Nenjathai Killathe 13

பகுதி 13

என்னை என்ன செய்தாய் நீ

தூய்மையான நேசத்தினால் சில நேரங்களில் நாம் என்ன ஆகின்றோம் என்று நமக்கே தெரியாமல் போய்விடுகின்றன, நாம் முழுவதுமாக மாறிவிடுகின்றோம் …

“மழைத்துளி போல உன் கண்கள் தீண்ட

என் கண்களில் உன் முகம் கண்டேன்

தென்றல் கூட வீசும் உன் வாசம்

என்னை என்ன செய்தாய் நீ !”

ஆதவனின் துணையோடு தன் படுக்கையை விட்டு எழும்பிய அபி, ஒரு வித சோகத்தோடு அகாடமிக்கு செல்ல தயாரானான், பின்பு தன் தந்தையின் படத்திற்கு முன்பு நின்றுக்கொண்டு,

“நீங்க எனக்காக கண்ட கனவு எல்லாம் மொத்தமா என் கண்ணு முன்னாடியே அழிஞ்சி போற மாதிரி இருக்கு பா, ஆனா நா உங்களுக்கு ஒரு வாக்கு குடுக்குறேன், எனக்கு நம்பிக்க இருக்கு கண்டிப்பா நா எல்லா பிரச்சனையும் சீக்கரமா சரி பண்ணிருவேன்” என்று தன் தந்தையிடம் விடை பெற்றுக்கொண்டு அகாடமிக்கு வந்தடைந்தான்.

அகாடமியில் அனைவருக்கும் இந்த விஷயம் தெரிந்திருந்தது, எனவே அனைவரின் கண்களிலும் ஒரு வித சோகம் தென்ப்பட்டது காரணம் தங்களது வேலை போய்விடுமே என்றல்ல, இனிமேல் நம்மால் இங்கே வரமுடியாது என்று, என்னதான் அபி கோபக்காறனாக இருந்தாலும் சரி தன் வேலையாட்களின் மீது அக்கறையாகவே இருந்தான், அவர்களது தேவைக்கு அவன் என்றுமே குறை வைத்தது இல்லை .

அபி வருணனை தன் அறைக்கு வருமாறு அழைத்தான், பின்பு வருணிடம் அபி,

 

“எல்லாருக்கும் cheque ரெடி பண்ணிட்டல” என்று கேட்டான்

 

வருண்,”சார் நா உங்ககிட்ட ஒன்னு சொல்லணும்” என்றான்

 

அபிமன்யு,”சொல்லு வருண்”

 

வருண்,”நீங்க ரொம்ப அவசரபடுரிங்கலோன்னு தோணுது சார், நாம ஏன் ஸ்ரீநிவாசன் சார் கிட்ட ஹெல்ப் கேக்க கூடாது” என்று கூறினான்

 

அபிமன்யு,”ஏற்கனவே அவரு பண்ண உதவிக்கு நன்றி செலுத்துற மாதிரி தான் அவர் பையன என் அகாடமில சேத்துக்கிட்டேன், அவன் எனக்கு நல்லாவே செஞ்சிட்டான்  மறுபடியுமா ??” என்றான்

 

வருண்,”அது வேற பிரச்சன, ஆனா இப்போ நடந்த பிரச்சனைக்கு காரணமே அவரு பையன் தான், அதனால அவர் கிட்ட நாம கேக்குறத பத்தி தப்பில்ல சார்” என்றான் .

 

அபிமன்யு,”இப்போ என்ன பண்ண சொல்ற, அவர்கிட்ட போய் உங்க புள்ளையால தான் எனக்கு இவ்வளவு பிரச்சன, அதனால நீங்க தான் தீத்து வைக்கணும்ன்னு சொல்ல சொல்றியா,போ டா அவரு என் அப்பாவோட friend எனக்கும் அப்பா மாதிரி தான், அவர் கிட்ட போய் இப்டிலாம் பேச முடியாது, எல்லாத்துக்கும் மேல அவரு எனக்கு நிறையா பண்ணிட்டாரு, இனிமேயும் அவர் கிட்ட கேக்க எனக்கு விருப்பம் இல்ல” என்றான்

 

வருண்,”ஆனா சார்” என்று இழுத்தான்

 

அபிமன்யு,”cheque ரெடியான்னு கேட்டேன்” என்றான்

 

வருண்,”யஸ் சார்” என்று சோகமாக கூறினான் .

 

அபிமன்யு,”அப்போ ஒன்னு பண்ணு, நீயே எல்லாருக்கும் cheque distribute பண்ணி, எல்லா formalitiesஸும் முடிச்சிரு” என்றான் .

 

வருண்,”நா எப்டி”

 

அபிமன்யு,”ப்ளீஸ் வருண்” என்று தடுமாறிய குரலில் கூறிய அபியை, பார்த்து வருண்,”சரி சார்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான் .

 

பிரியாவின் ஆபீஸில் ஸ்ருதி பிரியாவிடம்,

 

ஸ்ருதி,”இத தவற வேற வழியே இல்லையா” என்று கேட்டாள்

 

பிரியா,”உனக்கு பணம் குடுக்க முடியாத நிலமையில நா இப்போ இருக்கேன், முன்னாடி மாதிரி இப்போ அப்பாவோட business இல்ல, இப்போ நா இருக்குற நிலைமைக்கு இது ரொம்ப பெரியா அமௌண்ட், நா இப்போ சொன்ன offerக்கு என்னால 100 பெர்சென்ட் guarentte குடுக்க முடியும், ஒரே வாரத்ல பணம் உன் கையிக்கு வர்ற மாதிரி நா ஏற்பாடு செஞ்சிர்ரேன்” என்றாள்

 

ஸ்ருதி,”ஆனா இது ரொம்ப கஷ்ட மாச்சே, அபி இதுக்கு ஒத்துக்கவே மாட்டாரு, அவருக்கு புடிக்காத விஷயத்த நா எப்டி பண்ணுறது” என்றாள்

 

பிரியா,”நல்லா யோசிச்சிக்கோ இன்னைக்கு eveningகுள்ள உன் பதில சொல்லு” என்றாள் .

 

ஸ்ருதி,”சரி யோசிச்சிட்டு சொல்றேன், நா அப்போ கெளம்புறேன்” என்று கூறி விட்டு அங்கிருந்து வெளியே வந்தாள், அப்போது அபியிடம் இருந்து ஸ்ருதிக்கு கால் வந்தது, அபி,”எங்க இருக்கீங்க மேடம்” என்றான்

 

ஸ்ருதி,”அங்க தான் வந்துகிட்டு இருக்கேன்” என்றாள் .

 

அபிமன்யு,”சரி சீக்கரம் வா” என்று கூறி பின்பு சில நொடிகள் கழித்து அபி,”ஸ்ருதி ஐ லவ் யு” என்று கூறி போனை வைத்தான்

 

ஸ்ருதி,”இவன் கிட்ட எப்டி நாம இந்த விஷயத்த பத்தி பேசறது” என்று கூறி தன் விழியில் வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

 

அபி போனை வைக்கவும், அறைக்குள் வந்த வருண் அபியிடம்,”சார் அவங்க யாரும் சலரி வாங்க மாட்டிக்காங்க, உங்கள பாக்கணும்ன்னு சொல்றாங்க” என்றான் .

 

அபி கொஞ்ச நேரம் யோசித்து விட்டு, “சரி வா போலாம் என்று கீழே வந்தான்”

 

கீழே corridorரில் அனைவரும் அபிக்காக காத்துக்கொண்டிருந்தனர், அபி வருணுடன் கீழே இறங்கி வந்தான், பின்பு அவர்களை பார்த்து .

 

அபிமன்யு,”நீங்க எல்லாரும் நா வந்தா தான் cheque வாங்குவேன்னு சொன்னிங்கலாம், இதோ நா உங்க முன்னாடியே இருக்கேன், வாங்கிக்கோங்க” என்றான் .

 

அதற்கு அவர்கள்,”நாங்க உங்களைவிட்டு எங்கயும் போகமாட்டோம் சார்” என்றார்கள்.

 

அபிமன்யு,”ரொம்ப தேங்க்ஸ், இன்னைக்கு நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன், எனக்காக இத்தன பேர் இருக்காங்கன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு, உங்க எல்லாருக்கும் நா ரொம்ப கடம பட்ருக்கேன், நீங்க எல்லாருமே நல்லா இருக்கணும், கடவுளோட அருள் இருந்தா கண்டிப்பா நா மறுபடியும் அகாடமி ஆரம்பிப்பேன், அப்போ கண்டிப்பா நாம எல்லாரும் சேர்ந்து வொர்க் பண்ணலாம்,பணம் இல்லாம என்னால அகாடமிய ரன் பண்ண முடியாது ஸோ இப்போதைக்கு என்னால இவ்வளவு தான் சொல்ல முடியும், இந்த காலத்துல வேல கடைக்கிறது ரொம்ப கஷ்டம்ன்னு எனக்கு தெரியும் அதனால உங்களுக்கு நாலு மாசத்துக்கான சம்பளம் இதுல இருக்கு, ப்ளீஸ் மறுக்காம வாங்கிக்கோங்க, உங்களுக்கு எப்போ என்ன உதவி வேணும்னாலும் என்கிட்ட கேக்கலாம், என்னால முடிஞ்ச உதவிய கண்டிப்பா நா பண்ணுவேன் இங்க வேலபாக்குரவங்களுக்கு மட்டும் இல்ல, இங்க படிச்சவங்களுக்கும் தான்” என்று கூறினான் .

 

பிறகு அனைவரும் ஒருவர் ஒருவராக வந்து அபியிடம் தங்களது சம்பளத்தை வாங்கிக்கொண்டனர் . கடைசியில் அபியின் கரங்களில் இரண்டு கவர்கள் மீதம் இருந்தன அதில் ஒன்று வருண் உடையது, மற்றொன்று ஸ்ருதியின் உடையது, அபி வருணுக்கு கொடுப்பதற்காக அவனை தேடினான் ஆனால் வருண் அங்கே இல்லை, உடனே அபி வருணை தேடிக்கொண்டு அவனது அறைக்கு சென்றான், அங்கே வருண் மிகவும் கவலையாக அமர்ந்திருந்தான், அபி அவன் அருகில் வந்து, அவனது தோளில் தன் கைகளை வைத்து, வருண் என்று அழைத்தான், உடனே வருண் தன் கண்களில் வழிந்த நீரை துடைத்துவிட்டு, அபியை பார்த்து,”சொல்லுங்க சார்” என்றான் .

 

அபி,”வருண் இந்தா இத நீ வாங்காமலே வந்துட்ட” என்றான் .

 

வருண் அபியின் கைகளில் இருந்து கவரை வாங்கி, அபியை பார்த்து,”இது எதுக்கு நம்மளோட உறவ முறிச்சிக்கிறதுக்கா” என்றான் உடனே அபி,

 

“அது இல்ல வருண்” என்று கூற வந்தான், ஆனால் வருண் எதுவும் பேச வேண்டாம் என்பதை போல் தன் கைகளை காட்டி,

 

“எதுவும் பேசாதிங்க, என்ன பேசணுமோ எல்லாம் பேசிட்டீங்க, இனிமே நா பேசறேன் நீங்க கேளுங்க… ஆமா என்ன நினச்சிட்டு இருக்கிங்க நானும் மத்தவங்களும் ஒன்னா, இல்ல நா தெரியாம தான் கேக்றேன், நானும் மத்தவங்களும் ஒன்னா, எனக்கும் அவங்களுக்கு குடுக்கர மாதிரியே, பணத்த குடுக்கிறீங்க, நீங்க என்ன பத்தி உங்க மனசுல என்ன நினைக்கிறீங்கன்னு எனக்கு தெரியாது, ஆனா நா உங்கள என் சொந்த அண்ணனா தான் பாக்குறேன், அதுக்காக என்னால நெஞ்செல்லாம் பொழந்து காட்ட முடியாது” என்று தன் கண்களில் நீர் வழிய கூறினான், இதைக்கேட்ட அபியின் கண்களும் நீரால் நிரம்பியது, பின்பு அபி,

“சாரி டா வருண்” என்று கூறி அவனை கெட்டி அணைத்துக்கொண்டான், பின்பு இருவரும் ஒருவரை ஒருவர் கெட்டி தளுவிகொண்டனர். பின்பு அபி,

 

“ரொம்ப கஷ்டமா இருக்குடா, இந்த அகாடமி என் கனவுடா” என்று கூறி மளமளவென அழத்தொடங்கினான், வருண்,

 

“அழாதிங்கனா எல்லாம் சரியாகிரும்னா எனக்கு அந்த நம்பிக்க நிரயாவே இருக்கு” என்றான், அபி மீண்டும் சோகமாகவே இருந்தான், உடனே வருண் அவனிடம்,

 

“என்ன சார் இது இப்டி அழுதுட்டு இருக்கீங்க, இத ஸ்ருதி பாத்தா என்ன நினைப்பாங்க அவங்களும் கஷ்ட படமாட்டாங்க, அவங்க கஷ்ட பட்டா உங்களால தாங்க முடியுமா” என்றான், அதை கேட்ட அபி தன் கண்களை துடைத்துக்கொண்டு,

 

“ஆமா டா அவ ரொம்ப கஷ்ட படுவா, அப்றோம் அழ ஆரம்பிச்சிருவா, அத என்னால தாங்கிக்க முடியாது” என்றான், வருண்,

 

“அப்டி போடுங்க, இப்போலாம் உங்கள Convience பண்றதுக்கு ஸ்ருதி பேர தான் சொல்ல வேண்டிருக்கு, ரொம்பவே மாறிட்டீங்க” என்றான், உடனே அபி,

 

“ஏன் அங்க மட்டும் என்ன வாழுதான், சாம்பார் மாதிரி இருந்த இப்போ எப்டி இருக்க” என்றான், இப்படி ஒருவருக்கொருவர் மாத்தி மாத்தி சிரித்துக்கொண்டிருந்தனர், இதெல்லாத்தையும் வாசலில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஸ்ருதி, தன் அறைக்கு வந்து தேம்பி தேம்பி அழுதுக்கொண்டே,

“நா அழகுடாதுன்னு, தன்னோட சோகத்த மறச்சிக்கிறான்,இவனுக்காக கண்டிப்பா நாம இத செஞ்சிதான் ஆகணும்… நான் செய்ய போற விஷயம் உன்னை காயப்படுத்தும்ன்னு எனக்கு தெரியும் அபி ஆனா நான் நீ நல்லா இருக்கனும்ன்னு தான் செய்யிறேன் லவ் யு … என்னை மன்னிச்சிரு அபி ” என்று கூறி தன் கண்களை துடைத்துவிட்டு, தன் தோழி ப்ரியாவுக்கு போன் செய்து அவளிடம்,

 

“ப்ரியா நா நீ சொன்ன விஷயத்துக்கு சம்மதிக்கிறேன், அந்த deal எனக்கு ஒகே” என்றாள்

 

ப்ரியா,”நீ sureரா தான சொல்ற, நல்லா யோசிச்சிகிட்டியா, இது உன் லைப்” என்றாள்

 

ஸ்ருதி,”யோசிக்க ஒன்னும் இல்ல, எனக்கு ஒகே” என்றாள்

 

ப்ரியா,”அப்போ ஒகே மா, நா எல்லாத்தையும் final பண்ணிறேன்” என்று கூறி தன் போனை வைத்தாள்.

 

வருண்,”உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசனும், லன்ட் விக்கிற விஷயமா ஒருத்தர் கிட்ட பேசுனேன், அவருக்கு லன்ட ரொம்ப புடிச்சிருக்காம், கேட்டத விட அதிகமா கூட தாரேன்னு சொன்னாரு” என்றான்

 

அபிமன்யு,”அதெல்லாம் வேணாம், கேட்ட பணத்த கேட்ட நாள்ல தந்தா போதும்” என்றான்

 

வருண்,”அப்போ சரி நா எல்லாம் formalitiesசையும் முடிச்சிர்றேன், நீங்க வந்து சய்ன் மட்டும் பண்ணுங்க” என்றான்

 

இப்படி இருவரும் பேசிக்கொண்டிருக்க, உள்ளே வந்த ஸ்ருதி அபியை பார்த்து,

 

“என்கூட வா” என்று கூறி அவனது கையை புடித்து இலுத்துக்கொண்டு சென்றாள், அபி,

 

“ஏய் எங்க கூட்டிட்டு போற” என்றான், அதற்கு ஸ்ருதி,

 

“ஏன் எங்கன்னு சொன்னா தான் வருவியா” என்றாள், அபி,

 

“அப்டிலாம் இல்ல டா” என்று கூறினான், அதற்கு அவள்,

 

“இல்லல, அப்போம் வா” என்று கூறி அவளை அழைத்துச்சென்றாள், அபி வருணை பார்க்க வருண்,

 

“சிரித்துக்கொண்டே, என்ஜாய் அபி அண்ணா” என்றான் .

 

பிறகு ஸ்ருதி அபியை பார்த்து கார் எடுக்கச்சொன்னாள், அபி முழிக்க

 

“இப்போ எடுக்க போறியா இல்லையா” என்று அதட்டினாள், உடனே அவனும் எதுவும் பேசாமல் வண்டியை ஓட்டினான், அபி எங்க போறது என்பதை போல் பார்க்க, ஸ்ருதி,

 

“உன் பார்ம்ஹவுஸ்க்கு போ” என்றாள்

 

.அபி,”இந்த பம்பளிமாசு ஏன் இப்டி நடந்துக்குதுன்னு ஒன்னும் புரியலயே” என்று தன் மனதிற்குள் கூறிகொண்டான்…

 

பின்பு பார்ம்ஹவுஸ்குள் இருவரும் வந்து சேர்ந்தனர், அபியும் ஸ்ருதியும் உள்ளே நுழைந்தனர், ஸ்ருதி எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள், அபியும் ஸ்ருதியின் செய்கை ஒன்றும் புரியாமல்,அவளது மௌனம் களைய காத்துக்கொண்டிருந்தான், ஆனால் ஸ்ருதியோ அபியை பார்த்துக்கொண்டே அவன் மீது சாய்ந்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டாள், அபிக்கு ஒன்றும் விளங்கவில்லை, அவன் எவ்வளவோ சமாதானம் செய்து பார்த்தான் ஆனால் ஸ்ருதியோ அழுவதை நிறுத்தவே இல்லை, அவன்,

 

“ஸ்ருதி ப்ளீஸ் என்ன ஆச்சுன்னு, சொல்லு மா, சொன்னாதான என்னாலா எதுவும் பண்ண முடியும், ப்ளீஸ் டா” என்று கூறினான், ஸ்ருதி,

 

“ப்ளீஸ் என்னை  எதுவும் கேக்காதா” என்றாள், அபி,

 

“சரி நா எதுவும் கேக்கல சரியா, ரிலாக்ஸ் ரிலாக்ஸ்” என்று கூறி அவளது தலையை தடவிவிட்டுக்கொண்டே அவளை தேற்றினான், ஒரு வழியாக ஸ்ருதி தன் அழுகையை முடித்தாள், மல்லிகையை போன்று வெண்மையாக இருந்த ஸ்ருதியின் முகம், அழுது அழுது சிவப்பு ரோஜாவை போல சிவந்திருந்தது, அதை பார்த்த அபியின் கண்களில் ரத்தம் வரவில்லை அவ்வளவு தான் பாக்கி, அவனது கண்களும் நீரால் நிரம்பி இருந்தது, ஸ்ருதி அவனை பார்த்து அவனது கண்களில் வழிந்த நீரை துடைத்துவிட்டு, அவனிடம்,

 

“ஏன்னு தெரியல அபி மனச துறந்து அழனும்ன்னு தோணிச்சு, அதான் உன்கிட்ட என் மொத்த வலியையும் கொட்டி தீத்துட்டேன்” என்றாள் . அதற்கு அபி,

 

“சரி இப்போ உன் வலி எல்லாம் போயிடுச்சா” என்று கேட்டான், ஸ்ருதியும் ஆமாம் என்பதை போல் தலையாட்டினாள்.

 

பின்பு கொஞ்ச நேரம் கழித்து ஸ்ருதி அபியிடம் அவனது மொபைலை தருமாறு கேட்டாள், அவனும் கொடுத்தான், அதை வாங்கிய அவள் சுவிட்ச் ஆப் செய்து விட்டு அவனிடம் கொடுத்தாள், அதை பார்த்த அபி ஸ்ருதியிடம்,

 

“ஏய் ஏன் இப்போ சுவிட்ச் ஆப் பண்ண, என்ன கடத்திட்டு வந்திருக்கியா என்ன, ஏய் வெயிட் வெயிட் நீ கொஞ்சம் தள்ளியே இரு,see இந்த situation யூஸ் பண்ணிக்க நினைக்கியா, நீ என்கிட்ட தப்பா ஏதும், கடவுளே என்ன காப்பாத்த இங்க யாருமே இல்லையா” என்று பயப்படுவதை போல் நடித்தான், ஸ்ருதி உடனே அபியின் வயிற்றில் குத்தினாள், அபி அம்மா என்று கத்த பின்பு இருவரும் ஒருவ ரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர் .

 

பின்பு அபி ஸ்ருதியின் தலையை வருடி கொண்டிருக்க, ஸ்ருதியோ அபியின் சட்டையின் பட்டனை திருகி கொண்டே அவனிடம்,

 

“அபி ஏன் நா உன்ன இங்க கூட்டிட்டு வந்தேன் அப்றோம் ஏன் போன சுவிட்ச் ஆப் பண்ணினேன் உனக்கு தெரியுமா” என்று கேட்டாள் .

 

அதற்கு அவன்,”தெரியலயே, நீயே சொல்லு” என்றான்

 

ஸ்ருதி,”உன் கூட சந்தோஷமா இருக்கனும், அப்றோம் நம்மள யாரும் disturb பண்ண கூடாதுன்னு தான் நா அப்டி செஞ்சேன்” என்றாள்

 

அபிமன்யு,”எல்லாம் ஒகே ஆனா ஏன் அப்டி அழுத, நா எவ்வளவு டென்ஷன் ஆய்ட்டேன் தெரியுமா,இங்க பாரு இனிமே இப்டி அழுத அப்றோம் அவ்வளவு தான்” என்றான்

 

ஸ்ருதி,”ஆமா நா அழுதா ஏன் உனக்கு கஷ்டமா இருக்கு”

 

அபிமன்யு,”அது அப்டிதான் அதெல்லாம் சொல்ல முடியாது, ஏன் உனக்கு மட்டும் நா அழுதா இனிக்குமா என்ன” என்றான் .

 

ஸ்ருதி,”அதெப்படி கஷ்டமா தான் இருக்கும்” என்றாள் .

 

ஸ்ருதி அபிமன்யுவிடம்,”அபி நா உங்ககிட்ட ஒன்னும் சொல்லுவேன் கேப்பீங்களா”

 

அபிமன்யு,”என்ன சொன்னாலும்” என்றான்

 

ஸ்ருதி,”நீங்க ரொம்ப கோபப்படுரிங்க, யாரவது உங்களுக்கு புடிக்காதத சொன்னா உடனே அடிச்சிர்றீங்க, நீங்க கோபப்படும் போது எனக்கு எவ்வளவு பயமா இருக்கும் தெரியுமா” என்றாள்

 

அபி புன்னகைத்துக்கொண்டே, ஸ்ருதியின் கண்களை பார்த்து,”நா கோபப்பட்டா உனக்கு பயமா ரொம்ப இருக்குமா” என்றான்

 

ஸ்ருதி,”ம்ம்ம்” என்று தன் தலையை ஆட்டினாள்

 

அபி ஸ்ருதியின் அழகான கொழு கொழு கன்னங்களை கில்லி, ” இனிமே என் அம்மு பயப்படற மாதிரி நா என்னைக்கும் நடந்துக்க மாட்டேன்” என்று கூறி தன் நெற்றியை தன்னவளின் நெற்றியுடன் பதித்துக்கொண்டான்.

 

அப்பொழுது ஸ்ருதி அபியின் கன்னத்தில் தன் இதழ்களால் முத்திரை பதித்தாள், அந்த நொடி தன்னவள் தனக்கு தந்த பரிஸின் மகிழ்ச்சியில் தன்னையே மறந்து அவளது கண்களில் மூழ்கிருந்தான் .

 

ஸ்ருதி புன்னகைத்துக்கொண்டே அபியை பார்க்க அவன் மெல்லமாக அவள் அருகில் வந்து அவளது உச்சியிலும் நெற்றியிலும் தன் இதழ் பதித்தான், வெக்கம் தாங்காமல் அவள் கீழே பார்க்க, அவளது முகத்தை தன் இரு கரங்களால் தாங்கிக்கொண்டு அவளது தாளிட்ட இரு விழிகளையும் முத்தம் என்னும் சாவியை கொண்டு திறந்தான், பின்பு புடமிட படும் பொழுது தங்கம் மேன்மைபடுவதைபோல ஸ்ருதியின் முகமும் அபியின் முத்தத்தால் சிவந்து மேலும் அழகு பெற்றது . நாணமிகுதியால் அவள் தன் இரு கரங்களையும் கொண்டு தன் முகத்தை மூடினாள்.

 

பின்பு லேசாக தன் கைகளை திறந்து பார்த்தவள் அபி தன்னை பார்த்து புன்னகைத்துக்கொண்டிருப்பதை கண்டு வெக்கத்தில் அவனது நெஞ்சில் தன் தலையை சாய்த்துக்கொண்டாள் அவனும் சிரித்துக்கொண்டே தன் கரங்களால் அணைத்துக்கொண்டான்.

 

அந்த நொடி அங்கே ஒரே அமைதி இருவருக்கும் என்ன பேசுவதென்று புரியவில்லை, ஸ்ருதியின் கண்களின் ஓரம் வழிந்த கண்ணீர் அவனது கரங்களில் பட்டு அவனை தன் நினைவுக்கு வரவழைத்தது, அதிர்ந்து போனான் அபி .

 

“ஸ்ருதி ஏன் அழற என்ன ஆச்சி மா, சாரி உன்கிட்ட இந்த மாதிரி பிடிக்கலையா” என்றவனின் வாயில் தன் கரத்தை வைத்து ஸ்ருதி,

 

“பிடிச்சிருக்கு அபி சந்தோஷமா இருக்கேன், இது எனக்கு பர்ஸ்ட் டைம்மா என் சந்தோஷத்த எப்டி சொல்றதுன்னு தெரியல, இந்த பீலிங்க எப்டி காட்டணும்ன்னு தெரியல” என்று கூறினாள்

 

அபி,”பர்ஸ்ட் டைம்மா இதுக்கு முன்னாடி நீ யாரையுமே லவ் பண்ணது இல்லையா”

 

ஸ்ருதி,”இல்லை என்பது போல் தலையை ஆட்டினாள்”

 

அபி,”பாய் ப்ரண்ட் கூட கிடையாதா” என்றான்

 

ஸ்ருதி,”இல்ல அபி உன்கிட்ட எனக்கு தோனுன மாதிரி எனக்கு வேற யார் மேலயும் தோனுனதில்ல, அதான் நீ வருத்தபட்டா தாங்கிக்க முடியல, உன்ன நா என்னைக்கும் இழக்க கூடாது அபி” என்றாள்.

 

இதை கேட்ட அபி ஸ்ருதியிடம்,”என்னைக்கும் நாம பிரிய மாட்டோம்” என்று கூறி தன் மீது சாய்த்துக்கொண்டான்.

 

பிறகு,அபிமன்யு,”சரி எனக்கு ஒரு விஷயம் சொல்லு உனக்கு, அவன் நா ரொம்ப புடிக்குமோ” என்று கேட்டான்

 

ஸ்ருதி,”யார சொல்ற” என்று ஒன்னும் தெரியாதவளை போல் கேட்டாள்

 

அபிமன்யு,”ஏய் அவன் தான் ஏதோ லீ ஹோ, லா ஹோன்னு ஏதோ ஒரு பேரு சொல்லுவியே, பாக்றதுக்கு புருவமே இல்லாம ஏதோ ஒரு மாதிரி, மைதாமாவுல செஞ்ச பொம்ம மாதிரி இருப்பானே அவன் தான்” என்றான்

 

ஸ்ருதி அபி பொறமை படுவதை ஓரக்கண்ணால பார்த்துவிட்டு அவனிடம்,”ஒ என் லீ மின் ஹோ வ சொல்றியா, ஆமா ரொம்ப புடிக்கும்” என்றாள்

 

அபிமன்யு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தான், உடனே ஸ்ருதி

“gelusil கொண்டு வாங்க பா வயறு எரியுது “என்றாள், அபி ,

 

” ஏன் யாருக்கு வயிறு எரியுது” என்று கேட்டான், அதற்கு ஸ்ருதி,

 

“இதோ உன் வயிறு தான் jealousyயால கொழுந்து விட்டு எரியுது” என்று கூறி சிரித்தாள், அவன் உடனே

 

“ஹலோ ப்ளீஸ் எனக்கு ஒன்னும் jealousyலாம் இல்ல, நா கண் அசச்சா போதும் ஆயிரம் பொண்ணுங்க எனக்காக queueல நிப்பாங்க” என்றான்

 

உடனே ஸ்ருதி, “ஆமா ஆமா எல்லாம் அறுபது வயசுக்கு மேல தானே” என்றாள், அதற்கு அபி,

 

“ஹலோ எனக்கு இப்பவும் எத்தன girls fans இருக்காங்க தெரியுமா” என்றான், பதிலுக்கு ஸ்ருதி,

 

“ஆமா அங்கரி bird மாதிரி ஒரு மூஞ்சி, இதுக்கு நா கடச்சதே அதிகம், இதுல சார்க்கு எல்லா பொண்ணுகளும் இவரையே பாக்ராங்கன்னு நனைப்பு வேற, பாஸ் நனைப்பு தான் பொழப்ப கெடுக்கும்” என்றாள்.

உடனே அபி,”நா அங்கரி birdடா உன்ன என்ன பண்ணரேன்னு பாரு” என்று கூறி அவளை துரத்தினான், அவளும் ஓடினாள் இருவரும் ஸ்விம்மிங் பூலை சுற்றி சுற்றி ஓடினர், ஒரு வழியாக அபி அவளை பிடித்துவிட்டான், பின்பு அபி ஸ்ருதியிடம்,

 

“நிஜமாவே உனக்கு லீ மின் ஹோ தான் ரொம்ப புடிக்குமா” என்று கேட்டான், அதற்கு ஸ்ருதி அபியை பார்த்து,

 

“இல்ல உன்ன தான்,உன்ன விட வேற யாரையும் எனக்கு பிடிக்காது, அபி என்னை நீ அப்டி என்ன தான் பண்ணின, நா மொத்தமா மாறிட்டேன்” என்று கூறினாள், பின்பு இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர் ..

 

“மழைத்துளி போல உன் கண்கள் தீண்ட

என் கண்களில் உன் முகம் கண்டேன்

தென்றல் கூட வீசும் உன் வாசம்

என்னை என்ன செய்தாய் நீ

நிலவு போல உன் நினைவு தீண்ட

என் கண்கள் ஒளி வீசக்கண்டேன்

கால்கள் கூட தேடும் உன் வாசல்

என்னை என்ன செய்தாய் நீ

ஊஞ்சல் போல ஆடுது என் உள்ளம்

பூவிலும் தெரியும் உன் முகம் கண்டு

நான் தான் என்ன ஆனேன் என்று

என் உள்ளம் கேள்வி கேட்க

என்னை என்ன செய்தாய் நீ

உன் மௌனம் கூட ஒரு மொழியாக

உன் குறைகள் கூட எனக்கு நிறையாக

தெரிய என்னை என்ன செய்தாய் நீ

மொழி பேசும் உன் கண்கள் முன்பு

என்னையே நான் மறக்கிறேன் !”

 

அபியோ ஸ்ருதியின் கண்களிலே மூழ்கிருந்தான், அதை கவனித்த ஸ்ருதி அபியை அருகில் இருந்த ஸ்விம்மிங் பூலில் தள்ளிவிட்டு சிரித்துக்கொண்டிருந்தாள், ஆனால் அபியோ வெகு நேரமாகியும் தண்ணீரை விட்டு வெளியே வராமலே இருந்தான், இதனால் பயம்மடைந்த ஸ்ருதி,

 

“அபி ப்ளீஸ் நடிக்காத வெளியில வா” என்று கூறி அழைத்தாள், நேரமாகியும் அவன் வராததால், ஸ்ருதி பயந்துக்கொண்டே, தண்ணீரில் இறங்கி அவனை தேடினாள், ஆனால் அபியோ தண்ணீரில் உள்ளே இருந்து வெளியே வந்தான், பின்பு தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்த ஸ்ருதியை பார்த்து,

 

“என்னயா தண்ணீக்குள்ள தள்ளிவிடுற” என்று கூறி சிரித்தான், ஆனால் ஸ்ருதியோ,

 

“அபி எனக்கு நீஞ்சல் அடிக்க தெரியாது” என்று கத்தினாள்

 

அபி,”ஏய் நடிக்காத, மறுபடியும் என்ன தண்ணீல தள்ளிவிட தான பிளான் பண்ற, இந்த முறை நா சிக்க மாட்டேன், முதல்ல வெளிய வா” என்று கூறினான்,

ஆனால் ஸ்ருதி தத்தளித்துக்கொண்டே பயத்தில்  மயங்கி தண்ணீரில் விழுந்தாள், அதை பார்த்து பதறி போன அபி உடனே தண்ணீக்குள் விழுந்து அவளை வெளியே கொண்டு வந்தான், எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தான் ஆனால், ஸ்ருதி கண்முழிக்கவே இல்லை, தலையில வேற அடிபட்டு ரத்தம் வர, பதறி போன அபி அழுதுகொண்டே அவளை தன் கரங்களில் ஏந்திக்கொண்டு வந்து காரில் வேகமாக அருகில் இருந்த hospitaலுக்கு அழைத்துச்சென்றான்.

அங்கே டாக்டர் அபியை,அறையை விட்டு வெளியே போகச்சொன்னார்ஆனால் அபி டாக்டரிடம்,

 

“நா எங்கயும் போகமாட்டேன்,ஸ்ருதிக்கு எதுவும் ஆக கூடாது” என்று பதற்றமாக கூறினான், அதற்கு அவர்,

 

“இப்போதைக்கு உங்க அன்ப விட அவங்களுக்கு என் ட்ரீட்மென்ட் தான் முக்கியம், ஸோ நீங்க வெளிய போங்க என்ன என் வேலைய செய்யவிடுங்க” என்றார், அதற்கு அபி அவரை பார்த்து கோபமாக,

 

“அப்டினா சரி ஸ்ருதிக்கு எதுவும் ஆக கூடாது, அவளுக்கு மட்டும் ஏதாவது ஆச்சி, என்ன வேற மாதிரி பாப்பிங்க” என்று கூறி ஸ்ருதியை பார்த்து அழுது கொண்டே அறையை விட்டு வெளியே சென்று, அறையின் வாசலிலே தன் கை கால் நடுங்க காத்துக்கொண்டிருந்தான் ..

 

கொஞ்சம் நேரம் கழித்து வெளியே வந்த டாக்டர் அபியிடம்,”அவங்க இப்போ நல்லா தான் இருக்காங்க தலையில சின்ன காயம் தான் போய் பாருங்க, இன்னைக்கே discharge பண்ணிக்கோங்க” என்றார், சந்தோஷத்தில் அபி அவர் கையை பிடித்துக்கொண்டு அவரிடம்,

 

“தங்க யு டாக்டர் தங்க யு ஸோ மச்” என்று கூறினான், அதற்கு டாக்டர்,”யு ஆர் welcome போய் பாருங்க” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார் .

 

அபி உள்ளே சென்று ஸ்ருதியை பார்த்து,”சாரி ஸ்ருதி, என்னால தான் இவ்வளவும் சாரி மா, ரொம்ப வலிக்குதா” என்று கேட்டான்.

 

ஸ்ருதி,”அதெல்லாம் ஒன்னும் இல்ல அபி லேசா தான், நீ பயப்படாத, நீ என்ன வேணும்னேவா செஞ்ச, எனக்கு ஸ்விம்மிங் தெரியாதுன்னு உனக்கு எப்டி தெரியும், தெரிஞ்சா நீ செஞ்சிருபியா, நானும் உன்ன தள்ளிவிட்ருக்க கூடாது” என்றாள் .

 

அபிமன்யு,”ஆமா உனக்கு தான் ஸ்விம்மிங் தெரியாதே அப்போ ஏன், தண்ணீகுள்ள வந்த” என்றான்

 

ஸ்ருதி,”என்ன பேசற ரொம்ப நேரமாகியும் நீ வெளிய வரல, நா என்ன பண்ணுவேன் உன்ன காப்பாத்த உள்ள வந்தேன்” என்றான்

 

அபிமன்யு,”எனக்காக இப்டி நீஞ்சல் தெரியாம தண்ணீல குதிச்சிட்டியே ஒருவேள உனக்கு ஏதாவது ஆகிருந்தா” என்று கேட்டான் அதற்கு ஸ்ருதி தன் கண்களின் நீரை துடைத்துவிட்டு,

 

“நீ நானு ஏன் பிரிச்சி பேசற, உனக்காக உயிரையே குடுப்பேன், தண்ணீல குதிக்கறது என்ன பெரிய விஷயம், அபி ஏற்கனவே என் வாழ்கையில என் அப்பா அம்மாவ இழந்து நா நிறையா கஷ்ட பட்டுட்டேன், மறுபிடியும் எந்த காரணத்துக்காகவும் உன்ன இழக்க நா தயாராயில்ல . ஆமா ஒன்னு சொல்லு நீ மட்டும் என்ன லேசு பட்டவனா என்ன, எனக்கு ஏதாவது ஆக நீ விட்ருவ ஹ்ம்ம்” என்று கூறி சிரித்தாள், அபியும் அவளுது கையை தன் இதயத்தில் வைத்துக்கொண்டு,

 

“நீ எப்பவும் என் கூடவே இருக்கணும்” என்று கூறினான், பதில் பேசமுடியாமல் மனதிற்குள் அழுதவள் ஒப்புக்காக ” ஆம் ” என்பதாய் தன் தலையை அசைத்தாள்..

 

பிறகு hospitalலில் அனைத்து formalitiesசையும் முடித்துவிட்டு, ஸ்ருதியை hostelலில் காவியா சுவாதியிடம் பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி கூறி விட்டுவிட்டு, தன் வீட்டிற்கு வந்தான் .

 

அங்கே வீட்டில் சகுந்தலா அபியை பார்த்து,”எப்டிடா எல்லாத்தையும் தாங்கிகிட்டு இருக்க, அம்மா கிட்ட ஒரு வார்த்த சொல்லனும்ன்னு உனக்கு தோணலல” என்று கேட்டார்

 

அபிமன்யு,”உங்களுக்கு எப்டி தெரியும்” என்று அவன் கேட்க்க

 

ஆர்த்தி,”ஸ்ரீனிவாசன் அங்கிள் வந்திருந்தாரு, அவரு தான் எல்லா விஷயத்தையும் சொல்லி மன்னிப்பு கேட்டாரூ, எந்த உதவினாலும் தயங்காம கேக்க சொன்னாரு” என்றாள் .

 

அபி,”மா நீங்க வருத்த படுவிங்கன்னு தான் நா சொல்லல”

 

சகுந்தலா,”உன்ன பாக்கவே கஷ்டமா இருக்கு டா”

 

அபி,”அம்மா ப்ளீஸ் இத விட எவ்வளவோ கஷ்டத்தலாம் தாண்டிதான் நாம வந்திருக்கோம், அப்பா போனப்பறம் நீங்க எவ்வளவு கஷ்டத்தையும் தாண்டி எங்கள வளத்து ஆளாக்குநீங்க, நா உங்க புள்ளமா,எல்லாத்தையும் சமாளிச்சிருவேன் மா, நீங்க என்கூட இருக்கற வரைக்கும், எல்லா பிரச்சனையும் நா face பண்ண தயாரா இருக்கேன்” என்றான்

 

பின்பு அபி தன் அக்காவையும் தாயையும் கட்டி அணைத்துக்கொண்டான் .

 

இரவு அபி சுவாதிக்கு போன் செய்து,”ஹாய் சுவாதி நைட் disturb பண்ணிட்டேன்னா” என்றான்

 

சுவாதி,”அதெல்லாம் ஒன்னும் இல்ல சார், ஸ்ருதி நல்லா இருக்கா, tiredல டப்ளேட் போட்டுட்டு சீக்கரமாவே தூங்கிட்டா” என்றாள்

 

அபி,”தேங்க்ஸ் ஸ்ருதி இல்ல சுவாதி” என்று கூறினான்

 

சுவாதி சிரித்துவிட்டு,”பரவாயில்ல சார் நா போன வச்சிர்றேன்” என்று கூறிவிட்டு போனை வைத்தாள், அபியும் நிம்மதியாக கண் மூடி தூங்கினான் .

 

இப்படியே நாட்களும் நகர்ந்தன, அபியும் இன்வெஸ்டர்ஸ்க்கு குடுக்க வேண்டிய பணத்தை சொன்ன தேதிக்கு முன்பே குடுத்துமுடித்தான்   அப்படி  இருக்க  அன்று சாய்ங்காலம் அபி ஸ்ருதிக்கு போன் செய்து,

 

“ஹாய் மா, இன்னைக்கு நாம அப்டியே ஜாலியா வெளியில போயிட்டு, dinner சாப்டலாம், ஸோ நீ எங்க இருக்கன்னு சொல்லு நா உன்ன பிக் up பண்ணிக்கறேன்” என்றான்

 

ஸ்ருதி,”ஒ சாரி அபி நா இப்போ ஹோமேல இருக்கேன் மதர்கிட்ட ஒரு வேலையா வந்தேன், இன்னோர் நாள் போலாம்” என்றாள்

 

அபிமன்யு,”ஒகே டா, டேக் கேர்” என்று கூறி போனை வைக்கவும், ஸ்ருதி தனக்கு oppositeட்டில் இருக்கும் ஒரு கடையில் இருந்து வெளியே வருவதை அபி பார்த்துவிட .

அபிக்கு மிகவும் கஷ்டமாகி போக ,அவன் தனக்குள்,

“ஏன் ஸ்ருதி என்கிட்ட பொய் சொன்ன ,அப்டி பொய் சொல்ற அளவுக்கு என்ன பெரிய முக்கியமான விஷயம்” என்று மிகவும் கவலையோடு தன் வீட்டிற்கு வந்து தன் அறையில் கட்டில் மீது படுத்துக்கொண்டு,

“நாமளே என்னன்னு கேட்ருவோமா, இல்ல வேண்டாம் அவளா சொல்லட்டும், ஒருவேள என்ன புடிக்கலையா, ச்ச மடையா, அவளுக்கு தான் நீ நா உயிரே, அப்போ ஏன் இப்போ கொஞ்ச நாளாவே என்கிட்ட வித்யாசமா நடந்த்துக்கரா, என்ன ஏன் avoid பண்ணனும், இல்ல அபி ரொம்ப யோசிக்க கூடாது, பொறுமையா இரு ஸ்ருதியே சொல்லுவா” என்று கூறி தன் மனதை தேற்றிக்கொண்டு விழிமூடி தூங்கினான் .

சகுந்தலா ஸ்ருதியிடம் தன் போனில்,”என்னமா இது நீ முடிவே பண்ணிட்டியா, அபிய சமாளிக்கறது ரொம்ப கஷ்டம் டா” என்றாள்

ஸ்ருதி,”மா ப்ளீஸ் எனக்கும் இத விட்ட வேற வழியில்ல, நா அபி கிட்ட பேசிக்கறேன், நீங்க நா சொன்ன மாதிரி பண்ணிருங்க, வருண் ராஜேஷ் அப்றோம் என் பிரண்ட்ஸ் உங்களுக்கு தேவையான எல்லா ஹெல்பும் பண்ணுவாங்க, நீங்க டென்ஷன் ஆகாதிங்க மா, ஆர்த்தி அண்ணியையும் டென்ஷன் ஆக வேண்டம்ன்னு சொல்லுங்க, நா எல்லாத்தையும் பாத்துக்கரேன், குட் நைட் மா” என்று கூறி தன் போனை வைத்தாள் .

பின்பு அபியை நினைத்துக்கொண்டே கண்மூடி தூங்கினாள்..

ஸ்ருதிகூட அபியின் அன்புக்கு முன்பாக தன்னையே மறந்து, அவனுக்காக தன் உயிரையும் கூட மாய்த்துக்கொள்ள தயாராக இருகின்றாள்..

 

-தொடரும்