MMV-8

MMV-8

அத்தியாயம் – 8

கல்லூரியின் முதல்நாள் ஆரம்பித்த கலட்ட அதன்பிறகு கிளாசிலும் தொடர, ‘சுமிம்மா கிளாஸ் என்றாலே மாணவ, மாணவிகளுக்கு தனி குஷிதான்’ என்ற அளவிற்கு ஆர்ப்பாட்டமாகவே நகர்ந்தது கல்லூரி நாட்கள்.

அன்று காலை சுமிம்மாவின் கிளாஸ் என்ற காரணத்தினால் எல்லோரும் ஆர்வத்துடன் காத்திருந்தனர். திவாகர் மட்டும்  தன்னுடைய டேபிளில் படுத்து நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான்.

“சுமித்ரா மேடம் வரும் நேரம் ஆச்சு.. இவன் இந்த தூக்கம் தூங்கறான். இன்னைக்கு மேம் கிட்ட இவனுக்கு நல்லா கச்சேரி நடக்க போகுது..” என்று ரன்னிங் நோட்ஸ் எடுக்க தயாரானான்.

“அஜய் மேம் வர போறாங்க அவனை கொஞ்சம் எழுப்புடா.. கிளாசில் எப்படி தூங்கறான் பாரு..” என்றாள் ரித்து கோபத்துடன்.

“இவனை என்னால் எழுப்ப முடியாது ரித்தி. இவன் ஒரு நாளாவது மேம்கிட்ட திட்டு வாங்கினால்தான் திருந்துவான்..” என்றவன் அவனின் வேலையைக் கவனிக்க, “ஐயோ சுமிம்மா என்ன பண்ண போறாங்களோ..” என்று தனியாக புலம்பினாள்.

ரித்துவின் புலம்பல்கேட்டு, ‘இவ என்ன தனியாக புலம்பற..’ திவாகரைத் திரும்பிப் பார்த்தாள் ரேணு.டெஸ்கில் நன்றாக தலை வைத்து கர்சீப்பை தலையில் போட்டு மூடிய வண்ணம் நன்றாக உறக்கத்தில் ஆழ்ந்திருந்தான் திவாகர்.

அவன் மட்டும் அல்ல அவனை போல பலரும் தூக்க கலக்கத்துடன் சுத்திக் கொண்டிருக்க, “இந்த ஸார் சப்ஜெக்ட் என்றாலே பசங்க இந்த தூங்கு தூங்கறாங்க..” என்ற ரேணு தன்னுடைய கையிலிருந்த மொபைலை நோண்ட தொடங்கினாள்.

நான்கு ஹௌர் பிடிக்காத சப்ஜெக்ட்யுடன் போராட்டம் கட்டிய மாணவர்கள் ஓய்வாகப் பெருமூச்சு விடும் நேரத்தில் வகுப்பறைக்குள் நுழைந்தார் சுமிம்மா.

அவர் உள்ளே நுழைய அனைத்து மாணவ, மனைவிகளும் எழுந்து நிற்க திவாகர் மட்டும் தூங்கிக் கொண்டிருக்க, ‘ஐயோ மேம் வேற வந்துடாங்க. இவன் இன்னும் தூங்கறான் பாரு..’ என்று அவனை எழுப்ப நினைத்தான்.

தன்னுடைய சப்ஜெக்ட் புத்தகத்தை டேபிளில் வைத்துவிட்டு, “எல்லோரும் உட்காருங்க..” என்றவரின் பார்வை அஜய் மீது நிலைத்தது.

“டேய் மேம் வந்துட்டாங்க எழுதிருடா..”அவன் திவாகரை எழுப்பும் முயற்சியில் ஈடுபட, “அவங்க வந்தா நீயே கிளாஸைக் கவனி..” என்றவன் தூக்கத்தைத் தொடர்ந்தான். சுமிம்மா பேசுவதை கவனிக்காமல் அஜய் அவனை எழுப்புவதில் குறியாக இருந்தான்.

அவனின் கவனம் வேறு எங்கோ இருப்பதைக் கவனித்த சுமிம்மா, “அஜய் என்ன பண்ணிட்டு இருக்கிற..” என்று சுமிம்மா கேட்க அஜய் எழுந்து நின்றான்.

அப்பொழுது தான் அவனின் அருகில் தூங்குவதைக் கவனித்த சுமிம்மா, “நைட் தூங்காமல் கிளாஸ் ரூமில் இவனுக்கு என்ன தூக்கம்..” என்றவர் அஜயிடம், “இவனை எழுப்பிட்டு இருந்தாயா?” என்று கேட்க, “யெஸ் மேம்..” அவனும் தலையசைத்து ஒப்புக் கொண்டான்.

“அவன் தூங்கினால் தூங்கட்டும். அவனை எதற்கு நீ எழுப்பற..” என்றவர் சாதாரணமாக கேட்க அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

அவன் மட்டும் இன்றி கிளாசில் இருக்கும் அனைவருமே அவரை திகைப்புடன் நோக்கிட, “மேம் கிளாஸில் தூங்குவது நல்ல பழக்கம் இல்ல..” என்றான் அஜய்.

“யார் சொன்னது?” சுமிம்மா அவனை விடாமல் கேள்வி கேட்க, அவனோ பதில் சொல்ல முடியாமல் திணறினான்.

அவன் பதில் சொல்லாமல் நிற்கவே, “அவனை எழுப்பிவிட்டு தவறிலிருந்து அவனை காப்பாற்ற முயற்சி பண்றீயா? இல்ல தூங்கட்டும் என்று தண்டனை கொடுக்க போறீயா?” என்றவரின் கேள்வி ரொம்பவே வித்தியாசமாக இருந்தது.

எல்லோருமே திருதிருவென்று விழிக்க, “அவனை எழுப்ப முயற்சி பண்ணியது தாப்பா மேம்..” என்று அஜய் புரியாமல் கேட்க, “இல்லன்னு சொல்வேன் என்று எதிர்பார்க்கிறாயா?” என்று அவனிடம் கேள்வி கேட்டார் சுமிம்மா. யாருக்குமே அவரின் அணுகுமுறை புரியவில்லை.

“மேம் நீங்க சொல்றது புரியல” என்று எழுந்து நின்ற ரேணு அவரிடம் வழிய சென்று தலையைக் கொடுக்க, “ரேணு இவன் தூங்க காரணம் யாரு..” என்றவர் அவனிடம் கேட்க அவளும் சேர்ந்து திருதிருவென்று விழித்தாள்.

“போன கிளாஸில் ஸார் கலகலப்பாக கிளாஸ் எடுத்திருந்தா அவன் தூங்கியிருக்க மாட்டான்..” என்றதும், “மேம் எனக்கு ஒரு சந்தேகம்..” என்று எழுந்து நின்றாள் ரித்திகா.

“சொல்லு ரித்திகா..” என்றதும், “அஜய் செய்த காரியமும் தவறுன்னு சொல்றீங்க. ஸார் மீதும் மிஸ்டேக் இருக்குன்னு சொல்றீங்க. யார் செய்தது சரி? யார் செய்தது தவறு..” என்றவள் தெளிவாக கேள்வி கேட்டாள்

“ரித்திகா இந்த மாதிரி கிராஸ் கேள்வி கேட்கிற வேலையை கொஞ்சம் படிப்பிலும் காட்டினால் நீதான் கோல்ட்மேடலிஸ்ட்..” என்றவர் புன்னகைக்க ரித்திகா வாயை மூடிக்கொண்டாள் வகுப்பறையே அமைதியாக இருந்தது.

“அவனை நீ எழுப்பிவிட்டால் மட்டும் அவன் கிளாஸ் கவனிப்பானா?” என்றதும், ‘அது கொஞ்சம் சந்தேகம் தான்..’ மனதிற்குள் சொல்லிக் கொள்ள, “அவனுக்கு தூக்கம் தானே முக்கியம். நல்லா தூங்கட்டும் அதுதான் அவனுக்கு பணிஸ்மெண்ட்..” என்றார் சுமிம்மா.

“இன்னைக்கு நான் கிளாஸ் எடுக்கல. இன்னைக்கு நான் எடுக்க வேண்டிய சாப்டரை உங்களுக்கு செமினாராக கொடுக்கிறேன். நீங்க நாளைக்கு வந்து கிளாஸ் எடுங்க. நம்ம வேற விஷயம் பேசலாம்..” என்றார்.

மாணவ, மாணவிகளின் முகத்தில் தெளிவடைவதைக் கவனித்தவர், “தாய்மை என்ற தலைப்பில் பேசலாம்.  தாய்மை பற்றி பேசலாம். ஆண்களுக்கே தாய்மை உணர்வு உண்டு. பெண்களுக்கே தாய்மை உணர்வு அதிகம். இந்த இரண்டு தலைப்பில் இரண்டு அணியினராக பிரிந்து பேசலாம்..” என்றதும் மாணவ, மாணவிகள் தலைப்பிற்கு ஏற்றார் போல இடமாறி அமர்ந்தனர்.

இதற்கு  தீர்ப்பு சொல்லும் நிலையில் தன்னை நடுவராக மாறிக்கொண்ட சுமிம்மா இரண்டு அணியினரின் பேசுவதைக் குறிப்பெடுத்தார். வகுப்பறை மிகவும் கலகலப்பாக நகர்ந்தது.

ஆண்களுக்கே தாய்மை உணர்வு அதிகம் என்று ஒரு அணியினர் வாதாட, இல்லை பெண்களுக்கே தாய்மை உணர்வு அதிகம் என்று ஒரு அணியினர் வாதாடினார். [கொஞ்சம் சீரியஸான டாபிக்தான். யாரையும் புண்படுத்த வேண்டும் என்று நான் எடுக்கல. ஈஸியாக எடுத்துட்டு கடந்து போங்க]

ரேணு பெண்களுக்கே தாய்மை உணர்வு அதிகம் என்று வாதாட, “இல்ல ஆண்களுக்கே தாய்மை உணர்வு அதிகம்..” என்று தன்னுடைய கருத்தை முன் வைக்க எழுந்து நின்றான் அஜய்.

“ஆண்களுக்கு தாய்மை உணர்வு இருக்கிறதா?” என்று ரேணு கேலியாக கேட்க, “அவங்களுக்கு தாய்மை உணர்வு இல்லாமல்தான் தனக்கு வரும் மனைவியை தாயைவிட மேலாக கவனித்துக் கொள்கிறார்களா?” என்றவன் எதிர்கருத்தை எடுத்து முன் வைத்தான்.

“ஆண்களுக்கு தாய்மை உணர்வு இல்ல அஜய். அவங்களுக்கு பிள்ளைகள் பற்றிய கவலை எல்லாம் இல்ல. அவங்களுக்கு எது பற்றியும் கவலையில்ல. எண்ணம் போல வாழனும் அதுதான் அவங்க நோக்கம்..” என்ற ரேணு,

“கருவை சுமப்பதிலிருந்து கடைசியாக காடு கட்டை போய் சேரும் வரை அவளால் தன்னுடைய மகன் மகள் நினைவிலேயே இருக்கிறாள். அவளுக்கு அக்கறையும் அன்பும் அதிகம். அதவிட தாய்மை உணர்வு அதிகம்..”  அழுத்தமாக கொஞ்சம் ஆழமாக தன்னுடைய கருத்தை முன் வைத்தாள்.

“ஆண்களுக்குதான் தாய்மை உணர்வு அதிகம். பிள்ளையைக் கையில் ஏந்திய நாளிலிருந்து மகன் மகளுக்காகவே வாழும் நல்ல உள்ளம் தந்தைதான். அவருக்காக அவர் எதையும் எதிர்பார்ப்பது இல்லை. தன்னை போல தன்னுடைய மகன், மகள் கஷ்டப்பட கூடாது என்ற காரணத்தில் தொடங்கி கடைசி வரை அவர்களை வளர்ப்பதிலேயே அவரின் காலமும் முடிந்து விடுகிறது..” என்றான்.

அவர்களை பேசவிட்டு அவர் புன்னகையுடன் கேட்டுகொண்டிருக்க சுமிம்மா, “அம்மாவிற்கு தாய்மை இல்லன்னு சொல்றீயா அஜய்..” என்று ஆழ்ந்த குரலில் கேட்டார்.

“பெண்களுக்கு தாய்மையா அப்படின்னா அவங்களுக்கு என்னன்னு தெரியுமா?” என்ற அவனோ கோபத்தில் விழியிரண்டும் சிவக்க கோபத்துடன் நின்றிருந்தான்.

அவனின் கேள்வியில் சுமிம்மாவின் புருவங்கள் கேள்வியாக உயர்ந்திட, “ஒருத்தனுக்கு புள்ளைய பெத்துட்டு அடுத்தவன் கூட போறவளுக்கு தாய்மை என்ன தெரியும்?” என்றவன் கோபத்தில் கேட்டதும், “அஜய் வார்த்தை சரியில்லாமல் விடுகிறாய்..” என்றவர் கண்டித்தார்.

“என்னை பொறுத்தவரை ஆண்களுக்கு அதுவும் என்னோட அப்பாவிற்கு நீங்க சொன்ன தாய்மை உணர்வு இருக்கு. அம்மா எப்படி போனால் என்ன? நான் இருக்கிறேன் உனக்கு என்று இன்றுவரை என்னோட நலனை மட்டுமே மனதில் வைத்து வாழ்கிறார். அவருக்கு தாய்மை உணர்வு இல்லையா?” என்று நேருக்கு நேராகக் கேட்டான்.

மாணவ, மாணவிகள் கூட அவனை திகைப்புடன் பார்க்க, “நீ எந்த ஊர்..” என்று சுமிம்மா அவனிடம் கேட்க, “நெதர்லாந்து. அங்கே இருந்த அவளைப் பார்த்து பார்த்து கோபத்தில் படிக்க மாட்டேங்கிறேன் என்று அப்பா என்னை இந்தியா அனுப்பி வைத்தார்..” என்றவனின் கோபம் கொஞ்சம் குறைந்தது.

“உங்க ஊரில் பெண்களுக்கு தாய்மை பற்றி தெரியாமல் இருக்கலாம் அஜய். இந்த நாட்டில் இங்கே தாய்மை இல்லன்னு சொல்ல உன்னால் முடியாது. நான் பெண்களுக்கு தாய் உணர்வு இருக்குன்னு தீர்ப்பு கொடுக்க போறேன்..” என்றவர் அவனிடம் தூண்டில் போட்டார்.

“இந்த விஷயத்தை என்னால் ஏற்றுகொள்ள முடியாது மேடம்..” என்றவன் தன்னுடைய பேக்கை எடுத்து தோளில் போட்டுகொண்டு வகுப்பறைவிட்டு வெளியேறினான். அதை யாரும் அவனிடம் எதிர்பார்க்கவில்லை.

அவன் செல்லும் திசையை கவனித்த சுமிம்மா, ‘இவனோட மனதில் காயம் இருக்கிறது..’ என்று நினைத்தவர் மாணவ, மாணவிகளின் பக்கம் திரும்பினார்.

“இந்த பட்டிமன்றத்தில் அஜய் மற்றும் ரேணு ரொம்ப நன்றாகவே வாதாடினார். இந்த பட்டிமன்றத்தில் தாய்மை உணர்வு அதிகம் படைத்தவர் ஆண்களே என்று தீர்ப்பு கொடுக்கிறேன்..” அந்த தலைப்பில் வாதாடியவர் குஷியில் கத்தினர்.

ஆனால் ரேணுவால் அவரின் தீர்ப்பை ஏற்றுகொள்ள முடியாமல் போக, “ஒரு பெண்ணாக இருக்கும் நீங்களே ஆண்களுக்கு தாய்மை உணர்வு அதிகம் என்று சொல்வதை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை மேடம்..” என்றவள் தன்னுடைய கருத்தை முன் வைத்தாள்

“என்னோட கணவர் எனக்கு இன்னொரு தாய்தான் என்று நான் சொல்வேன். அத்தனை துன்பத்தில் வளர்ந்த என்னை திருமணம் செய்து நான் விரும்பிய லக்சர் படிப்பை படிக்க வைத்து குழந்தை இல்லாமல் நான் அழுகும் பொழுதெல்லாம் என்னை தேற்றி இன்று தைரியமாக நடமாட வைத்திருக்கிறார்..

நீ என்னதான் தாய்மை பற்றி வாதாடினாலும் அந்த தாய்மையை ஒரு பெண்ணிற்கு பரிசாக வழங்குவது ஒரு ஆண்தான். தாயில்லாத பெண்களுக்கு அவனும் ஒரு தாய்தான். சிலர் தவறு செய்கிறார்கள் என்ற காரணத்தால் எல்லோரையும் தவறாக நினைக்கக்கூடாது..” என்றவர் தெளிவாக எடுத்துரைக்க கைதட்டலில் வகுப்பறையே அதிர்ந்தது.

அவரின் விளக்கத்தில் ரேணு தலைக்குனிந்து நிற்க, “தாய்மை என்பது இரு பாலினருக்கும் சமமே என்பது என்னோட கருத்து..” என்றவர் புன்னகைக்க அதுவரை அங்கே நடந்த பட்டிமன்றத்தை அரை தூக்கத்துடன் கவனித்த திவாகர் எழுந்து நின்றான்.

“மேடம் ஆண், பெண் இருவருமே ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்ல. இங்கே எல்லாமே ஆண், பெண் இருவரும் சரிபாதித்தான். சோ தாய்மை உணர்வு இரு பாலினருக்கும் இருக்கு. அது இடம், பொருள், ஏவல் பொறுத்து மாரிபோகிறது. தாய்மை உணர்வை வெளிபடுத்த சூழ்நிலையே இருவருக்கும் வாய்ப்பை கொடுக்கிறது..” இறுதியாக அவனின் கருத்தை பதிவு செய்தான்.

“டேய் நீ தூன்கிட்டுதானே இருந்த..” என்று ரித்து அதிர்ச்சியுடன் கேட்க,

“கண்கள் தூங்கினால் என்ன ரித்து. காது இரண்டும் நல்லா கேட்குமே..” என்றதும் தன்னை மீறி புன்னகைத்த சுமிம்மா, “ம்ம் பரவல்ல திவாகர் நீ கூட சூப்பரா பேசற..” என்றவர் சொல்லி முடிக்க வகுப்பு முடிந்தது.

அஜய் பேசிய வார்த்தை வரம்பு மீறியே சென்றாலும் அவனை தண்டிக்காமல் அவனுக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கிவிட்டு ஸ்டாப் ரூம் சென்றார் சுமிம்மா. அன்று கல்லூரி முடிந்து அஜய் நேராக ஹாஸ்டலுக்கு சென்றுவிட்டான்.

மறுநாள் சுமிம்மா கல்லூரிக்கு வரவில்லை என்பதால் அவர் எடுக்க வேண்டிய வகுப்பை மாணவ, மாணவிகள் செமினார் எடுக்க அஜய் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

மதியம் எல்லோரும் கேண்டினில் அமர்ந்து சாப்பிட, “இந்த அஜய் நேற்று பேசிய பேச்சில் கடைசியாக தீர்ப்பு அவன் அணிக்கே கிடைத்துவிட்டது..” என்ற ரேணுவின் குரல்கேட்டு அஜய் நிமிர்ந்தான்

“என்ன ரேணு சொல்ற..” அவன் புரியாமல் கேள்வி கேட்க, “நீ கோபத்தில் எழுந்து போயிட்டாலும் சுமித்ரா மேடம் உனக்கு சாதகமாகத்தான் அஜய் தீர்ப்பு கொடுத்தாங்க..” என்றது அவனுக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியாகவும், மற்றொரு பக்கம் ஆச்சர்யமாகவும் இருந்தது.

“நிஜமாவா சொல்ற..” அவன் நம்பாமல் கேட்க, “இந்த உன்னிடம் இந்த பரிசை கொடுக்க சொன்னாங்க சுமித்ரா மேடம்..” என்ற ரித்தி அவனிடம் பரிசுப்பொருளைக் கொடுத்தாள்.

அவன் அதை வேகமாக திறந்து பார்க்க ஒரு ஆணின் கைகளை பிடித்த வண்ணம் ஒரு சிறுவன் நடந்து செல்வது போல ஒரு ஆர்ட் வரைந்து அவனுக்கு பரிசாக கொடுத்தார் சுமிம்மா.

அவன் அதை ரசனையுடன் பார்க்க, “அவங்களோட அணுகுமுறை வேற மாதிரி இருக்கு. மாணவர்களிடம் கண்டிப்பு சரிவராது என்று தெரிந்த அவங்க அன்புடன் பேசறாங்க. நிஜமாவே அவங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..” என்றாள் ரேணு

“அஜய் இனிமேல் சுமித்ரா மேம் கிளாசில் நான் தூங்கவே மாட்டேன்..” என்றவன் கைகழுவ எழுந்து சென்றான்.

இந்த தகவல் மற்றவர்கள் மூலமாக அஜயிடம் சென்று சேர்ந்திட, ‘நம்ம அவங்களை தவறாக புரிந்துகிட்டோம்..’ என்று மனம் வருந்தியவன் சுமிம்மா மறுபடியும் கல்லூரிக்கு வரும் நாளை எதிர்பார்க்க தொடங்கினான்.

மொட்டுகள் வளரும்

 

ReplyForward
error: Content is protected !!