Nenjathai Killathe 12

பகுதி 12:

இதம் தரும் இவள் பார்வை

நாம் நேசிப்பவரின் ஒரு பார்வை போதும், நம் கவலைகள் அனைத்தும் பஞ்சாக பறந்து போய்விடும்

“நீ உன் விழி மூடி திறக்கும் ஒவ்வொரு நொடியும்,

நான் புதிதாய் பிறக்கிறேன் .

இதம் தரும் உன் பார்வைக்கு முன்பு,

என் வலிகள் அனைத்தையும் நான் மறக்கிறேன்,

உலகமே என் உள்ளங்கையில்,

 நீ என் அருகில் இருந்தால் ”.

அபிமன்யு வருணிடம்,”ஏண்டா பேசாம இருக்க இப்போ நீ என்னன்னு சொல்ல போறியா இல்லையா” என்றான்.

வருண்,”அஜய் கடைசி நேரத்துல சய்ன் பண்ண மாட்டேன்னு சொல்றான், ஏன்னு கேட்டதுக்கு நீங்க வரணும்ன்னு சொல்றான், நாளைக்கு பேசிக்கலாம், முதல்ல சய்ன் பண்ணுன்னு சொன்னா, எதுவா இருந்தாலும் இன்னைக்கே பேசனும்ன்னு சொல்றான், உங்க கிட்ட பேசாம இங்க இருந்து போகவும் மாட்டானாம், சய்ன்னும் பண்ண மாட்டானாம், நீங்க உடனே வாங்க” என்றான் .

இதை கேட்ட அபி,

“அந்த அஜய்க்கு என்ன பையத்தியமா புடிச்சிருக்கு” என்று கத்த, அந்த சத்தத்தில் ஸ்ருதியும் முழித்துவிட்டாள்.

பிறகு அபி வருணிடம்,”நீ ஃபோன்ன வை நா  வரேன்” என்றான் .

ஸ்ருதி,”என்னாச்சு அபி” என்று கேட்டாள் .

அபிமன்யு,”அதெல்லாம் ஒன்னும் இல்லமா, ஒரு சின்ன வேல நாம உடனே போகணும்” என்றான்

ஸ்ருதி,”வேலை  வந்தா போகத்தான செய்யணும், அதுக்கு போய் என் மூஞ்ச சோகமா வச்சிருகிங்க, வாங்க போலாம்” என்றாள்

அபிமன்யு ஸ்ருதியை அவளது hostelலில் பத்திரமாக இறகிவிட்டுவிட்டு, தனது அகாடமி வந்தடைந்தான் .

அபிமன்யு அஜயிடம் ,

“என்ன விஷயம், என்னை பாக்காம பேப்பர்ல சய்ன் பண்ண மாட்டேன்னு சொன்னியாம்,அதான்  பாத்துட்டல சய்ன் பண்ணு” என்றான்

அஜய்,”சய்ன் பண்றேன், ஆனா அதுக்கு முன்னாடி நீ என்கிட்ட மன்னிப்பு கேக்கணும்” என்றான்

அபிமன்யு,”வாட் nonsense, உனக்கு என்னை பாத்தா எப்டி தெரியுது ம்ம்ம்ம், நீ மன்னிப்பு கேளுனா, நா உடனே கேட்ருவேனா, முட்டாள்”

அஜய்,”வேண்டாம் நீ கேக்க வேண்டாம், நானும் விளையாட மாட்டேன்” என்றான்

அபிமன்யு,”அது நடக்காது, உனக்கு புடிச்சிருந்தாலும் புடிக்காட்டாலும், நீ என் அகாடமி சார்பா விளையாடி தான் ஆகணும், புரிஞ்சிதா” என்று கூறிவிட்டு, வருண் பக்கம் திரும்பி,”பேப்பர்ஸ குடுங்க” என்று கேட்டுக்கொண்டிருந்த நேரம், யாரும் எதிர்ப்பாக்காத அந்த நொடியில் அஜய் தன் அருகில் இருந்த சுவற்றின் மீது வேண்டும் என்றே வேகமாக மோதினான்…

பின்பு தன் காலை இரும்பு நாற்காலியை கொண்டு கொடூரமாக தாக்கினான் . அபியை தவிர அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தனர்,அபி உடனே அவனை பிடித்து தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான், அவன் மீண்டும் தன்னை தானே காயப்படுத்திக்  கொள்ளாதவாறு பார்த்துக்கொண்டான்..

பின் அவனை அபியும் வருணனும் hospitalலுக்கு கொண்டு சென்றனர். அவனுக்கு இரத்தம் அதிகமாக வீணானதால், அபி தான் அவனுக்கு இரத்தம் கொடுத்தான், பின் வருண் ஸ்ரீநிவாசனுக்கு விஷயத்தை கூறினான், ஸ்ரீனிவாசன் விரைந்து அங்கு வர, அவரிடம் நடந்த அனைத்தையும் கூறிவிட்டு அங்கிருந்து அபியும் வருணும், கிளம்பினர் . அபி போகும் வழியெல்லாம் வருணிடம் எதுவும் பேசவில்லை, பின்பு வருணை அவனது வீட்டில் இறக்கி விட்டுவிட்டு, தனது வீடு வந்தடைந்தான் .

கண்களில் கலக்கத்தோடு வந்தவனுக்கு,ஸ்ருதியின் ‘குட் நைட்’ என்கிற மெசேஜ் மனதிற்கு ஆறுதலாக அமைந்தது.

அதிகாலையில் எழும்பிய அபி சீக்கிரம் தயாராகி அகாடமிக்கு செல்ல கீழே வந்தான்…  சகுந்தலாவும், ஆர்த்தியும் ஸ்ருதியை பற்றி அவனிடம் கேட்டனர் ! ஆனால் அவன் தனது உதட்டில் சின்ன சிரிப்பை மட்டும் பதிலாக சொல்லிவிட்டு, அகாடமிக்கு செல்லவதாக கூறி அங்கிருந்து கிளம்பினான்… சகுந்தலா மற்றும் ஆர்த்தியிடம் தனது பிரச்சனை பற்றி பேசி அவர்களை கஷ்டபடுத்த அவன் விரும்பவில்லை .

அபி தன் காரில் அகாடமிக்கு வந்து கொண்டிருந்த பொழுது, வருணிடம் இருந்து கால் வந்தது, அபி தன் அலைபேசியை அட்டெண்ட் செய்து,

“சொல்லு வருண், நா அகாடமிக்கு தான் வந்துட்டு இருக்கேன்” என்றான்

“சார், பெரிய பிரச்சனயாயிடுச்சு”

அபிமன்யு,”அஜய் மேட்டர் தான”

வருண்,”அதுமட்டும் இல்ல, நீங்க சீக்கிரம் வாங்க”

அபிமன்யு,”என்னன்னு சொல்லு” என்றான்

வருண்,”ஃபோன்ல சொல்ல முடியாது, நீங்க வாங்க” என்றான்

அபிமன்யு,” சரி வரேன்” என்று கூறி ஃபோனை வைத்தான், அப்போது ஸ்க்ரீன் சேவேரில்  ஸ்ருதி தன் மடியில் தூங்கிக்கொண்டிருந்த போது எடுத்த போட்டோவுக்கு முத்தம் கொடுத்து விட்டு, காரில் தனது அகாடமிக்கு விரைந்தான் .

hostelலில் காவியாவும் சுவாதியும் ஸ்ருதியிடம் அபியை பற்றி பேசி சிரித்துக்கொண்டிருந்தனர் .

அப்போது காவியா ஸ்ருதியிடம்,

“அப்றோம் சொல்லு அபி சார் எப்டி ரொம்ப ரொமாண்டிக்கா” என்று கேட்டாள்

ஸ்ருதி,”ம்ம்ம் அத ஏன் நா உன்கிட்ட சொல்லணும், என்ன கிண்டல் பண்ணினல, சொல்ல மாட்டேன் போ” என்றாள்

காவியா,”பாத்தியா”

சுவாதி,”ரொம்ப பண்ணாதடி சொல்லு” என்றாள்

ஸ்ருதி,”சொல்றேன் வெயிட் பண்ணுங்க, நாங்க ரொம்ப நேரம் பேசிக்கிட்டே இருந்தோமா,அப்போ அப்போ”என்று ஸ்ருதி இலுக்க, பொறுமையை இழந்த சுவாதி,

சுவாதி,” என்னடி ஆச்சு சொல்லித்தான்  தொலையேன் ” என்றாள்

ஸ்ருதி,”அபி, என் பக்கத்துல வந்து என் கைய புடிச்சு, என்கிட்ட” என்று அவள் மறுபடியும் ஏழு சுவரத்துக்கு இலுக்க

காவியா,”என்னடி சொன்னாரு” என்றாள்

ஸ்ருதி,”ம்ம்ம் உன் பிரண்ட்ஸ பாத்தா லூசுங்க மாதிரி இருக்குன்னு சொன்னாரு” என்று அவள் விழுந்து விழுந்து சிரிக்க, காவியாவும் சுவாதியும் தலையனையை தூக்கிக்கொண்டு அவளை அடிக்க துரத்தினர் .

பின்பு மூச்சு வாங்க மூவரும் கட்டில் மீது வந்து அமர்ந்தனர், அப்போது

சுவாதி,”ஆயிரம் சொல்லுங்க வருண்ன விட ரொமாண்டிக் பெர்சன் யாரும் இல்ல” என்றாள்

காவியா,”இல்ல இல்ல என் ராஜேஷ அடிச்சிக்க ஆளே இல்ல” இவ்வாறு இருவரும் மாத்தி மாத்தி தங்களின் வருங்கால கணவர்களை பற்றி பெருமையாக பேசிக்கொண்டிருந்தனர் .

ஸ்ருதி இதைப்பார்த்து சிரித்து விட்டு, அபியை பற்றி யோசித்துக்கொண்டிருந்தாள் .

அபியின் கார் வேகமாக அகாடமிகுள் நுழைந்தது, காரை விட்டு இறங்கிய அபி, பெரிய பெரிய கார்கள் தனது அகாடமியில் நின்று கொண்டிருப்பதை பார்த்து சில நொடிகள் யோசித்துவிட்டு, அகாடமியின் உள்ளே நுழைந்தான் .

வருண் மிகவும் பதற்றத்துடன், வேகமாக அபியிடம் வந்து, விஷயத்தை கூறுவதற்குள், அபி அவனை தடுத்து,”எங்க இருக்காங்க” என்றான் .

வருண்,”conference ரூம்ல” என்று கூறி முடிப்பதற்குள், அபி வேகமாக conference ரூமிற்குள் நுழைந்தான் . அதுவரை சலசலப்புடன் காணப்பட்ட conference ரூம், அபி வந்தவுடன் அமைதியானது…

பிறகு அங்கே குழுமி இருந்த அனைவரும் எழும்பி நின்றனர், அபி அனைவரையும் தன் பார்வையாலேயே உட்காருங்கள் என்பதை போல் பார்க்க, அனைவரும் தங்கள் இருக்கையில் அமர்ந்து கொண்டனர், பின்பு அபியும் அவன் பின்னால் வந்த வருணும் தங்கள் இருக்கையில் வந்து அமர்ந்தனர் .

அந்த conference ரூமில் குழுமி இருந்த அனைவரும் அபியுடைய அகாடமியின் funders மற்றும் நடக்க இருக்கும் district லெவல் tournamentட்டில் அஜய்க்காக பணம் போட்டவர்கள் ( sponsors ).

அபிக்காக காத்துக்கொண்டிருந்த அனைவரும், அபியை பார்த்தவுடன் எதுவும் பேசாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தனர் . பிறகு வந்தவர்களில் ஒருவர்,

“Mr அபிமன்யு, நாங்க கேள்விப்பட்டதெல்லாம் உண்மையா, அஜய் உடம்புக்கு முடியாம hospitalல்ல இருக்காராமே” என்றார், பிறகு அவரை தொடர்ந்து மற்றோருவர்,

“நா கேள்வி பட்ட வர அவர் திடிர்ன்னு விளையாட மாட்டேன்னு சொல்லிட்டாராமே, இந்த விஷயம் உங்களுக்கு நேத்தே தெரிஞ்சிருக்கு ஏன் எங்க கிட்ட inform பண்ணல” இவ்வாறு வந்திருந்த அனைவரும் மாறி மாறி தங்களது கேள்விகளை பாணங்கள் போல அபி மீது தொடுக்க, அபியோ கால்மீது கால் போட்டுக்கொண்டு, எதுவுமே நடக்காதவாறு தனது புருவத்தை மட்டும் உயர்த்தி பார்த்துக்கொண்டிருந்தான் .

இன்னொருவர்,”நாங்க இவ்வளவு கேள்வி கேக்றோம் நீங்க எதுவும் பேசாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம், எங்களுக்கு என்ன பதில் தான் சொல்ல போறீங்க Mr .அபிமன்யு” என்று சற்று அழுத்தமாக கேட்டார், தனது பொறுமையை இழந்த அபி, தான் உட்கார்ந்திருந்த நாற்காலியில் இருந்து கர்ஜிக்கும் சிங்கம் போல வெகுண்டெழுந்து ,

“மார்க் மை வேர்ட்ஸ், இன்னும் பத்தே நாள்ல நீங்க sponsor பண்ணின, உங்க பணம் எல்லாம் உங்க கிட்ட இருக்கும்” என்றான் . அபியின் இந்த ஒரே பதிலால், அவர்களது கேள்விகள் எல்லாம் கர்ணனின் கவசத்தின் மீது பட்ட பாணங்கள் செயல் இழந்து போவது போல, அவர்களின் கேள்விகள் அனைத்தும் உயிரற்று போயின.

வந்தவர்களில் ஒருவர் அபியிடம்,”Mr, அபிமன்யு, நீங்க எங்க நிலமைய புரிஞ்சிக்குவிங்கன்னு” என்று கூறி முடிப்பதற்குள், அபி,”நா உங்க எல்லாரையும் போங்கன்னு சொன்னேன்”, சில நொடிகள் கழித்து அபி,”ஐ said லீவ்” என்று கர்ஜிக்க, அனைவரும் அங்கிருந்து சென்றனர் .

வருண் அபியின் அருகில் வந்து,”அஜய் பத்தின நியூஸ் நாம சொல்லாம எப்டி இவங்களுக்கு தெரிஞ்சிதுன்னு தான் சார் எனக்கு புரியல” என்று கூறிக்கொண்டிருந்தான், அப்போது அபியின் போன் ரிங் ஆனது, அபி அதை அட்டெண்ட் செய்து,”ஹலோ” என்றான், மறுமுனையில் இருந்தவர்,”ஹலோ அபிமன்யு எப்டி இருக்கீங்க” என்றார்,

சிறிது நேரம் அமைதியா இருந்த அபி, பின்பு தன் உதட்டில் லேசான புன்முறுவலுடன்,”ஹாய் அஷோக்” என்று அந்த நபரை அழைத்தான், அப்போது அந்த நபர்,”excellent சாம்பியன் சார் குரல வச்சே நா யார்ன்னு கண்டு புடிச்சிட்ட ஹ்ம்ம், impressive”

அபிமன்யு,”நா excellentட்டா இருக்கறனால தான் சாம்பியனா இருக்கேன், ஸோ அத நீ சொல்லனும்ன்னு எந்த அவசியமும் இல்ல”

அஷோக்,”attitude நாட் bad,ம்ம்ம் அபி உன் அகாடமியோட ஸ்டார் பிளேயர் தட் guy அஜய், லாஸ்ட் டைம்ல விளையாட மாட்டேன்னு சொல்லிட்டானாமே,அப்றோம் இன்னைக்கு உன் அகாடமிக்கு உனக்கு வேண்டபட்டவங்கலாம் வந்தாங்களாம், ஏதோ பிரச்சனன்னு கேள்விபட்டேன்,அதான் துக்கம் விசாரிக்கலாமேன்னு ஃபோன் பண்ணேன்  என்ன விஷயம் பா ஏதாவது பிரச்சனையா, ஹெல்ப் எதுவும் வேணும்மா,எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லு நா பண்றேன் ஹ்ம்ம் என்ன … “

அபி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க,

அஷோக்,”உன் sponsors எல்லாரும் இனிமே உனக்கு fund பண்ண மாட்டேன்னு சொல்லிட்டாங்கலாமே, என்ன பண்ண போற அபி எல்லாம் உன்னை விட்டு போறமாதிரி உனக்கு தோனல“என்றான்

அபிமன்யு,”அஷோக் உன்னால இவ்வளவு தான் முடியமா என்ன, நா உங்கிட்ட நிறையா எதிர்பாக்குறேன் பா அப்றோம் அஷோக் அன்னைக்கு நா உன்ன அடிச்சதுல உன் மூள ரொம்ப சூடாயிடுச்சோன்னு தோணுது…

அதனால தான் உன்னால பெருசா எதுவும் யோசிக்க முடியலயோஸோ நீ என்ன பண்ற நேரா போய் ஜில்லுன்னு ஒரு ஷவர் எடுத்துக்கற, உன் மூளையோட சூடும் குறையும், உன்னால இதவிட பெருசா பிளான் பண்ணவும் முடியும் . இங்க பாரு லாஸ்ட் டைம் மாதிரி என்ன இந்த முறையும் disappointment பண்ணிறாதா சரியா ஹ்ம்ம், ஐ வான்ட் மோர் உன்னோட பலத்த காட்ட வேண்டிய நேரம் வந்திருச்சு ஸோ டோன்’ட் மிஸ் திஸ் சான்ஸ் “என்று நக்கலாக கூறினான்

அஷோக்,”இவ்வளவு பட்டும் உன் திமிரு அடங்களல,இதான்டா உனக்கு ஆரம்பம் இனிமே போக போக பாரு உன்கூட இருக்கறவங்க எல்லாரும் உன்னை விட்டு போய், நீ யாரும் இல்லாம நடு ரோட்ல நிக்கல, என் பேரு அஷோக் இல்லடா” என்று அபியிடம் சவால் விட

அபிமன்யு,”ஆல் தி பெஸ்ட் அஷோக், அப்றோம் நா சொன்ன அந்த ஷவர் மேட்டர் மறந்தறாத” என்று கூறினான்.

அபியின் இந்த பதிலில் கோபமுற்ற அஷோக் தனது அலைபேசியை , தூக்கி எறிந்தான், அது சுக்கு நூறாக உடைந்தது .

 வருண் அபிமன்யுவிடம்,”இந்த அஷோக்க என்ன பண்றதுன்னே தெரியல, சார் நீங்க எதுக்கும் கவல படாதிங்க எல்லாம் சரியாகிரும்” என்றான் .

கோபமாக இருந்த அஷோக்கிடம் ஆஷா ,

“பொறுமையா இரு அஷோக்” என்றாள்.

அஷோக்,”பொறுமையாவா எப்டி, இவ்வளவு விஷயம் நடந்திருக்கு, எதுவுமே நடக்காத மாதிரி நடந்துக்கறான், அவன் பேச்சில அதே திமிரு, அதே நக்கல், எதவாது பெருசா யோசிக்கணும், என்ன பண்றது” என்று அவன் புலம்பிக்கொண்டிருக்க

ஆஷா,”இதெல்லாம் உனக்கு தேவையா, அவன் எப்டி போனா நமக்கென்ன” என்றாள், இதைக்கேட்ட அஷோக்கு கோபம் வந்து,”உன்கிட்ட எதாவது நா கேட்டேன்னா, போ, போ டி நா” என்று அதட்டினான், ஆஷாவும் கோபித்துக்கொண்டு அங்கிருந்து சென்றாள்.

சிறிது நேரம் கழித்து அஷோக் ஆஷாவிடம்,”சாரி மா அவன் மேல உள்ள கோவத்த உன் மேல காட்டிட்டேன் சாரி பா” என்றான்,

அப்போது ஆஷா,”சாரிலாம் எனக்கு ஒன்னும் வேணாம், நீ பண்றது உனக்கே சரின்னு தோணுதா,அன்னைக்கு தேவையே இல்லாம என்னையும் உன்கூட அவன் அகாடமிக்கு கூட்டிட்டு போன,என்ன ஆச்சு ?? அசிங்க பட்டதுதான் மிச்சம்… அவன்கிட்ட நா அவனோட எக்ஸ் லவர்ன்னு கண்டிப்பா சொல்லனுமா என்ன, பழசெல்லாம் எதுக்கு அவன் கிட்ட பேசுன, அவன அசிங்க படுத்தரேன் இங்கர பேர்ல என்ன தான் நீ அசிங்க படுத்துன, என் மேல உள்ள அன்ப விட, உனக்கு அவன பழிவாங்கணும் இங்கர எண்ணம் தான் அதிகமா இருக்கு, எனக்கு ஒரு சந்தேகம் அஷோக்,என்ன நீ கல்யாணம் பண்ணினதே அந்த அபிமன்யுவ பழிவாங்குறதுக்கு தானோன்னு எனக்கு தோணுது…” என்றாள்

அஷோக்,”உனக்கென்ன பைத்தியமா, என் இப்டி பேசிகிட்டு இருக்க”

ஆஷா,”இப்டி பேசாம வேற எப்டி பேச சொல்ற, ஆமா நா ஒத்துக்கறேன் அபிமன்யுவ ஏமாத்திட்டு தான் நா உன் கிட்ட வந்தேன், நீ அவன விட பெட்டெர்ன்னு நினச்சது உண்மைதான், அதுக்காக இப்டியா பண்ணுவ ஒன்னு சொல்றேன் அசோக் எப்போ நமக்கு கல்யாணம் ஆச்சோ, அப்போவே நா அந்த அபிமன்யுவ மறந்துட்டேன்…  ஆனா நீ இன்னும் அவன மறக்கல, முக்கியமா நா அவன காதலிச்சத !

எல்லாம் தெரிஞ்சிதான என்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்ட, நீ இன்னும் பழசயே பேசும் போது என் மனசுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்ன்னு  என்னைக்காவது யோசிச்சியா, நா அவனுக்கு பண்ணின துரோகத்துக்கு கடவுள் என்னை நல்லாவே பழிவாங்குறாரு” என்று அழுதாள்.

அப்போது அஷோக்,”சாரி ஆஷா” என்றான்

ஆஷா,”இப்போமும் சொல்றேன், எனக்கு நீ சாரிலாம் ஒன்னும் சொல்ல வேண்டாம், மறுபடியும் அந்த அபிமன்யு கிட்ட பிரச்சன பண்ணாமா இருந்தா போதும்” என்று கூற, அஷோக்கோ எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றான்.

பின் ஸ்ருதி ஒருவழியாக தனது தோழிகளின் கிண்டல் பேச்சில் இருந்து தப்பித்து அகாடமி வந்தடைந்தாள் .

அபி வருணிடம்,”lawyer கிட்ட பேசிட்டேன், நாளைக்கே நீ அவர்கிட்ட நா சொன்ன propertiesசோட போட்டோகாபீஸ கொண்டு போய் estimate போட சொல்லு, அப்றோம் நீயே நல்ல பார்டியா பாரு கொறஞ்ச பட்சம், இன்னும் ஒரு ஒன் வீக் டைம் எடுத்துக்கோ, அதுக்குள்ள பணம் நம்ம கையிக்கு வர்ற மாதிரி பாத்துக்கோ” என்றான் .

பின்பு அபி தனது chequeகில் இருபத்தைந்து லக்க்ஷம் என்று எழுதி அதில் தனது சய்னை போட்டு, அதை வருணிடம் கொடுத்து,”இப்பவே பேங்க் போய், இந்த அமௌண்ட்ட withrdraw பண்ணிட்டு வா” என்றான் .

வருண்ணோ சோகமாக அங்கேயே நிற்க, அபி அவனிடம்,” ஏண்டா இப்டி உன் முகத்த தொங்க வச்சிருக்க ஹ்ம்ம், சுவாதிகூட டைம் ஸ்பென்ட் பண்ணு, சந்தோஷமா இருடா, இந்த பிரச்சனைய நா பாத்துக்கறேன் சரியா” என்றான் .

வருண்,”ஆனா சார், இப்போ நா கண்டிப்பா பேங்க் போய் தான் ஆகணுமா “என்றான் .

அபிமன்யு,”வருண், போங்க போய் வேலைய பாருங்க” என்றான் . வருணும் “சரி” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் .

அகாடமிக்கு வந்த ஸ்ருதி நேராக அபியின் அறைக்கு சென்றாள், அங்கே அவன் இல்லாததால், அங்கிருந்து வெளியே வந்தவள், வருணனை பார்த்து, அவன் அருகில் வந்தாள், ஸ்ருதியை பார்த்த வருண் அவளிடம், நடந்த அனைத்தையும் கூறினான் .

 ஸ்ருதி,”இப்போ அபி எங்க” என்று கேட்டாள், அதற்கு வருண் CONFERENCE ரூம்மை கை காட்ட, அவள் அபியை சந்திக்க அங்கு சென்றாள் .

அதுவரை கவலையாக இருந்த அபியின் முகம்,ஸ்ருதியை பார்த்தவுடன், இருளை விரட்டிய சூரியனை போல பிரகாசமானது . பின்பு ஸ்ருதியை பார்த்து சிரித்துக்கொண்டே,அபி,”அரைமணிநேரம் லேட், கண்டிப்பா punishment குடுத்தே ஆகணும்” என்றான் .

ஸ்ருதி எதுவும் பேசாமல் அபியின் அருகில் வந்தாள்,அப்போது அபி,”என்ன மேடம் இப்டி பக்கத்துல வந்தீங்கனா punishmentல இருந்து தப்பிச்சரலாம்ன்னு நனைக்கிறீங்களா, அதலாம் என்கிட்ட நடக்காது சரியா” என்றான் .

ஆனால் ஸ்ருதியோ எதுவும் பேசாமல் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள், அதை கவனித்த அபி,

” என்ன விஷயம் மேடம் இன்னைக்கு செம ரொமாண்டிக் மூட்ல இருக்கீங்க போல” என்று கூறி சிரித்துக்கொண்டே ஸ்ருதியின் நெற்றியில் சரிந்து விழுந்த முடியை மெதுவாக எடுத்து அவளின் காதில் ஒதுக்கிவிட்டான்.

சில நொடிகளில் ஸ்ருதியின் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக பெருக்கெடுத்து ஓடியது .இதை பார்த்த அபி,

“ஸ்ருதி என்ன ஆச்சு மா, ஏன் டா அலற,உடம்புக்கு எதுவும் சரி இல்லையா” என்று அவளது நெற்றியில் கை வைத்து பார்த்தான் .

உடனே ஸ்ருதி அவனது கையை புடித்து,

“அபி உன் லைப்ல இவ்வளவு பெரிய பிரச்சன நடந்திட்டு இருக்கு, ஆனா நா வருத்தபடுவேனோன்னு என்கிட்ட எதையுமே காட்டிக்காம இருக்க, நானா உனக்கு அவ்வளவு புடிக்குமா” என்று, கண்ணீர் மல்க கேட்டாள்.

இதை கேட்ட அபியின் கண்களும் லேசாக கலங்க, அதை துடைத்துவிட்டு, சின்ன சிரிப்புடன், ஸ்ருதியின் கண்களை துடைத்துக்கொண்டே அவளிடம்

“என் உயிரை விட அதிகமா உன்ன நா நேசிக்கிறேன், அதலாம் வெறும் வார்த்தையால சொல்ல முடியாது ஸ்ருதி” என்று கூறினான் .

ஸ்ருதி,”நீ அகாடமிய மூட போறியா, உன்னால அத தாங்கிக்க முடியுமா”

அபிமன்யு,”ஏன் முடியாது எல்லாம் முடியும்” என்றான்

அப்போது ஸ்ருதி அப்டினா என் கண்ண பாத்து சொல்லு, நா நம்புறேன் என்றாள், உடனே அபி,

“உனக்கு என்ன தான் வேணும் இப்போ” என்றான், அதற்கு ஸ்ருதி அமைதியா அவனையே பார்க்க, அபிமன்யு ஸ்ருதியின் கையை பிடித்துக்கொண்டு,

“ரொம்ப ரொம்ப கஷ்டமா இருக்கு ஸ்ருதி, என்ன பண்றதுனே தெரியல, ஆனா ஒன்னு மட்டும் எனக்கு தெரியும், நீ என்கூடவே இருந்தீனா, இந்த பிரச்சன எல்லாத்தையுமே நா சமாளிச்சிடுவேன்,நீ என் கூடவே இருப்பல” என்றான் .

ஸ்ருதி,”சாகுற வரைக்கும்” என்றாள்

அபிமன்யு,”இனி என்னைக்கும் இப்டி பேசாத” என்று சற்று கோபத்தோடு கூறினான், அப்போது ஸ்ருதி சாரி என்று கூறி பாவம் போல பார்த்தாள், அப்போதும் அபி கோபமாகவே இருக்க, ஸ்ருதி உடனே அபியின் கன்னத்தை கிள்ளினாள், உடனே அபி கிள்ளவா செய்யற உன்ன என்று அவளை துரத்த, அவனை பார்த்து கண்ணடித்துவிட்டு, வெளியே ஓடினாள், அபி ஸ்ருதியை பார்த்து சிரித்துவிட்டு, மறுபடியும் அகாடமி பற்றிய யோசனையில் மூழ்கினான் .

தனது காபின்குள் சென்ற ஸ்ருதி, அபியை பற்றி யோசித்து,”தன்னால் எதுவம் செய்ய முடியலயே”என்று கவலை பட்டுக்கொண்டிருந்தாள்.

அப்போது பார்த்து,ஆர்த்தியிடம் இருந்து ஸ்ருதிக்கு கால் வந்தது,ஆர்த்தி ஸ்ருதியிடம்,”என்ன ஸ்ருதி எப்டி இருக்கீங்க” என்றாள்

ஸ்ருதி,”ஹலோ அக்கா, என்ன திடிர்ன்னு போன் பண்றீங்க அங்க எந்த பிரச்சனையும் இல்லையே” என்றாள் .

ஆர்த்தி,”ஏன் பிரச்சன இருந்தாதான் நா உனக்கு கால் பண்ணனுமா என்ன” என்றாள்

ஸ்ருதி தன் மனதிற்குள்,”என்ன இது இவங்க பேசறத பாத்தா, இங்க நடந்த எந்த மேட்டரும் தெரியாது போல இருக்கு, நாமளும் தெரியாத மாதிரியே நடந்துக்குவோம்” என்று நினைத்துக்கொண்டிருந்தாள்,

அப்போது ஆர்த்தி,”என்ன மேடம் பதிலையே காணோம், பிஸியா இருந்தா நா வேணும்ன்னா அப்றோம் பேசட்டா” என்றாள்

ஸ்ருதி,”அச்சச்சோ அப்டிலாம் ஒன்னும் இல்ல, நீங்க சொல்லுங்க அக்கா” என்றாள்

ஆர்த்தி,”என்ன இது அக்கான்னு சொல்லிக்கிட்டு, அண்ணின்னு உரிமையா கூப்டுங்க நாத்தனாரே” என்றாள்

ஸ்ருதி தனக்குள்,”அச்சச்சோ இவ்வங்களுக்கு, நானும் அபியும் ஒருத்தர ஒருத்தர் விரும்புறது தெரிஞ்சிட்டு போல இருக்கே” என்று கூறி கொண்டிருக்க, மறுமுனையில் ஆர்த்தி,”எங்க எல்லாருக்கும் எல்லாம் தெரியும், இனிமே என்னை அண்ணினே  கூப்டுங்க” என்று கூறி சிரித்துக்கொண்டாள்.

ஸ்ருதி வெக்கத்தோடு,”சரி அண்ணி” என்றாள் .

ஆர்த்தி,”உங்க அத்த பக்கத்துல தான் இருக்காங்க பேசறிங்களா ” என்றாள்

ஸ்ருதி,”பேசறேன் கூடுங்க” என்று கூறினாள்.

சகுந்தலா,”எப்டி டா இருக்க” என்றாள்

ஸ்ருதி,”நல்லா இருக்கேன் மா”

சகுந்தலா,”சரி மா நீ வேலையா இருப்ப, அப்றோம் பேசறேன், உன்ன நல்லா பாத்துக்கோ” என்று கூறி போனை வைத்தார் .

சாயங்கால வேளையில் வருணும் சுவாதியும் ஒரு காபி ஷாப்பில் சந்தித்து பேசிக்கொண்டிருந்தனர், அப்போது வருண் கூறிய அனைத்தையும் கேட்ட சுவாதி,

“இப்போ அபி சார் எப்டி இருக்காங்க, அப்றோம் ஸ்ருதி அவளும் ரொம்ப கவலையா இருப்பாளே, இதுக்கு வேற வழியே இல்லையா வருண்”. என்று கேட்டாள், அப்போது வருண்,

“தெரியல இதுக்கு முன்னாடி இப்டி நடந்ததில்ல, என்னால அபி அண்ணாவ அப்டி பாக்க முடியல சுவாதி” என்று கூற, சுவாதி அவனது கையை பிடித்து அவனுக்கு அறுதல் கூறிக்கொண்டிருந்தாள்.

அப்பொழுது ஸ்ருதி வருணிற்கு போன் செய்தாள், வருண்,”சொல்லுங்க ஸ்ருதி என்ன விஷயம்” என்று கேட்டான்

ஸ்ருதி,”வருண் நான் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும்” என்றாள்

வருண்,”சொல்லுங்க ஸ்ருதி” என்றான்

ஸ்ருதி,”போன்ல இல்ல நேர்ல பாக்கணும், எங்க இருக்கீங்க” என்றாள்

வருண்,”நானும் சுவாதியும் காபி ஷாப்புக்கு வந்தோம், நீங்களும் அங்க வந்திருங்க அட்ரஸ உங்களுக்கு மெசேஜ் பண்ணிர்றேன்” என்றான்

ஸ்ருதி,”சுவாதி அங்க தான் இருக்காளா,ரொம்ப நல்லதா போச்சு, அப்போ நா ராஜேஷ் காவியாவையும் அங்க வர சொல்லிரேன்” என்றாள்

வருண்,”சரி ஸ்ருதி, ராஜேஷ்க்கு வேணும்னா நா கால் பண்ணி சொல்லிரேன், நீங்க காவியா கிட்ட சொல்லிருங்க” என்றான்

ஸ்ருதி,”ஒகே வருண் நா சீக்கரமா வந்திர்ரேன்” என்று கூறி போனை வைத்தாள்.

சுவாதி,”ஸ்ருதி என்ன சொன்னா” என்று வருணிடம் கேட்டாள்

வருண்,”அவங்க எதோ முக்கியமான விஷயம் பேசனும்ன்னு இங்க வரேன்னு சொல்லிருக்காங்க, காவியா ராஜேஷும் இங்க வருவாங்க, எல்லார் கிட்டயும் பேசணும்னா, கண்டிப்பா அகாடமிய பத்தியாதான் இருக்கும், அவங்க வரட்டும்” என்று கூறினான் .

சுவாதி,”எல்லா பிரச்சனையும் சீக்கரமாவே சரி ஆகிரனும் வருண்”

வருண்,”சரி ஆகிரும், சரி சுவாதி வந்தவுடனே சொல்லனும்ன்னு நினச்சேன், ஆனா டென்ஷன்ல எதுவும் சொல்ல முடியல இந்த ரெட் சுடி ரொம்ப அழகா இருக்கு” என்றான்

சுவாதி,”அப்போ சுடி தான் அழகா இருக்கு, நா இல்ல அப்டித்தான” என்றாள்

வருண்,”நீங்க எப்பவுமே அழகு, உங்களால, இன்னைக்கு இந்த சுடியும் அழகா இருக்கு” என்றான்

சுவாதி,”போதும் போதும், யாரு உங்களுக்கு இப்டிலாம் சொல்ல சொல்லித்தந்தது”

வருண்,”மேடம் இதெல்லாம் சொல்லி தந்து வர்றதில்ல, அதெல்லாம் தானா வர்றது” என்றான்

சுவாதி,”ஒ அப்போ சார்க்கு நிறையா experience இருக்கு போல” என்றாள்

வருண்,”இல்ல சுவாதி நீ என்ன பத்தி என்ன நினைக்கிரன்னு எனக்கு தெரியாது, ஆனா எப்போ நா உன்ன முதல் முதலா பாத்தனோ அப்போவே நா உன்ன

விரும்ப ஆரம்பிச்சிட்டேன்” என்றான் .

சுவாதி,”தங் யு வருண்” என்றாள்

வருண்,”இல்ல நா தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லனும், நீ என் லைப்ல வந்ததுக்கு” என்று அவளிடம் கூறி கொண்டிருக்க, ராஜேஷ் மற்றும் காவியாவும் அங்கே வந்தனர் . பின்பு நால்வரும் ஸ்ருதிக்காக அங்கே காத்துக்கொண்டிருந்தனர், சில மணி நேரம் கழித்து ஸ்ருதியும் அங்கு வந்து சேர்ந்தாள்.

காவியா ஸ்ருதியிடம்,”அகாடமில இவ்வளவு பெரிய பிரச்சன நடந்திருக்கு, என்னால நம்பவே முடியல டி, அந்த அஜய்க்கு என்ன பயத்தியமா ஏன் இப்டிலாம்

பண்ணினான்” என்று ஆதங்கத்தோடு கேட்டாள்.

ஸ்ருதி,”கஷ்டமா இருக்குடி, அபி ரொம்ப உடஞ்சி போயிட்டாரு, அவர என்னால அப்டி பாக்க முடியல” என்றாள்

சுவாதி,”இந்த பிரச்சனய எப்டி தான் சமாளிக்கறது” என்று கேட்டாள்

ஸ்ருதி,”அதுக்கு தான் நா உங்க எல்லாரையும் கூப்ட்டேன், வருண் நீங்க சொல்லுங்க இதுக்கு எதாவது ஒரு solution இல்லாமலா இருக்கும், அஜய் விளையாடலனா என்ன ராஜேஷ் இருக்கான்ல இவன் காலேஜ் daysல இருந்தே நல்லா விளையாடுவான், ஏன் அஜய்க்கு பதிலா ராஜேஷ விளையாட வைக்க கூடாது, நா வேணும்னா அபிகிட்ட இத பத்தி பேசட்டா” என்று கேட்டாள் .

சுவாதி,”ஸ்ருதி சொல்லறது கூட நல்ல ஐடியாவா இருக்கே, நாம ஏன் அப்டி பண்ண கூடாது” என்றாள்

வருண்,”boxingனா என்ன சின்ன குழந்தைங்க விளையாட்டுன்னு நினச்சிட்டிங்களா, எங்க கிட்ட சொன்னதோட நிறுத்திக்கோங்க, அபி சார் கிட்ட போய் சொல்லிக்கிட்டு இருக்காதீங்க” என்றான்

ராஜேஷ்,”வருண் சார் சரியா தான் சொல்றாரு, அப்டிலாம் இஷ்டத்துக்கு பண்ண முடியாது, நா ஒகே சொன்னாலும் அபி சார் ஒகே சொல்ல மாட்டாரு” என்றான்

ஸ்ருதி,”ஏன் அப்டி சொல்ற” என்றாள்

வருண்,”ஸ்ருதி ராஜேஷ் நல்ல பிளேயர் தான் ஆனா இவன் அஜய் அளவுக்கு formல இல்ல, இந்த மாதிரியான நிலமையில ராஜேஷ் விளையாண்டா அது இவன் உயிருக்கே ஆபத்தாயிடும். உங்களோட கவல எனக்கு புரியிது ஆனா ஐ அம் சாரி ஸ்ருதி” என்று கூறினான்.

ஸ்ருதி,”எல்லாம் ஒகே ஆனா ஏன் அகாடமிய மூடனும்” என்றாள்

வருண்,”யாரும் fund பண்ணாம, நம்மளால அகாடமிய ரன் பண்ண முடியாது” என்றான்.

ஸ்ருதி,”நம்மளே அகாடமிய ரன் பண்ணனும்னா எவ்வளவு செலவாகும்” என்று கேட்டாள் .

வருண்,” கோடி வேணும் இப்போ நாம இருக்கற நிலைமைக்கு கடவுள நம்பறத தவற வேற வழி இல்ல” என்றான் .

ஸ்ருதி,”சரி வருண் எனக்கு கொஞ்சம் வேல இருக்கு, நாளைக்கு நாம பாப்போ, நா கெளம்புறேன்” என்றாள்

காவியா,”எங்கடி போற” என்றாள்.

ஸ்ருதி,”கொஞ்சம் வேல இருக்கு டி, சீக்கரமா வந்திருவேன் போயிட்டுவரேன்” என்று அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து சென்றாள் .

அஷோக் தனது கையில் ஒரு பூங்கொத்தோடு கவலையாக இருந்த ஆஷாவிடம் வந்து,”நா ஒரு விஷயம் முடிவு பண்ணிட்டேன், இனிமே இந்த அபி விஷயத்துல நா தலையிட மாட்டேன்… அவன் என்னைக்குமே எனக்கு எதிரி தான் ஆனா அதுக்காக, இனிமே அவன் லைப்ல எந்த ப்ளேவும் பண்ண மாட்டேன், இது promise” என்று கூறி தன் கையில் இருந்த பூங்கொத்தை கொடுத்தான், அவளும் அதை வாங்கி கொண்டு அவனது தோளில் சாய்ந்துக்கொண்டாள்.

ஸ்ருதி அபிக்கு எவ்வாறு உதவி செய்வது என்று புரியாமல் ஆழ்ந்த யோசனையில் இருந்த நேரம் அவளுக்கு தன் தோழி ப்ரியாவின் நியாபகம் வந்தது,உடனே அவள் ப்ரியாவிற்கு கால் செய்தாள் .

ப்ரியா,”சொல்லு ஸ்ருதி எப்டி இருக்க” என்றாள்

ஸ்ருதி,”நல்லா இருக்கேன் ப்ரியா, எனக்கு உன்னோட உதவி வேணும் செய்வியா” என்று கேட்டாள் .

ப்ரியா,”கண்டிப்பா,உனக்கு செய்யாம இருப்பேனா, சொல்லு என்ன வேணும்” என்றாள் .

ஸ்ருதி,”போன்ல இல்ல, நேர்ல சொல்றேன்” என்றாள் .

ப்ரியா,”சரி டா அப்போ நாளைக்கு காலையில வந்து என்ன பாரு சரியா” என்று கூறி போனை வைத்தாள் .

பின்பு ஸ்ருதி,”கடவுளே ப்ளீஸ் உங்கள தான் நா நம்பி இருக்கேன், கைவிட்ராதீங்க” என்று வேண்டிக்கொண்டாள்., பிறகு ஒரு ஆட்டோவை எடுத்துக்கொண்டு தன் hostelலுக்கு சென்றாள்.

அபியின் வலிகள் கூட ஸ்ருதியின் அன்பான பார்வைக்கு முன்பு தோற்த்து போய்விட்டன.

– தொடரும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!