MMM–EPI 9

122620776_740997409820929_9109553537495410146_n-8296e7c5

அத்தியாயம் 9

 

காலையில் எப்பொழுதும் போல விழித்துக் கொண்ட ஜீவா, நேராய் படுத்து இரு கரங்களையும் தலைக்குக் பின்னால் கொண்டு சென்று கால்களை மடக்கிக் கொண்டாள். கண்களை மூடிக் கொண்டே ஓன், டூ, த்ரீ என ஐம்பது தடவை சிட் அப் செய்து முடித்தவள் அதன் பிறகே கண்களைத் திறந்தாள்.

 

“இதுதான் உன்னோட அழகான ஏப்ஸின்(வயிறு) ரகசியமா?” எனும் குரலில் திடுக்கிட்டவள் ரூமை சுற்றிக் கண்களை ஓட்ட, கட்டிலுக்கு சற்றுத் தள்ளி நாற்காலியில் அலட்சியமாய் சரிந்து அமர்ந்திருந்தான் ஜோனா.

 

சட்டென கட்டிலில் இருந்து இறங்கி அவனை நெருங்கினாள் ஜீவா. அவன் நெற்றியிலும் கன்னத்திலும் கழுத்திலும் தன் புறங்கையால் தொட்டுப் பார்த்தவள்,

 

“காய்ச்சல் நல்லாவே விட்டுருச்சே! வயிறு இன்னும் வலிக்குதா ஜோனா?” என கேட்டாள்.

 

கழுத்தில் பதிந்திருந்த அவள் கரத்தைப் பிடித்து தன் கன்னத்தில் வைத்து அழுத்திக் கொண்டவன்,

 

“வலி ஒன்னும் இல்ல! ஐ எம் பெர்பெக்ட்லி ஆல்ரைட் மூலான்!” என்றான்.

 

தன் கரத்தை மெல்ல உறுவ முயன்றாள் ஜீவா. அவன் பிடி உடும்புப் பிடியாய் இருந்தது.

 

“விடு ஜோனா! நான் ரெஸ்ட்ரூம் போகனும்”

 

“ஓகே, ஓகே!” என கையை விட்டவன்,

 

“சீக்கிரம் வா! சாப்பிடலாம்” என்றவாறே ரூமை விட்டு வெளியேறினான்.

 

ரிப்ரேஷ் ஆகி டைனிங் ஹால் வந்தவளுக்கு நாற்காலியை இழுத்து,

 

“உட்காரு பிரின்சஸ்” என புன்னகைத்தான் ஜோனா.

 

அவன் புன்னகை இவளையும் தொற்றிக் கொண்டது. சிரித்த முகத்துடன் அமர்ந்துக் கொண்டாள் ஜீவா. ஆவி பறக்கும் ஓட்ஸ் கஞ்சியை அவள் முன்னே நகர்த்தி வைத்தான் ஜோனா.

 

“நான் இன்னும் எக்சர்சைஸ் முடிக்கலையே! அப்புறம் சாப்பிடவா?” 

 

“நேத்து என்னை கவனிச்சுக்கிட்டதே பெரிய எக்சர்சைஸ்தான் உனக்கு! இன்னிக்கு ஒரு நாள் ஸ்கிப் பண்ணிக்கலாம் தப்பில்ல!”

 

“ஹ்ம்ம் சரி! நம்ம கிட்ட பால் முடிஞ்சிருச்சே! எப்படி செஞ்ச இத?” என கேட்டப்படியே ஒரு கரண்டி அள்ளி, ஊதி சுவைத்துப் பார்த்தாள் இவள்.

 

அவள் முகத்தையேப் பார்த்திருந்தவனை நிமிர்ந்து நோக்கியவள்,

 

“எக்ஸலெண்ட்!” என பாராட்டினாள்.

 

கால் காயமான அன்று மட்டும் தான் அவனின் நளபாகத்தை ரசித்து ருசித்திருக்கிறாள் ஜீவா. அதன் பிறகு  குடிக்க தண்ணீர் வேண்டும் என்றால் கூட உட்கார்ந்த இடத்தில் இருந்து ‘மூலான்’ என இவளைத்தான் கத்தி அழைப்பான்.

 

“பாலுக்கு பதில் பால் மாவு போட்டேன் மூலான். கொஞ்சமா சின்னமன் பொடி(பட்டைத்தூள்), வேனிலா எக்ஸ்ட்ராக்ட், உப்பு எல்லாம் ஓட்ஸோட கலந்து வேக வச்சேன்! வெந்ததும் கொஞ்சமா ட்ரை ஃபூரூட்ஸ் சேர்த்தேன். வாழைப்பழத்த சின்னதா நறுக்கி மேல போட்டிருந்தா இன்னும் ருசியா இருக்கும்.” என்றவன் டீயை கப்பில் ஊற்றி அவள் அருகே வைத்தான்.

 

இவள் அமர்ந்திருக்க, நின்றபடியே அவளுக்கு உணவிட்டவனை ஆராய்ச்சியாய் நோக்கினாள் ஜீவா.

 

“ஜோனா!”

 

“என்ன மூலான்?”

 

“எனக்கு உன்னோட கிராட்டிடியூட்(நன்றி உணர்ச்சி) தேவையில்ல ஜோனா! நேத்து நீ சீக்கா இருந்தப்போ கேர் பண்ணேன்றதுக்காக எல்லாம் நீ இப்படி திருப்பி எனக்கு செய்யனும்னு அவசியம் எதுவும் இல்ல! அதை நான் எதிர்ப்பார்க்கவும் இல்ல! சோ ப்ளீஸ், இந்த குக்கிங் க்ளினிங் எல்லாம் என் வசமே இருக்கட்டும்!”

 

“கிராட்டிடியூட்டா! ஓஹோ!” என ஒரு மாதிரியான குரலில் சொன்னவன், அவள் அருகில் அமர்ந்துக் கொண்டான்.

 

உணவைத் தனக்கும் ஒரு பவுலில் எடுத்துக் கொண்டவன்,

 

“சாப்பிட ஹெல்ப் செய்யும் கையே உனக்கு நன்றி! சாப்பாட்டை மென்று தரும் பல்லே உனக்கு நன்றி! ருசியை உணர வைக்கும் நாக்கே உனக்கு நன்றி! மென்றதை விழுங்கி வைக்கும் தொண்டையே உனக்கு நன்றி! உணவைத் தாங்கிக் கொள்ளும் வயிறே உனக்கு நன்றி! அதை ப்ராசெஸ் செய்யும் குடலே உனக்கு நன்றி! ப்ராசேஸ் ஆனதை வெளியேற்றும்….” என தொடர்ந்துக் கொண்டே போனவனை, அவசரமாக முன்னே நகர்ந்து அவன் வாயைப் பொத்தி,

 

“போதும் போதும் நிறுத்து!” என்றாள் ஜீவா.

 

“கையை எடு மூலான்! நான் இன்னும் நன்றி சொல்லி முடிக்கல” என்றான் ஜோனா.

 

“இப்போ எதுக்கு வரிசையா உன் பாடி பார்ட்டுக்கெல்லாம் நன்றி சொல்லிட்டு இருக்க நீ?”

 

“அம்மா, அப்பா, வைப், ஹஸ்பெண்ட், கடவுள் இப்படி நெருங்கியவங்க கிட்ட கூட நாம நன்றி உணர்ச்சிய பல சமயங்களில் காட்டிடறோம். ஆனா நமக்குன்னு பார்த்து பார்த்து எல்லாம் செய்யற நம்ம உடல் உறுப்புகளுக்கு மட்டும் நன்றி சொல்லறது இல்ல? அது ஏன் ஜீவா?”

 

“பைத்தியமா உனக்கு? நம்ம உடல் உறுப்பு வேற நாம வேறன்னு தனி தனியாப் பிரிச்சுப் பார்க்க முடியுமா! அது எல்லாம் சேர்ந்து தானே நாம்! ஓன் பேக்கேஜ்”

 

“எக்ஸேக்ட்லி! அது மாதிரிதான் நீ எனக்கு எது செஞ்சாலும் நன்றி சொல்லவோ என் நன்றி உணர்ச்சியக் காட்டனும்னோ எந்த அவசியமும் இல்ல!” என வெளியே சொன்னவன்,

 

‘பிகாஸ் இனி நான் வேற நீ வேற இல்ல மூலான். சாப்பாடு எடுத்துக் கொடுக்கற கைக்கு நான் எப்படி நன்றி சொல்லத் தேவையில்லையோ, அதே மாதிரி இனி என் கைக்கு கையா இருக்கப்போற உனக்கும் நான் நன்றி சொல்லி பிரிச்சு வைக்கப் போறது இல்ல! என் உடலின் அங்கங்கள் போல என் வாழ்க்கையின் முக்கிய அங்கம் நீ! வீ ஆர் எ டீம் நவ்! எனக்கு எல்லாமுமா நீ இருக்கனும், உனக்கு உலகமா நான் இருப்பேன்!’ என மனதில் சொல்லிக் கொண்டான்.

 

“யா ரைட்! நமக்குள்ள இந்த நன்றி, சாரி, எக்ஸ்கியூஸ் மீன்ற பார்மாலிட்டிஸ்லாம் வேணா ஜோனா! நீ இங்க இருக்கற வரைக்கும் உனக்கு எல்லாமே நான் தான் செஞ்சுக் குடுப்பேன்! சரியா?” என்று சொல்லியவாறே அவன் முகத்தை நிமிர்ந்துப் பார்த்தவள் பேச்சிழந்துப் போனாள்.

 

பேச்சு வாக்கில் அவள் அருகே நகர்ந்து அமர்ந்திருந்தவனின் கை, இவளின் கால் முட்டியை மிக மென்மையாக தடவியபடி இருந்தது. இவள் பேசுவதைக் கேட்க, முன்னே சாய்ந்து அமர்ந்திருந்தவனின் பச்சைக் கண்கள், இவள் மட்டுமே பிரபஞ்சத்தின் பேரழகி என்பது போல அவள் முகத்தை இன்ச் இன்ச்சாக ரசித்துக் கொண்டிருந்தது. எப்பொழுதும் அவன் உடல் மொழியில் ஒரு திமிர் இருக்கும். நானே ராஜா, மற்றவர்கள் எல்லாம் எனக்கு கூஜா என்பது போல ஓர் அலட்சியம் இருக்கும். ஆனால் இன்று உடல் மொழி மென்மையாகியிருக்க, முகம் மிருதுவாயிருந்தது. உதட்டில் ஆளை மயக்கும் வசீகரமான புன்னகை வீற்றிருந்தது.  

 

சடாரென எழுந்துக் கொண்டவள்,

 

“நான் துணி துவைக்கனும்” என சொல்லிக் கொண்டே வீட்டின் பின் கதவைத் திறந்து வெளியேறி விட்டாள்.

 

“ஓடு, ஓடு! எவ்வளவு ஓட முடியுமோ ஓடு! ஓடி களைச்சு என் நெஞ்சுல சாஞ்சிக்கத்தான் வரனும்! வர வைப்பேன்” என மெலிதாய் முணுமுணுத்தவன்,

 

“இந்த நிகழ்காலம்

இப்படியே தான் தொடராதா

என் தனியான பயணங்கள்

இன்றுடன் முடியாதா!!!” என பாடியபடியே அவளைத் தேடிப் போனான்.

 

துணி துவைக்கப் போகிறேன் என்றவள், முன்னே சுற்றி வந்து மர ஊஞ்சலில் அமர்ந்திருந்தாள்.

 

“ஜீவ்!!!” என அழைத்தப்படியே அவளை நெருங்கியன், ஊஞ்சலை ஆட்டி விட ஆரம்பித்தான்.

 

கயிற்றை இறுக்கமாகப் பற்றிக் கொண்டவள்,

 

“என்ன?” என கேட்டாள்.

 

“நீ டேட்டிங் போயிருக்கியா?” என கேட்டான் ஜோனா.

 

அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

 

ஊஞ்சலை இழுத்துப் பிடித்து நிறுத்தியவன், அதன் கயிற்றை பல சுற்று சுற்றி பின் கையை எடுத்துக் கொண்டான். இவள் காலை மேலே தூக்கிக் கொள்ள, கயிறு நேராகும் வரை ஊஞ்சலோடு இவளும் பல சுற்று சுற்றி வந்தாள். ஜீவா கலகலவென நகைக்க, ஆச்சரியத்துடன் அவள் சிரிப்பைப் பார்த்திருந்தான் ஜோனா. இது நாள் வரை அவள் புன்னகைத்துப் பார்த்திருக்கிறான், மெல்லிய சிரிப்பொலி கூட கேட்டிருக்கிறான். மலர்ந்து வாய் விட்டு சிரித்ததை இப்பொழுதுதான் பார்க்கிறான் ஜோனா. வரிசைப் பற்கள் பளீரிட, கண்கள் மின்னலடிக்க, கன்னக் கதுப்புகள் லேசாய் சிவந்திருக்க இவன் கண்களுக்கு அழகாய் தெரிந்தாள் ஜீவா.

 

சட்டென கரம் நீட்டி சிவந்திருந்த கன்னக் கதுப்பைத் தொட்டுப் பார்த்தான் இவன்.

 

“யூ ஆர் கார்ஜியஸ் மூலான்!”

 

தொட்டக் கையைத் தட்டி விட்டவள், ஊஞ்சலில் இருந்து எழுந்துக் கொண்டாள். கீழே கிடந்த குச்சியைப் பொறுக்கி மண்ணில் எதையோ நோண்ட ஆரம்பித்தாள் அவள். ஜீவாவின் செய்கையையே புன்னகையுடன் பார்த்திருந்தான் ஜோனா.

 

“யாரும் என்னை கூப்பிட்டதில்லை”

 

“என்ன?”

 

“யாரும் என்னை டேட்டிங் கூப்பிட்டதில்லை ஜோனா!”

 

“சரி நான் கூப்பிடறேன்! ரெண்டு பேரும் இன்னிக்கு டேட் போகலாமா ஜீவா?”

 

ஆச்சரியமாக அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் இவள். வெடித்து வரப் பார்க்கும் புன்னகையைக் கட்டுப் படுத்த முயன்றவளின் செய்கையை ஒரு பக்க உதட்டின் துடிப்பும், கண்களின் வெளிச்சமும் படம் போட்டுக் காட்டியது.

 

“ஹ்ம்ம், டேட்டிங் வேணா ஜோனா! வேணும்னா ஒரு ப்ரேண்ட்லி அவுட்டிங்னு வச்சிக்கலாமா?” என கேட்டாள் காரிகை.

 

“சரி! என்னோட டேட்டிங்கும் வேணா உன்னோட அவுட்டிங்கும் வேணா! ரெண்டையும் சேர்த்து டேவுட்டிங்னு வச்சிக்கலாமா?” என சிரியாமல் இவன் கேட்க, இவளுக்குத்தான் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.

 

“சரி டேவுட்டிங்கே போகலாம்!”

 

கையில் இருந்த கடிகாரத்தைத் திருப்பிப் பார்த்தவன்,

 

“பதினொரு மணிக்கு கிளம்பலாம் மூலான். வெளிய லஞ்ச் சாப்பிட்டுட்டு, சுத்திட்டு, க்ரோஷரி வாங்கிட்டு, டின்னரும் முடிச்சுட்டே வரலாம்” என திட்டமிட ஆரம்பித்தான்,

 

“ஓகே டன்!” என ஒத்துக் கொண்டாள் இவள்.

 

“சரி, நான் போய் குளிச்சிட்டு வரேன்! நேத்துக் கூட குளிக்கல”

 

“வாட்?” என முகத்தை சுளித்தாள் ஜீவா.

 

“என்ன வாட்? எங்க ஊருல எல்லாம் விண்ட்டர்ல வாரத்துக்கு ரெண்டு தடவைக் குளிக்கறதே பெரிய விஷயம். அதோட அடிக்கடி குளிச்சா ஸ்கீன் ரொம்ப ட்ரையாகிடும் மூலான். கண்ட கண்ட ஸ்கீன் டீசீஸ்லாம் வரும்! ஒரு வாரம் குளிக்கலனாலும் நான் வாசமாத்தான் இருப்பேன்! நீ நம்பலைனாலும் அதுதான் நிஜம்” என்றவன் அவளை பேர் ஹக்(bear hug) செய்துக் கொண்டான்.

 

“வாசமாத்தானே இருக்கேன்! ஆமாத்தானே, ஆமாத்தானே?” என கேட்டப்படியே அவளை இன்னும் தனக்குள் இறுக்க, அவனின் வாசம் இவளுக்குள் என்னென்னவோ செய்தது.

 

“ஆமாமா! நீ ரொம்ப வாசம்தான்! இப்ப என்னை விடு” என நெளிந்து வளைந்து அவன் அணைப்பில் இருந்து வெளியானவள்,

 

“யூ ஸ்டிங்க் லைக் எ ரோட்டேன் டோமேட்டோ!(அழுகிப் போன தக்காளி போல நாற்றமடிக்கிறான்)” என சொல்லி நாக்கைத் துருத்திக் காட்டி விட்டு ஓட்டமெடுத்தாள்.

 

“ஏய்! வேய்ட் ஆப் யூ லையர்!” என சிரிப்புடன் அவளைத் துரத்தியபடியே ஓடினான் ஜோனா.  

 

சரியாக பதினொரு மணிக்கு ரூமின் கதவைத் தட்டினான் ஜோனா. அவன் ஏற்கனவே குளித்து ஜீன்ஸ், டீஷர்ட்டில் வாசமாய் கிளம்பி இருந்தான். கதவைத் திறந்து மெல்ல வெளியே வந்தாள் ஜீவா. அவனை ஏறிட்டுப் பார்க்காமல்,

 

“போகலாமா?” என கேட்டவளை மேலிருந்து கீழ் வரை ரசித்துப் பார்த்தவன்,

 

“பீவீட்” என மெலிதாக விசிலடித்தான்.

 

முகம் லேசாய் சிவந்துப் போக,

 

“மாத்திடவா ஜோனா?” என கேட்டவள் கைகளைப் பிசைந்தப்படி நின்றிருந்தாள்.

 

கருப்பு நிறத்தில் முட்டி வரை இருக்கும் ட்ரேஸ் ஒன்றை அணிந்திருந்தாள் அவள். இடுப்பை சுற்றி வெள்ளைக் கற்கள் ஒட்டியாணம் போல அலங்கரிந்திருந்தது. அவளின் வாழைத்தண்டு கால்களையும், ஒட்டி இருந்த வயிற்றையும், உடலின் வளைவு சுளிவுகளையும் அந்த உடை அழகாய் எடுத்துக் காட்டியது.

 

எப்பொழுதும் ஷார்ட்ஸ், ஜீன்ஸ், டீஷர்ட் என வலம் வருபவள் திடீரென இப்படி வந்து நிற்க, இவனுக்குமே இன்ப அதிர்ச்சியாய் தான் இருந்தது. அவள் பதட்டமாக இருப்பதை உணர்ந்துக் கொண்டவன், அவள் கரத்தைப் பற்றி அழுத்திக் கொடுத்தான்.

 

“மூலான்! இந்த ட்ரஸ்ல நீ அழகா இருக்கன்னு சொன்னா, அது பொய்!” என அவன் சொல்ல, அவள் முகம் கசங்கியது. திரும்ப ரூமின் உள்ளே போக முயன்றவளை, கைப்பிடித்துத் தடுத்தான் ஜோனா.

 

“நீ போட்டிருக்கவும் தான் இந்த ட்ரஸ்க்கே அழகு வந்துருக்குன்றது தான் நெஜம்” என அவள் கண் பார்த்து இவன் சொல்ல, கசங்கிய முகம் மெல்ல மெல்ல தெளிய, லேசாய் புன்னகை நெளிந்தது அவள் உதட்டில்.

 

அவள் கைப்பிடித்து அழைத்து வந்தவன், ஹாலில் நிறுத்தி வைத்து விட்டு கிச்சனுக்குப் போனான். திரும்பி வரும் போது, எதையோ முதுகுக்குப் பின்னால் மறைத்து எடுத்து வந்தான் ஜோனா. அவள் முன்னே வந்து நின்று,

 

“தடா! கொக்கே(விளக்கம் கீழ வருது) ஃபோர் மை பியூட்டி” என கையில் இருந்த பூங்கொத்தை நீட்டினான்.

 

“வாவ்!” வார்த்தை வரவில்லை அவளுக்கு.

 

அது தென்னையோலையைக் கொண்டு அவனே செய்திருந்த பூங்கொத்து.

 

“எங்க ஊருல டேட்டிங் போகறப்போ பூ குடுத்துத் தான் கூட்டிப் போவாங்க! இங்க பூ எதுவும் கிடைக்கல! அதானால கிடைச்சத வச்சு நானே இத செஞ்சேன். பூ வச்சு செஞ்சா பொக்கே, கொகனெட் இலை வச்சு செஞ்சதால இது கொக்கே!” என அழகாய் முறுவலித்தான் அவன்.

 

சந்தோஷமான மனநிலையிலேயே இருவரும் வெளியே கிளம்பினார்கள். எப்பொழுதும் போல இவன் தொப்பி, கண்ணாடி மூலம் ஓரளவு தனது அடையாளத்தை மறைத்திருந்தான். முதலில் பாண்டியில் இருந்த ஒரு வெஸ்டர்ன் உணவகத்தில் மதிய உணவை முடித்துக் கொண்டவர்கள், சுற்றோ சுற்று என சுற்றினார்கள். ப்ரோவிடென்ஸ் மாலுக்கு சென்றவர்கள், கடை கடையாக நுழைந்து அலசினார்கள். ஜோனாவுக்கு கலர் கலராக போலோ டீஷர்டுகள் வாங்கிக் கொடுத்தாள் ஜீவா. பணம் செலுத்த தனது கிரேடிட் கார்டை அவன் கொடுக்க, இவள் விடவேயில்லை.

 

அவனுக்கு இவள் வாங்கிக் கொடுக்க, இவனோ தனது மூலானுக்கு அழகான க்ளட்ச்(பர்சை விட சற்று பெரியதாக இருக்கும் கைப்பை), டாப்ஸ், கல் வைத்த காலணி என வாங்கிக் கொடுத்தான். அதன் பிறகு நேரு ஸ்ட்ரீட்டில் இருந்த கடை வீதியை அலசினார்கள்.

 

அங்கிருந்த கலைப் பொருட்கள் விற்கும் கடையில் வெள்ளியில் ஆன பெண்டெண்ட் ஒன்றை திருப்பி திருப்பிப் பார்த்துக் கொண்டிருந்தாள் ஜீவா.

 

ஆங்கில ஜே வடிவத்தில் இருந்த அந்த பெண்டனை சங்கிலியோடு எடுத்து அவள் கழுத்தில் வைத்துப் பார்த்தான் ஜோனா. பின் அங்கிருந்த கண்ணாடியை எடுத்துக் காட்டியவன்,

 

“பிடிச்சிருக்கா மூலான்?” என கேட்டான்.

 

ஆமென அவள் தலையாட்ட, கையைப் பின்னால் கொண்டு போய் கொக்கியை அவனே மாட்டி விட்டான். அந்நேரம் லேசாய் மழைத் தூரல் போட, பக்கத்துக் கடையில் விற்கப்படும் விண்ட் ச்மைம்ஸ் டிங், டிங்கென அழகாய் இசைக் கூட்டியது.

 

இந்திய கரண்சி இவன் இன்னும் மாற்றியிருக்காததால், ஜீவாவே பணம் செலுத்த முயன்றாள். அவள் கைப் பிடித்துத் தடுத்தவன், நூறு டாலரை அப்படியே கடைக்காரரின் கையில் திணித்து விட்டு வந்தான்.

 

தனது புது சங்கிலியையும் பெண்டனையும் புன்னகையுடன் தொட்டுத் தடவிப் பார்த்துக் கொண்டே வந்தாள் ஜீவா. அதன் பிறகு பீச் ரோட்டுக்குப் போனார்கள் இருவரும். காந்தி சிலையைப் பார்த்து,

 

“க்ரேண்ட்பா, எங்களை எல்லாம் போ போன்னு சொன்னீங்க! உங்க பேத்தி என்னடான்னா என்னை மயக்கி இங்கயே இருக்க வச்சிருவா போலிருக்கே!” என புன்னகையுடன் முணுமுணுத்தான் ஜோனா.

 

கடல் காற்று முகத்தை மோத, இருவரும் எதேதோ பேசிக் கொண்டே நடந்தனர். மெல்ல அவள் தோள் உரசும் அளவுக்கு நெருங்கி நடந்தவன், அவள் கையைத் தன் கைக்குள் பிணைத்துக் கொண்டான். அவள் கையை இழுக்க முனைய,

 

“இது எனக்கு புது நாடு, புது இடம் மூலான். கூட்டத்துல நான் காணாம போய்ட்டா என்ன செய்யறது? அதான் உன் கையைப் பிடிச்சிருக்கேன்!” என சொல்லி இன்னும் இறுக்கிக் கொண்டான் பிடியை.

 

இரவு உணவையும் அங்கேயே நல்ல ஒரு ரெஸ்டாரண்டில் முடித்துக் கொண்டார்கள். அதன் பிறகு ஒரு சூப்பர் மார்க்கேட்டில் தேவையான பொருட்களை வாங்கி காரில் அடுக்கினார்கள் இருவரும். பக்கத்தில் இருந்த செல்போன் கடையில் இவனுக்கு புதிதாய் இந்திய சிம்கார்ட் ஒன்று வாங்கிக் கொடுத்தாள் ஜீவா.

 

“கூடிய விரைவில உனக்கு தேவைப்படும் ஜோனா” என சொல்லியவள் அவனது போனில் அதை பொறுத்திக் கொடுத்தாள்.

 

களைத்துப் போய் காரில் ஏறி அமர்ந்தவர்கள், அமைதியாகவே வீடு நோக்கிப் பயணித்தார்கள். ப்ளேயரில் யுவனின் இசையில் பாடல்கள் ஒலித்தன. பாடல்களை கேட்டுக் கொண்டே வந்தவன்,

 

“இந்த பாட்ட மறுபடி போடு மூலான்” என கேட்டான்.

 

மறுபடி மறுபடி கேட்டவன்,

 

“வதைத்திடும்னா என்ன மூலான்?” என கேட்டான்.

 

“ஹ்ம்ம்!! டார்ச்சர்னு சொல்லலாம்”

 

மெல்லிய புன்னகை உதட்டில் நெளிய,

 

“ஹ்ம்ம் சொல்லலாம், சொல்லலாம்” என்றவன், பாடலோடு சேர்ந்து பாட ஆரம்பித்தான்.

 

“என் உயிரை வதைத்திடும் அழகி நீ

என் இதயத்தில் அமர்ந்திடும் அரசி நீ

என் உடலினில் நதியாய் ஓடும் உதிரம் நீயடி”

 

அனுபவித்து அவன் பாட, அந்த குரல் தந்த மயக்கத்தில் மதி மயங்கித்தான் போனாள் ஜீவா!  

 

வீட்டை அடைந்து கதவைத் திறந்தவள், உள்ளே நுழையும் முன்னே கைப்பிடித்து நிறுத்தினான் ஜோனா.

 

“என்ன ஜோனா?” என கேட்டாள் ஜீவா.

 

“எங்க ஊருல டேட்டிங்க இப்படி முடிச்சு வைக்க மாட்டாங்க. அதுக்குன்னு சில ரூல்ஸ் இருக்கு மூலான்”

 

“ஓஹோ! இப்போ நாம போனதுக்குப் பேரு டேட்டிங்கும் இல்ல, அவுட்டிங்கும் இல்லன்னு என்னமோ சொன்ன! இப்போ என்னன்னா ரூல்ஸ்லாம் பேசற!’ என கேட்டாள் ஜீவா.

 

“ஓ காட் மூலான்! என்ன பேரு வச்சுக் கூப்பிட்டாலும் நாம போனது டேட்டிங் தான்! சோ, நான், இப்போ இந்த டேட்டிங்க எங்க ஊர் ஸ்டைல்ல முடிச்சு வைக்கப் போறேன்” என்றவன், பேச இடம் கொடுக்காமல் தன் கரங்களால் அவள் கன்னங்களைத் தாங்கிக் கொண்டான்.

 

என்ன என்பது போல பயப்படாமல் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள் ஜீவா. அவளின் நேர்க்கொண்டப் பார்வை இவனுக்கு சவாலாய் இருந்தது.

 

‘உன் கண்ணுல எப்படி மயக்கம் தெரியும்?’ என மனதிற்குள்ளே மறுகினான் அவன்.

 

ஆழ மூச்செடுத்து தன்னை நிதானப்படுத்தியவன்,

 

“லெட்ஸ் டூ பார்ட்டர்(பண்டமாற்று) பிஸ்னஸ் பேபி!” என சொல்லி, தன் உதட்டை அவள் உதட்டில் பொறுத்தி மெலிதாய் முத்தமிட்டான்.

 

அவள் கை சட்டென உயர்ந்து அவன் தோளை இறுக்கிப் பிடித்துப் பின்னே தள்ள முயன்றது. அவளின் பிடித்தமின்மையை உணர்ந்துக் கொண்டவன், அவள் உதட்டை விடுவித்தான்.

 

“மூலான்! இட்ஸ் எ பெக்(உதட்டை லேசாக ஒத்தி எடுப்பது) ஒன்லி! பிடிக்கலனா விட்டுடலாம். சாரி ஜீவா!” என விலக முயன்றான்.

 

தோளில் வைத்திருந்த அவள் கை அவனை விலக விடாமல் இறுக்கமாகப் பிடித்திருந்தது. அவன் குனிந்து அவள் கண்களைப் பார்க்க, அதில் ஆயிரம் பாவங்கள். பயம், தயக்கம், பதட்டம், சோகம், ஆசை என மாறி மாறி வந்துப் போனது. பின் கண்களை இறுக்கி மூடிக் கொண்டவள், காலை மெல்ல உயர்த்தி இவளே அவன் உதட்டில் முத்தமிட முயன்றாள். கண்களை மூடி இருந்ததால் உதட்டுக்கு பதில் ஜோனாவின் தாடையில் பதிந்தது ஜீவாவின் முதல் முத்தம்.

 

ஒற்றைக் கண்ணை மட்டும் இவள் மெல்ல திறந்துப் பார்க்க, முகம் முழுக்க புன்னகையுடன் நின்றிருந்தான் ஜோனா.

 

“ஓ மை ஏஞ்சல்!” என்றவன் புதைக்குழியாய் இழுத்த அவள் உதட்டில் விழுந்து, புதைந்து, சிதைந்து காணாமலே போனான்.

 

அவன் தந்த இதழ் முத்தம் இவள் உடல் மொத்தத்தையும் சுனாமியாய் சுருட்டிப் போட்டது! இது வரை உணர்ந்திராத உணர்வுகள் உயிர்த்தெழ, கற்சிலை ஒன்று உயிர் பெற்று எழுந்தது. உடல் உருக, மேனி மெய்சிலிர்க்க, கண்களில் கண்ணீர் அருவியாய் பொங்கியது அவளுக்கு. தேனாய் தித்தித்த இதழ் அமுதத்தில் உவர்ப்பு நீர் கலக்க, பட்டென கண்ணைத் திறந்தான் ஜோனா.

 

“ஓ மை மூலான்!” என்றவன் தன் ஜீவாவை தனது ஜீவனுக்குள் பதுக்கிக் கொண்டான்.

 

மயங்குவாள்…

 

(வணக்கம் டியர்ஸ்…போன எபிக்கு லைக் காமெண்ட்,மீம் போட்ட அனைவருக்கும் நன்றி.. பாண்டிய பத்தி விளக்கங்கள் கொடுத்த முருகேசன் சாகோதரருக்கு எனது நன்றி. இந்த எபில ஜோவா(ஜோனா+ஜீவா) மட்டும்தான் வராங்க! தீரன கொண்டு வந்தா இவங்களோட உணர்வுகள நீங்க உள்வாங்க முடியாம போய் விட கூடிய சாண்ஸ் இருக்கு. இதோட அடுத்த எபில சந்திக்கலாம் டியர்ஸ்..லவ் யூ ஆல்..)