Mu-24

Mu-24

ஒரே நேர் கோட்டில்

வைத்தீஸ்வரனிடம் ஈஷ்வர் பேசுவதற்கு முன்னதாக சூர்யாவைப் பற்றிய நினைவில் ஆழ்ந்திருந்தான்.

அவன் தனக்குத் தானே, என் முகத்திற்கு நேரா யாருமே மதிப்புக் குறைவா கூட பேசினதில்ல… ஏன்? அப்படி யாரும் யோசிக்கக் கூட மாட்டாங்க… ஆனா நீயோ என் எதிர்க்கே நின்னுகிட்டு என்னைப் பத்தியும் என் கேரக்டரைப் பத்தியும் பேசுற… என் அட்டிட்யூடை தப்புன்னு சொல்ற… 

போதாக் குறைக்கு நான் செஞ்சது தப்புதான்னு என்னையே ஒத்துக்கவும் வைச்சிட்ட… இவ்வளவு பண்ண உன் மேல எனக்கு  கோபம்தானே வரணும்… பட் லவ் வருது… இதென்னடி லாஜிக்? அப்படி என்னடி ஸ்பெஷல் உன்கிட்ட?’  என்று புன்னகை ததும்பக் கேட்டவனின்  ஐம்புலன்களும் மெல்ல மெல்ல அவளின் நினைவால் ஆட்கொள்ளப்பட அந்த சமயத்தில் அவனை அழைத்த கைப்பேசியை அவன் கவனிக்கவேயில்லை.

   தன்னிலை மறந்து கிடந்தவனுக்கு இறுதியில் தொடர்ச்சியான அழைப்பின் ஒலி அவள் நினைவிலிருந்துஅவனை மீண்டு  விழித்தெழச் செய்தது.

அந்த அழைப்பைப் பார்த்ததும் கொஞ்சம் வெறுப்படைந்தவனாய், என்னை டென்ஷன் படுத்தவே போஃன் பண்ணியிருப்பான்‘ என்று ஈஷ்வர் சலிப்படைந்தபடி எடுத்தான். அவன் பேச்சுக்கு அவ்விதம் சொன்னாலும்,

அதுதான் உண்மையில் நிகழப் போகிறது. அவன் மதியின் அழைப்பை ஏற்று, “ம்ம்ம்… சொல்லு மதி” என்றான்.

பாஸ்… என்னாச்சு… காலை அட்டென்ட் பண்ண இவ்வளவு நேரம்… ஏதாச்சும் மீட்டிங்ல இருக்கீங்களா… அப்புறம் பேசட்டுமா?!”

நோ மதி…ஃப்ரீயாதான் இருக்கேன்… நீ சொல்லு… பிரான்ஸ்ல இருந்து நம்ம டீம் எப்போ வர்றாங்க?”

நாளைக்கு பாஸ்”

குட்… வந்ததும் அவங்க எல்லோரையும் நான் மீட் பண்ணணும் மதி… எங்கே எப்படின்னு அப்புறமா நான் சொல்றேன்” என்றான்.

ஒகே பாஸ்…..அப்புறம்” என்று இழுத்தவனிடம், ” கமான் மதி… வேறென்ன மேட்டர்?” என்று அழுத்தமாய் கேட்டான்.

பாஸ்… அந்த அபிமன்யு” என்று அதற்கு மேல் சொல்லாமல் மதி தன் பேச்சை நிறுத்த,

ம்ம்ம்… அவனோட ஃபேம்லி டீடைல்ஸ் பத்திக் கேட்டிருந்தேன்?!” என்று ஈஷ்வர் நினைவுகூர்ந்தான்.

எஸ் பாஸ்… டீடைல்ஸ் தெரிஞ்சுடுச்சு… ஆனா அதுதான் கொஞ்சம் ஷாக்கிங்கான மேட்டரா இருக்கு…” என்றான்.

என்ன அப்படி ஷாக்கிங்?”

அது… அந்த அபிமன்யு… நம்ம டாக்டர். வைத்தீஸ்வரனோட சன்” என்று மதி உரைக்க அதைக் கேட்ட மறுகணம் ஈஷ்வர் சிறிது நேரம் அதிர்ச்சியில் உறைந்தான். ஒரு பேராபத்தில் இருந்து அவன் உயிரை மீட்டெடுத்தவர் என்று  அவர் மீது அவனுக்கு அதீத மரியாதை இருந்தது.

மதி அவன் சிந்தனையைத் தடை செய்தபடி, “என்ன பாஸ்… உங்க உயிரைக் காப்பாத்துனவரோட மகன்னு யோசிக்கிறீங்களா?” என்று கேட்டான்.

நோ மதி… இவ்வளவு பெரிய புத்திசாலியோட மகனான்னு யோசிக்கிறேன்… இது ரொம்ப ஆபத்தாச்சே… ஒரு தடவை கூட டாக்டர் வைத்தி இந்த அபிமன்யு பத்தி சொல்லவே இல்லையே… அவரோட சன் அர்ஜுன் பத்திதானே சொல்லுவாரு…”என்று தன் சந்தேகத்தைக் கேட்டான்.

ஆனா அர்ஜுன் அபிமன்யு… இரண்டு பேரும் அவரோட சன்ஸ்தான்” என்று மதி தெளிவுப்படுத்தினான்.

ஸோ… அந்த அபிமன்யு உண்மையிலேயே நமக்கு ஆபத்தானவன்தான்… டாக்டர் வைத்திக்கு இதுல ஏதாச்சும் பங்கு இருக்குமா? இதுல நிறைய விஷயம் அடங்கியிருக்கு… நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்” என்று சொன்னவன் மீண்டும் மதியிடம்,

  “சரி மதி அவனை வாட்ச் பண்ண சொன்னேனே… பண்ணீங்களா?!” என்று ஆவலோடு கேட்டான்.

பண்ணோம் பாஸ்… அதனாலதான் இன்னொரு ஷாக்கிங்கான மேட்டர் தெரிய வந்துச்சு” என்றான்.

ஓ மை காட்… இப்படி  ஷாக் மேல ஷாக் கொடுத்து என் ஹேப்பி மூடை ஸ்பாயில் பண்ணவே போன் பண்ணியா மதி?” என்று எரிச்சலோடு ஈஷ்வர் உரைக்க,

மதி தயக்கத்தோடு, “சாரி பாஸ்… நான் வேணா அப்புறமா கால் பண்ணட்டுமா?” என்று கேட்டான்.

ஈஷ்வர் சிரத்தையின்றி “சொல்லணும்னு ஆரம்பிச்சிட்டல்ல… அப்புறம் என்ன… சொல்லி முடிச்சிடு” எனறான்.

அபிமன்யுவுக்கும் சூர்யாவுக்கும் ஏதோ லிங்க் இருக்குமோன்னு”

இந்த வார்த்தைகளைக் கேட்டு ஈஷ்வர் அதிர்ந்தபடி, “ஸ்டாப் இட் மதி… நீ பாட்டுக்கு ஏதாச்சும் கற்பனைப் பண்ணி பேசாதே… ஐ வில் கில் யூ டேமிட்” என்று கத்த ஆரம்பித்தான்.

இத்தனைக் கோபத்தை மதி எதிர்பார்க்கவில்லை. அவனின் சீற்றத்தின் அர்த்தம் புரியாமல்,

இல்ல பாஸ்… நான் கற்பனை பண்ணிப் பேசல… அந்த சூர்யா அபிமன்யுவோடு சேர்ந்து உங்களை டிரேப் பண்ண பார்க்கறான்னுதான் எனக்குத் தோணுது… இல்லாட்டிப் போனா அந்த அபிமன்யு சென்னைக்கு வந்ததும் சூர்யா ஏன் அவனை  மீட் பண்ணனும்… எதுக்கும் நீங்க சூர்யா விஷயத்துல கொஞ்சம் ஜாக்கிரதையா…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

ஈஷ்வர் அவன் சொல்வதை ஏற்க மறுத்தபடி,”நோ மதி… நீ சொல்ற மாதிரி இருக்க சான்ஸே இல்ல… பிகாஸ் நான் இப்பதான் சூர்யாவை மீட் பண்ணினேன்… அவ கண்ணுலயும் சரி… பேச்சிலயும் சரி… அந்த மாதிரியான தாட் இருக்கிற மாதிரி கொஞ்சங் கூடத் தெரியல” என்று தீர்க்கமாய் உரைத்தான். தனக்கு சுயமரியாதைதான் முக்கியம் என்று சொல்லிவிட்டு வேலை பார்க்க மாட்டேன் என்று கோபித்துக் கொண்டு போனவள் தன்னை உளவறியும் எண்ணத்தோடு வந்திருக்க வாய்ப்பில்லை என்பதே அவனின் கணிப்பு.

ஆனால் மதி விடாமல் மேலும், “நீங்க சொல்றது சரின்னு வைச்சுக்கிட்டாலும்… ஏன் சூர்யா காலையில அபிமன்யுவை மீட் பண்ணனும்… அனேகமா அந்த அபிமன்யுவை மீட் பண்ணப் பிறகுதான்… உங்களை வந்து சூர்யா மீட் பண்ணியிருக்கணும்” என்றுரைத்தான்.

ஏன்… அவங்க மீட்டிங் ஆக்ஸிடென்டலா நடந்திருக்கக் கூடாது… ” என்று கேட்டான்.

அது எனக்குத் தெரியல… பட் சூர்யா அன்னைக்கு ஃபோன்ல அபிமன்யுவை மீட் பண்ண விஷயத்தை மறைச்சதும் கொங்ககிரி பத்தித் தெரிஞ்சுக்க நினைச்சதும் நீங்க மறந்துட்டீங்களா… பாஸ் ” என்று மதி சொன்ன நொடியே ஈஷ்வர் சற்று நிதானித்து யோசிக்கத் தொடங்கினான். சூர்யா மீதுள்ள காதல் தன்னை யோசிக்க விடாமல் செய்கிறதோ என எண்ணியவன் தெளிவானக் குரலோடு,

மதி லிஸன்…  நீ சொல்றதுலயும் பாயின்ட் இருக்கு… நீ என்ன பண்ற… சூர்யா கூட அபிமன்யுவை மீட் பண்ணப் போன அந்த அலெக்ஸ்கிட்ட அவங்க மீட்டிங் பத்திக் கேட்டுத் தெரிஞ்சுகிட்டு எனக்கு கால் பண்ணு… ” என்றான்.

“ஒகே பாஸ்… வேணா… சூர்யாவையும் வாட்ச் பண்ண” என்று  சொல்லும் போதே ஈஷ்வர் இடைமறித்து, “நோ மதி… டோன்ட்… அந்த அபிமன்யுவை மட்டும் வாட்ச் பண்ணா போதும்…” என்று ஈஷ்வர் உரைக்கமதியும் சம்மதித்துவிட அவர்கள் உரையாடல் அத்துடன் முடிந்து அழைப்பைத் துண்டித்தான்.

ஈஷ்வரின் நிம்மதி மொத்தமாய் மதியின் தகவல்களால் சூறையாடப்பட்டது. அவள் தன்னை உளவறிய வந்திருப்பாள் என்ற தகவலை அவன் நம்பத்தயாராக இல்லை. ஆனால் அபிமன்யுவிற்கும் சூர்யாவிற்கும் இடையிலான உறவு எத்தகையது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வம் அவனுக்குள் தூண்டப்பட்டது.

இன்னொரு புறம் அபிமன்யுவை நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் உண்டாக அப்போது அவனுக்குள் உதித்த யோசனைதான் வைத்தீஸ்வரனின் வீட்டிற்குப் போய் அபிமன்யுவைப் பார்ப்பது. மேலும் சூர்யாவையும் அபிமன்யுவையும் தன் கண்ணெதிரே சந்திக்க வைத்து அவர்களின் உறவின் நிலைப்பாடை அறிந்து கொள்வது.  இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்த மாதிரி காட்டிகொள்கிறார்களா என்பதன் மூலம் அவர்களின் திட்டத்தை அறிந்து கொள்ள எண்ணினான்.

இந்தத் திட்டத்தை மறுநாளே செயல்படுத்தும் விதமாய் டாக்டர் வைத்தீஸ்வரனிடம் இது குறித்துப் பேசியும் விட்டான். இதெல்லாம் ஒரு புறமிருக்க அவனின் மனதைக் களவாடியவள் அவன் உறக்கத்தையும் களவாடிவிட்டாள். மீண்டும் அவளை சந்திக்கப் போகும் அந்த விடியலுக்காக அவன் காத்திருப்பை அறிந்து கொண்ட  கதிரவன் வெகுவிரைவாகவே தன் பிரகாச கதிர்களைக் கொண்டு பூமியைத் தன் வசப்படுத்திக் கொண்டிருக்க பொழுதும் புலர்ந்தது.

அன்றைய காலைப் பொழுதில் ரா நிறுவனத்தின் சென்னை கிளை ஈஷ்வரின் வருகையால் பரபரப்பின் உச்சத்தை எட்டியது. அங்கே வேலை செய்யும் எல்லோருமே எதிர்பார்ப்பின் விளிம்பில் நின்றிருக்க சூர்யா அவன் வருவதற்கு முன்னதாகவே. வரவேற்பு மற்றும் பிற ஏற்பாடுகளை சரி பார்த்துக் கொண்டிருந்தாள்.

சரியான சமயத்தில் நேரம் தவறாமல் ஈஷ்வரின் பிரவேசம் நிகழ்ந்துவிட அங்கிருந்தவர் அனைவரும் அவன் கம்பீரத் தோற்றத்தில் மெய்மறந்து போனார்கள்.

ஈஷ்வர் வந்ததும் சூர்யாஅவனைத் தன் புன்னகையால் வரவேற்க  அவளைக் கண்டுகொண்ட நொடி அவன் முகத்தில் பிரகாசம் ஒளிர்ந்தது. ஆனால் மதி சொன்ன தகவல்களை அவன் நினைவுப்படுத்திக் கொள்ள அந்த எண்ணம் உண்மையா என்ற சந்தேகம் மேலெழும்பி அவனின் காதல் உணர்வு தவிப்புக்குள்ளானது.

சென்னை அலுவலகத்தின் அந்தப் பெரிய ஹாலில் ஈஷ்வரின் வரவேற்பு நிகழ்ந்தது. இறுதியாக அவனின் உரையைக் கேட்க எல்லோரும் ஆர்வமாய் இருந்தனர். ஈஷ்வர் பேச ஆரம்பித்த நொடியிலிருந்து முடியும் வரை அவனின் மீது பதிந்த விழிகள் அசையவே மறந்தன.

அங்கே இருந்தவர்களின் செவிகளைத் தவிர்த்து மற்ற புலன்கள் எல்லாம் செயலற்றுக் கிடக்க சூர்யாவுமே அவனை வியப்புக் குறியோடு உற்று நோக்கிக் கொண்டிருந்தாள். அந்த நொடி அவனின் மீதான கோபம் எல்லாம் ஈஷ்வரின் திறமையைக் கண்டு அவளுக்கு சுத்தமாகத் துடைத்தெறியப்பட்டுவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆனால் இது அவனுடைய ஒரு முகம் மட்டுமே  என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.

எல்லா நிகழ்வும் செவ்வனே முடிவுற சூர்யாவிற்கு மூச்சுவிடுவதற்குக் கூட அப்போதுதான் நேரம் கிட்டியது. ஈஷ்வர் சுற்றியுள்ள சென்னை அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பாளர்களிடம் ரொம்பவும் இயல்பாகப் பேசிவிட்டு புறப்படத் தயாரானான். அந்த ஒரு நாளே போதுமானது.

அவனின் பேச்சுத் திறமையாலும், பழகும் விதத்தாலும்,  ஆளுமையாலும் எல்லோரையும் கவர்ந்திழுத்துவிட்டான். அங்கீயே அன்றைய பொழுது முடிந்து மாலை நேரம் தொடங்க ஈஷ்வர் சூர்யாவிடம், “கமான் சூர்யா… வீ ஹேவ் டூ கோ… முக்கியமான ஒருத்தரை மீட் பண்றேன்னு சொல்லியிருக்கேன்… இட்ஸ் கெட்டிங் லேட்” என்று அவளைத் துரிதப்படுத்தினான்.

சூர்யா புரியாமல் விழித்தபடி, “யாரை மீட் பண்ணனும்… பாஸ்”  என்று கேட்டவளிடம் புறப்படச் சொல்லி கார் வரை அழைத்து வந்துவிட்டான்.

சூர்யாவோ கைகடிகாரத்தைப் பார்த்தபடியே எங்கே அழைத்து செல்லப் போகிறான் என்று யோசனையோடு அமர்ந்தாள்.

பின் இருக்கையில் ஈஷ்வரும் சூர்யாவும் அமர்ந்திருக்க மீண்டும் அவள், “பாஸ்… யாரோட மீட்டிங்” என்று தயங்கியபடிக் கேட்டாள்.

யாருன்னு சொன்னாதான் வருவியா!” என்று அழுத்தமாய் கேட்டான்.

நாட் லைக் தட்… தெரிஞ்சுக்கலாம்னு”

மீட் பண்ண பிறகு தெரிஞ்சுக்கதானே போற” என்று அவன் உரைக்க இவனிடம் கேட்பது வீண் என வெளியே வேடிக்கைப் பார்த்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

ஈஷ்வர் ஏதோ நினைவுவந்தவனாய், “சூர்யா” என்று  அழைக்க யோசனையோடு திரும்பியவளிடம் “இனிமே நீ என்னை பாஸ்னு கூப்பிட வேண்டாம்” என்றான்.

ஏன்?… வேறெப்படி கூப்பிடணும்” என்று கேட்டபடி அவள் புருவங்கள் முடிச்சிட,

கால் மீ ஈஷ்வர்” என்றான்.

அதெப்படி?” என்று தயக்கத்தோடுக் கேட்டவளை நோக்கி, “நேத்து எப்படி கூப்பிட்டியோ அப்படித்தான்… கோபம் வந்தா ஈஷ்வர்… நார்மலா இருந்தா பாஸா… அப்படி எல்லாம் வேண்டாம்… நீ என்னை ஈஷ்வர்னே கூப்பிடலாம்” என்றான்.

அவளும் விழித்தபடி மறுக்க முடியாமல் தலையசைத்தாள். அவளுக்கோ அவன் தனக்குக் காரணமின்றி அதிக சலுகை தருகிறானோ எனக் கேள்வி எழ அவள் மனம் சரியான விடையைக் கண்டறிந்தாலும் அது தவறென்றே அவள் மனம் மறுதலித்தது.

அதற்குக் காரணம் அவந்திகா லட்சம் முறையாவது ஈஷ்வர் வேறு பெண்ணைக் கண்ணெடுத்தும் பார்க்க மாட்டான் என உரைத்திருக்கிறாள். அந்த எண்ணம் அவள் மனதிலும் ஆழப் பதிந்திருந்த நிலையில் உலகம் முழுக்கப் பல பெண்களைப் பார்த்த அவனுக்குத் தன்னிடம் போய் ஈர்ப்புத் தோன்றிவிடுமா என அந்த எண்ணத்தை ஒதுக்கிவைத்தாள்.

ஈஷ்வரின் வருகையால் சென்னை அலுவலகம் எட்டிய பரபரப்பை விட வைத்தீஸ்வரரின் வீடு கொஞ்சம் அதீத பரபரப்பில் இருந்தது. அந்தளவுக்கு எல்லாரையும் வைத்தீஸ்வரன் படுத்தி எடுத்துக் கொண்டிருந்தார் என்றே சொல்லலாம்.

அவருக்குத் தலை கால் புரியவில்லை. அப்படி என்ன அவருக்கு அவன் முக்கியத்துவம் வாய்ந்தவன் என எண்ணம் தோன்றலாம். அவன் பெரிய தொழிலதிபர் என்பதைத் தாண்டி சில மணித்துளிகள் பேசினாலே அவர்களைத் தன் வசம் இழுத்துவிடுபவனாயிற்றே. அத்தகைய வலையில் வைத்தீஸ்வரனும் சிக்கியிருந்தார். ஆனால் ஈஷ்வரின் வல்லமையும் ஈர்ப்பு விசையும் ஒருவனிடம் மட்டும் பலிக்கப் போவதில்லை.

அன்று சுகந்திக்கோ தன் கணவரின் ஆரவாரம் ஒன்றும் விளங்கவில்லை. அப்படி யார் இந்த ஈஷ்வர் என ஆவல் அவளுக்கும் பெருகியது.

யாருடா அந்த ஈஷ்வர்… நேத்துல இருந்து இந்த மனுஷன் உயிரை எடுத்துட்டிருக்காரு” என்று கணவன் இல்லாத தைரியத்தில் அர்ஜுனிடம் புலம்பிக் கொண்டிருக்ககிட்டதட்ட அவன் நிலைமையும் கருத்தும் அதேதான். ஆனால் தன் அம்மாவைப் போல அவன் வெளிப்படையாக சொல்லவில்லை.

ஆனால் அபிமன்யு எந்த வித உணர்ச்சிகளுக்கும் ஆட்படாமல் தன் அம்மாவை நோக்கி, “அம்மா… ஈஷ்வர் தேவ்… ரொம்ப பெரிய பிஸ்னஸ் மேன்… மெடிஸன் ஃபார்மாசிட்டிக்கல் இன்டஸ்ட்ரீஸ்னு… அவன் ஸ்டேட்டஸ் லெவலே வேற… ஒரு தடவை அப்பா அவன் உயிரைக் காப்பாத்தியிருக்கார்… அதனாலதான் தமிழ்நாட்டுக்கு வந்தவன் அப்பாவையும் பார்க்கணும்னு வர்றான்” என்று அவனைப் பற்றி விளக்கமளித்தான்.

பின் அபிமன்யு தன் தமையனின் தோள் பற்றித் தனியே அழைத்து வந்தவன் தீர்க்கமான பார்வையோடு, “இதப் பாரு அர்ஜுன்… நீ அவன்கிட்ட ரொம்ப இயல்பா பேசு… தெரிஞ்ச மாதிரி காட்டிக்கவே வேண்டாம்… அவன் மைன்டல என்ன இருக்குன்னு நாம கண்டுபிடிக்கணும்… அட் தி சேம் டைம் நம்ம மைன்டல என்ன நினைக்கிறோம்னு அவனுக்கு க்ளூ கூட கொடுக்கக் கூடாது… அவன் என்னதான் பன்றான்னு பார்க்கலாம்… ” என்று உரைத்தான்.

அர்ஜுனும் அவன் சொன்னவற்றிற்கு தலையசைத்து ஆமோதித்தான். எந்த உணர்ச்சிக்கும் அபிமன்யு ஆட்படாவிட்டாலும் காதல் உணர்ச்சியை மட்டும் அவனால் கட்டுப்படுத்த முடியப் போவதில்லை என்பதை சில நிமிடங்களில் அறிந்து கொள்ளப் போகிறான்.

வெளியே காரின் வருகை சத்தம் கொஞ்சம் அதிகப்படியாய் கேட்க வைத்தீஸ்வரன் வாசலுக்கு விரைந்தார்.

அந்த வசதியான குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் அழகாகவும் அம்சமாகவும் அமைந்திருந்த அந்த வீட்டிற்குள் ஈஷ்வரின் பிரமாண்டமான கார் நுழைய சூர்யாவிற்கு எங்கே வந்திருக்கிறோம் எனக் குழப்பம் படர்ந்திருந்தது.

ஈஷ்வர் அவளுக்கு முன்னதாக காரை விட்டு இறங்கினான். சூர்யாவும் பின்னோடு இறங்க இப்போதும் அவள் கேள்விக்கு விடை அறிய முடியவில்லை. வைத்தீஸ்வரன் வாசலில் வந்து நின்று பரபரப்போடு கைக்குலுக்கி, “வெல்கம் ஈஷ்வர்!” என்று உற்சாகம் பொங்க அவனை வரவேற்றார்.

அவர் ஆர்வமாய் ஈஷ்வரை உள்ளே அழைத்துப் போக சூர்யா மெதுவாக யோசனையோடு நடந்து வந்தாள். ஈஷ்வர் அவளை உள்ளே வரச் சொல்லி கண்ணசைத்துவிட்டு செல்ல வெளியே இருந்த பெயர் பலகையில் டாக்டர் அர்ஜுன் என்ற பெயரைப் பார்த்ததும் அவள் விழிகள் அகல விரிந்தன.

அப்போ இது மிஸ்டர். அபிமன்யுவோட வீடா… இந்த ஈஷ்வர் நம்மள சொல்லாம கொள்ளாம கூட்டிட்டு வந்திருக்கான்னா… ஏதோ பெருசா சிக்க வைக்கப் ப்ளான் போட்டிருப்பானோ… இவன் என்ன யோசிக்கிறான்னு கெஸ் பண்ணவே முடியலயே… எதுவாயிருந்தாலும் சரி… சூர்யா… யூ பீ கேர்புஃல்” என்று தனக்குத்தானே எச்சரித்தவள் அவன் அபிமன்யுவை சந்திக்கும் நோக்கத்திலேயே வந்திருப்பான் என ஒருவாறு யூகித்தும்விட்டாள்.

அபிமன்யுவைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டுமோ என்று எண்ணம் எழ அழகாய் புன்னகையை உதிர்த்தவள் பொறுமையாய் உள்ளே நுழைந்தாள்.

ஈஷ்வரை இருக்கையில் அமரச் சொல்லி வைத்தீஸ்வரன் உரைக்க சூர்யாவின் வருகைக்காக காத்திருந்தவன் அவளை நோக்கி, “ஏன் என்னாச்சு… வெளியவே நின்னுட்ட ” என்று கேட்டான்.

நத்திங்” என்று சொல்லித் தலையசைத்தவளிடம் ஈஷ்வர் புன்னகையோடு “ஹி இஸ் டாக்டர். வைத்தி… ” என்று அவரைக் காட்டி சொல்லும் போதே, “எனக்கு டாக்டரை நல்லா தெரியும்… மேடமோட ஹெல்த்தை செக் பண்றதுக்காக ஒரு தடவை வந்திருக்காரு… நான் பார்த்திருக்கேன்… பட் டாக்டருக்கு என்னை ஞாபகம் இருக்க சான்ஸ் இல்ல” என்று அவள் உரைக்க வைத்தீஸ்வரன் அப்போது சூர்யாவை ஞாபகப்படுத்திக் கொள்ள யோசித்தார்.

“ஆமாம் நினைவுக்கு வரல” என்று அவர் யோசனையோடு உரைக்க, “இட்ஸ் ஒகே டாக்டர்” என்று அவள் சமாதானமாய் தலையசைத்தாள். அப்போதுதான் ஈஷ்வர் ஒரே உருவத்தில் இருவர் நிற்பதைக் கவனித்தான்.

இந்த மதி இவங்க ட்வின்ஸ்னு சொல்லவே இல்லையே‘ என்று எண்ணியன் அப்போது யார் அர்ஜுன் அபிமன்யு என்று குழப்பம் கொண்டான்.

ஈஷ்வர் திகைப்போடு அந்த இரு சகோதரர்களை நெருங்க வைத்தீஸ்வரன் புன்னகையோடு, “மை சன்ஸ்… அபிமன்யு, அன்ட் அர்ஜுன்” என்று சொல்லிக் கொண்டிருக்க சூர்யா அவரை நிறுத்தி, “என்ன டாக்டர் நீங்க… டென்ஷன்ல பேரை மாத்தி சொல்லிட்டீங்க” என்றுரைத்தாள்.

அப்போது வைத்தீஸ்வரன் மீண்டும் கவனித்த போது பதட்டத்தில் தான் செய்த தவறை அவர் உணர சூர்யா ஈஷ்வரை நோக்கி, “ஹி இஸ் மிஸ்டர். அபிமன்யு… அன்ட் திஸ் இஸ் மிஸ்டர். அர்ஜுன்” என்று இதழ்கள் விரிய சுட்டிக்காட்டினாள்.

தன் தந்தையின் தவறை அவர்களே சரி செய்வதற்கு முன்னதாக சூர்யா இடைமறித்து சரி செய்தது அபிமன்யு உட்பட எல்லோரையுமே ஆச்சர்யத்தில் மூழ்க வைத்தது.

ஆனால் இந்த நிகழ்வு நடப்பதற்கு முன்னதாக நாம் கொஞ்சம் பின்னோக்கி சென்று இந்தக் காட்சியை மீண்டும் பார்த்தே தீர வேண்டும்.

ஈஷ்வர் வைத்தீஸ்வரனுடன் உள்ளே நுழைந்த நொடி அபிமன்யுவின் பார்வை கூர்மையாய் கவனித்துக் கொண்டிருக்கஅவன் பார்வை சட்டென்று பின்னோடு தாமதமாய் நுழைந்த சூர்யாவின் மீது நிலைக்குத்தி நின்றது.

சூர்யாவும் உள்ளே நுழைந்த நொடி வைத்தீஸ்வரனிடம் பேசிக் கொண்டே இரு சகோதரர்களையும் கவனித்தாள். அதிலும் அபிமன்யு அவளை எதிர்பாராத அதிர்ச்சியோடு உலகையே மறந்த நிலையில் பார்த்துக் கொண்டிருக்க,

அவனின் அந்த ஒரு பார்வை போதாதா அவளுக்கு… அவன்தான் அபிமன்யு என்று கண்டுகொள்ள.

இந்நிலையில் ஈஷ்வருக்கு யார் அபிமன்யு என்று குழப்பத்தில் இருந்ததால் அதை வைத்தீஸ்வரன் மாற்றி உரைத்து அந்தக் குழப்பத்தை அவள் புகுந்து சரி செய்தாள். அங்கே நின்றிருந்த சுகந்திக்கும் ஆச்சர்யம் தாளவில்லை.

இப்போது சுகந்தி சூர்யாவை நோக்கி, “நானே சில நேரங்களில் குழம்பிடுவேன்… உனக்கெப்படிமா இரண்டு பேரையும் சரியா?” என்று யோசனையோடு கேட்க, ஈஷ்வர் உட்பட எல்லோருமே ஆர்வமாய் அவள் பதிலை எதிர்பார்த்தனர்.

error: Content is protected !!