MMV-15

MMV-15

அத்தியாயம் – 15

அவனை அடித்துவிட்டு பஸ் ஏறிய ஜன்னலோரம் அமர்ந்தவளின் முகத்தில் வந்து மோதிய தென்றல் காற்றில் அவளின் கோபம் சென்ற இடம் தெரியாமல் சென்று மறைந்தது. இத்தனை நாளாக மனதை அழுத்திய பாரம் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை உணர்ந்தவளின் உதட்டில் புன்னகை அரும்பியது.

அவளுக்கு முன்னரே வீடு வந்து சேர்ந்த பாரதியை பார்த்தும் சுமிம்மா, “பாரதி வேலை சீக்கிரம் முடிந்துவிட்டதா?” என்று விசாரிக்க அவன் தலையை மட்டும் அசைத்துவிட்டு சிந்தனையுடன் சோபாவில் அமர்ந்தான்.

அண்ணனின் முகத்தை மாறுவதை உன்னிப்பாக கவனித்தான் பிரவீன் தம்பியின் பார்வை தன் மீது படிவத்தை உணராமல் அமர்ந்திருந்தான் பாரதி. அவனின் பார்வையை அவன் கவனிக்கவில்லை என்பதை விட அவனின் கவனம் அங்கில்லை என்பது பொருத்தமாக இருக்கும்.

அவன் சிந்தனையுடன் அமர்ந்திருப்பதைக் கவனித்த சுமிம்மா, “பாரதி காபி சாப்பிடுகிறாயா?” என்று கேட்டார்.

“இல்லம்மா எனக்கு வேண்டாம்..” என்று மறுத்துவிட்டு மாடிப்படிகளைக் கடந்து அவனின் அறைக்குள் சென்று மறைந்தான்.

அவனின் நடவடிக்கை சரியில்லாமல் இருப்பதை நொடியில் கணித்துவிட்ட சுமிம்மா, “பாரதி எப்பொழுதும் இப்படி இருக்க மாட்டானே? இன்னைக்கு இவனோட முகமே சரியில்ல..” என்றவர் சமையறையை நோக்கி செல்ல, பிரவீன் சோபாவில் அமர்ந்து புத்தகத்தை புரட்ட, வீட்டிற்குள் நுழைந்தாள் நிலா

வீட்டின் வாசலில் நிழலாட கண்ட பிரவீன் நிமிர்ந்து, “அசைன்மெண்ட்ஸ் முடிச்சிட்டு வந்துட்டீங்களா மேடம்..” என்று அவன் புன்னகையுடன் கேட்க, “ஓஹோ முடிச்சிட்டு வந்துட்டேனே..” என்றவள் அவளின் அறைக்குள் சென்று மறைந்தாள்.

அவனின் அறையிலிருந்து அவளின் நடவடிக்கைகளை கவனித்த பாரதிதான் முற்றுலும் குழப்பத்தில் ஆழ்ந்தான். அவளின் முகத்தில் எந்தவிதமான சலனமும் இல்லாமல் இருப்பதோடு மட்டுமின்றி அப்படியொரு நிகழ்வே நடக்காதது போல் நடந்து கொண்டாள்.

அது அவளின் இயல்பா? இல்ல தன்னோட பார்வையில் பிழையா? என்று புரியாமல் அவளை பற்றிய சிந்தனையுடன் படுக்கையில் அமர்ந்தவனின் மனதிற்குள் ஆயிரம் கேள்விகள் படையெடுத்து வரிசை கட்டி நின்றது.

ஆண்களை கண்டாளே பயந்து ஒதுங்கும் நிலா இன்று செய்த காரியம் இப்பொழுது நினைத்தாலும் அவனுக்கு குப்பென்று வேர்த்தது.

நிலாவிடம் அவன் என்ன சொன்னான்? எதற்காக அவள் அவனை அடித்தாள்? என்று எந்த கேள்விக்கும் அவனிடம் பதில் இல்லை. அவனை அதிகமாக குழப்பத்தில் ஆழ்த்திய ஒரே விஷயம், ‘யார் அவன்? அவனுக்கும் நிலாவிற்கு என்ன சம்மந்தம்?’ இது மட்டுமே!

இந்த கேள்விக்கு விடை தெரியாமல் குழப்பத்துடன் வெகுநேரம் அறையிலேயே அடைந்திருந்தான். அவன் நிலாவிடம் நேரடியாக கேட்க நினைத்தாலும் அந்த கேள்வி அவளை காயப்படுத்திவிடுமோ என்று அந்த முயற்சியைக் கைவிட்டான். நிலாவின் மீது எந்த தவறும் இருக்க முடியாது என்று இறுதியாக ஒரு முடிவிற்கு வந்தான் பாரதி.

இரவு உணவின் பொழுதும் அவன் இயல்புடன் இல்லாமல் இருப்பதைக் கவனித்தார் சுமிம்மா. பிரவீன், நிலா இருவரும் அவர்களின் அறைக்கு சென்றுவிட்டனர். பாரதியை தேடி தோட்டத்திற்கு சென்றார் சுமிம்மா.

வானில் நிலாமகள் ஊர்வலம் போக மழை மேகங்கள் மெல்ல மெல்ல வானத்தை சூழ்ந்து இருளாக மாறியது. சில்லென்ற குளிர்காற்று அவனை தழுவிச்சென்றது. அவனின் உள்ளமோ அமைதி இல்லாமல் இருந்தது.

சுமிம்மா அவனின் அருகில் சென்று நிற்பதை கூட கவனிக்காமல் அவன் சிந்தனையில் ஆழ்ந்திருப்பது கண்டு, “பாரதி..” என்றழைத்தார்

அவரின் குரல்கேட்டு நிமிர்ந்த பாரதி, “சுமிம்மா..” என்றான்.

“என்ன பாரதி ஒரு மாதிரி இருக்கிற..” என்று அவனின் தலையை வருடினார் சுமிம்மா.

“அம்மா நிலா உங்களிடம் ஏதாவது சொன்னாளா?” என்ற கேள்விக்கு அவர் மறுப்பாக தலையசைத்துவிட்டு, “என்ன விஷயம் பாரதி..” என்று அவனிடம் கேட்டார்.

சிலநொடி அமைதிக்கு பிறகு மாலை நடந்த விஷயத்தை அவரிடம் கூறிய பாரதி, “நிலாவோட செயலில் என்னால் தவறு சொல்ல முடியல.. ஆனால் அவனை ஏன் அவள் அடிச்சா?” என்று குழப்பத்துடன் அவரிடம் கேட்டான்.

அவர் அறிந்த வரையில் நிலாவை பின்தொடர்ந்து வரும் நபர்கள் என்று யாருமில்லை. அவர் அந்த கல்லூரி பேராசிரியர் என்பதால் அவளிடமும் நல்லபடியாக நடந்து கொண்டனர் கல்லூரி மாணவர்கள். அப்படியிருக்க அந்த புதியவன் யாரென்று அவராலும் சரியாக கணிக்க முடிவில்லை.

அவன் சொன்னதைக்கேட்டு முதலில் திகைத்த சுமிம்மா, ‘நிலாவோட பின்னணிக்கும் அவனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா?’ என்று யோசிக்க தொடங்க பாரதியின் கேள்வியும் அதுவாகவே இருந்தது.

“சுமிம்மா நிலாவோட விஷயம் எப்படி யோசித்தாலும் முன்னுக்கு பின் முரணாகவே இருக்கு..” என்றான் அவன் பெருமூச்சு விட்டபடி.

“அவளோட வயிற்று வலிக்கு பின்னாடி ஏதாவது பின்னணி இருக்குமா?” என்று சுமிம்மா அவனிடம் கேட்க, “அது அவளை செக் பண்ண முடியாமல் சொல்ல முடியாதும்மா..” என்றான் அவன் தெளிவாகவே.

அவன் சொல்வதும் சரியாக இருக்கவே சிறிதுநேரம் சிந்தனைக்கு பிறகு ஒரு முடிவுடன் நிமிர்ந்த சுமிம்மா,“அவளிடம் வந்து பேசியவன் யாரென்று நமக்கு இது வரை தெரியாது. சோ நம்ம அதை மட்டும் வெச்சு ஒரு முடிவிற்கு வர முடியாது..” என்றதும் கேள்வியாக புருவம் உயர்த்தினான் பாரதி.

“நிலாதான் உன்னோட வாழ்க்கை என்று நீ முடிவு பண்ணிட்டா அவளோட பின்னணியைக் கண்டுபிடிக்க வேண்டியது உன்னோட வேலை..” என்றவர் நிறுத்தி அவனின் முகத்தைப் பார்த்துவிட்டு மீண்டும் தொடர்ந்தார்.

“அவளோட பின்னணி என்னவாக இருந்தாலும் நீ கடைசி வரை அவளை பாதுக்காக்க வேண்டும். அதிலிருந்து நீ என்னைக்கு பின்வாங்கக்கூடாது..” என்றவர் ‘கடைசிவரை’ என்ற வார்த்தையில் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து கூறினார்.

“கண்டிப்பாம்மா..” என்றவன் மனம் கொஞ்சம் தெளிவடைந்தது. அவனின் முடிவில் மாற்றம் இருக்காது என்பதை அவனின் முகமே அவருக்கு காட்டிக்கொடுக்க, “குட் நைட் சுமிம்மா..” என்றவன் அவனின் அறைக்கு செல்ல அவனை பின்தொடர்ந்தார்

அன்றைய நாளுக்கு பிறகு நாட்கள் மின்னல் வேகத்தில் சென்றது. சுமிம்மாவின் சேட்டைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது.

ஒரு பேராசிரியர் நன்றாக கிளாஸ் எடுத்தால் மாணவர்களோடு சேர்ந்து கிளாசை கவனிக்கும் சுமிம்மா அதே அவர் கொஞ்சம் தூக்கம் வரும் அளவிற்கு கிளாஸ் எடுத்தால் அவரிடம் புத்தகத்தை வாங்கிவிட்டு வெளியே அனுப்பிவிடுவார்.

சில நேரங்களில் தூக்கம் வந்தால் அவர் டேஸ்கின் மீது தலைவைத்து உறங்கிவிடுவார். ஒரு நாள் ஆசிரியர் கிளாஸ் வரவில்லை என்றாலும் அன்று முழுவதும் கிளாஸ் சும்மா களைகட்டும். ஆட்டம், பாட்டம், ஆர்ப்பாட்டம் அவர் செய்யும் சேட்டையில் மாணவர்கள் தங்களை மறந்தனர்.

படிப்பு, நட்பு, காதல் என்று இருந்த மாணவர்கள் இப்பொழுது சுமிம்மா இல்லாமல் ஒரு நாள் கூட வகுப்பில் இருப்பதில்லை. அவர் என்னதான் சேட்டை செய்தாலும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற அவரின் பேச்சிற்கு மற்றவர்கள் கட்டுப்பட்டனர்.

அன்று காலையில் எப்பொழுதும் போல வகுப்புகள் தொடங்கியது. பிரேக் முடியும் வரை ஒரு பேராசிரியர் வகுப்பு எடுக்க அவரிடமிருந்து எப்போதடா தப்பிப்போம் என்று இருந்த மாணவர்கள் எல்லோரும் பிரேக் விட்டதும் கேண்டீன் சென்றுவிட்டனர்.

அவர்கள் எல்லாம் சென்ற பின்னர் ரேணு, ரித்து இருவரும் டெஸ்கில் தலைவைத்து உறங்க அஜய், திவாகர் இருவரும் தூக்கத்தைக் கட்டுபடுத்ததும் முயற்சியில் இறங்கினர். [இப்படி தூக்கம் வரும் அளவிற்கு ஒரு கிளாஸ் இருக்குமா]

அவர்கள் நால்வரையும் பார்த்த சுமிம்மா, “டேய் வாங்கடா டீ சாப்பிட போலாம்..” என்று அழைக்க, “சுமிம்மா கேண்டீனில் டீயை வாயில் வைக்க முடியாது.. சும்மா கடுப்பை கிளப்பாதீங்க..” என்று எரிந்து விழுந்தான் அஜய்.

“அஜய் டீ குடித்தால் தான் தூக்கம் கலையும். இந்த இரண்டு வாரம் காலேஜ். அப்புறம் எல்லாம் எக்ஸாம் இருக்கு. சோ கிளாஸ் கவனிக்காமல் விட்ட பைனல் இயர்ல பாஸ் பண்ண முடியாதுடா..” என்றாள் ரேணு.

ரித்து இவர்களின் பேச்சை கவனிக்காமல் ஆழ்ந்த நித்திரைக்கு செல்ல, “இந்த லூசு பாரு வீட்டில் அவங்க வீட்டு மெத்தையில் படுத்து தூங்கற மாதிரி தூங்குது..” என்று அவளின் தலையில் நோட்டை தூக்கி போட்டான் திவாகர்.

அது பலமாக அவளின் தலையில் விழவே, “ஏண்டா கிடைக்கிற பத்து நிமிசத்திலும் என்னோட உயிரை வாங்கற..” என்று டெஸ்டரை தூக்கி அவனின் முகத்தை குறிபார்த்து வீச, “ரித்து டெஸ்டர் ல அடிக்காதே..” அவன் நகர்ந்துவிட அது கீழே விழுந்தது.

இவர்களின் சண்டையை சமாதானம் செய்யாமல் சுமிம்மா தன்னுடை வாட்டர் கேனை தேடுவதில் குறியாக இருக்க, “அம்மா என்ன தேடுறீங்க..” என்று கேட்டாள் ரேணு.

“நான் கொண்டு வந்த வாட்டர்கேனை தேடுகிறேன்..” என்றதும், “இதுவா சுமிம்மா..” என்று அவரின் கையில்  எடுத்து வாட்டர்கேனை கொடுத்தாள்.

“ஏய் யாருக்கு எல்லாம் டீ வேண்டும்..” என்று சுமிம்மா கேட்க அவரை புரியாத பார்வை பார்த்தனர் மற்ற நால்வரும்!

அவர்களின் பார்வையை கவனித்த சுமிம்மா, “என்னடா யோசிக்கிறீங்க? சீக்கிரம் சொல்லுங்க..” என்றார்.

“இப்போ டீ எப்படி போடுவது?” என்று திவாகர் புரியாமல் கேள்வி கேட்டான்.

“டீ வேண்டும் வேண்டாம் இந்த கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க..” என்று அவர் மற்ற நால்வரையும் மிரட்டவே, “வேண்டும்..” என்றனர்

“சரி ரித்து என்னோட பேக்கில் கரண்ட் அடுப்பு இருக்கும் எடு..” என்றார் சுமிம்மா சாதாரணமாகவே.

“என்னது..” என்று நால்வரும் ஒரே நேரத்தில் அதிர்ந்து நிற்க, “திவாகர் உன்னோட பேக்கில் சக்கரை டப்பாவும், ரித்து உன்னோட பேக்கில் டீ தூள் டப்பாவும் இருக்கும் எடு..” என்ற சுமிம்மாவை திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் அஜய்.

“என்னடா பார்வை வா வந்து இந்த டெஸ்க்கை இழுத்து சுவிச் பாக்ஸ் பக்கத்தில் போடு..” என்று அவனின் கவனத்தை திசை திருப்ப எல்லோரும் அவர் சொன்னதை அவரவர் பேக்கில் இருந்தது எடுத்தனர்.

சக்கரை, டீத்தூள் எல்லாம் எப்படி அவர்களின் பேக்கிற்குள் வந்தது என்று அவர்களுக்கே புரியாத புதிராக இருக்க, “ரேணு உன்னோட பேக்கில்..” என்று சுமிம்மா தொடங்க,

“என்ன டம்ளார் இருக்குமா இருங்க எடுக்கிறேன்.. ஆனால் எப்படி இது என்னோட பெக்கிற்கு வந்து என்று தெரியல..” என்று புலம்பியவள், “இது என்ன பால் காயவைக்கும் கிண்ணம் என்னோட பேக்கில் இருக்கு..” என்று புரியாமல் புலம்பிக்கொண்டே அவரின் கையில் கொடுத்தாள்.

கரண்ட் அடுப்பில் அவர் வேலையை தொடங்க சுமிம்மாவை சுற்றி நின்றிருந்தனர் மற்றவர்கள். இதெல்லாம் அவரின் சேட்டை என்று அவர்களுக்கு தெரியாதா என்ன?

“நான் உங்களுக்கு டீ வைக்க சொல்லி தரேன். முதலில் அடுப்பில் பால் கிண்ணத்தை வந்து பாலை உற்ற வேண்டும்..” என்று சொல்ல அஜய் சுமிம்மா கொடுத்த வாட்டர் கேனை திறந்து பாலை ஊற்றினான்.

“அடுத்து..” என்று ரேணு ஆர்வமாக கேட்க, “பால் கொதித்ததும் டீ தூள் போடணும்..” என்றதும், “எத்தனை சுபூன் அம்மா..” என்று திவாகர் கேட்டான்.

“இரண்டு போடு போதும்..” என்றார். அடுத்த சிலநொடியில் டீ ரெடியாகிவிடவே, “நீ சுகர் அளவாக போட்டு எல்லோருக்கும் ஊத்து கொடு..” என்று சுமிம்மா ரித்துவிடம் கூறினார்.

அவள் மற்றவர்களுக்கு டீயை உற்றிக்கொடுக்க, “சுமிம்மா டீ சூப்பர்..” என்று அவர்கள் ரசித்து குடிக்க, “இந்த இந்த பொருள் எல்லாம் எடுத்து நம்ம டெஸ்க் கீழே வை..” என்று கரண்ட் அடுப்பை எடுத்து ரேணுவின் கையில் கொடுத்தார்.

அவரும் அமைதியாக அமர்ந்து டீ குடிக்க, “சுமிம்மா நீங்க சரியான தில்லாலங்கடியாக இருந்திருப்பீங்க போல..” என்று அஜய் அவரை வம்பிற்கு இழுக்க அவனை முறைத்தார் சுமிம்மா. [அடபாவிங்களா சுமிம்மா நீங்க பண்ற சேட்டைக்கு அளவே இல்ல..]

“கிளாஸ் ரூமில் டீ வைத்து குடித்த விஷயம் பிரின்சிபால் வரைக்கும் போச்சு என்றால் என்னாகும் தெரியுமா சுமிம்மா..” என்று அவன் கேள்வியாக புருவம் உயர்த்தினான்.

“வேற வினையே வேண்டாம் நீயே போட்டு கொடுத்துவிடுவ போல..” என்று ரேணு அவனை வம்பிற்கு இழுத்தாள்.

“ஆனாலும் அம்மாவிற்கு துணிச்சல் அதிகம்” என்றாள் ரேணு தேனீரை பருகியவண்ணம்.

அவரின் ஒவ்வொரு சேட்டையையும் ரசித்தனர் மற்ற நால்வரும். அவரின் சேட்டைக்கு பின்னாடி ஏதாவது காரணம் இருக்குமென்று இந்த ஆறுமாத அளவில் அவர்கள் தெளிவாக உணர்ந்திருந்தனர்.

அடுத்து சிலநொடியில் அவர்கள் குடித்த டீ டம்பாளரை ஜன்னல் வழியாக கழுவிவிட்டு வந்து அவரின் இடத்தில் அமர்ந்தவர், “கிளாஸ் ரூமில் இதெல்லாம் பண்ணவே கூடாது என்று எனக்கு தெரியாத அஜய்..” என்று கேட்டவரின் முகம் நொடிபொழுதில் மாறிப்போனது.

அதை கவனித்த அஜய் அவரின் தோளில் கைபோட்டு அமர்ந்து, “சுமிம்மா நீங்க செய்கின்ற விஷயம் எங்களுக்கு சேட்டையாக தெரியல. ஒரு பத்து வயது குட்டிப்பெண் பண்ற மாதிரி இருக்கு.. இதுக்கு எல்லாம் முகத்தை தூக்கி வைத்துகொண்டால் நான் என்ன பண்ண முடியும்..” என்று அவரை இயல்புநிலைக்கு கொண்டுவர முயற்சித்தான்.

“சுமிம்மா யாருன்னு தெரியாமல் நீ என்னோட ரொம்ப விளையாடுகிற.. எனக்கு பின்னாடி ஒரு ஆர்மி இருக்குன்னு உனக்கு தெரியாது..” என்று அவர் அவனை மிரட்டினார்.

“பாருடா திவா சுமிம்மாவிற்கு ஆர்மி இருக்காம். உங்க ஆர்மியை பார்க்கணும் வர சொல்லுங்க..” என்று அவரை வம்பிற்கு இழுத்தான்.

“அவங்க என்னை தேடி வருவாங்கடா.. சீக்கிரமே.. அங்கே ஒரு ஆர்மியை கதற வைத்துவிட்டு நான் இங்கே வந்திருக்கேன்.. ஆனால் சீக்கிரமே என்னோட ஆர்மி என்னை தேடிட்டு காஞ்சிபுரம் வருவாங்க..” என்றவரின் முகத்தில் சந்தோஷம் வெளிப்படையாக தெரிந்தது.

“நானும் ஆர்மியை பார்க்க வெய்டிங்..” என்றனர் அவர்கள் கோரசாகவே.

அடுத்து வந்த நாட்கள் எல்லாம் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது. அவர்கள் நால்வரும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, நால்வரும் ஒரே  வேலைக்கு சேர்ந்தனர்.

பிரவீன் அவனின் படிப்பை முடித்துவிட்டு அதே கல்லூரியில் பேராசிரியராகிவிட்டான். பாரதி எப்பொழுது போலவே இருக்க நாட்கள் வேகமெடுத்து செல்ல மூன்று வருடங்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது.

நிலாவும் அவளின் படிப்பை முடித்துவிட்டு மெல்ல வேலைக்கு செல்ல தொடங்கினாள். அதன்பிறகு தான் நிலாவின் வாழ்க்கையில் இருக்கும்  பிரச்சனைகள் உண்மையாக விஸ்வரூம் எடுக்க தொடங்கியது.

 

error: Content is protected !!