MMV-10

MMV-10

அத்தியாயம் – 10

மறுநாள் காலைபொழுதில் கல்லூரி மரத்தடியில் மாணவ, மாணவிகள் கும்பலாக அமர்ந்திருந்தனர். சுமிம்மாவும் அவர்களுடன் இணைந்து கொள்ள நேரம் செல்வது அறியாமல் கலகலப்பாகப் பேசிகொண்டிருந்தார்.

அஜயின் மனம் அவரிடம் பேச நினைத்தாலும் அவனால் அது முடியாமல் போனது. பிரவீன் வரவை எதிர்பார்த்து அஜயின் கவனத்தைக் கலைத்தாள் அந்தப்பெண்.

“அண்ணா.. அண்ணா..” என்ற அழைப்புடன் அஜய் அருகே அந்தப்பெண் ஓடிவர மற்றவர்களின் கவனமும் அந்தப்பெண்ணின் பக்கம் திரும்பியது.

“என்ன பிரச்சனை?” அந்தப்பெண்ணை அவன் விசாரிக்க, “அண்ணா இவன் என்னை ரொம்ப தொல்லைச்செய்கிறான்..” அவனிடம் அவள் புகார்பத்திரம் வாசித்தாள்

“இந்த பொண்ணு நல்ல ஆள்கிட்டதான் கம்பிளைன்ட் பண்ணியிருக்கிற.. இன்னைக்கு அவனோட கன்னம் வீங்குவது உறுதி..” தலைப்புசெய்தி வாசித்தாள் ரித்திகா. அவளின் பின்னோடு வந்து நின்றவனைக் கண்டு புருவம் உயர்த்தினான் அஜய்.

அந்த பையனைப் பார்த்த சுமிம்மா, “இவன் உன்னைக் கிண்டலடிக்கிறானா?” என்று கேள்விக்கு அவள் தலையசைத்தாள் அந்தப்பெண்

“ஏண்டா நீயெல்லாம் திருந்தவே மாட்டாயா?”அந்த பையனின் தலையில் தட்டினார் சுமிம்மா. அஜய் கேட்க நினைத்த கேள்வியைக் கேட்டார் சுமிம்மா.

“இன்னைக்கு சுமித்ரா மேடம்கிட்ட அடிவாங்கிட்டுதான் இவன் போவான் என்று நினைக்கிறேன்..” என்றாள் ரேணு சிரிப்புடன்.

சுமிம்மா தலையில் தட்டியதில் கோபமான அந்த மாணவனோ, “நான் அவள் பின்னாடிச் சுத்துகிறேன். இதில் உனக்கு என்ன வந்துச்சு. என்னைக் கண்டிக்க நீ யாரு..” என்றவன் திமிருடன் கேள்வி அஜயின் கரங்கள் அவனின் கன்னத்தைப் பதம் பார்த்தது.

அந்த பையனின் கன்னத்தில், ‘பளார்..’ என்று அறைந்தபிறகே தன்னுடைய செயலை உணர்ந்தான் அஜய். அவனின் செயலை அங்கிருந்த யாருமே எதிர்பார்க்கவே இல்லை.

எல்லோரும் அவனைத் திகைப்புடன் பார்க்க, “இன்னொரு முறை அவங்களை மரியாதை இல்லாமல் பேசின மகனே உனக்கு சமாதிக்கட்டிவிடுவேன் ஜாக்கிரதை..” என்று கர்ஜித்தவன் திரும்பி வகுப்பை நோக்கிச் சென்றான்.

திவாகர், ரேணு, ரித்தி மற்ற மாணவர்கள் எல்லோருமே அவனை திகைப்புடன் பார்க்க, ‘அம்மா என்ற பாசம் மனசில் வந்துவிட்டது போல..’ என்று நினைத்தார் சுமிம்மா. தன்னுடைய மகனைப்போல அஜய்யைப் பாவித்த சுமிம்மாவின் மனதிற்குள் அவரையும் மீறி அவனின் மீதொரு பாசம் வளர்ந்தது.

தாய்க்கும் – மகனுக்கும் இடையே இங்கொரு மௌனயுத்தம் நடைபெற அவனின் பாசத்தை சுமிம்மா அறிய ஒரு வாய்ப்பாக அமைந்தது அந்த நிகழ்வு.

அஜயின் மௌனம் அப்படியே இருக்க நாட்கள் அதன் போக்கில் நகர, நிலாவும் தன்னுடைய இயல்பைத் தொலைக்காமல் எப்பொழுதும் போலவே இருந்தாள். வளர்ந்த இரண்டு குழந்தைகளின் மனதை அறிய முடியாமல் சுமிம்மாதான் சிந்தனையுடன் இருந்தார்.

அன்றைய நாளுக்குப்பிறகு பாரதியின் மனதில் சில சந்தேகங்கள் தோன்ற அதைத் தீர்க்கும் வழி அறியாமல் தனக்குள் திண்டாடிப் போனான். அவனின் மனநிலை முற்றிலும் வேறாக இருந்தது. நிலாவின் இந்த முகம் நிஜம் என்று அவனின் மனம் நம்ப மறுத்தது.

தனக்குள் உருவான காதலை வெளிபடுத்த முடியாமலும் அதே நேரத்தில் அவளின் மீது தனி உரிமைச் செலுத்த முடியாத நிலையில் அவளின் படிப்பை மையமாக வைத்து அவளைவிட்டு விலகி நின்றான் பாரதி.

சண்டே என்பதால் காலையில் ஜாக்கிங் முடித்துவிட்டு வந்து குளித்த பாரதி சமையலறைக்குள் நுழையும் பொழுது அறையிலிருந்து எழுந்து வந்த பிரவீன்,“குட் மார்னிங் அண்ணா..” என்றான்.

“குட் மார்னிங் பிரவீன்..” என்ற பாரதி அவனிடம் காபியைக் கொடுத்துவிட்டு வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டுச் சமையலைக் கவனித்தான். அவன் கொடுத்த காபியைப் பருகியவன் குளிக்க அறைக்குச் சென்றான்.

அவன் கீழே வருவதற்குள் மட்டன் குழம்பு வைத்து மீனைப்பொறித்து எடுத்து டைனிங் டேபிளில் வைத்து சாப்பாடு வேலைகள் முடித்த பாரதி, தன்னறைக்கு சென்று களைப்பு தீர குளித்துவிட்டு வந்தான்.

வீட்டிற்குள் வீசியக் கமகம வாசனையை சுவாசத்தில் நிரப்பிய பிரவீன், “அண்ணா சீக்கிரம் வா வஞ்சரமீன் வாசனை என்னை சுண்டி இழுக்குது..” என்றபடியே டைனிங் டேபிளில் வந்தமர்ந்திட பாரதியும் அவனின் பின்னோடு வந்து சேர்ந்தான்.

இருவரும் சாப்பாட்டை முடித்துவிட்டு ஹாலிலிருந்த சோபாவில் அமர்ந்த பாரதி ஒரு மருத்துவ புத்தகத்தை எடுத்து அதில் மூழ்கிவிட பாவம் பிரவீனிற்கு தான் பொழுதே போகாமல் என்ன செய்வது என்ற யோசனையுடன் அமர்ந்திருந்தான்..

சிறிதுநேர சிந்தனைக்கு பிறகு அண்ணனின் பக்கம் திரும்பிய பிரவீன், “அண்ணா நம்ம இருவரும் எங்காவது வெளியே போகலாமா?” என்று கேட்டான்.

புத்தகத்திலிருந்து தனது பார்வையை திருப்பிய பாரதியின் பார்வையின் பொருள் உணர்ந்து, “ப்ளீஸ் அண்ணா..” அவன் கெஞ்சிட, “சரிடா..” என்றான் பாரதி.

அடுத்த அரைமணிநேரத்தில் இருவரும் காரில் வெளியே கிளம்ப, “அண்ணா நீ ஒரு மேடமை நம்ம காலேஜில் சேர்த்துவிட்ட இல்ல அவங்க வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போகிறாயா?நான் இன்னும் அவங்கள பார்க்கல” ஆர்வத்துடன் கேட்டான்.

பாரதி சுமிம்மாவின் வீட்டிற்கு காரைத் திருப்பிட பிரவீன் குஷியாக வெளியே வேடிக்கை பார்த்தான்.  தம்பியின் செயல்கள் ஐந்து வயது குழந்தையின் செயல்களோடு  ஒத்துப்போவதை நினைத்து புன்னகைத்தவண்ணம் காரை செலுத்தினான்.

காலையில் வீட்டின் வேலைகளை முடித்த சுமிம்மாவின் நினைவுகள் நிலாவைச் சுற்றி வந்தது. அவளைச் சந்தித்த நாளிலிருந்தே அவளைப்பற்றி எந்த தகவலும் அறியாமலிருந்த சுமிம்மாவின் நினைவுகள் எல்லாம் இப்பொழுது அவளையே சுற்றி வந்தது.

‘இவளோட மனசில் என்ன நினைக்கிற? ஏன் இவள் வீட்டைவிட்டு வந்தாள்?’ என்ற சிந்தனையுடன் உழன்றாள்.

“நிலா எங்காவது வெளியே போகலாமா?” முதலில் பேச்சை எடுத்தார்.

“நான் வரல சுமிம்மா..” அவரின் பேச்சிற்கு முற்றுபுள்ளி வைத்த நிலா கையில் அவள் புத்தகத்தை எடுத்தாள்.

“சும்மா படிக்கிறேன் என்று புக்கை எடுத்துட்டு உட்கார்ந்த எனக்கு கெட்ட கோபம் வரும்..” என்று அவளை மிரட்டிட, ‘ஏன் இந்த அம்மா என்னை புரிஞ்சிக்க மாட்டேங்கிறாங்க..’ மனதிற்குள் நினைத்தாள்.

‘இப்பொழுது அவங்க என்ன உன்னைத் தவறாக கேட்டுடாங்க..’ என்று மனம் அவளை இடித்துரைக்க, கையில் எடுத்த புத்தகத்தைக் கீழே  வைத்துவிட்டு, “ஒரு நிமிஷம் சுமிம்மா..” எழுந்து பின் வாசலுக்குச் சென்றாள்.

‘இவள் போற வேகத்தைப் பார்த்த சுவர் ஏறி குதித்தாலும் குதிப்பா..’ என்ற சிந்தனையுடன் முன் வாசலுக்கு சென்று வீட்டின் சுவற்றிற்கு அருகே சென்று நின்றார் சுமிம்மா.

அதேநேரத்தில் காரை வீட்டிற்கு அருகே நிறுத்தியவன் அங்கே நின்ற சுமிம்மாவைப் பார்த்தும், “என்ன அம்மா வாசலில் நிற்கிறாங்க..” என்ற சிந்தனையுடன் கூறினான்.

பிரவீன் காரைவிட்டு கீழிறங்கி, “அவங்கதான் சுமிம்மாவா அண்ணா..” என்று கேட்க, “ம்ம்..” என்றவன் காரைவிட்டு இறங்கினான்.

கார் வந்து நின்றதைக் கவனித்த சுமிம்மா அதிலிருந்து பாரதி இறங்குவதைக் கண்டதும், “வா பாரதி..” என்று பாசத்துடன் அழைத்தார்

“என்னம்மா நாங்க வருகிறோமே என்று உங்களுக்கு முன்னாடியே தெரியுமா?” என்று பிரவீன் அவனிடம் கேட்க, “இந்த பையன் யாரு பாரதி..” என்றவர் பார்வையால் அளந்தார்.

அவனின் முகஜாடையும், பாரதியின் முகஜாடையும் ஒத்துபோகவே, “உன்னோட தம்பியாப்பா..” என்றவர் கேட்க, பாரதி புன்னகைத்தார்.

“சூப்பர்மா இதன் நான் உங்களிடம் எதிர்பார்க்கல..” என்றவன் ஆச்சரியத்துடன் கூறிவே, “நானும் நீ வருவாய் என்று எதிர்பார்க்கலப்பா..” என்ற சுமிம்மா புன்னகைத்தார்.

அப்பொழுதுதான் அவர் வாசலில் நிற்பதைக் கவனித்த பாரதி, “இங்கே நின்னு என்னம்மா பண்றீங்க..” சந்தேகத்துடன் அவன் கேட்க, “அதை நீயே நின்னு பாரு புரியும்..” என்றவர் புதிர்போட்டவர் மதில்சுவரைப் பார்த்தார்.

அண்ணனும், தம்பியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துகொண்டு, ‘என்னவாக இருக்கும்..’ காரணம் புரியாமல் அவர்களும் சுவரையே பார்த்தனர்.

பின் வாசலுக்கு சென்ற நிலாவிற்கு என்ன செய்வது என்று தெரியாமல் இங்கும் அங்கும் சிறிதுநேரம் நடந்தவள்,    “வீட்டிலிருந்த தானே என்னை வெளியே கூப்பிடுவீங்க..” என்றவளின் கண்களில் மதில் சுவரும், ஏணியும் விழுந்தது.

“வேற வழியே இல்ல சுவரேறிக் குத்திக்க வேண்டியதுதான்..” என்றவள் ஒரு முடிவுடன் ஏணியில் ஏறி மறுபக்கம், “ஜங்..” என்று குதித்தாள்.

அவள் குதித்த வேகத்தைக் கவனித்த பாரதி, “அடிப்பாவி சுவர் ஏறிக் குதிக்கிறாளே..” அதிர்ச்சியுடன் அண்ணன் வாய்மீது விரல்வைத்து திகைத்து நின்றான்.

பிரவீனோ, ‘கணக்கு எங்கயோ இடிக்கிறதே..’ என்று நிலாவையும் பாரதியையும் மாறிமாறி பார்த்தான்.

“இனிமேல் வெளியே போகலாம் வான்னு யாரைக் கூப்பிடுறீங்க என்று நானும் பார்க்கிறேன்..” என்று திரும்பியவள் அவனைப் பார்த்ததும் அதிர்ச்சியில் சிலையென உறைந்தாள்.

“இதை உன்னிடம் எதிர்பார்த்தேன் நிலா..” என்ற சுமிம்மாவின் அங்கே கண்டதும், ‘ஐயோ வசமாக மாட்டிகிட்டேன்.. இந்த அம்மாவிற்கு இருந்தாலும் இவ்வளவு அறிவு இருக்கவே கூடாது..’ என்றவள் மனதாரச் சபித்தாள்.

சுமிம்மாவின் அருகில் நின்ற பிரவீனைக் கவனித்த நிலா, ‘இவன் யாரு..’ என்ற கேள்வியுடன் அவள் அவனைப் பார்த்தாள்.

‘அந்த ரயிலில் பயணம் வழிமாற இந்த அக்கா காரணமோ..’ என்ற சந்தேகத்துடன் தமையனை திரும்பிப் பார்த்தான் பிரவீன். அவனின் பார்வையைத் தொடர்ந்து தன் பார்வையைச் செலுத்தினாள் நிலா.

அவளை பார்த்தவண்ணம் காரில் சாய்ந்து நின்றிருந்த பாரதியைப் பார்த்தும், “இந்த ஜந்து எப்பொழுது வந்தது என்று தெரியல.. ஐயோ நிலா உனக்கு ராகு காலத்தை விட எமகண்டம் உச்சியில் நிற்குது..” அவளின் மனம் திக்கென்றது

“நிலாம்மா நாங்க எல்லாம் அப்போவே ஹை ஜம்ப்பில் செம்பியன். அது மட்டும் இல்ல, நாங்க சுவர் ஏறி குதிச்ச விஷயம் உலகத்திற்கே தெரியும். நீ எனக்கே அல்வா கொடுக்க நினைக்கிற..” என்றவர் சிரித்துகொண்டே சொல்ல தலைகுனிந்து நின்றாள் நிலா.

பாரதிக்கு அவளை பார்க்கவே பாவமாக இருக்க, “என்னம்மா எதுக்கு இவள் இப்போ சுவர் ஏறிக்குதித்தாள்..” அவன் விளக்கம் கேட்க நிமிர்ந்த நிலா, ‘இப்போ இந்த விளக்கம் உனக்கு தேவையா?’ அவனை வெட்டும் பார்வை பார்த்தாள்.

அவனின் பார்வை அவளின் மீது நிலைத்திருக்க, “எங்காவது வெளியே போயிட்டு வரலாம் என்று கூப்பிட்டது ஒரு தப்பா? அதுக்கு சுவர் ஏறிக்குதிக்கிற பாரதி..” என்று அவனிடமே கம்பிளைன்ட் வாசித்தார் சுமிம்மா.

“என்ன வரவேற்பு எல்லாம் பலமாக இருக்கு. இங்கிருந்து எங்கே தப்பிச்சு போக நினைக்கிற..” இடதுபுருவம் உயர்த்தி அவன் கேள்வியாக பார்க்க, ‘விளக்கம் சொல்லியே ஆகணுமா..’ தோரணையாக நின்றாள் நிலா.

பிரவீன் அவர்கள் இருவரையும் மாறிமாறிப் பார்க்கவே, “ஸாரி..” என்று முணுமுணுத்துவிட்டு கேட்டைத் திறந்து வீட்டிற்குள் நுழைந்தாள்.

அவளின் மனநிலை அறியாத நிலையிலும் அவளுக்குள் இருக்கும் காயத்தின் வீரியம் அறிந்து வைத்திருந்தவர், “பாவம் அவளோட மனசு கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கட்டும் என்று வெளியே கூப்பிட்டேன். இது புரியாமல் சுவர் ஏறிக்குதிக்கிற..” என்று புலம்பினார்.

“அவளோட மனசில் என்னவோ இருக்கு. ஆனால் சொல்லாமல் எத்தனை நாளைக்குதான் மறைப்பாளோ?” என்று பெருமூச்சுவிட, அவனின் மனதிலும் மீண்டும் அதே கேள்விகள்.

“இருவரும் வாங்க வீட்டிற்குள் போகலாம்..” என்று நிலாவைப் பின் தொடர்ந்தார் சுமிம்மா.

வீட்டில் பொழுது போகாமல், ‘இந்த காலேஜ் இருந்தாலும் பொழுது போக மாட்டேங்கிறது.. லீவ் விட்டால் வீட்டிலும் பொழுது போகமாட்டேங்கிறது.. என்னடா ஒரே தொல்லையா போச்சு..’ என்ற சிந்தனையில் பின் வாசலின் படியில் சோகமாக அமர்ந்திருந்தாள்.

பின் வாசலில் அமர்ந்திருந்த ரித்துவைக் கவனித்த நிலா, “என்னக்கா இவ்வளவு சோகமாக உட்கார்ந்திருக்கீங்க..” அருகில் வரவே நிமிர்ந்தாள் ரித்திகா..

“வீட்டில் நேரமே போகல நிலா..” என்றவள் வருத்ததுடன் சொல்ல, “அப்போ வெளியே எங்காவது போயிட்டு வாங்க அக்கா..” அவள் ஐடியா கொடுக்கத்தாள்.

அவளின் பின்னோடு கேட்டிற்குள் நுழைந்த சுமிம்மா, “அவளுக்கு ஐடியா கொடு. உன்னை வெளியே கூப்பிட்ட சுவர் ஏறிக் குதி..” என்ற சுமிம்மாவின் குரல் அவளின் பின்னோடு கேட்க வாயை மூடிக் கொண்டாள் நிலா.

சுமிம்மாவின் குரலைக் கவனிக்காதவள், “நான் மட்டும் தனியாக எங்கே போறது..” என்று கோபத்துடன் கேட்க அசடு வழிய சிரித்தாள் நிலா

அவரின் பேச்சு அவனுக்கு சிரிப்பை வரவழைக்க, “டேய் அண்ணா நீயா இது?” என்றவனை ரித்திகாவின் குரலைக் கேட்டதும், “என்ன ரித்துவோட குரல் மாதிரி கேட்கிறது..” என்றவன் எட்டிப்பார்த்தான்.

அங்கே நிலாவுடன் பேசிக்கொண்டிருந்த ரித்திகாவைப் பார்த்தும், “ஹாய் ரித்தி. இது உங்களோட வீடா?” என்றவன் ஆச்சரியத்துடன் வினாவினான்.

அவனின் குரல்கேட்டு, “பிரவீன் அண்ணாவா?” என்ற கேள்வியுடன் திரும்பிப் பார்த்தாள் ரித்திகா.

அங்கே பிரவீனைப் பார்த்தும், “ஹாய் சீனியர் அண்ணா. நான் வீட்டிற்கு கூப்பிட வரமாட்டீங்க. இன்னைக்கு என்ன எங்க வீட்டுபக்கம் காத்து வீசுது..” என்றவள் கேள்வியாக புருவம் உயர்த்திட, “நான் சுமிம்மாவைப் பார்க்க வந்தேன்..” என்றான்

அவனின் அருகில் நின்றிருந்த பாரதியைப் பார்த்து, “இந்த அண்ணா யாரு..” அவள் அவனிடம் கேட்க, “என்னோட அண்ணா பாரதி..” என்றான் பிரவீன் புன்னகையுடன்..

“வாட்..”  என்று அதிர்ந்த ரித்திகா, “அது உங்களோட சொந்தக் காலேஜா?” என்று திக்கியவண்ணம் கேட்க, “இதற்கு அதிர்ச்சியா?” என்றவர் இயல்பாகவே கூறினான்

மற்ற இருவரும் பிரவீனைக் கேள்வியாக நோக்கிட, “அம்மா நம்ம வெளியே எங்காவது போகலாமே?” என்று பாரதி அவர்களிடம் கேட்டான்.

“நம்ம மகாபலிபுரம் போலாம்..” என்றார் சுமிம்மா. நிலா மறுபேச்சு பேசாமல் ஒப்புகொள்ள ஐவரும் மகாபலிபுரம் செல்வது என்று முடிவானது. அங்கே என்ன பண்ண போறாங்களோ நம்ம சுமிம்மா?

 

error: Content is protected !!