Nenjathai Killathe 10

Picture4

ஹலோ நண்பர்களே ,

நீங்கள்  இதுவரைக்கும் எனக்கு  கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி . அதே ஆதரவை எதிர் பார்த்து  “நெஞ்சத்தை கிள்ளாதே-10” வின் ஒன்பதாம்   அத்தியாயத்தை பதிவிடுறேன் ..

 படித்துவிட்டு  உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் ..

 நெஞ்சத்தை கிள்ளாதே-10

பகுதி 10

என்னை பந்தாட பிறந்தவளே

நம் வாழ்க்கையில் நேசம் என்பது ஒருவித அழகான உணர்வு,அதன் ஸ்பரிசத்தை ஆராயாமல் கண்மூடி அனுபவித்துக்கொள்பவன் பாக்கியம் அடைகிறான்.

“கண்ணே

நீ பாறையாக இருந்திருந்தால்

நான் சிற்பியாக இருந்து உன்னை செதுக்கிருப்பேன்

ரதியே

நீ வீணையாக இருந்திருந்தால்

நான் கலைஞனாய் இருந்து உன்னை மீட்டிருப்பேன்

சகியே

நீ ராகமாக இருந்திருந்தால்

நான் பாடகனாக உன்னை இசைத்திருப்பேன்

அன்பே

நீ பெண்ணாக இருந்ததால்

நான் உன்னவனாக உன்னை நேசிக்கிறேன்”

இன்று காலை என்னவென்று தெரியவில்லை, அனைவருக்கும் ஒரு புத்தம் புது விடியலாகவே இருந்தது . என்றும் இல்லாமல் இன்று ஸ்ருதி சீக்கிரமே எழுந்து  அகாடமிக்கு செல்வதற்காக தயாராகி விட்டாள் .

ராத்திரி தூங்கினால் தானே காலையில் எழும்புவதற்கு, நேற்று அபியோடு தனக்கு நடந்த நிகழ்ச்சி, அவளுக்குள் ஏற்ப்பட்ட உணர்வு என்று அனைத்தையும் தன் மனதிற்குள் ஓட்டிப்பார்த்து தனக்குள்ளே சிரித்துக்கொண்டாளே தவிர ராத்திரி தூங்க வேண்டும் என்பதையே மறந்து விட்டாள் .

இங்கே ஸ்ருதியின் நிலை இப்படி என்றால்,

அங்கே அபி கேக்கவே வேண்டாம் என்றும் இல்லாமல் இன்று தன் கண்ணாடியின் முன் நின்னுகொண்டு  அசடு வலிந்து கொண்டிருந்தான்.

சுவாதி என்ன தான் வருணிடம் நேற்று கோபமாக பேசிருந்தாலும், தான் செய்த முட்டாள்தனத்தை நினைத்து வெட்க்கப்பட்டுக்கொண்டிருந்தாள். வருண் கேட்கவே வேண்டாம் ஏன்னா சார் இன்னும் தூக்கத்துல இருந்து எழும்பவே இல்ல, அவரு இன்னும் கனவுல சுவாதிகூட டூயட் ஆடிக்கொண்டிருந்தார் .

காவியா, “நேத்து இந்த ராஜேஷ் ஒரு பத்து தடவ கால் பண்ணிட்டான், ஆனா நாம அவன் போன அட்டெண்ட் பண்ணவே இல்ல, எந்த பிரச்சனையும் இருக்காதுல, வேணும்னா நாம ஒரு கால் பண்ணிப்பாபோமா வேண்டாமா, என்று தனக்குள் பூவா தலையா” போட்டு பார்த்துக்கொண்டிருந்தாள் .

சகுந்தலா,”இன்று முதன் முதலாக ஸ்ருதியை தன் வீட்டிற்கு அழைத்துவர போகிறோம் என்கின்ற பூரிப்பில் இருந்தாள்”

இப்படி ஒவ்வருவரும் ஒவ்வொன்றை எண்ணிகொண்டிருக்க .

ஒருவன் மட்டும் தனது கனவுகளின் வெற்றி பாதையை நோக்கி பயணிக்க தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்தான், அவன் தான் ராஜேஷ், அவனுக்கு இன்று சாதாரணமான நாள் அல்ல, அவனது வாழ்கையிலே மிகவும் முக்கியமான நாள் . இனி நம் வாழ்கையில் Boxing என்பது கலைந்து போன கனவாகவே அமைந்துவிடுமோ என்று நினைத்துக்கொண்டிருந்த நேரத்தில் அபியின் போன் கால், அவனது கலைந்து போன கனவுக்கு உயிர் கொடுத்தது போல் அமைந்தது, தனது கனவுகளை எட்டி பிடித்து விண்ணில் பறக்க தயராகிக்கொண்டிருக்கிறான் .

அபி என்றைக்கும் விட இன்று டிப் டாப் ஆகா கிளம்பி கீழே வந்தான், அப்போது சகுந்தலா அவனிடம் ,

“வா பா என்ன இன்னைக்கு சீக்கரமே கெளம்பிட்ட அதுவும் கலக்கலா வேற இருக்க ம்ம்ம் என்ன விஷயம் ” ராகம் போட்டபடி கேட்டார்

அபிமன்யு,”சும்மா தான் மா,ஆர்த்தி எங்க”  பேச்சை மாற்றினான் 

சகுந்தலா,”ஆர்த்தி அவ ரூம்ல இருக்கா டா” என்றார்

பின்பு அபி, தன் காலை உணவை முடித்து விட்டு, தன் தாயிடம் விடைபெற்று  அகாடமி வந்தடைந்தான்.

வருண், அபியின் காபின்க்குள் வந்து, “சார் இந்த பைல்ல உங்க சய்ன் தேவ” என்றான் .

அபிமன்யு,”சய்ன் தான்ன பண்ணிட்டா போச்சு”

அபிமன்யு,”வருண் இந்தா பைல் சய்ன் பண்ணியாச்சு, அப்றோம், ஏய் நில்லுடா எங்க ஓடுற , சரி இன்னைக்கு நா எப்டி இருக்கேன், ஏதாவது changes தெரியுதா நீ எதுவுமே சொல்லல” ஆர்வத்துடன் கேட்டான்

“ஆமா சார் நா சொல்லணும்ன்னு நினச்சேன், இந்த மழைகாலத்துல போய் ஏன் சார் கோர்ட் சூட்லாம் போட்ரீகிங்க, ரொம்ப நச நசன்னு வருமே” முகபாவனையுடன் கூறினான் . அதை கேட்ட அபிக்கு சப்பென்று ஆனது 

அபிமன்யு, தனக்குள்,”போடா, உங்கிட்ட போய் கேட்டேன் பாரு என் மூடயே கெடுத்துட்டான்” என்று திட்டிக் கொண்டு அவனிடம்,”போங்க சார் போய் வேலைய பாருங்க” சிறு கோபத்துடன் என்றான் .

அபி,”என்ன இவன் இப்டி சொல்லிட்டான்,என்னவோ போடா அபி” என்று தனக்குள் பேசிகொண்டிருந்த பொழுது, வாசலில் யாரோ,”மே ஐ கம் இன் சார்” என்று கூறும் குரல் கேட்டு, அபி

அபிமன்யு,”யஸ் கம் இன்” என்றான்

வாசலில் வேற யாரும் இல்லை, அது ராஜேஷ் தான் தன் கையில் பொக்கேயுடன் வந்திருந்தான்

அபிமன்யு,”வாங்க ராஜேஷ் உக்காருங்க” என்றான் .

ராஜேஷ்,”இந்தாங்க சார்” என்று தன் கையில் இருந்த பொக்கேவை கொடுத்தான் .

அபிமன்யு,”தங்க யு, பட் இதெல்லாம் எதுக்கு” என்றான்

ராஜேஷ்,”உங்களுக்கு நா ரொம்ப கடம பட்ருக்கேன், தேங்க்ஸ் சொல்லணும், ஆனா அத வெறும் வார்த்தயால மட்டும் சொல்ல எனக்கு விருப்பம் இல்ல சார், அதான் பொக்கே குடுக்குறேன், ‘தங்க யு ஸோ மச் சார்’ நீங்க எனக்கு பண்ண உதவிய, நா என்னைக்குமே நினச்சிட்டு இருப்பேன்  ” என்றான் .

அபிமன்யு சிரித்துவிட்டு,”நீ எனக்கு தேங்க்ஸ்லாம் சொல்லன்னும்ன்னு நா எதிர்பாக்கல, இங்க பாரு ராஜேஷ் லைப்ல எல்லாருக்குமே செகண்ட் சான்ஸ் கிடைக்கறதில்ல, உனக்கு கிடச்சிருக்கு அத நீ நல்ல விதமா பயன்படுத்திக்கணும். ராஜேஷ் நீ என்னோட தீவரமான fanன்னு கேள்வி பட்டேன், அது உண்மனா உனக்கு என்ன பத்தி ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சிருக்கனும், பொதுவா நா ஒரு தடவ ஒரு விஷயத்த வேண்டாம்ன்னு முடிவுபண்ணிட்டா, அப்றோம் என்னைக்குமே அந்த முடிவுல இருந்து மாறமாட்டேன், ஆனா பர்ஸ்ட் டைம் என் லைப்ல, என்னோட முடிவ நா மாதிர்க்கேன்,  நீ என் நம்பிக்கைய போய்யாக்க மாட்டேன்னு நம்புறேன்”

ராஜேஷ்,”யஸ் சார், கண்டிப்பா” என்றான்

அபிமன்யு,”சரி போங்க கீழ போய் உங்க classesஸ அட்டெண்ட் பண்ணுங்க, நா எல்லார்கிட்டயும் பேசிட்டேன்” என்றான், ராஜேஷ் சரி என்று கூறிவிட்டு அங்கிருந்து செல்ல திரும்பும் போது அபி, ராஜேஷ்யிடம்

அபிமன்யு,”ராஜேஷ், ஒன்ஸ் அகைன் தங்க யு சோ மச் பார் திஸ் flowers” என்றான் .

ராஜேஷ்,”தங்க யு சார்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் .

பின்பு ஸ்ருதி தன் காபினை விட்டு வெளியே வரும் பொழுது ராஜேஷ் ஸ்ருதியை பார்த்த உடன் அவளிடம்,வந்தான் .

ஸ்ருதி ஆச்சரியத்துடன் பார்க்க அவன் நடந்த அனைத்தையும் ஸ்ருதியிடம் கூறினான், பிறகு அவன்,”இத சொல்லத்தான், நா காவியாகிட்ட நேத்து நிறையா தடவ போன் பண்ணேன், மேடம் கோவத்துல போன்ன அட்டெண்ட்டே பன்னல, ப்ளீஸ் நீ தான் அவள சமாதானம் படுத்தனும்” என்று கூறி அவளின் காலில் விழாத குறையாக கெஞ்சி கொண்டிருந்தான் .

இதை தற்செயலாக தன் அறையை விட்டு வெளியே வந்த அபி பார்த்துவிட்டான், அவ்வளவு தான் அவன் மனதிற்குள் ஆயிரம் எண்ண அலைகள் வந்து மோதின,” இவன்  ஸ்ருதிகிட்ட என்ன பண்ணிட்டு இருக்கான், இவன பாத்தா தப்பான பையனா தெரியல, ஆனாலும் இவங்க ரெண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்குறத பாத்தா வேறமாதிரி இருக்கே, ஒருவேள ராஜேஷ் லவ் பண்ற பொண்ணு ஸ்ருதியா இருக்குமோ, கடவுளே, இல்ல இல்ல அப்டிலாம் இருக்காது, ஒருவேள அப்டி இருந்தா, இப்போவே அந்த ராஜேஷ . இல்ல அபி நோ violence, எதுக்கு போட்டு குழம்பிகிட்டு, டைரக்ட்ஆஹ் நாமளே ஸ்ருதி கிட்ட கேட்றுவோம், என்று அவன் அவர்கள் அருகில் வர .

அங்கே வருண் ஒரு பக்கம், நம்ம லவ்க்கு ஸ்ருதியால தான் ஹெல்ப் பண்ண முடியும், இப்போவே ஸ்ருதியா பாப்போம் என்று கூறி விட்டு அவன் தன் அறையில் இருந்து வெளியே வந்தான், அப்போது ஸ்ருதி ராஜேஷிடம் பேசிக்கொண்டிருந்ததை கவனித்தவன்,”இங்க தான் இருக்காங்களா” என்று கூறி அவனும் அவள் அருகில் வந்தான் .

வருண், அபி  இருவரும் ஒரே நேரத்தில்,ஸ்ருதியிடம்,”ஸ்ருதி நா உன்கிட்ட ஒன்னு பேசனும்” என்று கூறினர்.

அபி வருணனை பார்த்து தன் மனதிற்குள்,”இவன் இவகிட்ட என்ன பேச போறான், வேறென்ன, ஆபீஸ் மேட்டர்ஆஹ இருக்கும்”என்று தனக்கு தானே சமாதனம் செய்துகொண்டான் .

ராஜேஷ் அபியை பார்த்தவுடன், அங்கிருந்து சென்றுவிட. ஸ்ருதி பேச வாய் எடுப்பதற்குள்,ஒரு குரல்,

“ஸ்ருதி இப்போ யார்கிட்டயும் பேச மாட்டா” என்று கூறியது, அது வேற யாரும் இல்லை, சகுந்தலா ..

சகுந்தலாவை பார்த்த அபி வாங்க மா, என்றான் .

சகுந்தலா,”நா என்கூட ஸ்ருத்திய கொஞ்சம் வெளியிலே கூட்டிட்டு போறேன், ஸோ இன்னைக்கு ஸ்ருதிக்கு ஆபீஸ் லீவ்”என்றாள்

அபிமன்யு,”ஏன் மா எங்க கூட்டிட்டு போறீங்க” என்றான்

சகுந்தலா,”அதெல்லாம் உன்கிட்ட சொல்ல முடியாது டா, நா கூட்டிட்டு போறேன் அவ்வளவு தான் எனக்கு இந்த அளவுக்கு கூட உரிமை இல்லையா” என்றார்

அபிமன்யு,”என்ன மா நீங்க தாராளமா கூட்டிட்டு போங்க”, பிறகு ஸ்ருதியை பார்த்து  “போங்க ஸ்ருதி, அம்மா கூட போயிட்டு வாங்க,இன்னைக்கு உங்களுக்கு லீவ்” என்றான் .

சகுந்தலா,”அதான் அவனே சொல்லிட்டான்ல வா மா போலாம்” என்று ஸ்ருதியை தன்னுடன் கூட்டிச்சென்றார்.

அபி தன் மனதிற்குள்,”அம்மாக்கு திடிர்ன்னு என்ன ஆச்சு, வித்தியாசமா நடந்துக்கறாங்க, இவள எங்க கூட்டிட்டு போறாங்க ஒன்னும் புரியல” என்று புலம்பிக்கொண்டான்.

சகுந்தலாவும், ஸ்ருதி மாடியில் இருந்து கீழே இறங்கி வந்து கொண்டிருக்கும் பொழுது, ராஜேஷ் தனது trainerயிடம் பேசிக்கொண்டிருப்பதை, சகுந்தலா பார்த்தார், பார்த்தவுடனே சகுந்தலாவுக்கு ராஜேஷை அடையாளம் தெரிந்து விட்டது, சகுந்தலா ராஜேஷிடம் சென்று,

சகுந்தலா,”நீ இங்க எப்டி பா, என் பையன் தான் உன்ன இங்க வரக்கூடாதுன்னு சொல்லி இருந்தான்ல” என்றார் .

ராஜேஷ்,”ஆமா மா ஆனா நேத்து சாரே எனக்கு போன் பண்ணி, என்ன அகாடமில மறுபடியும் சேந்துக்குக சொன்னாரு” என்றான் .

சகுந்தலா தன் மனதிற்குள்,”உண்மையாவே ஸ்ருதி வந்த அப்றோம் அபி நிரயாவே மாறிட்டான், இது நல்லதுக்கு தான்” என்று கூறி சந்தோஷ பட்டுக்கொண்டார்.

சகுந்தலா,”சரி பா நீ போ போய் நல்லா practice பண்ணு” என்று கூறி, ஸ்ருதியுடன், சகுந்தலா காரில், சென்றார்.

 ஸ்ருதி சகுந்தலாவிடம்,”நாம எங்கமா போறோம்” என்றாள் .

சகுந்தலா,”இன்னைக்கு சுமங்கலி பூஜ டா, அதனால வீட்ல இன்னைக்கு function இருக்கு, அதுக்காக கொஞ்ச பொருள்லாம் வாங்க வேண்டிருக்கு, அத மட்டும் வாங்கிட்டு வீட்டுக்கு போய்டலாம்” என்றார்

“சுமங்கலி பூஜயா, மா எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல” என்றாள்

சகுந்தலா சிரித்துவிட்டு, கல்யாணம் அகலனா என்னடா,”உனக்கு புடிச்ச மாதிரி husband வேணும்ன்னு கடவுள் கிட்ட பூஜ பண்ணு” என்றார்

இதை கேட்ட ஸ்ருதிக்கு வெட்கம் வர, சகுந்தலா அதை பார்த்துவிட்டு,”வெக்கப்படும் போது ரொம்ப அழகா இருக்க டா” என்று கூறி அவளின் நெற்றியில் முத்தம் இட்டு,”உனக்கு புடிச்ச மாதிரியே husband கடச்சு, நீ என்னைக்கும் நல்லா இருக்கணும்” என்று ஆசிர்வதித்தார் .

பின்பு சகுந்தலாவும், ஸ்ருதியும் வீட்டுக்கு வந்தனர், ஆர்த்தி ஸ்ருதியை பார்த்து,”உள்ள வா” என்று ஒப்புக்காக கூறி விட்டு, தன் அம்மாவின் கையில் இருந்த பையை வாங்கி வீட்டினுள் சென்றாள்.

சாயங்காலம் பூஜைக்கான ஏற்பாடுகள் எல்லாம் தடல் புடலாக நடந்துக்கொண்டிருந்தது, அப்போது ஆர்த்தி பூஜைக்கு தேவையான சாமான்களை எடுப்பதற்காக, store ரூம்மிருக்கு செல்ல போனாள், அப்போது ஸ்ருதி, ஆர்த்தியிடம்,

ஸ்ருதி,”ஆர்த்தி மேடம், நீங்க உக்காருங்க, என்ன வேணும்ன்னு சொல்லுங்க நா போய் எடுத்திட்டு வாரேன்” என்றாள் .

ஆர்த்தி,”அதெல்லாம் இருக்கட்டும், நானே போறேன்”

ஸ்ருதி,”மேடம் ப்ளீஸ், நீங்க உக்காருங்க நானே போறேன்” என்றாள்

ஆர்த்தி,”சரி இந்தா சாவி எடுத்துக்கோ, நேரா போய் ரைட்ல திரும்பு, first ரூம்” என்றாள் பின்பு சிறிது வினாடிகள் கழித்து,”ஸ்ருதி, ஏதும் ஹெல்ப் வேணும்னா என்ன கூப்டு” என்றாள் .

ஸ்ருதி,”யஸ் mam” என்றாள் .

கொஞ்ச நேரம் கழித்து அங்கு வந்த சகுந்தலா, அர்தியை பார்த்து,”ஏற்பாடெல்லாம் பயங்கரமா இருக்கு” என்று கேட்டார், அதற்கு ஆர்த்தி,”இதெல்லாம் ஸ்ருதி தான் பண்ணா, அவ என்ன எந்த வேலையும் செய்ய விடல, அவளே எல்லாத்தையும் பாத்துக்கிட்டா” என்றாள்,சிறிது நேரம் மௌனம் காத்த ஆர்த்தி சகுந்தலாவை பார்த்து,”மா உங்க சாய்ஸ் கரெக்ட்ஆஹ தான் இருக்கு, ஸ்ருதி நல்ல பொண்ணா தான் தெரியறா” என்றாள் .

சகுந்தலா,“நா தான் சொன்னேன்ல”

ஆர்த்தி,”மா அவளுக்காக வாங்கி வைச்சிருக்க புடவைய எப்போ அவகிட்ட குடுக்க போறீங்க” என்றாள்

சகுந்தலா,”வெயிட் பண்ணு டைம் தான் இருக்குல, கொஞ்ச நேரம் கழிச்சி குடுக்குறேன்” என்று கூறி அங்கிருந்து சென்றாள்.

அகாடமியில் அபிமன்யு,conference ரூமில் வருண் மற்றும் அனைத்து trainersவுடனும், இந்த முறை வரவிற்கும் district லெவல் tournamentடை பற்றி பேசிக்கொண்டிருந்தான் . அனைத்து மாணவர்களின் ரெகார்ட்ஸ் எல்லாம் அபியின் முன் வைக்கப்பட்டிருந்தது, அனைத்தையும் அலசி ஆராய்ந்ததில் அஜய்,அனைவரையும் காட்டிலும் முன்னிலை வகித்திருந்தான், அனைத்து trainersஸும், இந்த முறை வரவிற்கும் district லெவல் டோர்னமெண்ட்க்கு, அஜய் தான் தகுதி வுடையவன் என்று கூறினர் .

ஆனால் அபிக்கோஅவர்களின் கருத்தில் துளியும் விருப்பம் இல்லை தான் இருந்தாலும் அஜய்யின் ரெகார்ட்ஸ் அனைத்தும் சிறப்பாகவே இருந்ததால், அவனால் மறுப்பு சொல்ல முடியவில்லை . அஜய் மீதுள்ள கோபத்தை ஒதுக்கி வைத்து, தன் மனதையும் ஒரு நிலை படுத்தி விட்டு, அஜய்யின் பெயரை போர்டு மெம்பர்ஸ்க்கு அனுப்ப முடிவு செய்தான் . ரூம்மை விட்டு அனைவரும் வெளியே சென்ற பிறகு . வருண் அபியிடம் வந்து,

“அபி சார் நீங்க எத நினச்சி கவலையா இருக்கிங்கன்னு எனக்கு தெரியுது, இப்போதைக்கு அஜய்ய நாம ஒரு boxerரா மட்டும் பாப்போம், அவன் மேல உள்ள தனிப்பட்ட விரோதம் எல்லாத்தையும் ஒதுக்கிவச்ருவோம்” என்றான் .

அபிமன்யு பதில் ஏதும் சொல்லாமல் ‘ஆம் ‘ என்பதை என்பதாய் தலையசைத்துவிட்டு  வீட்க்கு செல்ல தயார் ஆனான் .

அங்கே வீட்டில் எல்லா ஏற்பாடுகளும் முடிந்தது, வீடு பார்பதற்க்கே லக்ஷ்மி காடாச்சமாக இருந்தது, சகுந்தலா ஸ்ருதியிடம்,

“இது என் வீடான்னு, எனக்கே சந்தேகமா இருக்கு, அவ்வளவு அழகா இருக்கு டா, தேங்க்ஸ் மா” என்றாள் .

ஸ்ருதி,”ஆர்த்தி மேடம் தான் எனக்கு நிறையா ஹெல்ப் பண்ணாங்க, அவங்க இல்லனா, என்னாலா மட்டும் இத தனியா செஞ்சிருக்க முடியாது” என்றாள்

ஆர்த்தி,”ஏது நா ஹெல்ப் பண்ணேனா, என்ன பண்ணா விட்டா தான, எல்லா வேலையும் மடமே இலுத்து போட்டு பண்ணிக்கிட்டாங்க மா”

சகுந்தலா,”மாத்தி மாத்தி ரெண்டு பேரும் ஒருத்தர ஒருத்தர் புகழ்ந்தது போதும்,ஆர்த்தி பாரு எல்லாரும் வர ஆரம்பிச்சிட்டாங்க, நீ போய் வந்தவங்கள,கவனி” என்றார்

 சகுந்தலா மறுபடியும் ஸ்ருதியை பார்த்து

சகுந்தலா,”ஸ்ருதி ரொம்ப தேங்க்ஸ் டா, இன்னைக்கு என் வீடு பாக்கறதுக்கு ரொம்ப அழகா இருக்குனா, அதுக்கு காரணம் நீ தான்” – உனது வருகை தான் காரணம் என்பதை சொல்லாமல் கூறினார் 

ஸ்ருதி,”என்னமா நீங்க எனக்கு போய் தேங்க்ஸ் சொல்லிக்கிட்டு, அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மா, டைம் ஆச்சு நா போட்டா” என்றாள் .

சகுந்தலா,”என்ன போறியா, எங்க டா”

ஸ்ருதி,”என் hostelலுக்கு, ஃப்ரண்ட்ஸ் என்ன தேடுவாங்க” என்றாள் .

சகுந்தலா,”ஆனா function இன்னும் ஆரம்பிக்கவே இல்லையே” என்றாள் .

ஸ்ருதி,”ஆனா மா”  தயங்கினாள்.

சகுந்தலா தன் மனதிற்குள்,”இவ என்ன தனக்கும் அபிக்கும் ஒட்டு உறவே இல்லாத மாதிரியே நடந்துக்கறா, இவங்க ரெண்டு பேரும் நிஜமாவே லவ் பண்றாங்களா ! இல்லையா!

ஒருவேள நா தான் தப்பா நினச்சிட்டேன்னா, இப்போதைக்கு அவங்க லவ் பண்ணாட்டா தான் என்ன, இனிமே லவ் பண்ணட்டும், ‘இங்க பாரு சகுந்தலா, ஸ்ருதி மாதிரி ஒரு நல்லா பொண்ணு கடைக்கறது ரொம்ப கஷ்டம் அதனால எப்டியாவது நீ அபிக்கும் ஸ்ருதிக்கும், கல்யாணம் பண்ணி வச்சிரணும் ஆமா’” என்று தனது கணக்கு மூளையை உபயோகித்து, ஒரு கல்யாண கணக்கை போட்டுக்கொண்டிருந்தார்

ஸ்ருதி,”மா” என்று தட்ட, அதில் தன் நினைவிற்கு வந்தவர், ஸ்ருதியிடம்

சகுந்தலா, “அதெல்லாம் நீ எங்கயும் போக வேண்டாம், முதல்ல நீ என் கூட கொஞ்சம் வா நா உனக்கு ஒன்னு காட்டனும்” என்று தன் அறைக்கு அழைத்துச்சென்று ,ஸ்ருதிக்காக வாங்கி வைத்திருந்த புடவையை காட்டி எப்டி இருக்கு என்று கேட்டாள் .

ஸ்ருதி,”வாவ்,ரொம்ப நல்லா இருக்கு மா, ஆமா இத யாருக்கும் கிபிட் குடுக்க வாங்கிருக்கிங்களா” என்றாள்

சகுந்தலா சிரித்துவிட்டு, “ஆமா” என்று கூறி, அந்த புடவையை ஸ்ருதியின் முன் நீட்டினாள்.

ஸ்ருதி ஒன்னும் புரியாமல் அமைதியாக நின்றாள்.

சகுந்தலா,“என்னடா உனக்கு புடிக்கலையா” என்று கேட்டார்

ஸ்ருதி,”இல்ல நல்லா இருக்கு,ஆனா எனக்கு இதெல்லாம் வேண்டாம் ” என்றாள்

சகுந்தலா,”அப்போ நா குடுத்தா,வாங்கிக்க மாட்டியா, என்ன அம்மான்னு கூப்ட்ரதெல்லாம் சும்மா பேருக்கு தான்,உண்மையாவே நீ என்ன அப்டி நினச்சிருந்தா, நா குடுக்கறதா வேண்டாம்ன்னு சொல்லுவியா” என்று கோபமாக தன் முகத்தை திருப்பிக்கொண்டார் . உடனே, ஸ்ருதி,”இல்ல மா அப்டிலாம் இல்ல, இப்போ என்ன நா இத கெட்டிக்கணும் அப்டி தான, கெட்டிக்கிறேன், இப்போ உங்களுக்கு சந்தோஷமா” என்றாள் .

சகுந்தலா,”ரொம்ப சந்தோஷம் டா,சீக்கிரம் ரெடி ஆகி கீழ வந்ரு, என்று கூறி விட்டு அங்கிருந்து” சென்றார் .

ஸ்ருதி தன் தோழிகளுக்கு போன் செய்து, தான் வர நேரமாகும் என்றும், அதற்க்கான காரணத்தையும் கூறி  தயராகிக்கொண்டிருந்தாள்.

அபி அகாடமியில் இருந்து கிளம்பி வீடு வந்தடைந்தான் . வீட்டுக்குள் நுழைந்தவனுக்கு, அதிர்ச்சிகலந்த ஆச்சரியமாக இருந்தது காரணம், கோவில் மாதிரி ஜக ஜோதியாக ஒளிர்ந்து கொண்டிருந்த தன் வீடு  பெண்களால் நிரம்பி இருந்தது.

இது  நம்ம வீடா இல்ல, வீடு மாறி வந்துட்டோமோ எதுக்கும் நேம் போர்ட பாப்போம் என்று வெளியே சென்றவனை பார்த்த ஆர்த்தி,”ஏய் அபி எங்க டா போற, வா டா உள்ள” என்றாள்

அபிமன்யு,”ஆர்த்தி என்னடி இது இவ்வளவு கூட்ட மா இருக்கு, என்ன மேட்டர்” என்றான்

ஆர்த்தி,”இன்னைக்கு சுமங்கலி பூஜ டா, ஒரு changeக்கு வீட்ல கொண்டாடலாம்ன்னு எல்லாரையும் invite பண்ணிருக்கோம்” என்றாள் .

அபிமன்யு,”சரி நா என் ரூம்க்கு போறேன்” என்று கூறி விட்டு கிளம்ப போனவனை, ஒருவர் பார்த்து,”அபி வாட கண்ணா எப்போ டா வந்த, எப்டி இருக்க” என்றார்

அபிமன்யு,”நா நல்லா இருக்கேன் aunty, நீங்க எப்டி இருக்கீங்க, சரி aunty நா என் ரூம்க்கு போறேன்” – என்று கூறி  அவர் பதில் கூறுவதற்குள் தன்னை விட்டால் போது என்று தனது அறைக்கு ஓடி வந்து ,தன் மெத்தையின் மேல் விழுந்தான்.

பின்பு தனது மேல் கோட்டை கழற்றிவிட்டு எப்பப்பா,” ரொம்ப பசிக்குதே, கீழ போவோமா !வேண்டாம் !யாராவது பாத்தாங்கனா பேசியே கொன்றுவாங்க, அம்மா, அம்மாவ கீழ பாக்கலையே, ஒருவேள அவங்க ரூம்ல இருப்பாங்களோ, சரி போய் பாப்போம்” என்று தன் தாயின் அறைக்குச் சென்றான் .

“அம்மா உள்ளேயும் இல்லையே, அப்போ எங்க இருப்பாங்க, ஒருவேள kitchenல இருப்பங்களோ,எதுக்கும் போன் பண்ணி பாப்போம்”என்று,அம்மாவுக்கு போன் செய்தான், ஆனால் ஆர்த்தி போனை அட்டெண்ட் செய்தாள்.

“என்னடா வீட்டுக்குளே போன் பண்ற”

அபிமன்யு,”ஏய் அம்மாவோட போன்ல நீ என்ன பண்ற, அம்மாகிட்ட குடு” என்றான்

ஆர்த்தி,”அம்மா கீழ வேலையா இருக்காங்க, எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு”

அபிமன்யு,”எனக்கு ரொம்ப பசிக்குதுடி, போய் எனக்கு சாப்ட எதும் கொண்டு வா” என்றான்

ஆர்த்தி,”கீழ பூஜ நடக்குது டா, நீ கீழ வந்து சாப்ட்டுக்கோ டா” என்றாள்

அபிமன்யு,”கீழயா அங்க ஒரே லேடீஸ்ஸா இருக்காங்க” என்றான்.

ஆர்த்தி,”ஆமா இவரு பெரியா மன்மதன், யாரும் இங்க உன்ன பாக்க வரல, நீ வா” என்றாள் .

அபிமன்யு,”எனக்கு ரொம்ப பசிக்குது, என்னால கீழலாம் வர முடியாது ப்ளீஸ்” என்றான்

ஆர்த்தி,”ஆடம் புடிக்கிற அபி ,சரி வெயிட் பண்ணு” என்றாள்

அபிமன்யு,”சீக்கரம்”என்றான்

ஆர்த்தி,”சரி டா, கொண்டுவரேன், போன்ன வை” என்று கூறினாள்.

பின்பு அபி தன் அறைக்கு செல்ல போகும் போது, தன் தாயின் குளியல் அறையில் இருந்து, யாரோ பாடுவதை போல சத்தம் கேட்டது,

அபிமன்யு,”யாரு உள்ள இருக்காங்க அம்மாவும், ஆர்த்தியும் கீழ இருக்காங்க, அப்போ உள்ள யாரு, அதுவும் இவ்வளவு கேவலமா வேற பாடுறாங்க, இந்த குரல எங்கயோ கேட்ட மாதிரி வேற இருக்கு , எதுக்கும் கூப்பிட்டு பாப்போம்” என்று எண்ணியவன் பலமுறை அழைத்தும் பதில் வராமல் போகவே , கதவு தாளிடாமல் இருப்பதை அறிந்து கதவை திறந்தவன், ஸ்ருதியை பார்த்து அதிர்ந்து போனான்…

காரணம் ஸ்ருதி இருந்த கோலம் அப்படி, முகம் முழுவதும் சோப்பு நுரையோடு, யாரோ கதவை திறந்தது கூட தெரியாமல்

“ஷா ல ல ஷ ல ல

ரெட்டை வால் வெண்ணிலா

என்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா

கொட்டும் அருவி வி வி

என்னை தழுவி வி வி

அள்ளி கொள்ளே ஆசைகள்வன் இங்கே வருவானோ”

என்று யாரோ கதவு திறப்பதைக்கூட கவனிக்காமல் உற்ச்சாகமாக தனக்கு தெரிந்த ராகத்தில் பாடிக்கொண்டிருந்தாள், இல்லை பேசிக்கொண்டிருந்தாள்… என்ன கழுதை வரவில்லை !அது மட்டும் தான் பாக்கி,இதை பார்த்த அபிக்கு தனது சிரிப்பை அடக்கிக்கொள்ள முடியவில்லை,எப்படியோ வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு,தனது மொபைல் போனில் ஸ்ருதியின் இந்த அருமையான குரலை ரெகார்ட் செய்தான் .

பின்பு ஒன்றும் தெரியாததை போல் கதவை மெல்லமாக சாத்தி விட்டு அங்கிருந்து தன் அறைக்குச்சென்று, அந்த ரெகார்டிங்கை கேட்டு சிரித்துக்கொண்டிருந்தான்.

பிறகு ஸ்ருதி அழகாக தயாராகி கீழே வந்துக்கொண்டிருந்தாள், சகுந்தலா அபிக்கு சாப்பாடு எடுத்துக்கொண்டு அவன் அறைக்கு செல்ல மேலே ஏறினாள் அப்பொழுது ஸ்ருதியை பார்த்த சகுந்தலா, அவளிடம்,”ஸ்ருதி மா நீ ரொம்ப அழகா இருக்க டா, இந்த டிரஸ் உனக்கு ரொம்ப அழகா இருக்குடா,என் கண்ணே பட்டுடும் போல இருக்கு” என்றார் .

ஸ்ருதி,”தேங்க்ஸ் மா, ஆமா யார்க்கு சாப்பாடு எடுத்துட்டு போறீங்க” என்றாள் .

சகுந்தலா,”அபி வந்துட்டான் மா,அவனுக்கு தான் எடுத்துட்டு போறேன்”என்றாள்

ஸ்ருதி,”ஒ சார் வந்துட்டாங்களா”

சகுந்தலா,”ஸ்ருதி எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா, நீ சப்பாட அவன் கிட்ட குடுத்துட்டு வந்திர்ரியா” என்றாள்

ஸ்ருதி,”ம்ம்ம் சரி மா நா குடுத்திர்ரேன்”

சகுந்தலா,”அப்போ சரி நேரா போ first ரூம் சரியா” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் .

ஸ்ருதி நேராக அபியின் அறைக்குச்சென்றாள், அபியோ ஸ்ருதியின் நினைவிலே மூழ்கிருந்தான், உடனே ஸ்ருதி அவன் முன்பு வந்து தனது கையின் வளையல்களால் ஓசை எழுப்பினாள், அதில் தன் நினைவிற்கு வந்த அபி அவள் பக்கம் திரும்பி பார்த்தான், அங்கே ஸ்ருதி தங்க நிற பட்டுப்புடவை தன்  அங்கத்தை அலங்கரிக்க வானத்தில் இருந்து வழிதவறி வந்த  நட்ச்சதிரம் போல அவன் முன்பு மின்னி கொண்டிருந்தாள் .

அழகி !

அவனது மனம் முணுமுணுத்தது … அவளது அழகில் தன்னையே மறந்தவன்  “ஒரு சூரியன் முன் உள்ள பனி மலையை போல உருகிக்கொண்டிருந்தான்”.

ஸ்ருதி “சார்” என்று எவ்வளவோ கற்றி பார்த்தாள், அவன் அது எதையுமே காதில் போட்டுக்கொள்வதாக தெரியவில்லை பின்பு ஸ்ருதி இது வேலைக்காகாது என்று அவனது கையில் கிள்ளினாள், ‘ஆஹ’ என்று தன் நினைவிற்கு வந்தவனிடம்,”சார் இந்தாங்க உங்க சாப்பாடு அம்மா குடுக்க சொன்னங்க “என்று கூறி அவன் அருகில் வைத்துவிட்டு அங்கிருந்து செல்ல போனாள், அப்பொழுது அபி,”ஹலோ என்ன உன் பாட்டுக்கு போற, சாப்பாட யார் உன் தாத்தாவ என் கையில தருவாரு” என்றான்

ஸ்ருதி தனது இடுப்பில் இரண்டு கைகளையும் வைத்துக்கொண்டு,”ஆமா தாத்தா தான் தருவாரு, ஆனா என் தாத்தா இல்ல உங்க தாத்தா” என்றாள்

அபிமன்யு,”என்ன பேச்செல்லாம் ஒரு மாதிரியா இருக்கு ஹ்ம்ம்”

ஸ்ருதி,”சார் இங்க பாருங்க, இது உங்க ஆபீஸ்ஸும் இல்ல நா உங்க PA வும் இல்ல,இது உங்க வீடு நா உங்க guest, என்னால எடுபுடி வேலலாம் செய்ய முடியாது, அப்டியே நீங்க என்ன force பண்ணுனிங்கனா நா அம்மா கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணிருவேன், B கேர் புல்” என்று கண்சிமிட்டிவிட்டு அங்கிருந்து போக இருந்தவளை பார்த்து அபி .

அபிமன்யு,”sure கண்டிப்பா, அதுக்கு முன்னாடி நா உங்களுக்கு ஒன்னு ப்ளே பண்றேன், அதுக்கப்புறம் என்ன பண்ணனும்ன்னு முடிவு பண்ணிக்கோ” என்றான்,

ஸ்ருதி,தனக்குள் “இவனுக்கு வேற வேலையே இல்ல என்னத்தயாது உளற வேண்டியது “என்று கூறிகொண்டாள். பின் அவனிடம்,”இங்க பாருங்க நீங்க எதுவும் பண்ணவும் வேண்டாம், நா எதையும் பாக்கவும் வேண்டாம் சரியா” என்று கூறி அங்கிருந்து போனவள்,

‘ஷா ல ல ஷ ல ல

ரெட்டை வால் வெண்ணிலா

என்னை போல் சுட்டிப்பெண் இந்த பூமியிலா’ என்று தான் பாடிய பாடல் அப்படியே தனது குரல், அதைக்கேட்டவுடன் நின்ன இடத்தில் அப்படியே நின்றுவிட்டாள்.

அபி ஸ்ருதியின் குரலைக்கேட்டு விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தான்,அபி,

“ஸ்ருதி நீ என் அம்மா ரூம்ல என்ன பண்ணிட்டு இருந்த, சத்தியமா சொல்றேன் சான்ஸ்ஸே இல்ல இப்டியொரு ஷோவ இதுக்கு முன்னாடி நா பாத்ததே இல்ல கதவுக்கு ஒழுங்கா தாப்பாவாது போட்ருகாலாம்ல,ஸ்ருதி, இதுமட்டும் youtubeல வந்தா likes பிச்சுக்கும்” என்று ஸ்ருதியின் பாட்டை பற்றி அபி கிண்டல் அடித்துக்கொண்டிருந்தான், ஆனால் ஸ்ருதியோ தன் மனதிற்குள்,”அப்டின்னா இவன் அங்க தான் இருந்தானா, எப்போ வந்த்ருப்பான், நாம change பண்ணும் போது அங்க தான் இருந்திருக்கான், எல்லாத்தையும் ரெகார்ட் வேற பண்ணிருக்கான், நா எப்டி இவ்வளவு முட்டாளா இருந்தேன், கதவ லாக் பண்ணேன் ஆனா உள் தாப்பா போடாம hostelல இருக்கற மாதிரியே பண்ணிருக்கேன், இப்போ என்ன பண்றது” என்று நடக்காத ஒன்றை யோசித்து பயந்துக்கொண்டிருந்தாள். முகம் சற்றென்று பயத்தில் சிவந்தது 

அபி அவள் முன் வந்து தன் விரல்களால் சொடக்கு போட்டு,”என்ன மேடம் இப்டி freeze ஆகி இங்கயே இருக்கீங்க, கீழ அம்மாகிட்ட போகல” என்றான் .

ஸ்ருதி,”சார் ப்ளீஸ் மொபைல்ல குடுங்க” என்றாள்

அபிமன்யு,”குடுக்க முடியாது, என்ன பண்ணுவிங்க ஸ்ருதி மேடம்” என்றான்

ஸ்ருதி,”ப்ளீஸ் அத முதல்ல delete பண்ணுங்க”

அபிமன்யு,”எவ்வளவு பெரிய மேட்டர் கடச்சிருக்கு இத போய் delete பண்ண சொல்றியே” என்றான் .

ஸ்ருதி கெஞ்சி கெஞ்சி கேக்க, அபி,”சரி என்ன இப்போம உனக்கு என் மொபைல் வேணும் ம்ம்ம்ம் அப்டிதான,இந்தா புடுச்சிக்கோ ஹ்ம்ம் இந்தா” என்று அபி ஸ்ருதியிடம் தன் போன் கொடுப்பது போல பாவலா செய்து விளையாடிக்கொண்டிருந்தான்,தன் போன்னை தூக்கி பிடித்துக்கொண்டு, “கம்  ஸ்ருதி ஜம்ப்,நீ இன்னும் வளரனும் டா செல்லம்”என்று அவளுக்கு விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தான், அப்போது ஸ்ருதி போனை அவன் கையில் இருந்து வாங்க துள்ளி பிடிக்கும் பொழுது ஸ்லிப்பாகி அவன் மீது விழ, தனது balance மிஸ்ஸாகி அபி ஸ்ருதியை அணைத்தவாறே தனது மெத்தை மீது விழுந்தான் .

இருவரும் ஒருவர் பார்வையில் ஒருவர் மூழ்கிருந்தனர், பின்னர், ஸ்ருதியும் அபியும் தங்களின் இயல்பு நிலைக்கு வந்தனர்,அபி,”அப்பா எவ்வளவு weightaa இருக்க, இப்டியா வந்து மேல விழுந்து என்ன கொல்ல பாப்ப, இது சரி பட்டு வராது, இதுக்காண்டியே இந்த வீடியோவ கண்டிப்பா எல்லார்கிட்டேயும் காட்டியே ஆகணும்” என்றான்

ஸ்ருதி கோபமுற்று,”நீங்கலாம் ஒரு மனஷன, நா உங்க மேல எவ்வளவு மரியாத வச்சிருந்தேன், ஆனா நீங்க இப்டிலாம் பண்ணுவிங்கன்னு நினைக்கல, ஒரு பொண்ணு கிட்ட இப்டியா பண்ணுவிங்க”என்றவுடன்

‘அபி ஒன்றும் புரியாமல் முழித்து,”ஹலோ என்ன உளர்ற, எனக்கு ஒண்ணும் புரியல” என்றான்

ஸ்ருதி,”நடிக்காதிங்க, எனக்கு எல்லாம் தெரியும், நா change பண்ண்றத போய் வீடியோ, நினைக்கரதுக்கே கூச்சமா இருக்கு, உங்களால எப்டி இப்டி பண்ண முடிஞ்சிது” என்று தனக்கு வாய்க்கு வந்தபடியல்லம் பேசி கொண்டிருந்தாள்.

அப்போது அபி தன் மனதிற்குள்,”ஒ மேட்டர் இப்டி போதா, என்னடா அபி உன்ன இவ்வளவு கேவலமா நினச்சிட்டாளே, உண்மைய சொல்லிருவோமா, வேண்டாம் வேண்டாம் இத வச்சி கொஞ்சம் ப்ளே பண்ணிதான் பாபோமே “என்று யோசித்துவிட்டு,பின்பு ஸ்ருதியிடம்,

அபி “வெரி குட் ஸ்ருதி ஐ லைக் இட், இத நீ இவ்வளவு சீக்ரமா புரிஞ்சிக்குவன்னு நா நினைக்கல, அப்போம் உனக்கு இன்னொன்னு புரிஞ்சிருக்கும், இப்போ மட்டும் நா சொல்றத நீ கேக்கலனா, நா மட்டும் பாத்த இந்த வீடியோவ அப்றோம் ஊரே பாக்கும், என்ன நா சொல்றத கேக்ரியா இல்லையா, எல்லாம் உன் இஷ்டம் தான் நா உன்ன forceலாம் பண்ணமாட்டேன்” என்றான்.

ஸ்ருதி தன் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு,”சரி நா நீங்க சொல்ற மாதிரியே நடந்துக்கறேன்,அப்போ இந்த வீடியோவ யார் கிட்டயும் காட்டக்கூடாது, delete பண்ணிறனும் சரியா” என்றாள்.

அபிமன்யு உடனே தன் கட்டிலில் இருந்து எழும்பி, ஸ்ருதி முன் சென்று,”அப்டியா நா என்ன சொன்னாலும் செய்வியா” என்று மாயக்கண்ணனின் கள்ள பார்வையோடு கேட்டான்.

ஸ்ருதி,”ம்ம்ம்” என்றாள்

அபிமன்யு,”நல்லா யோசிச்சிக்கிட்டல, அப்றோம் மாற மாட்டல”

ஸ்ருதி,”மாட்டேன்” என்று பாவம் போல கூறினாள்

அபிமன்யு,”சரி,என் கால அமுக்கி விடுவியா”

ஸ்ருதி ம்ம்ம்ம் என்று தன் தலையை ஆட்டினாள்

அபி,”என் கைய புடிச்சிவிடுவியா” என்று கேட்டான் அதற்கும் ஸ்ருதி தன் தலையை ஆட்டினாள்.

அபி, “எனக்கு திடிருன்னு தலவலி வரும், அப்போ தலைக்கு ஆயில் மசாஜ் பண்ணுவியா” என்றான், ஸ்ருதி அதே குனிந்த தலையோடு ம்ம்ம்ம் என்று கூறினாள்.

அபி,”ஏன் என் கண்ண பாத்து பதில் சொல்ல மாட்டியா” என்றான்

ஸ்ருதி,”ப்ளீஸ் எனக்கு ஒரு மாதிரியா இருக்கு, இப்போ நா உங்களுக்கு என்ன பண்ணனும் மட்டும் சொல்லுங்க” என்றாள்

அபி,”அப்டியா இப்போவே சொல்லனும்மா சரி” என்று கூறிவிட்டு ஸ்ருதியையே பார்த்துக்கொண்டிருந்தான்,ஸ்ருதியின் முகமெல்லாம் வேர்த்து, கை கால்களெல்லாம் நடுங்கி, மிகவும் பயந்து போய் அவன் முன் நின்று கொண்டிருந்தாள், அவளின் நிலையை பார்த்த அபிக்கு சிரிப்பாக இருந்தது.

பின்பு அபி ஸ்ருதியின் அருகில் வந்து, அவளது காதில், வருடும் குரலில்,”ஸ்ருதி” என்றான் ஸ்ருதி தன் கண்களை இருக்க மூடிக்கொண்டு தனது கைகளால் தனது ப்புடவை முந்தானையை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள். இதை பார்த்த அபி புன்முரூவளோட அவளது அருகில் மீண்டும் வந்து,”நா என்னக்கேட்டாலும் செய்வியா” என்றான். ஸ்ருதி “ம்ம்” என்றாள், பின் அபி,”வில் யு கிஸ் மீ” என்றான் . ஸ்ருதி எதோ ஒரு யோசனையில் ‘ம்ம்ம்ம்’ என்றாள், அபி கணீர் குரலில்,”என்ன சொன்ன என்ன கிஸ் பண்ண உனக்கு ஒகே வா” என்றான்..

பின்பு தன் நிலைக்கு வந்த ஸ்ருதி,”இல்ல இல்ல” என்று கூறி அதிர்ச்சியில் தன் கண்களை விரித்து அபியை பார்த்தாள், அபியோ வசிகரிக்கும் புன்னகையோடு அவளது கண்களில், தனது பின்பத்தை பார்த்துக்கொண்டிருந்தான் .

“ஓஹ ஹோ மின் வெட்டு நாளில் இங்கே

மின்சாரம் போல வந்தாயே

வா வா என் வெளிச்ச பூவே வா

உயிர் தீட்டும் உயிலே வா

அழைத்தேன் வா அன்பே”

ஸ்ருதி அங்கிருந்து செல்ல முயன்றாள், அப்பொழுது அவன் தன் கையை நீட்டி, “எங்க எஸ்கேப் ஆகுற ம்ம்ம்” என்றான் .

ஸ்ருதி ஏங்கி ஏங்கி தடுமாறும் குரலில்,”கீழ போனும் அம்மா தேடுவாங்க” என்றாள் . அபி,”சரி ஆனா நா கேட்டதுக்கு, இன்னும் பதில் வரலலேயே” என்றான். ஸ்ருதி,”நா போனும் ப்ளீஸ்” என்றாள். அபி,”அதெல்லாம் முடியாது” என்றான் .

ஸ்ருதி உடனே அவனிடம்,”அம்மா” என்றாள்,உடனே அபி,”அம்மாவா”என்று திரும்பினான், அந்த நேரம் ஸ்ருதி அங்கிருந்து ஓடினாள், அப்போது அபி,”ஓட வா செய்ற, பதில் தெரியாம விடமாட்டேன்” என்று கூறி தனக்கு தானே சிரித்துக்கொண்டு, “ஸ்ருதி உன்ன என்னன்னு சொல்றது” என்று புன்னகைத்தான்.

ஸ்ருதி கீழே சென்று பூஜையில் அமர்ந்துக்கொண்டாள், பின் கடவுளிடம்,”கடவுளே ப்ளீஸ் அபி சார் அப்டியாவது அந்த வீடியோவ delete பண்ணிறனும், ரொம்ப பயமா இருக்கு, எந்த பிரச்சனையும் வராம நீங்க தான் பாத்துக்கணும்” என்றாள், பிறகு ஆர்த்தி சகுந்தலாவை பார்த்து கண்ணசைக்க, சகுந்தலா ஸ்ருதியை அழைத்து, ஆரத்தி காட்ட சொன்னாள், ஸ்ருதி தயக்கத்தோடோடு நிற்க, சகுந்தலா,”என்ன டா இது யோசிச்சிக்கிட்டு,போ மா போய் ஆரத்தி காட்டு” என்றாள், பின் ஸ்ருதியும் தன் கைகளால் அம்மன் விளக்கிற்கு தீபம் ஏற்றி தன் கைகளால் ஆரத்தி காட்டினாள், இதை அனைத்தையும் அபி சற்று தள்ளி இருந்து தன்னை மறந்து பர்த்துக்கொண்டிருந்தான்,

“இருட்டான என் இதயகூட்டில் அனுமதி இன்றி வரும் மின்மினியாக வந்தாய்

எட்டி பிடிக்க நினைத்த போது கண்ஜாடை காட்டி பறந்து சென்றாய் .

மான் விழிக்கொண்ட பெண்ணே உன் ஒவ்வொரு கண்சிமிட்டளின் போதும்

நான் உன் முன் தோற்று நிற்கிறேன் .

பௌர்ணமி நிலவே உன்னை நிலவென்று நினைத்து தள்ளி நின்று வேடிக்கை பார்த்தால்

என் அருகில் வந்து சீண்டி பார்க்கிறாய், தொட்டு பார்க்க நினைத்தேன் புன்னகை வீசி மறைந்து சென்றாய்

ரோஜா இதழ் கொண்ட பெண்ணே உன் ஒவ்வொரு மந்திர புன்னகையின் போதும்

என் இதயம் உலை போல கொதிக்கொன்றது

பன்னீர் பூவே உன்னை பூவென்று நினைத்து பறிக்க துணிந்தேன், உன் முற்கள் என் விரலை பதம் பார்த்தன,

வலியில் சற்று துடித்தேன் உன் கண்ணீரால் என் காயம் போக்கினாய், அள்ளியணைக்க நினைத்தேன், முயல் போல் துள்ளி குத்திதொடினாய்!

அருகில் நீ வந்தாய் என் இருகண்களை யும் மூடிக்கொண்டேன்

கண்விழித்து பார்த்தேன் அருகில் நீ இல்லை, துடித்தது என் மனது,

மறுபடியும் அதே கண்ணாம்பூச்சி ஆட்டம்.

வெறுத்து பொய் வந்தேன் என் இல்லம், நீயே அங்கு சுடர் தீபமாய் ஒளிவீசிக்கொண்டிருந்தாய்

நானோ விட்டில் பூச்சியை போல உன்னையே வட்டம் இட்டம் கொண்டிருந்தேன்

என் இதயத்தின் வலியை போக்கி இருட்டை நீக்கி வெளிச்சம் தந்த உன்னை வள்ளல் என்பதா இல்லை

என் கண்களை சிறைவைத்து, தூக்கத்தை பறித்து, கனவை கொள்ளையடிக்க நினைக்கு உன்னை கள்ளி என்பதா !

என்னவனே உன்னிடம் நான் பேசப்போவதில்லை நிச்சயமாக நான் பேசப்போவதில்லை ……

நான் பார்க்கும் பொழுது என்னிடம் கோபம் கொள்கிறாய் விலகி சென்றால், புன்னகை புரிகிறாய்

நீ என்ன அந்த மாயக்கண்ணனின் தோழனா …

பனித்துளி போன்ற என்னை சுரியனான நீ வெரித்துபார்தால், நான் கரைந்து போவனே ….

இதயத்தை கொடுப்பது போல் கொடுத்துவிட்டு, என் இதயம் பறித்தாயே,

உன்னை கர்ணன் என்பதா இல்லை கள்வன் என்பதா ….

கண்ணே நீ ஒன்றும் பனித்துளியல்ல, நீ அந்த வான் மழை போன்றவள்

நீ சிந்தும் துளிகளால் தான் வறண்டு பாலைவனமான நான் உயிர் பெறுகின்றேன் …..

ஆழ் கடல் போன்ற உன் உள்ளத்தை புரிந்து கொள்பதற்காக நீந்தி வந்தேன்

இன்னும் கரைகாண முடியவில்லை, உன் கைகொடுத்து என்னை கரை சேர்ப்பாயா …….”

பூஜை முடிந்த பிறகு சகுந்தலா ஆரத்தி தட்டை ஆனைவரிடம்மும் காட்டி பிரசாதம் கொடுக்க சொன்னார், பிறகு அவள் அபியின் ஆருகில் வந்தாள், அபி ஏதும் செய்யாமல் சிலை மாதிரி நின்று கொண்டிருந்தான், உடனே சகுந்தலா,”ஆரத்தி எடுத்து கண்ணுல வச்சுக்கோடா” என்றாள், பின்பு அபி ஓரக்கண்களால் ஸ்ருதியை பார்த்து சிரித்துவிட்டு ஆரத்தியை தன் கண்களில் ஒற்றிக்கொண்டான் . பின் ஸ்ருதி,”கைய நீடுங்க பிரசாதம் தரனும்” என்றாள்,அபி,”கையலாம் நீட்ட முடியாது, “ஆஹ்” வாயில குடு” என்றான் . ஸ்ருதி, “அதெல்லாம் முடியாது” என்றாள்,

“சரி அப்போ நா கேட்ட மாதிரி ஒரு கிஸ் பண்ணு நா போறேன்” என்றான் .ஸ்ருதி,”அதுவும் முடியாது” என்றான் . அபி,”ஒன்னு கிஸ் பண்ணு இல்லன பிரசாதத்த ஊட்டிவிடு இல்லனா நா என்ன பண்ணுவேன்னு உனக்கே தெரியும்”என்றான் .

ஸ்ருதி அவனையே முறைத்து பார்த்துக்கொண்டிருந்தாள், உடனே அபி சகுந்தலாவிடம்,”மா இங்க பாருங்க ஸ்ருதி நா கேக்றத தர மாட்டிக்கா” என்றான் .

சகுந்தலா,”குடுமா ஸ்ருதி” என்றார் . ஸ்ருதி,”சரி மா” என்று கூறி தன் மனதிற்குள் திட்டிக்கொண்டே ஊட்டிவிடவா வேண்டாமா என்று தயங்கிக்கொண்டிருந்தாள் அப்போது யாரும் கவனிக்காத நேரத்தில் அபி தன் கைகளால் அவளது கையை பிடித்திளுத்து தன் வாயின் அருகே கொண்டு சென்று, அவன் தன் வாயால் அவள் கையில் இருந்த பிரசாதத்தை சாப்பிட்டான்.

பின்பு அபி,ஸ்ருதியின் விரலை கடிப்பதை போல் பாவலா செய்து, அவளை பார்த்து கண்ணடித்து விட்டு அங்கிருந்து சென்றான் . ஸ்ருதி தன் மனதிற்குள் அபியை நன்கு திட்டி கொண்டிருந்தாள்.

பயம் தாண்டி ஒருவித கலக்கம் … அழவும் முடியாமல் கோபிக்கவும் முடியாமல் திணறினாள் … மூச்சு முட்டுவது போன்ற ஒரு உணர்வு …
” பேசமா சகுந்தலா அம்மா கிட்ட சொல்லிருவோமா … வேண்டாம் அபி கிட்ட கேட்போம் அவரு சரி படலைன்னா அம்மா கிட்ட சொல்லிருவோம் ”

பூஜை முடிந்த பிறகு அனைவர்க்கும் குடிப்பதற்கு பானகம் வழங்க பட்டது, சகுந்தலா ஆர்த்தி குடிபதர்க்காக ஜூஸ் கொடுத்தாள், அப்போது ஆர்த்தி,”எனக்கு இப்போ வேண்டாம் மா, முதல்ல ஸ்ருதிக்கு குடுங்க அவங்க தான் காலையில இருந்து வேல பாத்ருக்காங்க” என்று கூறி தன் கையாலே ஸ்ருதிக்கு கொடுத்தாள், உடனே ஸ்ருதி,”தேங்க்ஸ் மேடம்” என்றாள் உடனே ஆர்த்தி,”ஸ்ருதி நீ இனிமே என்ன மேடம்ன்னு கூப்ட வேண்டாம், என்ன ஆர்த்தினே கூப்டு” என்றாள் பின்பு கொஞ்ச நொடி கழித்து,”அப்றோம் ஸ்ருதி அன்னைக்கு உன்ன ஆபீஸ்ல வச்சு அடிச்சதுக்கு சாரி” என்று கூறினாள் .அதற்கு,ஸ்ருதி,”சாரிலாம் எதுக்கு மேடம்” என்றாள், ஆர்த்தி,”நா என்ன சொன்னேன் இனிமே என்ன ஆர்தின்னு கூப்ட சொன்னேன்” என்றாள் .உடனே ஸ்ருதி,”ஒகே ஆர்த்தி” என்று கூறி ரெண்டு பேரும் சிரித்துக்கொண்டனர் . இதை பார்த்த சகுந்தலாவுக்கு சந்தோஷமாக இருந்தது .

என்னதான் ஸ்ருதி சகுந்தலா மட்டும் ஆர்த்தியின் முன்பு தான் சந்தோஷமாய் இருப்பதை போல் காட்டிக்கொண்டாலும், மனதிற்குள் அபி என்ன செய்வானோ என்று, ஒருவகை நடுக்கத்துடுடனே இருந்தாள்.

பூஜை நல்ல படியாக முடிந்து அனைவரும் சென்றனர் . பின்பு ஸ்ருதி அனைவரும் சாப்பிட்ட தட்டுகளை சமையல் அறைக்கு எடுத்துச்சென்று, வாஷ் பேசினில் வைத்து விலக்கிகொண்டிருந்தாள் அப்போது அங்கு வந்த சகுந்தலாவும் ஆர்த்தியும்,”என்ன பண்ற டா, முதல கைய எடு, நீ போய் பாத்ரம் எல்லாம் விளக்கிட்டு இருக்க, அதெல்லாம் நா பாத்துக்கறேன் டா” என்றாள்

அப்போது ஸ்ருதி,”நீங்க வெலக்கலாம் ஆனா நா வெலக்க கூடாதா ம்ம்ம்ம் என்ன மா நீங்க இப்டி பண்றீங்களே மா” என்றாள் . சகுந்தலா,”இருந்தாலும்”

ஸ்ருதி,”மா இது லாம் எனக்கொரு பெரியா வேலையே இல்ல, சின்ன வயசுல இருந்தே இத நா செஞ்சிகிட்டு இருக்கேன் . உங்களுக்கு ஒன்னு தெரியுமா, சின்ன வயசுல நா, என் பிரண்ட்ஸ் காவியா, சுவாதி எல்லாரும் சேந்து எங்க orphanageல அடிக்காத லூட்டியே கிடையாது, எப்ப பாரு எதாவது தப்பு பண்ணிட்டு மதர் கிட்ட வசமா மாட்டிக்குவோம் . அப்றோம் என்ன எங்க மூணு பேரையும் எல்லா பாத்ரத்தையும் விளக்கபோட்ருவாங்க, ஆனா அது கூட ஜாலியா இருக்கும்” என்றாள் . இதை கேட்ட சகுந்தலா சோகத்தோடோடு ஸ்ருதியை பார்த்து,”என்ன டா சொல்றா, சின்ன வயசுல இருந்தே நீ orphanageல தான் இருக்கியா” என்றார்.

ஸ்ருதி,”ஆமா மா,அப்போ எனக்கு வயசு ஒரு ஏழு இருக்கும் ஒரு நாள் அப்பாவும் அம்மாவும் பஸ்  accidentல செத்துபோய்ட்டாங்க, சொந்தக்காரங்க யாரும் என்னை பாத்துக்கல அதனால நான் அப்போ இருந்தே orphanageல தான் வளந்தேன், அங்கேயே படிச்சு அப்றோம் மெரிட்ல காலேஜ் முடிச்சேன், எனக்கு சொந்தம்ன்னு சொல்லிக்கலாம் யாரும் இல்ல, என் ஃப்ரண்ட்ஸ் மட்டும் தான் என் அப்பா அம்மாக்கு அப்றோம் என் கூடவே இருக்காங்க” என்று வந்த கண்ணீரை அடகீக் கொண்டு உதட்டில் பொய்யான சிரிப்போடு கூறினாள் . இதை கேட்ட சகுந்தலாவுக்கும் ஆர்த்திக்கும், கண்களில் ஓரம் கண்ணீர் வந்தது,அப்போது ஸ்ருதி,”ப்ளீஸ் ப்ளீஸ் நோ சிம்பதி,நீங்க அழுதிங்கன்னா அப்றோம் நானும் அழுவேன்” என்றாள் .

தன் கண்ணீரை துடைத்துவிட்டு, சகுந்தலா ஸ்ருதியிடம்,”இனிமே யாரும் இல்லன்னு சொல்ல கூடாது சரியா, நாங்கலாம் எப்போதும் உன் கூட இருக்கோம் என்ன” என்றாள் .

ஆர்த்தி,”ஆமா அம்மா சொல்லற மாதிரி தான்” என்று கூறி ஸ்ருதியை தன் கைகளால் அணைத்துக்கொண்டாள். ஸ்ருதி,”ஒகே பாஸ் இனிமே அப்டி சொல்ல மாட்டேன்” என்றாள், உடனே சகுந்தலா ஸ்ருதியின் நெற்றியில் முத்தமிட்டு,தலையை தடவி கொடுத்தார் .

ஸ்ருதி ஒரு மாதிரியாகவே இருந்ததை கவனித்த சகுந்தலா,”என்ன டா ஏன் ஒரு மாதிரியா இருக்க, உடம்புக்கு எதுவும் சரி இல்லையா” என்று கேட்டாள்.

ஸ்ருதி,”அதெல்லாம் ஒன்னும் இல்ல மா, நேரம் ஆச்சு நா அப்போ கிளம்பட்டா” என்றாள்

சகுந்தலா,”அதுக்குள்ளயுமா, மணி ஆறே முக்கால் தான மா ஆகுது” என்றாள்

ஸ்ருதி,”இல்லமா வீட்டுக்கு போனும் போல இருக்கு” என்றாள் .

சகுந்தலா,”பிரச்சன ஒன்னும் இல்லல” என்றாள்

ஸ்ருதி,”அதுலாம் ஒன்னும் இல்ல மா” என்றாள்

சகுந்தலா,”அப்போ சரி தனியா ஒன்னும் போக வேண்டாம், அபிய கூப்டறேன், அவன் உன்ன கொண்டு போய் விடுவான்” என்று கூறிவிட்டு ‘ அபி கொஞ்சம் கீழ வா ‘ என்று அபியை கூப்பிட்டாள்.

ஸ்ருதி,”அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மா” என்றாள்

சகுந்தலா,”என்ன ஒன்னும் வேண்டாம் ஹ்ம்ம் ” என்றாள், பின் கீழே வந்த அபி,” என்ன மா ஏன் கூப்டிங்க” என்றான் .

சகுந்தலா,”அது ஒன்னும் இல்லடா ஸ்ருதிய கொஞ்சம் அவ hostelல கொண்டு போய் விட்டுட்டு வந்திரு டா” என்றார் .

அபிமன்யு தன் மனதிற்குள்,”வாவ் வாட்அஹ அமேசிங் சான்ஸ், நோ டா அபி உடனே ஒகே சொல்லாத,கொஞ்சம் நடி” என்று தனக்குள் பேசிக்கொண்டான் .

அபிமன்யு,”அதெல்லாம் முடியாதுமா, வந்தவங்களுக்கு, போக தெரியாதா” என்றான்.

ஆர்த்தி,”என்ன டா பேச்சி இது, இந்தா கார் சாவிய புடி, ஒழுங்கா கூட்டிட்டு போய் விட்டுட்டு வா” என்றாள் .

அபிமன்யு,”சரி சரி வந்து ஏற சொல்லுங்க” என்று யாருக்கும் தெரியாமல் சிரித்துவிட்டு பின்பு தன் முகத்தை சீரியஸாக மாற்றி கொண்டு வண்டியில் ஏறினான் .

ஸ்ருதி தயங்கி தயங்கி பின் சீட்டில் அமர சென்றாள், உடனே அபி,”நா என்ன உனக்கு டிரைவரா, வா வந்து முன்னாடி உக்காரு” என்றான்

சகுந்தலா,”கோபப்படாம கூட்டிட்டு போ டா” என்றாள் .

அங்கே hostelலில் சுவாதி, காவியாவிடம்,”காவ்ஸ், நீ வருணன பத்தி என்ன நினைக்க” என்றாள் அதற்கு

காவியா,”நல்ல பையன்” என்றாள்

சுவாதி,”அவ்வளவு தான மத்தபடி சொல்றதுக்கு ஒன்னும் இல்லையா” என்றாள் .

காவியா,”அதத்தவர அவன்கிட்ட பெருசா நா ஒன்னும் பாக்கலடி” என்றாள்.

சுவாதி,”ஆமா உன் ஆள் ராஜேஷ் மட்டும் அப்டியே பாக்றதுக்கு ஷாருகான் மாதிரி இருக்காரு பாரு” என்றாள்.

காவியா,”ஏய் இப்போ எதுக்கு ராஜேஷ் பத்தி பேசுறா, நீ வருண் பத்தி கேட்ட எனக்கு தோனுனத சொன்னேன், உனக்கு எதாவது ஸ்பெஷல்லா தோணுச்சுனா நீ சொல்லு அத விட்டுட்டு ராஜேஷ்ஷ ஏன் இலுக்குற” என்றாள், பின்பு சுவாதியிடம்,”என்னடி நேத்துல இருந்து ஒரே வருண் வருண்ன்னு சொல்லிட்டு இருக்க, சரி இல்லையே, என்னடி விஷயம் எனக்கு தெரியாம ஹ்ம்ம்”

சுவாதி,”அதெல்லாம் ஒன்னும் இல்ல டி சும்மா தான் கேட்டேன்” என்றாள்

காவியா,”சும்மாவா அப்போ சரி, நா கூட உனக்கு அவன புடிச்சிருக்கோன்னு நினச்சேன், ஒருவேள புடிச்சிருந்தா ஸ்ருதிகிட்ட, இத பத்தி பேசி உங்கள சேத்து வைக்கலாம்ன்னு நினச்சேன், சரி இருக்கட்டும்” என்றாள் .

சுவாதி,”இல்ல இல்ல”

காவியா,”இல்லனா என்ன இல்ல” என்றாள்

சுவாதி,”அது வந்து”

காவியா,”லவ் இல்ல அதான்ன”

சுவாதி,”அப்டி இல்ல”

காவியா,”அப்போ இருக்கு”

சுவாதி,”போ டி, உனக்கு வேற வேலையே இல்ல”என்றாள்

காவியா,”அட உனக்கு வெக்கம் வேற வருது பா”

சுவாதி,”ப்ளீஸ் டி” என்றாள்

காவியா,”சரி சரி கிண்டல் பண்ணல,இப்போ சொல்லு”

சுவாதி,”புடிச்சிருக்கு ஆனா, அவனுக்கு புடிக்குமான்னு தெரியலயே” என்றாள்

காவியா,”தெரிஞ்சிக்குவோம், அதான் நம்ம ஸ்ருதி இருக்காள்ல” என்றாள் பின்பு காவியா,ஆக நீயும் காதல் வலையில மாட்டிகிட்டன்னு சொல்லு” என்று கூற,சுவாதியோ வெக்கத்தில் கன்னம் சிவந்து புன்னகைத்து கொண்டிருந்தாள் .

காரில் ஸ்ருதி தன் கைகள் நடுங்க, வேறு பக்கமாக திரும்பி தன் கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டு கண்ணாடிக்கு வெளியிலே பாத்துக்கொண்டிருந்தாள். இதை கவனித்த அபிக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது, ஸ்ருதி அழுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை . அதனால் காரை ஒரு ஒரமாக நிருத்தினான் .

பின்பு ஸ்ருதியிடம்,”ஹலோ இப்போ ஏன் அழுதுட்டு இருக்க” என்றான்

ஸ்ருதி,”உங்களுக்கு மனசாட்சியே இல்லையா, இவ்வளவு பெரிய விஷயம் நடந்திருக்கு, ஏன் அழறன்ன்னு கேக்ரிங்க, ஏன் அழும் போது கூட உங்ககிட்ட கேட்டுட்டு தான் அழனும்மா, இங்க பாருங்க நா ஒன்னும் நீங்க நினைக்கிற மாதிரியான பொண்ணு கடயாது, இவ்வளவு பெரிய விஷயத்த ஈஸியா எண்ணலா எடுத்துக்க முடியாது, என் உடம்பெல்லாம் நடுங்குது, இப்போம் கூட நீங்க இப்டி பண்ணிருப்பிங்கன்னு என்னால நம்ப முடியல” என்று ஏங்கி ஏங்கி அழுதாள்.

மனம்கேளாத அபி ஸ்ருதியிடம்,“நா எதையும் பாக்கவும் இல்ல, வீடியோவும் எடுக்கல, நீ உன் முகத்துக்கு சோப்பு போட்டுடே, பாடிட்டு இருந்தல அத மட்டும் தான் ரகார்ட் பண்ணினேன், சும்மா உன்ன கிண்டல் பண்ணத்தான் அப்டி செஞ்சேன், ஆனா நீ வேற மாதிரி நினைச்சியா, ஸோ உங்கிட்ட கொஞ்சம் விளையாடலாமேன்னு தான் இப்டி நடிச்சேன், மத்தபடி நீ நினைக்கற மாதிரி எதுவும் பண்ணல” என்று அவன் கூறி முடிக்கவும் .

ஸ்ருதி அபியின் சட்டையை புடித்துக்கொண்டு,”ஏன் இப்டில்லாம் பண்ணுனிங்க” என்று தேம்பி தேம்பி அழுதாள்

அபிமன்யு,”ஏய் ஸ்ருதி, சாரி மா, நா தான் விளையாட்டா பண்ணேன்னு சொல்றேன்ல, ப்ளீஸ் அழாத” என்றான்

ஸ்ருதி,”நீங்க பண்றதெல்லாம் பண்ணுவிங்க, ஆனா நீங்க அழாதன்னு சொன்னா உடனே நா அழுகைய நிருத்திரன்னும், ஏன் நா அழ கூட கூடாதா அதுக்கு கூட எனக்கு உரிம இல்லையா, நா எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா,ஏன் அபி அப்டி பண்ணிங்க என்று அவனின் சட்டையை உளுக்கிக்கொண்டே அவனது நெஞ்சின் மேல் தனது தலை மோத அவன் மீது சாய்ந்து கொண்டாள்.

அந்த நேரம் அந்த நொடி அபிக்கு இந்த உலகமே தன் காலடியில் இருப்பதை போல் தோன்றியது, ஸ்ருதியை தன் கைகளால் அணைத்துக்கொண்டு, அவளது கண்ணீரை துடைக்க அவனது கைகள் துடித்தது . ஆனால் ஏதோ ஒன்று தடுக்க, அபி தன் கைகளை கொண்டு ஸ்ருதியின் தலையை மெதுவகா தடவிகொடுத்தான் . பின்பு ஸ்ருதியின் அழுகையை நிருத்துவதர்க்காக, அவளிடம் “ஏய் ஏன் இப்டி பண்ணுனிங்கனா என்னடி அர்த்தம்” என்றான் . அதற்கு ஸ்ருதி தன் தலையை அவன் மீதிருந்து லேசாக உயர்த்தி,”ம்ம்ம்ம்” என்று அவன் என்ன கூறுகிறான் என்பது புரியாது பார்த்தாள் .

உடனே அபி அவள் காதில்,”என்னகென்னவோ நா எதுவும் பண்ணலன்னு தான் நீ இப்டி அழுரியோன்னு தோணுது” என்று கூறி சிரித்தான், உடனே ஸ்ருதி அவனை அடிக்க தன் கையை ஒங்க, அபி உடனே தன் மொபைலில் இருந்து ஸ்ருதி பாடிய பாட்டை போட, இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர் .

பின்பு ஸ்ருதி,”என் பாட்டு என்ன அவ்வளவு கேவலமாவா இருக்கு” என்றாள்

அபிமன்யு,”ஒ மேடம்க்கு இந்த சந்தேகம் வேற இருக்கா, கழுத வரல” என்றான்

ஸ்ருதி,”ஹ்ம்ம் அதான் நீங்க வந்திங்கள்ள”என்றாள்

அபி உடனே முறைக்க

ஸ்ருதி,”சாரி சாரி” என்று பாவம் போல பார்க்க, அபிமன்யு மீண்டு இயல்பு நிலைக்கு வந்தான் . சில நொடிகளில் வருணிடம் இருந்து ஸ்ருதிக்கு கால் வந்தது.

அதை பார்த்த அபி தனக்குள்,”இவன் ஏன் இப்போ இவளுக்கு கால் பண்றான்” என்று நினைத்துக்கொண்டான் .

ஸ்ருதியிடம் வருண்,”ஸ்ருதி உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்” என்றான்

ஸ்ருதி,”என்ன சொல்லுங்க” என்றாள் .

வருண்,”அது வந்து உங்ககிட்ட இத எப்டி சொல்றதுன்னு தெரியல, இருந்தாலும் இத உங்ககிட்ட தான் சொல்லணும்” என்றான்

ஸ்ருதி,”சொல்ல ஒரு மாதிரியா இருக்குன்னூ சொல்றிங்க, என்கிட்ட தான் சொல்லனும்ன்னு சொல்றிங்க, என்ன மேட்டர் சார் தயங்காம சொல்லுங்க” என்றாள்.

இதை அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த அபியின் முகமே வாடியது, அபி தனக்குள்,”அப்டி என்ன இவன் ஸ்ருதிக்கிட்ட சொல்ல போறான்” என்று பல கேள்விகளை கேட்டுக்கொண்டான் .

வருண்,”உங்க friend சுவாதி இருக்காங்கல்ல”

ஸ்ருதி,”ஆமா”

வருண்,”அவங்கள எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு” – தயங்கியபடி ஆரம்பித்தவன் பட்டென்று கூறினான்

ஸ்ருதி,”வாட் ”  அதிர்ச்சியில் அபியை நோக்கியவள் , ” இதை நான் எதிர்பார்க்கவே இல்லை சார் …கொஞ்சம் டைம் குடுங்க நான் பேசுறேன் …ஆனா இப்போதைக்கு என்னால எந்த முடிவும் சொல்ல முடியாது, நா என் ஃப்ரண்ட்ஸ் கிட்ட கேட்டுட்டு உங்க கிட்ட பதில் சொல்றேன் “- அதிர்ச்சி குறையாமல் கூறினாள்

ஸ்ருதியின் இந்த பேச்சு அபியின் வற்றில் புலியோடு, வற்றலையும் சேர்த்து கரைத்தது.

வருண்,”நல்ல பதிலா சொல்லுங்க” என்று கூறி போனை வைத்தான் .

பிறகு ஸ்ருதி அபியை பார்த்து, “போலாமா” என்று கேட்டாள், அதற்க்கு அபி,”அதுக்கு முன்னாடி நா உன்கிட்ட கொஞ்சம் பேசனும்” என்றான் .

ஸ்ருதி “சொல்லுங்க” என்றாள்

அபிமன்யு,”நா உன்கிட்ட ஒன்னு கேப்பேன் ஆனா நீ உண்மைய மட்டும் தான் பேசனும்” என்றான்

ஸ்ருதி,”சரி கேளுங்க” என்றாள்

அபிமன்யு,”என்ன நடக்கு”

ஸ்ருதி,”என்னது என்ன நடக்குது”

அபிமன்யு,”அதான் போன்ல வருண் என்ன சொன்னான், இங்க பாரு என்கிட்ட எதுவும் மறைக்காத, ஆபீஸ்ல என்னனா ராஜேஷ் உன்கிட்ட கால்ல விலாத குறையா கெஞ்சிக்கிட்டு இருக்கான், போன்ல இவன், என்ன விஷயம், எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்” என்றான் .

ஸ்ருதி,”வருண் என்கிட்ட என்ன பேசுனான்னு உங்களுக்கு தெரியாதா என்ன” என்றாள் .

அபிமன்யு,”தெரியாதே, இங்க பாரு பேச்ச மாத்தாத”

ஸ்ருதி,”நோ நா ஒன்னும் பேச்ச மாத்தல, உங்களுக்கும் வருண் மேட்டர் தெரிஞ்சிருக்கும்லா நினச்சேன், உங்க கிட்ட கேட்டுட்டுலா அவரு பேசுறாருன்னு நினச்சேன்” என்றாள் .

அபிமன்யு,”எனக்கு ஒன்னும் தெரியாது, நீயே சொல்லு” என்றான் .

ஸ்ருதி வெயிட் நா சொல்றதவிட நீங்களே கேளுங்க என்று கூறி வருணனுக்கு போன் செய்து போன்னை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு,

ஸ்ருதி,”ஹலோ வருண்”

வருண்,”ஹலோ ஸ்ருதி, அதுக்குள்ளையும் சுவாதிகிட்ட பேசிட்டீங்களா” என்றான்

ஸ்ருதி,”சுவாதிகிட்ட  இன்னும் பேசல, ஆனா அதுக்கு முன்னாடி நா உங்க கிட்ட ஒன்னு கேக்கணும்”

வருண்,”என்ன சொல்லுங்க”என்றான்

ஸ்ருதி,”நீங்க உண்மையாவே என் friend ஸ்வாதிய லவ் பண்ரிங்கலான்னு தெரிஞ்சிக்கணும்” என்றாள்

வருண்,”என்னங்க இது எப்போ அவங்கள முதல் முதலா பாத்தேனோ,அப்போவே நா முடிவு பண்ணிட்டேங்க, அவங்க தான் என் wifeன்னு, யாரு வந்து சொன்னாலும் நா இனிமே மாற மாட்டேங்க”என்றான் .

அப்போது தான் அபிக்கு போன உயிர் திரும்ப வந்தது .

ஸ்ருதி,”உங்க அபி சார் சொன்னாலுமா” என்றாள் .

வருண்,”இப்போ எதுக்குங்க அவர பத்தி பேசிகிட்டு, அவருக்கு இது தெரியவே கூடாதுங்க”

ஸ்ருதி,”ஏன் வருண் இப்டி சொல்றிங்க, அபி சார் எவ்வளவு நல்லவரு” என்றாள்

வருண்,”நல்லவரு தாங்க, அவர விட நல்லவரு இந்த உலகத்திலேயே கிடையாது தான், அவரு எனக்கு அண்ணன் மாதிரி, மாதிரி என்னங்க அண்ணன் தான் . ஆனா இந்த மாதிரி லவ் மேட்டர்ல அவர மாதிரி ஒரு வில்லன்ன யாரும் பாக்க முடியாதுங்க, சரியான சகுனிங்க, அவர் romance விஷயத்துல கொஞ்ச வீக்கு, சுருக்கமா சொல்ல போனா, பிதாமகன் விக்ரம் மாதிரி அவரும் பீல் பண்ண மாட்டாரு, மத்தவங்களையும் பீல் பண்ண விடமாட்டாரு, அப்டியே தப்பி தவறி அவருக்குள்ள பீல் வந்தாலும் அத ஏத்துக்க மாட்டாரு” .. என்றான் .

இதை கேட்ட ஸ்ருதிக்கு சிரிப்பு வந்தது,”சரி நாளைக்கு ஆபீஸ்ல பேசிக்கலாம்”என்று கூறி போனை வைத்துவிட்டு, அபியை பார்த்து விழுந்து விழுந்து சிரித்தாள், அபிக்கு கோபம் வந்து,”அந்த வருண என்ன பண்றேன்னு பாரு, நாளைக்கு ஆபீஸ் வரட்டும் அவன் செத்தான் ” என்றான் .

ஸ்ருதி,”ப்ளீஸ் பாவம் ஒன்னும் பண்ணாதிங்க, அப்றோம் ராஜேஷ் பத்தி கேட்டிங்கள்ள, அதுக்கு காரணம் நீங்க தான்” என்றாள் .

அபிமன்யு,”நானா, நா என்ன பண்ணேன்” என்றான்

ஸ்ருதி,”ராஜேஷும் என் friend காவியாவும், காலேஜ் படிக்கும் போதே லவ் பண்றாங்க, ராஜேஷ்க்கு நீங்கன்னா ரொம்ப புடிக்கும், உங்களுக்கு boxing புடிக்கும் அதனால அவனுக்கும் boxing புடிக்கும், ஸோ அவன் உங்க அகாடமில வந்து சேந்து உங்க கிட்ட boxing கத்துக்கனும்ன்னு ஆசப்பட்டான், அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு உங்களுக்கு தெரியும், நீங்க அகாடமியவிட்டு போக சொன்னதுல அவன் கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ல இருந்தான் அப்போம் பாத்து காவியா அவன் கிட்ட உங்கள திட்டி பேசிருக்கா, அவ்வளவு தான் ராஜேஷ்க்கு கோபம் வந்து, அபி சார இப்டி திட்டி பேசறதா இருந்தா இனிமே என்கிட்ட பேசாதன்னு சொல்லிருக்கான், அவ்வளவு தான் ரெண்டு பேரும் கொஞ்ச நாளைக்கு பேசாமலேயே இருந்தாங்க, இப்போ ராஜேஷ் பேசனும்ன்னு நினைக்கறான், இவ முரண்டு புடிச்சிட்டு நிக்கறா” என்றாள் .

ஸ்ருதி,”இவ்வளவு தான் மேட்டர் இப்போ சொல்லுங்க யாரு காரணம்” என்றாள்

அபிமன்யு,”நா தான் காரணம், சரி அப்போ நா தான தீத்து வைக்கணும்”

ஸ்ருதி,”அதுக்கு என்ன பண்ண போறீங்க” என்றாள்

அபிமன்யு,”நீ நாளைக்கு ஆபீஸ் வரும் போது சுவாதி அப்றோம் காவியா ரெண்டு பேரையும் அவங்க கிட்ட எதுவும் சொல்லாம கூட்டிட்டு வா” என்றான்.

ஸ்ருதி,”என்ன விஷயம்” என்றாள்

அபிமன்யு,”அத நாளைக்கு ஆபீஸ் வருவேள அப்போம் உனக்கே தெரியும்” என்றான் .

ஸ்ருதி,”யஸ் பாஸ், சரி உங்க டவுட் கிளியர் ஆயிடுச்சா, இப்போவாது வண்டிய ஸ்டார்ட் பண்ரிங்களா” என்றாள் .

அபிமன்யு,”இன்னொரு டவுட் இருக்கு”

ஸ்ருதி,”கேளுங்க சந்தேகத்த உடனே கேட்டு தெரிஞ்சிக்கணும்” என்றாள்.

அபிமன்யு,”ஸ்ருதி எனக்கு ஒரு விஷயம் நல்லா நியாபகம் இருக்கு, பர்ஸ்ட் டைம் நாம மீட் பண்ணும் போது,நா உன் கைய புடிச்சேன் இங்கர ஒரே காரணத்துக்காக நீ என்ன அறஞ்ச, ஆனா இன்னைக்கு இவ்வளவு விஷயம் நடந்திருக்கு, நியாயப்படி என்ன நீ என்ன வேணும்னாலும் பண்ணிருக்கலாம் ஆனா நீ இன்னைக்கு எதுவுமே பண்ணாம அழுதுகிட்டு இருந்த . அதுக்கான காரணம் என்னன்னு எனக்கு புரியல” என்றான்

ஸ்ருதி அமைதியாக அபியின் கண்களை பார்த்து,”உங்கள அரஞ்சப்போம் நீங்க யாருன்னே என்னக்கு தெரியாது, எப்போம உங்க கூட வொர்க் பண்ண ஆரம்பிச்சனோ, அப்போ தான் உங்கள பத்தி தெரிஞ்சிகிட்டேன், நா நனைக்கற அளவுக்கு நீங்க ஒன்னும் கெட்டவர் இல்ல, அதனால உங்க மேல நா ரொம்ப பெரிய நம்பிக்க வச்சிருந்தேன், எங்க அதெல்லாம் போய்யா போயிருமோன்னு நினைச்சதுல கோபத்தவிட அழுகதான் வந்துச்சு” என்றாள் .

அபிமன்யு,”ஸ்ருதி என் மேல உனக்கு அவ்வளவு நம்பிக்க இருக்கா” என்றான்

ஸ்ருதி,”ம்ம்ம்” என்று கூறிவிட்டு தன் மனதிற்குள்,”என் உயிரவிட அதிகமா உங்கள நா நம்புறேன் சார் ஆனா அது உங்களுக்கு புரியனும்ன்னா, நீங்க உங்க மூளைக்கு கொஞ்சம் ரெஸ்ட் குடுத்துட்டு, மனசுக்கு கொஞ்சம் வேல குடுக்கணும்” என்றாள் .

அபி சரி இப்போ போலாமா என்றான்,அதற்கு ஸ்ருதி நா உங்க கிட்ட ஒன்னு கேக்கணும் என்றாள் .

அபி,”சரி கேளு” என்றான் .

“நீங்க என்ன எதுக்கு உங்க ஆபீஸ்க்கு கூட்டிட்டு வந்தீங்கன்னு உங்களுக்கு நியாபகம் இருக்கா, என்ன பழிவாங்கனும்ன்னு, ஆனா நீங்க என்ன பழிவாங்குனத விடா எனக்கு favour பண்ணது தான் அதிகம்” என்றாள் .

அபிமன்யு,”யார் சொன்னங்க நா உன்ன பழிவாங்கலன்னு” என்று கூறிவிட்டு அபி ஸ்ருதி முகத்தின் முன் தன் முகத்தை கொண்டு போய்,”ஐ அம் bad man, ஈஎஹஹ்ஹாஹ்” என்று பயமுருத்துவதை போல் நடித்தான் .

பின்பு இருவரும் சிரித்தனர்

ஸ்ருதி,”சார் நீங்க இன்னும் பதில் சொல்லல” என்றாள்

அபிமன்யு தனக்குள்,”இதுக்கான பதில் என் வார்த்தைகள் கிட்ட இல்ல, என் கண்கள் கிட்ட இருக்கு ஸ்ருதி, அதுக்கு நீ பூட்டி வச்சிருக்குற உன் மனச திறந்து பாக்கணும் அப்போ தான் உனக்கு புரியும்” என்று கூறிகொண்டான்.

பின்பு அவள்,”கஷ்டமா இருந்துச்சின்னா வேண்டாம், நானே புரிஞ்சிக்கரேன்” என்று தன் உதட்டோரமாக சிரித்தாள். பதில் சொல்ல முடியாமல் தவித்தான் 

” நீங்க டைம் எடுத்துக்கிட்டு பொதுவாவே சொல்லுங்க … இப்போ கிளம்பலாம் ” என்று புன்னகைத்தாள் …ஸ்ருதியை அவளது hostelலில் இறக்கி விட்டு விட்டு தன் வீடு திரும்பினான் .

சகுந்தலா,”என்னடா ஸ்ருதிய பத்தரமா கொண்டு போய் விட்டல” என்றாள்

அபிமன்யு லேசகா சிரித்துவிட்டு,”ஆமா மா ஆமா, பத்தரமா விட்டுடேன், சரி இப்போம் போய் நா தூங்கட்டா” என்று கூறி தன் அறைக்குச்சென்று, இன்று நடந்தததை நினைத்து, தன்னை அறியாமலே சிரித்துக்கொண்டிருந்தான் .

அங்கே ரூமில் ஸ்ருதி, தன் தோழிகளிடம் தனக்கும் அபிக்கும் நடந்ததை கூறவில்லை, மாறாக function, அப்றோம் ஆர்த்தி தன்னிடம் சாரி கேட்டது, சகுந்தலா தன்னிடம் அன்பாக நடந்துகொண்டது என்று அதை பற்றி மட்டும் தான் கூறினாள், பின்பு அபி அவர்களை தன் அகாடமிக்கு வரச்சொன்னதை கூறினாள் .இதை கேட்ட அவர்கள் ஏன் என்று கேட்டனர், அதற்கு ஸ்ருதி,”எனக்கு ஒன்னும் தெரியாது, அவரு நாளைக்கு உங்கள வரச்சொல்லிருக்காரு” என்று கூறினாள் . அவர்கள் என் விஷயம் என்று குழம்பிக்கொண்டிருந்தனர் . அப்போது ஸ்ருதி,”அதெல்லாம் ஒன்னும் இருக்காது, நா இருக்கேன்ல டென்ஷன் ஆகாம படுங்க, அபி ஒன்னும் கடிச்சிர மாட்டாரு, குட் நைட்” என்றாள் .

அதற்கு அவர்கள்,”என்னடி இப்போலாம் உனக்கு அபி சார் மேல பாசமழ பொழியுது, என்னடி விஷயம், உன் நடவடிக்க எதுவும் சரியில்லையே, கண்ணாடி முன்னாடி சிரிக்கற, நிலாவையே பாக்குற, அபிமன்யு சார்ன்னு சொன்னது போய் அபின்னு உரிமையா வேற சொல்ற” என்றனர் .

உடனே ஸ்ருதி ஒருவித வெக்கத்தோடு, “போங்கடி உங்களுக்கு வேலையே இல்ல படுங்க, குட் நைட்” என்றாள்.

அவர்களும் சிரித்துவிட்டு,”குட் நைட்” என்று கூறினார் .பின்பு அனைவரும் தூங்கினர், ஸ்ருதி மட்டும் அபியோடு தனக்கு நடந்ததை நினைத்து சிரித்துக்கொண்டிருந்தாள் .

முதன் முறையாக அபியும் ஸ்ருதியும், தங்கள் இருவருக்கும் உண்டான அந்த நேசத்தை சுவாசிக்க துடங்கிவிட்டனர் .

– தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!