Mk 27(1)

FB_IMG_1631334494200-5282f827

Mk 27(1)

மயங்கினேன்.!கிறங்கினேன்.!

அத்தியாயம் 27

இசை இனியாவின் தோழி அதுவும் கல்லூரி தோழி , இதை இத்தனை நாட்களாக இவள் தன்னிடம் மறைத்திருக்கிறாள் என்று நினையும் போதே மனம் பாறை போல் இறுகத்தொடங்கியது.

தான் அவளிடம் அன்னைத்தையும் கூறியிருக்க , அவளோ தன்னை இப்படி ஏமாற்றிவிட்டாளே.

மனம் உலை கனலாக கொதித்தது. தான் இப்படி இரு பெண்களினால் ஏமாற்றப்பட்டிருக்கிறோம் என்று நினைக்கும் போதே அருவருத்து போனான் வெற்றிமாறன்.

இசை இனியா கல்லூரி தோழி என்று பார்த்தால் , அதை விட பெரிதான ஒரு விடயம்.

கோபம் கடுக்கடுக்காங்காமல் போகவே , அறைக்குள் இருந்த பொருட்களை எல்லாம் அடித்து நொறுக்க தொடங்கினான்.

எங்கே கோபத்தையும் ஆத்திரத்தையும் மனைவியிடம் காட்டிவிடுவோமோ என்று பயந்து பொருட்களின் மீது காட்டினான்.

” ரெண்டு பேரும் சேர்ந்து என்னை நல்லா ஏமாத்திருக்காங்க. கடவுளே, உண்மையில் என் வாழ்க்கைக்குள்ள என்ன தான் நடக்குது. எனக்கு தெரியாமலே என்னோட லைஃப்ல இப்படி ரெண்டு பொண்ணுங்க நுழைஞ்சி ஏமாற்றியிருக்காங்களே . உண்மையில் நான் யாரை தான் காதலிச்சேன் ” மண்டையை பிய்த்து கொல்லலாம் போல் இருந்தது.

பயத்தில் கீழேயே நின்றிருந்த இனியா , அறைக்குள் பொருள் உடையும் சத்தம் கேட்டு ஓடிவந்த ரோஷினியின் கையை இறுக பற்றிக்கொண்டாள்.

” ஏய் , என்ன டி ஆச்சி ? ஏன் வெற்றி இப்படி‌ பொருட்களை எல்லாம் போட்டு உடைக்கிறாரு” என்ற ரோவை பார்த்து கலங்கி போனது பாவைக்கு.

” இப்போ எதுக்கு அழுகுற ,போ போய் என்னென்னு கேளு ?” என்றதும் மெதுவாக மாடி நோக்கி ஒரு வித பதற்றத்தோடு சென்றாள்.

” தரு ” என கதவை இனியா தட்ட , உள்ளுக்குள் பொருள் உடைந்தது.

” தரு கதவை திறங்க ” என்றதும் அடுத்த பொருள் உடைந்தது.

இப்படியாக அவள் அழைக்கும் ஒவ்வொரு அழைப்பிற்கும் ஒரு ஒரு பொருளாக உடைந்தது.

” என்ன பண்றீங்க நீங்க ? எனக்கு பயமா இருக்கு தரு. ப்ளிஸ் கதவை திறங்களேன்” கெஞ்சும் குரலில் பெண் சொல்லவும் சடாரென்று கதவு திறந்தது.

அவன் இருந்த கோலம் அவளை நான்கடி பின்னுக்கு தள்ளி நிற்க வைத்தது.

கண்கள் இரண்டும் இரத்தமென சிவப்பேறி இருக்க , பார்க்கவே ஆண் காளியென தோற்றமளித்தான் வெற்றிமாறன் .

” தரு “

” அப்படி கூப்பிடாத இனியா . அது எனக்கு வேதனையை தான் கொடுக்கும் . நீ கீழ போ” என்றவன் மீண்டும் கதவை சாற்றிக் கொண்டான்.

வெளியே நின்றிருந்த இனியாவிற்கு வெற்றியின் கூற்று புரியவில்லை.

அவனது வலி அவளுக்கு புரியவில்லை என்பதை விட தெரியவே இல்லை.

” தரு , நான் என்ன பண்ணேன்னு சொல்லுங்க என்னே மாத்திக்க முயற்சி பண்ணுறேன். ஆனா இப்படி பேசாதீங்க எனக்கு கஷ்டமா இருக்கு ” கலங்கிய குரலில் அவனுக்கு கேட்குமாறு மொழிந்தாள்.

இங்கே வெற்றி எதுவும் பேசாது அமைதியாக துணிகளை எடுத்து பெட்டியில் அடுக்க துவங்கினான்.அவனுக்கு எங்கே இங்கேயே இருந்தால் ஏதேனும் அவளை காயப்படுத்திடுவேனோ என பயந்து போனான் .

இனியா செய்வதறியாது மூடிய அறையையே பார்த்தபடி இருக்க , ரோஷினி உடனே கௌதமுக்கு அழைப்பு விடுத்து இங்க நடப்பதை கூறி குடும்பத்தை வர சொல்லி இருந்தாள்.

” தரு, ப்ளிஸ் பேசுங்க ” கெஞ்சாத குறையாக அவனிடம் கெஞ்சினாள் இனியா.

” நீ கீழ போய் இரு இனியா. நானே வரேன் ” என்று கணவன் சொல்லவும் மனைவி சரி என்று கீழே சென்று நின்று கொண்டாள்.

” என்னாச்சி இனியா ?” ரோஷினி அவள் பக்கத்தில் வந்து கேட்க ,

” தெரியல டா . நீ கீழ போ நான் வரேன்னு சொன்னாங்க ” என்று அவள் சொன்ன அடுத்த சில நிமிடங்களிலே கையில் பையுடன் வந்திறங்கினான் வெற்றிமாறன்.

அவன் பையுடன் கீழே வருவதை குழம்பி போய் பார்த்த பெண் , அவனை கேள்வியாக நோக்கினாள்.

” என்ன பேக் எல்லாம் எடுத்துட்டு வந்திருக்கீங்க , அதுவும் உங்க பேக் மட்டும் கொண்டு வந்திருக்கீங்க ?” கணவனிடம் விழி வழி கேள்வி எய்தினாள்.

” ஊருக்கு கிளம்புறேன் ” மொட்டையாக அவன் சொல்ல ,

” ஹோ , இருங்க நான் போய் என்னோட பையை எடுத்து வந்தறேன் ” செல்ல பார்த்தவளை தடுத்து நிறுத்தினான்.

” இல்ல நான் மட்டும் தான் போறேன் ” சட்டென சொன்னான்.

” உங்க முகமே சரியில்லை என்னென்னு சொல்லுங்க தரு ” என அவன் கையை பிடிக்க போக , நகர்ந்து நின்று கொண்டான்.

” தருன்னு கூப்பிட வேண்டாம்னு சொன்னேன் “

” அதான் ஏன் ? உங்க மனசுல அப்படி என்ன தான் ஓடுது தரு ” கவலை தேய்ந்த முகத்தோடு கேட்க

” நான் கிளம்புறேன் ரோஷினி. வீட்ல இருந்து வந்தாங்கன்னா ஒரு வேலையா ஊருக்கு கிளம்பிட்டேன்னு மட்டும் சொல்லிடுங்க “சொல்லி கிளம்ப பார்க்க , அவனை தடுத்து நிறுத்தினாள்.

” முதல என்ன பிரச்சனைன்னு சொல்லுங்க தரு ” பிடிவாதமாய் நிற்க ,

” ஏமாற்றாம் அது தான் போதுமா “அவளை விலக்கி விட்டு செல்ல பார்க்க , அவளோ விடாது அவன் பையை பிடித்து கொண்டு போக விடாமல் தடுக்க பார்த்தாள்.

” விடு ” என்றவனுக்கு கோபமும் ஏமாற்றமும் ஒருங்கே வந்து அது அவன் குரல் காட்டியது.

அவளும் விடாது அவனை தடுக்க பார்க்க , அவனோ கிளம்பும் நோக்கத்தில் அவளை தள்ளி விட , அவளோ கீழே விழ போக தாங்கி பிடித்து கொண்டனர் கௌதமும் மணியும்.

” இனியா ” என்று பதறி போனான் வெற்றி.

ஏதோ ஒரு வேகத்தில் அவளை தன்னிடமிருந்து விலக்க தான் பார்த்தான் அது ஏனோ அவளை கீழே விட்டது போல் ஆகிற்று .

” வெற்றி ” கோபமாய் பரமசிவம் கத்த ,

அவரது அழைப்பை கண்டுக்கொள்ளாது , இனியாவை நோக்கி ஓடிவந்தான்.

” சாரி டா மா . உனக்கு ஏதும் அடிப்படலையே ” மனதின் வலியோடு மனைவியின் நிலையில் கவலை கொண்டான்.

” லூசா டா நீ, இப்படியா பண்ணுவ “

” லூசு தான் அண்ணா ” புன்முறுவலுடன் பதில் கூறினான் வெற்றி.

” என்னங்க ” இனியா வெற்றியின் புறம் செல்ல பார்க்க , அவளை கை நீட்டி தடுத்து நிறுத்தினான்.

” வராத இனியா ,எனக்கு இருக்கிற கோபத்துக்கு எங்க உன்னை கை நீட்டிடுவேனோன்னு பயந்து தான் வீட்டை விட்டு போறதே “

” என்னென்னு சொல்லுங்க . இப்படி எதையும் சொல்லாம கோபத்தை உங்களுக்குள்ள அடக்காதீங்க . எதுனாலும் சொல்லிடுங்களேன் ” அவளின் பார்வை அவனிடம் இறைஞ்சியது.

புன்முறுவல் பூத்தவன் ,” உன்னோட வலி என்னோட வலி இனியா. இப்ப நான் அனுபவிக்கிற வலி பெருசு தான் ,இல்லைன்னு சொல்ல முடியாது. ஆனா உண்மையை நீ தெரிஞ்சிக்கிட்டு குற்றவுணர்வுல தவிச்சுக்கிட்டு இருக்கிறதை பார்த்திட்டு இருக்க என்னால முடியாது டா. அது அதை விட பெரிய வலி எனக்கு ” கண்களுமே அவனது வலியை அப்பட்டமாக காட்டியது.

இவன் என்ன பேசுகிறான் என்று புரியாது மொத்த குடும்பமும் பார்க்க , அவனோ பையோடு கிளம்ப எத்தனித்தான்.

” நீங்க இப்படி பண்றது எனக்கு அத்தனை கஷ்டத்தை கொடுக்குது தரு ” கண்ணீர் விழியை விட்டு கன்னத்தை தொட்டது.

அவள் சிந்தும் ஒவ்வொரு துளி கண்ணீருக்கும் தன்னையே வெறுத்தான்.

“அழாத இனியா, உன்னோட கண்ணீர் என்னை பலவீனப்படுத்தும். உன் கண்ணீரை பார்த்தும் சிலைப்போல நிக்கிற என்னையே வெறுக்கிறேன் ” அப்போதும் அவள் அழுகை நின்றபாடில்லை.

தான் என்ன செய்தோம் என்று அவளுக்கு இன்னும் புரியவில்லை.

” வெற்றி நீ என்ன பண்ற ,உனக்கு என்ன தான் பிரச்சினை?” பரமசிவம் முன்வந்து கேட்டார்.அது தான் எல்லோரது மனத்திலும் இருந்தது .

” என்னால தாங்க முடியல பா. ஒரு பக்கம் ஏமாற்றப்பட்டிருக்கேன்னு நினைக்கும் போது அசிங்கமா இருக்குன்னா , அதை செஞ்சதே‌ என் மனைவின்னு தெரியவரும்போது உள்ளுக்குள்ளே செத்துட்டு இருக்கேன் ” கலங்கிய குரலில் சொல்லவும் , இனியா திடுக்கிட்டாள்.

” தரு ” கமறிய குரலில் இதழ் துடிக்க ஒரு வித நடுக்கத்துடன் அவனை பார்த்து அழைத்தாள்.

” வேண்டாம் அப்படி கூப்பிடாத. அவன் செத்து போய் ரொம்ப நேரமாச்சி” காதுகளை தன் இரு கைகளாலும் பொற்றிக்கொண்டான். இந்த அழைப்பு அவனும் அவளுக்குமான பிரத்யேக அழைப்பு. அதை இப்போது கேட்கவே அவள் தனக்கு செய்தது தான் நினைவுக்கு வந்தது.

” நீயும் உன்னோட ப்ரெண்டும் விளையாட என்னோட காதல் கிடைச்சுதா இனி ” ஆற்றாமையில் அவளிடம் கேட்டே விட்டான்.

எதை இத்தனை நாட்களாக அவனுக்கு தெரிய கூடாது என்று மறைத்து வைத்திருந்தாலோ அது இன்று அவனுக்கு தெரிந்தாகிவிட்டது. சொல்ல வேண்டும் என்று நினைக்கும் நேரத்தில் எல்லாம் ஏதோ ஒரு தடங்கல் அவளை சொல்ல விடாது செய்திருந்தது .

“இத்தனை நாளா ரெண்டு பேரும் என்னை நல்லா ஏமாத்திருக்கீங்க இல்ல.‌ ஒரு நாள் கூடவா இதை உனக்கு என்கிட்ட சொல்லணும்னு தோணலை . அப்போ அன்னைக்கு அவ சொன்னது உண்மை தான் இல்லையா ” இப்போது முகத்தில் எந்தவிதமான உணர்வுகளையும் காட்டாது அமைதியாய் நிதானமாக கேட்டான்.

இவன் பேசுவது அங்கிருக்கிற யாருக்கு புரிகிறதோ இல்லையோ கௌதமிற்கும் மணிமாறனுக்கும் நன்றாகவே புரிந்தது.

” நான் உங்க கிட்ட சொல்ல தான் நினைச்சேன்.‌ ஆனா சொல்ல முடியாம போய்டுச்சி ” கண்ணீரோடு அவள் கூற

” இதை நான் நம்பணுமா இனியா. நீயும் இசையும் ப்ரெண்ட்ஸ்னு தெரிஞ்சப்போ ஒரு வித வலி தான் வந்துச்சி. ஆனா எப்போ இந்த பேப்பரை பார்த்தேனோ அப்பவே செத்துட்டேன். நீயே உன் தருவை கொன்னுட்ட இனியா. இப்போ இங்க நிற்கிறது உயிர் மரித்து போன வெற்றி தான் ” என அவள் முன் அந்த பேப்பரை தூக்கி எறிந்திருந்தான் .

” அப்படியெல்லாம் பேசாதீங்க தரு ” அவனிடம் பாவையவள் இறைஞ்ச ,

” பேச வச்சது நீ தான் இனியா. உன்ன பார்த்த மொத நாளே என்னோட காதல் கதையை சொன்னப்போ அத்தனை சுவாரசயமா கேட்டியே , இப்போ தானே தெரியுது என்னோட வலியை பார்த்து சந்தோஷப்பட்டிருக்கன்னு “

வெற்றி கூறிய ‘ என்னோட காதல் கதை ‘ என்பதிலே மொத்த குடும்பமும் சிலையென ஸ்தம்பித்து நின்றது. இது பரமசிவத்திற்கு தெரியும் என்பதால் அமைதியாக நின்றார்.

அந்த பேப்பரில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பரமசிவம் கீழே விழுந்த தாள்ளை எடுத்து பார்க்க , அதில் இருந்ததோ வெறும் ஸ்ரீ ராம ஜெயம்.அதுவும் நூற்றியெட்டு முறை எழுதப்பட்டிருந்தது .

” வெற்றி நீ என்ன பேசுற , இந்த பேப்பர்ல ஸ்ரீ ராம ஜெயம் தானே எழுதி இருக்கு. இதுல என்ன பிரச்சனை ” புரியாது அவர் மகனிடம் வினவினார்.

” பிரச்சனை அந்த வரிகள் இல்லை பா. அதை எழுதிய எழுத்து வடிவமும் அதனை எழுதினவுங்களும் தான் ” வேதனையோடு இனியாவை பார்த்தவாறே கூற , தலை கவிழ்ந்து நின்றாள் .

” புரியலை வெற்றி எதுவா இருந்தாலும் தெளிவா சொல்லு “

” சொல்றேன் பா. உங்களுக்கு தான் தெரியுமே நான் ஒரு பொண்ணை காதலிச்சேன்னு . அந்த பொண்ணு தான் இசையாழினி‌ காலையில ராம் அறிமுகப்படுத்தினானே அவங்க தான் . அப்படி தான் இத்தனை நாளா நினைச்சிட்டு இருந்தேன். ஆனா இப்போ தானே தெரியுது அதுவே பொய்னு. என்னோட காதல் அந்த பொண்ண பார்த்து வந்ததில்லை பா , கல்யாணத்துக்கு சம்மதம் சொல்லிட்டு போன அடுத்த நாள் எனக்கு ஒரு லெட்டர் வந்துச்சி. அழகான வரிகள் அதில் என்னை பற்றின நலம் கேட்டு இருந்தது.

முதலில் அது விளையாட்டுன்னு நினைச்சேன் விட்டுட்டேன் . ஆனா தினமும் லெட்டர் வரும் , அது மட்டுமல்ல ஷோக்கும் கால் வரும் பா இசை என்ற பேர்ல . என்னை அது கவர‌ ஆரம்பிச்சது , அந்த எழுத்தும் வரிகளும் என்னை மயக்கி கிறங்கவச்சிடுச்சி. என்னோட முழு நேர நினைப்பும் இசை மேல தான் . அந்த டைம்ல நீங்க எனக்கு கல்யாணம்னு சொல்லவும் உங்க கிட்ட சண்ட போட்டுட்டு போனேன். கல்யாணத்துக்கு இரண்டு நாள் முன்னாடி தான் அவளை முதன்முதலா பார்த்தேன் பா. ஆனா அவ இது ப்ராங்க்னு சொல்லிட்டு போய்ட்டா .

ஊருக்கு வர வழியில்ல தான் இனியாவை பார்த்தேன். என்னோட காதல் தோல்வியை இவகிட்ட பகிர்ந்துகிட்டேன் பா. உண்மையை அன்னைக்கே சொல்லியிருந்தா , இதோ நிக்கிறாளே இவ அன்னைக்கு ஹாஸ்பிடல் போயிருக்க மாட்டா ” குரல் தளும்ப வருத்தத்துடன் கூறினான் வெற்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!