Naan Avan Illai 17

download (17)-4f3c52f9

Naan Avan Illai 17

நான் அவன் இல்லை 17

இரவு வெகுநேரமாகியும் உறங்காமலே இருந்த மதுமதிக்கு விடியற்காலை நான்கு மணிக்கு மேல் தான் உறக்கம் வந்து இமையை தொட , நேரம் கடந்தும் கண்விழிக்க மனமில்லாமல் வெல்வெட் படுக்கை விரிப்பு கொடுத்த கதகதப்பை அனுபவித்தபடி போர்வைக்குள் மேலும் புதைந்து கொண்டாள்.

அப்பொழுது அறையில் கேட்ட அரவத்தில் மெல்ல மெல்ல உறக்கம் கலைந்து தன் கைகளை மேல் தூக்கி சோம்பல் முறித்தபடி, தூங்கி விழுந்த குறை கண்ணோடு எழுந்து அமர்ந்த மதி . சத்தம் கேட்ட திசையின் பக்கம் தன் பார்வையை பதித்தாள் .

சட்டென்று பாதி உறக்கத்தில் இருந்த அவளது ஐம்புலன்களும் புத்துணர்ச்சியுடன் விழித்துக்கொள்ள .. சோம்பலும் உறக்கமும் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிட பெண்ணவளோ தன் முட்டை விழிகள் தாமரை இதழ் போல அகல விரித்தாள் .

அவள் எதிரே இடுப்பில் சுற்றிய வெள்ளை துண்டை தவிர மேலாடை ஏதும் இன்றி வெற்றுடம்புடன் … மதிக்கு முதுகு காட்டியபடி , யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டு கண்ணாடியின் முன்பு நின்றிருந்தான் ஆதித்யா .

” இப்போ எதுக்கு இப்படி மாடல் மாதிரி போஸ் குடுத்துட்டு நிக்கிறான் … மது பாக்காத… பாக்காத … ” என்று சொல்லிக்கொண்டே அவனை முதல் முறையாக மெய்மறந்து ரசித்தாள் .

ஆறடிக்கும் மேல் உயரம் , ஒடுங்கிய இடைக்கு மேலே பறந்து விரிந்த தோள்கள் .” முதுகில் அது என்ன ராஜாளியின் ரெக்கை போல ?” என்று அறிந்துகொள்ளும் ஆவலை தூண்டிய கருமை நிற டாட்டூ .அது அவன் கைகளை விரிக்கும் பொழுது ராஜாளி தன் றெக்கையை விரித்து பிறப்பது போல இருந்தது .

கழுத்தில் நெருப்பு பற்றி எறிவது போல ஒரு டாட்டூ … கலைத்துவிட்டு விளையாடி பார்க்கும் ஆசையை ஏற்படுத்திய அலைஅலையான கருமை நிற கேசம் . ‘ம்ம்ம் டாட்டூஸ்ன்னா ரொம்ப புடிக்கும் போல ..’ ஆதித்யா மேல் இருந்த தன் பார்வையை அகற்றாது மதி அவனையே பார்த்துக்கொண்டிருக்க … அலைபேசியை அணைத்துவிட்டு சட்டென்று மதுமதியின் பக்கம் திரும்பிய ஆதித்யா ,

” முழிச்சிட்டியா ?? ” என்று கேட்டான் .

” ஐயோ பார்த்திருப்பானோ ” மாட்டிகொண்டோமோ என்கின்ற பயத்தில் திருதிருவென முழித்தாள்.

” என்னாச்சு ?? உன்கிட்ட தான் பேசிட்டு இருக்கேன் ” அவள் அருகில் வந்து சொடக்கிட்டு அவள் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தான் ஆதித்யா .

” ஹான்… என்ன ??” தடுமாறினாள் .

” உடம்புக்கு ஏதும் சரியில்லையா?? ” என்று அவள் அருகில் நெருங்கி வந்து அவளது நெற்றியில் கைவைத்து பார்த்தான் ” காய்ச்சல் இல்லையே ” என ஆதித்யா தனக்கு தானே  இயல்பாய் சொல்லி கொள்ள … அவள் தான் அவன் கை பட்டதும் சங்கடத்தில் நெளிந்தாள்.

” என்னாச்சு ?” மீண்டும் கேட்டான் .

” அது வந்து ” என்று அவள் ஆரம்பிக்கும் பொழுது பார்த்து அவனது அலைபேசி சினுங்க ” ஒரு நிமிஷம் ” என்றவன் … அலைபேசியில் பேசியப்படியே சென்று காஃபி மேக்கரில் இருந்து ஒரு கப் காஃபியை எடுத்து வந்து அவளிடம் நீட்டினான் .

ஆனால் மதுவோ அதை வாங்காது அவனது முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க , தன் கண்களாலே ஆதித்யா வாங்கும் படி சைகை செய்ய , உடனே வாங்கியவள் காஃபியை பருகாமல் , குறுக்கும் நெடுக்கும் நடந்தபடி அலைபேசியில் யாரிடமோ பேசிக்கொண்டிருந்த ஆதித்யாவை தன் விழி அகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தாள் .

அவன் அழகு … கட்டளையிடும் அவன் கண்கள் அழகு … அடர்ந்த மீசைக்குள் இருக்கும் கருப்பட்டி உதடுகள் அழகு … வேக நடை அழகு …. கோபத்தில் முடி கோதும் விதம் அழகு ‘விரலும் தான்’ என்றது அவளது மனம் ‘ ஆமா ஆமா ‘ மென்னகையுடன் ஆமோதித்தாள் .

‘அடுத்து என்ன சொல்லு’ ஆர்வத்துடன் கேட்டது அவள் மனம் .
‘ கட்டிப்போடும் ஆளுமையான குரல் அழகு … பயத்தை கொடுக்கும் கோபம் அழகு … துரோகியை வீழ்த்தும் வீரம் அழகு … பகைவனை வெல்லும் விவேகம் அழகு …. எல்லாமே அழகு … அழகன் தான் ‘ என்றாள், மறுநிமிடமே ‘ ஆனால் முரடன் ‘ என்றது அவளது மனம் .

இவ்வாறு மதி கள்ளத்தனமாக ஆதித்யாவை ரசித்து கொண்டிருக்க .. அலைபேசியை அணைத்துவிட்டு அவளிடம் வந்த ஆதித்யா ,

” என்ன காஃபி குடிக்கலையா ?? ” என இயல்பாக தான் கேட்டான் .

” ஹான் ” மீண்டும் மாட்டிக்கொள்ள பார்த்தோமே என்கின்ற பயத்தில் காஃபியை வேகமாக பருகியவள் தவறுதலாய் சூடான காஃபியை தன் மேலே சரித்து கொண்டாள் .

” ஏய் பார்த்து ” என்று பதறியவன் அவளை .நெருங்கி வர … பட்டென்று விலகி “ஒன்னும் இல்லை நான் நல்லா இருக்கேன் … ” என்றவள் விட்டால் போதுமென்று குளியல் அறைக்குள் நுழைந்து கொண்டாள் .

அவளது விசித்திரமான நடவடிக்கையை ரசனையுடன் பார்த்தவன் தன் தோள்களை குலுக்கிக்கொண்டு தான் விட்ட பணியை தொடர்ந்தான்.

குளியல் அறைக்குள் நுழைந்து தாளிட்ட மதி ‘ ஊஃப் ‘ அடக்கி வைத்த மூச்சை வேகமாக வெளியிட்டவள் …

‘ ச்ச என்னாச்சு மது உனக்கு, அவன் நம்மளை ஏமாத்திருக்கான் .. சந்தியாவை கொலை பண்ணிருவேன்னு மிரட்டிருக்கான் … அங்க ஹாஸ்ப்பிட்டல்ல சந்தியாவுக்கு என்னாச்சுன்னு தெரியல … வீட்ல எல்லாரும் எப்படி இருக்காங்கன்னு தெரியல … இது எல்லாத்துக்கும் காரணமான இவனை போய் ரசிச்சிட்டு இருக்க … உனக்கே அசிங்கமா இல்லை … நல்ல வேலை அவன் கவனிக்கலை …. கவனிச்சிருந்தான்னா எவ்வளவு கேவலமா நினைச்சிருப்பான் ‘ என்று தன் மனதை கடிந்து கொண்டவளுக்கு … அவனை பற்றிய உண்மை அறிந்தும் அவன் பால் ஈர்க்கப்படும் தன் மீதே ஆத்திரமாக வந்தது.

ஒருவழியாக குளித்து முடித்து வெளியே வந்தவள் ஜன்னலின் பக்கமாக நின்று தூரத்தில் தெரிந்த மலையையே வெறித்து பார்த்து கொண்டிருக்க அறையின் கதவை திறந்துகொண்டு உள்ள வந்த தாரா ,” ஏய் இங்க வா உனக்கு ட்ரெஸிங் பண்ணனும் ” சொடக்கிட்டு மதியை அழைத்தாள் .

அப்பொழுது தாராவின் நெற்றியில் இருக்கும் கட்டை கவனித்த மதிக்கு … நேற்று நடந்தது அனைத்தும் நினைவிற்கு வர ஒருவித குற்ற உணர்ச்சியில் அவளை நெருங்கிய மதி,

” ஐயம் சாரி… நான் எதையும் வேணும்ன்னு பண்ணலை … நேத்து எனக்கு என்ன ஆச்சுன்னே தெரியலை … என்னை மன்னிச்சிருங்க ” அவளது கரம் பிடித்து கொண்டு கெஞ்சினாள் .

” ப்ச் … கைய விடு ” என்று மதியின் கரங்களை உதறிய தாரா .. மதி பேசும் எதையும் தன் காதில் வாங்காது … அவள் காயத்திற்கு மருந்திடுவதிலே குறியாக இருந்தாள்.

” ஸ்ஸ் … வலிக்குதுங்க கொஞ்சம் மெதுவா ” என்று மதி கூறவும் ,

” ஹலோ நீ என்ன மஹாராணியா இதுக்கு போய் ஓவரா ரியாக்ட் பண்ற … அடிபட்டா வலிக்க தான் செய்யும் ” என்றவள் இன்னும் வேகமாக மதிக்கு வலிக்கும்படி மருந்திட்டு கட்டுப்போட்டாள் .

மதிக்கு கண்ணீரே வந்துவிட்டது . இந்த அரக்கர் கூட்டத்தில் இருக்கும் பெண் கூட நமக்கு ஆறுதலாக இல்லையே என்று மிகவும் வருந்தினாள் ..
” ஏய் என் கூட வா ” தாராவின் கணீர் குரல் மதியின் சிந்தனையை குறுக்கிட்டது .

” எங்க ??”

” ம்ம்ம் உன் ரூம்க்கு… எப்படி ஆதி ரூமலையே செட்டில் ஆகலாம்ன்னு முடிவு பண்ணிட்டியா .. கெட் அப் … சும்மா அழுது அழுது நடிக்காத வா என் கூட ” அதட்டினாள் .

தாராவின் வெறுப்பு மதிக்கு சங்கடத்தை கொடுத்தாலும் … தான் இன்று முதல் வேறு அறையில் தங்க போகிறோம் … இனி நாம் ஆதித்யாவை சந்திக்க தேவை இல்லை என்று மனத்திற்குள் மகிழ்ந்த மதி சந்தோஷத்துடன் தாரா பின்னால் சென்றாள் .

ஆனால் அந்த சந்தோசம் எல்லாம் கொஞ்ச வினாடிக்கு தான் …ஆதித்யாவின் அறைக்கு நேர் எதிரே இருக்கும் அறையை காட்டிய தாரா ,
” போ இது தான் உன் ரூம்… இனிமே நீ இங்க தான் தங்கணும் ” என்று கூற … மதியின் மகிழ் முகம் சட்டென்று விழுந்து விட்டது .

” இங்கையா ! எனக்கு வேற ரூம் குடுங்களேன் … கிட்சன்ல வேணும்னாலும் தங்கிக்கிறேன் ” ஆதித்யாவை பார்க்கவே கூடாது என்று எண்ணிய மதுவுக்கு அவன் அறைக்கு எதிர் அறையில் தங்குவது கூட வெறுப்பாக தான் இருந்தது .

” ஆதித்யா சொன்னதை நான் செஞ்சிட்டேன்… இனி என்ன கேட்கணுமா அவர்கிட்டையே கேட்டுக்கோ ” கடுப்படித்தாள்.

” அக்கா ப்ளீஸ் நீங்க கொஞ்சம் அவர் கிட்ட பேசுங்களேன் “

” ஏய் முதல்ல தொட்டு பேசுறதை நிப்பாட்டு ” என்ற தாரா,

வெடுக்கென்று தன் மீது இருந்த மதியின் கரங்களை உதற … தாரா தள்ளிய வேகத்தில் நிலை தடுமாறி கீழே விழ போன மதுவை இரு வலிய கரங்கள் தாங்கி பிடித்தது .

கீழே விழுந்துவிடுவோமோ என்கின்ற பயத்தில் விழிகளை மூடியபடி இருந்த மதி … ” ஆர் யு ஓகே ” என்னும் குரலில் தன் விழி திறந்து வீராவின் முகத்தை பார்த்ததும் , உடனே அவனிடம் இருந்து விலகினாள்.

” ஆர் யு ஓகே ?” மீண்டும் வினவினான் .

” ம்ம்ம் ” தலை கவிழ்ந்தபடி ம்ம்ம் கொட்டினாள் .

” என்னாச்சு தாரா?? என்ன பிரச்சனை ?? “

” பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லை ” இடைபுகுந்து பதில் கூறினாள் மதி .

” ஏய் ஏன் பொய் சொல்ற ? வீரா அவளுக்கு இந்த ரூம் வேண்டாமாம் … கிட்சன்ல கூட தங்குவாளாம் இங்க தங்க மாட்டாளாம் ” என்ற தாரா கபட புன்னகையுடன் கூற ….

வீராவின் பார்வையை சந்தித்த மதியின் தலை தானாக நிலம் நோக்கியது…. சில நொடிகள் மதியையே வெறித்து பார்த்த வீரா தாராவிடம் ,

” சாவியை கொடுத்துட்டு நீ போ நான் பேசிக்கிறேன் ” என்றான் .

தாராவும் வீராவிடம் சாவியை கொடுத்துவிட்டு கீழே செல்ல …
இப்பொழுது வீராவும் மதியும் மட்டும் அங்கே தனியாக இருக்க… இருவருக்கும் இடையே நிலவிய மௌனத்தை முதலில் உடைத்து வீரா தான் .

” மேடம்க்கு ஏன் இந்த ரூம் புடிக்கலைன்னு தெரிஞ்சிக்கலாமா? ” அவளது கவிழ்ந்திருந்த தலையை பார்த்தபடி கேட்டான்

” அதெல்லாம் எதுவும் இல்லை … எனக்கு ஓகே தான் ” வேகமாக மறுத்தாள் .

” மது நீ எங்க எல்லாரையும் பார்த்து ரொம்ப பயந்து போய் இருக்கன்னு எனக்கு நல்லாவே புரியுது …. ஆனா இனிமே நீ பயப்பட வேண்டாம் …உனக்கு எதுவும் ஆகாது … நாங்க யாரும் உன்னை ஹார்ட் பண்ண மாட்டோம்.. ஆதித்யா அவன் ரூம்க்கு எதிர் ரூம்ல உன்னை தங்க வைக்கிறான்னா … அவன் உன்னை பாதுகாக்குறான்னு அர்த்தம் … உனக்கு எதுவும் ஆகிற கூடாது என்பதற்காக மட்டும் தான் அவன் இங்க உன்னை தங்க வைக்கிறான் …. சோ, நீ பயப்படாத ! ” கனிவுடன் கூறினான் .

” எனக்கு இங்க இருந்து போகணும் “

” உனக்கு தான் யாரும் இல்லையே அங்க போய் என்ன பண்ண போற “

” எனக்கு அங்க வேலை இருக்கு … என் நண்பர்கள் இருக்காங்க … எனக்குன்னு ஒரு வாழ்க்கை இருக்கு … அதை விட்டுட்டு நான் இங்கையே இருக்க முடியாது “

” ஆனா வெளியில உனக்கு ஆபத்து இருக்கே “

” அதை நான் பார்த்துகிறேன் “

” மதி நீ இங்க இருக்கனும் என்பது ஆதியோட முடிவு இதுல துரியனே ரொம்ப தலையிட மாட்டான்… நான் கேட்க கூட மாட்டேன் … ஆனா ஒன்னு சொல்றேன் …ஆதி ரொம்ப நல்லவன் ! உனக்கு எதுவும் ஆக விட மாட்டான் . அவன் எது செஞ்சாலும் சரியா தான் இருக்கும் …. நீ பயப்படாம இரு “

“ஒரு பொண்ணை அவ விருப்பம் இல்லாம தங்க வைக்கிறது சரியான விஷயமா ?? ஒரு நல்லவன் இப்படி தான் பண்ணுவானா ??” ஆத்திரத்தில் பேசியவளுக்கு இயலாமையில் கண்ணீர் வந்தது .

” மதி நீ வேணும்ன்னா ஆதிகிட்ட இதை பத்தி பேசி பாரு … “

” நான் சொன்னா கேட்கவா போறான் ” விரதியுடன் கேட்டாள்.

“மதி உன்னை இங்க இருந்து வெளிய அனுப்ப எனக்கு உரிமை கிடையாது… ஆனா நீ இங்க பத்திரமா இருக்கலாம் உனக்கு எதுவும் ஆகாம நான் பார்த்துகிறேன் ” அவனது அன்பான பேச்சு அவளது மனதை தொட்டது .

” தேங்க்ஸ் ” மெல்ல முணுமுணுத்தாள் .

” எப்போ என்ன வேணும்னாலும் என்னை கூப்பிடு ” புன்னகையுடன் கூறினான் .

” ம்ம்ம் … ஐயம் சாரி நேத்து நான் வேணும்னே அப்படி பண்ணலை ” மதியின் விழிகள் வீராவின் மணிக்கட்டை தழுவி மீண்டது .

” இட்ஸ் ஓகே “

“அன்னைக்குமே வேணும்ன்னு உங்களை அடிக்கல … சந்தியாவை அப்படி பார்த்ததும் … ஆதங்கத்துல அடிச்சிட்டேன் … சாரி ” வருத்தத்துடன் கூறினாள் .

” ஹே டோன்ட் வொரி … என்னால புரிஞ்சிக்க முடியுது “

“தேங்க்ஸ் வீரா … என்னை புரிஞ்சிக்கிட்டதுக்கு ” என்றவள் ஒருவித தயக்கத்துடன் அவனை பார்த்தாள்.

அவளது பார்வையை வைத்தே அவள் எதையோ தம்மிடம் கேட்க தயங்குகிறாள் என்பதை கண்டறிந்தவன் ,

” மதி என்கிட்ட எதுவும் கேட்கணுமா … எதுனாலும் தயங்காம கேளு ” என்றான் .

” அது வந்து …வீரா சந்தியா எனக்கு ரொம்ப பெஸ்ட் ஃப்ரண்ட் … அவளை அந்த மாதிரி பார்த்ததுல இருந்து எனக்கு பயமாவே இருக்கு … சந்தியா எப்படி இருக்கா … ?? “தயக்கத்துடன் கேட்ட மதியின் கண்களில் சட்டென்று நீர் கோர்த்தது .

” ப்ச் மது அழாதீங்க ” என வீரா மதியை சமாதானம் செய்து கொண்டிருக்க …

” இந்த நிமிஷம் வர நல்லா தான் இருக்கா … ” என்று ஆதிக்கம் நிறைந்த ஆதித்யாவின் குரலை கேட்ட மது , திகைப்புடன் அவனை பார்க்க .. மதிக்கும் , வீராவுக்கும் இடையே நூலளவு மட்டுமே இருக்கும் இடைவெளியை தன் பார்வையாலே அளந்தபடி அவர்களின் அருகே வந்த ஆதித்யா மதியின் விழிகளை பார்த்து ,
” எப்பவுமே சந்தியா நல்லா இருக்கணும்ன்னா அது உன் கையில தான் இருக்கு … ” – குரலில் இருந்த மென்மை வார்த்தையில் இல்லை .

அவன் வார்த்தையில் தெரிந்த மிரட்டலில் திடுக்கிட்டவள் ‘ எவ்வளவு தைரியம் இருந்தா இப்படி பேசுவான் … வந்துட்டான் நம்ம நிம்மதிய கெடுக்குறதுக்குன்னே ‘ மனதிற்குள் திட்டியபடி நிமிர்ந்தவளின் விரிந்த விழிகள் அவனை தீ பார்வை பார்த்தன .

அவள் தன்னை பார்ப்பது தெரிந்தும் அவளை பார்க்காமல் …தன் பார்வையை வீரா பக்கம் திருப்பினான் ஆதித்யா ,

” ஹே குட் மார்னிங் ஆதி ” என புன்னகையுடன் வீரா கூறினான் .

” மார்னிங் வீரா … கை எப்படி இருக்கு ” அக்கறையுடன் நண்பனை விசாரித்தான் ஆதி .

” ஃபைன் ஆதி … சின்ன காயம் தான் “

” உன்னை பார்க்க உன் ரூம்க்கு போயிருந்தேன் … நீ மதி கூட இருக்கிறதா தாரா சொன்னா அதான் இங்க வந்தேன் .. ” ஆத்திரத்தில் தன் பற்களை கடித்தபடி நின்றிருந்த மதியை , ஓரக்கண்ணால் பார்த்தபடி ஆதித்யா கூறினான் .

கருப்பு நிற கோட் சூட் …. ஹேர் ஜெல்லில் அடக்கப்பட்ட கேசம் … நன்கு பாலிஷ் செய்யப்பட்ட லெதர் சூவில் … மிஸ்டர் ஹண்ட்ஸமாக ! அவள் முன்பு காட்சியளித்தான் ஆதித்யா … அரை நொடி ஆராய்ச்சி தான் ! ஆனாலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் கொடுத்து ‘ மிஸ்டர் ஹண்டஸம்’ என்னும் பட்டத்தையும் கொடுத்துவிட்ட தன் மானம் கெட்ட மனதை திட்டியவள் .

‘ பண்றது ரௌடி தொழில் … இதுக்கு இந்த மேக்அப் ரொம்ப அவசியம் தான் … கொலை பண்றதுக்கு ஏண்டா கோட் சூட்டு … ஆஸ்கர் அவார்ட் வாங்க போற மாதிரி வந்து நிக்கிறான் பாரு ‘ – என்று முணுமுணுத்தவள் அதற்கு மேல் அங்கு நிற்க மனம் இல்லாமல்,

” நான் என் ரூம்க்கு போறேன் வீரா .. அப்புறமா பார்க்கலாம் ‘ என்று வீராவை மட்டும் பார்த்து புன்னகைத்துவிட்டு, ஆதித்யாவை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து நகர்ந்தாள் மதுமதி .

தன் தாடையை தடவியபடி அவள் முதுகை வெறித்த ஆதித்யா சக்ரவர்த்தியின் உதடுகள் புன்னகையில் வளைந்தன .

-தொடரும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!