MM27

MM27

மயங்காதே மனமே 27

அன்று காலையில் வீடு கொஞ்சம் பரபரப்பாக இருந்தது. மித்ரன் ஃபாக்டரிக்குக் கிளம்பிப் போயிருந்தான். தாமரை, மித்ரனுக்கும், அவளுக்கும் தேவையானவை அனைத்தையும் பாக் பண்ணி வைத்திருந்தாள்.

கணவனும், மனைவியும் இரண்டு நாட்களுக்கு, கிராமத்தில் இருக்கும் ஜெயந்தியின் தோப்பு வீட்டிற்கு போவதாக எல்லாம் ஏற்பாடாகி இருந்தது

எத்தனை மணிக்கு கிளம்பணும்னு மித்ரன் சொன்னான் தாமரை?” ஜெயந்தியின் கேள்வியில், சமையலில் கவனமாக இருந்த தாமரை திரும்பிப் பார்த்தாள்.

வேலை கொஞ்சம் இருக்கு, முடிச்சதும் கிளம்பலாம்னு சொன்னாங்க பாட்டி.”

எத்தனை மணிக்கு கிளம்பினாலும் பரவாயில்லைம்மா. மத்தியானம் சமையல் பண்ணி வைக்கச் சொல்லி, நான் ஏற்கனவே ஃபோனைப் போட்டு சொல்லிட்டேன். அதனால, நீங்க தாராளமா எல்லா இடமும் சுத்திப் பாத்துட்டு, ஆறுதலாவே போங்க.”

ம்சரி பாட்டி.”

சமைலுக்குத் தேவையான சாமான்கள் எல்லாம் ரெடியா இருக்கு. சமையலுக்கும் ஒரு ஆள் போட்டிருக்கலாம். ஆனா, மித்ரன் தான் வேணான்னு சொல்லிட்டான்.” சட்னியை அரைத்தபடியே பேசிக் கொண்டிருந்தார் ஜெயந்தி.

ஜெயந்திமித்ரன் வந்தாச்சு.” ஹாலில் இருந்தபடியே குரல் கொடுத்தார் மதுராந்தகன். தாமரையையும், மித்ரனையும் விட, இவர்கள் கிராமத்து வீட்டுக்குப் போவதில் மதுராந்தகனுக்கும், ஜெயந்திக்கும் தான் கொள்ளை ஆனந்தம். தாங்கள் ஆசைப்பட்டபடி மகன் வாழாத வாழ்க்கையை, பேரன் வாழ்வதில் மகிழ்ந்து போனார்கள்.

தாமரை, நீ போய் சீக்கிரம் ரெடியாகும்மா. மித்ரன் வந்துட்டான் இல்லை.” பேசிய படியே இரண்டு பேரும் கிச்சனை விட்டு வெளியே வந்தார்கள்

மதுராந்தகன் சோஃபாவில் உட்கார்ந்த படி டீ வி பார்த்துக் கொண்டிருந்தவர், மித்ரன் வந்த வேகத்தில் சட்டென்று டீ வியை ஆஃப் பண்ணினார்.

மித்ரா! என்னாச்சு? ஏன் இவ்வளவு கோபமா இருக்கே?” தாத்தா கேட்டுக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தவன், பாட்டியின் அருகினில் நின்றிருந்த தாமரையின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.

மித்ரா…!” ஜெயந்தியும், மதுராந்தகனும் ஒரே நேரத்தில் கத்தினார்கள். கன்னத்தைப் பிடித்தபடி பக்கத்தில் இருந்த டைனிங் டேபிளில் மோதி நின்றாள் தாமரை

எங்கிட்ட கேக்காம எதுக்கு அங்க போனே…?” மித்ரன் உறுமியபடி, தாமரையை நெருங்கினான். பேரனின் மூர்க்கத்தனத்தை நன்கறிந்த ஜெயந்தி, இருவருக்கும் இடையே வந்து நின்று கொண்டார்.

நீங்க விலகுங்க பாட்டி. இவ பண்ணி இருக்கிற காரியத்துக்கு…!” மித்ரனின் கர்ஜனையில், ரூமிற்குள் ரெடியாகிக் கொண்டிருந்த ராஜேந்திரன் வெளியே வந்தார். நல்ல காலம் சுலோச்சனா வீட்டில் இல்லை. அம்மா வழி சொந்தத்தில் ஏதோ விசேஷம் என்று, நேற்றே கிளம்பிப் போயிருந்தார். அந்த விசேஷத்தில் கலந்து கொள்ளத்தான், ராஜேந்திரன் இப்போது ரெடியாகிக் கொண்டிருந்தார்.

எதுவா இருந்தா என்ன? அதுக்காக நீ இப்பிடித்தான் காட்டு மிராண்டி மாதிரி நடப்பியா? தள்ளிப்போ! ஏங்கஇவனை என்னன்னு கேளுங்க.” ஜெயந்தி பேரனை தாமரையின் பக்கம் நகர விடவேயில்லை.

மித்ரா…! என்னப்பா இது? எங்க இருந்துடா இந்தப் பழக்கத்தையெல்லாம் கத்துக்கிற? வீட்டுக்கு வந்த பொண்ணை கை நீட்டி அடிக்கிறயேவெக்கமா இல்லையா?” மதுராந்தகனது குரல் கெஞ்சியது.

வீட்டுக்கு வந்த பொண்ணை கண்டிக்காம விட்டதால தான், ஒன்னு கொழுப்பெடுத்து ஆடுது. அதையே தாங்க முடியலை. இப்போ இவ ஆரம்பிக்கிறாளா?” மித்ரன் உச்சஸ்தாயியில் கத்தினான்.

மித்ரா…! தாமரை அப்பிடியெல்லாம் தப்பு பண்ணுற பொண்ணு இல்லைடா. அதையும் தாண்டி அவ ஏதோ பண்ணி இருக்கான்னாஅதுக்கு நியாயமான காரணம் இருக்கும் பா.” பாட்டியின் எந்தச் சமாதானமும், மித்ரனை இளக்கவில்லை.

பாட்டி…! நடந்தது என்னன்னு தெரியாம பேசாதீங்க. இவ அபி ஃபாக்டரிக்குப் போனாளா? இல்லையான்னு கேளுங்க?” மித்ரன் பல்லைக் கடித்தபடி வார்த்தைகளைத் துப்பினான். இப்போது தாத்தாவும், பாட்டியும் ஒருவர் முகத்தை இன்னொருவர் பார்த்துக் கொண்டார்கள். ராஜேந்திரன் முகத்திலும் கேள்வி இருந்தது.

கேளுங்க பாட்டி…!” மித்ரன் கொதித்துக் கொண்டிருந்தான்.

சரி, நான் கேக்குறேன். நீ கொஞ்சம் அமைதியா இருப்பா.” சொல்லியபடியே, கணவனுக்கு கண்ணால் சேதி சொன்னார் ஜெயந்தி.

மித்ராஇங்க வா. நீ முதல்ல இங்க உக்காரு.” வலுக்கட்டாயமாக பேரனை தன்னருகில் உட்கார வைத்தார் மதுராந்தகன். நடக்கும் நாடகத்தை அமைதியாகப் பார்த்திருந்தார் ராஜேந்திரன்.

ஏம்மாநீ அங்க போனியா?”

ம்…” பாட்டியின் கேள்விக்கு கன்னத்தைப் பிடித்தபடியே, பதில் சொன்னாள் தாமரை.

எதுக்கும்மா…?”

அந்த அண்ணாக்கு ஆக்ஸிடென்ட் ஆச்சு இல்லையா பாட்டி?”

ஆமா…”

அதுக்குக் காரணம் உங்க பேரன் தான்னு அவங்க நினைச்சுக்கிட்டு இருக்காங்க பாட்டி.”

அடப்பாவமே…! இது யாரும்மா இல்லாததையும் அந்தப் பையனுக்கு சொல்லிக் குடுத்திருக்காங்க?” வெள்ளந்தியாக பிலாக்கணம் வைத்தார் ஜெயந்தி. மதுராந்தகனின் விழிகள், கூரிய வாளாக ராஜேந்திரனைத் தொட்டு மீண்டது.

அதனால்தான் நான் அங்க…”

அதுக்காக…? நீ அவன் கிட்ட போய் பிச்சை கேட்டியா?” அவளை முழுதாக முடிக்க விடாமல், மீண்டும் ஆத்திரப்பட்டான் மித்ரன்.

நான் ஒன்னும் பிச்சை கேக்கலை. அவங்க எண்ணம் தப்புன்னு சொன்னேன். உங்க மேல எந்தத் தவறும் இல்லைன்னு சொன்னேன்.”

ஆனா அவன் அப்பிடிச் சொல்லலையே…?”

எனக்கு அதைப் பத்திக் கவலை இல்லை அத்தான். சரி, நீங்க சொல்லுற மாதிரி நான் பிச்சை கேட்டிருந்தாலும் என்ன தப்பு அத்தான்?”

ஏய்…!” கோபமாக எழுந்த மித்ரனை, கெஞ்சிக் கூத்தாடி உட்கார வைத்தார் மதுராந்தகன்.

எனக்கு என் புருஷன் முக்கியம் அத்தான். நீங்க அந்தத் தப்பைப் பண்ணியிருந்தாக் கூட நான் உங்களை விட்டுக் குடுத்திருக்க மாட்டேன். அப்பிடி இருக்கும் போது, ஒன்னுமே பண்ணாம நீங்க எதுக்கு அத்தான் கெட்ட பெயர் வாங்கணும்?”

நான் இதைப் பண்ணலைன்னு அவனுக்குத் தெரியும்.”

பரவாயில்லை, யாரு இதைப் பண்ணி இருந்தாலும், அவங்களுக்காக நான் பேசினதா இருக்கட்டும் அத்தான்.” இதைத் தாமரை சொல்லும் போது, ராஜேந்திரன் தலை தானாகக் குனிந்து கொண்டது. தாமரையும், ராஜேந்திரனை ஒரு கணம் திரும்பிப் பார்த்தாள்.

இப்படியொரு பதிலை எதிர்பார்க்காத மித்ரன், பக்கத்தில் இருந்த சின்ன ஸ்டூலை ஓங்கி உதைத்தான். பாட்டி அழைத்ததையும் காதில் வாங்காமல், வந்த வேகத்திலேயே திரும்பிப் போய்விட்டான். கார் சர்ரென்று சீறிப் பாய்ந்து கொண்டு போனது.

கண்களில் நீர் வழிய நின்றிருந்த தாமரையின் தலையைத் தடவி விட்டுப் போனார் தாத்தா. பேத்தியின் தோள்களை அணைத்து, முதுகில் லேசாகத் தட்டிக் கொடுத்து விட்டு, கிச்சனை நோக்கிப் போனார் ஜெயந்தி. தாமரையின் கண்கள், ராஜேந்திரனை வெறித்துப் பார்த்தன. அந்தப் பார்வைக்கு ஈடு கொடுக்க முடியாமல், நகர்ந்து விட்டார் மனிதர்.

நடந்தது வேறு ஒன்றுமல்ல… 

கதிரின் வாய்மூலமாக, அபியின் எண்ணத்தை அறிந்த தாமரைக்கு, அதற்கு மேல் இருப்புக் கொள்ளவில்லை. அடுத்த நாளே, மித்ரன் ஃபாக்டரிக்குக் கிளம்பிய பிறகு, வீட்டை விட்டுக் கிளம்பி விட்டாள்.

அபியின் ஃபாக்டரிக்கு முன்னால் தாமரை போய் இறங்கிய போது, கீதாஞ்சலியைத் தான் முதல் முதலாகப் பார்த்தாள். ஆனால், இருவருக்குமே அறிமுகம் இல்லாததால்

ஹாய்…!” என்றாள் கீதாஞ்சலி.

ஹாய் மேடம். நீங்க இங்க வேலை பாக்குறீங்களா?” தாமரையின் கேள்வியில் கொஞ்சம் திகைத்த கீதாஞ்சலி, லேசாகப் புன்னகைத்தாள்.

அப்பிடியும் சொல்லலாம். சொல்லுங்கம்மா, நீங்க யாரைப் பாக்கணும்?”

அபி சாரைப் பாக்கணும் மேடம்.”

என்ன விஷயம்னு நான் தெரிஞ்சுக்கலாமா?”

பர்சனல் மேடம்.”

…! உள்ள வாங்க.” நேரடியாக அவள் தாமரையை அபியின் ரூமிற்குள் அழைத்துச் செல்லவும்இந்தப் பெண் இங்கு பெரிய பதவியில் இருப்பவள் போலும், என்றுதான் முதலில் தோன்றியது தாமரைக்கு.

அபி, இவங்க உங்களைப் பாக்கத்தான் வந்திருக்காங்க. ஏதோ பர்சனலா பேசணுமாம். நீங்க உக்காருங்கம்மா.” கீதாஞ்சலியின் நடவடிக்கைகளில் ஓர் உரிமை இருப்பதை, அப்போதுதான் புரிந்து கொண்டாள் தாமரை. அவள் சிந்தனையைக் கலைத்தான் அபி.

சொல்லுங்கம்மாஎன்ன பேசணும் எங்கிட்ட?”

சார்அதுவந்து…” அங்கு நிற்கும் பெண் யாரென்று ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளாமல் பேச்சைத் தொடர விரும்பாதவள், கீதாஞ்சலியை ஒரு முறை திரும்பிப் பார்த்தாள்.

அவங்க என் வைஃப் தான். நீங்க தாரளமா பேசலாம்.” 

…! அப்போ நீங்க தான் கீதாஞ்சலியா? உங்களைப் பத்தி அண்ணா நிறைய பேசி இருக்கான்.” மெல்லிய சிரிப்போடு சொன்ன பெண்ணை, இப்போது அபியும், கீதாஞ்சலியும் ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.

உங்க அண்ணா யாரு?”

கதிர்.”

…! அப்போ நீங்கதான் தாமரையா? அண்ணா கிட்ட சொல்லிக்கிட்டே இருந்தேன். நீங்க ஊருக்கு வந்தா எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வாங்கன்னு. எப்போ வந்தீங்க? ரெண்டு நாள் முன்னாடி கூட அண்ணாவை பாத்தோமே? நீங்க வந்திருக்கீங்கன்னு சொல்லவே இல்லையே?” கீதாஞ்சலியின் கேள்வியில் தலை குனிந்தாள் தாமரை. அவள் மௌனத்தில், அபியும், கீதாஞ்சலியுமே கொஞ்சம் மௌனித்துப் போனார்கள்.

சொல்லுங்கம்மா, நீங்க ஏதோ பேசணும்னு சொன்னீங்களே?” அந்த மௌனத்தைக் கலைத்தான் அபி.

சார்நான் பேசப்போற விஷயம்உங்களுக்கு பிடித்தமில்லாம இருக்கலாம்ஏன்? நீங்க வெறுக்கிறதாக் கூட இருக்கலாம். இருந்தாலும்என்னால அமைதியாப் போக முடியலை சார்.” 

“……” யாரும், எதுவும் பேசவில்லை. அவளே தொடரட்டும் என்று பார்த்திருந்தார்கள்

உங்களுக்கு நடந்த விபத்து, எவ்வளவு கேவலமான விஷயம்னு என்னால புரிஞ்சுக்க முடியுது சார்…” இதைத் தாமரை சொல்லும் போது, அபியின் கண்கள் கொஞ்சம் கூர்மையானது.

ஆனாஅதுக்கும், என் புருஷனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை சார்.” 

உங்க புருஷன் யாரு?” இதைக் கேட்கும் போது, அபியின் முகமும், குரலும் இறுகிப் போயிருந்தன. அபியின் கண்களை நேராகப் பார்த்த தாமரை,

மித்ரன்.” என்றாள். நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்திருந்த அபி, அதன் நுனிக்கு வந்திருந்தான்.

வாட்! மித்ரனோட வைஃபா நீங்க? அப்பிடி ஒரு விஷயத்தை நாங்க கேள்விப்படவே இல்லையே? இது என்ன புதுக் கதை?” 

அபியின் ஆச்சரியத்தில் லேசாகச் சிரித்தவள், அத்தனையையும் சொல்லி முடித்தாள். ராஜேந்திரன் முதற்கொண்டு, வைதேகி வரை யாரையும் விட்டு வைக்கவில்லை. அவள் சொல்லி முடித்தபோது, அந்த இடத்தில் மயான அமைதி நிலவியது.

எம் புருஷன் நல்லவர்னு நிரூபிக்க நான் இங்க வரல்லை சார். ஆனா இந்த விஷயத்தைப் பொறுத்த வரைக்கும், அவர் எந்தத் தப்பும் பண்ணலை. நீங்க தப்பான இடத்துல குறி வைக்குறீங்க சார்.” சொன்னவள், எழுந்து வணக்கம் வைத்தாள். கீதாஞ்சலியைப் பார்த்து ஒரு புன்னகையைச் சிந்தி விட்டு, மடமடவென வெளியேறிவிட்டாள்.

  •                                            •     •     •     •

நேரம் இரவு பத்தைத் தாண்டிக் கொண்டிருந்தது. காலையில் கோபத்தோடு போன மித்ரன், இன்னும் வீடு வந்திருக்கவில்லை. எத்தனையோ முறை, ஃபோனுக்கும் தாமரை அழைத்திருந்தாள். ஆனால் அது ஆஃப் பண்ணியே இருந்தது. அதற்கு மேலும் தாமதிக்க முடியாமல், கதிரை அழைத்தாள்.

அண்ணா, நான் தாமரை பேசுறேன்…”

“……”

நீ எங்கூட பேசமாட்டேன்னு எனக்குத் தெரியும். இருந்தாலும் பரவாயில்லை. நான் சொல்லுறதை மட்டுமாவது கேளு. காலையில கோபமா வீட்டை விட்டுப் போனவங்க, இன்னும் வரலை. ஃபோன் வேற ஆஃப்லயே இருக்கு. நீ கொஞ்சம் என்னன்னு பாருண்ணா.” 

இன்னைக்கு முழுக்க ஃபாக்டரியில தானே இருந்தாரு?” கதிரின் வாய்ப்பூட்டு உடைந்தது. அதை உணரும் நிலையில் தாமரை இல்லை.

…! அங்கதான்இருந்தாங்களா…? அப்போ ஏன்…?”

என்ன ஆச்சு?” கொஞ்சம் காரமாக வந்தது கதிரின் குரல்.

அதுவந்துஅண்ணா…”

ஃபோன வை.” சீறியவன், நேராகபப்ற்குப் போனான். கழுதை கெட்டால் குட்டிச் சுவர் தானே! கதிரின் யூகத்தைப் பொய்க்கவில்லை மித்ரன். அங்கிருந்தவி பிஏரியாவில், தன்னை மறந்து அமர்ந்திருந்தான்.

சார்!” கதிரின் அழைப்பில் திரும்பிப் பார்த்தான் மித்ரன்.

எந்திரிங்க சார், வீட்டுக்குப் போகலாம்.”

முடியாது கதிர்.”

ஏன் சார்?” 

மனசு சரியில்லை. இன்னும் கொஞ்ச நேரம் இங்கயே இருக்கலாம்.”

மனசு சரியில்லாத வங்க எல்லாம் இங்க வந்து உக்கார ஆரம்பிச்சா, வீட்டுல யாருமே இருக்க முடியாது சார். வாங்க வீட்டுக்குப் போகலாம்.”

முடியாது கதிர். அங்க போனா எனக்கு கோபம் வரும்.” எவ்வளவு உள்ளே இறங்கினாலும், நிதானம் தவறாமல நிற்கும் மித்ரன், அன்று கொஞ்சம் தடுமாறியது போல தோன்றியது கதிருக்கு.

என்ன ஆச்சு சார்?”

அப்பிடிக் கேளு கதிர். உன் தங்கச்சி என்ன பண்ணியிருக்கா தெரியுமா?”

என்ன பண்ணி இருக்கா?” கதிரின் நெற்றி லேசாகச் சுருங்கியது.

அந்தப் பரதேசி இருக்கான்லஅவனைப் பாக்கப் போயிருக்கா?”

அது யாரு?”

அபிஅபி நாராயணன். பெரிய பிஸ்தா அவன்! அவங்கிட்ட போயி கெஞ்சி இருக்கா?” சொல்லும் போதே, மித்ரனின் தாடைகள் இறுகியது.

…!”

இவ எதுக்குடா அந்தப் பன்னாடைக் கிட்ட கெஞ்சணும்? என்னடா பண்ணுவான் அவன்? மிஞ்சி மிஞ்சிப் போனாஎன்னைத் தூக்குவான்அவ்வளவுதானே?”

சார்…! போதும், பேசுறதை நிறுத்திட்டு கிளம்புங்க.” கதிரின் குரலில் கோபம் தெறித்தது. ஆயிரம் இருந்தாலும், பேசுவது தன் தங்கையின் கணவன் என்ற உண்மை, உயிர் வரை தாக்கியது.

பொறு கதிர். என்னைப் பேச விடு. இது அவனுக்கும், எனக்குமான பிரச்சினை. இதுல இவ ஏன்டா நடுவில வர்றா? சரி, அது கூட பரவாயில்லைஎதுக்கு அவங்கிட்ட போயிச்சேஅவ என்னோட ராணிடா. ‘இவ இந்த வீட்டோட மாகலக்ஷ்மிடா மித்ரான்னு, என் தாத்தாவும், பாட்டியும் தலையில வெச்சு கொண்டாடுறாங்க. இவ எதுக்குடா அங்க போயிஏன்டா? மகாலக்ஷ்மி எங்கேயாவது பிச்சை கேப்பாளா?” மரியாதை எல்லாம் காற்றில் பறந்தது. சரளமாகடாபோட்டுப் பேசினான் மித்ரன்.

புருஷனுக்கு ஒன்னுன்னா, அதே மகாலக்ஷ்மி என்ன வேணும்னாலும் பண்ணுவா? அதெல்லாம் உங்களுக்குப் புரியாது. நீங்க வாங்க சார், வீட்டுக்குப் போகலாம்.”

அந்த அபி ஃபோனைப் போட்டு என்னைக் கேவலமாப் பேசுறான் கதிர். நான் பொண்டாட்டி பின்னால ஒளிஞ்சிக்கிறேங்கிறான். எனக்கு அவ்வளவு ஆத்திரம் வந்துது. அந்தக் கோபத்துல வீட்டுக்குப் போனேனா? தாமரையை அடிச்சிட்டேன்டா…”

என்ன…?” மித்ரன் சொல்லி முடிக்கவும், கதிர் அவன் காலரைக் கொத்தாகப் பிடித்திருந்தான்.

எவ்வளவு தைரியம் உங்களுக்கு…! இருபத்தி நாலு வருஷம், கூட இருந்து வளத்திருக்கேன். அவளை நான் அடிச்சதில்லை. இருபத்தி நாலு நாள் கூட ஆகல்லை, அதுக்குள்ள கை நீட்டியாச்சா? என்ன? கேக்க நாதியத்த பொண்ணுன்னு நினைச்சீங்களா? தாமரைக்கு ஒன்னுன்னா அப்பனையும், மகனையும் வகுந்திருவேன், ஜாக்கிரதை…!” கண்கள் சிவக்கத் தன் முன்னால் நின்ற கதிரை, ஆச்சரியமாகப் பார்த்தான் மித்ரன்

சாரி கதிர். உன்னோட கோபம் நியாயம் தான். இனிமேல் இப்பிடி நடக்காது. அவளை நான் எவ்வளவு நேசிக்குறேன்னுஉனக்குத் தெரியாது கதிர்.” மித்ரனின் தணிந்த பேச்சில், அனைத்தும் வடிய நாற்காலியில் தொப்பென்று அமர்ந்தான் கதிர். சண்டை போட்டால் எதிர்க்கலாம். சரணாகதி அடைபவனை என்ன செய்ய?

வீட்டுக்குப் போகலாம் சார். ரொம்பவே லேட்டாகுது.” ஏதேதோ பேசி, மித்ரனைக் காரில் ஏற்றினான் கதிர். வீடு வந்து சேரும் வரை புலம்பிய படியே வந்தான் மித்ரன்.

கதிர்நீயும் சீக்கிரமா கல்யாணம் பண்ணு.”

எதுக்கு? வர்றவளை கைநீட்டி அடிக்கவா?”

பாத்தியா…! இதானே வேணாங்கிறதுஅது ஒரு சுகம் கதிர்.”

எது? பொண்டாட்டியை அடிக்கிறதா?”

இல்லைடாகாலையில எந்திரிச்சாகையில காஃபியோட உன்னோட தங்கச்சி நிப்பா பாருஅப்பிடி விடிஞ்சாத்தான் அன்னைக்கு நாள் நல்லாப் போகுதுடா. எம் மனசைத் தொட்டு சொல்லுறேன் கதிர். பொண்ணை அருமையா வளத்திருக்கே. நான் அவளை ராணி மாதிரி பாத்துக்குவேன் கதிர்என்னோட கோபம் எல்லாம், எதுக்கு அந்த ஒன்னுக்குமத்தவன் கிட்ட இவ போய் கெஞ்சணுங்கிறதுதான். நான் அவளை இங்க வெச்சிருக்கேன் கதிர்இங்க வெச்சிருக்கேன்…” சொல்லிய படியே தன் நெஞ்சைத் தட்டிக் காட்டியவன், சீட்டில் சாய்ந்து கொண்டான்.

கதிருக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. உணர்வுகளுக்கு என்றும் மரியாதை கொடுக்காதவன் மித்ரன். அவனைத் தன் தங்கை இத்தனை தூரம் பாதிக்கிறாளா? என்று ஆச்சரியம் தான் தோன்றியது. காரை ஷெட்டில் நிறுத்தியவன், மித்ரனின் கதவைத் திறந்து விட்டான்

நீ கிளம்பு கதிர்.”

பரவாயில்லை வாங்க சார்.” கூடவே நடந்தவன், தாமரைக்கு கால் பண்ணினான்

கதவைத் திற.” அவன் மரியாதைக்குரிய பெரியவர்களும் அந்த வீட்டில் இருப்பதை கதிர் மறக்கவில்லை. கால் பண்ணிய மறு நொடி, கதவு திறந்தது. மித்ரன் எதுவும் பேசாமல் படி ஏறினான்.

உனக்கு அறிவு இல்லை? உன் இஷ்டத்துக்கு என்ன வேணும்னாலும் பண்ணுவியா? இப்போ என்ன…” தாமரையைக் கடிந்து கொண்டிருந்த கதிரை, இடைமறித்தது மித்ரனின் குரல்.

கதிர்…!” கர்ஜனையாக வந்தது அவன் குரல். அதற்கு மேல் மித்ரனும் எதுவும் பேசவில்லை, கதிரும் எதுவும் பேசவில்லை

என்னமோ பண்ணித் தொலைங்க.” தலையில் அடித்தபடியே இடத்தைக் காலி பண்ணினான்

மித்ரன் தாமதிக்காமல் சட்டென்று மாடிக்குப் போய்விட்டான். தாமரைக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கிச்சனுக்குள் போனவள், உணவைப் பிளேட்டில் பரிமாறிக் கொண்டு, அவன் ரூமிற்குள் போனாள். அவசரக் குளியல் ஒன்றைப் போட்டுவிட்டு, கட்டிலில் அவளுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தான்.

அத்தான்…”

எதுவும் பேசாம, உன்னோட ரூமுக்குப் போயிரு.” திரும்பியும் பார்க்காமல், படுத்தவாறே பதில் வந்தது.

அத்தான்காலையில இருந்து ஒன்னுமே சாப்பிடலைஎனக்கு ரொம்பவே பசிக்குது அத்தான்…” அவள் சொல்லவும், சட்டென்று எழுந்து உட்கார்ந்தான் மித்ரன்.

ஏய்…! நீ இன்னும் சாப்பிடலை?”

ம்ஹூம்…”

ஏன்டி என்னை இப்பிடிக் கொல்லுற?”

ஏன்…? நீங்களும் தான் ஒன்னும் சாப்பிடலை…” அவள் சொன்ன பிறகுதான், அவனுக்கும் அது ஞாபகம் வந்தது. பகல் முழுவதும் எதிலிருந்தோ தப்புவது போல் ஓடிக் கொண்டிருந்தவன், மாலை ஆனதும், ‘பப்ற்குப் போய்விட்டான். அவனும் உண்ணவில்லை.

அவளைத் தன் பக்கத்தில் உட்கார வைத்தவன், அவளையும் உண்ணச் செய்து, தானும் உண்டு முடித்தான். வயிறு நிறைந்ததோ இல்லையோ, மனது நிறைந்து போயிருந்தது.

அத்தான்நான் பண்ணினது தப்பா?”

கண்டிப்பாபெரிய தப்பு…” மித்ரனின் குரல் இறுகிப் போயிருந்தது.

உங்களுக்கு ஏதாவது ஆகிடுமோங்கிற பயத்துல…”

தாங்கணும் தாமரைஎனக்கு ஏதாவது ஆனாலும்…”

அத்தான்…!” அவன் வாய் மூடினாள் பெண். அவள் கையை விலக்கியவன்,

இந்த மித்ரன் யார்கிட்டயும், எதுக்கும் கெஞ்சினது கிடையாது. அந்த மித்ரனே கெஞ்சின ஒரே இடம்னாஅது நீதான் பேபி. நீ யார்கிட்டயும் கெஞ்சலாமா? மித்ரனோட வைஃப் எங்கிற நினைப்பு உன் மனசுல இருந்தா, இனிமே இந்தத் தப்பை நீ பண்ண மாட்டே.” சொல்லியபடியே அவள் கன்னத்தைத் தடவினான்.

ஸ்…” வலியில் சிணுங்கினாள் மனைவி. அவன் நான்கு விரல்களின் தடம், அவள் கன்னத்தில் சிவப்பாக இருந்தது. அவளை அருகிலிழுத்து, கன்னத்தைப் பார்த்தவன் திகைத்துப் போனான்.

ஏய்…! பேபிஎன்ன இது?”

காலையில ஒன்னு குடுத்தீங்களேஅன்ன்ன்பாஅது.” அவள் முகத்தில் சுணக்கம் இருந்தது. அவள் சொன்ன விதத்தில், வந்த சிரிப்பை அடக்கியவன்,

சாரி பேபிசாரி டா.” என்றான்.

பரவாயில்லைன்னு சொல்லமாட்டேன். ஆனா இன்னொரு தரம் இப்பிடி நடந்துச்சுன்னா…” பேச்சை நிறுத்தி விட்டு, அவனை ஓரக்கண்ணால் பார்த்தாள்.

ம்நடந்துச்சுன்னா…?” அவன் உடல் சிரிப்பில் குலுங்கியது.

மாறி அடிச்சுருவேன்…”

ஹாஹாசெய்வேடி நீஇந்த மித்ரனையே சுருட்டி, உன்னோட முந்தானையில வெச்சிருக்க இல்லை. நீ அதுவும் செய்வ.” சிரித்தபடியே, அவள் புடவை முந்தானையை இழுத்தான். அவன் கையைத் தட்டி விட்டவள்

சும்மா இருங்க அத்தான்.” என்றாள். அறையோடு ஆரம்பித்த நாள்அணைப்போடு முடிவடைந்தது.

 

error: Content is protected !!