NEGILUM NINAIVUGAL FULL STORY

Picture1-b26e928e

நெகிழும்  நினைவுகள்

நினைவுகள் 1

 

“திங்கள் உறங்கினாலும்

அலைகள் ஓய்ந்தாலும்

உன் நினைவுகள் என்றும்

என்னை விட்டு நீங்காது”

திங்கள் மறைந்து போக போக  இரவும் மெல்ல மெல்ல  மலர்ந்தது  அதன் ஆதாரமாக  அந்த  நீல வானம் தன் மீது மையை பூசிக்கொள்ள ,  நிலவும் நட்ச்சத்திரங்களும் தோன்றி இரவை உருதிபடுத்தியது  , அதை பார்ப்பதற்கு கருநிற பந்தல் மீது மல்லிகை பூ பூத்து குலுங்குவதை அந்த வெண்மதி காவல் காப்பது போல தோன்றியது .

இந்த  அருமையான  இரவுக்காட்சியை  பால்கனியில் நின்று கொண்டு ரசித்தவாரே   தன்  நினைவுகளில் மூழ்கிருந்தான் ஆதவ் .

ஆதவ் தான் நம் கதையின் நாயகன் முழுபெயர் ஆதவன் என்பதை இந்த நவீன காலத்துக்கேற்ப  தனக்கு பிடித்தது போல் ஆதவ் என்று சுருக்கிக்கொண்டான் , அவன்  தனக்கு பிடிக்காதது எதையும்  தனக்கு ஏத்தது போல் மாற்றிக்கொள்ளும் திறம் படைத்தவன்  , தனக்கு என்ன தோணுதோ அதைத்தான் செய்வான் , அதே நேரத்தில் தனக்கு ஒன்று பிடித்துவிட்டால் அதற்காக உயிரையும் கூட கொடுப்பான் .

எதையும் காலத்தின் போக்கிலேயே  விட்டுவிட வேண்டும் என்பது இவனது கொள்கை, எந்த ஒரு பிரச்சனைக்கும் பெரிதாக அலட்டிக்கொள்ளமாட்டான்  , எப்பவாது  கோபம்  வரும்   ஆனால்   அது வந்த வேகத்தில் மறைந்துபோகும் . இயற்கையாக வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்தவன் , மாநிறம் , நல்ல உயரம் திடமான உடற்கட்டு என்று பார்ப்பதற்கு சினிமா நடிகனை போல இருப்பான் இவனிடம் பல அஸ்திரங்கள் இருந்தாலும் வசீகர  பார்வை  , மாயக்கண்ணனின் புன்னகை  என்ற இவ்விரெண்டும்  இவனது முக்கியமான பிரம்மாஸ்திரம்  , இதில் மாயங்காதோர்  யாரும் இல்லை , அனைவரிடம்மும் சகஜமாக பழகும் குணம் கொண்டவன் , இவனை சுற்றி எப்பொழுதும் நண்பர்களின்  பட்டாளாம் இருக்கும் அதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் இருப்பர் . எல்லா பெண்களிடமும்  ஒரு வரையறையோடு பழகுவதால் பெண்கள் மத்தியில் இவனுக்கு எப்பொழுதும் வரவேற்பு  உண்டு . ஆதவ்வின் கொள்கை என்றால்  “களவும் கற்று மற ” என்பதுதான் , அனைத்தையும் தெரிந்து கொள்வதில் தவறொன்றும் இல்லை , தவறில் இருந்துதான் சரியை  ஆறியமுடியும் என்பதை உறுதியாய் நம்புபவன் ,  பேஷன் டிசைனில் bachelor டிகிரி முடித்துவிட்டு  தன் தந்தையின் கம்பெனியான  RK பேஷன் லிமிடெட்டை வெற்றிகரமாக நடத்திவருகிறான், சென்ற வருடத்திற்கான  சிறந்த CEO என்கின்ற பட்டத்தை  தன் தனித்திறமையால் வென்றிருக்கிறான் .

ஆதவ் ஏதோ ஒரு யோசனையில் மூழ்கிருக்க அவன் அருகில் வந்து ஒருவர் அவனின் தோளில் கை வைத்து ,” என்ன பா ஆதவ் இன்னைக்கும் அவன் தன் வேலைய  காட்டிட்டான ” என்றார் ,

அதற்கு  ஆதவ் சிரித்துக்கொண்டே ,” ஆமா மா ,  நீங்க இன்னும் தூங்கல ” என்றான்

அவர் பெயர் தேவி ஆதவ்வின் அம்மா , ராதாகிருஷ்ணனின் மனைவி , இல்லத்தரசி ஆதவ்வின்  செல்ல தாய் .

தேவி ,” தண்ணீ   குடிக்கலாம்ன்னு கீழ வந்தேன் , சரி நீங்க   ரெண்டு பேரும் தூங்கிட்டிங்கலான்னு பாக்கலாம்ன்னு ரூம்க்கு வந்தா பெட்ல உன்ன காணோம் , அப்போ நிச்சயமா பால்கனில தான் இருப்பன்னு இங்க வந்தா நீயும் சொல்லி வச்ச மாதிரி நின்னுகிட்டு இருக்க  அப்றோம்  ஆதவா  ” என்று  ஆரம்பித்தவரை  தடுத்த ஆதவ்

ஆதவ் ,” மா   எத்தன  தடவ   சொல்றது ஆதவா இல்ல , ஆதவ்ன்னு கூப்டுங்க ” என்றான்

தேவி  ,” சரி ஆதவ் , இப்போம் சரியா “

ஆதவ் ,” ஹ்ம்ம்   ஒகே   சொல்லுங்க    என்ன   விஷயம் ” என்றான்

தேவி ,” நா   சொன்ன   விஷயத்த    பத்தி   என்ன   யோசிச்சிருக்க ” என்றாள்

ஆதவ் ,” இல்ல    மா அத   பத்தி   இன்னும் நா எதுவும் யோசிக்கல” என்றான்

தேவி ,” சரி யோசிச்சிட்டு சொல்லு , அப்றோம் ஆதவ் நேரம் வேற ஆயிட்டே இருக்கு , நீ வேணும்னா  கீர்த்தி ரூம்ல போய் தூங்கேன் , கீர்த்தி தான் வீட்ல இல்லையே ” என்றாள் .

ஆதவ் ,” ஆனா அம்மா  ” என்று அவன் தொடங்குவதற்குள்

ஆதவ் என்று கூபிட்டுக்கொண்டே ஒருவர்  தன்  கண்களை    கசகிக்கொண்டு  ஆதவ்வின் அருகில் வந்தார் , ஆதவ் தன் அம்மாவை பார்த்து    கண்ணசைக்க   அவர்   சிரித்தார் ,

பின்பு ஆதவ் ,” என்ன என் பிரின்ஸ்சோட தூக்கம்  கலஞ்சிட்டா” என்று கூறிக்கொண்டே   அவனை   தூக்கி  தன் மார்போடு அணைத்துக்கொண்டான் . அச்சிறுவன் ,” ஆதவ் என்கூட தூங்காம இங்க என்ன பண்ற ” என்றான்

ஆதவ் ,” என்ன தூங்க விட்டாதனடா , உருண்டு உருண்டு என்ன கீழ தள்ளிட்ட, அப்டியே   நீ    உங்க    அம்மா    அம்மு    மாதிரி    டா  ” என்றான் .

தேவி ,” துருவ் கண்ணா  அப்பா இங்க தூங்கட்டும் , நீ வேணும்னா பாட்டிகிட்ட   தூங்கறியா ” என்றார்

துருவ் ,” ப்ளீஸ் பாட்டி நா அப்பா கிட்ட தான் தூங்குவேன் ” என்று அடம்பிடித்தான் , உடனே ஆதவ் ,” மா நீங்க போங்க  நா இவன பாத்துக்கறேன் , குட்   நைட்    மா கீழ பாத்து  போங்க ” என்றான்

தேவி ,” சரி பா குட் நைட் ” என்று கூறி துருவ்வின்  தலையை கோதி விட்டு விட்டு  தன் அறைக்குச்சென்றார் .

துருவ்  ஆதவ்வின்   செல்ல  மகன்.

ஆதவ்   தன் கழுற்றை இறுக்கி கெட்டி பிடித்திருந்த தன் மகனை மெல்லமாக தூக்கிக்கொண்டு வந்து மெத்தை மீது கடத்தி , அவனை தட்டிகொடுத்துக்கொண்டே   தானும்    உறங்கினான் .

இரவு முடிந்து பகலும் புலர்ந்தது , தலையணையும் பெட் ஷீட்டும் எங்கயோகிடக்க ஆதவ்வின்  நெஞ்சின்   மீது   துருவ்  நிம்மதியாக துயில் கொண்டிருக்க  , ஆதவ் தன் மகனை இறுக்கி பிடித்தவாறு   உறங்கிக்கொண்டிருந்தான்  . சூரியனின் கதிர்வீச்சு தாங்க இயலாமல் துருவ் தன் தூக்கத்தில் இருந்து விடு பெற்றான் , பின்பு மணி ஒன்பதை காட்ட , துருவ் ,” அச்சச்சோ அப்பாவுக்கு ஆபீஸ்க்கு  லேட் ஆகுதே ” என்று கூறி ஆதவ் ஆதவ் என்று தன் தந்தையை எழுப்பினான் ,

ஆதவ் தன் தூக்கத்தில் இருந்து லேசாக முழித்து  தன் மகனை தன் பக்கம் இழுத்து என்னடா என்று கூறி அவனது கன்னத்தை லேசாக கிள்ளினான் ,

துருவ் ,” அப்பா பாஸ்ட் , சீக்கரம் எந்திரிங்க ” என்றான் , ஆதவும்  சரி டா என்று கூறி வேண்டா வெறுப்பாக எழும்பினான் ,

பின்பு  ஆதவ் பெட் காபி கேட்க்க , துருவ் ,” அப்பா ப்ரஷ் பண்ணாம காபி குடிக்க கூடாதுன்னு    என்  மிஸ் சொல்லிருக்காங்க , ஸோ சீக்கரம்  வாங்க   பா ரெண்டு பேரும் சேர்ந்து  ப்ரஷ் பண்ணுவோம் ” என்றான் . உடனே ஆதவ்,” எல்லா விஷயத்துலயும் அப்டியே உங்க அம்மா மாதிரி  என்று கூற பின்பு ஒருவழியாக துருவ் தன் தந்தையை பாத் ரூம்மிற்குள் அழைத்துச்சென்றான் , இருவரும் பல் துலக்கிவிட்டு  வெளியே வந்தனர் .

துருவ்  ஆதவ்விடம் சீக்கரம் குளிச்சிட்டு ரெடியாகுங்க நா உங்க டிரஸ் எல்லாம் எடுத்து வைக்கறேன் என்றான்

ஆதவ் ,”ஒகே டா என் செல்லம் ”  என்றான் .

ஆதவ்  மியூசிக் பிளேயர்ரை  ஆன்   செய்து  விட்டு குளிக்க சென்றான் , பாட்டு அதற்க்கேற்ப ஒலிக்க , ஆதவ்வும் ஆபீஸ் செல்வதற்க்காக தயாரகிக்கொண்டிருந்தான் , ஒரு பக்கம் ஆதவ் தன் கழுத்தில் டையை  மாட்டிக்கொண்டிருக்க  , துருவ்  தன் தந்தையின் ஷூவிற்கு பாலிஷ் செய்துகொண்டிருந்தான் .

ஆதவ்விற்கு  சரியாக  டை    கெட்ட வரவில்லை , அப்பொழுது   துருவ்  தன் தந்தையின் தோள் மீது கையை வைக்க , ஆதவ் என்னடா இது நம்ம பையன் திடிர்ன்னு நம்ம    heightக்கு வளந்துட்டான் ,   என்று ஆச்சரியத்துடன் கீழே பார்க்க , துருவ் பெட் மீது ஏறி நின்று கொண்டிருந்தான் , அதை பார்த்து ஆதவ் சிரிக்க ,

துருவ் ,” சிரிக்கறதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல வாங்க பா வந்து உக்காருங்க ” என்று தன் தந்தைக்கு  டையை  அட்ஜஸ்ட் செய்துக்கொண்டிருந்தான் , அதை பார்த்த அதவ்க்கு தன் மனைவியின்  நியாபகம் வந்தது , துருவ்வின் பிறப்புக்கு முன்பு ஒருநாள் இப்படி தான் ஆதவ்  ஆபீஸ் செல்வதற்க்காக கிளம்பிக்கொண்டிருந்தான் , அப்பொழுது அவன் மனைவி ,” ஆதவா இவ்வளவு பெரிய ஆளா வளந்திருக்க இன்னும் உனக்கு ஒழுங்கா டை கெட்ட தெரியல ” என்றாள்

ஆதவ் ,” ஏய் அம்மு , ஆதவா இல்ல ஆதவ் ” என்றான் ,

அம்மு ,” சரி மூஞ்ச   தூக்காத   ஆதவ் போதுமா ” என்றாள்

ஆதவ் ,” டபுள்   ஒகே    டியர் “

பிறகு அம்மு ஒரு சின்ன ஸ்டூல் மீது ஏறி ஆதவ்க்கு டை கெட்டி  விட்டுக்கொண்டிருந்தாள் அப்பொழுது

அம்மு ,” எப்போம்   தான்    டை   கெட்ட   படிக்க   போற “

ஆதவ் ,” ஏன் படிக்கணும் அதான் நீ இருக்கியே  என்னோட   பம்கின் ” என்று கண்களை சிமிட்டினான்

அம்மு ,” பம்கின்னா   எவ்வளவு பேரு தான் எனக்கு வைப்ப ம்ம்ம் ” என்றாள்

ஆதவ் ,” சரி அம்மு மட்டும் ஒகே ” என்று சிரித்தான் , பின்பு ஆதவ் அம்முக்கு கிச்சலம் காட்ட  அம்மு ஸ்டூல்லில் இருந்து கீழே விழப்போனாள் உடனே ஆதவ் சிரித்துக்கொண்டே தன் மனைவியை தாங்கி பிடித்தான் , அப்பொழுது அவள் ,” romance  போதும் சீக்கரம் கிளம்பி கீழ    வா ” என்று அவனது தலையை தட்டிவிட்டு கீழே சென்றாள் , இவ்வாறு ஆதவ் தன் கடந்த கால நிகழ்வில் திளைத்திருக்க , துருவ் அப்பா அப்பா என்று தட்டிக்கொண்டிருந்தான் , தன் மகனின் அழைப்பில் தன் நினைவுக்கு வந்த  ஆதவ்   தன் மகனை பார்த்து சிரித்தான் ,

அதற்கு  துருவ்  ,” என்ன பா சிரிகீங்க ” என்றான்

ஆதவ் ” ஒன்னும் இல்லடா ” என்று கூறி தன் மகனின் தலையை லேசாக தடவி  விட்டு  விட்டு கீழே செல்வதற்காக கிளம்பினான் , தன் ஷூவை மாட்டிக்கொண்டு அவன் எழும்பவும் துருவ்  ஆதவ்வின் கையில் அவனது லேப்டாப் பக் , மொபைல் போன் என்று தன் தந்தைக்கு எந்த வேலையும் வைக்காமல்    எடுத்துக்கொடுத்தான் ,

ஆதவ் தன் மகனை அள்ளியணைத்து  அவனது  நெற்றியில்  முத்தம் இட்டு  அவனை    கையில்   ஏந்திக்கொண்டு   கீழே     வந்துக்கொண்டிருந்தான் .

கீழே  ராதாகிருஷ்ணன் @கிருஷ்ணன்  ,” தேவி    இன்னும் உன் செல்ல பிள்ள கீழ வரலையா , டைம் இப்போம் என்ன ஆச்சு , கொஞ்சம் கூட பொறுப்பில்ல ” என்று    தன்    மகனை    வருத்தெடுத்துக்கொண்டிருந்தார் .

ராதாகிருஷ்ணனுக்கும் ஆதவ்க்கும் எப்பொழுதும் ஒத்துப்போகாது , ஆதவ்வின் பொறுப்பற்ற குணம் அவனது தந்தை கிருஷ்ணாவுக்கு பிடிக்காது .

தேவி ,” ஏங்க   அதோ    ரெண்டு    பேரும்    வந்துட்டாங்க ” என்று கூறினார்.

கிருஷ்ணா ,” வர்ற   டைமா     இது ” என்று    மீண்டும்  கரித்துக்கொட்டினார் .

ஆதவ்  தன்  அம்மாவை பார்த்து  சிரித்துக்கொண்டே  வந்து   உட்கார்ந்தான், துருவ்  ஓடி போய் தன் தாத்தாவின் மடியில் அமர்ந்து   கொண்டான் .

தன் தத்தா ஊட்டிவிட  துருவ் சாப்பிட்டுக்கொண்டிருந்தான் , பிறகு கிருஷ்ணன்    தேவியிடம் ,” சார்   என்ன முடிவு பண்ணிருக்காராம்” என்றார் .

ஆதவ்  , துருவ்  கண்ணா போய் அப்பா ரூம்ல கப்போர்ட்ல ப்ளூ பைல் இருக்கும்    அத    கொஞ்சம் எடுத்துட்டு  வா என்று அனுப்பி வைத்தான் . பிறகு தன் தந்தையிடம் ,” யோசிக்கறதுக்கு ஒன்னும் இல்ல , என்னால இன்னொரு கல்யாணம் பண்ணிக்க முடியாது , அதுல எனக்கு விருப்பம்மும்   இல்ல ” என்றான்

கிருஷ்ணன் ,” ஏண்டா ” என்றார்

ஆதவ் ,” ஏன்னா    புடிக்கல ” என்றான்

கிருஷ்ணான் ,” கீர்த்திக்கு     என்னடா  குற , அவளுக்கும்  உன்ன புடிச்சிருக்கு  இதுக்கு மேல என்னடா  வேணும் “

கீர்த்தி      கிருஷ்ணாவின் தங்கையின் மகள் , ஆதவ்க்கு சொந்த அத்தை மகள் ,சிறு வயதில்    இருந்தே    ஆதவை    உயிருக்கு உயிராக  விரும்புபவள் .

ஆதவ் ,” ஏற்கனவே    எனக்கு    கல்யாணம்     ஆகி     ஒரு    பையன் இருக்கான்  , நா எப்டி ஒரு கல்யாணம் பண்ணிக்க முடியும் ” என்றான்

கிருஷ்ணன் ,” ஏன் இந்த உலகத்துல மனைவி இல்லாதவங்கலாம் இன்னொரு கல்யாணம்    பண்ணிக்கறதே   இல்லையா ” என்றார்

ஆதவ் ,” உலகத்துல இப்போம்லாம்  என்னலாமோ நடக்குது அதுக்காக  என்னால அப்டிலாம் பண்ணிக்க முடியாது ” என்று அவன் கூறவும் துருவ் வரவும் சரியாக இருந்தது ,

துருவ் ,” கப்போர்ட்ல பைல்லே  இல்லபா , நா நல்லா தேடிபாத்துட்டேன் ” என்றான்

ஆதவ் ,” பரவில்ல    பா , அப்பா  ஆபீஸ்   கிளம்புறேன்  ,   அப்பா    ஆபீஸ்ல இருந்து    வர்றப்போம்   உனக்கு    என்ன     வேணும் ” என்றான்

துருவ் ,” நீங்க சீக்கரம் வாங்க ரெண்டு பேரும் சேர்ந்து  மூவி பாக்கலாம் ” என்றான்

ஆதவ் ,” ஒகே    டா தங்கம் ” என்று தன் மகனின் கன்னத்தில் தன் இதழ் பதிக்க , துருவும் தன் தந்தையின் கன்னத்தில் முத்தம் இட்டு வழியனுப்பி வைத்தான்

ஆதவ் ,” தன் தாயிக்கு” போயிட்டு வரேன் என்பதை போல் கண்ணசைத்துவிட்டு  தன் ஆபீஸ்க்கு சென்றான் .

காரில்  ஆதவ்  ,” என்  அப்பன்  ATM  மசின்    வழக்கம்   போல  இன்னைக்கும் என்ன   சாப்டவிடாம   பண்ணிட்டான் , ” என்று தனக்குள் புலம்பிக்கொண்டே   சென்றதில்  தன் முன்னால் இருந்த வண்டியை கவனிக்காமல் இடித்துவிட்டான் , கீழே இறங்கி பார்த்த பொழுது  வண்டியில்     யாரும்    இல்லாததால் , அங்கிருந்து தப்பித்தால் போதும் என்று    ஆதவ்      தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்  , இதை சற்று தொலைவில் இருந்து கவனித்த அந்த வண்டியின் owner தன் காரை  எடுத்துக்கொண்டு      ஆதவ்வை    follow  செய்து   அவன் பின்னாலே சென்றார் .

பிறகு அந்த நபர் ஆதவின் காரை  ஓவர் டேக்  செய்து ஆதவின் காரின்  முன்னால்     ஒரு     சுற்று   சுற்றி     தன்     காரை     நிப்பாட்டினார்.

ஆதவ் ,” யாருடா    இது   கிருக்கேன்    மாதிரி ” என்று கூறி  தன் காரை விட்டு இறங்கி  திட்டுவதற்காக  கீழே இறங்கவும் , அந்த காரில் இருந்து ஒரு பெண் இறங்கினார் , அவரை பார்த்தவுடன் , ஆதவின் கண்களில் இருந்த கோபம் தணிந்தது .

ஆனால்    அந்த பெண்ணுக்கோ  அவனை பார்த்தவுடன்  கோபம் தலைக்கேற  ,” உன் பாட்டுக்கு என் கார  இடிச்சிட்டு , ஒரு சாரி   கூட கேக்காம    ஹாயா      வந்துட்ட ” என்று    போறிய    துடங்கினாள் .

ஆதவ் ,    எவ்வளவோ அந்த பெண்ணிற்கு புரிய வைக்க    முயற்சி  செய்தான் , ஆனால் அவரோ கேட்பதற்கு தயாராவே இல்லை ,

பின்பு     ஆதவ் ,” கூல் டவ்ன் கூல் டவ்ன்   சாரிங்க தெரியாமா பண்ணிட்டேன் ,   இது எல்லாத்தையும் சரி பண்ண எவ்வளவு பணம் தேவ படுமோ    அத     நானே    குடுத்திரேன் ” என்றான்.

அந்த பெண் ,” நீ என்னடா எனக்கு பணம் குடுக்குறது  இந்த ஆதிராவுக்கு யாரோட     பணமும் தேவயில்ல  , மறுபடியும்  நீ என் மூஞ்சில என்னைக்கும் முழிக்காம இருந்தாலே போதும் ” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள் .

ஆதவ்   தனக்குள் ,” அங்கரி bird ” என்று கூறி    சிரித்துவிட்டு  அங்கிருந்து தன் ஆபீஸ்க்கு  சென்றான் .

ஆதவ்  ஆபீஸ்க்குள்  நுழையவும்  அனைத்து பெண்களும்  கண்களும்  ஷிம்லாவில்     குளிரில்      நடுங்குவது    போல நடுங்கியது இல்லை துடித்தது , ஆதவ் அனைவரையும் பார்த்து புன்னகைத்துவிட்டு  தன் அறைக்குச்சென்றான் .

பின்பு  அவனது   அறைக்கு  வந்த  ராஜ்  அவனிடம் ,” அப்டி என்னடா உன்கிட்ட    இருக்கு , கல்யாணம் ஆகி  ஒரு பையன் இருக்கான்னு தெரிஞ்சும்      எல்லா   பொண்ணுங்களும்     உன்னையே     பாக்காங்க ” என்று தன் வேதனையை  கூறினான் .

ராஜ் ஆதவ்வின் நெருங்கிய நண்பன்  , கம்பனியில் ஆதவ் எப்படியோ அப்படியே       தான்  ராஜ்  எந்த ஒரு முடிவையையும் இரண்டு பேரும் சேர்ந்து   தான்   எடுப்பர் .

ஆதவ் ,” அதுக்கெல்லாம்    ஒரு    சார்ம்    வேணும்டா  ” என்றான்

ராஜ் ,” எனவோ போ ” என்றான்

ஆதவ் ,” இன்னைக்காவது  அந்த  ஆதிராகிட்ட  திட்டு வாங்காம வரணும்ன்னு நினச்சேன் , மறுபடியும்      திட்டு வாங்கிட்டேன் ” என்று நடந்த      அனைத்தையும்     கூறினான் .

ஆதிரா ஆதவ்வின்    buisness   எதிரி , ஆதவ்  அவ்வாறு நினைப்பதில்லை , ஆனால்    ஆதிராவுக்கு      ஆதவ் என்றால் புடிக்காது , அவனை தன் எதிரியாக தான் நினைப்பாள்,  எப்பொழுதும் அவனிடம்  தன் கோபத்தை  மட்டும்    தான்    காட்டுவாள் .

அவளது வாழ்க்கையில்  நடந்த  பல  கசப்பான சம்பவங்களே  ஆதிராவை இவ்வாறு மாற்றி விட்டது , அது என்ன என்பதை பின் வரும் பகுதியில் பார்க்கலாம்.

ராஜ் விழுந்து விழுந்து சிரிக்க துடங்கினான்  பிறகு ,” அட்லீஸ்ட் ஒரு பொண்ணுக்காவது  உன்ன புடிக்கலையே  அது போதும் டா என்று ” கூறி மீண்டும் சிரிக்க துடங்கினான் .

ஆதவ் ,” ஏண்டா  “

ராஜ் ,”  எல்லாம் ஒரு பீலிங் தாண்டா மச்சி    ” அப்டி இரண்டு பேரும் பேசிக்கொண்டிருக்க   ராஜின்    போன் ,” மாமா  நீங்க எங்க இருக்கீங்க ” என்று ஒலித்தது ,

போன்    செய்தது    வேற யாரும் இல்ல  ஆதவ்வின் தந்தைதான் , உடனே ராஜ்     டேய் ,” உங்க அப்பாடா” என்றான் .

ஆதவ் ,” அட்டெண்ட் பண்ணு ஸ்பீக்கர்ல போடு நா எங்கன்னு கேட்டா  மீட்டிங்ல   இருக்கேன்னு    சொல்லிரு ” என்றான்

ராஜ்      போனை அட்டெண்ட் செய்தான் , அப்பொழுது ,”  அவர் என்னபா    ராஜ்      எப்டி     இருக்க ” என்று    கிருஷ்ணா    நலம்    விசாரித்தார் .

ராஜ் ,” நல்லா    இருக்கேன்   அங்கிள் ” என்றான் .

கிருஷ்ணன் ,” நா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும் பா, ஆதவ்  எங்க  ” என்றார்

ராஜ் ,” அவன்  மீட்டிங்ல  இருக்கான்  அங்கிள் , நீங்க     சொல்லுங்க ” என்றான்.

கிருஷ்ணன் , ” அப்போம்     நல்லதா      போச்சு பா , இங்க பாருப்பா ராஜ் நீ தான்  ஆதவ்  கீர்த்திய கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்க வைக்கணும் நாங்க சொன்னா  கேக்க   மாட்டிக்கான்,   இத  எனக்காக  நீ பண்ணும்  பா ” என்றார்

ராஜ் ,” சரி அங்கிள் ஆதவ் கிட்ட இத பத்தி நா பொறுமையா பேசுறேன் ” என்றான்

கிருஷ்ணன் ,” உன்ன  நம்புறேன்      ராஜ் ” என்று     கூறி     போனை   வைத்தார் .

ராஜ் ,” டேய் ஆதவ் என்ன கொஞ்சம் கிள்ளிபாறேன்” என்றான்

ஆதவ் ,” ஏன் “

ராஜ் ,” லைப்லேயே  பர்ஸ்ட்  டைம்  உங்க அப்பா என்கிட்ட இவ்வளவு  அன்பாவும்  ,மரியாதையாவும்   பேசிருக்காருடா “

ஆதவ் ,” நம்பர் ஓன் buisness  மன் டா , யார்   கிட்ட எப்டி பேசுனா தன் காரியம் நடக்கும்ன்னு  நல்லா தெரிஞ்சவரு , ஆமா இவருக்கு வேற  வேலையே     இல்லையாட , ஏன்டா  என்  வாழ்க்கையிலே தேவையே  இல்லாம  மூக்க நுழைக்கிறாரு , எவ்வளவோ தடவ  சொல்லிட்டேன் , புரிஞ்சிக்கவே மாட்டிக்காரு ” என்றான்

ராஜ் ,” அவரு    அவர்    கவலைய       சொல்றாரு “

ஆதவ் ,” உனக்கு    தெரியாதது  ஒன்னும் இல்லடா , நா என் மனைவி   மேல உயிரே வச்சிருக்கேன் டா ” என்னால , இன்னொரு பொண்ண என்  வாழ்க்கையில   நினச்சிக்கூட  பாக்க    முடியாது  என்றான் .

ராஜ் ,” ஆனா   அண்ணி    தான்     உன்கூட    இல்லையே “

ஆதவ் ,” ஆமா     இல்ல  அதனால     என்ன , அவளோட நியாபகம்      என்     கூடவே    தான்    இருக்கு ,  எங்களோட காதல்      ஒன்னும்    பொய்    இல்ல , அது  நூறு சதவீதம்  உண்மையானது , ஏதோ கெட்ட நேரம் இப்டி  ஆயிடுச்சு , என் லைப் டா நா பாத்துக்கறேன் , எனக்கு என் பையன் இருக்கான் , அவன்     முகத்த      பாத்தே  நா வாழ்ந்துக்குவேன் ” என்றான்

ராஜ் ,” ஆமா உனக்கு  ஒரு  wife  தேவபடாம இருக்கலாம் , ஆனா உன் பையன் , அவனக்கு  ஒரு  அம்மா  தேவபட்டா”

ஆதவ் ,” அவனுக்கு தேவபடாது , இதுவரைக்கும்  தேவ     படல இனிமையும்      தேவ     படாது   ” என்றான்

ராஜ் ,” அது     உனக்கு    எப்டி    தெரியும் “

ஆதவ் ,” துருவ்வும் நானும் அப்பா புள்ளயா பழகல , ரெண்டு பேரும்  பிரண்ட்ஸ் மாதிரி பழகுறோம்  , தேவபட்டா  என்கிட்ட கண்டிப்பா சொல்லிருப்பான் ” என்றான்

ராஜ் ,” அப்போம் சரி , இதுவரைக்கும் தேவ படல  இனிமே தேவ பட்டா “

ஆதவ் ,” என்னடா சொல்ற “

ராஜ் ,” உண்மைய சொல்றேன் டா , இங்க பாரு ஆதவ்  அவனக்கு அம்மா தேவ இல்லனா சந்தோசம் , தேவபட்டா  அத சமாளிக்கவும் நமக்கு தெரிஞ்சிருக்கணும் ” என்றான்

ஆதவ் ,” சரி  டா  இத  பத்தி  நா  துருவ்      கிட்ட    பேசுறேன் ” என்றான்

ராஜ் ,” எல்லாம் சரியாயிடும் நா எப்பவும் உன் கூடவே இருப்பேன் ” என்றான்

ஆதவ் ,” எனக்கு தெரியும் டா , அம்முக்கு அப்றோம் என் பிரச்சனையெல்லாம்     நா ஷேர் பண்றேன்னா அது நீ தான் டா ” என்று ஆதவ்  கூற

ராஜ் ,” நண்பேண்டா ” என்று  கூறி ஆதவ்வை கெட்டி அணைத்துக்கொண்டான் .

பிறகு     ஆதவ்  ,” நா ஒன்னும் கேக்கணும் டா , நீ இன்னும் இந்த ரிங் டோன்ன     மாத்தலையா ”

ராஜ் ,” எப்டி டா மாத்தமுடியும் இது நம்ம அப்பாகளுக்காகவே  ஸ்பெஷல்லா  செட் பண்ணினதாச்சே  , முதல்ல  வச்சதே  நீ தான” என்றான்

ஆதவ் ,” ஆமாட , இப்போலாம்   அப்டி   வைக்க  முடியல , பையன் இருக்கான் ,     நாம என்ன பண்றமோ அதையே    அவனும்    பாலோ பண்றான் , ஆயிரம் கேள்வி கேக்குறான் , இன்னொரு டிகிரி கூட படிச்சரலாம்    போல     இருக்கு    டா     ஆனா       அப்பாவா     இருக்கறது தான்     ரொம்ப      கஷ்டம் ” என்று    புலம்பிக்கொள்ள ,

ராஜ்      ஆதவ்வின்     புலம்பலை கேட்டு  சிரித்துவிட்டு ,” ஏது நீ இன்னொரு டிகிரி பாஸ்  பண்ணிருவ      இத    நாங்க நம்பனும் , யார்கிட்ட,”

ஆதவ் ,” ஆமா    இவரு     லண்டன்ல      MBA     முடிச்சிருக்காரு ,      நீயும் என்கூட சேந்தவன் தான , நானாவது ஒழுங்கா பிட்டாவது அடிப்பேன் , சார்க்கு     அதுவும்     வராது ” என்று கூற

ராஜ் ,”  விடு டா அரசியல்ல இதுலாம் சாதாரணமப்பா ” கூறி இருவரும் சிரித்தனர்   .

 

அலைகள் போல உன் நினைவுகள் என்னை தீண்ட , முற்றிலுமாய்  நான் நனைந்து போகிறேன் அன்பே  , அலைகளின் ஒவ்வொரு துளியும் உன்  நினைவுகளை  எனக்கு நியாபக படுத்துகின்றது , அந்த ஸ்பரிசம் ஒன்றே போதும்    நான்    உயிர்   வாழ …

 

 

நினைவுகள் 2

“ வீசும் காற்றுக்கு கூட தெரிந்திருக்கிறது ,

எனக்கு ஆறுதல் சொல்வதற்கு என்னவன்

என்னோடு இல்லை என்று.

அதனால் தான் என்னவோ  அது எனக்கு ,

ஆறுதல் சொல்வது போல லேசாகா வருடிச்செல்கின்றது.”

 

அன்று தன் கம்பெனியில்  அனைத்து  பணிகளையும் முடித்துவிட்டு ஆதிரா தன் வீட்டிற்கு  வரும்பொழுது  மணி சரியாக  ஒன்பதை  தொட்டிற்கும் .

ஆப்பொழுது  தனக்காக  சோபாவில்  காத்துக்கொண்டிருந்த  தன் அம்மாவிடம்  ,” என்ன மா இன்னும் தூங்காம இருக்கீங்க ” என்றாள்.

ஆதிரா நம் கதையின் நாயகி , தன் தாய் காயத்ரி  மற்றும் மகள் அனுஷாவுடன்  வாழ்கிறாள் , தனக்கென்று சொந்தமாக  மனோகர்  பேஷன் ஹவுஸ் என்கின்ற பேஷன் கம்பெனி ஒன்றை நடத்திவருகிறாள் , தந்தை இன்டர்நேஷனல் பைலட் என்பதால் வசதிக்கு குறைவு இல்லை , தன் அன்பு தந்தையும் காதல் கணவனும் தன்னுடன் இல்லை என்கின்ற குறையை தவிர வேற எந்த குறையும் இல்லை ,

ஆதிரா சிறுவயதில் இருந்தே எந்த ஒரு விஷயத்துக்கும்  அதிகமாக உணர்ச்சிவசபடுபவள் , கொஞ்சம் முன்கோபி , ஈகோவை  பற்றி கேக்கவே வேண்டாம் அது  கொட்டிக்கடக்கின்றது அதே சமயத்தில்  இலகியமனமும்  கொண்டவள் , attitude  அது நிறையவே இருக்கின்றது, இவையனைத்து  கலந்த கலவையே ஆதிரா , அழகு தயிரியம் துணிச்சல் என்று அனைத்தும் தனக்குள் கொண்ட இந்த காலத்து  ஜான்சி ராணி என்று தான் இவளை நாம் அழைக்க வேண்டும் , வேகம் அதிகம் விவேகம் குறைவு , புத்தியைவிட வார்த்தையின் கூர்மை கொஞ்சம் அதிதமாக இருப்பதால் , எடுக்கும் முடிவுகளில் பிழைகள் அதிக நேரம் எட்டிபார்ப்பதுண்டு , இருந்தும் மனதளவில் நல்லவள் என்பதால் இவளை அறிந்தவர்  அனைவர்க்கும் இவள் ஒரு வரம் .

காயத்ரி ,” அதுலாம் ஒன்னும் இல்லடா சாப்பாடு எடுத்துவைக்கிறேன் , ப்ரெஷ் ஆய்ட்டு வா ” என்றார்

ஆதிரா @ஆதி ,” அனுஷா தூங்கிட்டாளா  மா “

காயத்ரி ,” உனக்காக வெயிட் பண்ணிட்டே  இருந்தா , நா தான் சமாளிச்சி  தூங்க வச்சேன்  “

ஆதி ,” சரி மா நீங்க போங்க நா  இதோ வரேன் ” என்று கூறிவிட்டு தன் மகளின் அரைகுச்சென்றாள்  .

அங்கே தனது செல்ல மகள் தூங்குவதை ரசித்துவிட்டு மெல்ல அவளது அருகில் வந்து அவளது தூக்கம் கலையாமல் அவளின் தலையை கோதிவிட்டு , அவளது உச்சியில் தன் இதழ் பதித்தாள், பின்பு அங்கிருந்து அவள் செல்ல முயன்ற பொழுது அனுஷா தன் தாயின் கரங்களை பற்றினாள் அப்பொழுது ,

ஆதிரா ,” அனு நீ இன்னும் தூங்கல ” என்றாள் ,

அனு ,” தூங்கற  மாதிரி  நடிச்சேன் மம்மி ” என்றாள்

உடனே   ஆதி லேசாக முறைக்க ,அனு ,” சாரி சாரி அம்மா” என்றாள் உடனே ஆதி ,” ம்ம்ம் அம்மான்னு  சொல்லும் போது எவ்வளவு நல்லா இருக்கு ” என்று கூறி தன் மகளை கெட்டி அணைத்துக்கொண்டாள் .

ஆதிராவுக்கு மம்மி டாடி என்று அழைப்பது சுத்தமாக புடிக்காது  , அந்த சொற்கள்  குழந்தைகளுக்கும்  பெற்றோர்களுக்கும் இடைவேளியை  உண்டாக்குவதாக  ஆதிராவின்  கருத்து .

ஆதி ,” சரி டா நீ தூங்கு அம்மா சாப்ட்டுட்டு  வந்து உன் கூட படுத்துக்கரேன் ” என்றாள்

அனு ,” நோ  மா  இன்னைக்கு நானே உங்களுக்கு  சாப்பாடு செஞ்சி தறபோரேன் , ஸோ நீங்க எதுவும் பேசாம என்கூட கீழ வாங்க ” என்று கூறி தன் தாயை  தன்னுடன்  கீழே சமையல் அறைக்கு அழைத்துச்சென்றாள் .

சமையல் அறையில் தன் பாட்டியிடம் ,” நீங்க போய் உக்காருங்க பாட்டி , நா அம்மாவுக்கும் உங்களுக்கும்  நூட்ல்ஸ்ஸும் , எக் புர்ஜியும்  செஞ்சிதாரேன் ” என்று கூறி தன் தாயையும் பட்டியையும்  நாற்காலியில் அமரவைத்துவிட்டு , அவர்களுக்காக  தன் பிஞ்சு கரங்களால் சமைக்க துடங்கினாள் .

அதை பார்த்து கொண்டிருந்த  ஆதிராவுக்கு தன் கணவனின் நியாபகம் வந்தது , அவர்களின் திருமணம் முடிந்த துடக்கத்தில் , ஆதிரா வேலைக்கு  சென்று விட்டு  லேட்டாக வீட்டிற்கு வந்த பொழுது  அவளது கணவன்  தூங்கமால் கண்விழித்து  ஆதிராவுக்காக  காத்துக்கொண்டிருந்தான் . அப்பொழுது

ஆதிரா ,” என்ன தனு நீ இன்னும் தூங்கல , நா தான் வர்றதுக்கு  லேட் ஆகும்ன்னு  சொன்னேன்ல , ஏன் இன்னும் தூங்காம உடம்ப கெடுதுக்கர ம்ம்     ” என்று தன் கணவனின் அருகில் அமர்ந்து அவன் தோளில் தன் தலையை சாய்த்துக்கொண்டு வினவினாள்.

தனு,” அதெல்லாம் ஒன்னும் இல்லா , ரொம்ப  சோர்வா இருக்க , இதெல்லாம் கொஞ்ச நாளைக்கு தான் , சீக்கரமாவே எனக்கு வேலை கடச்சுரும்  அப்றோம்  நீ உன் வேலைய விட்றலாம்  பிறகு நா உன்ன ராணி மாதிரி பாத்துக்குவேன் ” என்று கூறினான்

ஆதிரா ,” எனக்கு தெரியும் தனு  எத பத்தியும் கவலை படாத , எல்லாம் சரியாயிடும் , அப்றோம் சொல்லு  நா சொன்னதெல்லாம் படிச்சியா , இந்த முறை எல்லா அரியர்சையும்   கிளியர் பண்ணிருக்கணும் , என்ன புரியுதா ”

தனு ,” யஸ் மேடம் ” என்று கூறி  இருவரும் சிரித்துக்கொண்டனர். பிறகு

ஆதிரா ,” சரி நீ சாப்டியா “

தனு ,” இல்ல மா உன்கூட சேர்ந்து சாப்டனும் தான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன் “

ஆதிரா ,” சரி நா போய் சீக்கரமா  சாப்டுறதுக்கு ஏதாவது  சமைக்கிறேன் ” என்று கூறி எழுந்தவளை தடுத்து , தன் மனைவியை உட்கார வைத்து , தனு ,” ஏற்கனவே  நீ ரொம்ப  களைப்பா இருக்க , ஸோ நானே இன்னைக்கு டின்னர் ரெடி பண்றேன் ” என்று  கூறினான் .

ஆதிரா ,” நீ சமைக்க போறியா , தனு உனக்கு வரதா வேலைய என் செய்யற ” என்று கூற

தனு ,” ஹலோ மேடம் என்  சமையல் திறமைய  நீ இன்னும் பாக்கலையே ,  அப்டியே ஆடி போயிருவ இப்போம் பாரு மாமா ஓட  கை ராசிய  ” என்று கூறி இல்லாத மீசையை முறிக்கி விட்டுகிட்டு , சமையல் அறைக்குச்சென்றான் .

ஆதிரா ,” பாப்போம் மாமா ” என்று நக்கலாக  கூறி சிரித்தாள் .

பிறகு கொஞ்சம் நேரம் கழித்து  தனு ,” ஆதி சமையல் ரெடி ” என்றான் ,

பிறகு தன் ஆதியை பார்த்து ,” மேடம்  வெல்கம் டு தனு கிட்சன் , என்ன சப்ட்றீங்க ” என்று கூறினான்

ஆதிரா ,” இன்னைக்கு என்ன ஸ்பெஷல் “

தனு ,” நூட்ல்ஸ்ஸும்  , எக் புர்ஜியும் இன்னைக்கு  ரொம்ப ஸ்பெஷல்”

ஆதிரா ,” ஒகே ” என்று கூறிவிட்டு பிறகு

ஆதிரா ,” வாசன எல்லாம்  நல்லா தான் இருக்கு ,  டேஸ்ட் எப்டி இருக்குன்னு பாப்போம் ” என்று  கூறி ஒரு வாய் எடுத்து சாப்பிட்டு விட்டு , நல்லா இல்லாததை போல தன் முகத்தை சுருக்கினாள் , உடனே , தனுவின் முகம் வாட  அதை பார்த்து  ஆதி கொஞ்ச நேரம் ரசித்துவிட்டு ,

பிறகு ,” அட லூசு சமையல் சூப்பர் சான்ஸே இல்ல என்று கூறி தன் கணவனை கெட்டி அணைத்துக்கொண்டாள் “.பிறகு இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஊட்டி விட்டு கொண்டே சாப்பிட்டனர் .

அந்த மகிழ்ச்சியான  பழைய நினைவுகளில் மூழ்கிருந்த ஆதியை , அனுஷா ,” அம்மா  சாப்பாடு ரெடி , டேஸ்ட் பண்ணி பாத்து எப்டி இருக்குன்னு சொல்லுங்க ” என்று கூறினாள் .

மகளின் குரல் கேட்டு தன் நிலை அடைந்த ஆதி , தன் கண்களின் ஓரம் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு , தன் மகளை பார்த்து சிரித்துவிட்டு  அவள் சமைத்த சமையலை ருசிக்க துடங்கினாள்  , தன் மகளின் சமையலில் தன் காதல் கணவனின் கை பக்குவம் கலந்திருப்பதை  உணர்ந்து   தன் செல்ல மகளை  உச்சி முகர்ந்து ,” ரொம்ப நல்லா இருக்குடா செல்லம் அப்டியே உன் அப்  ” என்று தன் வாயில் வந்த வார்த்தைகளை  ஒருவிதமாக  தடுத்து ,

தன் மகளிடம் ,” நல்லா இருக்கு மா ” என்று மட்டும் கூறினாள் . பின்பு அனுவிடம் ,” செல்லம் நீங்க உங்க ரூம்க்கு போங்க இதெல்லாத்தையும் எடுத்துவச்சிட்டு அம்மா உங்க கிட்ட வரேன் ” என்றாள் .

அனுஷாவும் சரி என்று கூறிவிட்டு தன் அறைக்குச்சென்றாள் . இதை அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்த காயத்ரி , ஆதிராவிடம் ,” என்ன மா மாப்பிள்ளயோட நியாபகம் வந்திருச்சா ” ,

ஆதிரா ,” அதெல்லாம் ஒன்னும் இல்ல ” .

காயத்ரி ,” ஒன்னும் இல்லன்னு உன் வாய் தான்  சொல்லுது ஆனா  உன் கண்ணு வேற சொல்லுதே ”

ஆதிரா ,” அம்மா ப்ளீஸ் , நீங்களா எதையாவது கற்ப்பன பண்ணாதீங்க, நா ஏன் அவன பத்தி நனைக்க போறேன் , நினச்சி நினச்சி உருகுனதெல்லாம் போதும் ” என்று ஒருவித கவலையோடு கூறினாள்

காயத்ரி ,” நீ நினைக்கிற  அளவுக்கு மாப்பிள்ள ஒன்னும் அவ்வளவு கெட்டவர் இல்ல மா , அவருக்கு நீ ஏன் ஒரு வாய்ப்பு குடுக்க கூடாது” என்றார் .

ஆதிரா ,” ஏன்  விருப்பத்துக்காக  நா அவன கல்யாணம் பண்ணி இழந்தது எல்லாம்  போதும் , இதுக்கு மேல இழக்க  விரும்பல , அதான் உறவே வேண்டாம்ன்னு  அத்து விட்டாச்சுல   அப்றோம் என்ன எல்லாம் முடிஞ்சி போச்சு மா , இனிமே முடிச்சி போட நினைக்காதீங்க ” என்று கூறினாள்.

காயத்ரி,” சரி  அவரு  வேண்டாம்  , நீ    இன்னொரு    கல்யாணமாவது    பண்ணிக்கலாம்ல   எத்தன  நாளைக்கு  தான் இப்டியே இருப்ப , அனுக்காகவாது  நீ  ஒரு முடிவு  எடுக்கணும் மா  , என்  காலத்துக்கு   அப்புறம்  நீ   ரொம்ப  கஷ்ட  படுவ  டா ” என்றார்

ஆதிரா ,” அம்மா  ப்ளீஸ்  இன்னொரு  கல்யாணத்த   பத்தி  என்னால  யோசிக்க  கூட  முடியாது  , அத  பத்தி  இனிமே  என்கிட்ட  பேசாதீங்க ” என்று கூறிவிட்டு  தன் மகளின் அறைக்கு வேகமாக விரைந்தாள் .

காயத்ரி  ,” உன்ன  எப்டி  சம்மதிக்க  வைக்கணும்ன்னு   எனக்கு   தெரியும்  ஆதி ” என்று தனக்குள்  பேசிக்கொண்டார்.

அங்கே அறையில் தன் மகளை தட்டி கொடுத்து தூங்கவைத்துக்கொண்டே ஆதி  ,” ஏன் தனு இப்பிடி பண்ண , உன்னால , நா எவ்வளவு கஷ்டம்  அனுபவிக்கிறேன் தெரியுமா ”  என்று தன் மனதிற்குள்  ஒரு நூறு முறை அழுது கொண்டாள் .

பின்பு  கொஞ்ச நேரம்  தன் மகளுக்கு தட்டிக்கொடுத்துவிட்டு  தன் அறைக்கு சென்று கண்களை  மூடி உறங்கினாள்.

இங்கே  ஆதிராவின்  பழைய  நினைவுகள் அவளது  பாலைவனமான வாழ்க்கையில்  மேலும்  துயரம் சேர்க்கும் வகையில்  அமில மழையை பொழிய

மறுபுறம்  ஆதவ்வோ  தன் பழைய நினைவுகள் என்னும் பன்னிர் மழையில் சந்தோஷமாக  நனைந்து கொண்டிருக்கிறான் .

ஆதவ் ,” ஏண்டா அப்டி என்ன இந்த படத்துல  இருக்குன்னு  நீயும் உன் அம்மாவும் இத ரசிச்சி ரசிச்சி  பாக்கீங்க “

துருவ் ,” நானும் அம்மாவுமா  , அம்மா எங்க பா “

ஆதவ் ,” இங்க இல்லடா , ஒரு காலத்துல , உன் அம்மாவுக்கு இந்த  smurf மூவி நா உயிரு , எல்லா விஷயத்துலயும்  உங்க அம்மாவ  அப்டியே உரிச்சி வச்சிருக்க டா ” என்றான்

துருவ் ,” டிஸ்டர்ப்  பண்ணாம  படத்த பாருங்க பா “

ஆதவ் ,” பொம்ம படம் பாக்குற வயசாட எனக்கு ” என்று புலம்ப துருவ் தன் கையில் இருந்த சிப்ஸை தன் தந்தையின் வாயில் நுழைத்து அமைதியா இருங்க என்று செய்கை செய்தான் .

பிறகு தந்தை மகன் இருவரும் சேர்ந்து  படத்தை பார்த்துகொண்டிருந்தனர் , அப்பொழுது    துருவ்  தன்னை  அறியாமல்  தூங்கி  விழ , ஆதவ் சிர்த்துக்கொண்டே  , தன் வாழ்க்கையில் சற்று பின்னோக்கி சென்றான் , முன்பு ஒரு தடவை  அம்முவும்  ஆதவ்வும் இவ்வாறு  படம் பார்த்துக்கொண்டிருந்த  பொழுது  , அம்மு தூங்க ஆரம்பித்துவிட்டாள் . அப்பொழுது ஆதவ் , மெல்லமாக  அவளது கையில் இருந்த ரிமோட்டை  எடுத்து  டிவியை அணைத்துவிட்டு , அம்மு தூங்கும் அழகை  ரசித்துக்கொண்டே  அவளது காதில் வருடும்  தென்றலை போல ,” ஐ லவ் யு  மை டியர்  வைப் ” என்று கூறி அவளது நெற்றியில் முத்திரை பத்திதான்  ,

அந்த சபரிசத்தில்  அவள் சற்று சினுங்க  , ஆதவ் ,’ ஸ்ஸ்ஸ்’ என்று  சேட்டை  செய்யும்  தன்  இதழை   லேசாக  கண்டித்துவிட்டு , அவளது தூக்கம் கலையாமல்  மெல்லமாக  தன் கையில் ஏந்தி  பெட்டில் படுக்க வைத்து  , எந்த  குளிர் காற்றும் தன்  பத்தினியை  தீண்ட கூடாது என்பதற்காக  போர்வையை  பதுனமாக மேல போர்த்திவிட்டு  , நெற்றியில் சரிந்த  மயில் ரேகையை போன்ற மென்மையான தன் அவளின் ஒற்றை  கேசத்தை  அவளது காதோரத்தில்  கொண்டு சேர்த்தான் .

பின்பு  தன் அவளின்  தலையை  மெல்லமாக  கோதிவிட்டவாரே  , அவளது தூங்கு அழகை ரசித்துக்கொண்டிருந்தான் . 

அந்த வேலையில்  துருவ் தூங்கி தன் மடியில் விழ ஆதவ் நிகழ் காலத்துக்கு வந்தான் , பிறகு  டிவியை  அணைத்துவிட்டு , தன் மகனின் கன்னத்தில் தன் இதழ் பதித்துவிட்டு  , அவனை  மெல்லமாக  தூக்கி  பெட்டில் படுக்கவைத்து  , அவனது தலையை கோதி விட்டவரே  , மெல்ல மெல்ல தன் கண்களை மூடி  தன் நித்திரையில்  மூழ்கினான் .

அடுத்த நாள்  காலையில்  ஆதிரா ,  அனுவை எழுப்பினாள்  , அனு ,” இன்னும் கொஞ்சம் நேரம் மா ” என்று  தன் போர்வையை இலுக்க

ஆதிரா ,” குட்டி மா  இன்னைக்கு உன்னோட பர்ஸ்ட் டே கிளாஸ் , அதுவும் புது ஸ்கூல் இன்னைக்கு லேட் ஆஹ் போலாமா , நோ மா , சீக்கரம் ” என்று ஒருவழியாக தன் மகளை எழுப்பி அவளை தயார்  செய்து   கொண்டிருந்தாள் .

இன்றைக்கு  அனுஷாவின்  மூன்றாம் வகுப்புபின்  துடக்க நாள் , அதுமட்டும் அல்லாது  அனுஷா இன்றில் இருந்து புது பள்ளியில் படிக்க இருக்கிறாள் ,  சென்னையிலே  பெரிய  பள்ளி .

ஆதிரா ,” புது ஸ்கூல்  எக்சைடிங்கா  இருக்கா   டா “

அனுஷா ,” நோ மா  கவலையா இருக்கு , என்னோட ஓல்ட் பிரண்ட்ஸ் எல்லாரையும்  மிஸ் பண்ணுவேன் மா “

ஆதிரா ,” ஒ  என் செல்ல குட்டி , இது ரொம்ப பெரிய ஸ்கூல் டா , நோ டென்ஷன் , கவலை இல்லா மா நல்லா  படிக்கணும் சரியா ” என்றாள்

அனுஷா ,” ஒகே மா “

ஆதிரா ,” என் குட்டி மா , சரி சீக்கரம் ரெடி ஆகி கீழ போ  , அம்மாவும்  கீழ  வந்திர்ரேன் ”  என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றாள்

அங்கே  துருவும் , ஆதவும்  ஒன்றாக  கிளம்ப  , ஆதவ் துருவ்வின்  ஷூவுக்கு பாலிஷ் போட , துருவ் ஆதவ்வின் ஷூவுக்கு பாலிஷ் போட்டுக்கொண்டிருந்தான் .

பிறகு தந்தையின் டையை  மகன் , மகனின் டையை தந்தை தேட  என்று இருவரும்  பள்ளிக்கும் , அலுவலகத்துக்கும்  செல்வதற்குள்  அந்த அறையில்  தங்கள் பொருட்களளோடு ஒரு இரெண்டாம் உலக போரே நடத்திவிட்டனர் .

அன்றில் இருந்து துருவ்க்கும்  பள்ளி  ஆரம்பிக்கின்றது , இரெண்டாம் வகுப்பில் இருந்து துருவ் மூன்றாம் வகுப்பிற்கு  முன்னேறி உள்ளான் .

ஆதவ் ,” துருவ் சீனியர்  ஆய்ட்ட ,  யாரையாவது  இன்னைக்கு நீ கண்டிப்பா  ராக்கிங்  பண்ணிட்டு  தான் டா வரணும் ,  நீ என் புள்ளங்கரத  கண்டிப்பா  ப்ருவ்  பண்ணனும் டா ” என்று தன் மகனின் நெற்றியில் திலகம் வைக்காத  அளவுக்கு அவனை  போருக்கு தயார் செய்வதுபோல் , பள்ளிக்கு தன் பாணியில் தயார் செய்து கொண்டிருந்தான் .

துருவ் ,” அப்பா  இப்டியே என்கிட்ட  பேசிட்டு இருங்க  , அப்றோம் அவ்வளவு தான் , இன்னைக்கு நா ஸ்கூல்லுக்கு  போன மாதிரி தான்”  என்றான்

ஆதவ் ,” சரி டா ” என்று கூறி அவனை கீழே அழைத்து வந்தான் .

அங்கே அனுஷா  சாப்பிட அடம் பிடித்து  சோபா மீது ஏறி தன் பாட்டிக்கு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தாள் , இவள் ஓட பாட்டி  தூரத்த என்று ஒரு சின்ன கிருஷ்ண லீலையை  அரங்கேற்றிக்கொண்டிருந்தாள்  ,

பின்பு சோபா மீது ஏறி தைய தக்க என்று குதிக்க ,

அங்கே  வந்த ஆதிராவுக்கு இதை பார்த்ததும் , பழைய நினைவு ஒன்று  எட்டி பார்த்தது ,” இப்படி தான் ஆதிராவின் கணவன் தனுவும்  கிரிக்கெட்டில்  இந்திய ஜெய்த்து விட்டது  என்பதற்காக  சந்தோஷத்தில் கட்டில் மீதேறி  கத்தினான் ,

அப்பொழுது ஆதிரா ,” தனு கீழ இறங்கு , இந்த மாதிரி பெட் மேல ஏறாத அது எனக்கு கொஞ்சமும் புடிக்காது ” என்றாள் ,

உடனே  அவன் சரி என்று கூறி அவள் மீது தாவினான் ” அந்த நியாபகம்  ஆதிக்கு வர  , தன் மகளும் தன் கணவனை  போலவே இருக்காளே என்கின்ற கோபம்  அவளுக்கு வந்தது , ஆனால் வந்த கோபத்தை அடக்கிக்கொண்டு  தன் மகள் முன்பு ,” அனு என்ன பழக்கம் இது முதல்ல கீழ இறங்கு , இந்த மாதிரி  எல்லாம் நடந்துக்க கூடாது ” என்றாள்  ,

உடனே அவள் ஆதியின் கழுத்தை பிடித்து தொங்கினாள் , பிறகு ஒரு வழியாக , மகளை  தயார் செய்து  அவளுக்கு  சாப்பாடு  கொடுத்து , காரில் ஏற்றினாள் ,

அப்பொழுது காயத்ரி ,” கார்ல  என்ன மா இவ்வளவு  scratch  ஆகிருக்கு ” என்றாள்

ஆதி ,” எல்லாம் அந்த ஆதவ்வோட வேல, அவன அன்னைக்கே எதாவது ஒரு வழி பண்ணிருக்கணும் , என்ன பண்றது ரோடு ஆச்சேன்னு விட்டுடேன்   ” என்று கோபத்தோடு கூறினாள்

காயத்ரி ,” சரி மா விடு ஏன்  எல்லாத்துக்கும்  இப்டி கோபப்படுற , பொறுமையா இருடா “

ஆதி ,” சரி என்று கூறி ” தன் மகளை  கூடிக்கொண்டு  பள்ளிக்கு  பயணித்தாள் .

அன்பே எங்கிருக்கிறாய் , காற்று என்னை தழுவும் பொழுது  கூட உந்தன் ஸ்பரிசத்தையே  நான் உணர்கின்றேன் …

 

நினைவுகள் 3

“தனிமை நமக்கு வலியை உணரவைக்கின்றது

நம் நிலையை  எடுத்துரைக்கின்றது

புது வழியை  காண்பிக்கின்றது

ஆனால் பிரிவை தாங்கும்  வலிமையை

மட்டும் கற்றுக்கொடுப்பதில்லை !”

இன்று  முதல் நாள்  என்பதால்  ஆதிரா  அனுஷாவை  பிரின்சிபால் அறைக்கு  முதலில் அழைத்து சென்றாள் , அவர்  அனுஷாவிடம் ,” அனுஷா ஆல் தி வெரி பெஸ்ட்  , யு கேன் கோ டு யுவர் கிளாஸ் நவ் ” என்றார்.

அனு,” தங்க யு மேடம் ” என்றாள்.

பின்பு  புயுனை   வரசொல்லி  ,” நீங்க அனுஷாவ  திர்ட் ஸ்டாண்டர்ட் எ செக்ஷன்க்கு  கூட்டிட்டு போங்க ” என்றார்.

புது  பள்ளி  முதல்   நாள் என்பதால்  ஒருவித  பயத்தோடு அனுஷா  தன் தாயிடம்   போயிட்டு வரேன்  என்பது  போல்  பார்க்க  .

அதை  புரிந்துகொண்ட   ஆதிரா  , எல்லாம் சரியாகிடும்  நா உன்கூடவே  இருக்கேன்  என்பதை போல்  கண்ணசைத்தாள் .

பின்பு  அனு  ப்யூனுடன்  தன்  வகுப்பிற்கு  சென்றாள்  ப்யூன் ,” பாப்பா இதான் உன் கிளாஸ் ” என்றார்

அனு ,” தங்க    யு   அங்கிள் ” என்றாள் .

ப்யூன் ,” பரவாயில்ல மா ” என்று கூறி விட்டு  அவர் அங்கிருந்து சென்றார் .

அனு  வகுப்பின்  வாசலில்  நின்று கொண்டு  உள்ளே போகவா வேண்டாமா  என்று பார்த்துக்கொண்டிருந்தாள் , உள்ள அனைத்து மாணவர்களும் ஒருவருக்கொருவர் பேசி விளையாடி கொண்டிருந்தனர் .

ஒருவித  யோசனைக்கு  பிறகு   அனு  அறைக்குள்  நுழைந்தாள் , அங்கே  அனு உள்ளே வந்தவுடன்  அனைத்து  மாணவர்களும்  அமைதியாக  அவளையே  பார்த்தனர் .

எங்கே அமர்வதென்று  புரியாமல்  ஒவ்வொரு  இடமாக  வந்தாள்  , காரணம்  யாரும்  அவளுக்கு  இடம் தரவில்லை  , அனைவரும்  அனுஷாவிற்கு  இடம் அளிக்க  மறுத்தனர் , கடைசியில்  ஒரு  பெஞ்ச்  மட்டும்    காலியாக     இருக்க     அங்கே     வந்து      அமர்ந்தாள் .

அதை   பார்த்தவுடன்   அனைத்து மாணவர்களும்   தங்களுக்குள்  ஒருவரை  ஒருவர்  பார்த்துவிட்டு   , அவள்  முன்பு  வந்து   நின்றனர் , அதை பார்த்த  அனு  கொஞ்சம் நேரம் அமைத்தியாக  அவர்களை  பார்த்துவிட்டு , பிறகு ,” என்ன  வேணும் ” என்றாள்

அதற்கு  அவர்களில்  ஒருவன் ,” யார    கேட்டு      இங்க  வந்து   உக்காந்த  ” என்றான்

அனு ,” ப்ளேஸ்   ப்ரீயா   இருந்துச்சு  அதான்  உக்காந்தேன்  ” பிதிலுக்கு  அவன் ,” ஒ    ப்ரீயா    உக்காந்திருவீன்களோ  , permission  கேக்கணும்ன்னு  தெரியாது  ”

அனு ,”  யார்கிட்ட  கேக்கணும் ”  என்று கூறி  முடிக்கவும்

அங்கிருந்து  ,” ஏன்  கிட்ட  கேக்கணும்  ”  என்று  குரல் கேட்டது .

உடனே  அனுஷா   யார்  இது என்பதை  போல்  எட்டி  பார்க்க  ,  அனுவை  சுற்றி  இருந்த   அனைவரும்   விளகினர்  , பிறகு  அனுவை   நோக்கி   தன் நண்பர்கள்  புடைசூழ  ‘ ஹே மச்சான் என்ன வெச்சான் …’   என்று  situation  ஒரு  வித  ட்யூன் போட  துருவ்  ஒய்யாரமாக  நடந்து வந்துக்கொண்டிருந்தான் .

பிறகு  துருவ்  அனுவிடம்  வந்து ,” இது  என்  இடம்  இங்க  வராத ,’ தட்டி  தூக்கிருவேன் ‘ என்றான் .

இதை கேட்ட  அனு  ,” மிஸ் கிட்ட  சொல்லிருவேன் ” என்றாள் , உடனே  துருவ் ,” ஒ அப்டியா  அப்போம்  போ   போய்   சொல்லு , ஏய்     இங்க இருக்கணும்னா  நா சொல்லற  எல்லாத்தையும்  கேக்கணும்  ஏன்ன நா தான் இந்த கிளாஸ்சோட  லீடர்  புரியுதா  ” என்று  கூறி  அவளது   ஸ்கூல்  பக்கை  எடுத்து  கீழே  போட்டான்.

உடனே  அனு  துருவ்வை  தள்ளிவிட  உடனே  துருவ்க்கு  கோபம்  வந்து  அனுவை  கீழே தள்ளிவிட்டான்  , உடனே  அனு  அழுதுகொண்டே  ,”என்  அம்மா  கிட்ட  சொல்றேன் ” என்று   கூறிக்கொண்டே  பிரின்சிபால்  அறைக்கு  சென்றாள் , அங்கே  அவர்  அவளை  எவ்வளவோ  சமாதானம்  செய்து  பார்த்தும்  அனு  சமாதானம்  ஆகவில்லை  ,உடனே   பிரின்சிபால்   துருவ்வை   அழைத்து  விசாரிக்க  அவன்  ,” அவ   தான்   மேடம்   முதல்ல  என்ன தள்ளிவிட்டா ”  என்றான்

அனு ,” இல்ல  மேடம்   அவன்   தான்   என்  பக்க   கீழ தூக்கிபோட்டான்” என்றாள்

இவ்வாறு  மாத்தி  மாத்தி  இருவரும் சண்டை  போட  , அனு  மேலும்  அழ ஆரம்பித்துவிட்டாள்   உடனே  பிரின்சிபால்  ,துருவ்வை  தன் கிளாஸுக்கு  போக  சொல்லிவிட்டு , ஆதவ்வுக்கும்    ஆதிரவுக்கும்  ,   போன்  பண்ணி  உடனே  வருமாறு  கூறினார் .

ஆதிரா  கொஞ்சம்  நேரம்  கழித்து  அங்கு  வர  தன்  மகள்  அழுவதை  பார்த்து  பதறிபோய் ,” என்னடா  என்ன ஆச்சு  ” என்று கேட்டாள்

அனு   நடந்த  அனைத்தையும்  கூற , ஆதிரா பிரின்சிபாலிடம் ,” என்ன  மேடம்  இது , யார்  அந்த  பையன்  , அவன  உடனே  வர  சொல்லுங்க  ” என்றாள்

பிரின்சிபால் ,” நீங்க  கொஞ்சம்  பொறுமையா  இருங்க  ஆதிரா  ,  அவன்   ரொம்ப  நல்ல  ஸ்டுடென்ட்  , ஸ்போர்ட்ஸ் ,  studiesன்னு    எல்லாத்திலையும்   நம்பர்   ஒன் ” என்றார்

ஆதிரா ,” ஒகே  மேடம்   , ஆனா  disciplineல  “

பிரின்சிபால் ,” அதிரா , இது  சரி இல்ல  நீங்க  இந்த  மாதிரி   பேசகூடாது  எங்க  ஸ்கூல்லுக்குன்னு   ஒரு மரியாத  இருக்கு  disciplineல நாங்க தான்  நம்பர் ஒன் , எங்க  ஸ்கூல்  ஸ்டுடென்ட்ஸ்   எல்லாரும்  disciplineல பெஸ்ட்  இந்த  மாதிரி  நடக்குறது  இது தான்   பர்ஸ்ட்  டைம்  , ” என்றார் .

ஆதிரா ,” சாரி மேடம்  ஏதோ  கோவத்துல  பேசிட்டேன் , சரி  இது வர அந்த   பையன்  மேல  என்ன   action   எடுத்திருக்கீங்கன்னு  சொல்லுங்க”

பிரின்சிபால் ,” ஆதிரா கொஞ்சம் பொறுமையா  இருங்க , அவனும்  சின்ன பையன்  , இத பொறுமையா தான் handle  பண்ணனும் , அவனோட  அப்பாக்கு   இன்பார்ம்  பண்ணிருக்கேன் , அவரும்  வரட்டும்  ” என்றார்  .

ஆதிரா ,”  என்ன மேடம்  இது  என்  பொண்ண  அழவச்சிருக்கான் , நீங்க  என்னனா அவன்   அப்பா   வர்றவர  பொறுமையா  இருக்க  சொல்றீங்க  சாரி மேடம் , எனக்கு இப்போவே   அந்த  பையன  பாக்கணும்  , ப்ளீஸ்  வர சொல்லுங்க ” என்றாள் .

பிரின்சிபால் ,” ரிலாக்ஸ்  ஆதிரா  நிலமைய  புரிஞ்சிக்கோங்க  ” என்றார்

ஆதிரா ,” மேடம்   அவன் கிட்ட  பொறுமையா  தான்  நடந்துக்குவேன், ப்ளீஸ் வர சொல்லுங்க ” என்றாள்

துருவ்வுக்கு   தகவல்  அனுப்பப்பட்டு  அவன்  பிரின்சிபால்  அறைக்கு  அனுமதி   பெற்று  உள்ளே  வந்தான் .

அவனை    பார்த்த  ஆதிரா  ,  தன்  அருகில் வருமாறு  கூறினாள் , அவன்  ப்ரின்சிபலை  ஒரு முறை  பார்க்க , அவர்  கண்ணசைத்தவுடன்   அதிராவின்  அருகில்  சென்றான்  , ஆதிரா  ,”  உன் பேர்  என்ன ” என்றாள் , பதிலுக்கு  அவன் ,” துருவ்” என்றான்

ஆதிரா ,” எதுக்கு என் பொண்ண  அடிச்ச  துருவ்  , இத தான்  உன்   அப்பா  அம்மா  உனக்கு   கத்துகுடுத்துருக்காங்களா, பதில்  சொல்லு பா   ” என்று கேட்டாள்

துருவ் ,” தன் கருவிழியை  கீழ் இறக்கி  பாவமாக   , ” எனக்கு  அம்மா இல்ல” என்றான் .

இதை  கேட்ட  ஆதிராவின்  தாய்  உள்ளம்  சற்று  இளகியது   , அவனை  ஒரு வித  கருணையோடு  பார்த்தாள்.

ஆனால்   மறுநிமிடமே  துருவ்  தன்  புருவத்தை  உயர்த்தி  ஆதிராவை  நோக்கி  நேருக்கு  நேராக ,  பார்த்து

” ஆமா  என்  அப்பா  எனக்கு  இத  தான்  சொல்லி   தந்தாரு ,  நா போகட்டா  ” என்றான் .

ஆதிரா , தனக்குள் ,” ஐயோ  பாவம்ன்னு  நினச்சா ,  இந்த  போடி  பயலுக்கு  எவ்வளவு  திமிரு ”  என்று கூறிக்கொண்டாள்.

பிரின்சிபால் ,” துருவ்  behave  யுவர்    ஸெல்ப்” என்றார்

துருவ் ,” யஸ்  மேடம் “

பிரின்சிபால் ,” ஆதிரா  ஆன்டிகிட்ட    சாரி     கேளுப்பா ” என்றார்

துருவ் ,” சாரி  ஆதிரா  ஆன்டி ” என்றான்

ஆதிராவுக்கு   துருவ்  மீது  கோபம்   வந்தாலும்  , அவன் முகத்தை  பார்க்கும் பொழுது  கோபப்பட  தோணவில்லை  . ஆனாலும்  அனுஷாவின்  கண்ணீர்  அவளது  தாய்மையை  தூண்டிவிட .

அனுஷா ,” துருவ்  நீ  என் பொண்ண   chairரல  உக்கார  கூடாதுன்னு  சொல்லிருக்க  , அது போதாதுன்னு   கீழ  தள்ளிவிட்ருக்க , ஏன்  இப்டி  பண்ணின   ஏன்  கிட்ட  சொல்ல  வேண்டாம்  , பிரின்சிபால் மேடம் கிட்டயாவது  சொல்லு ” என்றாள்

துருவ் ,” ஒ காட்  , நா  தான்  சொன்னேன்ல , அவ   தான்   என்ன  பர்ஸ்ட்  தள்ளினா   அதான்  நானும்  தள்ளினேன்  , எல்லாத்துக்கும்   மேல   நா  உக்கார்ற  எடத்துல  அவ  வந்து  உக்கார்ந்தா , இங்க  உக்காராதன்னு  சொன்னேன்  அதுக்கு  கேக்க மாட்டேன்  என்ன  பண்ணணுமோ  பண்ணிக்கோன்னு  சொன்னா  , அதான்  அப்டி  செஞ்சேன் ” என்றான்

ஆதிராவுக்கு  கோபம் வந்து ,” அதுக்காக  என்ன வேணும்னாலும்  பண்ணுவியாடா  ” என்று  அவன்  தோளை  பிடித்து  கொஞ்சம்  அதட்டி  கேட்டாள்.

பிரின்சிபால் ,” ஆதிரா ” என்று  தடுப்பதற்குள்

அப்பொழுது   ,” டோன்’ட்  டச்  மை  சன் ”  என்ற  குரல் கேட்க்க   அனைவரும்  வாசலை  பார்த்தனர் ,  அங்கே  ஆதவ்  நின்றுக்கொண்டிருந்தான்  , அவனை  பார்த்தவுடன்  துருவ்   அப்பா  என்று  ஓடி  சென்று  அவனை  கெட்டி பிடித்துக்கொண்டான் , ஆதவ்வும்  துருவ்வை   தன் கரங்களில்  ஏந்தி கொண்டு  , ஆதிராவை  அதிர்ச்சியோடு  பார்த்தான்  , ஆதிராவும்  அதே  அதிர்ச்சியில்  தான்  இருந்தாள் , இருவரும்  ஒருவருக்கு  ஒருவர்  நீயா  நீயா  என்பதை  போல்    பார்த்துக்கொண்டிருந்தனர் .

பிரின்சிபால் ,”  வாங்க  Mr  ஆதவ் , வந்து  உக்காருங்க  ” என்றார்

ஆதவ்  ஆதிராவை  பார்த்துவிட்டு  ஒருவித  தயக்கத்தோடு  அவள் அருகில்  வந்து  அமர்ந்தான்

பிரின்சிபால் ,” நா  உங்கள  இங்க  வர  சொல்லிருக்கேன்னா  , துருவ்வ  பத்தி  உங்க  கிட்ட பேசனும் “

ஆதவ் ,” சொல்லுங்க மேடம் “

பிரின்சிபால் ,” இன்னைக்கு  துருவ் ” என்று  ஆரமபித்து  அனைத்தையும்  கூறினார்.

 பின்பு  அவர்  இதெல்லாம் போதாதுன்னு ,” எங்க அப்பா எனக்கு இத  தான்        சொல்லி      தந்தாருன்னு  வேற  சொல்றான் ” என்றார்   ,

 அதைக்கேட்ட  ஆதவ்  துருவ்வை  பார்க்க  அவன்  தன் தந்தையை  பார்த்து  கண்ணடித்துவிட்டு  , வேறெங்கோ    பார்த்து    கொண்டிருந்தான்  , உடனே

 ஆதவ்    தன்   மனதிற்குள் ,” அட     பாவி  ஏண்டா    போய்யும்  போய்யும்  இவ  கிட்டயா  பிரச்சன  பண்ணின , இதுல  என் பேர  வேற  கோர்த்து     விட்டுட்டியே ” என்று புலம்பிக்கொண்டான் .

பின்பு  ஆதிரா  பக்கம்  பார்க்க   அவளது  கண்கள்   எரிமலையை  போல  எரிந்து  கொண்டிருந்தது. பிறகு  ஆதவ்  ப்ரின்சிபளிடம் ,” மேடம்  உங்களுக்கே  தெரியும்  துருவ்  ரொம்ப   எச்செல்லேன்ட்  ஸ்டுடென்ட்  இதுவர  அவன் மேல  ஒரு கம்ப்ளைன்ட்டும்   வந்ததில்ல, எல்லாத்துக்கும்  மேல  தப்பு  அவன் பேருல  மட்டும்ன்னு  சொல்ல  முடியதில்ல  ” என்றான்

ஆதிரா ,” தப்பு  உங்க  பையன்  பேருல  இல்லாம , வேறு யார் பேருல “

ஆதவ் ,”  மேடம்  நா    உங்க  கிட்ட      தான்    பேசிட்டு     இருக்கேன் “

ஆதிரா ,” நானும்  உங்ககிட்ட  தான்  மேடம்  பேசிட்டு  இருக்கேன் ” என்றாள். ஆதவ் ,”   அவங்க  பொண்ணும் தான்  என் பையன  தள்ளி  விட்ருக்காங்க   ஸோ     ரெண்டு      சைடும்   சரியா  போச்சி       ” என்றான்

ஆதிரா ,”  என்ன  சரியா போச்சா  , உங்க  பையன்   என்  பொண்ணுகிட்ட கொஞ்சம்  கூட  discipline  இல்லாம   நடந்திருக்கான் , பத்தா குறைக்கு  அவள  கீழ  தள்ளிவிட்டு  அழவச்சிருக்கான் , அது  சரி  உங்க  பையன் கிட்ட  discipline எல்லாம்  எதிர்பாக்க  முடியுமா , உங்க  கிட்ட  இருந்தா  தான  உங்க  பையன்   கிட்ட  இருக்கும் ” என்றாள்

ஆதவ் ,” வாட்    டூ   யு  மீன் ”

ஆதிரா ,” உண்மைய  தான்  சொல்றேன்  , இது   தான்  பையன  வழக்குற  லக்ஷனமா  ” என்றாள்

ஆதவ் ,” அது  சரி  நீ  உன் பொண்ண  ரொம்ப  நல்ல வழத்துவச்சிருக்க  பாரு  ,  ஒரு விஷயத்த  மறந்திறாத  உன் பொண்ணு  தான்  முதல்ல  என் பையன்  தள்ளி விட்ருக்கா , ஸோ  உன் பொண்ணுக்கு  தான்  discipline இல்ல , அப்டியே      உன்ன  மாதிரியே  திமிரா  உன்  பொண்ண  வழத்துவச்சிருக்க ” என்றான் , ஆதிரா ,” யு  how  dare  யு , எங்க போனாலும்  நிம்மதியா  இருக்க  விடுறதில்ல  Buisnessல  இப்போம்  லைப்ல , சரியான  nonsense   ” என்றாள் .

இவ்வாறு  இருவரும்  ஒருவருக்கு ஒருவர்   மாத்தி மாத்தி  மோதிக்கொண்டனர்  , இதை  கவனித்த  பிரின்சிபால் ,” ஸ்டாப்  இட்  போத்  அப்  யு ,  பிரச்சன  குழந்தைங்க கிட்ட  இல்ல  உங்ககிட்ட  தான்  இருக்கு , குழந்தைங்க  முன்னாடி  இப்டியா  சண்ட  போடுவிங்க, கொஞ்சம்  பொறுப்பா  நடந்துக்கோங்க   ”  என்றார்

ஆதவ்வும்  ஆதிரவும்  ,” சாரி  மேடம்  ” என்றனர்

பிரின்சிபால் ,” ஒகே ” என்று  கூறிவிட்டு .

துருவ்வையும் , அனுஷாவையும்    அழைத்து  ,” துருவ்  அனுஷா  உங்க  ரெண்டு  பேர்  மேலையும்  தப்பு  இருக்கு ,  இனிமே  அப்டி  நடந்துக்க  கூடாது  , ரெண்டு  பேரும்  நல்ல  பிரண்ட்ஸா  இருக்கணும்” என்றார்

இருவரும்  தலையை  ஆட்ட ,” தட்ஸ்  குட்  கம்  ஆன்    ரெண்டு  பேரும்  ஷேக்    ஹான்ட்ஸ்     பண்ணிக்கோங்க  ” என்றார்

துருவ்வும்  , அனுஷாவும்  ஒருவருக்கொருவர்  சாரி  கேட்டுவிட்டு  , ஷேக்    ஹான்ட்ஸ்      செய்து   கொண்டனர் .

பிறகு பிரின்சிபால் ,”  வெரி   குட்  போத்   ஆப்  யு  கோ  டு  யுவர்  கிளாஸ்” என்றார்

இரெண்டு   பேரும்  அங்கிருந்து  சென்றனர்  , பின்பு   பிரின்சிபால்  ஆதிரவுக்கும் , ஆதவ்வுக்கும்  அட்வைஸ்  செய்தார்  , பிறகு  இருவரும்  அங்கிருந்து  விடை  பெற்றுக்கொண்டு  வெளியே  சென்றனர்  , அப்பொழுதும்  இருவரும்  ஒருவருக்கொருவர்  முறைத்துக்கொண்டு   பார்கிங்  ஏரியாவுக்கு  வந்தனர் , அங்கு   துருவ்  நின்னுக்கொண்டிருந்தான் , துருவ்வை   பார்த்தவுடன்  ஆதவ்  அவன் அருகில்  வந்து  அவனை  தூக்கிக்கொண்டு  , என்ன  மா  என்னாச்சி  இங்க    ஏன்     நிக்குற  என்றான்.

அப்பொழுது  அவன்   தன்   தந்தையை   ஆதிராவின்  அருகில்  அழைத்து  செல்ல  கூறினான்  , ஆதவ்வும்   ஒன்றும்  விளங்காமல்   அவன்   கூறியவாரே  செய்தான்  , ஆதிரா  ஆதவ்  இருவரும்  துருவ்வை   பார்க்க   துருவ்  கண் இமைக்கும்  நொடியில்  ,  தன்   பிஞ்சு  கரங்களால்   ஆதிராவின்  கன்னத்தை   பதம்  பார்த்தான் .

பிறகு  ஆதிராவிடம்,” இனிமே  என் அப்பாவ  எதாவது  சொன்னீங்க  , அப்றோம்  அவ்வளவு   தான்  தட்டி  தூக்கிருவேன் ” என்று  கூறி விட்டு  தன்  தந்தையின்  கன்னத்தில்  முத்தம்யிட்டு   அவனுக்கு  டா டா  காட்டி  விட்டு   அங்கிருந்து  சென்றான் .

ஆதவ்  , துருவ்வின்   இந்த  செய்கையை  சற்றும்  எதிர்பாக்காதவன்   செய்வதறியாது  திணறினான்  ,ஆதிராவோ   கோபத்தின்  உச்சத்தில்  ஆதவ்வை  திட்ட   தன்  dictionaryயில்   வார்த்தை   தேடிக்கொண்டிருந்தாள்..

ஆதவ்  தனக்குள்  ,” இவ  ஆரம்பிக்கறதுக்கு  முன்னாடி  நாமலே  சாரி  கேட்ருவோம்” என்று  கூறிக்கொண்டு  , அவளிடம்

”  சாரி  ஆதிரா  துருவ்  இப்டி பண்ணுவான்னு  நா  நினைக்கல  , அவனுக்கு  பதிலா  நா  உன்கிட்ட    மன்னிப்பு  கேட்டுக்கறேன் ”

ஆதிரா ,” அவன்   ஒரு  சின்ன  பையன்  அவன்  இப்டி  பண்ணறான்னா  அதுக்கு  காரணம்  நீ தான் , நீ  தூண்டி  விடாம  இப்டி  எப்டி  பண்ணுவான் ” என்றாள்

ஆதவ் ,” அப்டிலாம்  எதுவும்  இல்ல    நீங்க      என்ன தப்பா  புரிஞ்சிகிட்டு  இருக்கீங்க ” என்றான்

ஆதிரா ,” enough  நடிச்சது  போதும்  , என்ன  பையன   வழத்திருக்க  , அப்டியே  உன்ன  மாதிரி  கொஞ்சம்  கூட   மனர்ஸ்  இல்லாம ” என்றாள்

ஆதவ் ,” சி  அவன்  சின்ன  பையன்  என் மேல  உள்ள  அன்புள  அப்டி  பண்ணிட்டான்  , அதுக்கு  தான்  சாரி  கேட்டுட்டேன்ல  அப்பரமும்  உன் இஷ்டத்துக்கு  பேசிட்டு  இருக்க ”

ஆதிரா ,”  எல்லாம்  பண்ணிட்டு  சாரி  கேப்பாரு   நாம  மன்னிச்சிரன்னும் , போடா  ” என்று கூற ,

ஆதவ்  ,”சரி தான்  போடி ” என்றுவிட்டு  இருவரும்  அங்கிருந்து   சென்றனர் .

அன்பே  என்னை  பிரிந்தும்  வாழ  வழி  காண்பித்தாய்  ,  பிரிவை  தாங்கும்  வழியை  காண்பிக்க  மறந்துவிட்டாயே  …..

நினைவுகள் 4

 

“உறவின்  அருமை  பிரிவில்  கண்டேன்

உருகி  தவிக்கிறேன்   உன்னை  காணவே”’

ஆபீஸில்   என்றைக்கும்  விட  ஆதிரா  இன்று  கொஞ்சம்  அதீத  கோபமாகவே  இருந்தாள்  ,  காரணம்   ஸ்கூலில்   நடந்த   சம்பவம்  மற்றொன்று  தான்  கொடுத்த  வேலையை  தன்  பணியாளர்கள்  சரியாக  முடிக்க  வில்லை  , அவர்கள்  அனைவரையும்  பார்த்து ,” இன்னைக்கு   நா   குடுத்த  வேலைய  ஒழுங்கா  முடிச்சிட்டு   வீட்டுக்கு  போன போதும்  ” என்று  கூறி அனைவரிடமும்   வற்றலை  போல  பொரிந்து  கொண்டிருந்தாள் .

இங்கே   ஆதிரா  கோபத்தில்  எரிமலையை  போல  வெடித்து  கொண்டிருக்க  ,

மறுபக்கம்  ஆதவ்வோ   சிரிப்பு  மழையில்  நனைந்து  கொண்டிருந்தான்  ,

தன்  நண்பன்  ராஜுடன்  தன்  காபினில்   அமர்ந்து  தண்ணி  அடித்துக்கொண்டு  இன்று  ஸ்கூலில்  நடந்தவற்றை  அவனிடம்  கூறி   சிரித்துக்கொண்டிருந்தான் .

ராஜ் ,” என்ன டா சொல்ற  , துருவ் அப்டியா பண்ணினான்  ,

ஆதவ் ,” அடிச்சது   மட்டும்  இல்லடா   ‘தட்டி  தூக்கிருவேன் ‘ ன்னு  சொல்லிட்டான்  “

ராஜ்  ,”  அது  உன்  டயலாக்  ஆச்சே  “

ஆதவ் ,” அதான்  மச்சி  நா ஷாக்   ஆய்ட்டேன்  “

ராஜ் ,” எப்பவாது  நீ யார்கிட்டயாவது   பேசுனத   கவனிச்சிருப்பான்”

ஆதவ் ,”குழந்தைங்க   கிட்ட  ஜாக்கரதையா  இருக்க  வேண்டிருக்கு , ஆனா  ஒன்னு  மச்சி  நீ  இன்னைக்கு  ஆதிரா   முகத்த  பாக்கனுமே  , புள்ள  அப்டியே  ஷாக்  ஆய்ட்டா  , இத  எக்ஸ்பெக்ட்   பண்ணிருக்க  மாட்டா , சாரி  சொல்றேன்  திமிரா  பேசுறா மச்சி  , அதான்  கடுப்பாகி  போடின்னு  சொல்லிட்டேன் , என்னதான்  இருந்தாலும்  துருவ்  பண்ணினதும்  தப்பு தான்  டா , எனக்கென்னவோ  துருவ்வ   நா   சரியா  வழக்கலையோன்னு தோணுது  , இத பத்தி  கண்டிப்பா  நா அவன் கிட்ட   பேசனும் ” என்றான்

ராஜ் ,” ஆமாட   அவன் சின்ன பையன்   கோபப்படாத  அன்பா  சொல்லு  புரிஞ்சிக்குவான் “

ஆதவ் ,” ம்ம்ம்ம்   சரி  டா “

பின்பு   ராஜ்  மச்சான்  இன்னொரு  ரௌண்ட்  என்று  கேக்க , ஆதவ்,” நோ  டா   போதும்   வீட்டுக்கு  வேற  போனும்   துருவ்  காத்துக்கிட்டு   இருப்பான் ”  , என்றான்

ராஜ் ,” சரி  மச்சான்  ” என்று  ராஜ்  தடுமாற

ஆதவ் ,” நீ   நிதானமா   இல்ல   , வா  நானே உன்ன  இன்னைக்கு   டிராப்   பண்றேன்   ”  என்று  கூறி   ஆதவ்  ராஜையும்  தன்னோடு   அழைத்து  சென்றான் .

அங்கே  தனது   ஆபீஸில்   ஆதிரா  தனது   வேலைகளை   முடித்து  விட்டு   தன்   இல்லம்  திரும்ப  தயார்  ஆனாள், என்ன  வழக்கத்த்தை   விட  காலம்  தாமதமாகவே    அவள்   தன்  அலுவலகத்தை   விட்டு   கிளம்பினாள்.

ஆதவ்   ராஜை   அவன்  இல்லம்   இறக்கிவிட்டான்   அப்பொழுது  , ராஜின்  தந்தை ராஜாராம் ,” குடிச்சிட்டு  வீட்டு  படி  ஏரி  வர உனக்கு  வெக்கமா  இல்ல   ” என்று  கரித்துகொட்டினர் .

உடனே  ராஜ் ,” வெயிட் ” என்று தன்  தந்தையை  பார்த்து    கூறிவிட்டு  , வேகமாக  ஜம்ப்  பண்ணி   படியை  தாண்டி அவர்  முன்பு    நின்று  ,” எப்டி  என் டலன்ட்” என்றான்

ஆதவ் ,” ஏய்  ராஜ்  என்ன  பண்ற டா ” என்று  கூற.

உடனே   அவன் தந்தை  ,” எல்லாம்  என்ன  சொல்லணும்  ” என்று   தன்  தலையில்   அடித்துக்கொண்டார் , அப்பொழுது  அங்கு  வந்த  ராஜின்   தாய்   ,” என்  புள்ளைய  குற  சொல்லாம  உங்களுக்கு  தூக்கம்  வராதே   , நீங்க  இப்டி  பேசுரனால  தான்   அவன் இப்டி   குடிக்குறான், அவன்  என்ன  வேலை  வெட்டிக்கு  போகாமலா  குடிக்குறான்     ” என்றார் ,

ராஜ்   உளறி  கொண்டே ,” நல்லா  சொல்லுமா  ” என்றான்

அதற்கு அவர் ,” ஆமாடி  இப்டியே  அவன  தலையில   தூக்கி வச்சிக   அவன்  உருபட்ருவான் ”   

பின்பு  ஆதவிடம்   ராஜின்  அம்மா ,”  வா பா உள்ள  வீட்டுக்கு   வந்துட்டு போ” என்றார்

ஆதவ்,” இல்ல மா  அவன  பாத்துக்கோங்க  , நா  கிளம்புறேன்  , இன்னொரு  நாள்  வரேன் ” என்றான்  ,

அவர் ,”அப்போ  சரி  பா  பாத்து  வீட்டுக்கு போ  பா ”  என்று கூறிவிட்டு  தன் மகனை   உள்ளே  அழைத்துசென்றார்  ,

ஆதவ்   அங்கிருந்து கிளம்பும்   பொழுது  ராஜின்  தந்தை  அவனை  தடுத்து  ,” இங்க  பாரு  ஆதவ்   நீ   தான்  உருப்படாம  போய்ட்ட , என்  பையனையும்  கெடுக்காத  , நீ  வாழ்ந்து   முடிச்சிட்ட   அவன்  இன்னும்  வாழவே   ஆரம்பிக்கல ,  ஏற்கனவே   நீ  என் பையனுக்கு  பண்ணினதெல்லாம்  போதும்  ,அவனுக்கு  நீ   எதாவது   நல்லது  பண்ணனும்ன்னு  நினச்சா  , அவன  உன்  கம்பனில  இருந்து   நிருத்திரு  ” என்றார்

ஆதவ் ,” ஆனா அங்கிள்  ” என்றவனை   தடுத்து  அவர் ,”  என்ன  நீ  சார்ன்னு  கூப்ட்டா   அதுவே  போதும்  ” என்றார்

உடனே   ஆதவ்  சரி   என்பதை   போல்  தன்  தலையை   மட்டும்  ஆட்டினான்  , ராஜாராம்  வெறுப்பாக  , தன்  வீட்டின்  கதவை  ஆதவ்வின்  மூஞ்சில்  அடித்ததை  போல  சாத்தினார் .

பின்பு   ஆதவ்   ஒருவித   சோகத்தோடு   தன்  இல்லம்  நோக்கி   காரில்   விரைந்தான் .

அங்கே   ஆதிரா   தன் இல்லம்  சென்று  கொண்டிருந்த   பொழுது   திடீர் என்று   அவளது   கார்   நின்றது    என்ன  என்று   விளங்காமல்  , கீழே  இறங்கி  பார்த்தாள்   அப்பொழுது   தான்  கார்  பன்ச்சர்  ஆனது  தெரிந்தது  ,  நேரம்  வேரு  ஆனதால்  என்ன செய்வது   என்று  விளங்காமல்   அவள்  முழித்துக்கொண்டிருந்தாள். 

அப்பொழுது    ,” என்ன  மேடம்  இந்த  நேரத்துல   இங்க  என்ன  பண்றீங்க  ” என்று ஒரு  குரல்  கேட்டது   ,

யார்    என்று   ஆதி   திரும்பி  பார்த்த  பொழுது  அங்கே  ஆதவ்   தன்  இரு  கரங்களையும்    கெட்டிக்கொண்டு  ஒய்யாரமாக   நின்னுக்கொண்டிருந்தான் .

உடனே  ஆதி  ,” நா  எங்க  நின்னா  உனக்கு   என்ன  வந்துச்சி ” என்றாள்

ஆதவ்  அவள்  கூறும்   எதையும்   காதில்  வாங்காமல்  , ” கார்  பன்ச்சர்  போல ” என்றான்

ஆதி ,” அதுக்கு   என்ன  இப்போம்  நீ கிளம்பு  ” என்றாள்

உடனே    ஆதவ்   அவள்  அருகில் வந்து  ,” உங்கள  ஜான்சி  ராணின்னு   நினச்சேன்  இப்டி  பன்ச்சர்   ராணியா  இருகிங்கலே , வாய்   தான்  மத்தபடி   ஒன்னும்  இல்ல , பன்ச்சர்  கூட  பாக்க  தெரியல  , கார்  ஒட்டுனா   மட்டும்  போதாது  ரிப்பேர்  ஆனா  சரி  பண்ணவும்  தெரியனும் ” என்றான்

தன்  பொறுமையை   இழந்த  ஆதி  ,” ஏய்  உன்கிட்ட   நா  கேட்டனா  , கிளம்பு ” என்றாள்

ஆதவ்   சிரித்துக்கொண்டே  , ”   தன்   காரில்   இருந்த  தன்  டூல்சை  எடுத்து  வந்து  ஆதியின்   காரின்   டயரை  மாற்ற  தொடங்கினான் “

அப்பொழுது  அதி ,” ஆதவ்   நா  உங்க  கிட்ட   தான்  சொல்றேன்  , உங்க  உதவி   தேவ  இல்ல  ” என்றாள் , 

ஆனால்   ஆதவ்  அவளது   பேச்சு   எதையும்   தன்  காதில்   வாங்கிக்கொள்ளாமல்   , அவனது  வேலையில்   மூழ்கிருந்தான்  .

ஆதிக்கும்  அவனது   உதவியை   ஏற்பதை   தவிர  வேரு  வழி  இல்லை  என்பதை   உணர்ந்தவளாய்   வேண்டா  வெறுப்பாக  அவனை  தனக்கும்   மட்டும்  கேக்கும்  விதமாக   வசைபாடிக்கொண்டிருந்தாள் , அப்பொழுது  ஆதி  ,” நல்லா  குடிச்சிருக்கான்  இவன்  கிட்டலாம்  உதவி  கேக்க  வேண்டியதா  இருக்கே  ” என்று  புலம்பிக்கொண்டிருந்தாள் .

ஆதவ்   பன்ச்சரை  சரி  செய்து  கொண்டிருக்கும்   பொழுது  அவனது  முகம்  வேர்த்து  கொட்ட  , அதை  அவன்  துடைக்க  சிரமப்பட்டு  கொண்டிருந்தான்  , அப்பொழுது   ஆதி  , தன்   காரில்   இருந்து  ட்டிஷு  பேப்பரை  எடுத்து  அவன்  முன்   நீட்டினாள் , ஆதவ்வும்   பார்த்து  லேசாக   புன்னகைத்துவிட்டு   அதை  வாங்கி  தன்  வேர்வையை   துடைத்து விட்டு     அந்த  வேஸ்ட்  பேப்பரை   அவளிடமே   திரும்ப   நீட்டினான்  , அதை  பார்த்த   ஆதி  முறைக்க  , உடனே  ஆதவ்  ,” சாரி   சாரி  என்று  கூறிவிட்டு   அதை  ஓரமாக   போட்டு விட்டு  தன்  வேலையை   தொடங்கினான்”.

பின்பு  சில  மணி நேரம்    கழித்து   , பன்ச்சரை   சரி  செய்துவிட்டு  தன்  கிரீஸ்  படிந்த  கைகளை   தன்  பாட்டிலில்  உள்ள  தண்ணீரின்   மூலம்   கஷ்டப்பட்டு   கழுவிக்கொண்டிருந்தான் , அப்பொழுது  ஆதி  ,” குடுங்க  நா  ஹெல்ப்  பண்றேன் ” என்றாள்

ஆதவ் ,” நோ தங்க்ஸ்  , ஐ   கேன்  ஹண்ட்ல்  மை  ஸெல்ப்  ” என்றான்

உடனே  ஆதி  வலுக்கட்டாயமாக   அவனது  கையில்  இருந்து  பாட்டிலை  வாங்கினாள்   ,  பிறகு  அவள்  தண்ணீரை  ஊற்ற   ஊற்ற  அவன்  தன்  கைகளை  கழுவினான்  ..

ஆதி  ஆதவிற்கு   தங்க்ஸ்  எப்டி   சொல்லுவது  என்று  தயங்கிக்கொண்டிருக்கும்  பொழுது  , அவன் ,”தங்க்ஸ்  சொல்லனும்ன்னு   அவசியம்  இல்ல , அப்றோம்  மேடம்   நாங்கலாம்   குடிச்சாலும்    ஸ்டேடியா  இருப்போம் ” என்று  கூறிவிட்டு  தன்  காரில்  சென்றான்

ஆதி ,” லூசு  இவன் கிட்டலாம்    பேச்சி   கேக்க  வேண்டிருக்கு  ”  என்று    லேசாக   புன்னகைத்துவிட்டு  சென்றாள்.

தன்  இல்லம்  வந்த  ஆதவ்  , தன்  அறைக்குச்சென்று   தன்   மகன்   நிம்மதியாக   தூங்குவதை  பார்த்து  சிறிதுநேரம்   ரசித்துவிட்டு   , விலகி  இருந்த   போர்வையை   சரி  செய்தான்  ,   பிறகு ,” அப்பா  மேல   அவ்வளவு   பாசமா  உனக்கு  ” என்று  கூறி  அவனது  நெற்றியில்   தன்  இதழ்  பதித்துவிட்டு.  தன்   கப்போர்டில்   இருந்து துருவுக்கு  தெரியாமல்  மறைத்துவைத்திருந்த ,  ஒரு  போட்டோவை  எடுத்து  , அதை  பார்த்து  ,” அம்மு  எப்டி  இருக்க  , நா   துருவ  சரியா  வழக்களையாம்,  இன்னைக்கு   எனக்கும்  கொஞ்சம்  அப்டிதான்  தோணுது   , எப்டி  வழக்குறது நீயே  சொல்லு  நீ மட்டும்  என் கூட  இருந்திருந்தா  இந்த  பேச்செல்லாம்  நா  கேட்ருக்க  வேண்டாம்ல , என்ன  இன்னொரு  கல்யாணம்  பண்ணிக்க  சொல்றாங்க ,   உன்ன  நா  ரொம்ப  மிஸ்  பண்றேன்   அம்மு ”  என்று  அழுதான் .

அது  ஆதவின்   மனைவி  அம்முவின்  போட்டோ , ஆதவ்   துருவுக்கு  தன்   தாயின்  நியாபகமே  வரக்கூடாது   என்பதற்காக  , அம்மு   சம்பந்த  பட்ட  எந்த  பொருளையும்  துருவிடம்  காட்ட  வில்லை  ,  எப்பொழுதெல்லாம்  தன்  மனைவியின்  நியாபகம்  வருதோ  அப்பொழுதெல்லாம்  ,  துருவுக்கு   தெரியாமல்  அந்த  போட்டோவை  எடுத்து  பார்த்து விட்டு   மறுபடியும்  மறைத்து  வைத்து  விடுவான்  .

தன்  தாயிடம்   ஆதிரா  இன்று   ஸ்கூலில்லும்   வீட்டுக்கு   வரும்  வழியிலும்   நடந்ததை  கூறி ,” ஒருநாள்  அவனே  என்   கார  இடிச்சி  ரிப்பேர்   பண்றான்  ,  இன்னொரு   நாள்   அவனே   வந்து  சரி  பண்ணியும்  தரான் ,  சரியான  சைக்கோ ” என்றாள்

காயத்ரி ,”  திட்டாத  மா  நல்லவேள  சரியான  நேரத்துக்கு   அந்த  தம்பி  வந்த்துச்சி   இல்லனா  நீ  தான்  கஷ்ட பட்ருப  ” என்றார்

ஆதிரா ,” ரொம்ப  புகழாதீங்க   , அவன்  பையன்   ஸ்கூல்ல   வச்சி   என்ன  அரஞ்சிட்டான்  ,  சரியான  வாலு  எனக்கு  அப்டியே  கோவமா  வந்துச்சி   ஆனா   சின்ன  பையன்னு   சொல்லி  விட்டுட்டேன்  ” என்றாள்

காயத்ரி ,”  சின்ன   பையன்  மா   ,  நீ  மட்டும்   சின்ன   வயசுல  எப்டி  இருந்த  இப்டி தான்  யார்  பேச்சையும்   கேக்க  மாட்ட , குழந்தைங்க   அப்டி தான்  இருப்பாங்க   பெரியவங்க   என்ன  பண்றமோ   அத  தான்  அவங்களும்   பாலோ  பண்ணுவாங்க,  ”  என்றார்

ஆதிரா   தன்  தாயின்   பேச்சில்   இருக்கும்   உண்மையை   புரிந்து  கொண்டவளாய்   ,” நீங்க  சொல்றதும்  சரி  தான்   , பிஞ்சி  குழந்த   ,  அவனுக்கு   என்ன  தெரியும்  சரி   நேரம்  ஆயிடுச்சி  , நா  தூங்குறேன்  மா ” என்று  கூறி விட்டு   தன்  அறைக்கு   சென்றாள் .

பிரிவு  கூட  ஒருவித  சுகம்  தான்   உனது  நினைவுகள்  என்னோடு  இருப்பதால்…..

 

 

 

நினைவுகள் 5

 

 

                                     “கண்கள்  மூடினால்  நீ  வருகிறாய்  சிரிக்கிறேன்

       கண்கள்  திறக்கிறேன்  நீயும்  மறைகிறாய்  வெறுக்கிறேன்

               இனி  பகலே  வேண்டாம்  , இரவே  போதும்

 தூக்கம்  மட்டும்  வரும்  வரம்  வேண்டும்

 கனவில்  உன்னை   பார்த்துக்கொண்டிருக்க “

 

மறுநாள்    காலையில்   வழக்கம்  போல  எழும்பி  ஆதவ்  தன்  ஆபீஸ்க்கு   கிளம்பினான்   , போகும்  வழியெல்லாம்  ராஜின்  தந்தை  தன்னிடம்   முந்தய  நாள்  இரவு    பேசியதையே   தன்  மனதிற்குள்   அசைபோட்டுக்கொண்டிருந்தான் . வெகு  நேர  யோசனைக்கு   பிறகு  ஆதவ்   ராஜாராம்  சொல்லுவதும் சரி தான்  என்கிற  முடிவில்  தன்  ஆபீஸ்குள்   நுழைந்தான்  .

வந்தவன்   நேராக   தன்  காபின்குள்   நுழைந்து  , தனது  அசிஸ்டண்டை   அழைத்தான்  , அவளிடம்

” ராஜ்  வந்துட்டார ” என்று  கேட்டான்

அவள்  பதிலுக்கு  ,” இல்லை ” என்று கூற

ஆதவ்  ஒருவித   யோசனையோடு   , ” ரிவீவ்  மீட்டிங்  எப்போம்  ” என்றான்

அசிஸ்டண்ட்,” ராஜ்  சார்  வந்தவுடனே  ஆரம்பிக்க  வேண்டியதுதான் ” என்றாள்

ஆதவ் ,” என்ன  ராஜ்  சார்  , மீட்டிங்  கம்பனிக்காகவா  , இல்ல  ராஜ்  சார்க்காகவா “

அசிஸ்டண்ட் ,” சார்  கம்பனிக்காக   ” என்று  தயங்கிய  குரலில்  கூறினாள்

ஆதவ் ,” மீட்டிங்  எப்போம்  “

அசிஸ்டண்ட் ,” பத்து  மணிக்கு  சார் “

ஆதவ் ,” அப்போம்   சரி  இன்னும்  பைவ்  மினிட்ஸ்ல    எல்லாரையும்  கான்பரன்ஸ்   ரூம்ல  அசம்பல்  ஆக  சொல்லு    ” என்றான்

அசிஸ்டண்ட் ,” யஸ்  சார்  ” என்று  கூறிவிட்டு  அங்கிருந்து  சென்றாள்.

ராஜ்  நேற்று  அடித்த  ட்ரிங்க்ஸால்  வழக்கத்தை  விட  லேடாக  எழும்பினான்  , ஒரு  வழியாக  தயாராகி   , ஆபீஸ்  செல்வதற்காக  கீழே  வந்தான்  .

அப்பொழுது   அவன்  அம்மா  அவனிடம் ,” எலும்பிட்டியா   வா  வந்து  சாப்டு ” என்றார்

ராஜ் ,” நோ  மா  இன்னைக்கு  ரிவீவ்  மீட்டிங்  இருக்கு  , அல்ரெடி  லேட்  ஆயிடுச்சி  ,  நா  வராம   ஆதவ்வும்   மீட்டிங்க  ஸ்டார்ட்  பண்ண  மாட்டான்  , எனக்காக  வெயிட்  பண்ணிட்டு   இருப்பான்  , நா  ஆபீஸ்ல    சாப்டுக்குரேன்   மா   ” என்று  கூறி  கிளம்பினான் .

ஆதவ்  கான்பரன்ஸ்  ரூம்குள்  வந்த  பிறகு , தனது   அசிஸ்டண்டை   அழைத்து ,” மீட்டிங்  ஸ்டார்ட்  ஆன பிறகு , யாரையும்  உள்ள  விடாத ” என்று  கூறி விட்டு   மீட்டிங்கை   துடங்கினான் .

ஆபீஸ்க்கு   அறக்க   பறக்க   ஓடி  வந்த   ராஜ்  , நேராக   ஆதவ்வின்  அறைக்கு   விரைந்தான்  , ஆதவ்  அங்கே  இல்லை  என்றவுடன்  ,” ஒருவேள   கான்பரன்ஸ்   ரூம்ல  அரேஞ்மென்ட்ஸ்  பண்ணிட்டு  இருப்பான் ” என்று  கூறிவிட்டு   கான்பரன்ஸ்   ரூம்   பக்கம்  வந்தான்  , அங்கே   மீட்டிங்      நடந்து  கொண்டிருப்பதை   பார்த்து  அதிர்ச்சி   அடைந்தான் , ஏனென்றால்   இதனால்  வரை   ஆபீஸில்  மட்டும்  இல்லை   ஆதவ்  தன்   வாழ்கையில்   ராஜ்  இல்லாமல்   எதுவும்  செய்ததில்லை , கம்பெனியை   ஆதவ்   தன் கையில்  எடுத்த   நாளில்   இருந்து   இதனால்  வரை     ராஜ்   இல்லாமல்  எந்த  மீட்டிங்கும்  இங்கு  நடந்ததில்லை  ,  ராஜ்  இல்லாமல்  எந்த  கான்ட்ராக்ட்டும் ஆதவ் சயின்  பண்ணினதும்  இல்லை  ராஜ்க்காக   எவ்வளவோ  பெரிய  கான்ட்ராக்டையும்  கூட  ஆதவ்  மிஸ்  பண்ணினதுண்டு  , ஆனால்  எதுக்காகவும்   ராஜை   ஆதவ்   மிஸ்  பண்ணினதில்லை    , இந்த  ஆபீஸ்ஸில்   ராஜ்   இல்லாமல்   நடக்கும்  முதல் மீட்டிங்  இது தான் .

ராஜ்  உட்பட   அங்கே   மீட்டிங்கில்  இருந்த   அனைவரூம்   அதிர்ச்சியில்   இருந்தனர்  .

ராஜ்  தனக்குள்  ,” என்னடா   சோகமா  இருக்க  ,  மீட்டிங்  எப்போம்   நீ  எப்போம்   வந்திருக்க   அவனும்  எவ்வளவு  நேரம்  தான்   வெயிட்  பண்ணுவான்  , அதான்   ஸ்டார்ட்  பண்ணிட்டான்” என்று   தனக்கு  தானே  சமாதான்  கூறிவிட்டு   ரூமிற்குள்  நுழைய  பார்த்தான்  .

அப்போது    அங்கு   வந்த    ஆதவ்வின்   அசிஸ்டண்ட்  ,”  சார்  உள்ள  மீட்டிங்  நடக்குது   நீங்க  போக  முடியாது ” என்றாள்

ராஜ் ,” வாட்   , நா  உள்ள  போக  கூடாதா ” என்றான்

அசிஸ்டண்ட்,” ஆமா  சார்  , ஆதவ்  சார்  ஸ்ட்ரிக்டா   சொல்லிருக்காரு ” என்றாள்

ராஜ் ,”  என்ன  நீ  உள்ள  விடலன்னு   தெரிஞ்சா   , ஆதவ்   உன்ன  என்ன  பண்ணுவான்னு   தெரியுமா ” என்றான்

அசிஸ்டண்ட்,” சார்  ப்ளீஸ்   ,  சார்  யார்  வந்தாலும்   விட  கூடாதுன்னு   சொல்லிருக்காரு   என்ன  மன்னிச்சிருங்க” என்றாள்

அதை  கேட்ட   ராஜ்   ஒரு வித   தடுமாறும்   குரலில்  ,” ஒகே  ” என்று  கூறி விட்டு   அங்கிருந்து   தன்  அறைக்கு   சென்றான் .

ஆதவ்வின்  இந்த   மாற்றத்தில்   ஒருவித   சோகம்   கலந்த  கவலையோடு    தன்  காபினில்   அமர்ந்து  கொண்டு  ,”  ஏன்  ஆதவ்  இப்டி இருக்கான்  , என்ன  ப்ராப்லம்   அங்கிள்  எதுவும்  சொல்லிருப்பாங்களோ  , என்ன  பிரச்சனயா   இருக்கும்  ” என்று  தன்  நண்பனை  பற்றி  கவலை  பட்டுக்கொண்டிருந்தான் .

மீட்டிங்    முடிந்த   பிறகு   ஆதவ்   தனது  எம்ப்ளாயிடம்  ,” KRR  குருப்ஸ்  பைல்  வேணும் ” என்றான்

அதற்கு  அவன் ,” சார்   அத  பத்தி  எனக்கு  தெரியாது   , அது  ராஜ்  சார்க்கு   தான்  தெரியும்  ” என்றான்

ஆதவ் ,”  ராஜ்  ராஜ்  ராஜ்க்கு   தான்  எல்லாம் தெரியும்னா  நீங்க  இந்த  ஆபீஸ்ல   என்ன    பண்ணிட்டு   இருக்கீங்க ” என்றான்

அப்போது  அங்கே  வந்து   அனைத்தையும்  கேட்டுக்கொண்டிருந்த   ராஜ் , ” ஆதவ்  ஏன்  அவர் கிட்ட  கோபப்படுற  , பைல்  என்   ரூம்லே  தான்  இருக்கு  , நா  வேணும்னா  இப்போவே  எடுத்துட்டு  வரேன் ” என்றான்

ஆதவ் ,” இல்ல  இப்போம்   வேண்டாம்  நா  சொல்லும்  போது  கொண்டு  வந்தா போதும் ” என்று  தரையை  பார்த்து  கூறி விட்டு , அவனிடம்  பேச்சி  கொடுக்காமல்  வேகமாக   நடந்தான் .

ஆதவ்வின்  இச்செயலில்    மனமுடைந்த    ராஜ்   , லேசாக  கலங்கிய  கண்களோடு   தன்    காபின்      வந்து      அமர்ந்து    கொண்டான் .

அப்பொழுது   ராஜின்  காபின்குள்  வந்த   மனேஜர்   அவனிடம்  ,”  சார்  இந்த  பைல்   SR  குருப்ஸ்கானது , நீங்க  சயின் பண்ணிடீங்கனா  எல்லாம்     ஒகே     ஆயிடும்   ”   என்றார்

ராஜ்   பைலை   வாசிக்கும்   பொழுது   மனேஜர் ,”  சார்  நீங்க  வாசிக்க  தேவயில்ல  ,  உங்க  சயின்   மட்டும்   போதும்    ஆதவ்  சார்    கோட்   பண்ணிட்டாரு  ” என்றான்

ராஜ்  ,” என்ன  ஆதவ்  கோட்  பண்ணிட்டான “

மனேஜர் ,”  ஆமா  சார்  “

இதை   கேட்ட   ராஜை  அடுத்த   அதிர்ச்சி   வந்து  தாக்கியது  , காரணம்    இது  வரை   ராஜ்  இல்லாமல்   ஆதவ்  எந்த  கொட்டேஷனும்   கோட்  பண்ணினது   இல்ல  , ஏன்  பல   கொட்டேஷன   ராஜ்   தான்   கோட்  பண்ணுவான்  .

ராஜ்  ஒரு  வித  தயக்கதோடு   சயின்  பண்ணி  விட்டு    மனேஜரிடம்   ,” நீங்க  போங்க  நா   பாத்துக்குறேன்  ” என்று  கூறினான் .

பின்பு    ஒரு   பெரு  மூச்சி  விட்டுவிட்டு   ஆதவை   பார்க்க   அவனது  காபின்க்கு  வந்துகொண்டிருந்தான்  , அங்கே  ஆபீஸ்  ஸ்டாப்ஸ்  எல்லோரும்   கூட்டமாக   கூடி   ,”  என்ன    ஆச்சி   ராஜ்  சார்க்கும்  , ஆதவ்  சார்க்கும்   எதோ  பிரச்சன  போல  இருக்கு,  ”  என்று  அவர்கள்   இருவரை  பற்றியும்  பேசிக்கொண்டிருந்தனர் .

ராஜ்  அவர்களை   பார்த்து  முறைக்க  , அனைவரும்   தங்கள்  வேலையை   பார்க்க  துடங்கினார் , பிறகு  ராஜ்  வேகமாக   ஆதவ்வின்   அறை  கதவை   திறக்க  போனான் .

பிறகு  வாசலில்  நின்று  கொண்டு  ,” மே  ஐ   கம்  இன்  சார் ” என்றான்

ஆதவ்   ராஜின்  செய்கையில்   , அவன்  தன்  மீது  கோபமாக  இருக்கிறான்  என்பதையும்   உணர்ந்து  ,” யஸ்  கம் இன் ” என்றான்

பின்  ராஜ்ஜிடம்  ,” என்ன  டா  இது  புதுசா   பெர்மிசன்லாம்  கேட்டுட்டு   ” என்றான்

ராஜ் ,”  புதுசா   நா   நடந்துகறனா  இல்ல  நீ  நடந்துகிறியா ” என்றான்

ஆதவ் ,” என்ன  உளர்ற  , நா  என்ன   டா  புதுசா     நடந்துக்கறேன்  ” என்றான்

ராஜ் ,”  அப்போம்  இன்னைக்கு  நீ  பண்ணின   எதுவும்  புதுசு   இல்ல  அப்டிதான, அப்போம் சரி  இதுக்கு  என்ன டா அர்த்தம்  ” என்று  கூறி   தன்    கையில்  இருந்த    பையிலை     டேபிள்     மீது   வீசினான் .

பின்பு  ராஜ் ,” ஆபீஸ்ல   எல்லாரும்  உனக்கும்   எனக்கும்    எதோ  சண்டன்னு   நினைக்காங்க ” என்றான் .

ஆதவ் ,” அதுக்கு  ஏன் கோப  படுற  , அந்த மாதிரிலாம்   ஒன்னும்  இல்லன்னு   சொல்லவேண்டியது  தானே ” என்றான்

ராஜ் ,” என்ன  சொல்ல  வேண்டியதுதான  , ரொம்ப  ஈஸியா  சொல்லிட்ட  ம்ம்ம்  , அவங்க   அப்டி  சொல்றாங்கனா  அதுக்கு  காரணம்    யாருடா , நீ   இப்டி    நடந்துக்கறனாலதான்  டா  அவங்க  அப்டி  பேசுறாங்க ” என்றான்

ஆதவ் ,” நா  என்ன  அப்டி  நடந்துகிட்டேன் ” என்றான் .

ராஜ் ,” ஒ  அது  சரி  நீ  என்ன      பண்ணினன்னு   கூட  உனக்கு  தெரியலல , சரி  இந்த  பைல் , நா  இல்லாமயே  நீ  கோட்   பண்ணிருக்க , ஒகே   மீட்டிங்,  என்னைக்கு   டா   நா  இல்லாம  நீ  மீட்டிங்  அட்டெண்ட்  பண்ணிருக்க  , கஷ்டமா  இருக்குடா  , நா  எதாவது   தப்பு  பண்ணிருந்தா   சொல்லிரு   திருத்திக்கிறேன்  , இப்டிலாம்  பண்ணாத   டா    எதோ     நீ  என்ன     அவாய்ட்     பண்ற     மாதிரி  இருக்கு ”  என்றான்

ஆதவ் ,” இதுலாம்  ஒரு  மட்டரா  இத  நீ  இவ்வளவு    பெருசா    ஆக்குவன்னு  நா  நினைக்கல” என்றான்

ராஜ் ,” வாட்  இதெல்லாம்  உனக்கு  சாதாரணமான  விஷயமா  தெரியுதா  ஹ்ம்ம்   நா  பெருசு  படுத்துரேன்   ” என்று  கூறி   அழுதுகொண்டே  ,” அது  ஒன்னும்  இல்ல   எனக்கு  ஒரு  ப்ரண்ட்  இருந்தான்   அவனுக்கு   நானா   உயிரு  , எனக்காக   என்ன வேணும்னாலும்   செய்வான்    .

அவனுக்கு   புட்பால்னா    உயிரு   ,  அப்போம்  எங்களுக்கு  ஒரு   பதினேழு  வயசு   இருக்கு   ஸ்டேட்  லெவல்  புட்பால்   மேட்ச்   வந்துச்சி , இன்னைக்கு   கிளம்பனும்ன்னு   வச்சுகோயேன்   நாளைக்கு  மேட்ச்  ,  எனக்கு   பீவர்ங்கற  ஒரே   காரணத்துக்காக   அவன்  வாழ்க்கைக்கு   முக்கியமான   மேட்ச்க்கு   போகாம  என்கூட  ஹாஸ்பிடல்ல   கடந்தான்  , ஏண்டா  போகலன்னு  கேட்டதுக்கு  நீ  தாண்டா  முக்கியம்  மேட்ச்   கடக்குதுடா   ,  நீ      உடம்பு   சரியில்லாம      இருக்க    நா    எப்டி    டா    போறதுன்னு   சொன்னான் . எங்களோடது     25 வர்ஷ  ப்ரண்ட்ஷிப்பு   , இதனால்  வரைக்கும்   அவன்  என்கிட்ட   கேக்காம   எதுவும்  பண்ணமாட்டான்  , ஆபீஸ்ல    ஒரு கான்ட்ராக்ட்ல   சயின்  பண்றதா   இருக்கட்டும்  இல்ல  ஒரு  ஷூ  வாங்குறதா  இருக்கட்டும்   என்கிட்ட   தான்    கேப்பான் .

ஒருநாள்  ஒரு  முக்கியமான  மீடிங்க  நா  வரலங்கற   ஒரே  காரணத்துக்காக   கென்செல்   பண்ணினான் ,  ஆனா   இன்னைக்கு   நா    லேட்டா   வந்தேன்னு  சொல்லி    மீட்டிங்   அட்டெண்ட்  பண்ண  கூடாதுன்னு   சொல்றான் , ஏன்னு  தெரியல , கஷ்டமா  இருக்கு  ” என்றான் .

ஆதவ்  தேம்பி  தேம்பி  அழுதுகொண்டே   ராஜ்ஜிடம்,”  சாரி  டா , எனக்கு   இத  விட்டா   வேற   வழி  தெரியல  ,  என்ன  மன்னிச்சிருடா  , நீ  எனக்காக   எவ்வளவோ   பண்ணிட்ட  , நீ   என்ன  விட்டு  போயிருடா   அப்போம்  தான்  நீ   நல்லா   இருப்ப ” என்றான்

ராஜ்  ,”  ஏண்டா  என்னாச்சி  ,  எதுக்கு   சாரி  கேக்க   ,  என்ன  வழி  தெரியல  , எனக்கு  ஒன்னும்  புரியல  டா , யாரவது   எதாவது  சொன்னாங்களா  , அப்பா  , அப்பா   எதுவும்    சொன்னாங்களா”

ஆதவ் ,” அவர்  ஒன்னும்  பொய்   சொல்லலேயே   , உண்மையத்தானே   சொன்னாரு “

ராஜ் ,” அப்போம்  அவரு  சொல்லிருக்காரு  , அவர ” என்றவனை   தடுத்த      ஆதவ் ,”  அவர்   மேல  எந்த   தப்பும்  இல்லடா , என்னால தான  நீ  ஜெயிலுக்குலாம்   போயிட்டு   ச்ச   அத  நினைக்கவே   கஷ்டமா  இருக்கு ”

ராஜ்  ,” ஏண்டா   பழசலாம்   இப்போம்  பேசிக்கிட்டு “

ஆதவ் ,” விஷயம்  பழசு  தான்டா   ஆனா   அத  அப்டியே  ஒதிக்கிற   முடியாது  டா “

ராஜ் ,” இதெல்லாத்துக்கும்   காரணம்  என் அப்பா  அவர  “

ஆதவ் ,”  அவரு  மேல      எந்த  தப்பும்   இல்லடா  “

ராஜ் ,” நீ   சும்மா   இரு    அவர்   உன்ன  என்னடா  சொன்னாரு  “

ஆதவ் ,”  அதெல்லாம்   ஒன்னும்  இல்ல   டா “

ராஜ் ,” இப்போம்   சொல்ல   போறியா     இல்லையா “

ராஜ்   கோபமாக  கேக்க , ஆதவ்  ,அனைத்தையும்   கூறினான் , பிறகு  ராஜ் ,” அவர்   ஏண்டா     இப்டி    பண்றாரு  , உன்கிட்ட  அப்டி   பேச  அவருக்கு   யார்  டா  ரைட்ஸ்  குடுத்தது  , உனக்கும்   எனக்கும்   நடுவுல  யார்  வந்தாலும்   அத  என்னால  ஏத்துக்க   முடியாதுடா ” என்றான்

ஆதவ்  ,” சந்தோஷமா    இருக்குடா  , ஆனா  என்னாலா  தானடா   நீ  ஜெயிலுக்கு   போன   நா     கல்யாணம்   பண்ணினதுக்கு   நீ  ஜெயிலுக்கு   போக  வேண்டியதாயிட்டே .

அதான்  உன்   அப்பா   என்  மேல  கோவமா இருக்காங்க  ,  என்ன  காட்டிக்குடுக்க   கூடாதுங்கறதுக்காக    நீ  ஜெயில்ல  அடி  வாங்க  வேண்டியதாயிடுச்சே , நல்ல  வேல  என்  அப்பா  உன்ன  வெளியில   எடுத்தாரு  இல்லனா      அவ்வளவு     தான்,  நினச்சி   கூட  பாக்க  முடியல ” என்றான்

ராஜ் ,” போதும்  டா  போதும்  பழச    பேசாத  , அது  முடிஞ்சி  போன  விஷயம்  ” என்றான்

ஆதவ் ,” சாரி   உன்ன  ரொம்ப  கஷ்ட  படுத்திட்டேன் “

ராஜ் ,” சாரிலாம்   வேண்டாம்  இனிமே   , என்னைக்கும்   யார்  சொன்னாலும்    நாம  பிரியனும்ன்னு   நீ   சொல்ல     கூடாது  ” என்றான்

ஆதவ் , ”  சரி டா  இனிமே  என்னைக்கும்    நாம   பிரியனும்ன்னு  சொல்றதென்ன  , நினைக்க  கூட  மாட்டேன் ” என்றான்

ராஜ் ,” நீ  இன்னைக்கு  பண்ணின  காரியத்தால  எதோ  லவ்ர்ஸ்  மாதிரி  பேசிட்டு  இருக்கோம்  , பொண்ணுங்க   மாதிரி  அழ  வேற  வச்சிட்ட  ” என்றான்

ஆதவ்  ,” ஆமா   டா  , அப்றோம்   ராஜ்  உன்  அப்பா  கிட்ட  இத  பத்தி  எதுவும்  கேட்டுக்காத   , இத  அப்டியே  ப்ரீயா   விட்ரு  ” என்றான்

ராஜ் ,” ஹ்ம்ம்  சரி    மச்சான்   ,  அப்றோம்   இன்னைக்கு    நீ  என்ன  ரொம்ப    பீல்  பண்ண    வச்சுட்டடா  ” 

ஆதவ் ,”  ஆமா  டா   சரி  ஒன்னு  பண்ணலாம்  , எங்கயாவது   ஒரு  லாங்  டிரைவ்  போலாம்   என்ன  சொல்ற   ஹ்ம்ம்  ”

ராஜ் ,” செம   பிளான்   வா  டிரைவ்  போய்  ரொம்ப  நாள்  ஆச்சு  ” என்று  கூறி  இருவரும்  ஒருவருக்கொருவர்   கெட்டி  அணைத்துக்கொண்டு   ஒருவர்  தோள்  மீது  ஒருவர்  கை   போட்டுக்கொண்டு   ஆதவ்வின்  காபினில்  இருந்து     வெளியே    வந்தனர் .

“நண்பனை  பார்த்த  நேரம்  மட்டும்

ஒட்டி  கொண்டது  என்  ஞபகதில்

என்  உயிர்  வாழும்  காலம்  எல்லாம்

அவன்  நினைவு  துடிக்கும்  என்  இருதயத்தில்

 

உலகத்தில்  பிடித்தது  எதுவென்று  என்னை  கேட்டல் ….ஹொஹொ ….

என்  நண்பனின்    பெயரை  கூறிடுவேன் 

என்  அடுத்த  ஜென்மத்தில்  இதே  வரம்   வேண்டும்  என்பேன்

 

ஹூ .ஹூ …நானா  நானா  ந …

ஹூ  ஒ  ஹோ …நானா  நானா  ந …

 

நண்பனை  பார்த்த  நேரம்  மட்டும்

ஒட்டி  கொண்டது  என்  ஞாபகத்தில்

என்  உயிர்  வாழும்  காலம்  எல்லாம்

அவன்  நினைவு  துடிக்கும்  என்  இருதயத்தில்

 

சிறகு  இல்லை  வானம்  இல்லை

வெறும்  தரையிலும்  நாங்கள்  பறப்போம்”

அதை  பார்த்த  அனைவரும்  ஒருவர்  முகத்தை   ஒருவர்   பார்த்து  முழிக்க , ஆதவ்வும்   ராஜும்  அவர்களை  பார்த்து  சிரித்துவிட்டு  , காரில்  சந்தோஷமாக   பறந்தனர்.

கனவெல்லாம்   நீயே  தெரிய   அன்பே  இன்றில்   இருந்து  தூக்கத்தை   கூட  ரசிக்க   துடங்கிவிட்டேன்.

நினைவுகள் 6

       நீ  என்னை பார்க்கிறாய்  சிரித்தது  என் உதடு

           நீ  என்னை  நீங்கினாய்  கனத்தது  என் மனது

 

பொழுது  புலர்ந்த   வேளையில்   , டைனிங்   டேபிளில்  ராஜாராம்  தன் மனைவியிடம்  ,” நேத்து  சார்  லேட்டா   தான்  வந்தாரு  போலஎன்றார்

ஆரம்பிச்சிட்டீங்களா  , காலங்காத்தாலே   வா    “

இப்போ  நான்  என்ன  அப்படி  தப்பா   கேட்டுட்டேன்

சரி  கத்தாதீங்க  ,  ஆமா  கொஞ்சம்  லேட்டா   தான்  வந்தான்

”  அது   தான   பாத்தேன்   அவன்  சீக்கரமா  வந்தா  தான்  எனக்கு  ஆச்சரியம்  ஆயிருக்கும்  “

ராஜ்  தன்  அறையில்   இருந்து  கீழே  வரவும்  அவன்  அம்மா

சரி  சரி  அவன்  ர்றான்  எதுவும்  கேக்காதீங்க  ” என்றார் .

குட்  மார்னிங்  மா  , ரொம்ப  பசிக்குது  என்ன  டிபன்  ” என்று  கூறிக்கொண்டே  சாப்பிட   உட்காரபோனவன்   ,  தன்  தந்தையை  பார்த்ததும்  , முறைத்துவிட்டு  ” நான்   ஆபீஸ்  போறேன்  மா  அங்கேயே   சாப்பிட்டுக்கிறேன்என்று  கூறிவிட்டு   ஆபீஸ்  கிளம்பினான்

அப்பொழுது   ராஜாராம்  தன்  மனைவியிடம் ,”  அடிக்கடி   வெளியில   சாப்பிட்டா   உடம்புக்கு   நல்லதில்ல  ,  வீட்லயே   சாப்பிட்டு   போக  சொல்லுஎன்றார் .

ராஜ்  தன்  தாயிடம்  ,”  மா  நல்ல  கேட்டுக்கோங்க   யாரும்   என்  மேல   அக்கறை  இருக்குற  மாதிரி  நடிக்க  வேண்டாம் , அது  எனக்கு தேவையும் இல்ல  ” என்றான்

ராஜாராம் ,”  யாருடா இப்போ   நடிக்கிறாங்க

ராஜ் ,” தை  நான்  வேற  சொல்லணுமா  ,  நீங்க  தான்

ராஜாராம் ,” உன்னை  பெத்ததுக்கு    என்னலாமோ   அனுபவிச்சிட்டேன் , இதையும்  அனுபவிக்கிறேன்  , சொல்லுடா  என்ன  சொல்லணுமோ  சொல்லு  , என்   மனச நீ  காயப்படுத்துற   மாதிரி    பேசுறது   ஒன்னும்  புதுசு  இல்லையே   “

ராஜ் ,”  யாரு   நான்  உங்க  மனச  காயப்படுத்துறேனா  , வாவ்   ,சான்ஸே   இல்ல  எப்படிப்பா   உங்களால  மட்டும்  இப்படி  பிரமாதமா  நடிக்க  முடியுது

ராஜாராம் ,” என்னடா  உளர்ற

ராஜ் ,”  நான் , நான்  உளர்றேன்  ,  சரி  நேரா  விஷயத்துக்கு   வரேன்  , ஆதவ்கிட்ட   ஏன்  அப்படி  பேசுனீங்க  , அவன்  மனசு  வெந்து  போய்  என்கிட்ட   அழுதுட்டான்   ,   ஏன்ப்பா   இப்படிலாம்  பண்றீங்க   ,  இங்க  பாருங்கப்பா  , உங்ககிட்ட  தெளிவாவே  சொல்றேன்நான்  உங்க  பேச்சை  கேட்காம  நான்  நிறைய  விஷயம்  பண்ணிட்டேன்  ,  உங்களுக்கு  வேணும்னா  நான்  வீட்டுக்கு   அடங்காதவனா   உங்களை  மதிக்காதவனா  தெரியலாம்   , நீங்க   என்ன வேணும்னாலும்   நினச்சிக்கோங்க   நான்  கவலை  படமாட்டேன்   , என் மனசுக்கு   தெரியும்  உங்கமேலயும்  அம்மாமேலயும்   நான்  எவ்வளவு  அன்பு  வச்சிருக்கேன்னு   இங்க  பாருங்கப்பா  நீங்க  எனக்கு  ரொம்ப  முக்கியம்  உங்களுக்கு  ஏதாவது  ஒன்னுனா  என்னால  தாங்கிக்க   முடியாது தான்   , ஆனா அதே சமயம்   என்    உயிர்    நண்பன்  ஆதவ்வ  ,   யாரும்   இன்சல்ட்  பண்றதையும்   பாத்துட்டு  என்னால  சும்மா  இருக்க   முடியாது    அது  யாரா   இருந்தாலும்   சரிஎன்று  கூறிவிட்டு  வேகமாக   சென்றான்

மகன்   பேசிய    ஒவ்வொரு  வார்த்தையிலும்  உள்ள  உண்மையையும்    உணர்ந்த   ராஜாராம்    , வாய்விட்டு  எதுவும்  கூறவில்லை  , தன்   மௌனத்தாலேயே   தான்   ஆதவ்விடம்   அன்று   நடந்துக்கொண்டது   எவ்வளவு   பெரிய   தவறு   என்று  புரிந்து கொண்டார் .

அன்று   ஸ்கூலில்   இருந்து  வந்த  துருவ்   அடுத்த   நாள்   இருக்கும்   ப்ராஜெக்ட்  காம்பெட்டிஷன்க்கு    ப்ராஜெக்ட்  செய்ய  வேண்டிருப்பதால்  தன்    தந்தைக்காக  வெகு  நேரமாக  காத்துக்கொண்டிருந்தான் , போன்  பண்ணியும்  பார்த்தான்  ஆனால்    ,ஆபீஸில்  வேலை   பளுவின்   காரணமாக   அன்று   ஆதவ்   ரொம்ப  நேரம்  கழித்து  தான்   வீட்டுக்கு   வந்தான் . ஆதவ்  வந்த   நேரம்   துருவ்வும்   நன்றாக   தூங்கிருந்தான்  .

பின்பு  காலையில்   பள்ளி   செல்வதற்காக   எழும்பிய  துருவ்  , ஆதவ்விடம்  ப்ராஜெக்ட்  பற்றி  பேசுவதற்காக   அவனை   எழுப்பினான் ,” அப்பா   இன்னைக்கு  எனக்கு  சயின்ஸ்  ப்ராஜெக்ட்  காம்பேட்டிஷன்   இருக்கு   என்கிட்ட  ப்ராஜெக்ட்   இல்ல  , நீங்க  தான்  எனக்கு  செஞ்சிதரனும்   ” என்றான்

ஆதவ் ,”    அப்படியா   உனக்கு  எப்போ வேணும்

துருவ் ,” பத்து  மணிக்குலாம்  ஆரம்பிச்சிரும்ப்பா

ஆதவ் ,” விடுடா    நான்    இருக்கேன்ல   சரியா  பத்து  மணிக்கு   ப்ராஜெக்ட்டோட   உன்  ஸ்கூல்க்கு   வந்திடுறேன் , நீ  ஃபீல்  பண்ணாம    டிரைவர்  கூட  ஸ்கூல்க்கு  போஎன்றான்

துருவ் ,” சரிப்பாஎன்று கூறி ,தன்   தந்தைக்கு   முத்தம்  கொடுத்துவிட்டு   பள்ளிக்கு  சென்றான் .

ஆதவ்   ரெடி   ஆகி  கீழே   வந்தான்   அப்பொழுது   திடிரென்று    இன்கம்  டக்ஸ்   ஆபீசர்ஸ்   அவன்   இல்லத்தில்   சோதனை   நடத்துவதற்க்காக   வந்தனர் .

ஆதவ்  ,”  சார்  உங்களுக்கு   யாரோ  தப்பான   இன்பர்மேஷன்   குடுத்திருக்காங்க   இதுவரை   நாங்க   சரியா  தான்  டக்ஸ்  பே  பண்ணிட்டு   இருக்கோம்   ” என்றான்

ராதா கிருஷ்ணன் ,”  விடு  ஆதவ்   அவங்க  அவங்களோட   கடமைய   செய்யட்டும்   , நம்ம  மேல  எந்த  தப்பும்  இல்லாதப்போ  நாம    ஏன்   பயப்படணும்  ” என்றார்

ஆதவ்  ,” யஸ்  டட்என்று  கூறிவிட்டு

ஆபீசர்சை  பார்த்து , சார்   யு   ப்ளீஸ்  கேரி  ஆன்  “

ஆபிசர் ,” தங்க்   யு  Mr  .  ஆதவ்  ”  என்று  கூறிவிட்டு  அவர்களது   வேலையை   பார்க்க  துடங்கினர் .

வீட்டில்  நடந்துகொண்டிருக்கும்   இந்த  பரபரப்பினால்  ஆதவ்  துருவ்  ப்ராஜெக்ட்  பத்தி  மறந்தே  போய்விட்டான் .

அங்கே  ஸ்கூலில் 

துருவ்   தன்   தந்தைக்காக    காத்துக்கொண்டிருந்தான்  . அப்பொழுது   அங்கு   வந்த   வகுப்பு   ஆசிரியை  துருவ்விடம்   ப்ராஜெக்ட்   காம்பெட்டிஷன்    உள்ள   நடக்குதுப்பா  நீ  இங்க  என்ன  பண்ற .

துருவ் ,” மேடம்  என்  அப்பா  ப்ராஜெக்ட்  கொண்டு வரேன்னு  சொல்லிருந்தாரு    ஆதான்   வெயிட் பண்றேன்என்றான் .

ஆசிரியை,”  உன்  அப்பா  வந்தா  கண்டிப்பா  உள்ள  வருவாங்க  , நீ  வெளியில  நிற்க வேண்டாம்   காம்பெட்டிஷன்   நடக்குற  ஹாலுக்கு   போ  சரியா   ” என்றார்

துருவ் ,” யஸ்  மேடம்  ” என்று  கூறிவிட்டு   உள்ளே  சென்றான்

அங்கே    அவனது   நண்பர்கள் ,”  என்னடா   துருவ்    உன்  ப்ராஜெக்ட்  எங்கஎன்றான்

துருவ் ,” அப்பா  கொண்டு  இப்போ  கொண்டுவருவாங்க , ஆமா   உங்க  ப்ராஜெக்ட்லாம்   எங்க  டா

”  அதோ   எங்க  ப்லேஸ்    வச்சிருக்கோம்   , நாங்க    என்ன  ப்ராஜெக்ட்  பண்ணின  என்னடா  , எப்படியும்   நீ  தான்  பர்ஸ்ட்   வருவஎன்றனர்

அப்போது   அங்க   வந்த   ஒரு  பையன்  ,” துருவ்   மேடம்    உன்  ப்ராஜெக்ட்ட   கொண்டு  போய்  காட்டி   உன்  பெயரை   ரீஜிஸ்டர்  பண்ண  சொன்னாங்க   , ஆமா  உன் ப்ராஜெக்ட்  எங்க   “

துருவ்  ,” அப்பா   கொண்டு  வரேன்னு   சொன்னாங்க , ஆனா  இன்னும்  வரலஎன்றான்

”  பங்க்ஷன்   ஸ்டார்ட்   ஆக   போகுது    டா , எனக்கு  என்னவோ   உன் அப்பா  கொண்டு  வர மாட்டாங்கன்னு   தோணுது , அப்போ இந்த  தடவை   எங்க  எல்லாருக்கும்   சான்ஸ்  இருக்கு     ”   என்று  கூறி  சிரிக்கவும்

துருவ் ,”  இந்த   தடவையும்   நான்  தான்  வின்   பண்ணுவேன்  ,  கண்டிப்பா  என்  அப்பா  ப்ராஜெக்ட்டோட   வருவாரு  ” என்று  கூறிவிட்டு  திரும்பவும்   , அங்கே  அதிராவும்   அனுஷாவும்   தன்  பின்னல்   நின்று  கொண்டிருப்பதை   பார்த்தான்பின்பு        தன்  தந்தை    வந்துவிட்டாரா  என்று   பார்ப்பதற்காக   வெளியே  சென்றான் .

இதை  அனைத்தையும்   கவனித்து  கொண்டிருந்த   ஆதிராவுக்கு   துருவ்வை   பார்க்க   பாவமாக   இருந்தது .

ஆதிரா  தன்   மனம்  கேளாமல்  துருவ்வின்   அருகில்   வந்து ,” ப்ராஜெக்ட்ல  நான்   உனக்கு  எதாவது   ஹெல்ப்   பண்ணனுமாஎன்றாள்

துருவ் ,” வேண்டாம்   என்   அப்பா    கொண்டு   வருவாங்க  ” என்றான்

மனம்  கேளாத   ஆதிரா  ,”  இவன  பாத்தா  பாவமா  இருக்கே  என்ன  பண்றது  ” என்று  யோசித்துவிட்டு  பின்பு   ஒரு வித   தயக்கத்தோடு   ,  ஆதவ்விற்கு   கால்  செய்தாள்   ஆனால்   அவனது   போனை   சுவிட்ச்  ஆப்  செய்திருந்தான்  இல்லை  செய்தனர்  ,  ஆபீசர்ஸ்   ஆதவ்வின்   இல்லத்தில்   உள்ள   அனைவரது   போனையும்   சுவிட்ச்  ஆப்   செய்தனர் .

வழக்கம்   போல   ஆதிரா   ஆதவ்வை   திட்டி  விட்டு  . துருவ்வை    பாவம்  போல  பார்த்தாள்  , பிறகு   அவளுக்கு  ஒரு   யோசனை   தோன்றியது

அவள்   அனுஷாவிடம்    துருவ்வின்    காது   பட  ,”  அனுஷா  இந்த  தடவ   கண்டிப்பா  நீ   தான்   வின்  பண்ண  போற , எல்லார்  ப்ராஜெக்ட்டையும்    விட   உன்   ப்ராஜெக்ட்   தான்   சூப்பரா   இருக்கு   , இங்க   நிறைய  பேர்  ப்ராஜசெட்டே   இல்லாம   வந்திருக்காங்க  , எல்லாம்  வாய்  பேச்சு   தான்  செயல்ல   ஒன்னும்   காணோம்என்றாள் 

அதை   கேட்டு  அனுஷா   சிரிக்க  ,  ஆதிரா,”   வா  வா  நாம   உள்ள  போலாம்என்று  கூறி  உள்ளே  போக போனாள்  , அப்பொழுது   துருவ்  ,” எனக்கும்   வேணும்  ” என்று  மெல்லிய  குரலில்   கூறினான்

அதை  கேட்ட   ஆதிரா   லேசாக   சிரித்துவிட்டு , துருவ்வின்    அருகில்   வந்து ,” என்ன  வேணும்  ” என்று  கேட்டாள்

துருவ் ,” ப்ராஜெக்ட்  ,  அப்பா  வந்ததும்   உங்களுக்கு   பே  பண்ணிருவாங்கஎன்றான்

ஆதிரா  தனக்குள்  ,” உன்   அப்பா  தான  வந்துட்டாலும்   தான்  ” என்று    ஆதவ்வை   நன்கு   கரித்துக்கொட்டினாள்

அனுஷா ,” அன்னைக்கு   என்ன  தள்ளி  விட்டல  உனக்கு  நல்லா   வேணும்  , மம்மி  சாரி   அம்மா   நீங்க  இவனுக்கு  ஹெல்ப்    பண்ணாதீங்கஎன்றாள்

ஆதிரா ,”  நோ  செல்லம்  அப்படியெல்லாம்   சொல்ல  கூடாது  , சாரி  கேளுஎன்றாள்

தாயின்  சொல்லை   தட்டாத  பிள்ளையாய்  அனுஷாதுருவ்விடம்  சாரி  கேட்டாள்.

பிறகு    ஆதிரா இருவரையும்   உள்ளே  அழைத்து  சென்று   ஆசிரியரிடம்     துருவ்வின்   நிலைமையை    எடுத்து  கூறி  கொஞ்சம்   நேரம்   அவகாசம்   கேட்டாள்  , ஆசிரியரும்   துருவ்   நன்கு  படிக்கும்  மாணவன்   என்பதால்  சரி  என்று  கூறினார்ஆனால்  முடிந்தளவு  சீக்கரம்  வரும்   படி  கூறினார்  . பின்  ஆதிரா  அனுவிடம்    ,”  அனுஷா  வாட்டர்   ஹார்வெஸ்டிங்   பத்தி   நான்  உனக்கு  நோட்ஸ்  எழுதி  குடுத்தேன்ல  அத  நல்லா   ரீகால்   பண்ணு   சரியா?     நீயும்    துருவ்வும்   இங்கே  தான்   இருக்கணும்   எங்கயும்  போகக்கூடாது  ” என்றாள்

துருவ்விடம் ,” கவலைப்படாத   சீக்கரம்  வந்திர்றேன்என்று  கூறிவிட்டு   வெளியே  சென்றாள்.

துருவ்   அனுஷாவிடம் ,”  ஏய்  உங்க   அம்மா  சொதப்ப  மாட்டாங்கள்ல

அனு ,” உங்க  அப்பா  அளவுக்கு   சொதப்ப   மாட்டாங்க  “

துருவ்    அனுவை   பார்த்து  முறைக்க  அனு  அவனை  பார்த்து  அளவம்   காட்டிவிட்டு   வேறு  பாக்கமாக திரும்பிக்கொண்டாள்

நேரம்   ஆக   ஆக   துருவ்க்கு  பயமாக  இருந்தது   , அதை  கவனித்த  அனு  ,” நீ  பயப்படலாம்   செய்வியா

துருவ் ,” ஏன்  உனக்கு  பயமே  வரதா

அனு ,” வருமே  , ஆனா  நீ  உன்ன  பெரிய  இவன்  மாதிரி  காட்டிக்குவியே  அதான்  கேட்டேன்என்றாள்

துருவ்  முறைக்க

அனு ,” கவலைப்படாத  என்   அம்மா  கண்டிப்பா  வந்திருவாங்க

துருவ் ,” ஹ்ம்ம் ”  என்று  மட்டும்  கூறிவிட்டு   வாசலேயே  பார்த்துக்கொண்டிருந்தான்

அனு  தன்  அம்மா  எழுதி  கொடுத்த  நோட்ஸ்சை  சொல்லி பார்த்துக்கொண்டிருந்தாள் , அப்பொழுது   இரிகேஷன்   என்னும்   ஆங்கில  வார்த்தையை   தவறாக   ஐரிகேஷன்  என்று  சொல்லிக்கொண்டிருந்தாள்  , அதை  கவனித்த   துருவ் ,” வாட்  நீ என்ன  சொல்றஎன்றான்

ஐரிகேஷன்என்று  கூற

துருவ் ,”அப்படி  ஒரு  வார்த்தையே  இங்கிலீஷ்ல  இல்லையேஎன்றான்

அனு ,” ஆமா  இவரு   தான்    இங்கிலிஷயே   கண்டு புடிச்சாருஎன்று  கூறிவிட்டு   மறுபடியும்   படிக்க  ஆரம்பித்தாள்

துருவ்  அனுவை   ஏற   இறங்க   பார்த்து  விட்டு  , அவள்  கையில்   இருந்த  நோட்ஸ்சை   வெடுக்கென்று   வாங்கி  படித்தான்  பின்பு    அனுவை  பார்த்து   ,” லூசு  இது   இரிகேஷன்  , ஐரிகேஷன்  இல்ல  ” என்றான்

அனு  ,” நான்  எப்படி  நம்புறது

துருவ் ,” காட்(god)  அது  உன்னோட  விருப்பம்  , பட்  இது    இரிகேஷன்  “

அனு ,” அப்படினா

துருவ் ,”  வாட்டரை   அக்ரிகல்சர்  பர்பஸ்க்காக    யுஸ்   பண்றத  தான்  அப்படி  சொல்லுவோம்என்றான்

அனு ,” உனக்கு  எல்லாமே  தெரிஞ்சிருக்கு  “

துருவ் ,” அப்படிலாம்   எதுவும்  இல்ல , ஆமா  ரொம்ப  நேரமா  படிக்குற  இன்னுமா  முடிக்கல

அனு ,” மண்டையிலே   ஏற  மாட்டிக்கு

துருவ் ,” அப்படியே  தட்டாத  புரிஞ்சி  படி  , அப்போ   ரொம்ப  ஈஸியா   இருக்கும்என்றான்

அனு ,” ம்ம்ம்  ” என்றாள்

துருவ் ,” மண்டைய  மட்டும்  நல்லா  ஆட்டு  ”  என்று  கூற

அனு   அவனை  பார்த்து  முறைத்துவிட்டு    மீண்டும்  படிக்க   துவங்கினாள்

ஆதிரா   கடைக்கு  சென்று   தெர்மாகோல்  ,  கத்திரிகோல்  ,     சார்ட்  கலர்  பென்    சின்ன  சின்ன  பொம்மைகள்     என்று  ப்ராஜெக்ட்டுக்கு   தேவையான  அனைத்தையும்   வாங்கி  வந்து   தன்   காரில்    அமர்ந்து  குளோபல்   வார்மிங்  பற்றி   தன்னால்  முடிந்த அளவுக்கு   ப்ராஜெக்ட்டை  ஒருவழியாக   செய்து  முடித்தாள்   , அவளுக்கு   அது  திருப்தி   அளிக்கவில்லை   என்றாலும்  , அந்த  குறைவான  நேரத்தில்  அதை  தவிர  அவளுக்கு  வேற  யோசனையும்  தோன்றவில்லை .

உள்ளே    அனைத்து   மாணவர்களும்  தங்களின்   ப்ராஜெக்ட்டை  ஒருவர்  பின்  ஒருவராக   விவரிக்க  தொடங்கினார் , துருவ்  கவலையோடு    வாசலையே  பார்க்க   அங்கே   ஆதிரா   ப்ராஜெக்ட்டோடு   துருவ்வை   நோக்கி  வந்தாள்  , அவளை பார்த்த  பிறகு   துருவ்வின்  வாடிய  முகம்   பிரகாசமாக    மலர்ந்தது   , 

ஆதிரா  துருவ்வை  தன்னோடு  ஆசிரியருடன்   அழைத்துச்சென்று  ,” அவனது  பெயர்  மற்றும்  ப்ராஜெக்ட்டை   பதிவு   செய்தாள்  .

பின்பு  , துருவ்வுக்கு  ப்ராஜெக்ட்டை   பற்றி  விவரித்தாள்  , தான்  எழுதி  வைத்திருந்த  நோட்ஸ்சையும்   அவனிடம்  கொடுத்தாள்  , ஆதிராவின்  அக்கறையை  பார்த்த  துருவ் ,” தங்க்ஸ் அன்ட் சாரி  ஆன்டிஎன்றான்

ஆதிரா ,”  தங்க்ஸ்  ஒகே , சாரி எதுக்கு

அன்னைக்கு   உங்களை  அடிச்சேன்ல  , அப்பா  உங்கள  எங்கயாவது  பார்த்தா  சாரி  கேட்க  சொல்லிருக்காங்க  , அந்த மாதிரி  பண்ண  கூடாதாம்  அது  கெட்ட  பழக்கமாம், bad  பாய்ஸ் தான்  அப்படி  பண்ணுவாங்களாம்

ஆதிரா தனக்குள் ,” உங்க  அப்பா  இதெல்லாம்  உனக்கு  சொல்லி குடுக்குறாரா  பரவாயில்லையேஎன்று  கூறிவிட்டு

துருவ்வை   பார்த்து   சிரித்து  ,” சரி  சீக்கரம்  படி  ” என்றாள்

துருவ்வும்  ,” நோட்ஸ்  அனைத்தையும்  படிக்க  துவங்கினான்

கொஞ்சம்  நேரம்  கழித்து  அனுஷாவின்  திருப்பம்  வர  ஆதிரா  மிகவும்    ஆர்வமாக   இருந்தாள்  தன்  மகளிடம்  ,”ல்  தி  பெஸ்ட்    நல்லா   பண்ணுஎன்று  கூறி  வழியனுப்பி   வைத்தாள்

அனு ,”  மை  நேம்  இஸ்  அனு  ,  ஐம்  கோயிங்   டு  டாக்   அபௌட்   மை  ப்ராஜெக்ட் ,” வாட்டர்   ஹார்வெஸ்டிங் ”  இட்  இஸ்   அபௌட்  சேவிங்   ரெயின்  வாட்டர்  ,  டு  அவாய்ட்  டிரௌட்இட்   இஸ்  இட்  இஸ்  ”  என்று   பாதியிலே  தான்  படித்தது   மறந்து  போக   , தன்  தாயை   பாவமாக   பார்த்தாள்  .

பின்  அனைவரும்   கை   தட்ட  அனுஷா  கீழே  வந்தாள் , ஆதிரா  தன்  செல்ல  மகளை   தன்  மடியின்  மீது  தூக்கி  வைத்துக்கொண்டு  ,”  ஹ்ம்ம்  என்ன  மேடம்  சொதப்பிடீங்களா   , பரவாயில்லை  போகட்டும்  விடு  அடுத்த  முறை  பார்த்துக்கலாம்  ” என்று   கூறி  அவளது   கன்னத்தில்  முத்தமிட்டு  ஆறுதல்  படுத்தினாள்  .

ஆதிரா  மற்றும்  அனுஷாவின்   நெருக்கத்தை  பார்த்த  துருவ்வுக்கு  தன்  தந்தையின்  நியாபகம்  வர  , ஒருவித  சோகத்தோடு  அமர்ந்திருந்தான் .

ஆசிரியர்  ,” லாஸ்ட்   பட்  நாட்    லீஸ்ட்  ,ஹீயர்   கம்ஸ்  துருவ்என்று  துருவ்வை    அழைத்தார் .

ஆதிரா ,” ல்  தி  பெஸ்ட்    துருவ்  , நல்லா   பண்ணுஎன்றாள்   பின்பு  தனக்குள்  ,”  கொஞ்சமான  நேரத்துல   இவ்வளவு  தான்  பண்ண  முடிஞ்சுது  ,  நல்லா  சொல்லி  குடுத்த  அனுவே  சொத்தப்பிட்டா , இவன்  எப்படி  பண்ணுவான்னு   தெரியலயேஎன்று  புலம்பிக்கொண்டாள்

துருவ்  ,” குட்  அப்டர்  நூன்  லேடீஸ் அண்ட்  ஜெண்ட்ல் மன்அண்ட்  ஆல்சோ  மை  ஹார்ட் புல்  விஷஸஸ்   டு  மை  லவ்விங்    ப்ரண்ட்ஸ்   ”  என்று  துருவ்  ஆரம்பித்த  தோரணையில்   ஆதிரா  சிலிர்த்து  போனாள்  ,  இந்த  சின்ன  வயசில்   பேச்சில்   இவ்வளவு   நம்பிக்கையா  என்று  ஆச்சரியமாக   பார்த்தாள்  , அரங்கில்    இருந்த  மற்ற  நபருக்கு  இது  பெரிய  விஷயமாக  தெரியவில்லை   ஏன்  என்றால்  துருவ்வின்   திறமை   அனைவர்க்கும்  தெரிந்த  ஒன்று  தான் .

துருவ்    மிகவும்  கஷுவலாகதான்  சொல்ல  வந்த   விஷயத்தை    கூறினான்   , எந்த  ஒரு   தற்றமும்  இல்லை  ,  மிகத்தெளிவாக  பேசினான்  ,  எல்லாத்துக்கும்    மேலாக  ஆதிரா   சொல்லி தந்ததைவிட    அதிமாகவும்  அதோடு   சேர்த்து   சில  ரியல்  லைப்  எடுத்துக்காட்டும்  கூறினான்   .

அவன்  தன் உரையை  முடித்தவுடன்   அனைவரும்  தங்களின்   கரகோஷத்தை   எழுப்பினர்  , அதில்  தன்  நிலைக்கு  வந்த  ஆதிரா   அவள்  பங்கிற்கு   தன்  கையொலியை  எழுப்பினாள்.

பின்   துருவ்   தன்னிடத்தில்   வந்து  அமர்ந்தான் , ஆதிரா   துருவ்விடம்,” வாவ்  துருவ்  ரீயலி   நைஸ்  , ரொம்ப   நல்லா  பண்ணின ”  என்றாள்

துருவ் ,” தங்க்  யு  ஆன்டிஎன்றான்

ஆசிரியர்  ,”  இப்போ  எல்லாருக்கும்   லஞ்ச்  ப்ரேக்   சாப்பிட்டுட்டு   சரியா  ஒரு  மணிக்கு  இந்த  ஹால்ல   அசம்பல்   ஆகிருங்க  , அப்போ  ரிசல்ட்   சொல்லிருவோம்  ” என்றார் .

அனைவரும்   எழுந்து  சாப்பிடுவதற்காக  சென்றனர்துருவ்  வெளியே  சென்று   தன்  தந்தை  இப்பொழுதாவது   வந்திருக்காரா  என்று  பார்த்தான்  ஆனால்  அங்கே  தன்  தந்தை  இல்லை என்றவுடன்  அவனது  கண்கள்   நீரால்   நிரம்பியது  ,

துருவ்வை   தேடி  வந்த  ஆதிரா  , அவனை   பார்ததும்  அவன்  அருகில்  வந்தாள்  , ஆதியை  பார்த்த  துருவ்  தன் கண்களை துடைத்துக்கொண்டு  தான்  நார்மலாக  இருப்பது  போல்   காட்டிக்கொண்டான்  .

ஆதிரா ,”துருவ்     இங்க  என்ன பண்ற , சாப்பிட  போல ”  என்றாள் .

துருவ் ,” அப்பா  இன்னும்  வரல , எனக்கு  இன்னும்   யாரும்  லன்ஞ்சும்   கொண்டு   வரல, அப்பா    என்னை  மறந்துட்டாங்கஎன்று  பாவமாக  கூறி  ஏங்கி  ஏங்கி  அழத் தொடங்கினான்  ….

கண்ணே    நீ    என்னை  நீங்கும்   ஒவ்வொரு   நொடியும்   நெருப்பில்   பட்ட   புழுவாய்  துடிக்கிறது   என்   மனது  … 

நினைவுகள் 7

 

அறியாததால்  உன்னை பிரிந்தேன்

 புரிந்ததால்  மீண்டும்  வருகிறேன்

வருமான  வரித்துறை அதிகாரிகள்   ஆதவின்  இல்லத்தை  புரட்டி  போட்டுக்கொண்டிருக்க  ,  ஆதவ்   மனதிற்குள்  ,” துருவ்  வேற   எனக்காக   வெயிட்  பண்ணிட்டு  இருப்பான்  , சாரிடா  அப்பாவை  மன்னிச்சிரு. யார்கிட்ட  காசு  வாங்கிட்டுடா   ,  இப்படி  பண்ணிட்டு   இருக்கீங்க  ,  யார்ன்னு   தெரியட்டும்  அப்புறம்   இருக்குஎன்று   அதிகாரிகளை  வசை  பாடிக்கொண்டிருந்தான் .

பள்ளியில்   அழுதுக்கொண்டிருந்த   துருவ்வை  

ஆதிரா ,”  அழ  கூடாதுமாஅப்பா  எப்படி   உன்னை  மறப்பாங்க   ,  எதாவது   முக்கியமான  வேலை  வந்திருக்கும்  , சீக்கரமே  வந்திருவாரு  , இப்போ  என் கூட   வா ”  என்று    கூறி   ஒரு வழியாக   சாமதானம்   செய்து   , அவனுக்கும்   அனுஷாவுக்கும்   தன்   வீட்டில்   இருந்து   கொண்டு  வந்த   உணவை   தன்  கையாலேயே  ஊட்டி  விட்டாள்

ஆதிராவின்   இந்த   செய்கையில்   நெகிழ்ந்து   போன   துருவ்  ஆதிராவையே  பார்த்துக் கொண்டிருந்தான்

பின்  ஆதி   குழந்தைங்களுக்கும்   ஊட்டிவிட்டு   தானும்   உண்டுவிட்டு  அவர்களை   பார்த்து  ,” சரி  ஹால்குள்ள  போவோமா ”  என்றாள்

உடனே  துருவ்   ஆதிராவின்   அருகில்   வந்து   அவளை   தன்  பக்கம்  குனியும்  படி  அழைத்தான்  ,  அவள்  புன்னகைத்துக்கொண்டே  அவன்   பக்கம்   குனிய  துருவ்   ஆதிராவின்  கன்னத்தில்   முன்பு  ஒருநாள்  தன்  கரங்களால்   ஏற்படுத்திய  காயத்துக்கு   மருந்திடுவது   போல   தன்   பிஞ்சி   இதழால்    முத்தமிட்டு  , அவளை  பார்த்து  ,”  ஐம்  சாரி   அன்டி”  என்றான்

ஆதிரா , சந்தோஷத்தில்  அவனை  பார்த்து ,” ஏன்  சாரி  கேட்குற

துருவ் ,”  அன்னைக்கு  உங்கள  அடிச்சதுக்கு

ஆதிரா ,” ஆதான்  கலையிலே   கேட்டுட்டியே

அப்போ  அப்பா   கேக்க   சொன்னாங்க கேட்டேன்ஆனா  இப்போ  எனக்கு   தோணுது அதான் கேட்டேன்என்று  கூறி  சிரித்தான்

உடனே   ஆதிரா  புன்னகைத்துவிட்டு   அவனது   இரு   கன்னங்களிலும்   முத்தம்  மழையை  பொழிந்தாள்.

பின்  துருவ்  அனுஷாவும்  மாறி  மாறி   ஒருவருக்கொருவர்   மன்னிப்பு  கேட்க   ,இருவரும்  நண்பர்கள்  ஆனார்கள் .

ஆதிரா   இருவரையும்   பார்த்து  சிரித்துவிட்டு  அவர்களை   தன்னோடு   அழைத்துக்கொண்டு   ஹாலுக்குள்   சென்றாள்.

இவர்களை    தொடர்ந்து   அனைத்து   மாணவர்களும்   தங்களின்   பெற்றோர்ருடன்  ஒருவர்  பின்  ஒருவராக   உள்ளே   வந்தனர்   அவர்கள்   வந்து   ஒரு சில   நிமிடத்தில்   பங்க்ஷனும்   துவங்கியது    தலைமை   ஆசிரியர்    தன்   உரையை   முடித்த   பிறகு   பரிசு   கொடுக்கும்   நேரம்  வந்தது   . அனைத்து   மாணவர்களும்   அவர்களது   பெற்றோர்களும்  மிகவும்  ஆர்வமாக   இருந்தனர்  , அப்பொழுது    மூன்றாம்    வகுப்பு   ஆசிரியர்  பரிசு   பெறும்   மாணவர்களின்   பெயரை   அறிவித்தார்  மூன்றாவது   பரிசு    மூன்றாம்   வகுப்பு   b   பிரிவை  சேர்ந்த   மாணவி   வைஷணவிக்கு  வழங்கப்பட்டது    ,  இரெண்டாம்   பரிசு  அதே  வகுப்பு   a  பிரிவை  சேர்ந்த  மாணவன்  அருணுக்கு  கொடுக்கப்பட்டது  ,  முதலாம்  பரிசை    அனைவரும்   எதிர்பார்த்தது  போல  நம்  துருவ்  தட்டிசென்றான்அதை  பார்த்த  ஆதிராவுக்கு  மிகவும்   சந்தோஷமாக   இருந்தது  தன் மகள்  அனுஷாவிற்க்கு  பரிசு   கிடைக்கவில்லை   என்கின்ற  கவலை   இருந்தாலும்    துருவ்வுக்கு   கிடைத்ததில்  மிகவும்  மகிழ்ச்சியாக   இருந்தாள்.

தலைமை  ஆசிரியர்   தன்  இறுதி  உரையை  முடிக்க   ,  அனைவரும்   தங்களின்   இல்லம்  திரும்பிக் கொண்டிருந்தனர் . பள்ளி   முடியும்   நேரம்   வந்தும்   கூட   துருவ்வை   அழைத்து  செல்ல   அவன்   வீட்டில்   இருந்து   யாரும்   வரவில்லை  , துருவ்வின்    வாடிய   முகத்தை   பார்க்க  ஆதிராவுக்கு   பாவமாக   இருந்தது  .

 ஆதிரா  தன் மனதிற்குள்  ஆதவை ,”  பெத்த  பையனை   கூப்பிட கூட வர  முடியாத  அளவுக்கு  ,  அவன்  அப்படி  எந்த  வேலையில    பிசியா  இருக்கானோ , போன்னும்  சுவிட்ச்  ஆப்ல   இருக்குஎன்று  திட்டிக்கொண்டிருந்தாள் .

அங்கே   ஆதவ்வின்   இல்லத்தில்  வருமான  வரித்துறை  அதிகாரிகள்  தங்களின்   சோதனையை  முடித்து  அங்கே  அவர்கள்   நினைத்தது  போல்  ஒன்றும்  இல்லை  என்று  தெரிந்ததும்   அங்கு  இருந்து  சென்றனர்  ஆனால்   ஆதவ்வின்   இல்லத்தில்  வருமான  வரித்துறை   சோதனை  நடத்தப்பட்ட   விஷயம்  பத்திரிக்கையாளர்களுக்கு  தெரிந்து   வாலு போய்  கத்தி  வந்த  கதையாக  ,  அதிகாரிகள்  போய்   பத்திரிக்கையாளர்கள்   படையெடுத்தனர்   ,  அவர்களது   கேள்விகளுக்கு  பதில்  சொல்வது   அவனுக்கு  பெரும்  பாடாக  அமைந்தது .

துருவ்வை   சமாதனாம்   செய்வதற்காக   ஆதிரா   துருவ்விடம்  ,”  கலக்குற   துருவ்    பர்ஸ்ட்  ப்ரைஸ்   வாங்கிருக்க   எங்களுக்கு   ட்ரீட்  எங்க

”  என்ன  வேணும்ன்னு   சொல்லுங்க   எங்க  அப்பாகிட்ட  கேட்டு   வாங்கி   தரேன்

   நீ   உங்க  அப்பாகிட்ட  கேட்டு   வாங்கிகுடு  ,  இப்போ உன்  சார்பா   நான்  ட்ரீட்   வைக்கிறேன்,உனக்கு  என்ன  வேணும்

ஐஸ்கிரீம்   ” என்று  அனுஷா  கூற

துருவ் ,” ஒகே  அன்ட்டி ”  என்றான்

ஆதிரா ,”  ஒகே இப்போ நேரா  ஐஸ்கிரீம்  பார்  போலாம்  ,  அங்க  ஐஸ்கிரீம்  சாப்ட்டுட்டு  அதன் பிறகு நான்  உன்னை  உன்  வீட்ல  டிராப்  பண்றேன்

துருவ்  ,சரி  என்பதை  போல்  தன் தலையை   ஆட்ட  .

அனுஷா  ,”   ஜாலி   ஐஸ்கிரீம்  ஐஸ்கிரீம்   என்று  மகிழ்ச்சியில்   துள்ளி   குதித்தாள்பின்   துருவ்வும்  தன்  சோகம்  களைந்து  மகிழ்ச்சியாக   அவர்களோடு   ஐஸ்கிரீம்  பார்க்கு   சென்றான் .

ஆதவ்   தன்   இல்லத்தில்    பத்திரிக்கையாளர்களை   ஒரு  வழியாக   சமாளித்து  .  சுவிட்ச்  ஆப்   செய்து   வைக்கப்பட்ட  தன்  மொபைலை  ஆன்  செய்தான்  ,  அப்பொழுது   என்றும்  இல்லாமல் ஆதிராவிடம் இருந்து  பத்து   மிஸ்ட்  கால்  வந்ததை  பார்த்து  ,  ஷாக்  ஆகி  தனக்குள்  ,”  ஏன்  இவ்வளவு   தடவை   கால்  பண்ணிருக்காகண்டிப்பா   என்ன   திட்றதுக்காதான்    இருக்கும்   ஆனா    நான்   எந்த  வம்பும்    பண்ணலையே  சரி  அவளுக்கு  போன்  பண்ணி  பார்ப்போம்என்று      அவளுக்கு   போன்   செய்தான் .

அங்கே   அவர்கள்   ஐஸ்கிரீம்   பாருக்குள்  நுழையவும்   அவனது   போன்  வந்தது  உடனே  ஆதிரா  அட்டண்ட்   செய்து  , அவன்  பேசுவதற்குள்    , ”  நீயெல்லாம்   ஒரு  அப்பா  உன்  குழந்தையை  ஒழுங்கா   பாத்துக்க   முடியாது  ,  பாவம்  இன்னைக்குஎன்று  ஆரம்பித்து  ஆதவ்விடம்   அனைத்தையும்   கூறி  அவனை   மூச்சிவிடாமல்  திட்டிதீர்த்தாள் .

ஆதவ் ,”    ஐம்  சாரி  ” என்று கூற

ஆதிரா ,” வாட்  தி  ஹெல்இவ்வளவு  பெரிய  விஷயம்  நடந்திருக்கு   நீ  என்னனா   சிம்பிள்ளா  சாரி  சொல்ற

ஆதவ் ,”   அம்மா  தாயே  சாரி   சொன்னாலும்   தப்பு   சொல்லாட்டாலும்   தப்பு   இப்போ  உன்கூட  நீயா  நானா   நடத்த   எனக்கு   தெம்பு  இல்ல  , என்  பையன்  பக்கத்துல   இருந்தா  அவன்  கிட்ட  போன்ன  குடு

ம்ம்ம்  குடுக்குறேன் , துருவ்  இந்தா  உன் அப்பா  தான்  பேசுறாரு  பேசு  ” என்றாள்

துருவ் ,” அப்பா  ஏன்   இன்னைக்கு   வரல , நான்  எவ்வளவு  நேரம்  உங்களுக்காக   வெயிட்  பண்ணிட்டு  இருந்தேன்  தெரியுமா  ,  நான்   ரொம்ப  sad  ஆய்ட்டேன்

  என்  சிங்க குட்டி   sad   ஆய்ட்டீங்களா  அப்பா  சாரி  கேட்டுக்குறேன்  ,  ரொம்ப  முக்கியமான  வேலைமா   அதான்  அப்பாவால  வரமுடியல  , சரி  ஆதிரா  அன்ட்டி  கிட்ட  போன்ன  குடுங்க

என்ன   சொல்லுங்க  “

”  ஆதிரா  நீங்க   இப்போ  எங்க  இருக்கீங்க

ஸ்கூல்   பக்கம்   இருக்குல அந்த  ஐஸ்கிரீம்   பார்க்கு   வந்திருக்கோம் , ஏன்  கேட்குறீங்க

இல்ல   அங்கயே  இருங்க  ,  துருவ்வ   நான்   வந்து   பிக்கப்  பண்ணிக்குறேன்   “

”  சரி  ” என்று  கூறி  போனை   வைத்துவிட்டு  ,  குழந்தைங்களுக்கு   ஐஸ்கிரீம்  ஆர்டர்  செய்துகொண்டிருந்தாள்  அப்பொழுது  துருவ்  ,”  ஆதிரா  அன்ட்டி  , எனக்கு   பாத்ரூம்  போனும்என்று  தன்  ஒற்றை   விரலை  காட்டினான் .

ஆதிரா   அனுஷாவிடம்  ,” அனு   இங்கயே  உக்காரு   நானும்   துருவ்வும்   இப்போ   வந்திருவோம்   ”  என்றாள் , பின் துருவ்விடம் ,” வாப்பா  ”  என்றாள்

துருவ் ,”  அன்ட்டி   நீங்க   எங்க  வர்றிங்க  “

”  உன்கூடதான்   நீ   பாத்ரூம்   போகணும்ன்னு   சொன்னல

”  அச்சோ  அன்ட்டி   நான்   தனியாவே   போயிருவேன்  ,  நான்  தான்  பிக்  பாய்  ஆச்சே  நீங்க  இங்கயே  உக்காருங்க

இதைகேட்ட   ஆதிரா    சிரித்துவிட்டு  ,”  அப்படியா   வா   டா   என்   பெரிய   மனுஷா  ” என்று  கூறி  அவனை  தன்  கையில்   ஏந்திக்கொண்டு   பாத்ரூமிற்கு   அழைத்துசென்றாள்.

பாத்ரூம்   வாசலில்   துருவ்  ,” அன்ட்டி   இதுக்கு   மேல  நானே   போய்க்குவேன்  , எனக்கு  வெட்கமா   இருக்கு

ஆதிரா   புன்னகைத்துவிட்டு  ,” சரி  பார்த்துபோ   கதவை   லாக்   பண்ணாத    சரியாபோய்ட்டுவா ”  என்று   கூறி   பாத்ரூம்  வாசலில்   நின்றுக்கொண்டிருந்தாள் .

அந்த   நேரம்   பார்த்து   ஒருவன்   ஆதிராவின்   தோள் மேல்  தன்  கையை  வைத்து ,” ஹலோ  ஆதி   எப்டி   இருக்க ”  என்றான் .

ஆதிரா   அவனை   பார்த்து   அதிர்ச்சியாகி   திகைத்துபோய்   நின்றாள்  .

என்ன  ஆதிரா   என்ன   பார்த்தா   சந்தோஷபடுவன்னு   நினைச்சேன்   , இப்படி   ஷாக்  ஆயிட்ட

கார்த்திக்  ,  நீ   நீ   இங்க   என்ன  பண்ற

கார்த்திக் ,”  வாரே வா   என்  பேரு   கூட   உனக்கு   நியாபகம்   இருக்கா  , இல்ல   வருஷம்   ஆச்சில   அதான்  மறந்துட்டியோன்னு  நினச்சேன்

ஆதிரா   கோபமாக   பார்க்க

சரி   சரி   ஏன்  இப்படி   பார்வையாலே    எரிக்குற ”  என்று   அவன்   பேசிக்கொண்டிருக்க    அங்கே   அனுஷா   ” அம்மாஎன்று   கூறிக்கொண்டு  ஆதிராவின்    அருகில்   வந்தாள்

அப்பொழுது   கார்த்திக் ,”     நீ   அனு  குட்டி  கூட   வந்திருக்கியா“,  “ஹாய்  அனு  குட்டி    ”  என்று   அனுவை  பார்த்து   கேட்க்க

அனு  , இவர்   யார்   என்பதை   போல்   தன்  தாயை   பார்த்தாள்

உடனே   கார்த்திக் ,”  என்ன   ஆதி   நான்   யார்ன்னு   குழந்தைக்கு   சொல்லலபார்த்தியா   அவ   நான்   யார்ன்னு   தெரியாம   பார்க்குறா  ,  நான்  யார்ன்னு   சொல்லு  “

ஆதிரா  ,”  குழந்தைக்கு   சொல்ற   அளவுக்கு   நீ   ஒன்னும்   அவ்வளவு   முக்கியமானவன்   இல்ல

   சரி  அப்போ   நானே   சொல்றேன் ”  என்று  அனுவை  பார்க்க

ஆதிரா  அனுஷாவை  பார்த்து ,”  செல்லம்   நீ   போய்   டேபிள்ல   உக்காரு   அம்மா   இப்போ  வந்திர்றேன்என்றாள்

அனுஷா  அங்கிருந்து   சென்றவுடனே   ஆதிரா

”  கார்த்திக்   உனக்கு   என்ன  வேணும்   ,  ஏன்   இப்படி   பண்ற  , அனுஷா   என்னோட   குழந்த  , அவகிட்ட   என்ன  சொல்லணும்   சொல்லகூடாதுன்னு   நான்   தான்   முடிவு  பண்ணுவேன்  நீ   ஒன்னும்  சொல்லவேண்டாம் ”  என்றாள்

கார்த்திக்   உடனே   ஆதிராவின்    அருகில்   நெருங்கி   வந்து  ,” ஏன்  சொல்ல   கூடாது  ,  சொன்னா   என்ன   எப்படி   இருந்தாலும்   தெரியவேண்டிய   ஒன்னு   தான    “

முட்டாள்   மாதிரி   பேசாத  ,  முதல்ல    இங்க  இருந்து  கிளம்பு  ” என்றாள்

”  குடும்பமே   சேர்ந்து   என்ன   ஏமாத்தி    எனக்கு   துரோகம்   பண்ணிட்டு   ,  இப்போ   நீ   மட்டும்   சந்தோஷமா   இருக்கியா

ஆதிரா   பழசை  பத்தி   பேச  எனக்கு  விருப்பம்   இல்ல  ,  நீ   என்  லைப்ல   முடிஞ்சிபோன   சாப்ட்டர்   அதை   தயவு   செஞ்சி   புரிஞ்சிக்கோபுரிஞ்சிக்க   முடியலனா  என்னால   ஒன்னும்  பண்ண  முடியாது   ”  என்று   கூறி   அங்கிருந்து   கிளம்பியவளின்  கைகளை  பற்றிய   கார்த்திக்

என்ன   நான்   முடிஞ்சிபோன   சாப்ட்டரா , எனக்கு  முடிவு  தெரியாம   என்னால் எங்கயும்  போக  முடியாதுஎன்றான்

ஆதிரா   எவ்வளவு   தடுத்தும்    அவன்   ஆதிராவின்   கையை   விடவில்லை .

பாத்ரூமில்   இருந்து   வெளியில்   வந்த   துருவ்   கார்த்திக்கை  பார்த்து  ,”  ஏய்   பர்ஸ்ட்  முதல்ல   ஆதிரா  அன்ட்டியோட   கைய  விடுஎன்றான்

கார்த்திக்  ஆச்சரியமாக  பார்க்க  துருவ்  அவன்  அருகில்   வந்து  ” உங்களைத்தான்”  என்று  கார்த்திக்கின்   கையை   விளக்க  முயற்சித்தான்

அப்பொழுது   யாரும்  எதிர்பார்க்காத   நேரத்தில்  கார்த்திக்  துருவ்வை   தள்ளிவிட  நல்ல  நேரத்தில்   ஆதிரா  அவனை  தன்னோட  அணைத்துக்கொண்டாள்  , கார்த்திக்கை   பார்த்து  முறைத்தாள் .

கார்த்திக்  மீண்டும்   ஆதிராவின்   கையை   பிடித்துகொண்டு   வம்பு  பண்ண  ,  அந்நேரம் அங்கு  வந்த  ஆதவ்  , கோபத்தோடு அவர்களை நெருங்கி   அங்கு   நின்றிருந்த  கார்த்திக்கை   பார்த்து  ,”  கைய  எடுடா   ” என்றான் .

அவன்   எடுக்க   மறுக்கவே   ஆதவ்   கார்த்திக்கின்   சட்டை   பிடித்து   இழுத்து    அவனை   அடிக்க   துவங்கினான்  ,  கார்த்திக்கிடம்   ”  உனக்கு   எவ்வளவு  தையிரியம்  டா  , இனிமே  இப்படி  பண்ணின   உன்னை  கொன்றுவேன்என்றான்

அப்பொழுது  கார்த்திக்  நக்கலாக   சிரித்துக்கொண்டு  ,”  கொலை பண்றது  ஒன்னும்  உனக்கு  புதுசு  இல்லையேஎன்றான் .

உடனே   கோபமுற்ற   ஆதவ்   , தன்  கையை  முறிக்கி   அவனது  முகத்தில்   குத்த   துணிந்த  பொழுது  ஆதிரா ,” போதும்   ஆதவ்   நிறுத்துங்க  ”  என்றாள்

ஆதவ் ,” ஆதிரா  இவன்  உன்  கிட்ட   தப்பா ”  என்று  அவன்  பேசுவதற்குள்   ஆதிரா  ,”  அது  என்   ப்ராப்ளம், எனக்கும்  அவருக்கும்    உள்ள  பிரச்சனை  , உங்கள   மாதிரி  மூணாவது   மனுஷங்க   தலையிடுறத   என்னால்   வேடிக்கை பார்க்க   முடியாது  ,  நீங்க  துருவ்வ   கூட்டிட்டு   இங்க  இருந்து  கிளம்புங்கஎன்றாள்

இதை  கேட்ட  கார்த்திக்   நக்கலாக  ,”  அதான்  சொல்லிட்டாங்கல்ல  அப்புறம்   என்ன, கிளம்புங்க MR ஆதவ்என்றான்

இதைகேட்ட   ஆதவ்,”  போறேன்   எனக்கும்   உன்   பர்சனல்  மேட்டர்ல  தலையிட   கொஞ்சம்  கூட  விருப்பம்  இல்ல ”  என்று    கோபமாக   துருவ்வை    தன்னோடு    அழைத்துக்கொண்டு   அங்கிருந்து   சென்றான் .

ஈட்டி  போல   உன்  வார்த்தைகள்   என்னை  தாக்க   என்  உள்ளம்   ரணமானது   என்  அன்பே .

 

 

நினைவுகள் 8

 

“கண்ணே   நீ  என்னோடு  இருக்கும்  ஒவ்வொரு   நொடியும்  பூக்கிறேன்  ஒரு   பூவாய்நீ  என்னை   நீங்கும்   ஒவ்வொரு  கனமும்   எரிகிறேன்  ஒரு  சருகாய்நான்   பூவாய்   மலர்வதும்   சருகாய்   எரிவதும்  உன்  கையிலே !”

ஆதவ்   சென்ற  பிறகு  கார்த்திக்  ஆதிராவிடம் ,”  குட்   ஆதி   நல்ல  காரியம்   பண்ணின  அவன்  திமிர   ஒரு  செகண்ட்ல   அடக்கிட்ட   , இது  தான்  சரி  ”  என்று   கூறி முடிப்பதற்குள்   ஆதிரா   கார்த்திக்கின்  கன்னத்தில்   ஓங்கி   அறைந்து  ,”  ஹவ்  டேர்  யு  , உனக்கு   எவ்வளவு  தையிரியம்   இருந்தா  துருவ்வ      தள்ளிவிட்ருப்ப   அவன்  ஒரு  சின்ன  பையன்  ,  தென் இன்னொரு  விஷயமும்  சொல்லிக்குறேன்  இனிமே   இப்படி  என்  கைய  புடிக்குற   தப்பை   என்னைக்கும்   செய்யாத   விளைவுகள்   மோசமா  இருக்கும்இன்னைக்கு   றைஞ்சேன்  இனிமே  றைய  மாட்டேன்   என்ன  பண்ணுவேன்னு   எனக்கே  தெரியாது  , இந்த   றை   எல்லாத்துக்கும்   சேர்த்துதான்   மறந்துறாத

நீ   நடந்துக்கறத    பார்த்தா   ஏதோ   உனக்கும்  எனக்கும்   ஒட்டு   உறவு   இல்லாத   மாதிரி  இருக்கு  ,  ஆமா  நீ ஆதவ்வ   மன்னிச்சிட்ட போல, அவன்  ஒரு  கொலைகாரன்   அத  என்னைக்கும்  மறந்திராத  ஹ்ம்ம்

உன்கிட்ட  பதில் சொல்லவேண்டிய    அவசியம்  இல்ல

என்ன   ஆனாலும்   சரி   உன்னை  யாருக்காகவும்   நான்  விட்டு  குடுக்க  மாட்டேன்

”  நீ   என்ன  நினச்சாலும்    சரி   உன்னை  வேண்டாம்ன்னு   நான்   முடிவு  பண்ணினது   பண்ணினது   தான்  அதுல   எந்த  மாற்றமும்   இல்ல  ,  நீ  நினைக்குறது    கனவுலையும்   நடக்காது  இனிமே   என்  பொண்ண  பார்த்து பேச   ட்ரை  பண்ணின  அவ்வளவு  தான் குட்  பைஎன்று  கூறி  அனுஷாவுடன்   அங்கிருந்து  சென்றாள்.

ஆதவ்   வீட்டிற்க்கு   வந்தவுடன்    அவனுக்கு   அதிர்ச்சி   காத்துக்கொண்டிருந்தது   அங்கே  அவனது  அத்தை   மகள்   கீர்த்தி   சோபாவில்   அமர்ந்துகொண்டு   அனைவரிடமும்   பேசிக்கொண்டிருந்தாள்அவள்   ஆதவ்வை   பார்த்தவுடன்   அவன்  அருகில்  வந்து, ” ஹாய்  ஆதவ்   எப்டி  இருக்க   ”

ம்ம்ம்   இருக்கேன்  நீ  ” என்று   கோபமாக   கூறினான்

கீர்த்தி   துருவ்வின்  தலையை   செல்லமாக   தட்டி  ,” ஹாய்  குட்டி  எப்டி   இருக்க

ஹ்ம்ம்   நல்லா   இருக்கேன்  அன்டி ”  என்றான்

பின்   ஆதவ்   துருவ்வை  அழைத்துக்கொண்டு   வேகமாக   தன்  அறைக்கு   சென்றான்

RK  தன் மனைவியிடம்  ,”  என்னடி  ஆச்சி   உன்  பையனுக்கு   , ஊர்ல   இருந்து   வந்திருக்கா  இப்படி   தான்   நடந்துக்குவானா  ,  ஆசையா  நாலு வார்த்தை  கூட   பேசமா  அவன்  பாட்டுக்கு  யாருக்கோ   வந்த  மாதிரி  போறான்

தேவி ,” விடுங்க   அவன்   எதோ   கோபமா  இருக்குற  மாதிரி   இருக்கு  ,  நான்  அப்புறம் அவன்கிட்ட    பக்குவமா   பேசுறேன்

RK ,”  பேசிட்டா   மட்டும்   அப்படியே  கேட்ருவான்    பாரு   என்னமோ   பண்ணு   ”  என்றார்

கீர்த்தி  ,”  கவலைபடாதீங்க   மாமா    அதான்   நான்   வந்துட்டேன்ல   நான்  பார்த்துக்குறேன்  ”  என்றாள்

இப்படி   இவர்கள் பேசிக்கொண்டிருக்க   மாடியில்   ஆதவ்   கோபமாக   கத்தும்  சத்தம்  கேட்டு   அனைவரும்   அவன்  அறைக்கு   விரைந்தனர் , அங்கே  அவன்  துருவ்வை  ,”  என்னடா   ஒரே      ஆதிரா  அன்டி   ஆதிரா  அன்டின்னு  அவள  கொண்டாடிட்டு  இருக்க   , ஒருநாள்  அவ   உன்கிட்ட   நல்லா   பலகிட்டாங்கரதுக்காக    உன்   அப்பா   உனக்கு  மறந்து  போய்ட்டேன்னா  ,   சின்ன   பையன்னு   உனக்கு   ஓவரா  இடம்   குடுத்துட்டேன்  ,  மத்த   அப்பா  மாதிரி  அடிச்சி   வளத்திருக்கணும்   அது  தான்   உனக்கு  சரி  ”  என்று   அவனை  அடிக்க   கை  ஓங்கியவுடன் , ஆதவ்வின்   அம்மா  சரியான  நேரத்தில்   அங்கு   வந்து  அவனது   கையை   பற்றிக்கொண்டு   அவனிடம்  ,”  எங்கயோ   யார் மேலையோ   உள்ள   கோபத்தை   ஏன்னடா   சின்ன  பையன்   மேல  காட்ற நீ   இப்படி  இருப்பன்னு  நான்   நினச்சிகூட   பாக்கல  ஆதவ் ”  என்றார்

RK  ,”   இன்னைக்கு   நீ   உன்  எல்லைய   மீறிட்ட   ஆதவ் ” 

”  போதும்   டட்  உங்களோட   அட்வைஸ்ஸ   கேக்குற   மூட்ல   இப்போ  நான்   இல்ல ”  என்றான்

உன்கிட்டலாம்  பேசுறதே   வேஸ்ட்டா   “

”  ஒகே  பைன்   அப்போ  யாரும்   என்கிட்ட  பேசாதீங்க  ”  என்று  கூறிவிட்டு   வேகமாக   தன்  காரை   ஒட்டிக்கொண்டு  வெளியே   சென்றான் .

தேவி  ,”  என்னங்க   இது  இப்படி  இருக்கான்

என்னங்கன்னு   என்னை  கேட்டா   எனக்கு   என்ன  தெரியும் , போ   துருவ்   அழுதுட்டே   இருக்கான்  , அவனுக்கு  சாப்பிட  எதுவும்   ரெடி  பண்ணுஎன்றார்

சரிங்க

துருவ் ,”  தாத்தா   அப்பா  ஏன்  என்கிட்ட  கோபப்பட்டாங்க  ”  என்று  ஏங்கி  ஏங்கி  அழுதவனை   தேற்றிய  RK

”  அவனுக்கு  இன்னைக்கு  நிறையா   வேலைமா   அதான்   கோபப்பட்டான்  ,  வீட்டுக்கு   வரட்டும்   தாத்தா   அவனை  பார்த்துக்குறேன்  ,  நீ  அழாதடா  ”  என்று   அவனை   சமாதானம்  செய்தார் .

இதை   அனைத்தையும்    கவனித்த   கீர்த்தி   ஒருவித   யோசனையில்   தன்  அறைக்கு  சென்றாள்.

@@@@@@@@@

ஆதிரா   தன்னை   அறைந்த  கோபத்தில்   வேகமாக   தன்   இல்லம்   வந்த   கார்த்திக்  நேராக   தன்  அறைக்கு  செல்ல  போனான்  அப்பொழுது   அவன்  தந்தை  அவனை  தடுத்து,”  என்னடா    ஏன்  கோவமா   இருக்க  , இவ்வளவு  நேரம்  எங்க  போயிருந்த

”  ஆதிராவ   பாத்துட்டு   வரேன்

இதை  கேட்டவர்   சந்தோஷமாக  ,”  என்னடா  சொல்ற  ,  அவ  எப்படி  இருக்கா

அப்பொழுது  அங்கு  வந்த  அவன்  அம்மா ,”  அவ   எப்படி  இருந்தா  நமக்கு   என்னங்க , அவள  ஏண்டா   நீ  பாத்துட்டு  வரஇன்னுமா  டா   நீ  அவளையே  நினைச்சிட்டு  இருக்க , நம்ம   எல்லார்  மானத்தையும்   சந்தி  சிரிக்க  வச்சிட்டு  போனவளை  பத்தி   இன்னும்  ஏண்டா  நீ   கவலை  பட்டுட்டு  இருக்க

கார்த்திக் ,” அம்மா   போதும்   ஆதிராவ   பத்தி   யாரு   தப்பா  பேசுனாலும்   என்னால   தை   தாங்கிக்க   முடியாது  ,  ஏற்க்கனவே    அவள   நான்   துலைச்சிட்டு   நான்  படுற   அவஸ்தை  எனக்கு   தான்  தெரியும்  இனிமேலும்   அவளை   என்னால   விட   முடியாது   எனக்கு   ஆதிரா  வேணும்  ,  உங்க   பையனுக்கு   யார்கிட்டயும்   தோத்துபோய்  பழக்கம்  இல்லமா

ஆனா  கார்த்திக்

”  எனக்கு   தூக்கம்   வருது   குட்  நைட்  மா,    குட்  நைட்  அப்பா ”  என்று   கூறிவிட்டு   தன்  அறைக்கு  சென்றான் .

@@@@@@@@@@@@@@

இரவு   ஆதிரா   தன்   அறையில்   அமர்ந்து   கொண்டு   இன்று   நடந்த   அனைத்தையும்   பற்றி  யோசித்து   அழுதுகொண்டிருந்தாள்   அப்பொழுது  , யாரோ   தன்   வீட்டின்   கதவை   தட்டுவது   போல்   சத்தம்  கேட்க  ,  அவள்   தன்  அறையை   விட்டு  வெளியே  வந்தாள்  அப்பொழுது   அவள்  அம்மா  ,”  நீ  இரு   நான்  போய்   பார்க்குறேன் ”  என்று  கூறி  கீழே  சென்று   கதவை   திறந்தார்அப்பொழுது   அவர்  ,” மாப்பிளை   நீங்களா    உள்ள   வாங்க  “

அங்கு   வந்த   ஆதிரா  ,”  யாருமா   ”  என்றாள்

அப்பொழுது   வாசலில்    ஆதவ்  நன்கு  குடித்துவிட்டு  தடுமாறும்   நிலையில்   நின்று  கொண்டிருப்பதை   பார்த்து ,” ஆதவ்  நீ  இங்க   என்ன  பண்ற

காயத்ரி  ,”  எதுவா  இருந்தாலும்   மாப்பிளைய  உள்ள   வர  சொல்லு  ”  என்றார்

ஆதவ் ,” வணக்கம்   அத்தை  ,    ஆதி   டார்லிங்   என்  அத்தை  இல்லை இல்லை சாரி   உன்  அம்மா   என்ன  சொல்றாங்க  மாப்பிள்ளையா  செம   காமெடி

அத்தை  அதான்  உங்க  பொண்ணு  என்  உறவே   வேண்டாம்ன்னு  வெட்டி  விட்டுடாலே  அப்புறம்  எப்டி  நான்   உங்களுக்கு   மாப்பிள்ளை  ஆவேன்

”  ஆதவ்  என்ன   தண்ணி அடிச்சிட்டு தகறாரு   பண்ணலாம்ன்னு   வந்திருக்கியா  ,  முதல்ல   வெளியில  போ

”  ஹ்ம்ம்   போக  முடியாது   என்னடி  பண்ணுவ

ஆதிரா  தன்  அம்மாவை   உள்ளே  போக  கூறினாள்  , அவர் ,”  தம்பிகிட்ட  கோபமா   பேசாதமா  , பொறுமையா  பேசு

”  நான்  பார்த்துக்கறேன்  மா   நீங்க  போங்க ”  என்றாள்  , அவர்  சென்ற பிறகு

”  ஆதவ்  பொறுமையாவே  சொல்றேன்  இங்கருந்து  போயிரு  , இப்போம்  மட்டும்  நீ  இங்கருந்து  போகலை  நான்   உன்னை  என்ன  பண்ணுவேன்னு  எனக்கே  தெரியாது

அப்பொழுது  ஆதவ்  ,” அப்படியா  என்ன  பண்ணுவே ”  என்று  கூறிக்கொண்டே  அவள்   முன்னால்  நெருங்கி   வந்து  அவளை  சுவற்றோடு   சாய்த்து  ,  அவன்  அவள்  அருகில்   நெருங்கி  நின்றுக்கொண்டு   தனது  வலது   கரத்தால்   அவளது  இடுப்பை  வளைத்து  பிடித்து   தனது  இடது   கரத்தை   சுவற்றில்  ஊன்றியபடி   நின்றுகொண்டிருந்தான்  .

ஆதிரா ,”  என்ன   ஆதவ்  பண்ற

எதுவும்   பண்ணல  அதான்   நான்  பண்ணின   பெரிய  தப்பு

”  லீவ்  மீ  ஆதவ்

அதான்   என்ன  நீ  விட்டுட்டியேஇதுக்கு  மேல  நான்  உன்னை  விடுறதுக்கு   என்ன  இருக்கு

ஆதிரா   மெளனமாக   இருக்க

ஆதவ் ,”  ஆமா    நான்   உன்கிட்ட   ஒன்னும்  கேக்கணும்  தாலி  கட்டுன       நான்   மூணாவது   மனுஷன்னா   அந்த   கார்த்திக்  யாரு  உன்  கள்ள  புருஷனா  “

ஆதவ் ”  என்று  ஆதிரா  கத்த

”  கோவம்  வருதா  , எனக்கும்   அப்படிதான்   டி   கோபம்   வந்துது  ,  அந்த  கார்த்திக்   உன்  கையை  பிடிக்கும்  போது  எனக்கும்  அப்படி தான்   கோபம்    வந்துது   “

”  அது  எப்படி  உன்னால   மட்டும்  எல்லாத்தையும்   மறந்துட்டு   லைப்ல  ஈஸியா  மூவ்  ஆன்   பண்ண முடியுதுஆனா   நான்   நீ   என்ன  எங்க  விட்டுட்டு  போனியோ  அங்கயே  தான்  நிக்குறேன் , இப்போ ரை   என்னால  உன்னை  மறக்க   முடியல , அனுஷா  என்  பொண்ணு  ஆனா  உனக்காக  நீ  சொன்ன  ஒரு  வார்த்தைக்காக  ,  என் பாசத்தையெல்லாம்   கட்டு படுத்திட்டு  இருக்கேன்என்  பொண்ண  என்கிட்ட  இருந்து  பிரிச்சி  ,  என்  வழக்கையே  எரிச்சிட்டியேடி

ஆதிரா  ஆதவவை   தள்ளிவிட்டு   அவன்  முன்  கோபமாக  ,”  உன்னால  உன்  லைப்லே   மூவ்  ஆன்  பண்ண  முடியலனா  அது  உன்னோட  ப்ராப்லம்   ஆதவ்நான்  எப்பவோ   மூவ்  ஆன்  பண்ணிட்டேன்   இனிமே  என்ன    பார்க்க    வராதஅப்புறம்   ஒன்னு  சொல்றேன்  நானும்  என்  பையன  பிரிஞ்சி   தனியாதான்   இருக்கேன்  அத  மறந்திராத   .”

ஆதவ்  அழுதுகொண்டு  ,”  யா   அதான்  தெரியுதே   நீ  கார்த்திக்  கூட   மூவ்  ஆன்  பண்ணிட்டேன்னுஎன்று  சுவற்றில்   சாய்ந்து     தன் கண்களை   மூடி   அழ   துடங்கினான் .

வெகுநேரமாகியும்   ஆதவ்  வீட்டுக்கு  வரவில்லை   என்பதால்தேவி  கவலையோடு  இருக்க  , RK   ,”  ராஜ்க்கு  போன்  பண்ணினியா

”  எல்லாம்  பண்ணிட்டேங்க  அவன்   அங்க  வரவே  இல்லையாம்எனக்கு   கவலையா   இருக்குங்க

கீர்த்தி ,தனக்குள்  ,” தெரியும்   ஆதவ்  இப்போ   நீ   எங்க  இருப்பனுன்னு  ” என்று  கூறிவிட்டு  தன்  அதை  மாமாவிடம் ,”  கவலைப்படாதீங்க   அத்தை  , அவன்  எங்க  இருப்பான்னு  தெரியும்  நான்  போய்  கூட்டிட்டு  வரேன் ”  என்றாள்

RK  ,” உனக்கு தெரியுமா ,   முதல்லேயே  ஏன்  சொல்லல  எங்க   இருக்கான்   “

கீர்த்தி ,”  அவன்  லவ்வபிள்  வைஃப்  அம்முஉங்களோட   மருமக  ஆதிரா  வீட்ல  தான்  வேற  எங்கஎன்று  அவள்  கூற  RKவும்   தேவியும்   ஒருவரை   ஒருவர்  பார்க்க  ,கீர்த்தி   அங்கிருந்து  கிளம்பினாள்.

RK ,”  தேவி  உன் பையன்  மட்டும்  அங்க   போயிருக்கட்டும்   அப்புறம்  இருக்கு  அவனுக்கு

தேவி ,”  கொஞ்சம்  பொறுமையா  இருங்க , கீர்த்தி  போயிருக்கால்ல எல்லாம்  சரியாகிரும்

ஆதவ்    தன்  கண்களை   துடைத்துவிட்டு  ,”  நான்  முடிவு  பண்ணிட்டேன்   ,  இனிமே  நானும்  என்  லைப்லே  மூவ்  ஆன்  பண்ண போறேன்  ,  நீ   என்ன  எங்க  விட்டுட்டு  போனியோ   அங்க  இருந்து  என் லைப  புதுசா  ஸ்டார்ட்  பண்ண  போறேன் , இனி உன்னை  நினச்சிட்டு  ஒவ்வொரு   ராத்திரியும்   நான்  புலம்ப  மாட்டேன்  ,  கீர்த்தி  நான்  கீர்த்திய  கல்யாணம்  பண்ணிக்க  போறேன்என்றான்

இதை  கேட்டுக்கொண்டிருந்த    கீர்த்தியின்  மனம்     சந்தோஷத்தில்   துள்ளி  குதித்தது

ஆதிரா  ,”  கன்க்ராட்ஸ்  நல்ல  முடிவு  , எனக்கு  ரொம்ப  சந்தோசம்    இப்போ  இங்க  இருந்து  கிளம்புஎன்றாள்

இதைகேட்ட  ஆதவ் ,”  போகத்தான்  போறேன்   என்று  கூறிவிட்டு   போகப்போனவன்   படிக்கட்டில்   கால்  தவறி  தடுமாற  ஆதிரா   தாங்க  போகும்  பொழுது  அங்கு  வந்த  கீர்த்தி  அவனை  தங்கிக்கொண்டு  ,  ஆதிராவை  பார்த்து   கேவலமாக  சிரித்துவிட்டு  , ஆதவவை  தன்னோடு   அழைத்துசென்றாள்.

வீட்டில்   ஆதவ்   தன்  தாய்  தந்தை  மட்டும்  கீர்த்தியிடம்  , அறை  மயக்கத்தில் ,” நான்  கீர்த்திய  கல்யாணம்  பண்ணிக்க  சம்மதிக்கிறேன் , மத்த  ஏற்பாடெல்லாம்  நீங்களே  பண்ணுங்கஎன்று  கூறிவிட்டு  தன்  அறைக்கு சென்றான் .

இதை கேட்ட  அனைவரும்    சந்தோஷமாக  இருக்க  ,  தேவி  மட்டும்  சோகமானார் .

ஆதவ்வின்  உள்ளத்தை  சரியாக  புரிந்தவர்  ஆயிற்றே  ,  இந்த  முடிவு  அவன்  வேதனையில்   எடுத்து  முடிவு  என்று  அவர்  நன்கு   உணர்ந்திருந்தார் .

ஆதிராவிடம்  அவள்   அம்மா ,”  மாப்பிள்ளை  போயிட்டாரா

ஆமா , அவரு  கீர்த்திய  கல்யாணம்  பண்ணிக்க  போறாராம்

நீ  என்ன  சொன்ன

தாராளமா  பண்ணிக்கோங்க  , எனக்கும்  இதுக்கு   எந்த  சம்பந்தமும்  இல்லன்னு  சொன்னேன்

ஏன்  அப்படி  சொன்ன

என் மனசுல  பட்டதை சொன்னேன்

உனக்கு  கவலையா இல்லையா

நான்  ஏன்  கவலைப்பட போறேன் மா , நாளைக்கு  எனக்கு  முக்கியமான  பிசினஸ்  டீல்  இருக்குஅது  எனக்கு  கண்டிப்பா  கிடைக்கணும்ன்னு  வேண்டிக்கோங்க   மா ,    எனக்கு   தூக்கம்  வருது   நான்  தூங்க  போறேன் மா   குட் நைட்என்று  கூறிவிட்டு  தன் அறைக்கு சென்று  தன் கண்களை  மூடி  தூங்கினாள்.

ஆதவ்   பாத்ரூம்   ஷவரில்   அழுதுகொண்டே  ,” ஏன் அம்மு   ஏன்  டி  இப்படிலாம்  பண்றஎன்னலாமோ  பேச  வச்சிட்டியே  தாங்கிக்க  முடியலடி .

பாதியே  என்  பாதியே

ஏன்  நீங்கினாய்  என்னை ?

அரை  நிழலோடுதான்  நான்  போகிறேன்

விழி  தேடுதே  உன்னை

 

நீ  இங்கில்லை  உணர்கிறேன்

உன்  நினைவில்  நகர்கிறேன்

என்  கைகளில்  உன்  வாசனை  போகாமலே

கண்ணீரிலா  நான்  போக்குவேன்  நீ  சொல்

 

போலியாய்  அலைகிறேன்

புன்னகைகள்  அணிந்தபடி

வேதனிகள்  மறைத்தபடி

என்  முகம்  தொலைகிறேன்

முகமுடியில்  வாழ்ந்தபடி

உன்னை  பிரிந்து

நீ  இல்லை  உணர்கிறேன்

உன்  நினைவில்  நகர்கிறேன்

என்  கைகளில்  உன்  வாசனை  போகாமலே

கண்ணீரிலா  நான்  போக்குவேன்  நீ  சொல்

எப்படிலாம்  இருந்தேன்  , எவ்வளவு  சந்தோஷமா  லவ்  பண்ணினோம் , அந்த  நாள்  திரும்ப  வராதாஎன்று  தன் கண்களை  மூடி   தன் பழைய   நினைவுக்குள்   நுழைந்தான் .

@@@@@@@@@@@@@@@@@

ராதா  கிருஷ்ணன்   காலங்காத்தாலே   கோபமாக  ,”  தேவி   தேவி  எங்க  இருக்க ”  என்று  தன்  மனைவியை  கூப்பிட்டு  கொண்டே  பூஜை  அறைக்கு   வந்தார் .

அங்கே  தேவி  ,”  ஒம்  பூர், புவ , ஸ்வஹா”  காயத்ரி  மந்திரத்தை  பாடி   பூஜை   செய்து  கொண்டிருந்தார் .

மனைவியின்   குரலில்   மெய்மறந்து  RK  தன்  கோபத்தை   மறந்து  ரசித்துக்கொண்டிருந்தார் . அவரை  பார்த்த  தேவி  தன்  கண்களாலேயே ,” ஷூவ  கழட்டிட்டு   உள்ள  வாங்க  ” என்றார் . அதை    புரிந்து  கொண்டவர் ,லேசாக   புன்னகைத்துவிட்டு  தன்  ஷூவை  வெளியில்   கழட்டிவிட்டு   உள்ளே  வந்து   ஆரத்தி  எடுத்து   தன்  கண்ணில்  ஒற்றிக்கொண்டார் .

பூஜை  முடிந்த  பிறகு   தேவி ,”   எத்தன  தடவ   சொல்றது  ,  ஷூவோட  பூஜ  ரூம்குள்ள   வராதீங்கன்னுஅப்பாவும்   புள்ளையும்   நான்   சொல்ற  எதையும்  கேக்குறதே  இல்லஎன்றார்

RK ,” ஏய்  எதுக்கு  இப்போம்  உன்  உருப்படாத   பையனை  என் கூட  சேர்த்து  வச்சு பேசுற

சில  நேரங்களில்  அழகிய   காதல்   கூட  தீராத  அவசதையாகிவிடுகின்றது.

 

 

நினைவுகள் 9

காகிதமாய்  இருந்தேனே

கவிதையாய்  நீ  வந்தாய்

            உயிர் பெறுகிறேன்  உன் தயவால்

தேவி ,”  ஏங்க    இப்படி   சொல்றீங்க    ஒருநாள்   இல்ல  ஒருநாள்   அவனும்  பெரிய   ஆளா  வந்து  காட்டுவான்என்றார்

RK ,” நீ  நம்பிக்கிட்டே  இரு

ஒத்த  புள்ளைய  வச்சிருக்கோம்  , ஏன்  எப்பவும்  கரிச்சி   கொட்றீங்கஎன்றார் .

”  தை தான்    நானும்   சொல்றேன்  , நாலு  அஞ்சின்னு  இருந்தா  இவன்  எப்படியும்   போறான்னு   தண்ணி  தெளிச்சி  விட்ருப்பேன், ஒத்த  புள்ளையா  போய்ட்டான்  கோடிக்கணக்கான  சொத்துக்கு   அவன்  தான்  ஒரே   வாரிசு   , இவனை  நம்பி  பெரிய   இண்டஸ்ட்ரி  ,  ஆபீஸ்  , எம்ப்லாயீஸ்ன்னு   ஏக   பட்ட  விஷயம்     இருக்கு , எனக்கப்புறம்  இவன்  தான  பாக்கணும்     “

ஆமா  யாரு  இல்லன்னு  சொன்னா , “

சொல்ல  வேற  செய்யணுமா  என்ன  , இந்த  முறை  உன்  பையன்  எத்தனை  அரியர்ஸ்  தெரியுமா  , இல்ல இல்ல  எத்தன  பாஸ்  தெரியுமா  ,  ரெண்டு  வெறும்  ரெண்டே  சப்ஜெக்ட்   தான்  பாஸ்  , அதுவும்  ப்ரக்டிகல் , மத்ததெல்லாம்  பேயில்

”  ரெண்டு  பாஸ்  ஆயிட்டான  , என்கிட்ட  இந்த  முறை  எல்லாமே  போயிரும்ன்னு   தான்  சொன்னான்என்று  தனக்குள்   முணுமுணுத்தார் .

என்ன  சொல்றதேவி ,” இல்லங்க

அவன  எங்க  வர  சொல்லு   , ரெண்டுல   ஒன்னும்  கேட்காம   விட  மாட்டேன்என்றார்

அவன்  வீட்ல  இல்லங்க  ,  ப்ரண்ட்  அக்காக்கு   கல்யாணம்ன்னு   நேத்தே  போய்ட்டான்

தெல்லாம்   இப்போ   ரொம்ப  முக்கியமா   என்   அங்க  போய்   பொருக்கி  மாதிரி   ஆட்டம்  போட்டுட்டு  இருப்பான்      ,  எப்படி இருந்தாலும்  இன்னைக்கு  வீட்டுக்கு  வந்து  தானே  ஆகணும் , பாத்துக்குறேன் , உனக்கு  ஒன்னு  சொல்றேன்  இந்த  தடவ   நீ  எனக்கும்   அவனுக்கும்   நடுவுல   வரவே  கூடாது  ,  இப்போவே   நான்   உனக்கு  தெளிவா  சொல்லிட்டேன் , சரி  நான்  ஆபீஸ்  கிளம்புறேன்  ” என்று  கூறினார் .

தேவி   சோகமாக ,” சரிங்கஎன்றார்

அத  ஏன்  இப்படி  மூஞ்சை  தொங்க போட்டுட்டு  சொல்ற , கொஞ்சம்  சிரிச்சிட்டு தான்   சொல்லேன்

சரிங்க  பார்த்து   போயிட்டு வாங்க  ” என்று  கூறி   தன் கணவனை   வழியனுப்பி  வைத்தார் .

@@@@@@@@@@@@

 விக்கி   தன்  நண்பர்களிடம்  ,”  டேய்   ராஜும் ,ஆதவும்  எங்க  டா  போனாங்க  ”    என்று  கேட்க   அவர்கள்  அங்க  பாருடா  என்று  ஸ்டேஜ்ஜை  காட்ட   அங்கே  ராஜும்  , ஆதவும்  

எல்லோருக்கும் வணக்கம்

எல்லோருக்கும் வணக்கம்

என்ன பார்க்க வந்த

எல்லோருக்கும் டப்புள் வணக்கம்

வணக்கம்..

 

ஹேய் பட்டி தொட்டி ஒலிக்கும்

பட்டி மன்றம் நடக்கும்

என்ன மாட்டி விட்ட எல்லோருக்கும்

அடி கிடைக்கும், கிடைக்கும்

 

மச்சி தல இந்தா மாலை

உன்ன பார்த்த மனசு ஹெப்பி ஆச்சுடா

ரிலேக்ஸ் மாமு ரிலீஸ் நானே

இனி ஊரே என் கிட்ட மாட்டிக்குச்சுடா

 

Am a Bad Bad Bad Bad Boy…

am a Bad boy, am a Bad boy

நல்லவனா? கிடையாது

படிச்சவன் பீட்டர் விட்டா புடிக்காது

காது காது காது புடிக்காது

 

கேடி, ரவுடி, மொல்லமாரி

அட எல்லாம் சேர்ந்த நல்ல பையன் டா

பில்லா, ரங்கா, பாட்ஷா எல்லாம் என்

தோஸ்த்து தான்டா கேட்டுப்பாரோன் டா

Am a Bad…

 

ஜில்லுனு தான் வாருவானே

ஜாங்கிரி போல சிரிப்பானே

ஜீ பூம் பா செய்வானே

Bad Boy, Bad Boy

 

மெக்னட் கண்ணால

சக்லெட்டு கன்னத்தால

மயக்கிபுட்டு போரானே

Bad Boy, Bad Boy

 

ஹே யே குரு தான் நம்பியாரு

என்னையும் வில்லனா மாத்திடாரு

டாரு டாரு டாரு மாத்திடாரு

 

ஹேய் எனக்குள்ளயும் எம் ஜீ ஆர்ரு

அப்போ அப்போ வந்து எட்டி பாப்பாரு

பாரு பாரு பாரு எட்டி பாப்பாரு

 

இப்ப full-u life ஜில்லு

ஹேய் நீயும் நாட்டுல கிங்கு தானடா

 

மச்சி மாசி மாத்தி யோசி

அட வாழ்க்க வாழ்க்க காசு வேணுடா

 

Am a Bad…

Am a Bad Bad Bad Bad Boy…

am a Bad boy, am a Bad boy

 

 

என்ற  பாட்டிற்கு   ஸ்டேஜ்   அதிர   ஆட்டம்   போட்டுக்கொண்டிருந்தனர்பின்பு   அனைத்து   நண்பர்களும்   அவர்களோடு   சேர்ந்து  ஆட்டம்  போட    கல்யாண  வீடே  கலைகெட்டியது.

விக்கி   தான்   ராஜ்  , ஆதவ்வின்  நண்பன்  , அவனது  அக்காவின்    திருமணத்தில்   தான்  இருவரும்  இந்த  ஆட்டம்  போட்டனர் .

திருமணத்தில்சாப்பாடு   பரிமாறுதல்   என்று  ஆரம்பித்து  அனைத்து   சடங்குகளையும்   ஆதவ்   மற்றும்   அனைத்து  நண்பர்களும்     தங்கள்  வீட்டு   விஷேஷம்   மாதிரி  இழுத்து  போட்டுக்கொண்டு   செய்தனர் .

எல்லா   ஏற்பாடுகளும்   நன்றாக   முடிந்து   திருமணத்திற்கு   வந்தவர்கள்   அனைவரும்   மணமக்களை   நன்றாக  ஆசிர்வதீத்து    ங்கள்   இல்லம்    செல்ல  துடங்கினார்  , அப்பொழுது   ஆதவ்  விக்கியிடம் ,”மச்சான்    அப்புறம்  என்ன  டா  உன்   ரூட்டு  கிளியர்  ஆயிடுச்சி   ஒரு  வழியா   , உங்க  அக்கா  கல்யாணம்  நல்ல  படியா  முடிஞ்சிட்டு  சந்தோசம்  தான

ராஜ் ,” சந்தோசம்  இல்லாம  எப்படி  டா  இருக்கும்  , அடுத்த  கல்யாணம்  மச்சானுக்கு   தான

விக்கி ,”  தங்க்ஸ்  டா  நீங்க  மட்டும்   இல்லனா  ,  ரொம்ப  கஷ்டமாயிருக்கும்  டா  “

ராஜ் ,” எவன்  டா  இவன் இதுக்கு போயிட்டு    தங்க்ஸ்  சொல்லிட்டு ,   மச்சான்  உன்   பீஸ்   எல்லாம்  கெட்டியாச்சி   அதனால   நாளைக்கு     ஒழுங்கா     காலேஜ்  வந்திருடா  ” என்றான்

ஆதவ் ,” மறுபடியும்   தங்க்ஸ்லாம்   சொல்லாத  ,  உனக்கு   எப்படி  டா  நான்  இத  திருப்பி   தர  போறேன்னு  ,  தேவையில்லாத  டயலொக்  எல்லாம்   சொல்லாத  ,  இது  ஒரு  கிவ்  அண்ட்   டேக்   பாலிசி  தான்  , எப்டியும்   நீ  நல்லா  படிச்சி     பாஸ்   பண்ணி   வேலைக்கு   சீக்கரமா  போயிருவஎப்படியும்   நாங்க  ரெண்டு  பேரும்  பாஸ்  பண்ணி  வேளைக்கு  வர்றதுக்குள்ள  பல  வர்ஷம்  ஆகிரும்ன்னு   வையேன் ,  கண்டிப்பா   எங்க  ரெண்டு  பேரோட  அப்பாக்களும்  ஒழுங்கா  சாப்பாடு  போடமாட்டாங்க    அப்போ இந்த  பணத்த   வாங்கிக்குறோம்  ” என்றான்

விக்கி  சிரித்துவிட்டு ,” நீ  இருக்கியே , உன்ன  திருத்தவே  முடியாது  “

ஆதவ் ,” சரி டா  மச்சான்   நாளைக்கு   காலேஜ்ல   பார்ப்போம்  , நாங்க  கிளம்புறோம்  ” என்றான் .

அப்போது   ராஜ்  , தன்  அனைத்து   நண்பர்களையும்   பார்த்து ,”  மச்சான்   மாமா  எல்லாரும்  கவனீங்க  ,  ஒரு  முக்கியமான   அறிவிப்பு   , நாளைக்கு   நம்ம    காலேஜ்ல   பர்ஸ்ட்   இயர்   கிளாஸ்  ஆரம்பிக்க  போகுது  , அப்றோம்  லேட்ரல்  என்ட்ரிலாம்  வேற  வருவாங்க   ,ஸோ   நாளைக்கு   யாரும்  கட்   அடிக்காம  காலேஜ்  வாங்கடா  , புது புது  பிகருங்கலாம்  வேற  வரும் ,    நாளைல   இருந்து  நாமல்லாம்  சீனியர்ஸ்   , நமக்கு   பல  அடிமைகள்   எல்லாம்  சிக்கும்  ”  என்பதை   தெரிவித்து  கொள்கிரேன் , என்று  ராஜ்  கூறி  முடிக்கவும்

ஆதவ்    மற்றும்       அனைத்து   நண்பர்களும்   விசில்   அடித்து  ,” சூப்பர்  மாமா ”   என்று  ஆரவாரம்    செய்தனர் .

தன்  நண்பர்களுடன்    விடை பெற்றுக்கொண்டு   ஆதவ்வும்   ராஜும்   வெளியே  வந்தனர்  , அப்பொழுது   ராஜ் ,” மச்சான்   வீட்டுக்கு   தான

ஆதவ் ,” இல்லடா   மாமா   அம்மா கிட்ட   இருந்து   மெசேஜ்   வந்துச்சி  , என்  அப்பாவுக்கு    செம்  மார்க்கு  தெரிஞ்சிட்டாம்  ,காலையிலே   செம  கத்து  கத்திருக்காரு  ,  ஆபீஸ்ல   இருந்து  வீட்டுக்கும்   வந்துட்டாராம்  ,  இப்போம்  போனா  அவ்வளவு  தான் டா

ராஜ் ,” உங்க  வீட்டுக்கு   தெரிஞ்சா   எங்க  வீட்டுக்கும்  தெரிஞ்ச  மாதிரி  தான்  டா  , என்ன  பண்ணலாம்  , எல்லாரும்   தூங்குனதுக்கப்புறம்  தான்    வீட்டுக்கு   போனும், அது  வரைக்கும்  என்ன  பண்றது  “

ஆதவ் ,”  பார்க்கு , மால் ,   சினிமான்னு   சுத்துவோம்  , நைட்  வீட்டுக்கு  போவோம்

ராஜ் ,” சூப்பர்  மச்சான்தல  படம்  மங்காத்தா   ஓடுது   அங்கயே  போவோம்  “

ஆதவ் ,” சரி  டா  ”  என்று  கூறி   இருவரும்   அவரவர்   பைக்கில்   கிளம்பினர் .

@@@@@@@@@@@@@

சினிமா   தியேட்டரில்  

இளம்   வயது   பெண்கள்   கொஞ்ச  பேர்  ,” ஏய்  என்னடி   ஆதிராவ   இன்னும்  காணும்   ,  ரெஸ்ட்  ரூம்  போயிட்டு  வர  இவ்வளவு   நேரமா  என்ன  , படம்  ஸ்டார்ட்  பண்ண  போறாங்கடி  ,  தல  படம்  டி    பர்ஸ்ட்ல   இருந்து  பாத்தா  தான்   நல்லா  இருக்கும்  ”  என்று  கூறிக்கொண்டு   தங்கள்   தோழி   ஆதிராவுக்காக   காத்துக்கொண்டிருந்தனர் .

நஜ்மா ,” ஏய்    அங்க    பாருங்க  ஆதிரா   வந்துட்டு   இருக்கா ”   என்று  அவள்  கூற , அனைவரும்   அவளை  பார்த்து  சிரித்தனர் ,

ஆதிரா  அவர்கள்   அருகில்   வந்து   ,” ஏன் டி   சிரிக்கிறீங்க   ,  நல்லா   இல்லையா ”  என்று  கேட்டாள்

நஜ்மா ,”  இல்ல  டி   சும்மா  சிரிச்சோம்  ,  நிஜமா  சொல்றேன்   என்ன  விட  இந்த   பர்தா   உனக்கு  தான்   ரொம்ப  நல்லா  இருக்கு

ஆதிரா ,”  எல்லாம்  உன்னால   தான்  டி   ,  சினிமாலாம்   வேண்டாம்ன்னு  சொன்னேன்  கேட்டா  தானஅப்பாக்கு   தெரிஞ்சா   அவ்வளவு  தான்  “

நஜ்மா,” அங்கிள்க்கு  தெரியக்கூடாது    தான     பர்தா  போட்ருக்க  ,  அப்போ  எப்படி  தெரியும்என்றாள்

அப்பொழுது   நண்பர்  கூட்டத்தில்   ஒருவள்  ,”  இப்படியே  பேசிட்டு  இருங்க  படம் பாத்தா  மாதிரி தான்  சீக்கரம்  வாங்க  ” என்றாள் .

சரி  டி  ” என்று  கூறிவிட்டு    அனைவரும்    அரங்கிருக்குள்   செல்ல  தயாராகினர் . தங்களின்   டிக்கெட்டை   டிக்கெட்   சோதனையாளரிடம்   கொடுத்து   சரி  பார்த்து  கொண்டிருக்கும்  பொழுது   அங்கு  ராஜும்   ஆதவ்வும்   வந்தனர்  , ராஜ்  ஆதவ்விடம்  ,”  பார்த்தியாடா   இந்த  காலத்து  பொண்ணுங்க    எப்படிலாம்   இருக்காங்க  ”  என்றான்

ஆதவ் ,” எப்படி  இருக்காங்க

ராஜ்  ,” அங்க    பர்தா  போட்ருக்குல   அந்த   பொண்ண   பாரு  ” என்று  ஆதிராவை  கைகாட்டினான்

ஆதவ் ,” பர்தா  போட்டா  சினிமாக்கு   வரக்கூடாதா  “

ராஜ் ,” எவன்  டா  இவன்  , அந்த  பொண்ணோட  நெத்தியை    பாருஎன்றான்

ஆதவ்   பார்த்து   விட்டு  ,” என்னடா  இது  பொட்டு  இருக்கு

ராஜ் ,” ஹ்ம்ம்   பாத்தியா  ,  பசுத்தோல்  போத்துன  புலி   கேள்வி  பட்ருப்ப  , இது  பர்தா  போட்ட  நாமம்  டாவீட்ல  பொய்ய  சொல்லிட்டு   ஊர்  சுத்த   இது  ஒரு  நல்ல  டெக்னிக்   டாஎன்றான்

ஆனால்   ஆதவ்  ராஜ்  கூறிய  எதையும்  கவனிக்க  வில்லை  , அவளது   கண்கள் , மற்றும்  அந்த பொட்டையே   பார்த்துக்கொண்டிருந்தான்  ,  அந்த  நொடியே   ஆதிராவின்   மீது  காதல்  மலர்ந்து   விட்டது  , அவளது  பெயர்  தெரியாது , ஊர்  தெரியாது   ஏன் அவளே  யார்   என்று  தெரியாது , ஆனால்   அவள்   மீது  ஒரு  ஈர்ப்பு  .

ராஜ்  ,” என்னடா   யோசிக்குற  டிக்கெட்ட  குடுடா  ” என்றான் , நண்பனின்  அதட்டலில்   தன்  நிலைக்கு   வந்த  ஆதவ்  , டிக்கெட்டை   கொடுத்துவிட்டு  ,  ராஜ்ஜுடன்   உள்ளே  சென்றான் , உள்ளே  சென்றவன்    இடைவெளி  வரும்   வரை  அவளையே  தான்  பார்த்துக்கொண்டிருந்தான்  , ஒருமுறையாவது   அவள்  தன்  முகத்தை  காட்ட  மாட்டாளா   என்று  பார்த்துக்கொண்டிருந்தான் , அவளது   சின்ன   சின்ன  செய்கையை  கூட   ரசித்துக்கொண்டிருந்தான் .

இண்டர்வல்  விடவும்    ராஜ் ,”  வா  டா   போய்   எதவாது   வாங்கிட்டு   வரலாம்  ” என்று  கூறஅவளும்   தன்  இருக்கையை  விட்டு   எழும்ப  அவள்   பின்னாலே   சென்றான் .

ராஜ்  ,” டேய்   எங்க டா  போற  அது  கேர்ள்ஸ்   ரெஸ்ட்  ரூம்  டா ”  நம்மளோடது   அங்க  இருக்கு  என்று  கூறிய பின்பு தான் .

ஆதவ்க்கு  , தான்   அந்த  பெண்ணை   பார்த்துக்கொண்டு   , அவளது  நியாபகத்தில்   கேர்ள்ஸ்   ரெஸ்ட்  ரூம்க்குள்   நுழைய போனோம்  என்று  புரிந்தது  ,  உடனே    ஆதவ்   ,சிரிக்க .

ராஜ் ,” ஏண்டா  வழியிற  , என்னடா  ஆச்சி

ஆதவ் ,” ஒன்னும்  இல்ல டா ,போலாம்  ” என்றான்

மீண்டும்   வந்து  தங்களது   இருக்கையில்   அமர்ந்துகொண்டு   ஆதவ்  , அந்த  பெண்ணையே  பார்த்தான்  ,  படம்  முடிவதற்குள்   அவளை  ஒரு  முறையாவது   பார்த்துவிட  வேண்டும்   என்று  துடித்துக்கொண்டிருந்தவனால்  பார்க்க முடிந்தது  ,” அவளது  கண்கள்  , பிறை  போன்ற  நெற்றியின்   நடுவே  இருந்த  பொட்டு  என்ற  இவ்விரெண்டையும்   தாண்டி  அவளது   கழுத்தில்   தொங்கிய    செயினின்   டாலர்   மட்டுமே   , அது  பார்ப்பதற்கு   வித்தியாசமாக    இருந்தது , அது   கண்ணாடியால்   வடிவமைக்கப்பட்டு   ,வட்ட   வடிவத்தில்   சுற்றி  வரை   வெள்ளை   அடர்  நீல  கற்களால்   அலங்கரிக்கப்பட்டிருந்தது  , அந்த  கண்ணாடி   டாலர்  உள்ளே    டண்டேலியன்  பறக்கும்   விதைகள்   இருந்தன மற்றும்  டாலரின்  சைடில்   A  என்கின்ற  இனிஷியலும்   தொங்க   விடப்பட்டிருந்தது .

எவ்வளவோ   முயற்சி  செய்து  பார்த்தான்   ஆனால்   அவனால்   ஒன்றும்  செய்ய  முடியவில்லை , நேரடியாக   பேசிவிடலாம்  என்று  நினைப்பதற்குள்   அவர்களும்   அங்கிருந்து   சென்று  விட்டனர் .

நண்பனின்   வித்யாசமான   செய்கையை  கவனித்த  ராஜ்   ,” ஏண்டா  ஒரு  மாதிரியா   இருக்க , அந்த  பர்தா  பொண்ணையே    வெறிச்சி  பாக்குற , என்னடா  “

ஆதவ் ,”  நீ  படம்  தானடா  பார்த்துட்டு  இருந்த , எப்போ  நீ  என்னை பார்த்த

ராஜ் ,”  மொக்க  படம் வந்தாலே  , அந்த  அராத்து  பண்ணுவ , தல  படம் வேற , நீ  துவுமே  பண்ணாம  சைலென்ட்டா   இருந்த  அப்போ தான் கவனிச்சேன் , சொல்லுடா  என்ன  விஷயம்  “

@@@@@@@@@@@@@@@@@@@@@@

நஜ்மா , “ஆதிரா    நாளையில   இருந்து  நீ  வேற  காலேஜ்  போயிருவலநீயும்   எங்க  கூடவே   இன்ஜினீயரிங்   படிக்கலாம்ல  பேஷன்  டிசைன்லாம்   ஏன்  சூஸ்  பண்ணின  அதான்  நீ  வேற  காலேஜ்  போக  வேண்டிருக்கு , ரொம்ப  மிஸ்   பண்ணுவோம்  டி  உன்னை

ஆதிரா ,” ஆமா  டி  நானும்  தான் , சரி  டி  ஆல்  தி  பெஸ்ட்  , இங்க  தான  இருப்போம்  அடிக்கடி  மீட்  பண்ணுவோம் , நேரம்  ஆயிடுச்சி  , இந்த  உன்  பர்தா  , வச்சிக்கோ   இது  உன் கூட  இருக்கட்டும்   என்னைக்காவது  சினிமா போனா  யூஸ்  ஆகும்  “

அதற்குள்   நண்பர்  கூட்டத்தில்   ஒருவள் ,” ஆமா  அப்படியே  வந்திருவ  பாரு  , இதுவே   இனிமே  நாம   மீட்  பண்ண  முடியாதுன்னு  தான்   எப்படியோ  கஷ்ட பட்டு  உங்க  அப்பாகிட்ட   புக்  exhibitionக்கு  போறோம்   பொய்  சொல்லிட்டு  வந்திருக்க , இதுக்கு   எத்தனை  தடவை     நாங்க   உன்  கால்ல  விழுந்திருப்போம்  ”  என்றாள்

ஆதிரா ,”  போங்க   டி  பொய்  சொல்ல  நான்  பட்ட  பாடு  எனக்கு தான்  தெரியும்  எங்க  அப்பா ரொம்ப  ஸ்ட்ரிக்ட் டிசரி  டி இப்போவே  லேட்  ஆகிட்டு   நான்  போயிட்டு  வரேன்  , அடிக்கடி  போன்  பண்ணுங்கஎன்று  கூறிவிட்டு , தன்  நண்பர்களிடம்  பிரியா  விடைபெற்றுக்கொண்டு   தன் இல்லம்  திரும்பினாள்.

ஆதவ் , சிறிது  நேரம்  அமைதியாய்  இருந்து  விட்டு   தன் மனதில்   உள்ள   அனைத்தையும்   கூறினான் . பின்பு ,” தெரியல  ராஜ்  இதுவரைக்கும்  எனக்கு  இப்படி  ஒரு  பீலிங்  வந்ததே   இல்ல  , இது  பர்ஸ்ட்  டைம்பிடிச்சிருக்கு   டாஎன்றான்  .

ராஜ் ,” முட்டாளாடா   நல்லா  பாத்து  பேசி  பண்ற  லவ்வே    மூணு  மாசத்துக்கு   மேல  தாங்க  மாட்டிக்குது  , இதுல  பார்க்காம  லவ்வா   இதுலாம்   சரி  படாதுடா  ,  உனக்கு  பர்ஸ்ட்   டைம்  வேற  ,  இது  சரியா  அமையலனா   உன்னால   தாங்கிக்கவே   முடியாது  , இத்தோட   விட்ரு  ,  இதான்  உனக்கு  நல்லது  , இந்த  காதல்  கத்தரிக்காலாம்   நமக்கு  செட்  ஆகாதுடா

ஆதவ் ,” ஆனா  ராஜ்” 

ராஜ் ,”  ஆதவ்  இல்ல  இது   எனக்கு  சரியா  படல “.

ஆதவ் ,”  நான்  உண்மையாவே  லவ்  பண்றேன் டா

ராஜ் ,”  அப்படியா  உண்மையாவே  லவ்  பண்றியா ,சரி  உன்  லவ்  உண்மையானதுன்னா   அது  கண்டிப்பா  உன்  கிட்ட  வரும்  . சரி  இப்போ மனச  போட்டு   குழப்பிக்காத  , வா   வீட்டுக்கு  போலாம்என்றான்

ஆதவ்வும்   சரி   என்பதை  போல்   தலையை  ஆட்டிவிட்டு  ,  தன்   இல்லம்  திரும்பினான் .

 

நான்   ஒன்றும்   கவிஞன்  இல்லை    ஆனால்   இன்று  எழுதிகிறேன்   ஒரு  கவிதை  ,  அது  நீ  தான்   ஆம்   நீ  தான்   என் கவிதை

 

நினைவுகள் 10

                  “சின்ன  புன்னகை  வீசி  வீசி   சென்றாய்  ,

                        தொடர்ந்தேன்   உன் பின்னால்

        அருகில்  வந்தேன்  புள்ளி  மானை  போல்   துள்ளி ஓடினாய்”  ….

ஆதவ்   ஆதிராவின்   நியாபகமாவே   தன்  இல்லம்  வந்தான்  அங்கே  அவன்  தந்தை   RK ,”  வாங்க   சார்  , இது  தான்  நீங்க   வீட்டுக்கு   வர்ற  டைம்மாஎன்றார்

அவர்  அடுத்த  வார்த்தை  கூறி   திட்டுவதற்குள்  , தேவி   ஆதவ்வின்   அருகில்  வந்து  கண்ணசைத்து  விட்டு  வேகமாக   அவனை  அறைந்தார்  , இல்லை  அறைவதை  போல்  நடித்தார் ,   ஆதவ்வும்  புரிந்து  கொண்டு   வலிப்பது   தன்  கன்னத்தில்   கை  வைத்து    பாவம் போல்  பார்த்தான்.

தேவி ,” என்னடா  மார்க்   வாங்கிருக்க  ,  ம்ம்ம்  உனக்கு  செல்லம்  கொடுத்தது   என் தப்புஎன்று  பொரிந்து  தள்ளினார் .

RK ,” போதும்  போதும்ஆதவ்  நீ  உன் ரூம்க்கு  போ  , நாளைக்கு  காலேஜ்   போனும்ல   சீக்கரம்  போய்   தூங்குஎன்றார் .

பின்பு  தன் மனைவியிடம் ,” என்ன  நீதீட்டுனதெல்லாம்    ஒகே  ஏன்  அடிச்ச , ம்ம்ம்  எப்பவும்    நான்   கோபப்படுவேன்  , நீ  சமாதானம்  செய்வ , இன்னைக்கு   நீயே  இப்படி  பண்ணுவன்னு   நான்  நினைக்கல  , என்ன  தான்  இருந்தாலும் தோளுக்கு   மேல  வளந்த   பையன   நீ   இப்படி  அடிச்சிருக்க    கூடாதுஎன்று  கூறி  விட்டு   தன்  அறைக்கு  சென்றார் .

தேவி  லேசாக  புன்னகைத்து  விட்டு   தன்  மகனின்   அறைக்கு  வந்தார்அங்கே  இருவரும்  ஒருவரை  ஒருவர்  பார்த்து  சிரித்துக்கொண்டனர்  , அப்பொழுது  ஆதவ் ,” சும்மா  சொல்ல  கூடதுமா  செம  அக்டிங்என்றான்

தேவி ,” அப்படியே  போட்டேன்னா  ,  என்னடா  மார்க்  வாங்கிருக்க  ஹ்ம்ம்  , உன்  அப்பா  சொல்றதும்  சரி  தான , நீ  ரொம்பலாம்   வாங்க  வேண்டாம்  பாஸ்  மார்க்காவது   வாங்கலாம்ல  , உன்  அப்பா  பாவம் டா

ஆதவ் ,” சரி  என்   செல்ல  அம்மாக்காக   , கண்டிப்பா  ட்ரை  பண்றேன்என்றான் .

தேவி ,” சரி மா  , நீ  தூங்கு  நான்   போறேன் ”    என்று  கூறி கிளம்பியவரை  தடுத்த  ஆதவ் ,” மா  உங்ககிட்ட   ஒன்னும்  சொல்லணும் ”  என்றான்

தேவி ,” ம்ம்ம்  சொல்லு  டா

ஆதவ் ,” மா  இன்னைக்கு  நான்  ஒரு  பொண்ணை  பார்த்தேன்என்று  ஆரம்பித்து   அனைத்தையும்   கூறினான் .

இதைக்கேட்ட   தேவி  ,”  எவ்வளவு  சந்தோஷமான  விஷயம்  டா  ,  இதனால்   வரைக்கும்   நீ   என்கிட்ட  சொன்ன   விஷயத்திலயே உருப்படியான  விஷயம்  நீ  இப்போ  லவ்  பண்றேன்னு   சொன்ன  விஷயம்    தான்என்றார்

ஆதவ் ,”  மா  , எனக்கு   அந்த  பொண்ணு  யார்னே  தெரியல  , பேரு   கூட  தெரியலன்னு  சொல்றேன் , ஆனா  அத  விட்டுட்டு  கிண்டல் பண்றீங்களேஎன்றான்

தேவி ,” இப்போ  எதுவுமே  தெரியலனா  என்ன  ,  அவ     உனக்கு  தான்னா    கண்டிப்பா  அவ  உன்கிட்ட  வருவா , நீ  எதுக்கும் கவலை  படாத  ,  நம்பிக்கையோட   படு   எல்லாம் சரியாகிரும்என்றார்.

தன்   தாயின்   வார்த்தையில்    ஒரு வித    நம்பிக்கை  பிறக்க , சந்தோஷமாக   அவரை  கெட்டி  அணைத்துக்கொண்டு  ,” தங்க்ஸ்  மா , குட்  நைட்என்று  கூறிவிட்டு  தன் கண்கள்  மூடி  கனவில்   அவளது  முகத்தை  தேடிக்கொண்டிருந்தான்    .

ஏன் பெண்ணென்று பிறந்தாய்?

ஏன் என் கண்ணில் விழுந்தாய்?

ஏன் ஒரு பாதி சிரித்தாய்?

என் உயிர் பூவை எரித்தாய்?

முதல் நாள் பார்த்தாய்… உறக்கம் கெடுத்தாய்!

முறையா என்றேன், கண்கள் பறித்தாய்!

என் வலி தீர ஒரு வழி என்ன?

என் பனிப் பூவே மீண்டும் பார்த்தால் என்ன?

நீ சூடும் ஒரு பூ தந்தால்,

என் ஆஸ்தி எல்லாம் கொடுப்பேன்!

உன் வாயால் என் பேர் சொன்னால்,

உன் காலடியில் கிடப்பேன்!

தூக்கத்தை தொலைத்தேனே, துடிக்குது நெஞ்சம்!

தலை போன சேவல் போல், தவிக்குது அங்கம்!

இரண்டில் ஒன்று சொல்லிவிடு!

இல்லை நீயே கொள்ளியிடு…!

 

நோகாமல், பிறர் காணாமல்,

உந்தன் ஆடை நுனி தொடுவேன்!

என்ன ஆனாலும், உயிர் போனாலும்,

ஒரு தென்றல் என்றே வருவேன்!

நீ என்னைப் பார்த்தால் தான் துடிக்குது உள்ளம்!

நீ என்னைப் பிரிந்தாலோ உள்ளம் வெறும் பள்ளம்!

இமயம் கேட்கும் என் துடிப்பு!

ஏனோ உனக்குள் கதவடைப்பு!

அடுத்தநாள்   காலையில்  டைன்னிங்   டேபில்லில்   ஆதிராவின்   தந்தை   மனோகர்  ,” ஆதிரா  இன்னைக்கு  உனக்கு பர்ஸ்ட்  டே   நான்  உனக்கு  எதுவும்  சொல்ல   வேண்டியது  இல்ல , பட்  இருந்தாலும்   சொல்றேன்  டிசிப்ளின்   அண்ட்  நீட்நெஸ்    தான்   ஒரு  மனுஷனுக்கு  ரொம்ப  முக்கியமான  விஷயம்   டிசிப்ளின்  இல்லாதவன்  என்ன  பொறுத்த  வரைக்கும்   மனுஷனே  கடையாது   ” என்றார்

ஆதிரா ,” யஸ்  டட்

மனோகர் ,” நான்  சொன்ன  மாதிரி   நீ அழகா   MBBS    எடுத்திருக்கலாம்  , ஆனா  நீ  பேஷன்  டிசைன் தான்  படிப்பேன்னு  உறுதியா  சொல்லிட்ட , இது   உனக்கு   ஒத்து   வருமான்னு   எனக்கு தெரியல    ஒகே  படி    பட்   இதுக்கு  அப்புறம்  என்ன  பண்ணனும்ன்னு   நான்  தான்  டிசைட்   பண்ணுவேன்என்றார்

ஆதிரா ,”  யஸ்  டட்  ” என்று  கூறிவிட்டு  சாப்பிட   துடங்கினாள்

பின்பு   தன்  தாய்  தந்தையரிடம்   விடை   பெற்றுக்கொண்டுதனது    கல்லூரி   வாழ்க்கைக்குள்   அடியெடுத்து   வைத்தாள்.

ஆதவ்வின்  இல்லத்தில்  , தேவி ,”  இந்தாங்க  டீ  சாப்டுங்க  “

” என்ன   சார்   இன்னும் எழும்பலையா  “

” அநேகமா   இப்போம்  எழும்பி  கிளம்பிட்டு  இருப்பான்னு   நினைக்கிறேன் “

“நினைச்சிட்டே   இரு “

தேவி  கணவனின்  பேச்சில்  சலித்துக்கொண்டு   மேல  பார்க்க  ஆதவ்  தன்  விரலில்   பைக்கின்   சாவியை   சுற்றிக்கொண்டு  மடியில்   இருந்து  இறங்கி  வந்துக்கொண்டிருந்தான்  , அதை  பார்த்து  அவர்  சிரித்துவிட்டு   தன்  கணவரிடம்

“அங்க  பாருங்க   அவனே  வந்துட்டான்  “

“ம்ம்ம்  சிரிச்சது  போதும்  சாப்பாடு  எடுத்துவை “

ஆதவ் ,” குட்  மார்னிங்  மா  ”  என்று  கூறி  தன்  தாயை  அணைத்துக்கொண்டான் .

RK ,” என்னடா  இது  கோலம்  இதான்  நீ  காலேஜ்  போற  லக்க்ஷனமா “

“ஏன்  நல்லா  தான  இருக்கான் “

” என்ன  டிரஸ்  டி  இது  , பொறிக்கி  மாதிரி  .  ஷர்ட்ல  மேல   ரெண்டு  பட்டன்  இல்ல  , ஷூ  லேஸ்  ஒழுங்கா  கட்டல ,  தலைக்கு   எண்ண  இல்ல  ,  ஒழுங்கா  ஷேவ்  பண்ணல ,  எல்லாத்துக்கும்  மேல  அவன்  காது  கழுத்து    கைய  பாரு  காதுல   கடுக்கான் ,  கையில  இத்த  ரப்பர்  பேண்ட் ,  கழுத்துல  நாயி  செயின்  .  ஏன்  ஆபீஸ்   டாக்   கூட   நீட்டா  இருக்கு   அதுக்கு  இருக்குற  டிசிப்ளின்  கூட   நா  பெத்த   பையன்  கிட்ட  இல்ல “

ஆதவ்   எதையும்  கண்டுக்காதவனாய்  எங்கையோ  பார்த்துக்கொண்டிருந்தான் .

” சரி  விடுங்க  காலையிலேயே   ஆரம்பிக்காதீங்க , ஆதவ்   நீ    வா   பா   வந்து  உக்காரு  என்ன  சாப்டுற    “

” இந்த   ரவுண்டு  ரௌண்டா    இருக்குமே  அது  என்ன ?”

” இடியாப்போமா  “

“ஆமா   அதான்  “

“சரி  அம்மா  கொண்டு  வரேன் “

“ம்ம்ம்   சரி  மா “

“பால்  சீனி   வச்சி   சாப்டுறியா  , இல்ல  குருமா   வச்சி  சாப்டுறியா “

 “ஏன்  அப்டியே   இடுப்புல   தூக்கி  வச்சிக்கோயேன் “

”  கொஞ்சம்  சும்மா  இருக்கீங்களா  ,  நீங்க  சாப்ட்டுட்டு  ஆபீஸ்  போற  வழிய  பாருங்க , நீ  சொல்லு  டா  கண்ணா “

” பால்  சீனி  வச்சே  சாப்டுரேன்  மா “

“சரி  அம்மா  எடுத்துட்டு   வரேன்  “

RK  முறைத்து  விட்டு   சாபிட்டுக்கொண்டிருக்க

தேவி   ஆதவ்விற்கு  சாப்பாடு  ஊட்டிவிட்டுக்கொண்டிருந்தார்   , அப்பொழுது  ஆத்வ்வின்  போன் ,” ராத்திரி  நேரத்து  பூஜையில்  , ரகசிய  தரிசன  ஆசையில்  ” என்று  ஒலிக்க  .

RK  மீண்டும்   முறைக்க   துடங்கினார்  உடனே    ஆதவ்   பதறி  போனை  அட்டண்ட்   செய்து   ,”மச்சான்  வரேன்  டா  ”  என்று  கூறி  போனை   வைத்து  தன்  தந்தையை  பார்த்தான்

RK ,” என்னடா   ரிங் டோன்  இது ,  எல்லாம்   என்  தலையெழுத்து  படிக்குற  பையன்  மாதிரியா   இருக்க  நீ  ,  என்னமோ  போ   தேவி   நா  ஆபீஸ்  கிளம்புறேன்  ” என்று  கூறிவிட்டு  அங்கிருந்து  சென்றார் .

தேவி  ,”  ஏண்டா   கொஞ்சம்  அப்பா   பேச்ச  கேக்கலாம்ல  “

“ம்ம்ம்ம்   மாட்டேன்  ,ஆனா   என்  அம்மா  பேச்ச  கண்டிப்பா  கேப்பேன்   ஒகே  வா ”

“ஒகே  ” 

“சரி  மா  நா  கிளம்புறேன்  “

“ஏய்  நில்லுடா   இந்தா  “

“என்ன  மா  இது  “

” இதுல    சப்பாத்தியும்   குருமாவும்   இருக்கு  ,  ராஜ்க்கு   ரொம்ப  புடிக்கும்  கொண்டு  போய்    குடு  “

வருடத்தில்   பாதி   நாள்   ராஜுக்கு   காலை  உணவு    ஆதவ்வின்   இல்லத்தில்   இருந்து  தான்  போகும்  ,  வருடத்தில்  முக்காவாசினாள்   ஆதவ்வின்   வாழ்க்கை    ராஜின்  இல்லத்தில்   தான்   கழியும்,  இருவருக்கும்   இடையே   நட்ப்பு   என்பதை   தாண்டி   ஒரு   அற்புதமான   பந்தம்  உண்டு  …

“சரி மா   போயிட்டு  வரேன்  “

என்று   கூறி   தன்  தாயிடம்   விடைபெற்றுக்கொண்டு   அங்கிருந்து    தன்  கல்லூரிக்கு   சென்றான் .

முதல்   நாள்    என்பதால்   சீக்கரமே  வந்த  ஆதிரா  ஒரு வித  பதற்றத்துடன்   தன்  வகுப்பறையில்  போய்  உட்க்கார்ந்தாள்  ,  அங்கே  அவள்  மட்டும்  தான்  வந்திருந்தாள்  , கொஞ்சம்  நேரம்  கழித்து  இன்னொரு  பெண்ணும்  அங்கே  வந்தாள்  , அவள்  ஆதிராவிடம்  ,”  ஹாய்    என்  பேரு   ஜீவிதா  , இங்க  ட்காரலாமாஎன்றாள்

ஆதிரா ,”  ஹாய்   ஐம்  ஆதிரா , ப்ளீஸ்  ட்காருங்க

அப்றோம்   ஆதிரா   சொல்லுங்க  என்று  ஜீவிதா   ஆரம்பிக்க  ,  இருவரும்   நன்றாக  பேச  ஆரம்பித்தனர்  , இரண்டு  பெண்கள் 

சேர்ந்தால்  கேட்கவா  வேண்டும்  ,  இரண்டு  பேரும்  நன்றாக   பழக  ஆரம்பித்தனர் , நேரம்  போவதே  தெரியாமல்  பேசிக் கொண்டிருன்தனர், பிறகு  நேரம்   ஆக   ஆக    மற்ற  மாணவர்களும்   உள்ளே  வர  ஆரம்பித்தனர் .

அவர்கள்  வந்து  கொஞ்ச  நேரத்திலே   ஆசிரியரும்   வர   வகுப்பு   ஆரம்பித்தது  .

ஆசிரியர் ,” ஹலோ  ஸ்ட்டுடெண்ட்ஸ்   குட்  மார்னிங் ,     ப்ளீஸ்  சிட்  டவுன்

ஸ்ட்டுடெண்ட்ஸ்,” குட்  மார்னிங்   சார்

ஆசிரியர் ,”    ஸ்ட்டுடெண்ட்ஸ்  இன்னைக்கு   உங்களுக்கு   பர்ஸ்ட்   டே  கிளாஸ் ”  என்று  அவர்  ஆரம்பிக்கவும்

தொப்பென்று   ராஜ்   உள்ளே   வந்து  குதிக்க  , மற்ற   சீனியர்  மாணவர்களும்   உள்ளே  வந்தனர்ராஜ் ,”  ஹாய்  ஹாய்  எல்லாரும்  எப்படி இருக்கீங்க ”  என்றான்

ஆதவ்   மட்டும்  அமைதியாக   வந்து   ப்ரோபஸர்   உட்க்காரும்    சேரில்   வந்து  அமர்ந்தான் .

ப்ரோபஸர்   அவர்களை  பார்த்ததும்   அங்கிருந்து   கிளம்பினார் .

பிறகு  ஆதவ்  தன்  இருகாலையும்   தூக்கி  டேபிள்   மீது   வைத்து  ,   ஒரு  புக்கை   கொண்டு   தன்  முகத்தை  மூடி   கொண்டான் .

ராஜ் ,”    ஜூனியர்ஸ்   நாங்க  தான்  உங்களோட  சீனியர்ஸ்   , என்  பேரு  ராஜ் , நாங்க   இப்போ  எதுக்கு  வந்திருக்கோம்ன்னு   உங்களுக்கு   நல்லாவே   புரிஞ்சிருக்கும்பட்  இருந்தாலும்  சொல்றேன்  இன்னைக்கு  உங்க  எல்லாருக்கும்   ஒரு டெஸ்ட்  நாங்க  வைக்க  போறோம் , சீனியர்ஸ் கிட்ட  ஜூனியர்ஸ் எப்படி   மரியாதையா    நடந்துகறீங்கன்னு    நாங்க   பாக்க போறோம்  , ஒன்னும்  இல்ல  நாங்க   என்னலாம் பண்ண  சொல்றோமோ   தை  மட்டும்  பண்ணினா   போதும்ஒகே  ஸ்டார்ட்  பண்ணலாம் ,”  தன் நண்பர்களை  பார்த்து ,”போங்க  டா  போய்   ஆரம்பிங்க  ” என்றான்.

ராஜ்   கடைசி   ரோவில்  இருந்த  ஒரு  மாணவனை  பார்த்து  ,” இங்க  வா  , இல்ல இல்ல  சரோட  வாஎன்றான் .

பின்பு  அவனிடம் ,” குட்    லைக்  இட் ,   டான்ஸ்   ஆட   தெரியுமா   “

ம்ம்   தெரியும்   அண்ணா  , எங்க  ஸ்கூல்ல   நான்  தான்  பர்ஸ்ட்  “

அப்படியா  பார்றா   சரி  போ   ஒரு  பொண்ணு   கிளாசிக்கல்   டான்ஸ்    ஆடுற   மாதிரி   ஆடு  ” என்றான்

அவன்அண்ணா  ” என்று  இழுக்க

ராஜ் ,” டுடா ”   என்றான்

அப்பொழுது   ஆதிரா   ராஜை  பார்த்து   திட்ட   , ராஜ்   அவள்   வாயசைப்பதை   வைத்து   தன்னை   எதோ  திட்டுகிறாள்  என்பதை   கண்டுபுடித்தவன்  , அந்த  பையனை  போக  சொல்லிவிட்டு   , ஆதிராவை   பார்த்து  ,” ஏய்  யு   ப்ளாக்   சுடி  இங்க   வா ”  என்று  தன் விரல்   காட்டி    அழைத்தான் .

ஆதிரா  அக்கம்  பக்கம்  பார்க்க  , ராஜ் ,” ஏய்  யு  நீ  தான் இங்க  வாஎன்றான் .

ஜீவிதா  ஆதிராவின்  கையை  பிடித்து  ,” பார்த்து  டிஎன்றாள்

ஆதிரா   தன் கண்ணை  அசைத்து  விட்டு   ராஜின்   அருகில்  வந்தாள் .

ராஜ் ,” என்ன  சொன்ன

இல்ல  நான்  ஒன்னும்  சொல்லல

ஹ்ம்ம்   சரி  பாடு

”  மாட்டேன்

மாட்டியா  நான்  உன்ன  செய்விய  செய்ய  மாட்டியான்னு   கேட்கல  , புரியுதா  ,உன்னை  செய்ய   சொன்னேன்

உடனே  ஆதிரா ,”  போடா  போடா  புண்ணாக்கு   போடாத   தப்பு  கணக்கு  ” என்று   பாட 

ஆதவ் ,”  நிறுத்து டிஎன்று  கத்தினான் , அவன் கத்தியதில்    அனைவரும்   நடுங்கினர் .

பின்பு  ஆதவ் ,” பாட  சொன்ன  என்ன  நக்கலா , தட்டி  தூக்கிருவேன் . என்ன  எங்களை  பார்த்தா  எப்படி  இருக்கு  ஹ்ம்ம் , மரியாதையா    ராஜ்  கிட்ட  சாரி  கேளுஎன்றான் .

ஆதிரா  தயங்கி  தயங்கி ,” சாரி”  என்றாள்

தான்    விரும்பும்  பெண் , தான் தேடும் பெண்   தன்  எதிரில்  இருந்தும்   ஆதவ்வால்   கண்டு  புடிக்க  முடியவில்லை . இது  தான்  காதல்,   தேடும்   பொழுது   தெரியாது  …..

ஆதவ் ,”  ‘ஹ்ம்ம்  மச்சான்  மீச’    அந்த  பாட்ட  பாடு , ஏய்  பாடு டி   ”  என்று  கத்த

ஆதிரா ,”   வில்  கம்ப்ளைன்   டு  ப்ரின்சிபல்

ஆதவ் ,” என்ன   கம்ப்ளைன்  பண்ண  போறிங்கள  , வேணாம்   ப்ளீஸ்  அப்படி  மட்டும்  பண்ணாதீங்க  ப்ளீஸ்என்று  பயப்படுவதை  போல்  கூற

ஆதிரா ,”  நோ   நான்  கண்டிப்பா  கம்ப்ளைன்   பண்ண  தான் போறேன்கம் ஆன்    பிரண்ட்ஸ்  எல்லாரும்  என்கூட  வாங்க  சினியர்ஸ்ன்னா   என்ன  வேணும்னாலும்  பண்ணுவீங்களா  ” என்று  கூற  ,  இவள்  வகுப்பை  சேர்ந்த   அனைத்து  மாணவர்களும்  ஆதிராவுடன்  சென்றனர் .

ராஜ்  ,” என்னடா  ஆதவ்   இவ  போற போக்க  பார்த்தா   கம்ப்ளைன்  பண்ணுவா  போலயே

ஆதவ் ,”  ஆமா  டா  என்ன பண்றது  ”  என்று   கூறி   தன்   சக  நண்பர்களை  பார்க்கபின்பு  அனைவரும்   விழுந்து  விழுந்து  சிரிக்க    துவங்கினார்  , 

ஆதவ் ,” அப்போ  இங்க  ஒரு   காமெடி  நடக்க  போகுது  , வாங்கடா   என்ன  நடக்குதுன்னு   போய்  பார்ப்போம் ”  என்று  அனைவரும்   பிரின்சிபல்    அறைக்கு   சென்றனர்  

பிரின்சிபல் ,”  வந்த  பர்ஸ்ட்  டேவே   சீனியர்ஸ்   மேல   கம்ப்ளைன்ட்டா  இது  தான்   நீங்க   சினியர்ஸ்க்கு  குடுக்குற  மரியாதையா , நீங்க  சொல்ற  விஷயத்துக்கு    எதாவது   ப்ரூப்   இருக்கா   “

ஆதிரா ,” சார்  ,  ஆனா   “

பிரின்சிபல்,” அப்போம்    இல்ல  கிளம்புங்க   மா  என்   டைம்  வேஸ்ட்  பண்ணாதீங்க  ,  நெக்ஸ்ட்  டைம்  ப்ரூப்போட   வாங்க  இப்போ    போங்க  ” என்றார் .

ஆதிரா  மற்றும்    அனைத்து   மாணவரும்    கவலையோடு  வர  ,

ராஜ்  ஆதிராவிடன்  தண்ணீரை   கொடுத்து   ,”இந்தாங்க   ரொம்ப  சூடா   இருக்கீங்க   குடிங்கஎன்றான்   .

ஆதிரா  ,தண்ணீரை   தட்டிவிட

ஆதவ் ,”  தண்ணீ   குடிக்க  மாட்டேன்னு  சொன்னீங்களாமே   என்ன   மா   என்ன  செல்லம்   ஏன்  அழரிங்க  , பிரின்சிபல்  அடிச்சாரா   ,  பையங்க   யாரும்  கிண்டல்  பண்ணாங்களா  , சொல்லு  மா  பிடிச்சி    மேஞ்சிடுறேன், அழகூடாது    மம்மி    கிட்டலாம்   கம்ப்ளைன்   பண்ண  கூடாது  ,அப்போ  தான்  நான்  உங்களுக்கு   சாக்லேட்   வாங்கி   தருவேன் ” என்று  அவன் கூற 

என்று   அனைவரும்   சிரித்தனர்

அப்பொழுது   ஆதிரா    ஆதவ்   முன்பு   தன்   ஆள்காட்டி   விரலை   நீட்டி,”  யு  ஹவ்  டு  பே  பார்  திஸ்என்று  கூறினாள்.

உடனே  ஆதவ்  அவள்  அருகில்  வந்து  ,” எவ்வளவு  வேணும்என்றான்

ஆதிரா ,” யு சீப் ” 

”  டேய்   மடம்க்கு   சீப்பு  வேணுமாம்  , எங்க  டா  ,ம்ம்ம்  இந்தாங்கஎன்று  அவள்  முன்பு  நீட்டினான்

ஆதிரா   முறைக்க  ஆதவ் ,”  செல்லம்    அப்படி  பார்க்காத   நீ  அப்படி  பார்க்குற  நாலா   எதுவும்  ஆக  போறதில்ல, பிரின்சிபால்  என்ன  சொன்னாரு  , ஏய்  சும்மா  சொல்லு ,  வேண்டாம்   நானே   சொல்றேன்   ப்ரூப்  கேட்ருப்பாரே  ,  ம்ம்ம்  கேட்ருப்பாரு    ஏன்னா   அப்டிதான்   கேக்க  சொல்லிருக்கோம் .  ஏன்னா   ,  பிரின்சிபால்   என்  அப்பாவோட   பெஸ்ட்    பிரன்ட்   எல்லாத்துக்கும்   என் அப்பா RK  இந்த  காலேஜோட      முக்காவாசி   ஷேர்  ஹோல்டர்   , ஸோ   சந்தேகமே   வேண்டாம்  என்  அப்பாதான்   இந்த  காலேஜோட    chairman    சந்தேகமா  இருக்கா   ம்ம்ம்  இந்தா   இந்த  போட்டோவ   பாரு  ” என்று   தன்  மொபைலை    காட்டினான்  , அதில்  தான்   பிரின்சிபால்  தன்  தந்தை   சேர்ந்து  எடுத்துக்கொண்ட   புகைப்படம்   இருந்தது , ஆதவ் ,” இந்த போட்டோ  இருக்குல  , என்   பர்த் டே   பார்ட்டியோட   எடுத்தது , நல்லா  இருக்கா , நல்லா  தான்  இருக்கும்  ஏன்னா   அது  அதவ்வோடதுலுக்   இங்க  பாருங்க  எல்லாருக்கும்  ஒன்னு  சொல்றேன்   இந்த  காலேஜ்ல  

ஒழுங்கா   எந்த  பிரச்சனையும்   இல்லாம  படிக்கனும்னா  , என்னையும்   என் பரான்ட்சையும்  பகச்சிக்காதீங்க  ,  அதையும்  மீறி  கண்டவங்க  பேச்சையும்   கேட்டுகிட்டு   எதாவது  பண்ணுனிங்க  ,  உங்க  நிலைமை   ரொம்ப  மோசமாயிடும்  ”  என்று  கூறிவிட்டு  ஆதிராவை   பார்த்து  ,” செல்லம்  டாட்டாஎன்று  கூறி  சிரித்துவிட்டு  சென்றான்

இவ்வாறு   ஆதிராதான்   தான்   விரும்பும்  பெண்  என்று  தெரியாமல்   ஆதவ்   அவளை  தினமும்   அந்த  சினிமா  தியேட்டர்   வாசலில்   நின்று  கொண்டு   ஒருநாளாவது   அவள்  வரமாட்டாளா   என்று  தேடிக்கொண்டிருந்தான்நித்தமும்  அவள்  நியாபகமாவே   இருப்பதால்   , அவனுக்கு   ஆதிராவோடு   மோதுவதற்கு   நேரம்  கிடைக்கவில்லை   அவனும்  அதை  விரும்பவில்லை  ,  ஆனால்   ஆதிரா மட்டும்   அவன்  மீது  கோபமாகவே  இருந்தாள்   காரணம்  ,அவனது   செய்கை  ஒன்றும்  அவளுக்கு  பிடிப்பதில்லை  …

இன்று  ஆதிராவுக்கு   பிடிக்காத  ஒருவன்  , நாளை  பிடிக்க  வாயிப்பிருக்கிறதா …..

அன்பே  கனவினிலும்  நீ   என்   நினைவினிலும்  நீ , முகம்  பார்க்க   தவிக்கிறது  என்  உள்ளம்.

 

 நினைவுகள் 11

               “ஊசி  பார்வையால்   என்னை   தைக்காதே

கிழிந்திருப்பது  என்  ஆடையல்ல 

       உயிருள்ள  என்  இதயம்

இதற்க்கு தையல்  தேவை இல்லை

   இதமான  உன்   தீண்டல்  போதும்

ஒரு   நாள்    ஆதிரா     தன்    ப்ராஜெக்ட்டை    தன்   ப்ரோபஸர்ரிடம் காட்டுவதற்காக கொண்டு   போய்க்கொண்டிருந்தாள்  , அப்பொழுது  அவசரமாக   ஓடி  வந்த  ஆதவ்   தவறுதலாக   அவள்  மீது  மோத  , மொத்த  ப்ராஜெக்ட்டும்   வீணாய்போனது   ,  ஆதவ் ,”  சாரி  தெரியாம  பண்ணிட்டேன்  கவனிக்கல  , இதுக்கு  உரிய   காசை  நான்   குடுத்திர்ரேன்என்றான்

ஆதிரா ,” வாட்  வேணும்னே  இடிச்சிட்டு    காசு   தரேன்னு  சொல்றியா   உன்  காசு   யாருக்கு  வேணும்

ஆதவ் ,”  ஒஹ்    அண்டர்ஸ்டன்ட்   காசுன்னா   சில்ர  இல்ல   , பணம்     மீன்   ரூபா  நோட்டு சரியாஎன்றான்

ஆதிரா ,” வேணும்னே  என்கிட்ட  வம்பு  ண்றல  , உன்னை  என்ன    பண்றேன்னு   பாரு

ஆதவ் ,”  சாரி   தான்  சொல்லிட்டேன்ல   “

ஆதிரா ,” சாரி  சொன்ன  எல்லாம்   சரியாகிருமா, உன்னை  நான்  சும்மா  விட மாட்டேன்  “

ஆதவ் ,”  என்ன  வேணுமோ  பண்ணிக்கோ , ஆள  விடுஎன்று  கூறிவிட்டு  அங்கிருந்து  சென்றான் .

அடுத்தநாள்   ,   காலேஜ்  முடிந்த  பிறகு   ஒரு  பையன்  வந்து   ஆதிரா  உங்கள   ப்ரோபஸர்  ஜான்   மாடல்  ரூம்ல  வந்து  மீட்  பண்ண  சொன்னாங்க  என்றான்

ஆதிரா  ,” இப்போ  வா ” 

 “ஆமா   போங்க  நீ  அங்க  போங்க  சார்  கொஞ்ச  நேரத்துல   வந்திருவாங்க  ” என்று  கூறிவிட்டு   அங்கிருந்து  சென்றான் .

ஆதிராவும்   அங்கே   போய்   அவருக்காக    காத்துக்கொண்டிருந்தாள்

ஆப்பொழுது  கதவு   மூடுவது  போல்    சத்தம்  கேட்க  ,ஓடி வந்து  பார்த்தாள்    அப்பொழுது   கதவு   மூடப்பட்டிருந்தது   ,  திடீர்  என்று  லைட்டும்  அணைக்க  பட்டிருந்தது , அவள் ,” யாரு   ப்ளீஸ்  கதவ  திறங்க  நான்  உள்ளே  இருக்கேன்  என்று  கத்தினாள்  , அப்பொழுது   ஆதவ்   வெளியில்  இருந்து ,” கதவ  திறக்கனுமா   ,அத  நீ  என்னை  என்   அப்பாகிட்ட   மாட்டிவிடுரதுக்கு    முன்னாடி   யோசிச்சிருக்கணும்  , நான்  தான்  தெரியாம  தட்டிவிட்டுட்டேன்னு   சொன்னேன்ல  ,  என்  அப்பாக்கு   போன்  பண்ணி   கம்ப்ளைன்  பண்றியா  எவ்வளவு  தையிரியம்  , உன்னால  என்    குடும்பத்துல   உள்ள  எல்லார்  முன்னாடியும்   என்  அப்பா  திட்டிட்டாரு   , எவ்வளவு  அசிங்கமா  போச்சி  தெரியுமா  ” என்றான்

ஆதிரா ,” சாரி   தெரியாம  பண்ணிட்டேன்  ப்ளீஸ்  கதவ  திறங்க  , எனக்கு   பயமா  இருக்கு  கரண்ட்  வேற  இல்ல   எனக்கு  இருட்டுனா  பயம்என்றான்  .

ஆதவ் ,” அப்படியா   நான் தான்  மெயின்   சுவிட்ச்ச  ஆப்  பண்ணினேன்   நல்லா  இங்கயே  இரு   அப்போ  தான்  உனக்கு  புத்தி  வரும் ”  என்று   கூறிவிட்டு   கீழே  வந்தான்  ராஜிடம்  ,”  என்ன டா

ராஜ் ,”  யாரும்   பார்க்கலவாட்ச்  மேன்   அப்பவே   பூட்டிட்டு   போய்ட்டான்நாம   சுவரு  ஏறிதான்   குதிக்கணும் , பைக்கை   வெளியில   நிப்பாட்டிட்டேன்

ராஜ்  ,”  என்னடா   “

ஆதவ் ,”  உள்ளே  வச்சி  பூட்டிட்டேன்  “

ராஜ் ,”  பிரச்சனை   எதுவும்   வராதில்ல

ஆதவ் ,” வராது  , இப்படி   திருட்டு  முழி  முழிக்காத   சரி  வா”  என்று  கூறி   ராஜ்ஜுடன்  வெளியே  சென்றான் .

அங்கே  உள்ளே  ஆதிரா    பயந்து    அழுது  அழுது    இருட்டில்   கண்  தெரியாமல்   சுவற்றில்  மோதி   தலையில்  அடிபட்டு   மயங்கி  கீழே  விழுந்தாள்.

ஆதவ்  வீட்டிற்கு   வந்தானே   தவிர   அவனால்   நிம்மதியாக  இருக்க  முடியவில்லை   ஆதிராவின்   நியாபகம்   அவனுக்கு  வந்து  கொண்டிருந்தது.

இரவு   ஒரு  பதினொரு  மணி  இருக்கும்   அவனுக்கு   ஆதிராவின்  நியாபகம்   அதிகமாக  வர  மனம்  கேளாமல்  ,ராஜுக்கு  போன்  செய்தான்   அவன்  போனை  எடுக்க  வில்லை  , உடனே  அவன்  தன்    வீட்டில்    யார்க்கும்  தெரியாமல்       காலேஜ்க்கு  சுவர்  ஏறி  குதித்து  உள்ளே    சென்றான்  .

மாடல்  அறைக்கு சென்று   வெளியில்  உள்ள  சுவிட்ச்சை  போட்டுவிட்டு  , கதவை  திறந்து  உள்ளே   சென்றான்  , அங்கே  ஆதிரா   தலையில்   ரத்தம்  வர  மயங்கி     கிடந்ததை   பார்த்து  அதிர்ந்து  போய்  , அவள்  அருகில்  சென்று  அவளது  தலையை   தன்  மடியின் மீது  வைத்து  ,  அவளை   எழுப்புவதற்கு  ,முயற்சி   செய்தான்   அவள்  எழும்பவில்லை  என்பதால்   அவளை  தன்  கரங்களில்   ஏந்திக்கொண்டு   ஓடிவந்தான்  ,  கேட்டை   திறக்க முடியாது   என்பதால்  , வேறு   வழியில்லாமல்   சுவர் ஏறித்தான்  வெளியே  செல்ல முடியும்   என்பதால்  ,  அவளை  தோளில்   சுமந்து  கொண்டு   ஏற  முயற்சிதான்  ஆனால்  அவனால்  முடியவில்லைஒருவழியாக   பல  சிரமங்களோடு   கஷ்டப்பட்டு   அவளை  வெளியே  கொண்டு வந்தான்  ,  பிறகு   எப்படியோ   ஒரு   ஆட்டோவை  பிடித்து   அவளை  அருகில்  உள்ள  மருத்துவமனைக்கு   கூடிச்சென்றான்

ஆதவ் ,”   சீக்கரம்  வாங்க   கீழ  விழுந்துட்டாங்க    அடிபட்டு   ரத்தமா   வருதுஎன்றான்

அங்கே  அவர்கள் ,” டாக்டர்  இல்ல   சார்   ,  அங்க  படுக்கவைங்க , டாக்டர்   வர  லேட்  ஆகும்  என்று    லட்ச்சியமாக   கூறியதால்

ஆதவ் , கோபமாக  ,” என்ன  பேசுறிங்க   அடிபட்டு   ரத்தம்   கொட்டுதுங்க    , நீங்க  இப்படி  பேசுறிங்க   ,  இப்போ  மட்டும்  வந்து  ட்ரீட்மென்ட்   பண்ணல  ,  நான்  என்ன   பண்ணுவேன்னு  எனக்கு  தெரியாது ”  என்று  கத்தினான் .

அங்கு  வந்த  ஒரு     நர்ஸ் ,அவர்களை பார்த்து  ”   இப்படி   தான்   வந்தவங்க   கிட்ட   நடந்துக்குவீங்களாஇங்க  பாருப்பா  ,   சீக்கரம்   உள்ள   கொண்டு  வா   ரத்தம்   வேற  நிறையா  போன   மாதிரி   இருக்கு  ” என்றார்

பின்பு   டாக்டர்க்கு   அழைப்பு   விடுக்கப்பட்டு   அவர்  வந்து  ட்ரீட்மென்ட்   ஆரம்பித்தார்டாக்டர்  நர்ஸ்ஸிடம்    பேஷண்ட்  கூட   யார்வந்திருகாங்க   என்று  கேட்டார் .

இந்த  பொண்ணோட  ஹஸ்பண்ட  வந்திருக்காரு   ” என்று   ஆதவ்வும்   ஆதிராவும்   கணவன்  மனைவி   என்று  தவறாக   புரிந்துகொண்டார்

ஆதவ்   கண்ணீரோடு   வெளியிலே  அமர்ந்திருந்தான்  .

அப்பொழுது   ஆதவ்விடம்  நர்ஸ்  ஆதிராவின்   ட்ரஸ்   மட்டும்  அவளது  ஆபரணங்களை   கொடுத்துவிட்டு   ,  பேஷண்ட்    பேரு  என்ன   என்று   கேட்டார்  

அவன்  ,”  ஆதிரா ” ,

நீங்க   உங்க  பேரு  என்ன

”  ஆதவ்பிறகு  அவர்  ஆதவ்விடம்   சயின்  பண்ணுமாறு   கூறினார்   ஆதவ்  , அதை  படித்து  பார்த்து  , அதில்   தன்னை  ஆதிராவின்  கணவன்  என்று  குறிப்பிட்டு  உள்ளதை   பார்த்து   ஒரு நிமிடம்   அதிர்ந்து  போனான்  , பின்பு  அவன் தனக்குள்  ,”  இப்போ   ஒன்னும்  சொல்ல  வேண்டாம்  ,  ஹஸ்பண்ட  இல்லனா   வேற  யாருன்னு   கேட்பாங்க   ட்ரீட்மெண்ட்   குடுக்காம  போயிட்டாங்கனாஎன்று  கூறிவிட்டு, பிறகு  அந்த  பார்ம்மை    சயின்    பண்ணி   கொடுத்தான் .

அதை    வாங்கிய   ஆதவ்   நர்ஸிடம்  ,” இப்போ எப்படி  இருக்கா” 

நர்ஸ் ,” ட்ரீட்மென்ட்  உள்ள  நடக்குது  பாஎன்று  கூறிவிட்டு  அங்கிருந்து  சென்றார் .

பின்பு  அவன்   அவளது   ட்ரஸ்  மட்டும்   ஆபரணங்களை   பக்கத்தில்   வைக்க   முற்படும்  பொழுது   ,   அவளது   ஆபரணங்கள்  கை   தவறி  கீழ   விழுந்தது  அவன்  எடுத்துக்கொண்டிருக்கும்   பொழுது    அவன்  கண்ணில்   ஒரு  செயின்  தென்பட்டது  அதை  பார்த்து  ஆதவ்  ஆதிர்ந்து   போனான்  , அதை  தன் கையில்  எடுத்து  , அந்த  சினிமா  தியேட்டர்   சம்பவத்தை   நினைத்து   பார்த்தான்  , தியேட்டரில்   பார்த்த   பெண்ணின்  கழுத்தில்   உள்ள    டாலரும்  , இங்கே  ஆதிராவின்  டாலரும்  ஒன்று  என்பதை  அறிந்தான்    அப்பொழுது   அவனுக்கு   , ” தான்  விரும்பிய  பெண்  வேற  யாரும்  இல்லை  அது  ஆதிரா  தான்என்கின்ற  உண்மை   புரிந்தது  ,  தன்   கையில்   அந்த  செயின்னை  வைத்துக்கொண்டு   முட்டி  போட்டு,” ஐயோ   தப்பு    பண்ணிட்டேனே  ஆதிராஎன்று  ஏங்கி  ஏங்கி  அழுதான் .

பின்பு    ட்ரீட்மென்ட்  முடிந்து   டாக்டர்   வெளியே  வந்து ,”  போங்க  சார்   இப்போதைக்கு    உயிருக்கு   எந்த  பிரச்சனையும்  இல்ல ,      அவங்க  இன்னும்  மயக்கமா   தான்   இருக்காங்க  அவங்க   நினைவுக்கு   வந்தப்புறம்ஒரு  செக் அப்  பண்ணிட்டு   நாளைக்கு  காலையிலநீங்க   கூட்டிட்டு  போலாம்  , அதுவர    பத்தரமா   பாத்துக்கோங்கஎன்று  கூறிவிட்டு  சென்றார் .

உடனே  ஆதவ்   வேகமாக   உள்ளே  சென்றான்  , ஆதிரா   மயக்கமாக   இருந்தாள்  , வலது  கையை  புடித்துக்கொண்டு   ,” ஐம் சாரி   ” என்று  கூறி  அழுது கொண்டே இருந்தான்  ,  பின்பு   அடிபட்ட   அவனது   தலையை   தடவி விட்டு  கொண்டே  இருந்தான் , அப்பொழுது  நர்ஸ்  ,” நீ  வேணும்னா   படுத்துக்கோ  நான்  பார்த்துக்கறேன்என்றார்

ஆதவ் ,” இல்ல  நீங்க  போங்க  நான்  தேவைபட்டா   கூப்பிடுறேன்என்றான்

அவர்  சிரித்துவிட்டு   அங்கிருந்து  சென்றார் .

விடிந்த  பிறகும்   ஆதவ்   தூங்காமல்  ஆதிரவை   கவனமாக    பார்த்துக்கொண்டிருந்தான்அப்பொழுது  ஒரு  நர்ஸ்  அவனிடம்    டாக்டர்  சார்  வந்தப்புறம்   நீங்க   கூட்டிட்டு  போலாம்  ஸோ   நீ  அங்க  ட்ரெஸ்ஸ  போட்டு விட்ருங்க ”  என்றார் .

ஆதவ் ,” நானா  , நீங்க  பண்ண மாட்டீங்களா

நர்ஸ் ,” இல்ல  ICU   இருக்குறவங்களுக்கு  மட்டும்  தான்  நாங்க  பண்ணுவோம்  , மத்தபடி   கூட  இருக்குறவங்க   தான்  பண்ணனும்  ” என்று  கூறிவிட்டு  சென்றார் .

ஆதவ்  என்ன  செய்வதென்று   புரியாமல்  ,  ஆதிராவின்   தோழி  ஜீவிதாவிற்க்கு  போன்  செய்து  விஷயத்தை  கூறி   உடனே  வர  கூறினான் , பின்பு  அவள்  அங்கு  வந்தவுடன்   நடந்ததை   கூறினான்  முதலில்   அவள்   அவன்  மீது  கோபப்பட்டாலும்   ,  அவன்  தான்  ஆதிரவை  ஹாஸ்பிட்டலில்  சேர்த்தான்   என்பதை  புரிந்து  கொண்டு   சகஜ  நிலைக்கு  வந்தாள் .

ஆதவ்  ,”  ஜீவிதா  ஆதிராவோட   வீட்ல  தேடிட்டு  இருப்பாங்கல்ல  “

ஜீவித்தா ,” இல்ல  அவங்க  வீட்ல   வெளியூர்   போயிருக்காங்க   , இன்னைக்கு  நைட்  தான்   வருவாங்க, அதுவும்  ஒரு  வகையில   நல்லதா   போச்சி   இல்லனா  பிரச்சனை    பெருசாகிருக்கும்என்றாள்

ஆதவ் ,” சரி  நீ  ஆதி   கூட  இரு  ,  நான்  பில்  எல்லாம்  செட்டில்  பண்ணிட்டு  ,     ரிபோர்ட்ஸ்   எல்லாம்  வாங்கிட்டு  வரேன்என்று கூறிவிட்டு  வெளியே  சென்றான் .

ஆதிராவுக்கு   சுயநினைவு   வந்ததால்  ,  டாக்டர்  வந்து  அவளை  பார்த்து  செக் அப்  செய்து , நார்மல்   கூட்டிட்டு போங்க   என்று  கூறிவிட்டு  சென்றார் .

அப்பொழுது   ஜீவிதாவிடம்   நர்ஸ் ,” இவங்களோட   ஹஸ்பண்ட்   எங்க  ” என்று  கேட்டார் .

ஜீவித்தவும்   ஆதிராவும்   ஆச்சரியமாக   பார்க்க ,ஆதிரா ,”    ஹஸ்பண்ட்டா

நர்ஸ் ,” உன்  ஹஸ்பண்ட் அவர்  தான்  ராத்திரி  பூராவும்   கண்முழிச்சி  பாத்துகிட்டாரு  , உன்  மேல  ரொம்ப  அன்பு  மா  , உன்ன    ஹாஸ்பிட்டலுக்கு  கையில   தான்  தூக்கிட்டு  வந்தாரு  ” என்று  ஆரம்பித்து   அனைத்தையும்   கூறினார் . அவர்  கூறி முடிக்கவும்  ஆதவ்  உள்ளே  வரவும்   சரியாக  இருந்தது  ,  அப்பொழுது  நர்ஸ் ,” இதோ   உன்   ஹஸ்பண்டே   வந்துட்டாரு  ”  என்று  ஆதவ்வை  பார்த்து  சிரித்துவிட்டு   அங்கிருந்து  சென்றார்.

ஆதிரா  ஆதவ்வை  பார்த்ததும்   கோபத்தில்  பெட்டில்  இருந்து  எழும்பி  அவனை  பார்த்து  முறைத்துக்கொண்டே  அவன்  அருகில்  வந்து  அவனது  கன்னத்தில்   தன்   விரல்களை   பதித்தாள் .

ஆதவ்   கண்ணீர் மல்க   அவள் முன்பு   எதுவும்  பேசாமல்   அமைதியாக  நின்றான்  ,  ஆதிரா  ,” அவுட்  கெட்  அவுட் , தயவு  செஞ்சி  இங்கருந்து  போ   ” என்றாள்

அவனும்  எதுவும்  பேசாமல்  ஜீவிதாவிடம்   ரிபோர்ட்ஸ்  மட்டும்  மருந்துக்களை   கொடுத்துவிட்டு   , சோகமாக  சென்றான்.

அப்பொழுது   ஜீவித்தா ,”  ஆதி  ஏன்டி  அடிச்ச   பாவம்   டி , அவன்  தான்  உன்ன  ஹஸ்பிடல்ல   சேர்த்து   ராத்திரி  பகல்ன்னு  முழிச்சி  பார்த்துருக்கான்அவன் பண்ணினது  தப்பு  தான் ஆனாலும்   உனக்கு  அடிபட்ட  உடனே  விட்டுட்டு  போகலல     , உன்ன   அட்மிட்  பண்ணி  பாத்திருக்கான்ல   அதுவே  ரொம்ப   பெரிய  விஷயம்  டி  ,  நீ  கண்டிப்பா  ஒரு  தங்க்ஸ்  சொல்லித்தான்  ஆகணும்  ,  அந்த  நர்ஸ்  சொன்னது  கூட   உண்மை  தான்  நினைக்கிறேன்  ,அவங்க  பொய்  சொல்ல  வேண்டிய   அவசியம்  இல்லஎன்றாள்

பின்பு   ஆதிராவின்   இல்லத்தில்  ஜீவிதா   அவள்  கூடவே  இருந்து  பார்த்துக்கொண்டாள்  , அவளது  தாய்  தந்தையர்  வந்ததும்   அவர்களிடம்  விட்டு விட்டு  சென்றாள்  , ஆதிரா  , தன்  பெற்றோரிடம்  ,”  தான்  தவறி  கீழே   விழுந்து  விட்டதாக  மட்டும்  கூறியிருந்தாள்

அன்று  இரவு  ஆதிரா  , தன்  தோழி கூறியதையும்  , நர்ஸ்  கூறியதையும்   தன்  மனதில்  ஓட்டி  பார்த்துக்கொண்டிருந்தாள் , அவளை   அறியாமலே   ஆதவ்   மீது  ஒருவித  உணர்வு   அவளுக்கு   ஏற்பட்டது  , பின்பு  ஒரு வித  குழம்பிய   நிலையில்   கண்கள்  மூடி  தூங்கினாள்.

அடுத்தநாள்   கல்லூரியில்   கிளாஸ் ரூம்  கன்டீன்    கார்டென்  என்று  அவள்  போகும்  இடம்  எல்லாம்  சாரி  என்கின்ற  கார்டு  இருந்தது , முதலில்   கோபம்   வந்தாலும்    பிறகு  ஆதவ்வின்    செய்கையில்   அவளுக்கே  சிரிப்பு  வந்தது  ,  அவள்  ஆதவ்விடம்  சென்று  ,”  தங்க்ஸ்   ஆதவ்  என்  உயிரை  காப்பாத்துனதுக்கு  ” என்று   கூறிமுடிக்கவும் 

ஆதவ் ,”   லவ்  யு  ஆதிஎன்றான்

ஆதிரா   அதிர்ச்சியாக   பார்க்க  .

ஆதவ் ,”  உன்ன  நான்   எப்போ   சினிமா   தியேட்டர்ல   பர்தால   பாத்தேனோ  அப்பவே  எனக்கு  உன்னை  பிடிச்சிட்டு  , நீ  தான்னு  அப்போம்  எனக்கு  தெரியாது  ,அப்றோம்   ஹாஸ்பிட்டல்ல  என்று  ஆரம்பித்து  அனைத்தையும்  கூறி  ,  அவளிடம்  அவளது   செயின்னை   கொடுத்து  ,    லவ்  யு  ஆதிரா  ,  யோசிச்சி   நல்ல  முடிவா  சொல்லு  நாளைக்கு  நான்  உனக்காக  காத்துகிட்டு  இருக்கேன் ”  என்று  கூறிவிட்டு   சென்றான்

ஆதிரா  எதுவும்  கூறாமல்  அமைதியாக   தன்  இல்லம்   வந்து   ஆதவ்  கூறியதையே  யோசித்துக்கொண்டிருந்தாள் .

பொழுது   விடிந்த  பிறகு   ஆதிரா  ,” இன்னைக்கு  காலேஜ்  போனா  கண்டிப்பா  , அவன் கிட்ட  நாம  பதில்   சொல்லியே  ஆகணும்  என்ன  சொல்றது   ரொம்ப  குழப்பமா   இருக்கே  , ஹ்ம்ம்  இன்னைக்கு   போனாதான   சொல்லணும்  , காலேஜ்க்கே  போலனா, இது  தான்   சரி   இன்னைக்கு  நாம  காலேஜ்க்கு   போக  வேண்டாம்  , வீட்ல  உடம்பு  சரி  இல்லன்னு  சொல்லிரலாம் ”  என்று  முடிவு  செய்தாள்

காலேஜில்   ஆதவ்  ஆதிராவுக்காக   காத்துக்கொண்டிருந்தான்  , ஆனால்  வரவில்லை  என்பதால் , ஜீவிதாவிடம்  ஆதிராவை பற்றி  கேட்டு  , அவள்    இன்று  கல்லூரிக்கு   வர  வில்லை  என்பதை  தெரிந்து  கொண்டு  சோகமானான்   . 

ராஜ்  ,” டேய்  என் டா  சோகமா  இருக்க  , இப்போ  என்  அவ  காலேஜ்க்கு  வரல  அவ்வளவு  தான  , உன்ன  ஒன்னும்  புடிக்கலன்னு   சொல்லல  ,  இதுல  இருந்து  என்ன  தெரியுது  , அவளுக்கு   உன்ன  புடிச்சிருக்குடா  , என்ன  கொஞ்சம்  குழப்பமா  இருக்கா , காலேஜ்க்கு  வந்தா  கண்டிப்பா  பதில்  சொல்லணும்    அதான்  காலேஜ்க்கு  லீவ்  போட்ருக்கா  ,இதுக்கு  போய்   ஏண்டா   கவல  படுற  ,  ஆதிரா  கண்டிப்பா  உனக்கு ஒகே   சொல்லுவா  சரியா  ” என்று  அவனது  மனதை  தேற்றினான் .

இரவு   ஆதிரா   சாப்பிட்டுவிட்டு   தன்   அறைக்கு    தூங்குவதற்காக  வந்தாள்அப்பொழுது   ஆதவ்   அவள்  அறையில்  கட்டில்  மீது  படுத்துக்கொண்டு   ,”  ஹாய்   செல்லம்   என்னடா   நல்லா  சாப்ட்டியா  ” என்றான்

அதர்ந்து   போன  ஆதிரா  அவன்   அருகில்  வந்து  ,” ஏய்   நீ  இங்க  என்ன  பண்ற  , முதல்ல   என் பெட்  மேல  இருந்து  கீழ  இறங்கு  , இங்க  ஏன்  வந்தஎன்றாள்

ஆதவ்  கட்டிலில்  இருந்து  எழும்பி    ,”  இது  என்ன  கேள்வி  ,  நீ  ஏன்  காலேஜ்க்கு  வரல  அதான்   நான்  இங்க  வந்தேன்என்றான்

ஆதிரா ,”  அது  என் இஷ்டம்  , உன்கிட்டலாம்  சொல்ல  முடியாதுநீ  ஏன் இப்போம்  வந்த  அத  சொல்லு

ஆதவ் ,” இன்னைக்கு  நான்   உன்ன  என்கிட்ட  உன்    லவ்வ   சொல்லுன்னு   சொல்லிருன்தனா  இல்லையா   , நீ   என்   காலேஜ்க்கு   வரல  , அதான்  நான்  வரவேண்டியதா   போச்சி

ஆதிரா ,” இதுல  சொல்ல  வேண்டியது  என்ன  இருக்கு , எனக்கு  உன்னை  பிடிக்கல ,இங்க  இருந்து  கிளம்பு

உடனே  ஆதவ்   ,” அப்போ  சரி   நீ   ஒன்னும்  சொல்ல வேண்டாம்  என்  மாமனார்  கிட்டயே   பேசிக்கிறேன் ”  என்று   கூறி   வெளியே  போக  போனான்ஆதிரா  உடனே   தன்  அறையின்  கதவிற்கு   தாளிட்டு  , ” என்ன  பண்ற  , என்  அப்பாகிட்டலாம்  நீ  ஒன்னும் பேசவேண்டாம்    ” என்றாள்

ஆதவ்  ,”  என்ன   இது    உன்னோட  பெரிய  பிரச்சனையா   போச்சி  நீயும்  சொல்ல மாட்டிக்க  , என்னையும்  என்  மாமனார்கிட்ட   பேச கூடாதுன்னு   சொல்ற  என்ன  தான் பண்றது , சரிஎன்று  கூறி  மீண்டும்  கட்டில்  மீது  படுத்தான் .

பின்பு  ஆதிராவை   பார்த்து ,”  செல்லம்  ஏன்  நிக்குற  கால்  வலிக்க  போகுது  , வா  வந்து  உக்காரு  , எப்படியும்  நாளைக்கு   காலையில  கதவ  திறந்து தான   ஆகணும் , நீ  திறக்காட்டாலும்   உங்க  அப்பா தட்டியே  திறக்க வச்சிருவாரு  ,  ரெண்டு பேரும்   சேர்ந்து  போவோம்    அவரே  நம்ம  கல்யாணத்த     நடத்திருவாறு ”  என்றான்

ஆதிரா ,” சீ   இப்போம்   நீ   இங்க  இருந்து  போல  , நான்  ஏன்  அப்பாவை  கூப்பிடுவேன்  ” என்றாள்

ஆதவ் ,” அட  அவ்வளவு  அவசரமா  , நானும்  அத  தான்  சொல்றேன்கொஞ்சம்  வெயிட்  பண்ணுஎன்று  கூறிவிட்டு  ஆதவ்  தன்   ஷர்ட்டின்   மூன்று   பட்டன்களை   கழற்றினான்  ,  ஆதிரா ,” என்ன டா  பண்ற

ஆதவ் ,” வெயிட்  செல்லம்என்று  கூறிவிட்டு   தன்  தலை  முடியை  கலச்சிவிட்டு விட்டு   ,  பின்  ஆதிராவின்   தலை முடியையும்  கலச்சிவிட்டான்  ,  ஆதிரா ,” என்னடா  பண்ற  கைய  எடுடா ” 

ஆதவ் ,”  கோபப்படதா    செல்லம் , இப்போம்   மாமாவ  கூப்டு  , நாளைக்குலாம்  இல்ல  இப்போவே  கல்யாணம்   பண்ணிவச்சிருவாறுஎன்றான்

ஆதிரா ,” ப்ளீஸ்  ஆதவ்  , இங்க  இருந்து போ  என் அப்பாக்கு   தெரிஞ்சா  அவ்வளவு  தான் ”  என்றாள்

ஆதவ் ,” சரி  போறேன்  அதுக்கு  முன்னாடி   மூணே  மூணு   வார்த்த  ,   லவ்  யு  மட்டும்  சொல்லுஎன்றான்

ஆதிரா ,” முடியாது

ஆதவ் ,”  அப்போ  சரி  மாமாஎன்று  கத்தினான்

உடனே  ஆதிரா  அவனது   வாயில்  தன்   கையை   வைத்து  மூடினாள்  , பின்  ,” கத்தாத

மெதுவா  ப்ளீஸ்என்றாள்

ஆதவ்அவளை   ஒருமாதிரியாக   பார்க்க  , உடனே  ஆதிரா  தன்  கையை  அவன்  வாயில்  இருந்து  எடுத்தாள் 

ஆதவ் ,”  நான்   சொன்னதை  நீ   சொல்ற  வரைக்கும்  நான்  இங்க  இருந்து   எங்கயும்  போகமாட்டேன்என்றான்

ஆதிரா  ,” சாரி  சொல்றேன்

ஆதவ் ,” ஹ்ம்ம்   குட்  கம்  ஆன்  சொல்லு

ஆதிரா ,”     லவ்  யுஎன்றாள்

ஆதவ் ,”  என்ன  சொல்ற  , எதோ  காய்கறிகாரன்  கிட்ட  கத்திரிக்கா  கிலோ   எவ்வளவுன்னு  கேட்குற  மாதிரி  இருக்கு  , இங்க  பாரு  நீ  சொன்ன  மறு  நிமிஷம்   நான்  பதில்  பேசாம  இங்க  இருந்து  போயிருவேன், நல்லா       ரொமாண்டிக்கா  என்  பக்கத்துல   வந்து   என் கண்ண   பார்த்து    சொல்லுஎன்றான்

ஆதிரா  கொஞ்சம்  நேரம்  தயக்கத்திற்கு பிறகு  அவன்  அருகில்  வந்து  அவன்  கண்ணை  பார்த்து ,” ஆதவ்     லவ்  யுஎன்று  கூறினாள் ,அந்த  நொடி   தனக்குள்   எதோ  உணர்வை   ஏற்படுத்த  ,  தன்   கண்களை  இருக்க  மூடிக்கொண்டாள்

அதை  பார்த்த   ஆதவ்  ,  அவள்  கன்னங்களை   தன் கையில்   ஏந்திக்கொண்டு  , தன்  இதழ்  கொண்டு   அவள்  இதழை  மூடினான் , தனது   முத்தம்   என்னும்   பூட்டை  கொண்டு  அவளது  இதழை  தாளிட்டான்ஆதவ்வின்  இந்த  திடீர்  செய்கையில்   ஆதி   அதிர்ந்து  , போய்   தன்  கண்களை  வெறித்து  பார்த்தாளே  தவிர   அவனை  தடுக்க  அவளது  கைகளுக்கு   அவள்  உத்தரவு   போட   வில்லை .

பின்பு   ஆதவ்   அவளை  பார்த்து   கண்ணடித்துவிட்டு   ,”  பேச  மாட்டேன்னு  தான்  சொன்னேன்  , முத்தம்   குடுக்க  மாட்டேன்னு   சொல்லலஎன்று  கூறி   ஜன்னல்  வழியாக  வெளியே  சென்றான்.

அவன்   செய்த   தீண்டலில்    வெட்கம்  பொங்கி   கன்னங்கள்   சிவந்து   தன் முகத்தை  மூடிக்கொண்டாள்.

மழையின் சாரலில் மழையின் சாரலில்

நனைய தோன்றுது நடுங்க தோன்றுது

பிழைகள் என்றே தெரிந்தும் கூட

பிடித்துப் போனது புதையல் ஆனது

விருப்பம் பாதி தயக்கம் பாதியில்

கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்

அலைகள் அடித்தே கடலில் விழவா

துரும்பை பிடித்தே கரையில் எழவா

இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை

அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை

 

மழையின் சாரலில் மழையின் சாரலில்

நனைய தோன்றுது நடுங்க தோன்றுது

பிழைகள் என்றே தெரிந்தும் கூட

பிடித்துப் போனது புதையல் ஆனது

Sometimes I Need Your Love

Sometimes I Need Your Hug

What Would I do Now

What Would I do Now

Sometimes I Need You

Sometimes I Feel You

What Would I do Now

What Would I do Now

மழையின் சாரலில் மழையின் சாரலில்

நனைய தோன்றுது நடுங்க தோன்றுது

 

யார் யாரோ பூச்சூட பூமாலை நான் வாங்க

நான் சூடும் பூமாலை நாள் பார்த்து யார் வாங்க

கண் பார்த்து நீ பேசும் போதெல்லாம் நான் எங்க

மண் பார்த்து என்னோடு நீ பேசும் நாள் காண்க

வரைந்து பழகும் நிறங்கள் புழங்கும்

ஓவியன் விரலின் கிறுக்கல் இதுவா

நடந்து பழகும் விழுந்து அழுகும்

குழந்தை வயதின் சறுக்கல் இதுவா ஆமா ஆமா

இருவர் சேர்ந்து ஒருவர் ஆனோம்

தெரிந்து கொண்டே தொலைந்து போனோம் வா…

 

விருப்பம் பாதி தயக்கம் பாதியில்

கடலில் ஒரு கால் கரையில் ஒரு கால்

அலைகள் அடித்தே கடலில் விழவா

துரும்பை பிடித்தே கரையில் எழவா

இதுவரை இது போலே இருமனம் கொண்டு தவித்ததில்லை

அதிலுமே எனக்காக திருமணம் வரை நினைத்ததில்லை

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

பழைய   நினைவில்  மூழ்கிய  ஆதவ்   தன்  நிலைக்கு  வந்தான்  ,  பின்  ஷவரை   நிறுத்திவிட்டு   ,  இரவு  உடையை  மாற்றிக்கொண்டு  தன்  பெட்டில்  வந்து  படுத்து  நிம்மதியாக  தன் கண்களை  மூடி   தூங்கினான் .

காதல்  யாருக்கு   வரும்  எப்பொழுது  வரும்  என்று  யாருக்கும்  தெரிவதில்லை   ஆனால்  அது  வந்து  விட்டால்  , எப்படி  பட்டவரையும்   தன் வசம்  வைத்துகொள்ளும்.

 

 

 

 

நினைவுகள் 12

      “தவிக்கிறேன்  நீ இல்லை என்றால்

     வேர்க்கிறேன்  நீ  என் அருகில் வந்தால்

   சிலிர்க்கிறேன்  உன் ஆண்மை  முன்னால்

   சிதைகிறேன்  உன் பார்வையின்  பொழுது

  கரைகிறேன்  உன்  புன்னகையின்  பொழுது

 தொலைகிறேன்  உந்தன்  பேச்சினில்  முன்னால்

     மயங்குதே   என்   நாணமும்  உன்னால்

       தோற்க்குதே  என்  பெண்மையும் உன் அழகால்

 

ஆதிராவுக்கோ   அன்றிரவு   தூக்கம்  வரவே  இல்லை  ,  கண்களின்  ஓரம்  கண்ணீர்  மட்டும்  தான்  வந்தது  , துக்கம்   தன் தொண்டையை  அடைக்க  தன்  தாயின்  அறைக்கு  சென்றாள்.

காயத்ரி ,” என்னடா  ஏன் அழற

”  அம்மா  ”  என்று  கூறி அழுதுகொண்டே   தன்  தாயை  இருக்க  அணைத்துக்கொண்டாள்  பின்  ,”  நீங்க  சரியா   சொன்னீங்க    மா  எண்ணலா   தாங்கிக்க   முடியலமா  ,  ஆதவ்வ   என்னால   இன்னொரு  பொண்ணு  கூட   வச்சி  பாக்க  முடியல மா   அவர  நா  உயிருக்கு  உயிராக   லவ்  பண்றேன் , ஏன்  மா   அவன்   இன்னொரு  கல்யாணம்  பண்ணிக்க  போறான்என்று  கூறி   தேம்பி தேம்பி  அழுதாள்.

காயத்ரி ,”  இதுக்கு   நான்   என்னடா  பதில்  சொல்றதுநான்   ஒன்னு  கேட்பேன் , ஆதவ்  தம்பி   ஏன்  இன்னைக்கு  இப்டி  நடந்துகிட்டாரு   “

ஆதிரா  ,” மா   இன்னைக்கு  கார்த்திக்கும்   ஆதவ்க்கும்   ரொம்ப  சண்டையாடிச்சி  “

என்ன  சொல்ற

ஆதிரா  இன்று   என்னவெல்லாம்  நடந்ததோ  அதை  அனைத்தையும்   தன்   தாயிடம்   கூறினாள்.

கார்த்திக்  ஏன்  அப்டி  நடந்துகிட்டான்  “

பைத்தியக்காரன்  அவனால  இன்னைக்கு   ரொம்ப  பிரச்சனையாயிடுச்சி

நீ  ஏன்  ஆதவ்  தம்பிக்கு  சப்போர்ட்   பண்ணாம  கார்த்திக்கு  சாதகமா  பேசுன

என்னமா   பண்றது  எனக்கு  வேற  வழியில்ல     “

என்ன   வழியில்ல  நீ   இன்னும்  பழசையே  நினைச்சிட்டு  இருக்காதஎல்லாம்  என்ன  சொல்லணும்  நீ  டைவர்ஸ்  கேக்கும் போதே   நான்   உன்கிட்ட  கண்டிப்பா  நடந்திருக்கணும் ,   இங்க  பாரு  ஆதிரா  உங்க  அப்பா  சாவுக்கு  அவரு  தள்ளிவிட்டது   காரணம்  இல்ல  ,  அவரு  ஹார்ட் அட்டாக்ல   இறந்து  போனாரு  ,  போலீஸ்   கோர்ட்  எல்லாரும்  முடிவு பண்ணி  அவங்களே   ஆதவ்  மேல  எந்த  தப்பும்  இல்லன்னு  விடுவிச்சாங்கஇன்னும்  நீ  அதையே  நினச்சிட்டு  இருக்காத

எனக்கு  தெரியுமா  ஆதவ்  மேல   எந்த  தப்பும்  இல்ல  தான்   ,  ஆனா  நாங்க  லவ்  பண்ணினனாலததான  நமக்கு   இவ்வளவு  பிரச்சனையும்அப்பா  நம்மள  விட்டு   போய்  ,உங்களுக்கு   இந்த  நிலைமை  , இதெல்லாம்   எனக்கு  நானே  குடுத்துக்கற  தண்டன  , சரி  மா  இன்னைக்கு  ஒருநாள்  மட்டும்  நான்  உங்க  கூட  தூங்குறேன்  மா

சரி  வா

ஆதிரா  தனக்குள்  ,”  எப்படிலாம்   என்கிட்ட   அன்பா  இருந்த  ,  எப்படி  ஆதவ்   உன்னால  என்கிட்ட  இப்படி  பேச  முடிஞ்சிதுஉன்ன  தவிர  என்னல  வேற  யாரையும்  நினைச்சிகூட  பாக்க முடியாது   ஆதவ்ஆனா  நீ   மட்டும்  கீர்த்திய  கல்யாணம்  பண்ணிக்குவேன்னு  ஈஸியா  சொல்லிட்டஎன்ன  எப்படிலாம்  லவ்  பண்ணின, அன்னைக்கு   காலேஜ்ல  மட்டும்  நான்  உன்ன  பிடிக்கலைன்னு   சொல்லிருந்தா  நீ   என்  லைப்ல  வந்திருக்கவே  மாட்டல  ” என்று  தன்  கடந்த  கால  நினைவுக்குள்   மூழ்கினாள்.

@@@@@@@@@@@@@@@@@@@

ஆதிரவை   ஆதவ்  அவளது  அறையில்   வந்து  சந்தித்த  பிறகு அடுத்த நாள்   கல்லூரியில்    , ஆதவ்   ஆதிராவிடம்   பேசுவதற்காக   வந்தான்  அப்பொழுது   ஆதிரா   , அவனை  கண்டுகொள்ளாமல்   தன் தோழிகளிடம்   பேசிக்கொண்டிருந்தாள்  , இவ்வாறே   அவள்   அவனை   தவிர்க்க   , ஆதவ்   அவளது   கையை   பிடித்துக்கொண்டு    கிளாஸ்  ரூம்க்குள்   அழைத்து  வந்து   , அவளது   இருக்கைகளையும்    பிடித்துக்கொண்டு  ,”  ஏன்  என்ன  அவாயிட்   பண்ணற   ,  என்ன  உனக்கு  பிடிச்சிருக்கா  , இல்லையா   இப்போவே  எனக்கு  முடிவு  தெரியனும்   அவளது   கைகளை   அழுத்தி  பிடித்தான்

ஆதிரா ,” ஆஹ்”  என்று  கத்த

ஆதவ்  உடனே   கைகளை   எடுத்துவிட்டு  ,” என்ன ஆச்சி   ” என்றான்

ஆதிரா   புன்னகைத்துவிட்டு   ,”  ஒன்னும்  இல்லையே ”  என்று  கூறினாள்

ஆதவ்   கோபமாக   கீழே  பார்க்க   , ஆதிரா   அவன்  அருகில்  வந்து , ”   லவ்  யு  ஆதவ் ”  என்று  கூறி  அவன்  கன்னத்தில்  தன்  இதழ்   பதித்தாள் , பின்பு   அங்கிருந்து  செல்ல  போனவளின்  கையை    , ஆதவ்    பிடித்தான்   , ஆதிரா ,” ஆதவ்  கைய  விடு  யாராவது   வர  போறாங்கஎன்றாள்

ஆதவ் ,” வரட்டும்  என்னகென்ன ”  என்று   தன் பக்கம்  இழுத்து   தன்னோடு  சேர்த்துக்கொண்டு   தன்  மறு  கன்னத்தை  காட்டி  , ” இங்க  கடையாத  ” என்றான் .

ஆதிரா  அவனை  தள்ளிவிட்டுவிட்டு   ஓட  அவனும்  அவள்  பின்னால்   வந்து   அவளை  வளைத்து   பிடித்து  தன் கரங்களில்  ஏந்திக்கொண்டு    வட்டமிட்டான் .

இவ்வாறு  அவர்களின்  காதல்   இனிதாய்   சென்று  கொண்டிருந்தது

அப்பொழுது  ஒரு  நாள்   ஆதவ்   ஆதிராவிடம்   ,”  நாளைக்கு   எங்க  அம்மாக்கும்   அப்பாக்கும்   வெட்டிங்  டே   ஸோ   வீட்ல   பார்ட்டி  இருக்கு   ஏழு  மணிக்கு   மறக்காம  வந்திருஎன்றான் .

ஆதிரா   அவ்வாறே   ஆதவ்வின்   வீட்டிற்கு   வந்தாள்   ,  கடல்   நீல   நிறத்தில்     சல்வார்     அணிந்து   பார்ப்பதற்கு   ரோஜா    மலரே    செடியில்   இருந்து  இறங்கி  வந்ததை   போல்   காட்சி   அளித்தாள்  .

ஆதவ்   வீட்டின்   வாசலில்   நின்று   கொண்டு   ,  தவை   தட்டினாள்   யாரும்   திறக்கவில்லை   என்பதால்காலிங்  பெல்லை   அழுத்தினாள்   அப்பொழுதும்   யாரும்  வர  வில்லை   என்பதால்  , மீண்டும்   கதவை   வேகமாக   தட்ட  முயற்சிக்கும்   பொழுது  , கதவு   திறந்திருந்தது  , பின்பு   அவள்  ஒரு  வித  தயக்கத்தோடு   உள்ளே  வந்தாள்  ,அங்கே  யாரும்  இல்லை   பார்ட்டி   நடப்பதற்கு   எந்த   அறிகுறியும்   இல்லை  என்பதால் ,   கொஞ்சம்  தயக்கத்தோடே,” ஆதவ்  ஆதவ்  ” என்று  அழைத்தாள்  , அப்பொழுது   அவள்  மேல்  ரோஜா  இதழ்கள்   வந்து  விழுந்தது   , அவள்  ஆச்சரியத்தில்   மேலே  பார்க்க   ஆதவ்  ,  கிட்டார்  வாசித்து   பாடிக் கொண்டே   மாடிப்படியில்   இருந்து  கீழே  இறங்கி  வந்தான் .

இதழின் ஒரு ஓரம் சிறிதாய் அன்பே

நிஜமாய் இது போதும் சிரிப்பை அன்பே

என் நாடியை சிலிர்க்க வைத்தாய்

என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்

என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்

 

சொல்லு நீ I love you

நீதான் என் குறிஞ்சிப் பூ

என் காதல் என்றும் true

will make sure you never feel go

 

Oh எல்லாம் மறந்து உன் பின்னே வருவேன்

நீ சம்மதித்தால் நான் நிலவையும் தருவேன்

உன் நிழல் தரை படும் தூரம் நடந்தேன்

அந்த நொடியை தான் கவிதையாய் வரைவேன்

 

Oh பெண்ணே என் கண்ணே செந்தேனே வா முன்னே

என் உயிருக்குள் பெயரை வைத்தாய்

 

என் நாடியை சிலிர்க்க வைத்தாய்

என் இரவெல்லாம் வெளிச்சம் தந்தாய்

என் ஆண் கர்வம் மறந்தின்று உன் முன்னே பணிய வைத்தாய்

 

வெள்ளை  நிறத்தில்   ஷர்ட்  அணிந்து   கையை   தன்  முழங்கை   வரை  மடித்து  விட்டு  ,  கருப்பு  நிற  ஜீன்ஸ்  அணிந்து   பார்ப்பதற்கு   மிகவும்   கேம்பிரமாகவும்   தோரணையாகவும்    இருந்தான் .

ஒருவழியாக   பாடி  முடித்தவன்   அவள்  முன்  மண்டியிட்டு

ஆதவ்  ,” ஹாய்   ஏஞ்சல்   வெல்கம்    டு மை   ஹோம்  ”  என்றான்

ஆதிரா ,” ஆதவ்   என்ன  இதெல்லாம்  ,  வீட்ல  யாரையுமே  காணும்  , பார்ட்டின்னு   சொன்ன  , ஆனா  அப்படி  எதுவும்  தெரியல

ஆதவ்சிரிக்க

ஆதிரா ,”  ஆதவ்  ஒன்னு  சொல்லு  , பொய்   சொன்னியா ”  ஆதவ்  ஆமா  என்று  தலையை   ஆட்ட

ஆதிரா ,” வீட்ல  யாரும்  இல்லையா ” 

மறுபடியும்  ஆதவ்  ஆமா  என்று  தலையை   ஆட்ட

உடனே   ஆதிரா  ,” சரி  நான்  போறேன்என்று  கூறி  கோபமாக  கிளம்ப

ஆதவ்  ,” ஹ்ம்ம்ம்ம்   ஒஹ் ஒஹ் அன்பே அன்பே

ஒஹ் ஒஹ் செம்பூவே என்பேன்

ஒஹ் ஒஹ் அன்பே என் அன்பே

ஒஹ் ஒஹ் ஒஹ் ஓஹ்ஹ்ஹ்ஹோ

உந்தன் சிரிப்பினால் என்னை சிதைக்கிறாய்

அன்பே அன்பே

கொஞ்சும் சினுங்களில் என்னை  துலைக்கிறேன்

அன்பே அன்பே

ஒஹ் ஒஹ் ஓஹ்ஹ்ஹ்ஹோ

அன்பே அன்பே

ஒஹ் ஒஹ் செம்பூவே என்பேன்

உந்தன் வெப்பப்பார்வையில்  எரிந்தே போகிறேன்

அன்பே அன்பே

மீண்டும் வருகிறேன் பீனிக்ஸ் பறவை போலே

அன்பே அன்பே

ஒஹ் ஒஹ் ஓஹ்ஹ்ஹ்ஹோ

அன்பே அன்பே

ஒஹ் ஒஹ் செம்பூவே என்பேன்

உந்தன் கால்களில்  கொலுசாகவும்  மாறுவேன்

அன்பே அன்பே

மறுத்தால் மண்ணாக  ஜனம் பெறுவேன்

உந்தன் பாதங்களை  தாங்கிட

அன்பே அன்பே

ஒஹ் ஒஹ் ஓஹ்ஹ்ஹ்ஹோ

அன்பே அன்பே

ஒஹ் ஒஹ் செம்பூவே என்பேன்

உந்தன் பேச்சினில் நான் கரைகிறேன்

அன்பே  அன்பே

எல்லாம் நீயே என்பேன் …

உந்தன் மௌனம் என்னை  வதைக்கிறது

அன்பே அன்பே

இடம் கொடுத்தால் வளையலாக கூட மாறுவேன்

அதன் ஓசைக்கு நான் ஸ்ருதி சேர்ப்பேன்

அன்பே அன்பே

ஒஹ் ஒஹ் ஓஹ்ஹ்ஹ்ஹோ

அன்பே அன்பே , செம்பூவே என்பேன்

உன்னை  காண  துடிக்கிறேன்

கண்டால்  உறைந்து போகிறேன்

ஒஹ் ஒஹ் அன்பே அன்பே

விழியோரம் நீயும் பார்க்கிறாய்

நானோ சொக்கி போகிறேன்

அன்பே அன்பே

என் வாழ்க்கை நீ என்பேன்

அன்பே அன்பே

ஒஹ் ஒஹ் ஓஹ்ஹ்ஹ்ஹோ

அன்பே அன்பே, செம்பூவே என்பேன்

உந்தன் இதழ் ஒர புன்னகையின் முன்பு

என் மனம்  அலைபாய்கிறது

அன்பே அன்பே

உன்னிடம் பேச உன் முன் வந்தேன் வெடவெடுத்து

மயங்கி உன் கைகளில் விழுந்தேன்

கண்விழித்து பார்த்தேன் 

சின்ன புன்னகையில் உன் காதலை கூறினாய்

அன்பே அன்பே

உன்னிடத்தில் என் உயிரை கொடுத்துவிட்டேன்

இனி இருவரும் நம் நேசத்தை சுவாசமாய் சுவாசிப்போம்

அன்பே அன்பே

ஒஹ் ஒஹ் ஒஹ்

அன்பே அன்பே  செம்பூவே என்பேன்”

என்று   ஆதிராவிற்க்காக  தன்  கை  பட  எழுதி   இசையமைத்த   பாடலை  பாடினான் . இந்த  பாடலை  ஆதவ்  ஏற்க்கனவே   கல்லுரியில்   அனைவரின்  முன்பு  பாடி  இருக்கிறான் .

இது  தனக்காகவே  ஆதவ்   பாடும்  பாடல்  என்பதால்  ஆதிராவிற்கு  இது  மிகவும்  பிடித்த  பாடல்

அவள்  அவனது  இசையில்   மெய்   மறந்து  லயித்துக்கொண்டிருக்க

ஆதவ்  அவள்  கையை  பிடித்து   தன்   பக்கம்  இழுத்து    , தன்  கரங்களில்  ஏந்தினான் .

ஆதிரா ,” ஆதவ்  என்ன  பண்ற  , வீட்ல  உள்ளவங்க   யாரும்  வந்திர  போறாங்க  ,  தப்பா   நினைப்பாங்க

ஆதவ் ,” யாரும்  வர  மாட்டாங்க  , எல்லாருக்கும்   லீவ்   குடுத்துட்டேன்  , நாளைக்கு  தான் வருவாங்க  , இங்க  நீயும்  நானும்  மட்டும்  தான் , உன்கிட்ட  ஒன்னு  காட்டனும்என்று  கூறி   தன்  கையில்   ஏந்தியவாறே   வீட்டின்   பின்புறம்    ஸ்விம்மிங்  பூல்   பக்கம்  அழைத்துச்சென்றான் .

ஆதிரா  ,” என்ன  பண்ற  ஆதவ்  ”  என்று   பார்த்தவள்   ஆச்சரியத்தின்    உச்சத்தில்   இருந்தாள்  அங்கே  ஒரு   போர்ட்டில் ,” சின்ன  சின்ன  அலங்கார   விளக்கால்    ,”   லவ்  யு   ஆதிரா  என்று  எழுதிருந்தது  “.

ஆதிரா   ஆதவவை   சுற்றும்  முற்றும்  தேட  , அவன்  சுவற்றின்   மீது  நின்றுக்கொண்டு  ,”ஆதிரா   ஐ  லவ்  யு  ”  என்று  கத்தினான் .

ஆத்வ்வின்   இந்த  செய்கையில்   உள்ளம்  நெகிழ்ந்த  ஆதிரா   ஓடி  சென்று  அவனை  இருக்க  அணைத்துக்கொண்டாள் ,  ஆதவ்   அவளை  அணைத்த  வாரே   துக்கி   வட்டம்யிட்டான்.

அதிரா   ஆதவ்வை    பார்க்க   ஆதவ்  ,” யஸ்     லவ்  யு  ஸோ  மச் ”  என்று  கூறி  அவளது  நெற்றியில்   தன் இதழ்  பதித்தான் .

பிறகு   ஸ்விம்மிங்  பூல்   பக்கத்தில்   உட்கார்ந்து   கொண்டு   ,இருவரும்   பேசிக்கொண்டிருந்தனர் , அப்பொழுது   ஆதவ்  , ”  உனக்கு   ஒன்னு  குடுக்கணும்  மறந்தே  போய்ட்டேன்என்று  கூறி   தன்  பாக்கெட்டில் இருந்து   செயின்னை   எடுத்து  அவள்   கழுத்தில்    போட்டுவிட்டான்  அது  சின்ன  சின்ன  ஸ்டார்களால்   வடிவைமைக்கப்பட்டு  ,  நடுவில்  டாலர்  கொடுக்க பட்டிருந்தது  டாலர்  ஹார்ட்  ஷேப்பில்  கொடுக்கப்பட்டு  அதில்  நிலாவும்  சூரியனும்   ஒன்றோடு  ஒன்று  சேர்ந்திருப்பது   போல்  வடிவமைக்கப்படிருன்தது      , பின்பு  அவளை   தன்னோடு  அணைத்துக்கொண்டு  ,” இந்த  செயின்   எப்போதும் உன்   கலுத்துலேயே   இருக்கணும் , இந்த   செயின்  மாதிரி  தான்   நம்மளும்  ”  என்றான்

ஆதிரா  ,”  எப்படி  “

ஆதவ்   செயின்னை   காட்டி  ,”  இந்த  சூரியன்  தான்   நான்   ஆதவன்   ,  இந்த  நிலாதான்  ஆதிரா  , நம்ம  ரெண்டு  பேரையும்  நம்மளோட  காதல்  ஒன்னு  சேர்த்திருக்கு   என்றான் .

ஆதிரா  ,”  இந்த  ஸ்டார்ஸ்

ஆதவ்  புன்னைகைத்துகொண்டே  அவள்  காதில்  ,” நம்மளோட  குழந்தைங்கஎன்றான்

ஆதிரா  ,”  இத்தன   குழந்தைங்களா  “

ஆதவ் ,” ஆமா  ,  உன்  கூட  நூறு    வர்ஷம்  சந்தோஷமா   வாழணும்  ,    ”  என்று  கூறி  அவளை  தன்னோடு   அணைத்துக்கொண்டான்

ஆதிரா ,” தங்க்ஸ்   ஆதவ்

ஆதவ் ,” நோ  தங்க்ஸ்   செல்லம்    உன்கிட்ட  இன்னொரு  மேட்டர்  காட்ட  போறேன்  , உனக்கு  பிடிக்கும்ன்னு   நம்புறேன்  ” என்றான்

ஆதிரா ,” மறுபடியுமா

ஆதவ் ,” வெயிட்  ” என்று  கூறி   தன்  ஷர்ட்  பட்டன்னை   கழற்ற   ஆரம்பித்தான்   , ஆதிரா  வெக்க பட்டுக்கொண்டு    என்ன  பண்ற  ஆதவ்  என்று  கூறி   வேறு  பக்கமாக    திரும்பினாள்  ,  அப்பொழுது    ஆதவ்  கையை  பிடித்து  தன்  பக்கம்  திருப்பி   பாரு   என்றான் , ஆதிரா  தன்  கண்களை   மூடிக்கொண்டு  ,”முடியாது  ஆதவ்  ஏன்  இப்படி   பண்ற  எனக்கு  ஒரு  மாதிரியா   இருக்குஎன்றாள்

ஆதவ் ,”  இப்போம்    பாக்க  போறியா  இல்லையா

ஆதிரா  அவனது  வற்புறுத்தலுக்கு   இணங்கி  மெதுவாக   தன்  கண்களை  திறந்து  பார்த்தாள்  , அதை  பார்த்து  அவளது  கண்கள்  நீரால்  நிரம்பியது  ,  ஆதவ்  ஆதிராவை   தன்  நெஞ்சில்   சுமப்பதற்க்கு   ஆதாராமாக   ,”  அவளது  பெயரை  ஆதிரா  என்று   டேட்டு  குத்திக்கொண்டிருந்தான்  .

ஆதவ்  ,  ஆதிராவின்   கண்களை   துடைத்து  ,” ஏன்  அழ

ஆதிரா  ,      டட்டு  குத்தப்பட்ட   இடத்தை   தொட்டு  ,” ரொம்ப  வலிக்குதாஎன்றாள்

ஆதவ் ,”இதுக்கா   அழற  , உனக்காக   நான்   பண்ற   எதுவும்  எனக்கு   வலியில்லை  ,  எல்லாமே   எனக்கு   சந்தோஷம்  தான்  அழக்கூடாதுஎன்றான் .

ஆதிரா  ,  அவனை   பார்த்துவிட்டு  ,  டட்டு  குத்தப்பட்ட   இடத்தில்   தன்   இதழ்  பதித்து  அவன்  இதயத்துக்கு   நீங்கா  முத்திரை   குத்தினாள்  , பின்பு  அவள்   அவன்  கன்னத்தில்   இதழ்  பதித்துவிட்டு  அவன்  மார்பில்   தஞ்சம்  அடைந்தாள் .

அவளது   கண்ணீர்  துளிகள்  அவனை  தீண்ட   , அவன்  அவளது  முகத்தை  தன்  கையில்   ஏந்தி  , அவளது   இரு  கண்களிலும்   வழியும்   கண்ணீரை   தன்  முத்தத்தால்  துடைத்தான்ஆதி   என்னைக்கும்   நீ  அழக்கூடாது  ,  நீ  என்  அம்முடிஎன்றான்

ஆதிரா ,”  அம்மு  வா  “

ஆதவ் ,”  ஆமா  ” என்று  கூறி  அவள்  கன்னத்தை    கிள்ளினான்

ஆதிரா ,” சரி  அப்படினா  , இனிமே  உன்ன  நான்  ஆதவன்ன்னு  கூப்டுரேன்  ” என்றாள்

ஆதவ் ,” நோ  அது   மட்டும்  வேண்டாம்  ப்ளீஸ்

ஆதிரா ,”  தனா  எப்படி  இருக்கு , இல்ல  இல்ல  தனு  okay “

ஆதவ் ,”  ஹ்ம்ம்   சரி , என்ன  டி  இது  தனா   தனுன்னு “

” ஒரு  கதையில  படிச்சேன்  ஹீரோ  பேரு  தனா  , அந்த  ரோல்  எனக்கும் ரொம்ப  புடிச்சிருந்தது “

“ரோல்  மட்டும்  தான ” என்று  கூறி  சிரிக்க

ஆதிரா  அவனை  அடித்தாள்

இப்படி   இரண்டு  பேரும்  பேசிக்கொண்டிருக்க  ,  திடிரென்று    மழை  பொழிய   ஆரம்பித்தது  , இருவரும்  நன்றாக   நனைந்து  விட்டனர்   பின்  வீட்டிற்க்குள்   ஆதவ்வின்   அறைக்கு    வந்தனர்   ,   மழையில்   நனைந்ததால்   ஆதிரா  குளிரில்   ஆட  அதை  பார்த்த  ஆதவ்   அவளது  கையை   தன்   கையோடு   சேர்த்து   நன்றாய்   தேய்த்தான்  ,  அந்த  நொடி    தன்னவன்   ஏற்படுத்திய   ஸ்பரிசத்தில்   ஆதிரா  சற்று  விலக  , ஆதவ்   தன்னவளை   தன்னோடு   இன்னும்   நெருக்கமாக   சேர்த்துக்கொண்டு  , கன்னத்தில்   முத்தமிட்டான் ,

கண்ணழகா, காலழகா,

பொன்னழகா, பெண் அழகா

எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா

பெண் கைகள் கோர்த்து கொள்ளும் விதம் அழகா

 

உயிரே உயிரே உனைவிட எதுவும்

உயரில் பெரிதாய் இல்லையடி

அழகே அழகே உனைவிட எதுவும்

அழகில் அழகாய் இல்லையடி

 

எங்கேயோ பார்க்கிறாய், என்னென்ன சொல்கிறாய்

எல்லைகள் தாண்டிட மாயங்கள் செய்கிறாய்

 

உன்னக்குள் பார்க்கிறேன், உள்ளதை சொல்கிறேன்

உன்னுயிர் சேர்ந்திட, நான் வழி பார்க்கிறேன்

 

இதழும் இதழும் இணையட்டுமே

புதியதாய் வழிகள் இல்லை

இமமைகள் மூடி அருகினில் வா

இதுபோல் எதுவும் இல்லை

 

உன்னகுள் பார்கவா, உள்ளதை கேட்கவா

என்னுயிர் சேர்ந்திட, நான் வழி சொல்லவா

 

கண்ணழகே, பேரழகே,

பெண் அழகே, என்னழகே

 

உயிரே உயிரே உனைவிட எதுவும்

உயரில் பெரிதாய் இல்லையடி

அவன்    அவளது  இதழை   தீண்டும்   நேரத்தில்   அவள்    வெட்கத்தில்   திரும்ப  , பின்னால்  இருந்து  வந்து  , அவளது  தோள்களை  பற்றிக்கொண்டவன்   ,  அவளது   பின்  கழுத்தில்   உள்ள   கூந்தலை   நீக்கிவிட்டு   தன்   இதழ்களை  கொண்டு   தீண்டினான்  ,  பின்   அவளை  தன்  பக்கம்  திருப்பி  ,  தன்  இதழை  கொண்டு   அவளது   இதழை   மூடினான் தன்னவன்   எல்லை  தாண்டுவதற்குள்   ஆதிரா  ,”  ஆதவ்   இப்போ  இதெல்லாம்   வேண்டாம்என்று  தன்  மெல்லிய  குரலில்  கூறஎங்கோ  விண்ணில்  பறந்து  கொண்டிருந்தவன்   தன்னிலை  அடைந்து   தன்னவளின்   தயக்கம்   அறிந்து   புன்னகைத்து  , அவளது  உச்சில்   முத்தமிட்டு  தன்  கண்களை  சிமிட்டி   ,” அவளை  புரிந்து  கொண்டதாக  ”  செய்கை  செய்தான்தன்னிடத்தில்    தஞ்சம்   அடைந்தவளை   தன்  நெஞ்சோடு  அணைத்துக்கொண்டான் .

இவ்வாறு   இவர்களது   காதலும்   நாளுக்குநாள்  மலர்ந்துக்கொண்டிருக்க  ,  காலமும்  இனிதாக  ஓடியது  , ஆதிராவின்   உத்தரவின்   பெயரில்   ஆதவ்வும்   ஒருவழியாக   தனது   அரியர்ஸ்சை   பத்தில்  இருந்து   ரெண்டுடாக   குறைத்தான் , மீதம்   ஒன்று  மட்டும்  இருக்க  தன்  கல்லுரி  படிப்பை   முடித்தான்அந்த  ஒரு அரியரை   மட்டும்  எப்படியாது   கிளியர்  பண்ண  மிகவும்  பாடுப்பட்டுக்கொண்டிருந்தான்    . இந்த  நிலையில்  காலப்போக்கில்   ஆதிராவும்   தன்  இறுதியாண்டை   முடித்து   எக்ஸாம்  ரிசல்ட்க்காக   வெயிட்  பண்ணிக்கொண்டிருந்தாள்.

அப்பொழுது   தான்   அவர்களது   வாழ்க்கையில்   புயல்  வீச  துடங்கியது   , முதலில்  அது  ஆதவ்வின்  அத்தை   மகள்  கீர்த்தி   மூலமாக   வீசியது  , அவளுக்கும்   ஆதவ்வுக்கும்   திருமணம்  என்று    வீட்டில்  பேச்சி  வார்த்தை  நடந்தது , ஆனால்   நம்  ஆதவ்வை  பற்றி  தான்  தெரியுமே  , அவன்  பிடிவாதமாக   கீர்த்தியை   திருமணம்  செய்ய  முடியாது  என்று  கூறிவிட்டான்  பின்  , தான்   இரண்டு  வருஷமாக   ஆதிராவை  காதலிப்பதாகவும்  ,  ஓரளவு   பிசினஸ்ஸில்  கவனம்  செலுத்திய  பிறகு     அவளை   தான்  திருமணம்  செய்துகொள்ள போவதாகவும்     கூறினான்  , மேலும்  ஆதிரா  அவளது  குடும்பம்  என்று  அனைத்தையுமே   கூறினான் .

இதை  கேட்ட  பிறகு   ஆதவ்  கீர்த்தி  திருமண  பேச்சி  வார்த்தை  தடைபட்டது  ,  RKக்கு   மகன்  மீது  வருத்தம்  இருந்தாலும்  ஒரே  மகன்  என்பதால்  , ” ஆதவ்  பக்கம்  பெரிய   எதிர்ப்பு     இல்லை  இருந்தும்   அவர்  தந்தை   பிசினஸ்  நன்கு  கற்ற  பிறகுதான்   திருமணம்     அதுவும்   அவங்க  வீட்டு   சம்பந்த்ததோட   தான்   நடக்கணும்   என்பதை  உறுதியாக  கூறினார் .

ஆனால்  கீர்த்தியால்   இதை  தாங்கிக்க   முடியவில்லை  ….

இப்படி   ஆதவ்   சைடு  உள்ள  பிரச்சனையை   ஒரு  பக்கம்  சற்று    அமைதியாக  இருக்க .

இந்த  முறை  ஆதிராவின்    முறை  ஆயிற்று .

திடிரென்று   ஒரு  நாள்   ஆதிக்கே   தெரியாமல்  அவள்  வீட்டில்   திட்ரென்று   நிச்சயதார்த்தம்   நடக்கவிருந்தது  , ஆதி  அதிர்ந்து   போய்    தன்  தந்தையிடம்    வினவ   அவர் ,” நீ  யாரையோ  லவ்  பண்றதா  எனக்கு  போன்  வந்துச்சி  , அது  காதலாவே    முடிஞ்சி போயிரனும்  ,  அதுக்கு  மேல  அது  வளர  விடக்கூடாதுன்னு   தான்   நான்   தை  ஏற்பாடு   செஞ்சேன் , பையன்  பேறு  கார்த்திக்  , என்  பிரன்ட்டோட   பையன்   ,  என்கூடதான்   எனக்கு  கீழே  ஜூனியர்   பைலட்டா   வொர்க்  பண்றான் , சீக்கரம்    ரெடி   ஆகு  ” என்று  கூறி விட்டு   சென்றார் .

தந்தையை  மீறி   தன்னால்  எதுவும்  செய்ய  முடியாததால்   , கார்த்திக்   ஆதிரா   நிச்சயதார்த்தம்  நடந்தது .

இந்த  விஷயம்   ஆதவ்வுக்கு   தெரிய   அவ்வளவு  தான்   ஆதவ்  கோபத்தின்  உச்சத்தில்  இருந்தான்  ,வேகமாக  அவளது   விரலில்   இருந்த  மோதிரத்தை   கழற்றி  கீழே  வீசினான் .

பின்  ஆதிராவிடம்  ,”  உன்னால   முடியாதுன்னு   ஒரு  வார்த்தை சொல்ல  முடியல இல்ல ,

ஆதவ் ,” சரி  இதுக்கு  மேல  என்னால  முடியாது  ,   இன்னைக்கே   இங்க  இருந்து  நாம  போறோம்

ஆதிரா ,” எங்க

ஆதவ் ,” எங்கயோ   ஆனா   போறோம்   கேள்வி  கேக்காம  வரணும்  , இன்னைக்கு  பன்னிரெண்டு   மணிக்கு  , உன்  வீட்டு  வாசல்ல   நான்  காத்துகிட்டு  இருப்பேன் , நாளைக்கு  உனக்கும்  எனக்கும்  எதாவது  கோயில்ல  கல்யாணம், நீ  மட்டும்  வரல  நான்   என்ன  பண்ணுவேன்னே  தெரியாது  ,  இல்ல  நீ  வர  அவ்வளவு தான் ”  என்று  கூறிவிட்டு  தன் நண்பர்களுடன்  சென்றான் .

ராஜ் ,” டேய்  ஆதவ்  யாருடா   உங்க  லவ்வ   ஆதிரா  அப்பா கிட்ட  போட்டு  குடுத்திருப்பா

ஆதவ் ,” தெரியல  ஆனா  அவன் மட்டும்  கிடைக்கட்டும்  அவன் செத்தான்

“கண்டிப்பா   அவனுக்கு  நம்மள  பத்தி  நல்ல   தெரிஞ்சிருக்கு” 

இப்படி  இருவரும்   பேசிகொண்டிருக்க  ,  விக்கி   ஓடிவந்து  ,” எல்லாம்  ஒகே  மச்சான்  இன்னைக்கு  நைட்   நாம     மதுர   போயிருவோம்  ,  அங்க   என்   மாமா   கிட்ட  பேசிட்டேன்  அவரு  ஒகே  சொல்லிட்டரு  , உங்கள  அவரு  பார்த்துக்குவாருஎன்றான் .

ஆதிரா   தன்  தந்தைக்கு   தான்  ஆதவ்வை     காதலிப்பதாகவும்  , அவனை  திருமணம்  செய்துகொள்ள   போவதாகவும், தன்னை   மன்னித்துவிடும்  படி    லெட்டெர்  எழுதிவைத்துவிட்டு   ஆதவ்வுடம்   மதுரைக்கு  சென்றாள் , பின்பு   மதுரை   மீனாக்ஷி  அம்மன்  கோவிலில்   வைத்து  இருவரது   திருமணமும்   நண்பர்களின்   முன்னிலையில்   நடந்தது.

ஆதிராவின்  அப்பாவிற்கு   இவர்களது  லவ்வை   போட்டுக் கொடுத்ததே   கீர்த்திதான்  ,  பின்வரும்  பிரச்சனைகள்   அனைத்துக்கும்   விதை   கீர்த்தீ தான்   என்பதை  கதையின்  போக்கில்  பாக்கலாம்…..

இவர்களது   திருமணம்   முடிந்த  பிறகு   அவர்களை   விக்கியின்   மாமா  வீட்டில்  விட்டுவிட்டு   ராஜும்   மற்ற  நண்பர்களும்  வீடு   திரும்பினர் .

ஆங்கே   ஆதிராவின் அப்பா கோபத்தின்   உச்சியில்   இருந்தார்  , ஆதவ்வின்    வீட்டிலும்  போய்  சண்டை போட்டு   , இரு  குடும்பத்துக்கும்   பெரிய   ரகளையே  வந்தது  ,  யாராலும்  இருவரும்  எங்கே  இருக்கிறார்கள்   என்று  கண்டுபுடிக்க முடியவில்லைராஜ்  தனக்கு   எதுவும் தெரியாது   என்று  சாதித்துவிட்டன்ஆனால்   ஆதிராவின்    தந்தை   ஆதவ்  மீது  கடத்தல்  புகார்  அளித்தார்அவர்  அளித்த   புகாரின்  பெயரில்   , போலீஸ்   ஆதவ்வின்  நெருங்கிய   நண்பனான  ராஜை  பிடித்து   லாக்  அப்பில்   அடைத்து    அடித்து   விசாரித்தனர்ஆனால்  ராஜ்  கடைசி  வரை  தன்  நண்பன்  இருக்கும்   இடத்தை  கூறவேயில்லை   ,  ராஜின்   பிரச்சனையை   அறிந்து   RK   அவனை  வெளியில்  எடுத்து  , பின்பு  , தன் மகனை   காணவில்லை  என்று  கம்ப்ளைன்ட்   கொடுத்து   , தன்  மகனுக்கு   மனோகர்  முலமாக   ஆபத்து   ஏற்பட  கூடும்   என்று  பதிவு  செய்தார்  , என்று  இரு  தரப்பினரின்   சண்டையும்ம்  நாளுக்கு  நாள்  வலுத்துக்கொண்டே   போனது .

நீ   என்னை   பிரிந்த  நொடியில்  இருந்து   என்  உள்ளம்  முள்ளில்  பட்ட  சேலையை  போல  குத்துப்பட்டு  வலியில்  தவிக்கின்றது .

 

நினைவுகள் 13

     “ஆதவன்  என்கின்ற  சூரியனாலும்

       ஆதிரா  என்கின்ற  நிலவாலும்

     தீட்டப்பட்ட  உயிருள்ள  ஓவியமே

         துருவ்  அனுஷா  என்கின்ற 

                         இரு  அஸ்வினி   நட்சத்திரங்கள்

இங்கே   இப்படி  இருக்க   ,   

 

ராஜ்   , இங்கு  நடந்த  எதையும்  ஆதவ்வும்   ஆதிராவும்    கூறவில்லை . ஏன்  என்றால்  அவர்களது  நிம்மதியை   கெடுக்க  விரும்பவில்லை  இந்த  பிரச்சனையை   எதுவுமே   தெரியாமல்   ஆதவ்வும்   ஆதிராவும்   கணவன்  மனைவியாக   சந்தோஷமாக   வாழ்ந்தனர் .

ஆதிராவுக்கு     வேலை   கிடைத்ததால்    பணப்  பிரச்சனையையும்   அவர்களுக்கு  இல்லை  , இப்படியே  மூன்று  மாதங்கள்  கழிந்தன   ஆதவ்வுக்கும்   வேலை   கிடைத்தது   , அவர்களது  சந்தோஷத்திற்கு   அளவே  இல்லை  .

ஆதவின்   தாய்    ராஜிடம்  தன் மகனை  பார்க்க  வேண்டும்  என்று  கெஞ்சி  கூறியதால்   , அவன்   அதவ்வின்    அப்பா  அம்மாவிற்கு   மட்டும்   அவர்கள்  இருக்கும்  இடத்தை   கூறினான்  .

அடுத்தநாள்   அவர்கள்    அங்கு   செல்ல  வேண்டும்   என்று  இருந்தனர்   ஆனால்  ,  விதியின்   சதி   மனிதனின்  மதியை  விட   சிறந்தது   என்று  ஆதவ்   ஆதிராவின்   வாழ்க்கையில்   காட்டிவிட்டது .

இதை  கேட்ட  கீர்த்தி   வழக்கம்   போல   ஆதிராவின்    தந்தையிடம்  கூறிவிட்டாள்

கீர்த்தியின்   இந்த   ஒரு  போன்  கால்  ஆதவ்  ஆதிராவின்   சந்தோஷமான   வாழ்க்கைக்கு   முற்றுபுள்ளியாக   அமைந்துவிட்டது.  

ஆதவ்  தன்  புதுவேலைக்கு   செல்வதற்காக  தயாரகிக் கொண்டிருந்தான்  , இல்லை  ஆதிரா   தயார்படுத்திக் கொண்டிருந்தாள். அப்பொழுது     காலிங்  பெல்     அடிக்கும்  சத்தம்  கேட்டு  ஆதிரா  கீழே   சென்று  பார்க்க  போன  பொது  அங்கே  அவளுக்கு  அதிர்ச்சி   காத்திருந்தது , வீடு  வாசலில்   ஆதிராவின்   தந்தை  கோபமாக   நின்று  கொண்டிருந்தார் .

ஆதிரா  ,”  அப்பா  நீங்க

ஆமா  நாந்  தான்   எப்படி  வந்தேன்னு  பார்க்குறியா  ,  வா  என்  கூட  ”  என்று  அவளது  கையை  பிடித்து  ழுத்து  ரகளை  நடத்த   அதற்குள்  அங்கு  ஆதவ்   , பிறகு  இவர்களை  பார்க்க  ராஜ்  , ஆதவ்வின்   தந்தை  தாய்  ,  ஆதிராவின்   தந்தை  ஏற்க்கனவே  போலீஸ்க்கும்   தகவல்  கூறியிருந்ததால்  அவர்களும்   வந்தனர் .

ஆதவ் ,”  அவ  கைய  விடுங்க

நேத்து   வந்தவன்  நீநீ  சொல்லி  நான்  கேட்கணுமாஇவ   என்  பொண்ணு  டா  விடமுடியாது

”  அது  முன்னாடி  இப்போ  இவ   என்னோட  மனைவி , கைய  விடுங்க

போலிஸ் ,”ஆதவ்   உங்க  மேல   இந்த  பொண்ணோட  அப்பா  கடத்தல்   கேஸ்  குடுத்திருக்காரு  “

ஆதவ் ,”  நாங்க   ரெண்டு  பேரும்  லவ்   பண்றோம்   நான்   ஏன்   கடத்தணும்  எங்களுக்கு  கல்யாணம்  ஆயிடுச்சி   சர்போலிஸ் ,” உங்களுக்கு  நிஜமாவே   கல்யாணம்  ஆயிடுச்சா   “

ஆதிரா ,”  ஆமா  சார்  , இவரு  தான்   என்  ஹஸ்பண்ட்  இவரு   ஒன்னும்    என்ன  கடத்தல  ,  நானா  விருப்ப  பட்டு  தான்  இவரை  கல்யாணம்  பண்ணிக்கிட்டேன்

போலிஸ்  மனோகரை  பார்த்து  ,”  என்ன  சார்   நீங்க  ஒன்னு

சொல்றீங்க   உங்க  பொண்ணு   ஒன்னு  சொல்றாங்க  , இங்க பாருங்க  உங்க  பொண்ணு  மேஜர்   நான்   சொல்றதுக்கு  ஒன்னும்  இல்லவறட்டு  பிடிவாதம்  பிடிக்காம  அவங்கள  மன்னிச்சி  ஆசிர்வாதம்  பண்ணுங்க  ,  கல்யாணம்  ஆனா  பிறகு   நாங்க  என்ன  சார்  பண்ண  முடியும்

மனோகர் ,” வேண்டாம்   நீங்க  எதுவும்  பண்ண  வேண்டாம்  நானே  பண்றேன்  ” என்று  கூறி  அவர்   ஆதிராவை  பார்த்து ,”  இது  இவன் கட்டுன   தாலி  தான  இது இருக்குறனாலதான  இவ்வளவு  பிரச்சனையும்என்று  கூறி  அவர்  ஆதிராவின்   கழுத்தில்  இருந்த  தாலியை  பிடித்து  இழுத்தார்  ,  உடனே   கோபம்  தலைக்கேறிய   ஆதவ்  அவரை   தடுக்க  முயற்சிக்கும்  பொழுது   தகராறில்  அவரை  தள்ள  வேண்டிய  சூழ்நிலை  ஏற்பட்டது   அதில்  அவர்  கீழே  விழுந்து  தலையில்   அடிபட்டு  மயக்கம்   அடைந்தார்  ,  பதறிய  அனைவரும்     அவரை  அருகில்   இருந்த  மருத்துவமனைக்கு   கொண்டு  சென்றனர் .

ஹாஸ்பிடலுக்கு   போய்  கொண்டிருந்த   பாதிவழியிலே   மனோகரின்  உயிர்   பிரிந்தது  ,  தன்  தந்தையின்  உயிர்  தன்  கண்முன்னே  பிரிந்த   அதிர்ச்சியில்  ஆதிரா<