Nenjathai KIllathe 7

Picture2

Nenjathai KIllathe 7

பகுதி 7

இது என்ன மாயம்

                                  “அன்பை,

சிலர் தங்களின் செய்கையால் உணர்த்துவர்

சிலர் தங்களின் அதீத பாசத்தால் உணர்த்துவார்

ஆனால் சிலர் நம் மீது கொண்டுள்ள அன்பையோ

புரிந்துகொள்ள முடியாது,

 காலம் தான் நமக்கு அதை புரியவைக்கும் …”

ஆம் மாயம் தான்! அன்பே ஒரு  மாயம் தான் !தூய்மையான அன்பிற்கு மட்டும் தான் துன்பத்தையும் இன்பமாய் மாற்றும் ஷக்தி உள்ளது, இறைவனும் கூட அன்பிற்கு தானே, அடிமையாய் கிடப்பான், அன்பே அதிசயம் தானே

இறைவனுகே இந்த நிலைமை என்றால், அற்ப மனிதன் மட்டும் அன்பின் மாய வலையில் இருந்து தப்ப இயலுமா என்ன?

இனி கதைக்குள் செல்லலாம்…

 

அபி நேராக வருணிடம் வந்து,  “என்ன பிரச்சனை” என்றான்.

 

வருண் கூறுவதற்குள் அஜய் ,

 

“என்கிட்ட கேளுங்க நான் சொல்றேன்” .

 

அபிமன்யு,”Mr அஜய், நான் வருண் கிட்ட பேசிட்டு இருக்கேன். நீ என்ன வருணா? உங்கிட்ட கேட்டா மட்டும் பதில் சொல்லு . சொல்லுங்க வருண் என்ன ப்ரொப்லெம்” என்று கேட்க, வருண் நடந்த அனைத்தையும் கூறினான்.

 

அபி அஜய் பக்கம் திரும்பி,

 

அபிமன்யு,”வருண் சொல்றதெல்லாம் உண்மையா” என்றான்.

 

அதற்கு அஜய்,

“இந்த மாதிரியான பேசிக் classesலாம் எனக்கு தேவையில்ல, இப்போம் என்னை விட்டு பாருங்க எல்லாரையும் பத்தே செகண்ட்ல துவம்சம் பண்ணிருவேன் . சந்தேகமா இருந்தா ! வேணும்ன்னா ஒன் டு ஒன் மேட்ச் வசிக்கலாம், எனக்கு ஒகே” என்றான் .

 

அபிமன்யு,”ரியல்லி, தட்ஸ் கிரேட், மேட்ச்லாம் இருக்கட்டும். முதல்ல வருண்கிட்ட தப்பா பேசுனதுக்கு மன்னிப்பு கேளு” என்றான்.

 

அஜய்,”இவன் கிட்டயா ! என்ன விளையாடறிங்களா, கேட்க்க முடியாது” என்றவனை அபி அடிக்க கை ஓங்குவதற்குள் வருண் அபியை தடுத்துவிட்டான்.

 

பிறகு அஜய், அபியிடம் ,

 

அஜய்,”சண்ட போடுறதுக்கு பயமா இருந்தா சொல்லுங்க சார்,எதுக்கு தேவை இல்லாம கை நீட்டிட்டு இருக்கீங்க“ என்றவனை, அபி முறைத்து பார்த்து விட்டு,

 

அபிமன்யு,”என்ன பார்த்துகிட்டு இருக்கீங்க, போங்க போய் மேட்ச்க்கு தேவையான எல்லாத்தையும் ரெடி பண்ணுங்க. அஜய் சார் கூட மோதி பார்க்குறதுன்னு முடிவு பண்ணிட்டேன்.  students இப்போ உங்க எல்லாருக்கும் பேசிக் classes பத்தின லைவ் டெமோவ நானும் அஜயும் காட்ட போறோம், ஸோ எல்லாரும் ரொம்ப கவனமா பாத்துக்கோங்க”

 

அஜய் தன் மனதிற்குள், அபியை பார்த்து, “செத்தடா நீ, அன்னைக்கு என்னை அவமான படுத்துனல, இன்னைக்கு எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு தரேன் நல்லா வாங்கிக்கோ” என்றான்.

 

வருண் அபியிடம் வந்து,

 

வருண்,”சார், என்ன மனசுல வச்சிட்டு தான் நீங்க சண்ட போடபோறிங்கனு நல்லா புரியுது. வேண்டாம் சார்” என்றான், அதற்கு அபி பதில் ஏதும் கூறாமல்,

 

“போ வருண் போய் டாக்டர்,ஃப்பஸ்ட் ஏய்ட் கிட், மெடிக்கல் facilities எல்லாம் ரெடியா இருக்கற மாதிரி பார்த்துக்கோ , அப்புறம் அஜய்யோட மெடிக்கல் reports எடுத்துட்டு பிரெஷேர் trainer மனோவ என்னை வந்து பார்க்க சொல்லுங்க என்றான்”

 

trainer மனோ,”சார், அஜய் ரிப்போர்ட்ஸ் “

 

அபிமன்யு,”அஜய் fitness ratio எல்லாம் எப்படி இருக்கு”

 

trainer மனோ,”எல்லாம் ஒகே சார்”

 

” சரி நீங்க போலாம் ” என்று கூறிவிட்டு, கீழே வந்தான் .

 

அபிமன்யு கோபக்காரன் தான் ! ஆனால், அதற்காக ஒன்றும் முரடன் அல்ல! தனக்கு இணை இல்லாதவரிடத்தில் தனது பலத்தை காட்டுவது முட்டாள்தனம் என்பதை நன்கு உணர்ந்தவன் .  இப்போது கூட அஜயிடம் சண்டை இடு வேண்டும் என்பது அவனது எண்ணம் இல்லை.  அஜயின் அகங்காரத்தை அடக்க வேண்டும் என்பதே அவனது நோக்கம் .

 

இன்று நடக்க போகும் யுத்தத்தை காண்பதற்காக, அனைவரும் ஆவலோடு எதிர்பாத்துக் கொண்டிருந்தனர்,பாக்சிங் ரிங், referee, ரிங் டாக்டர் என்று , அனைத்தும் தயாராகி இருந்தது.

 

பாக்சிங் ரிங்கிற்குள் அஜயும், அபியும் மோதுவதற்கு தயாராக இருந்தனர்.

 

மொத்தம் ஐந்து சுற்றுகள் ஒவ்வொரு சுற்றுக்கும் 3 நிமிடம் என்ற கணக்கில் மேட்ச் தொடங்க இருந்தது. referee செய்கை செய்ய, இருவரும் தங்கள் கைகளை குலுக்கிக்கொண்டனர் . பிறகு இருவருக்குமான யுத்தம் துடங்கியது.

 

அஜய் எடுத்தவுடன், பஞ்சிங்கில் ஒரு டெக்னிக் ஆன JAB முறைப்படி, நேராக அபியின் தலையை நோக்கி தன் முன் கையால் குத்த (பஞ்ச்) துணிந்த நேரம் , அபி அறிவாக defense டெக்னிக் ஆனா slipping முறைப்படி தன் இடுப்பையும், தோல்பட்டையையும் லேசாக திருப்ப, அஜயின் பஞ்ச் அபியின் தலையை கூறிவைக்க தவறியது.

 

அபி உடனே kicking technique ஆனா front கிக்கை கையாண்டான்! அதில் அபியின் குதிகால் நேராக அஜயின் முகத்தை தாக்கியதில், அஜய் தன் நிதானத்தை இழந்து கீழே விழுந்தான் .

 

refree அஜயின் அருகில் வந்து, ஒன்று முதல் பத்து வரை எண்ணினார், அஜயால் எந்திரிக்க முடியவில்லை, அபி நாக் அவுட் winnerஆக அருவிக்க பட்டான்.

 

ஒரு சுற்று முடிய இன்னும் முப்பது வினாடிகள் பாக்கி இருக்கும் நிலையில், அபி winnerஆக அறிவிக்கபட்டான்.

 

ஏனென்றால் அஜயால் அடுத்த சுற்றை எதிர்கொள்ள முடியவில்லை காரணம், அபியின் முதல் நாக் அவுட்டிலே, தனது தோல்வியை ஒத்துக்கொண்டான் அஜய் .

ரிங் டாக்டர் அஜய்க்கு treatment பண்ண வேண்டும் என்று கூறினார், அபி அஜயை தன் கரம் கொடுத்து தூக்கி நிறுத்தி,

 

” Mr அஜய், இனிமே உங்களுக்கு வருண்கிட்ட சாரி கேட்குறதுல எந்த பிரச்சனையும் இல்லன்னு நினைகிறேன்” என்றான்.

 

அஜய் வேண்ட வெறுப்பாக, வருணிடம் சாரி சொன்னான் .

 

பிறகு அபி அஜயிடம்,

 

“நீ தொட்டில்ல தூங்கும் போதே நான் இந்த boxing ரிங்குள்ள வந்தவன், என்கிட்ட வச்சிக்காத தாங்கமாட்ட“என்று கூறி,அஜயை டாக்டரிடம் ஒப்படைத்து விட்டு, அஜயின் நண்பர்களையும், trainer மனோவையும் அஜயுடன் இருக்குமாறு கூறி விட்டு, வருணுடன் அங்கிருந்து சென்றான்.

 

இதை அனைத்தையும் கவனித்து கொண்டிருந்த ஸ்ருதி தன் மனதிற்குள்,

 

“ஒரே மிதில சாச்சிட்டான் ! இவனே அடிக்கவும் செய்வானாம், அப்புறம் இவனே டாக்டரையும் வர சொல்லுவானாம், சரியான காட்டு மிராண்டி, கடவுளே அஜய்க்கு எதுவும் ஆகாம பார்த்துக்கோங்க” என்றாள்.

 

தன்னையே மிரண்டு பார்த்துக்கொண்டிருந்த ஸ்ருதியிடம்,

 

அபிமன்யு,” என்ன உனக்கு வேணுமா ” என்றான்.

 

ஸ்ருதி வேண்டாம் என்பதைப்போல் வேகமாக தலையை ஆட்டினாள்.

 

பிறகு அபி ,

 

அபிமன்யு,”லுக்,ஒழுங்கா வால சுருட்டிட்டு வேலை பாக்கணும், இல்ல, அப்புறமம் அவனுக்கு நடந்தது தான் உனக்கும்.
நீ ஒரு பொண்ணுங்கற ஒரே காரணத்துக்காகதான் சும்மா விட்டுட்டு இருக்கேன்,இல்லன நான் உன்னை டீல் பண்ணற ஸ்டைல்லே வேறமாதிரி இருக்கும்” என்று மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றான்.

 

அகாடமியில் அனைத்து பணிகளும் முடிந்த பின்பு, அனைவரும் வீட்டிருக்கு சென்றனர் . அபி தன் வீட்டில் சாப்பிடுவதற்காக டைனிங் டேபிள்லில் அமர்ந்திருந்தான்.

 

அப்போது அபி trainer மனோவிற்க்கு போன் செய்து, அஜய்யின் உடல் நலத்தை பற்றி விசாரித்து கொண்டிருந்தான், அப்போது அங்கே வந்த சகுந்தலா,அபியிடம்

 

“என்னப்பா யார் hospitalல இருக்காங்க, அவங்களுக்கு என்ன ஆச்சி” என்றாள். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்து விட்டு அங்கு நடந்த அனைத்தையும் கூறினான்.

 

சகுந்தலாவிற்கு உடனே கோபம் வந்து,

 

சகுந்தலா,”உனக்கு என்ன பைத்தியமா புடிச்சிருக்கு அபி, உன்னை விட வயசுல சின்ன பையன் கிட்ட இப்படியா நடந்துக்குவ”

 

அபிமன்யு,

“அவன் ஒன்னும் சின்ன பையன் இல்ல எல்லாம் தெரிஞ்சவன் தான்! வருண்கிட்ட மரியாத இல்லாம நடந்துகிட்டான், மன்னிப்பு கேளுடானா, நான் ஏன் இவன் கிட்ட மன்னிப்பு கேக்கனும்னு திமிரா பேசுறான், அதான் அடிச்சேன்!
அப்போ கூட நானா ஒன்னும் அவன அடிக்கல அவன் தான் ஒன் டு ஒன் மேட்ச் வச்சிகலாமானு கேட்டான் .
அப்போ கூட நான் சரின்னு சொல்லல, வருண்கிட்ட மன்னிப்பு கேளுன்னு தான் சொன்னேன், அதுக்கு அவன் சண்டபோடுரதுக்கு பயமா இருக்கான்னு மறுபுடியும் திமிரா பேசுனான், நானும் சரின்னு சொன்னேன்”

 

சகுந்தலா,”திமிரா பேசுனா அடிச்சிருவியா,ஹ்ம்ம் சொல்லுடா”

 

அபிமன்யு கோபத்தோடு,”ஆமா என்கிட்ட யாராவது திமிரா பேசுனா அப்படிதான் அடிப்பேன்”என்றான், அதற்கு சகுந்தலா,

 

சகுந்தலா,”அப்போ நானும் உன்கிட்ட திமிரா தான பேசுனேன் என்னையும் அடி,அடிடா” என்றாள்,=. அதற்கு அபி ,

 

அபிமன்யு,”மா ப்ளீஸ்”

 

சகுந்தலா,”என்னடா ப்ளீஸ், இவ்வளவு வர்ஷமாகியும் இன்னும் உனக்கு யார்கிட்ட எப்படி நடந்துகனும்னு தெரியலல,

யாராவது எதாவது சொன்னா போதும் உடனே கைநீட்ட வேண்டியது, ஒரு situationன கூட ஒழுங்கா உனக்கு handle பண்ண தெரியல,

ஒன்னு இந்த extreme இல்லனா அந்த extreme, எந்த ஒரு விஷயத்தையும் யோசிக்காம உடனே உடனே ரியாக்ட் பண்ண வேண்டியது, எப்பவும் என் பேச்ச

கேக்குறதே இல்ல, கொஞ்ச வர்ஷத்துக்கு முன்னாடி அசோக் கிட்ட எப்படி நடந்துகிட்டியோ, அதே மாதிரி தான் நீ அஜய் கிட்டயும் நடந்திருக்க”

 

அபிமன்யு,”அது வேற காரணம், இது வேற காரணம், நீங்க ரெண்டையும் முடிச்சி போடாதிங்க”

 

சகுந்தலா,”ஏண்டா போட கூடாது, காரணம் வேணும்னா வேறையா இருக்கலாம், ஆனா நீ அவங்களுக்கு பண்ண காரியம் ஒண்ணுதாண்டா. ஒரு பையன hospital கூட்டிட்டு போற அளவுக்கு அடிச்சிருக்கனா, நீ எந்த அளவுக்கு அவன் மேல கோபமா இருந்திருப்ப, ஏண்டா உனக்கு இவ்வளவு கோவம்?”

 

அபிமன்யு,”சும்மா ஒன்னும் நான் கோவப்படல, அவங்க தப்பு பண்ணாங்க, எனக்கு கோபம் வந்துச்சு, அடிச்சேன்”

 

சகுந்தலா,”ஒ அப்படியா அப்போ சரி, நீங்க தப்பே பண்ணல, கொஞ்ச வர்ஷத்துக்கு, முன்னாடி என் பேச்சக்கேக்காம நீ எடுத்த தப்பான முடிவால தான் இப்போம் நீ உன் வாழ்க்கையே துலைச்சிட்டு நிக்குற, அதுக்கென்ன தண்டன குடுக்குறது”

 

அபிமன்யு,”அதான் நீங்களே சொல்லிடிங்களே, என் வாழ்க்கையே தொலைச்சிட்டேன்னு . இத விட ஒரு பெரிய தண்டனை எனக்கு இருக்குமான்னு தெரியலமா, யாரையும் நம்ப முடியாம, ஏன் வாழ்ரேனு தெரியாமலேயே தினம் தினம் செத்து செத்து பொழச்சிட்டு இருக்கேன்னே, இத விட ஒரு பெரிய தண்டன எனக்கு இருக்கா என்ன!”

 

ஆர்த்தி,”போதுமா,நம்ம அபி கிட்டயே அவன் அவ்வளவு திமிரா பேசிருக்கான், அவனை எப்படி விட்டு வைக்க முடியும் அந்த அஜய்க்கு நல்லா வேணும், சரி அது போகட்டும், முதல்ல சாப்டலாம்” என்றவளை

 

பார்த்து அபி, எனக்கு பசிக்கல என கூறி விட்டு அங்கிருந்து சென்றான் .

 

ஆர்த்தி,”என்னமா பார்த்துட்டு இருக்கீங்க, போங்கமா, போய் அவனை சாப்பிட சொல்லுங்க போங்க”

 

சகுந்தலா,”அவன் தான் பசிக்கலன்னு சொல்லிட்டான்ல, பசிச்சா அவனே சாப்டுவான்”

 

ஆர்த்தி,”அப்போ நீயாது சாப்டுமா”

 

சகுந்தலா,”எனக்கு பசிக்கல, நீ சாப்பிட்டல, நேரம் ஆச்சு போ tablet சாப்ட்டு படுத்து தூங்கு, ரொம்ப நேரம் முழிக்க கூடாது, அது வயத்துல உள்ள குழந்தைக்கு நல்லதில்ல, எல்லாம் காலையில பேசிக்கலாம்” என்று கூறி சகுந்தலா ஆர்த்தியை அங்கிருந்து தன்னுடன் அழைத்து சென்றாள்.

 

அபி தனது அறையில் கட்டில் மீது அமர்ந்து கொண்டு, தனது தந்தையின் போட்டோவை தன் கையில் வைத்துகொண்டு அவரிடம்,

“பாருங்கப்பா அம்மாவுக்கு எப்போவுமே நான் பண்றது தான் தப்பா தெரியும்,

என் சைடுல உள்ள நியாயத்த என்னைக்குமே புரிஞ்சிக்க மாட்டாங்க.

போதும்ப்பா போதும் இதுக்கு மேல என்னால தாங்கிக்க முடியாது, ஐஅம் சாரி பா, இந்த முற என்ன ஆனாலும் சரி அவங்களா வந்து பேசற வரைக்கும் நான் பேச போறதில்ல.

இங்க பாருங்கப்பா என்ன ஆனாலும் சரி இந்த முற நீங்களும் என் பக்கம் தான் சொல்லிட்டேன்” என்று ஒரு சிறு குழந்தையை போல தன் தந்தையிடம் முறை இட்டுக்கொண்டிருந்தான்.

 

பிறகு போட்டோவை தன் டேபிள் மீது வைக்கும் பொழுது, டேபிள் மீது இருந்த மோதிரம் தவறுதலாக கீழே விழுந்தது .

 

சகுந்தலா தன் அறையில் தன் கணவரின் போடோவிடம்,

 

“பார்த்தீங்களா, உங்க பையன் என்கிட்ட எப்படிலாம் பேசரான்…

ஏன்டா கோபப்படுரனு கேட்டா, அவரு அப்படிதான் கோபப்படுவாராம்..

ஏன் எனக்கு பட தெரியாதா, அவன் என் பேச்ச கேட்குறதே இல்ல அவனுக்கு என்ன தோணுதோ,

அத தான் பண்றான், எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்,

நீங்க குடுத்த செல்லத்துனாலதான் அவன் அவனுக்கு தோன்றதெல்லாம் பண்ணிட்டு இருக்கான்,

அவனுக்கு பசிக்கலையாம் கொளுப்ப பார்த்திங்கல்ல, இந்த முறை அவனா வந்து பேசாமா நான் அவன்கிட்ட பேசபோறதில்ல” என்று தன் ஆதங்கத்தை தன் கணவரிடம்,புலம்பிக்கொண்டிருந்தார் .

 

அபி தன் அறையில் அந்த மோதிரத்தை தன் கையில் எடுத்த,

 

அபிமன்யு,”இது அந்த ஸ்ருதியோடதாச்சே” என்றான் பிறகு ஒன்றும் பேசாமல் தனது கார் சாவியை எடுத்துகொண்டு கீழே சென்றான்

 

சகுந்தலா,”அவன் தூங்கிட்டான இல்லானே தெரியலயே, நான் ஒரு மடச்சி, அவன் சாப்பிட்ட பிறகு இதை பத்தி பேசிருக்கணும், சரி என்ன தான் பண்றான்னு பாப்போம்” என்று தன் அறையை விட்டு வெளியே வந்தவர்,

 

அபி வேகமகா கீழே சென்று,காரில் ஏறுவதை பார்த்தார் . தன் மனதிற்குள்

 

”இந்த நேரத்துல இவன் எங்க போறான், சரி பின்னாலே போய் எங்க தான் போறான்னு பாப்போம்” கூறிவிட்டு அவன் பின்னாலே சகுந்தலாவும் வேறொரு காரை அவனுக்கே தெரியாமல் ஓட்டிச்சென்றார்.

ஸ்ருதி ரூமில் தனியாக தூக்கம் வராமல் கஷ்டபட்டுக்கொண்டிருந்தாள் காரணம் அன்று காவியாவிற்கும், சுவாதிக்கும் நைட் ஷிபிட் . தனியாக அறையில் இருப்பது ஒன்றும் ஸ்ருதிக்கு புதிதல்ல இருந்தும் அன்று ஏனோ ஸ்ருதிக்கு தூக்கம் வரவில்லை,  ஜன்னல் ஓரமாக நின்று கொண்டிருந்தாள்,ஆப்போது பார்த்து, தள்ளுவண்டில் ஒருவர் ஐஸ்கிரீம் கொண்டுவருவதை கண்டவள்,விரைவாக தன் purseசை தூக்கிக்கொண்டு கீழே சென்றாள்.

அவர் hostelலை கடந்து கொஞ்ச தூரம் சென்று விட்டார், பிறகு ஸ்ருதி “அண்ணா அண்ணா”, என்று கத்திக்கொண்டே அவர் பின்னால் சென்றாள், அவர் அவள் வருவதை பார்த்து விட்டு நின்றார், அவரிடம் ஒன்னு, இல்ல ரெண்டு, இல்ல இல்ல மூணு கோன் ஐஸ் குடுங்க என்று வாங்கிக்கொண்டிருந்தாள் அப்பொழுது பார்த்து, அபி அவளுக்கு போன் செய்தான்,ஸ்ருதி purseல் இருந்த போனை எடுத்து,

“இவனா! இந்த நேரத்துலயா, எங்கயாவது வரசொன்னா, எதாவது சொல்லி சமாளிச்சிருவோம்” என தனக்குள் கூறிவிட்டு, போனை எடுத்து

 

ஸ்ருதி,”ஹலோ சார்” என்றாள்

 

அபிமன்யு,”எங்க இருக்க” என்றான், அதற்கு ஸ்ருதி “நினைச்ச மாதிரியே எங்கயோ கூப்பிட தான் இப்படி கேட்குறான்” என்று முனங்கினாள்

 

அபிமன்யு,”என்ன முனங்குற”

 

ஸ்ருதி,”இல்ல சார், நான் எங்க மாமா வீட்டுக்கு வந்திருக்கேன்” என்றாள்

 

அபிமன்யு,”மாமா வீடு எங்க இருக்கு” என்றான், ஸ்ருதி தனக்குள்,”இப்போ என்ன சொல்றதுன்னு தெரியலயே, ஐடியா”

 

ஸ்ருதி,”என்ன சார் சொல்றீங்க, எனக்கு சரியா கேக்கல, tower கிடைக்கலன்னு நினைக்கிறேன், என்ன சொல்றீங்க” என்று கூறிக்கொண்டே, போனை கட் செய்து விட்டு, அந்த ஐஸ்கிரீம்காரரை பார்த்து,

“என் பாஸ் தான் சரியான லூசு” என்று கூறிவிட்டு, ஒரு ஐஸ் கிரீம்மை வாயில் சுப்பிக்கொண்டு, மீதி இரெண்டையும் கையில் வைத்துக்கொண்டு, திரும்பியவளுக்கு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது, அங்கே அபி ஸ்ருதியை நோக்கி நடந்து வந்துகொண்டிருந்தான்.

 

ஸ்ருதி தன் மனதிற்குள்,”நல்லா மாட்டிக்கிட்டனே, ஐயோ பார்க்குறானே பார்க்குறானே, சமாளிப்போம்”அபி ஸ்ருதியின் அருகில் வந்து,

 

அபிமன்யு,”இவர் தான் உன் மாமாவா,ஹாய் மாமா “என்று ஐஸ் கிரீம்காரரை பார்த்து கூறினான், ‘ஸ்ருதி தன் மனதிற்குள் நல்ல வேல நாம சொன்னது ஏதும் காதுல விழல ஐஸ் கிரீம்காரர் அபியிடம் உங்களுக்கும் ஐஸ் கிரீம் வேணுமா சார், என்று கேக்க, அதற்கு அபி

 

அபிமன்யு,”இதோ இருக்கே” என்று ஸ்ருதியின் கையில் இருந்த ரெண்டு ஐஸ் கிரீமையும் வாங்கிக்கொண்டான், பிறகு அவரை பார்த்து நீங்க போங்க என்று கூறினான்.

 

அவரும் அங்கிருந்து சென்றார் பின், ஸ்ருதியை பார்த்து

 

அபிமன்யு,”என்கிட்டயே பொய் சொல்ற ஹ்ம்ம்” என்று ஐஸ் கிரீம் சாப்பிட்டுக்கொண்டே ஸ்ருதியிடம் கேக்க, ஸ்ருதி அவன் கையில் இருந்த தனது ஐஸ் கிரீம்மையே பார்த்துக்கொண்டிருந்தாள்,

 

இதை அனைத்தையும் தூரமாக தன் காரில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த சகுந்தலா,”இது தான் விஷயமா” என்று சிரித்துகொண்டே, தனது இல்லம் திரும்பினார் .

ஸ்ருதி  தன் கையில் உள்ள ஐஸ்கிரீம்மையே பார்த்துக்கொண்டிருப்பதை கவனித்த அபி சற்று அழுத்தமான குரலில்

” நான் உன்கிட்ட தான் கேட்டேன்” என்றான்,அதற்கு 

 

ஸ்ருதி,”சாரி சார்” என்றாள்,

 

அபிமன்யு,”இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல, ஆமா ராத்திரி நேரத்துல ஐஸ் கிரீம் சாப்டுற”

 

ஸ்ருதி,”எனக்கு நைட் சாப்பிடுறது, ரொம்ப பிடிக்கும் சார்” என்றாள்… அதற்கு

 

அபிமன்யு,”உனக்கு என்ன சந்தோஷ் சுப்பிரமணியம் ஜெனிலியான்னு நினைப்பா” என்று கேட்டான், பதிலுக்கு ஸ்ருதி தன் ஆள்காட்டி விரலை அவன் முன் நீட்டி,

 

ஸ்ருதி,”ஹ்ம்ம், பொண்ணுங்களே பிடிக்காது, காதலே வேஸ்ட்ன்னு எப்பபாரு வெரப்பாவே இருக்கீங்களே, உங்களுக்கு என்ன மௌனம் பேசியதே சூர்யான்னு நினைப்பா” என்றாள், கோபம் வந்த அபி

 

அபிமன்யு,”விரலை கீழ இறக்கு”

 

ஸ்ருதி,”ஏன்”

 

அபிமன்யு,”என்கிட்ட யாரும் விரல் நீட்டி பேசுனா எனக்கு பிடிக்காது”

 

ஸ்ருதி,”அப்படியா எனக்கு விரல் நீட்டி பேசுறது நான் ரொம்ப புடிக்கும்” என்று தன் விரலை அவன் முன் ஆட்ட, அபி உடனே ஸ்ருதியின் விரலை பிடித்து முறுக்கினான், வலி தாங்க முடியாமல் ஸ்ருதி கத்தினாள், உடனே அவன் அவள் விரலை விட்டுவிட்டான், பிறகு அவளிடம்

 

அபிமன்யு,”இனிமே விரல என் முன்னாடி நீட்டுவ, நீட்டி தான் பாரேன், அடுத்த தடவ உடைக்க மாட்டேன்,கடிச்சிருவேன்,விரல” என்றான்,

 

பிறகு இருவரும் இரண்டு ஐஸ் கிரீம்மையும் சாப்பிட்டு முடித்து விட்டனர், கடைசியில் அபியின் கையில் ஒன்றே ஒன்று மட்டும் மீதம் இருந்தது, அது யாருக்கு என்பதை போல இருவரும் அதை பார்த்தனர், அபி உடனே அந்த ஐஸ் கிரீமை தன் வாயில் வைக்க சென்றான், ஸ்ருதி பாவம் போல பார்க்க லேசாக புன்னகைத்துவிட்டு, அந்த ஐஸ்கிரீமை அவளிடம் குடுத்து விட்டு, தன் கையில் ஒட்டிக்கொண்டிருந்த ஐஸ்கிரீமை அவளது மூக்கில் தடவி,

” சீக்கரமா போய் தூங்கு நாளைக்கு ஆபீஸ்க்கு கரெக்ட் டைம்க்கு வந்திருக்கணும் புரியுதா ” என்று கூறி, தன் காரில் ஏறி, அவள் hostelலுக்குள் சென்ற பிறகு அங்கிருந்து கிளம்பினான்..

ஸ்ருதி,”என்கிட்ட இருந்து என் ஐஸ் கிரீம்ம பிடுங்கி திங்க தான் அங்க இருந்து இங்க வந்தானா, இவன லூசு சொன்னதுல தப்பே இல்ல”
என்று கூறி தன் மூக்கில் இருந்த ஐஸ் கிரீமை துடைத்துவிட்டு, தன் அறைக்கு சென்று, லைட்யை அனைத்து விட்டு கண்மூடி தூங்கினாள்.

வீட்டில் சகுந்தலா கடவுளிடம்,

“கடவுளே ரொம்ப வர்ஷத்துக்கப்புறம், அபியோட வாழ்க்கைல மாற்றத்த பார்க்குறேன், இது என்னைக்கும் நீடிக்கணும், அவன் எப்போதும் சந்தோஷமா இருக்கணும்.

அதான் எனக்கு வேணும் என்றாள்,பிறகு, தூரத்துல பார்த்தேன், அந்த பொண்ணு எப்படி இருந்தான்னு பார்க்கலேயே, சரி எங்க போக போறா பார்த்துக்கலாம்” என்றாள்.

சில மணிநேரம் கழித்து புன்னகைத்தவாரே வீட்டுக்கு வந்த அபி தன் தாயை பார்த்து, தன் மனதிற்குள்,

 

“அய்யயோ அம்மா, எங்க போயிட்டு வந்தனு கேட்டா என்ன சொல்றது” என புலம்பிகொண்டிருக்க,

 

சகுந்தலா, அபியின் அருகில் வந்து தன் சேலையின் முந்தானையால் அபியின் கன்னத்தில் லேசாக ஒட்டிக்கொண்டிருந்த ஐஸ்கிரீமை துடைத்தார், அபிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை,தனக்குள்

“அம்மா ஏன் எதுவும் கேட்கல, அவங்க சாப்பிட்டாங்களானு தெரியலயே” என்று dinning டேபிள்லை பார்த்தான், உடனே சகுந்தலா, மகனின் பார்வையை புரிந்தவராய்,

“சாப்பிட்டாச்சு போய் தூங்கு நேரம் ஆச்சு” என்று பட்டும் படாதவாறு கூறிவிட்டு, வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு அங்கிருந்து சென்றார் .

 

அபியும் அம்மா ஏன் என்கிட்ட எதையும் கேட்கல என்ற குழப்பத்திலே தன் அறைக்கு சென்று, கண்ணாடியின் முன் நின்னுகொண்டு

”அம்மா கேட்காததெல்லாம் இருக்கட்டும், இப்போ நான் ஏன் ஸ்ருதிய பார்க்க போனேன், அவகிட்ட இருந்து ஐஸ்கிரீம் வாங்கி திங்கவா, காரணமே இல்லாம ஏன் அவ்வளவு தூரம் போனேன், ஒன்னும் புரியலயே, எனக்கு என்ன தான் ஆச்சு” என்ற குழப்பத்திலே உறங்கினான் .

 

காலமும் இவ்வாறே ஓடியது, அபி தன் தாயிடம் மன்னிப்பு கேட்க, சகுந்தலா அபியின் செல்ல சண்டையும் ஒரு முடிவுக்கு வந்தது.

“நம் எல்லா குற்றங்களையும்
மன்னிக்கும் ஒரே கடவுள் ஒரே நீதிமன்றம்
நம் அம்மா தான்
நாம் மடிந்த பின்னும்
நமக்காக துடிக்கும் ஒரே இதயம்
நம் அம்மாவின் இதயம் ……”

முன்பிருந்ததை விட அபிக்கும், ஸ்ருதிக்கும் ஒரு புரிதல் வந்தது, முன்பை போல அபி ஸ்ருதியிடம் சண்டைபோடுவதும், அவளிடம் நெருங்கவும் இல்லை, அவளை விட்டு சற்று தள்ளியே தான் இருந்தான் .

ஸ்ருதி கம்பனிக்கு வந்து ஒரு மாதம் முடிந்திருந்தது,எப்போதும் போல ஸ்ருதியும் அகாடமிக்கு கிளம்பிக்கொண்டிருந்தாள் . அடிபட்ட அஜய் கூட கொஞ்ச கால இடைவேளைக்கு பிறகு அகாடமிக்கு வந்தான் . அகாடமிக்கு வந்தவன் தனது நண்பர்களை பார்த்து கையசைத்து விட்டு அவர்களிடம் சென்று பேசிக்கொண்டிருந்தான், அப்போது அங்கு வந்த அபி, நேராக அஜயிடம் சென்று,

 

அபிமன்யு,”ஹலோ அஜய், welcome back” என்றான்

 

அஜய் வேண்டா வெறுப்பாக,”தேங்க் யு” என்றான்,பிறகு அபி அஜயிடம்

 

அபிமன்யு,”அஜய், உன்னை அறிவாளின்னு நினைக்கிறதுல தப்பில, ஆனா மத்தவங்கள முட்டாள்னு நினைக்கிற பாத்தியா, அது ரொம்ப தப்பு, அதை அகங்காரம்ன்னு சொல்லுவாங்க! 

ஒருத்தனோட அகங்காரம் அவனோட காலுக்கு கீழ தான் இருக்கணும், அது அவன் தலைக்கு மேல போச்சுனா, தல வெடிச்சு செதரிரும் !

எவனால தன்னோட அகங்காரத்துக்கு கடிவாளம் போட முடியலையோ, அவன் எதிரி கிட்ட இல்ல, அவன் கிட்டயே தோத்துப்போறான் !

அன்னைக்கு நீ எப்படி தோத்துபோனியோ அத மாதிரி, எனி வே ஸோ செஞ் யுவர் பிஹேவியர் ” என்று கூறிவிட்டு, தனது கூல் கிளாசை போட்டுக்கொண்டு அங்கிருந்து சென்றான்..

 

அஜய்,”போடா போ என்னைக்காவது என்கிட்ட மாட்டுவ அப்போ தெரியும்டா உனக்கு இந்த அஜய் யாருன்னு”என்று தன் கையை முறுக்கிக்கொண்டான் .

 

வானம் லேசாக மேக மூட்டமாக காணப்பட்டது, ஸ்ருதி பஸ்சில் இருந்து இறங்கி அகாடமிக்கு வந்துகொண்டிருந்தாள் அப்போது, திடிரென்று மழை கனமாக பெய்ய துடங்கியது, ஒதுங்க சரியான இடம் இல்லாமல் ஸ்ருதி வேற வழி இன்றி அகாடமிக்கு நடந்தாள்!

ஒருவழியாக சேரும் சகதியுமாக அகாடமிக்கு வந்து சேர்ந்தாள், ஸ்ருதி முழுவதுமாக நனைந்து இருந்தாள்!

அவளை தன் அறையின் ஜன்னல் வழியாக பார்த்துகொண்டிருந்த அபி,

 

“இந்த லூசு ஸ்ருதிய என்னன்னு சொல்றது, இப்டியா ஒருத்தி நனைஞ்சிட்டு வருவா, ஒரு டாக்ஸில வந்திருக்கலாம், இல்லனா ஒரு ஆட்டோலாயவது வந்திருக்கலாம்” சரியான லூசு என்று எப்போதையும் விட இன்று கொஞ்சம் அக்கறையோடு திட்டிக்கொண்டான் .

 

ஸ்ருதி முழுவதுமாக நனைந்து கொண்டு அகாடமிக்குள் வந்தாள், அஜய் ஸ்ருதியை பார்த்து வஞ்சனையோடு சிரித்துவிட்டு, தனது towelலை தன் கையில் எடுத்துக்கொண்டு அவள் அருகில் வந்து, தன் நண்பர்களை பார்த்து கண்ணடித்துவிட்டு, ஸ்ருதியிடம்

 

அஜய்,”ஹாய் ஸ்ருதி”

 

ஸ்ருதி,”அஜய், எப்படி இருக்கீங்க, ஹப்பி டு சி யு” என்றாள், பிறகு அஜய்

 

அஜய்,”பாருங்க எப்படி நனைஞ்சிருகிங்க, இந்தாங்க என் towelல யூஸ் பண்ணிக்கோங்க” என்றான்

 

ஸ்ருதி,”தங்க யு,அதெல்லாம் வேண்டாம் இட்’ஸ் ஒகே” என்றாள்

 

அஜய்,”கம் ஆன் ஸ்ருதி, என்ன friendஆஹ் நினைச்சிங்கனா வாங்கிக்கோங்க” என்றான்..

பிறகு ஸ்ருதியும் வாங்கிக்கொண்டு தன் தலையை துடைத்துக்கொண்டிருந்தாள் .அவன் ஒன்று நல்ல எண்ணத்தில் ஸ்ருதிக்கு உதவி செய்ய வில்லை, உதவி செய்வதைப்போல் செய்துவிட்டு, தன் கையில் இருந்த மொபைல் போனால் ஸ்ருதிக்கே தெரியாமல் அவளை படம் எடுத்துக்கொண்டிருந்தான்.

தன் அறையில் இருந்து வந்துகொண்டிருந்த அபி, அஜயின் செய்கையை பார்த்துவிட்டான், ஆக்ரோஷத்தோடு ஸ்ருதி என்று கத்தினான், உடனே அஜய் தன் மொபைலை தன் பான்ட் பாக்கெட்குள் மறைத்துவைத்தான் …

ஸ்ருதி என்னவென்று தெரியாமல் முழித்தாள், அவளிடம் வந்து அவள் கையில் இருந்த towelலை வாங்கிவிட்டு

அபிமன்யு,”ஆபீஸ்க்கு வர்ற டைம்ஆஹ் இது போ போய் என் கபின்ல வெயிட் பண்ணு, போன்னு சொல்றேன்ல” என்றான்

ஸ்ருதியும் பதில் ஒன்றும் கூறாமல், அவன் செய்கை ஏதும் புரியாமல் அங்கிருந்து சென்றாள், ஸ்ருதி சென்றவுடன், அஜயும் அங்கிருந்து சென்றான்

 

அபிமன்யு,ஸ்ருதி சென்ற பிறகு போய் கொண்டிருந்த அஜயை கூப்பிட்டு,

 

அபிமன்யு,”மொபைல குடு” என்றான்

 

அஜய்,”ஏன் என் மொபைல கேட்குறிங்க .தரமுடியாது” என்றான், கோபம் தலைக்கேறிய அபி, தன் அருகில் இருந்த chairரை தனது காலால் எட்டி உதைத்தான், அது அவன் உதைத்த வேகத்தில், சுவற்றில் பட்டு எப்போது வேண்டுமானாலும் உடைந்து போகும் என்கிற நிலைமையில் அஜய் கால் முன்னால் வந்து விழுந்தது .

அஜய் பின்பு தானாக தனது மொபைலை தன் pant பாக்கெட்டில் இருந்து எடுத்தான் . அபி அதை வேகமாக வாங்கி, ஓபன் பண்ணி பார்த்ததில் ஸ்ருதியின் போட்டோ இருந்தது.

உடனே அந்த போட்டோவை delete செய்து விட்டு, மெமரி கார்டையும் உறவி விட்டு, போனை தனது கையால் சுவற்றில் எறிந்தான் .

அது அவன் எறிந்த வேகத்தில் சுவற்றில் பட்டு சில்லு சில்லாக நொறுங்கியது . கோபம் வந்த அஜய் அபியின் சட்டையை பிடித்து,

 

அஜய்,”உனக்கு எவ்வளவு தயிரியம் இருந்த இப்டி பண்ணுவ” என்றான்

 

அபிமன்யு,”கையை எடுடா”என்றான்,

 

அஜய்,”எடுக்க முடியாது என்னடா பண்ணுவ” என்றான், தனது நிதானத்தை இழந்த அபி, அவனது கையை தனது சட்டையில் இருந்து நீக்கிவிட்டு,

 

அபிமன்யு,”இது நீ பண்ண கேவலமான காரியத்துக்கு” என்று கூறி, தனது கரத்தில் தன் முழு பலத்தையும் ஏற்றி ஓங்கி பளார் என்று அறைந்தான்..

 

அஜய் எழும்பி தன் நிலைக்கு வருவதற்குள், மறுமுறையும் ஓங்கி அறைந்து,”உனக்கு எவ்வளவு தையிரியம் இருந்தா என் சட்டைய புடிப்ப” என்றான்..

 

அபி போவது போல் போய் விட்டு, பிறகு திரும்பி அஜயிடம் வந்து மீண்டும் அவனை ஓங்கி அறைந்து, “இது நீ இனிமே எந்த பொண்ணு கிட்டையும் இப்டி நடந்துக்க கூடாதுங்கறதுக்காக” என்றான் பிறகு தன் கையில் இருந்த towelலை அஜய்யின் முகத்தில் எரிந்தான் …

 

உடனே, அஜய்,”நா யார் பையன்னு தெரிஞ்சே இப்படி பண்ணிட்டல”என்று கத்தினான் .

 

அபிமன்யு,”நோ நோ குரல உயர்த்தி பேசக்கூடாது அதுவும் என் முன்னாடி எனக்கு அது சுத்தமா புடிக்காது..

அஜய் நீ யாருன்னு தெரிஞ்சநாலதான் உன்னை அடிச்சதோட விட்டுட்டேன், இது மட்டும் வேற யாராவது பண்ணிருந்தா,

அடிச்சு கொன்னு இதே இடத்துல புதச்சிருப்பேன், ஒழுங்கா நடந்துக்கோ இனிமே இப்படி பண்ணினா, நீ ஸ்ரீனிவாசன் அங்கிளோட பையன்ங்கரதே நா

மறந்திருவேன்” அஜய் கோபத்தோடு அங்கிருந்து சென்றான்.

 

பிறகு அபி தனது காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்று சில நிமிடங்கள் கடந்து கையில் ஒரு பிளாஸ்டிக் பையோடு அகாடமிக்குள் வந்தான் பின், வருணிடம் சென்று ஸ்ருதி என் காபின்ல தான் இருப்பா, இத போய் அவகிட்ட குடுத்துரு என்றான்,

 

வருண்,”அஜய்” என்று இழுக்க, அபி

 

அபிமன்யு,”அப்றோம் சொல்றேன் முதல்ல போய் அவகிட்ட குடுத்திட்டு வா” என்றான்

 

வருண் ஸ்ருதியிடம் வந்து,

 

வருண்,”இந்தா ஸ்ருதி” என்று பையை நீட்டினான்

 

ஸ்ருதி,”என்ன இது” என்றாள்

 

வருண்,”முதல்ல புடி” என்றான்

 

ஸ்ருதி வாங்கி பார்த்தாள், அதில் பிங்க் நிற சுடி இருந்தது .

 

ஸ்ருதி,”தேங்க்ஸ் வருண் சார்” என்றாள்

 

வருண்,”தேங்க்ஸ் எனக்கு சொல்லாத, அபி சார்க்கு சொல்லு, அவர் தான் இத வாங்கிட்டு வந்து,உனக்கு குடுக்க சொன்னாரு!

சாரோட ரெஸ்ட் ரூம்அஹ யூஸ் பண்ணிக்கோ சரியா” என்று கூறிவிட்டு அங்கிருந்து நேராக தன் அறைக்கு சென்றான், அங்கே

 

அபி தனக்கும் அஜய்க்கும் நடந்த அனைத்தையும் வருணிடம் கூறினான்,பிறகு

 

அபிமன்யு,”அஜய் அவ்வளவு மோசமானவனா இருப்பான்னு நான் நினைக்கல” என்றான்

 

வருண்,”சார் இப்போலாம் பசங்க இப்படி தான் சார் இருக்காங்க”

 

அபிமன்யு,”அவன அப்படியே நான் கொண்ணு போட்டுருப்பேன், அவங்க அப்பாக்காக தான் விட்டேன்”

 

வருண்,”இந்த விஷயம் ஸ்ருதிக்கு தெரியுமா”என்று கேட்டான்

 

அபிமன்யு,”இல்ல அவகிட்ட சொல்லல, நீயும் சொல்லாத”

 

வருண்,”சரி சார், நீங்க இத அப்டியே விட்ருங்க”

 

அபிமன்யு,”இல்ல என்னால இத அவ்வளவு ஈஸியா எடுத்துக்க முடியல, ஸ்ருதிகிட்ட யாரும் தப்பா நடந்துக்கிறத என்னால accept பண்ணமுடியல” என்றான்,வருண் தன்னை ஒரு மாதிரியாக பார்ப்பதை அறிந்து

” ஐ மின், எந்த ஒரு பொண்ணுக்கு இப்டி நடந்திருந்தாலும் நான் இப்டி தான் பண்ணிருப்பேன் ” என்று சமாளித்தான்…

பின் அபி வருணிடம் ,
“நான் decide பண்ணிட்டேன், இனிமே ஸ்ருதி எனக்கு மட்டும் PA வா இருந்தா போதும், அப்புறம் எனக்கு oppositeல இருக்குற ரூம்அஹ உடனே clean பண்ண சொல்லுங்க, இனிமே அதான் ஸ்ருதி கபின் என்றான்” வருணும் அபி சொன்னவாரே செய்தான் .

 

ஸ்ருதி தன் ஆடையை மாற்றிய பிறகு கண்ணாடியின் முன் நின்று கொண்டு, thank யு சார், thank யு ஸோ மச் என்றாள், பிறகு தன் பழைய ஆடையை அந்த பிளாஸ்டிக் கவருக்குள் எடுத்து வைத்தாள், பின்பு அபியிடம் வந்து,

 

ஸ்ருதி,”தங்க யு ஸோ மச் சார், யாருக்கும் தோணாத ஒன்னு உங்களுக்கு தோணிருக்கு, இவ்வளவு நாளா உங்க இதயம் ஒரு கல்லு நினச்சேன், இப்போம் முத தடவையா, உங்க இதயம் அந்த தங்கத்தவிட தூய்மையானது புரிஞ்சிகிட்டேன், நீங்க ரொம்ப கண்ணியமனாவரு, once அகைன் தங்க யு ஸோ மச் சார்” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றாள் .

 

அபி எதுவும் கூறாமல் அமைதியாய் இருந்தான் காரணம், அவள் ஒன்று வாய்சொல்லுக்காக பேசவில்லை, அவள் பேசிய ஒவ்வொன்றும் அவளின் மனதில் இருந்து வந்தவை என்பதையும் அவன் உணர்ந்திருந்தான் . எப்போதும் தன்னிடம் ஏட்டிக்கு போட்டியாக நடந்து கொள்ளும் ஸ்ருதி முதன் முதலாக தன் மனதில் இருந்து பேசிய ஒவ்வொரு வார்த்தையின் சுகத்தையும் அவனுக்கே தெரியாமல் அவன் அனுபவித்துக்கொண்டிருந்தான் .

 

இதை அனைத்தையும் கவனித்த வருண் அபியிடம்,

 

வருண்,”நான் ஒன்னு நினைக்கிறேன் உங்க கிட்ட கேட்கலாமா” என்றான்

 

அபிமன்யு,”இது என்ன கேள்வி தாராளமா கேக்கலாம்” என்றான், உடனே
வருண் சிறிது தயக்கத்தோடோடு

 

வருண்,”உங்களையே அறியாம ஸ்ருதி உங்க லைப்குல்ல
வந்துடாங்களோன்னு, எனக்கு தோணுது சார்” என்றான் உடனே அபி

 

அபிமன்யு,”அப்படியா சார், அப்றோம் வேறென்ன, போங்க போய் நான் சொன்னா வேலைய பாருங்க!

அப்புறம் இன்னைக்கு நாம பார்டிக்கு போறோம், ஸோ அந்த வேலலாம் பாத்த நல்லா இருக்கும்” என்றான்,

 

வருண் “யஸ் சார்” என்று கூறிவிட்டு அங்கேயே நின்று கொண்டிருந்தான்,உடனே அபி ,

“என்ன போ,உன் காபின்க்கு போய் நான் சொன்ன வேலைய பரு” என்றான்,அதற்கு வருண்

 

“சார் இது தான் என் காபின்” என்று தாழ்ந்த குரலில் கூறினான்..

 

உடனே அபி, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டாததை போல், “இப்போ அதனால என்ன, கம்பெனி என்னோடதுதான!

ஸோ நான் எங்க வேணும்னாலும் இருப்பேன், சரி நான் போறேன் நீ உன் வேலைய பாரு என்று” ஒருவகையாக சமாளித்துவிட்டு அங்கிருந்து சென்றான்,

அபியின் நிலையை பார்த்து வருண் சிரித்து விட்டு, தன் வேலையே துடங்கினான் .

அபி தன் அறைக்கு சென்று,

அபிமன்யு,”வருண் சொல்றதெல்லாம் இருக்கட்டும், இப்போம் நான் என்ன பண்ணிட்டு இருக்கேன், அவள பழிவாங்கணும்ன்னு என் அகாடமிக்கு வரவச்சேன், அதத்தவர மீதி எல்லாத்தையும் பண்ணிட்டுருக்கேன்!

அவ மழையில நனஞ்சா என்னக்கென்ன வந்துச்சு, இந்த டிரஸ்ஸ நான் தான் வங்கணும்ன்னு என்ன அவசியம் வந்துச்சு, வருண்கிட்ட சொல்லி கூட வாங்கிருக்கலாம்ல, என்னடா பண்ணிட்டு இருக்க, ஒருவேளை வருண் சொல்றதெல்லாம், இல்ல இல்ல அவன் உளர்றான், இதெல்லாம் ஒரு மனிதாபிமானத்துல பண்ணினது, அத தவற வேற ஒன்னும் இல்ல”,என்று தன்னை தானே சாமதானம் செய்து கொண்டான் .

 

அன்றில் இருந்து ஸ்ருதி அபியின் scheduleகலை மட்டும் பார்த்துக்கொண்டாள் அவளுக்கென்று கென்று ஒரு தனி காபின் ஒதுக்கப்பட்டது, அந்த காபின் அபியின் அறைக்கு முன்னால் தான் இருந்தது, இதானால் ஸ்ருதிக்கு கீழே வர வேண்டிய அவசியம் ஏதும் இல்லை .

 

பிறகு அன்றிரவு பார்டிக்கு செல்வதற்காக அபி தயாராகி இருந்தான், அப்போ அபி ,

 

“இந்த வருண் ஏன் இன்னும் வரல, சரி அவன் ரூம்க்கு போய்
பாப்போம்”, என்று அவன் அறைக்கு சென்று,

 

வருணிடம் அபிமன்யு,”வருண் ரெடி ஆயிட்டியா” என்றான்

 

வருண் ரெஸ்ட் ரூமில் இருந்து கொண்டு

 

வருண்,”யஸ் சார் ஒன்லி 2 minutes என்றான் “அதற்கு அபி

 

அபிமன்யு,”2 minutesல ரெடி ஆகா நீ என்ன நூட்லஸ்ஸா, ஒழுங்கா நீட்டா கெளம்பி சீக்கரமா வா” என்றான்

 

அபி வருண்க்காக அவன் அறையில் காத்துக்கொண்டிருந்தான், அப்பொழுது அபியின் போன் ஒலித்தது, பார்த்தால் அது அவனது அம்மா, உடனே அபி வருணிடம்,

 

அபிமன்யு,”வருண் நான் கீழ வெயிட் பண்ணறேன், நீ வந்துரு” என்றான்

 

வருண்,”ஒகே சார்” என்றான்

 

பிறகு அபி போன் பேசிக்கொண்டே கீழே சென்றான், பின்,

 

“தன் தாயிடம் பார்ட்டில சாப்பிட்டுதான் வருவேன் ஸோ, எனக்கு சாப்பாடு எதுவும் வேண்டாம் மா, நீங்களும் ஆர்த்தியும் சாப்ட்டுட்டு படுத்துக்கோங்க” என்றான்.

 

சகுந்தலாவும்,”சரிப்பா, பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க” என்று கூறினாள்,.

 

அபி,”சரி மா” என்று போன்னை வைக்கவும், வருண் கீழே வரவும் சரியாக இருந்தது . அபி வருணை பார்த்து,

 

அபிமன்யு,”வெயிட் பண்ணு, உன் ஷர்ட் collar பாரு சரியா இல்ல” என்று கூறி, வருணின் ஷர்ட் collarரை சரி செய்துவிட்டு,

 

“இப்போம் எல்லாம் ஒகே”என்று கூறினான், பிறகு அபி வருணை பார்த்து,

 

அபிமன்யு,”என்ன வருண் வரவர glamourராய்ட்டே போற, என்ன விஷயம்” என்று கேட்டான்

 

வருண்,”உங்கள விடவா” என்றான்

 

அபிமன்யு,”இந்த கதலாம் இங்க வேண்டாம், நீ வேணும்னா பாரு, இன்னைக்கு, பார்ட்டில எல்லா பொண்ணுகளும் உன்ன தான் பார்க்கபோறாங்க” என்று அவனை வம்பிளுத்துக்கொண்டிருந்தான் !பிறகு  அபியும் வருணனும் பார்டிக்கு சென்றனர் .

 

பார்ட்டியில் அனைவரையும் சந்தித்து பேசிவிட்டு, பிறகு அங்கிருந்து அபியும், வருணும் கிளம்பி வரும் பொழுது மணி 12:00 AM தொட்டிருக்கும், காட்டு வழியாக வந்து கொண்டிருந்த பொழுது, திடிரென்று கார் பிரேக் down ஆனது.

 

அபியும், வருணும் கீழே இறங்கி சென்று பார்த்தனர், என்ன பிரச்சனை என்று கண்டு பிடிக்க முடியவில்லை, பிறகு அதே வழியில் வந்த ஒருவரிடம் mechanic ஷாப் எங்கே இருக்கிறது என்று கேட்டனர், அதற்கு அவர் பக்கத்துல தான் இருக்கு வாங்க நான் அந்த வழியா தான் போறேன் என்றான் . அவர்களை mechanic ஷாப்பிற்கு கூட்டிச் சென்றார்.

 

அங்கே போன பிறகு அந்த நபர்,

 

“ராஜேஷ் தம்பி கடைக்கு ஆள் வந்திருக்கு பா வந்து கவனி” என்றார்

 

“இதோ வரேன்னா” என்று சொல்லிவிட்டு கடைக்காரர் வெளியே வந்தார்,

 

அவரை பார்த்த அபி மட்டும் வருண் சற்று அதிர்ச்சியில் இருந்தனர். அவர் வந்தவுடன், அந்த நபர்,

 

“இவங்க தான் பா என்னனு பாரு” என்றார்

 

பிறகு,அபி , வருண் இருவரிடமும் “போயிட்டு வரேன் சார்” என்று கூறி அங்கிருந்து சென்றார் .

 

அபி , வருண் இருவரது அதிர்ச்சிக்கு காரணம், அங்கு கடைகாரனாக வந்தது, வேற யாரும் இல்லை, முன்பு ஒருநாள், ராஜேஷ் என்னும் ஸ்டுடென்டை அபி அகாடமியை விட்டு துரத்த்தினான் அல்லவா, அந்த ராஜேஷ் தான் அங்கு வந்தான், வந்தவன்,

 

அவர்களை பார்த்து,

 

“அபிமன்யு சார், வருண் சார், வாங்க சார் வந்து உக்காருங்க, எப்படி சார் இருக்கீங்க,என்ன சார் சாப்பிடுரிங்க, திடீர்ன்னு உங்கள பாத்ததும் எனக்கு கை கால் ஓடல” என்று, பதட்டம், கலந்த சந்தோஷத்தோடு அவர்களை உபசரித்தான் .

 

அபி ஏதும் கூறாமல் அமைதியை இருந்தான், வருண் அவனிடம்

 

“ராஜேஷ் ரிலாக்ஸ், நாங்க நல்லா இருக்கோம் நீங்க எப்படி இருக்கீங்க, அப்றோம் இது உங்களோட ஷாப்பா” என்று கேட்டான்.

 

ராஜேஷ்,”இல்ல சார் இது அப்பவோடது, free டைம், அப்றோம் நைட் டைம்ல மட்டும் கடைய நான் பார்த்துக்குவேன், மத்தபடி நான் BPOல வொர்க் பண்றேன்” என்றான்,

 

உள்ளே இருந்து ஒருவர் இருமிகொண்டே,

 

“அதெல்லாம் ஒன்னும் இல்ல சார், இவன் பொய் சொல்றான்” என்றார் உடனே ராஜேஷ்,”அப்பா நீ சும்மா இருக்கமாட்ட, என் சார் முன்னாடி போய் ஏன் பா” என்றான்.

 

உடனே அவன் அப்பா,”அப்போ கண்டிப்பா சொல்லித்தான் டா ஆகனும்” என்று சொல்ல துடங்கினார்,

 

“எங்க சார் வேலைக்கு போறான், ஒழுங்கா வேலைக்கும் போறதில்ல, ஒழுங்கா கடையையும் பார்த்துக்கறதிள்ள எப்ப பாரு boxing boxingன்னு கையில என்னத்தையோ மாட்டிக்கிட்டு எதையோ குத்திக்கிட்டு இருக்கான் .

ஒழுங்கா ஒரு வேலைய பாருடானா இவன் கேட்க மாட்றான், இன்னைக்கு கூட எனக்கு உடம்பு சரி இல்லாம போனனாலதான் கட பக்கம் வந்திருக்கான் .

சரி boxing boxingன்னு உயிரையே விடுறானேன்னு அவன ஒரு காலேஜ்ல சேர்த்துவிட்டேன், அங்க இவன் வாத்தியாரே, உனக்கு boxingலாம் வராது காலேஜ்விட்டு போன்னு சொல்லிருக்காரு, அனாலும் boxingதான் பண்ணுவேன்னு என்னத்தயோ பண்ணிக்கிட்டு இருக்கான்.

இதுல பக்கத்து வீட்டு சின்ன பசங்கள புடிச்சு புடிச்சு அவங்களுக்கு boxing சொல்லித்தரேன்ன்னு சொல்லி அவங்களையும் கெடுத்திட்டு இருக்கான்,

பத்தாகுறைக்கு யாரோ அபிமன்யுவான் பெரிய boxerராம் அவரு பேர போய் நெஞ்சுல பச்சகுத்திட்டு அவர மாதிரியே ஆக போரேன்னு சொல்லிட்டு இருக்கான் சார், இதுலாம் நடக்குற காரியமா சார் சொன்ன புரிஞ்சிக்க மாட்டிக்கான், நீங்க தான் அவனுக்கு எடுத்து சொல்லணும்”

என தன் ஆதங்கத்தை அபி மற்றும் வருணிடம் கூறினார் .

 

உடனே ராஜேஷ்,”அதான் சொல்லிட்டிங்கள்ள போங்கப்பா” என்று தன் அப்பாவிடம் கோபப்பட்டான்,

 

உடனே அவர்,”பார்த்திங்களா சார் எதாவது சொன்னா இப்டி தான் கோபப்படுறான் என்ன பண்றதுனே தெரியல, ராஜேஷ் வந்தவங்களுக்கு என்ன வேணும்ம்னு கேளு” என்று கூறி விட்டு அங்கிருந்து சென்றார் .

 

ராஜேஷ்,”அப்பா எதோ புரியாம பேசிட்டாரு, அவரு சொன்னா எதையும்” என்றவனை தடுத்த அபி

 

அபிமன்யு,”ராஜேஷ் இங்க பக்கத்துல தான்,வர்ற வழியில, என்னோட கார் திடிர்ன்னு நின்னுருச்சு, என்னன்னு கொஞ்சம் வந்து பாக்கறிங்களா” என்றான்,

 

ராஜேஷ்”இதோ இப்போவே வரேன் சார்” என்று தன் டூல்ஸ் பையை எடுத்துக்கொண்டு, கார் இருந்த இடத்திற்கு சென்று, பிரச்சனை என்ன என்பதை புரிந்து கொண்டு,அதை சரி செய்து விட்டு,

 

ராஜேஷ்,”சரி ஆய்டுச்சு சார், இப்போ ஸ்டார்ட் பண்ணுங்க” என்றான், அபியும் ஸ்டார்ட் செய்து விட்டு எல்லாம் ஒகே என்றான் .பிறகு வருண்

 

வருண்,”எவ்வளவு அச்சு” என்றான்

 

ராஜேஷ்,”அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் சார்” என்றான், உடனே அபி

 

அபிமன்யு,”என்ன ஒன்னும் வேண்டாம், ஹ்ம்ம்ம்ம்,உழைச்சதுக்கு கூலி கிடைக்கலனா, அந்த உழைப்புக்கே அர்த்தம் இல்லாம போய்டும், ஒன்னு தெரிஞ்சிக்க ராஜேஷ், உண்மையா உழைச்சவங்களுக்கு என்னைக்கும் பலன் இல்லாம போனதா சரித்திரம் இல்ல” என்று கூறினான்.

 

அபி கூறிய அந்த சொல்லில் ஒளிந்துள அர்த்தத்தை உணர்ந்த வருண், லேசாக சிரித்து விட்டு, ராஜேஷிடம் எவ்வளவு ஆச்சு என்று கேட்டான், பிறகு ராஜேஷ் கேட்ட பணத்தை, அவனிடம் கொடுத்தான், பிறகு அவனை பார்த்து வருண்

 

வருண்,”சி யு சூன்” என்று கூறி விட்டு அங்கிருந்து அபியும், வருணும் சென்றார்கள் .

 

வருணை அவன் வீட்டில் ட்ராப் பண்ணிட்டு, தன் வீட்டிற்கு வந்த அபி, நேராக தன் அறைக்கு சென்றான்.

 

அங்கே ராஜேஷை பற்றிய யோசனையில் மூழ்கிருந்தான். பின்பு தன் தந்தையின் போட்டோவை ஒரு முறை பார்த்துவிட்டு, குழப்பம் நீங்கி எதோ ஒரு தெளிவுடன், லைட்டை அனைத்துவிட்டு உறங்க சென்றான் .

இப்பொழுது நம் அபியின் நிலைமை கூட அப்படிதான், அன்பு என்னும் மாய வலையில் மாட்டிக்கொண்டான்,இனி அவன் எவ்வளவு தான் முயற்சித்தாலும்

அவனால் தப்ப இயலாது …

-தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!