Naan Avan Ilai 23

1-143b2540

Naan Avan Ilai 23

( இந்த அத்தியாயத்தில்  வரும் சம்பவம் 1960 மும்பையில்  உண்மையில்  நடந்த ஒன்று. ஆனால் உண்மையான சம்பவத்தை பதிவிட எனக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்  …. அந்த  சமபவத்தை  அடிப்படையாக வைத்து   கதைக்கு ஏற்றது போல  காட்சியை மாற்றியுள்ளேன் ….  நான் அவன் இல்லையில் இதுவரை வந்த காதல் காட்சிகள் தவிர …. நான் கொடுத்துள்ள தகவல் யாவும் , உண்மை சம்பவங்களை அடிப்படையாக  வைத்து நான் எழுதியது தான் … உண்மையை அப்படியே  ஆதாரத்துடன்  பதிவிட வேண்டும் என்பது தான் எனது நோக்கம் … ஆனால் சில காரணங்களால் அவ்வாறு என்னால் பதிவிட முடியவில்லை .)

நான் அவன் இல்லை 23

” மதி “என அழைத்தபடி அவளது  அறையின்  கதவை தள்ளிக்கொண்டு உள்ளே வந்த ஆதித்யா …. உள்ளே  மதி இல்லாமல் போகவும் … வந்த வேகத்தில் வெளியேறியவன்,  அருகில் இருந்த காவலனை அழைத்து ,

” மதி எங்க ?” என கேட்டான் .

” மேம்  கார்டென்ல  இருக்காங்க … வர சொல்லட்டுமா சார்?” பணிவாக கேட்டான் .

” வேண்டாம்  நீ போ  ” காத்திருக்கும் பொறுமையின்றி  தானே சென்றான்.

” இப்போ தான் அவனுடைய உண்மையான குணம் எல்லாம் வெளிய வருது …. இதுவரை  நம்ம கிட்ட நடந்துக்கிட்டது எல்லாம் நடிப்பு,  ச்ச எல்லாத்தையும் நம்பிட்டேனே ” இன்னும் வலித்துக்கொண்டிருக்கு  தன் மோவாய்க்கட்டை  நீவியபடி  கூறியவளின் ,மனம் கொந்தளித்தது .

ஆதித்யா தன்னை எச்சரித்துவிட்டு சென்றதும் , இனி அவன் முகத்தில் முழிக்கவே கூடாது  என்று எண்ணியவள்  கோபத்தில்  நேராக  தோட்டத்திற்கு வந்துவிட்டாள்.

நேரம் போவது கூட தெரியாமல்  வானத்தில் பறக்கும் பறவைகளை பார்த்து கொண்டிருந்தவளுக்கு  , வருடும் தென்றல் காற்றை கூட ரசிக்க முடியவில்லை . அதில் கூட அவன் சுவாசம்  கலந்திருப்பது  போல  எண்ணினாள் . கோபமும் வெறுப்பும் போட்டியிட்டுக்கொண்டு   வந்தது .

கலங்கிருந்த  கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் இமை தாண்டி விட  கூடாது  என பற்களை கடித்து கொண்டு வைராக்கியமாக  நின்றிருந்தாள்.

” இந்நேரம் அர்ஜுன்க்கு  நான் எங்க இருக்கேன்னு  தெரிஞ்சிருக்கும்  எப்படியும்  வந்திருவான் .  ஆதித்யா அந்த ஆள்  ஃபோனை உடைச்சிட்டானே கண்டுபுடிக்க முடியுமா … ?ஆனா நான் எந்த  இடத்துல  இருக்கேன்னு  தெரிஞ்சிருக்குமே அவன் வந்திருவான் !  ஜுவாலா ஏன் பேசல ? கனெக்ஷ்ன் கிடைச்சிருக்காதா இருக்கும் … ” என கேள்விகளையும்  கேட்டு பதிலையும்  தனக்கு தானே சொல்லிக்கொண்டாள் . உண்மை அறியாத இந்த பாவை !

”  இங்க வந்து நின்னுட்டா  விட்ருவேன்னு  நினைக்கிறியா ?” ஆளுமை நிறைந்த  அவனது குரல் ! அவளை கட்டுப்படுத்தும் குரல் ! அதுவும் தனக்கு மிக அருகில்,  அவளால் சகிக்க முடியவில்லை . உடல் நடுங்கியது  !  என்ன ஆனாலும் தன் பயத்தையும்  அழுகையையும்  இவன் முன்னால் இனி காட்ட கூடாது என முடிவெடுத்தவள் அவன் கண்களை பார்த்தபடி  அவனை எதிர்கொண்டாள்  . இருவரின் சுவாசக்  காற்றும் முட்டிக்கொண்டது .  காய்ச்சல் காரனின்  மூச்சு காற்று போல  ஆதித்யாவின் மூச்சு காற்றின் வெப்பம்   மதுமதியின்  வதனத்தை சுட்டது  .  

” நீங்க விட்டு தான் ஆகணும் ஆதித்யா …. நான் ஒன்னும் உங்க பிணை கைதி கிடையாது ”  அவனுக்கு சமமாக விழிகளை உருட்டி முறைக்க முயற்சித்தாள்  ….

‘பேபி டால்’ அந்த கோபத்திலும்   அவன் மனம் அவளை ரசித்தது. 

” விடலைன்னா ?” புருவம் உயர்த்தினான் .

” அதெப்படி விடாம இருப்பீங்க … ?அர்ஜுன் வரும் பொழுது உங்களால எதுவுமே பண்ண முடியாது ஆதி . ” 

” ஆஹாங் ” என்றான் மதியின்  சிவந்த மூக்கின் நுனியை ரசித்தபடி .

” அர்ஜுன் வந்தா ! விட்ருவேன்னு நினைக்கிறியா ?” ஏற்ற இறக்கத்துடன் பேசியவனின் இதழ் இகழ்ச்சியில் விரிந்தது .

” நீங்க என்ன விடுறது? நானே போவேன் ” பதிலுக்கு அவளும் பேசினாள்.

” உன்னால என்னை விட்டு   போக  முடியாது .. ” என்றான் ஆதித்யா . இருவரின்  விழிகளும் சந்தித்தது. அவன் பேச்சை கேட்டு எரிச்சல் அடைந்தவள்,

“என்கிட்ட எந்த உரிமையில இப்படியெல்லாம்  பேசுறீங்கன்னு   சத்தியமா எனக்கு புரியல ?  ” தன் சிவந்த அதரங்கள்  துடிக்க கேட்டாள்.

”  ம்ம்ம் புரியலைன்னா  புரிய வச்சிரலாம் ” என்று இயல்பாய்  கூறிய ஆதித்யா,  மதி சுதாரிப்பதற்குள் நொடி பொழுதில்  அவளது மென்னிடையை தனது வலிய கரங்களுக்குள்  சிறைவைத்தது,  அதிர்ச்சியில் உறைந்திருந்த  அவளது வழிகளை பார்த்து  

“ஆனா சொல்லி புரிய வைக்கிற  ஆள்  நான் இல்லை” என்றவன்,

அவளது செவ்விதழ் நோக்கி குனிய அப்பொழுது  நீண்ட நாசி அவனது ஆசைக்கு தடையிட்டதும் லேசாக புன்னகைத்தவன் தன்னை நிலைப்படுத்திக்கொண்டு அவளது இதழ் ஓரத்தை உரசிய படி கன்னத்தில் அழுத்தமான முத்தம் ஒன்றை பதித்து,” இதுக்குமேலையும்  என்னால புரியவைக்க முடியும்  ” என்றான் அவளது சிவந்த மூக்கின் நுனியை தட்டிவிட்டபடி .

மதியின் பதற்றம் சற்றும் குறையவில்லை ‘ அவன் அப்படி தான் ? உனக்கு என்ன ஆயிற்று ?? நீயாவது விலகியிருக்க  வேண்டாமா ? உன்னை பற்றி என்ன நினைத்திருப்பான் ‘ என தன் மீதே கோபமாக  கொண்டவள் …

“என்னை விடுங்க ஆதி …  ஐ ஹேட் யு ” என அவன் நெஞ்சில் குத்தியபடி  அவனிடம் இருந்து விலக முயற்சிக்க ….

தன் மார்பை தீண்டிக்கொண்டிருந்த  அவளது  மென்கரங்களை பிடித்து அதில் அழுந்த முத்தம் ஒன்றை பதித்தவன் ,

” ஹெட் மீ … ஆனா இங்க என் கூடவே இருந்து எவ்வளவு வேணும்ன்னாலும் என்னை வெறுத்துக்கோ ” என்றவன் … பட்டென்று  அவளது கரங்களை விடுவித்து விட்டு  அவளிடம் இருந்து  விலகி நிற்க ,

கட்டுப்படுத்தப்பட்ட அழுகை … மறைக்கப்பட்ட அவமானம்  … என மதியின் அணைத்து உணர்வுகளும்  கோபமாக மாற ஆதித்யாவை  மேல்மூச்சு வாங்க பார்த்தவள்

” அது இந்த ஜென்மத்துல நடக்காது … அர்ஜுன் வர தான் போறான்  என்னை கூட்டிட்டு போக தான் போறான் … உங்களால அதை தடுக்கவே முடியாது … ஹீ இஸ் அ   அசிஸ்டன்ட்  கமிஷனர்  உங்க துப்பாக்கி அவனை ஒன்னும் பண்ணாது  … நீங்க என்னை பயமுறுத்தலாம்  அவனை முடியாது “

” ஏய் ஜஸ்ட் ஷட் அப் …. என்ன தைரியத்துல என்கிட்ட இப்படி பேசிட்டு இருக்க …  அந்த அர்ஜுன் என்ன பெரிய இவனா ம்ம்ம் …  ” ஓங்கி ஒலித்த  ஆதித்யாவின்  குரலில்  மதுமதியின் படபடத்த பேச்சு தடை பட்டது. அவளது விழிகளுக்குள் அடக்கிவைப்பட்ட  கண்ணீர் ஒரு முறை சிமிட்டினால் ஆறாய் ஓடுவதற்காக  காத்திருக்க … சில நொடிகள் அவளையே பார்த்தவன்  தன் தலையை அழுந்த கோதி ஆழ்ந்த மூச்செடுத்து,’ பாவம்  இத்தோட  விடலாம்ன்னு பார்த்தா ஓவரா  தான் போறா  … இனிமே அவன் பேரு எப்படி உன் வாயில இருந்து எப்படி வருதுன்னு நானும் பார்க்குறேன்’ என்று எண்ணியவன்,

” மதி நீ  …. ” என சீறியபடி அவளை நெருங்கவும்  .. “ஆதி ” என்று அழைத்தபடி அந்த நேரம்  அங்கே   வேகமாக ஓடி வந்த வீரா மதியை  ஒரு பார்வை பார்த்துவிட்டு  ஆதித்யாவின் காதில் ,

” அந்த பொண்ணு  இன்னைக்கு காலையில  பண்ணின மாதிரி மறுபடியும் சூசைட் பண்ண ட்ரை பண்ணிருக்கா… கட்டி போட்டு வச்சிருக்காங்களாம் , யாரும் கிட்ட போக முடியலையாம்  அலறிட்டே  இருக்காளாம்..டாக்டர் என்ன பண்றதன்னு கேக்குறாரு ” அந்த பெண்ணின் நிலையை கூறினான்.

அவன் கூறியவற்றை  அமைதியாக  உள்வாங்கிக்கொண்ட ஆதித்யா

” முதல்ல நாகாக்கு கால் பண்ணி என்கிட்ட குடு  ” என்றான் . நிமிடத்தில் அவன் இட்ட கட்டளை நிரைவேற்றப்பட ஆதித்யா,  நாகாவிடம் ,

 ” எங்க இருக்க ? என கேட்டான் .

” கமிஷனரை கூட்டிட்டு வந்துட்டோம்  அவர் உன்கிட்ட பேசணும்ன்னு சொல்றாரு ” என்றான் நாகா

” வா வா …. வர வர இந்த கமிஷ்னருங்க தொல்லை தாங்க முடியல … ஏதாவது  செய்யணும்  அப்போ தான் அடங்குவானுங்க … சார் ரொம்ப பெரிய ஆபிஸர் மரியாதையா  கூட்டிட்டு வா … இங்க  கூட்டிட்டு வா ….என் ஸ்டையில்ல பேசுறேன்  ” என மதியை  மறைமுகமாய் மிரட்டிய   ஆதித்யா  , நாகாவிடம் பேசிவிட்டு  அலைபேசியை வீராவிடம் கொடுத்து கண்ணைக்காட்டினான்.

அவனது குரலில் இருந்த  மிரட்டல் அவளுக்குள் கிளியை உண்டாக்கியது .

‘கமிஷ்னர்ன்னு  யாரை சொல்றான்  அர்ஜூனய்யா ? நோ “ மூச்சு வாங்க அவனை பார்த்தாள் …! அவனும் தான்  ….! அவள் கோபத்தில் அவனை முறைக்க அவனது பார்வை ரசனையோடு  அவளை தழுவி மீண்டது .

” நீ என்ன பேரு சொன்ன ? தன்  விழிகளை மூடி சிந்திப்பது போன்ற முகபாவத்துடன் கேட்டவன்… பின்பு நியாபகம் வந்தவனாய் ,

” ஹான் …  அசிஸ்டன்ட் கமிஷனர் அர்ஜுன் , ம்ம்ம் …சாரூக்கு   முதல்ல கால் பண்ணி உடனே இங்க வர சொல்லு … எனக்கு அவரோட வீர தீர பராக்கிரமத்தை பார்க்கணும்ன்னு ரொம்ப ஆவலா இருக்கு …  ” என தனது அலைபேசியை அவளிடம் நீட்டி துரிதப்படுத்தினான். ‘வந்திருவானா ?இல்லை நான் தான் உன்னை  விட்ருவேனா?’என்கிற அறைகூவல் ஒளிந்திருந்தது  அவனது  குரலில் .

அவனுக்குள் இருந்த அடக்கப்பட்ட கோபம் … அவனது குரலில் மறைந்திருந்த  ஆவேசம் கண்டு துணுக்குற்றவள் ’இதில் ஏதாவது சதி இருக்குமோ?’ என்று எண்ணி  முதலில் அவன் கையில் இருந்த அலைபேசியை வாங்கவே பயம்கொண்டாள் .

பின்பு சிந்தித்தவள்  ஜுவாலா எப்படியும் செய்தி சொல்லிருப்பாள் அர்ஜுன் சீக்கிரம் தன்னை நெருங்கிவிடுவான்  என்கின்ற அதீத நம்பிக்கையில்   சீக்கிரம்  தப்பித்து செல்ல வேண்டும் என்னும் ஆவலில் அலைபேசியை வாங்கியவள் ஒருவித நடுக்கத்துடன் அர்ஜுனின் இலக்கத்தை  டயல் செய்து கொண்டிருக்க,  அப்பொழுது   அங்கு நாகாவுடன் வந்து சேர்ந்தார் கமிஷனர்  ஜிக்னேஷ் அஸ்தானா ,  நேற்று ஆதித்யாவின் கரங்களால்  மடிந்த  இன்ஸ்பெக்டர்  மஹேந்திரனின்  மேல் அதிகாரி .

ஆதித்யாவை கண்டதும்  நாகாவிடம் இருந்து வேகமாக  ஆதித்யாவின் அருகில் வந்த   ஜிக்னேஷ்,

” ஆதித்யா பாய் என்ன இது …. முதல்ல  என்  கட்ட அவிழ்த்து விட சொல்லுங்க ” என்று கூற,  ஆதித்யாவின் கண்ணசைவில்  அவனது கரங்களில் இருந்த கட்டுகள் அவிழ்த்து விட பட .

மது ஆதித்யாவின் அருகில் இருப்பதால்  ஆதித்யாவை தனியாய் அழைத்தவன்,

“என்ன பாய் இது நீங்களும் நானும் அப்படியா பழகிருக்கோம் … நானும் உங்க ஆளுங்கள்ள ஒருத்தன் தானே … போதையில நடந்து போச்சு … எப்படி பார்த்தாலும் அவளும் அவங்க அம்மா மாதிரி தானே ஆக  போறா ?  காமத்திபுரால உள்ளவளுக்கு மானம் இருந்தா  என்ன ?போனா என்ன  ?விடுங்க பாய்   ” என அவன் ஆதித்யாவின் காதில் சொல்லி முடிக்கவில்லை ஆதித்யாவின்  கரம் அவன் கன்னத்தில் இடியாக விழ … கன்னத்தை பொத்தியபடி எழுந்து நின்ற  ஜிக்னேஷ் ,

” ஏய் என்ன டா போலீஸ் கிட்டையே வா …. என் பதவி என்ன ? அதிகாரம் என்ன ?? எங்க சப்போர்ட் இல்லாம உங்களால ஒன்னும் கிழிக்க  முடியாது ??  உன்னை எல்லாம் என்கவுன்டர்ல  போடுறேன் டா ” என ஆவேசமாக  தன்  இடுப்பில்  சொருகியிருந்த பிஸ்டலை எடுத்து ஆதித்யாவின்  நெஞ்சில் வைக்க … வீராவின் பிஸ்டல்  உட்பட  ஏகப்பட்ட துப்பாக்கிகள்  ஜிக்னேஷின்  தலையை  குறி வைத்திருந்தது .

” ஏய் ஆதித்யா தப்பு பண்ணிட்டு இருக்க டா … என்ன நினைச்சிட்டு  இருக்க…? மரியாதையா  என்னை விடு … யு …………   ” என பயந்தவன்  வாயில் இருந்து  ஆங்கிலம் வடமொழி  கலந்த கெட்ட   வார்த்தைகள்  எல்லாம் தாறுமாறாய்  வர  , அவன் பேசிய அத்தனை வார்த்தைகளுக்கும்  தனது பூட்ஸ் காலால் பதில்  கொடுத்த ஆதித்யா, கீழே விழுந்து கிடந்தவனின் நாடியை தன் காலால்  நிமிர்த்தி,

” நரகத்தை காட்டாம  உன் உயிரை நான் பறிக்க மாட்டேன் ” என்றான். பின்பு தன் சகாக்களை,

“ஜித்தேரி கோட்டையிலே  இருந்து   இவனை தூக்கி வீசுங்க  … ஒரு தடவை இல்லை ரெண்டு தடவை இல்லை  இவன் சாகுற வரைக்கு  வீசுங்க …. கோட்டையிலே இருக்கிற ரத்த கரை அப்படியே இருக்கணும்….   அதை பாக்குற  எவனுக்கும் இனிமே இப்படி பண்றதுக்கு  தைரியம் வர கூடாது ” என கொடூரமான   உத்தரவை பிறப்பித்தான் .

அப்பொழுது அந்த நிமிடம்  நரபலி கொடுக்க போகும் அகோரனாய் காட்சியளித்தவனை பார்த்த மதிக்கு  நா மேல் அண்ணத்தில் ஒட்டிக்கொள்ள விக்கித்து போய் நின்றாள் . 

இதற்காகவே  காத்திருந்தது போல ஆதித்யாவின் வீரர்கள்  அவனது கட்டளையை நிறைவேற்ற   ஜிக்னேஷ்  திமிர திமிர தர தரவென்று  இழுத்துக்கொண்டு  கோட்டையின் உச்சிக்கு  சென்றனர் .

ஜிக்னேஷின் அலறல் சத்தம்   ஆதித்யாவின்  காதில் இன்ப கானமாக கேட்க அவனது வலியை கண்டு ஆதித்யா  குரூரமாக  சிரித்துக்கொண்டிருந்தான் .

அவனது சிரிப்பு மதியின் வயிற்றில் புளியை கரைத்தது . அர்ஜுனுக்கு  அவள் டயல் செய்த இலக்கம் முற்று பெறாமல் பாதியிலே  நின்றது . அதை கண்ட அவனது விழிகள்  இகழ்ச்சியில் விரிய  …அவன் கண்ணசைத்த மறுநொடி  அவன் நின்ற இடத்திற்கு  சிவப்பு நிற குஷன் நாற்காலி  போடப்பட்டது .

பயத்தில்  வெடவெடவென்று  நடுங்கி கொண்டிருந்த  மதியை , வலுக்கட்டாயமாக  இருக்கையில் அமரவைத்து ,அவளது கழுத்து வளைவில் தன் நாடியை வைத்த ஆதித்யா . உடல் நடுக்கத்தோடு  சேர்ந்து ஆடிக்கொண்டிருந்த அவளது  காதணியை லேசாக சுண்டிவிட்டு ….  தன் இதழால்  அவளது காதுமடலை  பட்டும் படாமல் உரசியவன்  ,

” பாரு பேபி ”  என்று சொல்லவும் …  அந்த ஆதிகாரியின் பருத்த உடல் ‘ தடார் ‘ என்னும் சத்தத்துடன்  ரத்தம் சிதற மதியின் காலடியில் வந்து விழுந்தது . 

ஏற்கனவே முகத்தை மூடியபடி  மிரண்டு அமர்ந்திருந்தவள்   … அந்த நபரின் உடலை தன் காலடியில் உணர்ந்ததும்  சட்டென்று எழுந்து நின்றவள்   தன் காலில் தெறிக்கப்பட்ட  ரத்த துளியை கண்டு  அதிர்ச்சியில் உறைந்தே விட்டாள் ,

” பாரு இதெல்லாம் நீ பழகிக்கணும் ”  முகத்தை பிடித்து வலுக்கட்டாயமாக  பார்க்க வைத்தான் . கண்களை இறுக்கமாக மூடியிருந்தவள்  தன் விழிகளை திறக்கவே இல்லை . ஆனாலும்  பிடிவாதமாக பார்க்க வைத்தான் ,

அரைகுறை  உயிர்   மிஞ்சி இருக்க அந்த மனிதனின் கண்கள்  உயிர் பிச்சை கேட்டு  யாசித்தது  … அந்த இடத்தில தன் குடும்பத்தினரை  ஒரு நொடி தான் கற்ப்பனை செய்து பார்த்தாள்,

 ” நோ  “அலறியபடி கண்களை  மூடி விட்டாள் .

” உனக்கு ரெண்டு ஆப்ஷன் தரேன் ஒன்னு அர்ஜூன்ங்கிற  ஆள உன் மனசில இருந்து அழிச்சிறு … இல்லைன்னா  அர்ஜுனை  இந்த உலகத்தை விட்டு நான்  அழிச்சிர்றேன் …. இதுல உனக்கு எந்த ஆப்ஷன்  புடிச்சிருக்கு  பேபி ….?நீ என்ன சொன்னாலும் நான்  கேட்பேன்  எல்லாம் உன் விருப்பம்  தான் ” சாதாரணமாக  கூறினான் … அதை கேட்ட அவள் இதயம்  தட தடத்தது.

“ப்ளீஸ் ” அவளது குரல் காற்றில் கரைந்து விட ,

” என்ன ? கேட்கலை பேபி ” தன் காதை அவளது இதழுக்கு  அருகே கொண்டு  சென்று கேட்டான்.

” இனிமே இங்க இருந்து போக மாட்டேன் … அர்ஜுனை நினைக்க மாட்டேன்  ” உணர்ச்சி பிழம்பில் தன் உடல் நடுங்க கத்தினாள் .

” குட்  ” என்றவன்  தன் வேலையாட்களை பார்த்து ,” உயிர் இருக்கா ” என வினவினான் .

” இன்னும் மூச்சு விடுறான் பாய் “

” விட கூடாதே ” என்ற மறுநொடி ….ஜிக்னேஷ் மீண்டும் உயரத்திற்கு இழுத்து செல்ல பட்டான் .

” பாரு பேபி …மை  பேவரைட்  ஸீன்  ” எனக்கு மிகவும் பிடித்தமான காட்சி  என்றவன்  மீண்டும் மதியின் முகத்தை வலுக்கட்டாயமாக பார்க்க வைத்தான் ,” டம் ” என்னும் சத்தத்திற்கே அதிர்ந்தவள் ,” ப்ளீஸ் ஆதி என்னால பார்க்க முடியலை ஐ காண்ட் ” கெஞ்சினாள் .

நாகா உட்பட அனைவரும் தங்களின் கைகளை  கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்க. ஆனால் ஆதித்யாவின்  மனநிலையை உணர்ந்த வீரா இப்பொழுது மதிக்கு ஆதரவாக என்ன கூறினாலும் அந்த கோபம் மதி மீது தான் திரும்பும்  என்பதை உணந்தவன்  எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.

” பாரு ” ஆதித்யா  கட்டளையிட்டான் … “வேண்டாம் ஐ காண்ட் ஆதி ப்ளீஸ் ….. இனிமே நான் இங்க இருந்து போக மாட்டேன் ப்ளீஸ்” …ஆனால் அவன் விடவில்லை …வேறு வழியில்லாமல்  தன் கண்களை அவள் திறந்த மறுநொடி  … மதி பார்க்க முடியாதபடி   தன் உள்ளங்கையால்  அவளது விழிகளுக்கு திரையிட்டவன்  …. அவளை அப்படியே திருப்பி   தன்    நெஞ்சோடு  அணைத்து  பிடித்துக்கொண்டான் .

” என்னால  இதெல்லாம் முடியாது ஐ காண்ட் ஆதி ப்ளீஸ் ” அவனை இறுக்கமாக பிடித்துக்கொண்டு திரும்ப திரும்ப கதறினாள் . உடல் தாறுமாய் நடுங்கியது …. மழை தூறலாய்  அவளது விழிநீர்அவனது சட்டையை மட்டும் அல்ல அவனது எரிமலை இதயத்தையும்  நனைக்க  .அவனது உடலில் இருந்த  இறுக்கமும்  உள்ளத்தில் இருந்த ஆத்திரமும் கொஞ்சம் தளர்ந்தது .

மூன்று முறை கோட்டையில் இருந்து  தூக்கி வீசிய பிறகு ரத்த வெள்ளத்தில்  மிதந்திருந்த  ஜிக்னேஷின்  உடல்  துடிதுடித்து  மெல்ல மெல்ல அடங்கிக்கொண்டிருக்க  … அதே நேரம் மருத்துவமனையில் , வீடியோ காலின் வசதியால் இந்த கோரமான காட்சியை  மருத்துவரின்  கைபேசி மூலமாக   கையும் காலும் பிணைக்கப்பட்ட  நிலையில் அலறி  துடித்தபடி பார்த்துக்கொண்டிருந்த   அந்த பெண்ணின் அழுகுரலும் கொஞ்சம் கொஞ்சமாய் அடங்கியது .

தனது அலுவலக அறையில் கோப்பை புரட்டியபடி  அமர்ந்திருந்த ஆதித்யாவின்  மனம் முழுவதும் மதி தான் நிறைந்திருந்தாள்.

” இனிமே இங்க இருந்து போக மாட்டேன் … அர்ஜுனை நினைக்க மாட்டேன்  ” என உணர்ச்சி பிழம்பில் தன் உடல் நடுங்க கொஞ்ச நேரத்திற்கு முன்பு மதி கத்திய  வார்த்தைகள் அனைத்தும் ஆதித்யா மதியின் வாயில் இருந்து கேட்க நினைத்த வார்த்தைகள் … ஒருவழியாக சொல்லிவிட்டாள் இல்லை சொல்ல வைத்துவிட்டான் .

ஆனாலும் அவன் மனம் அமைதி அடையவில்லை … அவள்  கண்ணீரும் சிவந்திருந்த  தாடையும்  அவன் மனதை பிசைந்தது  …. தனது உரமேறியிருந்த  முரட்டு கரங்களை பார்த்தான் …  மறுநொடி  அவளது மதி முகத்தின் மென்மையை  அவன்  மனம்  உணர்ந்தது .. ‘ச்ச இவ்வளவு ஹர்ஷா ஹாண்டில் பண்ணிருக்க வேண்டாம் … வலிச்சிருக்கும் … பொறுமையா பேசியிருக்கலாம்  … அவளை அதையெல்லாம் பார்க்க வச்சிருக்க வேண்டாம் அதுக்கு வேற ரொம்ப பயந்துட்டா ‘ ஆதித்யாவின்   மனதில் கனம் கூடியது .

கண்களை இறுக்கமாக மூடி ஆழ மூச்செடுத்தவன் ,’ அவளும் அந்த மாதிரி பண்ணிருக்க கூடாது … வலி நல்லது தான் அப்போ தான் மறுபடியும் அப்படி செய்ய மாட்டா ‘ என்று தனது தவறுக்கு  அங்கும் இங்குமாக தேடி ஒரு நியாயத்தை   கண்டுபிடித்தான் .

ஆனால் மனம் அவளையே நாடியது ,

‘என்ன டா இது ஒரே இம்சையா இருக்கு … ஒரு தடவ பார்த்துட்டு வருவோமா …  வேண்டாம்  ஒவ்வொரு தடவையும்  இறங்கி போறதுனாலதான்   இப்படி எதாவது ஒன்னு பண்ணிட்டு இருக்கா … இந்த தடவை அபப்டியே விட்று அப்போ தான் புத்தி  வரும் ‘ என

வலுக்கட்டாயமாக  தனது  மனதை  கட்டுக்குள் கொண்டு வந்து  நிலுவையில் இருந்த பணியில் கவனமானான்  .

மதி  தன்னை விட்டு கணப்பொழுது  விலகுவதை கூட தாங்க முடியாதவனுக்கு அவளை  எப்படி தன்னோடு பிணைத்து வைத்து கொள்ளவேண்டும் என்கிற நுண்மை கொஞ்சமும் தெரியவில்லை .

-தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!