MMM–EPI 22

122620776_740997409820929_9109553537495410146_n-5a5416a5

அத்தியாயம் 22

 

அந்த போலிஸ் ஸ்டேஷனில் கொடுக்கப்பட்டிருந்த தனியறையில் அமர்ந்திருந்தான் ஜோனா. அவனோடு அவனுக்குப் பாதுகாப்பாய் அவன் மனைவி ஜீவா.

 

“எனக்கு நீ செய்யறது கொஞ்சம் கூட பிடிக்கல ஜோனா” என்றவள் முகத்தை ஏழு முழம் தூக்கி வைத்திருந்தாள்.

 

அவள் கைப்பற்றி அதை தன் உதட்டில் வைத்து முத்தமிட்டவன்,

 

“ப்ளிஸ்டாம்மா, மறுபடி எனக்குப் புடிக்கல எனக்குப் புடிக்கலன்னு ஆரம்பிக்காதே! உன்னை விட என் மனசைப் புரிஞ்சவங்க யாருமில்ல! அந்த துப்பாக்கி சூட்டுக்கு காரணமானவங்க யார்னு தெரிஞ்சதுல இருந்து, என்னமோ மனசே சரியில்ல மூலான்! அந்த சூர்யா வந்து பேசற முன்னாடியே கண்டிப்பா இங்க வந்துப் பார்க்கனும்னு நெனைச்சி வச்சிருந்தேன்” என்றான்.

 

“அவனுங்க உனக்கு ஹால்ப் ப்ரதர்ஸா இருக்கலாம்! ரத்த சம்பந்தம் இருக்கறதுனால உன்னை ரத்தம் சிந்த வைப்பானுங்களா? அந்த குண்டு உன் நெஞ்சைத் துளைச்சிருந்தா, இப்படி உசுரோட உக்காந்து அவனுங்களுக்கு பாவம் பார்த்துட்டு இருப்பியா?” என்றவளுக்கு கண்கள் இரண்டும் கலங்கியது.

 

இத்தனை நாட்களாய் தகப்பனுக்கு பயந்து டேம் கட்டி சேகரித்து வைத்திருந்த கண்ணீரை எல்லாம், இப்பொழுது அடிக்கடி திறந்து விடுகிறாள் ஜீவா! ப்ரேக்னசி டைமில் இதெல்லாம் சகஜம்தான் என அவளது கைனி சொல்லி இருந்ததால், ஜோனா முடிந்த அளவு அவளை அப்செட் ஆகாமல் பார்த்துக் கொண்டான். இங்கே வருவதைக் கூட ரகசியமாகத்தான் வைத்திருந்தான். அவள் தூங்கும் போது ஜோனா கிளம்பி வர, இங்கே வந்து பார்த்தால் அவனுக்கு முன்னே வந்து நின்றிருந்தாள்.

  

அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருக்கும் போது, கதவு திறக்கப்பட்டது. கையில் விலங்குடன் ஒருவனை அழைத்துக் கொண்டு வந்தார் போலிஸ் அதிகாரி.

 

“சார், உங்க மாமனார் பெரிய இடத்துல பேசி ரெக்வேஸ்ட் பண்ணதனால பார்க்க விடறோம்! பத்து நிமிஷம்தான் டைம், சீக்கிரம் பேச வேண்டியத பேசிடுங்க” என சொல்லி விட்டு சென்றார்.

 

உள்ளே வந்தவனின் அருகில் போய், ஆயுதம் எதாவது இருக்கிறதா என தன் திருப்திக்காக செக் செய்த ஜீவா, அவனை முறைத்தப்படியே நாற்காலியைக் காட்டினாள் உட்கார சொல்லி.

 

உள்ளே வந்ததில் இருந்தே அவன் பார்வை முழுக்க ஜோனாவின் மேல் தான் இருந்தது. நாற்காலியில் அலட்சியமாக அமர்ந்தவன்,

 

“வாடா, எங்கப்பன் பெத்த மவனே!” என திமிராக அழைத்தான்.

 

“டேய், மரியாதையா பேசு! ஒன்னு விட்டேன், செவுனி திரும்பிடும்” என பொங்கினாள் ஜீவா.

 

“நீ யார்டி எனக்கு மரியாதையப் பத்தி கிளாஸ் எடுக்க?”

 

“அவங்க உன் அண்ணி! எனக்கு மரியாதை தரலனாலும் போகுது, அவங்களுக்கு கண்டிப்பா தரனும்!” என அவன் கண்களை ஆழ்ந்து பார்த்தப்படி சொன்னான் ஜோனா.  

 

இருவருக்கும் சில பல மாதங்களே வயது வித்தியாசம் இருக்கும். சூசன் இவனைப் பிரசவித்தப் போது சூர்யா கர்ப்பமாய் இருந்தார்.

 

“நீ ஏன் ஜோனா இந்தப் பன்னிக்கிட்ட போய் என்னை அண்ணின்னு கூப்பட சொல்லற!” என அதற்கும் பொங்கினாள் ஜீவா.

 

“ஹே பார்த்து பேசு! பன்னி கின்னின்னு சொன்ன, பேசன வாய கிழிச்சிடுவேன்” என்றவனின் வாயோரம் ரத்தம் ஒழுகியது.

 

அவனை பளாரென அறைந்திருந்தாள் ஜீவா!

 

“பத்து மாசம் கஸ்டப்பட்டு பெத்த உசுரு உனக்கெல்லாம் மசுரா போச்சுல்ல! சர்வ சாதரணமா தோசை சுடற மாதிரி ஆள சுட சொல்லிருக்க! ஜோனாவாலத்தான் பேசாம இருக்கேன்! இல்லைனா உள்ளுக்கே ஆள் வச்சிப் போட்டுத் தள்ளிருப்பேன் உன்னை! பரதேசி” என ஆங்காரமாய் கத்தினாள் இவள்.

 

அவள் அறைந்த அறையில் அரண்டுப் போய் பார்த்திருந்தான் அவன். இந்த குட்டி உடம்பில் இவ்வளவு சக்தியா என அதிர்ந்துப் போனான். ஜோனாவோ அவளை, ஒற்றைக் கையால் இழுத்து வந்து தன்னருகே அமர்த்தி,

 

“மூலான், கூல் டவுன்! இந்த மாதிரி நேரத்துல உனக்கு ஸ்ட்ரேஸ் வேணாம்னு தான் உன் அப்பாவ வச்சி இந்த சந்திப்ப ஏற்பாடு செஞ்சேன். என்னை ட்ரேக் பண்ணி வந்துட்டு, இப்படி உணர்ச்சிவசப் படறது சரியா சொல்லு? நம்ம பேபிய பத்தி நெனைச்சுப் பார்த்தியா நீ?” என மெல்லிய குரலில் கேட்டான்.

 

பேபி மந்திரம் வேலை செய்ய, மெலிதாக தெரிய ஆரம்பித்திருந்த வயிற்றைத் தடவியபடி அமைதியாக அமர்ந்தாள் ஜீவா. ஆனால் பார்வை மட்டும் முன்னே அமர்ந்திருந்தவனை கோபமாக வெறித்தது.

 

“உனக்கு நான் என்ன தீங்கு செஞ்சேன்னு என்னைக் கொல்ல திட்டம் போட்ட?”

 

“என் அப்பாவின் அன்பை எல்லாம் அபகரிச்சுக்கிட்டியே அது குற்றமில்லையா? விவரம் தெரிஞ்சதுல இருந்து என்னை பாசமா பார்க்க மாட்டாரா, ஆசையா ரெண்டு வார்த்தைப் பேச மாட்டாரா, என் கூட டைம் ஸ்பேண்ட் பண்ணமாட்டாரான்னு ஏங்கி ஏங்கி நான் தவிச்சதுக்கு யார் காரணம்? நீ!!!!” என கத்தினான் அவன்.

 

அவனது குற்றச்சாட்டில் ஜோனாவுக்கு அதிர்ச்சியாகிப் போனது! அதிர்ச்சியில் இருந்து மீண்டவனுக்கு சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. கண்களில் நீர் வர சிரித்தான், பொங்கி பொங்கி சிரித்தான். தம்பிக்காரன் அவன் சிரிப்பை ஆத்திரமாகப் பார்த்திருக்க, ஜீவாவோ மனம் வலிக்கப் பார்த்திருந்தாள்.

 

“சிரிடா நல்லா சிரி! உன்னைப் பார்த்து கொஞ்ச எத்தனை தடவ வெளியூர் வந்திருக்காரு! வருஷத்துல முக்கால்வாசி நாள் உன் கூடத்தான். நானும் என் தம்பியும் அப்பான்னு ஒருத்தர் இருந்தும் அவர் நிழல் கூட படாமத்தான் வளர்ந்தோம்! வெளிநாட்டுல கொஞ்சனது பத்தலன்னு, இப்போ இங்கயே கூட்டி வந்துட்டாரு உன்னை. உனக்காகப் பார்த்து பாத்து மாளிகைய அழகு படுத்தனது என்ன, புது கார் வாங்கிப் போட்டது என்ன, படத்துல ஹீரோவாக்க ப்ளான் போட்டது என்ன, அப்படியே உருகறாரு உன் மேல! இங்க நாங்கத்தான் என்னமோ வைப்பாட்டிக்குப் பொறந்த பிள்ளைங்க மாதிரி தீண்டத் தகாதவங்களா ஆகிட்டோம்” என தன் ஆதங்கத்தை எல்லாம் கோபமாக அவிழ்த்து விட்டான் அவன்.

 

அன்று ஜெய்க்குமாரின் லீகல் மனைவி சூர்யா வந்து கண்ணீர் விட்டு கதறியதை நினைத்துப் பார்த்தான் ஜோனா.

 

“பொறந்தப்ப கூட தொட்டுத் தூக்கல பிள்ளைங்கல! அவரை வெறுத்திடக் கூடாதுன்னு அப்பாவுக்கு இந்த வேலை இருக்கு, அந்த வேலை இருக்கு, இத வாங்கித் தந்தாரு, அதை வாங்கித் தந்தாருன்னு சொல்லியே வளத்திட்டேன்! எல்லாம் ஒரு காலகட்டம் வரைக்கும் தானே நாம சொல்லறத நம்புவாங்க. இவரு உங்கம்மாட்ட பேசிட்டு இருந்தத ஒரு தடவைக் கேட்டுட்டான் பெரியவன். அவருக்கு வெளி நாட்டுல இன்னொரு பையன் இருக்கான்றதும் அவங்க பேசனதுல தெரிஞ்சிடுச்சி இவனுக்கு! அப்போ பதினைஞ்சு பதினாறு வயசு இருக்கும். என் கிட்ட வந்து இதெல்லாம் உண்மையான்னு கேட்டு அழுதான். என்னதான் புருஷன் நம்ம கிட்ட மறைச்சு இந்த கேடு கெட்ட வேலைலாம் பார்த்தாலும், பொண்டாட்டிக்குத் தெரியாம போகுமா? நானும் ஆமான்னு ஒத்துக்கிட்டேன்! அப்போல இருந்து ரொம்ப அமைதியாகிட்டான்! அவன் தம்பிய எப்பொழுதும் வம்பிழுத்து அழ வச்சிட்டு இருந்தவன், டோட்டலா மாறிட்டான். அப்பா ஸ்தானத்துல இருந்து பாசமா பார்க்க ஆரம்பிச்சிட்டான். எல்லாம் சரியாகிருச்சுனு நெனைச்சேன்! ஆனா இப்படி வெடிச்சி வரும்னு நெனைக்கல தம்பி. என்னதான் இருந்தாலும் அவங்க ரெண்டு பேரும் உனக்கு தம்பிங்க! தயவு செஞ்சு அவங்கள தண்டிச்சிடாதே” என அழுதவரை தேற்றி அனுப்பி வைத்தான் ஜோனா.

 

“ஜீவாம்மா! கொஞ்ச நேரம் காதைப் பொத்திக்கிட்டு அந்த மூலைல போய் உட்காரேன்!” என்றான் ஜோனா.

 

மறுபேச்சு பேசாமல் காதை இரு கரம் கொண்டு பொத்திக் கொண்டவள் ரூமின் மூலைக்குப் போய் அமர்ந்துக் கொண்டாள். ஆனால் பார்வை மட்டும் ஜோனாவை விட்டு அகலவில்லை. தம்பியாகப்பட்டவன் ஜோனாவைத் தாக்க முனைவானோ என அலர்ட்டாகவே அமர்ந்திருந்தாள்.

 

“நீயும் அடால்ட், நானும் அடால்ட்! கொஞ்சம் ஓப்பனா பேசலாமா?” என கேட்க அவன் முறைத்தப்படியே பார்த்திருந்தான்.

 

“மிஸ்டர் ஜெய்க்குமார் என்னைக் கொஞ்ச வெளிநாட்டுக்கு வந்தாருன்னு நீ சொன்னதுல பாதி ரைட்டு பாதி தப்பு! என்னைன்னு சொன்னது தப்பு! கொஞ்சன்னு சொன்னது ரைட்டு! என்ன, புரியலையா ப்ரோ? உங்கப்பா பாதி நாள் வெளிநாட்டுல இருந்தது என்னைப் பார்க்க இல்ல, இளசு இளசா பல தினுச பார்க்க! பிள்ளைங்கலாம் அவருக்கு ஒரு மேட்டரே இல்ல, பிள்ளை வரதுக்கு பண்ணற மேட்டர்தான் அவருக்கு பெரிய மேட்டர்! க்ரீனா சொல்லனும்னா அந்தாளு டாடி மெட்டிரியல் இல்ல, கட்டிலுக்கு வாடி மெட்டிரியல்! இந்த விஷயத்த என்னோட பதினாறு வயசுல மண்டையில ஆணியடிச்ச மாதிரி புரிய வச்சிட்டாரு அவரு! நான் அவர விட்டு ஒதுங்கி பல வருஷம் ஆகுது! படம் நடிக்க கேட்டு டார்ச்சர் பண்ணறாரே, நேருல போய் ஃபோர் வோர்ட்ஸ் நல்லா கேக்கலாம்னு தான் வந்தேன்! கேட்டுட்டேன்! இப்போ என் பாதைய பார்த்துட்டுப் போய்ட்டே இருக்கேன் நான்! உங்க சங்காத்தமே எனக்கு வேணா! இனி என் வழியில வராதே ப்ரோ! நான் சும்மா இருந்தாலும் உங்கண்ணி வச்சி செஞ்சிடுவா!” என்றவன் தனது கைக்குட்டையால் அவன் வாயில் வழிந்த ரத்தத்தைத் துடைத்து விட்டான்.

 

ஜோனாவையே வெறிக்கப் பார்த்திருந்தான் அவன் தம்பி.

 

“நான் சொன்னத நீ நம்பனாலும் கவலையில்ல, நம்பலைனாலும் கவலை இல்ல! இத்தனை வருஷத்துல நீயே உங்கப்பா கேரக்டர பத்தி அரசல் புரசலா கேள்விப்பட்டிருப்ப! சோ ஐ டோண்ட் வாண்ட் டு வேஸ்ட் மை டைம் பை ப்ரூவிங் மைசெல்ப். கொலை பண்ணற அளவுக்கு கோபம் இருக்கறவன், என்னை ஏன் கொல்லனும்? பாசத்த குடுக்காத உங்கப்பன கொன்னிருந்தா அதுல ஒரு நியாயம் இருக்கு! உங்கப்பன மாதிரி இல்லாம, என் குடும்பம், என் மனைவி, என் குழந்தைன்னு ஆசை ஆசையா வாழ நினைக்கற என்னைக் கொல்லப் பாத்தியே, தப்புத்தானே ப்ரோ? அந்தத் தப்புக்கு தண்டனை கிடைச்சித்தானே ஆகனும்?”

 

“எந்த தண்டனைனாலும் நான் ஏத்துக்குவேன். என் தம்பிய விட்டிட சொல்லு! அவன் மேல எந்தத் தப்பும் இல்ல!” என்றவனின் அலட்சிய பாவம் மாறி பரிதவிப்பு வந்திருந்தது.

அவனை ஆழ்ந்துப் பார்த்தவன்,

 

“வரேன் ப்ரோ!” என கிளம்பி விட்டான்.

 

ஜோனாவோடு கதவு வரை போன ஜீவா, மீண்டும் திரும்பி வந்து தம்பிக்காரனின் இன்னொரு கன்னத்தில் அறைந்தாள்.

 

“என் ஜோனாவ கொல்லப் பார்த்தல்ல! அவனுக்கு மட்டும் எதாச்சும் ஆகிருந்தது உன் குடும்பத்தையே டார்ச்சர் பண்ணி கைலாசத்துக்கு அனுப்பிருப்பேன்! உங்கப்பன் மேல வச்சப் கேடு கெட்ட பாசத்துக்காக நீ கொலை முயற்சில உள்ள கிடக்க. ஆனா அந்தாள் இப்போ எங்க இருக்கான் தெரியுமா? போரா போரா தீவுல, புதுபட நாயகியோட காரசாரமான விவாதத்துல இருக்கான். என் ஜோனாவ பொறந்ததில இருந்து பாசத்துக்கு ஏங்க வைச்சு, இப்போ சாவோட விளிம்பு வரைக்கும் தள்ளன உங்கொப்பனுக்குப் பரிசு வேணா? நடந்துப் போன மாம்ஸ்சோட கையக் கால உடச்சு தவழ்ந்து வர ஏற்பாடு பண்ணிட்டேன்! என்ன இருந்தாலும் இந்திய மருமகளா போயிட்டேன்! அதுக்கு மேல தண்டனைக் குடுத்தா கலாச்சாரப் போலிஸ் ஒத்துக்காதுங்கறதால தப்பிச்சாரு உங்க நைனா!” என சொல்லி மீண்டும் கை ஓங்கியவளை,

 

“உன் ஜோனா பக்தி அளவே இல்லாம போயிட்டு இருக்குடி! போதும் விட்டிரு, அவன சாகடிச்சிடாதே” என சொல்லி வெளியே இழுத்துக் கொண்டுப் போக முயன்றான் ஜோனா.

 

“டேய் ஜோனா!” என அவன் குரல் ஒலிக்க,  கதவருகே நின்று திரும்பிப் பார்த்தான் இவன்.

“உன்னை பயம் காட்டி அமெரிக்காவுக்கு ஓட வைக்கறது மட்டும் தான் என்னோட ப்ளான்! கொல்லறது இல்ல! என் பன்னி ஐ மீன் அண்ணி,  நம்பலைனாலும் அதான் நெசம்” என சொல்லி ஜோனாவைப் பார்த்து கண்ணடித்தான்.

 

இவள் மீண்டும் திமிறிக் கொண்டு அவனை அடிக்க வர, ஜோனா இறுகப் பிடித்துக் கொண்டான் ஜீவாவை.

 

“ஓ அண்ணி ஓ அண்ணி

ஓ அண்ணி எங்கள் அண்ணி

அங்கயற்கண்ணி

உன் உள்ளம் வெள்ளிக் கிண்ணி

பாசமென்னும் பால் புகட்டும்

தெய்வ கண்மணி

ஆஹா ஆஹா!!!!!!” என நக்கலாய் அண்ணி சீரியலின் தலைப்புப் பாடலைப் பாடினான் அவன்.

 

ஜோனாவுக்கு அவன் சேட்டையில் ஒரு பக்கம் சிரிப்பு வரப் பார்த்தாலும், பத்ரகாளி போல் பொங்கிக் கொண்டிருக்கும் தன் ஜீவாவைப் பார்க்க பாவமாய் இருந்தது.

 

“ஹி இஸ் க்ரேஷி! நீ வாடாம்மா நாம போகலாம்” என அழைத்துப் போய்விட்டான் ஜீவாவை.

 

வெளியே போனவர்களையேப் பார்த்திருந்த இவனுக்கு மெல்லிய புன்னகைப் பூத்தது.

 

“ஜோனாண்ணா!” முணுமுணுத்துக் கொண்டான்.

அன்றிரவு இரவு உணவுக்காக, மேசையில் அமர்ந்திருந்தார்கள் அனைவரும். சூசனும் அவர் கணவரும், வந்ததற்கு இந்தியாவை சுற்றிப் பார்க்கலாம் என டூர் போயிருந்தார்கள். மகளைப் பார்த்துப் போக வந்திருந்த ஜீவானந்தத்தையும் சாப்பிட அழைத்தாள் ஜீவா. தீரனும் மேசையில் அமர்ந்திருந்தான்.

 

மேசையில் படபடவென தாளம் தட்டிக் கொண்டே,

 

“இன்னிக்கு என்ன மெனு?” என கேட்டான் தீரன்.

 

“பழைய சோறும் பாவக்காயும்!” என்றாள் ஜீவா.

 

“எதே!!! ஏன்மா ஏன்? உனக்கு தெய்வப்புலவர் தெரியுமா தெய்வப்புலவர்?”

 

“உனக்கே தெரிஞ்சிருக்கறப்போ எனக்குத் தெரியாதா?” என கேட்டாள் ஜீவா.

 

“அவர் வீட்டுக்கு வந்த விருந்தாளிங்கள எப்படி கவனிக்கனும்னு உன்னை மாதிரி ஆளுங்களுக்காகவே விருந்தோம்பல்ல பத்து குறளு எழுதி வச்சிருக்காரு.

 

‘மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து

நோக்கக் குநழ்யும் விருந்து’னு ஒரு குறள் இருக்கு. அப்படின்னா என்ன அர்த்தம்னு உனக்குத் தெரியுமா?”

 

“எங்க டாடிக்கு எல்லா குறளும் மனப்பாடம். அவர் பதில் சொல்வாரு இதுக்கு” என்றவள் நமுட்டு சிரிப்பு சிரித்தாள்.

“அதாவது மிஸ்டர் தீரன், திருவள்ளுவர் என்பவர் பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர். அவரை தேவர், நாயனார், பொய்யாமொழிப் புலவர் இப்படி கூட அழைக்கலாம். அவர் மயிலாப்பூரில் வாழ்ந்திருக்கலாம்னு சான்றுகள் சொல்லுது. திருக்குறளோட பியூட்டியே அது ரெண்டே வரியில இருக்கறதுதான். அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என மூனு பிரிவு இருக்கு அதுல” என அவர் அடுக்கிக் கொண்டே போக, தீரனுக்குப் பசி காதை அடைத்தது.

 

‘மிலிட்டரி, அந்த மூனு பாலுக்கும் நீ விளக்கம் குடுத்து முடிக்கறதுக்குல்ல எனக்கே பால் ஊத்திடுவாங்கய்யா! ஸ்ட்ரேய்டா வள்ளுவர் கிட்டயே நான் போய் விளக்கம் கேட்டுக்கறேன் விட்டுருய்யா!’ என மனதினுள்ளே அலறினான்.

 

அதற்குள் உணவு மேசைக்கு வந்திருக்க, ஜோனாவும் எடுத்துப் போட்டு ஜீவாவுக்கு ஊட்ட ஆரம்பித்தான். தீரனும் தட்டை எடுக்க,

 

“என்ன செய்யற நீ?” என கடுப்பாகக் கேட்டார் ஜீவானந்தம்.

 

“இல்ல சாப்பாடு..” என இவன் திணற,

 

“குரு கிட்ட பாடம் கேக்கறவன், பயபக்தியோட கேக்கனும்! அதென்ன பழக்கம், தின்னுக்கிட்டே திருக்குறள் படிக்கிறது?” என மிரட்டினார் அவனை.

 

அவர் மட்டும் சப்பாத்தியைத் தட்டில் வைத்து கோழி குருமாவோடு தேய்த்து வாயில் போட்டு மென்று கொண்டே, திருக்குறளை எத்தனை மொழிகளில் மொழிப் பெயர்த்து இருக்கிறார்கள், அதற்கு யாரெல்லாம் விளக்க உரை எழுதி இருக்கிறார்கள் என அடுக்கடுகாய் எடுத்து விட்டார்.

 

‘யோவ் மிலிட்டரி, உங்க குடும்பத்தப் பத்தி தெரிஞ்சிருந்தும் வெளக்கம் தெரியுமான்னு கேட்ட என்னை வெளக்கமாத்தால அடிக்கனும்யா, நல்லா அடிக்கனும்!!!

 

சோதனை தீரவில்லை,

மிலிட்ரி தொல்லைத் தாங்கவில்லை,

முன்னபின்ன அழுததில்லே,

காப்பாத்திட ஆளுமில்ல!

கொல்லுங்க கொல்லுங்க, மிலிட்ரிய கொல்லுங்க’

 

என பாடி மனதிலேயே அவரை கும்மிக் கொண்டிருந்தான் தீரன்.

 

அவன் முகத்தைப் பார்த்து சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது ஜீவாவுக்கு. தந்தை முன்னே நல்லப் பிள்ளை போல சிரிப்பை அடக்கியப்படி அமர்ந்திருந்தாள். ஜோனாவோ நடப்பதெல்லாம் கண்ணில் விழுந்தாலும், கருத்தில் பதியாமல் தன் ஜிவாவுக்கு உணவை ஊட்டிக் கொண்டிருந்தான். அவள் சாப்பிட்டு முடித்ததும் நிமிர்ந்தவன், தீரனின் கெஞ்சும் பார்வையை அப்பொழுதுதான் கவனித்தான்.

 

“ஜீவாம்மா, உங்கப்பா வீட்டுல நடக்கற அராஜகம் போல, நம்ம வீட்டுக்கு வந்தவங்கள எப்போ கிளம்பறீங்கன்னு கேட்டு கேட்டு டார்ச்சர் பண்ண மாட்டோம் நாம! ஏசி ரூம் குடுத்து, சூடா பால் குடுத்து, போர்த்திக்க போர்வைக் குடுத்து நல்லா பார்த்துப்போம்! உங்க டாடிய நைட்டு இங்கயே தங்கிக்க சொல்லு”

மாமானாரும் மருமகனும் வேலை விஷயமாய் நன்றாக பேசிக் கொண்டாலும், ஜீவா என வரும் போது இன்னும் முறைப்புத்தான்.

 

திருக்குறளில் இருந்து வெளியே வந்த ஜீவானந்தம்,

 

“கடல் போல வீடிருக்கு, அதுல ஏசியும் இருக்கு, போர்வையும் இருக்கு! யார் வீட்டுலயும் தங்க வேண்டிய அவசியமில்ல எனக்கு. ரொம்ப இருட்டிட்டதனால வேற வழி இல்லாம இங்க தங்கறேன்! ஜீவா, பால கீழ இருக்கற கெஸ்ட் ரூமுக்கு குடுத்து விடு! நான் போய் கொஞ்ச நேரம் படிச்சுட்டு தூங்கறேன்” என எழுந்துப் போய் விட்டார்.

 

“கோயில் யானைன்னு ஒரு பேச்சுக்கு சொன்னேன்! இவர் என்னான்னா நம்ம வீடான டெம்பிளையே சுத்தி சுத்தி வராரு!” என கேட்டு ஜீவாவிடம் சில பல அடிகளையும் வாங்கிக் கொண்டான் ஜோனா.  

 

அவர் நகர்ந்தக் கையோடு, தட்டில் உணவை அள்ளிப் போட்டுக் கொண்டான் தீரன்.

 

“தேங்க்ஸ் பாஸ், தேங்க் யூ சோ மச்!” 

 

எங்கே மறுபடியும் ஜீவானந்தம் வந்து விடுவாரோ என அவசர அவசரமாக முழுங்கினான் இவன்.

 

“இனிமே எங்க விருந்தோம்பல நக்கலடிச்சு குறள் சொல்லுவ? குரலே இல்லாம பண்ணிட்டோம் பார்த்தல்ல” என சொன்ன ஜீவா, ஜோனாவுக்கு உணவை அள்ளிக் கொடுக்க ஆரம்பித்தாள்.

“விருந்தும் மருந்தும் மூனு நாளைக்குடா தீரா! சீக்கிரம் இந்த லவ் பெர்ட்ஸ் வீட்டுல இருந்து பெட்டிய கட்டிருடா! இல்லைனா இந்த வீட்டுல உள்ள ரெண்டு ஜீவனும்(ஜீவானந்தம் + ஜீவா) நம்ம ஜீவன வாங்கிடுங்க” என முனகிக் கொண்டே சாப்பிட்டவன் முன்னே மட்டன் சுக்காவைக் கொண்டு வந்து வைத்தார் சமையல்காரர்.

 

“ஜீவாம்மா உங்களுக்காக செய்ய சொன்னாங்க!” என சொல்லியவர், பரிமாறி விட்டே சென்றார்.

 

கண்கள் கலங்க இவன் நிமிர்ந்து ஜீவாவைப் பார்க்க,

 

“தண்ணிய குடி, தண்ணிய குடி!” என விவேக் ஸ்டைலில் நக்கலடித்தாள் அவள்.

 

நட்போடு தோள் தழுவும் ஜோனா, முறைப்போடு பாசத்தைக் காட்டும் ஜீவா, மிரட்டிக் கொண்டே திரியும் ஜீவானந்தம் என அவனுக்கும் சொல்லிக் கொள்ள உறவுகள் வரமாய் கிடைத்தன இங்கே. இவர்களுக்காக ஜோனா சொன்னதைப் போல எத்தனை மொட்டை வேண்டுமானாலும் சலித்துக் கொள்ளாமல் போடுவான் தீரன்.

 

அவர்கள் அறையின் பால்கனியில் அமர்ந்திருந்தான் ஜோனா. ஜீவானந்தத்துக்கு எல்லாம் வசதியாக இருக்கிறதா என கேட்டு விட்டு, அறைக்குள் நுழைந்தாள் ஜீவா. அவன் அருகே போய் நின்றவள்,

 

“ஸ்டேஷன் போய்ட்டு வந்ததும் அப்பாட்ட என்ன பேசுன ஜோனா?” என கேட்டாள்.

அவளை அருகே இழுத்து மடியில் அமர்த்திக் கொண்டான் ஜோனா. தொட்டிலில் இருந்த கையை வருடிய ஜீவா அதை தாங்கி நிற்கும் கழுத்தைப் பிடித்து விட்டாள்.

 

“கேஸ வித்ட்ரா செய்ய கேட்டிருந்தேன்! அதப்பத்தி பேசிட்டு இருந்தோம்!”

 

“ஹ்ம்ம். தெரியும்! இன்னிக்கு ஜோனா சார் தம்பிய பார்த்த பாச பார்வையிலேயே இப்படி எதாச்சும் வரும்னு தெரியும்”

 

மெலிதாய் நகைத்தான் இவன். கை மெல்ல அவள் வயிற்றை வருடியபடி இருந்தது.

 

“என் ஸ்டெப் சிப்ளிங்ஸ் ரொம்ப ஒட்டலைனாலும் கூட, நான் ஒதுக்கிடல அவங்கள. அவங்க காலேஜ் ஃபண்ட்க்கு நான் தான் ஹெல்ப் செய்யறேன் ஜீவா! என்னமோ இவன பார்த்ததும் ஒரு ஈர்ப்பு. எப்படி சொல்ல! ஹ்ம்ம் ஒரு ஒட்டுதல்! என்னை மாதிரியே அவனும் பாசத்துக்கு ஏங்கி வளர்ந்திருக்கானேன்னு ஒரு பரிதாபம்! தம்பிய விட்டுட சொல்லி கேட்டப்போ அவன் பாசம் என் நெஞ்சைப் பிசைஞ்சது! அந்த தம்பிக்கு அப்பாத்தான் ஒழுங்கா இல்ல, இவனாச்சும் அந்த ஸ்தானத்துல இருந்துட்டுப் போகட்டும்னு தோணுச்சு! அதான் மன்னிச்சுட்டேன்!”  

 

“நான் மட்டும் அவன மன்னிக்கவே மாட்டேன்! எவ்ளோ துருதுருன்னு இருப்ப நீ! உன்னை இப்படி ஒரே இடத்துல உட்கார வச்சிட்டான்”

 

“ஏன் ஜீவா பேபி, துருதுருன்னு இல்லைன்னு நீ என்ன மீனிங்ல சொல்லற?” என ஒரு மார்க்கமாய் கேட்டான் இவன்.

 

“கை நல்லா இருந்திருந்தா எனக்காக கிட்டார் வாசிச்சிருப்ப, என்னையே கிட்டாரா வாசிச்சிருப்ப! கை நல்லா இருந்திருந்தா எனக்காக பாடியிருப்ப, என்னையும் பாட வச்சிருப்ப! கை நல்லா இருந்திருந்தா பாடல் வரி எழுதிருப்ப, என் மேலயும் வரி வரியா எழுதிருப்ப! கை நல்லா இருந்திருந்தா பாட்டு வரிக்கு ஸ்வரம் சேர்த்திருப்ப, என் கூட சுகமா சேர்ந்திருப்ப” என சோகமாய் தெரிந்தவனின் மூட்டை மாற்ற இரட்டை அர்த்தத்தில் பேசினாள் இவள்.

 

ஆவென வாயைப் பிளந்தான் ஜோனா.

 

“பச்சைப் புள்ள மாதிரி முகத்த வச்சிருக்கற என் மூலானா இப்படிலாம் பேசறது?”

 

“பச்சைப் புள்ளையாத்தான் இருந்தேன், என் ஜோனா என்னை நீலமா மாத்துற வரைக்கும்” என்றவள் அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள்.

 

“பச்சப் புள்ளையாத்தான் இருந்தேன், என் ஜோனா எனக்கு வெட்கம்னு ஒன்னை அறிமுகப்படுத்தற வரைக்கும்” என்றவள் அவன் மூக்கில் சின்ன கடி கடித்தாள்.

 

“பச்சைப் புள்ளையாத்தான் இருந்தேன், என் ஜோனா என்னை பெண்ணா உணர வைக்கற வரைக்கும்” என்றவள் அவன் நெற்றியில் மெல்ல முட்டினாள்.

“பச்சைப் புள்ளையாத்தான் இருந்தேன், என் ஜோனா என்னை காதலிலே குளிப்பாட்டற வரைக்கும்” என்றவள் அவன் உதட்டில் வந்து இளைப்பாறினாள்.

 

தன் தேவதைப் பெண்ணின் அன்பிலும், காதலிலும் நிலைத் தடுமாறிப் போனான் பாடகன்.

 

“என்னை யாருன்னு நெனைச்ச நீ? தெ கிரேட் ஜோனா! என் மூலான ஒரு கைப்பார்க்க இந்த ஒத்தக் கை போதும்டி” என சிரிப்புடன் சொன்னவன், தன் ஜீவாவை மெல்ல அணைத்துக் கொண்டான்.

 

காமனின் கோயிலில் அவன் தெய்வமாய் அருள் பாலிக்க இவள் பக்தையாய் மனம் மயங்க, நடந்தேறியது ராத்திரி நேரத்துப் பூஜை! (எல்லாப் பூஜையிலும் நமக்கு பஞ்சாமிர்தம் கிடைக்கும்! நான் எழுதற பூஜையில பெரிய நாமம் மட்டும்தான் கிடைக்கும்! கெளம்புங்க, கெளம்புங்க, கதவ சாத்திட்டாங்க ?)

 

 

(மயங்கிவிட்டார்கள்…)

 

 

(போன எபிக்கு லைக், காமேண்ட், மீம் போட்ட அனைவருக்கும் நன்றி. அடுத்து எபிலாக்கில் சந்திக்கலாம் டியர்ஸ். லவ் யூ ஆல்!)