Naan Avan Ilai 25

download (1)-968372b2

 நான் அவன் இல்லை 25

ஆதித்யா தன் அலுவலக அறையில் இருந்து கோபமாக சென்ற பிறகு    துரியன் விக்டரிடம்  ,

” அங்கிள் இந்த பிரச்சனை  வெளிய வர கூடாது … அது ஆதிக்கு  பாதுகாப்பு இல்லை …இப்பவே  அந்த ஆபிசர்   கூட மீட்டிங் பிக்ஸ்  பண்ணுங்க ”  என கூறினான்.

” ஒத்துவருவாங்கன்னு  நினைக்கிறியா …?  பிரச்சனை கொஞ்சம்  பெருசு ” என்றார் தீவிர யோசனையுடன் .

” ஒத்து வந்து தான் ஆகணும் … தப்பு அவங்க சைட்ல தானே இருக்கு … பெட்டி பெட்டியா வாங்கிரூக்கானுங்கள்ல  அந்த கேஸை ஹண்டில் பண்ணிட்டு இருக்கிற ஆபிசரை வர சொல்லுங்க  அங்கிள் … வீ காண்ட் லூஸ் ஆதி ” என்றான் தீர்க்கமாக.

” யஸ் யு ஆர் கரெக்ட் ஐ காண்ட் லூஸ் ஆதி “- நீ சரியா சொன்ன ஆதியை என்னால இழக்க முடியாது என்றவரின் குரலில் ஆதீத ஆத்திரம் நிறைந்திருந்தது. ஆனால் அது துரியனின் விழிகளில் இருந்து தப்பியது .

விக்டருக்கும்  துரியனின் முடிவு சரியாக பட  , நேரம் கடத்தாமல் உடனே துரியனும் அந்த கேஸை கையாண்டு கொண்டிருக்கும்  உயர் அதிகாரியும் ரகசியமாக சந்தித்துக்கொள்ள ஏற்பாடு செய்தார் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இந்தியாவில்  ஒடிசா மாநிலத்தில்  உள்ள கனிம  சுரங்கத்தில் உள்ள கனிம வளங்களை ஜித்தேரி  கூட்டாளிகள் மூலமாக   வெளிநாட்டுக்கு    ஏற்றுமதி  செய்வதற்காக …பல ஆயிரம் கொடி மதிப்புள்ள கனிம வளங்கள் நிறைந்த ட்ரக் ஒடிசாவில் இருந்து நாக்பூர்  வழியாக  மும்பை சிட்டிக்குள் கொண்டு வர பட   , அங்கே ஏற்கனவே ட்ரக்கின் வருகைக்காக காத்திருந்த  வீரா மற்றும் ஜித்தேரியின் காவலாளிகள் ட்ரக்கை சோதனை செய்துவிட்டு அதை பாதுகாப்பாக   மும்பை துறைமுகத்தை  நோக்கி கொண்டு செல்ல ஆயத்தமானர் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மும்பை மாநகரத்தின் மிக பிரமாண்ட  ஏழு நட்சத்திர ஹோட்டல் அது . அங்கே  பெரும்பாலும்  வரும் வாடிக்கையாளர்கள்  அனைவரும்  அரசியல்  வாரிசுகள் , சினிமா நடிகர்கள் என  சமுதாயத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்கள்  ஆதலால் யார் வந்தார்கள் ? எப்பொழுது வந்தார்கள் யாருடன் வந்தார்கள் ?என  அங்கே வருபவர்களை  சார்ந்த தகவல்கள் அனைத்தையும்  யாரிடமும் வெளியிடாமல்   ஹோட்டல் நிருவாகத்தினர்  ரகசியமாகவே  வைத்திருப்பர் .

பதினெட்டில்  இருந்து இருபது  வயதிற்குள்   இருக்கும் புர்கா அணிந்திருந்த இளம் பெண் ஒருவள்  ஒரு ஆடவனுடன்   அந்த ஹோட்டலுக்கு வந்திருந்தாள். அப்பொழுது அவர்களுக்கு   ஏழாவது  மாடியில் உள்ள அறை ஒதுக்கப்பட … அறையின் வாசலில் அந்த பெண் தன் கைகளை  பிசைந்தபடி  பதற்றத்துடன் , யாரும் தன்னை கவனிக்கிறார்களா  என சுற்றும் முற்றும்  பார்த்துக்கொண்டே  நிற்க .

அவளுடன் வந்த ஆடவன் காலிங் பெல்லை மூன்று முறை  விட்டு விட்டு அடித்தான்   …அப்பொழுது ஏற்கனவே அந்த அறையில் இருந்த இரண்டு   தடித்த உருவங்களில்  ஒருவன்  தன்  பல்லை காட்டி கோணலாக சிரிக்க .அதை பார்த்த அந்த பெண்ணுக்கோ  உயிர் கையில் இல்லை .

அப்பொழுது ” உள்ளே போடி ” என அவளுடன் வந்த ஆடவன்   அந்த பெண்ணை உள்ளே தள்ளி கதவுக்கு தாழிட்டான் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அந்த ஹோட்டல் சம்பவம் நடந்த அதே நேரத்தில் ,போதகர் ஆல்வின்  டிசவுசா  தலைமையில் நடந்த சிறப்பு  பிராத்தனை  கூட்டம் நல்லபடியாக நிறைவு பெற்றிருக்க … அவரிடம்  ஆசிர்வாதம்  வாங்க  மக்கள்  வரிசையில்  காத்திருந்தனர் .

அப்பொழுது  அந்த மக்கள் கூட்டத்தில்  வெள்ளை நிற ஜிப்பாவில்   வரிசையில் காத்திருந்த ஒரு நபர் திடிரென்று தன் முதுகில் ஏதோ ஒன்று அழுத்துவது போல தோன்றவும்  என்னவென்று பார்ப்பதற்காக  திரும்ப,  அந்த சமயம் அவருக்கு பின்னால்  தாடி வைத்திருந்த ஆடவன்  ,

”  ஃப்ரண்ட் ஓட பார்ட்டிக்கு போன உன் பொண்ணு   க்ரிஸன்  மானத்தோட வீட்டுக்கு வரணும்ன்னா … நான் சொல்றதை  செய் … உன் பாடி கார்ட்ஸை இங்கே இருந்து கிளம்ப சொல்லு  ..  யாருக்காவது சிக்னல் குடுக்கலாம்ன்னு  நினைச்ச உன் பொண்ணு பிணமா தான் வீட்டுக்கு வருவா ” என மிரட்டினான்  .

தன் முதுகுக்கு பின்னால் துப்பாக்கி இருப்பதை உணர்ந்து கொண்ட அந்த நபர் .. தன் மகளை எண்ணி கவலை கொண்டார் . அவளுக்கு ஏதும் ஆகிவிடுமோ என்கின்ற பயத்தில்  வேறு வழியில்லாமல்  அந்த மர்ம ஆசாமி சொன்னது போலவே தனது கார்ட்ஸை அங்கிருந்து கிளம்ப சொன்னவர் …. ஆலயத்தின்  பின் வாசல் வழியாக  சென்று அந்த மர்ம ஆள் காட்டிய காரில் ஏறிக்கொண்டார் .
அங்கே ஏற்கனவே கைகளில் பிஸ்டல் பளபளக்க   காரில் இருந்த இரெண்டு பேர் அவரது  கை கால்களை  கட்டி ..வாயில் துணி வைத்து அடைக்க …அவர் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்டார்  .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இந்த இரெண்டு சம்பவங்களுக்கும் நடந்து கொண்டிருக்கும்  பொழுதே,  சாலை நெரிசலுக்கு  இடையே சிட்டியை கடந்த ட்ரக்  மெல்லோ சாலை வழியாக வந்து கர்னக் பந்தர் பாலத்தை அடைந்திருந்த  நேரம் .

கருப்பு நிற  கார் ஒன்று அவர்களை வெகு தொலைவில்  இருந்தே பின்தொடர்ந்து  வர … அது தவறாமல்  ட்ரக்கில்  இருந்த வீராவின்  பார்வையில்  பதிந்தது .

சுதாரித்த வீரா  தன்னுடன்  வந்த  பாதுகாவலர்களை   அலர்ட் செய்யும்   பொழுதே அவர்களை பின் தொடர்ந்து வந்த கார் இன்னும்  வேகமாக அவர்களை தாண்டி சென்றது .

பாதுகாவலர்களின் தலைமை பொறுப்பில் இருப்பவன் வீராவிடம்,

” இல்லை வீரா  பாய் பாருங்க   நம்மளை யாரும் பின் தொடரவில்லை ” என அவன்     சொல்லிய மறுநிமிடம்   மீண்டும் ஒரு கார் அதிவேகமாக அவர்களை தாண்டி சென்று  முன்னால் சென்று கொண்டிருந்த  காரோடு இணைந்து கொள்ள … இரெண்டு  கார்கள் அவரகளது ட்ரக்கிற்கு   பின்னால்  இருந்து பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்தது .

இப்பொழுது வீராவுக்கு  அனைத்தும் தெளிவாக விளங்கியது ,

” கைஸ்  இட்ஸ் அ ட்ரப் “

” எஸ் பாய் … நாம அட்டாக் பண்ண ஸ்டார்ட் பண்ணலாமா  ” பதற்றத்துடன்  கேட்டான் அந்த தலைமை காவலன்  . 

” நோ  வெய்ட் ஃபார் மை ஆர்டர்ஸ் … அலெர்ட்  அவர் கார்ட்ஸ் ” – என் உத்தரவிற்காக  காத்திரு …நமது காவலாளிகளுக்கு   எச்சரிக்கை  விடு  என்றான் வீரா.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

“ட்ரான்ஸ்போர்டேஷன்   மும்பை போர்ட்(மும்பை துறைமுகம்) மூலமா தானே பண்ண முடியும் …ஆனா இப்போ வரைக்கு  மும்பை போர்ட்ல இருந்து ட்ரான்ஸ்போர்டேஷன்  நடந்ததுக்கான எந்த  தகவலும்  நம்ம கிட்ட வரலையே  … அப்புறம் எப்படி ?” என்று குழப்பத்துடன்  கேட்ட ஸ்டார் ஒன்னிடம்   .

” அதுக்கு  தயாளன்  மும்பைல இருக்கணுமே … ” என்றான் ஆதித்யா .

அதை கேட்ட மறுநொடி ஸ்டார் ஒன்,

” அப்போ அவன் இந்தியால  இல்லையா ! ” ஆதித்யாவின் விழிகளை பார்த்தபடி வினவினான் .

“மும்பைல இல்லைன்னு தானே  சொன்னேன் ….  இந்தியால  இல்லைன்னு  சொல்லவே இல்லையே “என்று மேலும் தொடர்ந்த ஆதித்யா , ” அது மட்டும் இல்லை கடல் வழியா மட்டும் தான் ட்ரான்ஸ்போர்டேஷன்  நடக்கணும்ன்னு  ஒன்னும் அவசியம் இல்லையே … திருவனந்தபுரம்  அப்புறம் மதுரை ஏர்போர்ட்ல  இருபது   குருவிங்க  சிக்கி இருக்காங்க ” அதிர்ச்சியுடன் இருந்த ஸ்டார் ஒன்னின் முகத்தை பார்த்தபடி கூறினான் .

” வாட் தமிழ் நாட்லயா ?”அதிர்ச்சியில் ஸ்டார் ஒன்னின் விழிகள் மேலும் விரிந்தது .

” ம்ம்ம் ” ஆதித்யாவின் குரல் மாறியது .

” ஆனா எந்த தகவலும் வரலையே … “

“அந்த அழகுல நீ வேலை பாக்குற ” ஆதித்யாவின் குரல் இறுகியது .

” சாரி பாய் நான்  நார்த் சைட் போர்ட் மட்டும் தான்  …”

” காரணம் சொல்லாத …  இனிமே கவனமா இரு …  ஒரு சின்ன தப்பு , பல பேர் உயிருக்கு ஆபத்தா முடியும் “

” இனிமே அலெர்ட்டா இருக்கேன் …நாம அவங்களை விசாரிச்சா ஏதாவது தகவல் கண்டிப்பா …”

” யார் செய்ய சொன்னாங்கன்னு அவனுங்களுக்கே தெரியாது நம்மகிட்ட எப்படி சொல்லுவாங்க   ” ஸ்டார் ஒன் கேட்டு முடிப்பதற்குள் அவனுக்கு தன் பதிலை  கூறிய  ஆதித்யாவின்  இதழ்கள் கோணல்  புன்னகையில் வளைந்த நேரம், அவனது அலைபேசியில் செக்யூரிட்டி அலாரம் அடித்தது .

உடனே எடுத்து பார்த்த ஆதித்யா,

” எமெர்ஜெனி  ஐ நீட் டு கோ ”  என்றவன்… அங்கிருந்து செல்வதற்கு முன் .. ஸ்டார் ஒன்னை பார்த்து,

” ஏய் லுக் !லாஸ்ட் வார்னிங் , இனிமே தான் நீ  கவனமா இருக்கணும் … உனக்கு பயமா இருந்தா   இப்பவே இதுல இருந்து விலகிக்கோ … இப்படி சில்லியான மிஸ்டேக்ஸ் பண்ணி மாட்டிக்காத.. உனக்கு நான் கொடுத்திருக்க பொறுப்பு ரொம்ப முக்கியமானது … சீக்கிரமா இன்பார்மேஷன்  கலெக்ட் பண்ணு .. வீ டோன்ட் ஹவ் டைம் இதை சீக்கிரமா முடிச்சாகனும்  ” என எச்சரித்த ஆதித்யா க்ளப்பில் இருந்து  வேகமாக கிளம்ப  , தன் கையில் மீதம் இருந்த மதுபானத்தை  வாயில் சரித்துவிட்டு  கைமாறப்பட்ட கோப்புடன்  ஸ்டார் ஒன்னும் கிளம்பிருந்தான் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

“உன்னுடைய பயம் தான் எதிரிக்கு  பலம் … ஸோ  ஸ்டே காம் … சூழ்நிலையை  உன்  கட்டுப்பாட்டுக்குள்ள  கொண்டு வா  ” என்ற ஆதித்யாவின் குரலில்  மறந்தும் கூட பதற்றம் எட்டிப்பார்க்க வில்லை .

ஆதித்யாவின் அறிவுரையின் படி நொடியில்  திட்டத்தை வகுத்த  வீரா  … பாதுகாவலர்களையும்   தயார் படுத்தினான்  . 

இவர்களின் கார் எந்த  இடத்திலும் நிற்கவில்லை … இவர்கள்  எச்சரிக்கை   அடைந்து விட்டார்கள் என்பதை  எதிராளிகளும் அறிந்து கொள்ள …அவர்களும் திட்டங்களை வகுத்தபடி பின் தொடர்ந்தனர் .

ஆள் அரவமற்ற  அந்த  சாலையில்   சீறிப்பாய்ந்த ஜித்தேரியின் ட்ரக்கை  அவர்கள் சுதாரிப்பதற்குள் முட்டி மோதி விபத்தை ஏற்படுத்தி  , உள்ளே இருந்தவர்களை கண்ணிமைக்கும் நேரத்தில் ஆயுத முனையில் மடக்கினர் அந்த மர்ம ஆசாமிகள் .

மர்ம கூட்டத்தில் இருந்த ஒருவன்  வீராவை  துப்பாக்கி முனையில் சிறைபிடிக்க  வேறு வழியில்லாமல்  ஜித்தேரி ஆட்கள் அனைவரும் தங்களின் ஆயுதங்களை  துறந்தனர் .

அப்பொழுது தலைமை காவலாளி தன் அருகில் இருந்த மர்ம ஆசாமியின் வலது முட்டியை தன் காலால் தட்டிவிட்டு  அவனிடம் இருந்த ஆயுதத்தை கைப்பற்றிய அடுத்த நொடி அந்த தலைமை காவலாளியின் தோள்பட்டையில் மர்ம ஆசாமிகளுள் ஒருவனின் துப்பாக்கியில் இருந்த தொட்டா சீறி பாய்ந்தது.

அந்த தலைமை காவலாளி எவ்வளவோ முயற்சித்தும் , அவனது முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய … ஜித்தேரி ஆட்களை வைத்தே ட்ரக்கில் இருந்த பல ஆயிரம்  கோடி மதிப்புள்ள  கண்டெயினர்களை தங்களின் ட்ரக்கிற்கு இடம் மாற்றி , மொத்த பொருளையும் கைப்பற்றிய பிறகு அந்த மர்ம ஆசாமிகள் , அவர்கள் அனைவரையும்  எழுந்திருக்க  முடியாமல்  தாக்கி  விட்டு , பொருளோடு அந்த இடத்தை விட்டு வேகமாக  பறந்து விட்டனர்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஆள் அரவமற்ற மும்பை துறைமுகத்தில் ,

” உங்களுக்கு என்ன வேணும் …. ?என் பொண்ணை எங்க வச்சிருக்கீங்க ? … நான் யாருன்னு தெரியுமா ? ” என  கத்தினார் துப்பாக்கி முனையில் பிணைக்கைதியாக  பிடித்துவரப்பட்ட கஸ்டம்ஸ் டிபார்ட்மெண்டில் உயர் அதிகாரியாக பணிபுரியும்  திலிப் பெர்னாண்டஸ் .

” ஏய் நல்லா பாரு  இது உன் பொண்ணு தான … பக்கத்துல  இருக்கிறது எங்க பசங்க தான் … ஒழுங்கா அமைதியா இரு , இல்லை நாசம் பண்ணிருவானுங்க ” மிரட்டினான் அந்த  இளைஞன் … அதற்கு பிறகு அவரால் பேச எதுவும் முடியவில்லை . அந்த இளைஞனுடன்  சேர்த்து அங்கே ஐந்து பேர் இருந்தார்கள் அத்தனை பேருக்கும்   இருபது வயதிற்குள் தான் இருக்கும் ஆனால் பார்ப்பதற்கு  படித்தவர்கள் போல காட்சியளித்தனர் .

சில மணி நேரத்தில் வீராவையும்  ஜித்தேரியின்  காவலாளிகளையும்  அடித்து போட்டு விட்டு கடத்தி வரப்பட்ட   ட்ரக்  மும்பை துறைமுகத்தை  அடைந்திருக்க … கஸ்டம் அதிகாரி  திலிப் பெர்னாண்டஸின் துணையோடு  , நடுக்கடலில் இருந்து மிதந்து  வந்த  சரக்கு கப்பல் கஸ்டம்ஸ் குறுக்கீடு இல்லாமல் மும்பை துறைமுகத்தை  அடைய … அதில் இவர்கள் ஜித்தேரி குழுவிடம் இருந்து கொள்ளையடித்த  கண்டெயினருடன் சேர்த்து  மற்றும் சில கண்டெயினர்களையும் ஏற்றினர்  .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&7

இரவு  இரண்டு மணி அளவில்  ஆதித்யாவின் அலுவலக அறை பரபரப்பாக  காணப்பட்டது … இந்த நள்ளிரவு  வேளையில் அவசர அவசரமாக  இந்த  கூட்டம் கூட்ட பட  .

அறையின் கதவு பூட்டப்பட்டிருந்ததால்  உள்ள நடந்தேறிக்கொண்டிருக்கும் எந்த வித சலசலப்பும்  வெளியே கேட்க வில்லை .

” எப்படி ஆதி  ? யாரு இதை செஞ்சிருப்பாங்க  ? ” இரையை  பறிகொடுத்த வேங்கையாக சீறினான் துரியன் .

” நம்ம டீம் ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க துரியா , சீக்கிரம் தெரிஞ்சிரும் ” ஆதித்யாவின் முகம் உணர்ச்சிகளற்று காணப்பட்டது .

” எப்போ கண்டுபுடிப்பாங்க ?”  ஆதித்யா அமர்ந்திருக்கும்  கண்ணாடி டேபிளை தன்  இரு கரங்களால்   தட்டியபடி கேட்டான் .

” சீக்கிரமே ” என்றான் ஆதித்யா .

” அந்த அசைன்மென்ட்ல உள்ள எல்லாரையும் இங்கே வர சொல்லு நான் பார்க்கணும் ” பற்களை கடித்தான் துரியன் .

பத்து காவலர்கள் கொண்ட குழு , அவர்களை இயக்கிய  தலைமை காவலாளி , இந்த பதினொரு போரையும்    வழிநடத்திய   வீரா என இந்த அசைன்மென்டில் ஈடு பற்றிருந்த பதிமூன்று பேரும்  .. துரியன் சொல்லிய மறுகணம் அறைக்குள் இருந்தனர் .

” வீரா நீ தான் இவங்களுக்கு ஹெட் ? ரைட் ” துரியனின்  சிவந்த விழிகள் மிரட்டின .

” ஆமா பாய் ” தலையசைத்தான்

“ம்ம்ம் எவ்வளவு  வாங்குன? “

” பாய் … நான் அப்படி பட்டவன் கிடையாது ”  துரியனின் கேள்வியில் அதிர்ந்தே விட்டான் வீரா  .  வீராவின் பார்வை ஆதித்யாவை உதவிக்கு  அழைத்தது . ஆனால் அவனது  பார்வையோ கண்ணாடி டேபிளில் இருந்து  நிமிரவில்லை

” இத்தனை வருஷத்துல ஒரு தடவை கூட நடக்காத விஷயம்,  திடீர்ன்னு  நீ போகும் பொழுது மட்டும் எப்படி ?”துரியனின் சந்தேக பார்வை வீராவை காயப்படுத்தியது .

“பாய் நான் தப்பு பண்ணல “

” அப்போ என்னை நம்பவை ” துரியனின் விழிகள் வீராவின் முகத்தை ஆழ்ந்து பார்த்தது .

” பாய் சத்தியமா தான் சொல்றேன் நான் எதுவும் பண்ணல “

“நிறுத்துடா …அதையே சொல்லிட்டு இருக்க ….ஒன்னு நீ  எங்களை ஏமாத்திருக்கணும் ….இல்லை அவங்க உன்னை  ஏமாத்திருக்கணும்… என்னை பொறுத்த வரைக்கும்  இந்த ரெண்டுமே பெரிய குற்றம் தான் “

” பாய்  நான் நிஜமாவே எந்த தப்பும் பண்ணல …. நாங்க தயாரா தான் இருந்தோம் அதுக்குள்ள  அவங்க ட்ரக்கை  இடிச்சிட்டாங்க “

“அந்த அளவுக்கு நீங்க திறமையா  இருக்கீங்க ” வார்த்தைகளை கடித்து  துப்பினான் . வீரா தலை கவிழ்ந்து நின்றான் .

” ஆதி இது கண்டிப்பா அந்த தயாளன்  வேலை தான்  … ஜித்தேரிக்குள்ள நுழைய பாக்குறான் ” என்றான் துரியன் .

” நோ எனக்கு அப்படி தோனல துரியா , இது ஏதோ புது கேங் மாதிரி தெரியுது  … சின்ன பசங்க தான் பண்ணிருக்காங்க … சீக்கிரமே கண்டு புடிச்சிடலாம் .” என உறுதியுடன் கூறினான் ஆதித்யா  .

” புடிக்கணும் ஆதி …. பல ஆயிர கோடி சரக்கு  நேரத்துக்கு டெலிவரி பண்ணலைன்னா  நம்ம பேரு  அடிவாங்கிரும் ….  இந்நேரத்துக்கு  நியூஸ்  லீக் ஆகிருக்கும்  ஆதி .”

” இப்போதைக்கு அவங்களுக்கு செட்டில் பண்ற வழிய பார்க்கலாம் … அதே நேரம் இவங்க யாரு என்பதையும் கண்டு புடிக்கலாம் ” என ஆதித்யா கூற … துரியன் அனைவரையும் பார்த்து முறைத்தபடி அங்கிருந்து சென்றான் .

இப்பொழுது ஆதித்யாவின்  அறையில் நிறைந்திருந்த  கனத்த அமைதியை    ,

” ஆதி … ஆதி நான் எந்த துரோகமும்  பண்ணல ”  என்ற வீரவின் பதறிய  குரல் உடைத்தது .

” அதை உன்னால நிரூபிக்க முடியுமா ?” ஆதித்யாவின் புருவம் உயர்ந்தது.

” என்ன நம்ப மாட்டியா ?” வீராவின் குரல் இறங்கியது .

” நம்பிக்கை ! ம்ம்ம் ” என ராகம் போட்டபடி தன் ரெண்டு கரங்களையும்  டேபிள் மேல் ஊன்றி  எழுந்து நின்ற  ஆதித்யா  … அவர்களுக்கு  அருகே நடந்து   வந்து , “என் நிழலை  கூட நான் இதுவரை நம்பினது  இல்லை  வீரா ” என்றான்  அனைவரையும் பார்த்தபடி .

ஒருவருக்கும் அவனது பார்வையை சந்திக்கும் தைரியம் இல்லை . அனைவரும் தங்களின்  கை கால்கள் நடுங்கியபடி  நின்றிருந்தனர் .

“உன் நம்பிக்கையை  சம்பாதிக்க நான் என்ன பண்ணனும் ஆதி? ” என்றான் வீரா 

” உனக்கு ஒரு பெரிய வாய்ப்பு குடுத்தேன் …ஆனா அதை நீ கேவலமா கோட்ட விட்டுட்டு வந்திருக்க … உன் கண்ட்ரோல்ல  இருந்த தகவல் உனக்கு தெரியாம வெளிய லீக் ஆகியிருக்கு ,  அசிங்கமா இல்லை …    நீ தப்பே செய்யலனாலும் … இந்த போஸ்ட்க்கு  இனி  நீ  தகுதி கிடையாது … உன்னை உன் போஸ்ட்ல இருந்து டீகிரேட் பண்றேன் … உனக்கு கீழ  சோல்ஜரா இருக்கிற ருத்ரனை,  இதோ இன்னைக்கு நம்ம ஜித்தேரிக்காக குண்டடிபட்டு வந்திருக்க சீஃப் சோல்ஜர் தலைமை காவலாளி ருத்ரனை  உன் போஸ்ட்க்கு  ப்ரோமோட் பண்றேன் … இனி நீ இங்கே சாதாரண  சோல்ஜர்  …  உன் பிஸ்டலையும்  உன் பேட்ஜையும்  என டேபிள்ள வை ” என்றான் ஆதித்யா , மறுத்து பேச முடியாமல்  சொன்னதை செய்தான் வீரா .

வீரா கழட்டி வைத்த பேட்ஜை  எடுத்து கொண்டு ருத்ரனின் அருகில் வந்த ஆதித்யா ருத்ரனுக்கு அதை அணிவித்துவிட்டு   அவன் கையில்  வீராவின் பிஸ்டலை  கொடுத்து ,

” உன் வேலை என்னனு நாகா சொல்லுவான் … நீ போகலாம் ” என்றான்  .

” சாகுற வரைக்கும் ஜித்தேரிக்கு உண்மையா இருப்பேன் பாய் ” என ஆதித்யா முன்பு தலை வணங்கிவிட்டு அங்கிருந்து சென்றான் ருத்ரன் .

” எந்த பொசிஷனுக்கு  போனாலும்  என் விசுவாசம் குறையாது பாய் … ” என்ற வீராவின் குரல் கரகரத்தது.

வீராவின் விழிகளை ஆழ்ந்து பார்த்த ஆதித்யா சக்கரவர்த்தி  ” நீ போகலாம் ” என்றான் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

நடந்த சம்பவத்தை சமாளிக்க  தற்காலிக  மாற்று வழி  ஒன்றை கண்டறிந்துவிட்டு தன் கணினியின் திரையை   மூடிய ஆதித்யாவின்  மதியையும் மனதையும்  மதுமதியின் நினைவுகள் நிறைத்தன . நடந்த கலவரத்தில்  அவளை ஆதித்யா மறந்தே போயிருந்தான் .

” ச்ச மதியை எப்படி மறந்தேன் … ? சாப்பிட்டாளா இல்லையா! கண்டிப்பா சாப்பிட்டிருக்க  மாட்டா … என்ன பண்ணிட்டு இருப்பா ? தூங்கிருப்பாளா !” என சிந்தனையில் உழன்று கொண்டிருந்த ஆதித்யா மறுநிமிடமே  மதியை  காண சென்றான் .

தளர்ந்த கொடி போல தரையில் கிடந்தாள் மதுமதி . அவளை அந்த நிலையில் கண்டதுமே  அவன் நெஞ்சுக்குழிக்குள்  கூர்மையான ஏதோ ஒன்று  பாய்ந்தது .

‘இவ்வளவு பண்ணிருக்க வேண்டாமோ ! ரொம்ப பயந்துட்டாளே ச்ச ‘ அவன் மனசாட்சியே அவனை இம்சித்தது  .

‘ மேல கூட படுக்காம  … தரையில போய் படுத்திருக்காளே …. இந்த பொண்ணு என்னை ஒருவழி பண்ணாம போக மாட்டா ‘ என்று எண்ணியவன்  அவள் அருகில் மண்டியிட்டு அமர்ந்தான் .

கண்ணீர் தடம் பதிந்து  அழுது அழுது  வீங்கி இருந்த வதனத்தை கலைந்திருந்த  கேசம் பாதி மறைந்திருந்தது . கலைந்த கேசத்தை சரி செய்ய அவன் முனைந்த நேரம்  அவள் இதழ்கள் மெல்ல முணுமுணுக்க … உறக்கத்திலே  ஏதேதோ புலம்பினாள் …. அவனுக்கு ஒன்றும் புரியவில்லை  .

“மதி ” அவளது தோளை தொட்டு எழுப்பியவன் அதிர்ந்துவிட்டான் … காய்ச்சலால்   உடல் பயங்கரமாக  கொதித்தது .

‘ ச்ச ‘ தன் மீதுள்ள கோபத்தில் பற்களை  கடித்தவன் … முதலில் மெல்ல  மதியை தன் கையில் ஏந்தி  மெத்தையில்  படுக்க வைத்துவிட்டு , வேகமாக அறையை விட்டு வெளியேறியவன்  சிறிது நேரத்தில் ஒரு க்ளாஸ் பாலுடன் அவள் அறைக்குள் நுழைந்தான் .

அவன் கிடத்திய நிலையில் இருந்து மாறாமல் அப்படியே கிடந்தாள் .அவள் அருகில் வந்து ,

” மதி … கெட் அப் ” என எழுப்பினான் … சில நிமிட முயற்சிக்கு பிறகு லேசாக  கண் பிரித்தவளால்  …. எழுந்து அமர முடியாமல் போக . இன்னும் சுருண்டு படுத்துகொண்டாள் .

மதியின் நிலையை உணர்ந்தவன்  ,  அவளது  அருகில் அமர்ந்து அவளை தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு  மெதுவாக பாலை புகட்டினான் . காய்ச்சல்  அடித்த வேகத்தில் தளர்ந்து கிடந்தவள் … மறுக்காமல்  பாலை குடித்து முடிக்க … அருகிலே தயார் நிலையில் வைத்திருந்த மாத்திரையையும்  தண்ணீரையும் புகட்ட … அதையும்  மறுக்காமல் விழுங்கியவள் …அவன் சுதாரிப்பதற்குள் அப்படியே அவன் மார்புக்கூட்டுக்குள்  அடைக்கலமானாள் .

காற்றிற்கு  கூட  அனுமதியை  மறுத்து   தன் நெஞ்சோடு  ஒட்டிக்கிடந்தவளின்  சூடான மூச்சு  அவனது பனிமலை  இதயத்தை உருக செய்ய ..இப்பொழுது  அவன் மனம் தான் ஒருநிலையில் இல்லாமல்  தத்தளித்தது . நிச்சயம் இதை அவன் எதிர்பார்க்கவே இல்லை  அவளது நெருக்கம்  அவனுக்குள் ஏதேதோ மாற்றங்களை கொடுக்க … நிமிர்ந்து அவளது முகத்தை பார்த்தவனின்  இதயத்தில் ‘ தட தட ‘ சத்தம் .

அவள் இருந்த கோலமும் … அவளது செவ்விதழ்களும் அவனை பாடாய் படுத்த …   தன் கட்டுப்பாட்டை  இழக்கும் மனதை  எண்ணி சில ஆண்டுகளுக்கு முன்பு திணறியது போல இன்றும் திணறினான்  ஆதித்யா . முதன் முதலில் அவளை  கோவிலில்  பூரண சந்திரனின்  ஒளியில்  பார்த்ததை எண்ணியவனின்  இதழ்கள்  வெகு நாட்களுக்கு பிறகு  நிறைவாக  இசைத்தது .

நினைவில் இருந்து மீண்டிருந்தவனின்  விழிகள்  ஆசையோடு  நெஞ்சில் சாய்த்திருந்தவளை வருட … அவளது நெற்றியில் இதழ் பதித்தவனின் கரங்கள் இப்பொழுது தடையின்றி  இன்னும் நெருக்கமாக  அவளை தன்னோடு அணைத்து பிடித்திருந்தது .

மதியிடம் இருந்து விலக மனமில்லாமல் …  அவளுடன் கழியும் ஒவ்வொவரு  நொடியையும்  பொக்கிஷம் போல தன் நெஞ்சில் சேமித்துக்கொண்டவன்  … தன்னவளை  அப்படியே தன் நெஞ்சில் சுமந்து கொண்டு   கண்களை மூடி அமர்ந்திருந்தான்   .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

” போட்ட திட்டத்துல வெற்றி நம்ம பக்கம் தான் பாய் ”  – என ஐம்பது  வயது மதிக்க தக்க  வேதாச்சாரியா   பெருமிதத்துடன்  கூறினார் .

”  இது பத்தாது வேதா … இனி தான் இருக்கு  என் ஆட்டம் …. என்னை ஓட விட்டானுங்கள்ல  இனி நான்  அவனுங்களை  ஓட விடுறேன் .ஒருத்தனையும் விட மாட்டேன் ”  என்றவனின்  விழிகளில்  அசுரனின் ஆட்டம் தாண்டவமாடியது .

– தொடரும்