Naan Avan Ilai 26

download (12)-ca9e9ca6

நண்பர்களே வணக்கம் பா ,
ஒரு சின்ன விண்ணப்பம் கதைக்குள்ள போகுறதுக்கு முன்னாடி குங்குமம் நாளிதழில் வெளியான இந்த தங்க கடத்துதல் பத்தின  செய்தியை கொஞ்சம் படிச்சிட்டு போறீங்களா .
உலகில் அதிக தங்கம் நுகர்வு செய்யும் நாடுகளில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியா, அதிகம் தங்கக் கடத்தல் நடக்கும் நாடுகளில் முதலிடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
ஆண்டுக்கு 150 முதல் 200 டன் தங்கம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வருவதாக உலக தங்கக் கவுன்சில் கூறுகிறது. மும்பை, சென்னை, திருவனந்தபுரம், மங்களூர், மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமான நிலையங்களின் வழியாகவே அதிக கடத்தல்கள் நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.
ஏன் கடத்துகிறார்கள்?
இந்தியாவில் பொட்டுத் தங்கம் கூட உற்பத்தியாகவில்லை. கச்சா எண்ணெயை அடுத்து தங்கத்தைத்தான் நாம் அதிகம் இறக்குமதி செய்கிறோம். தங்கத்தில் முதலீடு செய்வதால் பணப்புழக்கம் முடங்குவதோடு, அன்னியச் செலாவணி இழப்பும் அதிகமாகிறது. வர்த்தகப் பற்றாக்குறை, நடப்புக் கணக்கு பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை என நாட்டின் பொருளாதாரம் நோஞ்சான் ஆகிறது. எனவே, இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்காக தங்கத்தின் மீதான சுங்கவரியை 10 சதவீதமாக உயர்த்தியது மத்திய அரசு. மேலும், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தில் 80 சதவீதத்தை உள்நாட்டில் பயன்படுத்தி, 20 சதவீதத்தை ஆபரணங்களாக்கி மறு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற நிபந்தனையையும் விதித்தது. இந்தக் கட்டுப்பாடுகளால் சட்டபூர்வமான தங்க இறக்குமதி குறைந்தது. ஆனால் தங்கக்கடத்தல் கணிசமாக உயர்ந்து விட்டது.

சுவிட்சர்லாந்து, தாய்லாந்து, துபாய், சிங்கப்பூர், மலேசிய சந்தைகளை விட நம் நாட்டில் தங்கத்தின் விலை அதிகம். துபாயில் ஒரு கிலோ தங்கம் ரூ.26.61 லட்சம். சிங்கப்பூரில் 26.60 லட்சம். லண்டனில் 26.59 லட்சம். இந்தியாவில், 30.68 லட்சம். மேற்கண்ட நாடுகளில் இருந்து சட்டபூர்வமாக தங்கத்தை இறக்குமதி செய்தால் சுங்கவரி, பிற செலவீனங்கள் 25 சதவீதத்துக்கு மேலாகிவிடும். அந்த வரிகளைச் செலுத்தாமல், மறைத்து எடுத்து வந்து இந்தியாவில் விற்றால் கிலோவுக்கு சுமார் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை லாபம். 10 கிலோ கடத்தினால் ரூ.40 லட்சம் ‘லம்ப்’பாக அடிக்கலாம்.

இன்னொரு காரணமும் உண்டு. ‘2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகள் அடுத்த ஆண்டுக்குப் பிறகு செல்லாது’ என்று அண்மையில் ரிசர்வ் வங்கி அறிவித்தது. இதனால் திகிலடைந்துபோன கறுப்புப்பண பேர்வழிகள், பதுக்கியுள்ள பணத்தை தங்கமாக மாற்ற முனைகிறார்கள். அதனால் திடீர் கிராக்கி ஏற்பட, கடத்தலும் அதிகமாகி விட்டது. கறுப்புப் பணத்தின் தாயகமான சுவிஸ் வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களின் ரகசியங்களை வெளிப்படையாக அறிவிக்கப் போவதாக மிரட்டுவதால், அந்த வாடிக்கையாளர்களின் கவனமும் தங்கத்தின் பக்கம் திரும்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

கடத்துவது யார்?
இது சர்வதேச மாபியா கும்பலோடு தொடர்புடைய பெரிய நெட்வொர்க். தமிழகத்தில் சென்னை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை மாவட்டங்கள் வரை இதன் வேர் படர்ந்திருப்பதாக அதிகாரிகள் சொல்கிறார்கள். தங்கச் சந்தையில் ‘பிளாக் மார்க்கெட்’ என்று ஒன்றுண்டு. வரிகட்டாமல் நடக்கும் திரைமறைவு வணிகம். அங்கிருந்துதான் இதன் வேர் தொடங்குகிறது. பத்து, பதினைந்து கைகள் மாறி, குருவிகளிடம் தங்கம் வந்து சேரும். குருவிகள் கொண்டு வந்து சேர்த்ததும் பல கைகள் மாறி உரியவருக்குப் போய்ச் சேரும். விற்றவர் யார், வாங்கியவர் யார் என்பது இடையில் உள்ள எவருக்கும் தெரியாது.

எப்படிக் கடத்துகிறார்கள்?
கணிக்கவே முடியாத அளவுக்கு புதுப்புது டெக்னிக்குகளை பயன்படுத்துகிறார்கள். சாதாரணமாக பாக்கெட்டிலோ, உள்ளாடையிலோ, கோட் பாக்கெட்டிலோ, சூட்கேஸிலோ மறைத்துக் கொண்டு வருவது ஒரு ரகம். அதிகாரிகளின் ஒத்துழைப்போடு நடக்கும் ‘டீலிங்’ இது.

சூட்கேஸ் கம்பி, ஷூவைக் கிழித்து நடுவில் தங்க பிஸ்கட்டுகளை வைத்து கீழும், மேலும் ஸ்பாஞ்சை வைத்து தைத்து விடுவார்கள். இப்படி 2 கிலோ வரை கடத்துகிறார்கள். சூட்கேஸைக் கிழித்து, உள்ளே பிஸ்கட்டுகளை வைத்துத் தைத்துக் கடத்துவதும் உண்டு. தங்க பிஸ்கட்டில் கருப்பு பெயின்ட் அடித்து கடத்துகிற கில்லாடிகளும் உண்டு. அவ்விதம் கடத்திய 10க்கும் மேற்பட்டோர் அண்மையில் கைது செய்யப்பட்டார்கள். பித்தளையால் ஆன பெரிய பூட்டுகளை வாங்கி உள்ளே இருக்கும் உபகரணங்களை எறிந்துவிட்டு தங்க பிஸ்கட்டுகளை வைத்து கொண்டு வந்து சிக்கியவர்களும் இருக்கிறார்கள்.

பேட்டரி பிஸ்கட்: சென்னை விமான நிலைய சரக்குக் குடோனில் அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். 98 கண்டெய்னர் பெட்டிகளில் விலை உயர்ந்த பிராண்டட் மொபைல்கள் அனுப்பப்பட்டிருந்தன. அவற்றில் மூன்று கண்டெய்னர்களை உடைத்துப் பார்த்த அதிகாரிகள் திகைத்து விட்டார்கள். மொபைல் போன்களில் பேட்டரிக்குப் பதிலாக தங்க பிஸ்கட் இருந்தது. ஒவ்வொன்றும் அரை கிலோ எடை. மொத்தம் 27 கிலோ.

பம்ப்செடடில் உள்ளே செப்புக்கம்பி காயிலுக்குப் பதிலாக தங்கக்கம்பிக் காயில். மொத்தம் 7 கிலோ. இதைப்போல, மிக்ஸி, டார்ச் லைட்டுக்குள் வைத்தும் கடத்துவதுண்டு.

இப்பொழுது அண்மைக்காலமாக புதியதொரு கடத்தல் வழியைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அது தான் குருவி எக்சேஞ்ச்.
இந்த அசைன்மென்ட்டில் இரண்டு குருவிகள் பங்கு பெறுவார்கள். வெளிநாட்டிலிருந்து வரும் குருவி, கொல்கத்தா வழியாகவோ, டெல்லி வழியாகவோ இறங்கி வேறு விமானத்தில் (கனெக்ஷன் பிளைட்) ஏறும் வகையில் பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்வார். இறங்கி ஏறும் இடைவெளியில், டாய்லெட்டுக்குச் சென்று குறிப்பிட்ட இடத்தில் தங்கத்தை வைத்து விட்டு அங்கே தயாராக நிற்கும் மற்றொரு குருவிக்கு ‘கோட்வேர்ட் எஸ்எம்எஸ்’ அனுப்புவார். அந்தக் குருவி தங்கத்தை எடுத்துக்கொண்டு அடுத்த விமானத்தில் சென்னைக்கு வந்துவிடுவார். உள்நாட்டு விமான முனையங்களில் சோதனை ஏற்பாடுகள் குறைவு என்பதால் இப்போது பலர் இந்த வழியைப் பயன்படுத்துவதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.

அதற்கு பிறகு வயிறு ஸ்டோர் சூர்யா நடிப்பில் வெளியான அயன் திரைப்படம் பார்த்திருந்தீர்கள் என்றால் உங்களுக்கு தெளிவாக விளங்கும் … அங்கே போதை மருந்தை கடத்துவார்கள் …இவர்கள் அதே பாணியில் தங்கத்தை கடத்துவார்கள் . இது போன்ற வழிமுறைகள் எல்லாம் ரிஸ்க்தான். ஸ்கேனிங், எக்ஸ்ரே போன்ற நவீன சோதனைகள் மூலமே இந்தக் கடத்தல்களைக் கண்டறிய முடியும்.

யார் இந்த குருவிகள்?
இவர்கள் அனைவரும் அஸ்ஸாம், ஒடிசா, அருணாசல பிரதேஷ், ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை போன்று இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களை சார்ந்தவர்கள் இவர்களை அதிக சம்பளத்திற்கு கொண்டு வந்ததாக

குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களே குருவித் தொழிலில் அதிகம் ஈடுபடுத்தப்படுகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு முன்புவரை டிவி, மெமரி கார்டுகள், திருட்டு விசிடி கடத்துவதுதான் குருவிகளின் தொழில். இப்போது தங்கத்தின் பக்கம் கவனம் திரும்பிவிட்டது. குருவிகளை பிடிக்க ஏஜென்ட்டுகள் இருக்கிறார்கள்.

ஒவ்வொரு ஊரிலும் ஏஜென்ட்டுகளுக்கு ஆட்கள் இருப்பார்கள். அவர்கள் மூலம், கஷ்டப்படும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், உடனடியாக பணத்தேவை உள்ளவர்கள், வேலை இல்லாதவர்களை அடையாளம் கண்டு டன் டன்னாக ஆசை வார்த்தைகளைக் கூறி ‘மூளை ஸ்லவை ’ செய்வார்கள். சிக்கும் குருவிகளை உள்ளூர் புரோக்கர்கள் ஸ்டேட் லெவல் புரோக்கர்களிடம் ஒப்படைப்பார்கள். அவர்கள், விமான நிலையத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? சிக்கினால் என்ன பேச வேண்டும்? என பயிற்சி அளித்து, விசா, பாஸ்போர்ப்டை கையில் கொடுத்து விமானமேற்றி விடுவார்கள்.
ஒரு குருவியின் கதை!
தங்கம் கடத்தி வரும்போது பிடிபட்டு வாழ்க்கையைத் தொலைத்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு குருவியின் வாக்குமூலம். “பைசா செலவில்லாம ஃபாரினை சுத்திப் பார்க்கலாம்னு ஆசை காட்டி கூட்டிப் போனாங்க. மலேசியா போய் இறங்கினதும் அடையாளம் தெரியாத சிலர்கிட்ட எங்களை ஒப்படைச்சாங்க. அவங்ககிட்ட என்னமாதிரி இன்னும் பத்துப்பேர் இருந்தாங்க. மறுநாள், மலேசியாவில இருந்து இலங்கைக்கு கொண்டுபோய் ஒரு அறையில அடைச்சு வச்சாங்க. ரெண்டுநாள் வெறும் தண்ணி மட்டும்தான்.

ரெண்டுநாள் கழிச்சு வேறு ரெண்டு பேர் எங்க அறைக்கு வந்தாங்க. என்னையும், இன்னொருத்தரையும் மட்டும் கூட்டிக்கிட்டுப் போய் எனிமா கொடுத்தாங்க. அப்புறம் படுக்க வச்சு தங்க பிஸ்கட்டை ஆசனவாய் மூலமா மலக்குடலுக்கு கொண்டு போனாங்க. வலியில கத்தினேன். ஒருத்தன் வாயிலயே ஒதைஞ்சான். போதும், போதும்னு கதறினபோதும் விடலே. மொத்தம் 7 பிஸ்கட்டுகள வச்சாங்க. 8வது பிஸ்கட்டை வைக்கும்போது மயங்கிட்டேன்…’’

இப்படி 100 கிராம் எடையுள்ள 15 பிஸ்கட்டுகள் வரை வைக்கமுடியுமாம். வைக்கப்பட்ட 5 மணி நேரத்துக்குள் வெளியே எடுத்தாக
வேண்டும். இல்லாவிட்டால் உயிருக்கே ஆபத்து. உள்ளே இருக்கும் ஒவ்வொரு நொடியும் மிகப்பெரும் அவஸ்தை. உட்கார முடியாது. நிற்கவும் முடியாது. விமானத்தில் இருந்து இறங்கியவுடன் ‘பிக்கப்’ வாகனம் தயாராக நிற்கும். அருகில் உள்ள ஏதாவது ஒரு லாட்ஜ்க்கு அழைத்துச் செல்வார்கள். கழிவறைக்குச் சென்று பிஸ்கட்டுகளை எடுத்துக் கொடுத்தவுடன் கைமேல் காசு. அதோடு குருவிக்கு விடுதலை.

10 கிராம் தங்கம் கொண்டு வருவதற்கு குருவிகளுக்குத் தரப்படும் கமிஷன் 500 ரூபாய். 15 பிஸ்கட்டுகள் கொண்டு வந்தால் ரூ.75
ஆயிரம்.

இலங்கையே மையம்
இலங்கையில் இருந்து 1.20 மணி நேரத்தில் சென்னைக்கு வந்துவிட முடியும். பிறநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டு வந்து அங்கிருந்து சென்னைக்கு கடத்துகிறார்கள். ஒவ்வொரு மாதமும் சராசரியாக பிடிபடும் 30 குருவிகளில் 25க்கும் மேற்பட்டவர்கள் இலங்கையிலிருந்து வருபவர்களே.
கடல்வழிக் கடத்தல்
விமானம் வழி கடத்தலுக்கு இணையாக கடல்வழிக் கடத்தலும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இலங்கையின் தலைமன்னார், நெடுந்தீவு, யாழ்ப்பாணம் வழியாக, தமிழகத்தின் கோடியக்கரை, ஜெகதாப்பட்டினம், ராமேஸ்வரம், தூத்துக்குடி, நாகை பகுதிகளுக்குக் கடத்தப்பட்டு அங்கிருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு வருவதாக சொல்கிறார்கள். ஆள் நடமாட்டமற்ற கடலோரப் பகுதிகளைத் தேர்வுசெய்து நவீன படகுகளில் வரும் கடத்தல்காரர்கள் 1 மணி நேரத்தில் வேலையை முடித்து விட்டு பறக்கிறார்கள். கடந்த ஓராண்டில் மட்டும்,
கடல் வழிக் கடத்தலின்போது 60 கிலோவுக்கும் மேற்பட்ட தங்கம் பிடிபட்டுள்ளது.
ரயில்வழிக் கடத்தல்
ரயில்வழிக் கடத்தலுக்கு மையம் மியான்மர். பிற நாடுகளிலிருந்து மியான்மருக்கு கடத்தப்படும் தங்கம், அங்கிருந்து பஸ் மூலம் மணிப்பூர் வழியாக அசாம் மாநிலம் கௌகாத்திக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து ரயில் மூலம் சென்னைக்கு வருகிறது. இப்படி சராசரியாக தினமும் 5 கிலோ தங்கம் வருவதாகச் சொல்கிறார்கள். அண்மையில், ஹவுரா, விஜயவாடா எக்ஸ்பிரஸ் ரயில்களில் தலா 9 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

கடத்தி வந்து இந்தியாவில் விற்றால் கிலோவுக்கு சுமார் 4 லட்சம் முதல் 5 லட்சம் வரை லாபம். 10 கிலோ கடத்தினால் ரூ.40 லட்சம் ‘லம்ப்’பாக அடிக்கலாம்.

இப்படி கடத்தி வரும் பொழுது குருவிகள் சிக்க்கிக்கொண்டால் … கடத்தல்கார்கள் தங்களுக்கு ஆபத்து வராத வரை குருவிகள் ஒன்றும் செய்ய மாட்டார்கள் …. அவர்களால் ஒரு சிறிய பிரச்சனை உருவாகும் அபாயம் இருந்தாலும் சற்றும் தயங்காமல் கொன்று புதைத்து விடுவார்கள் .

நான் அவன் இல்லை 26

இரவு பகலை சிறைவைத்திருந்த இரவு வேளை…… பாலைவனத்தில்  மணல்களை  அள்ளி கொண்டு  வீசும் காற்றில் அனல் பறந்துகொண்டிருக்க … ஒரு கட்டிடத்தின்  உள்ளே இருந்த அண்டர் கிரவுண்டில்  ,

” போட்ட திட்டத்துல வெற்றி நம்ம பக்கம் தான் பாய் ”  – என ஐம்பது வயதிற்குள் மதிக்கத்தக்க   வேதாச்சாரியா   பெருமிதத்துடன்  கூறினார் .

”  இது பத்தாது வேதா … இனி தான் இருக்கு   என் ஆட்டம் …. என்னை ஒவ்வொரு இடமா ஓட விட்டானுங்கள்ல  இனி நான் ஓட விடுறேன் ”  என்ற தீனா  தயாளனின்  விழிகளில்  அசுரனின் வெறி  தெரிந்தது .

” மது எப்படி இருக்கா …? மதுகிட்ட பேசிட்டானா ?” தீவிரமான  முக பாவத்துடன் கேட்டார் தீனா தயாளன் .

” இல்லையாம் பாய் … உங்க பொண்ணு பயங்கர பாதுகாப்புல இருக்காங்களாம் … குறிப்பிட்ட சில பேரை தவிர வேற யாரும் அவங்க கிட்ட பேச கூட அனுமதி கிடையாதாம் .”

” ம்ம்ம் ” ஆடும் நாற்காலியில்  நீண்ட சுருட்டை வைத்து புகைத்தபடி  தலையசைத்தார்  தீனதயாளன் .

” பாய் எனக்கு ஒன்னு தோணுது “

” சொல்லு “

” பாப்பாவை கடத்தணும்ன்னா  என்னைக்கோ பண்ணிருக்கலாமே  ?அப்போ எல்லாம் இதை பண்ணாம இப்போ ஏன் பண்ண போறாங்க அது மட்டும் இல்லை , நம்ம மேல இருக்கிற வெறிக்கு  அந்த விக்டரும்  துரியனும் எப்பவோ பாப்பாவை கொலை பண்ணிருப்பாங்களே ?ஆனா இவ்வளவு பாதுகாப்பா வச்சிருக்கிறத பார்த்தா ,அந்த சிவா குரு ஆளுங்க சொன்ன மாதிரி அந்த ஆதித்யாவும்  நம்ம பாப்பாவும் நிஜமாவே  விரும்புறாங்களோ …?

அது மட்டும் இல்லை நம்ம பாப்பாவை   அந்த சிவகுருகிட்ட இருந்து ஆதித்யா தான் காப்பாற்றி இருக்கான். அவனுங்களுக்கு மது நம்ம பொண்ணுன்னு தெரிஞ்சிருக்காதுன்னு தான் தோணுது பாய் … ரெண்டு பேரும் விரும்புறாங்கன்னு  நினைக்கிறேன் ” – என  தன் மனதில் தோன்றிய விஷயங்களை  வேதா  முழு கட்டுரையாக  ஒப்பித்து வைக்க .. கோணல் புன்னகையோடு  தன் நாற்காலியில் இருந்து எழுந்த தயாளன்  சுவற்றில்  கிறீன் போடில் பின் செய்ய பட்டிருந்த   ஜித்தேரியை சார்ந்த உறுப்பினர்களின்  புகைப்படத்தை  வரிசையாக பார்த்தவர்,ஆதித்யாவின்  முகத்தை  உற்று பார்த்து  தன் கண்களை  இறுக்கமாக   மூடி திறந்து ,

” இவன் யாருன்னு விசாரிக்க சொன்னேனே என்னாச்சு  ?” – விழிகளை ஆதித்யாவின் முகத்தில் இருந்து அகற்றாமல் கேட்டார் தயாளன் . 

” எல்லாம் விசாரிச்சிட்டேன் பாய் …. திறமைசாலி !ஆபத்தானவன்! ஆனா நீங்க சந்தேகப்படுற அளவுக்கு வொர்த் இல்லை பாய்  .

சின்ன வயசுல ப்ளாக்ல  டிக்கெட் விற்கிறதுன்னு ஆரம்பிச்சிருக்கான்.  அப்புறம்  லோக்கல் டான்  சோழ ராஜன் கிட்டஅடியாளா இருந்திருக்கான்  … பிறகு அவர் கிட்ட இருந்து பிரிஞ்சி வந்து இவன் கொஞ்ச பேரை கூட்டம் சேர்த்துட்டு அடிதடி பண்ணிட்டு வந்திருக்கான்.

இந்த சிவா குரு அப்பா ராணா குருவோட  ஹவாலா கோல்டை  யார்கிட்டையும் மாட்டாம கொண்டு வந்ததுல தான் கொஞ்சம் இவன் பேர் பெருசா பேச பட்டிருக்கு,  ஆனா அந்த ராணா பேசின தொகையை கொடுக்காம ஏமாத்திருக்கான் ….நடந்த கைகலப்புல  இவன் கூட்டாளி செத்துட்டான் … அதுல காண்டாகிருக்கான் .

அதனால ராணாவை  அத்தனை டான் முன்னாடியும்  அடிச்சே இவனும், கூட்டாளிங்களும்  போட்டு தள்ளிருக்காங்க … அதுல தான் பெரிய மாஸ் ஆகிட்டான் . அப்புறம் வரதன் பையன் துரியன் மேல  கொலை  தாக்குதல் நடந்த  அப்போ இவன் தன் உயிரை குடுத்து காப்பாத்திருக்கான் . அப்படியே ஜித்தேரிக்குள்ள நுழைஞ்சு  இப்போ ஜித்தேரிலே துரியனுக்கு  நிகரான  பதவியில இருக்கான் … இவங்க நட்பை  எல்லாரும் அப்படி பேசுவாங்க அவ்வளோ தோஸ்து”

” தோஸ்தா ” நக்கலாக சிரித்த தயாளன் சுருட்டை  நன்கு  இழுத்து புகையை ஆதித்யாவின் முகத்தில் விட்டு ,

” இங்க யாரும் நண்பர்கள் கிடையாது வேதா … இங்க  நட்புக்கும்  துரோகத்துக்கு  இடைவெளி சின்ன கோடு தான் ” என்ற தயாளன் ,” சீக்கிரமா அடிக்கணும் அவனுங்க எழுந்து நிக்கிறதுக்குள்ள அடிக்கணும் வேதா … என்னுடைய அடுத்த டார்கெட் அந்த விக்டர்…அவனை தூக்கணும் முதல்ல”

“அது நடக்காது பாய் … ஆதித்யா இருக்கிற வரைக்கும்  துரியன் மேலையோ  , விக்டர் மேலையோ கை வைக்க முடியாது”

” ஓ ! அப்போ அவன் கதையை முதல்ல முடிக்கிறேன் “

” அது கஷ்டம் பாய் இதோடு எத்தனையோ பேர் அவனை போட்டு தள்ள முயற்ச்சி பண்ணி பங்கமா  மாட்டிருக்கானுங்க … சின்ன பையன் தான் பாய் ஆனா ரொம்ப திறமைசாலி … இவ்வளவு சின்ன வயசுல  ஜித்தேரிலே முக்கியமான மூணாவது இடத்துல வந்திருக்கான்னா பாத்துக்கோங்க . இந்த ஆதித்யாவை போடுறது எல்லாம் வேஸ்ட் பாய் அவன்  துரியனுக்கு  வலது கை அவ்வளவு தான் அவன் கிட்ட டீல் பேசி அவனை மட்டும் நம்ம பக்கம் சேர்த்து கிட்டோம்ன்னு வைங்களேன்  அப்புறம் துரியன் விக்டர் எல்லாம் ஒண்ணுமே இல்லாம போய்டுவாங்க …. ஜித்தேரி நம்ம கையில சுலபமா கிடைச்சிரும் “என்றார் வேதா .

” ம்ம்ம் பேசி பார்ப்போம் டீலுக்கு ஒத்துவந்தா ,உறவு  !இல்லைனா பாவ கணக்குல இவனையும் சேர்த்துக்குவோம் ” என கொடூரமாக  சிரித்த தயாளன்  ,”இவனை பத்தி எனக்கு இன்னும் செய்தி  வேணும் … அடி வர போய்  பார்க்க சொல்லு …எங்க பிறந்தான் …  அப்பன் யாரு   அம்மா யாரு  இப்படி எல்லாம் வேணும் ” தீவிரமாக சொன்னார் .

” ஆனா பாய் இவன் அவ்வளவு வொர்த் இல்லை “

” ம்ம்  சொன்னதை செய் வேதா … ஒருத்தன் எல்லா விஷயத்துலையும்   சரியா இருக்கான்னா … அவன் கிட்ட பெரிய ரகசியம் ஒளிஞ்சிருக்குன்னு  அர்த்தம் … என்னால மாலினி மாதிரி மது விஷயத்துலையும்  ரிஸ்க் எடுக்க முடியாது …  மாலினியோட  மரணத்துக்கு  பழிவாங்காம  என் மனசு ஆறாது … விக்டர் துரியனோட  மொத்த குடும்பத்தோட ரத்தமும்  எனக்கு வேண்டும் … தேவை பட்டா ஆதித்யாவோடதும் தான் !அதை என் உடம்பு முழுக்க பூசிக்கணும்  அப்போ தான்  எனக்குள்ள எரிஞ்சிக்கிட்டு இருக்கிற தீ அடங்கும்  ” என்று   துரியனின் புகைப்படத்தில்  சுருட்டை வைத்து அணைத்தார் .

” பாய் “

” ம்ம் சொல்லு வேதா “- ட்ராயரை   திறந்து அதில் இருந்த மருந்தை ஊசியில் ஏற்றிகொண்டே கேட்டார் தீனதயாளன்  .

” அந்த குருவிங்களை என்ன பண்றதுன்னு பசங்க கேட்குறாங்க … “

 ஒரு பெல்ட்டால் தன் புஜத்தை இறுக்கி  கட்டிகொண்டு   மருந்தை தன் கையில் செலுத்திய தயாளன் ,” வெட்டி போட சொல்லு …. துண்டு துண்டா   வெட்டி தூக்கி கழுகுக்கு  போட சொல்லு  … முட்டாளுங்க “என கொரூரருமாக  சிரித்த தயாளனின் போதை விழிகளில்   தெரிந்த வெறிபிடித்த ஓநாயின் சாயலை கண்ட   வேதாவுக்கே வியர்த்து கொட்டியது .

” சரி பாய் ” என்று அதற்கு மேல் நிற்காமல் அங்கிருந்து சென்று விட்டார்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

மெதுவாக எட்டிப்பார்த்த முழுநிலவை மிரட்டி ஒளித்துவைத்திருந்தது கார்மேகங்கள் …  ஆங்காங்கே  மின்விளக்குகள் மட்டும் வெட்டிக்கொண்டிருக்க …   ஆள்நடமாட்டம்  குறைவாக இருந்த அந்த தெருவில் ,

” பளிச் பளிச் ” என்று மின்னல் வெட்டிக்கொண்டிருக்க …  ‘ டமார் ‘ என்னும் மிரட்டும் இடி சத்தத்திற்கு நடுவே ….  கைகளில் ஆயுதங்களுடன்  விரட்டும் அந்த கயவர்களிடம் இருந்து  தன்னை  காத்துக்கொள்வதற்காக  ஆள் இல்லாத அந்த சாலையில் ஓடிக்கொண்டிருகுந்த அந்த பெண்  தன் எதிரே  வந்த உருவத்தை  கவனிக்காமல்  அந்த உருவத்தின்  மீது மோதினாள் .பின்பு சுதாரித்துக்கொண்டு   நிமிர்ந்து பார்த்தாள் ! கண்களில் சிறு மகிழ்ச்சி.

” ஜுவாலா நீ ஏன் வந்த  … இவங்க என்னை துரத்திட்டு  வாராங்க வா போகலாம்  ” என்றாள் கண்களில் நீருடன் மதுமதி .

 ஜுவாலாவை கண்டதும்  மதுமதியை   துரத்தி வந்த நால்வரும் அப்படியே நிற்க … மதியின் கரங்களை தன் கரத்தின் இருந்து விடுவித்து கொண்ட ஜுவாலா  , அதிர்ச்சியில் விரிந்திருந்த  மதியின் விழிகளை பார்த்து ,” என்னை மன்னிச்சிரு ” என்று கூறி மதியை  அந்த கயவர்களிடம்  விட்டு விட்டு அங்கிருந்து செல்ல .

“ஜுவாலா ப்ளீஸ் போக ”  என்று மதியின் கதறல்கள்  சில நிமிடங்கள் கழித்து கேட்காமல் போகவும் திரும்பிய ஜுவாலா   ரத்த வெள்ளத்தில் தரையில் கிடந்த மதுமதியை கண்டாள் ,

‘மது’ என கத்தியபடி அரண்டு எழுந்தாள் ஜுவாலா .

” கனவா ” முகத்தில் இருந்த வியர்வை துளிகளை  தன் கரங்களால்  துடைத்தபடி தனக்கு தானே கேட்டுக்கொண்டாள்.

அப்பொழுது “என்னாச்சு  ஜுவாலா ” என்று கேட்டபடி அவள் அருகே வந்த அர்ஜுன் . படுக்கையில் அரண்டு போய் அமர்ந்திருந்தவளை கண்டு அதிர்ந்தே போனான் .

” ஏய் ஜுவாலா ஆர் யு ஓகே ?”  குடிக்க தண்ணீர் கொடுத்து  முதலில் அவளை ஆசுவாசப்படுத்தினான் .

படபடப்பு இப்பொழுது  மெல்ல குறைந்திருக்க … மெல்ல நிமிர்ந்து அவனது முகத்தை பார்த்தாள் …. ஒருவித பரிதவிப்புடன்  அவளையே பார்த்து கொண்டிருந்தான்  அர்ஜுன் .

அவன் முகத்தை பார்க்கவே சங்கடப்பட்டவள் குற்ற உணர்ச்சியால் அவனை நிமிர்ந்து கூட பார்க்க இயலாது முகத்தை தாழ்த்திக்கொண்டாள்  .

“மதுவை பத்தியே யோசிச்சிட்டு இருந்தியா ?” என அர்ஜுன் கேட்ட மறுநொடி  மனம் உடைந்த ஜுவாலாவின் கண்கள் கலங்க . மிக சிரமப்பட்டு  கண்ணீரை வெளி வர விடாமல் கண்களுக்குள்  தேக்கிகொண்டாள் .

” மது சீக்கிரமா கிடைச்சிருவா சரியா “

” ம்ம் ” தலையை மட்டும் அசைத்தாள் .

” நீ நல்ல இருக்கல … பிரச்சனை எதுவும் இல்லையே ?” என கேட்டான் அர்ஜுன் .

‘ இப்போவாவது சொல்லிவிடு ‘என்று அவளது மனசாட்சி குடைந்தது . அவனது எதிர் வினையை உணர்ந்தவளால் ஒருவார்த்தைகூட பேச முடியவில்லை .

” நல்லா இருக்கேன் … ஒன்னும் இல்லை “-  அவள் சொன்ன மறுநொடியே  கவிழ்ந்திருந்த  அவளது வதனத்தை நிமிர்த்தினான் .

இப்பொழுது  அவளுடைய விழிகள் அவன் விழிகளை சந்தித்தது .

” ஏதோ இருக்கு  ஜுவாலா … நீ டிஸ்டர்பா இருக்க   ” என்றான் அர்ஜுன் .

” அதெல்லாம் இல்லை அத்தான் “

” என்னை பார்க்க வந்தப்போ இருந்த சந்தோசம் நேற்று என் மொபைல் உடைஞ்சதுல இருந்து இல்லையே … எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு ” அவனது பார்வை கூர்மையாக அவளை ஆராய்ந்தது .

தலையை  குறுக்காக அசைத்தவள் ,”இல்லை ” என்றாள் . நாசி சிவந்து இதழ்கள் துடித்தது …. கண்ணீர் தாறுமாறாய் வழிந்தது . எதையோ இழந்துவிட்டது போல அழுதவளை எப்படி தேற்றுவது  என்று புரியாமல்  திணறியவன் … சட்டென்று இழுத்து தன் மார்போடு அணைத்து கொண்டான் .

” இட்ஸ் ஓகே …. ப்ளீஸ் டா …. காம் டவுன் ப்ளீஸ் “அவளது கேசத்தை வருடிக்கொடுத்தான் . அவன் வருட வருட அவளுடைய விசும்பல் அதிகரித்தது … கண்ணீர் அதிகமானது … அவளுடைய கண்ணீர் அவன் மனதை பிசைந்தது … ஏன் என்று தெரியவில்லை  ஆனால் அவள் அழுதாள் அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை .

” ஜுவாலா ப்ளீஸ் .. ரிலாக்ஸ் டா ” என அவளை ஆறுதல் படுத்தினான் .

தன் அலைபேசி உடைந்ததில் இருந்து அவள் சரி இல்லை  என்பதை உறுதியாக நம்பிய அர்ஜுன் …ஜுவாலாவின்  மனக்கலகத்துக்கான காரணத்தை அறிய சித்தம் கொண்டான் . அந்த நேரம்  சந்தியாவை  ஹாஸ்ப்பிட்டலில்  இருந்து டிஸ்சார்ஜ் செய்வதற்கு தேவையான உதவியை   அவளது தாய் தந்தையருக்கு  செய்து அவளை அவள் இல்லத்தில் பத்திரமாக விட்டுவிட்டு ,தன் பிளாட்டிற்கு  வந்த மதன்  அர்ஜுன் ஹாலில் இல்லாததும் கிட்சனுக்கு  சென்று தண்ணீர் அருந்திக்கொண்டே   அறைக்குள் நுழைந்தவன்  அர்ஜுன் ஜுவாலாவை நெருக்கமாக அணைத்திருந்ததை கண்டு திகைத்து நின்றவனுக்கு சட்டென்று புரையேற ,

“வூப் வூப்” என்ற அவனது செருமும் சத்தத்தில் தன்னிலை உணர்ந்து முதலில் விலகியது  ஜுவாலா  தான் .

அர்ஜுன் ஜுவாலா இருவருமே ஒருவித சங்கடத்துடன்  நிற்க அவர்களை மேலும் சங்கடப்படுத்த விரும்பாத மதன் ,

” வா மா ஜுவாலா எப்படி இருக்க …. ?எப்போ வந்த? ” சூழ்நிலையை  சமநிலையாக்க  முயற்சித்தான் .

” நல்லா இருக்கேன் அண்ணா நேத்து வந்தேன்…சந்தியா எப்படி இருக்கா? “

” இப்போ ஓகே மா … அவளை டிஸ்சார்ஜ் பண்ணி வீட்ல விட்டுட்டு தான் வரேன் ”  என்றான் .

” சரி மா நீங்க பேசிட்டு இருங்க நான் ஒரு கால் பண்ணனும் … பண்ணிட்டு வரேன் ” என்றவன் அங்கிருந்து செல்ல ,

“எதையும் யோசிக்காத …ஃப்ரெஷ்  ஆகிட்டு வா நான் வெளியில வெயிட் பண்றேன் …. ஆபிஸ் போகும் பொழுது உன்னை அப்படியே வீட்ல ட்ராப் பண்ணிறேன்  ” என்ற  அர்ஜுன்  அறையை விட்டு வெளியேறினான் .

அவன் சென்ற மறுநிமிடம் ,

” ஏன் ஜுவாலா இப்படி ஒரு துரோகத்தை செஞ்ச …. மதுக்கு ஏதாவது ஆகிருந்தா ஐயோ ” என்று தன்னை தானே திட்டிகொண்டு  தலையை பிடித்தபடி கட்டிலில் அமர்ந்த ஜுவாலாவுக்கு குற்ற உணர்ச்சி  அவளை உயிருடன்  புதைத்து கொண்டிருந்தது .

மனசாட்சி இல்லாதவனை அழிக்க தான் ஆயுதம் வேண்டும் மனசாட்சி உள்ள மனிதனை அழிக்க அவனது குற்ற உணர்ச்சியே போதும் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

உறக்கத்தில் இருவருக்கும் நடுவில் இருந்த இடைவெளி குறைந்திருக்க … இருவரின் மூச்சுக்காற்றும் ஒன்றாய் கலந்து அந்த அறையில் காதல் மணம் வீசியது .இருள் விழுங்கிய சூரியனின் சுடும் கதிர்கள் முகத்தில் படவும் கண்விழித்த மதிக்கு மிக அருகில் ஆதித்யாவின் முகம் இருக்க … அவனது முகத்தையே அவள் பார்த்து கொண்டிருந்தாள் … அப்பொழுது தான் கண்விழித்திருந்த ஆதித்யாவும்  அவளையே ரசித்துக்கொண்டிருந்தான் .

ஆதித்யா மெல்ல அவள் முகத்தில் சரிந்து விழுந்திருந்த  கேசத்தை நீக்கி அவளது வதனத்தை இறகிலும்  மென்மையாக வருடினான் . அவளோ அவனுது தீண்டல் ஏற்படுத்தின  சிலிர்ப்பை தன் கண்மூடி  அனுபவித்தபடி  தன்னிலை மறந்து  அவன் கன்னத்தில் இதழ் பதிக்க … அவளது இதழின் மென்மையை சுகமாய் அனுபவித்தவன்  இன்னும் நெருங்கி அவள் கண்களில் இதழ் பதிக்க …

அங்கே விழி மூடிய நிலையில் இருவருக்குள்ளும் முத்த பரிமாற்றம் இடம்பெற்றது .

அவன் விழிகளில் கொடுத்த முத்தத்திற்கு  ஈடாக  அவனது நெற்றியில்  அவள் இதழ்  பதிக்க …   பதிலுக்கு  அவளது மூக்கு நுனியில்  முத்தம் பதித்தவன் அவளது பட்டு கன்னத்தோடு  தன்  ரோமம் அடர்ந்த கன்னத்தை வைத்து உரசி இரண்டு கன்னத்திலும் தவறாமல் இதழ் பதிக்க … அவனது தாடி மீசை ஏற்படுத்திய சிலிர்ப்பில்  அவனது சிகையை அழுத்தமாக பற்றிக்கொண்டாள் .

இப்பொழுது அவனது வலிய கரங்கள் அவளது முகத்தை தன் கையில் ஏந்திருக்க …. அவளது  மென்மையான  இதழ்கள் அவனுடைய  அழுத்தமான இதழ்களை  தனக்குள் சிறைவைத்திருக்க, அப்பொழுது ,

” இல்லை ” என்றபடி தன் உறக்கத்தில் இருந்து  கண்விழித்தாள் மதுமதி .

” ச்ச இவனை போய் நாம ச்ச ச்ச என்ன மது நீ ” என்று படுக்கையில் இருந்து எழுந்திருக்க  முனைந்தவளுக்கு ஏதோ இடுபாடு கட்டிடத்திற்குள்  சிக்கிக்கொண்டது  போல அசையவே சிரமமாக இருந்தது . விழிகளை தன்னை சுற்றி சுழலவிட்டவள்  மறுகணமே  அதிர்ந்து முழித்தாள். அவளுடைய கரங்களும்  கால்களும்  சிறைப்பட்டிருந்தது ….கழுத்திலும் , முகத்திலும் அவனுடைய தாடியும் மீசையும் குறுகுறுக்க இதயம் வேகமாக துடித்தது … ஒருவித பதட்டம்  தனக்குள் பரவுவதை உணர்ந்தவள்  உடனே விழி மூடி விட்டாள் .

‘ இவன்  எப்படி இங்க ?அதுவும் இவ்வளவு பக்கத்துல …   ‘ என்று மனதிற்குள்  எண்ணியவளுக்கு   நேற்று இரவு நடந்த அனைத்தும் நினைவிற்கு வர கண்களை மூடி ஆழமாக மூச்செடுத்தவள் ,

” எல்லாம் பண்ணிட்டு மறந்து கொடுத்துட்டா சரியா போய்டுமா?  அரக்கா 1″ என திட்டியபடி  மெல்ல நிமிர்ந்து  அவனை பார்த்தாள் .

அவனது ரோமம் மேலும் குத்தியது ,

‘ அஹ ஒவ்வொரு முடியா அப்படியே  பிச்சு பிச்சு போடணும் போல இருக்கு ம்ம்ம் ‘ என வசைபாடியவளை .

‘என்ன பண்ணிட்டு இருக்க மதி உடனே எழுந்து போ ‘ என அவளது சுய உணர்வு அறிவுறுத்த … மெல்ல சத்தம் வராமல் எழுந்து கொண்டாள் .

” மருந்து குடுத்துட்டு அப்படியே போக வேண்டியது தான பக்கத்திலே படுத்திருக்கான் மான்ஸ்டர் ” என திட்டியவளுக்கு   அருகில் இருந்த பூ ஜாடி கண்ணில் பட ‘ அப்படியே ஓங்கி அடித்தால் தான் என்ன ? ‘என கேட்டது  மனம் .

உடனே அதை கையில் எடுத்தவள் … பூனை போல பதுங்கி அவள் அருகில் வந்தாள்… நேற்று வரை அரக்கனாக இருந்தவன் இப்பொழுது அப்பாவி குழந்தை போல மெல்லிய குறட்டை சத்தத்துடன் உறங்கிக்கொண்டிருந்தான் . கொலைகாரன்  என்று சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது  அவ்வளவு அப்பாவியாக தெரிந்தான் . முகத்தில் கடுமை இல்லை குரூரம் இல்லை . அவன் மேல் அது வரை இருந்த கோபம் எல்லாம் சூடு நீரில் போட்ட சக்கரை தூளாக நொடியில் மறைந்திருந்தது .

” எனக்கு ஒன்னுனா உன்னால தாங்கிக்கவும் முடியல … அதே நேரம் என்னை காயப்படுத்தவும்  செய்யிற , ஏன் ஆதி … ?என்ன  தான் என்கிட்ட இருந்து உனக்கு வேணும் ?” என்றவள் .

தன் கையில் இருந்த பூ ஜாடியை பார்த்தாள் ,’ ச்ச என்னையும் இவனை மாதிரி மாற்றிவிடுவான் போலையே ‘ என்று  தன்னை தானே கடிந்து கொண்டவள் , பூஜாடியை எடுத்த இடத்திலே வைத்துவிட்டு ,

“நீ என்னை அவ்வளவு கஷ்டப்படுத்துற … ஆனா என்னால உன்னை காயப்படுத்துற  மாதிரி  நினைக்க கூட முடியல ” என்றவள் … விலகியிருந்த  போர்வையை  அவனது மார்பு வரை இழுவிட்டுவிட்டு , அவன் உறங்குவதற்கு  தலையணையை  சரியாக தலைக்கு அடியில் வைத்தவள்  அவனது சிகையை வருடிவிட்டு ,

” மேனியுபிளேடர் ” – ‘சரியான சூழ்ச்சிக்காரன் ‘ என வெறுமையாக புன்னகைத்தவள்   குளியல் அறைக்குள் நுழைந்துகொண்டாள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஹாலில் அர்ஜுன் நாளிதழை புரட்டியபடி அமர்ந்திருக்க , அப்பொழுது விடாம செருமி கொண்டிருந்த மதனை பார்த்து அர்ஜுன் ,
” என்ன கொழுப்பா ” என்றான் சீற்றத்துடன் .

” ஏன் கோபப்படுற “

” உன் பார்வை ! அது என்கிட்ட கேட்குற கேள்வி எனக்கு கோபத்தை உண்டாக்குது மதன் “

” ஓகே ஆல்ரைட் … என்ன நடக்குது உங்களுக்குள்ள ” மதனின் விழிகள் அர்ஜுனின் முகத்தை ஆராய்ந்தது .

” உன் கேள்வியே அபத்தமா இருக்கு மதன் “

” நான் பார்த்ததை கேட்குறேன் “

” நேத்து என்ன பார்குறதுக்காக வந்தா … நான் ஆபிஸ் போய்ட்டேன் வர கொஞ்சம் லேட் ஆகிடுச்சு …இவ போயிருப்பான்னு நினைச்சேன் … வீட்டுக்கு வந்தா சோஃபால படுத்திருந்தா … மணியும் ரொம்ப ஆகிருந்துச்சு உள்ள படுக்க வச்சிட்டு … இளாக்கு தகவல் சொல்லிட்டு …நான் ஹால்ல தூங்கிட்டேன் அவ்வளவு தான் “விசாரணைக்கு அழைக்க பட்ட கைதி போல மூச்சு விடாமல் ஒப்பித்து முடித்தான் அர்ஜுன் .

” படுக்க வச்சன்னா ? புறியலையே ” ஒற்றை புருவம் உயர்த்தினான் மதன் .

” தூங்கிட்டா டா “

” எழுப்பிருக்கலாமே “

” அசந்த தூங்கிட்டு இருந்தா …. இவளுக்கு பாதி தூக்கத்துல இருந்து யாரும் எழுப்பினா ,திரும்ப தூக்கம் வராது டா … ஏற்கனவே டிஸ்டர்பா இருந்தா “

” அப்போ தூக்கிட்ட “

“என் மனசுல தப்பான எந்த எண்ணமும் இல்லை “

” அப்போ நான் நம்புற மாதிரி என்னை கன்வின்ஸ் பண்ணு பார்ப்போம் “

” மதன் மது பிரச்சனை என்னை கொல்லாம கொன்னுக்கிட்டு இருக்கு ..இப்போ இது தேவையா? ” – இயலாமையுடன் கேட்டான் அர்ஜுன் .

” ஓகே எதுவும் பேசல … உன் ரூம் ரெடியா இருக்கு ட்ரைவர் சாவி கொடுத்துட்டு போனார் … ” என்றவன் அர்ஜுன் தங்கப்போகும் பிளாட்டின் சாவியை கொடுத்தான் .

” அப்புறம் அர்ஜுன் ஜூவாலா உன் கூடையா தங்குவா “

” ஏண்டா “

” இல்லை சும்மா தான்,  அவசரமா உன் பிளாட்டுக்கு போறியே அதான் கேட்டேன் “

“அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம் …. ஆதித்யா , துரியன் சம்பந்தப்பட்ட முழு டாக்யூமெண்ட்ஸும் எனக்கு வேணும்ன்னு கேட்ருந்தேனே அது  என்னாச்சு ?”

” ரெடி தான் 2012 ல இருந்து இருக்கு அதுக்கு முன்னாடி உள்ள தகவல் நம்ம டீம் ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க இன்னைக்கு கிடைச்சிரும் ” என்றான் மதன் .

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

ஈர கூந்தலை  துவட்டியபடி  வெளிய வந்தாள் மதுமதி . கண்கள் அவனை  தேடியது . மெத்தையில்  மடித்து நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்த போர்வை  அவன் இல்லை என்பதை உணர்த்த .

‘ போய்ட்டான் போல ‘ என்று எண்ணியவள். மீண்டும் தன் தலையை துவட்ட ,

” ப்ச் தலைக்கா குளிச்ச நேத்து தான் அவ்வளவு காய்ச்சல் அடிச்சுது  ” என்று தன் முதுகிற்கு  பின்னால் இருந்து கேட்ட குரலில் திடுக்கிட்டவளுக்கு  இதயம் அரை நொடி நின்று துடித்தது . பின்பு தன்னை நிதானப்படுத்திக்கொண்டு பின்னால் திரும்பியவள்,

” அது ,  இப்போ காய்ச்சல் இல்லை ” மதியின் காற்று குரல் அவன் காதுக்கு  சென்றடையும்  முன்பே காற்றில் கரைந்தது .

” என்ன ? வாய்க்குல்லையே  சொன்னா எனக்கு எப்படி தெரியும் ?” சிடுசிடுத்தான் .

” காய்ச்சல் இப்போ இல்லை “

” என்ன இல்லை ?” என்றவன்  தன் புறங்கையால் அவளது  நெற்றியில் கை வைத்து பார்த்தான் .

” நல்லவேளை காய்ச்சல் இல்லை ” என்ற ஆதித்யாவின் மனம் நிம்மதி அடைந்தது .

” அக்கறை ” அவளது நலிந்த குரலில் வியாபித்திருந்த  கோபம் அவனை பலமாய் தாக்கியது ….கோபத்தில் அவளது இதயம் தாறுமாறாய்  துடித்தது . அவளது இதயத்தின்  ஓசை  அந்த நூலளவு  இடைவெளியிலும் அவனால் உணர முடிந்தது .

” ஆமா அக்கறை தான்,  நான் படாம  வேறு யார் படுவா? ” என்று ஆதித்யா அவளிடம் கேட்க … அவளது கோபம் மேலும் அதிகமானது .

“தலையை நல்லா காய வச்சிடு … காஃபி டேபிள்ள வச்சிருக்கேன் சூடா இருக்கும் , பார்த்து குடி… அப்புறம்  ப்ரேக்பாஸ்ட்ல  மீட் பண்ணலாம் ” என ப்ரோக்ராம்  செய்யப்பட்ட ரோபோ போல ஆதித்யா கூற , மதிக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது ,

” ஏன் ஆதி? எதுக்கு இந்த நடிப்பு … ?  எதுக்காக இப்படி பண்ணிட்டு இருக்கீங்க ?” என்று கேட்டுவிட்டாள். கண்களில் கண்ணீர் திரண்டது மூச்சு மேலும் கீழும் வாங்கியது …. அவளது நிலையை பார்த்த ஆதித்யாவுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது .

அவன் தான் அவளை பயமுறுத்துவதற்காக செய்தான் ! தன் சுய நினைவுடன் ,விளைவுகளை நன்கு அறிந்துதான் அவ்வாறு செய்தான் ! ஆனால் இப்பொழுது அவளை பார்க்கும் பொழுது ஏதோ ஒரு அப்பாவி குழந்தையை அடித்துவிட்டது போல உணர்ந்தான் .

இப்பொழுதே அவளை பழைய இயல்பு நிலைக்கு கொண்டு வரவேண்டும்  என்று மனம் தவித்தது ஆனால் எப்படி ?என்று தான் அவனுக்கு வழி தெரியவில்லை .

” மதி” என்று அழைத்தபடி மெல்ல நெருங்கினான் .

” ப்ளீஸ் கிட்ட வராதீங்க ” தள்ளி சென்றாள் கண்ணீர் அதிகமானது .

” மதி … மதி ப்ளீஸ் ” அவளது கரங்களை பற்றினான் …உதறிவிட முயன்றாள் … மேலும் இறுக்கமாக பிடித்து  வலுக்கட்டாயமாக மெத்தையில் அமரவைத்து   .  அவளது இருக்கரங்களையும்  பற்றிக்கொண்டு அவள் முன்பு முட்டி போட்டு அமர்ந்திருந்தான் .

” ஏன் ஆதி அப்படி செஞ்சீங்க … லேசா அடிச்சிட்டு விட்ருக்கலாமே  கொலை பண்ணிடீங்களே ஏன் …? அவருக்கு நிச்சயம் குடும்பம் இருக்கும்,  ஒரு பையன் இருக்கலாம் , மனைவி இருப்பாங்க ,ஏன் ஒரு பொண்ணு கூட இருக்கலாமே ” அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை .

” அவன் அதுக்கு தகுதி ஆனவன் “

” அதை டிசைட் பண்ண நீங்க யாரு ?” கண்களை மூடி அழுதாள் .

என்ன சொன்னாலும் புரிந்து கொள்ளும் நிலையில் அவள் இல்லை என்பதை உணந்தவன் . நீண்ட பெருமூச்சை வெளியிட்டு

” மதி ஐயம் சாரி … ரியலி சாரி  ” ஆதித்யா சக்கரவர்த்தியின்  குரல் இறங்கியது . அவள் அவனை பார்க்கவே இல்லை … முகத்தில் வழிந்த கண்ணீரை மெதுவாக துடைத்தான் .

” பேபி ப்ளீஸ் … உன்னை காயப்படுத்தணும்ன்னு  நான் பண்ணல …ஓகே இனிமே உன்னை ஹுர்ட் பண்ற மாதிரி நடந்துக்க மாட்டேன் … நீ என்னை நம்பு அதுவே போதும்  … ப்ளீஸ் உன்னை இப்படி பார்க்க முடியல ” அவளுது கரங்களை தன் கண்களில் வைத்து அழுத்தியபடி இறைஞ்சினான் .

கர்வம் கழைந்து ஆதித்யா சக்கரவர்த்தியின்  விழிகள் அவளிடம் மண்டியிட்டது  .

 தான் அழுதால் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை ..தனக்கு வலித்தால் அவனுக்கும் வலிக்கின்றது ! என்னும் எண்ணம் மதிக்கு   இதமாக இருந்தது .

“ஏன்  ஆதி அப்படி ?” அவள் கேட்டாள் ! அவன் பார்த்தான் ,அவளும் தான் .

இருவரின் பார்வையும் ஒன்றோடு ஒன்றாய் கலந்தன .  அவனது சரணடைந்த பார்வை  அது சொல்லிய செய்தி இதுவரை அவனுடன் இருந்த பிணக்குகளை  எல்லாம் மறக்கடித்தது . 

 இப்பொழுது அவனது கரங்கள் அவளது முகத்தை தாங்கிருந்தது  … அவனது நெற்றி அவளது நெற்றியோடு இணைந்திருந்தது . இடைவெளி இல்லாத இருவரின்  இதழ்களும்  இணைய காத்திருந்தது ,

” மதி …ஐ ” தொடங்கிவிட்டான்,  ஆனால் அவனால் முடிக்க முடியவில்லை  எப்படி முடிப்பான் ? மனதில் வஞ்சம் நிறைந்திருக்க நஞ்சு கலக்காத தூய காதலை கொடுக்க அவன் மனசாட்சி தடுத்தது . .

கண்களை மூடி தன் இழிநிலையை  நினைத்து வருந்திய ஆதித்யா ,

“ஏன்னா நீ எனக்கு  ரொம்ப முக்கியம்…. மதி ஐயம்  சாரி … இனிமே  இப்படி  நடக்காது ” என்றான்.

விழி மலர்ந்து அவனை பார்த்தாள் மதி! அவள் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே அவளது நெற்றியில்  இதழ் பதித்துவிட்டு ,” பிரேக் ஃபாஸ்ட்ல மீட் பண்ணலாம் ” என்று கூறி அங்கிருந்து நகர்ந்தான் ஆதித்யா .

உணவு மேஜையில் அனைவரும் கூடியிருக்க … மதி வந்து சில நிமிடங்கள் கழித்து வந்த ஆதித்யா அனைவரிடமும் காலை வணக்கம் கூறிவிட்டு  தன் இருக்கையில்  அமர்ந்து கொண்டவன்  ஒருவித  குற்ற உணர்வில்  மதியை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை  .மதியும்  ஒருவித படபடப்பிலே இருந்தவள் சில நிமிடங்கள் கழித்து தான் ஏதோ யோசனை வந்தவளாக சுற்றும்முற்றும் தன் பார்வையை ஓட்டினாள் .

இன்று அவள்  வீராவை பார்க்கவே இல்லை ‘ எங்கே அவன் ஏன் சாப்பிட வரவில்லை ? என எண்ணியவள் ஆதித்யாவிடம் கேட்கலாமா   என்று  எண்ணி அவனை பார்க்கவும், 

“ வீரா எங்க?” என கேட்டிருந்தான்  ஆதித்யா .

” வரல  ஆதி … ” என்றான் நாகா.

“கால் பண்ணி நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன்னு சொல்லு ” வாயில் வைக்க இருந்த உணவை மீண்டும் தட்டில் வைத்து விட்டு வாசலையே எதிர் பார்த்திருந்தான் ஆதித்யா .

நாகா சொல்லி சில நிமிடங்களில் அங்கு வந்த வீராவை பார்த்து ஆதித்யா ,

” வா ….டைம் ஆகிடுச்சு பிரேக் ஃபாஸ்ட்  முடிச்சிட்டு போய்  வேலை பாரு ” என்றான்  ஆதித்யா .

” நான் இங்க எப்படி ?” வீரா தயங்கி நிற்க ,

” இது எனக்கும்,  என் மனசுக்கு நெருக்கமானவங்களுக்குமான  இடம் … இங்க உக்காருவதற்கு  நீ ஜித்தேரிலே  என்னவா இருக்க என்பது முக்கியம் இல்லை . வா ஏற்கனவே எல்லாரும்  உன்னால சாப்பிடாமா காத்துகிட்டு  இருக்காங்க ” என்ற ஆதித்யா  தன் உணவில் கவனமாக .. மதுவை பார்த்து புன்னகைத்தபடி  வீரா ,நாகாவின் அருகில் சென்று அமர்ந்தான் .

அதற்கு மேல் யாரும் பேச வில்லை காலை உணவு அமைதியாகவே கழிந்து  கொண்டிருக்க ,

அப்பொழுது ,” பப்பா … ” – என சத்தமிட்டபடி தத்தைக்கா புத்தைக்கா என்று  ஓடிவந்த  அந்த சிறுமியை  தொடர்ந்து . ஒரு இளம் பெண்ணும்  வந்தாள் .

” ஹே … மித்ரா செல்லம் … மை ஸ்வீட் ஹனி   “குழந்தையை கண்டதும் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு அவளை தூக்கி சுற்றி முத்தமிட்டு கொண்டாடிய ஆதித்யா  … முகத்தில் தான் அத்தனை புன்னகை .

முதல் முறையாக அவன் மனம் நிறைந்து சிரிப்பதை   பார்க்கிறாள் … எப்பொழுதாவது  அவன் முகத்தில்  தோன்றும் இது போன்ற அறியவகையான  புன்னகை   கூட அவனை மேலும் அழகாக  காட்டியது .

” ஹே குட் மார்னிங்   டியர் ” என   ஒரு கையில் குழந்தையை ஏந்திக்கொண்டு மறுகையால்  அவளை கட்டி அணைத்து விலகினான்  ஆதித்யா .

” ஹாய் அண்ணி … இப்போ தான் டைம் கிடைச்சிதா ? ”  என்று நாகாவும் வீராவும் அந்த பெண்ணை மகிழ்ச்சியுடன்  வரவேற்றார்கள் .

” ஹாய் ப்ரோஸ் கொஞ்சம் பிசி அதான் வர முடியலை  … பட்  ஒரு மூணு நாளைக்கு இங்க தான் தங்க போறேன் ” – அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டு ” ஹாய் தாரா  ஹாஸ்ப்பிட்டல் எப்படி போகுது ? ” தாராவிடம் விசாரித்துவிட்டு …  ஆதித்யாவின் அருகில் வந்து அமர்ந்தாள் அந்த அப்பெண்மணி .

-தொடரும்