிய பாறை போல இருந்தவன் முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்ட வில்லை .

அறையில் எரிந்துகொண்டிருந்த பளிச் விளக்குகள் எல்லாம் அணைக்க பட்டிருக்க … இப்பொழுது ஆங்காங்கே  எரிந்து கொண்டிருந்த வெள்ளை நிற மெழுகுவர்திகளின் ஒளியில்  அறை ரொமான்டிக்காக  காட்சியளித்தது .

” இப்போ உங்களுக்கான சர்ப்ரைஸை நான்  காட்ட போறேன் ” வசீகரமாக சிரித்தவள் அவனுக்கு முதுகாட்டி நின்றாள் .

“ம்ம் அன் ஜிப் பண்ணுங்க அக்னி ” என்றாள் குழைவாக .

” ஆர் யு ஸுயர் … அப்புறம் வருத்தப்பட கூடாது ” என்றது அவனது  கணீர் குரல் .

” ஐயம் வெட்டிங் அக்னி ” என்றவளது குரலில் தான் அத்தனை தவிப்பு . சில நொடிகள் கழித்து  தளர்த்த பட்ட ஆடையில்  இருந்து எட்டிப்பார்த்த அவளது பின்னங்கழுத்தில் இருந்த எரியும் டாட்டுக்கு நடுவே பொறிக்கப்பட்ட  D  வடிவ எழுத்து  அக்னியின்  பார்வைக்கு விருந்தளித்தது.

” புடிச்சிருக்கா அக்னி … ?எல்லாம் உங்களுக்காக தான் “

” எட்வார்ட்க்கு தெரிஞ்சா என்ன பண்ணுவ ?”

” ஏன் தெரிய போகுது … ?அவருக்கு வொர்க் குடுத்து பிஸியாவே  வச்சிருங்க ” என சிரித்தவளின் இதழ் இப்பொழுது அவனது இதழ் நோக்கி நெருங்கிருக்க . தன் ஒற்றை விரலை நடுவில் வைத்து தடுத்தவன் ,

” ஏன் இவ்வளவு அவசரம் ?என்னுடைய சர்ப்ரைஸ நீ பார்க்க வேண்டாமா ?” என தன் ஒற்றை புருவத்தை உயர்த்தினான் .

” நிஜமாவா என்ன அது ?” விழிகளில் ஆர்வம் மின்ன கேட்டாள் .

அப்பொழுது  ரெஸ்ட் ரூமின்  கதவு திறக்கும் சத்தம் கேட்க  குழப்பத்துடன் அவள் அக்னியை பார்க்க அவனோ ” இங்க இல்ல அங்க பாரு ” என்றான் .

“என்ன சர்ப்ரைஸ் அக்னி ” பெண்ணவளின் குரலில் சிறு தடுமாற்றம் .

”  வெய்ட் அண்ட் வாட்ச் ” என்றவனின்  பார்வை போன திசையை கண்டவளின் முகத்தில் வியர்வை துளிகள் சட்டென்று உதிக்க ….ஜாஸ்மினின்  கால்கள் அதிர்ச்சியில்  வேரூன்றி  நின்றது .

அப்பொழுது  “சர்ப்ரைஸ் ” என விஷப் புன்னகையுடன் விழிவிரித்து கத்தினான்  அக்னி ….  .

மிருதனின் ஆட்டத்தை அடுத்த பதிவில் இருந்து தொடர் கதையாக எதிர் பாருங்கள் நட்பூஸ்