MMM–EPI 6

122620776_740997409820929_9109553537495410146_n-5a6ab648

அத்தியாயம் 6

 

“ஏன் உங்க பாட்டுல எல்லாம் அவ்ளோ கெட்ட வார்த்தை வருது?

பாட்டு லிரிக் எழுத ஐடியா வரலனா முக்கா வாசி பாட்ட எஃப்(f வோர்ட்னா fuckநு அர்த்தம். முக்கால்வாசி ஆங்கில பாடல்களில் இந்த வார்த்தை இல்லாமல் இருக்காது) வோர்ட் போட்டே நிரப்பிடுவீங்களா?”

 

கண்களை சுருக்கி, வாயில் பென்சிலை வைத்துக் கடித்துக் கொண்டே கையிலிருந்த பேப்பரை முறைத்துக் கொண்டிருந்தவன் இவளை திரும்பிப் பார்த்தான்.

 

“என்ன கேட்ட?”

 

“எதுக்கு பாட்டுல எஃப் வோர்ட் ரொம்ப யூஸ் செய்யறீங்கன்னு கேட்டேன்! ….க்கிங் பியூட்டிபுள், ….க்கிங் க்ரேசி, ….க்கிங் ஹேட் யூ, ….க்கிங் லவ் யூன்னு! இரிட்டேட்டிங்கா இருக்கு ஜோனா!”

 

யோசனையாக நெற்றியை சுருக்கியவன்,

 

“அது இல்லைனா நீ பொறந்துருக்க மாட்ட, நான் பொறந்துருக்க மாட்டேன், இந்த உலகத்துல எந்த உயிரினமும் பொறந்துருக்காது! அதனாலதான் எங்காளுங்க அந்த வோர்டுக்கு அதிக முக்கியத்துவம் குடுக்கறமோ என்னவோ!” என்றவன்,

 

“அதுக்கு இன்னொரு சைக்கலோஜிக்கல் காரணம் கூட இருக்கு மூலான்! இப்போ வீட்டுக்குப் போய் இந்த வெயிலுக்கு இதமா ஐஸ் லெமன் டீ போட்டு எடுத்து வருவியாம்! அப்புறம் இந்த டாபிக் பத்தி இன்னும் விலாவாரியா டிஸ்கஸ் பண்ணலாமாம்!” என முடித்தான்.

 

“காலையில இருந்து இதோட பத்து தடவை வீட்டுக்கும் பீச்சுக்கும் அலைய விட்டுட்டான்! எனக்கு பாட்டு எழுத தோணுதுன்னு சொன்னானேன்னு பீச்ல பெரிய குடைய நட்டு வச்சு, பாய் விரிச்சு, நோட் பேட், பென்சில்னு எடுத்துக் குடுத்து, ராஜா மாதிரி இவன இங்க கொண்டு வந்து உட்கார வச்ச என்னை தேஞ்சு போன செருப்ப சாணியில முக்கி அடிக்கனும். ஆப்பிள் தின்னாத்தான் கற்பனை வரும்னு ஆப்பிள் எடுக்க ஒரு தடவை, ஆரஞ்சு ஜீஸ் குடிச்சாத்தான் மூளை ப்ரேஷ் ஆகும்னு அத எடுக்க ஒரு தடவை, சாண்ட்விச் சாப்டாத்தான் சரளமா எழுத வரும்னு அதுக்கு ஒரு தடவை, லாலிபாப் சப்புனாத்தான் லைன்ஸ் ரைம்மாகும்னு அதுக்கு ஒரு தடவைன்னு இந்த புண்ணு கால வச்சிக்கிட்டு நாய் மாதிரி அலைய விடறான்!” என முனகிக் கொண்டே எழுந்தவள் அவன் கையில் இருந்த நோட் பேட்டை எட்டிப் பார்க்க முயல, அவனோ நெஞ்சில் இறுக்க அணைத்துக் கொண்டான் அதை.

 

“எழுதும் போது பார்க்காதே மூலான்! யூ வில் ஜின்க்ஸ்(jinx-பேட் லக்) இட்!” என கத்தினான்.

 

“ஹ்க்கும்!” என நொடித்துக் கொண்டவள் மணலில் கால் புதைய புதைய வீட்டுக்கு நடந்தாள்.

 

நடந்துப் போகும் ஜீவாவையே முகத்தில் புன்னகையுடன் பார்த்திருந்தான் ஜோனா.

 

“உன்னை வம்பிழுக்கறப்ப கிடைக்கற இன்பம் இருக்கே, ப்பா!!! அத அனுபவிச்சுப் பார்த்தா தான் புரியும் மூலான்! நான் இங்கிருந்து கிளம்பறதுக்குள்ள இவன ஏன்டா கடத்திட்டு வந்தோம்னு நொந்துப் போயிடனும்! நான் குடுக்கற டார்ச்சர்ல இனிமே என் பக்கமே தலை வச்சுப் படுக்க கூடாது நீ!” என எண்ணிக் கொண்டவன், பாயில் அப்படியே சரிந்துப் படுத்துக் கொண்டான்.  

 

வீட்டுக்குள் வந்த ஜீவா கேட்டிலில் சுடுநீரை நன்றாக கொதிக்க வைத்தாள். கண்ணாடி ஜக்கில் டீ பேகை போட்டு கொதித்த நீரை ஊற்றி பின் இனிப்பு சேர்த்து, பிழிந்து வைத்த லெமன் ஜீஸையும், ஐஸ் கட்டிகளையும் சேர்த்து கலக்கினாள். லெமனை ஸ்லைசாக வெட்டி ஜக்கில் சேர்த்தவள், புதினா இலைகளையும் மேலே தூவி விட்டாள். அந்த ஜக்கையும், இரண்டு கண்ணாடி கிளாஸ்களையும், சாக்லேட் ச்சிப் குக்கியையும் கையில் எடுத்துக் கொண்டு மீண்டும் பீச்சை நோக்கி நடந்தாள் அவள்.

 

ஜோனாவுடன் ஒரு நாளை கழித்து விட்டு, தான் மட்டும் இந்த காட்டேஜிக்கு வருவதாய் இருந்தாள் ஜீவா. சீனி, மைதா, பால் மாவு இப்படி கெட்டுப் போகாத உணவு வகைகளை எப்பொழுதும் ஸ்டோர் செய்து வைத்திருப்பாள். சீக்கிரம் அழுகாத காய்கறிகள், பழங்கள், ப்ரேட், டின்னில் இருக்கும் உணவு வகைகளை தீரனுக்கு பிட்சா வாங்கப் போன சமயத்தில் வாங்கி கார் டிக்கியில் நிறைத்திருந்தாள். அவள் மட்டுமே சாப்பிடும் பட்சத்தில் ஒரு வாரம் வரை வரும் உணவு சப்ளை, ஜோனாவின் அதீத பசியின் காரணமாக மூன்று நாட்களாவது தாக்குப் பிடிக்குமா என சந்தேகமாக இருந்தது இவளுக்கு.

 

“எந்நேரமும் சிப்ஸ், பழம், ஜுஸ்னு வாயிக்கும் வயித்துக்கும் வேலை வச்சிக்கிட்டே இருக்கானே இவன்! இவ்ளோ சாப்பிட்டும் எப்படி கிண்ணுன்னு இருக்கான்!” என யோசித்தப்படியே நடந்தாள் ஜீவா.   

 

ஜோனாவின் நியர் டெத் சம்பவம் அவனின் உள்ளுறுப்புகளையும் பாதித்திருந்தது. அதை சரியாக்க எடுத்துக் கொண்ட மாத்திரைகள் பசி உணர்வையே மந்திக்க வைத்திருந்தன. கஸ்டப்பட்டு உணவு உண்டாலும் வாந்தி, வயிற்று வலி என அல்லல் படுவான். இப்பொழுது ஓரளவு உடல் தேறி பசி உணர்வு அதிகரித்திருந்தது. அதனால்தான் எதையாவது வயிற்றுக்குள் போட்டுக் கொண்டே இருக்கிறான். பசி அதிகரிப்பதுதானே உடம்பு தேறி வருவதின் அறிகுறி.  

 

வெயிலாய் இருந்ததால் கடல் காற்றும் சூடாகவே வீசியது.   தூரத்தே தெரிந்த ஜோனாவின் உருவத்தைப் பார்த்ததும் தானாகவே புன்னகை வந்தது அவளுக்கு. சுமார் ஓராண்டுக்கும் மேலாய் அவனது பாடல் ஆல்பம் எதுவும் வந்திருக்கவில்லை. அவன் பாடும் பாடல்களை அவனேதான் எழுதி உயிர் கொடுப்பான். ரைட்டர் ப்ளாக் வந்ததில் இருந்து அவனது கேரியர் பின்னடைந்திருந்தது. ஜோனாவுக்குப் பின்னால் வந்த பொடுசுகள் எல்லாம் ஹிட் ஆல்பம் கொடுத்திருக்க, எங்கே இவன் மறக்கப்பட்டு விடுவானோ என அஞ்சினாள் அவனின் டை ஹார்ட் ஃபேன். அதனால் தான் எழுதப் போகிறேன் என அவன் சொன்னதில், ஜீவா அகமகிழ்ந்துப் போயிருந்தாள். சற்று நேரம் உட்கார விடாமல், ஜோனா அவளை வேலை வாங்கியது கூட பெரிதாக தெரியவில்லை அவளுக்கு.  

 

ஜோனாவின் அருகே வந்து அமர்ந்தவள், பாயின் மேல் ஜக்கையும் கிளாஸ்களையும் வைத்தாள். ஒரு கிளாஸில் பானத்தை ஊற்றி அவனிடம் நீட்டியவள்,

 

“எஞ்சாய் ஜோனா” என்றாள்.

 

அதை வாங்கிக் கொண்டவன், அவள் முகத்தை நிமிர்ந்து நோக்கினான். வெயிலில் நடந்து வந்ததில் நெற்றியில் முத்து முத்தாக வியர்த்திருந்தது அவளுக்கு. பக்கத்தில் கழட்டிப் போட்டிருந்த தனது டீ ஷர்டை எடுத்தவன், அவள் நெற்றியை மென்மையாக துடைத்து விட்டான்.

 

“கழுத்து கிட்டயும் துடைச்சி விடு! அங்கயும் வேர்த்து ஊத்துது” என்றாள் ஜீவா.

 

“உனக்கு நான் என்ன வேலைக்காரனா?” என கேட்டவன் அந்த டீ ஷர்டாலேயே அவள் முகத்தை அழுத்தி அப்படியே பின்னால் தள்ளினான். அவன் தள்ளலில் மணலில் மல்லாக்க விழுந்தவள், டீ ஷர்டை அவன் முகத்தில் விட்டடித்தாள்.

 

“வேர்வை நாத்தம் அடிக்குது! அத என் மூஞ்சுல வச்சுத் தேய்க்கற! ச்சை!” என்றாள் ஜீவா.

 

“ஏய் மூலான், என்ன நாத்தம்னு சொல்லற! வாட்ச் யுவர் வோர்ட்! என் வியர்வை துளி தன் மேல சிந்தாதான்னு எத்தனை லட்சம் பொண்ணுங்க ஏங்கி தவிக்கிறாங்க தெரியுமா!” என கேட்டப்படியே குளிர்ந்த பானத்தை ரசித்துப் பருகினான் ஜோனா.

 

இல்லை என மறுக்க முடியவில்லை அவளால். அவன் இன்ஸ்டாகிராமில் தானே காலையில் கண் விழித்து, இரவில் கண் மூடுகிறாள். இவன் ஒரு போட்டோவை பதிவேற்றினால், ஆயிரக்கணக்கில் ஹார்ட்களும் காமேண்ட்களும் வரிசைக்கட்டி வருமே. அனைத்தையும் ஒன்று விடாமால் படிப்பதை தானே பொழுது போக்காய் வைத்திருந்தாள் ஜீவா. ஹக் மீ ஜோனா, கிஸ் மீ ஜோனா என ஆரம்பித்து பலான ரேஞ்சுக்குப் போகும்.

மணலில் மல்லாக்கப் படுத்து, கைகள் இரண்டையும் தலைக்கு கீழ் வைத்தப்படி அவனை நோக்கியவள்,

 

“சரி சொல்லு!” என கேட்டாள்.

 

ஓர் ஆணின் பக்கத்தில் இருக்கிறோம் என்ற ப்ரக்ஞையே இல்லாமல் ரிலேக்‌ஷாக படுத்திருந்தவளை, ஆழ்ந்து நோக்கினான் ஜோனா. இது வரை அவன் அருகில் அவள் வெட்கத்தையோ, கூச்சத்தையோ, தயக்கத்தையோ காட்டியதில்லை. சரிக்கு சமமாக வாயாடி இருக்கிறாள், சண்டைப் போட்டிருக்கிறாள், கண்களை நேராகப் பார்த்து பேசியிருக்கிறாள். இவன் தொட்ட சில பல சமயங்களில் கூட ஓர் ஆணின் தொடு உணர்ச்சியால் நெளிந்திருக்கிறாளே தவிர, கூசி சிலிர்த்ததில்லை. தன்னிடம் மயங்கி கிறங்கி நின்றிருந்த பெண்களையே சந்தித்திருந்தவனுக்கு, இந்த ஜீவா வித்தியாசமாகத் தெரிந்தாள். தனது அருகாமை அவளை பாதிக்கவில்லை என்பது அவனுக்கு ஆச்சரியத்தை மட்டும் அல்ல கோபத்தையும் வரவழைத்தது.

 

“என்ன சொல்லனும்?” என கேட்டான் ஜோனா.

 

“என்னமோ சைக்கலோஜிக்கல் காரணம் இருக்குன்னு சொன்னியே, அத பத்தி சொல்லு”

 

“ஆக்சுவலி அந்த வார்த்தைய ஸ்வெரிங் வோர்ட்னு(திட்ட, ஏச பயன்படும் கெட்ட வார்த்தை) சொல்வோம். கோபம் வரப்பபோ அதை உள்ளயே அடக்கி வைக்காம, இப்படி கெட்ட வார்த்தை சொல்லி திட்டிட்டா நமக்கு ஸ்ட்ரேஸ் குறைஞ்சிடும். அதனாலத்தான் பாட்டுங்கள்ல இந்த மாதிரி ஸ்வெரிங் வோர்ட்ஸ் யூஸ் பண்ணறாங்க. அதை கத்திப் பாடும் போது மக்கள் மனசுல உள்ள ஸ்ட்ரெஸ் குறையுது, பாடற எங்க ஸ்ட்ரெஸும் குறையுது. அதோட இந்த மாதிரி கெட்ட வார்த்தைல திட்டறப்போ உடம்புல உள்ள வலி குறையுதுன்னும் கண்டுப்புடிச்சிருக்காங்க! சமைக்கறப்ப கைய சுட்டுக்கிட்டாலோ, ஆணி அடிக்கறப்போ விரலை அடிச்சிக்கிட்டாளோ வாயில இருந்து கெட்ட வார்த்தை வரும் போது, கொஞ்ச நேரம் வலி தெரியாதாம்!”

 

“நல்லா கண்டுப்புடிக்கறாங்க உங்க ஊருல! எங்க ஊர்லலாம் கெட்ட வார்த்தை சொன்னா அவ்ளோதான், நாக்குல மிளகாய வச்சித்  தேய்ச்சிடுவாங்க!” என்றவள் மெல்ல எழுந்து அமர்ந்தாள்.

 

அவன் கண்களை நேராகப் பார்த்தவள்,

 

“நெஜமா கெட்ட வார்த்தையில திட்டனா நம்ம கோபம் எல்லாம் காணாம போயிடுமா ஜோனா?” என குரலை செறுமிக் கொண்டே கேட்டாள்.

 

ஆமென தலையை ஆட்டினான் இவன்.

 

“சத்தியமா?”

 

“யெஸ்!”

 

“அப்போ நான் திட்டவா?”

 

“யார திட்டனும்?” என கேட்டான் ஜோனா.

 

“என்னோட அம்மாவ”

 

“கோ ஆன்!”

 

“ஆனா கெட்ட வார்த்தைலாம் யூஸ் பண்ண மாட்டேன். மாதா, பிதா, குரு, தெய்வம்! இவங்க நாலு பேரையும் கெட்ட வார்த்தைல திட்டனா மோட்சமே கிடைக்காது”

 

“சரி மூலான் சரி! கெட்ட வார்த்தை யூஸ் பண்ணாமலே திட்டு”

 

எழுந்து நின்றவள் கடல் நீரை நோக்கி நடந்தாள். இவனும் எழுந்து அவள் பின்னே நடக்க ஆரம்பித்தான். கடல் அலை கால் தொடும் தூரம் வந்தவள், இரு கையையும் குவித்து வாயருகே வைத்து கத்த ஆரம்பித்தாள்.

 

“அம்மா!!!!!!!!!!!”

 

அவள் அருகே கைக்கட்டியபடி அவளையேப் பார்த்திருந்தான் ஜோனா.

 

“அம்மா!!! நான் உன்னைத் திட்டப் போறேன்! ஆத்திரம் தீர திட்டப் போறேன்! ஐ ஹேட் யூ சோ சோ மச் அம்மா! இந்த பூமியில நான் வெறுக்கற ஒரே ஆள் நீ தான்! ஐ ஹேட் யூ! ரொம்ப சுயநலம் உனக்கு! நீ மட்டும் கடவுள் கிட்ட போய் சேர்ந்து ரொம்ப சந்தோஷமா இருக்க! நான் மட்டும் இந்தப் பூமியில கிடந்து அல்லல் படறேன். ஐ ஹேட் யூ! ஏன் என்னை விட்டுப் போன நீ? உன் உசுர குடுத்து என்னைப் பெத்து போடலன்னு யார் அழுதா? என்னையும் கூட்டிட்டுப் போக வேண்டியது தானே? உன்னோட அரவணைப்பு இல்லாம நான் எவ்ளோ கஸ்டப்பட்டேன் தெரியுமா? உன்னோட ஆதரவும் அன்பும் இல்லாம நான் எவ்ளோ தவிச்சேன் தெரியுமா? ஆசையா செல்லம் கொஞ்ச, உன் கையால சாப்பாடு வாங்கிக்க, உன் மடியில படுத்து தூங்க, ராங்கி செஞ்சு உன் கையால வாங்கி கட்டிக்க, பீரியட் வந்துருச்சு வயிறு வலிக்குதும்மான்னு ஒவ்வொரு மாசமும் முனகித் தள்ள நீ இல்லாம வாழ்ற இந்த வாழ்க்கை நரகம்மா! இந்த நரகத்துக்குள்ள என்னை தள்ளி விட்டுட்டுப் போன உன்னை நான் அறவே வெறுக்கறேன்! ஐ ஹேட் யூ அம்மா!!!!!!!!!!!” என கத்தியவள் அப்படியே மடிந்து மணலில் அமர்ந்தாள்.

 

அவள் அருகே அமர்ந்த ஜோனா, ஜீவாவின் தோளை சுற்றி தன் கரத்தைப் போட்டுக் கொண்டான். பட்டென தள்ளி விட்டவள், நகர்ந்துப் போய் அமர்ந்தாள்.

 

“ம்ப்ச்” என சலித்துக் கொண்டவன், தானும் நகர்ந்து மீண்டும் அவள் தோளில் தன் இடது கரத்தைப் போட்டு இறுக்கிக் கொண்டான்.

 

“அழுதுடு மூலான்”

 

“முடியாது!”

 

“அழுன்னு சொல்றேன்ல”

 

“மத்தவங்க முன்னுக்கு அழுதா அறை கிடைக்கும்”

 

“நான் அறைய மாட்டேன்! ஹக் தான் பண்ணுவேன்”

 

“தேவையில்ல போ!”

 

இடது கையால் அவளை வளைத்திருந்தவன், அப்படியே இழுத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான். அவன் பிடியில் இருந்து வெளி வர போராடியவளை, விடவேயில்லை இவன். போராட்டம் மெல்ல மெல்ல குறைய அப்படியே அவனை இரு கரம் கொண்டு இறுக்கிக் கொண்டவள், தேம்பி தேம்பி அழ ஆரம்பித்தாள்.

 

“ஐ..லவ்..மை..அம்மா!” ஒவ்வொரு வார்த்தையின் நடுவிலும் தேம்பினாள் ஜீவா.

 

“நான்..திட்டனத..எல்லாம்..வாபஸ்..வாங்கிக்கறேன்..ஐ லவ் யூ அம்மா!” விக்கலும் விம்மலுமாய் வெடித்து அழுதாள் அவள்.

 

அத்தனை நாட்களாய் உள்ளே அடைத்து வைத்திருந்த துக்கம் எல்லாம் அவன் அணைப்பில் கண்ணீராய் வெளி வந்தது. ஒன்றுமே பேசாமல் முதுகை மட்டும் தடவிக் கொடுத்தப்படியே இருந்தான் ஜோனா.

 

அழுபவளை கடல் அலை வந்து கால் தொட்டு சமாதானம் செய்தது. கடல் காற்று தலை கோதி சமாதானம் செய்தது. தாயாய் அரவணைப்பதால் தான் கடலையும் நாம் கடலம்மா, கடலன்னை என விளிக்கிறோமோ! கடல் காற்றை சுவாசிக்கும் போது அமைதியடையாத மனித மனமும் தான் உண்டோ!!!!

 

மெல்ல அமைதியடைந்தவள் அவனிடம் இருந்து விலக முனைந்தாள். அவன் பிடி இன்னும் இறுக்கமாகத்தான் இருந்தது.

 

“அழுது முடிச்சுட்டேன்! என்னை விடு ஜோனா”

 

அவள் முகத்தை ஒற்றைக் கரத்தால் நிமிர்த்திப் பார்த்தான் ஜோனா. கண்கள் நீரில் பளபளக்க, கண் இமைகள் நனைந்திருக்க, முகம் சிவந்து, மூக்கும் சிவந்து பார்க்கவே பாவமாய் தெரிந்தாள் ஜீவா. நனைந்திருந்த கன்னத்தைத் துடைத்து விட்டான். அவன் கரத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டாள் ஜீவா. அவளின் சிவந்திருந்த மூக்கில் குட்டி முத்தம் வைத்தான் ஜோனா.

 

பட்டென அவன் வாயில் அடித்தாள் ஜீவா.

 

“இப்ப எதுக்கு என்னை அடிச்ச மூலான்?”

 

“நீ எதுக்கு என் மூக்குல முத்தம் வச்ச?”

 

“ட்ரீம் ஆன்! நான் உன் மூக்குல முத்தம் ஒன்னும் வைக்கல. என் ரெண்டு கையையும் நீ பிடிச்சு வச்சிருக்க! சடன்னா என் உதடு அரிக்கவும், கூரான உன் மூக்க வச்சு என் உதட்ட சொறிஞ்சுக்கிட்டேன். அவ்ளோதான். இந்த ஜோனா கிஸ் பண்ணற அளவுக்கெல்லாம் நீயும் வொர்த் இல்ல உன் மூக்கும் வோர்த் இல்ல”

 

“நான் வொர்த் இல்லைன்னு தெரிதுல, அப்புறம் எதுக்கு என்னைப் பிடிச்சு வச்சிருக்க? விடு, விடு!” என்றவள் அவனை தள்ளி விட்டாள். கீழே விழுந்தவன், அவளையும் இழுத்துக் கொண்டுதான் விழுந்தான். இருவரையும் கடலலை தழுவி முழுதாய் நனைத்து விட்டுப் போனது.

 

“யூ இடியட்”

 

“யூ ஃபூல்”

 

இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டதெல்லாம் காற்றோடு கலந்து காணாமல் போனது.

 

அன்றிரவு எப்பொழுதும் போல ஜீவா கட்டிலில் தூங்கி இருந்தாள். சோபாவில் தூக்கம் வராமல் புரண்ட ஜோனா, தனது ஐபேட்டை எடுத்து ப்ரோக்கன் ஏஞ்சல் பாடலை தேடி ஓட விட்டான். என்னவோ அந்தப் பாடல் அப்படியே ஜீவாவைப் பிரதிபலிப்பது போல இருந்தது அவனுக்கு.

 

“I’m so lonely, broken angel

I’m so lonely, listen to my heart

One and only, broken angel

Come and save me before I fall apart”

 

பாடலைக் கேட்டப்படியே நோட்பேட்டை எடுத்தவன், விறு விறுவென கிறுக்க ஆரம்பித்தான். அவன் கிறுக்கலில் உதித்தது ஓர் அழகான பாடல். பியூட்டிபுள் ஏஞ்சல் என பெயரிட்டான் அந்தப் பாடலுக்கு.

 

சென்னையில் தனது அபார்ட்மெண்டில் அமர்ந்து போலீஸ் டிபார்ட்மெண்ட் ஆட்கள் ரிட்ரீவ் செய்து கொடுத்திருந்த ஒரு காப்பி சீசீடீவி புட்டேஜை மிக்சர் சாப்பிட்டப்படியே பார்த்திருந்தான் தீரன். ஒரு கட்டத்தில் அவன் கண்கள் லாப்டோப் திரையோடு அப்படியே ஒட்டிக் கொண்டது.

 

“அடேய் பீட்சாக்காரா!!!”

 

இவன் கத்திய கத்தலில் மிக்சர் தொண்டையில் அடைத்துக் கொள்ள, அவன் இரும்பிய இரும்பல் அந்த அபார்ட்மேண்டையே தூக்கியது!

 

{மயங்குவா(ன்/ள்)}

 

(போன எபிக்கு லைக், காமேண்ட் மீம் போட்ட அனைவருக்கும் நன்றி. போன எபிக்கு நாள் ஒன்றுன்னு போட்டிருந்தேன். ஆக்சுவலி தீரன் தேட ஆரம்பிச்ச நாள் ஒன்றா அது வரனும். ஆனா அதுக்கு முன்ன எபில இரண்டு நாள் கழித்து அப்படின்னு எழுதிருக்கேன். இதுல எனக்கே கன்பியூஸ் ஆகிருச்சு. சோ அந்த நாள் கணக்க தூக்கிட்டேன். நீங்களே ஏழு நாள கணக்கு வச்சிக்குங்கப்பா. தவறை சுட்டிக்காட்டிய சகோதரிக்கு நன்றி. அடுத்த எபில மீண்டும் சந்திப்போம். லவ் யூ ஆல்)