Naan Avan Illai 12

Copy of Thriller book cover hand in the smoke - Made with PosterMyWall (5)-571416da

நான் அவன் இல்லை 12

ஆதித்யா மதியின் அலறலை கேட்டு  தன் அறைக்கு வந்திருந்த பொழுது … மதி சுவற்றுடன் சாய்ந்து நிற்க …ஆறடி உயரத்தில் ஒருவன்   அவளது  கழுத்தை  தனது ஒற்றை   இரும்பு  கரங்களுக்குள்   இறுக்கமாக அடக்கி நெரித்தபடி  ஆவேசத்துடன் நின்றிருந்தான்    . அவளோ   அவனிடம் இருந்து விடுபட முடியாமல்    வலியில்  துடித்த படி  மூச்சு காற்றுக்காக போராடிக்கொண்டிருந்தாள் ..

புயலுடன்   ஆம்பல்  மலர்  சிக்குண்டால்  என்ன  ஆகும்  .. அவள் சாக வில்லை அவ்வளவு தான் … ஆனால் கடுமையான  வலியில்  துடித்தாள்  …  விழிகளில்  நீர்  சிந்தின   .

” துருவ்  ” ஆதித்யாவின் கர்ஜனையில் வாசலை பார்த்த துரியன்  மதியின் கழுத்தில் இருந்த தன் கரத்தின் இறுக்கத்தை  மேலும் அதிகரிக்க …. ஆதித்யாவின் விழிகள் ரத்தமாய் சிவந்தது .

” துரியன்  டிராப் யுவர் ஹன்ட்ஸ்  ரைட் நவ் … இந்த  நொடியே  கையை கீழ   போடு   ” ஆவேசத்தில் ஆதித்யாவின்  முகம் சற்றென்று சூடேறி சிவந்தது .

ஆதித்யாவை பார்த்து  இறுக்கமாக முறைத்த துரியன் … மதுவின் கழுத்தில் இருந்த தன் கரத்தை மெதுவாக தளர்த்தினான் . துரியனின் பிடி தளர்ந்ததும்…. இதற்காக தான் காத்திருந்தவள் போல அவனிடம் இருந்து தப்பித்து …முகமெல்லாம் வெளிறி போக  தன் கழுத்தை பிடித்து கொண்டு  மது ஓடி வந்து ஆதித்யாவின் பின்னால் ஒளிந்துகொண்டாள் .

‘உஸ் புஸ்’ என்று  மேலும் கீழும் மூச்சு வாங்க …. அவளது இதயம் வேகமாக தடதடத்தது . தேகமோ  வியர்வையில்  குளித்துவிட …. பதற்றம் கொஞ்சமும் குறையாமல் ஆதித்யாவை பின்னால் இருந்து அணைத்தவள்   அவன் முதுகில் முகம் புதைத்தபடி  நின்றாள் .

” ஏய் வெளிய வா டி ” என  தீடிரென்று வந்த துரியனின் கடுமையான குரலில்  அதிர்ந்தவள் …. செய்வதறியாது திகைத்து நின்றாள் .

” ஏய் உன்னை தான் … பயப்படுற மாதிரி நடிக்காத  வெளிய வா ” அதே கர்ஜனையில் மீண்டும் அழைத்தான் துரியன்  … பயத்தில் ஆதித்யாவின்  கரங்களை இன்னும் இறுக்கமாக பிடித்தாள்   .

அவளது கீழ்ப்படியாமை  துரியனின் ஆவேசத்தை தூண்டியது …. அவள் பயத்தில் அவனது கட்டளைக்கு இணங்காததை  துரியன் திமிர் என்று நினைத்தான் .  சில நொடிகளுக்கு பிறகு மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்தாள் …. ஆறடி உயரத்தில் கட்டுக்கோப்பான உடற்கட்டுடன் கண்களில் ஒருவித பழிவெறியுடன் …. பெயருக்கேற்றார் போல்  கலியுக துரியோதனன் போலவே ,  துஷ்டனாக காட்சியளித்தான் . துரியன் ஜித்தேரி

” உன்னை … ” என துரியன் தன் இடுப்பில் இருந்த பிஸ்டலை  தன் கைக்கு இடம் மாற்றவும் , துரியனை முறைத்த ஆதித்யா , மதுவை பார்த்து வெளியே வருமாறு  செய்கை செய்ய …. பயத்துடன் ஆதித்யாவை பார்த்தவள் தன் தலையை இடவலமாக  ஆட்டி வர மாட்டேன்  என்பதை  தன் கண்களாலே கூறினாள் .

ஆதித்யா மீண்டும் மதியை வருமாறு கூற … வேறு வழியின்றி துரியன் முன்பு வந்தவள் அவன் முன்பு தன்னை ஒரு துரும்பாய் உணர்ந்தாள் .

” வீ..ரா  ” – அவனது திடமான குரல் அவளது வயிற்றில்  புளியை கரைத்தது .. துரியனின் அழைப்பிற்காகவே  காத்திருந்தவன் போல் உடனே கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் அந்த பெயருக்கு சொந்தகாரன் .

வந்தவனின் தோற்றமும் … தோரணையும் அவனை கொடூரனாக சித்தரிக்க … பீதியில் மதியின்  கரங்கள் நடுங்க தொடங்கியது .

” உனக்கு ஆதி ரூம்ல என்ன  டி வேலை ?? ” என்று அதட்டிய துரியன் ,

” வீரா இவளை பேஸ்மெண்ட் ரூமில் கொண்டு  போடு ” தன் கட்டளையை நிறைவேற்ற காத்திருக்கும்  வீராவை பார்த்து  அதிகாரத்துடன்  கூறினான் . 

” ஏன் ? நான் ஏன் அங்க போனும்  ?? நான்  என்ன பண்ணினேன் ??” கலவரமான மதி ஆதியின் கரங்களை பாதுகாப்பாக பிடித்தாள் .

” வா டி ” என வீரா மதியின்  கரங்களை பிடிக்க  நெருங்கும் பொழுது  ஏதோ ஒரு உறுத்துதலில் நிமிர்ந்து பார்த்தான் …. ஆதித்யா தான் அவனை பார்த்துக்கொண்டிருந்தான் .ஜிவு ஜிவு வென்று சிவந்திருந்த அவனது முகம் வீராவை அச்சுறுத்தியது .

மதியை பிடிப்பதற்காக  நீண்டிருந்த வீராவின்  கரங்கள்  லேசாக  நடுங்கியது . கண்களில் பறக்கும் தீப்பொறியை பற்றி எங்கோ  படித்திருக்கிறான் . ஆனால் நேரில் இப்போ தான் பார்த்தான் .ஆதித்யாவின் பார்வையில் தான் அப்படி ஒரு உக்கிரம் . ஏன் என்று புறியாமல் விழித்தான் . ‘அப்படி என்ன தவறு செய்து விட்டேன்  … துரியன் பாய் சொன்னதை தானே செய்யிறேன்… ஆதி ஏன் முறைக்கிறான் ‘  என மனதிற்குள்  எண்ணிய வீராவுக்கு ,  ஆதித்யாவின் கோபத்தின் காரணம் புறியவே நொடிகள் எடுத்தது ..

அவன் மூளை காரணத்தை புரியவைத்து அவனை எச்சரித்த  மறுநொடி … வீராவின்  கால்கள் இரெண்டும்  பின்னோக்கி செல்ல … அவனது கரங்கள் தானாய் தரையை நோக்கியது .

” இழுத்துட்டு போ  ” துரியன்  திடமான குரலில்   உறுமினான் ‘சொன்னதை செய்’என்று சொல்லியது  துரியனின்  குரல் .

‘செஞ்சி  தான் பாரேன் … உன் உயிர் உன்னிடம் இருக்காது ‘ சொல்லாமல் மிரட்டியது  ஆதித்யாவின்  விழிகள்  .

இரெண்டு நண்பர்களுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டு முழித்தான்  வீரா .

” ஆதி ஏன் வீராவை மிரட்டுற  ” துரியனின் பார்வை ஆதித்யாவை தொட்டு  மதியிடம் மீண்டது .

” என் பின்னாடி வாங்க ” ஆதித்யாவை பயத்துடன் பார்த்தபடியே வீரா மதுவை அழைக்க …

” நோ … முடியாது எங்கையும் போக மாட்டேன் … ஆதி நோ … ப்ளீஸ் ” கொஞ்சும் விழிகள் ஆதித்யாவிடம்  கெஞ்சியது .

சில நொடிகள் பார்த்து கொண்டிருந்த ஆதித்யா  … அவளிடம் எதுவும் பேசாமல்  வீராவை நோக்கினான் .

தன் தலைவனின் கட்டளையை அவனது பார்வையில் இருந்தே உணர்ந்தவன் மதியை தன்னுடன் வருமாறு அழைக்க …  மதியோ , ஆதித்யா  தன்னை காப்பாற்றுவான் என்ற நம்பியுடன் அவனை பார்த்தாள் .

அவனோ தன் கரத்தை இறுக்கமாக பிடித்திருந்த மதியின் கரத்தை பிரித்துவிட்டு  அவளது முகத்தை கூட பார்க்காது பாறை போல இறுகி நின்றிருந்தான் .முகத்தில் தெரிந்த இயலாமை சில நொடிகள் மட்டும் தோன்றி பின்பு மந்திரம் போல மறைந்தது .

ஆதித்யாவை  சந்தித்ததில் இருந்து இந்த நிமிடம் வரை மது ஆதித்யா கூறியதற்கெல்லாம் மந்திரம் போட்டது போல தலையசைத்தாள்  என்றால் அதற்கு ஒரே காரணம் , அவளுக்கு  கொடுத்த நம்பிக்கையை   அவன்  எந்த ஒரு சூழ்நிலையிலும் தவறாமல் காப்பாற்றியது தான் … மதுவின் மனதை   ஆதித்யா பக்கம் சாய வைத்தது .

ஆனால் இந்த நிமிடம் ஆதித்யாவின் செய்கையில் அவன் மீது உள்ள நம்பிக்கையை  சற்று இழந்தவள் … வேறு வழியில்லாமல் கண்ணீருடன்   ஆதித்யாவை பார்த்தபடி அந்த அறையில் இருந்து வெளியேறினாள்.

****************************************************

ஆதித்யாவின் அலுவலக அறையில்  எந்திரம் போல உணர்வுகளற்ற  முகத்துடன்   அமர்ந்திருந்த  துரியனுக்கு  எதிரில்  விக்டர் தேசாய் , வீரா மற்றும்     நாகேந்திர பிரதாப்(நாகா)  அமர்ந்திருக்க . ஆதித்யாவோ இறுக்கமான முகத்துடன்  ஜன்னல் கம்பிகளை அழுத்தமாக பிடித்து கொண்டு நின்றிருந்தான் .

இவர்கள்  நால்வரும் தான் துரியனின்  நம்பிக்கைக்கு  பாத்திரமானவர்கள் …. அதில் ஆதித்யா அனைவரை காட்டிலும் துரியனுக்கு மிகவும் நெருக்கமானவன்.

நிழல் உலகில் ஆத்தியா  மற்றும் துரியனின்  நட்பை பற்றி தெரியாதவர்களே கிடையாது … தன் சொந்த நிழலை கூட நம்ப முடியாத இவர்களின் உலகில் , துரியன் மற்றும் ஆதித்யாவின்  உறவு மற்றும் விவரிக்க முடியாத ஒன்றாக இருந்தது . 

துரியன் என்னும் நிழல்  தேடும்   நிஜமாய் ஆதித்யாவும் …. ஆதித்யா என்னும் நிழல் தேடும்   நிஜமாய் துரியனும்  என இருவரும் அவ்வளவு  இணக்கமாக  இருந்தனர்  .

ஆதித்யாவுக்காக  துரியன்…  துரியனுக்காக  ஆதித்யா என நகமும் சதையுமாக  ஒற்றுமையாய்   வாழ்ந்த அவர்களின் நட்பில் ….. நெற்கதிருக்கு இடையே புதிதாய்  வளரும் புல்லுருவி போல …. மதுமதி என்னும் புதிய மலரின் வருகையால் ஆதித்யா மற்றும் துரியனுக்கு  இடையே பூசல் உண்டாக … அவர்களின் உறுதியான உறவு இப்பொழுது பிளவுண்டு இரு கூறுகளாய் பிரிந்து இருவரும்  எதிர்  எதிர் திசையில் நிற்கின்றனர் .

ஜித்தேரியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் இவர்களை போன்றவர்களுக்குள்  பிளவு ஏற்பட்டால் அது ‘ ஊர்  ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு சந்தோசம் ‘ என்னும் நிலை தான் …. ஜித்தேரியின் எதிரிகளுக்கு   கொண்டாட்டமாகிவிடும் …. ஏன் ஜித்தேரி என்னும் சாம்ராஜ்யமே  ஆட்டம் கண்டாலும் ஆச்சரியப்பட  ஏதும் இல்லை . இதை நன்றாக  உணர்ந்திருந்த  விக்டர் தீவிரமாக சிந்தித்து கொண்டிருக்க … நாகாவும் , வீராவும்….   துரியன் மற்றும் ஆதித்யாவின் முகத்தையே வெறித்தபடி அமர்ந்திருந்தனர் .  

ஒவ்வொருவரின்  மனதிற்குள்ளும்  ஒவ்வொரு விதமான உணர்ச்சி குவியல்கள் …. ஆக யாருடைய மனத்திலும் அமைதி இல்லாமல் இருக்க …அந்த ஹாலில் மட்டும் அப்படியொரு அமைதி … புயலுக்கு முன் வரும் அமைதி போன்று அந்த அறையில் நிலவிய  அமைதி எந்த புயலுக்கான அறிகுறியோ ?அது அவர்களுக்கே வெளிச்சம் .

” ஆதி “- துரியனே நிலவிய அமைதியை  முதலில் உடைத்தான். ஆனால் ஆதித்யாவிடம் இருந்து எந்த பதிலும்  வர வில்லை  .

“நீ என்ன காரியம் பண்ணிருக்க ஆதி … ??நீ இப்படி பண்ணுவன்னு நான் நினைக்கவே இல்லை , இவ யாருன்னு தெரிஞ்சும் உன்னால எப்படி இவளை காப்பற்ற முடியுது …அதுவும் உன் உயிரை பணயம் வச்சு … உனக்கு ஏதாவது ஆகிருந்தா ….?? என்ன பண்ணிருக்க முடியும் … ??அப்படி என்ன உனக்கு அவ மேல …நீ அவ உயிரை காப்பாற்றிருக்க  என்பதற்காக  அவ அப்பன் ஒன்னும் உனக்கு பாராட்டு விழா நடத்த மாட்டான்   … சமையம் கிடைச்சா உன்னை போட்டுட்டு போயிட்டே  இருப்பான் ….. ” துரியனின் ஆவேசமான குரல் அறையெங்கும் எதிரொலித்தது .

அனைவரும்  ஆதித்யாவின் பதிலுக்காக காத்திருந்தார்கள் . ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவிற்கு  அறை அமைதியாக  இருந்தது . நொடிகள் யுகமாய்  கடந்து கொண்டிருந்தது .

” ஷீ இஸ் இன்னோசென்ட் ” –   காரிருளில்  பாய்ந்த மின்னலை போல நிலவிருந்த  அமைதியை கிழித்தெறிந்தது  ஆதித்யாவின் குரல் .. விக்டரின் நம்பிக்கை  நிலைகுலைந்து  போனது …. அவருக்கு ஆதித்யா மீது பயங்கர கோபம் வந்தது .

” அவ இன்னோசெண்டா …?? ஷீ கான்ட்  பீ இன்னோசென்ட்…  ” அடக்கப்பட்ட  கோபத்துடன்  கத்தினான் துரியன் .

” ஏன் ?? ” என்று கேட்டான் ஆதித்யா .

”  நாகத்தோட  குட்டி , நாகமா தான் இருக்கும் …. என்னதான் நீ அதுக்கு பாலை கொடுத்தாலும்  … அதுக்கு விஷயத்தை மட்டும் தான் கக்க தெரியும்   ” – கோணல் புன்னகையுடன் கூறினார்   விக்டர் . அந்த புன்னகையில் தெரிந்த  எள்ளலை  கண்டுகொண்ட ஆதித்யா கோபத்துடன்  அவரை பார்த்தான் .

”  நம்மளோட குறிக்கோள் அவ இல்லை “

” அதுக்காக  அவளை விட முடியாது ஆதி ” என்றான் வீரா .

” விட முடியாதுன்னா என்ன பண்ண போற  … அவளை கொன்னு  உன் வீரத்தை காட்ட போறியா ” நக்கலாக கேட்டான் .

” ஆதி … நீ இப்படி அவளுக்கு சப்போர்ட் பண்ணி  எங்க கூட ஆர்க்யூ  பண்ண பண்ண  … எனக்கு வெறி ஏறுது … அவளை கொடூரமா கொலை பண்ணனும்ன்னு   தோணுது  ” கட்டுப்பாடு இழந்து கத்தினான் துரியன் .

” அவளை கொலை பண்றதுனால உனக்கு என்ன கிடைக்கும் ” கோபத்தை மறைத்தபடி  கேட்டான் ஆதித்யா .

” நிம்மதி …. ! நிம்மதி கிடைக்கும்   ” தீர்க்கமாக  கூறினான் துரியன் .

” ஆதித்யா  நீ யாரு ?? ஜித்தேரிக்கு ஏன் வந்த ?? உனக்கு இங்க இருக்கிற பொறுப்பு என்ன என்பதை மறந்திராத ?? “விக்டரின் எச்சரிக்கும் குரல் ஆதித்யாவை வெறியனாக்கியது .

” எனக்கு தெரியும் … என் வேலை என்னன்னு நீங்க எனக்கு சொல்ல வேண்டாம் ” மிதமான கோபத்தில் ஆரம்பித்தவன்  … ஆத்திரத்தை  அடக்க முடியாமல் அவரிடம் கத்தியே விட்டான் .

” உன் நண்பன்  அவ பிடியில் சிக்கிட்டான்   … இனிமேல் கஷ்டம் துரியன்  ” ஆதித்யாவை தீ பார்வை பார்த்த  அந்த கிழட்டு சிங்கம்  (விக்டர் ) அங்கிருந்து வேகமாக கிளம்பினார் .

” அங்கிள் கிட்ட ஏன் இப்படி நடந்து கிட்ட …. அவர் அப்படி என்ன தப்பா  சொல்லிட்டாரு . அவர் நமக்கு குரு அவர்கிட்ட நீ இப்படி நடந்திருக்க  கூடாது … உன்னை இதுவரை இப்படி நான் பார்த்ததே  இல்லை ஆதி … அவ ஒரு சூனியக்காரி … வந்த அன்னைக்கே உன்னை எங்க எல்லாருக்கும் எதிரா திருப்பிட்டா . “

” அவரு தான் என்னை நம்பலை  … நீயும் என்னை நம்பாம பேசுறது தான் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு … ஜித்தேரிய அடையனும் என்பது என் லட்சியம் கிடையாது … என் நண்பன் நீ  கேட்ட  என்கிற  ஒரே காரணத்துக்காக  தான் நான் இங்க வந்தேன் .. உன் சந்தோசம் மட்டும் தான் எனக்கு முக்கியம் … எப்போ உனக்கு என் மேல உள்ள நம்பிக்கை போச்சோ இனிமே நான் பேசுறதுல  அர்த்தமே  கிடையாது . போ அவளை என்ன வேணும்னாலும் பண்ணிக்கோ …இதோ  என் கன்(துப்பாக்கி )  ” என தன் துப்பாக்கியை  தூக்கி மேஜை மீது வைத்த ஆதித்யா, 

” போ  துருவ் … என் குறுக்கீடு  இருக்காது   … உன் ஆசை தீர அவளை கொலை பண்ணு … கில் ஹெர் .. ஆனா ஒரு விஷயம் துரியன் எவன் ஒருவன் தன்னுடைய கோபத்திற்கு   கடிவாளம்  போடலையோ  அவனை , அவனுடைய  எதிரி  இல்லை  ,  அவனுடைய     ஆத்திரமே   ஒரு நாள்   மண்ணில்   சாய்த்துவிடும்   … இதை என்னைக்கும்   மறந்திராத ” என்றவன்   தன் இருக்கையில் சென்று அமர ,  துரியனின்  விழிகள் மேஜை மேல் இருந்த துப்பாக்கியை சில நொடிகள்  பார்த்து விட்டு ஆதித்யாவிடம்  மீண்டது .

***************************************************

மதுவை உள்ளே விட்டு  வெளிப்புறமாக கதவிற்கு தாளிட்ட வீரா   அங்கிருந்து  சென்று விட மதுமதிக்கு  தான் ஏதோ பாதாளத்தில் சிக்கிக்கொண்டது போல பயத்தில் மூச்சு முட்டியது . “எப்படி இங்க தப்பிக்க  போறேன் ” வாய்விட்டு கதறியவள் … பயத்தில் முழங்காலில் முகம் புதைத்து கால்களை இரண்டையும் கட்டிக்கொண்டு  குலுங்கி அழுதாள் .

அந்த இடத்தில் இருந்த ரத்தவாடை அவளுக்கு வயிற்றை பிரட்டி கொண்டு வந்தது மேலாடையால்  மூக்கை மூடிகொண்டவளால்  எவ்வளவு முயன்றும்  ஆதித்யாவின் புறக்கணிப்பை நம்பவே  முடியவில்லை .. 

” எவ்வளவு நம்பிக்கையா  பேசினான் ” மனம் வலியில் துடித்தது .  ஒரு மனம்  அவனை நம்ப சொல்ல இன்னொரு மனமோ அவனை நம்பாதே என எச்சரித்தது . போதா குறைக்கு  துரியனின் கொலை மிரட்டலால்  அச்சத்தில் உறைந்திருந்த மதுமதியால்   சரியாக யோசிக்க முடியவில்லை  … குழப்பத்தில் சிக்கி கொண்டு தவித்த  மதி பின்விளைவுகளை பற்றி சிந்திக்காமல் ஒரு முடிவு எடுத்தாள்.

-தொடரும்