MMV-7

MMV-7

அத்தியாயம் – 7

சுமிம்மா இருவரையும் அழைத்துக்கொண்டு மரத்தடியை நோக்கி நகர்ந்திட அங்கே கும்பலாக அமர்ந்திருந்த மாணவர்கள் பட்டாளம், ஜூனியர் பெண்களை ராகிங் செய்து கொண்டிருந்தனர். அந்த கூட்டத்திற்கு தலைவனான ஒருவன் ஒரு ஜூனியர் பெண்ணை ராகிங் செய்து கொண்டிருக்க அவர்களின் அருகில் சென்றார் சுமிம்மா..

“உன்னோட பெயர் என்ன?” அந்தப்பெண் பயத்துடன், “சிவசக்தி..” என்றாள் அவள் பயத்துடன்..

அங்கே என்ன நடக்கிறது என்று சுமிம்மா ஓரமாக நின்று கவனிக்க, “நீ என்ன டிபார்ட்மெண்ட்..” என்ற கேள்விக்கு, “மெக்கனிக்கல்..” என்றாள் அவள்..

“மெக்கனிக்கல் முடித்துவிட்டு என்ன பண்ண போற?” என்றவன் கேட்ட மறுநொடியே, “என்னோட மாமா ஊருலே விவசாயம் பண்ணுது. அவங்களை கண்ணாலம் பண்ணிக்க போறேன்..” என்று வேகமாகப் பதில் கொடுத்தாள்..

“ம்ம் சூப்பர் பதில்..” என்ற ரேணுகா, “உன்னோட மாமாவிற்கு பிடித்த பாடல் ஒன்றை பாடிட்டு அப்படியே போம்மா..” என்றதும் அந்தப்பெண் திருதிருவென விழித்துவிட்டு,

“அத்தை மகள்.. ரத்தினத்தை.. அத்தான் மறந்தாரா..” அவள் பாடலைப் பாடப்புத்தகம் போல வாசிக்கச் சுமிம்மாவிற்கு வந்ததே கோபம்..

“ஏய் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்.. அதை நீ பாடாதே..” என்றார் வேகமாக.. அவரின் குரல்கேட்டு இளமை பட்டாளம் திரும்பி அவரைப் பார்த்தனர்..

“நான் நல்லா பாடுவேன் என்று என்னோட மாமா சொல்லுமே..” அவள் குழந்தைப்போல சொல்லவே, “உன்னோட மாமா கல்நெஞ்சக்காரனாக இருப்பான் போலம்மா..” ரேணு வேகமாகக் குரல்கொடுக்க, “சூப்பர்டா..” அஜய் அவளுக்கு ஹை – பை கொடுத்தான்..

“என்னோட இதயம் ரொம்ப பலகினமாக இருக்கும்மா.. நீ பாடியதைக்கேட்டு எனக்குப் பாட்டே மறந்துபோச்சு.. ” என்றார் சுமிம்மா பாவமாக..

சுமிம்மாவைப் பற்றி ரித்துவிற்கு நன்றாகவே தெரியும் என்பதால் அவள் கொஞ்சம் தைரியமாகவே வர, நிலாவோ பயத்தில் கைகால்கள் எல்லாம் வெடவெடக்க ரித்துவின் கையைப் பிடித்துக்கொள்ள, “காலேஜ்ல இதெல்லாம் சகஜம் நிலா..” அவளைத் தேற்றினாள்..

அதேநேரத்தில் அவர்கள் மரத்தடியை நெருங்கிட, “வாங்க வாங்க..” என்று அவர்கள் மூவரையும் வரவேற்றனர் இளைஞர் பட்டாளம்.

ரித்துவைப் பார்த்தும், “ஹாய் ரித்து என்ன லேட்..” என்று விளக்கம் கேட்க, “சீக்கிரம்தான் வந்தேன்.. பட் லேட் ஆகிடுச்சு..” அவளின் பார்வை திவாகரின் மீது படிந்தது..

“ஏய் நீ கிளம்பு..” அந்தப்பெண்ணை அங்கிருந்து அனுப்பிய திவாகர்,  “ஏய் கொத்தவரங்கா.. எங்களை ஏமாற்றி இவர்களை கூட்டிட்டு போக நினைத்தாயா..?” என்று கெத்தாகக் கேட்டவனை, பார்வையால் அளந்தார் சுமிம்மா.

முருங்கைகாய் மாதிரி ஒல்லியான உடல்வாகுடன் நின்றவனைப் பார்த்தும், “நான் பூசணிக்காய் என்று நினைத்தேன் ரித்து.. இவன் என்ன முருங்கைகாய்க்கு கைக்கால் முளைத்தவன் போல இருக்கிறான்..” என்றதும் நிலா வாய்விட்டுச் சிரிக்க, “சிரிக்காதே நிலா..” அவளைக் கிள்ளினாள் ரித்து..

அவரின் கேள்வியில் கடுப்பான திவாகர், “அஜய் இந்த கொத்தவரங்கா சீனியர். அவளுக்கு பக்கத்தில் நிற்கிற பொண்ணு ஜூனியர். ஆமா இந்த ஓல்ட் லேடி யாரு?” என்று விளக்கம் கேட்டான்..

அவனை முறைத்தவனோ, “அதை நீ அங்கே விசாரி. என்னை இதற்குள் இழுக்காதே. நான் பிரவீன் அண்ணாவிற்காக வெயிட் பண்ணிட்டு இருக்கிறேன். என்னை வம்பிற்கு இழுத்த..” என்றவன் பல்லைக்கடித்தவனைப் பார்த்து, ‘இவனை திருத்தவே முடியாது..’ நினைத்தான்..

“நான் அவங்ககிட்ட கேட்டுக்கிறேன் மச்சான். நீ கடுப்பாகத்தே..” அவனை சமாதானம் பண்ணிவிட்டு நிலாவின் பக்கம் திரும்பினான். சுமிம்மா, ரித்து, நிலா மூவரும் அவனையே கேள்வியாக நோக்கினர்.

“மகனே இன்னைக்கு நீ நல்ல முகத்தில் முழிச்சுட்டு வந்திருக்கிற போல..” என்றாள் ரித்து புன்னகையுடன்..

“கொத்தவரங்கா..” அவன் அவளை மிரட்ட, “அவளை எதுக்குடா மிரட்டற..” என்று அவனின் தலையில் ஒரு அடிப்போட்டாள் ரேணு..

“ஏய் முருங்கைகாய் முதலில் என்னிடம் கேள்வி கேளு.. அப்புறம் நீ அவளை மிரட்டுவியாம்..” அவர் அவனைத் தடுத்துவிட்டார்

“ஆமா நீங்க யாரு..” திவாகரின் அருகில் நின்றிருந்தவன் அவரின் கேள்வி கேட்க, “ஐயோ இப்படி திடீரென்று கேட்ட எனக்கு மறந்து போயிருமே..” என்று சிறிதுநேரம் சிந்தித்துவிட்டு, “நான் இவளோட அம்மாடா..” நிலாவின் தோளில் கைப்போட்டுக் கொண்டே புன்னகைத்தார்..

“பிள்ளைகளை ஸ்கூலிற்கு கொண்டு போய் விடும் அம்மாவை மிஞ்சிட்டாங்க மச்சான்..” என்றவனைப் பார்வையால் அளந்தார் சுமிம்மா..

“என்ன வெண்டக்கா பண்றது காலம் கெட்டுக் கிடக்கிறது இல்ல. உன்னை மாதிரி ஆளுங்களை எல்லாம் நம்பவே முடியல..” என்றவர் சாதாரணமாகவே..

மாணவர் பட்டாளமே ஒன்றிணைந்து, “எங்கள் மேல் உங்களுக்கு நம்பிக்கை இல்லாமல் பிள்ளையை காலேஜில் விடும் சாக்கில் எங்களை போட்டுகொடுக்க வந்தீங்களோ..” என்றவர்களின் குரல்கள் ஓங்கி ஒலித்தது..

“எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம். இந்த ராகிங் எதற்கு?” புரியாமல் அவர் கேள்வி கேட்கவே, “ஜுனியர் கூட மெண்டல் ஆகத்தான்..” என்றதும், “அதை எந்தக் கீழ்பாக்கம் சொல்லுது.. கீழ்பாக்கம் கொஞ்சம் முன்னாடி வந்து முகத்தைக் காட்டு..” என்றதும் திவாகரின் பின்னாடி இருந்து ஒருவன் எட்டிப்பார்த்தான்..

“ஹா ஹா அழகாக இருக்கிறடா அம்பி..” அஜய், ரேணு, ரித்து நிலா மற்ற நண்பர்கள் எல்லோருமே சிரித்தனர்..

“உங்க பெயர் என்னம்மா?” மற்றொருவன் கேள்வி கேட்க, “நான் என்ன ஜூனியரா?” என்று கோபத்துடன் கேட்ட சுமிம்மா, “என்னையே கேள்வி கேட்கிற? ஆமா உன்னோட பெயர் என்ன?” அவனை மிரட்டிட திவாகர் அரண்டுப்போனான்..

அவன் சிலையாகி நின்றிருப்பதைக் கவனித்த ரேணு, “இவனுக்கு இந்த வேலை தேவையா? அந்த அம்மாவிடம் வசமாக மாட்டிகிட்டான் அஜய்..” அவள் சிரித்துக்கொண்டே சொல்ல, “அவனுக்கு அது தேவைதான்..” என்றவன் அங்கே நடப்பதில் கவனம் செலுத்தினான்..

அவன் ஒரு நொடி என்ன பேசுவது என்று புரியாமல் நிற்க, “முருங்கைகாய்..” என்று அவனின் தோளைத் தட்டி நிஜத்திற்கு அழைத்து வந்தார் சுமிம்மா..

“என்னடா முருங்கைகாய் பதில் பேசாமல் நிற்கிற..” அவனின் பிபியை ஏற்றிவிட்டதும், “நான் இந்த பெண்ணை ராகிங் பண்ணட்டுமா?” அவனின் வாயைக் கொண்டே மாட்டிகொண்டான்..

“இந்த வயசில் ராகிங் இல்லாமல் இருந்த நீ காலேஜ் படிப்பதே வேஸ்ட். ரித்து பக்கத்தில் நிற்கிற பாரு இவள்தான் ஜூனியர்..” நிலாவை மாட்டிவிட்டார்.

அஜய் பார்வை சுமிம்மாவின் மீது கேள்வியாக படிய அவரும் அவனின் பார்வையைக் கவனித்துவிட்டு மீண்டும் திவாகரின் பக்கம் திரும்பிவிட்டார்.

“சுமிம்மா அவனை நல்லா குழப்பி விட்டுடாங்க. பாவம் திவாகர் அண்ணா.. இன்னைக்கு அவனோட வாழ்க்கையே திவால் ஆக போகுது..” ரித்துவின் காதில் நிலா கிசுகிசுத்து வாய்விட்டுச் சிரித்தாள்.

“சீனியர் பட்டாளத்தின் யூனியன் லீடரே.. விசாரணையை நீங்கள் ஆரம்பிக்கிறீங்களா? இல்ல நான் ஆரம்பித்து வைக்கவா..” பேசியே அவனைத் திணறடித்தார் சுமிம்மா..

அதற்குள் அவளின் பக்கம் திரும்பிய திவாகர், “உன்னோட பெயர் என்ன?” என்று கேட்க, “நிலா..” என்றவள் தைரியமாகவே!

“நிலா நீ இங்கே இருக்கிற.. உன்னோட வானம் எங்கே?” அவனின் பார்வை அவளின் மீது நக்கலுடன் வினாவினான்..

“முருங்கைகாய் நான் இங்கேதான் இருக்கிறேன்..” என்று இடையில் புகுந்தார்.

காலேஜ் பெல் அடித்துவிட பிரவீன் பைக்கில் கேம்பஸ் உள்ளே நுழைவதைக் கவனித்த அஜய், “திவா சீனியர் வந்துட்டார். நான் கிளாசிற்கு போகிறேன்..” என்று எழுந்துகொள்ள அவனுடன் மற்றவர்களும் கிளம்பிவிட்டனர்.

ரித்து அவனை மொத்துவதற்கு ரெடியாகிவிட ரேணு, “ரித்து சீக்கிரம் வாடி..” என்றவள் சொல்ல, “நீ போ ஸ்வீட் ஹார்ட்.. நான் வந்துவிடுகிறேன்..” என்று குறும்புடன் கண்சிமிட்டி சிரித்தாள்..

“டேய் நீயிருக்கிற தைரியத்தில் தானே தைரியமாக இவர்களை எல்லாம் ராகிங் செய்யலாம் என்று வந்தேன்.. இப்போ நீ என்னை டீலில் மாட்டிவிட்டு போறீயே.. அதுவும் இந்த ரத்தகாட்டேரி கிட்ட என்னை மாட்டிவிடுவது உனக்கே நியாயமாக இருக்கா..” அவன் கொஞ்சம் அரண்டுவிட்டான். திவாகரைப் பார்க்கவே அவனுக்குப் பாவமாக இருந்தது.

“நீதானே வம்பிற்கு வம்படியாகப் போன.. இப்போ அவளை சீக்கிரம் சமாளித்துவிட்டு கிளாஸ் ரூம் வரும் வழியை பாரு..” என்றவன் நிலாவின் பக்கம் திரும்பி, “இவனை நல்லா அடித்து அனுப்பும்மா.. அப்போதான் அறிவு வரும்..” அவன் சொல்ல, நிலா வேகமாக தலையாட்டினாள்..

அஜயின் செயல்கள் சுமிம்மாவை வெகுவாக கவர்ந்திட, ‘நல்ல பிள்ளை..’ மனதிற்குள் நினைத்துக்கொள்ள, “அஜய் நீ கிளாஸ் போ.. நான் இவனை கவனிச்சிட்டு வரேன்..”  இருபொருள்பட கூறினாள் ரித்தி..

“சீக்கிரம் வந்து சேருடா.. மேம் வந்துவிடுவாங்க..” என்றவன் புன்னகையுடன் முன்னே செல்ல, “துரோகி..” என்று முணுமுணுத்தான் திவாகர்..

தன்னை நோக்கி புன்னகையுடன் வந்த அஜய் தோளில் கைபோட்ட பிரவீன், “என்ன அஜய் சீனியர் கெத்து எல்லாம் காட்டிட்டு வர மாதிரி தெரியுது..” அவன் அவளை கேலி செய்தான்..

“நான் ராகிங் செய்தேன் என்று சொன்னா ஊர் தாங்காது பிரவீன் அண்ணா..” என்றவன் புன்னகைக்க, “அண்ணா இன்னைக்கு காலேஜிற்கு புது ப்ரொபசர் வந்திருப்பதாக சொன்னாரு.. அவங்க யாருன்னு தெரியல.. கிளாஸ் போன பின்னாடித்தான் தெரியும்..” என்றான்.

“யார் வந்தாலும் நம்ம ஒழுங்கா படித்தால் அதுவே போதும்..” என்றவனின் மீது பார்வையைத் திருப்பினான் பிரவீன்.

அலையலையாக கருமையான கேசமும், பழுப்பு நிறத்தில் விழிகளும், கூர்மையான நாசிகளும், அளவான மீசையும், ஆறடி உயரமும், வெள்ளை நிறத்தில் இருந்தவனின் சாயலே அவன் வெளிநாட்டைச் சேர்ந்தவன் என்று மற்றவர்களுக்குத தெரியபடுத்தும்.

ஆமாம் அஜய் நெதர்லாந்து நாட்டிலிருந்து இங்கே இந்தியா வந்திருக்கிறான். அவனை கவர்ந்தது இங்கே வர ஒரே காரணம் தமிழ்நாட்டின் பண்பாடு. அந்தப் பண்பாட்டை விரும்பி இந்தியா வந்து படிக்கிறான்.

“மேடம் பெயர் சுமித்ரா என்று மட்டும் சொன்னான்..” என்றதும் புன்னகைத்தான்..

“ம்ம் அவங்க கிளாசிற்கு வரட்டும் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்..” என்று சொல்லிவிட்டு அவனின் வகுப்பறைக்குள் நுழைய, “பாய் பிரவீன் அண்ணா..” என்றதும் தலையசைத்துவிட்டு அவனின் கிளாசிற்கு சென்றுவிட்டான் பிரவீன்.

எல்லோரும் அவரவர்கள் இடத்தில் அமர்ந்து கதை பேசத் தொடங்க, “இந்த ரித்து எப்போ வருவாளோ..” என்ற கேள்வியுடன் அவளின் இடத்தில் போய் அமர்ந்தாள்..

அவனுடன் சேர்ந்து மற்றவர்களும் கிளாசிற்கு கிளம்பிவிட திவாகர் மட்டும் அவர்களிடம் மாட்டிகொண்டான்.

“என்ன மகனே தனியாக சிக்கிக்கொண்டாயா?” சுமிம்மா அவனை கேலி செய்ய, “கிளாசிற்கு நேரம் ஆன ஒரே காரணத்தினால் இன்னைக்கு ராகிங் கேன்சல்.. நாளை கண்டினியூ பண்ணலாம்..” அறிவிப்பு போல  கூறிவிட்டு, “எஸ்கேப்..” என்று ஒரே ஓட்டமாக ஓட்டிவிட்டான்..

நிலாவும் ரித்துவும் சேர்ந்து விழுந்து விழுந்து சிரிக்க, “மகனே நீ மட்டும் நாளைக்கு ராகிங் பண்றேன்னு கும்பல கிளப்பிவிட்டு உட்காரு.. உன்னோட கைகாலை முறிக்கிறேன்..” என்று சுமிம்மா வாய்விட்டுச் சிரித்தார் சுமிம்மா..

“கலேஜிற்குள் நுழைந்த மறுநொடியே உங்களோட சேட்டையைத தொடங்கிட்டீங்க..” ரித்து கூற, “சுமிம்மா என்றாலே கெத்துதான்..” என்ற  நிலாவிற்கு, ரித்து ஹை – பை கொடுக்க, “நான் கிளாசிற்கு கிளம்பறேன் அக்கா..” என்றவள் இருவரிடமும் விடைபெற்று செல்ல ரித்துவும் கிளாசிற்கு கிளம்பிவிட்டாள்..

அஜய் கிளாசிற்கு நுழைந்த மறுநொடியே, “ஸ்ஸ்ஸ் அப்பா கிரேட் எஸ்கேப்..” என்று நண்பனின் அருகில் அமர்ந்தான்..

“எப்படிடா இவ்வளவு வேகமாக வந்த.. ரித்து உன்னை மொத்தாமல் விட்டுவிட்டாளா?” என்று சிரித்துக்கொண்டே கேட்க, “நான் ஓடிவந்துவிட்டேன்..” என்று சொல்லும் பொழுது ரித்து வகுப்பறைக்குள் நுழைந்தாள்..

“ஏய் கொத்தவரங்கா ஆளை கூட்டிட்டு வந்து என்னை க்ளோஸ் பண்ண முடிவே பண்ணிட்டியா?” என்று பயத்துடன் கேட்க, அஜய் பார்வை அவளின் மீது படிந்தது..

“ஆமாண்டா..” என்றவள் அவளின் இடத்தில் சென்று அமர, “அந்த அம்மா யாருடி..” ரேணு அவளிடம் கேள்வி கேட்க, “யாருக்கு தெரியும்.. சும்மா போனவங்களை கூப்பிட்டு வாங்கி கட்டிக்கிட்டான்.. அதுக்கு நான் பொறுப்பல்ல..” என்று கிண்டலுடன் கூறிவிட்டுச் சிரித்தாள் ரித்து..

ரித்து வகுப்பறைக்கு செல்ல அலுவலகத்திற்கு சென்று எல்லோரிடமும் தன்னை அறிமுகத்தை முடித்துவிட்டு கிளாஸ் ரூமிற்கு சென்றார்.

சுமிம்மா வகுப்பறைக்குள் நுழைய மாணவர்கள் எல்லோருமே திகைத்த வண்ணம் எழுந்து நிற்க, “குட் மார்னிங்..” என்றவர் தன்னுடைய கையிலிருந்த புத்தகத்தை டேபிளில் வைத்துவிட்டு மாணவமாணவிகள் பக்கம் திரும்பினார்.

“என்னோட பெயர் சுமித்ரா. நான் இன்னைக்கு தான் காலேஜில் சேர்ந்திருக்கிறேன். நான் ரொம்பவே ஜாலி டைப் பட் நான் கொடுக்கும் சுதந்திரத்தை நீங்க தவறாக பயன்படுத்தக்கூடாது” என்றதும் அஜய் திகைத்தான்..

“இவன்கிட்ட தப்பிக்க நினைத்து அங்கிருந்து ஓடி வந்தேன்.. கடைசியில் இங்கே வந்து வசமாக மாட்டிக்கிட்டேன்..” என்று தனியாகப் புலம்பினான் திவாகர்.

“இன்னைக்கு முதல் நாள் சோ கிளாஸ் எடுக்கல. நீங்க எல்லோரும் எழுந்து அவங்க பெயரைச் சொல்லுங்க..” என்று சொல்ல மாணவர்கள் மாணவிகள் எழுந்து அவரவர் பெயரைக் கூறி தங்களை அறிமுகப் படுத்துக்கொண்டனர்.

அஜய், ரேணு மற்றும் ரித்து எல்லோரும் தங்களை அறிமுகம் செய்து முடிக்க திவாகர் பயத்துடன் எழுந்ததும், “முருங்கக்காய் நீ இந்த கிளாஸா? எனக்கு நல்லா டைம் பாஸ் ஆகும்..” என்று சொல்ல கிளாசில் வெடி சிரிப்பு கிளம்பியது..

அந்த நாளுக்கு பிறகு சுமிம்மாவின் கிளாஸ் என்றாலே மாணவர்கள் குஷியாகும் அளவிற்கு அவரின் சப்ஜெக்ட்டை சூப்பராக எடுத்தார். நிலாவிற்கும் அவளின் கல்லூரி வாழ்க்கை அழகாக சென்றது..

பிரவீன், அஜய், ரேணு, ரித்து, திவாகர், இவர்கள் பட்டாளத்துடன் சுமிம்மா மற்றும் நிலாவின் கல்லூரி நாட்கள் இனி எப்படி மாறுமோ?

மொட்டுகள் வளரும்

 

error: Content is protected !!