மயங்கினேன்.!கிறங்கினேன்.!
அத்தியாயம் 26
மழை பொழிந்து தோட்டத்தில் மலர்கள் பூத்து குலுங்கும் ஜ்வாலயாய் இருப்பது போல் எங்கே திரும்பினாலும் அவர்களுக்கு வசந்தமாகவே இருந்தது.
இனியா வெற்றியின் வாழ்க்கையும் சந்தோஷமாகவே சென்றது..
திருச்சிக்கு வந்து இதோடு இரண்டு நாட்கள் ஆனது.
திருவிழா என்பதாலே சீக்கிரமே எழுந்த இனியா , காலையில் அத்தையோடும் அக்காவோடும் கோவிலுக்கு கிளம்பிவிட்டாள்.
இது தெரியாத வெற்றியோ , உறக்கத்திலே ” சில் சில் ” என்று அழைத்தப்படி இருந்தான்.
அவனை எழுப்ப இனியா வரவில்லை , அதற்கு பதிலாக பரமசிவம் வளர்த்த சேவல் தான் வந்து கூவிய மையமாக இருந்தது.
“ஏய் ! உனக்கு இங்க என்ன வேலை ? ” முறைத்தப்படி எழுந்தான் .
அதற்கும் அது கூவியே அவன் காதில் இரத்தம் வர வைத்தது.
” அடியேய் சில் ! இதுக்கிட்ட இருந்து என்னை காப்பாத்தேன் ” என்று கத்த , அந்தோ பரிதாபம் அவனுக்கு தான் மனைவி வெளியே சென்றது தெரியாதே.
“கடவுளே ! இவ எங்க போய் தொலைஞ்சா தெரிலயே ” கடுப்போடு புலம்பினான்.
கீழே இருந்து ” கத்தாத வெற்றி , அம்மு விஜியோட கோவிலுக்கு போயிருக்கா ” என பரமசிவம் குரல் கொடுக்க
” என்ன கோவிலுக்கு போயிருக்காளா , சொல்லவே இல்லையே இவ ” பல்ப் வாங்கின முகத்தோடு உற்றென்று அமர்ந்திருந்தான்.
சேவல் தான் பின்னே திரும்பி தன் குசும்பை காட்டி விட்டு சென்றது.
” இதை ஒரு நாள் அடிச்சு சாப்பிட்டு ஏப்பத்தை விட்டே தீரணும் , அப்போ தான் நான் பிறந்ததுக்கான பலனே அடைவேன்” உள்ளுக்குள் சபதமெடுத்து கொண்டான்.
பின் எழுந்து ஜாகிங் உடை அணிந்து வெளியே வந்தான்.
பரமசிவம் ஹாலில் அமர்ந்து பேப்பர் படித்து கொண்டிருக்க ,” உங்க சேவல் கிட்ட சொல்லி வைங்க , என்கிட்ட வாலாட்டுச்சி அன்னைக்கு தான் அது உலகத்தை பார்க்கிற கடைசி நாளா இருக்கும் ” என வயிற்றை தடவி காட்டி ஏப்பம் விடுவது போல் செய்தான்.
” போடா போய் வேலையை பாரு” மீண்டும் பேப்பர் படிக்க துவங்கிவிட்டார்.
அப்போது குழந்தையை தூக்கிக் கொண்டு மணி வெளியே வர , விக்ரமை கண்ட வெற்றி சேவலை மறந்து மகனிடம் சென்றான்.
” குட்டிப்பா எழும்பிட்டீங்களா ? வாங்க வாங்க சித்தப்பா கிட்ட வாங்க பார்ப்போம் ” என மகனின் பக்கத்தில் போக , குழந்தையோ அப்போது தான் எழுந்திருக்கவும் வெற்றியின் பேச்சில் வீறிட்டு அழுதது.
மகனின் அழுகையில் வெற்றி பதட்டமாகிட ,” இப்போ தான எந்திரிச்சான் அதான் அழுகுறான். நீ அப்புறமா தூக்கு ” என மகனை பின்னாடி அழைத்து சென்றான்.
பின் , ஜாகிங் சென்று வந்தவன் குளித்து முடித்து வேட்டி சட்டையை அணிந்து கீழே வந்தான்.
அப்போது தான் இனியா வந்திருக்க , கணவனின் அழகு கண்டு சிலையென பார்வையகலாது நின்றாள்.
வேட்டியில் ஆண்மகனுக்கே உரிய கம்பீரத்தோடும் மிடுக்கோடும் வந்த கணவனை பார்த்து பார்த்து பூரித்து போனாள் பெண்.
இல்லாளின் பார்வையுணர்ந்தும் , அவளை டீலில் விட்டான் வெற்றி.
வெற்றியின் கடைக்கண் பார்வைக்காக பெண்ணவள் ஏங்க , அவனோ விக்ரமோடு விளையாடி கொண்டிருந்தான்.
சமையல் வேலை செய்தபடி கணவனையே நோட்டம் விட்டாள் இனியா.
” ம்ஹூம்” தொண்டையை சரி செய்வது போல் பூங்கோதை செய்ய , பூங்கோதை இருப்பதையே அவள் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
” அடியேய்” தோளில் ஒன்று போடவும் தான் கண்ணை பூங்கோதை புறம் திருப்பினாள்.
” இப்போ எதுக்கு என்னை அடிச்ச க்கா ” கையை தேய்த்தபடி முகம் சுருக்கி கேட்டாள்.
” ஒருத்தி இருமுறாலே அவளுக்கு தண்ணி கொடுப்போம்னு தோணுதா , இப்படி கொழுந்தனையே பார்த்துக்கிட்டு இருக்க ” பூங்கோதை சொல்லவும் இனியா அசடு வழிந்தாள்.
” அது…” என இனியா இழுக்க ,
” இந்தா துணி ” என இனியாவிடம் பூங்கோதை ஒரு பூந்துவாலையை கொடுக்க ,
” இது எதுக்கு ?” புருவம் உயர்த்தி கேட்டாள்.
” நீ ஊத்துற ஜொல்லு ஃபால்ஸ்க்கு இது தான் சரியா இருக்கும் ” சீரியசாக சொல்ல , வெட்கம் பிடுங்கி தின்றது பாவைக்கு.
விக்ரமோடு விளையாடினாலும் காதை கூர்மையாக்கி சமையலறை பக்கம் தான் வைத்திருந்தான்.
அண்ணி சொன்னதை கேட்ட வெற்றிக்கு புன்னகை தானாக இதழோரத்தில் மலர்ந்தது. மனைவி பார்க்கும் முன்பே அதனை அடக்கி விட்டான்.
” மகனே , இங்கே ஒரே தொந்தரவா இருக்கு வா நாம தோட்டத்து பக்கம் போகலாம் ” சத்தமாக கூறிவிட்டு சிரிப்போடு நகர்ந்துவிட்டான்.
” பாருங்க அக்கா உங்க கொழுந்தநாரை ” அழும் குழந்தை போல் இதழ் மடித்து விழி சுருக்கி கணவனை குறை கூற
” உங்களுக்கு நடுவுல மாட்டின்னா எங்களை தானே பைத்தியமாக்கிவிடுவீங்க ” என்றதும் அக்காளை முறைத்து பார்த்தாள்.
” அத்தை எல்லாத்தையும் சொன்னாங்க” என்றதும் அசடு வழிந்து ஈயென இளித்து காட்டி தப்பித்தாள்.
பின்னர் , கணவனை தேடி தோட்டத்துக்கு வந்து கணவன் முன் கோபமாக நின்றாள்.
” என்னடா மகனே எங்க போனாலும் ஒரே டிஸ்டர்பன்ஸா இருக்கு ” என்று வெற்றி சீண்டவும் பெரு பெரு மூச்சாய் வெளியிட்டு தன் கோபத்தை காட்டினாள்.
” நான் உங்களுக்கு டிஸ்டர்பன்ஸா , அப்போ சரி நான் கோச்சிட்டு எங்க அப்பா வீட்டுக்கு போறேன் ” என திரும்பி செல்ல பார்த்தவளின் வலக்கரத்தை பிடித்து இழுத்தான்.
வெற்றி இப்படி இழுப்பான் என்று எதிர்பாராதவள் அவன் மீதே மோதினாள்.
“போங்க நான் போறேன் ” விலக பார்த்தவளை , இடைபிடித்து தன் மடியில் அமரவைத்தவன் நகரமுடியாது தன்னோடு இறுக்கி கொண்டான்.
” நீ கோபப்படும் போது அத்தனை அழகா இருக்க டி சில். அதிலும் இந்த அடர் பச்சை நிற புடவையில அத்தானை உன் பக்கம் இழுக்குற டி ” மூக்கை பிடித்து ஆட்ட
” போயா நடிக்காத , காலையில இருந்து நீ என்னைய ஒருதடவை கூட பார்க்கவே இல்லை” மனைவி முகத்தை தூக்கி வைத்து கொள்ள
” யாரு சொன்னா அப்படி ?”ஒற்றை புருவமுயற்த்தி மயக்கும் புன்னகை புரிய
” அப்படின்னா”
” காலையிலயிருந்து உன்ன மட்டும் தான் சைட் அடிச்சிட்டு இருக்கேன்” என மொபைலில் அவளுக்கு தெரியாமல் திருட்டுத்தனமாக எடுத்த புகைப்படங்களை காட்ட , ஆசையாக பார்த்தவள் கணவனின் காதில் ” ஒய்ஃப் கிஸ் கொடுக்கணும்னு ஆசையா தான் இருக்கு. ஆனா சாமி குத்தமாகிடுமே ” வாய்க்குள் சிரித்தவள் மகனின் கன்னத்தில் முத்தமொன்றை பதித்து விட்டு சிட்டாக பறந்து விட்டாள்.
ஐந்து நாட்கள் இத்திருவிழா நடக்கும். முதல் நான்கு நாட்களும் இரவில் தான் சாமி ஊர்வலம் வரும்.ஐந்தாவது நாள் தான் சாமி மாலையில் ஊருக்குள் வரும். அன்றைய தினத்தில் தான் விடிய காலையில் கோவில் முன்பு கெடா வெட்டி சாமிக்கு படைப்பார்கள்.
சாமி ,கோவிலுக்கு மீண்டும் சென்றபின் மஞ்சல் நீராட்டு விழா . அதன் பின்னான கலைநிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கும்.
முதல் மூன்று நாட்கள் கடந்து விட , இன்றைக்கு தான் கௌதமும் ரோஷினியும் வர இருக்கிறார்கள்.
வர மாட்டேன் என்று மறுத்த ரோவை மிரட்டல் விட்டே வர சம்மதிக்க வைத்திருந்தாள் இனியா.
கௌதமிற்கு ரோஷினியும் சஷ்வியும் வரது தெரிந்து சந்தோஷமாக கிளம்பி வந்தான்.
வீடே கலகலவென சொந்த பந்தங்களோடு நிறைந்திருந்தது. இதில் குழந்தைகளின் மழலை சத்தம் வேறு ஒரு வித உற்சாகத்தை கொடுத்திருந்தது.
இந்த திருவிழா நாட்களில் ஒவ்வொரு தலைக்கட்டுகளும் ஒவ்வொரு நாள் அன்னதானம் கொடுப்பது வழக்கம்.
இன்றைய நாள் பரமசிவம் குடும்பத்தார் கொடுக்கும் முறை என்பதால் காலையிலே பரமசிவமும் மணியும் அங்கு சென்றுவிட , வெற்றி மற்ற வேலைகளை பார்த்தான்.
மதியம் போல் ரோஷினியும் கௌதமும் வந்துவிட , குடும்பமாக கோவிலுக்கு அழைத்து சென்றான் வெற்றி.
ரோஷினி கௌதமை திரும்பி கூட பார்க்கவில்லை .ஆனால் அவள் பெற்ற புண்ணியவதியோ கௌதமையே ‘ப்பா ப்பா ‘ என்று அழைத்தவாறு இருந்தாள்.
இந்த அழைப்பு ரோஷினிக்கு அதிர்ச்சியை கொடுத்திருந்தது.
ஞானவேலுக்கும் காந்திமதிக்கும் அழைப்பு விடுத்திற்க , அவர்களோ நேராக கோவிலுக்கு வந்துவிடுகிறோம் என்று சொல்லி சரியாக வந்தும் விட்டனர்.
மாமனார் மாமியார் வருவதை கண்டவன் , நேரே சென்று அவர்களை அழைத்து வந்தான்.
பார்த்திருந்த மற்றவர்களுக்கு வெற்றியை நினைத்து அத்தனை சந்தோஷமாக இருந்தது.
காந்திமதி கூட ஏதும் பேசாது அமைதியாக அவனின் வரவேற்ப்பை ஏற்றுக்கொண்டார்.
அதன்பின் அனைவரும் குடும்பமாக சேர்ந்து சாமி கும்பிட்டவர்கள் , கடவுளுக்கு முதலில் படையல் போட்டனர்.
பின்பு , அன்னதானம் சிறப்பாக தொடங்கியது.
ஆண்கள் அனைவரும் சாப்பாடு பரிமாற சென்றுவிட , பெண்கள் ஒரு மரத்தடியாக பார்த்து அமர்ந்து கொண்டனர்.
குழந்தை சஷ்வி மட்டும் அழுது கொண்டே இருக்க , அவளை சமாதானம் படுத்த முடியாமல் திணறினாள் ரோஷினி.
தூரத்திலிருந்து கௌதம் இதனை பார்த்தவன் , பரிமாறுவதை விட்டுவிட்டு அவளை நோக்கி சென்றான்.
ரோஷினியிடம் வந்தவன் ,” குட்டிக்கு என்ன ஆச்சு?” அக்கறையோடு கேட்கவும் முகத்தை திருப்பிக் கொண்டாள்.
” ப்ளிஸ் என்னென்னு சொல்லு ரோஷி ? குட்டி எப்படி அழுகிறா பாரு ” என குழந்தையை வாங்க முயல,
சுதாரித்தவள் அவனிடமிருந்து தள்ளி நின்று ” உங்களுக்கு இது தேவையில்லாத வேலை . போங்க போய் வேற எதாவது வேலை இருந்தா பாருங்க ” சொல்லி நகர்ப்பார்த்தவளின் கையை பற்றிக் கொண்டான்.
” கையை விடுங்க கௌதம் ” கையை உருவ முயற்சித்தாள். அவள் முயற்சி செய்ய செய்யத்தான் மேலும் அவன் பிடி இறுகியது.
“குழந்தையை என்கிட்ட கொடுக்கிறதுல உனக்கு இப்போ என்ன பிரச்சனை?” கோபமாக வெளிவந்தது அவன் குரல்.
“எதுக்கு உங்க கிட்ட கொடுக்கணும் ,நீங்க யாரு? உங்ககிட்ட எதுக்கு நான் குழந்தையை கொடுக்கணும் ” ஆங்காரமாய் கேட்டாள்.
” நான் யாரா? ” கோவக்காயாய் அவன் கண்கள் சிவந்தது.
” அதே தான் நானும் கேக்குறேன் நீங்க யாரு என் குழந்தைக்கு . இத்தனை உரிமை எடுத்துக்குறீங்க?”
” அவ என்னோட பொண்ணு . எனக்கு எல்லா உரிமையும் அவ மேல இருக்கு. என்கிட்ட இருந்து என்பிள்ளையை பிரிக்க நினைச்ச , அப்புறம் என்ன பண்ணுவேன்னே தெரியாது ”
” ஒரு விஷயம் தெரிஞ்சிக்கோ , இந்த ஜென்மத்துல நீ தான் என் பொண்டாட்டி இவ தான் என் பிள்ளை. அதை ஞாபக்கதுல வச்சி நட . அப்புறம் இன்னொரு விஷயம் சொல்லணும்” என்றதும் அவனை ஏறிட்டு பார்த்தாள்.
” லவ் யூ பொண்டாட்டி . சீக்கிரமா நல்ல பதிலா சொல்லு , உனக்காக உன் புருஷன் வெயிட் பண்ணுவான். வேற ஏதாவது செய்ய நினைச்ச, அப்புறம் எல்லாம் அதிரடி தான் பார்த்துக்கோ ” வலுக்கட்டாயமாக குழந்தையை அவளிடமிருந்து வாங்கி அதிரடி காதலோடு அவளுக்கு எச்சரிக்கையும் விடுத்து சென்றான்.
அழுகையாய் வந்தது ரோஷினிக்கு. அத்தனை அழுகையும் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றாள்.
கௌதமிடம் வந்த சிறிது நேரத்திலே குழந்தை தன் அழுகையை நிறுத்தி , தன்னிடம் உள்ள நாலு பல்லை காட்டி சிரித்தது.
இதெல்லாம் தூரத்திலிருந்து பார்த்திருந்த இனியா , ரோஷினியை நோக்கி சென்றாள்.
” ரோ ” என்று அவள் தோளில் கைவைக்கவும் , தாயை கண்ட சேய்யை போல் அவளை கட்டிப்பிடித்து அழுதாள்.
தோள் கொடுப்பான் தோழன் . இங்கே தாயாய் மாறினாள் தோழி.
” ஹோ ரோ எதுக்கு இப்படி அழுகுற?”
“…..”
” ரோ , என்னாச்சி உனக்கு ?” பதறினாள் தோழி.
” என்னால முடியல டி ” என்றதும் தோழியை தன்னிடமிருந்து பிரித்த இனியா ,” முதல கண்ணை துடை ” கட்டளையாக சொன்னாள்.
” என்னாச்சி ரோ ?”
” கௌதம் கௌதம் ” என தேம்ப
” கௌதம் அண்ணாக்கு என்ன, அவங்க ஏதும் சொன்னாங்களா இல்லை திட்டினாங்களா?”
“அவன் அவன் என்னை கல்யாணம் பண்ணிக்க கேக்குறான் டி ” அழுகையுடன் கூறினாள்.
“சரி அதுக்கு எதுக்கு இப்படி அழுகுற சொல்லு ?”
“அழாம வேற என்ன செய்ய சொல்ற இனியா. என்னால எப்படி கல்யாணம் பண்ண முடியும்? என்னோட பிரச்சனை எல்லாம் உனக்கே தெரியும் தானே”
” இதோ பாரு ரோ எத்தனை நாளுக்கு இதையே சொல்லிட்டு இருக்க போற? கௌதம் அண்ணாவ கல்யாணம் பண்ணிக்கிறதுல என்ன தப்பிருக்கு?”
” லூசு மாதிரி பேசாத டி . நான் எப்படி அவரை போய், அதெல்லாம் தப்பு இனியா. நான் சந்தோஷமா இருக்கிறது மட்டும் தெரிஞ்சா என்னாகிறது. பயமா இருக்கு டி” மறுத்து பேச, கடுப்பானாள் இனியா.
” எது தப்பு உனக்கு ? புரிஞ்சு தான் பேசுறியா நீ , இன்னைக்கு நீ எவ்வளவு வேணாலும் பேசலாம் ரோ .ஆனா உன் பொண்ணை பத்தி நினைச்சு பார்த்தியா அவளுக்கு அப்பா அம்மான்னு ரெண்டு பேருமே வேண்டும். அங்க பாரு கௌதம் அண்ணா கூட இருக்கும் போது எத்தனை சந்தோஷமா இருக்கான்னு. அந்த சந்தோஷத்தை உன்னோட வரட்டு பிடிவாதத்துனால அழிக்க போறியா ” கோபமாகவும் அதேநேரம் அவளுக்கு புரிய வைக்கும் நோக்கோடு பேச , எங்கே அவள் புரிந்து கொண்டாள் விடாக்கண்டனாக அவளோட நிலையிலே நின்றாள்.
இது ஒரே நாளில் மாற கூடிய விடயமல்ல என்று புரிந்து கொண்ட இனியா , அவளுக்கு சிறிது ஓய்வு கொடுக்கும் பொருட்டு அவளை வீட்டிற்கு அழைத்து சென்றாள்.
**********
இங்கே அன்னதானம் முடித்து வெற்றி களைத்து போய் ஒரு மரத்தடியாக பார்த்து அமர்ந்து கொண்டவன் ,தன் நண்பனான பலராமனிற்கு அழைப்பு விடுத்தான்.
ஒரு ரிங்கிலே எடுத்த ராம் ,” மச்சான்” என ஆர்பாட்டமே இல்லாத ஒரு குரலில் அழைக்க
” குரங்கே , ஊருக்கு வந்துட்டியா இல்லையா டா . இல்ல உங்க பெங்களூருலே இன்னும் குடி இருக்கியா ” கடுப்பாக கேட்க
” ஊருக்கு தான் வந்துட்டு இருக்கோம் டா . இன்னும் கொஞ்ச நேரத்துல வந்து சேர்ந்துடுவேன் ”
” வா மச்சான் உன்ன பார்த்தே எத்தனை மாசமாகிடுச்சி ” வருத்தமான குரலில் சொன்னான்.
” சரி மச்சான் நான் அப்புறமா பேசுறேன் ” வைத்து விட்டான்.
சரி என்று அமர்ந்திருந்தவன் பின்னால் யாரோ கல்லெடுத்து அடிக்க முதலில் எதார்த்தமாக விட்டவன் அடுத்தடுத்து அடிக்கவும் வேட்டியை மடித்து கட்டி ” எவன்டா என்கிட்ட வம்பு காட்றது , எதுவா இருந்தாலும் நேருல வாங்க டா ” மீசையை முறுக்கி கொண்டான்.
” வந்துட்டேன் இப்போ என்ன பண்ண போற ” பின்னாலிருந்து குரல் வரவும் கோபத்தோடு திரும்பியவனின் முகம் புன்னகைக்கு தத்தெடுத்தது.
” பலாக்கொட்டை ” அணைத்து கொண்டான் வெற்றி.
” ஏன்டா , ஏதோ காதலியை ரொம்ப நாள் கழிச்சு பார்க்கிற மாதிரி கட்டி எல்லாம் பிடிக்கிற ” நண்பனை கலாய்த்தான்.
” காதலியா இருந்தா மட்டும் தான் கட்டிக்கணுமா என்ன ? நண்பனையும் மிஸ் பண்ணுவாங்க , அவுங்களையும் இப்படி கட்டிபிடிக்கலாம் ” சொன்ன வெற்றியை புன்னகையோடு பார்த்திருந்தான்.
” சரி போ போய் சாமி கும்பிட்டு வா பேசலாம் ” என்று அனுப்பி விட்டு குடும்பத்தோடு ஐக்கியமானான்.
குடும்பத்தோடு உட்கார்ந்து அரட்டையடித்து கொண்டிருந்த வேளையில் நண்பன் வந்த திசையை பார்த்தவன் கண்கள் விரிய தன் அதிர்ச்சியை அப்பட்டமாக காட்டினான்.
அங்கே பலராமன் தன் வருங்கால மனைவியான இசையாழினியை அவர்களுக்கு அறிமுகப்படுத்த அழைத்து வந்தான்.
இதில் அடுத்தக்கட்ட அதிர்ச்சி என்னவென்றால் , ஞானவேல் புன்னகையோடு ” யாழு மா ” என்றழைத்தார்.
தன் மாமனாரை அதே அதிர்ச்சியுடன் திரும்பி பார்க்க , ஞானவேலை கண்டு சந்தோஷமாக கன்று குட்டி போல் ஓடி வந்த யாழினி அவரை கட்டி கொண்டு நலம் விசாரித்தாள் .
” ப்பா , எப்படி இருக்கீங்க? ஆண்டி எங்கே அவுங்களை காணோம் ” கண்களால் யாரையோ தேட
” உள்ள ஏதோ வேலைன்னு போனா மா. ஆமா நீ எங்க இங்க ? அம்மு உன்னை கூப்பிட்டதா எங்ககிட்ட சொல்லவே இல்லையே ”
” நான் என்னோட வருங்கால மனைவியை உங்களுக்கு அறிமுகப்படுத்தலாம் என்று கூப்பிட்டு வந்தா , இங்க என்னடன்னா முன்னாடியே இவளை தெரிந்திருக்கும் போலையே ” வியப்பாக கூறினான் பலராமன்.
‘ இது யார்’ என்பதுபோல் ஞானவேல் பலராமனை பார்க்க , அதேசமயம் பரமசிவம் விஜயசாந்தியும் கூட இசையாழினியை பார்த்தனர்.
“இது என்னோட வருங்கால மனைவி ” என்று பொதுவாக எல்லாருக்கும் அறிமுகப்படுத்தி வைத்தான் பலராமன்.
” உங்களுக்கு முன்னாடியே ஒருத்தருக்கொருத்தர் தெரியுமா அங்கிள்? ” ஞானிவேலிடம் இசையை காட்டி கேட்க
” அம்முவோட காலேஜ் ப்ரெண்ட் தான் இந்த பொண்ணு. வீட்டுக்கு கூட அடிக்கடி கூட்டிட்டு வருவா ” என்றதும் வெற்றி அதிர்ச்சியின் உச்சத்தை அடைந்தான்.
கோவத்தில் கோவப்பழமாய் சிவந்த கண்களை மறைக்கும் பொருட்டு கைகளை மடக்கி அத்தனை கோபத்தையும் அடக்க முயன்றான்.
இசையின் பார்வையோ வெற்றியின் மீதே இருக்க , அங்கிருக்க பிடிக்காமல் வீட்டிற்கு வந்தவனுக்கு மனைவி மீது கோபமாக வந்தது.
தன்னை இப்படி ஏமாற்றிவிட்டாளே என்று நினைக்கும்போதே ஆத்திரமாக வர , அதே ஆத்திரத்துடன் உள்ளே நுழைந்தவன் முகத்தில் ஒரு பேப்பர் வந்து ஒட்டிக்கொண்டது.
அதை எடுத்து பார்த்தவன் கண்கள் பெரிதாக விரிந்து ஆத்திரத்தின் விளம்பிற்கே சென்றான்.
தன்னை இவ்விரு பெண்களும் சேர்ந்து ஏமாற்றியிருக்கிறார்கள் என்று எண்ணும்போதே உடல் விரைத்தது.
கணவனை பார்த்து சந்தோஷமாக வந்த பெண்ணவள் , அவனை தொட போகவும் ” ச்சை ” கோபம் தலைக்கேற அவளை உதறி விட்டு விரைந்து அறைக்கு சென்று விட்டான்.
அவன் உதறிய வேகத்தில் நிலைத்தடுமாறி விழ போனவள் சுதாரித்து கொண்டு நின்று அவன் போவதையே ஒருவித பயத்தோடு விழியகல பார்த்திருந்தாள்.