அத்தியாயம் – 28
பிரவீனின் திருமணத்தை முடித்த சுமிம்மா ஊருக்கு கிளம்பும் நாளும் வந்து சேர்ந்தது. அவர் மனத்தைக் கல்லாக்கிக்கொண்டு ஊருக்கு கிளம்ப தன்னறை விட்டு வெளியே வராமல் அறைக்குள் தஞ்சம் புகுந்தாள் நிலா.
அவள் என்னதான் மற்றவர்களுக்காக அவரை அனுப்ப சம்மதம் சொன்னாலும் இப்பொழுது அவளின் மனம் அதை ஏற்றிக்கொள்ள மறுத்தது. பாரதி, பிரவீன், அஜய், திவாகர், ரேணு, ரித்து, சங்கரி என்று எல்லோரும் அவரை வழியனுப்ப வாசல்வரை வந்தனர். ஆனால் நிலா மட்டும் அறையைவிட்டு வெளிவரவில்லை.
வீட்டில் அனைவரும் கிளம்பி தயாராக நினிருக்க வாசலில் நின்றிருக்க அவர்களை எல்லாம் ஒரு பார்வை பார்த்தவர், “நிலா எங்க பாரதி..” என்று கேட்டார்.
“இங்கதானே இருந்தா..” என்றவன் பார்வையால் அவளை தேடிவிட்டு, “ஒரு நிமிஷம் சுமிம்மா..” என்று சொல்லிவிட்டு வேகமாக மாடிக்குச் சென்றான். அவனின் அறை திறந்துகிடந்தது. அந்த அறையின் ஒரு மூலையில் முழங்காலில் முகம் புதைத்து நின்றிருந்தாள் நிலா.
மெல்ல அவளின் அருகில் சென்ற பாரதி, “நிலா..” என்று அவளின் தோளைத் தொடவே கண்ணீரோடு நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தாள்.
அவளின் மனம் உணர்ந்தவன் அவளை இழுத்து மார்புடன் அணைத்துக்கொண்டு, “என்னடா இங்கே வந்து உட்கார்ந்திருக்கிற..” என்று மெல்ல அவளின் மனநிலையை மாற்ற முயன்றான்.
“அம்மா எனக்காக எல்லாம் செஞ்சாங்க மாமா. இப்போ அம்மா ஊருக்கு போறாங்க. நான் அவங்கள பார்த்த அவங்களை ஊருக்குப் போகவிட மாட்டேன்னு தான் இங்க வந்து உட்கார்ந்திருக்கேன்..” என்றாள் நிலா கண்ணீரின் ஊடே.
“அம்மா இன்னும் மூன்று மாசத்தில் வந்திருவாங்க நிலா. நீ வா அம்மாவை சந்தோஷமாக வழியனுப்பி வைக்கணும்..” என்று அவளை கொஞ்சி கெஞ்சி அவளை கீழே அழைத்து வந்தான் பாரதி. இந்நேரம் வரை அழுது அவளின் முகம் சிவந்திருப்பது கண்டு அவளின் அருகில் வந்தார் சுமிம்மா.
“என்ன அழுதாயா?” என்றவர் அவளை இழுத்து அணைத்துக் கொள்ளவே மீண்டும் அவளின் கண்கள் கலங்கிட, “நிலா அம்மா மறுபடியும் வருவேன். நீ அழுகாமல் இரு..” என்று அதட்டியவர் அவளை பாரதியின் கைகளில் ஒப்படைத்துவிட்டு, “எல்லோரையும் பத்திரமா பார்த்துக்கோ பாரதி..” என்றவர் காரில் ஏறினார்.
அவர்களுக்கு எல்லாம் டாட்டா கட்டிய சுமிம்மா, “நான் போயிட்டு வரேன்..” என்றவர் அவர்களிடமிருந்து விடைபெற்று கிளம்பினார்.
அவர்களை எல்லாம் இணைத்துவிட்டு சுமிம்மா அவரின் குடும்பத்துடன் கன்னியாகுமரி செல்ல, “ம்ம் சரிம்மா. உடம்பைப் பார்த்துகோங்க. ஊருக்கு போனதும் போன் பண்ணுங்க..” என்றவர்கள் கண்களில் கண்ணீரோடு அவர்களை அனுப்பி வைத்தது இந்த குடும்பம்.
அவரை அனுப்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தவர்களின் மனம் நிலையில்லாமல் தவிக்க ஆண்கள் அழுகக்கூடாது என்ற காரணத்தால் அவர்கள் வருத்தத்தை மறைக்க மௌனமாகிவிட பெண்களால் அது முடியாது என்பதை அவர்களின் கண்ணீரே அவர்களுக்குக் காட்டிக் கொடுத்தது. நிலாதான் முற்றிலும் உடைந்து போனாள்.
மற்றவர்கள் வீட்டிற்கு கிளம்பிய பிறகு அந்த வீட்டில் அவர்கள் நால்வர் மட்டுமே இருந்தனர். சங்கரி ஓரளவுக்கு இதெல்லாம் பழகியிருந்தால் நிலாவிற்கு அடுத்து அந்த வீட்டில் அவளின் பொறுப்புகளை பார்த்து பார்த்து செய்தாள். பாரதி நிலாவை சமாதானம் செய்ய நினைக்க அவளோ அழுதுகொண்டே இருந்தாள்.
இப்படியே ஒரு வாரம் சென்று மறைந்திட சங்கரிக்கும், நிலாவிற்கும் இடையே இயல்பாக ஒரு நட்பு மலர்ந்தது. இருவரும் வேலைகளை பகிருந்துகொண்டு செய்தாலும் தங்களின் ரசனைகளை பகிரவும் அங்கே நேரம் இருந்தால் இருவரும் ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டனர்.
அன்று இரவு அறைக்கு வந்த மனைவி இழுத்து மார்புடன் அணைத்துக்கொண்ட பிரவீன், “சங்கரி அண்ணி இப்போ உன்னிடம் நல்லா பேசறாங்களா.. முதல் மாதிரி அழுவதில்லை இல்ல..” என்று விசாரித்தான்.
கணவனின் கேள்வியில் மணிப்புறா போல தலையைச் சரித்து குறும்புடன் புன்னகைத்த சங்கரி, “அவங்க என்னை நல்லா பார்த்துக்கறாங்க பிரவீன். என்னோட வீட்டில் எனக்கு என்ன சுதந்திரம் கிடைக்குமோ அதை இங்கயும் ஃபீல் பண்றேன். அதுக்கு காரணமே நிலா அக்காதான்..” என்றாள்.
“தேங்க்ஸ்டா செல்லம்..” என்று சங்கரியைக் கொஞ்சிய பிரவீன் அடுத்தடுத்த வேலையில் கவனம் செலுத்திட அவனின் கைகள் செய்த மாயத்தில் மயங்கினாள் அந்த பாவை.
நிலா அறைக்குள் நுழைந்திட பாரதி எப்பொழுதும் போல ஒரு மருத்துவ புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு அதில் மூழ்கியிருந்தான். அவள் வந்ததை கூட உணராமல் அமர்ந்திருந்தவனை ஒரு பார்வை பார்த்த நிலா மெல்ல அவனின் அருகில் அமர்ந்தாள்.
தன்னருகே யாரோ அமரும் ஆராவாரம்கேட்டு நிமிர்ந்த பாரதி, “என்னடா இன்னும் தூங்காமல் இருக்கிற..” என்றவன் புத்தகத்தில் பார்வையைப் பதித்தபடியே கேட்க, “எனக்கு தூக்கம் வரல..” என்றவளுக்கு கோபம் வந்தது.
அவளுக்கு கோபம் வந்ததை அறியாத பாரதி புத்தகத்தையே படித்துக் கொண்டிருக்க, “என்ன மாமா என்னோட பேசவே மாட்டேன்றீங்க..” என்று சிணுங்கிய மனைவியை நிமிர்ந்து பார்த்தவன் அவளை இழுத்து மார்புடன் அணைத்துக் கொண்டான்.
“ம்ம் தூங்கு..” என்று சொல்லிவிட்டு அவன் மீண்டும் புத்தகத்தை படிக்க தொடங்கிட, “என்னை உனக்கு பிடிக்கலையா பாரதி..” என்று இரு பொருள்பட கேட்டாள் நிலா. அவன் மெளனமாக இருக்கவே அவனின் கையிலிருந்த புத்தகத்தை அருகில் வைத்துவிட்டு திரும்பினான்.
அவளின் மனதின் காயம் உணர்ந்தவன் அவளுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் அவளின் கூந்தலை மெல்ல வருடிக்கொடுத்தான். அவனின் ஸ்பரிசத்தில் இருந்த நேசத்தையும், ஒரு விதமான பாதுக்காப்பையும் உணர்ந்தாள் நிலா.
அவனின் இந்த செயல் அவளை உடைய செய்ய, “பாரதி என்னை நினைக்கும் பொழுது உனக்கு அருவருப்பாக இருக்கா? எனக்கே அசிங்கமாக இருக்கு. இத்தனை நாளாக நான் இப்படி உணரல. ஆன ஒவ்வொரு ஆணும் தன்னோட மனைவி கற்புடையவளாக இருக்கணும் என்று எதிர்பார்ப்பாங்க.. ஆன நான்..” என்றவளின் இதழ்களை தன் கரத்தால் மூடிவிட்டு அவளின் விழிகளை நேருக்கு நேர் பார்த்தான்.
அவளின் கண்களில் கண்ணீர் வழிந்திட, “லூசு மாதிரி பேசாத..” என்று அவளை அதட்டிவிட்டு அவளின் நெற்றியில் இதழ்பதிக்க, “ஸாரி..” என்றவளின் கண்ணீர் அவனின் மார்பை நனைத்தது..
அவளின் பேச்சும், கண்ணீரும் அவளின் நேசத்தின் அளவை அவனுக்கு உரைக்கவே, “சூடுகண்ட பூனையின் பயம் உனக்கு இருக்குன்னு எனக்கு தெரியாதா நிலா? என்னோட பிறந்தநாள் அன்னைக்கே எனக்கு தெரியும்..” என்றதும் அவள் திடுக்கிட்டு நிமிர்ந்து அவனைக் கேள்வியாக நோக்கினாள்.
“உங்களுக்கு எப்படி தெரியும்.. அப்போ நான் கண்டது கனவு இல்லையா?” அவள் விழிவிரிய கேட்க, “முட்டகண்ணி. அது கனவு இல்ல.. நீ தூங்க நான் போட்ட ஊசி அப்படி வேலை செஞ்சிருக்கு..” என்று அவளை கன்னத்தில் முத்தமிட்டான்.
அவனை இமைக்காமல் பார்த்த நிலா, “நீங்க எப்போ என்னைக் காதலிக்க ஆரம்பிச்சீங்க” என்றவள் நிறுத்தி நிதானமாக கேட்டாள்.
“தம்பி தான் என்னோட வாழ்க்கை என்ற முடிவில் வாழ்ந்திட்டு இருந்த என்னோட வாழ்க்கையில் நீ நுழைந்தாய்..” என்றவனை அவள் அமைதியாக பார்த்தாள்..
“ரயிலில் முதல்நாள் நீ பார்த்த அந்த பார்வை மனசிற்குள் வந்து வந்து போகும். அப்புறம் தான் உன்னை சுமிம்மா கூட மீண்டும் பஸ்ஸ்டாப்பில் பார்த்தேன். அதற்கு அடுத்து உன்னோட படிப்பிற்கு ஹெல்ப் பண்ணினேன். உன்னோட படிப்பை மனதில் வைத்து என்னை நானே கட்டுப்படுத்திட்டு இருந்தேன்..” என்றவன் நிறுத்திவிட்டு அவளின் முகம் பார்த்தான்.
அவள் மெளனமாக அமர்ந்திருக்க, “அன்னைக்கு நீ வயிற்றுவலியில் துடித்த பொழுதுதான் என்னோட காதலை நான் உணர்ந்தேன்..” என்றவனின் கன்னத்தில் அவள் இதழ் பதிக்க, “இந்த கன்னம்..” என்று குறும்புடன் மறு கன்னத்தை அவளிடம் காட்டினான் பாரதி.
அவள் அந்த கன்னத்தில் இதழ்பதிக்க அவனின் மூச்சுகாற்று மெல்ல சூடேறவே, “நிலா..” என்று அவளின் முகத்தை நிமிர்த்தி அவளின் இதழோடு இதழ் பொருத்தினான் பாரதி.
அவளை ஆசைதீர முத்தமிட்ட பாரதி நிமிர்ந்து அவளின் முகம் பார்க்க அது வெக்கத்தில் செந்தூரமாக காட்சியளித்தது. அவளுக்கு விருப்பம் என்றாலும் கூட அவனின் மனம் அவளின் மனமாற்றத்தை உணர நினைத்தது. அவளுக்கும் அவளின் மனக்குழப்பம் தீரவேண்டி இருந்தால் இருவரும் மெளனமாக இருந்தனர்.
“நிலா உனக்கு சம்மதமா?” என்றவன் நேரான பார்வையுடன் கேட்க, “ம்ம்..” என்றவள் அவனின் மார்பில் முகம் புதைத்தாள் நிலா.
அவளுக்கு தன்மீது நம்பிக்கை வந்துவிட்டதை உணர்ந்தவன், “லவ் யூடி செல்லம்..” என்றவனின் இதழ்கள் அவளின் நெற்றியில் தனது பயணத்தை தொடங்கியது. அவனின் உதடுகள் செய்த மாயத்தில் நிலா தன்னை மறந்தாள்.
அதுவரை காத்திருந்த அவனின் காத்திருப்பிற்கு அவள் தன்னையே கொடுக்க, அவளின் மனக்காயங்களுக்கு மருந்திடும் வகையில் மென்மையாக நடந்துகொண்டான் பாரதி. விடியும் வரை தொடர்ந்த அவர்களின் பயணம் சூரிய உதயத்தின் பொழுது ஒரு முடிவிற்கு வந்தது.
அதுவரை விழித்திருந்த நிலா களைப்பில் அவனின் மார்பில் தலைசாய்த்து தூங்கிவிட அவளை இமைக்காமல் பார்த்தபடியே உறங்காமல் விளித்திருந்தான் பாரதி.
அவள் மீண்டும் கண்விழித்து அவனின் முகம் பார்க்க, “குட் மார்னிங்..” என்ற பாரதி அவளின் நெற்றியில் இதழ்பதித்தான். அவனுக்கு அருகிலிருந்த டேபிளின் ட்ராவைத் திறந்து அந்த போட்டோ எடுத்து அவளின் கையில் கொடுத்தான்.
“நிலா இந்த போட்டோ பார்த்த உனக்கு என்ன தோணுது..” என்று அவளிடம் கேட்க, அவன் கொடுத்த போட்டோவை வாங்கிப் பார்த்த நிலாவின் கண்கள் மீண்டும் வியப்பில் விரிந்தது.
“இந்த போட்டோ இன்னும் நீங்க வெச்சிருக்கீங்களா..?” என்று ஆர்வமாக கேட்ட நிலாவின் கைகளில் தவழ்ந்தது அந்த போட்டோ. அதில் அவள் கட்டிய மணல்வீடு இருக்கக் கண்டவளின் விழிகள் தானாக கலங்கியது. அந்த கண்ணீர் சோகத்தின் அடையாளம் அல்ல. அவளின் மனமகிழ்ச்சிக்கான அங்கீகாரம்.
அவளின் முகத்திலிருந்த சந்தோசத்தை மனநிறைவுடன் கண்டு மனம் மகிழ்ந்தான் பாரதி. அவளை மீண்டும் இந்த நிலைக்கு வர அவனின் பொறுமையும் ஒரு காரணம். அவனின் காதலை வைத்து அவளை முழு நிலவாக மாற்றியிருந்தான் கவிபாரதி.
“இந்த வீடு இடிய நான் விடமாட்டேன்..” என்றவளின் விரல்கள் அந்த போட்டோவை வருடியது.
அந்த வாக்கியத்திற்கு அர்த்தம் உணர்ந்த பாரதியின் கைகள் அவளைச்சுற்றி வளைக்க அவன் எதிர்பார்க்காத நேரத்தில் அவனின் கன்னத்தில் இதழ்பதித்த நிலா, “ஐ லவ் யூ கவி..” என்று தன்னுடைய காதலை வெளிபடுத்தினாள். ஏனோ அப்பொழுது அவனுக்கு அவளிடம் வம்பு வளர்க்க தோன்றியது.
“கொடுக்க ஒண்ணுமே இல்லன்னு சொன்ன.. இப்போ உன்கிட்ட என்ன இருக்கு கொஞ்சம் விளக்கமா சொல்லு..” என்றவன் வேண்டுமென்றே கேட்க, “ஐயோ நீ கொஞ்சம் விளக்கம் கேட்காமல் இருந்தா நல்லா இருக்கும்..” என்று வெக்கத்துடன் முணுமுணுத்தாள்.
“நானா சொல்ல சொன்ன சொன்னேன்.. நீதானே வாக்கியத்தை சொன்ன.. அப்போ விளக்கமும் நீதான் சொல்லணும்..” என்றவன் அவளை வம்பிற்கு இழுத்தான்..
“ஐயோ தெரியாமல் இவங்கிட்ட ஒரு வாக்கியத்தை சொல்லிட்டு இவன்கிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கிறேன்..” என்று அவள் புலம்பவே வாய்விட்டு சிரித்தான் பாரதி.
“கொடுக்க ஒன்னும் இல்லன்னு சொன்ன இப்போதான் எல்லாமே இருக்கே.. கொஞ்சம் கொடுத்த என்னவாம்..” அவள் சொன்னா வாக்கியத்தை சொல்லி அவன் அவளை நெருங்கினான்.
அவனின் மார்பில் கைகளால் குத்திய நிலா, “காலையிலேயே ஏண்டா என்னை வம்பிற்கு இழுக்கிற..” என்று அவள் வெக்கத்துடன் கேட்டாள்
“ஆசை பொண்டாட்டிகிட்ட காலையிலதான் வம்பி வளர்க்க தோணுச்சு அதன்..” என்றவன் நிலாவின் முகம் பார்க்க அவளின் முகம் தெளிந்த நீரோடை போல இருந்தது..
மீண்டும் அவன் அவள் இதழ் நோக்கி குனிய, “சங்கரி எழுந்து வந்தா அவ்வளவுதான் நகருங்க..” என்று அவனை படுக்கையில் பிடித்து தள்ளிவிடவே,
“அவ வந்தா நான் விளக்கம் சொல்றேன்..” என்றவன் அவனின் வேலையைத் தொடர்ந்தான். அவளும் வெக்கத்துடன் அவனின் செயல்களுக்கு கட்டுபட்டு மயங்கினாள்.
அதன்பிறகு வந்த நாட்கள் இனிமையாக நகர நான்கு ஜோடிகளும் ஒற்றுமையுடன் ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருக்க சுமிம்மா அடிக்கடி போன் செய்து அவர்களை விசாரிப்பார்.
நாட்கள் மின்னல் வேகத்தில் நகர சுமிம்மாவின் வாழ்க்கை பயணமும் பேரபிள்ளைகளுடன் இனிமையாக நகர்ந்தது. விக்ரமாதித்தனுக்கு நாடு ஆறுமாதம் காடு ஆறுமாதம் என்பது போல சுமிம்மாவிற்கு கன்னியாகுமரி மூன்று மாதமும், காஞ்சிபுரம் மூன்று மாதமும் என்ற நிலையில் வந்து நின்றார்.
மூன்று மாதத்திற்கு பிறகு சுமிம்மா மீண்டும் காஞ்சிபுரம் வர பாரதியின் வீடே கோலாகலமாக மாறிவிடவே, “டேய் பசங்களா வந்து ஆளுக்கு ஒரு வேலையைப் பாருங்க. அம்மா உங்களுக்கு சமைத்து தரேன்..” என்ற சுமிம்மா சமையறைக்குள் நுழைந்தார்.
“அம்மா கையில் சாப்பிட்ட போறேன்..” என்ற குசியில் அஜய் வெங்காயம் உரிக்கவே, “எனக்கு ஒரு வேலை செய்ய முடியல அம்மாகிட்ட மட்டும் நல்லா புள்ள மாதிரி டிராமா போடுது..” என்று ரித்துவிடம் புலம்பினாள் ரேணு.
பாரதி காய்களை நறுக்க, “நீங்க வைங்க நான் செய்யறேன்..” என்று நிலா அவனிடமிருந்து கத்தியை வாங்கி நறுக்கிட, “மை ஸ்வீட் பேபி..” என்று குறும்புடன் கண்சிமிட்டினான் பாரதி.
“அண்ணி பாரு அண்ணாவை ஒரு வேலை செய்ய விடமாட்டேங்கிறாங்க.. நீயும் இருக்கியே..” என்று பிரவீன் சங்கரியிடம் புலம்பிட, “அவங்க நிலா. நான் சங்கரி. நம்மகிட்ட இந்த குல்லா போடுற வேலை எல்லாம் வேண்டாம் போயி தேங்காயை துருவுங்க..” என்று குறும்புடன் கூறினாள்.
“நான் தோட்டத்து செடிக்கு எல்லாம் தண்ணீர் ஊத்திட்டேன்..” என்று வந்து நின்ற கணவனை பார்த்த ரித்து, “அம்மா இன்னும் ஏதாவது வேலை இருக்கா..” என்று சுமிம்மாவிடம் கேட்டாள்.
‘அடிப்பாவி வேலை வாங்குவதில் குறியா இருக்காலே..’ இது திவாகரின் மைண்ட் வாய்ஸ்.
கன்னியாகுமரி இருந்து வந்ததில் இருந்தது அவர்கள் செய்யும் சேட்டைகளை ரசித்த சுமிம்மா, “ம்ம் இங்கே வந்து இந்த கோழியை உரிக்க சொல்லுடா..” என்று அவரும் அவர்களுடன் கூட்டு சேர மற்றவர்கள் வாய்விட்டு சிரித்தனர்.
மீண்டும் அந்த வீட்டில் ஆர்பாட்டம் கலை கட்டியது.அவர் பிள்ளைகளுக்கு பிடித்ததை பார்த்து பார்த்து செய்து கொடுத்தார் சுமிம்மா. அவர் செய்து கொடுத்த கோதுமை பாயசத்தை ஆசையுடன் பருகிய நிலாவிற்கு குமட்டல் எடுக்க எழுந்து வாஷ்பெஷன் நோக்கி ஓடினாள்.
“ஏய் நிலா உனக்கு என்னடா ஆச்சு..” என்று எல்லோருமே பதறினார்.
“நிலா என்னடா பண்ணு..” என்று சுமிம்மா அவளின் அருகில் வரும் முன்னே அவளைத் தாங்கிப் பிடித்தான் பாரதி, “உனக்குத்தான் சேரல இல்ல. அப்புறம் எதற்கு குடிக்கிற..” என்று அவளை அதட்டினான்.
அவன் காரணம் தெரியாமல் அதட்டுவதைக் கண்டு அவளுக்கு கோபம் வர, “உங்களுக்கு என்ன தெரியும் என்னோட ஹெல்த் பற்றி..” என்றவள் அவனோடு சண்டைக்கு வந்தாள்.
“உன்னோட ஹெல்த் பற்றி உன்னைவிட எனக்கு நல்லா தெரியும் குட்டிமா..” என்று குறும்புடன் கண்சிமிட்டிய பாரதியின் கரங்கள் அவளின் வயிற்றை வருடியது. அவள் மனதில் நினைத்தை இவனின் விழிகள் கண்டு கொண்டது.
‘நான் சொல்லாமல் இவருக்கு எப்படி தெரியும்?’
“அது எப்படி தெரியும்..” என்றவள் புரியாமல் கேள்வி கேட்டாள்.
“நான் டாக்டர்டீ என் செல்ல பொண்டாட்டி..” என்று அவளைக் கொஞ்சினான் பாரதி.
“பிராடு..” என்று திட்டினாள் நிலா. அவர்களை சுற்றி இருந்த அனைவரின் பதட்டத்தையும் அவர்கள் மறந்துவிட்டு தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.
“பாரதி என்னடா ஆச்சு நிலாவிற்கு..” என்றவர் பதட்டத்துடன் அருகில் வர, “ஐயோ அம்மா..” என்று பதறியவள் அவனைவிட்டு விலகி நின்றாள்.
அவளின் முகம் வெக்கத்தில் சிவந்திருப்பது உணர்ந்த சுமிம்மா, “நிலா என்னம்மா..” என்று கேட்கவே, “சுமிம்மா நீங்க பாட்டி ஆக போறீங்க..” என்று சந்தோஷமான விஷயத்தை பாரதி அவர்களிடம் சொல்ல நொடியில் மற்றவர்களின் மனமும் மகிழ்ந்தது.
“ஹே சூப்பர்..” என்று எல்லோரும் கோரசாக கத்திட்டு, “பாரதி..” என்று சிணுங்கிய நிலா வெக்கத்துடன் அவனின் தோள் சாய்ந்தாள்.
“ரொம்ப சந்தோஷம்டா கண்ணா. நீங்க இன்னைக்கு மாதிரி என்னைக்கும் இருக்கணும்..” என்று சுமிம்மா மனதார வாழ்த்திய அதே நேரத்தில் டிவியில்,
“சிற்பிக்குள் ஒரு முத்து வளர்ந்தது சின்ன தாமரையே..
மொட்டுக்குள் ஒரு மொட்டு மலர்ந்தது மோகப் பூங்கொடியே..
தாலாட்டு தாயாகிப் பாலுட்டு..
நீ பிள்ளை பெற்றால் நானும் பிள்ளை அல்லாவோ..” என்ற பாடல் ஒலித்தது.
நிலா நிமிர்ந்து பாரதியின் முகம் காண அவனின் கண்களில் கரையில்லா காதல் கண்ணீராக பெருகியது. அவள் பட்ட துன்பத்தை எல்லாம் மாற்றிவிட்ட சந்தோஷத்தில்..
அவனின் காதல் கண்டு அவளின் கண்களும் கண்ணீர் பெருகிட அவளின் தளிர்விரல்கள் அவனின் கண்ணீரை துடைத்துவிட தன்னுடைய நேசத்தின் முத்திரையை அவளின் நெற்றியில் பதித்தான் அவளின் காதல் கணவன்.