MMV-13

MMV-13

 

அத்தியாயம் – 13

எங்கிருந்தோ கேட்ட குயிலின் சத்தத்தில் கண்விழித்த சுமிம்மா தன்னைச்சுற்றி படுத்து உறங்கும் பிள்ளைகளின் முகம் பார்த்தார். அவரின் வலது புறம் நிலாவும், ரித்தியும் தூங்கிக்கொண்டிருக்க, அவரின் இடது புறம் பாரதி, பிரவீன், அஜய், திவாகர் நால்வரும் உறங்கிக் கொண்டிருந்தனர்.

கள்ளம் கபடம் இல்லாத குழந்தை முகம்போல இருந்த நிலாவின் முகம் நித்திலாவையும், அஜயின் முகம் கலையரசனையும் நினைவுப்படுத்தியது. பிள்ளைகளைப் பெறாவிட்டாலும் மார்பின் மீது போட்டு வளர்த்த தாய்பாசம் அவரின் மனதில் உற்றெடுத்தது.

வீட்டைவிட்டு வந்து இப்பொழுது கிட்டதட்ட ஒருவருடம் கடந்துச் சென்றதை உணர்ந்தவர், ‘நித்தியும், கலையும் எப்படி இருக்காங்களோ..’ என்ற பெருமூச்சுடன் எழுந்தவர் சமையலறைக்குள் நுழைந்தார்.

அவர் திரும்பி வந்து எப்பொழுதும் வரை எல்லோரும் தூங்கிக்கொண்டே இருக்க,  “பசங்களா எழுந்திருங்க.இன்னும் என்ன தூக்கம்?” அவர் அதட்டல் போட்டார்.

“குட் மார்னிங் சுமிம்மா..” என்று அரைத்தூக்கத்தில் எழுந்து அமர்ந்தனர்

“குட் மார்னிங்..” என்றவர் எல்லோருக்கும் காபி போட்டு எடுத்து வந்தார்.

நிலா மட்டும் குழந்தைபோல, “அம்மா இன்னும் பிரஸ் பண்ணல..” என்று நிலா தூக்க கலக்கத்துடன் சொல்ல அஜய்க்கு சிரிப்புதான் வந்தது..

“என்ன அஜய் அண்ணா சிரிக்கிறீங்க..” என்று சிணுங்கிட, “நீ என்ன சின்னக் குழந்தையா?  சீக்கிரம் போய்ப் பிரஸ் பண்ணிட்டு வா நிலா..” என்றான்..

“குட் மார்னிங் சுமிம்மா..” என்ற பாரதியின் குரல் கரகரப்புடன் ஒலித்திட,

“என்ன சளி பிடித்துவிட்டதா? இதற்குதான் நான் நைட் தலையைத் துவட்ட சொன்னேன். காதில் வாங்கினால்தானே? டாக்டருக்குச் சளி பிடிக்காது என்ற நினைப்பா?” என்று காலையில் சுப்ரபாதம் வாசித்தார்..

தன்னை மறந்து கலகலவென்று சிரித்த நிலாவோ,“நல்லா திட்டுக்குங்க சுமிம்மா..” அங்கிருந்த அறைக்குள்  சென்று மறைந்தாள்.

இதுவரை அவள் இவ்வளவு இயல்பாக பேசி அவர்கள் யாருமே கண்டதில்லை சுமிம்மா உட்பட. எல்லோரும் திகைப்புடன் அவளையே பார்க்க, அவளின் அக்கரை அவனின் மனதிற்கு இதமாக இருந்தது..

“பாரு அவள்கூட உன்னைக் கிண்டலடிக்கிற, எல்லாம் உன்னோட நேரம். இப்பொழுது நான் கஷாயம் போட்டுட்டு எடுத்துவிட்டு வருகிறேன். நீ குடிக்கிற..” இடையில் கையூன்றி அவனை மிரட்டினார் சுமிம்மா.

அதுவரை நடப்பதைக் கவனித்தவண்ணம் காபியைக் குடித்த பிரவீனுக்கு புரையேற, “ஒரு டாக்டருக்கே கஷாயமா? என்ன கொடுமை இது..” பரிதாபமாகச் சொல்ல வாய்விட்டு நகைத்தனர் திவாகரும், அஜயும்.

“இரண்டு மாத்திரை போட்டு மதியம் வரை ரெஸ்ட் எடுத்தால் சரியாகப் போய்விடும்..” என்றான் பாரதி சாதாரணமாகவே..

“அதெல்லாம் என்னிடம் செல்லுபடி ஆகாது மகனே. நீ இன்னைக்கு காஷயம் குடிக்கிற..” என்ற சுமிம்மா சமையறைக்குள் சென்றார்

“தப்பிக்க வேற வழியே இல்லையா?” என்று தனியாகப் புலம்பினான்..

அவன் புலம்பலைக் கேட்டுகொண்டே அறையிலிருந்து வெளியே வந்தவள், “மழையில் நனைந்துகொண்டே வீடுவரைப் போகணும் என்ற வேண்டுதலா? மழை நின்றபிறகு போயிருந்த இப்படி ஆகிருக்குமா?” என்று அதுவரை மனதை அரித்த விசயத்தை வாய்விட்டுக் கேட்டுவிட்டாள்.

அவளின் கோபம் புரிந்து கொண்ட பாரதியின் பார்வை அவளைத் தழுவிச்சென்றது. முதல்நாள் ரயில் பயணத்தில் அவனை பார்த்து திடுக்கிட்ட நிலாவின் முகம் அவனின் மனதில் வந்து சென்றது.

அந்த நிலாவிற்கும் இப்பொழுது இருக்கும் நிலாவிற்கும் உள்ள வேறுபாடு உணர்ந்தவனின் பார்வை அவளின் மீது படிந்தது. அவனின் பார்வையை உணராத நிலா அஜயிடம் எதையோ தீவிரமாகப் பேசிக்கொண்டிருந்தாள்..

அதற்குள் காஷயத்துடன் வந்த சுமிம்மா, “இந்த இதை ஒரே முறையில் குடித்துவிடு. சளி எல்லாம் பறந்து போய்விடும்..” மந்திரம் போலக் கூறிவே,  அவர் நீட்டிய கசாயத்தில் தன் பார்வையைச் சுற்றினான் பாரதி.

பச்சை நிறமும் இல்லாமல் மஞ்சள் நிறமும் இல்லாமல் இருந்த கஷாயத்தைப் பார்த்தவன் “இதை நான் கண்டிப்பா குடிக்கணுமா..” பாவமாகக் கேட்க கலகலவென்றுச் சிரித்தாள் நிலா.

அவளை எரிப்பது போல பார்த்தவன், “என்னை பார்த்த உனக்கு எப்படி தெரியுது..” என்று சீறவே அவள் மெளனமாகக் தலையைக்குனிந்து கொண்டாள்.

“இது வேண்டாம் சுமிம்மா..” என்றான்

“டேய் இது அம்மா வைத்தியம்டா..” என்றார் சுமிம்மா

“அண்ணா கஷாயம் கசக்கும்..” என்று பிரவீன் அவனுக்கு நினைவுபடுத்த  அவனை முறைத்த சுமிம்மா, “நீ அமைதியாக இருக்கல உனக்கு இன்னைக்கு பாவற்காய் சூப் தான் ஞாபகத்தில் இருக்கட்டும்..” என்று மிரட்ட அவனின் முகம் போன போக்கைப் பார்த்து மற்றவர்கள் சிரித்தனர்.

சிறிதுநேரம் கையில் கஷாயத்தை வைத்திருந்து யோசித்த பாரதி கண்ணை இறுக்கமாக மூடிக்கொண்டு வாயில் கஷாயத்தை ஊற்றினான்.

“அண்ணா கஷாயம் கசக்கும்..” என்று வாந்தி எடுப்பது போல கூற, “அவனைக் குடிக்க வைப்பதே பெருசு..” என்று அவனை முறைத்தார்..

மறுநிமிஷம் சுமிம்மாவின் கையில் டம்பாளரை கொடுத்த பாரதி, “இது என்ன சூப் சுமிம்மா கசக்கவே இல்ல..” என்றான்..

“என்ன அண்ணா சொல்றீங்க..” அஜய் திகைப்புடன் கேட்டான்..

“இது ஒரு சின்ன கஷாயம் பாரதி. தின்னூர் பத்தினி, துளசி, ராமர் துளசி, தூதுவளை, கர்ப்பூரவல்லி இந்த ஐந்து மூலிகையும் கொஞ்சம் பத்து அல்லது இருபது இலை எடுத்து நல்ல கழுவி அரைத்து எடுத்துட்டு நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு பல் பூண்டு, சீரகம், மிளகு நுணுக்கிபோட்டு தளித்து அதில் இந்த மூலிகை சாற்றை ஊற்றி பத்து நிமிஷம் கொதிக்க வைத்தால் காஷயம் தயார்” என்றவர் தொடர்ந்து, “இதைக் குடிக்க வைக்க நான் உன்னை மிரட்டவேண்டி இருக்கு..” என்றார்.

மற்றவர்கள் அவரைப் பாசத்துடன் பார்க்க, “சுமிம்மா நீங்க இந்த வீட்டில் எங்களோட இருக்கீங்களா?” பாரதி மனதில் நினைத்த விஷயத்தை அவரிடம் வெளிப்படையாகக் கேட்டுவிட்டான்.

அதுவரை சிரித்துக் கொண்டிருந்த நிலாவின் முகம் பேயறைந்தது போல ஆனது. அவளின் முகமாற்றத்தை கவனித்த அஜய், ‘இவள் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிற..’ என்ற சிந்தனையில் புருவம் சுருக்கினான்.

“என்ன பாரதி திடீரென்று இப்படி சொல்ற..” என்று தயக்கம் காட்டிய சுமிம்மா நிலாவின் முகத்தை சிந்தனையுடன் பார்க்க நிலாவோ மறுப்பாகத் தலையசைத்தாள்.

அவளின் விழிகளில் பயம் மீண்டும் குடிகொள்ள, ‘ஏன் பயப்படுகிற?’  சிந்தனையுடன் அவளை பார்த்தான் பாரதி. மற்றவர்கள் அங்கே நடப்பதை அமைதியாக வேடிக்கை பார்த்தனர்.

அவனை தொடர்ந்து பிரவீனும், “சுமிம்மா நீங்க எங்களோட இருங்க.. நானும் அண்ணாவும் தான் தனியாக இருக்கிறோம். நீங்களும் இங்கே இருந்த ரொம்ப நல்லா இருக்கும்..” என்று குழந்தைப்போல கூறினான்..

அவளின் உடல்நிலையைக் கருத்தில் கொண்ட சுமிம்மா, ‘இங்கே இருந்தால் எப்படியும் நிலா உண்மையைச் சொல்ல வாய்ப்பு உண்டு. அந்த வாய்ப்பை எதற்கு தட்டி பறிக்க வேண்டும்’ என்று சிறிதுநேரம் சிந்தனையில் ஆழ்ந்தார்.

பாரதியின் உள்ளத்தை புரிந்து கொண்டவரால், நிலாவின் பின்னணியை அறிய முடியவில்லை. அவளின் கடந்தகாலம் தெரிந்துகொள்ள இருக்கும் ஒரே துருப்புசீட்டு பாரதி மட்டுமே. அவன் அவனின் காதலை வெளிபடுத்தினால் அவள் ஒருவேளை உண்மையை வெளிப்படையாக சொல்லலாம் என்று கணித்தவர் அங்கே தங்க முடிவெடுத்தார்.

ஒரு முடியுடன் நிமிர்ந்த சுமிம்மாவின் முகத்தை தீர்க்கமாகப் பார்த்தவள் “நீங்க வேண்டும் என்றால் இங்கே இருங்க. நான் அந்த வீட்டில் இருக்கிறேன்..”  தன் முடிவைத் தெளிவாகக் கூறிட பாரதியின் பார்வை அவனின் மீது படிந்தது.

“என்ன நிலா இப்படி சொல்ற? நம்ம இங்கே தங்குவதில் உனக்கு என்ன இடைஞ்சல்..” என்று கேட்க நிலாவின் பார்வையோ பாரதியின் பார்வையை தாங்கி நின்றது. அவளின் பார்வையில் சலனம் இல்லாமல் இருந்தது.

எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் தனக்கு உதவிய அவனின் உதவி அவளின் மனதைத் தொட்டது. பெண்களின் உடலைத் தொட்டவன் எல்லோரும் அவளின் மனதை தொட்டார்கள் என்று யாராலும் சொல்ல முடியாது.

பெண்ணின் மனம் ஒரு புதையல் போல அவளின் உள்ளத்தில் இருப்பதை கண்டுபிடிக்க அவளின் மனதைத் தெளிவாக படித்த ஒருவனால் மட்டுமே முடியும். அவளை எதிர்கொண்ட பாரதியின் பார்வை அவளின் விழிகளை ஊடுருவிச் சென்றது.

அவளின் கடந்தகாலம் அவனின் கண்களில் படமாக ஓடிட, அவளையும் அறியாமல் அவளின் விழிகள் கலங்கியது. சுமிம்மாவின் உண்மையான பாசம், எதிர்பார்ப்பு இல்லாத அவனின் உதவி, தமையனின் பாசத்தைக் காட்டும் திவாகர் மற்றும் அஜய், அவளை தங்கையாக ஏற்றுகொண்ட ரித்து, ரேணு எல்லோரையும் நினைத்தாள்.

அவர்களின் பாசத்திற்கு முன்னால் அவளின் கடந்தகாலம் சில்லுசில்லாக உடைந்து சிதறிவிட அவர்களிடம் உண்மையை மறைக்கின்றோமோ என்ற எண்ணமே அவளை கொல்லாமல் கொன்றது.

“பாரதி அண்ணாவைப் பார்த்து பயப்படாதே நிலா. அண்ணா அப்படிப்பட்டவங்க கிடையாது..” என்றவனின் பார்வை தமையனின் மீது படிந்தது.

“அவனால் உனக்கும் உன்னோட படிப்பிற்கும் எந்த பிரச்சனையும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன் நிலா. நீ என்னை முழுவதுமாக நம்பு..” என்று உறுதியாகக் கூறினார் சுமிம்மா

அவளின் முகத்தில் சிந்தனை பரவுவதை உணர்ந்து கொண்டவர், “பாரதி நீ அவளுக்கு எந்த தொந்தரவும் தரமாட்டேன் என்று சொன்னால் நான் இங்கே தங்க சம்மதிக்கிறேன்..” என்று சொல்ல அவனும் சரியான தலையசைத்தான்..

அவளின் பதிலை எதிர்பார்த்த எல்லோரும் அவளின் முகத்தைக் கேள்வியாக நோக்கிட, “சரி சுமிம்மா..” என்றாள் நிலா மெல்லிய குரலில். அவளின் பதிலில் மற்றவர்கள் முகத்தில் நிம்மதி பரவுவதை உணர்ந்தாள் நிலா.

அவளின் பார்வை பாரதியின் மீதே நிலைத்திட, ‘இனிவரும் நாட்களில் நான் என்னோட பொறுமையை சோதிக்கும் அளவில் இல்லாமல் இருக்க வேண்டும்..’ என்று மனமார வேண்டிக்கொண்டாள்

அதன்பிறகு ரேணுக்கு அவர்கள் போன் பண்ணி விஷ் பண்ண தன்னுடைய தம்பியை அழைத்துச்சென்று சுமிம்மாவின் வீட்டிலிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து வந்துவிட்டான் பாரதி. ரித்துவின் தாத்தாவிற்கு தான் அவர்களைப் பிரிய மனம் வரவில்லை..

பேத்திக்கு ஒரு துணையாக இருந்த சுமிம்மாவும், நிலாவும் வீட்டை காலி செய்வது அவருக்கு வருத்தமாகவே இருந்தது.. ஆனால் அதை அவர் வெளிபடுத்தவில்லை..

அந்த வீட்டின் இயல்பாக பொருந்தி போயினர் இருவருமே.. அங்கிருந்து வழக்கம்போல் கல்லூரி சென்று வந்தனர் சுமிம்மாவும், நிலாவும்!

பாரதி தன்னுடைய வேலையில் கவனம் செலுத்த அஜய் குணமடைந்து கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தான். அதன்பிறகு வந்த நாட்கள் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது..

அந்த செமஸ்டர் எக்ஸாமை நல்லபடியாக எழுதி முடித்தனர். அடுத்த செமஸ்டர் இன்னும் இரண்டு நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில் வீட்டில் அமர்ந்து எல்லோரும் செஸ் விளையாடிக் கொண்டிருந்தனர்.

பாரதியைத் தவிர மற்ற எல்லோரும் சேர்ந்து ஆடிய விளையாட்டுகளில் சுமிம்மா மட்டுமே முன்னிலை இடத்தில் இருந்தார்.

அஜய்க்கு செக் வைத்த சுமிம்மா, “என்னிடமே உன்னோட விளையாட்டா..” என்று கேட்டுகொண்டே கெத்தாக அமர்ந்திருந்தார்.

அவனுக்கு இருபக்கமும் அமர்ந்திருந்த நிலா மற்றும் ரித்து, “அண்ணா அம்மாவை ஜெய்க்க வெச்ச நீ அவ்வளவு..” என்று மற்ற வழக்கம் போலவே பிரவீனும், திவாகரும் அங்கே நடக்கும் விளையாட்டை வேடிக்கைப் பார்த்தனர்.

அஜய் தீவிரமாக யோசித்து அவரை வென்றுவிட வழியை கண்டுபிடித்தவன், “அம்மா நான் உங்களை வின் பண்ணிட்டா நீங்க நான் சொல்வதை கேட்கணும்..” என்றான் குறும்புப் புன்னகையுடன்.

அவன் வெற்றிபெற வாய்ப்பு இருப்பதை கவனித்த சுமிம்மா, “என்ன பண்ணனும் அதை சொல்லு. அப்புறம்  மற்றது பற்றி பேசலாம்..” என்றவரின் பார்வை அவனின் மீதே நிலைத்தது..

சிறிதுநேரம் தாடையைத் தடவி யோசித்த அஜய், “அடுத்த செமஸ்டர்க்கு நீங்க காலேஜ் வரக்கூடாது சுமிம்மா..” என்றவன் அவருக்கு செக் வைத்தான்

அஜய் சொன்ன விஷயம் கேட்டதும், “அம்மா காலேஜ் வரல என்றால் நானும் இனிமேல் காலேஜ் போகமாட்டேன்” என்றான் திவாகர் பதட்டமாக..

“டேய் இவங்க ஒருவர் தான் கிளாஸ் நல்லா எடுக்கிறாங்க.. அதையும் நீ ஏண்டா கெடுக்கிற..” என்றவனின் முதுகில் ஒரு அடிபோட்டான்.. நிலா மற்றும் ரித்துவும் கூட கொஞ்சம் அதிர்ந்தனர்.

“அம்மா நீங்க ஓகே சொல்லாதீங்க..” என்று அவரைக் கண்டித்தான் திவாகர். அஜய் சுமிம்மாவைத் தீர்க்கமாக பார்க்க, “ஓகே..” என்றார் சுமிம்மா அசால்ட்டாகவே..

அவரின் குறும்பு மின்னும் கண்களை கவனித்த நிலா, “சுத்தம்..” என்று தலையில் கைவைத்து அமர, “ஏன் என்னாச்சு..” என்று புரியாமல் கேட்டாள் ரித்து..

“உனக்கு அம்மா பற்றி தெரியும் இல்ல. தோற்க போவது சுமிம்மாதான் வெற்றி அடைய போவதும் சுமிம்மாத்தான்..” என்றவள் தெளிவாக கூறி அங்கிருந்த அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தினாள் நிலா..

மற்றவர்கள் அவளை கொலைவெறியுடன் பார்க்க, “அஜய் அண்ணா நீ வின் பண்ணுவதைவிட தோல்வியை ஒத்துக்கோ அண்ணா..” என்று பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு கெஞ்சினாள்..

“அதெல்லாம் இல்ல நிலா.. நான்தான் வின் பண்ண போறேன்..” என்று அஜய் அழுத்தமாக சொல்லி சுமிம்மாவிற்கு செக் வைத்து ஆட்டத்தின் வெற்றி பெற்றான்..

அவனிடம் தோற்றுபோன சுமிம்மா முகத்தைப் பாவமாக வைத்துகொண்டு, “என்னடா பையா அம்மாவை இப்படி தொக்கடித்துவிட்டாய்..”  என்று சோகமாக சொன்னவர், “இனிமேல் நான் காலேஜ் வரமாட்டேன் போதுமா..” என்றவர் அவரின் அறைக்கு சென்றார்..

“சுமிம்மா நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.. இன்னும் ஒரு செமஸ்டர் தான் எங்களுக்கு காலேஜ் முடிந்துவிடும்.. சோ நீங்க இல்லாமல் எப்படி..” என்று இடதுபுருவம் உயர்த்தினான்.

“நான் சொன்னால் சொன்னதுதான்..” என்று அறைக்குள் சென்று மறைய, “ஐயோ இனிமேல் சுமிம்மா காலேஜ் வரமாட்டாங்களா..” என்று தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டனர்.

அதற்கு காரணமான அஜயை ரித்துவும், திவாகரும் சேர்ந்து மொத்தினர். நிலாவோ சுமிம்மாவின் அடுத்த அதிரடி செயல் என்னவாக இருக்கும் என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள்..

மறுநாள் விடியலில் அவளுக்கான விடை கிடைத்தது..    

error: Content is protected !!