Naan Avan Ilai 18

download (4)-06a76e7e

நான் அவன் இல்லை 18

‘ நம்மகிட்டையே  சந்தியாவை கொலை பண்ணிருவேன்னு  மிரட்டுறான்  ..எவ்வளவு திமிர்  …? ம்ஹ்ம் கொலைகாரனுக்கு  திமிருக்கு என்ன குறைச்சல் .. ச்ச இவனை போய் நல்லவன்னு நம்பிட்டோமே ‘ என  மனதிற்குள் திட்டியபடி தனக்கென்று ஒதுக்கப்பட்டிருக்கும்   அறைக்குள் நுழைந்த  மதியை  .. அறைக்கு நடுவே இருந்த ராட்சத படுக்கை வரவேற்றது .

முறையாக பராமரிக்கப்பட்ட  வெள்ளை நிற மார்பில்  .. அறையெங்கும் ரம்மியமாக ஒளிவீசிய சாண்ட்லியர் விளக்கின் அழகு ….சுற்றி  இருந்த அறிய வைகான ஓவியங்கள் … வண்ண வண்ண விளக்குகள்  என தங்க கூண்டு போல  ஆடம்பரமாக காட்சியளித்த அந்த அறையில் மாட்டிக் கொண்ட சிறு  பறவையாக  தன்னை உணர்ந்தவளுக்கு . கண்ணீர் நிற்காமல் வந்தது .

“ஏன் எனக்கு மட்டும் இப்படி … இங்க வந்து இப்படி மாட்டிகிட்டேனே …எப்படி தப்பிக்க போறேன் … நான் அனாதை இல்லை …நான் சொன்னது எல்லாம் பொய்ன்னு தெரிஞ்சா … இவனுங்க என்ன பண்ணுவாங்கன்னே தெரியலையே  … ப்ளீஸ் யாரவது என்னை காப்பாத்துங்க ” மதுவின் மனம் அரற்றியது . உடல் அழுகையில் குலுங்கியது .

அந்த பிரம்பாண்டமான  அறையே  அவளை வெகுவாக அச்சுறுத்தியது  …மூச்சுமுட்டுவது போல தோன்ற அறையில் இருந்து வெளியேறியவள் ஆதித்யா இருக்கிறானா என்று சுற்றும் முற்றும் பார்த்தபடி கீழே வந்தாள் .

ஆங்காங்கே    சாம்பல் நிற சபாரியில்  கையில் துப்பாக்கியுடன்  இருக்கும் துவாரபாலர்களை கவனித்தாள்… எத்தனை பேர் வந்தாலும் துவம்சம் செய்துவிடும்   தோரணையில் காட்சியளித்தனர் .  இறுக்கமான முகத்துடன் அங்கும் இங்கும் நடந்தவர்கள்  இவளை கண்டதும் ‘ குட் மார்னிங் மேம் ‘ என்று வணக்கம் வைக்க …

முதலில் தடுமாறியவள் பிறகு பதிலுக்கு தலையசைத்துவிட்டு  …நல்லவேளை அவன் கண்ணில் படவில்லை . வெளிக்காற்றை சுவாசித்தால்  இறுக்கம்  தளரும்  என்றெண்ணி தோட்டத்திற்குள்  வந்தாள் .

‘ அவன் ஒரு கெட்டவன் … அவன் என்னை  ஏமாத்திருக்கான் … அவன் ஒரு அரக்கன் … அவன் மேல நமக்கு எந்த ஈர்ப்பும் வர கூடாது எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நாம இங்க இருந்து தப்பிக்கணும் ‘ என்று தனக்குத்தானே சொல்லி கொண்டாள்.

********

தன் அலுவலகத்தில் இருந்த சிறு வேலையை முடித்துவிட்டு உணவு கூடத்திற்கு வந்தான் ஆதித்யா … வழக்கம் போல நாகா, வீரா மற்றும் தாரா  அவனுக்காக உணவு மேஜையில் காத்திருந்தார்கள் .

” குட் மார்னிங் ஆதி  ” – நாகா

” மார்னிங் கைஸ்  ” – இருக்கையில் வந்து அமர்ந்தவனின் கண்கள் மதியை தேடின .

” மதி வரலையா “- தாராவிடம் கேட்டான் … சட்டென்று அவளது முகம் இறுகியது .

” இன்டெர்க்காம்ல கூப்பிட்டேன்  அவ அன்ஸர் பண்ணல …  ரூம்க்கு போனேன் அவ அங்க இல்லை ” இயந்திரம் போல கூறினாள் .

“ரூம்ல இல்லையா !” அவனுடைய  தாடை  இறுகியது .

” ஆதி ரிலாக்ஸ் … கார்டன்ல கூட இருக்கலாம் நான் போய் செக் பண்ணிட்டு வரேன் ”  என்று வீரா கூறும் பொழுதே ,

” சார் மேம் கார்டன்ல இருக்காங்க ” என பாரிமாறிக்கொண்டிருந்த  வேலைக்கார ஆண் இடையிட்டான் .

” நான் தான் சொன்னேன்ல … போய் கூட்டிட்டு வாரேன்” என்று எழுந்த வீராவை தடுத்த ஆதி ,

”  இல்ல … நீங்க எல்லாரும் கண்டின்யு பண்ணுங்க நா இப்போ வந்துடறேன் ” – மதியை தேடி தோட்டத்திற்கு சென்றான் ஆதி .

பூ செடிகளுக்கு நடுவே கைகளை கட்டிக்கொண்டு இலக்கில்லாமல் எங்கோ வெறித்து பார்த்தபடி நின்றிருந்தாள் .

” அப்படி என்ன தீவிரமான யோசனை ?” – திடீரென்று கேட்ட கணீர் குரலில் அதிர்ச்சியுடன்  திரும்பினாள் .

‘ நான் தானே ஏன் இந்த பயம்  ‘  – அவன் மனம் கேட்டது .

‘ உன்னை ஏமாத்திட்டு எப்படி தப்பிக்கணும்ன்னு தான் யோசிக்கிறேன் … சொன்னா விட்டுடுவியா ?’ – அவள் மனம் கேள்வி கேட்டது .

இருவரும் ஆளுக்கொன்றை  எண்ணியபடி ஒருவரை ஒருவர் பார்க்க விழிகள் ரெண்டும் பின்னிக்கொண்டன .

” என்னை மீறி யாரால உன்னை என்ன செய்ய முடியும் ?”- கேட்டானே ஒரு கேள்வி … சட்டென்று அவனை ஏறிட்டாள் … அவள் பார்வையில் கோபம் இருக்கிறதோ என்று ஆதித்யா ஆராய்வதற்குள்  தன் பார்வையில் இருந்த கடுமையை குறைத்து கொண்டாள்  .

‘ இதை சொல்ல உனக்கு  எவ்வளவு தையிரம் இருக்கனும் … ‘ தனக்குள் முணுமுணுத்தவள் அவனிடம் புரியாதது போல் பார்த்தாள் .

” இல்லை இவ்வளவு பயம் உனக்கு வேண்டாம்ன்னு சொன்னேன்  “

” ம்ம்ம் “இயலாமையில் பேச முடியாமல்  ம்ம் கொட்டினாள். ஒரு துளி கண்ணீர் இமை தாண்டி கீழே விழுந்தது . ஆனால் அது ஆதித்யாவின் கழுகு  பார்வையில் இருந்து தப்பவில்லை.

” வலிக்குதா ” அடிபட்ட காயத்தை தொட்டுப்பார்க்க கிட்டே நெருங்கினான் .

“இல்லை ” உடனே விலகினாள் . அவளுடைய விலகல் அடிவாங்கியது  போல  அவனுக்கு வலித்தது .  சிகையை கோதி அழுத்தமான மூச்சை வெளியிட்டவன் .

” சாரி மதி … உன்னையோ உன் ஃப்ரண்ட்டையோ  காயப்படுத்தனும்  என்பது என் எண்ணம் கிடையாது … உனக்கு நடந்தது  எல்லாமே ஒரு மிஸ் அன்டெர்ஸ்டண்டிங்ல நடந்தது …  அதை சரி பண்ண தான் நான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன் … புரிஞ்சிக்கோ ..நீ மனசை விட்டு எதுனாலும் என்கிட்ட சொல்லு அப்போ தான் உனக்கு என்னால உதவி பண்ண முடியும்  ” – தவிப்புடன்   கூறினான் .

எப்பொழுதும் இருப்பதை விட இன்று புதிதாய் அவன் குரலில் ஒருவித  நெருக்கம் தெரிந்தது . அது அவளது உயிர் வரை சென்று அவளை தாக்கியது  .

” சந்தியா பத்திரமா  இருக்கா…  நீ கவலை படாத  .. அவளுக்கு எதுவும் ஆகாது … உன்னை இந்த மாதிரி என்னால பார்க்க  முடியலை  ” – உருகினான். மீண்டும் ஏதோ ஒன்று அவள் உயிர் வரை சென்றது … ஏதோ அவன் அவளுக்காகவே உருகுவது போன்றதொரு எண்ணம் அவளுக்குள் ஏதேதோ செய்தது . பொல்லாத ஆசைகள் எட்டிப்பார்த்தது .அதிர்ந்தே விட்டாள் மதுமதி! .

‘ ம…தி   ஆர் யு மேட் … ஹீ இஸ் அ கில்லர் …. டோன்ட் ட்ரஸ்ட் ஹிம் … இந்த மாதிரி பீலிங்ஸ் எல்லாம் உனக்கு சரி கிடையாது ‘ என்று மனதில் எண்ணியவளுக்கு … சுவாசமே தடைபட்டது போல மூச்சு முட்டிக்கொண்டு வந்தது . படபடத்த மனதை ஆழ மூச்செடுத்து தனது கட்டுக்குள் கொண்டுவந்தவள் .

அவனால் தன் மனதில்  தளிர் விட்ட ஆசையை … ,” தேங்க்ஸ் “என  உயிர் இல்லாத ஒரே   வார்த்தையில் …மலரும் முன்பே கிள்ளி எறிந்தாள். மீண்டும் பட்ட இடத்திலே அடி வாங்கிய உணர்வில் ஆதித்யாவின் முகம் கறுத்துவிட்டது  .

ஏனோ அவனை பார்க்கும் துணிவில்லாமல் மதி  தலையை தாழ்த்தி கொள்ள … ஆத்திரத்தை பற்களை கடித்து  அடக்கிக்கொண்டான் .

அவளும் அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் இருக்க … அவனது பார்வை , கணப்பொழுது  கூட விலகாமல் தன் மீதே நிலைத்திருப்பதை அவளால் அவனை பார்க்காமலே உணர முடிந்தது .

‘ ராட்சதன் இப்போ ஏன் இப்படி பார்த்து வைக்கிறான் ‘ உதட்டை கடித்தவள்  நிமிராமல் அப்படியே நிற்க … சிறிது நேரம் அவளை தன் பார்வையாலே சங்கடபப்டுத்திய ஆதித்யா .

” ஓகே வா ” என்றவன் அவளை பார்க்காமல்  திரும்பி நடந்தான் .

” எங்க வரணும் ?”- இடையிட்ட அவள் குரலில் நின்றவன் ,

” பிரேக்ஃபாஸ்ட்  ரெடியா இருக்கு  … எல்லாரும் நமக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க வா ” திரும்பி பார்க்காமலே கூறினான் .

‘உன் தொல்லை வேண்டாம்ன்னு தான டா  நான் இங்க வந்தேன் …. இதுல உன் கூட வேற வந்து உக்கார்ந்து சாப்பிடணுமா  முடியாது போ டா ‘ மனதிற்குள்  சொல்லிவிட்டாள்… அவனிடம் சொல்ல முடியுமா … முடியாதே !

”  எனக்கு இப்போ வேண்டாம் ” நாசுக்காக அவனிடம் இருந்து தப்பிக்க பார்த்தாள் .

ஏது அவனிடம்,  அதெல்லாம் முடியுமா என்ன??,

” பசிக்குதான்னு  கேட்கலை வான்னு சொன்னேன் “என்றவன் மதியின்  விழிகளை பார்க்காமலே அவளது கரத்தை பிடித்து அழைத்து இல்லை இல்லை இழுத்து சென்றான் .

அறிந்தது தானே ! என்று அவளது விருப்பம் அவனிடம் நடந்திருக்கின்றது … இப்பொழுது நடக்க  .ஒன்றும் செய்ய முடியாத தன் இயலாமையை எண்ணி வேதனையுடன் அவன் இழுத்த இழுப்பிற்குச்  சென்றாள் மதுமதி .

முழுக்க முழுக்க கண்ணாடியால் ஆனா அந்த பிரம்மாண்ட உணவருந்தும்   மேசை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தது … அங்கே நாகா , வீரா மற்றும் தாரா ஆகிய மூவரும் இவர்களின் வருகைக்காக காத்திருந்தனர் .

ஆனால் அவர்கள் யாரையும் பார்க்காமல் ஆதித்யாவின் கைபிடித்தபடி அவன் பின்னால் குனிந்த தலை நிமிராமல் மதி  நடந்தது வர ,  அவளை கண்டதும் ,

” ஹாய் மதி ” வீரா புன்னகையுடன்  வரவேற்றான் .

“ஹாய் ” பதிலுக்கு வீராவை பார்த்து  புன்னகைத்தவள் …அருகில் இருந்த நாகாவை பார்க்க ,

” குட் மார்னிங் ” என விருப்பமே இல்லாமல்  கூறிய நாகா  . அவள் பதிலை எதிர்பாராமல் சாப்பாட்டில்  கவனமானான்.  தாராவோ  மதியை  கண்டுகொள்ளவே  இல்லை …  புறக்கணிக்கப்பட்ட  அவமான உணர்வில் தயங்கியபடி  நின்றவளுக்கு  ஒரு நாற்காலியை இழுத்து ,அவளை வசதியாக  அமரவைத்துவிட்டு  …இயல்பாய் அவள் அருகில் அமர்ந்தான் ஆதித்யா .

‘ ம்ம்ம் நடிப்பு சும்மா அள்ளுதே  அப்படியே பாலிவுட் போனா … நாலு காசாவது பார்க்கலாம் … என்கிட்ட காட்டி ஒரு யூசும் இல்லை … நீ என்ன பண்ணினாலும் மயங்கவே மாட்டேன் டா அரக்கா… நாற்காலியை நகர்த்தி கொடுத்தா நீ நல்லவனா !  ‘ அவள் மனதிற்குள் எண்ணி கொண்டிருக்கும்  பொழுதே  , அவளுக்கும் சேர்த்து தானே பரிமாறினான் .

ஆதித்யா மதிக்காக பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொரு  செய்கையையும்  அவர்களுக்கு எதிரே இருந்து பார்த்து கொண்டிருந்த தாராவின்  முகம் கசக்கி எறிந்த பூவாய் வாடி விட்டது .

இது ஆதித்யா சக்கரவர்த்திக்கும்  அவனுக்கு முக்கியமானவர்களுக்குமான  பிரத்தியேக உணவு மேஜை .

அவர்களை தவிர வேறு யாருக்கும்  அங்கே உணவு அருந்த அனுமதி இல்லை  ..  அப்படி இருக்க … ஜித்தேரியின்  ஜென்ம விரோதியின் மகளுக்கு   அங்கே ஒரு இடம் இருக்கின்றது … அதுவும்  தனக்கு மிகவும் விருப்பமானவனுக்கு  அருகிலே  இருக்கின்றது  – என்று மிகவும்  வருந்திய தாராவுக்கு   தொண்டை குழிக்குள்  உணவு இறங்க   மறுத்தது.

மதியோ பரிமாறப்பட்ட  உணவின் மீது கவனம் செலுத்தாமல் …தான் இருக்கும் இடத்தையே ஆராய்ந்து கொண்டிருக்க …

” ஏன் சாப்பிடாமலே இருக்க ?” – என ஆதித்யா  மதியின் பக்கம் திரும்பி கேட்டான் .

” சாப்பிடுறேன் ” என்றவள் அப்பொழுது தான் தன் தட்டில் இருக்கும் உணவை கவனித்தாள் .

‘ கோதுமை அப்பம் , பல வகை காய்கறிகள் நிறைந்த சாலட் , நறுக்கி வைக்க பட்ட ஆப்பிள் துண்டுகள் , அருகிலே ஒரு கிளாஸ் நிறைய  பச்சை  நிற திரவம் ‘ இதை கண்டதும் மதியின் வாடிய முகம் மேலும் வதங்கி விட்டது .

‘ சாப்பாடை எங்க டா ?? …  ஒரு முட்டை கூட இல்லை … ‘ சலித்து கொண்டாள் …அவளது பார்வையை வைத்தே அவள் மனதை படித்தவன் ,

” ஏன் சாப்பாடு புடிக்கலையா  ?” – என கேட்டான் .

” புடிச்சிருக்கு ” அவனை பார்க்காமலே கூறினாள் .

‘ ஏன் இப்படி எல்லா வற்றையும்  கவனிக்கிறான் … விட்டா எத்தனை தடவை மூச்சு விடுறேன்னு  கூட சொல்லிருவான் போல ‘ –  எரிச்சலுடன் விருப்பமே இல்லாமல்   உள்ளே தள்ளினாள்.

அப்பொழுது  திடிரென்று நாகாவின்   அலைபேசி சினுங்க அழைப்பை ஏற்றவன்  , ” ம்ம் சொல்லுங்க “

” வாட்  ” என்றான்  .

” ஓகே  ” என்று  அழைப்பை துண்டித்தவன்  … ஆதித்யாவை அழைத்தான்  .

” சொல்லு நாகா “சாப்பிட்டு முடித்திருந்த ஆதித்யா  அலைபேசியை தன் கையில் எடுத்தபடி கூறினான் .

” ஆதி அது அவங்க தான்னு  உறுதியாகிடுச்சு… என்ன பண்றதுன்னு  கேட்குறாங்க ?  ” என்றான் நாகா .

ஆதித்யாவின் முகம்  தீவீரமாக  மாறியது ” புடிச்சு இங்க கொண்டு வர  சொல்லு … நான் யாருன்னு அவனுக்கு காட்றேன் ” – மெதுவாக  ஒலித்த அவனது குரலில் பூகம்பத்துக்கான  அறிகுறி தெரிந்தது .

” ஓகே பாய் ” என்ற நாகா அலைபேசியில் ஆதித்யா கூறி செய்தியை சற்று முன் தனக்கு அழைத்த நபரிடம் கூறினான் .

ஆதித்யாவின் குரலில் அமைதி இருந்தாலும், வார்த்தையில் தான் எத்தனை கொரூரம் … சட்டென்று நிமிர்ந்து  அவனை பார்த்த மதி அவன் முகத்தில் தெரிந்த உக்கிரத்தை  கண்டு  அவனை மிரட்சியுடன் நோக்கினாள். கோரப்பசியில் உறுமும் நரமாமிசனாய் காட்சி அளித்தான் .

அதிகப்படியான அச்சம் ஆட்கொள்ள …மிரட்சியுடன் அவனை பார்த்தாள் மதி ..நீண்ட பெருமூச்சை வெளியிட்டபடி தன்னை நிலைப்படுத்திக்கொண்ட ஆதித்யா  மதியின்  பக்கம் திரும்பினான்  . 

மதி  சுவைப்பதற்காக எடுத்த ஆப்பிள் துண்டில் ஒன்று,  அவளது நடுங்கும் கரத்தில் இருந்த குத்து கரண்டியில் சிக்கிக்கொண்டு  , அவளின்  இதழுக்கு மிக அருகில் நடுங்கும் அவளது கரத்துடன் சேர்ந்து  நடுங்கிக்கொண்டிருந்ததை கண்டான் .

‘ பயந்துவிட்டாள் ‘ அவன் மனம் சொன்னது …

” மதி யூ ரிலாக்ஸ் …நான் ” என்று ஆரம்பித்த ஆதித்யாவின்  பார்வை இப்பொழுது அவளது விழிகளை சந்தித்தது … அவனது பார்வை அவளது வதனத்தை படித்தது . அரண்ட விழிகள் …. அதிர்ச்சியில்  துடிக்கும்   இதழ்கள் … வெளிறிப்போன  முகம் … ‘இப்போ  அவளை நான்  ஒன்னும் பண்ணலையே… ஏன் இவ்வளவு பயப்படுறா ?? ப்ச் ‘ என எண்ணியவன் தன்  முகத்தை திருப்பி கொண்டு மீண்டும் தன் கண்களை இறுக்கமாக மூடி  நீண்ட பெருமூச்சை வெளியிட்டவன்… மதியை நெருங்கி ,

” மதி பயப்ப…. ” என ஆரம்பித்தவன்,  ஏனோ பேசுவதை நிறுத்திவிட்டு … அருகில் இருந்த யாரையும் பொருட்படுத்தாது அவளது முகின் நுனியில் மென்மையாக தன் இதழை பதித்தான். 

 இதை சற்றும்  எதிரிபார்க்காத மதி அதிர்ச்சியில் தன் வாயை திறக்க … அவளது நடுங்கும் மென்கரத்தை மென்மையோடு உறுதியாக பற்றியவன்  … அதிர்ச்சியில் திறந்திருந்த  அவளது வாய்க்குள்  கரண்டியால் ஆப்பிள் துண்டை ஊட்டினான் .

அவளது இதழ்கள் தானாய் மூடிக்கொண்டது .  தன் இதழ் பட்ட ஸ்பரிசத்தில்  சட்டென்று சிவந்துவிட்ட அவளது வதனத்தை ரசித்தான் .

அவளது பதற்றம்  மேலும் அதிகரித்தது .

“இப்போதைக்கு உன்னை கடிச்சு சாப்பிடுற எண்ணம் எல்லாம் இல்லை … ஸோ ரிலாக்ஸ் ” கரகரத்த குரலில் கூறினான் .

” என்..ன சொல்றீங்க ? புரி.. யல” தடுமாற்றத்துடன் கூறினாள் .

” புரியலையா !! அப்போ புரியற மாதிரியே சொல்லிருவோம் ” என்றவன்  , மெல்ல குனிந்து அவளது காதருகே தன் மீசை உரச…. அவளுக்கே உரிய சுகந்தத்தை சுவாசித்து தன் உயிர் கூட்டை நிரப்பியபடி

“மதி நீ என்னை விட்டு  எவ்வளவு தூரம் விலகி போறியோ … அதை விட அதிகமா உன்னை நான் நெருங்கி வருவேன்   . இது காலையில  என்னை நீ  கண்டுக்காம போனதுக்கு  ” என்றவன் தன் இதழ் பட்டு சிவந்திருந்த அவளது நாசியை சுட்டிக்காட்டி … மீசை மறைவுக்குள் ஒளிந்திருக்கும்  கபட புன்னகையுடன்  யாருக்கும் கேட்காமல் அவளிடம் ரகசியமாக கூறினான்  .

இல்லை இல்லை,  ‘  என்னை விட்டு நீ விலகினால் இப்படி தான் பண்ணுவேன் ‘  என நூதன முறையில்  மிரட்டினான் . அதிர்ச்சியுடன் மதி பார்த்தாள்.

 ‘ எல்லார் முன்னாடியும் இப்படி பண்ணிட்டு கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாம பேசுறான்  …    ‘ என்று எண்ணியவளின் முகம் ஆத்திரத்தில்  சிவந்தது … கண்களில் நீர் கோடிட்டது .

‘ கோபம் வருதா ? வரட்டும் ! எப்படி எப்படி  ‘ நான் என்  ரூம்க்கு போறேன்  வீரா .. அப்புறமா பார்க்கலாமா? ‘  உன் முன்னாடி நான் நின்னுட்டு இருக்கேன் … என்னை கண்டுக்காம அவனை பார்த்து சிரிக்கிற … அப்போ காலையில எனக்கும் இப்படி தானே கோபம் வந்திருக்கும் …   பட்ட அவமானத்தை  இரு மடங்கு  திருப்பி கொடுக்கலைன்னா  எப்படி ? இனிமே என்னை இன்சல்ட் பண்ணுவ ? ‘ என்று எண்ணியவன் வில்லங்கமாக சிரித்தான் . வில்லனின் சிரிப்பில் !  வில்லங்கத்துக்கு என்ன குறை ?

இந்த காட்சியை கண்ட தாராவின்  முகம் அக்னி குண்டலம் போல கொதித்து கொண்டிருக்க … இது எதையுமே கவனிக்காதது போல நாகா சாப்பிடுவதிலே கவனமாக இருக்க. வீராவுக்கு  தான் மதியை பார்க்க சங்கடமாக இருந்தது .

மதியின்  முக மாற்றத்தை ரசித்தவன் அவளிடம் இருந்து சற்று விலகி அமர்ந்து ” சாரி மதி வேலையில சின்ன  டென்ஷன்  … என்ன பண்றது  அன்பா சொன்னா யாருக்கும்  புரிய மாட்டிக்குது… எதை சொன்னாலும் நம்ம ஸ்டைல்ல தான் சொல்ல வேண்டியிருக்கு …   ஒரு முக்கியமான வேலை சீக்கிரமா போய்ட்டு வந்திர்றேன் “-  யாரையோ சொல்வது போல அவளை தான் குத்தினான் .

” சரி நீ ஏன் சாப்பிடாம இருக்க   …. இன்னும் கொஞ்சம் சாலட் போட்டுக்கோ ”   புன்னகையுடன்  பரிமாறினான் . அவள் கண் முழி பிதுங்க ….அவளை மூச்சு மூச்சு முட்ட சாப்பிட வைத்தவன் … மதி சாப்பிட்டு முடித்த பிறகே தனது சகாக்களோடு   அங்கிருந்து  கிளம்பினான் ஆதித்யா  .திகைப்புடன் மந்திரித்துவிட்ட  ஆட்டுக்குட்டி போல அமர்ந்திருந்தாள் மதி.

ஆதித்யாவின் அலுவலக அறையில் ,

” துரியன் கூட மீட்டிங் இருக்கு நாம இப்போ கிளம்பனும் … ஆனா வீரா இன்னைக்கு  நீ என் கூட வர வேண்டாம் … நாகாவும் நானும் மட்டும் போறோம் .. ” என்றான் ஆதித்யா .

” ஓகே பாய் “

” வீரா ரொம்ப கவனம் மதியை வாட்ச் பண்ணிட்டே இரு … தப்பிக்க என்னெல்லாம்  பண்ணணுமோ அது எல்லாத்தையும் பண்ணுவா … ஸோ கவனம் ” என்ற ஆதித்யா, மற்றும் சில பல வேலைகளை அவர்களுடன் கலந்தாலோசித்துவிட்டு  மதியை கண்காணிக்கும்  பொறுப்பை வீராவிடம் கொடுத்துவிட்டு நாகாவுடன் அங்கிருந்து கிளம்பினான்  .

-தொடரும்