MM24

MM24

மயங்காதே மனமே 24

அபியும், கீதாஞ்சலியும் ஃபாக்டரிக்கு வந்திருந்தார்கள். அபியைப் பார்த்த மாத்திரத்தில் அத்தனை ஊழியர்களும் திரண்டு விட்டார்கள். அபியே ஒரு நொடி நெகிழ்ந்து போனான்.

ரொம்பவும் அவனால் பேச முடியாத காரணத்தால் எல்லோரும் அரை மனதாகக் கலைந்து போயிருந்தார்கள். அவன் காபினுக்குள் நுழைந்த அபி, கீதாஞ்சலிக்கு ஏதோ ஒரு வேலையைக் கொடுத்து அவளை அந்த இடத்தை விட்டு நகரச் செய்தான். அவள் நகரும் வரை பொறுத்திருந்த வெற்றி உள்ளே வந்தான்.

என்ன ஆச்சுவெற்றி…?”

நல்லா விசாரிச்சாச்சு சார். டவுட்டே இல்லை, ஸ்டீஃபன் தான் பண்ணி இருக்கான்.”

ம்…”

பக்காவா ப்ளான் பண்ணி இருக்காங்க சார். சந்தேகமே வராத மாதிரி போலீஸுக்கு, ஆம்பியூலன்ஸுக்கு எல்லாம் லாரி ட்ரைவரே தகவல் சொல்லி இருக்கான்.”

ம்…” 

உங்க காரோட ஸ்பீட் சட்டுன்னு குறைஞ்சதால, அவனால லாரியை கன்ட்ரோல் பண்ண முடியலைன்னு ஸ்டேட்மெண்ட் குடுத்திருக்கான்.”

ஸ்பீட் காமெராசெக்பண்ணலையாமா?” நிதானமாக வந்தது அபியின் கேள்வி. அவனால் அத்தனை வேகமாகப் பேச முடியவில்லை.

காமெராவில மாட்டாத மாதிரி, ரெண்டு காமெராவுக்கு இடையில கார் போகும் போது பண்ணி இருக்காங்க சார்.”

யாரு கேஸை…?”

நாராயணன் சாருக்கு வேண்டப்பட்ட இன்ஸ்பெக்டர் தான் சார். ஆக்ஸிடென்ட் எங்கிறதைத் தாண்டி வேறெந்த விதத்திலயும் மித்ரனைக் கானர் பண்ண அவரால முடியலை சார்.”

ஸ்டீஃபன்இறங்கினா அப்பிடித்தான்வெற்றி. பக்கா தான். ஆனா…”

சொல்லுங்க சார்.”

மித்ரன்இல்லை, ராஜேந்திரன்.” அபியின் அந்தப் பதிலில் வெற்றியின் நெற்றி சுருங்கியது.

அப்பிடி இருக்கும்னு உங்களுக்குத் தோனுதா சார்?”

ம்கண்டிப்பா.” காரில் கீதாஞ்சலியும் இருந்ததால், இது நிச்சயமாக மித்ரனின் வேலை இல்லை என்று அபிக்குத் தெளிவாகப் புரிந்தது. ஆனால், அதை வெற்றியிடம் பகிர்ந்து கொள்ள அவன் பிரியப்படவில்லை

ஆனாஅந்தக் கதிர் மேடத்தை வந்து பாத்தான் சார்.”

எப்போ?”

நீங்க ஹாஸ்பிடல்ல இருந்தப்போ. அன்னைக்குத்தான் மேடம் முதல் முதலா வீட்டுக்கு கிளம்புறாங்க, இந்தப் பயல் வந்து நிக்குறான். எனக்கு வந்த ஆத்திரத்துக்குஅவனை அங்கேயே கொன்னுருப்பேன், ஈஷ்வரன் சார் தடுத்துட்டாங்க.” உறுமினான் வெற்றி.

ம்…”

அதுக்கப்புறம் மேடம் கிட்ட பேசினான். அவங்களுக்கும் அப்பிடியொரு கோபம் வந்துது. இதை யாரு பண்ணினாங்களோ, அவங்களை நான் சும்மா விடமாட்டேன்னு நல்லா மிரட்டினாங்க சார்.”

ம்ராஜேந்திரன்நடவடிக்கைகள்…”

என்ன ஆச்சுன்னு தெரியலை சார். ரெண்டு நாளா மாமனார் வீட்டுல தான் தங்குறார்.”

கொஞ்சம்என்னன்னு பாருவெற்றி.”

சரிங்க சார்.”

அந்த ட்ரைவர்…”

ஜாமின் குடுத்திருக்காங்க சார். ட்ரைவரோட சொந்தக் காரங்களை வெச்சு ஜாமின் எடுத்திருக்காங்க.”

ம்…” அபியின் கண்ணசைவில் ரூமை விட்டு வெளியேறினான் வெற்றி. ராஜேந்திரனுக்கு எப்படி இத்தனை துணிச்சல் வந்தது என்று அபிக்கு யோசனையாக இருந்தது. கொஞ்ச நேரத்தில் காஃபியோடு உள்ளே நுழைந்தாள் கீதாஞ்சலி.

காஃபி வித் அபி.” என்று சொல்லியபடியே அவனிடம் காஃபியை நீட்டிய மனைவியைப் பார்த்துச் சிரித்தான் அபிமன்யு.

சீக்கிரமா வீட்டுக்குப் போகலாம் அபி.” செல்லமாகச் சிணுங்கிய மனைவியைப் பார்த்துக் கண்ணடித்தான்.

எதுக்கு?”

ஐயோ…! உங்க புத்தி போற போக்கைப் பாருங்க.” அவள் உட்கார்ந்திருந்த சோஃபாவில் கிடந்த சின்ன குஷனை எடுத்து அவனை நோக்கி வீசினாள்

நீங்க பேசுறதை எல்லாரும் பாக்கணும் அபி. அத்தை ரொம்பவே சந்தோஷப் படுவாங்க.” அவள் சிணுங்கலை ரசித்தபடியே நிதானமாகக் காஃபியைப் பருகினான் அபிமன்யு.

                                           :::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

மித்ரன் கொடுத்திருந்த வேலையில் பிஸியாக இருந்தாள் தாமரை. ஃபாக்டரிக்கு அவனோடு தொற்றிக் கொண்டு வந்தவள், நேரத்தைப் பார்த்த வண்ணமே இருக்கவும் மித்ரனுக்கு கஷ்டமாகிப் போனது

கதிர், தன் தங்கையை ஏமாற்றி விடுவானோ என்று மனம் கிடந்து தவித்தது. அவளின் அலைப்புறுதலைப் பார்க்கப் பொறுக்காமல், தன் லாப்டாப்பை அவள் கையில் கொடுத்திருந்தான். அன்றைக்கு அனுப்ப வேண்டிய முக்கியமான மெயில்களுக்கு பதில் அனுப்பும் வேலையை அவளிடம் ஒப்படைத்து விட்டு, மானேஜரைப் பார்க்கப் போயிருந்தான்.

கதிர் அப்போதுதான் ஃபாக்டரிக்குள் நுழைந்தான். ஏதோ இனம் புரியாத ஒரு தயக்கம் அவனைத் தடுத்தது. தான் செய்வது சரியா என்று புரியவில்லை. இருந்தாலும், எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு, இது தான் வேலை செய்யும் இடம் என்பதை மட்டும் நினைவில் இருத்திக் கொண்டான்.

மித்ரனின் ரூமிற்குள் நுழையப் போனவன், சட்டென்று ப்ரேக் அடித்தாற் போல நின்று விட்டான். ஏனென்றால், உள்ளே மித்ரனின் சீட்டில் இருந்தது தாமரை. இதை அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

இந்த ஒரு வருட காலத்தில் அந்த சீட்டில் ராஜேந்திரன், ஏன்? இந்தத் தொழிலுக்கு சொந்தக் காரரான மதுராந்தகனே அமர்ந்து அவன் பார்த்ததில்லை. அப்படியிருக்கதன் தங்கையா?

தயங்கியபடியே நின்றவனின் தோளை ஒரு கை அணைக்கவும், திரும்பிப் பார்த்தான் கதிர். புன்னகைத்தபடி நின்றிருந்தான் மித்ரன்.

ரொம்ப ஆசையா உன்னோட பேச வந்திருக்கா கதிர். ப்ளீஸ்அவளை நோகடிக்காத. என்னை என்ன வேணும்னாலும் திட்டு. ஆனா, அவ பாவம். அவ மேல எந்தத் தப்பும் இல்லை. எய்தவன் இருக்க அம்பை நோகாத கதிர்.” சொல்லியபடியே அவனை உள்ளே அழைத்துச் சென்றான் கதிர்

கதிருக்கு இங்கு நடக்கும் கூத்து எதுவும் புரியவில்லை. தன் தங்கையிடம், தான் நயமாகப் பேச இவன் எதற்குக் கெஞ்சுகிறான்? அதுவும் கெஞ்சுவது மித்ரன் என்ற போது, கதிருக்கு இன்னும் ஆச்சரியமாக இருந்தது. மகேந்திரன் வீட்டில் ருத்ர தாண்டவம் ஆடிய மித்ரன் மனக்கண்ணில் தோன்றி மறைந்தான். கதிரையும் இழுத்துக் கொண்டு ரூமிற்குள் நுழைந்த மித்ரன்,

தாமரை.” என்றான். அதுவரை லாப்டாப்பிற்குள் தலையை புகுத்திக் கொண்டிருந்த தாமரை, அப்போதுதான் தலைநிமிர்ந்து பார்த்தாள். கதிரைப் பார்த்த மாத்திரத்தில் அவள் முகம் நிஜமாகவே தாமரையாகிப் போனது.

அண்ணா…!” கூப்பிட்டபடியே எழுந்து நின்றாள் பெண். கதிர் அசையவில்லை. இறுகிப் போய் நின்றிருந்தான். அவர்கள் இருவரும் ஏதாவது பேசட்டும் என்று, மித்ரன் அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்து கொண்டான்.

அண்ணா, எங்கூட பேசமாட்டியா? ப்ளீஸ்ண்ணா. திட்டவாவது செய். இப்பிடி பேசாம மட்டும் என்னைக் கொல்லாத.” கதிரின் கன்னத்தைப் பிடித்தபடி கெஞ்சிய தனது மனைவியை வைத்த கண் வாங்காமல் பார்த்த படியே இருந்தான் மித்ரன். ஒத்தையாகப் பிறந்து, வளர்ந்தவனுக்கு இந்தப் பாசப் போராட்டம் சிரிப்பாக இருந்தது. தங்கையின் கெஞ்சலை கொஞ்சமும் மதிக்காத கதிர்,

இன்னைக்கு ஒரு பிஸினஸ் லன்ச் இருக்கு. ஒரு மணிக்கு நீங்க அங்க இருக்கணும்.” என்றுவிட்டு சட்டென்று வெளியேறிவிட்டான்

மித்ரனுக்கு அப்படியொரு ஆத்திரம் வந்தது. தன் மனைவியின் முகத்தைப் பார்த்தான். கைப்பொம்மையைக் களவு கொடுத்த சிறுமி போல, கண்ணீர் வடிய விம்மிய படி நின்றிருந்தாள்.

ராஸ்கல், எவ்வளவு திமிர் இருந்தா இப்பிடி நடந்துக்குவான். இன்னைக்கு அவனை என்ன பண்ணுறேன்…” உட்கார்ந்திருந்த நாற்காலியை உதைத்து விட்டு, வெறியோடு எழுந்தவனின் கையைப் பிடித்துக் கொண்டாள் தாமரை.

எங்க போறீங்க?”

அந்தப்பய செவிட்டுல ரெண்டு அறை விடலைன்னா எனக்கு மறசு ஆறாது தாமரை.”

அண்ணனை எதுக்கு நீங்க அடிக்கப்போறீங்க?” அவளின் கேள்வியில் கொஞ்சம் நிதானத்திற்கு வந்திருந்தான் மித்ரன்.

ஏய்…! அவன் உன்னை ஒரு பொருட்டாவே மதிக்காம போறான். நீ என்னடான்னா கேள்வி கேக்குறே?”

என்னோட அண்ணன் என்னைத் திட்டறான். அவனுக்கு அதுக்கு முழு உரிமை இருக்கு. இதுல நீங்க தலையிடாதீங்க.” முகத்தை ஒரு தினுசாக வைத்துக்கொண்டு, அவள் சொன்ன பதிலில் மித்ரன் கொஞ்சம் ஆச்சரியப் பட்டுப் போனான்.

இங்கப் பாருங்க, எங்கண்ணனை எப்பப் பாத்தாலும் திட்டிக்கிட்டே இருக்கீங்க. இது நல்லா இல்லை, நான் சொல்லிட்டேன். உங்க மனசுல என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க?” மனைவியின் கொதிப்பில் சட்டென்று ரூம் கதவை மூடினான் மித்ரன்.

அம்மா தாயே! என்னை திட்டுறதா இருந்தா வீட்டுல வச்சு நல்லாத் திட்டும்மா. இது ஃபாக்டரி, இங்க நான் முதலாளி. கொஞ்சம் அந்த மரியாதையை காப்பாத்திக் குடும்மா.” தன்னிடம் கோரிக்கை வைத்த கணவனை ஒரு மாதிரியாகப் பார்த்தவள், கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

சரி, நான் ஒன்னும் பேசலை.” பெரிய மனது பண்ணித் தன்னை மன்னித்த மனைவியைத் தன்னருகே இழுத்தான் மித்ரன். இதைச் சற்றும் எதிர்பார்க்காதவள், அவன் மார்பிலேயே வந்து மோதி நின்றாள். அந்தக் கண்களில் கலவரத்தைக் கண்டவன், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.

கதிருக்கு மட்டும் தான் உரிமை இருக்கா தாமரை? எனக்கு இல்லையா?” ஆழ்ந்த குரலில் அவன் கேட்ட போது, கலவரப்பட்டிருந்த அந்த விழிகள் இரண்டிலும் லேசாக நாணம் குடி கொண்டது. மித்ரன் மயங்கிப் போனான்

இல்லைன்னு யாரு சொன்னா?”

…! அப்போ இருக்கோ? அதை நீ சொல்லலையேம்மா.” 

ஏன்…? தாலி கட்டினவருக்கு அது தெரியாதா என்ன?”

தாலி கட்டிட்டா மட்டும், எல்லா உரிமையும் வந்திடுமா தாமரை?”

வராதுங்கிறீங்களா?” அவள் கேட்ட பாவனையில் அவன் இல்லை என்பது போல் தலையசைத்தான். முகத்தில் ஒரு மந்தகாசப் புன்னகை இருந்தது.

உரிமை இருக்குன்னு நீ சொல்லணும் பொண்ணே. அதுவரைக்கும் காலவரையறையற்ற காத்திருப்புத்தான்.” அவள் நெற்றியோடு நெற்றி மோதி, இடை வளைத்தான் மித்ரன்.

சொல்லுறேன்…”

எப்போ?” ஆவலோடு கேட்டான் கணவன்.

இன்னைக்குவீட்டுக்கு போனதுக்கு அப்புறமா?” அதைச் சொல்லும் போது தாமரையின் விழிகளில் இருந்த நாணம், சற்றே வடிந்தாற் போல தோன்றியது மித்ரனுக்கு. அதுவே பொய்யென்பது போல, அடுத்த கணம் தன் பாவத்தை மாற்றிக் கொண்டாள் மனைவி.

மெயில் இன்னும் ஒன்னு, ரெண்டு மீதம் இருக்கு…” 

கே ம்மா. அனுப்பி முடிச்சிடு.” சொல்லி விட்டு அவள் எதிரே அமர்ந்து கொண்டான் மித்ரன். பழையபடி உட்கார்ந்து அவள் வேலையைத் தொடர, இவன் முகம் யோசனையில் ஆழ்ந்தது.

தாமரை தன்னிடம் எதையோ மறைப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது. இந்தக் குழந்தைத் தனத்தையும் மீறிய எதுவோ ஒன்று, அவளுக்குள் இருந்து அரிப்பது போல தெரிந்தது. எதுவானாலும் இன்றைக்குப் பேசிவிட வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

                                 ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

அன்று பௌர்ணமி. மொட்டை மாடியில் அமைதியாக நின்றிருந்தாள் தாமரை. மனம் முழுவதும் அண்ணாவையே சுற்றி வந்தது. இன்று காலையில் எத்தனை கோபம் இருந்திருந்தால், தன்னை அப்படி உதாசீனப் படுத்திவிட்டுப் போயிருப்பான்.

அவனுக்கென்று இருக்கும் ஒரே உறவு நான் தானே. நானே அவனைப் புறக்கணித்தால், அவன் நொறுங்கித்தானே போவான். மனச்சாட்சியோடு போராட திராணியற்று இருளை வெறித்தபடி நின்றிருந்தாள்.

வீசிய மெல்லிய பூங்காற்று அவள் மேனி தழுவியது. அந்தக் குளிர்ச்சியில் தன்னை மறந்தவள், தனக்குப் பின்னால் நின்று கொண்டு, தன் வளைவு நெளிவுகளை ரசித்துக் கொண்டிருந்தவனைக் கவனிக்கவில்லை.

தாமரை…” அந்த அழைப்பில் திரும்பிப் பார்த்தாள் தாமரை. அந்த வெள்ளை நிலவொளியில், தெளிவாகத் தெரிந்தது அவனது வரிவடிவம். அவளுக்குப் பக்கத்தில் வந்து நின்றவன், அந்த நிசப்தத்தைத் தானும் கொஞ்ச நேரம் அனுபவித்தான்.

ஏதோ சொல்றேன்னு சொன்னியேம்மாஇப்போ சொல்லு.” அவன் விழிகள் காதல் பேசுமோ என்றெண்ணி அண்ணாந்து பார்த்தவள், ஏமாந்து போனாள்.

எனக்குத் தெரியாத ஏதோ ஒன்னு உம்மனசுல இருக்குன்னு என் உள்மனசு சொல்லுது. சொல்லுஎதுவா இருந்தாலும் சொல்லு தாமரை. நான் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுறேன்.” அந்தக் குரலில் கசப்பாகப் புன்னகைத்தாள் மனைவி. ஆனால் பார்வை மட்டும் அவன் முகத்தை விட்டு அகலவில்லை.

ரெண்டு நாளைக்கு முன்னாடி, நீங்க என்னை வந்து பாத்து எல்லாம் சொன்னப்போ, சட்டுன்னு சம்மதம் சொன்னேனேஏன்னு யோசிச்சீங்களா?”

உங்கம்மாக்கு நடந்த அநியாய…” அவன் முடிக்கும் முன்னமே, அவள் உதட்டில் கேலியாக ஒரு புன்னகை வந்து ஒட்டிக் கொண்டது. அதைப் பார்த்தவன் பேச்சை நிறுத்தினான்.

அது காரணம் இல்லையா தாமரை?”

இல்லை…” பெருமூச்சுடன் பதில் சொன்னாள்.

சொல்லுடா.”

கிட்டத்தட்ட ஒரு வருஷமா, நாம மனசுலேயே சுமந்துக்கிட்டு இருக்கிற ஒருத்தர், நம்ம கிட்ட வந்து, ‘என்னைக் கட்டிக்கிறயான்னு கேட்டா, யாருக்காவது கசக்குமா என்ன?” அவள் கேள்வி அவனுக்குப் புரியவில்லை. கண்கள் சுருங்க அவளை ஆழ்ந்து பார்த்தான் மித்ரன்

தாமரை…! நீ யாரைச் சொல்ற? என்னையா?” ஆச்சரியமாகக் கேட்டவனை இமைக்காமல் பார்த்திருந்தாள் பெண்.

பேசுபேசுடீ…! வாயைத் தொறந்து பேசு. இன்னும் வேறென்ன ரகசியம் எல்லாம் வச்சுக்கிட்டு என்னை சாவடிக்கப் போறேசொல்லித்தொலை...” காட்டமாகச் சத்தம் போட்டான் மித்ரன். உடம்பெல்லாம் என்னமோ பண்ணியது. ஏதோ பெரிதாக வெடிகுண்டொன்று வரப்போவதாக, அவன் உள்மனது எச்சரித்தது.

உங்களை முதல் முதலா ஃபாக்டரியில தான் பாத்தேன், ஒரு வருஷத்துக்கு முன்னாடி. அண்ணா அப்போதான் உங்ககிட்ட வேலைக்கு சேந்திருந்தான்.”

…!”

அண்ணாவை அவசரமா பாக்க வந்திருந்தேன். கொஞ்சம் பணம் தேவைப்பட்டது. அப்போ தான் உங்களையும் முதல் முதலா பாத்தேன். தனியா இல்லைஅந்த ஸோனாவோட…” அவள் சொல்லச் சொல்ல மித்ரன் ஆடிப் போய்விட்டான். பற்றிக் கொள்ள ஏதாவது பக்கத்தில் இருந்தால், நன்றாக இருக்கும் போல தோன்றியது. ஆனால் அந்த மொட்டை மாடியில் அவளைத் தவிர வேறெதுவும் இருக்கவில்லை. தன் ஆறடி உயரமும் தரைமட்டமாக தரையில் மண்டியிட்டான்

அவளை அண்ணாந்து பார்க்கவும் தகுதியில்லாமல், அவன் தலை அவள் காலடியில் சரிந்தது. சட்டென்று விலகி நின்றாள் தாமரை. அவனை சமாதானப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அவனையே பார்த்தது, பார்த்தபடியே நின்றாள்.

அண்ணா எப்போவும் வீட்டுல உங்களைப் பத்திப் பேசுவான். சதா உங்களைப் பத்தின விஷயங்கள் என்னோட காதுல விழுந்ததாலேயோ என்னவோ, உங்க மேல ஒரு ஈர்ப்பு வந்துது. பார்க்கணும்னு ஒரு ஆர்வம் வந்துது…” ஏதோ கனவில் பேசுவது போல பேசினாள் பெண்.

அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் அவளைத் தன்னை நோக்கி இழுத்தவன், அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்துக் கொண்டான். அவன் முகத்தின் ஈரத்தை, அவள் கழுத்து உணர்ந்தது.

சாரிசாரி தாமரைசாரி பேபிசாரிசாரிதப்புத்தான். நான் பண்ணினது எல்லாமே தப்புதான். சாரிடாசாரி…” அவன் மன்றாடலில் தாமரை கரையவில்லை. அசையாமல் அப்படியே உட்கார்ந்திருந்தாள்

தாமரைஉன்னோட முகத்தைப் பாக்குறதுக்கே எனக்கு வெக்கமா இருக்கு தாமரை. அதெல்லாம் என்னோட கடந்த காலம் தாமரை. என்னோட நிகழ்காலமும், எதிர்காலமும் நீதான் தாமரைநீ மட்டும் தான் தாமரை…” முகத்தை தன் கைகளால் மூடிக்கொண்டு, குலுங்கி அழும் அந்த ஆண்பிள்ளையை அசையாமல் பார்த்திருந்தாள். அவன் கறைகளெல்லாம் அந்தக் கண்ணீரில் கரையட்டும் என்று நினைத்தாளோ?

சற்று நேரத்தில் தன்னை சுதாகரித்துக் கொண்டு, முகத்தை அழுந்தத் துடைத்த மித்ரன் அவளை நேருக்கு நேராக நிமிர்ந்து பார்த்தான்.

என்னை அழ வைச்சுட்டே இல்லை? இந்த மித்ரனை அழ வைச்சுட்ட இல்லை? என்னை உன் கால்ல விழ வைச்சுட்ட இல்லை?” ஆங்காரமாகக் கேட்ட கணவனைப் பார்த்துச் சிரித்தாள் மனைவி.

நான் நடந்ததைச் சொன்னேன், அவ்வளவு தான் அத்தான்.” அவள் அத்தானில் மனம் மயங்கினாலும், அசைந்து கொடுக்கவில்லை மித்ரன். தாமரைக்கு அவன் கோபம் புரிந்தது

இன்னைக்கு யாரோ உரிமையைப் பத்திப் பேசினாங்களே அத்தான்? அவங்ககிட்ட சொல்லுங்க. எங்கண்ணனை விட, அதைப் பத்திப் பேசினவங்களுக்குத்தான் எம்மேல உரிமை அதிகமா இருக்குன்னு சொல்லுங்க அத்தான்.”

அந்த வார்த்தைகளில் மித்ரன் கரையுடைத்தான். அந்தக் கட்டாந்தரையே அவனுக்குப் போதுமானதாக இருந்தது. இத்தனை வேகத்தை எதிர்பார்த்திராத தாமரைதான் திணறிப் போனாள்.

என்னை அழ வைச்சுட்டேல்லஅழ வைச்சுட்டேல்ல…” காரியத்தில் கண்ணாக இருந்தாலும், திரும்பத் திரும்ப இதே வார்த்தைகளையே முணு முணுத்தான் மித்ரன்

கோடு தாண்டும் அந்த முரடனை முழுதாக அனுமதித்தாள் தாமரைப் பெண். தனிக்காட்டு ராஜாவாக இருந்த அவன் ஆண்மை, இன்று பலமாக அடிவாங்கி விட்டது அவளுக்கும் புரிந்தது. அவன் அந்த வார்த்தைகளைச் சொல்லும் போதெல்லாம் லேசாகப் புன்னகைத்தாள்.

சிரிக்கிறே நீஎன்னை அழ வைச்சுட்டுசிரிக்கிறே நீ…?” புன்னகைத்த குற்றத்திற்காக, அந்தப் பூவிதழுக்கும் தண்டனை கிடைத்தது

ஏற்றுக் கொண்டாள். அத்தனையையும் ஏற்றுக் கொண்டாள். பொங்கி வெடித்த அலை, பூஞ்சிதறல்களை அவள் மேல் ஓயாது தூவிவிட்டு, சற்றே அடங்கி ஓய்ந்தது

மனம் நிறைந்த அமைதியில், தன் மார்பில் தலை வைத்திருந்த மனைவியைப் பார்த்தான் மித்ரன். தன் முகம் பார்க்க மறுத்தாள் பெண். மீண்டும் போதையேற, அவளை அப்படியே தரையில் சரித்தவன்,

என்னைப் பாரு தாமரை.” என்றான்.

ம்ஹூம்…”

இப்போ நீ பாக்கலை…” மிரட்டியவனைக் கடைக் கண்ணால் லேசாகப் பார்த்தாள். அவள் பார்வையில் மயக்கம் இருந்தது.

தாமரை…”

ம்…”

என்னை மன்னிச்சுட்டேன்னு சொல்லு.”

அத்தான்…!”

ப்ளீஸ்சொல்லுடீ…”

ஐயோ அத்தான்! அப்பிடி…” அவளை முடிக்கவிடாமல் தடுத்தவன்,

சொல்லுடா…” என்றான் பிடிவாதமாக. திமிர் பிடித்த அந்த மத யானை, சின்னஞ் சிறு பட்டாம்பூச்சியிடம் பாவமன்னிப்புக் கேட்டு இறைஞ்சியது.

இவ்வளவு நேரமும் அதைத்தானே அத்தான் பண்ணினேன்.”

ஹாஹா…” அவள் பதிலில் வாய்விட்டுச் சிரித்தவன், தானும் எழுந்து, அவளுக்கும் கை கொடுத்தான். ரூம் வரை வந்தவள், அவனுக்குகுட் நைட்சொல்லி விட்டு நகரப் போனாள்.

எங்கடீ போறே?”

என் ரூமுக்கு அத்தான்.”

அட என் அறிவுக் களஞ்சியமே! அங்க இனி உனக்கென்ன வேலை?” என்றபடி அவளை தன் ரூமிற்குள் இழுத்துக் கொண்டவன், ஒற்றைக் காலால் கதவைப் பூட்டினான்.

மித்ரன் நிறைய பாவம் பண்ணியிருக்கான்டி. அத்தனைக்கும் நீ பாவ மன்னிப்பு குடுக்க வேணாம்…?” கேட்டபடியே நெருங்கியவனை தடுக்க மனமில்லாது, அவனுள் புதைந்து போனாள் தாமரை. சேற்றில் ஒரு செந்தாமரை மலர்ந்தது

 

error: Content is protected !!