MMM–EPI 17

122620776_740997409820929_9109553537495410146_n-303b5f6e

அத்தியாயம் 17

 

ஒரே ஒரு வாக்கியம் சந்தோஷம், துக்கம், ஆதங்கம், கோபம், நெகிழ்ச்சி எல்லாவற்றையும் ஒருங்கே கொடுக்கக் கூடுமா? ஐ எம் ப்ரேக்னண்ட் எனும் ஜீவாவின் வாய் மொழிந்த வார்த்தைகள் ஜோனாவை புரட்டிப் போட்டு வாயடைக்க வைத்திருந்தன. கண்கள் இரண்டும் பசைப் போட்டது போல அவள் வயிற்றைப் பார்த்து நிற்க, கண்களில் இரு சொட்டு நீர் வழிந்து அவன் மகிழ்ச்சியை உலகுக்கு பறைசாற்றியது. வாய் பாட்டுக்கு,

 

“மை பேபி இஸ் கேரியிங் மை பேபி” என முணுமுணுத்துக் கொண்டே இருந்தது.

தலையை ஒரு குலுக்கு குலுக்கி தன் சுயம் மீட்டவன், பட்டென எழுந்து நின்றான்.

ஜீவாவை நெருங்கியவன்,

“கிவ் அஸ் டென் மினிட்ஸ் ப்ளிஸ்” என்றான் மற்றவர்களைப் பார்த்து.

 

டாக்டர்களும் நர்ஸ்களும் வெளியேறி இருக்க, தனது ஜீவாவை வயிற்றோடு இறுக அணைத்துக் கொண்டான் ஜோனா.

 

“மூலான்! மை மூலான் இஸ் ப்ரேக்னண்ட்!!!!!! ஓ மை குட்னஸ்!!!! என்னால கண்டுப்பிடிக்கவே முடியலையே! என் பார்வை எப்பொழுதும் உன்னத்தானே தொடர்ந்துட்டே இருந்துச்சு! ஆனாலும் இத கண்டுப்பிடிக்க தெரியலையே எனக்கு! நானும் என் டாடி மாதிரியே யூஸ்லெஸ் டாடியோ!” என சந்தோஷமாய் ஆரம்பித்தவன் முடிக்கும் போது கலங்கித் தவிக்க ஆரம்பித்தான். எப்பொழுதும் ரிலேக்‌ஷாக இருக்கும் அவன் உடல் மொழியில் ஓர் இறுக்கம். அவளை அணைத்திருந்தவனின் உடல் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது. கைகள் அதன் பாட்டுக்கு குண்டடி பட்டிருந்த அவள் தோளை சுற்றி மெல்ல வருடியபடி இருந்தது. அவனையும் அறியாமல் கண்களில் இருந்து சுரந்த கண்ணீர் அவள் தலையில் தீர்த்தமாய் தெறித்து விழுந்தது.

 

இவளுக்கும் அழுகை வந்தது. அவன் கலக்கத்தையும் தவிப்பையும் பார்த்து குற்ற உணர்ச்சியில் குறுகிப் போய் நின்றாள் ஜீவா. ஜோனாவின் அருகே மட்டும் வெளிப்படும் பலவீனம் தலைத் தூக்க தேம்பியபடியே அவன் இடுப்பைக் கட்டிக் கொண்டாள் இவள்.

“சாரி ஜோனா, சாரி ஜோனா! உன் மேல எந்தத் தப்பும் இல்ல! நான் ஒல்லியா இருக்கேனா, அதோட பேபி பம்ப்பும் இன்னும் வரலியா அதான் உன்னால கண்டுப் பிடிக்க முடியல. எனக்கே போன மாசம் தான் இப்படின்னு தெரியும். இன்னுமே நானும், எனக்குள்ள உன்னோட உயிர் இருக்குன்ற விஷயத்தை தெரிஞ்சதுல இருந்து மனசுக்குள்ள தவிச்சுக்கிட்டேத்தான் இருக்கேன். பேபின்னு` தெரிஞ்சதும் எவ்ளோ சந்தோஷப்பட்டேனோ அந்த அளவுக்கு பயந்தும் கிடக்கறேன் நான். ஊரறிய கல்யாணம் ஆகாம வயித்துல பேபி இருக்குன்னு அப்பாக்கு தெரிஞ்சா என்ன செய்வாறோன்னு பயமா இருக்கு ஜோனா!” என தேம்பியபடி சொன்னவளின் தலையை வருடிக் கொடுத்தவனுக்கு குழந்தையை சுமப்பவளும் குழந்தையாகவே தான் தெரிந்தாள்.

“உன் மேல ரொம்ப கோவமா இருக்கேன் ஜீவா! ரொம்ப, ரொம்ப கோவமா இருக்கேன்! தெரிஞ்ச உடனே என் கிட்ட ஷேர் பண்ணாம மறைச்சதுக்கு அப்படியே உன்னை உதைக்கனும்னு வெறியே வருது! லேடிஸ அணைச்சுத்தான் பழக்கம் அடிச்சுப் பழக்கம் இல்லாததனால நீ தப்பிச்ச. உன் அப்பா, நம்ம பேபி, இதெல்லாத்தையும் விட இப்ப இந்த புல்லட்ட எடுத்து உன்னை சரியாக்கறதுதான் எனக்கு முக்கியம் மூலான்” என்றவனின் குரல் நம்ம பேபி எனும் போது கரகரத்து ஒலித்தது.

“எனக்கு இந்த பேபி வேணும் ஜோனா, நம்ப பேபி வேணும். அத ஹார்ம் பண்ணற மாதிரி எந்த ப்ராசிடரும் வேணாம்னு டாக்டர்ட்ட சொல்லு! மயக்க ஊசிப் போடாமலே குண்ட எடுக்க சொல்லு! நான் வலி தாங்கிப்பேன்!” என சொன்னவள் தன்னை பலவீனமாக்குபவனை தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தி, கண்களை அழுந்த துடைத்துக் கொண்டாள்.

 

மூலான் போய் பாடிகார்ட் ஜோனா ஃபோர்ம் ஆகி இருந்தாள்.

 

“டாக்டர் எது சொன்னாலும் நீ ஒத்துக்கனும் மூலான்! எனக்கு உன் நலம்தான் முக்கியம். நமக்கு வயசு இருக்கு, காலமும் இருக்கு! இன்னொரு பேபி” என ஆரம்பித்தவனை,

 

“ஸ்டாப் இட் ஜோனா!” என்றவள்,

 

“டாக்டர்!” என சத்தமிட்டு அழைத்தாள்.

 

உள்ளே வந்த டாக்டர் அவளிடம் மாதக்கணக்கைக் கேட்டு, வேறு பல டெஸ்ட் மற்றும் ஸ்கேன் எல்லாம் செய்து, குழந்தைக்கு ஆபத்து வராமல் சர்ஜரி செய்யலாம் என நம்பிக்கைத் தந்தார். ஜீவாவுக்கு செகண்ட் ட்ரீமெஸ்டர் ஆரம்பித்து இருந்ததால், ஆபரேஷன் செய்வதால் கர்ப்பம் கலைய வாய்ப்பில்லை எனவும், அனேஸ்டேசி கொடுக்கலாம், அதோடு ஓரளவு வீரியம் குறைந்த மாத்திரைகளை உட் கொள்ளலாம் எனவும் விளக்கினார். ஏற்கனவே சர்ஜரிக்கு ஆயத்தம் செய்திருக்க, இருவரையும் ஆபரேஷன் தியேட்டருக்கு கொண்டு செல்லப் பணித்தார் அவர்.

 

தாய்க்கும் சேய்க்கும் எந்த ஆபத்தும் வராது என தெரிந்த பின்புதான் நிம்மதியானான் ஜோனா. இவளுக்கு ஆபத்து என்றால் குழந்தை வேண்டாம் என சொல்லி விட்டாலும், மனம் கிடந்து துடித்துக் கொண்டிருந்தது அவனுக்கு. மூன்று குழந்தைகள் வேண்டும் என தீரனிடம் விளையாட்டாய் சொல்லவில்லை அவன். உணர்ந்து, உண்மையாய் தான் சொன்னான். தனக்குக் கிடைக்காத பாசத்தை தன் குழந்தைகளுக்கு அள்ளி அள்ளி கொடுக்க வேண்டும் எனும் ஒரு வெறியே இருந்தது அவனிடம்.

 

மயக்கம் அடைய அனேஸ்டேசியா செலுத்தப்பட, தான், ஜீவா, அவள் கையில் தங்கள் குழந்தை, இவன் காலடியில் ஒரு நாய் என கற்பனை உலகம் விரிய, புன்னகையோடு மயங்கிப் போனான் ஜோனா. ஜீவாவோ நடுவில் அவள் இருக்க, ஒரு பக்கம் அப்பா மறு பக்கம் ஜோனா என இருவரும் இரு கையைப் பிடித்து இழுக்க, மடியில் கத்திக் கதறும் குழந்தையை செய்வதறியாமல் இவள் பார்த்திருக்கும்படி கற்பனை பிம்பம் தோன்ற கலக்கத்துடனே மயங்கிப் போனாள்.  

 

வேறு வேறு ஆபரேஷன் தியேட்டர்களில் சர்ஜரி நடக்க, வெளியே கலங்கிய முகத்துடன் அமர்ந்திருந்தான் தீரன். போலிஸ் வந்து அவனது வாக்குமூலத்தை வாங்கிக் கொண்டு, இவர்கள் இருவரும் கண் விழித்ததும் மீண்டும் வருவதாய் சொல்லிப் போனார்கள்.

 

இருவருக்குமே சர்ஜரி முடித்துத் தனி தனி அறைக்கு மாற்றி இருந்தார்கள். ஜீவா இன்னும் மயக்கத்தில் இருக்க, இரண்டு மணி நேரத்திலேயே முழித்திருந்தான் ஜோனா. பக்கத்தில் நின்றிருந்த தீரனிடம்,

 

“தீர்! ஜீவா எப்படி இருக்கா? சர்ஜரி முடிஞ்சதா? நான் அவளப் பார்க்கனும்!” என எழ முயன்றான்.

 

துப்பாக்கித் தோட்டா, மேல் கையின் நரம்பையும், சதையையும் துளைத்திருக்க காயம் ஆறவே பல வாரம் ஆகுமேன சொல்லி இருந்தார் டாக்டர். கையை அறவே அசைக்கக் கூடாதென தொட்டில் கட்டி தொங்க விட்டிருந்தார்கள். இன்னொரு கையில் ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. மயக்க மருந்தின் வீரியம் இன்னும் இருக்க, எழுந்த உடனே தள்ளாடியவனைப் பிடித்து மீண்டும் கட்டிலில் அமர்த்தினான் தீரன்.

 

“பாஸ்! மேடம் இஸ் அவுட் ஆப் சர்ஜரி! இன்னும் கான்சியஸ் ஆகல. ஒரு பயமும் இல்ல! அவங்களும் பேபியும் நல்லா இருக்காங்கன்னு டாக்டர் சொன்னாங்க!” என்றவன்,

 

“என்ன பாஸ்! இந்தப் பூனையும் பால் குடிக்குமான்ற மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு, என் தங்காச்சிய பேபிக்கு பால் கொடுக்க ரெடி பண்ணி வச்சிருக்கீங்க! கில்லாடி பாஸ் நீங்க” என கலாய்த்தான் தீரன்.

 

அவன் கேலியில் முகத்தில் வெட்கப் பூக்கள் பூத்தது ஜோனாவுக்கு.

 

“நான் அவள பார்க்கனும் தீரா! ப்ளிஸ் ஹெல்ப் பண்ணு. எதாச்சும் செஞ்சு அவள என் கூடவே தங்க வை தீர்! இனிமேலும் ஜீவாவ தனியா விட முடியாது என்னால! புரிஞ்சுக்க ப்ளிஸ்” என மன்றாடியவனை ஒரு பெருமூச்சுடன் பார்த்த தீரன்,

 

“இங்கயே படுத்திருங்க பாஸ்! என்னால முடிஞ்சத செய்யறேன்” என அறையை விட்டு வெளியேறினான்.

 

அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்த விஐபி அறையிலேயே இன்னொரு கட்டில் குடி வந்தது. கட்டிலோடு சேர்த்து மயக்கத்தில் இருந்த ஜீவாவும். அவளை உள்ளே கொண்டு வந்ததும், வேகமாக கட்டிலில் இருந்து இறங்க முயன்றவனை எட்டிப் பிடித்துக் கொண்டான் தீரன்.

 

“இருங்க பாஸ்! நீங்க எதாச்சும் இழுந்து விட்டுக்காதீங்க” என்றவன், வீல் சேரில் அவனை அமர வைத்து, அதில் ட்ரிப்ஸை மாட்டி மெல்ல ஜீவாவின் அருகே தள்ளிக் கொண்டுப் போனான். அவள் முகத்தின் அருகே வீல் சேரை நிறுத்தியவன்,

 

“மறுபடி நானே வந்து கட்டிலுக்கு நகர்த்திட்டுப் போறேன் உங்கள! அதுக்குள்ள எந்த ஸ்டண்டும் செய்யாம கவனமா இருக்கனும்” என மிரட்டி விட்டே ரூமில் இருந்து வெளியேறினான்.

கை வலி உயிர் போனது ஜோனாவுக்கு! ஆனாலும் மனதில் இருந்த ஆனந்தம் அவனை படுத்திருக்க விடவில்லை. மயக்கத்தில் இருக்கும் தன்னவளின் முகத்தையே கண்ணெடுக்காமல் பார்த்திருந்தான் ஜோனா. நன்றாக இருந்த கையை நீட்டி, அவள் கன்னத்தையும் நெற்றியையும் வருடிக் கொடுத்தான்.

 

“ஐ லவ் யூ மூலான்!” மெல்லிய குரலில் சொன்னவன், தலையைத் திருப்பி அவள் மணிவயிற்றைப் பார்த்தான். பச்சை வர்ண ஹாஸ்பிட்டல் கவுன் அவளை முழுதாய் மூடி இருந்தது. அவளைத் தடவி அவள் நலம் அறிந்துக் கொண்டது போல, அவள் வயிற்றையும் தடவி தங்கள் வாரிசின் நலம் அறிய கை காலேல்லாம் பரபரத்தது அவனுக்கு. ஒரு கை தொட்டிலில் இருக்க, மறு கையில் ட்ரிப்ஸின் ஊசி ஏற்றப் பட்டிருந்தது. அந்த ஊசிக் கையோடே தன்னவளை தொட்டுத் தடவியவனுக்கு இன்னும் கொஞ்சம் நகர்ந்து அவள் வயிற்றின் அருகே போக விருப்பம் வந்தது. வண்டியை ஒற்றைக் கையால் தள்ள முடியவில்லை அவனால்.

 

“ம்ப்ச்” என சலித்துக் கொண்டவன்,

 

“பேபி! தோ டாடி வரேன்மா” என மெல்லிய குரலில் முணுமுணுத்தவன் இரண்டு காலாலேயெ வீல் சேரை உந்தி தள்ள முயன்றான். சர்கஸ் முயற்சி செய்து கொஞ்சமாய் நகர்ந்து அவளின் வயிற்றுப் பகுதிக்கு வந்திருந்தான் ஜோனா.

 

கைகள் மெல்ல நடுங்க, கவுனின் மேலேயே தனது ட்ரீப்ஸ் ஏறும் கரத்தை வைத்தவனுக்கு கண்கள் கலங்கிப் போனது. அவனால் எதையும் உணர முடியவில்லை என்றாலும், அழுத்தினால் எங்கே குழந்தைக்கு வலித்து விடுமோ எனும் பயத்தில் மென்மையாய் ஜீவாவின் வயிற்றைத் தடவிக் கொடுத்தான்.    

 

அந்த நேரம் உள்ளே வந்த நர்ஸ்,

 

“சார் உங்க கட்டில்ல படுத்து ரெஸ்ட் எடுங்க” என அவனுக்கு உதவ வர,

 

“இல்ல, பரவாயில்ல! ஐம் ஓகே” என கட்டிலுக்கு போக மறுத்தான் இவன். அப்படியே அமர்ந்த வாக்கிலேயே அவனை செக் செய்தவர், ஜீவாவையும் செக் செய்தார்.

 

“இன்னும் கொஞ்ச நேரத்துல கண் முழிச்சிடுவாங்க” என சொல்லி வெளியேறினார் அவர்.

 

அவர் போனதும் மீண்டும் தனது சம்பாஷனையைத் தொடர்ந்தான் ஜோனா.

“பேபி, செகண்ட் ட்ரிமெஸ்டர்னு டாக்டர்ட்ட உன் அம்மா சொன்னாலே, அப்படின்னா மூனு மாசத்துக்கு மேல ஆகிருக்குமா உங்க வயசு? உங்களுக்கு கண், காது, மூக்கு எல்லாம் வந்துருக்குமா? ஸ்கூல்ல இந்தப் பாடத்தப்போ உன் டாடி கிளாஸ் கட் அடிச்சிட்டு ஊர் சுத்தப் போயிட்டேன்டா. இப்போ நினைச்சா ரொம்ப வருத்தமா இருக்கு! போன் கையில இருந்தாலாச்சும் கூகள் செஞ்சுப் பார்த்துருப்பேன்! நான் சொல்லறது எதாச்சும் கேக்குதாடா?” என அவள் வயிற்றின் அருகே இன்னும் முன்னே குனிந்துப் பேசினான் ஜோனா.

கிட்டே நெருங்கிப் பேசினால் மட்டும் அவன் குழந்தை குரல் கொடுத்துவிடுமா? முதல் முறை அன்னை தந்தையாகும் எல்லோரும் செய்யும் அழகு அசட்டுத்தனங்களை இவனும் செய்தான்.

“அம்மாவுக்கு உடம்பு சரியானதும், உங்களையும், உங்கள வயித்துல வச்சிருக்கற அம்மாவையும் என் கூடவே வச்சிப்பேன்! தினம் நைட் உங்களுக்கு டாடி லல்லபாய் பாடி தூங்க வைப்பேன். இப்போ சாம்பிளுக்கு ஒன்னு கேக்கறீங்களா?” என கேட்டவன்,

 

“டிவிங்கிள் டிவிங்கிள்

லிட்டில் ஸ்டார்” என இவன் பாட

“ஜோனா இஸ் எ ஷைனிங் ஸ்டார்” என கரகரப்பான குரல் அதை முடித்து வைத்தது.

 

படக்கென தலையைத் திருப்பி ஜீவாவைப் பார்த்தான் ஜோனா.

 

“ஃபைனலி யூ ஆர் அவேக்! வலிக்குதா மூலான்?” என கேட்டவன் அவள் அருகே மீண்டும் நகர முயன்றான்.

 

“ஹே, இரு! ட்ரிப்ஸ் கைல தள்ளாதே ஜோனா” என்றவள் மெல்ல எழுந்து அவனுக்கு உதவ வர முயன்றாள்.

“ஒழுங்கா மறுபடி நீ கட்டில்ல படுக்கல, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது ஜீவா!” என்றவன்,

 

“தீரா!” என சத்தம் போட்டான்.

 

அவன் அடித்துப் பிடித்துக் கொண்டு உள்ளே ஓடி வந்தான். அவனோடு ரவுண்ட்சுக்கு டாக்டரும் உள்ளே வந்தார்.    

 

ஜீவாவின் உடல் நிலையைப் பற்றி எல்லாம் விசாரித்து அறிந்துக் கொண்டான் ஜோனா. தோட்டா அவள் ஒரு பக்க தோளின் மேல் சதையை மட்டுமே துளைத்திருந்தது. அதனால் அவளுக்கு பாதிப்புக் குறைவுதான் என சொன்னவர், தங்கள் ஹாஸ்பிட்டலின் சிறந்த கைனியிடம் அவளை ஒப்படைப்பதாக சொன்னார். கைனியிடம் கர்ப்பம் சம்பந்தப்பட்ட விவரங்களை கேட்டு தெளிவுப்படுத்தி அதன் படி நடக்க சொல்லி அறிவுறுத்தி விட்டுப் போனார் டாக்டர்.

 

அவர் போனதும்,

“சும்மா பார்த்துட்டு நிக்காதே தீரா! ஜோனாவ படுக்க வை! ஹீ லுக்ஸ் டயர்ட்! கொஞ்ச நேரம் தூங்கட்டும்” என தீரனை கடிந்துக் கொண்டாள் ஜீவா.

 

“எல்லாம் என் நேரம்! ரெண்டும் என்னையே ஆட்டி வைக்குதுங்க” என புலம்பியவன், ஜோனா மறுக்க மறுக்க அவனை வற்புறுத்தி படுக்க வைத்தான்.

 

“என்ன சாப்பாடு குடுக்கலாம்னு கேட்டு, நர்ஸ வர வச்சு அவள சாப்பிட வைடா” என்றவனுக்கு அவனையும் மீறி கண்கள் மூடிக் கொண்டது.

 

“நான் பார்த்துக்கறேன் பாஸ்! நீங்க தூங்குங்க”

 

ஜோனா கண்ணசந்ததும்,

 

“என் போன் எங்க தீரா? யாரோட சதி இந்த ஷூட் அவுட்னு கண்டுப் பிடிக்கனும்! இன்பார்மேஷன் கிடைக்க சில கால்ஸ் செய்யனும். போனைத் தேடி குடு” என கேட்டாள் ஜீவா.

 

“லேட்டர்…ரெஸ்ட் ஃபர்ஸ்ட்” என தூக்கத்திலும் இவர்கள் பேசுவதைக் கேட்டு குளறலாக கட்டளையிட்டான் ஜோனா.

 

கையில் கட்டுடன் பாவமாய் தூங்கிக் கொண்டிருப்பவனைப் பார்க்க பார்க்க இவளுள் கோபம் பொங்கியது.

 

“போனைக் குடு தீரா! என் ஜோனாவை இப்படி படுக்க வச்சவங்கள நான் சும்மா விட மாட்டேன்! கொஞ்சம் அசந்திருந்தா அவன் உயிர் போயிருக்கும்!” என்றவளுக்கு உடல் ஒரு முறைத் தூக்கிப் போட்டது.

 

“கால்ம் டவுன் ஜீவா மேடம்! ஷூட் பண்ண ஒருத்தன் உங்க உபாயத்துனால ஸ்பாட் அவுட். இன்னொருத்தன கஸ்டடியில வச்சிருக்காங்க. டிபார்ட்மேண்ட் உள்ள என் ஆள் ஒருத்தி இருக்கா. அங்க என்ன நடந்தாலும் நமக்கு உடனுக்குடன் நியூஸ் வந்துடும். சோ நோ வோரிஸ்! நீங்க ரெஸ்ட் எடுங்க சிஸ்டரு. நான் சாப்பிட எதாச்சும் அரேஞ் பண்ணறேன்” என வெளியேறினான் தீரன்.

 

அவன் வெளியேறியதும், மெல்ல கட்டிலில் இருந்து இறங்கினாள் ஜீவா. தள்ளாடிய உடலை ஒரு நிலைப்படுத்தி, ஜோனாவின் கட்டில் அருகே போனாள். அதில் ஏறி அவன் அருகே அமர்ந்துக் கொண்டவள், தொட்டிலில் தொங்கிய கையை மென்மையாக தடவிக் கொடுத்தாள்.

 

“உனக்கு யாருடா எதிரி? என் ஸ்வீட் ஜோனாவுக்கு யாருடா எதிரியா இருக்க முடியும்? அதுவும் உன்னைக் கொல்லற வெறியோட சுத்தறவன் யாரு? யாரா இருந்தாலும் என்னைத் தாண்டித்தான் உன்னை நெருங்க முடியும் ஜோனா”

 

அவனிடம் இருந்து மெலிதாய் ஹ்ம்ம் எனும் பதில் மட்டும் வந்தது. மெல்ல நெருங்கி அவன் இதழில் பட்டும் படாமல் ஒரு முத்தம் வைத்தாள் ஜீவா!

 

“என் ஜோனா இன்னும் உயிரோடத்தான் இருக்கான்னு எனக்கு ஒரு கன்பர்மேஷன் வேணும்னு தான் கிஸ் பண்ணேன்! வேற ஒன்னும் இல்ல, ஓகேவா?”

 

அவன் இதழ்களில் மெல்லிய புன்னகை நெளிந்தது.   

 

நர்ஸ் உணவோடு வர, அவளே சாப்பிட்டுக் கொள்வதாக சொல்லியதால் உயரமான மேசையை அவள் அருகே செட் செய்து கஞ்சி பவுலையும் கரண்டியையும் கையில் கொடுத்து விட்டுப் போனார். எதாவது தேவை என்றால் பஸ்ஸரை அழுத்த சொல்லி விட்டுத் தான் போனார் அவர்.

 

“குட்டி ஜோனாவுக்கு பசிக்குதா?” என கேட்டவாறே மெல்ல சாப்பிட ஆரம்பித்தாள் ஜீவா.

 

ஒரு மணி நேரத்திற்குள்ளேயே ஜோனாவுக்கு உறக்கம் கலைவது போல இருக்க, இறங்கி அவள் கட்டிலில் வந்துப் படுத்துக் கொண்டாள் ஜீவா. அவன் கண்ணைத் திறந்துப் பார்க்க, இவள் கண்ணைத் தூங்குவது போல மூடிக் கொண்டாள்.

 

அந்த நேரம் தான் கதவு படாரென திறந்தது. இருவர் விழிகளும் உள்ளே வந்தவரை நோக்கியது. ஜீவா பதட்டமாக,

 

“டாடி” என உச்சரித்தாள்.

 

“ஹௌ டேர் யூ!” என கையைத் தூக்கிக் கொண்டு ஜீவாவை அறைவதற்கு நெருங்கியவரை, வேகமாய் எழுந்து வந்து தன் ஒற்றைக் கையால் தடுத்திருந்தான் ஜோனா.

 

“டோண்ட் யூ டேர் டு டச் ஹேர்!”

 

“அவ என் மகடா!” என ரௌத்திரமானவர் கண்களாலேயே அவளை எரித்தார்.

 

தந்தைக்குத் தான் கர்ப்பமான விஷயம் தெரிந்திருக்கிறது என புரிந்துப் போனது ஜீவாவுக்கு.

 

“டாடி!’’ என ஈன ஸ்வரத்தில் அழைத்தவள் கண்கள் பொங்கப் பார்த்தது. அழுதால் இன்னும் ஆத்திரமாவார் என முயன்று அழுகையை அடக்கினாள் ஜீவா.

 

ஜோனாவை ஒரே தள்ளில் தள்ளி விட்டவர், மகளை நெருங்கினார்.

 

“உனக்கு சுதந்திரம் கொடுத்து வளர்த்தது இப்படி வந்து நிக்கத்தானா ஜீவா? இவன் மேல க்ரேஷா இருக்கியே, அதெல்லாம் ஒரு ப்பேஸ்தான், சீக்கிரம் அதில இருந்து வெளி வந்திடுவன்னு நெனைச்சேன். இப்படி அவனோட குழந்தைய சுமந்துட்டு நிப்பன்னு நான் கனவுல கூட நெனைச்சுப் பார்க்கல! யூ இடியட்!” என அவளைப் பிடித்து உலுக்க வந்தவரை தன் பலம் கொண்ட மட்டும் பிடித்துத் தள்ளினான் ஜோனா.

 

தடுமாறி கீழே விழுந்துக் கிடந்த தன் தந்தையை அதிர்ச்சியாகப் பார்த்தாள் ஜீவா. பயத்தில் நடுங்கிக் கொண்டிருந்தவளை கட்டிக் கொண்டான் ஜோனா.

 

“ஒன்னும் இல்ல பேபி! ஒன்னும் இல்ல! நான் இருக்கற வரைக்கும் யாரும் உன்னை ஹர்ட் பண்ண முடியாது! அதுக்கு நான் விட மாட்டேன்” என்றனின் பிடியில் இருந்து திமிறினாள் ஜீவா.

 

“விடு, விடு என்னை! இது எல்லாத்துக்குமே நீ தான் காரணம் ஜோனா! சாகப் போனவள அப்படியே விட்டிருந்தனா, இந்நேரம் நான் செத்த இடத்துல பெரிய மரமே முளைச்சிருக்கும். ஏன் என்னைக் காப்பாத்துன? ஏன், ஏன்? ஐ ஹேட் யூ ஜோனா! ஹேட் யூ சோ மச்” என கதறியவளை அதிர்ச்சியாகப் பார்த்தான் ஜோனா.

 

“நான் காப்பாத்துனனா? எங்கே, எப்போ?”

 

(மயங்குவாள்…)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி டியர்ஸ். பேய் நடமாடற டைம்ல எபி போடற மாதிரி தான் அமைஞ்சிடுது எனக்கு. இங்க இப்போ மணி காலை 1.50.. முடிஞ்ச அளவுக்கு ஸ்பெல்லிங் பார்த்திருக்கேன். அடுத்த எபியில் மீண்டும் சந்திக்கலாம். அண்ட்டில் தென், லவ் யூ ஆல்)