Mk 27(3)
Mk 27(3)
மதியம் போல் கண் மூடிய இனியா விழிக்கும் போது மணி எட்டாகியிருந்தது.
விழித்ததும் கணவனை கண்களால் தேட , அவன் இல்லாது போகவும் பயந்து விட்டாள்.
” தரு “
” தரு “
” தரு , எங்க இருக்கீங்க ?” கேட்டபடி அறையை விட்டு வெளியே வந்தவள் , அத்தை நோக்கி சென்றாள்.
” அத்தை , அவரு எங்க? என்ன விட்டு போய்ட்டாரா , போக மாட்டேன்னு சொன்னாரே ” விழிகளால் தேடுதல் வேட்டையை நடத்திய படி அத்தையிடம் கேட்டாள்.
” அவன் இங்க தான் மா இருக்கான் “மருமகளை சமாதானம் படுத்த முயல , அவளோ முரண்டு பிடித்தாள்.
” இல்ல இல்ல நீங்க பொய் சொல்றீங்க . வீடு முழுக்க தேடிட்டேன் அவரை காணோம் ” பாவைக்கு விழி நீர் ஓரத்தில் கசிய தொடங்கியது.
” அவன் வெளிய தான் போயிருக்கான் மா. இப்போ வந்திடுவான் கொஞ்சம் பொறுமையா இரு டா “மருமகளை சமாதானப்படுத்த முயன்றார் .
” நான் இப்பவே அவரை பார்க்கணும் அப்போ தான் நம்புவேன் ” புலம்பி தள்ளினாள்.
இன்றைய நிகழ்வுகள் எல்லாம் அவளை சித்தம் கலைய செய்திருந்தது.வெற்றியை காணும் வரையும் அவள் இப்படி தான் பிதற்றிக் கொண்டிருப்பாள். அவளுக்கு மருந்து வெற்றி மட்டுமே.அவனின் அன்பு ஒன்று மட்டுமே அவளை மீட்டெடுக்கக்கூடியது
” தரு, என்னைய விட்டுட்டு போயிட்டிங்களா?” அழுகையுடன் வாசலையே பார்த்தப்படி வெளியே திட்டில் கால்களை மடக்கி அமர்ந்து கண்ணீர் வடித்தாள் .
விஜயசாந்தி மருமகளின் செயலை கண்டு பயந்து போய் மகனுக்கு அழைத்து விவரத்தை கூற, அவனுமே விரைந்து வந்துவிட்டான்.
அவனது வண்டி கேட்டிற்குள் நுழைந்ததை கண்ட இனியா மகிழ்ச்சியில் துள்ளி குதிக்காத குறை தான்.
” அத்தை அவரு வந்துட்டாரு ” அத்தனை ஆர்ப்பாட்டம் செய்தாள் இனியா.
வண்டியை விட்டு இறங்கவும் தாயை கண்ட சேய்யை போல் ஓடிச் சென்று அவனை அணைத்து கொண்டாள்.
அவனுமே கணவனாக இல்லாமல் தாயாக மாறி தாங்கினான்.
” என்னடா மா? என்னாச்சி என் இனிக்கு ” தலையை கோதிவிட்டவாறே கேட்க ,
” பயந்துட்டேன் தரு ” சிறுகுழந்தை போல் சொல்ல , வெற்றிக்கு மனது பாரமானது .
” ஒன்னுமில்ல டா எதுக்கு இந்த பயம் சொல்லு. நான் தான் சொன்னேனே போக மாட்டேன்னு . இப்படியா பண்றது பாரு உங்க அத்தை பயந்து போயிட்டாங்க ” சமாதானத்துடன் கண்டிக்கவும் செய்து தாயுமானவன் ஆனான்.
” சாரி , ஆமா எங்க போயிருந்தீங்க தரு? நான் முழிக்கும்போது நீங்க என் பக்கத்துல இல்லையா அதான் பயந்துட்டேன் “
” நான் என்னோட சில்லை விட்டு எங்கேயும் போக மாட்டேன் . இனி பயப்பட கூடாது புரியுதா ” என்றதும் அவனை விட்டு பிரிந்து மண்டையை ஆட்டினாள்.
அவளோடு வீட்டிற்குள் வந்தவன் , தன்னோடு அறைக்கு அழைத்து வந்து விட்டான்.
” நான் போய் உனக்காக சாப்பாடு எடுத்துட்டு வரேன் ” என்று சொல்லவும் அவனது கையை பிடித்து மறுப்பு தெரிவித்தாள்.
” வேணாம் கூடவே இருங்க “
” உனக்கு பசிக்கலையா , ஆனா எனக்கு பசிக்குதே இனி. நான் பாவம்ல ” நயமாக சொல்லி கீழே வந்தவன் இருவருக்குமான சாப்பாட்டை எடுத்து கொண்டு மேலே வந்தான்.
” முதல நீங்க சாப்பிடுங்க தரு பசிக்குதுன்னு சொன்னீங்களே ” என்று அவனுக்கான சாப்பாட்டை எடுத்து கொடுத்தாள்.
” நீயும் சாப்பிடணும் ” அடம் பிடிக்காமல் அவன் ஊட்ட ஊட்ட சாப்பிட்டாள்.
பின்னர் அவள் அவனுக்கு ஊட்டி விட , இருவருமாக சேர்ந்து சாப்பிட்டு முடித்தனர்.
கட்டிலில் அமர்ந்து அவளை தன் கை வலைக்குள்ளே வைத்து கொண்டான்.அதுவே அவளுக்கு போதுமானதாக இருந்தது .
அங்கே மௌனம் மட்டுமே ஆட்சி புரிந்தது. சிறிது நேரம் வரையும் அவனது அணைப்பிலே இருந்தவள் மெதுவாக விலகினாள்.
” என்னாச்சி டா?” அக்கறையாக கேட்க ,
” நான் உங்க கிட்ட பேசணும் தரு ” இப்போது அவள் கொஞ்சம் தெளிவாய் இருந்தாள்.
” இன்னொரு நாள் பேசிக்கலாமே “
” இப்பவே பேச்சிட்டா பெட்டர் தரு . இதோடு அடுத்தநாள் விடிய வேண்டாமே ” என்றதும் சம்மணமிட்டு அமர்ந்தவன் ,” சரி சொல்லு மா. நீ மனசுல வச்சிருக்கிற எல்லாத்தையும் சொல்லிடு ” என்க தயக்கங்கள் இன்றி அவனிடம் அனைத்தையும் கூற தயாரானாள்.
“அம்மா , எல்லாத்தையும் சொல்லிட்டாங்க தான். ஆனா நான் சொல்லனுமே , என் மனசுல உள்ளதை சொல்லிடுறேன் “
” லவ் அட் ஃபர்ஸ்ட் சைட் தான் எனக்கு. வெற்றியை கண்டதும் இனியா மனசுக்கு ஏதோ ஒரு புது ஃபீல் . நான் அனுபவிக்காத சுதந்திரம் உங்க கிட்ட இருந்துச்சி. ஐ ஸ்டாடர்ட் டூ ஃபால் இன் லவ் வித் யூ தரு . அந்த நிமிஷத்துல இருந்தே உங்களுக்காக வாழ ஆரம்பிச்சேன்.” என்று தொடங்கவுமே மனம் காதலை சொல்லும் நொடிக்காக காத்திருக்க தொடங்கியது .
“உங்களுக்கு பிடிச்சது பிடிக்காததை தெரிஞ்சிக்க நினைக்க , படிக்கிறதுக்காகன்னு சென்னை வந்தேன். ஆனா எதிர்பாராத விதமா உங்க வீட்டுக்கு ஆப்போசிட் வீடா வந்தது அத்தனை சந்தோஷம் எனக்கு. தினமும் காலையில சீக்கிரமே எழுந்து நீங்க வெளி வரதுக்காக காத்திருப்பேன். அதுல ஒரு அல்ப்ப சந்தோஷம் எனக்கு. அப்புறம் தான் காலேஜ் கிளம்பி போறதே. அங்க கிடைச்ச நட்பு தான் யாழு.
இப்படியே நாட்கள் போக ,நீங்க எங்க போறீங்க வரீங்கன்னு தகவல் சொல்றது எல்லாமே கௌதம் அண்ணா தான். எனக்கு அத்தனை தூரம் அவங்க துணையா இருந்தாங்க . நீங்க வெளிய வரும்போது எல்லாம் உங்களை ஸ்டூடியோ கிட்ட இருந்து பார்த்துட்டு போவேன்.
வருஷம் போனதே தெரியாம போக , வீட்ல அதுக்குள்ள துரைபாண்டி அத்தானை மாப்பிள்ளையா கூட்டிட்டு வந்துட்டாங்க . உயிரே போயிடுச்சி தரு , என்ன பண்றது நினைக்கும்போதே அப்பா வேணாம்னு சொல்லி நெருப்பு மேல நின்றிருந்த என்னை மலை பிரேவசத்துக்கு கூட்டிட்டு போன மாதிரி இருந்தது.
அதுக்குள்ள உங்களையே மாப்பிள்ளையா கொண்டு வந்து என்னை திக்கு முக்காட செஞ்சிட்டாங்க. அப்போ தான் நினைச்சேன் என்னோட காதலை உங்ககிட்ட வெளிப்படுத்தனும்னு .அதை நீங்க உணரனும்னு ஆசைப்பட்டேன். நான் உங்களை பார்த்து காதல் சொல்லும் போது உங்களோட உணர்வுகளை ரசிக்கணும்னு நினைச்சேன் .சோ தான் அந்த லெட்டர் ஐடியா எல்லாம் .
வீட்டை காலி பண்ணிட்டு வேறு வீட்டுக்கு சிஃப்ட் ஆகிய பிறகு லெட்டர் போட ஆரம்பிச்சு நல்லா தான் போய்ட்டு இருந்துச்சி. எதிர்பாரா விதமா யாழு வீட்டுக்கு வந்திருந்தா , ரெண்டு பேருமா வீட்டை ஷேர் பண்ணிக்கிட்டோம்.” சொல்லி நிறுத்த அவளது கரத்தை பிடித்து அழுத்தம் கொடுத்தான் .
“அது தான் பிரச்சனைக்கு முதல் படியே தரு. நீங்க கடைசியா போட்ட லெட்டர் எனக்கு கிடைக்கவே இல்லை. என் மொபைலை எடுத்து அவ பேசினதும் எனக்கு தெரியலை. அன்னைக்கு மார்னிங் தான் விசயமே தெரியவர உடைஞ்சு போய்ட்டேன். உங்க கிட்ட நான் வரதுக்குள்ள நீங்க ரெண்டு பேரும் மீட் பண்ணிக்கிட்டீங்க. என் கண்ணு முன்னாடியே அவக்கிட்ட ப்ரோப்ஸ் பண்ணீங்க ” என்றதும் தன்னையே உள்ளுக்குள் திட்டிக்கொண்டான் .
” அவ உங்ககிட்ட ப்ராங்க்னு சொல்லிட்டு வரவும் எனக்கு ஒன்னும் புரியலை. அதுனால நீங்க என்ன நினைக்கிறீங்கன்னு தெரிஞ்சிக்க நினைச்சி , ப்ளான் போட்டு தான் அங்கே வண்டியை நிறுத்தி , உங்க வண்டில வந்தது எல்லாம் .
கல்யாணத்துக்கு மொத நாள் நைட் உங்க கிட்ட ஆசையா நீங்க காதலிச்ச பொண்ணு நான் தான்னு சொல்ல வந்தா , நீங்களும் அம்மாவும் பேசியதை கேக்க நேரிட்டது. என்னால அந்த நேரத்துல சுத்தமா முடியலை . அவ என்னை பார்க்க வந்தப்போ கூட நீங்க என்னை விட்டு கொடுக்க மாட்டீங்கன்னு தான் சொன்னேன் தரு. அதுக்கப்புறம் உங்க கிட்ட அதை பத்தி சொல்லவே முடியல, சொன்னா நீங்க என்ன நினைப்பீங்கன்னு வேற தெரில ” ஒடிந்து போய் அவன் தோளில் சாய்ந்து கொண்டு ஆறுதல் தேடினாள்.
“சரி விடு டா . எதுவா இருந்தாலும் நாம நல்லதுக்கே எடுக்கலாம் ” அவன் பிடித்திருந்த கைகளில் மீண்டுமொரு முறை அழுத்தம் கொடுத்தான்.
” இதை எல்லாம் சொல்லிட்டு தான் என் காதலை சொல்லனும்னு இத்தனை நாளா சொல்லாம இருந்தேன் ” என்றதும் குறும்பாய் சிரித்தான் வெற்றி.
” ஏன் இப்போ கூட மேடம் சொல்லலாம் .என் காது அதை கேட்க தான் காத்திருக்கு ” காதை தீட்டியப்படி சொல்ல , வெட்கம் வந்தது பெண்ணவளுக்கு.
” பார்ரா , இத்தனை நேரம் யாரோ மூக்கு சிந்தினாங்களே அது யாருன்னு உனக்கு தெரியுமா சில் ” வெற்றி கிண்டல் பேச , அவனுளே புதைந்து கொண்டாள்.
“சொல்லேன் டா சில் ” காதலை சொல்லியவனுக்கு இப்போது தன் மனைவி காதலை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்த்தான் .
ஆனால் பெண்ணவளோ ,” திருவிழா தரு நோ ரோமன்ஸ் .இன்னும் ஒரு நாளைக்கு ஸ்ட்ரிக்ட்லி ரெஸ்ட்ரிக்டட் ” கண் சிமிட்டி கூற , சத்தமாய் சிரித்தான் வெற்றிமாறன் அவனோடு இனியாவும் இணைந்துகொண்டாள் .
அந்த ஏகாந்த பொழுதில் இருவரது சிரிப்பு சத்தமும் வீடெங்கும் எதிரொலித்தது .