NAAN AVAN ILLAI 15

download (2)-48aa5041

NAAN AVAN ILLAI 15

நான் அவன் இல்லை 15

நாகாவும் வீராவும்   துரியனின்    திடீர் மனமாற்றத்தால்  ஏற்பட்ட  அதிர்ச்சியில் உறைந்து  நின்றனர் .

‘இதோ சில நிமிடங்கள் தான் … கொல்ல போகிறான் …. ரத்த வெள்ளத்தில் சாகப்போகிறோம்… இதோ …. இதோ யு ஆர் கோயிங்  டு டை… நீ சாகப்போற  ‘என பீதியில்  கண்களை மூடி,  விடாமல் ஏதேதோ முணுமுணுத்தபடி  நடுங்கிக்கொண்டிருந்த  மதி

” மதி  …  ” என்னும் ஆதித்யாவின் உரத்த குரலில் விழி திறந்தவள் …  ஆதித்யாவை பார்த்து  ” டோன்ட் கில்  மீ ப்ளீஸ் … டோன்ட்  …. ப்ளீஸ்    ” வார்த்தைகள் குழற  அவனை பார்த்து  கை எடுத்து கும்பிட்டு கெஞ்சினாள் .

” இட்ஸ் ஓகே … நீ நல்லா இருக்க ” அவன் நிதானமாகத்தான்  கூறினான் .

” டோன்ட் கில்  மீ ” ஆனால் அவள் பயத்தில் அலறினாள் .

” ஓகே மா ” என மதியை  ஆறுதல் படுத்த  நெருங்கினான் .

” நோ… டோன்ட் ….கில்….   மீ ” பீதியில் கை கூப்பி கும்பிட்டபடி   அவனை விட்டு இரண்டடி பின்னால் சென்றாள் .

” மதி ரிலாக்ஸ் இட்ஸ் மீ ”  அவளது பயத்தை களைந்தெரியும்   நோக்கில் ஆதித்யா மீண்டும் மதியை நெருங்கினான்.

அவ்வளவு தான் ” நோ … ப்ளீஸ் …. டோன்ட் கில்  மீ …..” மூச்சு திணற திணற பைத்தியம் போல சொன்னதையே சொல்லி கத்தியவளின் தளர்ந்த உடல்   ஒரு கட்டத்தில்   … பார்வை மங்கி .. தலை தரை  நோக்கிய மறுநொடி ஆதித்யா சக்கரவார்த்தியின்  நெஞ்சம்  மதுமதியின் மொத்த எடையையும்  தாங்கிருந்தது…. சட்டென்று அவளது மணிக்கட்டை பிடித்து பார்த்தான் …

‘ துடிப்பு இருக்கிறது ‘ மெல்ல முணுமுணுத்தவன் , தன் கண்களை இறுக்கமாக மூடி, தலையை அழுந்த கோதி,  இதுவரை  பயத்தில்  தான் இழுத்து பிடித்திருந்த மூச்சை  வேகமாக   வெளியிட்டான்  . கொஞ்சம் நொடிக்கு அவன் உயிர் அவனிடமே இல்லை … வேகமாக துடித்த தன் இதயத்தை தன் கரம் வைத்து  அடக்கினான் …  உடலின் இறுக்கம்  சற்று குறைந்தது.   .

மதியின்  கண்ணில் தெரிந்த பயத்தில் அவனது கர்வம்  அடிவாங்கியது .  அவளது  கண்ணீர் இவனின்   பாறை  நெஞ்சில் நீர் கசிய செய்தது . ‘ ச்ச ‘  கோபத்தில்  தன் தடித்த உதடுகளை அழுத்தமாக கடித்தான் …முகம் விகாரமாய்  மாறியது .

வீராவும் , நாகாவும் அவனை வித்யாசமாக  பார்த்தார்கள் .. அவர்களின்  சந்தேக  பார்வை ஆதித்யாவை   கேள்வி கேட்டது .

அனைவரின் பார்வையையும்  தவிர்த்தவன் … மதுவை தன் கரங்களில் ஏந்தி கொண்டு வேகமாக நடந்தான் .

***********************************************************************

நன்றாக   இருண்டிருந்த  இரவு வேளை  … ! அனைவரும்  உறக்கத்திற்கு  ஆயத்தமாகிருக்க … துரியன் மட்டும்  அந்த உடற்பயிற்சி கூடத்தில் தன்னை மறந்து கண்மூடித்தனமாக பயிற்சி செய்துகொண்டிருந்தான் .  இரவு உணவிற்கு துரியன் சாப்பிட வராததால்  அவனை தேடி வந்த ஆதித்யா  ஜிம் ரூமில் வெளிச்சம் வருவதை பார்த்து உள்ளே சென்றான். அங்கே துரியன்   த்ரெட் மில்லில்  அசுர வேகத்தில் ஓடிக்கொண்டிருந்ததை பார்த்து வேகமாக  அவன் அருகில் வந்த ஆதித்யா ,

” துருவ் ! ஸ்டாப் இட் ப்ரோ … ஹே ஜஸ்ட் ஸ்டாப் இட் மேன்” வலுக்கட்டாயமாக  கூறிய பிறகு வேகத்தை குறைத்து தன் நிதானத்திற்கு வந்த துரியன் ஆதித்யாவிடம்  எதுவும் பேசாமல்  மீண்டும் த்ரெட்  மில்லில் ஓட … ஆதித்யாவுக்கு கோபம் தான் வந்தது .

” இன்னைக்கு இது போதும்  வந்து சாப்பிடு ” கோபத்தை மறைத்து கொண்டு துரியனை அழைத்தான்  .

” ………… “

” துருவ் … என்ன சொல்லணுமோ  நேரடியா என்கிட்ட சொல்லிரு …. இந்த மாதிரி உன்னை நீயே வருத்திக்காத  ”  – என கோபத்துடன் கேட்டான் ஆதித்யா .

” ஆதித்யா  நான் உன் மேல நிறைய அன்பு வச்சிருக்கேன் … ஆனா நான் முட்டாள் இல்லை …என் மூளை இன்னும் வேலை செய்யுது …” என்றான் தன் கன்னங்கள் அதிர .

” துருவ் ” என ஆரம்பித்த ஆதித்யாவை தன் கரம் உயர்த்தி தடுத்த துரியன்  ,

” நான் இன்னும் பேசி முடிக்கல ” என்று  மேலும் தொடர்ந்தான்

“ஆதி காதலிக்கிறது  தப்பில்லை … ஆனா யாரை காதலிக்கிறோம்  என்பது ரொம்ப முக்கியம் …உன்னால  யாரை கண்ட்ரோல் பண்ண முடியுமோ அவங்களை தான் நீ காதலிக்கனும் … எப்போ உன் காதல் உன்னையே   கண்ட்ரோல் பண்ணுதோ … யோசிக்காம  அதை நீ  அழிச்சிரணும் … ” த்ரெட் மில்லில் ஓடியபடி அழுத்தமாக  கூறினான் .

” நான் யாரையும்  காதலிக்கல  …”  உடனே  மறுத்தான்  ஆதித்யா .

” அப்போ ஏன் அவளை என்கிட்ட இருந்து காப்பாத்துன ? ” ஆவேசத்தில்  கத்தினான் துரியன்

” நான் எங்க … “சொல்லி முடிக்கும் முன்  ஆதித்யாவின்  கரங்களில்  ஆதித்யா மதுவை சுட சொல்லி  தன்னிடம் கொடுத்த ஆதியின்  துப்பாக்கியை   அவனிடமே கொடுத்த துரியன்,

” தோட்டா இல்லைன்னு எனக்கு தெரியும் ஆதி ” அமைதியாக கூறினான் . 

” —————————– ” பதில் பேச முடியாமல் நின்றான் ஆதி .

” துப்பாக்கில தோட்டா இருக்கா இல்லையான்னு கூட தெரிஞ்சிக்க  முடியாத அளவுக்கு ,  நான் ஒன்னும் முட்டாள் இல்லை ஆதி…” துரியனின் பார்வை ஆதியின் முகத்தை விட்டு அகலவில்லை .

” ஆமா நான் காப்பாத்தினேன் தான் …  எந்த தப்பும் பண்ணாதவ  ஏன் சாகணும்ன்னு  நினைச்சேன் ” நிமிர்ந்து துரியனின் கண்களை நேருக்கு நேராக பார்த்து கூறினான் .

” தப்பு பண்ணலையா …. அவ தயாளனுக்கு பொண்ணா  பிறந்ததே   பெரிய தப்பு தான் “

” துரியா “

” அவ மேல உனக்கு விருப்பம் இல்லைன்னா … அவளை ஏன் இங்க கூட்டிட்டு வந்த …??  அப்படியே செத்து போட்டும்ன்னு விட்ருக்கலாமே?” மீண்டும் விட்ட இடத்திற்கே  புதிய கேள்வியுடன் வந்தான்  துரியன் .

” துரியா  உனக்கு எப்படி புரிய வைக்கிறது ” கோபத்தில் ஆதித்யா தன் தலையை அழுந்த கோதினான் .

” சொல்லு புரிஞ்சிக்கிறேன் ” கைகளை கட்டிக்கொண்டு  துரியன் ஆதித்யாவை  நோக்கினான் .

“அவளுக்கு மட்டும் தான் அவ அப்பா எங்க இருக்கான்னு தெரியும் “

” அதான் சொல்ல மாட்டிக்கிறாளே “

” சொல்ல வைக்கணும் “

” அப்போ வா    .. இப்போவே  போய் நம்ம ஸ்டைல்ல  விசாரிப்போம் “

” விசாரிச்சு …!   கம் ஆன் மேன் … போன வாரம் இதே  ரூம்ல  ராகேஷை  நீ  தான விசாரிச்ச   …. ஒரு வார்த்தை சொன்னானா  … ?? அந்த ராகேஷ் யாரு  ??தயாளன் கிட்ட கூலிக்கு வேலை பார்க்கிறவன்  . அவனே தயாளனை காட்டிக்கொடுக்காம செத்து  போய்ட்டான்  … மதுமதி தயாளனோட  சொந்த பொண்ணு,   அவ அவளுடைய  அப்பாவை  காட்டிக்கொடுப்பாளா ?? சத்தியமா  மாட்டாள்….  உயிரை கூட விடுவா  ஒரு வார்த்தை சொல்ல  மாட்டா … ஏன் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி  நீ அவளை எவ்வளவு  பயங்கரமா  டார்ச்சர் பண்ணின ,  ஏதாவது சொன்னாளா …??

மதுமதி கிட்ட  இப்படியெல்லாம் பண்ணி உண்மைய வாங்க முடியாது . அவ கிட்ட அன்பா பேசி …. அவளுடைய  நம்பிக்கைய சம்பாதிச்சு தான்,  உண்மைய தெரிஞ்சிக்க முடியும் … அதுவரைக்கும் அவ இங்க தான் இருக்கனும்   “

” அவளை பார்த்தாலே  எனக்கு கொலை வெறி வருது “

” ஒரு மனுஷனுடைய  மிகப்பெரிய  எதிரியே அவனுடைய  கோபம்  தான் … !அதுவும் நாம பார்க்கிற  வேலைக்கு இருக்க கூடாத ஒன்னு கோபம் ! அதீத கோபம் ஒரு மனுஷனை  முட்டாள் ஆக்கிடும் ! கோபத்தை கண்ட்ரோல்  பண்ண கத்துக்கோ … இல்லைனா அது ஒருநாள் உன்னையே அழிச்சிரும் .

துரியா ! துரியன் ஜித்தேரி வெறும்  பெயர் கிடையாது … இட்ஸ் யுவர்  ஐடென்டிட்டி  (அது உன் அடையாளம் )… நீ ஜித்தேரிக்கே ராஜா ! நீ செய்யிற  ஒரு தப்பு கூட எல்லாரையும் பாதிக்கும் .   நமக்குன்னு (ஜித்தேரி ) சில  நெறிமுறைகள் … கட்டுப்பாடுகள்  எல்லாம் இருக்கு. அதுல முதல் விதிமுறையே சரியான காரணம் இல்லாம  பொண்ணுங்க கிட்ட மிஸ் பிஹேவ்  பண்ண கூடாது என்பது தான்   … இன்னைக்கு  அவளை இப்படி நாம ட்ரீட் பண்ணினது  நம்ம கொள்கைக்கு எதிரானது .

ஆயிரம் இருந்தாலும் அவ மேல நீ  கை வைச்சிருக்க  கூடாது …. நீ என்பதற்காக மட்டும் தான் நான் அங்க பொறுமையா இருந்தேன்,  வேற யாரும்ன்னா நான் என்ன பண்ணிருப்பேன்னு  உனக்கே தெரியும் . நெறி தவறி நடந்த எந்த ஆட்சியும் நீடிச்சதா  சரித்திரம் இல்லை துரியா ! ஜித்தேரிக்கு தலைவன் ஆகுறது பெருசு இல்லை … கிடைச்ச பொறுப்பை நழுவ விடாம பார்த்துக்கணும் … அதுல தான் எல்லாம் அடங்கி இருக்கு.

நாம   மாஃபியா  தான் ! நிழல் உலகம் ! சொந்த நிழலையே  நம்ப முடியாத  கொடூரமான  வாழ்க்கை  தான் வாழ்ந்துட்டு இருக்கோம். அதுக்காக பிடிக்காதவர்களை எல்லாம் ஷூட் பண்ண முடியாது … நமக்கு டார்கெட்  தயாளன் மட்டும் தான் ! அவன் குடும்பம் கிடையாது …  நெவெர் த்ரட்டன்ஸ்  அ மேன்ஸ் ஃபமிலி ( என்னைக்கும் ஒரு மனுஷனை  அவனுடைய  குடும்பத்தை வச்சு அச்சறுத்தாதே ) அது எப்போ வேணும்னாலும்  நம்மளை காயப்படுத்தும்  .

 என்ன சொன்ன  நான்  அவளை காதலிக்கிறேனா! ஹா” விரக்தியாக  சிரித்த ஆதித்யா…

”  துருவ் முதல் தடவை அவளை பார்க்கும் பொழுது அவ யாருன்னு எனக்கு தெரியாது … கொலையை  பார்த்து மயங்கி  விழுந்துட்டா .. வயசு பொண்ணை அப்படியே விட்டுட்டு வர மனசு இல்லை … அவளுக்கு ஹெல்ப் பண்ணினேன் … சிவகுரு அவளை  என் கேர்ள்  ஃபரண்டுன்னு நினைச்சு அவ மேல காரை ஏத்த பார்த்தான் … அதனால அவளை காப்பாத்தினேன் .

அப்புறம் அவளை கடத்தினான்  வேற வழியில்லாம காப்பாத்த  போனேன் …. அங்க நடந்த ஷூட் அவுட்ல  என்னை காப்பாத்த அவ குறுக்கே விழுந்துட்டா …  அப்படியே விட சொல்றியா அது என்னால முடியாது டா … அது என் கொள்கைக்கு  எதிரானது?? இதுவரைக்கும் நான் செஞ்சது அத்தனையும்  ஒரு மனிதாபிமான  அடிப்படையில் அவளுக்கு நான் பண்ணின உதவி மட்டும் தான்  .

இதுல எங்க நீ காதலை பார்த்தன்னு எனக்கு சுத்தமா புரியல …?? இப்பவும் சொல்றேன் எனக்கு அவ மேல வெறுப்பும் இல்லை!  விருப்பமும் இல்லை ….!சொல்ல போனா  என் மனசு முழுக்க இவளை வச்சி எப்படி தயாளனை புடிக்கலாம்   என்கிற எண்ணம் மட்டும் தான் இருந்துச்சு .. இப்பவும் இருக்குது.

துரியா , நான் கர்ணன் கிடையாது  துரியோதனன்  தப்பே செஞ்சாலும், நண்பன் என்பதற்காக கைகட்டி வேடிக்கை பார்க்கிறதுக்கு … நான் ஆதித்யா ! நீ என் துரியன் !…. துரியன் தப்பு செஞ்சா ஆதி கேட்பான்…. நீ என்   நண்பன் என்பதற்காக  நீ செய்யிற  தப்பெல்லாம் பார்த்துட்டு உன் வாழ்க்கை எப்படி  வேணும்னாலும் போகட்டும்ன்னு என்னால வேடிக்கை பார்க்க முடியாது … ஏன்னா  எனக்கு உன் பெயர் முக்கியம்,  உன்  புகழ் முக்கியம் ,  நீ முக்கியம், உன் நட்பு முக்கியம் , என் துரியன் எனக்கு முக்கியம் . “என தன் தலையை  அழுத்தமாக  கோதி ஆழமான மூச்சை வெளியிட்ட ஆதித்யா  …. தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு ,

“துரியா நம்ம நட்பு நம்பிக்கையில ஆரம்பிச்சது ,  எப்போ உனக்கு என் மேல நம்பிக்கை போச்சோ  … எல்லாம் போச்சு … இனிமே ஜித்தேரியில  எனக்கு வேலை இல்லை நான் கிளம்புறேன் ” என்று ஒரு அடி எடுத்து வைத்த ஆதித்யாவை  அதற்கு மேல் செல்ல விடாமல் துரியனின்  இரும்பு கரங்கள் இறுக்கமாக பிடித்திருந்தது .

” நெவர் … என்னைக்கும்  என்னை விட்டு போறேன்னு மட்டும் சொல்லாத … நான் உன்னை முழுசா நம்புறேன்… என் ஆதியை நான் சந்தேகப்பட்டது  தப்பு தான் ..இனிமே இப்படி நடக்காது எனக்கு தயாளன் கிடைச்சா போதும் ”  என்று  மனதார  மன்னிப்பு கேட்ட துரியனை  அணைத்து கொண்ட ஆதித்யா ” எனக்கும் தான்  ”  என்றான் தன் பற்களை கடித்தபடி .   அப்பொழுது அவனது முகத்தில்  கொடிய அசுரனின் சாயல் தெரிந்தது .

” மன்னிச்சிட்டல ” துரியன் சந்தேகமாக ஆதித்யாவிடம் கேட்டான் .

”  ஓகே மன்னிச்சிட்டேன்  ஆனா .. என்  த்ரெட் மில்லை படுத்தி எடுத்ததுக்கு   உனக்கு தண்டனை கொடுத்தே ஆகணும் ” என்று ஆதித்யா  சிரித்தான் .

” ஏன் வீட்ல பொண்டாட்டியும் ,  புள்ளையும் என்னை தண்டிக்கிறது  பத்தாதா  …  நீ வேற பண்ணனுமா … சந்தோஷமா இருந்தேன் … நான் தான் வேணும்ன்னு  அடம் புடிச்சு  கல்யாணம் பண்ணிக்கிட்டா  … என்னால முடியல “

” வெண்பா …. உன்னை ரொம்ப நேசிக்கிறா “

” அதான் பிரச்சனையே …. அவளுடைய  காதல் என்னை பலவீனப்படுத்துது  … ” என்றவன் தன் அலைபேசியை  ஆதித்யாவிடம்

 காட்டி ,” இதோ  இப்போ தான் அவளை பத்தி பேசினேன் ,  கால் பண்ணிட்டா …சரி டைம் ஆகிடுச்சு நான் கிளம்புறேன் …  அவ வெயிட் பண்ணுவா,  நாளைக்கு பார்க்கலாம் … சின்ன பிஸ்னஸ் டீல் பத்தி பேசணும் ” என்ற துரியன் அங்கிருந்து சென்றான் .

*******************************************************************************************

‘ தப்பு பண்ணலையா …. அவ தயாளனுக்கு பொண்ணா  பொறந்ததே  பெரிய தப்பு தான் ‘ துரியனின் வரிகள் …. காதில் மீண்டும் மீண்டும்  ஒலித்தது .

‘அவ தயாளனுக்கு பொண்ணா பிறந்தது அவ தப்பில்லை தான் … ஆனால் அவ தயாளன் பொண்ணு அதை  இனிமேல் மாற்ற முடியாதே ….இந்த உண்மை தெரிந்தும் … இப்படி ஒரு பலவீனத்துக்கு எப்படி நீ இடம் கொடுக்கலாம்  …. நீ  யார் … ??’ அவனுக்குள் இருக்கும் மிருதன் உறுமினான் . 

‘ நான் அந்த பொண்ணை காதலிக்கல….   இப்பவும் சொல்றேன் எனக்கு அவ மேல வெறுப்பும் இல்லை!  விருப்பமும் இல்லை ….!சொல்ல போனா  என் மனசு முழுக்க இவளை வச்சி எப்படி தயாளனை புடிக்கலாம்   என்கிற எண்ணம் மட்டும் தான் இருந்துச்சு .. இப்பவும் இருக்குது.’

இப்படி கூறி எளிதாக  துரியனை  சமாளித்துவிட்டான்   .

ஆனால் உள்ளே இருந்து கொண்டு அவனை  கேள்வியால் வதைக்கும்   அவனது மனதினை சமாளிப்பது எப்படி ? விடை தெரியாமல் திணறினான்  ஆதித்யா .

தோட்டா இல்லாத துப்பாக்கியை  துரியனிடம்  கொடுத்த தன் அறிவை   எண்ணி ஆத்திரத்தில் பற்களை நறநறத்தான் ….துரியன் யார் ? ஜித்தேரியின் வாரிசு …துப்பாக்கியில்  கரைகண்டவன்  …. அவனிடம்  போய் காலி துப்பாக்கி நீட்டிய    தன் முட்டாள்தனத்தை நினைக்க நினைக்க அவனுக்கே அவன் மீது ஆத்திரமாக வந்தது.

”  அப்படி ஒரு முட்டாள் தனத்தை எப்படி செய்தோம்  ?? … நிஜமாகவே  நம்ம மனசு முழுக்க , இவளை வச்சி எப்படி தயாளனை புடிக்கலாம்   என்கிற எண்ணம் மட்டும் தான் இருக்குதா?? “என தன்னையே கேட்டுக்கொண்டவனுக்கு  பதில் தான் கிடைக்கவில்லை  .

” இல்லை அவ மேல நமக்கு இருப்பது வெறும் மனிதாபிமானம்  மட்டும் தான் … பலவீனம் எல்லாம் இல்லை ” தனக்கு  தானே கூறி கொண்டான் .

அவன் ஆயிரம் சொன்னாலும் … ஒன்று மற்றும்  நன்றாக புரிந்துவிட்டது . ‘மதிக்கு  ஒன்று என்றால் அவனால்    தாங்க முடியாது  … அவளுக்காக துணிச்சலுடன்  தன் உயிரையும் பணயம் வைப்பான் … முட்டாள்தனமாக,  துப்பாக்கியிலே பிறந்து  வளந்தவனிடம்   காலி துப்பாக்கியையும்  நீட்டுவான்’ இது பலவீனம் அல்லாமல்  வேறு  என்ன ? 

இது  எவ்வளவு  மோசமான பலவீனம் ! இவன்   செய்யும் ஒரு தவறு எத்தனை பேருடைய   உயிரை குடித்துவிடும்.அவனுடைய மொத்த ராஜ்யமும்  ஆட்டம் கண்டுவிடுமே !

‘தன்னை கட்டுப்படுத்தும்  மதுமதியின் நினைவுகளை  விட … அதற்கு இடமளித்த தன்னை எண்ணி  தான்  மிகுந்த  கோபம் கொண்டான்.’

‘உன்னால  யாரை கண்ட்ரோல் பண்ண முடியுமோ அவங்களை தான் நீ காதலிக்கனும் … எப்போ உன் காதல் உன்னையே   கண்ட்ரோல் பண்ணுதோ … அப்போ  அதை நீ  அழிச்சிரணும் . ‘ துரியனின் ஆக்ரோஷமான  வரிகள் … அப்பொழுது தவறாக தெரிந்த  ஆதித்யாவுக்கு … இப்பொழுது  சரியாக தோன்றியது

” அழிச்சர்றேன்  … ஷீ காண்ட் கண்ட்ரோல்  மீ … “- அவளால் என்னை கட்டுப்படுத்த முடியாது என்று  அவன் கூறிய மறுநிமிடம் ,

” போ …. ” உச்சஸ்தாதியில் அலறிய மதுமதியின் குரலில் அரண்மனையே  அதிர்ந்தது . ஆதித்யாவின் மனமும் தான் .

” மதி ” ஆதித்யாவின் கால்கள்  தானாக  அவள் இருக்கும் தன் அறையை நோக்கி ஓடியது .

-தொடரும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!