Nenjathai Killathe 11

ஹலோ நண்பர்களே ,

நீங்கள்  இதுவரைக்கும் எனக்கு  கொடுத்த ஆதரவுக்கு மிக்க நன்றி . அதே ஆதரவை எதிர் பார்த்து  “நெஞ்சத்தை கிள்ளாதே” வின் அடுத்த   அத்தியாயத்தை பதிவிடுறேன் ..

 படித்துவிட்டு  உங்களது கருத்துக்களை தெரிவியுங்கள் ..

பகுதி 11:

என் சுவாசம் உன் மூச்சில்

நாம் விரும்புபவரின் சின்ன சிரிப்பு போதும், நம் மனக்கவலைகள் அத்தனையும் பறந்துபோய்விடும்.

“நீ விருபிம்ய ஒருவர்

உன்னை இருட்டில் விட்டுச்சென்றாலும்

உன் இருட்டிற்கு வெளிச்சமாய்

உன்னை விரும்பும் ஒருவர் உனக்காக வருவார்

என்பதை மறந்துவிடாதே”

கதிரவனின் விடியலுக்காக காத்துக்கொண்டிருந்த ஸ்ருதி என்றைக்கும் விட இன்று உற்ச்சாகமாக அகாடமிக்கு கிளம்பினாள். ஆனால் காவியாவும் சுவாதியும் ‘ஏன் அபி சார் நம்ம வரசொல்லிருப்பாரு ” என்ற குழப்பத்தோடே கிளம்பிக்கொண்டிருந்தனர் .

அங்கே அகாடமியில் அபியின் அறையில் அபி மிகவும் கோபமாக இருப்பதை போல நடித்துக்கொண்டிருந்தான், இதை பார்த்த ராஜேஷும் வருணும் ஒரு வித பயம் கலந்த குழப்பத்தோடே இருந்தனர், பின்பு வருண் ஒரு வழியாக தயிரியத்தை வரவழைத்துக்கொண்டு,

 

“என்ன விஷயம் சார் ஏன் டென்ஷனா இருக்கீங்க” என்று கேட்டான் .

 

அபி வருணனை முறைத்துபார்த்து,”ஏன் இப்போவே சொல்லணுமோ “என்று அதட்டினான்,உடனே ராஜேஷ்,

 

“அதெல்லாம் ஒன்னு இல்ல சார், உங்களுக்கு எப்போ தோணுதோ அப்போம் சொல்லுங்க” என்றான் .

 

பின்பு ஒரு வழியாக ஸ்ருதியும் அவளது தோழிகளும் அகாடமி வந்து சேர்ந்தனர்.

 

அபியின் அறையில் ஸ்ருதியுடன், காவியாவையும், சுவாதியையும் பார்த்ததும் ராஜேஷும், வருணனும் அதிர்ச்சியில் தங்களின் நாற்காலியை விட்டு எழும்பி நின்றனர் . வருணும், ராஜேஷும் என்ன விஷயம் என்பதை போல ஸ்ருதியை தங்களின் புருவம் உயர்த்தி பார்த்தனர், ஸ்ருதியோ ஒன்று தெரியாததை போல் முகத்தை காட்டினாள் .

 

அபிமன்யு,”இதுல சுவாதி யாரு” என்று கேட்டான் .

 

சுவாதி,”நா தான் சார்” என்றாள்

 

அபிமன்யு,”சரி அப்போ நீங்க தான் காவியாவா” என்று காவியாவை பார்த்து கேட்டான்.

 

காவியா,”ஆமா சார்” என்றான் .

 

அபிமன்யு,” சரி நீங்களும், ராஜேஷும் போய், உள்ள என் ரெஸ்ட் ரூம்ல வெயிட் பண்ணுங்க” என்றான்

 

ரெண்டு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து முழிக்க

 

அபிமன்யு,”போங்கன்னு சொன்னேன்” என்று சற்று அழுத்தமான குரலில் கூறினான்,உடனே ரெண்டு பேரும் அங்கிருந்து, அபி ஒய்வெடுக்கும் அறைக்குள் நுழைந்தனர் .

 

அவர்கள் சென்ற பிறகு,

 

அபி வருணை தன் பக்கம் அழைத்து, அவன் தோளில் தன் கையை போட்டு, ஸ்ருதியிடம்,

 

அபிமன்யு,”ஸ்ருதி உங்களுக்கு தெரியாததெல்லாம் ஒன்னும் இல்ல வருண் என் தம்பி மாதிரி, வருணனுக்கு உங்க friend ஸ்வாதிய ரொம்ப புடிச்சிருக்கு,ஸோ என் தம்பி வருணனுக்கு உங்க friend ஸ்வாதிய கல்யாணம் பண்ணி வைக்க சம்பந்தமா” என்று கேட்டான் .

 

ஸ்ருதி,”உக்காந்து பேசலாமா” என்றாள்

 

அபிமன்யு,”sure ப்ளீஸ்” என்றான் .

 

ஸ்ருதி,”எல்லாம் சரி தான், பையன பத்தி எதுவும் தெரியாம எப்டி பொண்ண குடுக்க முடியும் சார்”என்றாள் .

 

அபிமன்யு,”என்ன இப்டி சொல்லிட்டீங்க, பையன் ரொம்ப தங்கமானவன்ங்க எந்த கெட்ட பழக்கமும் கடயாது, உங்க friendஅஹ கண்கலங்காம பாத்துக்குவான்” என்றான்

 

ஸ்ருதி,”வந்ததுல இருந்து நீங்க தான் சொல்லறிங்க, பையன் ஒன்னும் சொல்ல மாட்டிக்காப்புல” என்றாள்

 

அபிமன்யு,”என்ன இப்டி சொல்லிட்டீங்க, என்னடா வருண் உனக்கு ஒகே தான” என்றான்.

 

சந்தோஷ அதிர்ச்சியில் இருந்த வருண் அபியை பார்த்து,பூம் பூம் மாடைபோல தன் தலையை ஆட்டினான் .

 

அபிமன்யு,”பாதீங்கள்ள, பையன் எவ்வளவு ஆர்வமா இருக்கான், இப்போ விட்டா போதும் iyerரே இல்லாம தாலி கெட்டிருவான், எங்க சைடு எந்த பிரச்சனையும் இல்ல, உங்க சைடு கேட்டு சொல்லுங்க” என்றான் .

 

ஸ்ருதி,”இதோ கேக்றேன், என்று சுவாதியை பார்த்து,என்ன டி பையன புடிச்சிருக்கா” என்றாள்

 

சுவாதி எதுவும் கூறாமல் தன் தலை குனிந்து அமைதியாக நின்றுக்கொண்டிருந்தாள், உடனே ஸ்ருதி, வருணனை பார்த்து,

 

“தம்பி பொண்ணுக்கு உன்னை புடிக்கலயாம் பா” என்றாள், உடனே, சுவாதி “ஆஹ்” என்றாள் . அப்போது ஸ்ருதி,

 

ஸ்ருதி,”பையன புடிக்கல அப்டிதான”

 

சுவாதி, இல்லை என்பதை போல் தலையை ஆட்டினாள்.

 

ஸ்ருதி,”அப்போ புடிச்சிருக்கு அப்டித்தான” என்றாள், உடனே சுவாதி வெட்கத்தில் ஆம் என்பதை போல் தன் தலையை ஆட்டினாள் .

 

பின்பு நான்கு பேரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர் .

 

பின்பு ரெஸ்ட் ரூமில் ராஜேஷ் காவியாவிடம்,

 

ராஜேஷ்,”காவியா ப்ளீஸ் டா, சாரி மா தெரியாம அப்டி சொல்லிட்டேன்” என்றான் .

 

காவியா,”உன் மனசுல எவ்வளவு தய்ரியம் இருந்தா என்கூட பேச மாட்டேன்னு சொல்லுவ”

 

ராஜேஷ்,”நா தான் தெரியாம சொல்லிட்டேன்னு சொல்றேன்ல மா, அன்னைக்கு நீ சார திட்னதும் கோபம் வந்துட்டு, சாரி மா”

 

காவியா,”ஆமா நா திட்னேன் தான்,அதுக்காக என்ன பேசாதன்னு சொல்லிருவியா” என்றாள்

 

ராஜேஷ்,”நீயும் தான என்கூட பேசாதன்னு சொன்ன”

 

காவியா,”நா சொல்லுவேன், ஆயிரம் சொல்லுவேன், சொன்னா பேசமாட்டியா”

 

ராஜேஷ்,”அப்டிலாம் இல்ல டா செல்லம்”

 

காவியா,”இதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல”

 

ராஜேஷ்,”காவ்ஸ்”

 

காவியா,”என்ன டா, சரி எல்லாம் போட்டும், அகாடமில மறுபடியும் join பண்ணிருக்க, அதயாது சொன்னியா” என்றாள்

 

ராஜேஷ்,”அத சொல்ல தான் நா உனக்கு அன்னைக்கு அவ்வளவு தடவ, கால் பண்ணேன், நீ தான் அட்டெண்ட் பண்ணவே இல்ல”

 

காவியா கோபத்தில் தன் முகத்தை வேறுபக்கமாக திருப்பிக்கொண்டிருக்க

 

ராஜேஷ்,”ப்ளீஸ் டியர்” என்றான் .

 

காவியா ராஜேஷின் காதை புடித்து திருக்கி,”இனிமே என்கிட்ட பேசமா இருப்ப” என்றாள்.

 

ராஜேஷ் ஆஹ் என்று கத்தி,”promise டா இனிமே அப்டி பண்ண மாட்டேன்” என்றான்

 

காவியா,”promise” என்று கேட்டாள்

 

அவன் ஆமா சத்தியமா என்று கூறியவுடன், காவியா ராஜேஷின் தோளின் மேல் சாயிந்து கொண்டாள்.

 

பின்பு இருவரும் தங்களின் சண்டையை மறந்து ஒன்று சேர்ந்தனர் .

 

வருண், வெயிட் உள்ள ஒரு ஜோடிய அனுப்புனோமே அவங்க என்ன ஆனாங்கனே தெரியலயே, முதல்ல அவங்கள போய் பாப்போம் என்று கூறி வருண் கதவை திறக்க, ராஜேஷ் காவியாவின் தோளின் மேல் சாயிந்து கொண்டிருந்தான் . அப்போது அபி ராஜேஷின் அருகில் வந்து, ராஜேஷ் என்றான், அபியின் குரலை கேட்ட ராஜேஷ் சார் நீங்களா என்றான் .

 

அபிமன்யு,”என் ஆபீஸ்ல நா இல்லாம வேற யாருடா இருப்பாங்க, என்னடா பண்ணிக்கிட்டு இருக்க, உங்கள நான் உள்ள போங்கன்னு தான சொன்னேன்” என்றான் .


ராஜேஷ்,”சாரி சார்” என்றான்

 

பின்பு நான்கு பேரும் சேர்ந்து ராஜேஷை பார்த்து சிரிக்க, அபியின் விளையாட்டை புரிந்து கொண்ட ராஜேஷும் காவியவும் சேர்ந்து சிரித்தனர் . அபி அனைவர்க்கும் தான் வாங்கிட்டு வந்த இனிப்பை கொடுத்தான்…

காவியா, ஸ்ருதி, சுவாதி மூவரும் கெட்டி அணைதுக்கொண்டனர் அப்போது ஸ்ருதி அபியை பார்த்து,”தேங்க்ஸ்” என்று சத்தமில்லாமல் தன் உதட்டை மட்டும் அசைத்து கூறினாள். அபி அதற்கு பதில் கூறுவதை போல தன் கண்களை அசைத்தான் .

 

பிறகு வருண் அபியிடம் வந்து,”தேங்க்ஸ் அபி அண்ணா” என்று தன் கண்கலங்க கூறினான் .

 

அப்போது அபி,”என்ன டா நீ சந்தோஷமான நேரத்ல போய் கண்களங்கிட்டு” என்று வருணனை அணைத்துக்கொண்டான்.

 

பின்பு வருணனை பார்த்து,”ஏண்டா, என்ன பாத்தா நிஜமாவே பிதாமகன் ‘ விக்ரம்’ மாதிரியா இருக்கு” என்றான்

 

வருண்,”லைட் ஆஹ்” என்றான்

 

அபி உடனே முறைத்து பார்க்க, வருண்,”சாரி” என்றான், பின்பு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர்.

 

அனைவரும் பேசிக்கொண்டிருக்க, ஸ்ருதி மட்டும் அபியோடு தன் கனவுலகத்தில் மிதந்து கொண்டிருந்தாள், பின் தன் நிலைக்கு வந்த ஸ்ருதி, அபியை பார்த்து சிரித்து விட்டு, அங்கிருந்து வெளியே சென்றாள்.

 

அபி தன்னை பார்த்து ஸ்ருதி சிரித்துவிட்டு வெளியே செல்வதை பார்த்து அவனும் சென்றான்,  ஸ்ருதியிடம்,”ஏன் இங்க வந்துட்ட” என்று கேட்டான்.

 

ஸ்ருதி,”சும்மா தான்”என்றாள் .

 

அபி தன் அருகில் வர வர ஸ்ருதிக்கு அவளது இதயம் வேகமாக அடித்தது,

 

அபி ஸ்ருதியிடம்,”இன்னைக்கு நீ ஏன் ஒரு மாதிரியா இருக்க” என்றான்

 

ஸ்ருதி,”அதெல்லாம் ஒன்னும் இல்ல” என்றான்

 

அபிமன்யு,”அப்டியா ஆனா உன் கண்ணு என்கிட்ட எதோ சொல்லனும்ன்னு துடிக்கற மாதிரி இருக்கே” என்றான் .

 

ஸ்ருதி,”அப்டிலாம் ஒன்னும் இல்ல, நா உள்ள போறேன்” என்று அங்கிருந்து செல்ல முயன்றாள், அப்போது அபி ஸ்ருதியின் கையை பிடித்து,

 

“அப்டில்லாம் ஈஸியா எஸ்கேப் ஆக முடியாது” என்று அவளை தன் பக்கம் இழுத்து அவளிடம்,”என்ன விஷயம் எதுவா இருந்தாலும் பரவாயில்லா” என்றான்

 

ஸ்ருதி,”அப்டியா ஹ்ம்ம், உங்களுக்கு சொல்றதுக்கு எதுவும் இல்லையா” என்றாள் .

 

அபி ஸ்ருதியிடம்,”லேடீஸ் first நீயே சொல்லு” என்றான்

 

ஸ்ருதி,”அபி யாரவது வந்தற போறாங்க” என்றாள்

 

அபிமன்யு,”ஐ டான்’ட் கேர்” என்றான்

 

ஸ்ருதி மெல்லிய குரலில்,”அபி” என்றாள்

 

அபிமன்யு தன் வருடும் குரலில் ஸ்ருதியின் காதில்,”என்ன” என்றான்

 

இருவரும் சிரித்துக்கொண்டிருக்க, அந்த நேரம் “அபிமன்யு” என்று ஒரு குரல் கேட்டது.

 

அந்த நபரை பார்த்தவுடன், அபியின் உதட்டில் இருந்த சிரிப்பு மறைந்து, அபியின் கண்கள் அக்னியின் ஜுவாலையாக மாறியது, ஸ்ருதியும் ஒன்று புரியாமல் அபியையே பார்த்துக்கொண்டிருந்தாள் .

 

அந்த நபருடன் ஒரு பெண்ணும் வந்திருந்தாள்.

 

அந்த நபர் அபியின் அருகில் வந்து,”Congratulation” என்று தன் கையை நீட்டினான் .

 

அபி,”அஷோக் நீ இங்க என்ன பண்ற” என்றான்

 

அஷோக்,”என்ன பா இது congratsன்னு சொல்லி கை குடுக்கறேன், ஒரு மனர்ஸ்க்கு கூட கை குடுக்காம, நா இங்க என்ன பண்றன்னு கேக்குற……

நீ செகண்ட் டைம்மும் சாம்பியன் ஆனதுக்கு நாங்க தான் first விஷ் பண்ணனும்ன்னு நினச்சேன், ஆனா என்ன பண்றது foreign போயிருந்தோம் அதான் உடனே விஷ் பண்ண முடியல…

ஆமா இது யாருன்னு தெரியுதா, உன் லவர் தான், சாரி சாரி உன்னோட எக்ஸ் லவர், என்னோட wife ஆஷா அஷோக் குமார் இல்ல மறந்துட்டியோன்னு நினச்சேன், ஆமா நாங்க எதுக்கு பாரின் போனோம்ன்னு கேக்க மாட்டியா, ஹ்ம்ம் நீ கேக்க மாட்ட, நானே சொல்றேன், honey moon போயிட்டு வந்தோம், செமையா இருந்துச்சு” என்று அபியிடம் மட்டமாக பேசினான் .

அபிமன்யு,” அது என்னன்னா  அசோக்  நான் எதை எல்லாம் வேண்டாம்ன்னு குப்பையிலே போடுறேனோ அதெல்லாம் உனக்கு நல்லா பொருத்தமா  இருக்கு  … congrats mrs அஷோக் குமார், honeymoon ட்ரிப் எல்லாம் எப்டி இருந்துச்சு” என்று அபி பதிலுக்கு நக்கலாக கேட்டான் .

 

அதற்கு ஆஷா எதுவும் கூறாமல் அப்படியே, அபியை ஆணவத்தோடு பார்த்துக்கொண்டிருந்தாள் .

 

அதற்குள் வருண், ராஜேஷ், சுவாதி,காவியா நால்வரும் அங்கே வந்தனர்.

 

வருணனை பார்த்து அஷோக் .

 

அஷோக்,”வாங்க வருண் சார், ராமனுக்கேத்த லக்ஷ்மணன், வருண் பேசாம உன் பேர வருண்க்கு பதிலா, லக்ஷ்மணன்னு மாத்திரு பொருத்தமா இருக்கும்” என்றான் .

அபிமன்யு அஷோக்கை அடிக்க வர, வருண் அதற்குள் .

 

வருண்,”அஷோக் ப்ளீஸ் இங்க இருந்து போங்க” என்றான் .

 

அஷோக்,”என்ன அபி கைய முறுக்குற என்ன விஷயம்  வருண்  உன் அண்ணன் கிட்ட சொல்லிவை ஓவராஹ் துள்ள வேண்டாம்ன்னு” என்று கூறினான் .

 

அப்போது ஸ்ருதி அபியின் கையை பிடித்துருப்பதை பார்த்தவன், வஞ்சகமாக சிரித்துவிட்டு, அபியின் காதில், ஸ்ருதியை பார்த்து ,

“இது என்ன புது லவ் ஆஹ், பாத்துப்பா, ஆஷா உன்ன விட்டுட்டு என்கூட வந்த மாதிரி, இவளும் உன்ன விட்டுட்டு வருண் கூட போயிற போறா” என்றான் .

இதை கேட்ட அபிக்கு கோபம் வந்து, ஸ்ருதியின் கையை தன் கையில் இருந்து விலக்கி விட்டுவிட்டு, அஷோக்கை தாறுமாறாக போட்டு அடித்தான், எல்லோரும் அபியை தடுக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தார்கள், ஆனால் அபி யார் பேச்சையும் கேக்காமல் அஷோக்கை விளாசு விளசென்று விளாசி விட்டான். பின்பு ஸ்ருதி தனது பல முயற்ச்சிக்கு பின் அபியை நிதானத்திற்கு கொண்டு வந்தாள்.

 

அப்போது அஷோக், அபியிடம்”ஆறு வர்ஷத்துக்கு முன்னாடி என் மேல கைவச்ச,நம்பர் ஒன்னா இருந்த நீ, ஜீரோவான, இப்பவும் என் மேல கை வச்சி நீ பெரிய தப்பு பண்ணிட்ட, இந்த முறை நா உன்ன சும்மா விட மாட்டேன் டா, உன்ன நா boxing வேர்ல்ட விட்டே ஓட வைக்கல, என் பேரு அஷோக் இல்ல டா” என்றான் .

 

அபிமன்யு,”போடா டேய், உன்னால முடிஞ்சத பாத்துக்கோ டா என்னோட கொஞ்ச அடியவே தாங்கிக்க முடியல, நீயெல்லாம் என்கிட்ட சவால் விடுற, போடா போய் முதல்ல hospitalலுக்கு போய் உன் உடம்புல எத்தன எலும்பு மிஞ்சிருக்குன்னு பாரு, அப்றோம் என்ன என்ன பன்னனும்மோ பண்ணு” என்றான் .

 

ஆஷா அபியை பார்த்து முறைக்க, அபி,”என்னடி முறைக்க கொன்னுருவேன், போ ஒழுங்கா உன் மானம்கெட்ட புருஷன இங்க இருந்து கூட்டிட்டு போ, இனிமே நீங்க என் கண்ணுலேயே பட கூடாது, அப்றோம் இப்டி வச்சி பேசிட்டு இருக்க மாட்டேன், கெளம்புடி” என்றான்

 

ஆஷா முறைத்துகொண்டே அஷோக்கை அங்கிருந்து கூட்டிச்சென்றாள்.

 

ஸ்ருதி ஒரு வித சோகத்தோடு அபியை பார்த்தாள், ஆனால் அபி ஸ்ருதியிடம் எதுவும் பேசாமல், வருணிடம் மட்டும் தான் வீட்டுக்கு போவதாக கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் . ஸ்ருதி அபியின் பின்னால் போக முயற்சிக்கும் போது வருண்,” விடுங்க ஸ்ருதி, அவரே சரி ஆய்டுவாரு” என்றான் .

 

அப்போது ஸ்ருதி, வருணிடம்,”அவங்களாம் யாரு, ஆஷாவும் அபியும் உண்மையாவே லவ் பண்ணாங்களா ப்ளீஸ் சொல்லுங்க வருண்” என்றாள்,

 

வருண்,”உங்க கிட்ட சொல்றதுல்ல என்ன, அந்த அஷோக் கூட வந்ருந்தாங்கள்ள ஆஷான்னு, அவங்களும் அபி சாரும் ஸ்கூல் படிக்கும் போதே ஒருத்தர ஒருத்தர் லவ் பண்ணாங்க.

அந்த அஷோக்கும், அபிசாரும் boxing அகாடமில ஒன்னா படிக்கும் போது தான் பிரெண்ட்ஸ் ஆனாங்க, போக போக ரெண்டு பேரும் ரொம்ப நல்ல பிரெண்ட்ஸ் ஆய்ட்டாங்க . அது முலமா ஆஷாவும் அந்த அஷோக்கும் கூட நல்லா பழக ஆரம்பிச்சாங்க . நா அந்த அகாடமில பார்ட் டைம்ஆஹ் வொர்க் பண்ணிகிட்டே படிச்சிட்டு இருந்தேன்,அபி சார் என்ன அவங்களோட சொந்த தம்பி மாதிரி தான் பாத்துக்குவாங்க…

எப்போலாம் என்னால பீஸ் கெட்ட முடியலையோ அப்போலாம் சார் தான் எனக்காக கெட்டுவாரு, என்னால ரூம் வாடக குடுக்க முடியாம போச்சு, அப்போ சார் என்ன அவங்க வீட்ல தான் தங்க வச்சாரு, சகுந்தலா அம்மாக்கு சார் ஆஷாவ லவ் பண்றது சுத்தமா புடிக்கல, இதனால சாருக்கும் அம்மாக்கும் அடிக்கடி வாக்குவாதம் வரும் . சார் ஆனா ரொம்ப பிடிவாத மா இருந்தாரு, சார் அவங்க ரெண்டு பேரையும் ரொம்ப நம்புனாரூ,அவருக்கு போய் இவங்க துரோகம் பண்ணுவாங்கன்னு நா நினைக்கல .

அன்னைக்கு வெள்ளி கிழம எனக்கு நல்லா நியாபகம் இருக்கு, நா university first வந்ததால சார் எனக்கு ஷர்ட் வாங்கி குடுக்கறதுக்காக டிரஸ் கடைக்கு கூட்டிட்டு போனாங்க, அப்போ எனக்கு டிரஸ் வாங்கிட்டு இருக்கறப்போம், அங்க ஆஷாவும், அஷோக்கும் ஒன்னா trial ரூம்ல இருந்து வந்தாங்க, ரொம்ப நெருக்கமா வேற இருந்தாங்க, அத பாத்த சாரோட முகமே வாடிருச்சு…

உடனே அவரு ஆஷாவுக்கு போன் பண்ணாரு, அவங்க தான் வீட்ல இருக்கறதா போய் சொல்லிட்டாங்க . தான் நம்புரவங்களே தனக்கு துரோகம் பண்ண்றத அபி சாரால தாங்க முடியல, சார் அந்த நேரமே மனசொடஞ்சி போயிட்டாரு, இத பத்தி ஆஷா கிட்ட கேட்ட போது, ஆஷா அஷோக்க தான் புடிச்சிருக்குன்னு சொல்லிட்டாங்க…

அந்த கோவத்துல அகாடமிக்கு வந்தவரு committee மெம்பெர்ஸ் முன்னாடி அஷோக்க தாருமாறா அடிச்சிட்டாறு, அதனால committee மெம்பெர்ஸ் அபி சார் மேல disciplinary action எடுத்து ஒரு வர்ஷம் suspend பண்ணிட்டாங்க, அந்த தடவ நடக்க இருந்த district லெவல் tournament finalist லிஸ்ட்ல அபி சாரோட பேர எடுத்துட்டு, அஷோக் பேர சேத்துட்டாங்க,அப்றோம் அஜயோட அப்பா, ஸ்ரீநிவாசன் சார் தான் அபி சாருக்காக recommend பண்ணி suspensionனுக்கு பதிலா வெறும் பைன் மட்டும் வர்ற மாதிரி ஏற்ப்பாடு செஞ்சாரு, இதனால தான் சார் லவ் நாலே வெருக்காறு, மத்தபடி சார் ரொம்ப நல்லவரு” என்றான் .

பின்பு அவர்களிடம் விடை பெற்று கொண்டு, காவியாவும், சுவாதியும் அங்கிருந்து சென்றனர் . ஸ்ருதி அபியை பற்றிய உண்மை தெரிந்ததில் கவலையாகி சோகமாக தன் காபின்குள் சென்றாள் .

அபி தன் வீட்டில் சகுந்தலாவின் மடியில் படுத்துக்கொண்டு,”மா இன்னைக்கு ஸ்ருதிக்கிட்ட என் மனசுல உள்ளத எப்டியாவது சொல்லனும்ன்னு இருந்தேன், ஆனா அப்போ பாத்து அந்த அஷோக் அங்க வந்துட்டான் மா, எனக்கு என்ன பண்றதுனே புரியல, நா எவ்வளவோ பொறுமையாதான் இருந்தேன் ஆனா அவன் என்கிட்ட ஸ்ருதிய பத்தி தப்பா பேசுனான் மா, அதான் என்ன மீறி அவன நா அடிச்சிட்டேன், அதுக்கு மேல அங்க என்னால இருக்க முடியல, மா எனக்கு ஒன்னு தெரியனும், எனக்கு இந்த காதல் கல்யாணம்லாம் ஒத்து வருமாமா, ஸ்ருதிய என்னால ஒழுங்கா பாத்துக்க முடியுமாமா, எனக்கு ரொம்ப confusionனா இருக்கு . நால பின்ன என்னால அவ hurt ஆய்ட கூடதுமா, அவளோட மனச உடைக்குரதுல எனக்கு எந்த விருப்பமும் இல்ல, அத என்னால தாங்கிக்கவும் முடியாது” என்றான்.

 

சகுந்தலா,”என்னடா உனக்கு confusion ஸ்ருதிய உன்னால ஒழுங்கா பாத்துக்க முடியுமானா, சரி எனக்கு ஒரு பதில் சொல்லு, நீ என் அஷோக்க அடிச்ச”

 

அபிமன்யு,”அவன் ஸ்ருதிய பத்தி தப்பா பேசுனான், அதான் அடிச்சேன்”

 

சகுந்தலா,”யாருடா அந்த அஷோக், அவன் ஸ்ருதிய தப்பா பேசுனதே உன்னால தாங்கிக்க முடியாதப்போம், உன்னால மட்டும் எப்டி டா ஸ்ருதியோட மனச காயப்படுத்த முடியும், உன்னால கனவுல கூட ஸ்ருதிய கஷ்ட படுத்தி பாக்க முடியாது டா, ஸோ தயிரியமா போய் ஸ்ருதிகிட்ட உன் மனசுல உள்ளத சொல்லு, ம்ம்ம்ம் சரியா” என்றார் .

 

இதைக்கேட்ட அபி,”யு ஆர் ரைட் மா, நீ என் செல்ல அம்மா என்று தன் தாயின் கன்னத்தை பிடித்து கிள்ளிவிட்டு, இன்னைக்கே ஸ்ருதிகிட்ட என் மனசுல உள்ள சொல்லறேன்”என்று கூறி தன் காரில் பறந்தான் .

 

சகுந்தலா,”ஒரு வழியா ரெண்டு பேரும் சேர்ந்தா அதுவே எனக்கு போதும்” என்றார்.

 

அகாடமியில் இருந்து தனது hostelலுக்கு, வந்த ஸ்ருதி அன்றைக்கு நடந்ததை நினைத்து சோகமாகவே இருந்தாள்.

 

காவியாவும், சுவாதியும் அபியை பற்றி,”இவ்வளவு நல்லவரா இருக்காரு, இவருக்கு போய் துரோகம் பண்ணிருக்காங்களே” என்று பேசிக்கொண்டிருந்தனர் .

 

அப்போது பாத்து ஸ்ருதிக்கு தனது கல்லுரி தோழி ப்ரியாவிடம் இருந்து கால் வந்தது, ப்ரியா ஸ்ருதியின் கல்லுரி தோழி, மிகவும் வசதி படைத்தவள், தனது அப்பாவின் கம்பெனியை பார்த்துக்கொண்டிருக்கிறாள் ..

 

ஸ்ருதி,”சொல்லுடி ப்ரியா எப்டி இருக்க” என்றாள்

 

ப்ரியா,”நா நல்லா இருக்கேன்டி, சாரி டி நீ அன்னைக்கு ஜோ ஆபரேஷன்க்காக பணம் கேக்கும் போது நா குடுக்கற நிலமையில இல்லடி” என்றாள்

 

ஸ்ருதி,”அதெல்லாம் ஒன்னும் இல்லடி, நீ எவ்வளவு ஹெல்ப் பண்ணிருக்க, நா உன்ன தப்பா நினைப்பேன்னா” என்றாள்

 

பிரியா,”உங்கிட்ட ஒரு முக்கியமான மேட்டர் பேசத்தான் நா கால் பண்ணேன்” என்றாள்

 

ஸ்ருதி,”சொல்லுடி” என்றாள்

 

ப்ரியா,”ஸ்ருதி நீ வேல வேணும்ன்னு கேட்ருன்தல்ல, ஒரு சூப்பர் offerடி டொமைன் cloud computingடி, என்ன சொல்ற” என்றாள்

 

ஸ்ருதி,”அப்டியா டி ஆனா சாரி டி என்னால இந்த offerர ஏத்துக்க முடியாதுடி, ஏன்னா இப்போம் நா ஒரு கம்பெனில already வேல பாத்துக்கிட்டு இருக்கேன்டி” என்றாள்

 

ப்ரியா,”ஒ அப்டியா, சரிடி ஒருவேள உனக்கு தெரிஞ்சவங்க யாரும் இருந்தாங்கனா எனக்கு சொல்லு சரியா, அப்றோம் ஸ்வாஸ், கவி எல்லாரும் எப்டி இருக்காங்க, எல்லாரையும் கேட்டதா சொல்லு சரியா, நா போன்ன வச்சிர்றேன்” என்று கூறினாள்.

 

ஸ்ருதி,”சரி டி டேக் கேர்” என்று கூறி போனை வைத்தாள்.

 

சுவாதி,”யாரு டி போன்ல”

 

ஸ்ருதி,”பிரியாடி, முன்னாடி வேல விஷயமா, பேசிருன்தேன்ல, ஒரு வேல இருக்கு பாக்றியான்னு கேட்டா, நா முடியாதுன்னு சொல்லிட்டேன் டி”

 

சுவாதி,”ஒ அப்டியா, சரி டி நீ ப்ரெஷ் ஆய்ட்டு வா” என்றாள்

 

ஸ்ருதி,”சரி டி” என்று கூறி அங்கிருந்து சென்றாள் .

 

பின்பு ஸ்ருதி ப்ரெஷ் ஆகிவிட்டு, தன் தோழிகளுடன் வந்து அமர்ந்து அபிக்கு கால் பண்ணலாமா வேண்டாமா என்று தன் போனையே பார்த்துக்கொண்டிருந்தாள்,

 

அப்போது பார்த்து அபியிடம் இருந்து கால் வந்தது,

 

ஸ்ருதி,”ஹலோ” என்றாள்

 

அபிமன்யு,”சீக்கரம் வா நா உன் hostelலுக்கு கீழ தான் வெயிட் பண்றேன்” என்றான்

 

ஸ்ருதி அடுத்த வார்த்தை பேசுவதற்குள் தனது போனை துண்டித்துவிட்டான், ஸ்ருதி தன் தோழிகளிடம் கூறி விட்டு கீழே வந்தாள், அங்கே அபி அவளுக்காக காத்துக்கொண்டிருந்தான், ஸ்ருதி காரின் அருகில் வந்து கதவை திறக்காமல் தயக்த்துடனே நின்றுகொண்டிருந்தாள், அபி காரின் கண்ணாடியை இறக்கி விட்டுவிட்டு,ஸ்ருதியிடம்,”என்ன கனவு கண்டுட்டு இருக்க, வந்து உக்காருன்னு சொன்னதான், ஏறுவியா ஹ்ம்ம், வா வந்து உக்காரு” என்றான் .

 

ஸ்ருதி,”நா வரல என்னன்னு இப்போவே சொல்லுங்க” என்றாள்

 

அபி,”அடீங்கு, இப்போ வர போறியா இல்லையா” என்று அவன் கொஞ்சம் அதட்டலாக கூற

 

ஸ்ருதி, “சரி சரி” என்று கூறிக்கொண்டே வந்து அமர்ந்தாள்

 

ஸ்ருதி அமர்ந்த அடுத்த நிமிடம் கார் புயல் வேகத்தில் பரந்தது, ஸ்ருதி மெதுவாக அபியிடம்,”இப்போம் நாம எங்க போறோம்” என்றாள் .

 

அபிமன்யு,”அததான்ன பாத்தேன்,இன்னும் ஆரம்பிக்கலயேன்னு, எங்க,ஏன்,எப்டி எத்தன கேள்வி தான் கேப்ப, ஐ அம் சாரி நீ எத்தன தடவ கேட்டாலும் இப்போதைக்கு உனக்கு பதில் கடைக்காது ஸோ silentடா வா என்றான்”

 

ஸ்ருதி,”ம்ம்ம்ம்” என்றாள்

 

ஸ்ருதி,”கொஞ்சம் மெதுவா போங்களேன்” என்றாள் .

 

அபிமன்யு ஸ்ருதியின் அருகில் வந்து மெதுவாக “ஏன்” என்றான்

 

ஸ்ருதி,”எனக்கு பாஸ்டா போன்னா பயமா இருக்கும்”

 

அபிமன்யு பாவம் போல முகத்தை வைத்துக்கொண்டு ‘ரொம்ப பயமா’ என்று கிண்டல் செய்தான், இதை புரிந்து கொள்ளாத

 

ஸ்ருதி,”ஆமா” என்றாள், உடனே அபி தன் முகத்தை சீரியஸாக மாற்றிக்கொண்டு,”எனக்கு பாஸ்டா போறதுதான் புடிக்கும்” என்றான் .

 

உடனே ஸ்ருதி அபியை பார்த்து அலவம் காட்டிவிட்டு அந்த பக்கமாக திரும்பிக்கொண்டாள், அபி சிரித்துவிட்டு காரை

 

வேகமாக திருப்பினான், ஸ்ருதி பயந்து போய் அபியின் கையை பிடித்துக்கொண்டு அவனது தோளின் மேல் தன் முகத்தை புதைத்துக்கொண்டாள்,

 

அபிமன்யு,”என்ன பயம் இன்னும் போலையா” என்றான் .

 

ஸ்ருதி,”அவனை நிமிர்ந்து பார்க்க”, அபிமன்யு, ஸ்ருதியை பார்த்து கண்ணடித்துவிட்டு மீண்டும் காரை ஓட்டினான், ஆனால் இந்த முறை நிதானமாக ஓட்டினான்.

 

பின்பு ஸ்ருதி காரின் கண்ணாடி வழியாக வெளியே பார்த்துக்கொண்டே வந்தாள், பார்த்துக்கொண்டே வந்தவள் அப்படியே தூங்கி விட்டாள் இதை கவனித்த அபி, அவளின் தலையை மெல்லமாக தடவி விட்டுவிட்டு, தனது காரின் வேகத்தை இன்னும் குறைத்துக்கொண்டு, இன்னும் மிதமாக, அவளின் தூக்கம் கலையாமல் ஓட்டினான் .

 

பின்பு சென்னையை தாண்டி உள்ள தனது பார்ம் ஹவுஸிற்கு வந்து ஹாரன் அடித்தான், அந்த சத்தத்தில் தூக்கத்தில் இருந்த ஸ்ருதி பாதி முழித்தாள், பின் வாட்ச்மன் அபியை பார்த்து கண்ணசைத்துவிட்டு கதவை இருந்து விட்டார், அபி வாட்ச்மன்னிடம் தன் கண்களால் ஸ்ருதியை காட்டி எப்படி என்று கேட்டான், அவரோ ஜோடி சூப்பர் என்பதை போல் செய்கை காட்டினார்.

 

அபி பாதி தூகத்தில் இருந்த ஸ்ருதியை எழுப்பினான், அப்போது ஸ்ருதி,”டூ minutes ப்ளீஸ்” என்றாள், அபி அவளை பார்த்து சிரித்து விட்டு, அவளது கையை கிள்ளினான், உடனே ‘ஆஹ் என்று’ ஸ்ருதி தன் தூக்கத்தில் இருந்து எழும்பினாள். பின்பு ஸ்ருதி,”ஏன் நாம இங்க வந்திருக்கோம், ப்ளீஸ் சொல்லுங்க” என்று கேட்டாள் .

 

அபிமன்யு,”இவ்வளவு நேரம் பொறுத்துகிட்ட, இன்னும் கொஞ்ச நேரம் சரியா, என்று கூறிவிட்டு” அவளது கண்களை தன் kerchiefஆல் கெட்டினான். பின்பு அவளை இருட்டு நிறைந்த இடத்திற்கு அழைத்துவந்தான் .பிறகு அவளது கண்களில் இருந்த கட்டை அவிழ்த்து விட்டுவிட்டு, அவன் மறைந்து கொண்டான்.

ஸ்ருதி இருட்டை பார்த்து பயந்து,”அபி எங்க இருக்கீங்க, ப்ளீஸ் வாங்க எனக்கு இருட்டுன்னா பயம்” என்றாள்

 

அபிமன்யு,”நா இங்க தான் இருக்கேன், நா உன் முன்னாடி வரணும்னா, நா என்ன சொல்றேனோ அத அப்டியே நீ repeat பண்ணனும் ஒகேன்னா சொல்லு, நா வரேன்” என்றான் .

 

ஸ்ருதி,”சரி சரி நா சொல்றேன் ப்ளீஸ் வாங்க” என்றாள்

 

அபிமன்யு,”பேச்சு மாற மாட்டியே”என்றான்

 

ஸ்ருதி,”promise” என்றாள்

 

அபிமன்யு,”சரி, உன் கண்ண இறுக்கி மூடிக்கோ” என்றான்

 

ஸ்ருதியும் அவ்வாறே, செய்ய, இருட்டான அந்த இடம் கோடி நட்ச்சதிரக்கூட்டங்கள் ஒன்றாக சேர்ந்து பூமிக்கு வந்ததுப்போல அவ்வளவு பிரகாசமாக இருந்தது, ஸ்ருதியோ அந்த பிரகாசத்திற்கு நடுவே, வெண்மதியை போல வெளிச்சத்திற்கு வெளிச்சம் சேர்த்துக்கொண்டிருந்தாள் .

 

அபி ஸ்ருதியின் அருகில் வந்து,”இப்போ கண்ண திறக்கலாம்” என்றான் .

 

ஸ்ருதி தன் கண்களை மெதுவாக திறந்தாள், அவ்வளவு நேரம் கண்களை இறுக்கி மூடிருந்ததால், திடிரென்று கண்ணில் வெளிச்சம் பட,கண்கள் கூசி லேசாக தடுமாறி கீழே விழப்போனவளை, அபி தன் கைகளால் தாங்கி பிடித்தான் . ஸ்ருதி அபியை பார்த்து அசந்து போனாள், காரணம் அபி தனக்கு பிடித்த,’லீ மின் ஹோ’ வின் முகமூடியை அணிந்திருந்தான் .

 

பின்பு ஸ்ருதி தன் இயல்பு நிலைக்கு வந்தாள் .

 

அபியின் இந்த செயலில் நெகிழ்ந்து போன ஸ்ருதி, அவன் முன் எதுவும் காட்டிக்கொள்ள வில்லை . பின்பு அவனிடம் இந்த மாஸ்க் ஐடியா யாரோடது என்றாள்,

அபி,”யாரோடதா இருந்தா என்ன உனக்கும் புடிக்கும்ல” என்றான் . ஸ்ருதி,”ஆமா ஆனா எதுக்கு இதெல்லாம்” என்றாள் .

 

அபி,”எத சொல்ற”

 

ஸ்ருதி,”இந்த மாஸ்க், அப்றோம் லைட் arrangements” என்று கூறினாள்

 

அபி ஒருவித தயங்கும் குரலில்,”அதுவந்து ஸ்ருதி, நா உன்கிட்ட ஒன்னு சொல்லணும், என்னனா, முதல்முதலா நீ என்ன அடிச்சப்போம் எனக்கு ரொம்ப கோபம் வந்துச்சு, ஆனா எப்போ நீ அகாடமிக்கு வந்தியோ கொஞ்சம் கொஞ்சமா உன் மேல உள்ள கோபம் போய்டுச்சு, நீ அன்னைக்கு மொட்ட மாடில என்ன நம்புரேன்னு சொன்னல அது எனக்கு புடிச்சிருந்துச்சி, அன்னைக்கு நீ அஜய் கிட்ட பேசிட்டு இருந்தல அப்போ எனக்கு கோபம் வந்திச்சி அஜய் மேல ரொம்பவே வந்திச்சி உன் மேல கொஞ்சம் வந்திச்சி, அதுக்கப்புறம் என்ன அறியாமலே நீ எனக்குள்ள கொஞ்சம கொஞ்சமா வர அரம்பிச்சிட்ட, அத ஏத்துக்க எனக்கு தயக்கமா இருந்துச்சி,அதான் நா உன்கிட்ட கோப படுற மாதிரி நடிச்சேன், உண்மைய சொல்லனும்னா கோபம் எல்லாம் உன் மேல இல்ல என் மேல தான் உன்ன இப்டி கஷ்ட படுத்துரோமேன்னு கோபம்” என்றான்.

 

ஸ்ருதி,”ஸோ உன்மேல உள்ள கோவத்த என் மேல காட்டுற அப்டித்தான”

 

அபி,”ஆமா”

 

ஸ்ருதி,”ஹ்ம்ம்” என்று முறைக்க

 

அபி,”இல்ல, தப்பு தான், மாத்திக்கறேன்” என்றான்

 

ஸ்ருதி வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு, “சரி அவ்வளவு தான நா கிளம்புறேன்” என்றாள்

 

உடனே அபி,”இல்ல இன்னும் ஒன்னு இருக்கு அத எப்டி சொல்றதுன்னு தயக்கமா இருக்கு” என்றான்

 

ஸ்ருதி,”சரி தயக்கம் போனவுடனே சொல்லுங்க” என்று அங்கிருந்து கிளம்பினாள்.

 

உடனே அபி ஸ்ருதியின் கரங்களை பற்றி கொண்டு,தனக்குள்,”என்ன டா அபி மானத்த வாங்காத சீக்கரம் சொல்லுடா, ஆல் இஸ் வெல்” என்று கூறி கொண்டே, அவள் முன்பு .தன் ஒரு முழங்காலில் இறங்கி, அவளது வலது கரத்தை பிடித்து அவளுக்காக தான் வாங்கி வைத்திருந்த மோதிரத்தை அவளது விரலில் போட்டுவிட்டு, அவளது கண்களை பார்த்து,’நா உன்ன ரொம்ப நேசிக்கறேன் ஸ்ருதி’ என்றான் பின்பு” இப்போ உன் turn, கம் on குய்க், நா சொன்னத repeat பண்ணு” என்றான் .

 

ஸ்ருதி,”ஏன் பண்ணனும்” என்றாள் .

 

அபி வாடிய முகத்தோடு அவளிடம்,”உனக்கு பிடிக்கலையா” என்றான்

 

ஸ்ருதி,”புடிச்சிருக்கு”

 

அபிமன்யு,”அப்றோம் என்ன”

 

ஸ்ருதி,”புடிச்சிருக்கரதுக்கும், நேசிக்கரதுக்கும் வித்தாயசம் இருக்கு இந்த ஸ்ருதிக்கு லீ மின் ஹோவ புடிக்கும், ஆனா அவ மனசுல எப்போவுமே இந்த அபிக்கு மட்டும் தான் இடம் இருக்கு” என்றாள் .

 

அபி குழப்பத்தோடு அவளை பார்க்க, ஸ்ருதி தன் பொறுமையை இழந்து,”மாங்கா மாங்கா, உன்ன தான் எனக்கு ரொம்ப புடிக்கும்ன்னு சொல்றேன்” என்று கூறினாள்.

 

இதை கேட்ட அபி லீ மின் ஹோவின் மாஸ்க்கை கழற்றிவிட்டு விட்டு, “சைக்கிள் கேப்புல மாங்கான்னா சொல்ற உன்ன”என்று துரத்த, இருவரும் ஓடி மூச்சு வாங்க, ஊஞ்சலில் வந்து அமர்ந்தனர் . 

 

அப்போது அபி ஸ்ருதியின் கண்களை பார்த்து அவளுக்காக தன் கை பட எழுதிய கவிதையை கூறினான்,

 

“சகியே என்ன பார்வையடி இது

என்னை கொல்கிறது

வேல்விழியின் கூர்மையில்

நாடி சிலிர்த்து

மெய் மறந்தேனடி ……

என்ன மாயம் இது

உன் கால் கொலுசின் ஓசையில்

என் சப்தநாடியும் அடங்கிவிடுகிறது ……..

உன் இதழ் சிந்திய புன்னகையின் முன்

என் கெர்வம் முற்றிலும் தோற்றுவிடுகிறது………..

என்ன மாயம் செய்தாயடி நீ

பட்ட மரம் போல் ஆனா என் மனதைக்கூட தளிர்க்க வைத்து

இன்று அதில் நீயே பூவாய் பூக்கிறாய்

வெகுநாட்களுக்கு பிறகு நான்

நானாக இருப்பதை உணர்கிறேன்

வெறுமையான என் வாழ்க்கையில் உன்

ரேகைகள் எல்லாம் ரங்கோலி போடுகின்றது

உன்னால் இன்று தோல்வியைக்கூட ரசிக்கின்றேன்

காதல் கூட எனக்கு வரமாக தோன்றுகின்றது

உனது தவறுகள் கூட எனக்கு சரியாக தெரிகின்றது

உனது உலறல்கள் கூட எனக்கு கவிதையாகின்றது

நீயே என் இருட்டின் வெளிச்சம், என் இதயத்தின் துடிப்பு

என் உடலின் உயிர், என் உயிரின் சுவாசம்

நீ எனக்கு யார் என்ற கேள்வி என் உள்ளத்தை வாட்டுகின்றது

உன்னை என் தோழி என்று கூறி நம் உறவுக்கு முற்றுப்புள்ளி

வைக்கவும் எனக்கு விருப்பம் இல்லை

இது எல்லாவற்றிற்கும் காரணம் காதல் தான் என்றால்

அந்தக் காதலை மீண்டும் சுவாசிப்பதற்க்கு தயாராகிவிட்டது என் மனம்

காதல் மீது அல்ல உன் மீது உள்ள நம்பிக்கையில் !!”

இதைக்கேட்ட ஸ்ருதியின் முகம் வெட்கத்தில் சிவந்தது ..

பின்பு அபி ஸ்ருதியின் கண்களை மீண்டு மூடிக்கொள்ள கூறினான், அப்போது ‘மறுபடியுமா’, என்றாள் . அவன் ‘ஆமா’ என்றான், ‘நோ cheating’ என்று கூறிவிட்டு தன் walletடை எடுத்து அதில் ஏற்கனவே இருந்த ஸ்ருதியின் மோதிரத்தை எடுத்து, தன் கழுற்றில் இருந்த செயின்னை கழற்றி அதில் அந்த மோதிரத்தை கோர்த்து, அந்த செயின்னை ஸ்ருதியின் கழுற்றில் போட்டு விட்டான், பிறகு கண் விழித்த, அதை பார்த்த ஸ்ருதியின் கண்கள் நீரால் நிரம்பியது . இதை பார்த்த

அபி,”ஸ்ருதி ஏன் அலற,நீ சந்தொஷபடுவன்னு தான் நா உனக்கு இத குடுத்தேன்” என்றான் .

ஸ்ருதி,”அபி இப்போ நீ எனக்கு குடுத்திருக்கியே அது எனக்கு எவ்வளவு பெரியா விஷயம் தெரியுமா, என் அப்பா அம்மாவோட, நியாபஹாதமா என்கிட்ட இருந்த ஒரே பொருள் இதான், அன்னைக்கு என்னவோ வருண்சார் கிட்ட இத என்னவேணும்ன்னாலும் பண்ணிகோங்கன்னு சொல்லிட்டேன், ஆனா எனக்கு எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா” என்றாள்.

 

அபிமன்யு,”எனக்கு தெரியும், அதான் உனக்கு இப்போ இத குடுத்தேன், என் அத்த மாமாவோட சேர்த்து என்னையும் நீ எப்பவும் நினச்சிட்டு இருக்கனும்ன்னு தான் என் செயின்ல மோதுரத்த போட்டு குடுத்தேன்,சந்தோஷமா” என்றான்

 

ஸ்ருதி,”அத்த மாமாவா, ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றாள்

 

அபிமன்யு,”அப்டினா ஏன் இந்த கண்ணீர், இது என்னை ரொம்ப கஷ்ட படுத்துது”என்று அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீரை துடைத்துவிட்டான் .

 

ஸ்ருதி,”சாரி அபி அன்னைக்கு நா தெரியாமா தட்டிவிட்டுடேன், ஐம் ரியல்லி சாரி” என்றாள்

 

அபி,”நீ சாரி கேக்க வேண்டிய அவசியம் இல்ல, statueவ நா சரி பண்ணிட்டேன், பழைய மாதிரி இல்லாட்டாலும் ஓரளவு சரி ஆயிடுச்சு, ஸோ நீங்க எதுக்கும் கவல படவேண்டாம்” என்றான் .

 

பிறகு அபி,”ஸ்ருதி நா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும், நானும் ஆஷாவும்” என்று ஆரம்பித்த, அபியை பார்த்து ஸ்ருதி,”எனக்கு தெரியும், வருண் என்கிட்ட எல்லாம் சொல்லிட்டாரு” என்றாள்,

 

அபி,”உனக்கு அத பத்தி என்கிட்ட எதுவும் கேக்கணும்ன்னு தோணலையா” என்றான் .

 

ஸ்ருதி,”உன்னோட பாஸ்ட் எனக்கு முக்கியம் இல்ல, நம்மளோட futureர கலர்புல்லா மாத்துவோம்” என்று கூறி சிரித்தாள்

 

பின்பு அபி, ஸ்ருதியிடம்,”சரி என் கிப்ட் எங்க, சீகரம் குடு” என்றான்.

 

ஸ்ருதி,”இப்போதைக்கு என்கிட்ட எந்த கிப்ட்டும் இல்லயே“என்றாள்.

 

அபி,”கிப்ட்னா பொருளா தான் தரணும்ன்னு அவசியம் இல்ல”

 

ஸ்ருதி,”எனக்கு புரியல, வேற எப்டி தரமுடியும்”

 

அபி,”நீ இருக்கியே சரியான டுயுப் லைட்” என்றான்

 

ஸ்ருதி,”ம்ம் இப்போம் ஏன் திட்ற, எனக்கு தான் தெரியல நீயே சொல்லேன்”

 

அபி,”சொன்னா மட்டும் அப்டியே தந்துருவியா”

 

ஸ்ருதி,”சொல்லிபாரு எப்டி தரேன்னு நீயே அப்டி ஷாக் ஆய்டுவ”

 

அபி,”அப்போம் சரி, ம்ம்ம்ம் உன் லிப்ஸ் சும்மா தான இருக்கு, என் கன்னம் கூட காலியா தான் இருக்கு, பெர்மிஷன்லா ஒன்னும் கேக்க வேண்டாம், நீ என்ன பண்ணாலும் நா ஒன்னும் சொல்ல மாட்டேன்” என்றான்

 

ஸ்ருதிக்கு அபி தன்னிடம் கூறிய விஷயம் புரிந்து கன்னங்கள் வெக்கத்தில் குங்குமப்பூவை போல சிவந்தது ..

 

அபி,”என்ன பதிலே காணோம், என்ன ஷாக் ஆக்குவன்னு பாத்தா, நீ ஷாக் ஆகி போய் இருக்க” என்றான்

 

ஸ்ருதி,”ச்சீ போங்க” என்று கூறி தன் முகத்தை திருப்பி கொண்டாள்.

 

அபி,”இதென்ன வேண்டாம் இங்கறது, நீ தான சொல்ல சொன்னா, அதான் சொன்னேன், இப்போம் சீட் பண்ண பாக்காத” என்று கோபமாக இருப்பதை போல்

பாவலா செய்தான்.

 

ஸ்ருதி தயங்கும் குரலில், “அபி, சரி நா தரேன், கோபப்படாத, ஒரு கண்டிஷன் நா தரணும்னா நீ கண்ண மூடனும்” என்றாள்

 

அபி,”ஏன்”

 

ஸ்ருதி,”எனக்கு ஒரு மாதிரியா இருக்கு”

 

அபி,”அப்போம் உன் கண்ண மூடு, ஏன் என் கண்ண மூட சொல்ற”

 

ஸ்ருதி,”ப்ளீஸ் அபி”

 

அபி,”சரி” என்றான் .

 

அபி தன் கண்களை மூடிக்கொள்ள, ஸ்ருதி ஒரு வித தயக்கம் கலந்த பயத்தோடு அபியின் அருகில் தன் கண்களையும் மூடிக்கொண்டு வந்தாள், அப்பொழுது அபி தன் கண்களை துறந்து ஸ்ருதியை பார்த்தான், பெண்மைக்கே உரியே பயம், தயக்கம் என்று ஸ்ருதி ஒருவித பயத்தோடு இருப்பதை உணர்ந்தவனாய் லேசாக புன்னகைத்துவிட்டு, அவளது நிலையை புரிந்து கொண்டவானாய் அவளது பயத்தை போக்குவதற்காக, அவள் தன் அருகில் வரும் பொழுது,

 

“ஏய் ஸ்ருதி இப்போ என்ன பண்ற” என்றான்

 

ஸ்ருதி தன் கண்களை திறந்து,”என்ன ஆச்சி அபி” என்றாள்

 

அபி,”இப்போம் நீ என்ன, ஐயோ இத நா எப்டி என் வாயால, ஒரு கன்னி பையனுக்கு இந்த உலகத்துல பாதுகாப்பே இல்லையா” என்று அவளது பயம் மற்றும் சங்கடத்தை போக்குவதற்காக, பயந்தது போல் பாவலா செய்தான் .

 

ஸ்ருதி அவன் கிண்டல் செய்வதை புரிந்துகொண்டு,”போ நா பயந்துட்டேன் தெரியுமா, இப்டி தான் கிண்டல் பண்ணுவியா” என்று தன் முகத்தை திருப்பி கொண்டாள் .

 

அபி,”ஏய் சும்மா டா, நீ இப்போம் சொல்றத பாத்தா, நா கேட்டது, உனக்கும் வேணும் போலயே” என்று கூறி சிரித்தான்

 

ஸ்ருதி,”ஆமா அப்டியே தந்துட்டாலும் தான்”

 

அபி,”ஏய் என்ன இப்டி சொல்லிட்ட அள்ளி கொடுக்குறதுல நா வள்ளல் மா” என்று கூறி அவள் மீது தன் கையை போட்டான் .

 

பின்பு ஸ்ருதியின் முகத்தை தன் பக்கம் திருப்பி,”கோபமா, நீ ரொம்ப சங்கடமா பீல் பண்ணின, இங்க பாரு ஸ்ருதி எனக்கு உன்ன புடிச்சிருக்கு, உனக்கு என்ன புடிச்சிருக்கு இதுக்கு மேல எனக்கு வேற எதுவும் வேண்டாம், பர்ஸ்ட் நீ என்கிட்ட கம்பார்டபுளா பீல் பண்ணனும், அதுக்கப்புறம் மத்ததெல்லாம்” என்றான் .

 

அபியின் கண்ணியமான ஆண்மையின் முன்னால் அவளது பெண்மை வியந்து போனது .

 

ஸ்ருதி கலங்கிய கண்களோடு,”அபி நா உண்மையாவே அதிர்ஷ்டம் பண்ணிருக்கேன் நீ எனக்கு கடச்சதுக்கு, தேங்க்ஸ் அபி என்ன புரிஞ்சிகிட்டதுக்கு, இன்னைக்கு வேணும்னா நீ கேட்டத நா தராம இருக்கலாம், ஆனா நீ கேக்காத ஒன்ன நா இப்போ தர போறேன்” என்றாள்

 

அபி,”என்ன அது”

 

ஸ்ருதி,”உனக்கு ஒரு சத்யம் பண்ண போறேன்” என்றாள் .

 

அபிமன்யு,”அப்டியா, promise பண்ணா, மீற கூடாது”

 

ஸ்ருதி,”ம்ம்ம்ம் தெரியும்”

 

அபிமன்யு,”என்ன அது குய்க் பாஸ்ட்” என்றான் .

 

ஸ்ருதி,”நம்ம லைப்ல என்ன பிரச்சன வந்தாலும் சரி, அது எவ்வளவு பெருசா இருந்தாலும் சரி, என்னைக்கும் நா உன்னவிட்டு போக மாட்டேன், ஐ promise யு” என்றாள் .

 

அபிமன்யு,”அப்டினா நா உனக்கு ஒரு சத்யம் பண்றேன், அது என்னனா, என் வாழ்க்க முழுக்க உன்ன சந்தோஷமா பாத்துக்குவேன், எப்பவும்” என்றான் .

 

பிறகு ஸ்ருதி அபியிடம்,”உன் மடியில கொஞ்ச நேரம் படுத்துகட்டா” என்றாள்

 

அபி,”ஏய் என்ன இதெல்லாம் போய் என்கிட்ட கேட்டுட்டு வா” என்று கூற, ஸ்ருதி ஒரு குழந்தையை போல அபியின் மடி மீது தன் தலையை வைத்துக்கொண்டாள், அபி அவளது தலைமுடியை கோதிவிட அவள் நிம்மதியாக கண்மூடி உறங்கினாள்.

 

அவள் தூங்குவதை அபி பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான், அப்போது வருணிடம் இருந்து கால் வந்தது, அபி முதலில் கட் செய்தான், தொடர்ந்து அவனிடம் இருந்து, கால் வர, அபி அட்டெண்ட் செய்து, ஸ்ருதியின் தூக்கம் கெடாமல் மெதுவான குரலில், வருணிடம் ,

 

“வருண் என்ன விஷயம்” என்றான்…

 

வருண்,”சார், அகாடமில ஒரு பெரிய பிரச்சன சார்” என்றான்..

 

அபிமன்யு,” இந்த நேரத்துல அகாடமில என்ன பண்ணற, எந்த பிரச்சனையா இருந்தாலும் நாளைக்கு பேசிக்கலாம், நீ முதல்ல வீட்டுக்கு போ…வருண் என் situationன புரிஞ்சிக்கோ, என்ன பிரச்சனன்னு சொல்லு” என்றான் .

 

வருண்,”இத நாளைக்கு எல்லாம் பேசிக்க முடியாது, நீங்க எங்க இருந்தாலும் சரி உடனே, இப்போவே அகாடமிக்கு வாங்க, உங்க போனுக்கு சாயங்காலம் ஆறு மணில இருந்து ட்ரை பண்ணிட்டு இருக்கேன், நாட் reachableனே வந்துச்சு, ப்ளீஸ் வாங்க” என்றான் .

 

அபியின் நிலைமை கூட அப்படிதான், அவளது சின்ன சிணுங்களில் தன் வலிகள் அத்தனையும் துலைத்திட நினைக்கிறான்.

  • தொடரும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!